• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
முள்ளோடு முத்தாட வா..

அத்தியாயம் – 33


View attachment 33905

மாலை மயங்குகின்ற நேரம், பாதுகாப்பு படையின் காவலில் ட்ராக் பேண்ட், டீசர்ட் சகிதமாக தம்பதியர் இருவரும் மென்னடை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

கடற்காற்று முகத்தில் சுகமாய் மோத, அலைகளின் பேரிரைச்சல் சங்கீதம் பாட, ஓடிக்கொண்டிருந்த அர்ஜுன் தன் முழங்கால்களை இருகைகளால் பிடித்துக்கொண்டு உடல் சோர்வினால் அவதியுற்றான்.

அவனைச் சோர்விலிருந்து மீட்கும் பொருட்டு, “அர்ஜுன், ஃபார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு உங்களுக்கு இன்னும் தீவிர பயிற்சி தேவை” என்றாள்.

குனிந்தபடியே அவளைப் பார்த்து முறைத்தான் அர்ஜுன்.

அசராத அல்லிராணியோ, “அதோ தூரத்தில் நிற்கிறதே ஒரு படகு அதை யார் முதலில் தொடுவது என்று பந்தயம் வைத்துக் கொள்வோமா? “ என்றாள் கண்களில் வினாவினைத் தேக்கி.

“ பெண்களுடன் எல்லாம் நான் போட்டியிடுவது கிடையாது” என்றான் இறுமாப்பாக.

“ ஹலோ பாஸ்.... முடியவில்லை என்றால் நேரடியாகச் சொல்லுங்கள்” என்றாள் அவனைச் சீண்டியபடி.

சிலிர்த்தெழுந்த சிங்கம் ஓட்டத்திற்கு தயாரானது.

தன் கால்களில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஷூவின் லேசை இறுக்கக் கட்டினாள் பாரதி.

குத்துக்காலிட்டு மணலில் மண்டியிட்டவள், குனிந்தபடியே ரகசிய சிரிப்பினை உதிர்த்தாள்.

இதை அறியாத அரிமா ஆணவமாய் நெஞ்சை நிமிர்த்தி நின்றது.

ஒன்... டூ... த்ரீ... இருவரும் ஒரு சேர குரல் கொடுத்தபடி மணலில் ஓடத் தொடங்கினர்.

பெண்ணவளின் வேகம் கண்டு ஆணவனும் வேகம் எடுத்தான்.
தூக்கி கட்டிய கூந்தல் காற்றின் வேகத்தில் பறக்க, சுற்றும் பூமியை அதிர வைத்து வெற்றி ஒன்றே இலக்காக பாரதியும் வேகத்தோடு ஓடினாள்.

உடல்சோர்வு பறந்து செல்ல, மங்கையவளை வெற்றிக்கொள்ள வேந்தனும் வேங்கையின் வேகம் கொண்டான்.

படகைத் தொடும் வேளையில் அர்ஜுன் முந்திச்செல்ல, மலை ஏறுபவளோ, மலையேறும் லாவகத்தில் ஒரே தாவாகத் தாவி அவன் கழுத்தை பிடித்து தொங்கினாள்.

கால்கள் இரண்டையும் அவன் இடுப்பில் கட்டிக்கொண்டு அசால்டாக படகைத் தொட்டுவிட்டாள் பாரதி.

விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிய வேதாளமாய், அர்ஜுனை வென்றதில் வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் பாரதி.

கோபம் கொள்வதற்கு பதிலாக, பெண்ணவளின் நெருக்கம் அர்ஜுனை அசைத்துப் பார்த்தது.

“ கீழே இறங்கி விடு பாரதி. பின் நடப்பவைக்கு நான் பொறுப்பல்ல” என்றான் அழுத்தமாக.

“ தோற்றுப்போன நீங்கள் எல்லாம் என்னை அதிகாரம் செய்யக் கூடாது அர்ஜுன்” என்று நக்கல் அடிக்க ஆரம்பித்தாள்.

மின்னல் விரைவுடன், அவளின் கைகளையும், கால்களையும் தட்டிவிட்டு, தன் கைகளை பின்னே கொண்டு சென்று, பாரதியை குறுக்காக தன் முதுகின் பின்னால் பிடித்துக் கொண்டு, அவளை அசைய விடாமல், அவளின் கழுத்தையும் கால்களையும் இறுக்கப் பிடித்தபடி கடலை நோக்கி நடந்தான்.

கடலில் அவளை வீசுவதற்காக அவன் எத்தனித்தபோது, “டேய் அர்ஜுன் மாமா...” என்று பலமாகக் கத்தினாள்.

அதிர்ந்தவன் பின் அவளை மெதுவாக கீழே இறக்கி விட்டான்.

தன் கால்களைப் பின்னோக்கி நகர்த்திக் கொண்டே...
“ சாரி அர்ஜுன்.... “

‘அது’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

“ மடையா என்று சொல்வதற்கு பதில் மாமா என்று சொல்லிவிட்டேன்” என்று அவனுக்குப் பழிப்பு காட்டியபடி தங்களின் காரை நோக்கி விரைந்தாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனமன சீண்டலில் மனதிற்குள் சிரித்தாலும், வெளியே விறைப்பாக உடலை வைத்தபடி நடந்து வந்தான்.

இப்படியாக மோதலும் சீண்டலுமாக அவர்களது பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது.

பந்தயத்திற்கு கிளம்பும் நாளும் வந்தது. விமானத்திற்கு கிளம்பியவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.

அபிராமியும் சுந்தரேச பாண்டியனும் ஹாலில் அவர்களுக்காக காத்திருந்தனர்.

மாடிப்படி வளைவில் தனது கார் சாவியை தூக்கிப் பிடித்த படியே வந்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

பாரதி தன் முழங்கை கொண்டு அவன் கையை இடிக்க கார் சாவி பறந்து கீழே விழுந்தது.

அவளை முறைத்தபடி கீழே குனிந்து சாவியை எடுப்பதற்கு முனைந்தான்.

அவன் கீழே குனிந்த நேரம் அபிராமியையும், சுந்தரேச பாண்டியனையும் அவனுக்கு முன்னே நிற்க வைத்தாள் பாரதி.

மனம் குளிர்ந்தபடியே அவனுக்கு ஆசீர்வாதம் செய்தனர் இருவரும்.

பேச வாய் திறந்தவனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தாள் பாரதி.

“ கிளம்பும் நேரம் எந்த பிரச்சினையும் வேண்டாம் ப்ளீஸ் அர்ஜுன்” என்றாள் அவனின் காதோரமாக.

மனையாளின் வேண்டுகோளோ, மனதின் மாற்றமோ ஏதோ ஒன்று அவனை அமைதி படுத்தியது. எதுவும் பேசாமல் காரை நோக்கி விரைந்தான்.

அவனோடு காரில் ஏறி அமர்ந்தவள் வெற்றி குறிகாட்டி அபிராமி மற்றும் சுந்தரேச பாண்டியனிடம் மகிழ்ச்சியாக விடைபெற்றாள்.

பஹ்ரைன் சர்வதேச சுற்று ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பஹ்ரைன் விமான நிலையம் வந்து இறங்கினர்.

தங்கள் அறைக்குள் நுழைந்ததும் இறுக்கமான அர்ஜூனின் முகத்தையே பார்த்தபடி இருந்தாள் பாரதி.

அவனின் மனம் கடந்த தோல்வியை நினைத்து அலை பாய்வதை உணர்ந்தாள்.

“ஒவ்வொரு வெற்றியும்,
தோல்விகள் எனும் மண்ணில்தான் விதைக்கப்படுகிறது.

தோல்விகளை சந்திக்காத
வெற்றி நிலைப்பதில்லை

வியர்வைத் துளிகள், கண்ணீர்த் துளிகள், அவமானங்கள், நிராகரிப்புகள், துரோகங்கள்
எனும் முட்களை கடந்தால்தான், வெற்றியெனும் பூப்பறிக்க இயலும்.

உங்களுடைய வெற்றி மரணிக்கவில்லை அர்ஜுன். அது மறைக்கத்தான் பட்டிருக்கிறது.

நீங்கள் சந்தித்த அந்தத் தோல்வியை அது பிறந்த இடத்திற்கே அனுப்பி விடுங்கள்.

என்னவனின் வெற்றிக்காக நான் காத்திருப்பேன் அர்ஜுன்.
என்னவனால் முடியாது என்றால் அது வேறு எவனாலும் முடியாது” என்றாள் அவன் விழிகளை நேராக உற்று நோக்கி.

சஞ்சலமுற்றிருந்தவனின் மனம் சற்று சமாதானம் ஆகியது.

பாரதியைப் பார்த்து உலக அதிசயமாக புன்னகை புரிந்தான்.

வார இறுதியில் நடக்கும் பந்தயத்திற்கு தயாரானான் அர்ஜுன்.

வெள்ளிக்கிழமை நடந்த பயிற்சி சுற்றில் கலந்து கொண்டான்.

உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அவனது ரத்த செல்கள் அனைத்தும் வெற்றி கேட்டு உயிர்த்தெழுந்தது.

காரின் ஸ்டீயரிங் வீலை ஆசையாக வருடிக் கொடுத்தான். இரண்டு சுற்றுகளில் தடுமாறினாலும் பின் தன் இயல்புக்கு வந்து வேகம் எடுத்தான்.

அர்ஜுனின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து ஆரவாரம் செய்தனர்.

கடந்த காலம் எல்லாம் மறந்து நிகழ்காலம் மட்டுமே அர்ஜூனின் உள்ளத்தில் உதயமாகியது.

பயிற்சி சுற்றை சிறப்பாக முடித்து விட்டு திரும்பியவனை, அவனது ரசிகைகள் சுற்றிவளைத்தனர்.

பாதுகாப்பு வீரர்கள் பக்கம் நின்றாலும் பலமாதங்கள் அவனைக் காணாத அவனது ரசிகைகள் அவனுடன் பேசத் துடித்தனர்.

அர்ஜூனின் விழிகளோ பாரதியைத் தேடியது. பார்வையாளர் வட்டத்தில் அமர்ந்திருந்த பாரதியோ, கைகளில் சுழற்றிக் கொண்டிருந்த குளிர் கண்ணாடியை கண்களில் அணிந்தாள்.

ரசிகைகளில் ஒருத்தியோ தன் உள்ளங்கையை நீட்டி அதில் அர்ஜுனை ஆட்டோகிராப் போடச் செய்தாள்.

பாரதியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே ரசிகையின் உள்ளங்கையில் தன் கையெழுத்தை இட்டான் அர்ஜூன்.

அந்த ரசிகையோ ஆனந்தத்தில் உள்ளங்கைக்கு ஆயிரம் முத்தங்கள் வைக்க ஆரம்பித்தாள்.

நீ, நான் என ரசிகைகள் கூட்டம் முண்டியடிக்க, பாதுகாப்பு படை வீரர்கள் விலக்க ஆரம்பித்தனர்.

அர்ஜுனும் சிரித்தபடியே ரசிகைகளுக்கு கையை ஆட்டிவிட்டுச் சென்றான்.

தன் உள்ளங்கையையே பார்த்துக்கொண்டு, படியேறிய அந்த ரசிகை கால் தடுமாறி கீழே விழுந்தாள்.

“ பார்த்து செல்லக் கூடாதா? கொஞ்சம் கவனமாக இருங்கள்” என்று அந்த ரசிகையை அறிவுறுத்திவிட்டு கடந்து சென்றாள் பாரதி.

தான் எப்படி விழுந்தோம் என்ற ஆராய்ச்சியை அந்தப் பெண் செய்ய ஆரம்பித்தாள்.

பாரதிக்கு பாதுகாப்பாக அருகில் இருந்த அருணோ “பாரதி நான் எல்லாம் அர்ஜுனிடம் கையெழுத்து வாங்கியதே கிடையாது.... “ என்று வேகமாக வாக்குமூலம் கொடுத்தான்.

அருணுக்கு பதில் உரைக்காமல் விறுவிறுவென முன்னேறிச் சென்றாள் பாரதி.

“ பாரதி நான் உனக்கு முன்பே சொல்லி இருக்கேனே. அர்ஜுனுக்கு பெண்களிடம் எல்லாம் நாட்டம் கிடையாது. அர்ஜுனை தப்பாக... “ அவள் முறைத்த முறைப்பில் வாயை மூடி விட்டு மௌனமாக அவளைப் பின்தொடர்ந்தான் அருண்.

பாரதியின் கோபம் கலந்த மௌனம் அருணை பாதிக்க, “ப்ளீஸ் பாரதி ஏதாவது பேசு. இப்படி அமைதியாக இருக்காதே” என்றான் தணிவான குரலில்.

“ அர்ஜுனின் வெற்றிப் பாதையில் எதுவும் குறுக்கே வரக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன் அருண் அண்ணா.

நம்முடைய சிறு கவனச்சிதறலும் பெரிய பாதகத்தில் வந்து முடியலாம். பரத்தின் பணம் பாதாளம் வரை பாயக் கூடியது.

ஆண் பெண் என யாரையும் நம்பக்கூடாது. இதில் இந்த அர்ஜுன் வேறு. நான் கோபப்பட வேண்டும் என்பதற்காக என்னைப் பார்த்துக்கொண்டே அந்த பெண்ணிற்கு கையெழுத்து போடுகிறார்.

அந்தப் பெண்ணின் கையில் ஏதோ ஆயுதம் இருந்தது போல் எனக்குத் தோன்றியது.

சந்தேகம் என்று வந்தபின் சிறிது பெரிது என்று இல்லாமல் சோதிக்கவே அப்படிச் செய்தேன்.

பரத்தின் பழி வெறி எந்த எல்லைக்கும் போகக் கூடியது.
அர்ஜுனின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியம் அருண் அண்ணா” என்றாள்.

அர்ஜுனை தன்னைவிட கூர்ந்து பாதுகாக்கும் பாரதியின் விழிகளைக் கண்டு பிரமித்தான் அருண்.

“ போனமுறை நண்பன் என்ற போர்வையில் அபிராமி அம்மாவை வைத்து கழுத்தை அறுத்தான்.

இந்த முறை அவனது முகமூடி கிழிந்து விட்டதால், மறைமுகமாக மோதாமல் நேரடியாக மோத நிறைய வாய்ப்பு உள்ளது.

அவனது திட்டம் எதுவாக இருந்தாலும் இந்த முறை எதுவும் பலிக்கப் போவதில்லை பாரதி.

அவனது துரோகத்திற்கான பரிசை அர்ஜூனின் கையால் விரைவில் வாங்கப் போகிறான்” என்றான் உறுதியுடன்.

மறுநாள் தகுதிச்சுற்றில் ஃபெராரி அணியின் சார்பாக எளிதாகத் தேர்வு அடைந்து விட்டான் அர்ஜுன்.

ரெட்புல் அணியின் சார்பாக பரத் கேசவனும் ஏகப்பட்ட தகிடுதத்தம் செய்து சேர்ந்துவிட்டான்.

பந்தய நாளும் விடிந்தது. அர்ஜுனின் வாகனத்தில் கியர் பாக்ஸை சற்று லேசாக தளர்த்த ஏற்பாடு செய்தான்.

எரிபொருளின் அளவை சற்று குறைக்கச் செய்தான்.

இதற்காக ஏகப்பட்ட பொருட் செலவை செய்தான் பரத். இந்த ஏற்பாடும் பத்தாது என்று, போன முறையைப் போலவே பானத்தை மாற்றவும் ஏற்பாடு செய்திருந்தான்.

தான் ஜெயிப்பதை விட அர்ஜுன் தோற்பதையே மிகவும் எதிர்பார்த்தான் பரத்.

தனது வெற்றிக்கு சாதகமாக சில எதிரணி வீரர்களையும் விலைக்கு வாங்கியிருந்தான்.

தனது ஏற்பாட்டில் மிகவும் மகிழ்ச்சியுற்ற பரத் ஏஞ்சலினாவோடு கையைக் கோர்த்துக்கொண்டு செயற்கை புன்னகையோடு பந்தயத்திற்கு வந்தான்.

ஹோட்டல் அறையில் அர்ஜுனின் முன்னே நின்றிருந்த பாரதி, “அர்ஜுன் நீங்கள் நிச்சயம் ஜெயித்து விடுவீர்கள். ஜெயித்த பிறகு நான் கேட்கும் பரிசை நீங்கள் தந்தே ஆக வேண்டும். எனக்கு வாக்கு கொடுங்கள்” என்று தனது வலது கையை நீட்டினாள்.

எதுவும் பதில் பேசாமல் பாரதியையே உற்றுநோக்கினான் அர்ஜுன்.

“ மாமா ப்ளீஸ்.... “ என்றாள் மந்தகாசமாக.

பாரதியின் அழைப்பில் விரும்பியே மயங்கியபடி, அவளது வலது கையோடு தன் வலதுகையைச் சேர்த்தான்.

இருவரும் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு சிரித்த முகத்துடன் பந்தய தளத்திற்கு வந்தனர். அர்ஜுன் இருவரையும் பார்த்து தலையசைத்துவிட்டுச் சென்றான்.

அர்ஜூனின் பந்தயக் காரில் பானத்தை நிரப்புவதற்கு ஃபெராரி அணியின் குழுவினர் சென்று கொண்டிருக்கும் போது ரசிகை போல் ஒரு பெண் ஓடி வந்து அந்த பானத்தை கலைத்தாள்.

“சாரி சார். வரும் அவசரத்தில் தடுமாறி விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

சுதாரித்துக்கொண்ட பாரதி, ஃபெராரி அணியினரை வேறு பானங்கள் கொண்டு வந்து மாற்றும்படி கட்டளையிட்டாள்.

அந்தப் பெண்ணை கூர்ந்து நோக்கிய பாரதி, “ ஒரே பிளானை எத்தனை தடவை போடுவான் இந்த பரத். அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறிக்கொண்டு இதையெல்லாம் அவனிடமே கொடுத்து விடு” என்றாள் கீழே சிதறிக் கிடந்த பானங்களைக் காட்டி.

கண்களில் பயம் சூழ அந்தப்பெண் தட்டுத் தடுமாறி நின்றாள்.

“ உன்னை காவல்துறையிடம் பிடித்து... “

‘ ப்ளீஸ் மேடம். வேண்டாம் மேடம். என்னை மன்னித்து விடுங்கள். என் குடும்ப வறுமையின் காரணமாக இந்த செயலைச் செய்ய துணிந்து விட்டேன்” என்று கெஞ்சினாள்.

“ எய்தவன் இருக்க அம்பை நோகி என்ன பயன்? நீ செல்லலாம்” என்றாள் ஒரு மகாராணியின் தோரணையோடு.

அருகில் இருந்த அருணோ “இதை இப்படியே விடக்கூடாது பாரதி “ என்றான் ஆவேசமாக.

“முதலில் நாம் பந்தயம் நடக்கும் இடத்திற்கு செல்லலாம் அருண் அண்ணா. இதையெல்லாம் நான் எதிர்பார்த்தே இருந்தேன்“ என்றாள் முடிவாக.

அந்தப் பெண்ணை கொலை செய்து விடும் வெறி இருந்தாலும், பாரதியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பாரதியுடன் பந்தயம் நடக்கும் இடத்திற்கு வந்தான் அருண்.

இது எதையும் அறியாத அர்ஜுன், ஆர்வமாக பந்தயக் காரில் ஏறி அமர்ந்தான்.

கொடியசைத்து போட்டி துவங்க, முதல் சுற்றிலேயே அசால்டாக முதல் இடத்திற்கு வந்தான் அர்ஜூன்.

அடுத்தடுத்த சுற்றுகள் அவன் வெற்றியை பறைசாற்ற ஆவேசம் கொண்டான் பரத்.

ரெட்புல் அணியின் சார்பாக களமிறங்கிய பரத், அர்ஜுனை முந்த வேண்டும் என்ற ஆவேசத்தில், தன்னறிவு கெட்டு நிதானம் இழந்து, அதிக வேகம் எடுத்தான்.

வளைவுகளில் தன் கட்டுப்பாட்டை இழந்த பரத்தின் கார், போர்டியரில் உள்ள தடைகளுக்குள் பறந்து சென்று மோதியது, வெற்றியை அடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டு பரிதாபமாக தரையில் விழுந்தான் பரத்.

அவனுக்காக அவனைப் பின்தொடர்ந்த எதிரணியினர், அவனின் வீழ்ச்சியைக் கண்டு, அவனைக் கண்டு கொள்ளாமல் தங்களின் வெற்றிக்காக வேகம் எடுக்கத் தொடங்கினர்.

பரத் கீழே விழுந்ததும் அத்தனை கேமராக்களும் ஏஞ்சலினாவை நோக்கி சென்றன.

அந்த உலக அழகியோ, “நாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரியப் போகிறோம். இதுவே எங்களது கடைசி சந்திப்பு. பரத் தோற்றதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று படு ஸ்டைலாக கூறிவிட்டு தோளை குலுக்கிக் கொண்டு சென்றாள்.

தன் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு தன் காரினை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜுனின் கவனத்தை எதுவும் திசைதிருப்பவில்லை.

அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னேறிக்கொண்டிருந்தான் அர்ஜுன். அதீத பயிற்சியின் காரணமாக எதிர் அணி வீரர்களும் அர்ஜுனுக்கு சளைக்காமல் காரினை செலுத்திக் கொண்டிருந்தனர்.

இதுவரை தன் வெற்றியை யாருக்கும் காட்டி மகிழ விரும்பாத அர்ஜுன், பாரதியின் முன் தன் வெற்றியினை பகிர ஆவல் கொண்டான்.

திடீரென்று கார் பாதையின் பரிமாணம் மாறியது
பந்தயத்திற்கான சுற்று ஒரு சுரங்கப்பாதயாக மாறியது.

அர்ஜுன் போகிறான்... போகிறான்... போய்க் கொண்டே இருக்கிறான்.

அந்தச் சுற்று அர்ஜுனுடைய அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

அவனின் ஆற்றலின் வரம்புகளை எல்லாம் உடைத்து அறிவின் எல்லைகளை விரிவாக்கினான். பின் அசாதாரணமாக அந்த சுரங்கப்பாதை சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினான்.

அடுத்த சுற்றில் இரண்டாவது இடத்தில் இருந்தான் அர்ஜூன். தனது எஞ்சினிலிருந்து அனைத்து ஆற்றலையும் உபயோகிக்க எண்ணினான்.

அவனுடைய வரம்பு 10,500 ஆர்பிஎம் ஆக இருந்தது. ஆனால் டாப் கியரில் 11,500 ஆர்பிஎம் ஆக்கி கொண்டு சென்றான்.

இறுதிச்சுற்றை நெருங்க அவனது கியர்பாக்ஸ் கீழே விழுந்தது, வானிலை நிலையும் வேகமாக மோசமடைந்தது, ஆறாவது கியரை மட்டுமே பயன்படுத்தி பந்தயத்தை முடிப்பதைத் தவிர அர்ஜுனுக்கு வேறு வழியில்லை.

காரில் உள்ள எரிபொருளின் அளவும் குறைந்து கொண்டே வந்தது.

சிகப்பு ஒளியை ஒளிரச் செய்து அதன் அபாய கட்டத்தை எடுத்துக் காட்டியது.

அதுதான் அவனுக்கு அதிகபட்ச சவால். அதற்கு மேல் அவனுடைய வெற்றிக்கு இடமில்லை.

அகம் பாவி வெளியேறத் துடிக்கும் நேரம்,
“மாமா ப்ளீஸ்.... “ என்ற குரல் அவனின் வேகத்தையும் விவேகத்தையும் தட்டி எழுப்பியது.

பந்தயத்தின் இறுதிக்கட்டத்தில் அர்ஜுனின் வடிவம் கம்பீரமாக மாறி நின்றது.

அர்ஜுன் அவன் வாழ்க்கையில் செய்யாத விஷயங்களைச் செய்தான். சுற்றுவட்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் ஓட்டி, பந்தயத்தின் அதிகபட்ச தளர்வுகளைப் பயன்படுத்தி, பந்தயத்தில் வென்றான் மூன்றே வினாடிகளில்.

வெற்றி பெற்ற அர்ஜுனோ.தன் காரை ஸ்டைலாக ஒரு சுற்று சுற்றி நிறுத்தினான்.

தன்னவனின் வெற்றியில் அகமும் முகமும் மலர அர்ஜுன் வரும் பாதை பார்த்து காதல் பெருக்குடன் நின்றாள் பாரதி.

"காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!"
i love you arjun... nam kavanam pottiyil irukka vendum bharath
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
i love you arjun... nam kavanam pottiyil irukka vendum bharath
I love you Anamika 12❤
படிக்கப் படிக்க உங்களை மிகவும் பிடிக்குதே ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top