• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 35 (நிறைவுப்பகுதி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் – 35
( நிறைவுப்பகுதி )




அர்ஜூனின் ஆழ்ந்த அணைப்பில் இருந்த பாரதி, மெல்லத் தலை நிமிர்த்தி பெருகிய காதலுடன் அவனைப் பார்த்தாள்.

அவளுக்கு சற்றும் சளைக்காத காதல் பார்வையுடன் பாரதியை இறுக்கி அணைத்தான் அர்ஜுன்.

“ மரணத்தோடு முத்தமிட்டால்தான் மன்னவனின் இதயக் கதவு திறக்குமோ? “ மென் குரலில் உரைத்தாள்.

“ தீண்டும் மரணத்தை தீக்கிரையாக்கி உன்னைக் காத்திடுவேன். என் ரதியை மீட்டிடுவேன்” என்றான் உள்ளம் கொண்ட உவகையுடன்.

“ அர்ஜுன்.... என் காதல் வெளிப்படும் முன் உங்கள் காதல் வெளிப்பட்டு விட்டதே. உங்களை நானே வென்றேன்” என்றாள் வெற்றிக்களிப்பில்.

தான் பெற்ற தோல்வியைக் கூட சுகமாய் ஒத்துக்கொண்டான் அர்ஜுன்.
“ என்னை வெற்றி கொண்ட என்னவளே, உன் வெற்றிக்கான பரிசாய் என்ன வேண்டும்?” பெருமிதம் வழிந்தது அர்ஜூனின் குரலில்.

“ வேளை வரும் போது பெற்றுக் கொள்வேன் என் காதல் பரிசை“ என்றாள் சன்னச் சிரிப்புடன்.

இனியும் சொல்லாமல் தாமதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்த பாரதி, அர்ஜுனிடம் பரத் பற்றிய தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக தெரிவித்தாள்.

பரத் தன்னை அணுகியது, தான் அவனுக்கு பதிலடி கொடுத்தது, பந்தயத்தின் போது அவன் செய்ய நினைத்த தகிடுதத்தம், தற்போது அவன் செய்ய நினைத்த பாதகச் செயல் என அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.

அதனைக் கேட்டவனின் முகம் சிரித்த படியே இருந்தது. “பரத்தை பற்றி நீ கவலைப்படாதே பாரதி. இனி அவன் என் பொறுப்பு” என்றான் முகத்தில் மலர்ச்சி குறையாமல்.

ஆனால் அவன் முதுகின் பின்னால் இருந்த கை - முஷ்டிகளோ இறுகி நரம்புகள் புடைத்தெழுந்து நின்றன.

பின் பாரதியை அழைத்துக்கொண்டு தங்கள் அறைக்கு வந்து அவளது பாதுகாப்பினை உறுதி செய்தான்.

“ நீ சற்று நேரம் ஓய்வெடு பாரதி. பழைய நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வருகிறேன் “ என்று கூறிக்கொண்டு வெளியேறினான்.

பாரதியின் முகத்தில் யோசனைகள் படர்ந்தாலும் அந்த நாளின் களைப்பு மற்றும் அதிர்ச்சியின் காரணமாக உறங்க ஆரம்பித்தாள்.

அர்ஜுனின் அலைபேசி அதிவேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. அவனது கட்டளைகள் திசைக்கு ஒன்றாக பறந்து சென்றன.

வரவழைக்கப்பட்ட காரில் அதிவிரைவாக பனி மலையை நோக்கிச் சென்றான்.

சிகப்பு குறியினால் ஆபத்து பகுதி என்று போடப்பட்டிருந்த பலகையைத் தாண்டி அவனது கார் பயணம் செய்தது.

கார் பயணம் முடிந்தபின் அர்ஜுனோடு அவனது பாதுகாப்பு குழுவும் இணைந்து கொண்டது.

சுற்றி இறுகிய பனிக்கட்டிகளால் ஆன பாறைகளே நிறைந்திருந்தன. பாதைகளையும் பனிக்கட்டிகள் அடைந்திருந்தன.

அணிந்திருந்த அவனின் கனமான ஆடைகளையும் மீறி குளிர் அவனுள் ஊடுருவப் பார்த்தது. கொதித்திருந்த அவன் உள்ளத்திற்கு முன் அந்த குளிர் ஒன்றுமில்லாததாகிப் போய்விட்டது.

சிறிது தூரம் கடந்த உடன் பனியாற்றில் ஏற்படக்கூடிய ஆழமான பிளவான ஒரு பனிப் பிளவு தென் பட்டது.

கடினமான பாறைகளின் இடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளைப் போல் அந்த பிளவு தரையினில் நீண்டிருந்தது.

அகலமாகவும் ஆழமாகவும் நீண்டிருந்த அந்தப் பனிப் பிளவின் அருகில் பரத் கிடத்தப்பட்டு இருந்தான்.

அந்த துரோகியின் கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. அர்ஜுனை கண்டவுடன் பரத், “என்னடா... ஜெயித்து விட்டோம் என்ற திமிரில் இருக்கிறாயா?

உன் ஆட்களைக் கொண்டு என்னை இப்படி கட்டிப் போட்டு வைத்தால் நான் அடங்கி விடுவேனா?

என் தந்தையிடம் சொன்னால் உன்னை ஒன்றுமில்லாத தாக்கி விடுவார்” என்று கொக்கரித்தான்.

“ ஆஹான்.... அப்புறம் பரத்... “ என்றான் அர்ஜுன் அழுத்தமாக.

அர்ஜுனின் அமைதி பரத்தை வெறி கொள்ளச் செய்தது.
“ உன் கதை போன பந்தயத்தோடு முடியும் என்று நினைத்தேன். கண், கால்களை இழந்து விட்டு நீ திரும்பி வரமாட்டாய் என்று நினைத்தேன். மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து என் உயிரை வாங்கினாய்.

இந்த முறை தோல்வியோடு தொலைந்து விடுவாய் என்று நினைத்தேன். அனைத்தையும் மீறி வெற்றி பெற்று எழுந்து நிற்கிறாய். இழந்த புகழை எல்லாம் மீண்டும் பெற்று விட்டாய்.

பந்தயத்தில் இல்லை திருமணபந்தத்திலாவது உன்னை ஜெயிக்கலாம் என்று உலக அழகியை திருமணம் செய்தால், அவளும் விட்டு விட்டுப் போய்விட்டாள்.

நீதான் திமிர்பிடித்தவன் என்றால் உன் பொண்டாட்டி இருக்கிறாளே அவள் திமிருக்கே திமிர் பிடித்தவள்.

என்னை அடித்து வீழ்த்திய அகந்தையில் இருக்கிறாள். உனக்கு அரணாக நிற்கிறாள். இன்றோடு அவள் ஒழிந்தாள் என்று நினைத்தேன். சை....தப்பி விட்டாள்” என்றான் கோபம் கொப்பளிக்கும் குரலில்.

பாரதியை சொன்னவுடன் அர்ஜுனின் பொறுமை பறந்து எல்லை மீறியது.

அர்ஜுனின் கண்பார்வையில் பரத்தின் கை கட்டுகள் அவிழ்க்கப்பட்டன.

திமிரிக்கொண்டு வந்தவன் அர்ஜுனனை நோக்கி பாய்ந்து வந்தான். அவனின் தாக்குதல்களை அசால்டாக சமாளித்தான் அர்ஜுன்.

உதவிக்கு வர எத்தனித்த பாதுகாப்பு படையையும் கண்ணசைவில் தள்ளி நிற்கச் செய்தான்.

தன்னுடைய தாக்குதல்கள் ஒன்றும் பயனில்லாமல் போகவே வெறி பிடித்த பரத் ஓடிவந்தான். அவன் ஓடி வரும் நேரம் வரை காத்திருந்த அர்ஜுன் அவன் அருகில் வந்தவுடன் சற்று விலகினான்.

ஓடி வந்து விழுந்த வேகத்தில் பனிப் பிளவுகளில் சிக்கிக் கொண்டான் பரத்.

பனிப் பிளவுகளில் பனி உருக கொஞ்சம் கொஞ்சமாக சற்று உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பித்தான் பரத்.

மரணத்தின் பயம் கண்களில் தெறிக்க, அர்ஜுனை நோக்கி தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டி கத்த ஆரம்பித்தான்.

“ அர்ஜுனன் நான் செய்த தவறுகளை மறந்து விட்டு என்னை மன்னிக்க கூடாதா? ஆயிரம் இருந்தாலும் நான் உன்னுடைய நண்பன் அல்லவா” என்றான் பயம் கலந்த குரலில்.

கண்களில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை சரி செய்தவாறே,
“ நண்பனா?.... “ பெருங்குரலெடுத்து நகைக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.

“ உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றபின் மீண்டும் உடலில் சேர முடியுமா?
நட்பும் அப்படித்தான்....

பாம்பு தன் தோலை எத்தனை
தடவை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்..

தூரோகிகள் யார் தெரியுமா..?
துரோகத்தை செய்து விட்டு..
அந்த குற்ற உணர்வு சற்றும்
இல்லாமல் திரிபவர்கள் தான்..
ஆகச் சிறந்த துரோகிகள்..!

உன் உயிருக்காக நிமிடத்தில் உன் மனதை மாற்றும் நீயும் வேண்டாம்...

உன் களங்கப்பட்ட நட்பும் வேண்டாம்..

உனக்கான தண்டனையை நான் கொடுக்க வேண்டும் என்றால் அதை என்றோ கொடுத்திருப்பேன். நண்பன் என்ற ஒரு சொல்லுக்காகவே எல்லை காத்து நின்றேன். உன் நச்சுக்காற்று பாரதியின் பக்கம் வீசும் போது உனக்கான பதிலடியை பெற்றுக் கொள் .... “ என்று கூறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

பரத்தின் மரண அலறல் அந்தப் பனி மலையின் அனைத்து திசைகளிலும் பட்டு எதிரொலித்தது.

அர்ஜுன் பாரதியைத் தேடி தன் அறைக்கு விரைந்து வந்தான். தன் அறையின் ஜன்னல்கள், வெளியே பனி படர்ந்திருக்கும் காட்சியை படம்பிடித்து காட்ட,
வெண் மெத்தையில், அழகிய மயில் ஒன்று தோகை விரித்தது போல் படுத்திருந்த பாரதியை பார்த்தான் .

அவன் இதயம் முழுவதும் பாரதியின் பால் எழுந்த காதல் நிறைந்து வழிந்தது. அவள் மலையில் சறுக்கிய அடுத்த நொடி, தன் உயிரும் சறுக்கியதை அவன் உணர்ந்தே இருந்தான்.

வானில் மேகங்கள் கலைந்து கூட, அர்ஜுனின் மனவானில் மோகங்கள் மேகங்களாய் கூடி, காதல் மின்னல்கள் வெட்ட ஆரம்பித்தது.

வான் நிலவும் அர்ஜுன் தன்னை தேன் நிலவாய் மாற்றும் நேரம் கண்டு, வெட்கம் கொண்டு மேகத்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவள் நாசியிலிருந்து வெளிப்பட்ட காற்று, அர்ஜுனுக்கு வேய்ங்குழலில் இருந்து வெளிவரும் கீதமாய் இசைக்க ஆரம்பித்தது.

மானுடனுக்கே உரிய மகிழ்ச்சியின் அரங்கேற்றத்தை தேடி, கட்டிலை நோக்கி நடந்தான் அர்ஜூன்.

கட்டிலில் அமர்ந்தவன் பாரதியின் தலையை தன் மடி மீது எடுத்து வைத்தான். சுகமான கனவுகளில் புரண்டவள் அவன் இடையோடு தன் கைகளை கோர்த்து இறுக்கிக் கொண்டாள்.

தன்னவள் தன்னை ஸ்பரிசித்த அடுத்த நொடி, அவனுடைய காதல் பூக்கள் வெடித்துப் பூக்காடாய் மாறியது. தன் உணர்வுகளை அடக்கியவனை அந்த உணர்வுகளே விழுங்கிவிட,
அவள் மலர் முகத்தை நோக்கி குனிந்து இதழோடு இதழ் சேர்த்தான்.

முத்தம் பரிமாறியவனின் வேகத்தில் மூச்சடைக்க கண்விழித்தாள் பாரதி.
அவளை ஆண்டு விட அவன் கண்களால் வினா எழுப்ப, தன் கன்னங்கள் செம்மையுற, இமை தாழ்த்தி தன் சம்மதத்தை தெரிவித்தாள் பாரதி.

தாம்பத்தியத்தின் அடிப்படையாம் நம்பிக்கையும், பாதுகாப்பும் தன்னவன் தந்திட பெண்ணவளோ தன்னையே ஒப்படைத்தாள் அவனிடம்.

தன் தேடலைத் தொடங்கியவன் இறுதியில் தொலைந்தே போனான் அவளிடம். தேனினும் இனிய தேனிலவு இனிமையாய் அரங்கேறியது பனிமலை பிரதேசத்தில்.

அர்ஜூன் பாரதியுடன் இணைந்து தன் வீடு திரும்பினான்.
சிரித்த முகமாக வந்த தம்பதியர் இருவருக்கும் அபிராமி ஆலம் சுற்றினார்.

பாரதிக்கு திலகமிட்டு விட்டு, நடுங்கும் கைகளுடன் தன் மகன் நெற்றியை நோக்கி விரல்களை கொண்டு வந்தார். அவனின் நெற்றியில் திலகமிட்ட அடுத்த நொடி அர்ஜுன் தன் தாயின் கால்களில் விழுந்து வணங்கினான்.

அர்ஜுனை தொடர்ந்து பாரதியும் விழுந்து வணங்கினாள்.
இருவரையும் அணைத்துக் கொண்ட அபிராமி ஆனந்தத்தில் கண்ணீர் பொழிந்தார்.

“மாம்....” என்றான் மகிழ்வோடு.

“ சின்ன கண்ணா “ என்றார் பாசத்தோடு.

தன் மகளின் வரவை அறிந்து அங்கே காத்திருந்தார் ராம்பிரசாத்.

அவர்களின் பாசத்தை கண்டவள், அதே மகிழ்ச்சியுடன் ஓடி வந்து தன் தந்தையை அணைத்துக்கொண்டாள்.
எப்பொழுதும்போல் அந்த தந்தையின் கரங்கள் தன் மகளை ஆதரவாய் வருடிக் கொடுத்தன.

தன் மகனுக்கும் மருமகளுக்கும் விருந்து படைத்தார் அபிராமி. சுந்தரேச பாண்டியன் கம்பீரம் குறையாமல் அனைத்தையும் ஓரவிழிப் பார்வையாலேயே அளவிட்டுக் கொண்டிருந்தார்.
அந்த மகிழ்ச்சியில் தானும் இணைந்து கொள்ள அவரது ஆழ் மனம் துடித்தது.

இதனை கவனித்த பாரதி அவரின் அருகில் வந்து, அவரது கையைப் பற்றிக்கொண்டு அர்ஜுன் அருகில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு, தன் தொண்டையை செருமிக்கொண்டு, “நீ வெற்றி பெற்றதற்கு பாராட்டுக்கள்.... “ என்றார்.

விளையாட்டுத் துறையைத் தான் தேர்ந்தெடுத்ததற்கு எந்த ஆதரவும் தெரிவிக்காத தந்தை, இன்று தன் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்ததைக் கண்டு பாரதியை ஆராய்ச்சியாய் நோக்கினான் அர்ஜூன்.

அவளது விழியோரம் சுருங்கி கெஞ்சுவதைக் கண்ட அர்ஜுன், தனது முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு, “தேங்க்ஸ்... “ என்று கூறிவிட்டு மாடி ஏறி விட்டான்.

இந்த உலக அதிசயத்தை கண்டு அபிராமி விழிவிரித்து ஆனந்தக் கூத்தாடினார்.
ஓடிவந்து தன் மருமகளை கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நேசம் நிறைந்த இந்த குடும்பத்தில் தன் மகள் நிறைந்து இருப்பதைக் கண்டு ஆனந்தப்பட்டார் ராம்பிரசாத்.

வெகு ஆண்டுகள் கழித்து தன் தந்தை தன்னிடம் ஆதரவாய் பேசியதை எண்ணி நெகழ்ச்சியில் இருந்த அர்ஜுன், ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியில் தன் பார்வையைப் பதித்து இருந்தான்.

அறைக்குள் நுழைந்த பாரதி, அர்ஜுனை பின்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “ இனிப்பான தருணங்களை அனுபவிக்காமல் ஏன் இறுகிப்போய் இருக்கிறீர்கள் அர்ஜுன்” என்றாள் அவன் காதுகளில்.

அர்ஜுனிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராமல் இருப்பதை கண்ட பாரதி, அர்ஜுனைப் பற்றித் திருப்பினாள்.

கண்கலங்க நின்றிருந்த அவனின் தோற்றம் அவளை அசைத்தது.

பாரதியின் கைகளை சட்டென இழுத்து தன் உதட்டின் அருகே கொண்டு சென்று முத்தங்களை வாரி வழங்கினான்.

நன்றிகளை வார்த்தைகளால் சொன்னால் என்ன?, முத்த பாஷைகளால் சொன்னால் என்ன?
அவனின் உணர்வுகளை சந்தோஷமாகவே உள்வாங்கினாள் பாரதி.

“நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!.....

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!

கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ......”

பாரதியின் கவிதை வரியோடு தன் காதலை சமர்ப்பித்தான் அவளிடம்.

அவனுடைய சரணாகதியில் சர்வமும் சிலிர்த்து எழுந்தது பாரதிக்கு.

அவனின் அகம்பாவத்தை அழித்து அவனைக் காதலால் ஆண்டவளோ,

“உருவாய் அறிவில் ஒளிர்வாய் – கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் – கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் – கண்ணா !
இணைவாய் எனதா வியிலே – கண்ணா !

இதயத் தினிலே யமர்வாய் – கண்ணா !”

அவனுக்கு சளைக்காமல் பாரதியின் கவி வரிகளிலேயே தன் காதலையும் சமர்ப்பித்தாள் அவனிடம்.

இரு மனங்களின் ******* காதல் சங்கமமாய் சங்கமித்தது!!!!

காலையில் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளை படித்த பாரதியின் விழிகள் ஒரு நிமிடம் அதிர்ந்தது.

“ விளையாட்டு வீரர் பரத், ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கின் போது பனிப் பிளவில் மாட்டி தன் இரு கால்களையும் இழந்து விட்டார்.... “ என்றது செய்தித்தாளின் சாராம்சம்.

செய்தித்தாளை கைகளில் எடுத்துக்கொண்டு அர்ஜுனை நோக்கி விரைந்தாள் பாரதி.

“ அர்ஜுன் பரத்திற்கு இப்படி ஆனதில் உங்களுடைய பங்கு என்ன? “ என்றாள்.

“ எனக்கு எதையும் யாருடனும் பங்குபோட பிடிக்காது” என்றான் அர்ஜுன் கண்களில் விஷமச் சிரிப்புடன்.

“இருந்தாலும் இது.... “ என்று இழுத்தாள் பாரதி.

“ துரோகத்தின் முடிவு இதுதான் பாரதி “ என்றான் முடிவாக.

அவனின் அழுத்தமான குரலில் அவனது மனக்காயங்களை உள்வாங்கினாள் பாரதி.

பாரதியை பார்ப்பதற்கு பாரதியின் தோழி ரஞ்சனி அவளது வீட்டிற்கு வந்திருந்தாள்.

அவள் வீட்டிற்குள் நுழைய, அருண் வீட்டை விட்டு வெளியே வர, இருவரும் சட்டென்று மோதிக்கொண்டனர்.

தன்னை யாரோ இடித்து விட்டதை உணர்ந்த ரஞ்சனி அடிப்பதற்கு தன் கைகளை ஓங்கினாள்.

ஓங்கிய அவள் கைகளை வாகாய் பிடித்துக்கொண்டு,
“பொம்பளைனா பொறுமை வேணும்
அவசரப்பட கூடாது
அடக்கம் வேணும்
ஆத்திரப்பட கூடாது
அமைதி வேணும்
அதிகாரம் பண்ண கூடாது
பய பக்தியா இருக்கணும்
இப்படி பஜாரி தனம் பண்ண கூடாது
மொத்தத்துல பொம்பளை
பொம்பளையா இருக்கணும்”
என்ற படையப்பா டயலாக்கை மூச்சுவிடாமல் பேசினான்.

பின் ரஞ்சனியை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு வெளியே சென்று விட்டான்.

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் ரஞ்சனிக்கு அருணின் நடவடிக்கைகள் சுவாரசியத்தைக் கொடுத்தன.

வெளியே வந்த அருணோ, “டேய் சைத்தான்....அடங்காத மாட்டை பாட்டுப்பாடி அடக்கும் ஸ்டைலில், வசனம் பேசி அவளுடைய வாயை அடைத்து விட்டாயே....எஸ்கேப்... “ என்று கூறியபடி தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு ஓட்டம் பிடித்தான்.

பாரதியின் பிறந்தநாள் அன்று.....

புலர்ந்தும் புலராத அந்த காலைப்பொழுதில், கட்டிலில் சத்தம் செய்யாமல் பாரதியை நோக்கி நகர்ந்தான் அர்ஜூன்.

பாரதியின் காதின் அருகில் குனிந்து கொண்டு, “கண்ணம்மா... செல்லம்மா..... “ என்று அழைத்தான்.

“ அம்மா.... “ என்ற திடுக்கிடலுடன் எழுந்தாள் பாரதி.

“ஏய்.... பாரதி பார்த்து..... மெதுவாக.... “ என்று தன் மகவை சுமந்து கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்து பதறினான் அர்ஜுன்.

அவளுடைய நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா” என்று கூறிக்கொண்டு அவளுடைய கழுத்தில், முத்துக்களுக்கிடையே வைரங்கள் கோர்க்கப்பட்ட மாலையை பரிசளித்தான்.

கழுத்தில் வாங்கிக்கொண்ட முத்தாரத்துடன் அர்ஜுனை, கண்களில் கோர்க்கப்பட்ட கண்ணீர் முத்துச் சரத்துடன்,அவனுடைய கண்களில் முத்தாடிக் கொண்டாடினாள் பாரதி.

அர்ஜுனின் மடியில் படுத்துக்கொண்டு அவன் இடையோடு தன் கைகளை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

அவளின் முத்த வெள்ளத்தில் மூழ்கியவன், மென்மையாக அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

தன் தாயின் அன்பு முத்துக்களாய் மின்ன, தன்னவனின் காதலோ வைரமாய் அதில் ஜொலிக்கக் கண்டு மனம் நிறைந்தாள்.

பிரசவ நாட்கள் நெருங்க நெருங்க, அர்ஜுன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.

அர்ஜுனின் கைகளைப் பிடித்துக்கொண்டு பாரதி, "அன்று என்ன காதல் பரிசு வேண்டும் என்று கேட்டீர்களே... என்னுடைய முதல் பிரசவம் மலையின் மீது நடைபெற வேண்டும். அதுவும் நாம் காதல் பரிமாறிக் கொண்ட அந்த ஆல்ப்ஸ் மலையில் இருக்க வேண்டும்” என்றாள் ஆசையாக.

அவள் ஆசைக்கு உலகத்தையே பரிசளிக்க நினைப்பவன் உலகத்தின் உயரத்திற்கு கூட்டிச்செல்ல மாட்டானா.

அபிராமி, சுந்தரேச பாண்டியன், ராம்பிரசாத், அருண் என அனைவரும் ஆல்ப்ஸ் மலைக்கு உடன் கிளம்பினர்.

எந்தப் பனிமலை அவர்களின் காதலுக்கு சாட்சியாக இருந்ததோ, அந்தப் பனி மலையில் அர்ஜுன் பாரதியின் புதல்வன் அபிநந்தன் பிறந்தான்.

இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது.

தன் தோழி பாரதி வழியாகவே, அருணின் மேல் ஏற்பட்ட தன் காதலை திருமணத்தில் கொண்டுவந்து நிறுத்தினாள் ரஞ்சனி.

சுபயோக சுபதினத்தில் அருணுக்கும் ரஞ்சனிக்கும் திருமணம் இனிதே முடிந்தது.

மிஸ்டர் சைத்தானோடு மிஸஸ் சைத்தான் வாழ்வும் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு....

சுந்தரேச பாண்டியன் பந்து போட, அபிநந்தன் அதை கிரிக்கெட் மட்டையால் தடுக்க, அபிராமியோ ஓடிச் சென்று பந்தை எடுத்தார்.

அப்போது உள்ளே நுழைந்த அருண்," ஹாய் நந்து... "
என்றான்.

சின்னவனோ தன் தந்தையைப் போலவே அருணை முறைத்து, " கால் மீ பாஸ்.... " என்றான் அதிகாரமாக.

" சைத்தான் ஜெராக்ஸ் கடையில் தான் பிள்ளையை பெத்துக்கும் போல.... " வழக்கம்போல தன் மைண்ட் வாய்ஸ் உடன் போராடினான்.

அருணும் அவர்களது விளையாட்டில் இணைந்து கொண்டான்.

“ நந்து படிக்கவேண்டும் வா...” என்று பாரதி அழைக்க, தன் தாத்தாவை பார்த்து, தன் தந்தையை போலவே கண் சிமிட்டினான் அபிநந்தன்.

“ பாரதி இன்னும் சிறிது நேரம் போகட்டும்மா பிறகு படிக்கலாம்" என்றார் பேரனுக்கு ஆதரவாக.

“ அதற்காக எப்பொழுதும் விளையாட்டு தானா?” பொங்கி எழுந்தாள் பாரதி.

“ என் மகனின் விருப்பத்தை தான் நான் மதிக்கவில்லை. என் பேரனின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன் “ என்றார் தன் மீசையை முறுக்கிக்கொண்டு.

அப்பொழுது உள்ளே நுழைந்த ராம்பிரசாத், “ பேரனை நீங்களே வைத்துக் கொண்டால், எனக்கு ஒரு பேத்தியை விரைவில் பெற்று கொடுத்து விடச் சொல்லுங்கள் உங்கள் மருமகளை“ என்று குறைபடுவதுபோல் சந்தோஷமாக அலுத்துக் கொண்டார்.

மாடி பால்கனியில் இருந்து இதை அனைத்தையும் கவனித்த அர்ஜுன், உதட்டோரம் மலர்ந்த சிரிப்புடன் பாரதியை அழைத்தான்.

“ அர்ஜுன் இந்த அப்பா ....” என்று பேசத் தொடங்கியவளின் இதழ்களைச் சிறை செய்தான்.

“வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...”

தன் மானுட வாழ்வை புரட்டிப்போட்ட தன் காதலிக்கு தன்னையே பரிசளித்தான் அர்ஜூன்.

முள்ளோடு முத்தாடியது அவனுடைய முத்தாரம்!!!!
 




Last edited:

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அன்பிற்கினிய நட்புகளே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47, (AK 47)

முள்ளோடு முத்தாட வா...

கதையின் இறுதி அத்தியாயம் - 35 பதிவு செய்துவிட்டேன்.

கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க🙏 பேசலாம்🙏 பழகலாம்🙏
கவிதை மொழியில்......

இந்த இறுதி அத்தியாயத்திற்கு கருத்தை பதியும் அனைத்து நட்புகளுக்கும் கவிதை பேழை பரிசளிக்கப்படும்.🎁🎁🎁🎁🎁

கதையோடு பயணித்த எனது அனைத்து நட்பு சொந்தங்களுக்கும் என் நன்றியினை சிரம்தாழ்த்தி உரித்தாக்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

கருத்துச் சுவை கூட்டி கதைக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிய அனைத்து தோழமைகளுக்கும் உள்ளத்தால் சொல்வேன் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

அளவு கடந்த அன்பை அளவில்லாமல் காட்டும் நட்புகள், வாழ்வில் என்றும் அழகானவை😍😍😍😍

பாரதியும் அர்ஜுனும் உங்களை கவர்ந்தார்களா?
ஒரு வரி ஆயினும் உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்குவேன்... பாசத்துடன்💐💐💐💐

கதைக்கு விமர்சனம் எழுதும் அனைத்து தோழமைக்கும் சிறப்பு கவிதை எழுதி சிறப்பிப்பேன். 👍

நட்பின் மகிழ்வில் என்றும்
- உங்கள் AK47 ❤
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
இடைல உங்களுக்கு கமென்ட் கூட போடமுடில. ரொம்ப ஃபீல் பன்னேன். அதுக்கு ஈடுகட்டி முதல் ஆளா வந்துட்டேன்.

பாரதியார்கவிதை முழுசா தெரிலைனாலும் அப்பப்ப சில கதைகள்ள வரதை வச்சுதெரியும்.

ஆனா மனுஷனோட எல்லா உணர்வுகளுக்கும் பாரதியார் பொருத்தமா கவிதை எழுதிருக்கார்ன்றதை உங்க கதைல தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

பாரதிகவியோட கவிதையா கதை குடுத்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு....

உங்களோட இந்த முயற்சிக்கு என்னோட இதயங்கனிந்த வாழ்த்துகள்.🤩🤩🤩🤩🤩🤩

என்னோட அருண் செல்லத்துக்கு ஜோடி போட்டதுக்கு நன்றி. அதையும் அந்த கேரக்டர் முன்னாடிஇவனைக் காமெடி பீஸா இல்லாம கெத்தா காமிச்சதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்....
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
சிவகாசி வெடியே....
கந்தக பூமியில் கிடைத்த தங்க நட்பே 😍😍😍🤣

தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு
தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து
ஆலோசகனாய் ஆசானாய்
இருந்த நட்பே...💐💐💐💐

போட்டிக்கான
நாட்கள் முடிய போகிறது....
நாம் கதைக்கும்
நாட்கள் முடிய போகிறது...
மாதங்கள் மூன்று - ஆனால்
நாம் கலந்துரையாடிய
தருணங்கள் ஏராளம்...

முதல் அத்தியாயம் தொடர்ந்த நட்பு...
இறுதி அத்தியாயம் வரை தொடர்ந்தது கண்டு...

தென்காசி குற்றாலச் சாரலாய் மனமும் குளிர்கிறதே 😁😁😁😁😁

நட்பின் மகிழ்வில்..
AK47 ❤❤
 




Last edited:

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சிவகாசி வெடியே....
கந்தக பூமியில் கிடைத்த தங்க நட்பே 😍😍😍🤣

தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு
தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து
ஆலோசகனாய் ஆசானாய்
இருந்த நட்பே...💐💐💐💐

போட்டிக்கான
நாட்கள் முடிய போகிறது....
நாம் கதைக்கும்
நாட்கள் முடிய போகிறது...
மாதங்கள் மூன்று - ஆனால்
நாம் கலந்துரையாடிய
தருணங்கள் ஏராளம்...

முதல் அத்தியாயம் தொடர்ந்த நட்பு...
இறுதி அத்தியாயம் வரை தொடர்ந்தது கண்டு...

நட்பின் மகிழ்வில்..
AK47 ❤❤
சிவகாசி வெடியா... ஆமா யார் நீங்க🙄🙄🙄🙄

எழுதினக் கவிதை யை ரசிக்க விடாம குழப்பத்தில ஆழ்த்துறீங்களே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top