• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா.. அத்தியாயம் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா....

அத்தியாயம் - 4


MEME-20211107-121043.jpg

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை”


தன் கைகளை இறுக்கி மூடி, கால் பெருவிரல்களை நிலத்தில் அழுந்த ஊன்றியபடி, கண்களில் ஒரு அலட்சிய பாவத்தைக் கொண்டு வந்தாள் பாரதி.

"என்ன மிஸ்டர் அர்ஜுன் உங்கள் கண்டுபிடிப்பை கின்னஸ் புக்கில் போடலாமா?" கிண்டலும், நக்கலும் இணைந்து வழிந்தது பாரதியின் குரலில்.

"இந்தக் கால்களால்தான் என்னால் நடக்க முடியாது. ஆனால் என் கண்ணும், மூளையும் என்னிடம் பொய் சொல்ல முடியாது. உன் இதயம் எங்கோ தாளம் தப்புதே பாரதி. யூ நோ ஒன் திங் பாரதி எனக்கு சவால் என்றால் அவ்வளவு பிடிக்கும்.உன் நோக்கத்தை கண்டுபிடிப்பதே என் சவாலாக நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன்" என்றான்.

"மாமா நான் ரெடி.
ரதிமா நீ ரெடியா?

பாரதி! என் கண்களை நேராகப் பார்" என்றான் அர்ஜூன்.

அவன் கண்களை ஆழ்ந்து பார்க்க பார்க்க, பாரதியின் உதட்டின் மேல் வியர்வை அரும்புகள் அரும்ப ஆரம்பித்தன. உலர்ந்த தன் உதட்டை தன் நாவால் ஈரப்படுத்தினாள்.

அவளின் சலனத்தைக் கண்ட அர்ஜுன், "மினுமினுக்கும் உன் உதட்டை பார்க்கும்போது, மாமனுக்கு என்னென்னமோ கற்பனை தோணுது ரதி" என்றான்.

அர்ஜுனை நோக்கிய பாரதியின் விழியை கண்ட அர்ஜூன், அவள் விழிகளில் இருந்தது என்ன விதமான உணர்வு என்பதை கணிக்க முயன்று தோற்றுப் போனான்.

தோல்வியை ஏற்றுக் கொள்வது அர்ஜூனின் அகராதியில் இல்லாத ஒன்று அல்லவா?...
என்னமோ பண்ணிக்கொள் என்பது போல் அவளை கீழ் பார்வையால் ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு, கண்ணை மூடி சயனம் செய்ய ஆரம்பித்தான் அர்ஜுன்.

காதிற்குள் ஏதோ குறுகுறுப்பு தோன்ற, பட்டென கண்ணை விரித்தான் அர்ஜுன். மறுகணம் காதில் கேட்ட அந்தப் பாடலில், தன் உடலில் உள்ள அத்தனை செல்களும் செயலிழக்கம் ஆகும்படி, ஆடாமல் அசையாமல் மனம் பரிதவித்து கிடந்தான் அர்ஜுன்.

அவன் காதில் பொருத்திய ஹெட்போனில் இருந்து தன் கைகளை மெதுவாக விடுவித்தாள் பாரதி.

பாடல் இசைக்க இசைக்க அர்ஜுன் தன்னை மறந்து கண் மூடினான்.

“பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா...

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..”


பாடலில் ரசித்துக் கிடந்த அர்ஜுனை பார்த்த பாரதி, இன்னைக்கு இது போதும் என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

இன்றைக்கு அர்ஜுனன் மனதைக் கீற இசையை ஆயுதமாக எடுத்தாகிவிட்டது. அடுத்தகட்ட யோசனையோடு கதவைத் திறந்து வெளியே வந்தாள் பாரதி.

டாக்டர் அறிவழகனுக்கு தன் போன் மூலம் அழைப்பு விடுத்தாள் பாரதி.

"டாக்டர் நான் பாரதி பேசுகிறேன்" என்றாள்.

"சொல்லு பாரதி, அர்ஜுன் எப்படி இருக்கான்? உன்னோட வசதிகள் அந்த வீட்ல எப்படி இருக்கு? அபிராமி உன்னை எப்படி பார்த்துக் கொள்கிறார்?" என்றார்.

"ஹலோ டாக்டர் சாரே, ஒரே நேரத்துல இத்தனை கேள்வி கேட்டா நான் எப்படி பதில் சொல்வது? " என்று நகைத்தாள் பாரதி.

"அர்ஜுன்க்கு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிட்டேன் டாக்டர். காயம் ரொம்ப ஆழமாத்தான் இருக்கு. வீட்ல யார் கூடையும் பேசுவது இல்லை. அந்த ரூமை விட்டு கூட வெளியில வரவில்லை டாக்டர்" என்றாள்.

"கண்டிப்பா நான் ஏதாவது பண்ணனும். பாரதப் போரை நடத்தினான் அந்த அர்ஜுன்.

இந்த பாரதி கூட போராடப் போறான் உங்க அர்ஜுன்" என்றாள்.

"என்னோட பாசக்கார பயபுள்ள, கொஞ்சம் பாத்து பதமா செய் பாரதி" என்று சிரித்தார் டாக்டர் அறிவழகன்.

"ஓகே டாக்டர், அர்ஜுனுக்கு, பிசியோதெரபி ஸ்டார்ட் பண்ணலையா நீங்க? அதற்கான எந்த கருவிகளையும் நான் அர்ஜுனுடைய அறையில் பார்க்கவே இல்லையே டாக்டர். ஆறு மாசமா எந்த வித இம்ப்ரூவ்மென்டும் இல்லையா? வெறும் மாத்திரை மட்டும் போதுமா டாக்டர்?" கேள்விகள் சரமாரியாக வந்தது பாரதியிடம் இருந்து.

தன் மூச்சை நீண்டு இழுத்தபடி, "அர்ஜுன் அவன் பக்கத்துல இருந்து எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை பாரதி" என்றார் அறிவழகன்.

"மொத்தத்தில் வாழவே பிடிக்காமல், பார்க்கும் அனைவரையும் கடித்துக் குதறி எடுத்து வருகிறான்.

என்னையும் சேர்த்துதான் பாரதி. அவனுடைய பி ஏ அருண் கிட்ட மட்டும்தான் ஏதோ கொஞ்சம் பேசிக்கொண்டு இருக்கிறான். மற்றபடி அந்த இருளடைந்த அறையில் அவன் என்ன செய்கிறான்? அவன் என்ன விதமான மனநிலையில் இருக்கிறான்? என்று எங்கள் யாருக்கும் புரிபடவில்லை பாரதி. அவனை நெருங்குவதும் நெருப்பை நெருங்குவதும் ஒன்றாக உள்ளது.

அந்த விபத்துக்குப் பின் அவன் தன்னுடைய இயல்பை முற்றிலுமாக இழந்து விட்டான். தன் நண்பர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. வாட்ஸ்அப் ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து பின்னோக்கி சென்று விட்டான்" என்றார்.

தன் மூக்குக் கண்ணாடியை சரி பண்ணியபடியே அறிவழகன், "நல்லா நோட் பண்ணிக்கோ பாரதி, அவனுக்குப் பிரியமான, ரொம்ப ரொம்ப பிரியமான பெண் தோழிகளைக் கூட அருகில் விடுவதில்லை. அவன் தன் பழைய ஞாபகங்களை அடியோடு வெறுக்கிறான். தன் அறையையே சிறைச்சாலை ஆக்கி தன்னைத்தானே வதம் செய்து கொண்டிருக்கிறான் அவன். எழுந்து நடக்க எந்த முயற்சியையும் செய்ய முன்வரவில்லை அர்ஜூன்" என்றார்.

"தன் உடல் சுத்தத்தை கூட சரியாகப் பேணவில்லை அந்தப் படுபாவி. அருணோடு சேர்ந்து என்ன தான் செய்வானோ?

நக இடுக்கில் சிறு அழுக்கையும் கூட விரும்பாதவன், அழுக்கு மூட்டையாக சுருண்டு படுத்துக் கிடக்கிறான். காஸ்டியூம் டிசைனர் வடிவமைத்த ஆடைகளை உடுத்திய அவன், இன்று ஏனோதானோ என்று இருப்பது எனக்கு மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது பாரதி" என்று மனம் வெதும்பினார் டாக்டர்.

"அபிமாக்கு சொன்னதுதான் உங்களுக்கும் டாக்டர், அர்ஜுனை பழைய அர்ஜுன் ஆக மாற்றுவது என் பொறுப்பு" என்றாள் மன உறுதியுடன்.

"பாரதி, நீ என் நண்பன் ராம்பிரசாத்வோட குழந்தை. நான் அவனுக்கு கொடுத்த வாக்குப்படி உன்னை நல்லபடியா ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்தாதான் எனக்கு நிம்மதி. நீ இந்த அர்ஜுன் என்கிற ஆபத்தை தேடிப் போவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை பாரதி" என்றார்.

"எந்த ஒரு தகப்பனுக்கும் தன் மகள் சந்தோஷமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நல்லதொரு இல்வாழ்வை வாழ வேண்டும் என்று விரும்புவான். நீயும் என் மகள்தானம்மா. தெரிஞ்சே உன்னை அந்த திக்குத் தெரியாத காட்டில் விடுவதற்கு எனக்கு பயமாக உள்ளது பாரதி.

நீ வேணும்னா திரும்ப ஹாஸ்பிட்டல் வந்துவிடு. நான் அபிராமிகிட்டேயும் சுந்தரேச பாண்டியன்கிட்டேயும் ஏதாவது சொல்லி சமாளித்து விடுகிறேன்" என்றார்.

"தேவையில்லை அங்கிள். அர்ஜுன் பழையபடி மாறனும். அது நான் ஒரு ஆத்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியம், வாக்கு. அர்ஜுனின் தீய பழக்கங்களிலிருந்து அவனை நிச்சயம் விடுவிப்பேன். அதற்காக நான் நெருப்பாய் மாறவும் தயங்க மாட்டேன்.

தீயோட ஒரு குணம் தெரியுமா உங்களுக்கு?"
கேட்கும் போதே கனலின் ஜொலிப்பு அவள் கண்களில் ஏறியது.

"தீ ஒரு பவித்திரம்! அதனோடு சேர்ந்த அத்தனையையும் எரித்து பவித்திரம் ஆக்கிவிடும்.

அர்ஜூனின் கடந்த காலம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிய கவலை எனக்கு கிடையாது. அவன் எதிர்காலத்தில் நல்லவனாக மட்டும்தான் இருக்க வேண்டும். இருக்க வைப்பேன் அங்கிள்.

அப்போதான் நான் வாக்குக் கொடுத்த அந்த ஆத்மா சாந்தி அடையும்" என்றாள் கண்கள் கண்ணீரில் மின்னிய படி.

''ஓகே பாரதி, உன் பாதை சரியாக இருந்து, உன் பயணம் நல்லபடியாக அமைய என் வாழ்த்துக்கள். உனக்கு எந்த நேரத்தில் எந்த விதமான உதவி வேண்டுமென்றாலும் என்னை மறந்து விடாதே! நெருப்புப் பெண்ணே! " என்றார் டாக்டர் அறிவழகன்.

"கண்டிப்பா உங்கள் உதவி தேவைப்பட்டால் உங்களை அழைப்பேன். குட்நைட் அங்கிள்" என்று கூறி போனை கட் செய்தாள் பாரதி.

திரும்பிய பாரதி, அந்த வீட்டின் மூன்றாவது தளத்திற்கான வழி வாசலைப் பார்த்தாள். நெற்றி சுருக்கியபடி, நெஞ்சோடு முளைத்த புது ஆர்வத்தில், தூசு படிந்த அந்தப் படிகளில் கால் வைக்க சென்றபோது,

ஒரு வேலையாள் ஓடிவந்து "அம்மா! அம்மா! அந்த படிக்கட்டுல ஏறக்கூடாது. மூன்றாவது மாடி முழுவதும் சின்ன எஜமானுக்கு உரிய அறைகள் தான் உள்ளன. ஆறு மாசமா அந்த பக்கம் யாரும் போகக் கூடாதுன்னு சின்ன எஜமான் உத்தரவு போட்டுவிட்டார். சுத்தம் செய்வதற்குக் கூட நாங்கள் அந்தப் பக்கம் போக மாட்டோம் அம்மா" என்றார்.

யோசனை படைத்த விழிகளுடன் படி இறங்கிய பாரதி நேரே அபிராமியிடம் சென்றாள்.

"உள்ளே வரலாமா?" என்று அபிராமியின் அறைக்கதவை தட்டி உத்தரவு கேட்டாள் பாரதி.

"வாம்மா பாரதி" என்று அன்பொழுக அழைத்தார்.

"அபிமா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்டா நீங்க என்னை தப்பா எடுத்துக் கொள்வீர்களா?" என்று கொக்கி போட்டாள் பாரதி.

"என் கிட்ட உனக்கு என்னம்மா தயக்கம்? உனக்கு என்ன வேணும்ன்னு கேளு" என்றார்.

கண்களை உருட்டி உருட்டி குழந்தைத் தனத்தை கண்களுக்குள் கொண்டுவந்து, "உங்க வீட்டில அந்த மூணாவது மாடியில் என்ன இருக்கு?

எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா? எனக்கு என்னமோ அது சந்திரமுகி அறை போல உள்ளது" என்று கிசுகிசுத்து, காதில் ரகசியம் போல் கேட்டாள் பாரதி.

"அட போக்கிரி! அதை அர்ஜுன் கிட்டே கேளு நல்லா, ரொம்ப நல்லா உனக்கு விளக்கிச் சொல்லுவான்" என்றார் அபிராமி.

"அபிமா! " என்று காலை உதறி சிறு குழந்தை போல் நர்த்தனம் ஆடினாள் பாரதி.

"வந்த ஒரு நாளைக்குள்ளேயே எல்லாத்தையும் மூளைக்குள் ஏத்தணனும் என்று நினைக்காதே பாரதி, நீ போய் தூங்கு நாளைக்கு உனக்கு எல்லாத்தையும் சொல்றேன். முடிந்தால் உனக்கு அந்த அறைகளையும் சுற்றிக் காண்பிக்கிறேன்" என்றார் அபிராமி.

பாரதியைப் போலவே கிசுகிசுத்த குரலில், "ஆனால் அர்ஜூனுக்கு தெரியாமல்" என்று ரகசியம் பேசினார் அபிராமி.

"யூ ஆர் ஸோ ஸ்வீட் அபிமா என்றாள். கண்டிப்பா நீங்க அந்த சந்திரமுகன் அறை எல்லாம் எனக்குச் சுத்தி காட்டணும் " என்றாள் கண்களில் குறும்பு மின்னிய படி.

வெகு நாட்களுக்குப் பிறகு மனம் மகிழ்ந்து சிரித்தார் அபிராமி.

அபிராமியின் சிரிப்புச் சத்தத்தை கேட்டபடியே வந்த சுந்தரேச பாண்டியன், "அபி நீயா சிரிச்சது? ரொம்ப நாளைக்கப்புறம் இந்த வீட்டுக்கு உயிர் வந்தது போல் இருக்குது" என்றார்.

" யார் அந்தப் பொண்ணு?" என்றார் சுந்தரேச பாண்டியன்.

"உங்கள் நண்பர் டாக்டர் அறிவழகன் அனுப்பிய நர்ஸ் பாரதிங்க. அவள் வந்ததுக்கு பிறகு இந்த வீட்டுக்கு சந்தோஷம் வந்தது போல் உள்ளது. அர்ஜுனுக்கு சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்ன்னு என் மனசு சொல்லுது" என்றார் அபிராமி.

அவர் தலையை வாஞ்சையாக வருடிய சுந்தரேச பாண்டியன் "நல்லது நடந்தால் நல்லதுதான்" என்றார்.

தன் அறைக்குள் நுழைந்த பாரதி , தன் பெட்டிக்குள் இருந்த அந்த புகைப்படத்தை எடுத்து, அந்த ஆத்மாவிற்கு ஆத்மார்த்தமான முத்தங்களை வாரி வழங்கினாள்.
 




Last edited:

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
MEME-20211107-121043.jpg
முள்ளோடு முத்தாட வா கதைக்கு கவர் பேஜ் டிசைன் பண்ணி கொடுத்த சுகாவிற்கு
மனம் கனிந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வெரி நைஸ், நல்ல போகுது🤩🤩🤩

இன்னும் அர்ஜுன் என்னவா இருந்தான்னு சொல்லவே இல்லையே ரைட்டர் ஜீ 😐😐😐

பாரதி வேற யாருக்காகவோ வந்து இருக்கா, இப்ப அவங்க உயிர் ஓட கூட இல்ல. ஒரு வேளை அர்ஜுன்க்கு நடந்த ஆக்சிடென்ட் லா அவங்களும் இருந்து இருப்பாங்களோ🤔🤔🤔

லாஸ்ட் லைன் லா அபிராமியா இல்ல பாரதியா🧐🧐🧐, அந்த போட்டோக்கு கிஸ் பண்றது
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
வெரி நைஸ், நல்ல போகுது🤩🤩🤩

இன்னும் அர்ஜுன் என்னவா இருந்தான்னு சொல்லவே இல்லையே ரைட்டர் ஜீ 😐😐😐

பாரதி வேற யாருக்காகவோ வந்து இருக்கா, இப்ப அவங்க உயிர் ஓட கூட இல்ல. ஒரு வேளை அர்ஜுன்க்கு நடந்த ஆக்சிடென்ட் லா அவங்களும் இருந்து இருப்பாங்களோ🤔🤔🤔

லாஸ்ட் லைன் லா அபிராமியா இல்ல பாரதியா🧐🧐🧐, அந்த போட்டோக்கு கிஸ் பண்றது
அற்புதம், shasmi.... என் பிழையை நீங்கள் நேர்த்தியாக சொன்ன பாங்கு, அசத்திட்டீங்க. தவறு இருந்தாலும் அதை சுட்டிக் காட்டும் பாங்கு உங்களை உயர்த்திக் காட்டுகிறது. வழிதவறிய குழந்தையை கைபிடித்து கரை சேர்ப்பது போல், பிழை செய்த இந்த குழந்தையை சரி செய்த நீவீர் வாழ்க 🙏🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
வெரி நைஸ், நல்ல போகுது🤩🤩🤩

இன்னும் அர்ஜுன் என்னவா இருந்தான்னு சொல்லவே இல்லையே ரைட்டர் ஜீ 😐😐😐

பாரதி வேற யாருக்காகவோ வந்து இருக்கா, இப்ப அவங்க உயிர் ஓட கூட இல்ல. ஒரு வேளை அர்ஜுன்க்கு நடந்த ஆக்சிடென்ட் லா அவங்களும் இருந்து இருப்பாங்களோ🤔🤔🤔

லாஸ்ட் லைன் லா அபிராமியா இல்ல பாரதியா🧐🧐🧐, அந்த போட்டோக்கு கிஸ் பண்றது
பாரதி தரப்போற சிகிச்சையில் அர்ஜூனின் ஒவ்வொரு பக்கங்களும் திருப்பப்படும்.... 😁😁😁😁😁😁
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அற்புதம், shasmi.... என் பிழையை நீங்கள் நேர்த்தியாக சொன்ன பாங்கு, அசத்திட்டீங்க. தவறு இருந்தாலும் அதை சுட்டிக் காட்டும் பாங்கு உங்களை உயர்த்திக் காட்டுகிறது. வழிதவறிய குழந்தையை கைபிடித்து கரை சேர்ப்பது போல், பிழை செய்த இந்த குழந்தையை சரி செய்த நீவீர் வாழ்க 🙏🙏🙏🙏
Awww, it's ok writer ji 🙈🙈🙈
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Awww, it's ok writer ji 🙈🙈🙈
இப்படி எல்லாம் கண்ணை மூட கூடாது. கையில் அன்பு எனும் பிரம்பை எடுத்து என்னை வெளுத்து வாங்கணும் நீங்க....
உங்களைப்போன்ற முகமறியா நட்புகளின் அன்பில் நனைய ஆசைகள் பல.

" வான் மழையில் நனைந்து நனைந்து, இப்பொழுது பாச மழையில் நனைய ஆசை வந்துவிட்டது "..... 😁😁😁😁
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
இசையின் துணையில் அவனை தற்போது சமாளிசிட்டா. ரதிக்கு மாமா முறையா? ஆத்மாவின் ஆசைக்காக தீக்குளிக்க ரெடி ஆகிடாளோ ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top