• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் - 6

MEME-20211107-121043.jpg


அர்ஜுனின் வார்த்தைகள் பாரதியின் மனதை வதைத்தாலும், தன்னில் அதனை புதைத்துக்கொண்டு, “ஓகே மிஸ்டர் அர்ஜுன், வாங்க கீழே சாப்பிட போகலாம்” என்றாள்.

அர்ஜூனின் மறுப்பு அவன் உடல் மொழியாக வெளிப்பட்டது.
“ஓகே மிஸ்டர் அர்ஜுன், நமக்குள்ள ஒரு பந்தயம், நீங்க தோற்றுப் போய் விட்டீர்கள் என்றால், கண்டிப்பா கீழே இறங்கி என் கூட சாப்பிட வரணும்” என்றாள்.

“ரதி நான் வேண்டுமானால், ஒரு போட்டி சொல்லவா? செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். கிக்கும் கூட...” என்றான் கிண்டல் பார்வையுடன்.

கிக்கு என்றால் மக்கு கூட புரிந்து கொள்ளும். நம்ம பாரதிக்கா தெரியாது. அவன் எவ்வளவு தூரம் தான் செல்கிறான் என்று பார்த்தாள்.

நிமிர்ந்து நின்று தன் இரு கைகளைக் கட்டியபடி அர்ஜுனை நேர்ப் பார்வை பார்த்தாள் பாரதி.

“கின்னஸில் மாதிரி யாரு விடாமல் கிஸ் அடிக்கிறார்கள் என்று பாக்கலாமா? “ என்றான்.

தன்னை உறுத்து விழித்த பாரதியைப் பார்த்து, “ சரி அதுதான் வேண்டாம் என்றால், யாரு ஒரு பாட்டில் சரக்கையும் மூச்சு விடாமல் குடிக்கிறார்கள் என்று பார்ப்போமா? என்றான்.

நல்ல இடியா வந்து கூரையைப் பிளந்து அவன் தலையில் விழுந்தால் என்ன? இவ்வளவு மோசமாக யோசிக்கும் அந்த மூளைக்கு என்ன தண்டனை தருவது என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் பாரதி.

“ரதிமா சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.... நான் எப்பவுமே பெண்களுக்கு எல்லாத்துலயும் முதல் உரிமை கொடுப்பேன். மாமன் அவ்வளவு நல்லவன்” என்றான்.

“அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?” என்ற காமெடி டயலாக் எல்லாம் பாரதியின் கண்ணுக்குள் வந்து சென்றது.

அர்ஜுனை அறையத் துடித்த தனது கையை இறுக்க மூடிக்கொண்டாள். அவள் கூர் நகங்கள் பட்டு உள்ளங்கையில் ரத்தம் துளிர்த்தது.

“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்...
வல்லமை தாராயோ – இந்த
மானிலம் பயனுர வாழ்வதற்கே...”


மகாகவி பாரதியின் வரிகள் பறையென விழுந்தது அவள் மனதுக்குள்.

அசுரனை அசரடிக்கும் ஒரு பார்வையுடன், “நல்ல கற்பனை வளம்”, அந்த நல்ல என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள்.

“போட்டி என்னவென்றால் மிஸ்டர் அர்ஜுன், நான் ஒரு பந்தை உங்கள் கால்களுக்கு அடியில் உருட்டி விடுவேன். நீங்கள் அமர்ந்த நிலையிலேயே, உங்கள் கால்களால் அந்த பந்தை தடுக்க வேண்டும்.

வாய்ப்பு ஒரு முறைதான். நீங்கள் தடுத்து விட்டால் உங்கள் அறையிலேயே நீங்கள் உணவு உண்ணலாம். இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக கீழே உணவு மேஜையில் வந்து அமர்ந்து உணவு உண்ண வேண்டும் “ என்று முடிவாக அறிவித்தாள்.

உன்னோடு வார்த்தையாடுவது எனக்கு போதை போல உள்ளது. இரண்டு கால்களையும் நெருக்கி வைத்தால் பந்து தன்னைப்போல் நின்றுவிடும் என்று நினைத்துக்கொண்டு அர்ஜுன், “ஆட்டத்தை ஆரம்பிக்கலாமே” என்றான்.

பாரதி வெளியே சென்று அருணிடம் ஒரு பந்து வேண்டும் என்று கேட்டாள்.

“ பந்தா?.... பந்து விளையாடுற வயசா இவர்களுக்கு? சைத்தான் நம்மை சந்து பொந்தெல்லாம் ஓட விடப் போகுது “ என்று எப்பொழுதும் போல் மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக்கொண்டு, பந்தைத் தருவித்துக் கொடுத்தான்.

பாரதி ஒரு தீவிர பார்வையோடு பந்தை மெதுவாக அவன் கால்களை நோக்கி உருட்டி விட்டாள்.

தன்னை நோக்கி வரும் பந்தை இரு கால்களுக்கிடையே தக்கவைக்க தன் கால்களை அசைக்க பிரம்மாயுத்தம் செய்தான் அர்ஜுன்.

அவன் மூளை தந்த கட்டளையை அவன் கால்கள் ஏற்க மறுத்தன.
வியர்வையில் முக்குளித்தான் அர்ஜுன். அவனுடைய பெரும் முயற்சியில் பெருவிரல்கள் மட்டும் அசைந்தன.

பாரதியின் கருவண்டு விழிகள், அவன் கால்களின் அசைவை உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

அர்ஜூனின் உடலும் உள்ளமும் உணர்ச்சியால் கொந்தளித்தது. நொடிக்கு நொடி பந்தை தடுத்து நிறுத்தும் வேகமும், வெறியும் அதிகரித்தது.
அவனின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்த அந்தப் பந்து அவன் கால் விரலை உரசிக்கொண்டு கட்டிலின் அடியில் ஓடி ஒளிந்தது.

பாரதியின் முன் தோற்ற அர்ஜுனின் முகம் சிவந்தது. உடைப்பதற்கு பொருளைத் தேடிய அர்ஜுனின் கைகளுக்கு எதுவும் தட்டுப்படவில்லை. உடையும் பொருட்களை பாரதி எப்பொழுதோ அப்புறப்படுத்திவிட்டளே.

“ஓகே மிஸ்டர் அர்ஜுன், இப்ப அருண் வந்து உங்களை, உணவு மேஜைக்கு அழைத்து வருவார். குளித்து முடித்து தயாராகி இந்த உடையில் வாருங்கள்” என்று தான் தேர்வு செய்த ஒரு உடையை அர்ஜூனின் கைகளில் வைத்துவிட்டு வசீகரப் புன்னகையுடன் வெளியேறினாள் பாரதி.

“ ஏய்! பாரதி! இப்ப நான் ஏன் இதைச் செய்யணும்? “ என்றான் கோபத்துடன்.

“ அது ஏனென்றால் மிஸ்டர் அர்ஜுன், நீங்க தோற்று விட்டீர்கள். நான் ஜெயித்து விட்டேன் “ என்றாள் புன்னகையுடன்.

வெளியே வந்த பாரதி அருணை நோக்கி, “அருண் அண்ணா, அர்ஜுன் சாரை கிளப்பி லிப்ட் வழியாக கீழே உணவு அறைக்கு அழைத்து வாருங்கள்” என்றாள்.

பாரதியின் மேல் அருணுக்கு சிறு பொறாமை கூட வந்தது. தன்னால் முடியாததை ஒரு சிறுபெண் செய்து முடிக்கிறாள் என்று.

பெண்ணே, ஆக்க சக்தி! அவளால் ஆக்க முடியாதது என்று ஒன்று உண்டோ மானிடா! என்று விதியும் நகைத்தது.

கீழே இறங்கி வந்த பாரதி அபிராமியை நோக்கி “இன்று விருந்து தடபுடலாக இருக்கட்டும் அபிமா. உங்கள் சின்னக் கண்ணன் உங்களுடன் காலை உணவு உண்ண வருகிறார். அங்கிளையும் சீக்கிரம் வரச் சொல்லுங்க. உங்களுக்கான என்னுடைய சர்ப்ரைஸ் எப்படி” என்று கண்ணடித்தாள் பாரதி.

அபிராமியின் கண்களுக்கு பாரதி நர்ஸாகத் தெரியவில்லை, தெய்வப் பெண்ணாகத் தெரிந்தாள்.
நம்பிக்கையும், அவநம்பிக்கையும் போட்டியிட பாரதியின் கண்களைப் பார்த்தார்.

தன் சிப்பி இமைகளை மெல்ல திறந்து மூடி, அவருக்கு நம்பிக்கையைத் தந்தாள்.

தன் பத்து விரல்களால் அவளை நெட்டி முறித்த அபிராமி, சமையலை கவனிக்க தன் வயதை மறந்து சமையலறை நோக்கி ஓடினார்.

உணவு மேஜையில் அனைத்து பலகாரங்களும் கடை விரித்து பரப்பிக் கிடக்க, சுந்தரேச பாண்டியன் மற்றும் அபிராமியின் விழிகள் லிப்டை நோக்கியே காத்துக் கொண்டிருக்க, வீட்டு வேலையாட்கள் திசைக்கு ஒருவராய் அவ்வீட்டுத் திருவிழாவைக் காணக் காத்து இருக்க, இவை எல்லாவற்றின் சூத்திரதாரியான பாரதி அனைவரையும் கண்டும் காணாமல் இயல்பாக இருந்தாள்.

லிப்டின் கதவும் திறந்தது. திருத்திய ஆடையில் திருத்தமாய் அர்ஜுனை அருண் வழிநடத்தி வந்து கொண்டிருந்தான்.

உணவு மேசையை நெருங்கியவுடன், அபிராமி தன் மகனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார்.

“மாதாஜி! பாசத்துல, சாப்பாட்டில், பாய்ஸன் கலந்து விட்டீங்களா? ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல.... “ என்றான்.

"அர்ஜூன்!" என்று அபிராமி அழ ஆரம்பிக்க,
"அர்ஜுன்" என்று சுந்தரேச பாண்டியன் மிரட்ட ஆரம்பிக்க,
கைகளில் பந்தை சுழற்றியபடி அர்ஜுனை ஒரே ஒரு பார்வை பார்த்தாள் பாரதி.

“ சை.... " என்று சொன்னபடி உணவு அருந்த ஆரம்பித்தான் அர்ஜுன்.

அது! என்று பாரதியின் விழிகள் கெத்து காட்டியது.

அபிராமிக்கும், சுந்தரேச பாண்டியனுக்கும், கண்களாலே ஆறுதல் சொன்னாள் பாரதி.

உணவு முடிந்ததும், அர்ஜுனை மேல் அறைக்கு அனுப்பாமல் தோட்டத்திற்கு அழைத்து வந்தாள் பாரதி.

முரண்டு செய்த அந்த முரடனை முறைத்துக்கொண்டே அழைத்து வந்தாள்.

அங்கே பூத்திருந்த பல வண்ண ரோஜா செடிகளுக்கு அருகே சென்ற பாரதி, அந்த அழகிய ரோஜா பூவினை வருடாமல் அதன் முட்களை தடவினாள்.

"உங்களுக்கு ஒன்று தெரியுமா மிஸ்டர் அர்ஜுன், இந்த முள்ளு என்ன செய்யும் தெரியுமா? தன்னைக் காலால் குத்தியவர்களை, அவர்கள் கையாலேயே குனிந்து எடுக்க வைக்கும்.

நம்மை காயப்படுத்துபவர்களை, திருப்பி காயப்படுத்துவது நம் நோக்கமாக இருக்கக்கூடாது. நம் காயத்தை அவர்கள் கையாலேயே ஆற்ற வைக்க வேண்டும். அதுதான் விவேகம் அர்ஜுன்” என்றாள் .

பாரதி பேசப்பேச அர்ஜூனின் உடல் விரைத்தது. “ உனக்கு என்ன தெரியும் பாரதி? துரோகத்தின் வலி என்னவென்று தெரியுமா?

வெற்றியின் உச்சியில் நிற்பவனை திடீரென தள்ளிவிட்டு, மூடனாக, முடமாக மாற்றுவது எப்படி வலிக்கும் என்று உனக்கு தெரியுமா?

அனைவரின் முகமூடிகள் கழண்டு விழும் பொழுது அவர்களது முகம் எவ்வளவு விகாரமாக இருக்கும் என்று உனக்கு தெரியுமா?

நீ சரிந்த அடுத்த நொடி இந்த உலகத்தால் மோசமாக தூக்கி எறியப்படும் போது உனது மனம் எப்படி எரியும் என்று தெரியுமா பாரதி?

உன் எதிரில் நிற்க கூட தகுதி இல்லாதவர்கள் எதிரிகளாய் மாறி விமர்சிக்கும்போது பதிலளிக்க முடியாத இதயம், மரிக்கும் நிலை உனக்குத் தெரியுமா?

சாவின் விளிம்பைத் தொட்டவன் நான். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் கரும் இருட்டில் நீ புதைந்து இருக்கிறாயா?

உறவுகள் எல்லாம் பொய்த்துப் போய், நட்புகள் எல்லாம் செத்துப் போய், உன் நிழல் கூட உன்னை விட்டு விலகி இருப்பதை பார்த்திருக்கிறாயா?

என்னை தூக்கி எறிந்த இந்த உலகம் எனக்குத் தேவையில்லை. சாதித்த இந்த அர்ஜுனை சோதித்த யாரும் எனக்குத் தேவையில்லை. என்னை இப்படி இழுத்துவந்து நிற்க வைத்த நீயும் எனக்குத் தேவையில்லை" என்றான்.

அவனின் ஆழ் மனக் காயங்கள் அவனை அறியாமல் வெளிவரத் தொடங்கின.

நிர்மலமான முகத்துடன் அர்ஜுனை நோக்கிய பாரதி,
“துணிந்து வெல்லத்தான் வேண்டும் அர்ஜூன் இதைப்போல் துவண்டு செல்லக்கூடாது.

சில சூழ்நிலைகளை கடந்துசெல்ல உடல் வலிமையை விட மன வலிமை ரொம்ப முக்கியம்.

கஷ்டம் இல்லாமல் வாழுறது என்ன வாழ்க்கை!
கஷ்டங்களை கடந்து, வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை!

வாழ்க்கையில் உங்களுக்கான இடத்தில் யாரும் அமர முடியாது அர்ஜூன். அந்த இடம் இப்பவும் உங்களுக்காக காலியாகத்தான் உள்ளது.

நீங்கள் முயற்சி செய்தால் மீண்டும் அந்த இடத்தை நிரப்பலாம்“ என்ற பாரதியின் குரலில் இருந்த தெளிவு அர்ஜுனை சிந்திக்க வைத்தது.


எந்த ஒரு பெண்ணையும் மோகத்தால் தீண்டிய அவன் கண்கள், பாலைக்கு நீர் வார்த்த அந்த மேகத்தை தாகமாய் பார்த்தது.

“எந்தப் பொருளையும் அதை தொலைத்த இடத்தில் மட்டும் தான் தேட முடியும். உங்களை நீங்கள் எங்கே தொலைத்தீர்கள் என்று யோசியுங்கள் அர்ஜுன்” என்றாள்.

அர்ஜூனின் நினைவுகள், அவன் புதைந்த புதைகுழிக்குள் செல்லத் துவங்கின.

பாரதி அந்த உறங்கும் எரிமலைக்கு நீர் வார்த்தாளா?
இல்லை தீ வைத்தாளா?
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், அது போல இப்ப தான் அர்ஜுன் கொஞ்சமே கொஞ்சம் அவன் கூட்டில் இருந்து வெளி வந்து யோசிக்க செய்யறான்🤩🤩🤩🤩

யோசனை எல்லாம் நல்ல விதமா போனா நல்லது தான் பார்ப்போம்😔😔😔😔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ 😍😍😍
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அருமையா போகுது....

அடேய் அர்ஜூன் பைய்யா.....உன்னை எல்லாத்திலயும் தோற்க்கடிச்சிட்டே வர்றா.. கூடிய சீக்கிரத்தில அவளுக்கு அடிமை ஆகிடுவியோ.......
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
அர்ஜுன் உன் போட்டியை விட ரதி வைச்ச போட்டி சும்மா அள்ளுது இல்லை. உங்கள் இடம் அப்படியே இருக்கும் போது அதை நோக்கி ஓடு. நல் அறிவுரை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top