• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் -7

MEME-20211107-121043.jpg

அர்ஜூனின் சிந்தைக்கு வேலை கொடுத்த பாரதி, அருணைக் கண்களால் அழைத்து அர்ஜுனை பார்த்துக் கொள்ளும்படி சமிக்கை செய்தாள்.

அர்ஜுனே, வாதியாகவும் பிரதிவாதியாகவும் மாறி மாறி தன்னுள் விவாதித்துக் கொண்டிருந்தான்.

அரசனும் அசுரனுமாய் அவதாரம் எடுத்து எடுத்து சோர்ந்து போனான். அவன் மனதின் வெம்மை, தோட்டத்தின் குளுமையில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.

வீட்டின் உள்ளே சென்ற பாரதி, சுந்தரேச பாண்டியனின் அலுவலக அறைக்குள் அவரின் அனுமதி கேட்டு உள்நுழைந்தாள்.

“அங்கிள், அர்ஜூனின் அறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதற்கு உங்கள் முழு ஒத்துழைப்பும் வேண்டும்.

ஒரு நர்ஸா நான் நடந்து கொள்வது உங்களுக்கு அதிகமாக தெரிந்தாலும்,
அர்ஜுனை குணமாக்குவதில், டாக்டர் அறிவழகன் என்மேல் வைத்த முழு நம்பிக்கையின் பேரில் உங்களை கேட்டுக்கொள்கிறேன்“ என்றாள்.

“ பாரதி சூரியனின் வரவில் பகலை அறிவது போல், உன் வரவில் என் மகனின் வளமான எதிர்காலத்தை நான் உணர்கிறேன்.

எனது மனைவி அபிராமியும் உன்னை தனது மகளாய் பாவிக்கிறாள். உன்னை வேற்று மனுஷியாக எங்களால் நினைக்க முடியவில்லை.

நீ வந்த இரண்டே நாளில் என் மகனின் சரித்திரத்தை புரட்டிப் போடுகிறாய். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எங்கள் சித்தத்தை சுத்தம் செய்ய வந்த தேவதை பெண்ணம்மா நீ. “ என்றார்.

ஒரு நொடி உண்மையை உரைத்து விடலாமா? என்று பாரதியின் மனம் தத்தளித்தது. காலம் கனியும் வரை பொறுக்க வேண்டும் என்று மனதிற்கு அறிவுறுத்தினாள்.

வீழ்ந்தே தீருவேன் என்ற தன் விழி நீரை உள்ளிழுத்தபடி, தன் குரலை சாதாரணமாக வைத்துக்கொண்டு,

“ அங்கிள் என்னை நீங்க ரொம்ப நம்புறீங்க. நான் ஒரு திருடியாகக் கூட இருக்கலாம். உங்கள் சொத்தை அபகரிக்க வந்தவளாகக் கூட இருக்கலாம். ஏன் நான் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவியாக கூட இருக்கலாம்” என்று சரமாரியாகக் கேள்விகளை விடுத்து சுந்தரேச பாண்டியனிடம் விடையை அறிய காத்து நின்றாள்.

தன் மேல் அவர் வைத்த நம்பிக்கையை சோதித்தாள்.

“பாரதி, தொழில் வட்டத்தில் எத்தனையோ எதிரிகளை எடை போடத் தெரிந்த எனக்கு, கள்ளனுக்கும், காப்பானுக்கும் வித்தியாசம் தெரியாதா?

அதுமட்டுமல்லாமல் நீ என் உயிர் நண்பன் டாக்டர் அறிவழகன் அனுப்பிய நம்பிக்கைக்குரிய, மிகவும் நம்பிக்கைக்குரிய நபர். உன்னை சந்தேகம் கொள்வது என் நட்பை சந்தேகம் கொள்வதற்குச் சமம்.

அர்ஜுனின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு, மாற்றத்திற்கு நீ எடுக்கும் முயற்சிகளுக்கு நான் துணையாக நிற்பேன்” என்றார்.

சுந்தரேச பாண்டியனின் கைகளில் ஒரு காகிதத்தை ஒப்படைத்தாள் பாரதி.

“அர்ஜூனின் அறையில் இந்த மாற்றங்கள் வேண்டும் அங்கிள். அர்ஜுனின் மனநிலையை மாற்ற இவைகள் சிறிது உதவி புரியும். உங்களால் முடியுமா? என்று கேட்க வில்லை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கிறேன்“ என்று ஒரு வித தவிப்புடன் அவரை அளவிட்டாள்.

“பாரதி உன் முயற்சியின் வேகம் என்னை சிலிர்ப்பூட்டுகிறது. உன் முயற்சி வெற்றி பெற்றால், நீ விரும்பும் அத்தனையையும் பரிசாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் “ என வாக்குகளை வழங்கினார் சுந்தரேச பாண்டியன்.


தன் கையில் இருந்த காகிதத்தை உற்று நோக்கியபடி, “இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது பாரதி. இரண்டு மணி நேரத்திற்குள் இது அனைத்தும் முடிந்துவிடும்” என்றார்.


நன்றியாய் தன் புன்னகையை பரிசளித்துவிட்டுச் சென்றாள் பாரதி.

தோட்டத்திற்குள் மீண்டும் நுழைந்த பாரதி பார்த்தது , வாயினுள் ஏதேதோ முனுமுனுத்தபடி இலை தழைகளை களைந்து கொண்டிருந்த அருணையும் , ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனையும்தான்.

“அருண் அண்ணா... “, என்று அன்பொழுக அழைத்தாள்.

“என்ன பாரதி? “ என்றான்.

“இந்தச் செடி கொடி எல்லாம் உங்களுக்கு என்ன பாவம் செய்தது?...

அதன் உயிரோடும் உணர்வோடும் விளையாட உங்களுக்கு யார் உரிமை தந்தது? “ என்றாள் தோரணையாக.

“ எதேய்.... ஒரு சாதாரண இலையைப் பிடுங்கி போட்டதுக்கு என்னை கொலை பண்ணிய கொலைகாரன் ரேஞ்சுக்கு பேசுறியே பாரதி.

அவனவன் பார்க்கில் லவ்வர் கூட பேசிக்கிட்டே புல்லைப் பிடுங்கி போடுவான்.
நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லை.

சரி நாம நம்ம பாஸ் கூட தான் இத்தனை காலமாய் இருக்கிறோமே அவர் கூடயாவது கொஞ்சம் அன்பா பேசலாம் என்று நினைத்தால், அவர் எப்போதுமே துர்வாச முனிவர் மாதிரி நமக்கு சாபம் கொடுக்கிற மாதிரியே பேசுவாரு “ என்று பெருமூச்செறிந்தான் அருண்.

அர்ஜுன் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் தங்கள் சம்பாஷணைகளைக் கேட்பதை உறுதி செய்து கொண்ட பாரதி,

“அந்தச் சூரியனுக்கும் ஒரு வரைமுறை உண்டு.
சந்திரனுக்கும் ஒரு விதிமுறை உண்டு.

ஆனால் இந்த மழைக்கு மட்டும் விதிமுறை, வரைமுறை கிடையாது.

சூரியன் தான் பார்க்கும் பூமியின் ஒவ்வொரு பாகங்களையும் தொட்டுத் தடவிக் கொஞ்சிக் குலாவி, களித்து களித்து, சலிப்படைந்து, அந்திப்பொழுதில் விடைபெற்று சென்று விடும்.

சந்திரனுக்கோ தன் விண்மீன் காதலிகளைத் தன்னைச் சுற்றி மின்ன விட்டு களியாட்டம் ஆடுவதில் ஒரு கொண்டாட்டம்.

சந்திரனும், சூரியனும் ஒளிர்ந்தது எவ்வளவு உண்மையோ அதைப்போலவே மறைந்ததும் அவ்வளவு உண்மை என்று கூறிக்கொண்டே தன் கீழ் கண்களால் அர்ஜுன் அளவிட்டாள் பாரதி.

அந்தச் சூரியனையும் சந்திரனையும் நொடிப்பொழுதில் மறைத்த மேகமோ, அமுதூட்டும் தாயைப்போல், வான் மழையை பொழிந்தது.

மண் கொண்ட வான் மழையோ, நல்லவர் என்றும் தீயவர் என்றும், அழகு என்றும் அசிங்கம் என்றும், உயிர் என்றும் ஜடம் என்றும் பாராமல்,
புற அழுக்கை நீக்கி, தன்னால் முடிந்த மட்டும் அனைத்தையும் சுத்தம் செய்து,

அசையாத, அசையவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஆல மரத்தையும் அசைய வைக்கும்.

மண்ணோடு கலந்து முகமறியா வேர்களின் தாகத்தை தீர்க்கும்.

தன் வேலையை சிறப்பாய் செய்து முடித்தவுடன் மேகம் நோக்கி மீண்டும் தன் பயணத்தைத் தொடரும்.

தன்னில் ஜனித்த அந்த இலையைத் தொட அதன் வேருக்கே உரிமை இல்லாத போது உங்களுக்கு என்ன உரிமை வந்தது அருண் அண்ணா? “ என்றாள் அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

தான் பிரித்து எறிந்த இலைகளைப் பார்த்து அருண்,
“ ஏ...இலையே உன்னை தொட்டதற்கு என்னை மன்னித்துக்கொள்... போதுமா பாரதி உனக்கு இப்ப சந்தோசமா? “, சரியான லூசு கூட்டத்தில் மாட்டிக்கிட்ட பீலிங் இருக்கு என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்தபடி சென்றுவிட்டான் அருண்.

பாரதியை வெறித்து நோக்கிய அர்ஜுன்,

“ இப்போ மேடம் சொல்ல வர்ற கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

சூரியன், சந்திரன் ரொம்ப ரொம்ப கெட்டவன்.... அதாவது என்னைப் போல....

மேகம், மழை ரொம்ப ரொம்ப நல்லவள் அதாவது உன்னைப் போல.....

நீ என்னை பரீட்சை பேப்பர் மாதிரி திருத்துவ, உன்னை சொல்லிக் காட்டவோ, தட்டிக் கேட்கவோ, கட்டிக்கொள்ளவோ எனக்கு உரிமையில்லை என்று மறைமுகமாக மிரட்டுகிறாய் பாரதி” என்ன சரியா? என்பதைப்போல் பாரதியை பார்த்தான் அர்ஜுன்.

கொஞ்சும் சலங்கை ஒலி போல் குலுங்கி நகைத்தாள் பாரதி.

“ சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் அர்ஜுன்! சபாஷ்!”, தன் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தாள் பாரதி.

இதழ்களில் பூத்த புன்னகையுடன், கீழுதட்டை மடித்து கடித்தபடி, பாரதியை கண்களால் அளவிட்டான் அர்ஜுன்.

ஒடிசலும் இல்லாமல் பருமனும் இல்லாத தேகம் , தேன் குழைத்த சிற்பம் போன்ற உருவம், வினாத் தொடுக்கும் புருவங்கள், அஞ்சனம் தீட்டிய விழிகள், செம்பவழ இதழ்கள், இருக்கமாய் முடிந்த கொண்டை, அதை முடித்தவள் அழுத்தக்காரி என்பதை பறைசாற்றியது.

அர்ஜுனின் விழிகள் அவன் ரசனைகளை தெள்ளத் தெளிவாக பாரதியிடம் எடுத்துக் காட்டியது.

உங்கள் கற்பனைக் குதிரையின் கால்கள் இப்பொழுது உடைபட போகின்றன மிஸ்டர் அர்ஜுன்.....என்று இழுத்தாள்.

"நிச்சயம் நான் சந்தித்த பெண்கள் போல் நீ இல்லை பாரதி.

யூ ஆர் அமேசிங்.

நான் பழகிய கலாச்சாரத்தில் எனக்கு பெண்களுடன் உறவாடுவது தவறாகத் தெரியவில்லை.

அவர்களின் தேவைகளைக் கொடுத்து எனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன்.

பணம் புகழ் இந்த இரண்டும் இருந்தால் போதும் எதையும் வாங்கலாம் என்ற மமதை என்னிடம் இருந்தது.

வீழ்ந்த அடி பலமாக இருந்ததால், இப்பொழுது வாழும் நொடி எனக்கு நரகமாக இருக்கிறது.

ஆனால் உன்னோடு உணர்வாடுவது போல் உள்ளதே...

யு ஆர் சாம்திங் டிஃபரண்ட்.

ஆனால் என் மனதிற்குள் இருக்கும் இன்னொரு அர்ஜுன் என்ன சொல்கிறான் தெரியுமா? பாரதி,

உன்னையும் படுக்கையில் சந்தித்தால் நீயும் அந்தப் பெண்களில் ஒருத்தியாகத்தான் இருப்பாய் என்று கூறுகிறான்.

என்ன ரதிமா ! சோதித்துப் பார்க்கலாமா?” என்றான்.

தன் முயற்சிகள் வீணாய் போனதை எண்ணி விரக்தி பார்வை பார்த்தாள் பாரதி.

“தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”...


மனதிற்கு மகாகவியின் வரிகளை உரமாய் இட்டாள் பாரதி.

அலட்சிய புன்னகை அசால்டாக வந்தது பாரதியிடம்.

“ ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவனுக்கு....” என்று இழுத்தாள் பாரதி.

தன் ஆண்மையை கேள்விக்குறியாக்கியவளை கோபத்தில் கண்கள் சிவக்க, கைகள் துடிக்க, அருகில் நின்ற பாரதியின் கைகளை இழுத்தான்.

அர்ஜுன் இழுத்த நொடி பாரதி அர்ஜுனின் மடியில் விழுந்தாள்.

தன் கை சுட்டு விரலை கொண்டு, அவளின் முக வடிவை அளந்தபடி,

"அழகாயிருக்க, அறிவா பேசுற, ஆனா இந்த திமிரு மட்டும் உச்சி முதல் பாதம் வரை இருக்கிறதே....
ரொம்ப தப்பாச்சே..." கோணலாய் இளித்தான் அர்ஜுன்.

பாரதியின் மலர் முகம் நோக்கி குனிந்த அர்ஜுனை, மின்னல் வேகத்தில் அவன் தாடையில் ஒரு குத்து விட்டுவிட்டு, தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றாள் பாரதி.

தன் கன்னத்து தாடையைத் தடவிக் கொண்டே, இதற்கான எதிர்வினை என்னிடம் மிகவும் மோசமாக இருக்கும் பாரதி.

"கைநீட்டும் இந்தக் கைகள் நிச்சயம் ஒருநாள் என்னைத் தழுவும். நம் தனிமையில் அதனை ஒரு நாள் உனக்கு நினைவுப்படுத்துவேன்" என்றான்.

அவன் வார்த்தைகளை துச்சமென, தூசி என தட்டி விட்டு விட்டு, எதுவும் நடவாதது போல் தன் கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே,

" நேரமாகிவிட்டது மிஸ்டர் அர்ஜுன்,உங்கள் அறைக்குச் செல்லலாமா? " என்றாள்.

அடிபட்ட அரிமா என்ன செய்யும்?
புதிர் போட்ட புள்ளிமான் என்ன செய்யும்?
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
😍😍😍😍...

😏அடிபட்ட அரிமாக்கு புத்தி தெளிவாகும்...

😉 புதிர் போட்ட புள்ளிமான்_________

🌹அருமையான விளக்கங்கள்... சூப்பர் அனாமிகா ❤ 47​
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
😍😍😍😍...

😏அடிபட்ட அரிமாக்கு புத்தி தெளிவாகும்...

😉 புதிர் போட்ட புள்ளிமான்_________

🌹அருமையான விளக்கங்கள்... சூப்பர் அனாமிகா ❤ 47​
நட்பே சுகா 💐💐
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நீங்கள் அளிக்கும் ஆதரவு என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.
நீங்கள் பதில் அளிக்கும் பாங்கு அதாவது உங்கள் கருத்து வடிவமைப்பு உங்களை தனித்து காட்டுகிறது.
வெள்ளை ரோஜா கூட்டத்தில் இருக்கும் சிகப்பு ரோஜா போல.
நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏🙏
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
அழுத்தமான எழுத்து நடை. அர்ஜுன் நல்லா குத்துனாலா? எல்லாரையும் பணத்தால் வாங்கணும்னு நினைக்காதே மகனே!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top