• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் -8


MEME-20211107-121043.jpg

ஆழ அமிழ்ந்து இருக்கும் இயலாமை, கோபமாய், வன்மமாய், நல்ல எண்ணத்தை அழித்து தீய எண்ணத்திற்கு தீ வார்க்கும்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு”

என்று பாரதியின் காதில் மகாகவி, பாடலின் வழி, வரும் அபாயத்தை உபாயமாய் தந்தார்.

காட்டில் மரப்பொந்தில் வைத்த சிறிய தீப்பொறி ஆனது அந்தக் காட்டையே அழித்து விடும்.

இன்று தீப்பொறியாய் இருக்கும் அர்ஜுனின் இயலாமை, நாளடைவில் கொழுந்துவிட்டு அவனையே கொளுத்திவிடும்.

அழியக்கூடாது, அர்ஜுனை அழிய விடக்கூடாது. கர்வம் மிகுந்த அந்த விழிகளைக் கருணை கொண்டு நிரப்ப வேண்டும்.

அர்ஜுனை மீட்டெடுத்தே ஆகவேண்டும்.
முடியும் என்று நினைத்தால் மட்டுமே நமக்கு விடியும். துன்பம் கண்டு துவளாமல், அந்தத் துன்பத்தை தோளில் போட்டுக்கொண்டு, புன்னகையுடன் முன்னேறினாள் பாரதி.

அர்ஜூனின் மனம் உலைக்களமாய் கொதித்தது.

பாரதியை அடக்க வேண்டும் எனில் தான் நடக்க வேண்டும்.

எவன் ஒருவன் தோல்வியிலிருந்து எழுந்து நிற்கிறானோ, அவனே வெற்றி பெறுவான். அர்ஜூன் எழ ஆரம்பித்தான்.

இதுவரை எந்த சிகிச்சைக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்காத அர்ஜுன், மனதளவில் தன் சிகிச்சைக்குத் தயாராகினான்.

இறந்த காலத்தில் மட்டுமே உழன்று கொண்டிருந்த அர்ஜூனின் மனம், எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க ஆரம்பித்தது.

அர்ஜுனை மாடியிலிருந்த அவன் அறைக்கு வழி நடத்தினாள் பாரதி.

தன் அறைக் கதவில் இருந்த வித்தியாசத்தைப் பார்த்து அர்ஜூன் பாரதியை, விழி நோக்கினான்.

‘ஹோம் ஆட்டோமேஷன்’ என்ற அமைப்பு அர்ஜூனின் அறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதைச் செவ்வனே அமைத்துத் தரும் தனியார் நிறுவனங்கள் பெருநகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இன்டர்நெட் இணைப்பு மூலம் ரிமோட்டில் இயங்கும் பிளக் பாயின்டுகளில், எந்த மின் சாதனத்தையும் இணைத்து, ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்வது, செல்போனில் இடும் அல்லது பதிவு செய்யப்பட்ட குரல் வழி வரும் கட்டளைக்கேற்ப கதவுகள் தாமாகத் திறப்பது, வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒளிரும் விளக்குகள், இணையத்துடன் இணைக்கப்பட்ட குளிர் சாதனப் பொருட்கள், கட்டளைக்கு கட்டுப்படும் மின்சாதனங்கள், கூகுள் ஆண்டவரிடம் தேடும் பணிகள் ஆகிய வசதிகளை எளிதாகச் செய்து கொள்ளலாம்.

அந்தச் சிறிய மின் கருவியை வீட்டின் இணையத்துடன் இணைத்தால் போதுமானது.

சுருக்கமாகச் சொன்னால் குரல் வழி வரும் கட்டளைகளுக்கு கட்டுப்படும் மின்சாதனங்கள்.

மொத்தத்தில் அர்ஜுனின் அறையை அவன் குரல் வழி அடக்கி ஆளும் படி வடிவமைத்திருந்தாள் அந்த ஆளுமை அரசி.

அஞ்சுவதும் கெஞ்சுவதும் பெண்மைக்கு அழகல்ல,என்று அவனை மிஞ்சினாள் பாரதி.

புதுமைகளைப் புகுத்தி, தன்னுடைய இயலாமைகளைச் சமன் செய்யும், அடுத்த கட்ட நகர்வை கணிக்க முடியாதபடிச் செய்யும், அவளின் புத்திக்கூர்மையைக் கண்டு அர்ஜுனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆச்சரியம் மேலிட, வியப்பு கூடிட, சாதித்த பூரிப்பில் கண்கள் மலரச் சிரித்தவளை, அவளது பூக் கரங்களால் பூஜை செய்யப்பட்ட தாடையை தடவிக்கொண்டே,
“ அடக்க வேண்டிய அரேபியக் குதிரை” என்றான்.

“ என்ன?” என்று புருவம் உயர்த்தியவளை, “ ரொம்ப அடக்கமான பொண்ணு என்று சொன்னேன் பாரதி “ என்றான்.

“உன் மாயமெல்லாம் நானறிவேன்... மாயக்கண்ணா!” என்று மனதிற்குள் நினைத்தபடி பாரதி, “நம்பிட்டேன் மிஸ்டர் அர்ஜுன்” என்றாள்.

கதவில் இருந்த சென்சார் பட்டனின் உதவியின் மூலம், அர்ஜுனின் குரலைப் பதிவு செய்யும் கட்டளைகளை உயிர்ப்பித்தாள்.

“ அர்ஜுன் இப்பொழுது நீங்கள் உங்கள் குரலைப் பதிவு செய்யலாம். இனி உங்கள் கட்டளைகளைக் கேட்டு இந்த அறையில் அனைத்துப் பொருட்களும் அடிமையாய் ஆட்டம் ஆடும்” என்றாள்.

அர்ஜுன், தன் கண்களைச் சுருக்கி, கீழுதட்டை மடித்துக்கொண்டு, என்ன சொல்லலாம் என்று யோசித்தான்.

அவனது விவகாரமான பார்வையிலேயே பாரதிக்கு தெரிந்துவிட்டது, அர்ஜுனின் கோணல் புத்தி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்று.

அந்த நிமிடம் தன் கண்கள் இரண்டையும் இறுக்கி மூடிக்கொண்டு, தன் காதை செவிடாக்கிக் கொண்டு நின்றாள் பாரதி.

“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி”


என்ற அர்ஜூனின் பாட்டுச் சத்தத்தில், கண்ணம்மா என்ற விளிப்பில், பளீரிட்ட அர்ஜூனின் பார்வையில், சித்தம் கலங்க, அவள் மேனியின் மயிர்க்கால்கள் சிலிர்த்தாட, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சி செய்தாள் பாரதி.

பாரதியின் பலவீனம் அன்பு என்பதைக் கண்டுகொண்டான். அன்பெனும் போர்வையால் தன் அகங்காரத்தை தீர்க்க குறிப்பெழுதினான் அர்ஜுன்.

பாரதியின் பலமும் அன்புதான் என்பதை அர்ஜுன் மறந்து விட்டான் என்பதை நினைத்து விதியும் சிரித்தது.

தான் ஒரு மருத்துவர், அர்ஜூனின் சிகிச்சையே தனக்குப் பிரதானம், உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், கோபத்திற்கும், தாபத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று தன் மூளையை அறிவுறுத்தினாள் பாரதி.

நிதானமாக தன் கண்களை மூடித் திறந்த பாரதி, உனக்கு பாடக் கூட தெரியுமா? என்பது போல் அற்பமாக ஒரு பார்வை பார்த்தாள்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் போல், “உங்கள் குரல் பதிவு செய்யப்பட்டுவிட்டது மிஸ்டர் அர்ஜுன்” என்றாள்.

அர்ஜுனின் கட்டளைக்கிணங்க கதவு திறந்தது. பாரதியின் மனக்கதவு இறுக்கி மூடப்பட்டது.

“அர்ஜுன் இப்பொழுது உங்கள் இரண்டு கைகளையும் சேர்த்து தட்டுங்கள்” என்றாள்.

“பாரதி நீ எப்பொழுதும் என்னை பள்ளிச் சிறுவன் போலவும், நீ ஒரு பெரிய கணக்கு ஆசிரியர் போலவும், பிரம்பு இல்லாமல் மிரட்டிக் கொண்டே இருக்கிறாய்.அதன் வரம்பு கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றான் கன்னம் குழியச் சிரிப்புடன்.

வசீகரன் விரித்த வலையில் வஞ்சிக்கொடி சிக்குமா?

“ நேரத்தை வீணாக்காமல் சொன்னதைச் செய்யுங்கள் அர்ஜுன் “ என்றாள்.

அர்ஜுன் தன் இரு கைகளை சேர்த்துத் தட்டி ஓசை எழுப்ப,
அறையின் விளக்குகள் ஒளிர்ந்தன. மீண்டும் ஓசை எழுப்ப அறையின் விளக்குகள் அணைந்தன.

“ ஐ லைக் இட் பாரதி... இத்தனை நாள் இந்த யோசனை எனக்குத் தோன்றாமல் போனதே... தீவட்டி அருணுடன் தீய்ந்து கிடந்து இருந்திருக்கிறேன்.. “ என்றான்.

“ இது மட்டுமல்ல அர்ஜுன், உங்களின் குரல் கட்டளைக்கு, பாடல்கள் ஒலிக்கும், தொலைக்காட்சியை இயக்கலாம், இணையத்தில் உங்கள் தேடல்களைச் சொல்லலாம். யாருடைய உதவியும் இல்லாமல் உங்கள் கட்டளையின் கீழ் இந்த அறை இயங்கும்” என்றாள்.

அர்ஜுனை அவன் அறையில் உள்ள பால்கனிக்கு கூட்டிச்சென்றாள்.

அங்கு கலைநயம் மிக்க ஒரு மர ஊஞ்சல் நேர்த்தியாக செய்யப்பட்டு கொலுவீற்றிருந்தது.
அதன் நேர்த்தி தன்னைத் தேர்வு செய்தவள் மிகவும் ரசனை மிகுந்தவள் என்பதை பறைசாற்றியது.

அர்ஜுனின் ரசனையான பார்வையைப் பார்த்துவிட்டு,
“ ஓகே மிஸ்டர் அர்ஜுன், நான் கீழிறங்கிச் சென்று வருவதற்குள், நீங்கள் நீங்களாகவே, யாருடைய உதவியும் இல்லாமல், அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆட வேண்டும்.

இந்த டாஸ்க்கில் நீங்கள் வெற்றி பெற்றால்,....”

இனிய குரலில் ராகமாக இழுத்தபடி “முத்தம் தருவேன்” என்றாள்.

அர்ஜூனின் விழிகள் இரண்டும் தெறித்து வெளியே வந்துவிடும் போல் இருந்தன.

அர்ஜுனின் மூளையோ “அவளை நம்பாதே!, அவள் உணர்வுகளுடன் சதிராடும் சதிகாரி” என்று எடுத்துரைத்தது.

ஆனால் மனதிற்குள் ஒளிந்திருந்த அகம்பாவி அர்ஜுனோ, “உன்னழகைக் கண்டு மயங்காத பெண்கள் உண்டோ? பாவம் பாரதியும் பெண் தானே. தானாக வலிய கொடுக்க வந்த போது, கன்னத்து தாடையைப் பெயர்த்து விட்டு, விரட்டிவிட்டாள். இழந்துவிட்ட வாய்ப்பை திரும்பப் பெற ஒரு நாடகமோ? “ என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டான்.

தன் நாவால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டே, “கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாரதி” என்றான்.

உதிர்க்கத் தொடங்கிய சிரிப்பை அடக்கி விட்டு, “உங்களால் முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள் மிஸ்டர் அர்ஜுன்.

பாரதி என்றும் தன் வாக்கை மீற மாட்டாள். வாழ்த்துக்கள் மிஸ்டர் அர்ஜுன். ஏனென்றால் நீங்கள் தோற்கத்தான் போகிறீர்கள். அதன்பிறகு வாழ்த்துக்கள் சொல்ல முடியாது அல்லவா?.
கிலோ கணக்கில் வழிந்தது நக்கல் பாரதியின் குரலில்.

சிங்கத்தை சீண்டி விட்டு சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

“இந்த முயற்சியில் நிச்சயம் நான் வெற்றி பெற்றே தீரவேண்டும். என்னை இகழும் அந்த இதழில் நான் கவி படித்தே தீர வேண்டும்“, பாரதியை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முழு நோக்குடன் தன் முயற்சியை ஆரம்பித்தான் அர்ஜுன்.

சக்கர நாற்காலியில் இருந்து அந்த ஊஞ்சலில் சென்று அமர்வது அவ்வளவு இலகுவாக இல்லை அர்ஜுனுக்கு.

தொடர்ந்த முயற்சிகள் அனைத்திலும் தோல்வியையே தழுவினான். வெகு நாட்களாக அசையாத அந்த ஆடு தசைகள் அசைய மறுத்தன.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்த அர்ஜுன் ஒரு முயற்சியில் தவறி கீழே விழுந்தான். அந்த முழு ஆண்மகனின் விழி விளிம்பில் தோல்வியின் காயத்தால் நீர் கசிய ஆரம்பித்தது.
ஆம் இறுகிய அந்தப் பாறையில் நீர் கசிய ஆரம்பித்தது.

அவமானத்தால் தன் முகத்தை சுருக்கிய அர்ஜுன், தரையிலிருந்து அந்த ஊஞ்சலைப் பார்த்தான்.

ஆடும் அந்த ஊஞ்சலில் பாரதி அமர்ந்து, “நான் சொன்னேன் தானே அர்ஜுன். உன்னால் முடியாது! முடியாது! என்று உரைப்பது போல், கற்பனை உலகம் அர்ஜூனின் கண்முன்னால் விரிந்தது.

அவன் உள்ளம் திகுதிகுவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. கண்கள் அக்கினி ஜூவாலையைக் கக்கின.

“ அர்ஜுன்... அர்ஜுன்... கம்மான் அர்ஜுன்..... “ என்று கூச்சலிடும் உலகம் அவன் கண் எதிரே தெரிந்தது. அசுரன் விழித்தெழுந்தான்.

தரையில் படுத்தவாறே புஷ்-அப் செய்தான். அவன் கண்கள் ஊஞ்சலை அளவிட்டபடியே இருந்தது.

அவன் நெற்றியின் வியர்வை கன்னம் தழுவிவிட்டு, தாடியின் வழியே வழிந்தது. கால்களின் உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து பெருவிரல்களில் கூட்டினான்.

நிலத்தில் பெருவிரலை அழுந்த ஊன்றியபடி, தன் தேகத்தை தூக்கி எடுத்தான். மனதின் பாரம் முன் அவனின் உடலின் பாரம் ஒன்றும் இல்லாமல் போனது.

தன் மூச்சை இழுத்து உள்ளடக்கி, வேங்கையின் வேகத்தோடு, ஊஞ்சலை நோக்கித் தாவினான்.

ஊஞ்சலின் நுனி பிடித்து, உடல் வளைத்து, மீண்டும் பெரு விரல்களில் அழுத்தம் கொடுத்து, தாவி அமர்ந்தான்.

பெருமூச்சுக்களை விட்டவாறே, ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்து, வானம் நோக்கினான் அந்தத் தலைவன்.

கீழே தரையில் விழும் அருவியின் செயல் தோல்வியல்ல....
அது ஒரு நதியின் பிரவாகம்.

அர்ஜூனின் மனம் தேங்கிய குட்டையாய் இருந்து, இப்பொழுது அருவியாய் விழுந்து, நதியாய் பிரவாகம் எடுக்கத் தொடங்கி விட்டது.

நெடிய நாட்களுக்குப் பின் கிடைத்த வெற்றியில், அந்த மர ஊஞ்சலில் ஒரு அரசனின் கம்பீரத்துடன் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

உணர்வுகள் தூண்டப்பட்ட கால்களின், முழு இயக்கத்தையும் அர்ஜுனால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

கண்களை இறுக்க மூடினான். மூடிய இமைக்குள் ஆன்ம பலத்தைத் தேடினான்.

“தடை வந்தால் தாண்டிச் செல்லவேண்டும்.

பிழை வந்தால் திருத்திக் கொள்ள வேண்டும்.

தோல்விகள் வந்தால் கற்றுக்கொள்ளவேண்டும்.

கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நினைவில் கொண்டதைப் பயிற்சி செய்ய வேண்டும்.

பயிற்சி செய்ததை முயற்சி செய்தே ஆக வேண்டும் அர்ஜூன்.....”

அவன் மனம் ஆக்ரோஷமாக ஆணையிட்டது.

ஊஞ்சலும் அசைய ஆரம்பித்தது.....

சதுரங்க ஆட்டத்தில் ராணி ராஜாவை, மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி தன்னிடம் தோற்க வைப்பாளா?
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அன்பார்ந்த நட்புக்களே 💐💐💐

நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47....

முள்ளோடு முத்தாட வா....

கதையின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து, என் குறை களைய உங்களை வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏.

அத்தியாயத்திற்கு முதல் கருத்தை பதிவிடும் நபரை கவிதை மழையால் நனைப்பேன்....
( அதைக் கவிதை என்று நீங்கள் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற அன்பான நிபந்தனையுடன் 😁😁😁😁😁)
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Nice update dear
அன்பார்ந்த நட்பே,
அத்தியாயம் 8ன் முதல் விமர்சகர் ஆகிய உமக்கு இதோ கவிதைப் பரிசு 💐💐💐💐


பனியால் மூடிய கனடாவில்,
பனியில் நனைந்த பனிமலரே! அருள் தேவியே,
நனி சிறந்த உந்தன் வாழ்த்தில்,எந்தன் பணி தொடருமே!
உருளும் இந்த உலகத்தை அருளும் தேவி போல்,
எந்தன் மருளும் அகல அருள்வாய் தேவி 🙏🙏🙏🙏

( ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ.....
இந்தக் கவிதை (?) எப்படி இருக்கு? Arulthevy)😍😍😍😍😍

உங்கள் மைண்ட் வாய்ஸ் :
சண்முகம் எடுடா அந்த உருட்டு கட்டையை.....
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
😍😍😍😍😍😍😍.....
கவிதை எனக்கும் உண்டா
முதல் நாள் அறிவிப்பு இல்லையா அதனால் அந்த ஆஃபர் உங்களுக்கும் உண்டு!

சுகமே!
உந்தன் வாழ்த்துக்கள் சுகமே!
உந்தன் கருத்துக்களும் சுகமே!
பார்த்துவிட்டு செல்லும் இந்த சைட்டில்,
அழகான வார்த்தைகளை கோர்த்து தரும் சுகமே!
உருவம் அறியா நட்பிற்கு நிழற்படம் அமைத்துக் கொடுத்த வரமே!
உந்தன் நட்பு எனக்கு என்றும் சுகமே!
அபாய குறிப்பு :
இனிமேல் கவிதை கேட்பீங்க!
Sugaa madam😁😁😁
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
அர்ஜுன் எந்த துறையில் சாதித்தவன்? பொண்ணை போதை பொருளான பார்த்தால் பின்னால் மரண adi விழும் அர்ஜுன் மனதில். அட பக்கி முத்தமனதும் என்னமா ஒர்க் அவுட் பண்ணுது ,இதில் இவனலகில் மயங்கி தானா குடுக்குறா மாறி. (ஆசைய பாரு)
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அர்ஜூன் விளையாட்டுத்துறை ரேஸிங்ல இருந்தவனோ......

என்னது முத்தம் குடுப்பியா....

அவன் கண்ணத்தில முத்தம் குடுத்தால் னு பாரதி கவிதை சொல்லவும் நீயும் குடுக்கலாம்னு நினைச்சிட்டியோ பாரதி.....

அர்ஜூன்...... அவ சதிகாரியா😂😂😂😂😂😂😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top