• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம்- 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
முள்ளோடு முத்தாட வா...

அத்தியாயம் - 9

MEME-20211107-121043.jpg


மருளும் இருளில் ஒளிரும் நட்சத்திரம் போல், அர்ஜுனின் தன்னம்பிக்கை மிளிர்ந்து, கர்வப் புன்னகை உதட்டில் வந்து ஒட்டிக் கொண்டது.

அறையின் சுவர்கள் அனைத்தும் அதிர,
பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டங்களும் சிதற,
ஊன் உயிரில் உறைந்துள்ள ஒவ்வொரு செல்களும் கதற, மதம் கொண்ட களிராய்,

“ நான் அர்ஜுன் டா...... “ என்று ஆரவாரமாய் ஆர்ப்பரித்தான்.

‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’...


என்று கால்களில் சற்று பலம் வந்தவுடன் காலனையே காலால் உதைக்க அழைத்தான்.

அர்ஜூனின் அலறல் சத்தத்தில், அருண் அடித்துப் பிடித்துக்கொண்டு கதவருகே வந்தான்.

எத்துணை குரங்கு சேட்டைகள் செய்தாலும், அவனால் கதவைத் திறக்க இயலவில்லை.

உள்ளே இருக்கும் தன் பாஸ்க்கு என்னவோ ஏதோ, எதுவும் ஆபத்தோ என்று அவன் மனம் பதறியது.

“ பாஸ்... பாஸ்... “ என்று அறைகூவல் விடுத்தான்.

அர்ஜூனின் ராஜ கட்டளைக்கேற்ப கதவு திறந்தது.

அடித்துப் பிடித்துக் கொண்டு வந்த அருண்,
ஊஞ்சலில் ஒய்யாரமாக வீற்றிருந்த தன் பாஸ் அர்ஜுனைப் பார்த்தான்.

ஆசுவாசமாய் மூச்சை விட்டுக்கொண்டே, முகத்தில் வழிந்த வேர்வையை கையால் துடைத்துக் கொண்டான்.

பின் ஆச்சரியம் மேலிட தன் விழிகளை உயர்த்தி,
எப்பொழுதும் கோபத்தையும் விரக்தியை மட்டுமே பிரதிபலிக்கும் அந்த விழிகள், இன்று பளபளவென்று ஜொலிப்பதையும், தேஜஸுடன் தேகம் மிளிர்வதையும் பார்த்து,

“சூப்பர் பாஸ்...” வார்த்தைகள் திக்கித் திணறியது அருணுக்கு.

பின் நிதானமாக அர்ஜுனனை நோக்கிய அருண், அவன் படுக்கையிலும், சக்கர நாற்காலியும் இல்லாமல் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து நிதர்சனத்தை உணர்ந்தான்.

அர்ஜூனின் நிழல்போல், அவனுக்கு ஒரு பாதுகாவலனாய், உற்ற துணையாய், உண்மையான விசுவாசத்துடன் இருக்கும் அருணுக்கு, அர்ஜூனின் இந்த மாற்றம் ஆனந்தத்தை தந்தது.

“நான் பழைய அர்ஜுன் சாரை பார்க்கணும் பாஸ்” என்றான் நா தழுதழுக்க.

கர்வத்திலும், மமதையும் மிளிர்ந்து கொண்டிருந்தவனுக்கு, யாருடைய இரக்க உணர்ச்சியோ, பாசமோ, பரிதவிப்போ தேவைப்படவில்லை.

அவனுடைய இந்த நொடித் தேவை, பாரதியை சொல் அம்புகளால் தைத்து,
“ பாரதி என்னைப் பாரடி..... “ என்று இவன் வெற்றியைப் பறைசாற்றி, அவள் தோல்வியை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும்.

தோல்வியால் சுருங்கும் அவள் மலர் வதனத்தை, முத்த வேள்வியால் மலரச் செய்ய வேண்டும்.

நொடிக்கு நொடி அவன் உடலில் பரவசம் ஏறியது.

ஏக்கப் பார்வை பார்த்த அருணை, எரிச்சல் பார்வை பார்த்து,
“ என்னடா பொண்டாட்டிய பாக்குற புருஷன் மாதிரி பாக்குற... போடா கீழே பாரதி இருப்பாள். அவளை நான் வரச் சொன்னேன் என்று வரச்சொல். உடனடியாக.... “ என்று அதிகாரத்துடன் கட்டளையிட்டான்.

“ ரைட்டு சைத்தான் பாஸ்போர்ட் வாங்கிட்டு பாரின் போச்சுன்னு நினைச்சேன்.... நடக்குமா? நடக்காது....” என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டே கீழே இறங்கினான்.

தன் அறையில் கண்களை மூடி, தன் பிரியத்திற்குரிய ஆத்மாவிடம் பாரதி மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள்.

உலகில் எதையும் இரண்டாகப் பார்ப்பவர்களுக்குதான் பயம் என்பது உண்டு. பாரதியின் சொல்லும் ஒன்று, செயலும் ஒன்று, எண்ணமும் ஒன்றே.

அர்ஜூனின் முயற்சி கண்டிப்பாக பலிக்கும் என்பது பாரதிக்குத் திண்ணம்.

தான் முழுமையான வெற்றியைப் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எண்ணினாள்.

பறவை என்னவோ வானத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாலும், அதன் சிறு கூடு இருப்பது மரத்தில்தான்.

தான் நடக்கும் பாதையில் இருக்கும் கற்களையும், முட்களையும் தாண்டி, ஏன் தேவைப்பட்டால் சிறகுகள் வீசி வெற்றி வானில் பறக்கும் பாரதியின் மனமும், அவள் சிறு கூட்டைத்தான் தேடியது.

நம் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள், அதிக அன்பு செய்தவர்கள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. காயப்படுத்திய பலரும் தான்.

நினைவுகளின் ரீங்காரத்தில் நீந்தித் தத்தளித்தாள் பாரதி.
மெல்ல எழுந்து, தன் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி இருந்த அந்த முத்துமாலையை எடுத்துப் பார்த்தாள்.

கண்ணீர் முத்து முத்தாய் பாரதியின் கண்களில் உதிரத் தொடங்கியது.
ஆசையாக அதனை வருடித் தந்து, மீண்டும் அதனை பத்திரப்படுத்தி வைத்தாள்.

மனதை திடப்படுத்திக் கொண்டு திரும்பும்போது,
“ பாரதி உன்னை அர்ஜுன் பாஸ் வரச் சொல்கிறார். அவரது நடவடிக்கை எனக்கு வித்தியாசமாகப்படுகிறது.

என்னம்மா பண்ணி வச்ச?. ஆனால் ஒன்று பாரதி, நான் எப்பவுமே அர்ஜுன் பாஸ் பக்கம்தான்.

அண்ணா என்று நீ என்னை அழைப்பதால் என்னிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்காதே!

எனக்கு யாராகினும் அது சாருக்கு அடுத்துதான். நீ இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் பாரதி.

அதேநேரம் சாருக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால் நீ என்னிடம் தயங்காமல் கேட்கலாம்.

என்னுடைய முழு ஒத்துழைப்பையும் உனக்கு அளிப்பேன். அது என் அர்ஜுன் பாஸின் நலத்திற்காக மட்டுமே!
சொற்பொழிவு ஆற்றிய வீரன் போல் நிமிர்ந்து பார்த்தான் அருண்.

“ நிச்சயம் அருண் அண்ணா, உங்களால் எனக்கு சில காரியங்கள் ஆகத்தான் வேண்டும்.

அதில் நிச்சயம் மிஸ்டர் அர்ஜுனின் நலம் மட்டுமே இருக்கும்” என்றாள்.

“ சரி பாரதி நேரமாகிறது. பாஸ் உன்னை அப்பொழுதே அழைத்தார். விரைவாகச் செல்.
அப்புறம் பாரதி, பாஸின் அறை மாற்றங்கள் மிகவும் நன்றாக இருந்தது. எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்றான்.

சின்ன சிரிப்புடன் புன்னகைத்துவிட்டு மாடி ஏறினாள் பாரதி.

தான் செய்யப்போகும் காரியத்திற்கு அர்ஜுனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே சிரிப்பை உதிர்த்தாள்.

அர்ஜுனின் அறை வாயிலில் பாரதி நிற்க,
அவள் வந்து விட்டதை அவன் அறையின் மின்னணுக் கருவி அறிவித்தது.

அர்ஜுனின் கட்டளையில் கதவு திறந்து உள்நுழைந்தாள் பாரதி.

அந்த மர ஊஞ்சலில் ஆடிய அர்ஜூனின் தோற்றம் பாரதியின் மனதில் ஆழ்ந்து அமிழத் தொடங்கியது.

அவன் முயற்சிக்கு கைத்தட்ட துடித்த தன் கைகளை இறுக்கி மடித்துக் கொண்டாள்.

புருவம் தொட்ட தன் உச்சி முடியை தன்னுடைய தலைச் சிலிர்ப்பால் பின்னோக்கி தள்ளிவிட்டு, வசீகரப் புன்னகையுடன், தன் கட்டளையால் அந்தப் பாடலை ஒலிக்க விட்டான்.

“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்”


"வாழ்த்துக்களை சொல்ல வந்த விட்டு அங்கேயே நின்றால் எப்படி பாரதி?

மாமன் கூட ஊஞ்சலில் ஆட வருகிறாயா? டாஸ்கில் ஜெயித்தது கூட கிக் இல்லை பாரதி.

நீயாகத் தருவேன் என்று சொன்ன முத்தம்.
நீயாகத் தரப் போகிற முத்தம்.

இன்று முத்தம், நாளை மொத்தம், இது நல்ல ஆரம்பம்.

அதாவது ரதிமா இன்று ஊ ஊ ஊ ஊஞ்சல் நாளை கட்டில்ல்ல் ...." சந்தோஷ தருணத்தில் எதுகையும் மோனையும் பொங்கி வழிந்தது அவனது பேச்சில்.

வெற்றி கண்டேனடி பெண்ணே....

அர்ஜுனை என்ன என்று நினைத்தாய் சீற்றம் சீறி வந்தது.

பாரதி நாணம் கொள்வாள். நடுக்கம் கொள்வாள். குறைந்தபட்சம் தயக்கமாவது கொள்வாள் என்று அர்ஜுன் எதிர்பார்த்தான்.

ஆனால் அவன் பார்த்தது. காட்டன் புடவையில் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் நெஞ்சை நிமிர்த்தி, நேர் பார்வையால் தன்னை உற்று நோக்கிய பாரதியைத் தான்.

“அர்ஜுன் அவளை அடக்கி விடு.... “ அந்தக் கர்வி, மனதை முழுவதும் ஆக்கிரமித்திருந்து கத்தோ கத்து என்று கத்தினான்.

அசராமல் பார்த்து, அவனை அசர வைத்தாள். மெல்ல அந்த மர ஊஞ்சலின் அருகே நெருங்கி வந்தாள் பாரதி. ஊஞ்சலின் பின் சென்று, அவன் பின் நின்றாள்.

தன் தலையை உயர்த்தி நிமிர்ந்து அவளைப் பார்த்தான் அர்ஜூன். அவள் முத்தமிடப் போகும் அந்த நொடியை அனுபவிக்க கண்களை மூடினான்.

பாரதியும் குனிந்து அவன் முகம் அருகே வந்தாள்.
இசையின் குரல் ஒரு பக்கம் வழிய, அர்ஜூனின் மனமும் பாரதியின்பால் சரிய, ஏகாந்தத்தை எதிர்பார்த்தான்.

நேரம் செல்லச் செல்ல, ஒன்றும் நடக்காமல் போனதும், அர்ஜுன் கண் திறந்து பார்த்தான்.

அவன் கண் திறந்ததும் தன் தலையை நிமிர்த்திய பாரதி அர்ஜுனின் முன்வந்து,
“ மிஸ்டர் அர்ஜுன், உங்களின் முகத்தை உங்கள் தாடி முழுவதுமாக மறைக்கிறது. சுத்தம் ரொம்ப முக்கியம் அர்ஜுன்” என்றாள்.

“ ஏய்.... ரொம்ப முக்கியம் சுத்தம். நான் கேட்டது முத்தம். நீ தருகிறேன் என்று சொன்னாயே...
பாரதி வாக்கு மாற மாட்டாள் என்று உரைத்தாயே...

நீ தோற்றுப் போனாய் பாரதி.
வெற்றிபெற்ற எனக்கு முத்த வாகைசூடவா..” என்றான்.

சின்ன தலையசைப்புடன், “ஆம் அர்ஜுன். இந்தப் பாரதி வாக்கு தவற மாட்டாள். முத்தம் தருவேன் என்று சொன்னேன் தான்” என்றாள்.

குழப்பமான முகத்துடன் பாரதியை நோக்கினான் அர்ஜுன்.

மெல்ல பால்கனியில் இருந்து உள்ளறைக்குள் வந்தாள் பாரதி.

அங்கே சுவற்றில் ஒளிரும் விளக்கின் கீழ் வெற்றிக் கோப்பையுடன், கண் மலர உதடு சிரிக்க, முழு உருவமாய், ஆண்மையின் கம்பீரத்தில் அர்ஜுன் நிழற்படமாய் நின்றான்.

நிழற்படத்தில் அவன் கண்களை, தாய்மையின் பரிவுடன் வருடி, அன்பு பொங்க, ஆசையுடன், இதழ் குவித்து, நிழற்பட அர்ஜுனின் விழிகள் மேல் தன் இதழ் பதித்தாள்.
அர்ஜூனின் இமைகள் தாமாக மூடிக் கொண்டது. முத்தமில்லா முத்தத்தில் மெய்சிலிர்த்தான் ஒரு நொடி.

அடுத்த நொடி, ஆங்காரமெடுத்த அர்ஜுன்,
“ பாரதி இது என்ன சிறுபிள்ளைத்தனம். என்னைச் சீண்டிப் பார்ப்பதே உனக்கு வேலையாகிப் போய்விட்டது.
முத்தம் கொடுக்க வெட்கப்பட்டால் , தோற்றுவிட்டேன் அர்ஜுன் என்று கூறி விட்டு ஓடிப்போ. இந்த நாடகம் எல்லாம் என்னிடம் வேண்டாம். களத்தில் இதைவிட எத்தனையோ மோசமான துரோகிகளைப் பார்த்தவன் நான். துரோகம் ஒன்றும் எனக்கு புதிதல்ல. ஏமாற்றங்கள் கூட எளிதானதுதான்.

நான் பார்க்காத அழகிகளா? நான் வாங்காத முத்தங்களா?
சரிதான் போ......” என்று முடிப்பதற்குள்,

“மிஸ்டர் அர்ஜுன், நீங்கள் டாஸ்கில் வெற்றிபெற்றால் முத்தம் தருவேன் என்று சொன்னேன்.

அதில் உங்களுக்கு என்ற வார்த்தையை நான் எதிலும் சேர்க்கவில்லை. உங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முத்தம் கூட. என்னளவில் நான் எப்பொழுதும் சரிதான் மிஸ்டர் அர்ஜுன் “ என்றாள்.

அவன் மனம் கூறிய, அவள் ஒரு சதிகாரி என்ற கூற்றை அவன் இப்பொழுது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியதாகிவிட்டது.

“ முதல் சுற்றிலேயே வெற்றியைத் தீர்மானிக்க கூடாது அர்ஜுன். உனது வெற்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சின்ன சின்ன வெற்றிகள் வேண்டாம் அர்ஜுன். உனக்குத் தேவை முழு வெற்றி. “ - அகம் பாவி வெளிவந்தான்.

பாரதியின் மேலெழுந்த கோபங்களைத் தன்னுள்ளே மறைத்து,
அவளை அழ வைக்க வேண்டும்.
அவளை விழவைக்க வேண்டும்.
அதற்குத்தான் எழும் வரை பொறுக்க வேண்டும் என்று தனக்கே ஆசானாய் மாறி அறிவுறுத்தினான்.

மேகங்களால் மூடப்பட்ட சூரியனால் கூட பிரகாசிக்க முடியாது. கோபங்களால் மூடப்பட்ட இந்த அர்ஜுன்?
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அன்பார்ந்த நட்புக்களே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய

அனாமிகா 47 ❤

முள்ளோடு முத்தாட வா...

கதையின் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் கருத்தை பதிவு செய்பவருக்கு கவிதைப் பரிசு உண்டு 😍😍😍😍
( கவிதை மாதிரி😁😁😁😁😁)
 




janasiva

புதிய முகம்
Joined
Mar 24, 2019
Messages
10
Reaction score
23
Location
Chennai
அன்பார்ந்த நட்புக்களே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய

அனாமிகா 47 ❤

முள்ளோடு முத்தாட வா...

கதையின் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் கருத்தை பதிவு செய்பவருக்கு கவிதைப் பரிசு உண்டு 😍😍😍😍
( கவிதை மாதிரி😁😁😁😁😁)
Super.Bharathy Arjuna vachi senjutta....
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Super.Bharathy Arjuna vachi senjutta....
பாசத்திற்குரிய நட்பே 💐💐💐
அத்தியாயம் 9 ன் பதிவிற்கு, முதல் கருத்தை பதிவிட்ட முத்தான வாசகரே ❤
இதோ பெற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கான கவிதையை 💐💐💐

நட்பில் ஜனித்த ஜனா - நான்
யார் என்ற வினா? - ஒதுக்கி
நேசக்கரம் தந்த சிவமே,
நீர் கிடைத்தது எமக்குத் தவமே 👍

பின்குறிப்பு :
( என்னை ரொம்ப புகழ வேண்டாம் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.... 😁😁😁😁

கட்ட வருது அனாமிகா 47 ஓடிடு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Yar yarkita mataporangalo.
பாசத்திற்குரிய நட்பே,
மாட்ட வில்லை என்றாலும் நாம மாட்ட வெச்சுடுவோம் 😁😁😁😁
( வில்லன் வில்லி மாடுலேஷன் )
ஒன்னு செய்வோமா மாவு ஆட்ட வெச்சுடுவோம் 😁😁😁😁
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top