• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா எனது பார்வையில் ...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
பாரதம் அவ்வளவா தெரியாமலேயே...
பரதம் ஆடுகிறது உங்களிடம்...
முழுவதும் கைவசம் வந்தால் ரதமேறி விடுமோ 😍😍😍😍
இத எனக்கு பிடுச்ச ஒரு ஆத்தர்கிட்டயிருந்து கிடைச்ச வாழ்த்தா எடுத்துக்குறேன்.உண்மைய சொன்னா உங்க தமிழும் கவிதையும் என்னை வியக்க வெக்குது.கதைல நீங்க சொன்ன உவமைகள் விளக்க வார்த்தைகளே இல்ல
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
தலைப்பு:முள்ளோடு முத்தாட வா
தன்னை தீண்டுபவரையும் மண்டியிட்டு கைத்தாங்க செய்யும் முள் போல வசித்த என்னையும் மண்டியிட செய்த தங்கள் எழுத்தாளுமைக்கு என்னது வாழ்த்துக்கள் 💐💐💐. நான் மேற்கோள் காட்டிய தங்களின் வரிகளே கதையின் தலைப்பை விளக்கும் மணிமகுடம்.

கதாநாயகன்:
செல்வங்கள் பலகொண்ட தனஞ்சயன் அவன்.எவராலும் வீழ்த்த முடியாத விஜயன் அவன்.வெற்றிவாகை கொண்ட கிரீடி அவன்.களத்தில் பிறர் வெறுக்கும் செயல்புரியா பீபத்சு அவன்.பல ஆற்றல்கொண்ட சவ்யசச்சின் அவன்.தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளை போல உலோக குதிரை கொண்ட சுவேதவாகனன் அவன்.எவருக்கும் அடங்கா குணம் கொண்டு எதிரியை வீழ்த்தும் ஜிஷ்ணு அவன்.கோபியர்சூழ் கிருஷ்ணன் அவன்.அவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பரிசுத்தத்தை உணர்த்தும் அர்ஜுன் என்னும் நாமம் கொண்டவன் இக்கதையின் நாயகன் .

கதாநாயகி:
தழல் வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ என்ற கூற்றுக்கிணங்க வீரச்சுட்டராய் விளங்கிய வீர பாவை அவள். உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்று அச்சத்தை துச்சமாக கடந்த வீர மங்கை அவள்.பல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வே னென்று நினைத்தாயோ? என்ற எதிரியை எதிர்க்கும் வீர நங்கை அவள். வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி என்று முழங்கிய பாரதியின் நாமம் கொண்டு அக்கூற்றுக்கிணங்க வாழ்ந்தவள் அவள் இக்கதையின் நாயகி.

வில்லன்:
பாதம் தீண்டும் அலைகள் உனக்கு குழிபறிக்கின்றன என்ற கூற்றுக்கு சான்றானவன்.புராணங்களில் பெருந்துணிச்சல் மிக்கவன் என போற்றப்பட்ட சர்வதமனா சக்ரவர்த்தியின் மறுபெயரான பரத் என்னும் நாமம் கொண்டவன்.நம் நாயகன் அர்ஜுனின் மித்ரன் அவன்.

முத்தாரத்திலிருந்து சில முத்துக்கள்:

யாது நேரினும் எவ்வகை யானும்
யாது போயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணி
என்ற வரிக்கேற்ப அர்ஜுனை வஞ்சத்தில் அழிக்க துடிக்கும் பரத்தின் சதியில் இருந்து
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
என்று அர்ஜுன் எவ்வாறு மீள்வான் ???
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!
என காதல் கொண்டு
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
என்று தான் கண்ணம்மாவை சரணடைவானா ??? அவள் அவனுக்கு துணை நிற்பாளா ???

இதுபோல பல தேடல்களுக்கு விடையாய் முள்ளோடு முத்தாட வா...

கவித்துவமான கதையை தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி 💐💐💐
அனைவரும் வாசித்து மகிழுங்கள் 😊😊😊

[விளக்கம் :
பெயர்-கதையின் நாயகன் அர்ஜுனின் குணங்களை மஹாபாரத அர்ஜுனனின் வேறு பெயர்கள் கொண்டும்;கதையின் நாயகி பாரதியின் குணங்களை மகாகவி பாரதியின் வரிகள் கொண்டும்; பரத்தின் பெயரை பரத பேரரசர் பெயரை கொண்டும் விலகி உள்ளேன்.
கதை-பரத்தின் வஞ்சத்தை பாஞ்சாலி சபதத்தில் கௌரவர்களின் வஞ்சத்தை குறிப்பிட்டுள்ள வரிகளுடன் ஒப்பிட்டுள்ளேன். (காரணம்:பாஞ்சாலி சபதத்தை நான் மஹாபாரத அர்ஜுனன் பற்றி மகாகவி பாரதியின் எழுத்தாக கருதியதால் இங்கு அவ்வரிகளை பயன்படுத்தி உள்ளேன்.) ]

இப்படிக்கு,
நுவலி
Lovely.. review 🤩🤩
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
@Anamika 47 எனக்கு ஒரு doubt அர்ஜுன் ஓட character அர்ஜுனன் பெயர் ஓட compare பண்ணா similar ஆ இருக்கு நீங்க intentionally அப்படி portray பண்ணிங்களா இல்ல coincidence ஆ
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
@Anamika 47 எனக்கு ஒரு doubt அர்ஜுன் ஓட character அர்ஜுனன் பெயர் ஓட compare பண்ணா similar ஆ இருக்கு நீங்க intentionally அப்படி portray பண்ணிங்களா இல்ல coincidence ஆ
இப்படி ஒரு கோணமா??? 🤔
நிச்சயமாக coincidence தான் 😍😍😍😍😍
ஆராய்ச்சி புலியே..... 👏👏👏👏👏👏👏
தமிழால் எமை வென்ற நட்பே 👍
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
இப்படி ஒரு கோணமா??? 🤔
நிச்சயமாக coincidence தான் 😍😍😍😍😍
ஆராய்ச்சி புலியே..... 👏👏👏👏👏👏👏
தமிழால் எமை வென்ற நட்பே 👍
எனக்கு அர்ஜுன் character பத்தி எழுதும்போது strike ஆச்சு அதான் doubt clear பண்ணிகளானு கேட்டேன் but இந்த coincidence நல்ல இருக்கு.உங்க first epi படுச்சதும் review எழுதணுன்னு முடிவு பண்ண அப்ரோ story full ஆ positive vibe ஓட படுச்சேன்.Review ல நீங்க use பண்ண பாரதியார் கவிதை துணையோட வந்தாச்சு என்னை எழுத வெச்சது உங்க writing தான்.நீங்க என்னை over ஆ புகழறிங்க எனக்கு shy ஆ இருக்கு 🤣🤣🤣.story ல வந்த பல moment mention பன்ணுன்னு நெனெச்சேன் but spoiler மாரி இருக்குனு சொல்லல.
 




Last edited:

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
எனக்கு அர்ஜுன் character பத்தி எழுதும்போது strike ஆச்சு அதான் doubt clear பண்ணிகளானு கேட்டேன் but இந்த coincidence நல்ல இருக்கு.உங்க first epi படுச்சதும் review எழுதணுன்னு முடிவு பண்ண அப்ரோ story full ஆ positive vibe ஓட படுச்சேன்.Review ல நீங்க use பண்ண பாரதியார் கவிதை துணையோட வந்தாச்சு என்னை எழுத வெச்சது உங்க writing தான்.நீங்க என்னை over ஆ புகழறிங்க எனக்கு shy ஆ இருக்கு 🤣🤣🤣.story ல வந்த பல moment mention பன்ணுன்னு நெனெச்சேன் but spoiler மாரி இருக்குனு சொல்லல.
ஊனோடு உயிர் உறைந்து இருப்பதை அந்த உயிரே அறியாதாம்...
என்னுடனே வந்த உங்களை நானும் அறியாமல் இருந்திருக்கிறேனே... 😍😍😍😍😍😍
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India

Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
வசித்து கடந்தும் உன் நியாபகம்
மீண்டும் வாசிக்க யோசிக்கவா - இல்லை
வசித்து மனதில் பதிந்ததை
மீட்டு வசித்து பார்க்கவா - தெரியவில்லை
இப்படிக்கு,
முள்ளோடு முத்தாட வா வாசகி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top