• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மை டார்லிங் ❤️❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மை டார்லிங் ❤❤
————————

நிறையபேருக்கு காபி, டீ மேல தீராத காதல் போல எனக்கு கேழ்வரகு கூழ் மேல தனியாத போதை என்று சொல்லலாம். ஆடி மாசம் எப்ப வரும் என்று காத்துக்கிட்டு இருப்பேன். அம்மனுக்கு தீ மிதிக்க இல்ல எல்லா வாரமும் கூழ் குடிக்கலாமே ??. எல்லோரும் எனக்கு takeaway வேற கொடுப்பாங்க( ஊருக்கே தெரியும் என் பைத்தியம் ??) சோ அடுத்த இரண்டு நாளைக்கு காலை ஆகாரம் ரெடி??.

இன்றைக்கும் எப்ப ஆடி பிறக்குது என்று கலெண்டரை புரட்டி பார்காமல் இருக்க முடியாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்கிற பழமொழி மாதிரி தான் எனக்கும் இந்த கூழ்க்கும் இருக்கிற உறவு.

என்னோட பெரியம்மா கூட என்னைய கிண்டல் பண்ணுவாங்க உன்னைய பட்டிகாட்டுல தான் கட்டி கொடுக்க போறேன் (ஏன்யென்றால் நாங்கயெல்லாம் சிட்டி??) அப்ப நீ தினமும் கூழ் குடிச்சுகிட்டே இருக்கலாம் என்று. அவங்களுக்கு அப்ப தெரியாதில்ல நான் லண்டன் போனாலும் விட மாட்டேன் என்று.

என்னோட இரண்டாவது மகள் பிரசவத்துக்கு ஒரு துளி கூட பால் குடிக்கலை தினமும் கேழ்வரகு கூழ்ழும் மனதக்காளி வத்தக்குழம்பும் தான் சாப்பிட்டேன். நம்ம மாட்டீங்க 100 ml பாலில் 128g தான் கல்சியம் ஆனால் நம்ம டார்லிங் கேழ்வரகில் 100 gms ல் 344g கல்சியம் எப்பிடி சூப்பர் ல. கல்சியம் மட்டுமா இருக்கு இரும்பு சத்து, புரத சத்து,நார்சத்து, மக்னீசியம் etc etc.,

நான் பால் குடிக்க மாட்டேன் ஆனால் என்னோட கல்சியம் இதுவரை தட்டுபாடே இல்லாமல் இருக்கு என்றால் அதற்கு கேழ்வரகுக்கு தான் நன்றி. (touch wood)

இன்றைக்கு ஆசையை அடக்க முடியலை அதே சமயம் நினைச்ச உடனேவும் செய்யவும் முடியாதே?? அதனால கூழ்க்கு பங்காளியான களியை செய்யலாம் என்று செய்துட்டேன்.

பச்சை பச்சேல் என்று பார்க்க மட்டும் இல்லங்க சாப்பிட்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சி தான் ??அதனால பசலக்கீரையை பருப்பு போட்டு கடைஞ்சு கடைசியாக வடகம் தளித்தால் அட அட !! வாசமே நம்மை கொல்லும்...

என்னோட பிரண்டு அவ வீட்டு தோட்டத்தில் இருந்து முட்டைகோஸ் இலைகளை கொடுத்த அதை வைத்து பொரியல். காரமாக ஏதாவது இருந்தா கொஞ்சம் கிக்காக இருக்குமே என்று ஸ்வீட் பொடேடோ (நம்ம ஊரு சக்கரைவள்ளி கிழங்கு போல இருக்கும்) வருவல்...

வருவல் செய்ய நிறைய எண்ணெய் வேண்டும், அப்படி இல்லையென்றால் ஒட்டாத சட்டி (non stick) என்று நினைப்போம். இரும்பு வானலில் சமைத்தால் நிறைய எண்ணெய்யும் தேவையில்லை non stick ஐ விட சூப்பராக வரும். தீயை மிதமாக வைத்து சமைத்தால்.

குட்டி தகவல்:

நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்குற புருஷன் மாதிரி இரும்பு வானல் - easy maintenance

பயந்து,யோசித்து, பக்குவமாக பேச வேண்டிய மாமியார் மாதிரி non stick - careful maintenance. கீரல் விழுந்தது இரண்டுமே ஆபத்து ??.

Now the choice is yours which one you wanted...
 




Attachments

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
Lock down ai ippadiyum use pannalaamaa darly;););)அசத்திக்கிட்டே இருக்க....நீ அசத்துடா டார்லி....
ஆமா அண்ணா சாப்பிடுறாங்களா....இல்ல கொரொனாவை கொலைவெறில பார்க்குறாங்களா:D:D

Useful தகவல்கள் darly.??????
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
எங்க வீட்டுல morning mostly ராகி கூழ் தான் ஆனால் அதை குடிக்குறது குள்ள நான் படுற பாடு ??
Very healthy nu teriyum but kudika daan mudiyadhu
பட் அது குடிச்ச தான் சோறு னு வீட்டுல strict rules!???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top