• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மௌனம் என்றொரு மொழி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
11

எங்கெங்கோ தொலைந்து போன

எல்லா தேடல்களை விடவும்

உன்னைத் தேடுவதில் மட்டுமே

மும்முரமாய் எனது விழிகளும் எதிர்பார்ப்புகளும் !

உன் நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு

காதல் சிறையில் இருப்பதால்

அனைத்தையும் பழகிக்கொள்கிறேன்

காலையிலேயே வந்து நின்றிருந்த பாஸ்கரையும் சசியையும் பார்த்த மல்லிகா, அவர்களை வரவேற்க கூடத் தோன்றாமல் குழம்பி நிற்க,

"அத்தை... காபி போட்டுட்டேன்... சூடா இருக்கு... ஆறிப் போயிடும்... சீக்கிரம் வாங்க..." என்ற ஷிவானியின் குரல் வரவும், பரிதாபமாக உள்ளே எட்டிப் பார்த்தவர்களை கண்ட மல்லிகாவிற்கு எதுவோ புரிவது போல இருக்க, அப்பொழுது தான் அவர்கள் வெளியில் நிற்பதும் உறைக்க,

"என்ன சம்பந்தி? இங்கயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க..." என்று மல்லிகா அழைக்கவும், உள்ளே சென்றவர்களைப் பார்த்த ஷிவானி,

"ஹய்... அம்மா... அப்பா..." என்று கூவ, சசி அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.

“என்ன இது சசியோட லுக்கு ரொம்ப பாசமா இருக்கே... என்ன விஷயமா இருக்கும்? ஒருவேளை நான் சமயல் செய்து கொடுமை படுத்தறேன்னு அத்தை போன் செய்து சொல்லி இருப்பாங்களோ? ச்சே... ச்சே... அத்தை ரொம்ப நல்லவங்க... இந்த இனியன் சொல்லி இருப்பாரோ? இருக்கும் இருக்கும்... அதனால தான் இப்படி காலையிலயே வந்து நிக்கறாங்க... எப்படி சிவா சமாளிக்க போற? வேணா அவங்களுக்கு உப்புமா கிண்டி கொடுத்திரு... வாயே திறக்க முடியாம உன்னைத் திட்ட மாட்டாங்க...” என்று அவள் தனது மனதிலேயே வாதப் பிரதிவாதங்கள் செய்துக் கொண்டிருக்க,

"உன் செல் எங்கம்மா?" என்று பாஸ்கர் பரிதாபமாகக் கேட்க, அவரை ஒரு மாதிரிப் பார்த்தவள்,

"ஏன்? இங்க தானே இருக்கு..." என்றபடி அதைத் தேடத் தொடங்க, சசி அவளை மேலும் முறைத்துக் கொண்டிருந்தார்.

“ஹையோ... அம்மா ஓவரா முறைக்கிறாங்க... நாம என்ன தப்பு செய்தோம்?” என்று மூளையைத் தட்டிக் கொண்டே அவள் தனது மொபைலைத் தேட, அவளைப் பார்த்து கடுப்பான சசி,

"தேடுடி தேடு... அது ஆஃப் ஆகிக் கிடக்குது" என்று சொல்லவும்,

“ஹையோ... ஆஃப் ஆகிப் போச்சா? என் செல்லம் சோறு தண்ணி இல்லாம என்ன கஷ்டப்பட்டதோ?” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டே, வேக வேகமாகத் தேட, இறுதியாக ஒரு வழியாக தேடிக் கண்டுபிடித்து, எடுத்துக் கொண்டு வந்தவள், அதை முதலில் சார்ஜில் போட்டுவிட்டு,

“அம்மா பத்ரகாளி போல இருக்காங்க... சிவா... அப்படியே பாவமா லுக்கை மாத்து...” என்று தனக்குத் தானே கட்டளையிட்டுக் கொண்டவள், மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் சசியின் அருகே அமர்ந்தாள்.

"ஒண்ணும் என் பக்கம் வர வேண்டாம்... போய் உன் வேலையைப் பாரு..." நொடித்துக் கொண்டவரைப் பார்த்த மல்லிகாவிற்கு சிரிப்பு பொங்க,

“அம்மா...” ஷிவானி பாவமாக அழைக்க, அவளைப் பார்த்த மல்லிகா,

"சிவா... நீ காபி போட்டு எடுத்துட்டு வா..." என்று சொல்லவும், தயக்கமாக தனது பெற்றவர்களைப் பார்த்துக் கொண்டே ஷிவானி அடுப்பங்கரைக்குச் செல்ல, மல்லிகா சசியின் அருகே சென்று அமர்ந்தார்.

"சசி நீங்க அவ மேல கோபமா இருக்கீங்கன்னு புரியுது... அவளைக் கோவிச்சிக்காதீங்க... என்கூட வீட்டை சுத்தம் பண்றேன்னு எனக்கு உதவி பண்ணிட்டு இருந்தா? அதுலப் போனை கவனிக்காம இருந்திருப்பா... அவ உங்களுக்கு போன் செய்யாம இருப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கள... இல்லன்னா நானே சொல்லி இருப்பேன்..." என்று மல்லிகா சமாதானம் சொல்லவும்,

"கோபம் எல்லாம் இல்லைங்க... மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... எங்களுக்கு அவ ஒருத்தி தானே இருக்கா... அவளை விட்டுட்டு இருக்கறதே எங்களுக்கு பெரிய கஷ்டம் தான்... இதுல இந்த பொண்ணு ரெண்டு நாளா போன் கூட செய்யாம, நாங்க போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தா நாங்க என்ன ஆகறது? மாப்பிள்ளைக்கு கூப்பிட்டோம்... அவரு சொல்றேன்னு சொன்னார்... ஆனா இவ கிட்ட இருந்து போனைக் காணும்... உங்க நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்ன்னே வந்தது...

உங்களுக்கும் பொண்ணு இருக்கு இல்ல... என்னோட வருத்தம் என்னன்னு உங்களுக்கும் புரியுது தானே..." கலக்கமாகச் சொன்னவரைப் பார்த்த மல்லிகா, புரிந்தது என்பது போல சசியின் கையை அழுத்தினார்.

"அவ என் பொண்ணு மாதிரி சசி... உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்... புதுசா இந்த வீட்ல செட் ஆகணும், நல்ல பேர் எடுக்கணும்கற பரபரப்பு... தன் புருஷனுக்கு வாய்க்கு ருசியா செய்து கொடுக்கனுங்கற ஒரு ஆசை... அதெல்லாம் தான் இப்போ அவ மனசுல ஓடுது... அவங்க ரூமையும் வீட்டையும் எப்படி மாத்தி வச்சிருக்கா பாருங்க..." என்று ஷிவானிக்கு பரிந்து பேசவும், அப்பொழுது தான் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டிய சசி, தன் மகளை நினைத்து வியந்துக் கொண்டிருக்க, காபிக் கப்புகளுடன் வந்த ஷிவானி சசியை பெருமையாகப் பார்த்தாள்.

"நான் போட்ட காபியை குடிச்சுப் பாருங்க... அப்படியே கொஞ்சம் வெயிட் பண்ணினா டிபனும் பண்றேன் அதையும் சாப்பிட்டு பாருங்க..." பெருமை மிளிர சொன்ன மகளைப் பார்த்த சசியின் மனதில் வருத்தத்தை மீறிய நிம்மதி வந்தது.

"இல்லடி நான் அங்க மாவு அரைச்சு வச்சிருக்கேன்..." சசி தயங்க,

"உங்க பொண்ணோட கைப் பக்குவத்தை சாப்பிட்டுத் தான் பாருங்களேன்... இன்னைக்கு இங்க காலையில இட்லி சாம்பார் தான்... அதுக்குத் தான் அவ ரெடி பண்ணிட்டு இருந்தா..." மல்லிகாவின் குரலில் நிறைவு தெரிய, தன் மகள் புகுந்த வீட்டில் நல்ல பெயரோடு இடம் பிடித்ததை எண்ணி சசியும் பாஸ்கரும் மகிழ்ந்தனர்.

"சரி செய்... என்ன தான் செய்யறன்னு பார்ப்போம்... ஏதோ எங்க வயிறு நல்லா இருந்தா சரி..." என்று சசி கிண்டலாக சம்மதம் சொல்லவும், பாஸ்கர் அமைதியாக ஷிவானியின் மாற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

"என்னப்பா காபி நல்லா இல்லையா?" ஷிவானி கேட்டு முடிப்பதற்குள்,

"ரொம்ப நல்லா இருக்கு ஷிவா... நீயாடா இப்படி வேலை செய்யற?" வியந்து அவர் கேட்கவும், ஷிவானியைப் பார்த்து நக்கலாக சிரித்த சசி,

“அது தான் என்னாலேயே நம்ப முடியல... என்னவோ போங்க... எல்லாம் கனவு மாதிரி இருக்கு...” என்றபடியே, தன் கையில் இருந்த காபியை உறிஞ்ச, ஷிவானி அவரை முறைத்துக் கொண்டிருந்தாள்.

பேச்சுக்களுக்கு இடையே ஷிவானி காலை உணவை தயாரிக்க, "சிவா..." அறையில் இருந்தே புகழின் குரல் கேட்கவும்,

"அத்தை... இதை ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்க... நான் வரேன்... அவர் கூப்பிடற மாதிரி இருக்கு..." என்று ஆவலும் நாணமும் போட்டிப் போட சென்ற மகளைப் பார்த்த பெற்றவர்களின் மனம் நிறைந்தது.

"என்னங்க... அப்பா அம்மா வந்திருக்காங்க" என்று சொன்னவளை இழுத்து அணைத்தவன்,

"ஹ்ம்ம்... பொண்ணை பார்க்காம இருக்க முடியலையாக்கும்? அதுவும் என்ன இவ்வளவு காலையிலேயே அவங்க செல்ல பொண்ணைப் பார்க்க வந்திருக்காங்க? பாப்பா ஒழுங்கா இருக்காளான்னு பார்க்க வந்தாங்களா?" என்று கிண்டலாகக் கேட்டுக் கொண்டே, அவளது கழுத்து வளைவில் இதழ் பதிக்க,

"என்ன இன்னைக்கு புதுசா?" என்று சிணுங்கியவளின் இதழ்களை நெருங்கியவன்,

"சும்மா...:" என்று ராகம் பாடிக் கொண்டே, அவளை நெருங்கினான்.

அவனது இதழ் தீண்டல்களையும், எதிர்பாராத விதமாக அவனது இந்த அணைப்பையும் ரசித்தவள், "போதும்ங்க... வெளிய வாங்க... இன்னைக்கு தான் அப்படியே உங்களுக்கு கொஞ்ச எல்லாம் தோணும்..." என்று சிணுங்கிக் கொண்டே, விலகிச் சென்றவளுடன் சிரிப்புடன் வெளியில் சென்றவன்,

"வாங்க மாமா... வாங்க அத்தை..." என்று வரவேற்க, சசியோ ஷிவானியின் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

“என்ன உனக்கு சிரிப்பு?” என்று ஷிவானி அவரிடம் கடுகடுக்க,

“இல்ல... சும்மா...” என்றபடி புகழைப் பார்க்க, தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி, சசியைப் பார்த்து முறைத்தாள்.

“இப்போ தான் எழுந்து வரீங்களா?” பாஸ்கர் சம்பந்தமில்லாமல் கேட்க,

“ஆமா... மாமா...” என்றவனிடம்,

“சிவா நல்லா காபி போடறா...” என்று பாஸ்கர் ஷிவானியை ஸ்லாகித்து புகழைப் பார்க்க, ஷிவானி அவனுக்கான காபியை கொடுக்கவும், புகழ் பாஸ்கரைப் பார்த்து புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.

அவனது தொழில் சம்பந்தமாக பாஸ்கர் பேசத் துவங்கவும், அவன் அதற்கு பதில்களை ஒற்றை வரியில் சொல்லிக் கொண்டிருக்க, காலை உணவை ஷிவானி அவசரமாக தயாரிக்க, “சிவா... சாயந்திரம் ரெடியா இரு... நாம கோவிலுக்கு போயிட்டு வரலாம்...” என்று புகழ் சொல்லவும், ஷிவானி மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.

இருந்தாலும் அவனது வேலைப் பளுவையும், அவனது புது தொழிலின் ஆரம்ப கட்ட வேலைகளில் அவன் மும்மரமாக இருப்பதை ஒருமுறை அவன் சொல்லக் கேட்டு அறிந்திருந்தவள்,

“உங்களுக்கு டைம் இல்லன்னா வேண்டாம் இனியன்... இப்போ கடை போடற வேலை எல்லாம் இருக்கே... நாம சனி ஞாயிறு அந்த மாதிரி போகலாம்...” என்று அவள் சொல்லவும், அவளது அருகே வந்தவன்,

“எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்ல சிவா... கொஞ்ச நேரம் விக்ரமை பார்த்துக்க சொல்லிட்டு வந்துடுவேன்... ஒரு ஆறரை போல ரெடியா இரு... நான் வந்த உடனே கிளம்பிடலாம்...” என்று புகழ் சொல்ல, ஷிவானி வேக வேகமாக மண்டையை உருட்டினாள்.

“சரிங்க மாமா... நான் கடைக்கு கிளம்பறேன்... அப்போ தான் வேலை எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வர முடியும்...” என்று காலை உணவு முடிந்த பிறகு புகழ் விடைப்பெற்று கிளம்ப, அன்றைய நாள் புகழுடன் வெளியில் செல்லும் பரபரப்பு ஷிவானியை அப்பொழுதிருந்தே தொற்றிக்கொண்டது.

புகழ் கிளம்பிச் செல்லவும், முகம் மலர்ந்து விகாசிக்க, தன் அருகே வந்த ஷிவானியைக் கண்ட சசிக்கு, இருந்த கோபம் எல்லாம் மறைந்து போக, “சிவா... நீ நல்ல பேர் எடுக்கறது எல்லாம் சரி தாண்டா... ஆனா... தினமும் அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசிடு... ஒரு ரெண்டு நிமிஷம்... உன் குரல் கேட்டாலே போதுமே...” என்ன முயன்றும், சசியின் குரலில் ஆதங்கம் வெளிப்பட, கண்ணீரும் மெல்ல எட்டிப் பார்த்தது.

“சாரிம்மா... நிஜமாவே ரொம்ப சாரி... இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்... நீ தானே நல்ல பிள்ளையா இருக்கணும்... நல்ல பேர் எடுக்கனும்னு சொன்ன... அதுக்குத் தான்ம்மா... ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் நல்லதா கொடுக்கணும் இல்ல...” மன்னிப்பை கேட்டவள், அவரது தோளில் சாய்ந்துக் கொண்டு செல்லம் கொஞ்ச, சசி அவளது தலையைத் தடவிக் கொடுத்தார்.

“நீ எப்பவுமே நல்ல சுட்டி பொண்ணு தான் ஷிவா...” என்று மல்லிகாவும் சொல்லவும், சசியைப் பார்த்து இல்லாத காலரை உயர்த்தியவள், அவரிடமும் செல்லம் கொஞ்சத் துவங்க, அவர்களுக்கு தனிமை அளித்து மல்லிகா வெளியில் கிளம்ப, ஷிவானி பதைபதைப்புடன்,

“எங்க அத்தை?” என்று எழ,

“கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வரலாம்ன்னு இருக்கேன்ம்மா... நீ அப்பா அம்மா கூட பேசிட்டு இரு...” என்று அவர் நகர்ந்து சென்று விட, அவரது நாகரீகம், மூவரையும் அசைத்துப் பார்த்தது.

அவர் சென்றவுடன், தான் மல்லிகாவிடம் கற்றுக் கொண்டவற்றை எல்லாம் ஷிவானி வேகமாக சொல்லி முடிக்க, “ஏண்டி... இதைத் தானே நானும் செய்ன்னு சொல்லுவேன்... என்னைக்காவது செய்து இருக்கியாடி நீ?” என்று சசி சண்டைக்கு வரவும்,

“அது அம்மா வீடு... அங்க நான் எப்படி வேணா இருக்கலாம்... ஆனா இங்க அப்படி இருக்கக் கூடாது இல்லம்மா... அப்பறம் உன்னைத் தானே குத்தம் சொல்லுவாங்க...” என்று சொன்ன மகளின் நெற்றியில் இதழ் ஒற்றியவர், அந்த கடந்த ஐந்து நாட்களின் கதையை அளக்கத் துவங்கினர்.

சிறிது நேரத்தில் அவர்களும் கிளம்ப, “கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்களேன் சசி... ஷிவானி கூட இருந்தா மாதிரி இருக்கும்...” என்று மல்லிகா சொல்லவும்,

“இல்லைங்க அண்ணி... காலையில போட்டது எல்லாம் போட்டபடி வந்திருக்கேன்... போய் எல்லாம் சரி பண்ணிட்டு தான் சமையல் வேலையைப் பார்க்கணும்... இவருக்கும் வேலைக்கு போக நேரமாகிடுச்சு...” என்று சசி கிளம்ப எத்தனிக்க,

“நாளைக்கு வீட்டுக்கு ஷிவானியை அனுப்பறீங்களா? கொஞ்சம் நேரம் அங்க வந்து இருந்துட்டு திரும்ப வந்துடட்டும்... அங்க அவ இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி இருக்கு...” பாஸ்கர் மல்லிகாவிடம் அனுமதி கேட்கவும், மல்லிகாவிற்கு ஒரு மாதிரி ஆனது.

“என்னங்க இப்படி அனுமதி கேட்கறீங்க? நாளைக்கு அவளை வான்னு சொல்லிட்டு போங்க... நான் அனுப்பி வைக்கிறேன்... இப்படி எல்லாம் கேட்காதீங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்று மல்லிகா சொல்லவும்,

“தேங்க்ஸ்ங்க...” என்ற பாஸ்கர், விடைப்பெற்றுக் கிளம்ப, மல்லிகா ஷிவானியை நோக்கித் திரும்பினார்.

“இங்க பாரு சிவா... எக்காரணம் கொண்டும் பெத்தவங்களை கலங்க வைக்கக் கூடாது... தினமும் பேசிடணும்... நீ அவங்களுக்கு ஒரே பொண்ணு ஷிவா... நீ இப்படி பேசமா இருந்தா அவங்க மனசு என்ன பாடு பட்டு இருக்கும்... தினமும் எவ்வவு வேலை இருந்தாலும் அவங்க கிட்ட பேச மறக்காதே... அதே போல...

உங்க ரெண்டு பேருக்கும் சண்டைன்னா கூட அது அந்த நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும்... அனாவசியமா பெத்தவங்க வரைப் போய் அவங்களை கவலைப் படுத்தக் கூடாது... என்கிட்டையும் தான் சொல்றேன்... நீங்களே எல்லாத்தையும் சரி பண்ணிக்கணும்...” என்று சிறிது கண்டிப்புடன் சொல்ல, ஷிவானி சரி என்று தலையசைத்து கேட்டுக் கொண்டு, அமைதியாக அமர்ந்தாள்.

சசியின் கண்ணீர் அவள் மனதை கனக்கச் செய்ய, மீண்டும் அவருக்கு போன் செய்தவள், சிறிது நேரம் பேசி, வம்பு செய்துவிட்டே போனை வைக்க, அவளது மனது நிம்மதியாக ஆனது.

“அத்தை... சாயந்திரம் கோவிலுக்கு புடவை கட்டவா... இல்ல சுடிதார்ல போகவா?” மதிய உணவை வாயில் திணித்துக் கொண்டே ஷிவானி கேட்க,

“ஹ்ம்ம் புடவையே கட்டிட்டு வா...” என்று புகழின் குரல் அருகே கேட்கவும், ஷிவானி துள்ளிக் குத்திக்காத குறையாக,

“இனியன்... நீங்க வந்தாச்சா... சீக்கிரம் வாங்க சாப்பிடுங்க...” என்று sசந்தோஷமாக அவள் எழப் போக, அவளை பிடித்து அமர வைத்தவன்,

“நீ சாப்பிடு நானும் வரேன்...” என்று அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து தனக்கும் உணவை பரிமாறிக் கொண்டு sஉண்ணத் துவங்கியவன், வேகமாக பசிக்கு எதையோ உண்டு முடிக்க,

“இதுக்கு நீங்க சாப்பிடாமலே இருந்திருக்கலாம்... என்ன அவசரமோ?” என்று ஷிவானி முணுமுணுக்க,

“என்ன செய்யறதும்மா... இப்போ ஒரு கடை பார்க்க போறோம்... நல்லா இருந்தா பேசி முடிக்கணும்... அந்த கடை ஓனர் மதியத்துக்கு மேல தான் வருவாராம்...” என்று புகழ் சொல்லவும்,

“ஹ்ம்ம்...” என்று கேட்டுக் கொண்டவள்,

“அப்போ சரி... சீக்கிரம் போய் பார்த்து பேசிட்டு வாங்க... நான் சாயந்திரம் ரெடியா இருக்கேன்...” என்று ஷிவானி சந்தோஷமாகச் சொல்லவும், ஒரு புன்னகையுடன் விடைப்பெற்றவன், பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சிறிது நேரம் டிவி பார்த்தவள், அதற்கு மேல் புகழுடன் வெளியில் செல்லப் போகும் மகழ்ச்சி தாளாமல், ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மீது வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அதைப் பார்த்த மல்லிகா...

“எல்லாமே நல்லா இருக்கு ஷிவானி உனக்கு...” என்று சொல்லவும்,

“இதுல எது பெஸ்ட்ன்னு சொல்லுங்க அத்தை...” என்று கேட்க, மல்லிகா தேர்வு செய்து கொடுத்த புடவையை எடுத்து வைத்தவள்,

“நிஜமாவே சூப்பர் செலெக்ஷன் தான் அத்தை... அவருக்கும் அதே கலர்ல சட்டை இருக்கான்னு பார்க்கறேன்...” என்று அவனது அலமாரியில் இருந்து தேடிக் கண்டுபிடித்து ஒரு சட்டையை எடுத்து வைக்க, மல்லிகா அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மாலை ஐந்து மணிக்கே தயாராகத் தொடங்கியவளைப் பார்த்த மல்லிகா, அவளது தலைக்கு வைத்துக் கொள்ள மல்லிகைப் பூவை வாங்கி வைத்து விட, “இது தான் எங்க அத்தை...” என்று ஸ்லாகித்து, அந்த புடவைக்கு தோதான செட் நகைகளை அணிந்து, சந்தோஷமாக வெளியில் வந்தவளைப் பார்த்த மல்லிகா, கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.

“அப்படியே ஹோட்டல் போய் சாப்பிட்டு வாங்க... அவன் வரட்டும் சொல்றேன்...” என்று மல்லிகா சொல்லவும், ஷிவானியின் மகழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

“சூப்பர் ஐடியா அத்தை... ஆனா... நீங்க? நீங்களும் எங்க கூட வாங்க...” தங்கள் வீட்டு நினைவில் அவள் அழைக்க,

“சும்மா நான் எதுக்கும்மா? நீங்க போயிட்டு வாங்க... நான் ஒருத்தி வரேங்கறதுக்காக காரை எடுக்கணும்...” நாசுக்காக அவர் விலக,

“அவர் வரட்டும்... அவரையே கூப்பிடச் சொல்றேன்...” என்று நினைத்துக் கொண்டவள், புகழின் வரவுக்காக காத்திருந்தாள்.

கடிகாரம் தனது வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருக்க, மணி ஆறு மணியைக் கடந்து, ஏழைத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில்,

“அவன் கிளம்பிட்டானான்னு கொஞ்சம் போன் செய்து கேளேன்... எப்போ போயிட்டு எப்போ வர்ரது?” என்று மல்லிகா சொல்லவும், புகழுக்கு அழைத்த ஷிவானிக்கு, ஸ்விட்ச் ஆஃப் என்ற பதிலே வந்தது.

“ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது அத்தை... ஒருவேளை சார்ஜ் போயிருக்குமோ?” என்று அவள் யோசனையுடன் சொல்ல,

“இரு நான் என்னோட செல்லுல இருந்து விக்ரம்க்கு கூப்பிடறேன்...” என்று ஷிவானியிடம் சொன்ன மல்லிகா, விக்ரமிற்கு அழைக்க, அவனது செல்போனும் அதே பதிலைத் தந்தது.

புகழின் தோழர்கள் அனைவருக்கும் அழைத்தவருக்கு அதே பதிலே வர, ஷிவானியைப் பரிதாபமாகப் பார்க்க, ஷிவானியின் முகம் வாடத் துவங்கியது.

“இன்னைக்கு அந்த கடை ஓனர் கிட்ட பேசப் போறேன்னு சொன்னாங்க இல்ல அத்தை... அது பேசற போது டிஸ்டர்ப் ஆகக் கூடாதுன்னு ஆஃப் பண்ணி இருப்பாங்களா இருக்கும்...” என்று அவள் சமாதானம் சொல்லி,

“இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அத்தை...” என்று மீண்டும் அவனுக்காக காத்திருக்கத் துவங்கினாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
12

அது ஏனோ

உன்னைப் பற்றிய சிந்தனைகள்

எதுவாயினும்

ஏதோ ஒரு துளிர்ப்பு

உள்ளுக்குள்

காதலாகி நிற்கும் தருணம்

கோபத்தின் சிறு சாயத்தில்

வெளிறியும் போகிறது !!

ஷிவானி புகழுக்காக காத்திருக்க, நேரம் நகர்ந்துக் கொண்டிருந்ததே தவிர, புகழ் வந்த பாடு தான் இல்லாமல் இருந்தது. மணி எட்டை நெருங்க, ஷிவானியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் துவங்கியது.

ஷிவானிக்கே தெரியாமல், சமையல் அறைக்குச் சென்று வேலை செய்வதைப் போல மல்லிகாவும் பலமுறை புகழுக்கு அழைத்திருக்க, அவரும் தோல்வியையே தழுவி அமைதியாக ஹாலில் வந்து அமர, உற்சாகமாக கடிகாரம் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷிவானியின் கண்கள் ஏமாற்றத்தில் கலங்கவே செய்தது.

அதை மல்லிகாவிற்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டவள், டைனிங் டேபிளின் மேல் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகி, தன்னை சமன் படுத்திக்கொள்ள முனைந்துக் கொண்டிருக்க, பழைய காலத்து கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது.

அதை வெறித்தவள், மல்லிகாவின் முகத்தைப் பார்க்க, அவரது கண்களும் கலங்கி இருப்பதைப் பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன், “அத்தை... மணி ஒன்பதாகுது சாப்பிட வாங்க... நாம சாப்பிட்டுட்டு தூங்க போகலாம்...” என்று அவள் சொல்லவும்,

அவள் அருகில் வேகமாக வந்தவர், “அவன் வரட்டும் சிவா... என்ன ஏதுன்னு கேட்டுட்டு சாப்பிடலாம்...” என்று பிடிவாதமாக அமர்ந்திருக்க,

“என்ன அத்தை இப்படி சின்னப் பிள்ளையாட்டம் அடம் பிடிச்சிட்டு இருக்கீங்க? அவர் தான் புது பிசினஸ் விஷயமா அந்த இடத்தோட ஓனரை பார்க்கப் போறதா சொல்லிட்டுத் தான போனார்... அங்க லேட் ஆகி இருக்கும் அத்தை...” என்று அவருக்கு சமாதானம் சொல்வதைப் போல தனக்கும் சொல்லிக் கொண்டவள், அவருக்கு தோசை சுடச் செல்ல, மல்லிகா அவள் அருகில் வந்து நின்றார்.

“அவன் வேலைன்னு போனா எல்லாத்தையும் மறந்துடுவான் சிவா... இவனை என்ன பண்றதுன்னே புரியல... எப்படி திருத்தறதுன்னே புரியல...” என்று கவலையாக அவர் சொல்ல,

“அவர் என்ன தப்பு அத்தை செய்யறார்... அவரைத் திருத்த? அவர் யாருக்காக அத்தை உழைக்கிறார்? நமக்காக தானே... அவருக்கு மட்டும் என்னை வெளிய கூட்டிட்டு போகணும்... என் கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா என்ன? பாவம் அத்தை அவரு...” என்று புகழுக்கு பரிந்து பேச, அவளது மனமோ,

“ஆசையா அப்படி ஒண்ணு இருக்கா என்ன?” என்று மனசாட்சி குரல் கொடுக்க, அதனை தட்டி அடக்கியவள், அவர்களுக்கு இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கினாள்.

“நீயும் சாப்பிடு ஷிவானி...” என்று அவளையும் அவர் உண்ண அழைக்க, எதுவும் மறுத்துச் சொல்லாமல், அவருடன் அமர்ந்து ஏதோ பெயருக்கு உண்டுவிட்டு சமையலறையை ஒதுக்கி வைத்து, புகழின் வரவுக்காக காத்திருந்தாள்.

மணி பத்தை கடக்கும் வேளையில், ஹாலில் லைட் எரிவதைப் பார்த்த புகழ், கதவைத் தட்ட, ஷிவானி எழுந்து சென்று கதவைத் திறக்கவும், அவளைப் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து அணிந்து கொண்ட புடவையில், அழகாக அலங்கரித்துக் கொண்டு, மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து அணிந்து கொண்ட புடவையில் நின்றிருந்திருந்தவளது கண்களில் மட்டும் எந்த மகிழ்ச்சியும் இன்றி இருப்பதைப் பார்த்தவன், தன்னையே நொந்து கொண்டான்.

“சாரி... சாரி சிவா... நாம கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னதையே மறந்துட்டேன்... அந்த கடை ஓனர் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டு அப்படியே அவரு எங்களை எல்லாம் ஹோட்டலுக்கு கட்டாயப்படுத்தி கூப்பிட்டு போயிட்டார்... எங்களால தட்டவும் முடியல... அது தான்...” என்று அவன் இழுக்க, ‘ஓ...’ என்று புகழுக்கு பதில் சொன்னவள்,

“சரி உள்ள வாங்க... மழை தூரிட்டு இருக்கு... அப்பறம் சளி பிடிச்சுக்கப் போகுது...” என்று சொல்லி, அங்கிருந்து நகர்ந்து வழி விட, அவளைப் பார்த்து கொண்டே உள்ளே வந்த புகழ், தனது பையை வைத்துவிட்டு, அவளது கன்னத்தை தொட வருவதற்குள்,

“உன்னை எல்லாம் எதுலடா சேர்க்கறது? அந்த சின்னப் பொண்ணை நம்ப வச்சு இப்படி காக்க வச்சு என்னடா செய்யப் போற? ஒண்ணு உன்னால முடியலைன்னா முடியாதுன்னு சொல்லி இருக்கணும்... எதுக்குடா அவளை நம்ப வச்சு கழுத்தை அறுக்கற?” என்று மல்லிகா சத்தமிடவும், புகழ் அமைதியாக தலைகுனிந்து நிற்க, ஷிவானிக்கு அவனைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது.

“அத்தை... அது தான் அவர் காரணம் சொல்றாரே... பாவம் அத்தை...” புகழின் முகத்தைப் பார்த்த ஷிவானி புகழுக்கு பரிந்து கொண்டு வரவும்,

“நீ இப்போ பேசாம இருக்கப் போறியா இல்லையா?” என்று அவளை அதட்டி விட்டு,

“சரி உனக்கு வேலை இருக்கு... எல்லாத்தையும் நான் ஒத்துக்கறேன்... உன்னோட போன் என்ன ஆச்சு? அதுல அவளுக்கு ஒரு தகவல் சொல்லி இருக்கலாம் இல்ல... இவளோ நேரம் அந்த பொண்ணும் உனக்காக காத்திருந்து இருக்க மாட்ட இல்ல... உனக்கு எப்பவுமே வேலையைத் தவிர எதுவுமே தோணவே தோணாதா?” என்று அவர் மேலும் கடிய,

“என்ன செய்யறது அப்படி இருந்தே பழக்கம் ஆகிடுச்சு...” என்று ஒரு மாதிரிக் குரலில், ஷிவானியின் வருத்தம் நிறைந்த முகம் ஒரு புறமும், தன் மனைவியின் முன் தனது தாய் திட்டிய வேதனை மறுபுறம் தாக்க, புகழ் அப்படிச் சொல்லவும், மல்லிகாவின் வாய் அடைத்துக் கொள்ள, கண்கள் தனது பணியைச் செய்யத் துவங்கியது.

“இனிமே உன்னை மாத்திக்கோ...” என்றவர், வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்துச் செல்ல, அவரது நடையில் தெரிந்த தளர்ச்சி ஷிவானியை வருத்த, புகழைப் பார்த்து முறைத்துவிட்டு அறைக்குச் சென்றாள்.

தான் சொன்ன பிறகே, தன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளின் வீரியம் புரிய, புகழ் மல்லிகாவைத் தொடர்ந்து ஓட, படுக்கையில் படுத்திருந்த மல்லிகாவின் முதுகு குலுங்குவதைப் பார்த்தவன், தன்னையே நொந்து கொண்டான்.

“அம்மா... அழாதீங்கம்மா... நான் தப்பா நினைச்சு சொல்லலைம்மா... நான் தொழில் ஆரம்பிச்ச நாள்ல இருந்தே இப்படி தானே இருக்கேன்... அதைத் தான் நான் சொன்னேன்ம்மா... நீங்க ஏன் வேற எதுவோ தப்பா நினைச்சிட்டு இப்படி அழுதுட்டு இருகீங்க?” என்று புகழ் சமாதானம் சொய்யவும்,

“என்னை கொஞ்சம் தனியா விடு...” என்று அழுத்தம் திருத்தமாக மல்லிகா சொல்லவும், புகழ் அமைதியாக அவர் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

“இன்னும் நீ போகலையா?” மல்லிகாவின் கேள்விக்கு,

“அம்மா... ப்ளீஸ்... என்னைப் பாருங்க...” புகழ் கெஞ்ச, மல்லிகா திரும்பியும் பாராமல் படுத்திருக்க,

“ஷிவாவை அப்படி பார்த்த உடனே என்னை நானே நொந்துட்டு இருந்தேன்ம்மா... அப்போ நீங்க திட்டவும் தெரியாம பேசிட்டேன்... நான் உங்களை குறை சொல்லலைம்மா... அதை மட்டும் நம்புங்க போதும்...” என்று கூறிவிட்டு, அவருக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு, அறையை விட்டு வெளியேற, மல்லிகாவிற்கு தனது கணவருடன் சண்டையிட்ட காட்சிகள் மனதில் படமாக ஓடியது.

புகழின் தந்தை மது அருந்திவிட்டு, குதிரை வாலில் பணத்தைக் கட்டி அந்த மாத சம்பளம் மொத்தத்தையும் இழந்து விட்டு வந்து நின்றதையும், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த புகழின் பரீட்சைக்கு வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு போய் மீண்டும் தோற்றதை கண்டு பிடித்து கேட்டதற்கு சண்டை பெரிதானதும், என்றும் பேசாத மல்லிகா அன்று சிறிது அதிகம் பேசி சண்டையிட, அந்த கோபத்தில் மேலும் குடித்துவிட்டு, அவர் சாலையை கடக்க முயன்ற போது, பக்கவாட்டில் வந்த லாரியை கவனிக்காமல் இறங்கி நடந்து, அதன் சக்கரத்திற்கே அவர் பலியானதும், அதன் பின்பு, அவர் வாங்கிய கடன் தொகை அவர்களை பயமுறுத்த, புகழ் செய்வதறியாது விழித்துக் கொண்டு நின்றதும், பின்பு உழைப்பை நம்பி களம் இறங்கியதையும் நினைவில் கொண்டு வந்தவர், அந்த எண்ணங்களில் இருந்து விடுபட போராடி, அந்த இரவைக் கழிக்கத் தொடங்கி இருந்தார்.

அதே நேரம், அறைக்குள் உடையை மாற்றிக் கொண்டு ஷிவானி படுத்திருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே சுத்தமாகி, உடையை மாற்றிக் கொண்டு வந்த புகழ், அவள் அருகில் நெருங்கி அமர்ந்து, அவளது தலையை எடுத்து மடியில் வைத்துக் கொள்ள, ‘என்ன?’ என்பது போல ஷிவானி பார்க்க,

“என் மேல கோபமா?” என்று புகழ் கேட்க, அவள் ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைக்கவும்,

“அம்மா என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க...” என்று சொல்லிக் கொண்டே அவளது தலையை மீண்டும் தலையணையில் கிடத்தி அவள் அருகில் படுத்துக் கொண்டவன், வேறெதுவம் பேசாமல், சிறிது நேரத்திலேயே உறங்கத் துவங்க, அவன் கொஞ்சுவான், மேலும் அவன் வராததுக்கு தனது வேலையைப் பற்றி ஏதாவது சொல்லி சமாதானம் செய்வான் என்று எதிர்ப்பார்த்த ஷிவானிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“இன்னைக்கு பொழுதுக்கு நிறைய பன்னு வாங்கியாச்சு... போதும்... இதுக்கும் மேல வாங்கினா பேக்கரி தான் வைக்கணும்... கண்ணை மூடித் தூங்கு...” என்று தனது வருத்தத்தை கூட கேலியாக எடுத்துக்கொண்டவள், உறங்கத் முயற்சித்தாள்.

தூக்கம் தான் வர மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. என்ன தான் புகழின் வேலையைக் காரணம் காட்டி மனம் சமாதானம் அடைய நினைத்தாலும், அந்த நாளின் ஏமாற்றம் அவளை சுருலவே செய்திருந்தது.

ஒருவேளை, ‘அம்மா அப்பாவுக்காகத் தான் எல்லாமுமா? காலையில எப்பவும் இல்லாத வழக்கமா கூப்பிட்டு கொஞ்சினதும், அவங்க இருக்கும் போது, கோவிலுக்குப் போகலாம்ன்னு சொன்னதும்?’ என்று அதிலேயே மனம் சுழன்றுக் கொண்டிருக்க,

“ச்சே... ச்சே... இருக்காது... அப்பறம் மதியம் சாப்பிட வந்த போது எதுக்கு புடவை கட்டுன்னு சொன்னாங்க?” என்று சமாதானம் அடைந்தவள், அவனது மார்பில் தனது தலையை வைத்துக் கொள்ள, அவள் ஸ்பரிசம் பட்டதும் கண் விழித்தவன், ஷிவானியைப் பார்க்க,

“ரொம்ப வேலையாப்பா? படுத்ததும் தூங்கிட்டீங்க?” என்று கேட்கவும், என்ன சொல்வதென்று புரியாமல் புகழ் அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பின் அழுத்தம் அதிகமாக, ஷிவானி அவன் முகம் பார்க்க, “அம்மா என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க வணி... நான் ரொம்ப தப்பா பேசிட்டேன் இல்ல... உன்னை காக்க வச்சுட்டு மறந்த எரிச்சல் வேற... எல்லாம் சேர்ந்து தான்...” புகழ் விளக்கம் சொல்லவும், ஷிவானி அவனது கன்னத்தில் இதழ் பதித்து, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, கண்களை மூட, அவளது செயல்களில் புகழ் எல்லையில்லாத மகிழ்ச்சி கொண்டான்.

தன்னை இந்த அளவு புரிந்து நேசிக்கும் மனைவி கிடைத்த சந்தோஷத்தில் புகழும் கண்களை மூடி உறங்க, இந்தப் புரிதல் எதுவரை சாத்தியம் என்று தான் அவனுக்கு புரியாமல் போனது...

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்த புகழ், மல்லிகாவின் அறைக்குச் செல்ல, மல்லிகா நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, சத்தம் எழுப்பாமல் ஹாலில் வந்து அமர்ந்தான். அதே நேரம் ஷிவானியும் உறங்கிக் கொண்டிருக்க, சிறிது நேரம் அமர்ந்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இட்லியை ஊற்றி வைத்து விட்டு, பாலைக் காய்ச்சி காபியைக் கலந்துக் கொண்டு வந்து மீண்டும் டிவியைப் பார்க்கத் துவங்க, அடித்துப் பிடித்துக் கொண்டு ஷிவானி வேகமாக வெளியில் வந்தாள்.

“என்ன செய்துட்டு இருக்கீங்க? நீங்க எப்போ எழுந்தீங்க?” என்று ஷிவானி படபடப்பாகக் கேட்க,

“நான் எழுந்து ரொம்ப நேரம் ஆச்சு?” என்று பதில் சொன்னவன், சமையல் அறையை நோக்கிச் செல்ல,

“இருங்க... நான் போய் காபி போட்டுக் கொண்டு வரேன்...” என்று ஷிவானி வேகமாக அவனைத் தாண்டிக் கொண்டுச் செல்ல, புகழ் அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.

“மெதுவா போ... புடவை தடுக்கி விழுந்து வைக்காதே...” என்று சொன்னவன், அவள் சமையலறை இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அவளை கவனியாமல், அவளுக்கு காபி கலந்தவன், அவளது இதழ்களில் மெல்ல தனது முத்திரையைப் பதித்து, காபியை அவளது கையில் கொடுக்க, ஷிவானி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி நின்றுக் கொண்டிருந்தாள்.

தேங்காயை எடுத்து திருவிக் கொண்டே அவளைப் பார்த்தவன், அவள் விழித்துக் கொண்டு ரசிப்பதைப் பார்த்துக் கொண்டே, சட்னியையும் அரைத்து முடிக்க, ஷிவானி காபியை கையில் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டு,

“காபியைப் குடி... நான் குளிச்சிட்டு வரேன்...” என்று அவளது கழுத்தில் இதழ் பதித்து சந்தோஷமாக அங்கிருந்து நகர,

“என்னாச்சு இவருக்கு?” என்று ஷிவானி நினைத்துக் கொண்டு நிற்க, ‘காபி குடிச்சியா?’ என்று புகழின் குரல் கேட்கவும், அதை ஒரே மடக்கில் குடித்து முடித்தவள், மீதி வேலையை தொடங்க நினைக்க, அப்பொழுது தான் மல்லிகாவைக் காணாதது அவளுக்கு மனதில் உரைத்தது.

“இன்னும் எழுந்துக்காம அத்தை என்ன பண்ணறாங்க? நேத்து ரொம்ப நேரம் முழிச்சு இருந்தது உடம்புக்கு சரி இல்லையா?” என்று யோசித்துக் கொண்டே, அவரது அறைக்குச் செல்ல, அப்பொழுது தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மல்லிகா திரும்பி படுக்க, ஷிவானி அருகில் சென்று அவரது நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்துப் பார்க்க, மல்லிகா அதைக் கூட உணராமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

“ஜுரம் இல்ல... நைட் ரொம்ப நேரம் கழிச்சு தூங்கி இருப்பாங்க போல...” என்று நினைத்துக் கொண்டவள், வெளியில் வரும் போது புகழ் தயாராகி வர, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, சமையல் அறைக்குள் சென்றவள், அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட எடுத்து வைக்க, புகழ் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சிவா... இன்னைக்கு என் கூட கடைக்கு வரியா?” என்று புகழ் கேட்க,

“இல்ல... நான் வரல... அத்தை இன்னும் எழவே இல்ல... ஜுரம் இல்ல... ஆனா... அவங்க இப்போ இருக்கற மனநிலையில நான் தனியா விட்டுட்டு எங்கயும் வரல...” என்று பட்டென்று அவள் சொல்லவும், புகழுக்கு ஒரு மாதிரி ஆனது.

“நான் நேத்து வாய் தவறி...” அவன் இழுக்கும் போதே,

“என்ன வாய் தவறி? எப்படி அந்த வார்த்தை வரும்? சரி நேத்து நீங்களும் ரொம்ப ஃபீல் பண்றீங்களேன்னு தான் நானும் ஏதும் பேசாம இருந்துட்டேன்... இப்போவும் அதையே பாடாதீங்க... மனசுல இருக்கறது தான் எரிச்சலா இருக்கும் போது வரும்... அத்தையே உங்களை ரொம்ப உழைக்க வச்சுட்டோம்ன்னு மனசுல நொந்துட்டு இருக்காங்க... நீங்க இப்படி பேசினா என்ன ஆகும்?” என்று படபடவென்று பொரிந்துத் தள்ளவும், புகழுக்கு என்னவோ போல் ஆகியது.

அவன் உண்ண அமரவும், இட்லிப் பொடியை எடுக்க ஷிவானி சமையலறைக்குச் செல்லவும், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவள், வேக வேகமாக புகழ் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவது தெரிய, அதிர்ந்து “இனியன்...” என்று அவள் அழைக்க, அவளது குரல் காற்றோடு தான் கரைய வேண்டி இருந்தது.

“என்ன சிவா... இப்படி கோபமா பேசி அவரை சாப்பிட விடாம செய்துட்டியே...” தன்னையே நொந்துக் கொண்டு, புகழுக்கு போன் செய்ய, அது எடுக்கப்படாமல் போய் கொண்டிருந்தது.

என்ன செய்வதென்று புரியாமல் அவள் அமர்ந்திருக்க, மல்லிகா வெளியில் எழுந்து வந்தார். ஷிவானி சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கவும், “என்னம்மா... என்னாச்சு?” என்று மல்லிகா பதற,

“அத்தை உங்களுக்கு ஒண்ணும் இல்லையே...” என்று பதிலுக்கு ஷிவானி பதற,

“எனக்கு ஒண்ணும் இல்லம்மா... ரொம்ப நேரம் பழசை எல்லாம் நினைச்சிட்டு தூக்கமே வரல... அது தான் அசந்துட்டேன் போல இருக்கு... எங்க புகழ் வேலைக்கு கிளம்பிப் போயிட்டானா?” என்று கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்தவருக்கு காபியை எடுத்துக் கொண்டு வந்தவள்,

“ஹ்ம்ம் சீக்கிரமாவே எழுந்துட்டார் போல அத்தை... காபி போட்டு, இட்லி ஊத்தி வச்சிருந்தார்...” என்று சொன்னவள், தானும் அவனிடம் சண்டை போட்டதைச் சொல்ல, மல்லிகா அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“என்ன ஷிவானி? அவனுக்கு கோபம் திட்டினது இல்ல... உன் முன்னால திட்டினது தான்... அவனும் மனுஷன் தானேம்மா... மிஷின் மாதிரி ஓடிக்கிட்டு இருக்கான்... அப்போ அப்போ சலிப்புல ஒண்ணு ரெண்டு வார்த்தை நம்மளையும் மீறி வர்ரது தான்... நானும் ராத்திரி அவன்ட பேசாம அவன படுத்திட்டேன் போல... இப்பவும் அவன் சாப்பிடாம போயிட்டானே...” என்று அவர் தாயாய் வருந்த,

“போன் கூட எடுக்க மாட்டேங்கிறார் அத்தை...” என்று தொண்டையடைக்க ஷிவானி சொல்ல,

“ஹ்ம்ம்... டீ ஏதாவது குடிச்சிப்பான்... நீ வந்து சாப்பிடு...” என்று அவளை அழைக்க, மனம் வராமல் ஷிவானி அமர்ந்திருக்க, பதினோரு மணியளவில் வீட்டின் உள்ளே நுழைந்த புகழைப் பார்த்த இரு பெண்களும் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு திகைத்து நின்றனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
13

சின்ன சின்ன தருணங்கள்

எல்லாம்

நீ உடன் இருந்தால்

இன்னும் அழகாய் இருக்கும் என்ற

எதிர்பார்ப்பிற்கான காரணம்

நீ எனக்கானவள் என்பதே

அவர்கள் இருவரின் பார்வையையும் கண்டு கொண்டவன், கையைக் கழுவிக் கொண்டு, டைனிங் டேபிளின் அருகே வர, ஷிவானி மேலும் திகைத்த பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “என்னை விட்டுட்டு இட்லி சாப்பிடறியா?” என்று கேட்க, அப்பொழுது தான் மல்லிகாவின் கெஞ்சலுக்கும் சமாதானத்துக்கும் பணிந்து சாப்பிட அமர்ந்தவள்,

“நான் இன்னும் சாப்பிடவே இல்ல... அத்தையும் தான்...” என்று அழுத்தமாகச் சொல்ல,

“சரி உங்க அத்தையை உட்காரச் சொல்லு... சேர்ந்து சாப்பிடலாம்...” என்று மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே புகழ் சொல்ல, மல்லிகா காது கேளாதவர் போல நகர்ந்து சென்றார்.

“அம்மா... ப்ளீஸ்... சாப்பிட வாங்க...” புகழ் பாவம் போலக் கெஞ்சவும், அவரும் தட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து அமர, ஷிவானி மல்லிகாவையும் புகழையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க,

“இவ என்னை காலையில திட்டிட்டா... என்னன்னு தான் கொஞ்சம் கேளுங்களேன்” என்று புகழ் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, மல்லிகாவின் இதழ்களில் மெல்லிய கீற்றுப் புன்னகை உதயமானது.

“சரி அந்த சிரிப்போட அப்படியே சாப்பிடுங்க... உங்க செல்ல மருமகள் வந்த உடனே என்னை மறந்துட்டீங்க” என்று அவன் மல்லிகாவை சமாதானம் செய்ய, ஷிவானி இட்லியை கையில் வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க,

“சிவா... அதோட ரேடியஸ் என்னன்னு அளந்து முடிச்சிட்டியா?” என்று புகழ் கிண்டலாகக் கேட்கவும்,

அவன் என்ன கேட்கறான் என்று புரியாமல், “ஹ்ம்ம்... சாப்பிட தான் யோசிச்சிட்டு இருந்தேன்...” என்றவள் வேகமாக அந்த இட்லியை திணித்துக் கொள்ள, அது அவளது தொண்டையில் சென்று சிக்கிக் கொண்டது.

அதை விழுங்க முடியாமல் அவள் திணறவும், அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தவன், “நான் என்ன அந்த இட்லியை பிடுங்கிக்கவா போறேன்...? எதுக்கு இவ்வளவு அவசரம்?” என்று கேட்க, அதுக்கும் ஏதும் பதில் இல்லாமல் அமைதியாக அந்த இடம் இருக்கவும்,

“நாம வெளிய போகலாமா?” என்று புகழ் கேட்க, மல்லிகாவின் அந்த சிறு கீற்றுப் புன்னகையும் மறைந்தது.

“அய்யா சாமி... வேண்டாம்... நீங்க வேலை பிசியில மறந்துடுவீங்க... நான் இங்க ரெடி ஆகி ஏமாந்து உட்கார்ந்து இருக்கணும்... நம்மால தினமும் இந்தக் கதை ஆகாதும்மா...” என்று ஷிவானி பட்டென்று சொல்லவும், புகழின் முகம் ஒரு நிமிடம் வாடியது.

அதைக் கண்டும் காணாமல் ஷிவானி அமைதியாக இருக்க, “இப்போவே உன்னை கூட்டிட்டு போறேன் வரியா?” பரிதாபமாக அவன் மீண்டும் கேட்கவும், ‘ஹான்...’ என்று ஷிவானி நம்ப முடியாத பார்வைப் பார்க்க,

“வா இப்போவே சாப்பிட்டு வெளிய கூட்டிட்டு போறேன்... மதியம் வெளிய சாப்பிட்டு வீட்டுக்கு வரலாம்...” என்று அவன் சொல்லவும், இன்னமும் நம்ப முடியாமல் ஷிவானி பார்க்க,

“கையோட கூட்டிட்டு போறேன்...” அழுத்தமாக அவன் சொல்வதைக் கேட்ட ஷிவானிக்கு குதூகலம் தொற்றிக் கொண்டது.

“அம்மா... நீங்களும் கிளம்புங்க... நம்ம புது கடையைப் பார்த்துட்டு அப்படியே சாப்பிட்டு வரலாம்...” என்று அவரையும் அழைக்கவும், ஷிவானி ஆர்வமாக அவரைப் பார்க்க, தயக்கமாக மல்லிகா புகழைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“அம்மா... அது நம்ம கடைம்மா... நீங்க பார்க்கணும் இல்ல... விக்ரமும் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னான்...” என்று சொல்லவும்,

“சரிடா... ஆனா... சாப்பாட்டுக்கு நீ அவ கூட போயிட்டு வாயேன்... நான் எதுக்கு? விக்ரமை திரும்பக் கொண்டு வந்து விடச் சொல்லிக்கறேன்...” என்று அவர் தயங்க,

“நீங்க வரலைன்னா நானும் போகலை அத்தை... வீட்டுக்கு வந்து ஒரு ரசம் சாதம் சாப்பிட்டுக்கலாம்...” என்று அவள் சொல்லவும்,

“சரிம்மா... நான் வரேன்... இப்போ நீ இதைச் சாப்பிடு... நீயும் சாப்பிடுடா...” என்ற மல்லிகா, எங்கே ஷிவானி அவனுடன் செல்லாமல் இருந்து விடுவாளோ என்ற நினைவிலேயே அவர்களுடன் வரச் சம்மதித்தார்.

அதற்கு பிறகு மூவருமே வேகமாக உண்டு முடித்து கிளம்ப, ஷிவானிக்கு மீண்டும் யோசனை வந்தது. “நான் எந்த டிரஸ்சைப் போட்டுக்கறது?” என்று அவள் புகழிடம் கேட்க,

“சுடிதார்லையே வா... அது தானே உனக்கு கம்ஃபர்டபிலா இருக்கும்?” அவன் பதில் கேள்வி கேட்க, அடுத்த சில நிமிடங்களில் கிளம்பி வந்தவள், சந்தோஷமாக அவனுடன் கிளம்பினாள்.

“என்ன இன்னைக்கு இந்த நேரத்துல கூப்பிட்டுட்டு போறீங்க? இந்த நேரம் எல்லாம் உங்களுக்கு வேலை இருக்குமே...” என்று ஷிவானி கேட்க, அவளுக்கு புன்னகையாலேயே பதில் சொன்னவன், காரை கடையின் முன் நிறுத்தினான்.

அங்கு விக்ரமும் முத்துவும் நின்றிருக்க, “என்ன விக்ரம்... ரவியும் ஜோசப்பும் எங்க?” என்று மல்லிகா கேட்டுக் கொண்டே வர,

“அவங்க வருவாங்கம்மா... ஊர்ல இருந்து வந்த உடனே சிஸ்டரைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க... அது தான் புகழ், அதை ஒரு சாக்கா வச்சிக்கிட்டு சிவாவை கூட்டிட்டு வர ஓடி வந்துட்டான்...” என்று விக்ரம் கிண்டல் செய்யவும்,

“அஹான்ன்...” என்று ஷிவானி ராகம் பாட, முத்துவும் விக்ரமும் சிரிக்கத் தொடங்க, புகழ் அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்றே புரியாமல் நின்றுக் கொண்டிருக்க,

“என்னடா இப்படி சிரிக்கறீங்க?” என்று கேட்டுக் கொண்டே மற்ற இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“இல்ல புகழ் சிஸ்டரை கூட்டிட்டு வந்த கதையைச் சொன்னா... சிஸ்டர் ‘அஹான்’னு கேட்கறாங்க... அது தான் எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியல...” என்று விக்ரமை முந்திக் கொண்டு முத்து சொல்லவும், தன்னை அனைவரும் சேர்ந்து ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று புரிந்த புகழ் ஷிவானியைப் பார்க்க,

“நான் அப்படியான்னு தான் கேட்டேன் இனியன்... இவங்க தான் உங்களை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்காங்க... கொஞ்சம் என்னன்னு கேளுங்க...” என்று ஷிவானி அப்பிராணியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும்,

“அடிப்பாவி...” என்று மல்லிகாவும் முணுமுணுக்க,

“என்னை வச்சு நீ காமெடி பண்ணிட்டு அவங்களைச் சொல்றியா? உன்னை விசாரிக்கிற விதத்துல விசாரிக்கிறேன்... அப்போ தான் நீ ஒழுங்கா பதில் சொல்லுவ...” என்று ஷிவானியின் காதுகளில் மட்டும் விழும் அளவிற்கு சொல்லிவிட்டு, அவள் மீண்டும் ‘ஹான்...’ என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மல்லிகாவின் கையைப் பிடித்து புகழ் உள்ளே அழைத்துச் செல்ல, ஷிவானி அவனைப் பின் தொடர்ந்தாள்.

“சிவா... இவங்க தான் என்னோட மீதி பிரெண்ட்ஸ்... நம்ம கல்யாணத்துக்கு இவங்களால வர முடியல... ஜோசப்போட தங்கைக்கு நம்ம கல்யாணதப்ப தான் கல்யாணம்... யாருமே போகாம இருந்தா எப்படின்னு தான் ரவி அங்க போயிருந்தான்...” என்று ஒரே விளக்கத்தில் இருவரையும் அறிமுகப்படுத்திய புகழை பார்த்து இருவரும் புன்னகைக்க, ஷிவானி அவர்களைப் பார்த்து கரம் குவித்தாள்.

“ஹையோ சிஸ்டர்... நீங்க அமைதி எல்லாம் இல்லன்னு நான் இவங்க வந்த உடனேயே நான் சொல்லிட்டேன்...” விக்ரம் ஷிவானியை வம்பு வளர்க்க,

“அதானே பார்த்தேன்... என்னோட புகழ் பாட ஆள் இல்லையேன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்... குட் ஜாப் விக்ரம் அண்ணா...” என்று ஷிவானி திரும்ப அவனையே கலாய்க்க, அவனைப் பார்த்து புகழ் சிரிக்கத் தொடங்கினான்.

“போதும்... ஒருத்தன் சிக்கக் கூடாதே...” என்ற விக்ரம், ஷிவானியைப் பார்த்து முறைக்க,

“அவன் விட்டா பேசிட்டே இருப்பான்மா... நாம உள்ள போகலாம்...” மல்லிகா சொல்லவும், அதைக் கேட்ட ஷிவானி சிரித்துக் கொண்டே உள்ளேச் செல்ல, கேலியும் கிண்டலுமாக அந்த கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தனர்.

“சிவா... இதுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம்ன்னு சொல்லுங்க... அப்பறம் வேற என்ன டெகரேஷன் செய்யலாம்ன்னும் சொல்லுங்க... இப்போ வீட்டையும் ரூமையும் நீங்க ரொம்ப அழகா மாத்தி இருக்கீங்கன்னு புகழ் சொன்னான்... அதுக்காக தான் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னோம்... உங்க சஜஷன் சொல்லுங்க...” என்று முத்து கேட்கவும், ஷிவானி புகழைப் பார்க்க, புகழின் கண்களில் தெரிந்த சிரிப்பில் அவனைப் பார்த்து முறைத்தாலும்,

“நம்மளையும் நம்பி ஒரு கஸ்டமர் வந்து இருக்காங்க... விடாதே சிவா... உன் திறமையை அவுத்து விடு...” என்று அவளது உள் மனது சொல்ல, புகழைப் பார்த்து அப்படியே இளிப்பாக மாற்றியவள்,

“உங்க பட்ஜெட் எவ்வளவுன்னு சொல்லுங்க...” என்ற கேள்வியை முன் வைத்தாள்.

“பட்ஜெட் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் சிஸ்டர்... நீங்க சொல்லுங்க... என்ன என்ன செய்யலாம்?” என்று முத்து கேட்கவும்,

“இங்க என்ன கடை வைக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று ஷிவானி கேட்கவும், அனைவரும் புகழை கேள்வியாகப் பார்க்க,

“அன்னைக்கு கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ்... கம்ப்யூட்டர்ஸ், மொபைல் ஷோரூம்ன்னு சொன்னேனே...” வேகமாக புகழ் சொல்ல,

“ஹ்ம்ம்... ஆமா... மறந்துட்டேன்...” என்று சமாளித்தவள்,

‘கடை கடைன்னு தானே சொன்னார்? எப்போவாவது என்ன கடைன்னு சொல்லி இருக்காரா?’ என்று யோசித்து,

“என்ன கடைன்னு சொல்லி இருப்பார்... நீ தான் தூங்கி இருப்ப...” என்று தன்னையே திட்டிக் கொண்டவள், தனக்கு பிடித்த கலர், மாடல் என்று நெட்டில் தேடி அவர்களுக்கு காட்ட, புகழின் மனது பெருமிதத்தில் துள்ளியது.

அவளது எண்ணங்களும், அவள் நெட்டில் இருந்து பல மாடல்களைக் காட்டி கூறிய விதமும் அனைவருக்கும் பிடித்துப் போக, அனைவரும் ஒரு மனதாக அந்த கடையை வடிவமைக்கும் விதத்தை தேர்வு செய்ய, ஷிவானி தன்னைத் தானே மனதினில் பாராட்டிக் கொண்டாள்.

“இதுக்குத் தான் கேங்ல ஒரு பொண்ணு வேணுங்கறது... ஒரு பொண்ணைப் பார்த்து கடைக்கு வேலைக்கு வைக்கலாம்ன்னு சொன்னா... சாமியாரு வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு...” என்று விக்ரம் சொல்லவும்,

“சாமியாரா?” ஷிவானி கேள்வி கேட்க,

“என்னை அப்படித் தான் இவங்க கிண்டல் பண்ணுவாங்க...” புகழ் சொல்லவும், ‘ஓ’ என்று கேட்டுக் கொண்டவள், ‘சாமியாரா? யாரு இவரா சாமியார்? சரியான போலிச் சாமியார்’’ என்று மனதினில் நொடித்துக் கொண்டு, ‘போலி சாமியார்...’ என்று புகழை செல்லமாக கடிந்துக் கொண்டிருக்க,

“எங்க ஷிவானி நல்லா செலக்ட் பண்ணுவா... அவ ரொம்ப சுட்டிப் பொண்ணு...” என்று அதுவரை அமைதியாக அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா ஷிவானியை பாராட்ட, ஷிவானிக்கு சிறிது கூச்சமாகவும் இருந்தது.

இது போல நெட்டில் தேடி, அவர்களுக்கு பிடித்ததாக ஒரு அமைப்பை தேர்ந்தெடுப்பதென்பது அனைவருக்கும் எளிதான விஷயம் தான்... அதுவும் கம்ப்யூட்டர் துறையிலேயே தனது வேலையை அமைத்துக் கொண்டிருக்கும் புகழுக்கு அது ஒரு தூசு போல. ஆனாலும் ஏதோ காரணத்திற்காக தன்னை அழைத்துக் கொண்டு வந்து இவர்கள் தேர்வு செய்யச் சொன்னது ஷிவானிக்கு யோசனையைக் கொடுக்க, அமைதியாகவே இருந்தாள்.

“சரி புகழ்... நீ லஞ்ச்சுக்கு வெளிய போகணும்னு சொன்னியே... போயிட்டு மதியம் அந்த ஆடிட்டர் ஆபீஸ்க்கு போயிட்டு வந்திரு... நான் மீதி வேலை எல்லாம் பார்த்துக்கறேன்...” என்று விக்ரம் நாசுக்காக புகழுக்கு அடுத்த வேலைகளை நினைவுப்படுத்தவும், ஷிவானிக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

“ஹ்ம்ம் கிளம்பறேன்டா... அந்த மன்னார் தெருவுல கூப்பிட்டு இருந்தாங்களே... காலையிலேயே போகல... மதியமாவது போகணும் விக்ரம்... சிஸ்டம் ஏதோ எரிஞ்சு போச்சுன்னு சொன்னார்...” என்று புகழ் தீவிரமான யோசனையுடன் சொல்ல,

“அந்த சிஸ்டம்ல எரிய வேற இடம் இருந்ததாக்கும்... அதுவே ஹைதர் காலத்து கம்ப்யூட்டர்... அதுல வயரே பாதி டேப் ஒட்டித் தான் இருக்கும்... அந்த கம்ப்யூட்டர்ல இன்னும் என்ன தாண்டா பேலன்ஸ் இருக்கு... இன்னைக்கு முடிவா ஒரு லேப்டாப் வாங்கச் சொல்லு... இல்ல அதை இன்னைக்கு சரி பண்ணி கொடுத்துட்டு வந்திரு... எப்படியும் இன்னும் ஒரு பத்து நாள்ல அந்த டேப் ஒட்டாத தம்மாத்துண்டு இடம் எரியும்... அதை சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு... நம்ம கடையில வந்து லேப்டாப் வாங்கச் சொல்லு...” என்று விக்ரம் கிண்டலடித்துக் கொண்டிருக்கவும்,

“நான் அப்போவே போயிட்டு வந்திருப்பேன்...” என்று புகழ் ஏதோ சொல்லத் தொடங்க,

“டேய் இப்படி இவங்களை நிக்க வச்சிட்டு பேசிட்டே இருக்கப் போறியா? வா... சிஸ்டரை நம்ம ஆபீஸ்க்கு கூட்டிட்டு போய் காட்டிட்டு அப்படியே சாப்பிடக் கிளம்புங்க...” என்று விக்ரம் சொல்லவும், ஷிவானியின் யோசனை பெரிதானது.

“ஹ்ம்ம்... நாங்க சாப்பிட போற விஷயத்தை விக்ரம் அண்ணாகிட்ட இவர் ஏற்கனவே சொல்லிட்டாரா? ஆனா... எதுவோ இடிக்குதே...” என்று ஷிவானி யோசிக்க, அந்த கடையை விட்டு, தங்களது A-Z சர்வீஸ் நடக்கும் அலுவலகத்திற்குச் சென்றனர்.

அங்கு புகழின் பை டேபிளின் மீது இருக்க, அன்று அலுவலகம் வந்து அவன் எந்த ஒரு வேலையையும் பார்த்த சுவடுகள் இன்றி இருப்பதைப் பார்த்தவள், அதற்கு மேல் யோசிக்கத் தோன்றாமல், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“ஹ்ம்ம்... இப்போவும் இவங்க கிட்ட வீட்ல நடந்த விஷயத்தைச் சொல்லி, இவங்க திரும்ப வீட்டுக்கு அனுப்பித் தான் வந்து எங்களை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்காரா? இவருக்கு இதெல்லாம் சுயமாவே தோணாதா? எத்தனை நாளைக்கு இப்படி மத்தவங்க சொல்ற திசையிலேயே நடப்பார்? அவருக்குன்னு சுயமான ஆசையே ஒண்ணும் கிடையாதா?” என்று மனதினில் வருத்தத்துடன் நொந்துக்கொண்டே வந்தவள்,

“அப்போ... என்னைக் கொஞ்சறது எல்லாம்...” என்று நினைக்கும் போதே அவளது மனம் குலுங்கி நிற்க,

“அதெல்லாம் அப்படி இருக்காது... அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு... அவர் என் மேல அன்பு வச்சிருக்கார்... அந்த அன்பால தான் என்னை நெருங்கறது கொஞ்சறது எல்லாமே...” என்று சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தவள், புகழ் அவளது கையை அழுத்தவும், தனது யோசனையில் இருந்து விடுபட்டு, அவனது முகத்தைப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு சிவா... சாப்பிட கிளம்பலாமா?” என்று புகழ் கேட்கவும்,

“ஹ்ம்ம் போகலாம்... எனக்கும் தூக்கம் வருது... வீட்டுக்குப் போய் தூக்கம் போடணும்...” என்று அவள் படபடவென்றுச் சொல்ல,

“உனக்கு நம்ம கடை பிடிச்சிருக்கா? எனக்கும், உன்கிட்ட இதெல்லாம் காட்டணும்னு ஆசை தான்... நீ வர மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன செய்யறதுன்னு ஒரு தயக்கம் தான்...” என்று சொன்னவன், அவளது மனதினில் தொக்கி நின்ற கேள்விகளுக்கு பதில் புகழின் வாயிலாகவே வருவதை நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“காலையில மனசு ஒரு மாதிரி இருந்தது சிவா... அதுல நீயும் திட்டவும், சாப்பிடாம வந்துட்டேனா... வழக்கம் போல இல்லன்னு விக்ரம் துருவித் துருவிக் கேட்டான். நான் நேத்து நடந்ததைச் சொன்னேன்... விக்ரமுக்கு செம கோபம் வந்திருச்சு...

‘அவர்கிட்ட வைஃப் கூட வெளிய போற பிளான் இருக்கு... நான் கிளம்பறேன்னு சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தானே... பாவம் சிஸ்டர்ன்னு’ விக்ரம் திட்டி... அவ சொல்றதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டு சத்தம் போட்டு என்னை வீட்டுக்கு கிளப்பி விட்டான்...

நேத்தும் எங்கயுமே கூட்டிட்டு போகலையா... நான் தான் யோசிச்சு... வெளிய கூட்டிட்டு போனா மாதிரியும் இருக்கும்... கடையை காட்டினா போலையும் இருக்கும்ன்னு... அப்படியே உனக்கு கடையையும் காட்டிட்டு, இன்டீரியர் எப்படி பண்ணலாம்ன்னு உன் ஐடியாவையும் கேட்டுட்டு, அப்படியே சாப்பிட போகலாம்ன்னு பிளான் பண்ணி, அவன்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பினேன்...” என்று புகழ் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, ஷிவானியின் முகம் சிறிது இயல்புக்குத் திரும்பியது.

“சரி இனியன்... என்னால இதுக்கும் மேல தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது... சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாம்...” என்று ஷிவானி சொல்லவும், புகழ் காரை எடுக்க, ஷிவானி அனைவரிடமும் விடைப்பெற்று அங்கிருந்து கிளம்ப, மல்லிகாவும் அமைதியாகவே காரிற்குள் ஏறினார்.

மதிய உணவை ஹோட்டலுக்குச் சென்று உண்டு விட்டு, அவர்களை வீட்டின் வாயிலிலேயே விட்டவன், “நிறைய வேலை இருக்கு... நான் வர எப்படியும் ராத்திரி ரொம்ப நேரமாகிடும்... அதனால ரெண்டு பேருமே தூங்குங்க...” என்று சொல்லிவிட்டு. அவன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட, உள்ளே நுழைந்த ஷவானிக்கு என்னவோ போல் இருந்தது.

“அத்தை நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க... நான் அங்க அப்பா அம்மாவைப் பார்த்துட்டு வரேன்...” என்று அவள் சொல்லவும் தான், நினைவு வந்தவராக,

“சாரி ஷிவானி... நேத்தே அம்மா உன்னை அனுப்பச் சொன்னாங்க... இந்தப் பயல் செய்த வேலையில நான் அதை சொல்லவே மறந்துட்டேன் பாரு...” என்று மல்லிகா சொல்லவும்,

“பரவால்ல அத்தை... நீங்க சொல்லி இருந்தாலும் நான் போயிருப்பேனாங்கறது சந்தேகம் தான்... இப்போ போயிட்டு வரேன் அத்தை...” என்று சொல்லிவிட்டு, வேகமாக ஷிவானி, தனது அன்னையைக் காணச் சென்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
14

என்னை சிறைப்படுத்தும்

எந்த ஒரு

தனிமையிலும்

தூரிகை தீட்டிய ஓவியமாய்

மனக்கண்ணில்

அங்கங்கே உன் புகைப்படங்கள்

அசட்டுப் புன்னகை ஒன்று

காதல் ஏங்க வழிந்தோடுகிறது!!

“உன்னைக் காலையில வரச் சொன்னேன்... இப்போ தான் வர வழி தெரிஞ்சதா? நல்லா புகழ் உன்னை மயக்கி வச்சிருக்கார்டி...” என்றபடியே சசி கதவைத் திறக்க,

“ஆமா... சொக்குப் பொடி போட்டு தான் மயக்கி வச்சிருக்கார்... என்ன செய்யலாம்?” என்று பதிலுக்கு அவள் வம்பு வளர்க்க,

“ஒண்ணுமே செய்ய வேண்டாம்... இந்த மயக்கமே போதும்... வாயாடி...” என்று சசி அவளது தலையை செல்லமாகத் தட்டி,

“நீ வருவன்னு காலையில இருந்து நான் காத்துட்டு இருந்தேன்...” சசி ஏக்கத்தோடு சொல்ல,

“அது வேற விஷயம்மா... இன்னைக்கு காலையில நானும் அத்தையும் கொஞ்சம் அவரோட கடை வரை போயிட்டு வந்தோம்... எல்லாரும் என்கிட்டே இன்டீரியர் டிசைன் எப்படி பண்றதுன்னு கேட்டாங்க தெரியுமா?” என்று ஷிவானி பெருமையடிக்க,

“அய்யே... உங்கிட்டயா?” என்று சசி பழிப்புக் காட்ட, ஷிவானிக்கு மூக்கின் மீது கோபம் வந்தது.

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? பங்காளிங்க கிட்ட சண்டை போடற மாதிரியே எப்போப் பாரு போட்டுட்டு இருக்க?” ஷிவானி வள்ளென்று விழ,

“உன்னைப் போய் சொல்றாரே மாப்பிள்ளைன்னு ஒரு ஆதங்கம் தான்... அவர் மட்டும் நம்பினா பரவால்ல... அவர் பிரெண்ட்சுமா... என்னவோ போ... இது தான் நேரம்ன்னு சொல்றது...” என்று சலித்துக் கொண்டே, அவளை உள்ளே விடாமல் அவர் நிற்க,

“கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போன பொண்ணு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்... இப்படி வாசல்லையே நிக்க வச்சு பேசறியே... இது உனக்கே நியாயமா?” என்று அவள் கேட்கவும் தான், தான் அவளை வாயிலிலேயே வைத்து வம்பு வளர்த்தது புரிய,

“சரி... சரி உள்ள வா... வந்து உட்கார்ந்து பேசலாம்... வெளிய நின்னு பேசிட்டே போற?” என்று சசி அவள் சொன்னதையே வேறு விதத்தில் ரிபீட் அடிக்கவும், தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி... அவரைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, அவளுக்கு பிடிக்கும் என்று செய்து வைத்திருந்த மில்க் ஷேக்கை எடுத்துக் கொண்டு வந்து சசி அவள் கையில் கொடுத்தார்.

“அம்மான்னா... அம்மா தான்...” என்று அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டவள், அதை வாங்கி வேகமாக பருகி முடித்தாள்.

“என்னடி மதியம் எதுவுமே சாப்பிடலையா? மணி ஆகுதே?” சசி அவள் குடித்த வேகத்தை வைத்து கவலையாகக் கேட்கவும்,

“இல்லம்மா... ஹோட்டல் போயிட்டு தான் வந்தோம்... ஹோட்டல்லயும் இனியனும் இதே தான் வாங்கிக் கொடுத்தாரா... அதையும் ஒரு கட்டு கட்டிட்டு தான் வந்தேன்...” என்று சொன்னவள், தான் சாப்பிட்ட உணவு வகைகளைப் பட்டியலிட,

“நல்ல தீனிப் பிசாசை கட்டிக்கிட்டு வந்துட்டோம்ன்னு உங்க அத்தையும், மாப்பிள்ளையும் நினைச்சு இருப்பாங்க...” என்று கேலி பேசியவர்,

“இரு... அப்பாவுக்கு நீ வந்திருக்கற விஷயத்தை சொல்லிட்டு வரேன்... காலையில நீ வருவேன்னு ரொம்ப நேரம் காத்துட்டு இருந்துட்டு கிளம்பிப் போனார்...” என்று போனை எடுத்து பாஸ்கருக்கு ஷிவானி வந்திருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார்.

“ஹ்ம்ம்... இந்த வீட்ல இருக்கற வரை ஒரு மாரியாதையும் இல்ல... இப்போப் பாரு...” சசி பேசி முடித்ததும் ஷிவானி வம்பைத் தொடங்க,

“ஆமா... இப்போ மட்டும் பூரண கும்பம் வச்சு கூப்பிட்டோம் பாரு...” என்று நொடித்துக் கொண்ட சசி,

“கொஞ்சம் இளைச்சா மாதிரி இருக்குடி...” என்று தயக்கத்துடன் இழுக்க, ஷிவானி சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.

“இப்போ எதுக்கு பேய் மாதிரி சிரிக்கிற?” சசி பல்லைக் கடிக்க,

“இல்லம்மா... என் பிரெண்ட் சொன்னா...” ஷிவானி இழுத்த இழுவையில், சசி அவளை சந்தேகமாகப் பார்க்க,

“நிஜமாம்மா... அவ என்ன சொன்னான்னா... பொண்ணுங்க புகுந்த வீட்டுக்குப் போயிட்டா... அதுவரை திட்டி தீர்க்கற அம்மாவுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டமா போயிடுமாம்... பாசம் பொத்துக்கிட்டு கொட்டுமாம்... அது இங்கயும் உண்மையா இருக்கேன்னு நினைச்சேனா... அது தான் சிரிப்பு வந்திருச்சு...” என்று அவள் சொல்லவும், சசியின் கண்கள் கலங்கியது.

அதைப் பார்த்த ஷிவானி தனது கிண்டலை கைவிட்டு, “என்னம்மா... நான் சும்மா தானே கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கேன்... அதுக்குள்ள அழுதா எப்படி?” என்று அவரை சிரிக்க வைப்பதற்கு கேட்க,

“போடி ராட்சசி...” என்று அவளது காதைப் பிடித்துத் திருகியவர்,

“என்ன சிவா... ஒழுங்கா சாப்பிடற தானே... நேரத்துக்கு சாப்பிடறியா?” என்று கேட்க,

“நல்லா திவ்யமா சாப்பிடறேன்ம்மா... நீ தான் இளைச்சி இருக்கேன்னு சொல்ற... எனக்கு என்னவோ கொஞ்சம் வெயிட் போட்டது போல தான் தெரியுது...” என்று ஷிவானி சொல்லவும், சசி தனக்குள் சிரித்துக் கொண்டு, வேறு பேசத் துவங்க, பாஸ்கரும் வந்து சேர்ந்தார்.

உள்ளே வந்ததும் வராததுமாக, “எங்க சிவா... மாப்பிள்ளை வரலையா?” என்று பாஸ்கர் கேட்கவும்,

“நீங்க என்னை தானே பார்க்க வரணும்னு கூப்பிட்டீங்க? இப்போ அவரை கேட்கறீங்க? அவரை நீங்க கூப்பிடவே இல்லையே...” என்று அவள் கிண்டலாகக் கேட்கவும், சசி அவளது தொடையில் தட்ட,

“நான் அவர் கூடத் தான் வரணும்னு நீங்க நினைச்சீங்கன்னா அப்பறம் நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு எனக்கும் தெரியாது, இனியனுக்கும் தெரியாது... ஏன்னா இனியன் ரொம்ப பிசி...” என்று சினிமா வசனம் போல பேசவும், பாஸ்கர் சிரித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தார்.

“முந்தா நேத்து எந்த கோவிலுக்கு போனீங்க?” பாஸ்கர் தனது விசாரிப்பைத் தொடங்கவும்,

“நாங்க போகவே இல்லப்பா... அவரோட வேலை முடியவே லேட் ஆகிடுச்சு... அதனால இன்னைக்கு காலையில தான் கடைக்கு கூட்டிட்டு போய், எந்த மாதிரி இன்டீரியர் செய்யலாம்ன்னு கேட்டாங்க...” என்று அவள் பெருமையடிக்க, அவள் சாதாரணமாகச் சொல்வது போல் இருந்தாலும், அவளது குரலில் இழையோடிய ஏமாற்றம், பெண்ணான சசிக்கு புரியவே செய்தது.

“நீ ரெடியா இருந்தியா?” என்று சசி ஒரு மாதிரிக் கேட்கவும்,

“ஹ்ம்ம்... இல்லம்மா...” என்று அவள் மென்று விழுங்க, அதிலேயே நடந்ததை பெரும்பான்மை யூகித்துக் கொண்டவர், அவளை வருத்தத்துடன் பார்க்க,

“பாவம்ப்பா இனியன்... படிக்கிற வயசிலேயே ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கார்... படிப்பு முடிச்சதும் முடிக்காததுமா, குடும்ப பாரத்தை சுமந்து, இன்னைக்கு இந்த நிலைமையில இருக்காருன்னா, அவரோட உழைப்பு எவ்வளவு இருக்கும்?” என்று சசிக்கு சமாதானம் சொல்வது போல பாஸ்கரிடம் சொல்ல, தனது மகளின் புரிந்துணர்வை நினைத்து, அவளது பெற்றவர்கள் மனதினில் நிம்மதி கொண்டனர்.

சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, “அப்பா... மணியாகுது... நீங்க சாப்பிடுங்க...” என்று ஷிவானி சொல்லவும், அப்பொழுது தான் நினைவு வந்தவராக,

“ஆமா... இன்னைக்கு ரொம்ப நேரமாகிடுச்சு... வாங்க...” என்று சசி அழைக்க,

“உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லம்மா...” என்று திட்டிக் கொண்டே ஷிவானி, பாஸ்கருக்கு தட்டு வைத்து பரிமாற,

“என்னவோ போ சிவா... இப்படி நீ பொறுப்பா இருக்கறதைப் பார்க்க, என் நெஞ்சு வலிக்குதே...” என்று சசி கிண்டலடிக்கவும், பாஸ்கர் சிரித்துவிட,

“எனக்கே சிரிப்பா தான் இருக்கு...” என்று சொல்லிக் கொண்டவள், வேறு பேசத் தொடங்க, சிறிது நேரம் கலகலப்பாக சென்றது.

நேரம் கடந்துக் கொண்டே இருக்க, மணியைப் பார்த்த ஷிவானி, “ஹையோ மணி ஆறாகுது... நான் வீட்டுக்கு கிளம்பறேன்... நைட் என்ன செய்யறதுன்னு தெரியாம அத்தை கஷ்டப்படுவாங்க...” என்று என்னவோ முதலில் இருந்தே அவள் சொல்லித் தான் மல்லிகா செய்து கொண்டிருப்பதைப் போல சொன்னவளைப் பார்த்த சசி,

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... உப்பு எது சர்க்கரை எதுன்னே தெரியாம இருந்தவ... இப்போ சமைக்க போறாளாம்... உனக்கே ஓவரா இல்ல...” என்று நொடித்துக் கொள்ள, இருவரின் சண்டையைப் பார்த்து பாஸ்கரும் சிரிக்க,

“ஏதோ ஒரு ஃப்லோல சொல்லிட்டேன்... விடேன்... அத்தை தனியா இருப்பாங்கம்மா... நான் போயிட்டு வரேன்...” என்று ஷிவானி கிளம்ப,

“நான் வந்து உன்னை வீட்டுல விட்டுட்டு வரேன்...” என்று பாஸ்கரும் உடன் கிளம்பினார்.

பாஸ்கர் கிளம்பவும், எதுவோ பேசப் போகிறார் என்று புரிந்து, சசியும் எதுவும் சொல்லாமல் வழி அனுப்பி வைக்க,

சிறிது தூரம் மௌனமாக நடந்தவர், “சிவா... மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்ம்மா...” என்று தொடங்கவும், அவர் முழுவதுமாக சொல்லி முடிக்க விடலாம் என்று எண்ணி, ‘ம்ம்...’ என்று ஷிவானி முணுமுணுக்கவும்,

“அவரோட சூழ்நிலை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னேயே சொல்லி இருக்கேன் இல்ல... என் கண்ணு முன்னால வளர்ந்து வந்தவன் தான் புகழ்... நானே நிறைய சமயங்கள் அவனோட உழைப்பைப் பார்த்து அசந்து இருக்கேன்...” என்று பழைய நினைவில் அவர் ஒருமையில் பேசி விட,

“என்னப்பா... அவன் இவன்னு சொல்றீங்க?” என்று ஷிவானி இடைப்புக, பாஸ்கர் ஒரு சில வினாடிகள் வாயடைத்துப் போனார்.

“அப்பா... அவரைப் பத்தி எனக்குத் தெரியும்ப்பா... அவரை மாதிரி நல்லவர் யாருமே இருக்க முடியாது... நீங்க எதுக்கு இதை சொல்ல வரீங்கன்னு தான் எனக்குப் புரியல...” என்று அவள் கேட்கவும்,

“இல்லடா... வெளிய கூட்டிட்டு போகலைன்னு நீ வருந்தக் கூடாது... நீ வளர்ந்த சூழல் வேற, அவரோட சூழல் வேற... அதனால தான் சொல்றேன்... கொஞ்சம் அவரோட பழக்க வழக்கம் பிடிபட நாளாகும்... அதுவரை நீ பொறுமையா இருக்கணும்...” என்று பாஸ்கர் பேசிக் கொண்டே போக, ஷிவானி நின்று பாஸ்கரை திரும்பிப் பார்த்தாள்.

அவளது பார்வை புரியாத குழப்பத்துடன், “என்ன சிவா?” பாஸ்கர் கேட்க,

“காலையில நான் சத்தம் போட்டதை இனியன் சொன்னாராப்பா?” என்று ஷிவானி கேட்டுவிட, அதைக் கேட்டு அதிர்ந்த பாஸ்கர்,

“என்னம்மா சொல்ற?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்க,

“ஹையோ சிவா... நீயே வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டயா? உனக்கு இது தேவையா?” என்று புலம்பிக் கொண்டே, பாஸ்கரைப் பார்த்து முழித்தவள், அவர் அவளது பதிலுக்காக காத்திருப்பது புரியவும்,

“இல்லப்பா... சும்மா தான்... செல்ல சண்டை தான்...” என்று சமாளிப்பதற்கு இழுக்க, பாஸ்கர் அவளை கவலையுடன் பார்த்தார்.

“உன்னோட குணம் தெரிஞ்சு தான் நான் இப்போ உனக்கு அட்வைஸ் செய்தேன்... வெளிய போகணும்ன்னா உன்னோட அடம் எந்த அளவுக்கு இருக்கும்ன்னு எங்களுக்குத் தெரியும்... அதனால தான் மாப்பிள்ளையப் பத்தி சொல்லிட்டு வந்தேன்... பார்த்தா... ஏற்கானவே நாங்க நினைச்சு பயந்த விஷயம் நடந்திருச்சு போல...” என்று அலுப்பாக சொன்னவர்,

“புகழ் என்ன சின்னப் பையனா... எனக்கு போன் பண்ணி இதைச் சொல்ல...” என்று தொடங்கியவர், மீண்டும் நடுரோட்டில் நிற்க வைத்தே ஷிவானிக்கு அட்வைஸ் செய்யத் துவங்க,

“உனக்கு இது தேவையா சிவா... இப்போ இந்த அட்வைஸ் கேட்கறதுக்கு அந்த ஹிஸ்டரி கிளாசையே அட்டென்ட் பண்ணிடலாம் போல இருக்கே...” என்று மனதினில் தன்னை நினைத்தே நொந்து கொண்டிருக்க, தான் சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி முடித்த பாஸ்கர்,

‘வா... போகலாம்...’ என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்தார்.

வீட்டை அடைந்த ஷிவானி... புகழின் பைக் நிற்கவும், “ஹை இனியன் வந்தாச்சு... பைக் நிக்குதுப்பா...” என்று வீட்டிற்குள் சிறு பிள்ளை போல ஓட, மல்லிகாவுடன் பேசிக் கொண்டிருந்த புகழ், ஷிவானியின் சத்தம் கேட்டு, அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.

உள்ளே நுழையும் போதே... “என்ன இனியன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம்?” என்று அவள் ஆரவாரமாகக் கேட்க,

அவள் பின்னோடு பாஸ்கர் உள்ளே வரவும், ‘வாங்க மாமா...’ அவரை வரவேற்றவன்,

“உங்களை அவ சிரமப்படுத்திட்டாளா? எனக்கு போன் செய்திருந்தா நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்...” என்று மரியாதையுடன் புகழ் கூற, மல்லிகாவும், பாஸ்கரை வரவேற்றார்.

“அதெல்லாம் இல்ல மாப்பிள்ளை... சும்மா அவ கூட பேசிக்கிட்டே நடந்து வந்தேன்... இதுல சிரமம் என்ன இருக்கு?” என்று பாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஹான்... நீங்க வந்திருப்பீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?” என்று வேகமாக சொல்லிய பின், இன்னமும் புகழ் இவ்வளவு சீக்கிரம் வந்ததை நம்ப முடியாமல், திரும்பத் திரும்ப மணியைப் பார்க்க, அவளது செயல் புரியாத புகழ்,

“என்ன ஆச்சு?” என்னவோ ஏதோ என்று நினைத்துக் கொண்டு கேட்க,

“இனியன்... மணி ஆறரை தானே ஆகுது... நான் லேட்டா வந்துடலையே?” என்று அவள் சந்தேகமாகக் கேட்க, அவளது கேலியைப் புரிந்த மல்லிகா சிரித்து,

“நீ சரியான நேரத்துக்கு தான் சிவா வந்திருக்க... அவன் தான் இதுவரை வராத நேரத்துக்கு வந்திருக்கான்... நானே இவனைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் கண்ணையே நம்ப முடியாம இருந்துட்டேன்... அதுவும் அவன் அஞ்சு மணிக்கே வந்துட்டான்னா பார்த்துக்கோயேன்...” என்று தன் பங்கிற்கு கேலியைத் தொடங்க, புகழ் அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல், புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

“ஹ்ம்ம்... அஞ்சு மணிக்கே வந்திருந்தா... அங்க வந்திருக்கலாம் இல்ல... வந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்...” என்று மனதினில் நினைத்துக் கொண்டவள்,

“வந்துட்டாலும்...” என்று அதற்கும் தானே சலித்துக் கொண்டு, மல்லிகாவின் அருகே நின்றிருந்தாள்.

“வணி... என்ன நின்னு மனசுல கமெண்ட் கொடுத்துட்டு இருக்க? போய் மாமாவுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா...” என்று புகழ் சொல்லவும்,

“நாம மனசுல ரிப்பீட் அடிக்கிறது முகத்துல தெரியுதோ?” என்று நினைத்துக் கொண்டு அவள் திரும்ப,

“அதெல்லாம் வேண்டாம் புகழ்... இப்போ தான் காபி குடிச்சிட்டு பேசிட்டு இருந்தோம்... இவ நேரமாச்சு கிளம்பறேன்னு சொன்னதும், கூட வந்தேன்...” என்று கூறிய பாஸ்கர்,

“சரிங்கம்மா... நான் கிளம்பறேன்... இவ வீட்டுக்கு வந்தது தெரிஞ்சதும், ஆபீஸ்ல போட்டது போட்ட படியே ஓடி வந்தேன்... போய் என்னன்னு பார்க்கணும்...” என்று சொல்லவும்,

“ஒரு முழு நாள் இங்க இருக்கற மாதிரியே வாங்க...” என்று மல்லிகாவும் விடை கொடுக்க,

“நீங்களும் வீட்டுக்கு வாங்கம்மா... புகழ் நீங்களும் தான்... முன்ன மாதிரி அடிக்கடி வீட்டுக்கு வரணும்...” என்று அன்பு கட்டளையிட்டு, ஷிவானியின் தலையை வருடிவிட்டு, கிளம்பிச் சென்றார்.

“என்னங்க இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம்?” ஷிவானி மீண்டும் தொடங்கவும்,

“விக்ரம் தான் என்னை வீட்டுக்கு போகச் சொல்லி துரத்திவிட்டான்... அது தான் அவன் தொல்லை தாங்கமா வந்துட்டேன்... நிறைய வேலை இருக்கு...” என்று புகழ் சொன்னதைக் கேட்டவள்,

“இப்படி அரை மனசோட வந்ததுக்கு அங்கேயே இருந்திருக்கலாம்...” என்று முணுமுணுத்து விட்டு, உடையை மாற்றிக் கொண்டு, கிட்செனுக்கு செல்ல, புகழ் தனது கணினியுடன் அமர்ந்தான்.

அவள் வந்த சிறிது நேரத்தில், மல்லிகாவும் சமையல் அறைக்குள் சென்றுவிட, அவரைத் தொடர்ந்து சென்ற ஷிவானி, தன்னிடம் வந்து ஏதாவது பேசுவான்... வம்பு வளர்ப்பான்... என்று எதிர்ப்பார்த்து காத்திருக்க, அவ்வப்பொழுது புகழின் பார்வை ஷிவானியின் மீது படிந்து மீள்வதைத் தவிர, எதுவும் நடவாமல் போக, இரவு உணவையும், வேலைகளையும் முடித்துக் கொண்டு, ஷிவானி அறைக்குள் நுழைந்த வினாடி, புகழின் கையில் தவழ்ந்தாள்.

எதிர்ப்பாராத அந்த தழுவலும், தவழ்தலும், ஷிவானிக்கு கனவு போல இருக்க, கண்களை விரித்து பார்த்தவளின் இதழை நெருங்கியவன், அவளை மடியில் அமர்த்திக் கொண்டான்.

அவனது அந்த அவசர சிறையெடுப்பில் தடுமாறித் தவித்தவள், அவன் சிறிது இடைவேளை விடவும்,

“வந்ததுல இருந்து கம்ப்யூட்டரையே வச்சிட்டு இருந்துட்டு இப்போ என்னவாம்...” அவன் தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டு சிணுங்க,

“அது வேலை இருந்தது சிவா...” என்று சீரியசாக அவன் சொல்லத் தொடங்கவுமே,

“சரி... சரி... பிசினஸ் மேன்ப்பா நீங்க... எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது...” ஷிவானி அவசரமாக சரண் அடையவும், மீண்டும், அவனது கைது நடவடிக்கையில் திக்கித் திணறி, திக்கு முக்காடி, அவனிடம் தஞ்சம் புக, தஞ்சம் வந்தவளை மஞ்சம் சேர்த்தான், அவளது இனியன்.

நாட்கள் வேகமாக விரைந்து, புகழ் ஷிவானியின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்து, இரண்டாவது மாதமும் முடியும் தருவாயில் நின்றிருந்தது. ஷிவானியின் பொழுதுகள் அந்த வீட்டைச் சுற்றியே ஓடிக் கொண்டிருக்க, அவள் வீட்டில் இல்லாத சில மணி நேரங்களும், மல்லிகாவிற்கு கை உடைந்த நிலை போல ஆகி விடும்.

புதிய கடையின் இன்டீரியர் வேலைகளும், கடைக்கு ஸ்டாக் எடுக்கும் வேலைகளும், கடைத் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் என்று பகலில் புகழ் நிற்க நேரமின்றி சுழன்றுக் கொண்டிருக்க, இரவு நேரங்களின் கூடல்கள் மட்டுமே அவனுடன் கழிக்கும் தருணமாக ஷிவானிக்கு மாறிக் கொண்டிருந்தது.

அந்த இரு மாதங்களில், கடையை காட்டுவதற்கு அழைத்துச் சென்றதற்குப் பிறகு, ஷிவானி எங்கும் செல்லவும் இல்லாமல், வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். அது நாள் வரை பட்டாம்பூச்சியாக, நட்பு வட்டத்துடன், வெளியில் சென்றும், போனில் அரட்டை அடித்தும், கம்ப்யூட்டரில் கேம்ஸ், பாடல் கேட்பது என்று தனது இஷ்டத்திற்கு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவள், முன்பு போல இல்லாவிடினும், இப்பொழுதும் அளவோடு தொடர்ந்தாலும், எதுவோ ஒன்று விடுபட்டது போலவே தோன்றிக் கொண்டிருந்தது.

நடுவில் சில முறை, தனது வீட்டிற்குச் சென்று சசியுடன் சண்டை போட்டு, செல்லம் கொஞ்சி விட்டு வந்தாலும், தான் திருமணத்திற்கு முன்பு நினைத்ததைப் போல புகழுடன் நேரத்தை செலவிட முடியவில்லையே என்று ஷிவானிக்கு வருத்தம் தோன்றினாலும், அவனது வேலையை காரணம் சொல்லிக் கொண்டு, தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்வதும் வழக்கமாக மாறி இருந்தது.

புகழ், சில ஆலோசனைகளை அவளிடம் கேட்கவும் செய்ய, அவனது வேலையைப் புரிந்துக் கொண்டவள், திருமணத்திற்கு முன் அவனுடன் எப்படி எல்லாம் நேரம் செலவிட வேண்டும் என்று கனவு கண்டு, மனதினில் சேர்த்து வைத்த ஆசைகளை அப்பொழுதிற்கு மூட்டைக்கட்டி, மனதின் ஓரத்தில் போட்டு வைத்துவிட்டு, அன்றாட நிஜ வாழ்வின் யதார்த்தத்தையும் புரிந்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

கடைத் திறப்பு விழாவிற்கான நாளை குறித்துக் கொண்டு வந்த புகழ், ஷிவானியை கடைக்கு அழைத்துக் கொண்டு செல்ல, தான் சொன்னதையே இம்மி பிசாகாமல் செய்திருந்ததைப் பார்த்த ஷிவானி, “நிஜமாவேவா... நான் சொன்னது போலவா செய்தீங்க?” என்று கேட்க,

“என்ன சிவா இப்படி கேட்டுட்ட... நீ சொன்னது நல்லா இருந்தது... பாரு... கடையே அம்சமா இருக்கு...” என்று புகழ் பாராட்டுடன் சொல்லவும்,

“ஆமா சிவா... எங்க எல்லாருக்குமே நீ சொன்னது பிடிச்சிருந்தது... பாவம் கல்யாணம் ஆன கையோட புகழுக்கு நாங்க இந்த வேலையை தலையில கட்டிட்டோம்... எங்களுக்கும், அவனுக்கு ஹெல்ப் பண்ண முடியாம வெளிய அலையைற வேலையில நல்லா மாட்டிக்கிட்டோம்...

இப்போ வந்த மழையில, நம்ம ஏரியா தான் தப்பி இருக்கு... ஆனா... வேற ஏரியா எல்லாம் ரொம்ப பாவம்... நிறைய வீடு பாதிப்பு ஆகி இருந்ததுனால அங்க இருந்தும் நம்மளைப் பத்தி கேள்விப்பட்டு நிறைய கால்ஸ் வந்துச்சு... அப்போதைக்கு புகழ் தான், கடை வேலைக்கு சிக்கினான்...” என்று விக்ரம் முதலில் சிறிது வருத்தமாகவும், இறுதியில் கேலியாகவும் முடிக்க,

“பரவால்ல விக்ரம் அண்ணா... அவர் சொல்லி இருக்கார்...” என்று ஷிவானி புன்னகையுடன் சொல்லவும், புகழ் அவளை மகிழ்ச்சியுடன் பார்த்தான்.

குறித்த நல்ல நாளில், கடைத் திறப்பு விழாவும் மல்லிகா, பாஸ்கர், சசி, மற்றும், புகழின் நண்பர்களின் பெற்றோர்களின் ஆசியுடன் இனிமையாக கழிய, கடையைப் பார்த்தவர்கள், ஷிவானியை பாராட்ட,

“எல்லா புகழும் இன்டர்நெட்டிற்கே...” என்று ஷிவானி மனதினில் அடக்கமுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நிஜமா சொல்லு... எங்க இருந்து இதைச் சுட்ட...” என்று சசி அவளை வம்பு வளர்க்கவும்,

“வேற எங்க? இன்டர்நெட்ல தான்... சும்மா... அதுலயே இருக்கேன்னு திட்டுவ இல்ல... இப்போ பாரு எவ்வளவு பேர் புகழ்ந்துட்டு போறாங்கனு... புகழோட பெண்டாட்டிக்கே எவ்வளவு புகழ் பாரேன்...” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, அதிசயித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த சசி முறைக்க,

“போனா போகுது... உனக்கும் நான் பங்கு தர்றேன்... வச்சிக்கோ” என்று மேலும் அவள் வம்பு வளர்க்கவும்,

“என் பங்கையும் நீயே வச்சிக்கோ...” என்று சசி நொடித்துக் கொள்ள, ஷிவானி அவரை விடாமல் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள்.

இனிமையாக நடந்த திறப்பு விழாவன்று, அடுத்த இனிமையான செய்தியும் அவர்களை வந்து எட்டியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
15

உள்ளம் கொள்ளை போகுதடா...

உன் அருகில் உன் சிரிப்பில்

என்னை மறந்தேன் நானடா...

தூறல் போலே காதல் தீண்ட

நெஞ்சில் பூ பூக்க கண்டேன்

பூவில் எல்லாம் வீசும் வாசம்

என்னை நீ என்ன செய்தாய்...

உள்ளம் கொள்ளை போகுதடா

உன் அருகில் உன் சிரிப்பில்

என்னை மறந்தேன் நானடா...

கடை திறப்பு விழா முடிந்து, மதியம் போல வீட்டிற்கு வந்த ஷிவானியும் மல்லிகாவும், கடையை பார்த்து மிகவும் திருப்தியாகவும், பெருமையாகவும் உணர்ந்தனர்.

“கடை திறப்பு விழா நல்லா நடந்தது இல்ல?” மல்லிகா புகழின் வளர்ச்சியைக் கண்டு நிறைவாகச் சொல்ல,

“ஆமா அத்தை... ரொம்ப ஹாப்பியா இருக்கு...” என்று அவரது சந்தோஷத்தில் பங்கு கொண்டவள்,

“அவருக்கு ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுக்கணும் அத்தை... அவருக்கு இத்தனை நாளா ரொம்ப அலைச்சல்... டயர்ட்டா இருக்கற மாதிரி இருக்கு... பேசாம அவரை வீட்ல ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, நான் போய் அங்க கடையை செட் பண்றதை பார்த்துக்கறேன்... சும்மா அவங்க சரியா டெலிவரி செய்திருக்காங்களான்னு செக் பண்ணினா போதுமே...” புகழின் சோர்ந்த முகத்தையும், அதையும் மீறி, ஒரு நிம்மதியும் தெரிந்த முகத்தை மனதினில் கொண்டு வந்தவள், மல்லிகாவிடம் கூறிக் கொண்டிருக்க, ‘புகழ் இதற்கு சம்மதிப்பானா?’ என்ற யோசனைக்கு மல்லிகா சென்றார்.

“என்ன அத்தை... நான் இவ்வளவு கேட்கறேன்... நீங்க அமைதியா இருக்கீங்க? நான் கடைக்கு போறது உங்களுக்கு பிடிக்கலையா?” இயல்பாக அவள் கேட்க,

“இல்லம்மா... புகழ் சம்மதிப்பானான்னு யோசிச்சிட்டு இருந்தேன்... எதுக்கும் நான் சாயந்திரம் சொல்றேனே...” என்று அவர் அப்போதைக்கு பேச்சை முடித்துவிட, ஷிவானியும் அமைதியாகிப் போனாள்.

மீண்டும் மாலையில் டீயைக் குடித்துக் கொண்டே அவள் அந்த பேச்சையேத் தொடங்கவும், அந்த நேரம் புகழ் வீட்டின் உள்ளே நுழைந்தான். அவனின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவள்,

“என்னங்க? காபி கொண்டு வரவா?” ஷிவானி படபடக்க,

“கொஞ்சம் சூடா வேணும் சிவா... ரொம்ப தலை வலிக்குது...” என்று அவன் சொன்னது தான் தாமதம், வேகமாக சென்று பாலை சுட வைத்து, அவனுக்கு காபியைக் கொண்டு வந்து, அவனிடம் கொடுத்துவிட்டு, வேகமாச் சென்று தைலத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“எங்க ஓடறா இவ?” புகழ் முணுமுணுத்துக் கொண்டு, காபியைப் பருக, தைலத்தை கொண்டு வந்து, அவனது நெற்றியில் தடவியவள், அவனுக்கு பதமாக பிடித்து விட,

“ரொம்ப தேங்க்ஸ் சிவா... இப்போ கொஞ்சம் பரவால்லாமா இருக்கு...” என்று சொன்னவன், முகம் கழுவிக் கொண்டு வர, ஷிவானி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“இப்போ கொஞ்சம் பிரெஷ்ஷா இருக்கு ஷிவா...” அவன் சொல்லவும்,

“நீங்க ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க... அது தான் இப்படி தலைவலி...” என்று தொடங்கியவள்,

“நான் ஒண்ணு சொல்றேன்... நீங்க கேட்பீங்களா?” என்று பீடிகைப் போட,

“என்ன பீடிகை ஓவரா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே, புகழ் அவள் புறம் திரும்பி அமர, எப்படி அவனிடம் சொல்வது என்ற யோசனையில் ஒரு சில வினாடிகள் ஷிவானி அமைதியானாள்.

“சொல்லு சிவா... என்னவோ சொல்ல வந்தியே...” என்று புகழ் மீண்டும் கேட்கவும்,

“இல்ல... பெருசா ஒண்ணும் இல்ல... நீங்க ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்களேன்...” என்று சொல்லவும்,

“கடையில பொருள் எல்லாம் வந்து இறங்கும் சிவா... அநேகமா நாளைக்கு வரும்ன்னு எதிர்பார்க்கிறேன். அதை எல்லாம் வாங்கி வைக்கணும் இல்ல... இப்போவே ரெஸ்ட் எடுக்க எனக்கு என்ன ஆச்சு சொல்லு?” என்று புகழ் பதில் கேள்வி கேட்க,

“இல்ல இனியன்... நீங்க ரொம்ப டல்லா இருக்கீங்க... உங்க முகமெல்லாம் சோர்ந்து இருக்கு... அதனால தான் சொல்றேன்...” என்று அவளும் பதிலுக்கு பதில் பேச, அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு, புகழ் கோபப் படக் கூடாதே என்று கவலையாக இருந்தது.

“சரி... இப்போ நான் ரெஸ்ட் எடுக்கறேன்... கடை வேலையை யாரு பார்ப்பா?” புகழ் கேட்க, ஷிவானி பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்,

“மத்தவங்களால முடியாது... ஏன்னா அவங்களுமே ரொம்ப அலைஞ்சிட்டு இருக்காங்க...” என்று புகழ் சொல்லி முடிக்க,

“சரி... நீங்க ரெஸ்ட் எடுங்க... நான் போய் அதை எல்லாம் சரி பார்க்கறேன்... நீங்க ஆர்டர் போட்டு இருக்கற லிஸ்ட் படி வந்திருக்கான்னு தானே பார்க்கணும்?” அவனுக்கு உதவும் எண்ணத்தில் சாதாரணமாக ஷிவானி கேட்கவும், புகழின் முகம் இறுகியது.

“கடையில எல்லாம் நீ போய் நிற்க வேண்டாம்... எனக்கு ஒண்ணும் ஆகலன்னு நான் சொல்றேன் இல்ல...” என்று புகழின் குரல் சட்டென்று உயர்ந்து ஒலிக்க, ஷிவானிக்கு முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“சரி... என்னவோ செய்துக்கோங்க” என்று எழுந்து அறைக்குச் சென்றவள், ஒரு மூச்சு அழுது தீர்த்து, துணிகளை அடுக்கும் சாக்கில் அறையிலேயே தங்கிக் கொண்டாள்.

அதுவரை குறுக்கிடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா, “என்னடா... உன் முகம் சோர்ந்து இருக்குன்னு தானே அவ கேட்டா... எதுக்கு இப்படி சத்தம் போட்ட?” என்று கேட்கவும்,

“கோபப்படலைம்மா... அவ எதுக்கும்மா கடையில போய் நிக்கணும்? அதெல்லாம் சரிப்படாது...” என்று கூறியவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல், அறைக்கு எழுந்து செல்ல, பீரோவினுள் முகம் புதைத்துக் கொண்டு நின்றிருந்தவளை நெருங்கி, பின்னால் இருந்து அணைத்தவன், அவளது தோளில் முகம் பதித்தான்.

அவனது முகத்தை ஷிவானி தட்டிவிட, “கோபமா வணி... நான் எதுக்கு சொல்லறேன்னு புரிஞ்சிக்கோ... அங்க சாமான் எல்லாம் கொண்டு வர்ர ஆளுங்க யாரு எப்படின்னு தெரியாது? உன்னை தனியா அனுப்பிட்டு நான் இங்க நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு?” என்று அவன் மெதுவாக, அவளைத் திருப்பி அணைத்துக் கொண்டு கேட்க, அவனது கரத்தினுள் சரண் புகுந்தவள்,

“எதுக்கு அப்படி சத்தம் போட்டீங்க?” என்று சிணுங்க,

“சட்டுன்னு சவுண்ட் வந்திருச்சு... நான் உன்னை கோவிச்சுக்க எல்லாம் இல்லம்மா...” என்று புகழ் அவளை சமாதானம் செய்தான்.

“நான் உங்க நல்லதுக்கு தானே சொல்றேன்...” என்று அவள் திரும்பக் கேட்கவும்,

‘என் செல்லம் காட்சிப் பொருளா இருக்கறதை நான் விரும்பல... நீ எனக்கு மட்டுமே சொந்தம்... உன்னை வேறொருத்தன் பார்க்கக் கூட கூடாது’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், வாய்விட்டு சொல்லி இருந்தால், பின் வரும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாமோ?

புகழின் மனது நினைத்ததே தவிர, அது வாய் மொழியாக சொல்லாதது அவனது தவறா? அல்லது விதியின் செயலா?

“எனக்கு ஒண்ணும் இல்லம்மா...” புகழ் சமாதானம் சொல்ல,

“சரி விடுங்க... ஏதோ வீட்ல சும்மா இருக்கறதுக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு தான் கேட்டேன்...” என்று காரணம் சொன்னவள்,

“உங்க இஷ்டம்... எனக்கு வேலை இருக்கு...” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்ல, புகழ் அவளது கோபத்தைக் கண்டு ரசிக்கத் தொடங்கினான்.

ஷிவானி வெளியே வரவும், போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த மல்லிகா, சந்தோஷத்துடன் அவளைப் பார்த்து புன்னகைத்து, “சித்ரா உண்டாகி இருக்காளாம் சிவா... என் வேண்டுதல் வீண் போகல...” என்று சந்தோஷ செய்தியைச் சொல்லவும்,

“ஹை... சூப்பர் அத்தை... சித்ரா அண்ணி லைன்ல இருக்காங்களா?” என்று கேட்டவள், மல்லிகா போனை நீட்டவும், சந்தோஷமாகப் பேசத் துவங்கினாள்.

“சிவா... எனக்கு ஒரு ஹெல்ப்... எனக்கு ரொம்ப தலை சுத்தலாவும், வாந்தியாவும் இருக்கு... கொஞ்சம் ஹெல்ப்புக்கு அம்மா இங்க வரட்டுமா?” என்று சித்ரா அவளிடம் அனுமதி வேண்டவும்,

“அண்ணி... நீங்க இங்க வந்திருங்க அண்ணி... இங்க நானும் அத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்து உங்களைப் பார்த்துக்கறோம்... இங்க பக்கத்துல நல்ல டாக்டர் இருக்காங்க...” என்று ஷிவானி சொல்லவும்,

“நாங்க முதல்ல அது தான் நினைச்சோம்... ரொம்ப நாள் கழிச்சு உண்டானதுனால டாக்டர் ட்ராவெல் செய்யக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க சிவா... அதனால தான் ரொம்ப பயமா இருக்கு... அதான் நான் அம்மாவைக் கூப்பிடறேன்...” என்று சித்ரா விளக்கம் சொல்லவும்,

“ஓ... அதுவும் சரி தான் அண்ணி... நாம தானே ஜாக்கிரதையா இருக்கணும்... என்ன அண்ணி அனுமதின்னு எல்லாம் கேட்கறீங்க? நீங்க கூப்பிடுங்க அத்தை வருவாங்க... இங்க நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் அத்தை எனக்கு சொல்லிக் கொடுத்துட்டாங்க... நான் மேனேஜ் செய்துக்கறேன்... இப்போ நீங்க ரெஸ்ட்ல இருக்கணும் அண்ணி... அது தான் ரொம்ப முக்கியம்...” என்று ஷிவானி சொல்லவும், அதைக் கேட்டுக் கொண்டே வந்த புகழிடமும், மல்லிகா விஷயத்தைச் சொல்ல, புகழும் மகிழ்ந்து போனான்.

“அக்கா... நிஜமாவா...” என்று கேட்டவன், ஷிவானியின் கையில் இருந்து போனைப் பிடுங்காத குறையாக பிடுங்கி பேசி விட்டு வந்தான்.

“அம்மா... நாளைக்கு காலையில நான் உங்களை அக்கா வீட்ல கொண்டு விட்டுட்டு வரேன்... உங்களுக்கு தேவையானதையும், மறக்காம, மாத்திரையையும் எடுத்து வச்சிக்கோங்க...” என்று புகழ் சொல்லவும்,

“நானும் உங்க கூட வந்துட்டு திரும்ப வரேன்... அண்ணியைப் பார்த்தது போல இருக்கும்...” என்ற ஷிவானி, என்ன எல்லாம் எடுத்துச் செல்வது என்று பட்டியலிடத் துவங்கினாள்.

“நாம கார் தான் எடுத்துட்டு போறோம்...” என்று புகழ் சொல்ல,

“நாம... கா...ரை எடுத்துட்டு போறோம்... அண்ணிக்கு நிறைய பழம் எல்லாம் வாங்கிட்டு வரணும்... அப்பறம் பால்ல குங்குமப்பூ போட்டு குடிக்க அதையும் வாங்கணும்... இங்க எனக்கு தெரிஞ்ச ஒரு கடை இருக்கு... அங்க ரொம்ப சுத்தமா இருக்கும்ன்னு அம்மா சொல்லுவாங்க...” என்று அத்தனை நேரம் இருந்த பிணக்கம் மறந்து போய், பேசிக் கொண்டே சென்றவளைப் பார்த்த புகழ் சிரித்துவிட்டு,

“சரி... அஞ்சு நிமிஷத்துல கிளம்பு... நானே உன்னை கூட்டிட்டு போறேன்...” என்றவன், சேரில் அமர,

“இப்போவே நான் ரெடி தான்... சுடிதார்ல தானே இருக்கேன்... போகலாம்...” என்று உற்சாகத்துடன் சொல்லும் தனது மனையாளைப் பார்த்த புகழுக்கு அவளை கொஞ்ச வேண்டும் போல ஆவல் எழுந்தாலும், இது நேரமல்ல என்று தெளிந்து, அவளுடன் கிளம்பிச் சென்றான்.

பாதாம், பழங்கள், ஸ்வீட் என்று ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவள், மல்லிகாவிற்கு அனைத்தையும் எடுத்து பேக் செய்து கொடுத்து உதவினாள்.

அவளது துறுதுறுப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த புகழுக்கு பசி வயிற்றை கிள்ளத் துவங்கி இருந்தது. ஷிவானியோ அந்த நினைவே இல்லாமல், மல்லிகாவுடன் வளவளத்துக் கொண்டு அவருக்கு பையை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

மணி ஒன்பதரை ஆகி, புகழின் பசி மிஞ்சிக் கொண்டிருக்க, ‘தனக்குத் தானே உதவி...’ என்று நினைத்துக் கொண்டவன், அவனே கிட்செனில் என்ன இருக்கிறது என்று பார்க்கத் தொடங்கினான்.

தோசையோ, இட்லியோ செய்ய முடியாத அளவிற்கு மாவும் இல்லாமல் இருக்கவும்,

“இப்படி மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்னைப் பட்டினி போடறாங்களே... என்னைப் பத்தி ரெண்டு பேருக்கும் நினைவு இருக்காப் பாரு...” என்று நினைத்துக் கொண்டவன், பொங்கல் செய்ய எண்ணி, அதை அடுப்பில் ஏற்றிவிட்டு, ஹாலில் வந்து அமர்ந்தான்.

மெதுவாக எடுத்து வைத்துவிட்டு வெளியில் வந்தவள், குக்கரின் சத்தத்தில் மணியைப் பார்த்து, “ஹையோ... அத்தை... மணி ஒன்பதரை...” என்று அலற,

“ஹ்ம்ம்... ஆமா... சப்பாத்தி செய்யலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேனே... குக்கர்ல இவன் என்ன வச்சிருக்கான்?” என்று மல்லிகா ஷிவானியிடம் கேள்வி கேட்க,

“அவளுக்கு என்ன தெரியும்? வச்சவன் நான்... எனக்குத் தானே அது என்னன்னு தெரியும்...” என்று கேட்ட புகழ்,

“உங்க ரெண்டு பேருக்கும் தான் என் நியாபகமே இல்லையே... அதான், நானே என் வயித்தை பார்த்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்... அது தான் பொங்கல் வச்சிட்டேன்...” அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“இந்த நேரத்துலையா?” என்று ஷிவானி கேட்க,

“பின்ன மாவும் இல்ல... என்ன செய்யப் போறீங்கன்னும் தெரியல... அது தான் நான் இதை செய்துட்டேன்...” என்றவன்,

“நாளைக்கு நேரத்துலையே கிளம்பனும்... சீக்கிரம் சாப்பிட்டு படுங்க... ஊறுகாய் தொட்டு சாப்பிட்டுக்கலாம்...” என்று சொல்லிவிட்டு, குக்கரை எடுத்து வந்து டேபிளில் வைக்க, ஷிவானி வேகமாக பரிமாறத் துவங்கினாள்.

மறுநாள் அதிகாலையிலேயே சித்ராவின் வீட்டிற்குக் கிளம்பியவர்கள், ஒரு மணி நேரத்தில் அவளது வீட்டை அடைந்தனர். சித்ராவைப் பார்த்த ஷிவானி, “சூப்பர் அண்ணி... குட்டிப் பாப்பா வரப் போகுதா?” என்று குதூகலிக்க,

“எங்க வீட்ல நீ வந்த நேரம் தான் சிவா... எல்லாமே சந்தோஷமா நடக்குது...” என்று ஷிவானிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த சித்ரா, எப்பொழுதும் முகத்தில் இருக்கும் இறுக்கம் சற்று குறைந்தார் போன்று, மனம் நிறைந்து புன்னகைத்துக் கொண்டிருந்த தனது தம்பியின் மீது பார்வையை பதித்தபடி கூற, புகழ் காதலுடன் ஷிவானியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணி...” என்று மறுத்தவள்,

“நிறைய பழம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்... சாப்பிடுங்க... அத்தைக்கு தான் நான் தனியா சமாளிப்பேனான்னு ரொம்ப கவலை... அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அண்ணி... உங்க ஹெல்த்தை அத்தை பார்த்துக்குவாங்க... நீங்க ரெஸ்ட் எடுங்க...” என்று படபடவென்று பேச, புகழ், அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“சரிங்க பாட்டி... நான் பத்திரமா இருக்கேன்...” என்று சித்ரா ஷிவானியை கிண்டல் செய்யவும்,

“என்னங்க என்னைப் போய் பாட்டின்னு சொல்றாங்க...” என்று ஷிவானி சிணுங்க,

“பின்ன... நீ இப்படி அட்வைஸ் பண்ணினா அப்படித் தான் சொல்லுவாங்க...” என்று புகழும் காலை வாரிவிட, சித்ராவும் மல்லிகாவும் சிரிக்க, அந்த மகிழ்ச்சியுடனே மதிய உணவை முடித்துக் கொண்டு, புகழும் ஷிவானியும் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.

அவனுடன் தனியே ஒரு மணி நேரமானாலும், அந்த பயணம் ஷிவானிக்கு இனிமையைக் கொடுத்தது. அவனுடனான தனிமையை ரசித்துக் கொண்டே வந்தவள், மெல்ல நகர்ந்து அவன் தோளில் சாய,

“வண்டி ஓட்டும் போது இப்படி சாஞ்சா நான் எப்படி வண்டியை ஓட்டறது?” என்று புகழ் கேட்க,

“ஹ்ம்ம்... அப்போ கதையில எல்லாம் சொல்றது எப்படியாம்?” என்று அவள் முணுமுணுக்க, அதை காதில் வாங்கிய புகழ்,

“அதெல்லாம் கதையில தான் சரியா வரும்... இப்படி நீ படுத்தா... உன்னை நான் வேடிக்கைப் பார்த்துட்டு நான் எங்க வண்டியை ஓட்டறது?” என்று சொன்னவன், எதையோ நினைத்து மனதினில் சிரித்துக் கொள்ள, அவனது இதழோரம் சிரிப்பில் துடித்தது.

“என்ன? சிரிக்கிற மாதிரி இருக்கு?” அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல... நான் சிரிக்கிற மாதிரி நீ கனவு கண்டிருப்ப...” என்று நக்கல் செய்தவன், அதற்கு மேல் மிகுந்த கவனத்துடன், காரைச் செலுத்துவதில் ஈடுப்பட்டான்.

“எனக்கு என்ன கனவு காண்ற வியாதியா?” என்று முதலில் நினைத்தவள், “ஒருவேளை இவர் எதுக்கு எடுத்தாலும் சிரிக்கிறதுனால அப்படித் தோணுதோ?” என்று நினைத்துக் கொண்டு கண்களை மூட, நன்றாக உறங்கியும் போனாள்.

இதழ்களை சிறு கீறல் அளவு பிளந்துக் கொண்டு அவள் உறங்கும் அழகை ரசித்துக் கொண்டு வந்தவன், வீடு வந்ததும், ஷெட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, மெல்ல அவளது கன்னத்தைத் தட்ட, ஷிவானி கண்களை திறந்துப் பார்த்தாள்.

“நீ உள்ளப் போ... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நான் கடைக்கு போயிட்டு வரேன்... ரெண்டு வீட்டுல சர்வீஸ்க்கு வேற கூப்பிட்டு இருக்காங்க... வர டைம் ஆகும்... நீ கதவைப் பூட்டிக்கோ... என்னோட சாவியை போட்டு திறந்துட்டு வந்துக்கறேன்...” என்று சொன்னவன், அவள் திகைத்து நிற்பதை கூட கவனிக்காமல், வீட்டைத் திறந்து, தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் செல்ல, முதல் முறையாக ஷிவானி பேச்சற்று நின்றிருந்தாள்.

எதுவும் செய்யத் தோன்றாமல் நின்றிருந்தவளுக்கு, அந்த வீட்டின் வெறுமை முகத்தில் அறையத் துவங்க, திக் திக் என்று நெஞ்சம் அடித்துக் கொள்ளத் துவங்கியது.

“சிவா... ஒண்ணும் இல்ல... பேசாம படுத்து தூங்கிடு...” என்று தனக்குத் தானே தேறுதலாக பேசிக் கொண்டவள், அறைக்குச் சென்று வேகமாக உடையை மாற்றிக் கொண்டு வந்தவள், சோபாவில் படுத்துக் கொண்டு, டிவியில் பாட்டை ஓட விட்டுக் கொண்டு, கண்களை மூடிப் படுத்தாள்.

படுத்தாலும் உறக்கம் வந்துவிடுமா என்ன? காரில் ஒரு மணி நேரம் நன்றாக உறங்கியவளுக்கு உறக்கமும் எட்டாக்கனியாக மாறிவிட, மனம் என்னும் குரங்கு தனது வேலையைச் செவ்வனே செய்யத் துவங்கியது.

“அம்மாவும் இல்ல... நான் தனியா என்ன செய்வேன்னு கொஞ்சமாவது இனியனுக்கு தோனிச்சான்னு பாரு... என்னவோ விட்டுட்டு போனா சரின்னு ஓடிப் போயிட்டார்...” என்ற முதல் புலம்பல் மனதினில் வந்து முகாமிடத் துவங்கியது.

“ஹ்ம்ம்... என்ன வேலையோ? உழைப்பு மனுஷனுக்கு முக்கியம் தான்... அதுக்குன்னு குடும்பம் குட்டி எல்லாத்தையும் இப்படியா கண்டுக்காம இருக்கறது?” என்று நினைத்துக் கொண்டவள், தன் தலையிலேயே தட்டிக் கொண்டு,

“அவரைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் இப்படி நினைச்சுருக்க கூடாது... சும்மா இருந்தா தான் என்ன என்னவோ தோணுது... பேசாமா நைட்க்கு என்ன டிபன் செய்யறதுன்னு பாரு...” என்று தனக்குள் என்று தனக்குள் அறிவுறுத்திக் கொண்டே, எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.

இப்பொழுது புகழின் நினைவு பின்னுக்குத் தள்ளப்பட்டு, மல்லிகாவின் பிரிவே அவளை மிகவும் வாட்டத் துவங்கியது. அவளுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டி, அவளுக்கு சரி சமமாக சினிமா, கேலி என்று எதையாவது பேசிக் கொண்டே அவளை அந்த வீட்டில் ஒருத்தி போல, பாங்காக அந்த குடும்பத்தில் ஒருத்தியாக பதிய வைத்தவர் இல்லாமல் ஷிவானிக்கு தான் என்னவோ போல் இருந்தது.

“அத்தை இருந்தா... இத்தனை நேரம் சமையல் முடிச்சு இருப்பாங்க...” என்று ஒவ்வொன்றுக்கும் மல்லிகாவின் நினைவே வர, ஷிவானிக்கு தன் மீதே ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது.

“இனியனை விட நான் அத்தை இல்லாதததை இவ்வளவு ஃபீல் பண்றேன்னா... அப்போ இனியன் என்னை இந்த வீட்ல பதிய வைக்கிற அளவுக்கு என்னை நடத்தலையா? எல்லா பெண்களுக்கும் கணவன் தானே அந்த வீட்ல இருக்கறவங்களோட கம்ஃபர்ட் லெவலைக் கொடுக்கணும்... அது செய்தாரா? என்னைக்காவது அவங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசி இருக்காரா?” அவளது யோசனைகள் நீண்டுக் கொண்டே போக, மூளையில் தோன்றிய ஒரு விஷயம் அவளது மனதினில் சுள்ளென்று சுட்டது.

“இனியன் தன்னிடம் என்றைக்காவது தனது குடும்பத்தைப் பற்றியும், தனது விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் சொல்லிருக்கிறானா? திருமணம் முடிந்த நாள் முதலே, அவளது பேச்சுக்கும் சில சமயம் பதில் வந்தாலும், பல சமயங்கள் வெறும் புன்னகையால் பதில் கூறியவன், கடை விஷயத்திற்கு கேட்டதோடு சரி... தன்னைப் போல, எதையுமே கூறியதில்லையே... அப்பொழுது அவனது மனதில் தான் எந்த இடம்?” என்ற கேள்வி அவளது மண்டையைக் குடையத் துவங்க, அதற்கான விடையை அறிய, அவள் புகழ் பேசிய அனைத்தையும் மீண்டும் மனதினில் ஓட்டிப் பார்க்க, ஷிவானிக்கு தலைவலி எடுக்கத் துவங்கியது.

எதையுமே சொல்லாமல்... மொத்தமாக புகழ் அவளிடம் பேசியவைகளை கணக்கில் கொண்டால், ஷிவானி ஒரு நாளைக்கு பேசும் வார்த்தைகளை விட, அவன் பேசியது குறைவு என்பது உரைக்கவும், ஷிவானிக்கு அழுகை வந்தது.

அது போல வேண்டாத எண்ணங்கள் மனதை குடையத் துவங்க, தலை வலியின் தொல்லை வேறு பாடாய் படுத்த, சூடாக ஒரு காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தவள், டிவி சேனலை மாற்றி, அதில் ஏதோ படம் ஓடிக் கொண்டிருக்கவும், அதைப் பார்க்கத் தொடங்கினாள்.

இரவு உணவும், புகழ் வந்த பிறகு உண்ணலாம் என்று அவள் காத்திருக்க, வெகுநேரம் கழித்தே வீட்டிற்கு வந்தவன், “சிவா... பசிக்குது... டிபன் எடுத்து வை...” என்று கூறிவிட்டு, அறைக்குச் சென்று, சுத்தமாகி வந்தவன், அவள் எடுத்து வைத்திருந்த தட்டில் அமர்ந்து, உணவுண்ணத் துவங்க, ஷிவானியின் பசியும் அவளை அமரும் படி கெஞ்சியது.

புகழ் ஒரு வார்த்தை அவள் சாப்பிட்டாளா? என்று விசாரிப்பான் என்று எதிர்ப்பார்த்து கொண்டு நிற்க, அவளைப் பற்றிய எந்த எண்ணமும் இன்றி புகழ் உண்டு கொண்டிருக்க, என்ன செய்வதென்று புரியாமல் ஷிவானி நின்றிருந்தாள்.

அவன் உண்டு முடித்து எழுந்து கொள்ளவும், தான் இப்பொழுது சாப்பிட அமர்ந்தால், அவன் கேட்பான் என்று நினைத்து, ஷிவானி சாப்பிட அமர, அவளைத் திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல், கையைக் கழுவிக் கொண்டு, அறைக்குச் செல்ல, உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.

எதுவோ ஏமாற்றம் மனதினில் தோன்ற, அதுவும் உணவைப் போல தொண்டையில் சிக்க, அதை உணவுடன் சேர்ந்து தண்ணீருடன் விழுங்கியவள், வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்த பசிக்காக உண்டுவிட்டு, எழுந்து சமையல் அறையை ஒதுக்கி வைத்துவிட்டு படுக்கை அறைக்கு வர, புகழ் குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
16

தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆகா

உயிர் கரைவதை நானே கண்டேன்

கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்

அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்

வேறு என்ன வேண்டும் வாழ்வில

தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்

குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்த புகழைப் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதை விட கோபம் கண்களை மறைக்க, இருந்த கடுப்பில் தொப்பென்று அவனை எழுப்பிவிடும் நோக்கத்தோடு அளவிற்கு படுக்கையின் மேல் விழ, அந்த அசைவிற்கும், ‘மெல்லம்மா’ என்று கூறிவிட்டு, திரும்பிப் படுத்தானே ஒழிய, கண்களைக் கூடத் திறக்காமல் இருக்கவும், அவனது கையை நறுக்கென்று கிள்ளினாள்.

“சிவா... எனக்கு தூக்கம் வருது... ரொம்ப டயர்ட்டா இருக்கு...” என்று அவளது கிள்ளளையும், கொசுக் கடித்தது போல சாதாரணமாகச் சொன்னவன், தனது உறக்கத்தைத் தொடர, பல்லைக் கடித்துக் கொண்டு ஷிவானி உறங்க முயற்சித்தாள்.

“நல்ல குறட்டை விட்டு தூங்கறதைப் பாரு... இங்க ஒருத்தி இருக்காளே... அம்மா இல்லாம தனியா என்ன செய்தான்னு கேட்க தோணுதா? வந்து நல்லா கொட்டிக்கிட்டு தூங்குது பாரு... மனுஷன் மௌன சாமியாரா போயிருக்க வேண்டியவர்... இப்படி புகழா வந்து என் மனசைக் கெடுத்து, இப்படி அர்த்த ராத்திரியில புலம்ப விட்டுட்டு இருக்காரே... இது அந்த பேய்க்கே அடுக்குமா?” என்று புலம்பிக் கொண்டே அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

காரில் வரும் போது உறங்கி இருந்தாலும், அலைச்சலும், மனஅலைபுருதலும் அவளை உறக்கத்தில் ஆழ்த்த, ஷிவானி உறங்கியும் போனாள்.

அதிகாலை சுகமான கனவில் இருந்தவளின் மீது புகழின் கைகள் படர்ந்து, அவளைத் தழுவ, கனவு தான் போலும் என்று நினைத்துக் கொண்டவள், அவனது ஆசைத் தழுவலை ரசிக்கத் தொடங்க, புகழின் இதழ்கள் அவள் மேனியில் ஊர்ந்தது. அப்பொழுதும் கனவு என்று எண்ணி கண் மூடிக் கிடந்தவள், புகழ் முழுதாக அவளை எடுத்துக் கொண்ட பிறகே, அது கனவல்ல நிஜம் என்பதை உணர முயன்று கண்களைத் திறந்துப் பார்க்க முயல, அதற்கும் முடியாமல், அதிகாலை உறக்கம் அவளை தன்னுள் இழுத்துக் கொள்ளத் துவங்கியது.

“புகழ்... தூக்கம் வருது...” உறக்கத்தில் இழுக்க, அவள் முணுமுணுக்க, எதுவும் பேசாமல், அவளது தலையை தன் மார்பில் எடுத்து வைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் இதழ்களைப் பதித்து, தலையில் மெல்ல தட்டிக் கொடுக்க, ஷிவானியும் நன்கு உறங்கிப் போனாள்.

ஷிவானி உறங்கினாலும், புகழுக்கு உறக்கம் வர மறுத்தது. அவளை அணைத்துக் கொண்டே சிறிது நேரம் படுத்திருந்தவன், அவள் மீண்டும் நன்றாக உறங்கத் துவங்கவும், மெல்ல அவளது தலையை தலையணையில் கிடத்தி விட்டு, எழுந்து குளித்துவிட்டு, வேலைகளைப் பார்க்கத் துவங்கினான்.

பாலை காய்ச்சி, காலை உணவையும் தயார் செய்து வைத்தவன், ஷிவானியின் அருகே சென்று அவளது கன்னத்தில் இதழ் பதிக்க,

“ராத்திரியில இருந்து உங்களுக்கு இதே வேலையாப் போச்சு... எனக்கு தூக்கம் வருது... தூங்கணும்... மணி ஆறு தானே ஆகுது...” என்று அவள் திரும்பிப் படுக்கவும்,

“சரி... தூங்கு... டிபன் செய்து வச்சிருக்கேன்... எழுந்த உடனே அதை சாப்பிட்டுட்டு காபி குடி... நான் கடைக்குக் கிளம்பறேன்...” என்று அவளிடம் சொல்லிக் கொண்டே, பீரோவில் இருந்து உடையை எடுத்துக் கொண்டிருக்க,

“காலங்க்கார்த்தால உங்களுக்கு எந்த கஸ்டமர் வந்து உட்கார்ந்து இருக்கப் போறாங்க... அதுவும் ஆறு மணிக்கே... உங்களோட சின்சியாரிட்டிக்கு அளவே இல்லாம போச்சு...” என்று அவள் முணுமுணுக்க, அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன்,

“மணி எட்டரை ஆகுது... அதாவது உன்னோட விடியற்காலை... முடிஞ்சா... ஒரு ஒன்பது மணிக்கா எழுந்துக்க ட்ரை பண்ணு... எனக்கு விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு... நான் கடைக்குக் கிளம்பறேன்...” என்று சொல்லிவிட்டு, அவன் கிளம்பிக் கொண்டிருக்க, ‘என்னது?’ என்று அதிர்ச்சியுடன் ஷிவானி எழுந்துக் கொண்டாள்.

அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்த புகழுக்கு சிரிப்பாக வந்தது. அவளைப் பார்க்காமல் திரும்பி நின்றுக் கொண்டவன், முகம் பார்க்கும் கண்ணாடியில், அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, என்னவோ யோசிப்பதும், புகழைப் பார்ப்பதுமாக இருந்தவள்,

“நீங்க என் தலையை எடுத்து தட்டிக் கொடுத்தீங்க தானே... அதுக்கு முன்னாடி...” எப்படி கேட்பது என்று புரியாமல், மென்று விழுங்கிக் கொண்டு அவள் கேட்க,

“ஹ்ம்ம் ஆமா... அப்போவே மணி ஆறரை இருக்குமே...” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்லவும், ‘ஓ...’ என்று வாய் பிளந்தவள், மெல்ல எழுந்து, தனது உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள, புகழ் கிளம்பி, அவள் வரவுக்காக காத்திருந்தான்.

இன்னமும் ஏதோ யோசனையுடன் வந்தவளைப் பார்த்து, “உனக்கு தனியா இருக்க பயமா இருந்தா... உங்க அம்மா வீட்ல கொண்டு விடறேன்... அங்க இருந்துட்டு சாயந்திரமா வரியா?” என்று அவன் கேட்கவும்,

“ஆமா... அது தான் பெஸ்ட்...” என்று மனதில் நினைத்துக் கொண்டு,

“உங்களுக்கு டைம் ஆச்சுன்னு சொன்னீங்களே... நீங்க கிளம்புங்க... நான் போய்க்கறேன்...” அவள் பதில் சொல்ல,

“சரி... பார்த்து ஜாக்கிரதையா பூட்டிட்டு போ... மதியம் நான் கடையிலயே சாப்பிட்டுக்கறேன்...” என்று சொல்லிவிட்டு அவன் வாசல் கதவு வரைச் செல்ல, அப்பொழுது ஷிவானியின் போன் அலற, அதை அசட்டை செய்து, புகழை வழியனுப்ப அவனுடன் நடந்தவளை தடுத்து,

“போன் அடிச்சா... என்னன்னு பார்க்கணும்... போய் பாரு...” என்று புகழ் அவளை அனுப்பி வைக்க,

“இந்த சட்டம் எல்லாம் எங்களுக்குத் தான் போல...” என்று முணுமுணுத்துக் கொண்டே, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவள், ‘என்னது’ என்று அதிர, வாசலுக்குச் சென்ற புகழ் அவளது அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தான்.

“என்ன ஆச்சு? என்ன?” என்று அவன் கேட்க,

“எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சாம்...” என்று முழித்துக் கொண்டு சொன்னவளைப் பார்த்த புகழ்,

“சரி... லேப்டாப்பை எடுத்து பாரேன்... அதுக்கு இப்படி நிக்கற? உனக்கு பயமா இருந்தா... நான் வேணா பார்த்துச் சொல்றேன்...” என்று அவன் சொல்லவும்,

“என் பிரெண்ட்டே பார்த்துட்டாளாம்...” என்று மென்று விழுங்கியவள், புகழைப் பார்த்து இன்னமும் விழித்துக் கொண்டிருக்க, அந்த முழி, அவளது பரிட்சை ரிசல்ட் சரி இல்லை என்பதை சொல்லாமல் சொல்ல, புகழ் சோபாவில் மீண்டும் அமர்ந்தான்.

“சரி... இரு உன் நம்பர் சொல்லு... நான் பார்க்கறேன்... மோசமா எல்லாம் வந்திருக்காது...” கூறிக் கொண்டே, தனது லேப்டாப்பை திறக்க,

“ஆமா... ஆமா... எனக்கும் டவுட் தான்... சீக்கிரம் ஓபன் பண்ணுங்க...” என்று அவள் ஆர்வம் காட்டவும், புகழும், அவசரமாக ஓபன் செய்தான்.

“நம்பர் போடுங்க... நம்பர் போடுங்க...” என்று அவள் அவசரப்படுத்தவும், நம்பரைக் கேட்டு போட்டுப் பார்த்தவன், அவள் அனைத்திலும் தேர்ச்சிப் பெற்றிருக்கவும், குழப்பமாக அவளைத் திரும்பிப் பார்க்க,

“ஹையோ... என்ன கொடுமை சரவணா... இப்படி எல்லாத்துலையும் பாஸ் பண்ணிட்டேனே... சசிக்கு ஷாக்ல பேச்சே வராதே...” என்று அவள் புலம்பவும், புகழ் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“நம்ம கல்யாணத்தப்போ நீ என்ன எக்ஸாம் எழுதின?” அன்று அவள் செய்த அலும்புகளை மனதில் மீண்டும் ஓட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டே கேட்டவனுக்கு,

“இனியன்... அது தான் கொடுமையே... அதுல 90 மார்க் வாங்கி இருக்கேன்...” திகைப்பு விலகாமல் ஷிவானி சொல்லவும், புகழ் அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.

“ஹான்...” என்று அவள் விழி விழித்துப் பார்க்க, புன்னகையுடன் கிளம்பிச் சென்றவன், வாயிலில் பைக்கை எடுத்து விட்டு, அவளுக்கு கை அசைத்து விட்டுச் சென்றான்.

“ஹையோ... மாம்ஸ் செம மூட்ல இருப்பார் போலயே... டிபன் எல்லாம் செய்து அசத்தி இருக்கார்” என்று நினைத்துக் கொண்டவள்,

“சரி... இப்போ நாம சசிக்கு போய் ஷாக் கொடுப்போம்...” என்ற ஐடியாவில், உடனே வேகமாக புகழ் செய்து வைத்திருந்த டிபனை விழுங்கிவிட்டு, செல்லையும் பர்சையும் எடுத்துக் கொண்டு, தனது வீட்டை நோக்கி நடந்தாள்.

“ஆனாலும் இந்த மனுஷன் ஊமை குசும்பு போல, ஓவர் ரொமாண்டிக்கா தான் இருக்கார்... அந்த இதோட ஒரு வாழ்த்தை சொல்லி இருந்தா நல்லா இருக்கும்... இல்ல நான் இன்னைக்கு கடைக்கு போகலம்மா... வா உன்னை வெளிய கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கும்... ஹ்ம்ம்... இப்படி புலம்ப விட்டுட்டியே புகழ்இனியா...” என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், கதவைத் தள்ளித் திறந்துக் கொண்டு,

“ஆத்தா... நான் பாஸ் ஆகிட்டேன்...” என்று ஸ்லோ மோஷனின் ஓட, சமையல் அறையில் இருந்த சசி வெளியில் வந்து, அவளுக்கென வாங்கி வைத்திருந்த முந்திரிக் கேக்கை அவள் வாயில் திணிக்க, அதை விழுங்கிக் கொண்டே,

“உனக்கு எப்படித் தெரியும்?” என்று அவள் சைகையில் கேட்க, பாஸ்கர் சிரித்துக் கொண்டே தனது மொபைலை எடுத்துக் காட்டினார்.

“ஆனாலும் இதெல்லாம் ஓவர்... நேத்து நைட்டே ரிசல்ட் வந்துடுச்சுன்னு அந்த சுகு சொன்னா...” என்று அவள் சொல்லவும்,

“நாங்க இன்னைக்கு தான் பார்த்தோம்... சரி எப்படியும் நீ ஓடி வருவேன்னு தெரியும்... அது தான் அப்பா ஸ்வீட் வாங்கிட்டு வந்து வச்சிருந்தார்...” என்று சசி சொல்லிவிட்டு,

“மாப்பிள்ளை கொண்டு வந்து விட்டுட்டு போனாராம்மா...” என்று கேட்க, ஷிவானி மறுப்பாக தலையசைத்து, இன்னொரு முந்திரிக் கேக்கை வாயில் போட்டுக் கொள்ள,

“அவருக்கு ரிசல்ட் வந்தது தெரியுமா?” என்று பாஸ்கர் கேட்கவும்,

“தெரியும்ப்பா... அவரும் இருந்து பார்த்துட்டு தான் போனார்...” அவனது இதழ்கள் சொன்ன வாழ்த்தை நினைத்து கன்னம் சிவந்தவள், இப்பொழுதும் காலையில் புகழ் அணைத்தது கனவோ என்ற யோசனைக்குச் செல்ல, அவளது முகத்தைப் பார்த்த சசி, வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு,

“வீட்ல நீ என்ன சமையல் செய்த?” என்ற கேள்வியை எழுப்ப,

“அதுவா... இனியன் தான் காலையில டிபன் செய்தார்... நான் நல்லா தூங்கிட்டேன்...” அசடு வழிய சொன்னவளைப் பார்த்த பாஸ்கர், நாகரீகமாக நகர்ந்து சென்றார்.

“இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி...” என்ற சசி,

“மதியம் மட்டன் பிரியாணி செய்யலாம்ன்னு இருக்கேன்... மாப்பிள்ளையை இங்க சாப்பிட வரச் சொல்லு... உனக்கு வேற என்ன வேணும்?” என்று கேட்கவும்,

“வேணா அப்பாவை விட்டு அவரைக் கூப்பிடச் சொல்லும்மா... ஆனா... அவர் வருவாராங்கறது சந்தேகம் தான்... வரேன்னுட்டு வராம இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு... அதனால நீ அதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்க் கூடாது...” என்று எச்சரிக்கை செய்ய, அந்த எச்சரிக்கையில் ஒளிந்திருந்த ஏமாற்றம் சசிக்கு புரியவே செய்தது.

“என்னம்மா... மாப்பிள்ளை வராம இருக்கறது உனக்கு கஷ்டமா இருக்கா?” என்று சசி கேட்க,

“இல்லம்மா... அவர் அப்படித் தான்... எனக்கு பழக்கம் தானே... உனக்காகத் தான் சொல்றேன்...” என்று ஷிவானி புன்னகையுடன் சொல்ல, பாஸ்கரை அழைத்த சசி, புகழுக்கு போன் செய்து அழைக்கச் சொல்ல, பாஸ்கரும் அப்படியே செய்தார்.

“வரேன்னு சொல்லிருக்கார் சசி... நல்லா சமையல் செய்... ஒரு ரெண்டு வகை ஸ்வீட் செய்துடு... நான் ஒரு மணிக்கு கரெக்ட்டா வந்துடறேன்...” என்று கூறியவர்,

“பைடா சிவா... அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...” என்றுவிட்டு கிளம்பிச் செல்ல, பேசிக் கொண்டே ஷிவானியும் சசியும் வேலைகளை முடித்தனர்.

“அத்தைக்கு நீ பாஸ் ஆன விஷயத்தை போன் செய்து சொல்லிட்டியா?” என்று சசி கேட்க, அப்பொழுது தான் நினைவு வந்தவளாக,

“இன்னும் சொல்லவே இல்லம்மா...” என்றவள், “ஆமா... அவங்க ஊருக்கு போயிருக்கறது உனக்கு எப்படித் தெsரியும்?” என்று கேட்க,

“ஹ்ம்ம் ஊருக்கு போறதுக்கு முன்ன அவங்க சொல்லிட்டு தான் போனாங்க... நீ தான் சொல்லவே இல்ல...” குறைப்பட்டுக் கொண்டவர்,

“போய் பேசிட்டு வா...” என்று அனுப்பி வைக்க, ஷிவானியும் அவருடன் பேசிவிட்டு வரும்போது, புகழ் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைய, ஷிவானி ஆச்சரியத்தில் விழி விரித்து நின்றாள்.

“என்ன இன்னைக்கு எல்லாமே கனவுல நடக்கற மாதிரியே இருக்கே?” என்று அவள் நினைத்துக் கொண்டு நிற்க, அவள் அருகே வந்தவன், அவள் அவனை அதிசயமாக பார்த்துக் கொண்டு நிற்பதை கவனித்து,

“இன்னைக்கு நடந்தது எதுவுமே கனவு இல்ல வணி... உள்ள போகலாமா?” என்று கேட்க, அவனை அழைத்துக் கொண்டு ஷிவானி உள்ளே வரவும், சசி, அவனை உபசரிக்கத் தொடங்கினார்.

“என்ன இன்னைக்கு அதிசயமா சாப்பிட சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று ஷிவானி கேட்கவும், பதில் எதுவும் சொல்லாமல் அவளிடம் ஒரு கவரை எடுத்து புகழ் நீட்ட, அதை வாங்கி பிரித்துப் பார்த்த ஷிவானியின் கண்கள் சாசர் வடிவில் விரிய, அதைப் பார்த்த சசி,

“ரொம்ப நல்லா இருக்கு மாப்பிள்ளை...” என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க,

“என்ன அதிசயம் இனியன்? என்ன இது இப்படி சர்ப்ரைசா வாங்கிட்டு வந்திருக்கீங்க? எதுக்கு இது?” என்று ஷிவானி கேட்கவும்,

“நீ பாஸ் பண்ணினதுக்கு தான் சிவா... விக்ரம்கிட்ட விஷயத்தை சொன்னேனா... அவன் ‘என்ன கிஃப்ட் கொடுத்த’ன்னு கேட்டான்... அப்போ தான் எனக்கு என்ன கிஃப்ட் வாங்கறதுன்னு யோசனை வந்துச்சு... அது தான் நேரா கடைக்கு போய் வாங்கிட்டு வந்தேன்...” என்று அவன் சொல்லவும், ஷிவானி, அவனை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, அந்த புடவையை வருடினாள்.

“இந்த மரமண்டைக்கு யாராவது சொன்னா தான் புரியுமா? ஆனாலும் ஏதோ புடவை வாங்கணும்னு தோணி எடுத்துட்டு வந்திருக்காரே... அதுவே பெருசு... புடவை ரொம்ப அழகா இருக்கு...” என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்கவும், இன்னொரு பெட்டியை எடுத்து அவள் கையில் வைக்க, ஷிவானிக்கு திகைப்பில் பேச்சு மறந்து போனது.

“இது என்ன?” அவள் கேட்க, அந்த பெட்டியைப் பிரித்து காட்டியவன்,

“அன்னைக்கு கோவிலுக்கு போக ரெடியா இருந்த போது, இது போல செட் நகை போட்டுட்டு இருந்தியா? அது தான் இந்த புடவைக்கு நல்லா இருக்கும்ன்னு வாங்கினேன்... அப்பறமா கோல்ட்ல வாங்கித் தரேன்...” என்று புகழ் நீண்ட விளக்கம் சொல்லவும், இது புகழ் தானா என்று சில நிமிடங்கள் யோசித்த ஷிவானி, அவனது ட்ரேட்மார்க் புன்னகை முகத்தைப் பார்த்து, ‘அவரே தான்’ என்ற முடிவுக்கு வந்தவளாக,

“ஹே சூப்பரா இருக்கு இனியன்... நீங்களேவா வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்று அதிசயித்து, மனதினில்,

“இதையும் வேற யாராவது சொல்லி இருக்க போறாங்க” என்று நினைத்துக் கொண்டிருக்க,

“சாயந்திரம் கோவிலுக்கு போகலாம்...” அடுத்த அதிர்ச்சியை புகழ் கொடுக்கவும்,

“திரும்பவும் மொதல்ல இருந்தா?” என்று ஷிவானி மனதினில் நொந்துக் கொண்டாள்.

“நீங்க வந்ததுமே நான் கிளம்பிக்கறேன்... உங்க கடை வேலை என்னவோ எப்படியோ...” என்று சொன்னவள்,

“சூடா பிரியாணி சாப்பிடலாம் வாங்க...” என்று அழைக்க,

“இரு மாமா வரட்டும்... சேர்ந்தே சாப்பிடறேன்...” என்றவன், பாஸ்கரின் வருகைக்காக காத்திருந்தான்.

பாஸ்கர் வரவும், அவரை சிறிதும் பேச விடாமல், உணவறைக்கு அழைத்துக் கொண்டு சென்று, இருவருக்கும் உணவை ஷிவானி பார்த்துப் பார்த்து பரிமாறவும், சசி ஷிவானியை நினைத்து நிம்மதி கொண்டார்.

இங்கிருந்த வரை எப்படி இருந்தாலும், புகுந்த வீட்டிற்குச் சென்று அவள் பொறுப்பாகவும், பொறுமையாகவும் நடந்துக் கொள்வதைப் பார்த்தவர், அவளையும் அமர வைத்து உணவு பரிமாறினார்.

“நீ இங்கயே ரெடியா இரு சிவா... நான் நேரா இங்க வந்து கூட்டிட்டு போறேன்...” என்று சொல்லிவிட்டு, புகழ் கடைக்குக் கிளம்பவும், ஷிவானி பொதுவாக தலையாட்டி வைத்தாள்.

மாலை ஐந்து மணியானதும், “சிவா... நீ ரெடியா இரு... மாப்பிள்ளை வாங்கிட்டு வந்த புடவையை கட்டிக்கோ...” என்று சசி தனது பாட்டைத் தொடங்க,

“அவர் வரட்டும்மா... சும்மா எல்லாம் ரெடி ஆகிட்டு இருக்க முடியாது...” என்று அன்று ஏமாந்தது போல இன்றும் ஏமாறக் கூடாது என்ற எண்ணத்துடன் அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, புகழ் கேட்டைத் திறக்க, அதைப் பார்த்து மயக்கம் போடாத குறையாக, நின்றிருந்த ஷிவானி,

“ஹையோ அம்மா... நிஜமாவே உன் மாப்பிள்ளை வந்துட்டாரும்மா... நான் ரூம்ல போய் ரெடியாகறேன்... நீ அவருக்கு காபி கொடுத்து சமாளி...” என்று சொல்லிவிட்டு, தனது அறைக்கு ஓட்டமெடுக்க,

“சிவா... அப்படியே குளிடா... அவர் வந்தாலும் ஒரு குளியலைப் போடச் சொல்லு... அசைவம் சாப்பிட்டு இருக்கீங்க...” என்று அவர் கத்துவதைக் கேட்டு திரும்பிப் பார்த்தவள், ‘சரி...’ என்று தலையசைத்து விட்டு அறைக்குள் செல்ல, சசியும், அவள் சொன்னது போலவே செய்தார்.

“அத்தை... சிவா எங்க?” காபியை குடித்துக் கொண்டே புகழ் கேட்கவும்,

“அவ ரெடி ஆகிட்டு இருக்கா மாப்பிள்ளை...” என்று சசி சொல்லவும், பையில் இருந்த ஒரு பூ கவரை எடுத்து சசியிடம் கொடுத்தவன், “ஷிவாவை வச்சிக்க சொல்லுங்க...” என்று சொல்ல, புன்னகையுடன் வாங்கிக் கொண்டவர்,

“இதை நீங்களே அவகிட்ட கொடுத்திருங்க...” என்று பாதியை கிள்ளி அவனிடம் கொடுத்து,

“அப்படியே நீங்களும் பிரெஷ் ஆகிட்டு வாங்க” என்று அனுப்பி வைக்க, புகழ் ஷிவானியின் அறைக்குச் சென்று, கதவைத் தட்டிவிட்டு நின்றான்.

கதவைத் திறந்தவளைப் பார்த்தவன், அதிசயித்து நிற்க, அதை விட அவன் கையில் இருந்த பூவைப் பார்த்து ஷிவானி வாயடைத்துப் போயிருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க,

“சிவா... இருட்டறதுக்கு முன்ன கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போங்க... இப்போ சீக்கிரம் ரெடி ஆகுங்க...” சசி குரல் கொடுக்க, உள்ளே நகர்ந்து அவனுக்கு வழி விட்டவள்,

“போய் ஒரு குளியலைப் போட்டுட்டு வாங்க... சீக்கிரம் கிளம்பலாம்... இல்ல அதுக்கும் சேர்த்து சசி என்னைத் திட்டுவாங்க...” என்று சொன்னவள், மீண்டும் கண்ணாடியின் முன்பு நிற்க, அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டே புகழ் குளித்துவிட்டு வந்து, தயாராகி புறப்பட, ஷிவானி சந்தோஷமாக புறப்பட்டு போனாள்.

பைக்கின் பயணம் இருவருக்குமே உள்ளத்தில் மகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்க, அதைவிட, ஷிவானி அமர்ந்து அவனது இடுப்பில் கை போட்டு பிடித்துக் கொள்ளவும், அந்த ஸ்பரிசம் புகழுக்கு இனிமையைக் கொடுத்தது. கோவிலுக்கு சென்ற பின் அடுத்து என்ன என்பது போல ஷிவானி பார்க்க, புகழ் அமைதியாக வண்டியை எடுக்கவும்,

“இதுக்கும் ஒண்ணும் குறைச்சல் இல்ல...” என்று நினைத்துக் கொண்டவள், வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
17

அலுத்துப் போகாத உன்

நினைவுகளுடன்

இந்த நேரங்கள்

இனிமையாக கழிந்தாலும்

நீ அருகில் இல்லாத

சுவாரசியம் இல்லாத

அந்தக் குறை

எப்போதும் உண்டு தான்

வண்டியில் ஏறி அமர்ந்ததில் இருந்து, புகழின் அமைதி ஷிவானிக்கு எரிச்சலைக் கொடுக்க, “இப்போ எங்க போகப் போறோம்ன்னு சொல்லுங்க... மணி ஆறரை தான் ஆகுது... இந்த நேரத்துல எங்க?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, வண்டி செல்லும் வழியைப் பார்த்தவள்,

“என்னங்க? நாம எங்க போகப் போறோம்? இந்த நேரத்துல... இந்த ரோட்ல எதுக்கு கூட்டிட்டு போறீங்க?” ஷிவானி கேட்க,

“உன்னால கொஞ்ச நேரம் கூட வாயை சும்மாவே வச்சிட்டு வர முடியாதா?” என்று புகழ் கேட்கவும், அவள் பழிப்புக் காட்டி விட்டு, முகத்தைத் திருப்பிக் கொள்ள, அதை பக்கக் கண்ணாடி வழியாகப் பார்த்தவன், புன்னகையுடன், அவளை அங்கிருந்த ஒரு புகழ்பெற்ற ஒரு மாலிற்கு அழைத்துச் சென்றான்.

“அய்யோ... என்னங்க? இப்போ இந்த மாலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று ஷிவானி கேட்கவும்,

“ஆமா... இங்க தான் ஒரு படம் புக் பண்ணி இருக்கேன்... அதைப் பார்த்துட்டு, அப்படியே இங்கயே சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்...” என்று சொல்லிக் கொண்டே, புகழ் வண்டியை உள்ளே செலுத்தவும்,

“இந்தப் புடவையிலா?” என்று ஷிவானி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அங்கு மாலிற்குள் சென்றுக் கொண்டு இருந்தவர்கள், ஷிவானியைத் திரும்பி அதிசயப்பிறவியைப் போல பார்க்க, ஷிவானி தலையில் அடித்துக் கொண்டாள்.

“போற வரவங்க எல்லாம் என்னைப் பட்டிக்காடுன்னு நினைக்கப் போறாங்க... இதை முன்னாலயே சொல்லி இருந்தா... நான் அதுக்குத் தகுந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு வந்திருப்பேன் இல்ல... ஏன் இப்படி? சோளகொல்ல பொம்மை மாதிரி, பூ, நகை வேற...” என்று அவள் புலம்பிக் கொண்டே வர, வண்டியை நிறுத்திவிட்டு, புகழ் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“பட்டுப்புடவையோட யாராவது மாலுக்கு போவாங்களா?” ஷிவானி கேட்க,

“இதுவும் ஒரு டிரஸ் தானே... புடவை கட்டினா உள்ள வரக் கூடாதுன்னு யாரும் போர்ட் போடலையே...” என்று புகழ் பட்டென்று கேட்டு,

“உனக்கு சங்கடமா இருந்தா... வா... திரும்பிப் போயிடலாம்...” என்று சொல்லிவிட்டுத் திரும்ப, ஷிவானி திகைத்து விழித்தாள்.

“சீக்கிரம் சொல்லு...” என்று புகழ் நிற்கவும்,

“உள்ள போகலாம் வாங்க... ஏதோ... ஜீன்ஸ்சும்... ஃப்ரீ ஹேருமா இந்த இடத்தை சுத்தி இருக்கேனே... இப்போ இப்படி ஓவர் ட்ரெடிஷனலா வந்திருக்கோமேன்னு தானே கேட்டேன்... இங்க வரோம்ன்னு தெரிஞ்சிருந்தா மேக்கப்பை கொஞ்சம் குறைச்சு இருப்பேன்... எல்லாரும் என்னையே பார்த்துட்டு போற ஃபீல்” என்று சிறு குழந்தை போல சொல்லிவிட்டு,

‘எத்தனைப் பேரை கலாய்ச்சு இருப்போம் இன்னைக்கு நமக்கே திரும்ப அடிக்குதே’ என மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தவளை, கையை பிடித்து அழுத்தியவன், அவளுடன் கையைக் கோர்த்துக் கொண்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“உனக்கு என்ன வேணும் வணி... எது வேணா கேளு... வாங்கித் தரேன்...” என்று சொன்னவன், மெல்ல அவளுடன் கையைக் கோர்த்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்க,

“எத்தனை மணிக்கு சினிமாவுக்கு புக் பண்ணி இருக்கீங்க? இப்படி மெல்ல நடந்துட்டு இருக்கோமே?” ஷிவானி சந்தேகமாகக் கேட்க,

“அது எட்டு மணிக்குத் தான்... இப்போ கொஞ்சம் சுத்தலாம்...” என்றவன், ஒரு கடையினுள் அவளை அழைத்துச் செல்ல, அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்த ஷிவானி...

“எனக்கு புக்ஸ் வாங்கித் தரீங்களா?” என்று கேட்க, அதைக் கேட்ட புகழ் நக்கலாகச் அவளைப் பார்த்து சிரித்தான்.

“உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது... ஆனாலும் என்னோட மார்க்கைப் பார்த்த அன்னிக்கே இப்படி சிரிக்கக் கூடாது... நாங்க எல்லாம் பாட புக்கை தான் தொட மாட்டோம்... இந்த கதை புக்கை எல்லாம் நல்லாவே படிப்போம்... வீட்ல அத்தை இல்லாம போர் அடிக்குது... நான் கொஞ்சம் புக் வாங்கிக்கறேன்...” என்றவள், அவன் தலையசைக்கவும், சில புத்தகங்களை வாங்கிவிட்டு, மேலும் நகர, புகழும் அமைதியாக அவளுடன் நடந்தான்.

அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு கீ செயினைப் பார்த்துவிட்டு, அதை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றாள். இதய வடிவில் இருந்த வீட்டின் வாயிலில், ஒரு பெண் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு காத்திருப்பது போல இருந்தது அந்த கீ செயின். அதைப் பார்த்தவளுக்கு அதை வாங்கி புகழுக்கு கொடுக்கும் எண்ணம் எழ, புகழைத் திரும்பிப் பார்த்தாள். அவன் வேறெதுவோ சிடிகளை பார்த்துக் கொண்டிருக்கவும், அதை அவனுக்குத் தெரியாமல், கையில் வைத்துக் கொண்டவள், வாங்கிய புத்தங்களை பில் போட்டுக் கொண்டு சிறிது தூரம் வெளியே சென்றவள்,

“ஹி ஹி... நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க வரேன்...” என்று கூறவும், புகழ் அவளை சந்தேகமாகப் பார்க்க, அதைக் கண்டு கொள்ளாமல், அவள் வாங்கிய கீ செயினை பில் போட்டுக் கொண்டு, புகழின் அருகில் வர, ‘என்ன’ என்பது போல புகழ் அவளைப் பார்த்தான்.

“உங்க பைக் கீயைக் கொடுங்களேன்...” ஷிவானி சொல்லவும், அவள் பில் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல், தனது பைக் கீயை எடுத்து நீட்ட, அதை வாங்கியவள், தான் வாங்கிய கீ செயினுடன் அதை இணைத்து, அவன் கையில் கொடுத்து,

“இந்த பொம்மை நான் தான்... புரியுதா?” என்று கேட்கவும், அதை வாங்கி தன் கையில் புதைத்துக் கொண்டவன்,

“ரொம்ப அழகா இருக்கு... நான் பத்திரமா வச்சிக்கறேன்...” என்று கூறிவிட்டு, தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ள, தான் சொல்ல வருவது புரிந்ததா? புரியவில்லையா? என்ற குழப்பத்துடன் ஷிவானி நடக்க, புகழின் கை பாக்கெட்டினுள் அந்த பொம்மையை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது.

சிறிது தூரம் நடந்து, திரையரங்கம் வந்ததும், “உனக்கு பசிக்குதா... சாப்பிட்டே போகலாமா?” புகழ் கேட்க,

“இல்ல... சாப்பிட்டுட்டுப் போனா... பாப்கார்ன் எல்லாம் யார் சாப்பிடறது? அதெல்லாம் முடிச்சிட்டு மிச்சம் உள்ள வயித்துக்கு ஹோட்டல்ல சாப்ட்டுக்கலாம்...” என்று கூறியவள், நேராக சென்று பாப்கார்ன், பஃப்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் என்று ஆர்டர் கொடுக்க, புகழ், தனது பாக்கெட்டில் இருந்த பர்சை அப்படியே எடுத்து அவளிடம் நீட்டினான்.

“ஹையோ... நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே... இப்படித் தான் எல்லா இடத்துலயும் உங்க பர்சை எடுத்துக் கொடுப்பீங்களா?” என்றவள்,

“உங்களுக்கு என்ன வேணும்?” என்ற கேள்வியை கேட்க, அவள் கூறிய பொருட்களின் பட்டியலைக் கேட்டிருந்தவன்,

“தனியா எனக்கு எதுவுமே வேண்டாம் வணி... நீ வாங்கினதுலையே நான் ஷேர் பண்ணிக்கறேன்...” என்று அவன் சொல்லவும்,

“ஷேரிங்கா” என்று வாயை பிளந்தவள், “அது எல்லாம் முடியாது... உங்களுக்கு வேற வாங்கறேன்...” என்றவள், இன்னொரு பாப்கார்னை வாங்க வாயைத் திறக்க,

“படம் போட்டுட்டாங்க போல இருக்கு... சீக்கிரம் வா...” என்று அவன் சொல்லவும், தான் வாங்கிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு அவனுடன் நடந்தாள்.

உள்ளே சென்று அமர்ந்தவளின் வாயும், கைகளும், கண்களும் வேலை செய்ய, அதை ரசித்துக் கொண்டே, படம் பார்த்துக் கொண்டிருந்த புகழின் மனம் ஷிவானியிடம் என்ன என்னவோ கதைகளைப் பேசத் தூண்ட, அதை பேசத் தான் முடியாமல், வார்த்தைகள் தொண்டைக் குழியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

அவளது கையில் இருக்கும் திண்பண்டங்களை அவளுடன் சேர்ந்து உண்பதே சுவாரஸ்யமானதாக இருக்க, அதையும் அனுபவித்துக் கொண்டிருந்தவன், படம் முடிந்து வெளியில் வரவும், “சிவா... நேரா வீட்டுக்கு போயிடலாமா?” என்று அப்பாவியாகக் கேட்கவும்,

“என்னது? வீட்டுக்கா? அப்போ ஹோட்டல் போகலாம்ன்னு சொன்னது? அதனால தானே நான் எல்லாத்தையும் கம்மியா வாங்கினேன்...” என்று ஷிவானி சொல்லவும், அதைக் கேட்ட புகழ் புருவத்தை உயர்த்த,

“இப்போ சாப்பிட்டு இருக்கறதுக்கு வீட்டுக்கு போன உடனேயே பசி எடுத்திடும் இனியன்... இங்க நாம சாப்பிட்டு போயிடலாம்... இங்க பாவ்பாஜி நல்லா இருக்கும்...” என்று சொல்லி, அந்த கடைக்கு அவனை அழைத்துச் செல்ல, அவள் கேட்ட அழகில் தன்னைத் தொலைத்தவன், அவனை மறந்து தலை அசைத்து, அவள் கூறிய கடைக்கு சென்று அவள் கேட்டதை இரண்டாக ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தான்.

புகழின் முகத்தை இரண்டு நிமிடங்கள் பார்த்தவள், அவன் எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும், “நீங்க இங்க ஏற்கனவே வந்திருக்கீங்களா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்... இல்ல... வந்ததில்ல... சும்மா இங்க வந்து சுத்தறதுல என்ன இருக்கு? டைம் தான் வேஸ்ட்... இன்னைக்கு விக்ரம் தான் இங்க உன்னை கூட்டிட்டு போய் சுத்திட்டு வான்னு சொன்னான்... சரி நாமளும் வந்ததில்லையா? அது தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்... நீ நிறைய தடவ வந்திருக்கியா?” புகழ் சொல்லி விட்டு, பதில் கேள்வி கேட்க, ஷிவானிக்கு சிறிது கடுப்பாக இருந்தது.

“நான் எல்லாம் நிறைய தடவை வந்திருக்கேன்... சும்மா சுத்தணும்னு சொன்னாளே நாங்க இங்க தான் வருவோம்... இந்த கடையில பாவ்பாஜி சாப்பிடாம போனா என்ன ஆகறது?” என்று எடக்காக பதில் சொன்னவள்,

“நான் ஒண்ணு கேட்கறேன்... உங்களை அது ஹர்ட் பண்ணினா சாரி... ஆனா... எனக்கு கேட்டே ஆகணும்...” ஒரு மாதிரி துடுக்காக அவள் கேட்க,

“நீ என்னை என்ன ஹர்ட் பண்ணப் போற? கேளு வணி...” என்று புகழ் ஊக்கவும், அவனது சொற்களில் சில வினாடிகள் மௌனம் காத்தவள்,

“இல்ல... தெரியாம தான் கேட்கறேன்... உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும்... குறிப்பா உங்க டியர் பிரெண்ட் விக்ரம் அண்ணா கூட இங்க வந்திருப்பாங்க போல... எல்லாரும் நல்லா சோஷியலா இருக்காங்க... அவங்க குரூப்ல நீங்க மட்டும் எப்படிங்க இப்படி? உங்களை மாத்தணும்னு அவங்க முயற்சி பண்ணலையா...

இல்ல நீங்க மாறவே மாட்டேன்னு இப்படியே இருக்கீங்களா? இதை நான் ஏன் கேட்கறேன்னா... உங்க பெண்டாட்டிக்கு கிஃப்ட் வாங்கறதுக்கு... ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறதுக்கு கூட, வேற ஒருத்தர் சொல்லி சஜ்ஜெஸ்ட் பண்ண வேண்டி இருக்கே... அதனால கேட்டேன்...” என்று ஷிவானி கேட்டுவிட்டு, அவனது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க, அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த இதம் மாறி, ஒரு இறுக்கம் வந்து குடி கொள்ள, புகழ் அமைதியாகிப் போனான்.

“ஆமா... உடனே சீன் சேன்ஜ் ஆகறது போல இவர் முகம் சேன்ஜ் ஆகிடும்... இவரை இப்படியே விடக் கூடாது... கொஞ்சமாவது இவரும் யோசிக்கணும்...” என்று மனதினில் சொல்லிக் கொண்டவள், அவனது முகத்தைப் பார்க்க,

“எங்க அப்பாக்கு அப்பறம் எனக்கு எங்கயுமே வெளிய போகப் பிடிக்கல... இங்க எல்லாம் வந்தா என் மனசும் மாறிப் போயிரும்... குடும்பத்துக்கு பணம் சேர்க்க முடியாதுன்னு நானே வர மாட்டேன்... இங்க வந்து அனாவசியமா சுத்தற நேரத்துக்கு ஒரு வீட்ல போய் சிஸ்டம் சர்வீஸ் செய்தா... பணமாவது சம்பாதிக்கலாம்... இங்க வந்தா அந்த பணம் தான் வீணாப் போகும்... அதனால தான்...” பதில் சொன்னவன், அவள் எதற்கோ வாயைத் திறக்க எத்தனிக்க,

“இப்போ என் பெண்டாட்டி கூட நேரம் ஒதுக்கணும்னு தோணிச்சு... அவளுக்கு பிடிச்சதை கூட இருந்து வாங்கித் தரணும்னு ஆசையா இருந்தது... அதனால அவன் கிட்ட எங்க கூட்டிட்டு போகலாம்ன்னு சஜெஷன் கேட்டேன்... அவன் இங்க போகச் சொன்னான்...” பட்டென்று கூறியவன், அவர்களது ஆர்டர் நம்பர் வரவும், எழுந்து செல்ல, ஷிவானி தன்னையே நொந்துக் கொண்டாள்.

“உன் அவசர புத்தியை சவுக்கால அடிக்கணும்... எத்தனை தடவ சொல்லி இருக்கு... இப்படி பேசக் கூடாதுன்னு... கொஞ்சமாவது அறிவிருக்கா?” தன்னையே திட்டிக் கொண்டவள், புகழ் வந்து அமரவும், அவனது கைகளைப் பற்றிக் கொண்டு,

“சாரிங்க... எனக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகமா ஆகிப் போச்சு... அதனால தான் அப்படி பேசிட்டேன்... என் செல்ல இனியன் இல்ல... ப்ளீஸ்... உங்க ட்ரேட் மார்க் ஸ்மைல் ப்ளீஸ்...” என்று கெஞ்ச,

“ஏற்கனவே லேட் ஆச்சு சிவா... சீக்கிரம் சாப்பிடு... வண்டியில போகும் போது பேசிக்கலாம்... நான் ஒரு முட்டாள்... நைட் லேட் ஆகும்ன்னு யோசிக்கமா... காரை எடுத்துட்டு வராம இருக்கேனே...” என்று அவளிடம் சொல்லிவிட்டு, சற்று சத்தமாகவே புலம்ப,

“ப்ளீஸ்... சிரிங்க... நான் அப்போ தான் சாப்பிடுவேன்...” என்று ஷிவானி அடம் பிடிக்கத் தொடங்கினாள்.

“டைம் ஆச்சு சிவா...” புகழ் தனது பிடியில் நிற்க,

“ஸ்மைல் ப்ளீஸ்...” அவளும் அதிலேயே நிற்க,

“திடீர்னு எல்லாம் சிரிக்க முடியாது... நான் சிரிக்க தோணினா சிரிக்கறேன்...” புகழ் விடாப் பிடியாக நிற்க,

“நீங்க சிரிச்சா தான் சாப்பிடுவேன்...” ஷிவானியும் அதிலேயே நிற்க, பெயருக்கு புன்னகைத்து வைத்தவன்,

“இப்போ சாப்பிட்டுக் கிளம்பு... இல்ல எழுந்து வா... நேரமாகுது...” என்று புகழ் தன்னுடைய பாவ்பாஜியை வேகமாக முழுங்க, ரோஷம் பொங்க, அதை அப்படியே வைத்து விடலாமா என்று எண்ணிய ஷிவானி... மறுநிமிடமே, கம கம என்று அடித்த வாசனையால் இழுக்கப்பட்டு, அதை வாயில் திணிக்கத் தொடங்கினாள்.

அங்கிருந்து கிளம்பிய புகழ், எவ்வளவு வேகமாகவும், கவனமாகவும் ஓட்ட முடியுமோ அவ்வளவு கவனமாக வண்டியைச் செலுத்தத் தொடங்கினான்.

“என் மேல கோபமா?” ஷிவானி மெல்ல பேச்செடுக்க,

“எனக்கு என்ன கோபம் இருக்கப் போகுது சிவா... ஒரு கோபமும் இல்ல... இனிமே நானே ப்ளான் பண்ண முயற்சி பண்றேன்...” என்றவன், வண்டியை செலுத்த, ஷிவானி அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள,

“உனக்கு தூக்கம் வருதா? இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடலாம்...” என்றவன், வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக பூட்டைத் திறந்தான்.

“நான் உங்களுக்கு பால் காய்ச்சி வைக்கிறேன்... டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க...” என்றவள், வேகமாக சமையல் அறையை நோக்கிச் செல்ல,

அவளைப் பிடித்து இழுத்தவன், “ஹ்ம்ம்... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... வயிறு ஃபுல்லா இருக்கு... டயர்ட்டாவும் இருக்கு... தூங்க போகலாம்...” என்றவன், லுங்கிக்கு மாறி படுத்துவிட, ஷிவானியும் வேற உடைக்கு மாறி, அவன் மார்பில் தலை வைத்து படுத்துக் கொள்ள, அவளது தலையை வருடிக் கொண்டிருந்த புகழ், உறங்கி விட, ஷிவானி தூக்கம் வராமல், புரண்டுக் கொண்டிருந்தாள்.

அவளது ஒவ்வொரு அசைவும் புகழின் உறக்கத்தை கலைக்க, கண்களை திறந்துப் பார்த்தவன், அவள் மீண்டும் திரும்பிப் படுக்கவும், தனக்கு அவள் மேல் கோபம் என்பதால் உறக்கம் வராமல் தவிக்கிறாள் என்பது புரிய, அவளை இழுத்து அணைத்தவன், அவளது கழுத்து வளைவில் முகம் பதித்து,

“தூங்கு வணி... நேரம் ஆகுது... அப்பறம் அதிகாலை ஒன்பது மணிக்கு எழுந்திருக்கக் கூடாது... எனக்கு நாளைக்கு சீக்கிரமே கடைக்குப் போகணும்...” என்று சொல்லிவிட்டு, மேலும் இரண்டு முத்தத்தைப் பதிக்க,

“போதும் விடுங்க... எனக்கு தூக்கம் வருது...” என்றவள், அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு,

“என் மேல கோபம் இல்ல தானே...” என்று மீண்டும் கேட்கவும்,

“இல்லடா செல்லம்... உன் மேல கோபமே இல்ல... அப்படி உன் மேல கோபம் வரவும் வராது...” என்று மனதினில் சொல்லிக் கொண்டவன், பதில் ஏதும் சொல்லாமல், அவளது நெற்றியில் இதழ் பதித்து, தன்னோடு அணைத்துக் கொண்டு, அவளை உறங்கவும் வைக்க, ஷிவானி நிம்மதியாக உறங்கியதை உறுதிப் படுத்திக் கொண்டு, புகழும் உறக்கத்திற்கு சென்றான்.

மல்லிகா ஊருக்குச் சென்று ஒருவாரமும் ஓடி இருந்தது... பகலில் சில நேரங்கள் வீட்டிலும், சில நேரங்கள் தாய் வீட்டிலும் பொழுதை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்த ஷிவானிக்கு, சினிமா சென்று வந்த அடுத்த நாள் காலையிலேயே புகழ் தனது வழக்கத்திற்கு மாறி விடவும், முந்தய தினம் நடந்தது அனைத்தும் கனவோ என்று யோசிக்கத் தொடங்கி இருந்தாள்.

வாங்கிக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் நல்ல துணையாக மாற, சதா சர்வ காலமும், பாட்டும், புத்தகமுமாக அவளது பொழுதுகள் கழியத் தொடங்கியது.

பெரிய முள், ஒன்பதைக் காட்டி, அடுத்த நிமிடம் நகர்வதற்குள், கடைக்கு கிளம்பிவிடும், புகழுக்கும், கடையின் வியாபாரம் முழு வேகத்தில் தொடங்கியதில், வேலை சரியாக போய்க் கொண்டிருந்தது.

சில நேரங்கள், கடையிலேயே மதிய உணவையும் உண்டு, இரவு ஒன்பதைத் தாண்டியே, சில நேரங்கள் வீட்டிற்கு வருபவன், இவ்வாறாக அவனது பொறுப்பை ஆற்றிக் கொண்டிருந்தான்.

வாங்கி வந்த புத்தகங்கள் அந்த ஒரு வாரத்திலேயே படித்து முடித்தாகி விட, அடுத்து என்ன செய்வதென்று புரியாத ஷிவானி, வீட்டு வேலைகள் போக மீதி நேரங்கள் அனைத்தும், உறக்கத்தில் கழிக்கத் தொடங்கி இருந்தாள்.

“ச்சே... இதென்ன எப்போப் பாரு தூங்கிட்டே இருக்கோம்... கொஞ்ச நேரம் சசியை போய் படுத்திட்டு வரலாம்...” என்று அங்கு செல்ல, அங்கும் ஏதோ காரசார விவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

“என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?” என்று உள்ளே நுழைந்தவளிடம்,

“வாம்மா... ஒண்ணும் சத்தம் இல்ல... நம்ம சங்கத்துல இருந்து எல்லாரும் டூர் போகலாம்ன்னு ஒரு பிளான்... பத்து நாளைக்கு, வட இந்தியா முழுசும் சுத்திட்டு வரலாம்ன்னு சொல்றாங்க... அது தான்... இவ வர மாட்டேங்கிறா... பேசிட்டு இருக்கோம்...” பாஸ்கர் சொல்லவும்,

“ஹை சூப்பர்... பத்து நாளைக்கு தானே போயிட்டு வாங்க...” ஷிவானி சாதாரணமாகச் சொல்லவும்,

“என்னடி என்னவோ உளறிக்கிட்டே இருக்க? உங்க அப்பா தான் கொஞ்சம் கூட யோசனை இல்லாம பேசறார்ன்னா நீயும் கூட சேர்ந்துக்கிட்டு... நீ இங்க தனியா இருக்க... உன்னை விட்டுட்டு நான் எங்கடி போறது?” சசி கவலையாகச் சொல்ல,

“ஆமா உனக்கு ஊருக்கு போக சோம்பேறித்தனம்ன்னு சொல்லு... அதெல்லாம் ஒண்ணும் இல்ல... இங்க தான் இனியன் இருக்காரேம்மா... அவர் என்னைப் பார்த்துப்பாரு... நீங்க தைரியமா கிளம்புங்க...” என்று தைரியம் சொன்ன ஷிவானி, பாஸ்கரைப் பார்க்க,

“அதே தான் நானும் சொல்றேன்... இவ கேட்டா தானே... உனக்கு கஷ்டமா இல்ல... இவ தான் பாரு...” என்று சலித்துக் கொள்ள, ஷிவானி, சசியின் அருகே சென்றாள்.

“அம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு என்னையே பார்த்துக்கத் தெரியும்மா... இப்போ நானே வெளியூருல இருந்தா நீங்க போயிருப்பீங்க தானே... அது போல நினைச்சிக்கோ... ஜாலியா போயிட்டு வாம்மா... இத்தனை நாளா தான் என் ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்ன்னு எங்கயுமே போனது இல்ல... இப்போ தான் என்னை கட்டி மேய்க்க இனியன் இருக்காரே... அவர் பார்த்துப்பாரு...” என்று அவள் கிண்டலாகச் சொல்லவும், சசி அரை மனதாக கிளம்ப சம்மதித்தார்.

“எப்போ கிளம்பணும்...” என்று அவள் கேட்க,

“அடுத்த வாரம்டா... இன்னும் பத்து நாள் இருக்கு... இன்னைக்கு ராத்திரி பிளைட் டிக்கெட் புக் பண்றாங்க... அப்பறம் அங்க ஒரு டிராவல்ஸ்ல சொல்லி பஸ்ல போறோம்...” பாஸ்கர் தங்களது திட்டத்தைச் சொல்லவும், ஷிவானி தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.

கடந்த சில வருடங்களாக, அவளது படிப்பை ஒட்டி, சசி எங்கும் செல்லாமல் இருந்தார். இப்பொழுதும், அதே போல அவளை சாக்கு வைத்து அவர் சொல்லவும், ஷிவானிக்கு ஒரு மாதிரி ஆகியது. இவர்கள் இருப்பதால் தானே புகழும் இரவில் அவ்வளவு நேரம் கழித்து வருகிறார் என்ற எண்ணமும் கூடவே எழ, அவனை வர வைப்பதற்கு இது ஒரு சாக்கு என்று அதிலும் ஒரு நல்லதைக் கண்டு கொண்டவள், அவர்களை கிளப்ப முயன்றாள்.

வீட்டிற்கு வந்து புகழுக்காக காத்திருந்தவள், அவன் வரவும், அவனுக்கு உணவை பரிமாறிக் கொண்டே, “அம்மாவும் அப்பாவும், டூர் போறாங்களாம்... அடுத்த வாரம் கிளம்புவாங்க போல...” ஷிவானி அறிவிக்க,

“ஓ... போயிட்டு வரட்டும் சிவா... எனக்குத் தெரிஞ்சு மாமாவும் கடையை விட்டு கிளம்பினதே இல்ல...” என்று புகழ் சொல்லவும்,

“ஆமா... அப்படியே மாமனார் வாரிசு... ஒரு ஹனிமூனாவது உண்டா... அந்த நினைப்பே இல்லாம இருக்கார் பாரு... எப்படியும் ஃபர்ஸ்ட் ஆனிவர்சரிக்கு கண்டிப்பா எங்கயாவது போயே ஆகணும்...” என்று மனதினில் நினைத்துக் கொண்டவள்,

“ஆமா... அதனால தான் போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்...” என்று பதில் சொல்லவும், புகழ் புன்னகைத்து,

“உனக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்...” என்று சொன்னவன்,

“சூப்பரா சமைக்க கத்துக்கிட்ட வணி... சட்னி ரொம்ப நல்லா இருக்கு...” என்று அவளை தன்னருகில் இழுத்து, அவளுக்கு உணவை ஊட்ட, அவன் லேட்டாக வந்ததில் இருந்த சிறு வருத்தமும் போய், அவன் கொடுத்ததை வாங்கிக் கொள்ள, அவளுக்கும் உணவை ஊட்டி முடித்தவன், அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு, சமையல் அறைக்குச் சென்று, அவளுக்கு உதவத் துவங்கினான்.

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், “நான் என்னவோ ரொம்ப கும்பகர்ணி ஆகிட்ட ஃபீல்... எப்போ படுத்தாலும் தூங்கிடறேன் இனியன்...” என்று சொல்லவும்,

“அம்மாவும் இல்ல... அது தான்... வேலைக்கு எங்கயாவது போறியா? பக்கத்துல ஸ்கூல் மாதிரி எங்கயாவது... ஆனா...” என்று அவளைக் கொஞ்சியவன், அவளது காதில் சரசம் பேச,

“உங்களுக்கு இதே வேலையாப் போச்சு... போங்க...” என்று அவனைத் தள்ளியவள்,

“இந்த சண்டே கடை லீவ் தானே... நாம போய் அத்தையைப் பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்கவும்,

“நானும் அதையே தான் சொல்ல நினைச்சேன் வணி... போய்ட்டு வரலாம்...” என்று அவளது நெற்றியில் முட்டியவன், வேலைகள் முடித்ததும், அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

அந்த வார இறுதியும் வந்தது... காலையில் பதினோரு மணிக்கு போகலாம்ன்னு என்று சொல்லிவிட்டு ஒரு அவசர வேலையாக கிளம்பிச் சென்றவன், வரும்பொழுதே மதியத்தை எட்டி இருந்தது. அங்கு போய் மதிய உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அவன் சொல்லி இருந்ததால், சமையலும் செய்யாமல் அவனுக்காக காத்திருந்தவள், ஒரு மணிக்கு அவன் வரவும், ஷிவானி அவனை முறைக்க,

“அடுத்த வாரம் அம்மாவைப் பார்க்க போய்க்கலாம்... சாதம் வச்சிடு... தயிர் போட்டு சாப்பிட்டுக்கலாம்...” என்று அவன் சொல்லவும், ஷிவானி எதுவும் பேசாமல் ஷிவானி படுத்துக் கொள்ள,

“பசிக்குது சிவா...” புகழ் உடையை மாற்றிக் கொண்டே சொல்லவும்,

“எனக்கும் தான் பசிக்குது... ஆனா... என்னால சமைக்க முடியாது... வெளிய போய் வாங்கிட்டு வாங்க... இல்ல... இப்போவே அத்தையை பார்க்க கிளம்பலாம்...” அவள் சொன்னதைக் கேட்டவன்,

“ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இருக்காது...” என்று சொல்லவும்,

“அதைத் தானே நீங்க சாப்பிடறீங்க... எனக்கும் இன்னைக்கு வாங்கிட்டு வாங்க... எனக்கு பிரியாணி போதும்... உங்களுக்கு என்ன வேணுமோ பார்த்து நீங்களே வாங்கிட்டு வாங்க... இதுக்கும் மேல என்னால சமைக்க முடியாது...” என்று சொல்லிவிட்டு, சோபாவிலேயே படுத்து கண்களை மூடிக் கொண்டவளை பார்த்துவிட்டு, கிட்சன் சென்றவன், காய்களை வெட்டி, பிரியாணி செய்யத் துவங்க, அவன் சமைப்பதைப் தொடங்குவதைப் பார்த்துவிட்டு, தோள்களை குலுக்கிக்கொண்டு கொண்டு, திரும்பிப் படுத்து கண்களை மூடிக் கொண்டவள், உறங்கியும் போனாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
18

அவளது சிறு முடியாமைக்கும்

உள் மனதெங்கும்

முகாமிட்டுள்ள

இந்த கலக்கத்திற்கு

அர்த்தம் தேடி

களைத்து பின்

காதல் உச்சம் என உணர்கிறேன்

“சிவா... எழுந்திரு சிவா... உனக்கு பிரியாணி ரெடியாகிடுச்சு... வெறும் வயித்தோட எவ்வளவு நேரம் இருப்ப?” புகழ் எழுப்பவும், மெல்ல எழுந்து அமர்ந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல், எழுந்து டைனிங் டேபிளில் அமர, அவன் செய்த பிரியாணியின் மணம் அவளது நாசியை துளைத்தது.

“பயபுள்ளைக்கு நல்லாவே சமைக்கத் தெரியுது... வாசனையே இப்படி ஆளைத் தூக்குதே... டேஸ்ட் எப்...ப்...படி இருக்கும்?” என்று நினைத்து, மனதினில் சப்பு கொட்டிக் கொண்டவள், அவனைக் கண்டு கொள்ளாமல், தனக்கு மட்டும் தட்டை வைத்துக் கொண்டு வேகமாக உண்ணத் துவங்க, புகழ் அவளைப் பார்த்துக் கொண்டு அருகினில் அமர்ந்தான்.

அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், அவள் உண்டு முடித்ததும், “என் மேல என்ன கோபம்?” என்று கேட்க,

“எனக்கு என்ன கோபம்? நீங்களாச்சு உங்க அம்மாவாச்சு... நாளைக்கு காலையில நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன்... உங்களுக்கு எப்போ ஃப்ரீ ஆகுதோ அப்போ போய் பாருங்க...” என்றவள், எழுந்து சென்று டிவியை போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

அவளது சிறு பிள்ளைத் தனமான கோபத்தை ரசித்துக் கொண்டே புகழ், தனது தட்டில் உணவை போட்டுக் கொண்டு அவள் அருகில் சென்று அமர, அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தவளுக்கு திடீரென்று நியாபகம் வர,

“அத்தை கிட்ட வர மாட்டேன்னு போன் செய்தாவது சொன்னீங்களா? இல்ல அதுவும் நான் தான் சொல்லனுமா?” என்று கேட்கவும்,

“நீ தூங்கிட்டு இருக்கும் போதே நான் சொல்லிட்டேன் வணி... நாம கிளம்பிட்ட விஷயத்தை போன் செய்து சொன்ன பிறகு, சமைக்கலாம்ன்னு இருந்தாங்களாம்...” என்று அவன் சொன்னது தான் தாமதம்,

“உங்களைப் பத்தி அத்தைக்கு தெரியாதா என்ன?” என்று நொடித்துக் கொண்டவள், மீண்டும் டிவியின் பக்கம் பார்வையை ஓட்ட,

“நீ கோபத்துல கூட அழகா தான் இருக்க...” என்று முணுமுணுத்தவன், தனது உணவில் கவனமாக, ஷிவானிக்கு கடுப்பாக இருந்தது.

“இங்க ஒருத்தி கோவிச்சுக்கிட்டு இருக்காளே... அவள எப்படியாவது சமாதானம் செய்து பேசுவோம்ன்னு இருக்கா பாரு... நல்லா ரசிச்சு சாப்பிட்டுக்கிட்டு மட்டும் இருக்காரு” என்று நினைத்துக் கொண்டவளுக்கு உறக்கம் மீண்டும் தழுவ,

“எப்போப் பாரு இந்த தூக்கம் வேற...” என்று நினைத்துக் கொண்டு, படுக்கை அறைக்குச் சென்று, மீண்டும் தனது உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

சில மணித்துளிகள் கழித்து, தன் மேல் பாரம் அழுத்தவும், “எனக்கு இப்போ எதுக்கும் இஷ்டமில்ல இனியன்...” என்று முனகிக் கொண்டே அவள் திரும்பிப் படுக்க முயல, அது முடியாமல், முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தவள், தன்னை இறுக அணைத்துக் கொண்டு உறங்கும் புகழைக் கண்டு கோபம் குறைந்து,

“இவர் எப்போ வந்து படுத்தார்... இவருக்கு மதியம் தூங்கற பழக்கமே இல்லையே...” என்று நினைத்துக் கொண்டவள், அவனது கைகளை மெல்ல தளர்த்தி, அவனைப் பார்த்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவனது சுருங்கிய நெற்றியை மெல்ல நீவி விட்டுக் கொண்டே, “ஏன் இனியன் இப்படி பண்ணறீங்க? எப்போ பாரு வேலை வேலைன்னு எந்த ஒரு ரிலாக்க்ஷேஷனும் இல்லாம இருக்கீங்க? உங்களுக்குன்னு ஒரு ஆசையும் இல்லையா?

என் மேல அன்பாவது இருக்கா இல்லையா? என் கூட நேரத்தை செலவு பண்ணனும்ன்னு உங்களுக்கு தோணவே தோணாதா? வேலை செய்யணும் தான்... அதுக்காக எப்போப் பாரு கடையையே கட்டிக்கிட்டு இருந்தா... பெண்டாட்டின்னு ஒருத்தி இருக்காளே... அவ தனியா இருக்காளே... அவளை எங்கயாவது கூட்டிட்டு போகணும்... அட கூட்டிட்டு போகாட்டி கூட பரவால்ல... அவ கூட நிறைய பேசணும்னு கூடவா தோணாது?

எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கே இனியன்... எல்லாத்தையும் சரி... சரின்னு தள்ளிட்டு எத்தனை நாள் தான் போறது? இப்போ எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வருது... சும்மா... என் கூட ராத்திரியில சந்தோஷமா இருக்கற நேரம் மட்டும் வாய்க்கு வாய் வணின்னு கொஞ்சினா போதுமா? ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூட உங்களுக்குத் தோணலையா?” என்று அவனது மீசையைப் பிடித்து திருகிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தவளை, மீண்டும் புகழ் தன்னருகில் இழுக்க, வயிற்றில் ஏற்பட்ட ஏதோ சிரமம் காரணமாக அதற்கு மேல் படுக்க முடியாமல், ஷிவானி எழுந்தமர்ந்தாள்.

“என்னாச்சு சிவா...” அவள் பட்டென்று எழவும் புகழ் கண் விழித்து கேட்க,

“ஒண்ணும் இல்ல... வயிறு ஒரு மாதிரி இருக்கு...” என்றவள், எழுந்து தண்ணீரைக் குடித்துவிட்டு, ஹாலிற்கு வர, அவளோடு புகழும் பின்னோடு வந்தான்.

“சாப்பிட்ட உடனே படுத்ததனாலயா இருக்கும் சிவா... பிரியாணி கொஞ்சம் ஹெவி தானே” என்றவன், மீண்டும் அவளுக்கு தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதை குடித்தவளுக்கு குமட்டிக் கொண்டு வரவும், செய்வதறியாது திகைத்து நின்றான்.

“என்ன சிவா... சாப்பாடு நல்லா தானே இருந்துச்சு...” என்று அவன் சந்தேகமாக இழுக்க,

“ஆமா... என்ன போட்டீங்களோ... எனக்கு இப்படி வயித்தைப் பிரட்டுது...” என்றவள், டீயை போட்டு அவனுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டு அமர்ந்தாள்.

சிறிது நேரம் அவள் அமைதியாக இருக்கவும், “இப்போ ஒண்ணும் பண்ணலையா?” புகழ் மெல்லக் கேட்க, இல்லை என்பது போல மண்டையை உருட்டியவள்,

“நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்... கொஞ்சம் நடக்கணும் போல இருக்கு... நாளைக்கு ராத்திரி அவங்களுக்கு பிளைட்...” என்று அவள் அறிவிக்க, பிடி கொடுக்காமல் பேசும் அவளையே புகழ், பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்களுக்கு ஏதாவது வேலை இருக்குமே...” அவள் துடுக்காக கேட்க,

“ஹ்ம்ம்... இருக்கு... கொஞ்சம் கணக்கு பார்க்கணும்...” என்று அவன் தயங்க, அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“நானே போயிட்டு வரேன்...” என்று கிளம்ப, அவளது கையைப் பிடித்து புகழ் தடுத்து,

“ராத்திரியில நீ தனியா நடந்து வர வேண்டாம்... கிளம்பும் போது போன் பண்ணு... நான் வந்து அத்தை மாமாவைப் பார்த்துட்டு அப்படியே கூட்டிட்டு வரேன்...” என்று புகழ் சொல்லவும், எதுவோ ஏமாற்றம் தோன்ற, தோன்ற, சட்டென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது... அதை மறைத்துக் கொண்டு ஷிவானி கிளம்பி, சசியைப் பார்க்கச் சென்றாள்.

sஅவள் முகம் கலங்கி இருப்பதைப் பார்த்த சசி, எதையும் கண்டுக் கொள்ளாமல், “மாப்பிள்ளை வரலையாடி...” என்று மட்டும் கேட்க,

“அவருக்கு கடை வேலை இருக்காம்மா... கொஞ்ச நேரம் கழிச்சு வருவார்...” என்று சொன்னவள், சசி எதுவோ பேசிக் கொண்டிருந்தாலும், அதில் கவனம் பதியாமல், அமைதியாக ‘ம்ம்’ கொட்டிக் கொண்டிருந்தவள்,

“சரிம்மா... நான் நாளைக்கு சாயந்திரம் வரேன்... நீங்க எல்லாம் எடுத்து வைங்க...” என்றவள், புகழுக்கு மிஸ்ட் கால் கொடுக்க எண்ணி போன் பட்டனைத் தட்ட,

“வாங்க மாப்பிள்ளை...” என்ற பாஸ்கரின் குரல் கேட்டு, ஷிவானி ஆச்சரியத்தில் எழுந்து நின்றாள்.

புன்னகைத்துக் கொண்டே வந்த புகழின் கண்கள் ஷிவானியிடமே இருக்க, அதைக் கண்ட சசி, “இருங்க மாப்பிள்ளை... குடிக்க காபி எடுத்துட்டு வரேன்...” என்று உள்ளே செல்ல,

“அதெல்லாம் வேண்டாம் அத்தை... நான் உங்களைப் பார்த்துட்டு சிவாவை கூட்டிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்... அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல...” என்று புகழ் சொல்லத் தொடங்கவும்,

“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா... நான் நல்லா தான் இருக்கேன்...” என்று ஷிவானியும் மல்லுக்கு நிற்க, பாஸ்கர் இருவரையும் கவலையுடன் பார்த்தார்.

“என்ன ஆச்சு சிவா? உனக்கு என்ன உடம்புக்கு?” அவர்களது சண்டையைக் கண்டுக் கொள்ளாமல், சசி கேட்க,

“ஒண்ணும் இல்லம்மா... மதியம் சாப்பிட்டது எல்லாம் வாந்தி எடுத்துட்டேன்... அதைத் தான் சொல்றார்... வயிறு ஒரு மாதிரியா இருக்கும்மா... பிரட்டிட்டே இருக்கு” என்று புகழை முறைத்துக் கொண்டே அவள் சொல்ல, புகழோ அவளது முறைப்பின் காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“என்ன சாப்பிட்ட?” சசியின் கேள்விக்கு,

“இவர் பிரியாணி செய்தார்... அதுல கொஞ்சம் எண்ணை அதிகமா இருந்தது... அதனால ஜீரணம் ஆகலம்மா... அதுவும் தவிர, சாப்பிட்ட உடனே படுத்துட்டேன்...” என்று அவள் விளக்கிக் கொண்டிருக்க, சசி அவளது முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

பாஸ்கர் இருவரையும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா... இப்போ எனக்கு ஒண்ணும் இல்ல...” என்று அவள் சொல்ல, சசியின் மனமோ வேறு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

“சரிங்க மாமா... பார்த்து போயிட்டு வாங்க... போயிட்டு போன் செய்ங்க... நாளைக்கு நான் வந்து உங்களை ஏர்போர்ட்ல டிராப் பண்றேன் மாமா...” என்று பாஸ்கரிடம் சொன்னவன், சசியைப் பார்க்க, சசியின் முகமோ, தீவிர யோசனையைக் காட்டிக் கொண்டிருந்தது.

“எல்லாம் எடுத்து வச்சிட்டீங்க இல்ல அத்தை... ஏதாவது வாங்கித் தரணுமா?” புகழ், அவரது யோசனை படிந்த முகத்தைப் பார்த்து, கேட்க,

“இல்ல... ராத்திரிக்கு உங்களுக்கு இட்லி சுட்டுத் தரேன்... கொஞ்ச நேரம் இருங்க...” என்ற சசி, வேகமாக அடுப்பங்கரைக்குச் சென்று,

“சிவா...” என்று அழைக்க,

“எனக்கே ரொம்ப டயர்டா இருக்கும்மா...” என்றவள், சலித்துக் கொண்டே உள்ளே செல்ல, புகழ் அமைதியாக அமர்ந்தான்.

“புகழ்... அவளை பத்திரமா பார்த்துக்கோங்க... கொஞ்சம் இளைச்சா மாதிரி இருக்கா...” என்று பாஸ்கர் சொல்லவும், புகழுக்கு என்ன சொல்வது என்ற குழப்பத்தில், மனதினில் ஹையோ என்றிருந்தது.

“நான் பார்த்துக்கறேன் மாமா...” என்று சொல்லிவிட்டு அவன் அமைதியாக இருக்க, அதற்கு மேல் என்ன கேட்பது என்று புரியாத பாஸ்கரும், அவனது புதிய கடையைப் பற்றி பேசத் துவங்கினார்.

இரு ஆண்களின் உரையாடல்களும் கடையைப் பற்றிச் செல்ல, உள்ளே சசி, தீவிரமாக அவளது வாந்திக்கான காரணத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

“அய்யோ கேள்வி கேட்டது போதும்மா... ஏதோ இன்னைக்கு வாந்தி வந்திருச்சு அவ்வளவு தான்... அதுக்கு அப்பறம் டீ குடிச்சு இருக்கேன்... நீ கொடுத்த ஜூஸ் குடிச்சு இருக்கேன்... எனக்கு ஒண்ணும் இல்லம்மா...” ஷிவானி சொல்லிக் கொண்டிருக்க,

“நீ தலைக்கு குளிச்சும் நாளாகுது ஷிவா... நாளைக்கு காலையில போய் டாக்டரைப் பார்த்துட்டு வரலாமா? நான் அப்பாவை ட்ரிப் கேன்சல் செய்யச் சொல்லிடறேன்...” சசி சந்தோஷமாகத் திட்டமிட, ஷிவானியின் முகத்தில், அப்படித் தானோ என்ற எண்ணம் கொடுத்த மின்னல்களும், பூரிப்பும் சேர்ந்து ஜொலிக்க,

“அப்படி இருக்குமாம்மா... ஒரு மாதிரி தூக்கம் தூக்கமா வருது... எப்போப் பாரு டயர்ட்டா இருக்கு...” என்று ஆர்வமுடன் அவள் கேட்கவும்,

“இருக்கும் சிவா... நான் அப்பாகிட்ட போய் விஷயத்தை சொல்லி, ட்ரிப் கேன்சல் பண்ணச் சொல்லிடறேன்...” என்று சசி அவசரமாக நகர,

“இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லயாம்மா... அப்படியே இருந்தாலும்... இனியன் என்னை கையில வச்சு தாங்குவாரு... நீ கவலைப்படாம ஊருக்கு போயிட்டு வா... நானும் என்னைப் பார்த்துக்கறேன்... இப்போ நீ ஊருக்கு கிளம்பினதுக்கு அப்பறம் இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா என்னம்மா செய்திருப்ப?” குறும்பாகக் கேட்க,

“ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்திருப்பேன்...” அதே வேகத்தில் சசியின் பதிலும் வந்தது.

“அம்மா... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நாளைக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வந்த அப்பறம் நீ ஊருக்கு கிளம்பு... இனியன் என்னைப் பார்த்துப்பாரு... அவருக்கும் எப்போ தான் பொறுப்பு வர்ரது...” என்று கேட்டவள்,

“இருடி... நான் போய் அவங்ககிட்ட விஷயத்தை சொல்லிட்டு வரேன்...” சசி பரபரக்க,

“அம்மா...மா...மா... கொஞ்சம் நான் சொல்றதை காது கொடுத்துக் கேளு... இந்த விஷயத்தை நான் தான்ம்மா அவர்கிட்ட சொல்லணும்... நீ இப்போ அவசரப்படாதே... காலையில டாக்டர்கிட்ட அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிடு... அவர்கிட்ட எனக்கு வேற மாதிரி சொல்லணும்... இந்த விஷயத்தை சொல்லறதுக்கு எனக்கு ஆயிரம் கற்பனை இருக்கும்மா...” நாணத்துடன் கூறி, சசியின் தோளில் முகம் பதித்துக் கொண்டாள்.

“சரிடி... ஆனா... உன்னை விட்டு நான் எப்படி போறது? உங்க அத்தையும் ஊர்ல இல்ல...” மீண்டும் சசி அதிலேயே நிற்க,

“எத்தனை தடவ நான் சொல்றேன்... நீ கிளம்பும்மா... எனக்காக நீ இந்த வீட்டையே சுத்தி சுத்தி வந்தது போதும்மா... என்னைப் பத்தி கவலைப்படாதே... நீ நாளைக்கு ஊருக்கு கிளம்பறதா இருந்தா தான் நான் டாக்டர்கிட்ட வருவேன்” என்று உறுதியாகக் கூற, சசியும் அவளிடம் வாதாடிப் பார்த்து, அவளது பிடிவாதத்தின் முன் தோற்றவராய்,

“உனக்கு என்ன லூசாடி பிடிச்சிருக்கு... உனக்கு இருக்கற வீம்பைப் பாரு...” என்று சலித்துக் கொண்டு அரை மனதாக ஊருக்கு கிளம்ப சம்மதித்தார்.

“உன்னோட அடத்துக்கு வர வர அளவில்லாம போச்சு... இப்போ அந்த ஊர் என்ன ஓடியாப் போகப் போகுது... அதை அடுத்த வருஷம் போய் பார்த்துக்கிட்டாத் தான் என்ன?” என்று புலம்பிக் கொண்டே, இட்லியை வேக வைத்து எடுத்தவர், அதற்குள் சட்னியும் செய்து, ஒரு டப்பாவில் போட்டு அவளிடம் நீட்டி,

“காலையில ரெடியா இரு... டாக்டர்கிட்ட போகலாம்...” என்று மீண்டும் அவளிடம் சொல்லவும், சந்தோஷத்துடன் தலையசைத்த ஷிவானி, புகழிடம் சென்று உற்சாகமாக நின்று,

“போகலாமா இனியன்...” என்று கேட்கவும், அதுவரை முறைத்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது உற்சாகமே உருவாக நிற்கவும், யோசனையூடே தலையசைத்தவன், மீண்டும் பாஸ்கரிடமும், சசியிடமும் விடைப்பெற்றுக் கொண்டு வெளியில் வர, ஷிவானி வண்டியைத் தேடி நின்றாள்.

“நடந்து தான் வந்தேன்... வா... போகலாம்... அந்த பையை என்கிட்ட கொடு...” என்று அவளிடம் இருந்து வாங்கியவன், அவளது கையோடு கை கோர்த்துக் கொண்டு, தன்னருகே இழுத்துக் கொள்ள, மனதில் இருந்த உற்சாகத்தில், ஷிவானி அவனை ஒட்டி நடக்க, அந்த நெருக்கத்தைப் பார்த்து, வழியனுப்ப வந்த அவளின் பெற்றவர்களின் கண்கள் நிறைந்தது.

வீட்டிற்கு வந்ததும், எப்படி புகழிடம் சொல்வது என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி... “தக்காளிச் சட்னி புளிப்பாக இருக்கவும், அதை ரசித்து ருசித்து உண்ண,

“நல்ல புளிப்பா அத்தை செய்திருக்காங்க... இவ என்னடான்னா... இந்த புளிப்பை இப்படி சப்பு கொட்டி திங்கறாளே... ஒருவேளை வயித்துப் பிரட்டலுக்கு நல்லா இருக்கும்ன்னு செய்திருப்பாங்களோ?” மனதினில் நினைத்துக் கொண்டவன்,

“ரொம்ப புளிப்பை சாப்பிடாதே சிவா... பித்தம் தூக்கிடப் போகுது...” என்று அறிவுறுத்த,

“ஹையோ அறிவு ஜீவி” என்று மனதினில் நினைத்தவள்...

“அதெல்லாம் தூக்காது... வாய்க்கு நல்லா இருக்கு...” என்று சொல்லி, அவனைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, புகழ் அதற்கு மேல் அவள் சப்பு கொட்டி, கண்களை சுறுக்கி செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இரவு உணவை முடித்த கையோடு, சமையலறையை ஒதுக்கி வைக்க உதவத் துவங்க,

அவனது தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்டு, “எனக்கு தூக்கமா வருது இனியன்... கால் எல்லாம் வலிக்குது... நீங்க இந்த வேலை எல்லாம் முடிச்சிட்டு வாங்க...” என்று கூறிவிட்டு, நகர்ந்தவள், மறக்காமல், புகழின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டுச் செல்ல, அதற்கு மேல் வேலை ஓடாமல், அவளைப் பிடித்து அருகில் நிறுத்திக் கொண்டவன்,

“ஒரு ரெண்டு நிமிஷம்... வேலை ஆச்சுடி செல்லம்...” என்று கூறிக்கொண்டே, ஒதுக்கி வைத்து, ஷிவானியைப் பின் தொடர்ந்தவன், அவளை இறுக தழுவிக் கொண்டான்.

அவனது மார்பில் முகம் அழுந்தினாலும், கண்களை நிமிர்த்தி அவனை நோக்கி, “இப்படி நசுக்கினா... எனக்கு மட்டும் இல்ல... இன்னொருத்தருக்கும் மூச்சு முட்டும்...” ஷிவானி அவனிடம் சொல்ல,

“இங்க நாம ரெண்டு பேர் தானே இருக்கோம்...” என்று முணுமுணுத்துக் கொண்டே, அவளது இதழ் நோக்கி குனிந்தவனின் உதடுகளை கை கொண்டு தடுத்தவள்,

“இதுவும் இனிமே ரொம்ப முடியாது...” என்று குறும்பாகச் சொல்ல,

“அதெல்லாம் முடியாது...” என்று அவன் மேலும் நெருங்க,

“உங்க பிள்ளைக்கு மூச்சு முட்டினா பரவால்லையா?” குறும்பாக அவள் கேட்ட விதத்தில், அவளது கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் அதே இடத்தில் நிற்க, கை தானாக அவளை இறுகி இருந்ததை விடுவித்தது.

“என்ன சொல்ற?” புகழ் புரியாமல் விழிக்க,

“இனிமே இப்படி முரட்டுத்தனமா நடந்தா... உங்க பிள்ளைக்கு மூச்சு முட்டும்ன்னு சொல்றேன்...” அவனது மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே கூறியவள்,

“உங்க பையனோ பொண்ணோ என் வயித்துல உட்கார்ந்துக்கிட்டு, அப்பா செய்யற பிரியாணிய நான் தான் சாப்பிடுவேன்னு சொல்லி அடம் பிடிச்சு... என்னை சாப்பிட விடாம செய்யறாங்க போல...” மதியம் குமட்டிக் கொண்டு வந்த காரணத்தை அவனுக்கு விளக்க, அவள் சொல்ல வருவது புரிந்து, பேச்சு வராமல், தடுமாறிக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சார்... இப்போவும் சைலென்ட் தானா?” ஷிவானியின் குறும்பிற்கு,

கண்கள் நிறைய, “நிஜமாவா சொல்ற? எப்படி? எப்போ தெரியும்? நான் அப்பா ஆகப் போறேனா?” அவள் அன்னை வீட்டுக்குத் தானே சென்றாள்? இடையில் இது என்ன? என்ற குழப்பத்தோடு புகழ் அவளைப் பார்க்க, சசிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை அவள் கூறவும், தான் தந்தையாகப் போகும் சந்தோசம் தாளாமல், புகழ் அவளை அணைத்துக் கொள்ள,

“நாளைக்கு காலையில அம்மா வந்துடறேன்னு சொல்லி இருக்காங்க... டாக்டர்கிட்ட போகணும்... நீங்க வருவீங்களா?” ஷிவானி ஏக்கமாகக் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், புகழ் அவளை தரையில் விடாமல் கைகளில் ஏந்திக் கொண்டு, மெல்ல பூ போல அவளை படுக்கையில் கிடத்தினான்.

அவளது நெற்றியில் இதழ் ஒற்றியவன், அவளை மெல்ல அணைத்துக் கொண்டு, “நிஜமா தான் சொல்லறியா சிவா? அம்மாவுக்கு எப்படித் தெரியும்? வாமிட் வேற எதுனாலயாவயது வந்து இருந்தா?” புகழ் இன்னமும் நம்ப முடியாமல், சந்தேகமாக இழுக்க,

“நாளைக்கு காலையில டாக்டரைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது... ஏன் கவலைப்படனும்?” என்ற ஷிவானி, அவனது தோளில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு,

“நம்ம குழந்தை உறுதியாகற நேரம், நீங்களும் என் கூட இருக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு இனியன்... வருவீங்களா?” மீண்டும் ஏக்கமாக கேட்க,

“ஹ்ம்ம்... நான் வராமையா?” என்று கூறியவன், அவளது தலையில் இதழ் ஒற்றி, இதமாக வருடிக் கொடுக்க, ஷிவானி சீக்கிரமே கண்ணயர்ந்து போக, மனதினில் எழுந்த ஒருவித பயம் புகழை உறங்க விடாமல் தடுத்தது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன், அனைத்து வேலைகளையும் ஷிவானி எழுவதற்கு முன்பே செய்து வைத்துவிட்டு, கடைக்கு போன் செய்து விடுப்பையும் சொல்லிவிட்டு, பதட்டமாகவே சசியின் வரவுக்காக காத்திருக்க, சசி வந்ததும்,

“கிளம்பலாமா அத்தை... நேரமாகுது... டாக்டர் அப்பறம் எங்கயாவது போயிடப் போறாங்க...” என்று அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வந்து நின்றான்.

அதனைப் பார்த்த சசிக்கு சிரிப்பு பொங்க, “மாப்பிள்ளைக்கு உடனே பிள்ளையைப் பத்தி தெரிஞ்சிக்கணும் போல இருக்கு...” என்று கிண்டல் செய்துக் கொண்டே, காரில் ஏற,

“சிவா... மெதுவா வண்டியை ஓட்டறேன்... உனக்கு கஷ்டமா இருந்த சொல்லு... இன்னும் மெதுவா ஓட்டறேன்...” என்று கூறியவன், மாட்டு வண்டியே முந்திச் செல்லும் வேகத்திற்கு வண்டியை ஓட்ட,

“ஸ்...ஸ்...சப்பா... இப்போவே கண்ண கட்டுதே ஷிவா” என்று நினைத்துக் கொண்டாள்... மூவரும் ஒருவழியாக மருத்துவமனைக்குச் செல்ல, புகழின் முகத்தில் இருந்த பதட்டமும், சோர்வும், ஷிவானிக்கு கவலையைக் கொடுத்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19

நான் பேசாத மௌனம் எல்லாம்

உன் கண்கள் பேசும்

உனை காணாத நேரம் என்னை

கடிகாரம் கேட்கும்

மணல் மீது தூவும் மழை போலவே

மனதோடு நீதான் நுழைந்தாயடி

முதல் பெண்தானே நீதானே

எனக்குள் நானே ஏற்பேனே

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்

காதல் இரண்டு எழுத்து

மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அவர்கள் முறைக்காக காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும், புகழின் பதட்டம் ஷிவானிக்கு புதுமையாக இருந்தது.

“என்ன ஆச்சுன்னு இப்போ இவர் இப்படி டென்ஷன்ல சுத்தறார்? இந்த அம்மாவுக்கும் ஊருக்கு கிளம்பற அவசரம்... இல்லன்னா வீட்லயே மெடிக்கல் கிட் வாங்கி பார்த்துட்டு வந்திருக்கலாம்...” என்று நினைத்துக் கொண்டவள்,

“ஹுக்கும்... அது இப்போ தோணுது... அப்போ தோணவே இல்லையே...” என்று ஷிவானி தன்னையே திட்டிக் கொண்டு, புகழைப் பார்க்க, அவனோ டென்ஷனில் உச்சத்தில் அமர்ந்திருந்தான்.

“ஹ்ம்ம்... கடையை விட்டுட்டு வந்திருக்காரே... கஸ்டமர் போயிடுவாங்கன்னு கவலைப்படராறோ?” என்று அவனை மனதினில் கேலி செய்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், அவளது முறை வரவும், எழுந்துக் கொள்ள,

“சீக்கிரம் வா... டாக்டர் கிட்ட கேட்க வேண்டியது நிறைய இருக்கு...” என்று அவளை முந்திக் கொண்டு அவன் செல்ல, சசி சிரித்துக் கொண்டே அவர்களைப் பின் தொடர, ஷிவானி, அவனுக்கு கடைக்கு கிளம்பும் அவசரம் என்று நினைத்துக் கொண்டாள்.

டாக்டர் அவளைப் பரிசோதித்து, கர்ப்பத்தை உறுதி செய்யவும், “நிஜமாவா டாக்டர்?” என்று கண்களில் கண்ணீர் கோர்க்க கேட்ட புகழ், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,

“தேங்க்ஸ் டாக்டர்... தேங்க் யூ சோ மச்...” அவருக்கு நன்றி தெரிவித்து, தனது அருகில் இருந்த ஷிவானியின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

“அவங்களுக்கு வாமிட் வந்தாலும் பரவால்லன்னு சாப்பிடக் கொடுங்க... அப்போ தான் கொஞ்சமாவது சக்தி இருக்கும்...” டாக்டர் தொடங்கவும்,

“இவ நேத்திக்கே வாந்தி எடுத்தா... ரொம்ப குடலே வெளிய வர அளவுக்கு இருந்தது... அந்த மாதிரி வந்தா கஷ்டமில்ல... அப்படி வராம இருக்க என்ன செய்யணும்?” புகழ் இடைப் புகுந்துக் கேட்க, டாக்டர், அவனது சிறு பிள்ளை தனமான கேள்வியில் ஷிவானியைப் பார்த்து சிரித்துவிட்டு,

“அதெல்லாம் அப்படித்தான் இருக்கும்... எதுக்கும் நான் ஒரு மாத்திரை எழுதித் தரேன்... ரொம்ப முடியாத அளவுக்கு வாந்தி எடுத்தாங்கன்னா... அவங்க போட்டுக்கட்டும்... இல்லன்னா... இதெல்லாம் நார்மல் தான்...” என்று டாக்டர் சாதாரணமாகக் கூறிவிட, புகழின் முகம் யோசனையைக் காட்டியது.

“இந்த சமயத்துல வாந்தி வர்றது சகஜம் தானே... அவங்களுக்கு பிடிச்ச உணவா செய்து கொடுங்க... கொஞ்ச நாளைக்கு காரமாவும், ஸ்பைசியாவும், எதையும் சாப்பிட வேண்டாம்... நிறைய காய்கள், பழங்கள் எல்லாம் சாப்பிடலாம்... ஜூஸ் நிறைய குடிக்கலாம்...” என்று அவளுக்கான உணவுகளை டாக்டர் மேலும் பட்டியலிட, புகழ் கவனமாக கேட்டுக் கொண்டு,

“சரிங்க டாக்டர்... உங்க போன் நம்பர் கிடைக்குமா? ஏதாவதுன்னா உங்களுக்கு போன் செய்து சந்தேகம் கேட்க?” அவன் கேட்கவும், ஷிவானி “என்ன இது?” என்பது போல அவனைப் பார்த்து கண்களால் கேட்க, சசியோ அவனைப் பார்த்து சிரிப்பை அடக்குவதிலேயே மும்முரமாக இருந்தார்.

அவன் உள்ளே வரும் போது அவன் முகத்தில் இருந்த பயம் போய், இப்பொழுது அவன் முகத்தில் தெரிந்த நிறைவையும், ஆர்வமும், கடமையையும் கவனித்துக் கொண்டே வந்த மருத்துவரும், அவனுக்கு தனது நம்பரைக் கொடுத்து, “ரொம்ப அவசியம்ன்னா கால் பண்ணுங்க...” என்று அழுத்தமாக குறிப்பிட, அதை புகழ் வாங்குவதற்கு முன் வாங்கிக் கொண்ட ஷிவானி,

“தேங்க்ஸ் டாக்டர்...” என்று நன்றி உரைக்கவும்,

“ஸ்கான் எடுக்க... இன்னும் ஒரு மாசம் போகட்டும் பார்த்துக்கலாம்... இப்போ பேபி நல்லா இருக்கு... அதனால நான் இதுல எழுதி இருக்கற தேதில பார்த்தாப் போதும்...” என்று கூறி, டாக்டர் அவர்களுக்கு விடைக் கொடுக்க, இருக்கையில் இருந்து பட்டென்று எழுந்த ஷிவானியை முறைத்த புகழ்,

“இவளை இப்படி எல்லாம் எழுந்துக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க டாக்டர்...” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி,

“இனிமே மெல்லவே எழுந்துக்கறேன்... தேங்க்ஸ் டாக்டர்...” என்று டாக்டரிடம் கூறிவிட்டு, மெல்ல நடந்து, வெளியில் செல்ல, புகழ் இன்னமும் எதையோ யோசித்துக் கொண்டு வந்தான்.

இவர்கள் அடித்த கூத்தை பார்த்த சசி அதுக்கு மேலும் டாக்டரிடம் ஏதும் கேட்டு அவரை நொந்து நூடில்ஸ் ஆக்காமல் வெளியில் வந்தார்.

அவனது யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்தவள் “அய்யா சாமி... எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது... வீட்டுக்கு போய் சாப்பிடணும்... மொதல்ல அத்தைக்கிட்ட பேசணும்...” என்று அவன் மீண்டும் ஏதாவது கேட்கிறேன் என்று டாக்டரிடம் சென்று விடுவானோ என்ற பயத்தில் ஷிவானி சொல்ல,

“இல்ல சிவா... நைட் பூரா நிறைய கேட்கணும்ன்னு யோசிச்சு வச்சிருந்தேன்... எல்லாம் கேட்டுட்டேனான்னு தான் யோசிச்சேன்... உனக்கு பசிக்குதா... நேரா வீட்டுக்குப் போயிடலாம்... காலையிலயே சாதமும், புளி குழம்பும் வச்சிட்டு தான் வந்தேன்... நீ டிரஸ் மாத்திட்டு வரதுக்குள்ள சூடு செய்து தரேன்...” புகழ் சொல்லவும், அவனது அன்பைக் கண்ட சசிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

“உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...” ஷிவானி துடுக்காகத் தொடங்க,

“வளவளன்னு பேசாதே... நான் போய் கார் எடுத்துட்டு வரேன்... வீட்டுக்குப் போய் சாப்பிட்டுத் தூங்கு... நான் கடைக்கு போயிட்டு வரேன்...” என்று புகழ் சொல்லவும், ஷிவானிக்கு சொத்தென்று ஆகியது.

“எங்கடா... கடையைப் பத்தி இன்னும் பேசலையேன்னு நினைச்சேன்... வந்துடுச்சா... இவரை எல்லாம் திருத்த முடியாது...” என்று மனதினில் அவனைத் திட்டிக் கொண்டே வந்தவள், வீட்டிற்கு வந்து சேரவும், சசி கிளம்ப எத்தனிக்க,

“இப்போவே எங்க கிளம்பறீங்க அத்தை... இங்க என் சமையல் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுப் பாருங்க... நீங்களும் வர்ரீங்கன்னு சேர்த்து தான் சாதம் வச்சேன்... மாமாவையும் இங்க வரச் சொல்லிடறேன்...” என்று சொல்லி முடிக்கும் முன்பே, பாஸ்கர் இனிப்புகளுடன் வந்து சேர்ந்தார்.

“என் ராஜாத்தி...” என்று ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தவர், அவளது வாயில் இனிப்பை பிரித்து திணிக்க, அதை வாங்கிக் கொண்டவள், அவரது தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்டு, அவரைப் பார்க்க, அவளது நெற்றியில் வாஞ்சையாக இதழ் ஒற்றி,

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா... உன்னையே இப்போ தான் குழந்தையா பார்த்த மாதிரி இருக்கு...” நெகிழ்ச்சியாக அவர் சொல்ல, அவரைப் பார்த்துக் கொண்டே, அவர் அருகில் வந்த புகழ், ‘வாங்க மாமா...’ என்று அழைத்தான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... வாழ்த்துக்கள்...” என்று அவனுக்கு கையைக் கொடுத்து வாழ்த்திவிட்டு, ஸ்வீட்டை அவன் வாயில் திணித்து, அவனது தோளை அழுத்த, புகழ் புன்னகைத்து,

“தேங்க்ஸ் மாமா...” பதில் சொல்லிவிட்டு,

“வாங்க சாப்பிடலாம்... அவ அப்போவே பசிக்குதுன்னு சொன்னா...” என்று கூறவும்,

“நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை... நான் உங்களுக்கு எல்லாம் பரிமாரறேன்...” என்று சசி சொல்லவும், புகழ் சரியென்று தலையசைக்க, ஷிவானி, வேகமாகச் சென்று, அவர்களுக்கு தட்டை எடுத்துக் கொடுத்தாள்.

“நீ குனிஞ்சு நிமிர்ந்து ஒண்ணும் செய்ய வேண்டாம்... பேசாம இரு...” புகழ் அதட்ட,

“அதெல்லாம் கொஞ்சமாவது செய்யணும் மாப்பிள்ளை... இல்லன்னா டெலிவரி ரொம்ப கஷ்டம்...” சசி சொன்னதுமே, புகழின் முகம் மாறியது.

“ரொம்ப கஷ்டமா?” அவன் ஒருமாதிரிக் குரலில் கேட்க, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்,

“எனக்கு பசிக்குது இனியன்... இன்னும் நாம அத்தை கிட்ட விஷயத்தை சொல்லவே இல்ல... உங்களுக்கு அது நியாபகம் இருக்கா?” என்று ஷிவானி கேட்கவும்,

“நீ சாப்பிடு... நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்... நீ சாப்பிட்டு முடிச்சுட்டு பேசு...” என்றவன், தனது செல்லை எடுத்துக் கொண்டு, தான் தந்தையாகப் போகும் இனிய செய்தியைக் கூறச் செல்ல, ஷிவானி அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“மாப்பிள்ளையை எல்லா வேலையையும் செய்ய விட்டுட்டு உட்கார்ந்து இருக்காதே சிவா... கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும்... நீ செய்தா தான் உனக்கும் நல்லது... இல்லன்னா சும்மா சோம்பலாவே இருக்கும்... மாப்பிள்ளை இந்த கவனி கவனிக்கும் போது எனக்கு கவலையே இல்ல... நான் நிம்மதியா ஊருக்கு போயிட்டு வரேன்... நீ நேரா நேரத்துக்கு மருந்தை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு...” என்று சசி அறிவுரை சொல்ல, ஷிவானி தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.

“ஆமாம்மா... இன்னைக்கு காலையில டாக்டரை பார்த்துட்டு வந்தோம்”

“இல்லம்மா... ரொம்ப வாந்தி எல்லாம் இல்ல...” என்று புகழ் சொல்லிக் கொண்டிருப்பது ஷிவானியின் காதுகளில் விழ, புகழுக்கு கூட இந்த அளவு சத்தமாக பேசத் தெரியுமா என்று அவளது மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

“அவ சாப்பிட்டுட்டு இருக்கா... வந்த உடனே பேசச் சொல்றேன்...” என்று சொல்லிக் கொண்டே வந்தவன்,

“சாப்பிட்டுட்டு அம்மாவுக்கு பேசிடு... உன்னை பார்த்துக்க இங்க வர முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க... அக்காவுக்கு ரொம்ப வாந்தியாம்... ஹாஸ்பிடல்ல ட்ரிப்ஸ் போட்டுட்டு வந்திருக்காங்க... என்ன கஷ்டம் சிவா...” என்று சொல்லிக் கொண்டே, உண்ண அமர்ந்தவன், ஷிவானியின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்து,

“சாப்பாடு நல்லா இருக்கா? வாய்க்கு பிடிச்சு இருக்கா?” என்று கேட்க, ஷிவானி அவனை எதில் சேர்ப்பது என்றே புரியாமல், தலையசைக்க,

“ரொம்ப அருமையா இருக்கு மாப்பிள்ளை... இவங்க அம்மாவை விட நல்லா செய்திருக்கீங்க...” என்று சேர்த்துச் சொன்ன பாஸ்கரை முறைத்த சசி,

“இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்... வீட்டுக்குத் தான் வந்தாகணும்...” என்று நொடிக்க,

“என்னப்பா... தினமும் மாப்பிள்ளை செய்வாருன்னு உங்களுக்கு நினைப்பா... அதெல்லாம் நடக்காது... அம்மா தான் உங்களுக்கு சமைச்சு போடணும்னு விதி இருக்கு... இப்படி எல்லாம் பேசி கெடுத்துக்காதிங்க...” ஷிவானி இடைப்புக, மூவரும் வழக்கம் போல கலகலத்துக் கொண்டு உணவை உண்ண, புகழ் அந்த இடத்தில் ஒட்ட முடியாமல் அமர்ந்திருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அந்த இல்லத்தில் அவ்வளவு கலகலப்பான உணவு நேரம் கழிந்தது கிடையாது. தந்தை இருந்த போதும், அவருக்கு பின்பும், உண்பது என்பது, வயிற்றை நிரப்பும் ஒரு செயல்... அவ்வளவே...

ஷிவானி வந்த பிறகு ஓரளவு கலகலப்பாகக் கழியும் நேரம் தான்... ஆனாலும், அனைவருடனும் சேர்ந்து உண்ணும் இந்த சுகம் அவனுக்கு பிடித்தே இருந்தது. தனது மகனோ, மகளோ வந்த பிறகு, தானும் ஷிவானியும் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துக் கொண்டு, உண்டு முடித்தவன்,

“சாப்பிட்டு அம்மாகிட்ட பேசிடு சிவா... அவங்களுக்கு சந்தோஷத்துல தலையும் புரியல... காலும் புரியல... நான் கடைக்கு போயிட்டு வரேன்...” என்று ஷிவானியிடம் சொன்னவன்,

“நான் சரியா ஆறு மணிக்கு வந்துடறேன் மாமா... ரெடியா இருங்க... கடையை கொஞ்சம் பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு, அவன் கிளம்பிச் செல்ல, ஷிவானி உண்டு முடித்து, மல்லிகாவிடம் பேசி விட்டு வந்தாள்.

“நாங்களும் கிளம்பறோம் சிவா... பத்திரமா இரு... நீ ஏர்போர்ட்க்கு வந்து அலைய வேண்டாம்... அடிக்கடி போன் செய்து உன்கிட்ட பேசிக்கறோம்... சரியா... ஜாக்கிரதை...” என்று சசி பலமுறை சொல்லிவிட்டு, மனமே இல்லாமல் கிளம்பிச் செல்ல, ஷிவானிக்கு அழுகை வரும் போல் இருந்தது.

முன்தினம் அவ்வளவு உறுதியாக பேசிவிட்டு, இப்பொழுது அழுதால், சசி பயந்துவிடுவார் என்று எண்ணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், அவர்கள் கிளம்பியதும், கதவைத் தாழிட்டுக் கொண்டு, அறைக்குச் சென்று படுத்துக் கொண்டவளுக்கு புகழ் ஒரு வார்த்தை கூட தன்னை தனியாக அழைத்து பேசவில்லை என்ற குறையும் சேர்ந்துக்கொண்டது... இருந்தாலும் அவளின் களைப்பு அவளை விரைவிலேயே உறக்கத்தில் ஆழ்த்தியது.

மாலை ஆறு மணிக்கு கிளம்ப ஏதுவாக சீக்கிரமே வீட்டிற்கு வந்த புகழ், தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே வர, ஷிவானி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்து, எந்த சத்தமும் இல்லாமல், இரவு வேலைகளை முடித்து விட்டு, டீயையும் போட்டு வைத்து ஷிவானியை எழுப்ப,

“என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க?” என்று ஷிவானி கேட்க, அவளை தழுவிக் கொண்டவன், அவளது கன்னத்தில் முத்தமிடத் துவங்கினான்.

“என்னங்க? என்னாச்சு?” ஷிவானி கேட்க,

“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று மட்டும் கேட்டு, மீண்டும் அவளது தலையை நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவன்,

“என்னோட வாழ்க்கைல சந்தோஷத்தை மட்டுமே அள்ளித் தர வந்த என் தேவதைடா குட்டி நீ...” என்று மனதினில் கொஞ்சிக் கொண்டே, மீண்டும் முத்தங்களை வாரி இறைத்தவன்,

“டீ போட்டு வச்சிருக்கேன்... முகம் கழுவிக்கிட்டு வந்து குடி... நைட் டிபன் செய்துட்டேன்... நீ வீட்ல பத்திரமா இருக்கியா... நான் மட்டும் போய் மாமாவையும் அத்தையையும் விட்டுட்டு வந்திடறேன்...” என்று அவன் கேட்க, வாயிலில் லாரி சத்தம் கேட்க, இருவரும் வெளியில் எட்டிப் பார்த்தனர்.

காலியாக இருந்த எதிர் வீட்டிற்கு புதிதாய் குடி வந்திருகிறார்கள் போலும்... சாமான்கள் வந்து இறங்கிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ஷிவானி, “ரொம்ப நாளா ஆளே வராம இருந்த வீடுன்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க... பரவால்ல ஆள் வந்திருச்சு...” என்று டீயை எடுத்துக் கொண்டு வந்து, வேடிக்கைப் பார்க்கத் தொடங்க,

“நீ உள்ள போய் உட்காரு சிவா... சும்மா இங்க தூசியில நிக்காதே... போய் உட்காரு...” உள்ளே தள்ளாத குறையாக தள்ளிக் கொண்டு சென்றவன், அவள் அமர்ந்த பிறகே அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.

“வெளிய நிக்கக் கூடாதுன்னா... எனக்கு வேடிக்கைப் பார்க்கப் பிடிக்குமே... என்ன செய்யறது?” என்று எண்ணிக் கொண்டவள், புகழ் அறைக்குச் செல்லும் வரை காத்திருந்து, அவன் உள்ளே நுழைந்ததும், ஜன்னல் அருகே, ஒரு சேரை தள்ளிக் கொண்டு போய் போட்டுக் கொண்டு, அவர்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

“யார் வரப் போறாங்க? வயசானவங்களா? இல்ல... நம்ம ஏஜ்லயா?” என்று அவளது ஆவல் அதிகமாக, சாமான் இறங்கி முடித்ததும், உள்ளிருந்து வந்த இளம் ஜோடியைக் கண்டு,

“ஹை... நம்ம ஏஜ் தான் இருக்கும்... என்ன இன்னும் கொஞ்சம் கூட இருக்கும்... பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சது...” என்று அவள் நினைத்துக் கொண்டு, கிட்செனில் சென்று புகழ் என்ன செய்திருக்கிறான் என்று பார்க்கும் எண்ணத்துடன் உள்ளே செல்ல, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, ஹாலிற்கு வந்தவள்,

“இதோ வந்துட்டேங்க...” குரல் கொடுத்துக் கொண்டே கதவைத் திறக்க, வெளியில், எதிர் வீட்டிற்கு புதிதாய் குடி வந்த பெண் நின்றிருந்தாள்.

“வாங்க... உள்ள வாங்க...” ஷிவானி வரவேற்க,

“நான் புதுசா எதிர் வீட்டுக்கு குடி வந்திருக்கேன்... என் பேர் ரஞ்சிதா... நாளைக்கு காலையில பால் காய்ச்சறோம்... நீங்களும் வந்தா நல்லா இருக்கும்... அது தான் கூப்பிட வந்தேன்” என்று அந்த பெண் தன்னை அறிமுகம் செய்துக் கொள்ளவும்,

“ஹாய்... நான் ஷிவானி... கண்டிப்பா வரேங்க...” என்று அந்தப் பெண் நீட்டிய குங்குமத்தை வாங்கிக் கொண்டவள், அவளை உள்ளே அமரச் சொன்னாள்.

“இருக்கட்டும் ஷிவானி... கொஞ்சம் வேலை இருக்கு... அதை முடிச்சிட்டு பழைய வீட்டுக்கு போகணும்... நேரம் சரியா இருக்கும்... நான் ஹவுஸ் வைஃப் தான்... நீங்க வேலைக்கு போறீங்களா?” என்று அவளும் தோழமையுடன் கேட்க,

“இல்ல... நானும் வீட்ல தான் இருக்கேன்...” என்று பதில் சொன்னவளிடம்,

“அப்போ ரொம்ப நல்லதுங்க... எனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சுப் போச்சு... ரொம்ப சந்தோஷமா இருக்கு... நாளைக்கு காலையில மறக்காம வந்துடுங்க...” என்றபடி விடைப்பெற்றுச் செல்ல, ஷிவானி பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில், மனதினில் துள்ளிக் குதித்தாள்.

புகழிடம் அந்தப் பெண் வந்து கூப்பிட்டதை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நகர்ந்தவளின் போன் அடிக்க, அதில் தெரிந்த பெயரைப் பார்த்தவள்,

“இவங்க இன்னும் கிளம்பாம என்ன செய்யறாங்க?” என்ற யோசனையுடன் போனை காதிற்குக் கொடுத்து,

“சொல்லும்மா...” என்று கேட்கவும்,

“எப்போப் பாரு தூங்காதேடி... நாங்க ஊருக்கு கிளம்ப நேரமாச்சு... என்ன மாப்பிள்ளை செய்யறதை சாப்பிட்டு நல்லா சொகுசா தூங்கலாம்ன்னு பிளானா...” என்று சசி சத்தமிட,

“ஆமா... அப்படித் தான்... என் புருஷன் செய்யறார்... நான் சாப்பிடறேன்... உனக்கு என்ன வந்தது?” என்றவள்,

“இனியன் வந்தாச்சும்மா... இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வருவார்” என்று சொல்ல,

“இல்லடி... கடையில இருந்து கிளம்பிட்டேன்னு அப்போவே போன் செய்து சொன்னார்... அது தான் நாங்க இப்போ அங்க கிளம்பி வந்துடலாம்ன்னு இருக்கோம்... உன்னைப் பார்த்துட்டு கிளம்பினது போல இருக்கும்...” என்று சொன்னவர்,

“ஒழுங்கா சுறு சுறுப்பா இரு” என்று கொட்டு வைத்து போனை வைக்க,

“கடவுளே... இந்த அம்மாங்க எல்லாம் ஏன் தான் இப்படி ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்காங்களோ?” என்று புலம்பிக் கொண்டே, முகம் கழுவி, தனது பெற்றோர்கள் வரவிற்காக காத்திருந்தாள்.

சிறிது நேரத்திலேயே அவர்கள் வந்துவிட, வந்ததும் வராததுமாக, எதிர் வீட்டில் வந்திருக்கும் பெண்ணைப் பற்றி கூறத் தொடங்க, அதனை கேட்டுக் கொண்ட சசி,

“நைட்க்கு என்ன டிபன் செய்யப் போற? அதுக்கு என்னன்னு பார்த்தியா?” புகழை செய்ய விடக் கூடாது... என்ற எண்ணத்துடன் சசி பரபரக்க,

“அதெல்லாம் அவர் ஏற்கனவே செய்து வச்சாச்சு... இரு... காபி போடறேன்... அவரு குளிச்சிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்” என்றவள், அவருடன் பேசிக் கொண்டே, அடுப்பில் பாலை ஏற்ற, புகழ் போன் பேசும் சத்தம் கேட்டு,

“எங்கடா இவ்வளவு நேரமா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்... உள்ள வேலை தான் பார்த்துட்டு இருக்காறா?” என்று சலித்துக் கொண்டவள்,

“கொஞ்சம் பாலைப் பார்த்துக்கோ... நான் வரேன்...” என்று சசியிடம் கூறிவிட்டு, புகழைத் தேடிச் செல்ல, போன் பேசிக் கொண்டிருந்தவன், அவளது கன்னத்தை தட்டிவிட்டு மீண்டும் பேச்சினில் கவனம் பதித்தான்.

பேசி முடித்து வந்தவன், அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவானியிடம் “எனக்கு இன்னொரு காபி கொடு... நான் போய் அம்மா அப்பாவை டிராப் பண்ணிட்டு வரேன்...” என்றவன், ஹாலிற்கு செல்ல, அதற்குள் பாலைக் காய்ச்சி, சசி அவனுக்கு காபியை எடுத்துக் கொண்டு வந்தார்.

“நீங்களே இங்க வந்துட்டீங்களா அத்தை... பெட்டியை எல்லாம் எப்படி தூக்கிட்டு வந்தீங்க?” என்று கேட்டு, அங்கிருந்த பாஸ்கரைப் பார்த்து,

“நானே வந்திருப்பேன் இல்ல மாமா...” என்று கேட்க,

“சிவாவைப் பார்த்துட்டு அப்படியே போகலாம்ன்னு தான்...” பாஸ்கர் இழுக்க, இருவரையும் பார்த்தவன், அதற்கு மேல் கேள்வி கேட்காமல், ஷிவானியை அருகினில் அமர்த்திக் கொள்ள, ரஞ்சிதா வந்து அழைத்ததை ஷிவானி தெரிவித்தாள்.

அவன் போகச் சொல்வான்... என்று ஆவலே வடிவாக அவன் முகம் பார்க்க, அதை ஒரு செய்தி போல கேட்டவன், அதற்கு பதில் சொல்லாமல், காபி அருந்துவதிலேயே குறியாக இருந்தான்.

“வாயைத் திறக்கறாரா பாரு?” ஷிவானி நொடித்துக் கொள்ள,

“நேரமாகுது மாப்பிள்ளை... ட்ராபிக் இருந்தா அப்பறம் லேட் ஆகிடும்...” என்ற பாஸ்கர்,

“சிவா... சமத்தா இரு... ஜாக்கிரதையா உடம்பைப் பார்த்துக்கோ...” என்று சொல்லிவிட்டு, பெட்டியை எடுத்து வைக்க, புகழ் அவருக்கு உதவச் சென்றான்.

ஷிவானியின் அருகே வந்த சசி, “கண்ணா... உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ... மாப்பிள்ளை எல்லா வேலையும் செய்யறார் தான்... அதுக்காக நீ எதுவுமே செய்யாம இருக்காதே... ஒழுங்கா வேளாவேளைக்கு சாப்பிடு... மாத்திரைப் போடு...” என்று பல அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்க,

“நீ பிளைட்டை மிஸ் பண்ண இப்படி ஒரு வழி வச்சிருக்கியா?” என்று ஷிவானி கேட்க, அவளது தலையில் செல்லமாக கொட்டியவர்,

“போயிட்டு வரேண்டி வாயாடி... பத்திரம்...” என்று மனமே இல்லாமல், கிளம்பிச் சென்றார்.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், ஷிவானிக்கு ஒரு மாதிரி இருந்தது. அந்த தனிமையைப் போக்க, பல நாட்களுக்குப் பிறகு தன்னுடைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அதில் கேம் விளையாடத் துவங்கினாள்.

சிறிது நேரம் கூட அமர முடியாமல், தலை சுற்றுவது போல இருக்கவும், அதை மூடி வைத்தவள், தலைகாணி உறைகளை மாற்றிவிட்டு, புகழுக்காக காத்திருக்க, நேரம் போய்க் கொண்டே இந்தது.

“இத்தனை நேரம் அம்மா அப்பா பிளைட்லையே ஏறி இருப்பாங்களே...” என்று நினைத்துக் கொண்டவள், சசிக்கு அழைக்க,

“பிளைட்ல ஏறத் தான் காத்துட்டு இருக்கோம் சிவா... மாப்பிள்ளை அப்போவே கிளம்பிட்டார்...” என்று சொல்லவும், அவரிடம் பேசி முடித்தவள், மேலும் சிறுது நேரம் காத்திருக்க எண்ணி, sடிவியை ஓட விட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

மணியும் ஓடிக் கொண்டே இருந்தது... “என்னாச்சு இவருக்கு... ஆளையே காணோம்...” என்று அவனுக்கு அழைக்க,

“சிவா... இங்க ஒரு கஸ்டமர் கால் பண்ணினாங்க... நேரா அங்க வந்துட்டேன்... நீ டைம் வேஸ்ட் பண்ணாம சாப்பிடு...” என்று புகழ் சொல்ல, ஷிவானி கடுப்புடன் போனை அமர்த்தினாள்.

அவன் வரும் வரை உண்பதில்லை என்று அவனது வரவுக்காக காத்திருக்க, பல நிமிடங்கள் கடந்து வந்த புகழ், அவள் உண்டிருப்பாள் என்ற நினைப்பில், தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு அமர, ஷிவானியும் அவனுடன் அமரவும்,

“உன்னை என்ன செய்யறது? அப்போவே சாப்பிடுன்னு சொன்னேன் இல்ல...” என்று புகழ் சத்தமிட, ஷிவானியின் கண்கள் கலங்கத் துவங்கியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
20

சொல்லாத எண்ணங்கள்,

பொல்லாத ஆசைகள்,

உன்னாலே சேருதே,

பாரம் கூடுதே....

தேடாத தேடல்கள்,

காணாத காட்சிகள்,

உன்னோடு காண்பதில் நேரம் போகுதே...

தலையை குனிந்துக் கொண்டவள், தட்டில் இருந்த உணவை அளைந்துக் கொண்டிருக்க, அவள் மனம் வருந்துவது தெரிந்தாலும், தான் இளகினால், அவள் இதையே சாக்காய் வைத்து ஒழுங்காய் உண்ண மாட்டாள் என்று நினைத்துக் கொண்டவன், தனது உணவை வேகமாக உண்ணத் துவங்கினான்.

அவன் சாப்பிடுவதை கீழ்க் கண்ணால் பார்த்தவளுக்கு, கண்ணீர் இருந்த இடத்தில் கோபம் நிறைத்தது. மனதினில் அவனைத் திட்டிக் கொண்டே, தனது குழந்தைக்காகவேனும் ரோஷப் படாமல், உணவை உண்டு முடிக்கும் எண்ணத்தில், வேகமாக அவளும் உணவை வாயில் போட்டுக் கொள்ள, அது அவளது தொண்டைக் குழியில் சிக்கி, உமட்டத் துவங்கியது.

“மெதுவா சாப்பிடேன்... நான் என்ன பிடுங்கிக்கவா போறேன்? இப்போப் பாரு... உள்ள போனதும் வெளிய வரப் போகுது...” என்று அவளை அதட்டுவதாக நினைத்து, மென்மையாக சொல்லிக் கொண்டே, அவளுக்கு உதவத் துவங்க, அவனிடம் எதுவும் பேசாமல், ஷிவானி சோபாவில் சென்றமர்ந்தாள்.

“என்னாச்சு? இங்க சோபாவுல வந்து உட்கார்ந்துட்ட... சாப்பிட வா...” புகழ் அழைக்க,

“இல்ல... வேணாம்... வாய்க்கு எல்லாமே சப்பு சப்புன்னு இருக்கு... பிடிக்கவே இல்ல...” என்று அவள் சொல்லவும், சிறிது நேரம் அவளுக்கு இடைவெளி கொடுத்து, தன்னுடைய தட்டில் இருந்த உணவை உண்டு முடித்து விட்டு, அவளுடைய தட்டை எடுத்துக் கொண்டு, அவள் அருகில் சென்றான்.

சாப்பாட்டைப் பார்த்ததும், ஷிவானி அவனை கெஞ்சலாகப் பார்க்க, “வாயைத் திற சிவா... இதுக்குத் தான் நேரத்துல சாப்பிடுன்னு சொன்னது. டாக்டர், லேட்டா சாப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க இல்ல. ஜீரணம் ஆகாதும்மா...” என்று அவளிடம் தன்மையாக பேசிக் கொண்டே, அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன், அவளது தலையை தோளில் சாய்த்துக் கொண்டு, அவளுக்கு ஊட்டத் தொடங்க, அந்த கரிசனையும் ஷிவானிக்கு பிடித்திருக்க, அவன் கொடுப்பதை வாயில் வாங்கிக் கொண்டு, உண்டு முடித்தாள்.

அவன் கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு, “நீங்க இருங்க... நான் வேலையை முடிச்சுட்டு வரேன்...” என்று சொன்னவள், சமையல் அறைக்குச் சென்று, பாத்திரம் கழுவத் தொடங்க, அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன், அவளது கழுத்து, கன்னம் என்று இதழ்களை பதித்துக் கொண்டே வந்து, அவளது காதில், “தேங்க்யூ வணி...” என்று சொல்லவும், அவனது நன்றியில், ஷிவானி குழம்பிப் போனாள்.

“எதுக்கு?” அவன் பக்கம் திரும்பி கேட்டவளின் இதழ்களை மென்மையாக சிறை செய்தவன், அவளை அணைத்துக்கொண்டு நின்றான்.

“இப்போ எதுக்கு தேங்க்ஸ் சொன்னாரு... எதுக்கு இப்படி கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கறாரு? ஒண்ணுமே புரியல சிவா... பேசாம நீ மைன்ட் ரீடிங் படிக்க கத்துக்கிட்டு இருந்தா... இப்போ இவர் மனசை படிக்க ரொம்ப வசதியா இருந்திருக்கும்...” என்று தனக்குள்ளேயே சலித்துக் கொண்டவள், அவனது அணைப்பினில் அசைவின்றி நின்றாள்.

புகழோ அவளது குழப்பத்திற்கு நேர் மாறாக, நிம்மதி, சந்தோசம், நிறைவு என்ற உணர்வுக் குவியல்களில் சிக்கி திண்டாடிக் கொண்டிருந்தான். தனக்கு அனைத்தையும் கொடுக்கும் ஷிவானிக்கு தான் நிறைய செய்ய வேண்டும்... என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், மெல்ல அவளிடம் இருந்து விலகி,

“உன்னை சும்மாவும் உட்கார்த்தி வைக்கக் கூடாதுன்னு உங்க அம்மா ஆர்டர் போட்டு இருக்காங்க... அதனால... இந்த நாலு பாத்திரம் தானே... சீக்கிரம் கழுவிட்டு வா... நேரமாகுது... தூங்கப் போகணும்...” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவள் அருகிலேயே நிற்கவும், எதுவும் பதில் சொல்லாமல், இப்பொழுது ‘எதற்கு அணைத்தான்... எதற்கு விடுவித்தான்...’ என்ற யோசனையுடன் செய்து முடித்துவிட்டு, அவளையேப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த புகழை நோக்கி கைகளை நீட்டினாள்.

“என்ன?” புரியாமல் புகழ் கேட்க,

“எனக்கு நின்னு நின்னு கால் வலிக்குது...” செல்லமாக அவள் சிணுங்கவும், அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு, படுக்கையில் கிடத்தினான்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நீ தூங்கு...” என்று அவளிடம் சொல்ல, ஷிவானிக்கு ஏமாற்றமாக இருந்தது.

இப்படி தூக்கிச் செல்லும் நாட்களில், அவளிடம் அவன் காட்டும் நெருக்கம் இன்று குறைவது போல இருக்க, சிறிது நேரம் கண்களை மூடி உறங்க முயன்றவள், அவன் வேலை செய்வதைப் பார்த்து, “எனக்கு தூக்கம் வரல...” என்று எழுந்து அமர,

“ஹ்ம்ம்... மதியம் நல்லா தூங்கின இல்ல... அதனாலயா இருக்கும்...” சொல்லிக் கொண்டே, தனது பையில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து அவளிடம் நீட்டி,

“இந்தா... கிருஷ்ண லீலா புக்கும், கிருஷ்ணரோட பாட்டு புக்கும் இருக்கு... தூங்காம இருக்கற நேரத்துல... இதைப் படி... நம்ம குழந்தையும் கிருஷ்ணர் போலவே இருக்கும்...” என்றபடி, அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.

“ஏன் ஆண் குழந்தை தான் பிடிக்குமா? பொண்ணா இருந்தா என்ன செய்வீங்க?” வெடுக்கென்று அவள் கேட்க, அவளை நெருங்கி அமர்ந்தவன்,

“எந்த குழந்தையா இருந்தா என்ன சிவா... எனக்கு உன்னை போல தான் துறு துறுன்னு வேணும்... இது படிச்சா ரொம்ப நல்லதுன்னு அம்மா வாங்கித் தரச் சொன்னாங்க... அது தான் வர வழியில வாங்கிட்டு வந்தேன்” அவன் சொல்லவும், அவனது முகம் பார்த்தவள், அதில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையைக் கண்டு, அந்த புத்தகத்தை வாங்கி பிரித்துப் பார்த்தாள்.

அழகான குழந்தைக் கிருஷ்ணன், தனது சிவந்த அதரங்கள் விரிய புன்னகைத்து, தனது தாய் யசோதையை அதில் சிக்குண்டு கிடக்க வைத்திருந்த காட்சியே அட்டைப் படமாக அச்சிடப் பட்டிருக்கவும், அதைக் கண்ட ஷிவானிக்கு, புகழைப் போல ஒரு குழந்தை சிரித்துக் கொண்டிருப்பது போல மனதினில் விரிய,

வேகமாக தலையை ஆட்டிக் கொண்டவள், “ஹையோ... என்னைப் போலவே இருக்கட்டும்... அப்பறம் அதுவும் வாயைத் திறந்து பேசாம, சிரிச்சே நம்மளை கவுத்துடும்...” என்று நினைத்து சிரித்துக் கொண்டு, அந்த புக்கை படிக்கத் தொடங்கியதும், மீண்டும் புகழ் தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

“நிறைய வேலை இருக்கு சிவா... இன்னும் ஒரு மூணு நாலு கடைக்கு வெப்சைட்டும், அவங்க கடைக்கு பில் போட ஈசியா ப்ராஜெக்ட்டும் பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கேன்... நம்ம குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம வளர்க்கணும்...” புகழ் யதார்த்தமாக சொல்லிக் கொண்டிருக்கவும், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“அப்போ தினமும் லேட் ஆகுமா?” என்ற கேள்வியைக் கேட்க,

“இல்ல... லேட் ஆகாது... ஆனா... கஸ்டமர் ஆபீஸ்ல இருந்து வந்த பிறகு அவங்க வீட்டுக்கு சிஸ்டம் பார்க்க வாங்கன்னு சொன்னா... போகாம இருக்கவும் முடியாது... அந்த சமயங்கள்ல லேட் ஆகும்... கடையும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா சேல்ஸ் அதிகமாகுது...

அதனால... அதையும் பார்க்கணும்... பசங்களும், இப்போ ஒரு பெரிய பில்டிங் காண்டிராக்ட்டை பிடிச்சு இருக்காங்க... அதை நல்ல படியா முடிச்சுக் கொடுக்கணும்...

விக்ரம் கிட்ட, ‘நான் காலையில கடைக்கு வர லேட் ஆகும்... நீங்க கடையை பார்த்துக்கோங்க’ன்னு சொல்லி இருக்கேன்... ராத்திரி அதனால என்னால சீக்கிரம் கிளம்பி வர முடியாது... எல்லாரும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணி செய்யணும்... அப்போ தான் எல்லா இடத்துலயும் நல்ல பேர் வாங்க முடியும்... இப்போ கடைக்கு வேலைக்கு ரெண்டு ஆள் கேட்டு இருக்கு... அவங்களும் பழகணும்... அவங்க பழகினா தான் எங்களுக்கு கொஞ்சம் வொர்க் லோட் குறையும்...” புகழ் சொல்லிக் கொண்டே வரவும், எதுவும் பேசாமல், ஷிவானி, தலையை மட்டும் அசைத்து கேட்டுக் கொண்டாள்.

“இவர பாரு... சீக்கிரம் வர முடியாதுன்னு ஒரே வார்த்தையில சொல்ல வேண்டியதை... எப்படி சுத்தி வளைச்சு சொல்லறாருன்னு... இதுக்கு மட்டும் தான் நல்லா பேச வரும்... வேற ஏதாவது கேளு... ஒரு வார்த்தையில தான் பதில் வரும்...” என்று நொடித்துக் கொண்டவள், புத்தகத்தில் கண்களைத் திருப்ப, சிறிது நேரத்திலேயே அவள் கண்ணயர்ந்தாள்.

அவள் உறங்கியதைப் பார்த்ததும், அவளது கையில் இருந்த புத்தகத்தை எடுத்து, டேபிளின் மீது வைத்தவன், அவளை நேராக படுக்க வைத்து, அவளது நெற்றியில் இதழ் ஒற்றி, அவளது வயிற்றிலும் இதழை பதித்து, “செல்ல குட்டி... நீங்களும் உங்க அம்மா மாதிரி எனக்கு சந்தோஷத்தை தரப் போறீங்களா? அப்பா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... நீங்க எப்படி இருப்பீங்கன்னு பார்க்க ஆசையா இருக்கேன்...” என்று அதனிடம் பேசிவிட்டு, மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தான்.

நன்றாக உறங்கியது போல் இருந்த அந்த சில மணித் துளிகளுக்குப் பிறகு, லைட் எரிந்துக் கொண்டிருக்கும் வெளிச்சத்தில், கண் விழித்துப் பார்த்த ஷிவானி, புகழ் அப்பொழுதும் மிகவும் தீவிரமாக வேலை செய்வதைப் பார்த்து,

“நீங்க தூங்கலையா?” என்று கேட்க,

“இல்ல சிவா... இன்னும் கொஞ்சம் இருக்கு... இன்னைக்கு அந்த வேலையை முடிச்சாத் தான் சரியா இருக்கும்... நீ தூங்கு...” என்று கூறிவிட்டு, தனது வேலையைத் தொடர, இந்த சந்தோஷ நாளில் கூட தன்னுடன் சேர்ந்து உறங்காமல் வேலை பார்க்கும் புகழைப் பார்த்தவள்... மனதில் எழுந்த ஒரு வித சலிப்புடன், மீண்டும் உறங்கத் துவங்கினாள்.

மறுநாள் விடிந்து அவள் எழும் பொழுதே, மல்லிகாவின் குரல் கேட்டு வேகமாக ஓடி வந்தவள், “அத்தை... நீங்க எப்போ வந்தீங்க?” என்று மகிழ்ச்சியுடன் கேட்க,

“இப்போ தண்டா வந்தேன்... நீ எப்படி இருக்க? ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஷிவானி... இரு... உனக்கு பிடிச்சதை சமைக்கலாம்ன்னு இவன்கிட்ட சாமான் வாங்க சொல்லிட்டு இருக்கேன்...” என்று சொல்லிவிட்டு புகழிடம் திரும்பி பட்டியலைக் கொடுக்கத் தொடங்கினார்.

“வந்ததும் வராததுமா என்ன அத்தை சமையல் ரூமுக்குள்ள புகுந்துக்கிட்டீங்க?” அவள் குறைப்பட,

“நீ எப்படி இருக்கன்னு மொதல்ல சொல்லுடா... உடம்பு மெலிஞ்சா மாதிரி இருக்கு... என்ன இவன் உன்னை ஒழுங்கா கவனிக்கிறது இல்லையா?” என்று அவர் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் அத்தை... அதெல்லாம் நல்லா தான் கவனிக்கிறார் அத்தை... என்னவோ சாப்பிடவே பிடிக்கலை...” அவள் சொல்லி முடிக்க, அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

“நான் ரெண்டு நாள் இங்க உன் கூட இருந்துட்டு தான் போவேன்... உனக்கு வாய்க்கு பிடிச்சதா செய்து தரேன்...” என்று சொல்லவும், ஷவானிக்கு குதூகலம் தொற்றிக் கொண்டது.

“அப்போ சூப்பர் அத்தை... இருங்க குளிச்சிட்டு வந்துடறேன்...” என்றவள், திரும்பும் பொழுது தான் எதிர் வீடு கண்ணில் பட,

“ஹையோ அத்தை... அவங்க இன்னைக்கு பால் காச்சறேன்னு கூப்பிட்டாங்க. நான் போகவே இல்ல. இவர் ஆபீஸ்க்கு கிளம்பிப் போனதும் போயிட்டு வரேன்...” என்று மல்லிகாவிடம் சொல்லிவிட்டு, அவள் குளிக்கச் செல்ல, புகழ் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா என் மருமகளை அப்படி பார்த்துட்டு இருக்க... போடா... போய் இதெல்லாம் வாங்கிட்டு வா...” என்று அவனிடம் வேலையை ஏவ, புகழ் தலையசைத்து விட்டு, அவற்றை வாங்க கிளம்பிச் சென்றான்.

அவன் மீண்டும் உள்ளே வரும்பொழுது, ஷிவானியின் சலசலப்புச் சத்தம் அந்த வீட்டை நிறைக்க, புகழுக்கு எதுவோ மனதில் நெருட, அதை உடனே புறம் தள்ளுவது போல, “அத்தை... உங்க சமையல் சூப்பர் அத்தை... அவரும் என்னை விட நல்லாவே சமைக்கிறார்... நான் தான் அவர்கிட்ட கத்துக்கணும் போல...” என்று பேசிக் கொண்டே அவருக்கு உதவிக் கொண்டிருக்க, அவளை கிண்டலாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்து, சாமானை அவளிடம் கொடுத்து விட்டு,

“அங்க மாமாவே சமாளிச்சுக்குவாராம்மா... அவளுக்கு இந்த அளவுக்கு சாப்பாடே வயித்துல நிக்க மாட்டேங்குதுன்னு சொல்லறீங்களே...” கவலையாக அவன் கேட்க,

“ஆமாண்டா... இந்த ரெண்டு நாள் சமாளிச்சுக்கறேன்னு சொல்லி இருக்கார்... அவரும் லீவ் போட்டு இருக்கார்... அவரே கொண்டு விடறேன்னு சொன்னார். அவளை தனியா விட்டுட்டு வர வேண்டாமேன்னு தான்... நானே பஸ் பிடிச்சு வந்துட்டேன்...” என்று அவனுக்கு சமாதானம் கூறினார்.

புகழ் அமைதியாக இருக்கவும், “சிவா உண்டானது தெரிஞ்சும் என்னால அங்க இருக்க முடியல புகழ். சசி வேற... ஊருக்கு கிளம்பும் போது ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டே போனாங்க... இன்னும் ஒரு வாரம் தானே... அவங்க வந்து பார்த்துப்பாங்க... எனக்கும் இங்க இவ தனியா இல்லைங்கற நிம்மதி இருக்கும்...” என்று சொல்ல, புகழ் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“இப்போவாவது வேலை வேலைன்னு ஓடாம கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாயேன் புகழ்... அவளும் தனியா என்ன பண்ணுவா?” என்று மல்லிகா சொல்லவும், புகழ் தலையசைக்க,

“வாயைத் திறந்து சரின்னு சொன்னா என்ன? நல்லா வாயில கொழுக்கட்டய வச்சிட்டு சுத்திட்டு இருக்கார்...” என்று ஷிவானி அவனை திட்டிக் கொண்டிருக்க,

“எனக்கு வேலைக்கு போக நேரமாகுதும்மா... நிறைய வேலை இருக்கு...” என்ற புகழ், தயாராகச் செல்லவும், ஷிவானி, மல்லிகாவின் கைப் பக்குவத்தை ருசிக்கத் தொடங்கினாள்.

அவள் உண்பதைப் பார்த்தவன், “இவளை நேரத்துக்கு சாப்பிடணும்னு சொல்லுங்கம்மா... நான் வர வரை சாப்பிடாம உட்கார்ந்து இருக்கா...” என்று அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“அவ எப்பவுமே உனக்காக வெயிட் பண்ணுவா புகழ்... நான் தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பேன்... இப்போ தனியாவும் இருக்கா இல்ல... அதுக்காக அவளை நீ திட்டுவியா? வீட்டுக்கு வந்த உடனே அனுசரணையா, சாப்ட்டியான்னு கேட்கற பழக்கம் இல்லையா? இது வரை இல்ல... இப்போ கத்துக்கோ...” என்று கண்டிக்க, அருகில் இருந்த ஷிவானி, அவனைப் பார்த்து பழிப்புக் காட்டினாள்.

“இனிமே கேட்கறேன்... ஆனா... அவ மட்டும் சாப்பிடாம இருந்தா திட்டத் தான் செய்வேன்...” மல்லிகாவிடம் கூறியவன்,

“ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு...” என்றும் சேர்த்துக் கூற, மல்லிகா, ஷிவானியின் முகம் போன போக்கைப் பார்த்து சிரித்துக் கொண்டே,

“ரொம்ப அதட்டாத... சாப்பிட்டுக் கிளம்பு...” என்று சொல்லவும், புகழும், அதை அப்படியே செய்து முடித்து, கடைக்கு கிளம்பிச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில், “அத்தை... நான் எதிர் வீட்டுக்கு போயிட்டு வரேன்... அவங்க பால் காய்ச்சற பங்க்ஷனுக்கே கூப்பிட்டாங்க... அப்போ நான் எழுந்துக்கவே இல்லையே... இப்போ கொஞ்சம் தலைய காட்டிட்டு வரேன்...” ஷிவானி அனுமதி கேட்க,

“போயிட்டு வா சிவா... சின்ன பொண்ணுன்னு வேற சொல்ற... அக்கம் பக்கம் பழக்கம் வச்சுக்கிட்டா உனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்...” என்றவர், அவளை அனுப்பி வைத்தார்.

எதிர் வீட்டிற்குச் சென்ற ஷிவானியை வரவேற்றது, எந்த அரவமும் இல்லாத வீடே... “என்ன இது? யாரையும் காணோமே...” என்று அவள் நினைத்துக் கொண்டு, “ரஞ்சிதா...” என்று அழைக்க,

“ஒரு நிமிஷம்...” என்ற குரலைத் தொடர்ந்து, ரஞ்சிதா வெளியில் வர, அவளைத் தொடர்ந்து, அவளது கணவனும் வர, ஷிவானிக்கு தயக்கம் ஒட்டிக் கொண்டது.

“வாங்க ஷிவானி... நீங்க காலையில வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்...” ரஞ்சிதா அழைக்க,

“இல்ல... நல்லா தூங்கிட்டேன்... லேட்டா தான் எழுந்தேன்...” என்று ஷிவானி சொல்லவும், அவளது கணவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் ஹரீஷ்...” ரஞ்சிதா, தனது கணவனை அறிமுகப்படுத்தி,

“இவங்க தான் எதிர் வீட்ல இருக்காங்க... ஷிவானி...” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்த, இருவரும் தலையசைத்து, புன்னகையுடன், அறிமுகத்தை ஏற்றுக் கொண்டனர்.

“அப்போ சரி... நீ இவங்க கூட பேசிட்டு இரு... நான் கடைக்கு போய் காய் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்...” என்று சொன்ன ஹரீஷ், உள்ளே செல்ல,

“நீங்க உள்ள வாங்க ஷிவானி...” என்று அழைத்துச் சென்றவள், அங்கிருந்த நாற்காலியைக் காட்டி, அவளை அமரச் செய்ய, ஷிவானி அமர்ந்துக் கொண்டு, வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

“இன்னும் செட் பண்ணி முடிக்கல... இப்போ தான் அடுக்கி வச்சிட்டே இருந்தோம்...” என்று சொன்னவள், ‘அம்முசெல்லம்...’ என்ற விளிப்பில், ஷிவானியைப் பார்த்து,

“இதோ அவருக்கு பையை எடுத்து கொடுத்துட்டு வந்துடறேன்...” என்றபடி ரஞ்சிதா உள்ளே ஓட, ஹரீஷ் அழைக்கும் போது குரலில் இருந்த பாசத்தில், முதல் முறையாக, புகழுடன் அவனை ஒப்பிடத் தோன்றியது.

புகழ் ‘வணி’ என்று அழைப்பான் தான்... ஆனால், அவனது குரலில் இந்த அளவிற்கு குழைவோ, அன்போ இருக்குமா? ஷிவானி யோசிக்கத் தொடங்க, அதற்குள்,

“கடைக்குத் தானே போறீங்க? போயிட்டு பத்து நிமிஷத்துல வரதுக்கு என்னால நீங்க கேட்கறதை எல்லாம் தர முடியாது...” என்று ரஞ்சிதாவின் சிணுங்கலும்,

“ப...த்...த்...து நிமிஷம் உன்னை விட்டுட்டு கடைக்குப் போறேன்... எனக்கு வேணும்...” அங்கொருத்தி அமர்ந்திருப்பதையே மறந்து, தாங்கள் எப்பொழுதும் இருக்கும் தனிமையில் பேசுவது போல அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களது சிணுங்களைக் கேட்டவளுக்கு, உள்ளத்தில் எதுவோ பிடித்துக் கொண்டதை போல ஒரு உணர்வு எழுந்தது.

அதை சமாளிக்க அவள் முயன்றுக் கொண்டிருக்கையிலேயே, “நான் வரேன் சிஸ்டர்... நீங்க பேசிட்டு இருங்க” என்றபடி ஹரீஷ் வெளியில் சென்று விட, ஷிவானியின் அருகே வந்து அமர்ந்த ரஞ்சிதா,

“அவருக்கு என்னோட பேரே எப்பவும் மறந்துடும்... எங்க எப்போ போனாலும்... அவர் கூப்பிடற இந்தப் பேர் தான் நியாபகம் வருது... ஒருதடவ ஏதோ அப்ளிகேஷன்ல கூட இந்த பேரை ஃபில் பண்ணி... வீணா போச்சு...” என்று பெருமை பேசத் தொடங்க, ஷிவானிக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“நான் இப்போ ஏதாவது கேட்டனா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவளது விளக்கத்திற்கு பதில் போல புன்னகைத்து விட்டு,

“காலையில ரொம்ப அசதியில தூங்கிட்டு இருக்கேன்னு அவர் எழுப்பாம விட்டுட்டார்... அதனால தான் இப்போ வந்தேன்... எங்க அத்தை ஊர்ல இருந்து என்னைப் பார்க்க வந்திருக்காங்க... நான் கிளம்பறேன்...” என்று சிறு பெண்ணின் போட்டி மனப்பான்மையில் ஷிவானியும் பதிலுக்கு பெருமை பேசத் தொடங்கினாள்.

“என்ன ஷிவானி... ஏதாவது விசேஷமா?” ரஞ்சிதா பேச்சை வளர்க்க, ஷிவானியும் பெருமிதத்துடன் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“ஓ... கங்க்ராட்ஸ்... உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு?” ரஞ்சிதா உற்சாகத்துடன் கேட்க,

“வருஷமா? எங்களுக்கு கல்யாணம் ஆகி... மூணு மாசம் தான் ஆச்சு...” ஷிவானி, குரலில் சந்தோஷத் துள்ளலுடன் சொல்ல, ராஞ்சிதாவின் முகம் போன போக்கில், குழப்பத்துடன் ஷிவானி அவளைப் பார்த்தாள்.

“அதுக்குள்ளயா? எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது... கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணிட்டு அப்பறம் குழந்தையை பத்தி யோசிக்கலாம்ன்னு இருக்கோம்... நீங்க அப்படி எதுவும் பிளான் பண்ணலையா?” சர்வ சாதாரணமாக ரஞ்சிதா கேட்க,

“இல்லைங்க... ரெண்டு வருஷம் கழிச்சுன்னு பிளான் பண்ணினாலும் இதே தானங்க... அதுக்கு எதுக்கு பிளான் பண்ணனும்...” ஷிவானி பட்டென்று சொல்லிவிட, ரஞ்சிதா கடகடவென்று சிரித்தாள்.

“இதுல சிரிக்க என்ன இருக்கு?” சிறிது கடுப்புடன் ஷிவானி கேட்க,

“இப்போ நாம என்ஜாய் பண்றது போல அப்பறம் வருமா என்ன? நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு... ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு குழந்தை வந்தா... ரெண்டு பேருமே ரொம்ப சந்தோஷமா அதை பார்த்துப்போம்... ஆனா... புரிதல் இல்லாம, கொஞ்சம் கருத்து வேறுபாடு இருந்தாலும்... அவ்வளவு தாங்க...” தனது தரப்பு நியாயத்தை ரஞ்சிதா சொல்ல, ஷிவானி அவளை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு,

“சரிங்க... அத்தை நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவாங்க... நான் போய் பேசிட்டு இருக்கேன்...” என்றபடி ஷிவானி எழுந்து கொள்ள, குங்குமம் கொடுத்து, ரஞ்சிதா அவளை வழியனுப்பி வைத்தாள்.

அவள் வெளியில் வரும் பொழுது, எதிர்ப்பட்ட ஹரீஷிடம் தலையசைத்து விடைப்பெற்றவளுக்கு, அவனது கொஞ்சலும், குரலுமே மனதினில் மோத, வீட்டிற்குச் சென்றவள், முதல் வேலையாக புகழுக்கு அழைத்தாள்.

போனை எடுத்தவன், “என்ன சிவா... என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?” என்று அரக்கபரக்க கேட்க,

“இல்ல... சும்மா தான்... உங்க கூட பேசலாமேன்னு...” ஷிவானி சொல்லவும்,

“ராத்திரி நான் வீட்டுக்கு வரும் போது நீ தூங்காம இரு... நிறைய நேரம் கதை பேசலாம்... இப்போ எனக்கு வேலை இருக்கு...” தன் மனைவி தன்னிடம் என்ன பேச நினைக்கிறாள் என்று கூட கேட்காமல், வேலையில் மூழ்கி இருந்தவன், போனை வைக்கவும், என்றும் இல்லாமல், புதிதாக புகழ் தன்னிடம் போனில் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஷிவானிக்கு அதிகமாகத் தாக்கியது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top