யது வெட்ஸ் ஆரு 18

revathi kayal

Author
Author
SM Exclusive Author
#1
hiii dolis...happy reading


18சென்னையில்…தன்னை பார்க்க வந்திருக்கும் இருவரையும் பார்த்தவுடன் படுக்கையிலிருந்து சிரமப்பட்டு எழுந்தமர்ந்தார் காசி. பாதி மனிதனாக ஆகியிருந்தார். நோய் தன் கோர கரங்களை அவரை நோக்கி பாய்ச்சிருந்தது தெரிந்தது. தொடர் கதிரியக்க சிகிச்சையால் கன்னங்கள் இரண்டும் கருத்திருந்தது.தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததற்கு அறிகுறியாக சிறிய ஓட்டை அதை சுற்றி துணி சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் வலி, ரகுவர கிருஷ்ணா மற்றும் விஸ்வநாதனை பார்த்ததும் சிறிது நேரம் ஒய்வு எடுக்க செல்ல,சிறிது ஒளி தெரிந்தது.காசியின் அருகில் அமர்ந்த விஸ்வநாதன் "டேய் நீ ஏன் சிரமப்படுற? படு" என்க, அந்த அறையிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தார் ரகுவர கிருஷ்ணா.காசியை பார்த்து சிறிது வருத்தமாக இருந்தது. எப்படி இருந்த மனிதன் இப்படி ஒளியிழந்து களையிழந்து இருக்கிறாரே என்று.அவரை பார்த்து மெதுவாக சிரித்தார் காசி. அதற்கு மறுமொழியாக தலையசைத்த ரகுவரன், "எப்படி இருக்கு இப்ப?" என்று கேட்க, அந்த கேள்வியாகவே காந்திருந்தவர் போல்,"ஷாக்கு மட்டும் ஏதாவது வழி பார்த்து விட்டுடேனா நிம்மதியா செத்து போயிருவேன். செஞ்ச பாவம் எல்லாம் சும்மா விடாதுனு சொல்றது சரி தான் போல… வலி கொன்னுக்கிட்டு இருக்கு…" என்று தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ஓட்டை இருப்பதால் காற்று போன்ற குரலில், இத்தனை வலியிலும் இயலாமையிலும் ஏதோ காமெடி சொல்வது போல் சிரித்துக்கொண்டே இலகுவாக கூறினார்.ஷாவின் எந்த சூழ்நிலையையும் பதட்டமில்லாமல் கையாளும் திறன் யாரிடமிருந்து வந்தது என்று ரகுவரனுக்கு புரிந்தது."லூசு பையலே, அதெல்லாம் ஒன்னு இல்லை. நீ என்ன பாவம் பண்ண? எல்லாம் அறியாமையால் நீ பண்ணது. எல்லாரும் எல்லா சூழ்நிலையிலும் நல்லவங்களா இருக்க முடியாது" என்று விஸ்வநாதன் காசியை அதட்ட காசி சிரித்தார்.உடல் வலியோ, மன வலியோ எப்படியோ வலியுடன் சிரிப்பவரின் கண்கள் பேசும் மொழி மிகவும் உருக்கமானது. அதை பார்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அப்படி பட்ட கண்கள் ஏதோ உன் மனதிற்குள் விதைக்க விளையும். ஒரு அழும் குழந்தையினை கை கொண்டு தூக்கி சமாதானப்படுத்த முடியாத தாயின் நிலையை போல் இருக்கும்."பாரு சொல்ல வந்ததை மறந்துட்டு என்னென்னமோ பேசிட்டு திரியுறோம். ஆருஷாவும் யாதவும் ஒண்ணா சேர்த்துட்டாங்க. கொஞ்ச நாளுல கல்யாணம் பண்ணி வச்சுரலாம். அதை சொல்ல தான் வந்தோம்" என்று விஸ்வநாதன் கூற, இவர் சொல்வதெல்லாம் உண்மையா என்பது போல் காசி ரகுவரனை பார்த்தார்."ஆமாம் காசி உண்மை தான்" என்று ரகுவரன் சொல்ல,"ஷா கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டாளே… ஏதோ இருக்கு... இவ்வளவு சீக்கிரம்… முடியாது..." என்று தனது மகளை நன்கு அறிந்திருந்த தந்தையாக காசி கூற,"என் பையனை பத்தி உனக்கு தெரியாதே காசி… காதல், கல்யாணம் இதெல்லாம் இல்லாம அவன் ஒரு பொண்ணு கூட இப்படி மாட்டான். கண்டிப்பா உன் பொண்ணை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சு கல்யாணம் பண்ணி உனக்கு மாப்பிள்ளையா வருவான் பாரு" தன் மகனின் குணமறிந்து தந்தையாக கூறினார் ரகுவரன்."நல்லதே நடக்கட்டும். ரொம்ப நன்றி சார்… என் பொண்ணை உங்க வீட்டு மருமகளா கொண்டு வரதுக்கு நீங்க இவ்வளவு மெனக்கிடுறிங்க…" என்று காசி நன்றியையும் கம்பிரகாமாவே கூறினார்."ஷா பத்தி இவன் நிறைய சொல்லிருக்கான்..." என்று தாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கும் விஸ்வநாதனை பார்த்து கூறியவர், "அவளோட passion வைராக்கியம், முதிர்ச்சியா யோசிக்கிறது, திமிர் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப வருஷமாவே எனக்கு யாதவ்க்கு ஷாவை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.”“இடைல சிவாவும் ஷாவும் காதலிக்குறாங்க அப்படி இப்படினு இவன் சொல்லவும் யாதவ்க்கு கொடுத்து வைக்கல போல அப்படினு விட்டுட்டேன். அப்பறம் அவங்களுக்குள்ள ஒத்து வரல சிவாக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன் அப்படினு இவன் சொல்லவும் தான் என் தங்கச்சி பொண்ணை சிவாக்கு கொடுத்தது. அடுத்து ஷா யாதவ் கல்யாணமா தான் நினைச்சு இருந்தது. அதுக்குளையும் அவங்களே மீட் பண்ணி எல்லாத்தையும் சொதப்பவும், இதான் வாய்ப்புன்னு இடையில புகுந்து எப்படியாவது கல்யாணத்தை முடிச்சுரலாம்னு என்ன என்னமோ பண்ணேன். ஆனால் அதையும் ஷா எப்படி ஹாண்டில் பண்ணா பார்த்தியா? அதுக்கு அப்பறம் தான் யாதவ்க்கு ஷா தான் பொருத்தமான ஜோடினு முடிவே பண்ணிட்டேன்" என்று ரகுவரன் கூற விஸ்வநாதனும், காசியும் திறந்த வாய் மூடாமல் அவரையே பார்த்தனர்.அவர் எண்ணங்களை எல்லாம் இதுவரை விஸ்வநாதனிடம் கூட அவர் சொன்னதில்லை. விஸ்வநாதனும் ஏன் இப்படி ஷாவையும் யாதவையும் இணைப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறான் என்று ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு விடை இப்பொழுது கிடைத்திருக்கிறது."இப்ப ஒகே. ஆனால் ரெண்டு பெரும் பாக்குறதுக்கு முன்னாடி எப்படி ஷாவுக்கு யாதவையும், யாதவுக்கு ஷாவையும் பிடிக்கும்னு நீ எதிர்பார்த்த?" என்று 'உனக்கு பிடித்திருக்கின்ற ஒரே காரணத்துக்காக இருவரின் வாழ்க்கையில் நீ நினைத்ததை செய்வியா??' என்பது போல் விஸ்வநாதன் ரகுவரனிடம் கேட்டார்.காசிக்கு புரிந்துவிட்டது. 'எப்படி ரகுவரன் இருவருக்கும் ஒத்துவரும்?' என்று நினைத்தார் என்று,"சோ சிம்பிள், யாதவ் வந்து குழந்தை மாதிரி அவனுக்கு அதட்டி உருட்டி அம்மா ரோல் பண்ற பொண்ணு தான் சரியா வருவா. முதல் பிடிக்காத மாதிரி இருந்தாலும் அப்புறம் ரொம்ப விரும்ப ஆரம்பிச்சுருவான். யாதவ் எப்பயும் அடிமையா இருக்க தான் விரும்புவான். பத்தாததுக்கு ஷாக்கு கொஞ்சம் கரீனா கபூர் ஜாடை. சோ யாதவ் விழுத்துருவான்னு எனக்கு தெரியும்" என்று ரகுவரன் சிரிப்புடன் கூற, காசி ஷாவிற்கு எப்படி யாதவை பிடிக்கும் என்பதற்கான விளக்கத்தை கூறினார்."ஷாக்கு ஆளுமை அதிகம். அதுனால அவளுக்கு அவ சொல்றதை கேட்குற ஆளு தான் சரியா வருவான். அவளை ஒரே நேரத்துல தாயாவும், குழந்தையாவும் பாக்குற தன்மை யாதவ் கிட்ட தான் இருக்கு. சிவாக்கும் ஷாக்கும் ஒத்து வராததற்கு காரணம் இதான். ரெண்டுபேருமே ஆளுமை ஆனவங்க" என்று காசி கூறி முடிக்க, 'இத்தனை நாள் உங்க கூட தானே டா இருந்தேன்... என்னென்னமோ புதுசா சொல்லறீங்க…' என்பதுபோல் இருவரையும் பார்த்தார் விஸ்வநாதன்.ஷில்லாங்…ஷாவும் யாதவும் நடுவில் நிற்க, அவர்களுக்கு வலதுபுறம் சித் மற்றும் கனி அணைத்தவாறு சிறிது விலகியும் விலக்காதவரும் நின்றிருக்க, இடதுபுறம் கவி மற்றும் மாஹிர் கை கோர்த்து நின்றிருந்தனர். யாதவின் பார்வை முழுவதும் கோர்த்திருந்த இருவரது கைகளில் தான் இருந்தது.ஷா தங்களுக்கு வலது புறமிருந்த சித் மற்றும் கனியிடம் "நீங்க ரெண்டு பேரும் எப்ப சேர்ந்திங்க..?"என்று கேட்க, அதே நேரத்தில் தங்களுக்கு இடது புறம் நின்றிருந்த கவியிடம்"இவன் கூட நீ என்ன பண்ணிட்டு இருக்க.?" என்று அதட்டலாக கேட்டான் யாதவ்."அது...அது..அண்ணா சார்.." என்று கவி திணற, இடையில் புகுந்த மாஹிர் "ஹம் ரெண்டு பேரும் ஏக் துஸரே சே காதலிக்குறோம்..” (நாங்க ரெண்டு பேரும் நேசிக்குறோம்) என்று கூற, யாதவின் முகம் கடுமையாக மாறியது.வலுக்கட்டாயமாக மாஹிரின் கரங்களிருந்து தனது கரத்தை உருவிய கவி "அண்ணா சார்.." என்று எதுவோ கூற முயற்சிக்க, அவளை நோக்கி வலக்கையை உயர்த்தி அவள் பேசுவதை நிறுத்தினான் யாதவ். அந்த இடைவேளையில் எப்படி என்று தெரியாமலே கவியின் கரத்தை மீண்டும் தனது கரத்துடன் பிணைத்திருந்தான் மாஹிர்.அதில் இன்னும் கோவம் வரப்பெற்ற யாதவ் "எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இவளை லவ் பன்றேன்னு சொல்வ?" என்று மாஹிரின் சட்டையை யாதவ் பிடிக்க,கவி, சித், கனி மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற, யாதவின் கையில் சட்டென்று ஒரு அடியை போட்டாள் ஷா. அந்த எதிர்பாராத அடி வலிக்க மாஹிரின் சட்டையிலிருந்து கரங்களை விலக்கி ஷாவை பார்த்தான் யாதவ்.மாஹிர் மற்றும் கவியை 'போங்கள்…' என்பது போல் கண்களால் சைகை செய்தாள் ஷா.ஷாவை முறைத்த யாதவ், திரும்பி மாஹிர் மற்றும் கவியின் கோர்த்திருந்த கரங்களில் கோவமாக படிய, மாஹிரும் ஒரு ஏளனமான முறைப்புடன் கூடிய பார்வையை ஷாவின் கரத்துடன் பிணைந்திருந்த அவனது கரங்களின் மீது படரவிட்டான்.அப்பொழுது தான் அதை உணர்ந்த யாதவ், 'நாம எப்ப இவை கையைப் பிடிச்சோம்? சரி ஒரு க்ரிப்புக்காக பிடிச்சுருப்போம்' என்று நினைத்தவாறு கரத்தை விலக்கினான்.அந்த இடைவேளையில் மாஹிர் மற்றும் கவி இடத்தை காலி பண்ணிருக்க, ஷாவை முறைத்தான் யாதவ்."என்ன முறைப்பு..?""நான் பேசிட்டு இருக்கேன்ல. எதுக்கு அவங்களை அனுப்பி விட்ட?" என்று யாதவ் கேட்க, 'இவன் யாரு டா.? ஆக்ரோஷமாக பேச வேண்டிய டையலாக்கை ஆட்டுக்குட்டியை தடவி கொடுப்பது போல் பேசிட்டிருக்கான்' என்பது போல் யாதவை சித் மற்றும் கனி பார்த்தனர்."நீ பேசலை மேன். சண்டை போடுற. அது என்ன டா கேனைத்தனமான கேள்வி? உன் தங்கச்சியை லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாம பக்கத்துக்கு வீட்டுகாரன்கிட்டயா போய் சொல்லுவான்?""எனக்கு புரியுது. மாஹிர் என்னை மாதிரி எல்லாம் கிடையாது. அவன் உண்மையா கவியை காதலிக்குறான். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவான். நீ தேவை இல்லாம ஒர்ரி பண்ணிக்காத" என்று ஷா கூற,அவளை முறைத்த யாதவ், "என்ன உன்னை மாதிரி கிடையாது? பைத்தியம் மாதிரி பேசாதே. அவன் யாரு? எவன்னு அவன் பாக்ரௌண்ட் தெரியாம எப்படி கவி அவனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் படுறா? அவ அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லை" என்று நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டு குழப்பத்துடன் கூறினான் யாதவ். அவன் இன்னும் மாஹிரை நம்பவில்லை."அவன் யாரோ இல்லை. மாஹிர் என் தம்பி" என்று ஷா அழுத்தமாக கூற,எப்பொழுதும் போல சினிமாவிலே ஊறி ஈரம் பொதிந்திருந்த யாதவின் மூளை ஏடாகூடமாக யோசிக்க ஆரம்பித்து, வாய் வார்த்தையாகவும் வர ஆரம்பித்திருந்தது."யு மீன்…. உங்க அப்பாவோட பையனா…" என்று அவன் பேச ஆரம்பிக்க,
 
revathi kayal

Author
Author
SM Exclusive Author
#3
"கொன்றுவேன் டா.. எப்ப பார்த்தாலும் என் குடும்பத்தை இப்படி நாஸ்தி பண்ற… சனியனே..." என்று எக்கி அவனது மண்டையில் கொட்ட,"ஓஹ்… அப்ப இல்லையா? ஏதாவது புரியுற மாதிரி சொல்லி தொலை டி..." என்று யாதவ் கேட்க, இவ்வளவு நேரமும் நடந்த சம்பாஷணை அனைத்தையும் இருவரையும் திறந்த வாய் மூடாமல் கனியும் சித்தும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இருவரது குணத்துக்கும் ஒரு பிரளயமே வரப்போகிறது என இவர்கள் நினைத்திருக்க, இவர்களோ கொஞ்சி கொண்டு இருக்கின்றனர்."என்னய்யா நடக்குது இங்க..?" என்று பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்பதுபோல் கனியும் சித்தும் ஒரே நேரத்தில் சத்தமாக கத்த, அப்பொழுது தான் இருவரும் இன்னும் இங்கே இருந்து செல்லவில்லை என்பதை உணர்ந்தனர் ஷாவும் யாதவும்."ஆமாம் நீங்க எப்ப சேர்த்திங்க.." என்று ஷா இருவரையும் பார்த்து கேட்க,"அதானே.." என்று யாதவும் கேட்க,ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கனியும், சித்தும் "நேத்து.." "இப்ப.." என்று ஆளுக்கு ஒரு பதிலை முழித்துக் கொண்டு கூற, ஷா மற்றும் யாதவின் பார்வை கூர்மையானது. இப்படி சொதப்பிட்டோமே என்று நினைத்த இருவரும், நீ சமாளி என்பது போல் ஒருவரையொருவர் பார்க்க, பின்பு இருவரும் எதையெதையோ கூறி சமாளித்து, ;நீங்கள் இருவரும் ஏன் ஒன்றாக சுற்றிகிறீர்கள்??" என்று கேட்டு அவர்களை குழப்பி விட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று கண்களை விட்டு மறைத்தனர்.'இது யாருங்க டா பைத்தியங்கள்?' என்பதுபோல் நினைத்துக்கொண்டனர் இருவரும்."சரி அவங்களை விடு… நீ சொல்லு..." என்று யாதவ் ஷாவை நோக்கி கேட்க,"ஹான்... நான் புனேல படிக்கும் போது எனக்கு ஜூனியர் மாஹிர். அப்பத்துல இருந்தே திதி திதினு என் மேல ரொம்ப பாசமா என் பின்னாடியே திரிவான். அவங்க அம்மாவும் ரொம்ப நல்லவங்க. அவனுக்கு அப்பா கிடையாது, தெரியாதும் கூட. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். சொந்தப ந்தம் அப்பிடி யாரும் கிடையாது. ஒரு விபத்துல இவன் செகண்ட் இயர் படிக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டாங்க. அதுக்கு அப்பறம் அந்த ஆளுகிட்ட சொல்லி மாஹிரை சட்டபூர்வமா தத்து எடுத்துகிட்டோம். இவன் என் தம்பி.""என் கூடவே என் நிழலாவே அவன் இருந்துற மாட்டான். எனக்கு இப்ப அஸ்சிஸ்டன்டாஹ் இருக்கான். கொஞ்சம் கத்துகிட்ட பின்னாடி தனியா அவன் ஒளிப்பதிவாளர் ஆயிருவான். அந்த ஆளுக்கு அப்பறம் எல்லா சொத்தும் இவனுக்கு தான். நான் செத்ததுக்கு அப்பறம் என் சம்பாத்தியம் சொத்து எல்லாம் இவன் வாரிசுகளுக்கு தான்.." என்று ஷா மூச்சு விடாமல் கூறி முடிக்க, அவ்வளவு நேர முழு கதையையும் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டு வந்தவன் அவளது இறுதி வரிகளில் குழம்பி முன் கூறிய எதையும் பற்றி நினைவில்லாமல்"உன் குழந்தைகளுக்கு இல்லையா உன் சம்பாத்தியம்?" என்று கேட்க, அவனை குழப்பமாக பார்த்தவள்"நான் தான் கல்யாணம் பண்ணிக்கவே போறது இல்லை. சோ குழந்தையும் கிடையாது" என்று தோள்களை குலுக்கியவாறு கூற"ஏன்?""என்ன ஏன்..?""ஏன் நீ கல்யாணம்,பிள்ளை எல்லாம் வேணாம்னு சொல்லுற?" என்று திடிரென்று உணர்ச்சிவச பட்ட யாதவ் அவளது தோள்பட்டைகளை பிடித்து அழுத்தியவாறு கேட்டான்."எருமை..வலிக்குது விடு…" என்று அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக விலகியவள்"இன்னொரு ஷா உருவாக நான் விரும்பல யது…" என்று யாதவின் கண்களைப் பார்த்து ரொம்ப நாட்களுக்கு பிறகு சுயநினைவுடன் அவனது பெயரை சுருக்கி அழைத்தது கூட உணராமல் யாதவை விட்டு சென்றாள்.ஷாவின் வார்த்தைகளை புரிந்து கொள்ளவே அவனுக்கு சில நொடிகள் தேவை பட்டது. அவள் அந்த வார்த்தைகளை எந்த உணர்வும் இல்லாமல் தான் கூறினாள், இவனுக்கு தான் அது வேதனையை கொடுத்தது. அவளது பெற்றோர்களுக்கு இடையேயான பிரச்சனைகளை கொஞ்சம் அரசல்புரசலாக கேள்வி பட்டிருக்கிறான். அவளை இறுக்கி பிடித்து கொண்டிருக்கும் இறந்தகால தளைகளில் இருந்து ஆருவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கொண்டான்.அதன்பிறகு படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வண்டியில் ஏறும் வரையில் ஷா அவன் கண்ணின் முன்பு வரவே இல்லை. யாதவிற்கும் சிறிது யோசிக்க வேண்டி இருந்ததால் அவளை சென்று அழைக்கவில்லை.வண்டியில் பார்த்தவுடன் எப்பொழுதும் போல் சிரித்துவிட்டு அவனது அருகிலே அமர்ந்தாள் ஷா. அடுத்தடுத்து இன்றைய நாள் வேகமாக சென்றது. முத்தக்காட்சி வெற்றிகரமாக முடிந்து, சில காட்சிகள் சித்துடன் எடுக்கப்பட்டு மாலை போல காட்டேஜ் திரும்பினர்.ஷா அவளது அறைக்குள் நுழைய இருந்ததும், கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் யாதவ்."டேய் வெள்ளை பண்ணி… டிரஸ் மாத்திட்டாச்சும் வரேன் டா..." என்று கூற, ஒரே ஒரு நிமிஷம் என்பது போல் ஒரு கண்ணு சுருக்கி வாயசைத்து சைகை செய்தவன், அவளை தனது அறைக்கு அழைத்து வந்தான்.அறைக்குள் நுழைந்ததும் ஷாவை கண்களை மூடச் சொன்னவன், அவனது அலமாரியில் இருந்த ஒரு பாலிதீன் பையை எடுத்து வந்து அவளது முன் நீட்டி அவளை கண்திறக்க கூறி விட்டு ஆர்வமாக பார்த்தான்.ஷாவோ 'என்னது இது?' என்பது போல் அதை கரங்களில் கூட வாங்காமல் பார்க்க, "முதல் இதை பிடி… அப்புறம் பிரிச்சு பார்த்துட்டு சொல்லு..." என்று யாதவ் கூற,"எனக்கு கிப்ட் எல்லாம் பிடிக்காது… வேணாம்..." என்று கைகளை கட்டி கொண்டு வீம்பாக கூற,"ப்ளீஸ்… ப்ளீஸ்… பிரிச்சு பாரு…" என்று கொஞ்சி குலைந்தான் யாதவ்.'இவன் சொல்வதை தன்னை கேட்க வைக்கிறான், தானும் எந்த தடுமாற்றமும் இன்றி ஏற்றுக் கொள்கின்றோம்.சம்திங் பிஷி' என்று மூளை எச்சரித்து கொண்டிருக்க ஷாவின் கரங்கள் அந்த பரிசுப்பொருளை வாங்கிருந்தது.பிரித்து பார்த்தவள் சிறிது தடுமாறிதான் போனாள். ஷா ரொம்பகாலமாக வாங்க நினைத்த ஒரு பொருள்.அவள் நினைத்தாள் இன்றே கூட வாங்கிவிடலாம். அவ்வளவு விலை உயர்ந்தது எல்லாம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தடவையும் அதை வாங்கச் சென்று வேண்டாம் என்று திரும்பியிருக்கிறாள். ஏனோ,அதை யாராவது தனக்கு வாங்கி தர வேண்டும் என்று அவளது மனம் விரும்பியது.சில பொருள் நாம் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்போம். அது மிகவும் நமக்கு பிடித்திருக்கும் கூட, ஆனால் வாங்க மாட்டோம். நமது அன்பானவர்கள் யாராவது வாங்கி கொடுத்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். ஒவ்வொரு தடவையும் அந்த பொருளை ஏக்கத்தோடு கடப்போம். ஆனால் வாங்கமாட்டோm
 
Advt

Advertisements

Top