• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யது வெட்ஸ் ஆரு 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai
அத்தியாயம் 5



"அப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க..."என்று விஸ்வநாதன் கூறவும்...இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டவர்கள் முகத்தை சுளித்து ஒரே நேரத்தில் "வாட் தி ஹேக்..." "வாட் தி****"என்று கூவினர்…



இது தான் இன்றைக்கான ஆகச்சிறந்த அதிர்ச்சியாக இருக்கமுடியும்...நேற்று இரவு தான் இருவரும் முதன்முறையாக ஒருவர்க்கொருவர் சந்தித்துக்கொள்கின்றனர்…இருவரது முன்னாள் காதலர்களுக்கும் திருமணம்...அந்த வேதனை...அதைப் போக்க இருவரும் செய்தச் சிறிய செயல்... அது மிகப்பெரிய பூதாகரமாகி…இப்பொழுது இருவருக்கும் திருமணம் என்ற நிலையில் வந்து நிற்கிறது...வாழ்கை நிச்சயமாக ஒரு பரபரப்பான அடுத்து வரும் நிகழ்வை கொஞ்சம் கூட யூகிக்க முடியாத மர்மநாவல் போன்றது தான் போலும்…



யாராவது முதல் நாள் மாலை வந்து இவர்கள் இருவரிடமும்...இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் ஒருவரை சந்திக்க போகிறீர்கள்...அவர்கள் உங்களது தற்காலிக காதலர்களாக இருப்பார்கள்...மறுநாள் உங்கள் பெற்றோர்களே அவர்களை திருமணம் செய்யச்சொல்லி உங்களை வற்புறுத்துவர் என்றுக் கூறியிருந்தால் இருவரும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்திருப்பர்...ஆனால் இன்றைய நிலைமையோ வேறு…



"என்னால இந்த ஆண்ட்டிகள் மனம் மயங்கும் ஹீரோவெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது..."என்று ஷா யாதவை நோக்கி ஒரு நக்கல் பார்வையை வீசியவாறு கூறவும்...அவளின் வார்த்தைகளில் கோவம் கொப்பளித்துக்கொண்டுவர யாதவ் பற்களைக் கடித்துக்கொண்டு " கிர்ர்….என்னாலே எல்லாம் இந்த பஜாரியோட குடும்பம் நடந்த முடியாது..."

"எங்களுக்கு வேற வழியில்லை...உங்ககிட்ட நாங்க கல்யாணம் பண்ணிக்கிறிங்களானு அப்படினு கேட்கல...கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லுறோம் மிஸ் ஆருஷா..."என்று ரகுவரன் நாங்கள் சொல்வதே கேட்டாகணும் என்ற ரீதியில் கூறினார்…



அவர் மகன் கூறியப்பதில்லை அவர் ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்ளவில்லை...இப்பொழுது என்று இல்லை...எப்பொழுதுமே இப்படி தான்...



"ஏனோ...நாங்க நீங்க சொன்னதை கேட்கணும்...வெயிட்..வெயிட்...உங்க சீமந்த புத்திரன் வேணும்னா நீங்க சொல்லுறதை கேட்கலாம்...நான் ஏன் கேட்கணும்..."என்று ஷா கைகளைக் கட்டிக்கொண்டு அவரது முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்கவும்…



அவர் முகத்தில் சின்னதாக ஒரு மென்னகை வந்தது..."பிக்காஸ்...உங்களுக்கு வேற வழியில்லை...இப்ப வெளியேப் போய் என்ன சொல்லுவ நீ...குடிச்சுட்டு ஒரு நாள் ராத்திரி யாதவ் கிருஷ்ணாக்கு காதலியா இருந்தேனா...அது சொல்லறத்துக்கு உங்களுக்கு வேணும்னா நல்லதா இருக்கலாம்...ஆனால் என் ஸ்டேட்ஸ்க்கும்...என் குடும்பத்துக்கும் அது மிக பெரிய அசிங்கம்...நீங்க பண்ண தப்பை உங்களால திருத்த முடியாத பட்சத்தில் எங்க சொல்பேச்சு தான் கேட்கணும்...டூ யு கெட் தட்..."என்று ரகுவரன் தனக்கான ட்ரேட்மார்க் திமிருடன் ஷாவைப் பார்த்து கூறினார்…



"உங்ககிட்ட நாங்க சொன்னோமா...இந்த பிரச்சனையை தீர்க்க முடியாதுனு...நீங்களா இந்த சீன்க்குள்ள வந்துட்டு ஓவர் படம் காட்டுறிங்க...எப்படி இது உங்களுக்கு வந்த அசிங்கம்னு சொல்லுவீங்க...எனக்கு புரியல... மிஸ்டர் ரகுவரன்…"

"நேத்து உன்னோட தற்காலிக காதலனா இருந்த இந்த யாதவ் கிருஷ்ணா...தி கிரேட் ரகுவர கிருஷ்ணாவோட அதாவது என்னோட மகன்..."

"ஹான்...இந்த தமிழ்நாட்டுல யாருக்கும் ரகுவர கிருஷ்ணாவோட மகன் தான் யாதவ் கிருஷ்ணானு தெரியாது...இந்த என்னோட தற்காலிக காதலரா இருந்த யதாவோட அப்பா தான் இந்த ரகுவர கிருஷ்ணானு தெரியும்...உங்களோட அந்த சோ கால்டு கிருஷ்ணா பின்பெயர் இல்லாமயே இந்த யாதவை இரண்டு வயசு குழந்தைல இருந்து அறுவது வயசு கிழவி வரைக்கும் தெரியும்... இவனா இவனோட அடையாளத்தை உருவாக்கியிருக்கான்...மே பி...அவனோட முதல் வாய்ப்பு கிடைக்குறதுக்கு வேணும்னா இந்த கிருஷ்ணான்ற பேர் உதவி இருக்கலாம்...ஆனால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வரதுக்கு அவனோட திறமை மட்டும் தான் காரணம்...”

“அப்புறம் நான் யாரு..எந்த வீட்டு பொண்ணுன்னு யாருக்கும் தெரிச்சுருக்க வாய்ப்பில்லை ...சோ உங்களோட ஸெல்ப் obsessionஐ கொஞ்சம் கொறைச்சுகிட்டா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்..."

"அப்படி போடு டி என் பஜாரி...நிஜமாவே இவளை கல்யாணம் பண்ணிக்குவோமா...எங்க அப்பனை இந்த வாங்கு வாங்குறா...” என்று மனதினுள் நினைத்தவன்... நொடிப்பொழுதில் தான் நினைத்ததை உணர்ந்து அதிர்ந்தவன்...



ச்சி ச்சி,...யாதவ் உனக்கு ஏன் டா இப்படி புத்தி புல் மேயப்போது...யாருன்னே தெரியாத மனுஷனையே இந்த வாங்கு வாங்குனா...இவளுக்கு புருஷனாக வர போறவனை என்ன கதிக்கு ஆக்குவா... நாம உடம்பு எல்லாம் பித்து உடம்பு... அடி தாங்க மாட்டோம்..தூக்கி விட்டுரும்...."என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருவருக்கும் நடக்கும் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தான் யாதவ்...





"நேத்து என் கூட இருந்தது உங்க மகன் தானே..."



"ஏய்ய்...என்ன டி மொட்டையா உன் கூட இருந்ததுன்னு சொல்லுற...சும்மா இருந்தேன்னு சொல்லு டி...என் கற்பை நான் ஒன்னும் பண்ணாமலே கலங்க படுத்திருவா போலயே…."





“அவனும் நானும் இந்த பிரச்சனையே எப்படி தீர்க்குறது...ப்ரெஸ்க்கு என்ன பதில் சொல்லுறதுனு நாங்க பார்த்துக்குறோம்...நீங்க கொஞ்சம்..." என்று ரகுவரனுக்கு நன்றாக புரியும்படி கூறியவள்



"ஏய்..வாடா என்கூட..."என்று யாதவை அழைத்தவள்...அவன் வருவதற்குள் இவளே அவனின் அருகில் சென்றுக் கையை பிடித்துக்கொண்டு இல்லை இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற கதவை திறந்தாள்…

கதவை திறந்தவள் வெளியே செல்லாமல் ரகுவரனை திரும்பிப்பார்த்து "நீங்க சொல்லுற சோ கால்டு ஸ்டேட்டஸை வைச்சு சமூக வலைதளத்தில் பரவிக்கிட்டு இருக்க எங்க விடியோஸ் போட்டோசை எடுங்க...அப்ப தான் நீங்க பெரிய ப....பணக்காரர்னு ஒத்துக்குவேன்..”



"ஆப் கோர்ஸ் பேபி...உனக்கு இல்லாததா..."என்று ரகுவரன் கூறியதை நம்பமுடியாத ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர் யாதவும்...உள்ளே இருந்த மூவரும்...ஷா பேசிய பேச்சுக்கு இவர் எப்படி எதிர்வினை ஆற்றுவரோ என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு இவரின் மறுமொழி என்ன இது ரகுவரான இப்படி என்பதுபோல் இருந்தது...

யாதவோ ஒரு படி மேலேசென்று அவளது கரத்தில் இருந்து தனது கரத்தை உருகியவன் வேகமாக ரகுவரனை நெருங்கி அவரது இடது கையை பிடித்து இழுத்து உள்ளங்கையில் ஏதோ தேடியவன்...அவரை ஒரு மாதிரி மேலிருந்து கீழ்வரை பார்த்தான்…

"என்ன டா பண்ற..."என்று ஹரி வந்து யாதவின் காதிற்குள் கேட்கவும்…

"ஒன்னும் இல்லை டா...இது நம்ம அப்பா தானான்னு பாக்குறேன்...உள்ளங்கையில மச்சம் இருக்கு...அப்படி இருந்தும் எப்படி...இன்னியராம் ஷாவை பார்த்து உன்னை ஒண்ணுமில்லாம பண்ணிருவேன்...அப்படி இப்படினு தெலுங்கு படம் வில்லன் மாதிரில டயலாக் பேசணும்...ஏன் நம்ம தமிழ் படம் சரத்பாபு மாதிரி பேசுறாரு..."என்று யாதவும் அவன் அண்ணன் காதில் கூறினான்...



ஷாவோ சின்ன அதிர்ச்சியைக் கூட முகத்தில் காட்டாமல் அவரைப் பார்த்து உதட்டை சுழித்துவிட்டு யாதவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்…



உண்மையில் சொல்லப்போனால் ரகுவரனுக்கு ஆருஷாவை மிகவும் பிடித்துவிட்டது...இவரைப் பொறுத்தவரை யாதவ் வாழ்க்கையில் மிதமிச்சிய விளையாட்டுதனம் கொண்டவன்...ஒரு செயலைப் பொறுப்பாக எடுத்து செய்யும் அளவிற்கு மனப்பக்குவம் இல்லாதவன்...உணர்வுகளுக்கும்...உணர்ச்சிகளுக்கும் அடிமையானவன்...மொத்தத்தில் வளர்ந்த குழந்தை...அதே சமயத்தில் குழந்தை போன்றே தூயமனதையும் கொண்டவன்...தனக்கென்று கொள்கை...லட்சியம்...இல்லாதவன்…அதே குணங்களை கொண்டு...அதிகம் ஒரு குணமாக எடுப்பார் கைப்பிள்ளை குணம் கொண்டவள் தான் ஆராதனா...யாரோ அவளின் தோழி ஒருத்தி கனிஷ்கா மற்றும் யாதவை குறித்து தவறாக கூறியதால் இவனை ஒதுக்கியவள்...இவர் நினைத்திருந்தால் ஆராதனாவை யாதவ்விற்கே திருமணம் செய்து வைத்திருக்க முடியும்...அதனால் என்ன பயன்...இருவர் வாழ்க்கையையும் தான் கேள்விக்குறி… அதனால் தான் ஆராதனவிற்கு வேற இடத்தில் மாப்பிளை பார்த்தது….



அவருக்கு பொதுவாக இந்த ஹாஷினி டைப் பெண்களை கண்டாலே ஆகாது...ஆனால் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு தெரிந்தாள் ஆருஷா...தனது மகனை பார்த்துக்கொள்ள...வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டுச்செல்ல இவளே சரியான பெண் என்று நினைத்துக்கொண்டவர் மீதமிருந்த மூன்று பேற்றையும் பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டார்….

காசியும் விஸ்வநாதனும் ரகுவரனை பேச விட்டு பார்த்ததற்கு ஒரே காரணம் எப்படியாவது ஆருஷா திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தான்...அவர்களுக்கு நன்றாக தெரியும் ஷாவிற்கு திருமணம் குழந்தை குடும்பம் இதிலெல்லாம் ஈடுபாடு விருப்பம் என்று எதுவும் கிடையாது...அப்படி இருந்திருந்தால் சிவாவே இவளை மணந்திருப்பானே...அதனால் தான் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தனர்...அதுவும் இப்படி புஷ் ஆகி விட்டது...



"இப்ப என்ன பண்ணப் போறோம்..."என்று யாதவ் ஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே...வேகமாக ஓடிவந்த கவி...அவனிடம் அலைபேசியை கொடுத்தாள்….



அலைபேசியை வாங்கியவன் "யார்..."என்பதுபோல் சைகையில் கேட்டான்..."களங்கம் ப்ரொடியூசர்..."என்று கவி வாயசைத்து கூறவும்…



"நீயே பேசி சமாளி..."என்று வாயசைத்தவாறு மீண்டும் அவளிடமே கொடுத்தான்…"காலைல இருந்து கூப்டுறார்...பேசுங்க..."என்று அவளும் வாயசைத்தவாறு மீண்டும் அவனிடமே கொடுத்தாள்…



இவர்களின் மௌனநாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஷா...கடுப்பாகி அவனின் கையிலிருந்த அலைப்பேசியை பறித்தவள் அதை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள்...



"இப்ப எதுக்கு டி... ஆப் பண்ண...அந்த ஆள் என்ன நினைப்பாரு…"

"அப்பறம் என்ன...இங்கே எவ்வளவு பெரிய பிரச்னை நடந்துட்டு இருக்கு...ரெண்டுபேரும் சின்னப்பிள்ளை தனமா விளையாண்டுட்டு இருக்கீங்க..."

"இந்த பிரச்சனைக்கு முழுமுதற் காரணமே நீ தான்... "நான் பேசாட்டி நிலாவைப் பார்த்து யேசுதாஸ் மாதிரி புலம்பிட்டு"

"அண்ணா சார்...அது தேவதாஸ்..."

"ஹான்...அவரு தான்...அவருமாதிரி பக்கத்துல ஒரு நாயை வைச்சுக்கிட்டு சரக்கு அடிச்சுட்டு நான் பாட்டுக்கு வீட்டுக்கு போயிருப்பேன்...ஆனால் நீ இடைல வந்து என் வயிறு மேலயே விழுந்து...விழுந்ததுக்கு ஒரு சாரி கூட கேட்காம என்னையவே பளிச்சுனு ஒரு அரை விட்டு...சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்ற மாதிரி சரக்கடிக்க போலாமான்னு கூப்பிட்டுட்டு போய் எனக்கு லட்ச ரூபாய்க்கு மேல நஷ்டமாக்கி...என் பொண்டாட்டி பேரை ஆசையா குத்தவேண்டிய என் நெஞ்சுல...சுயநினைவு கூட இல்லாம உன் பேரை என் முதுகுல குத்தி அதையும் வீடியோ எடுத்து உலகமே பாக்குற மாதிரி பண்ணி...யார் முன்னாடி தலை குனிய கூடாதுனு நினைச்சேனோ...அந்த எங்க அப்பன் முன்னாடியே என்னை தலைகுனிச்சு நிக்கவைச்சு..கேவலம் ஒரு பிரெஸ்ஸை பாக்குறதுக்கு கூட பயப்படவைச்சு...கடைசியா யாருன்னே தெரியாத உன்னை நம்பி என்னை நிக்கவைச்சுட்டீல டி... "என்று அவன் மிகப்பெரிய வசனம் பேசிமுடித்தவேளையில் சரியாக அவன் ஷாவை நோக்கி நீட்டியிருந்த கையில் தண்ணீர் போத்தலை கொண்டுவந்து வைத்தாள் கவி....

"எனக்கே மூச்சு வாங்குது அண்ணா சார்...குடிங்க….குடிங்க..."என்றவள் யாதவ் குடிக்கபோவதற்கு முன்னால் அவளே அவனின் கையில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென்று குடித்திருந்தாள் கவி...
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,720
Location
madurai


யாதவ் பேச ஆரம்பித்தபோதே அந்த இடத்தை நெருங்கிருந்த மாஹிர்...அவனின் பேச்சில் பயங்கர கோவத்தில் இருந்தான் என்று தான் சொல்லவேண்டும்...யாதவை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தவாறு "தீதி...தும்ஹரா பி குச் ஸ்டாண்டர்ட் ஹே...ஜோ நஹி ஸம்ஜ்தே உன்கே சாத் கியூன் பாத் கர்ணா?உஸ்கி ப்ரோப்லம் ஹே வோ தேக் லேகா...சலோ ஜல்த் ஹேன்..."என்று எப்பொழுதும் அவனே உருவாக்கிய ஹிமிழ் மொழியில் பேசும் மாஹிர் கோவத்தில் தனது தாய் மொழியான ஹிந்தியிலே ஷாவை திட்டிவிட்டான்...

[அக்கா..உனக்குன்னு ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கு...அது தெரியாதவங்க கூட எல்லாம் ஏன் பேசுற...அந்த ஆள் பிரச்சனையே அந்த ஆளே எப்படியும் பார்த்துகிட்டு போறாரு ...உனக்கு என்ன...வா நாம போவோம்...]

"மாஹிர்...நீ உள்ளே போ..எனக்கு என்ன பண்ணனும் தெரியும்..."என்று ஒரே வார்த்தையில் மாஹிரை அடக்கியவள் "பேசி முடிச்சுட்டியா...வா..."என்றவள் அவனை கூட்டிக்கொண்டு பிரஸ் ஆட்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்...

அங்கிருந்த பத்திரிகையாளர்களை பார்த்துசிரித்தவள் "நானும் யதுவும் ரொம்ப நாளா காதலிக்குறோம்...இப்ப உங்க எல்லார்கிட்டயும் சொல்றதுல ரொம்பவும் சந்தோசம்…."என்று கூறியவள் யாதவை பார்த்தாள்...இவள் வேறுஏதோ சொல்லி சமாளிப்பாள் என்று அவள் இழுத்த இழுப்புக்கு வந்தவன் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை...

வேறு என்ன செய்வது என்று தெரியாமல் "ஆமாம்..."என்று தலையாட்டியவன் "இன்னொரு நாள் இதை பத்தி விளக்கமா பேசலாம்…உள்ளே எங்க வீடு கல்யாணம் நடந்துட்டு இருக்கு...அதுல நாங்க கலந்துக்கணும்ல...சோ பை..."என்று யாதவ் கூறி முடிக்கநினைக்கையில் நேற்று எடக்கு மடக்காக கேட்ட அதே பத்திரிகையாளர் இன்று சரியாக பாய்ண்டை பிடித்து கேட்டார்....

"லவர்ஸ்னு சொல்றிங்க...அப்புறம் எதுக்கு சார் நேத்து போஸ்ட் பண்ண வீடியோவை இன்னைக்கு காலைல உங்க இன்ஸ்டா அக்கௌண்ட்ல இருந்து அழிச்சிங்க.."

இதற்கு என்ன பதில் சொல்வது என்பதுபோல் யாதவ் யோசித்துக்கொண்டிருக்க "எங்க வீட்ல பெரியவங்க கொஞ்சம் ப்ரோப்லம்...அதான்..."என்று ஷா கூறவும்…

"அப்ப ரகுவர கிருஷ்ணா சார்க்கு உங்க காதல்ல உடன்பாடு இல்லை அப்படியா சார்..."

"இதெல்லாம் விரிவா இன்னொரு நாள் பேசலாம்...நன்றி..."என்றவள் அடுத்து யார் கேட்கும் கேள்விக்கும் செவிசாய்க்காமல் யாதவை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள்…

"நீ என்ன டி பைத்தியமா...நாம ரெண்டு பேரும் லவர்ஸ்னு சொல்லிட்டு வந்துருக்க...இதுனால எவ்வளவு ப்ரோப்லம் வரும்னு தெரியுமா...இன்னும் ஒரு வாரத்துல நானும் கனிஷ்காவும் சேர்ந்து நடிச்ச களங்கம் படம் ரிலீஸ் ஆகப்போது தெரியுமா...இப்படி நீ பாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்ட...எங்க பான்ஸ் இதுல அப்செட் ஆகி வராம போய்ட்டா என்ன டி பண்றது….இந்த படம் மட்டும் ஓத்திகிச்சு யாதவ் கிருஷ்ணா ன்ற ஒரு ஆளே இல்லாம போயிருவான்...இதுக்கு முந்தின படம் வேற சரியாய் ஓடல...ஐயோ...என் வாழ்க்கையையே கெடுக்க வந்த ராட்சசி டி நீ…."என்று நிதானம் இல்லாமல் யாதவ் பேசவும்…

"ஒரு நிமிஷம்...எப்படியும் உங்க அப்பாவுக்கு இதுல விருப்பம் இல்லைனு இன்னியராம் ஒண்ணுக்கு ஒன்பதா பரவ ஆரம்பிச்சுருக்கும்...சரியாய் இன்னும் ஒரு நாலு நாளைக்கு பிறகு கனிஷ்காவா உன் கூட வைச்சுக்கிட்டு ஒரு பிரஸ் காண்ப்பிரன்ஸ் வைச்சு நீயும் நானும் மனவேறுபட்டால் பிரிச்சுட்டோம்னு ஒரு ஸ்டேட்மென்ட் விடு…அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சுரும்...உன் ரசிகர்களும் ஹாப்பி ஆயிருவாங்க"என்று ஷா கூறவும் அவளது திட்டத்தை நினைத்து வியந்தவன் அடுத்து ஏதோ கூற வந்தான்…

அவனை பேச விடாமல் "இதான் நான் உன்னை என் வாழ்க்கைல பார்க்குற கடைசி முறையா இருக்கனும் ...ப்ளடி ****...என்னமோ சின்ன பாப்பா மாதிரி எல்லாமே நான் பண்ண மாதிரி பேசுற..."என்று ஷா அவனின் முன் கைநீட்டி பேசவும்…

அவளது நீட்டிய கரத்தை பிடித்தவன் "என்னால உனக்கு ஒன்னும் லாஸ் கிடையாது...ஆனால் உன்னால தான் எனக்கு எல்லாம்...அதே தான் நானும் சொல்லுறேன்...இதான் நான் உன்னை பாக்குற லாஸ்ட் தடவையா இருக்கனும்..தப்பி தவறி என் வாழ்க்கைல வந்துறதா பரதேவதை..."என்று கூறியவாறு அவளது கையை விட்டான்…

அதில் கோவம் வரப்பெற்றவள் அவனை நோக்கி காதில் கேட்கமுடியா ஒரு கேவலமான ஆங்கில வார்த்தையில் திட்டியவள் நடுவிரலை(மிடில் பிங்கர்) காட்டி விட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டாள்…. "
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கயல்விழி டியர்
 




Last edited:

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
யாதவ் நிஜமாலுமே வளர்ந்த குழந்தை தான்..... இல்லாட்டி இந்த ஷா பண்ணறதுக்கு இந்த நேரத்தில இப்படியா ரியாக்ட் பண்ணிட்டு இருப்பான்... ஷா ரகுவரனையை ஒரு வழி பண்ணிட்ட... ஆனா அவரு உன்ன விட கேடியா இருப்பாரு போலவே....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top