• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யவன ராணி - இரண்டாம் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
112. வாழ்வின் சந்தர்ப்பங்கள்

குகையின் ஒரு கோடியிலிருந்த விளக்கின் பக்கத்தில் நின்று வாயிற்புறம் காலடி. ஓசை கேட்டதால் சற்றே திரும்பித் தன் பூவிழிகளை உயர்த்திய பூவழக, வாயிலுக்கருகே நின்ற படைத் தலைவனைக் கண்டதும் சில வினாடிகள் அவன் இதயத்தையே ஊடுருவி விடுபவள்போல் பார்த்துவிட்டு மீண்டும் தன் மலர்க் கண்களை மண்ணிலே தாழ்த்தினாள். அந்த ஒரு பார்வையே படைத் தலைவன் உடலை ஓர் உலுக்கு உலுக்கியதென்றால், அவள் உடலிருந்த நிலை அவன் உயிரையே உருக்கிவிடும்போல் மனத்தைச் சுட்டெரிக்கத் தொடங்கியது.

தீப ஒளியின் பக்கத்தில் தனக்கென்றே உருவெடுத்த வானத்தின் மின்னல் கொடியென நின்ற பூவழகியின் உடல் மிகவும் இளைத்திருப்பதையும், விளக்கின் ஒளி விழுந்த இடங்கள் சற்றே வெளுத்து அவள் பலவீன நிலையை நன்றாக எடுத்துக் காட்டுவதையும் கண்ட இளஞ்செழியன், அப்படியே திகைத்துச் சில வினாடிகள் நின்றுவிட்டான். சுமார் ஒராண் டுக்கு முன்பு பிரும்மானந்தர் மடத்தில் யவன ராணியுடன் சென்று தான் பார்த்த பூவழூக்கும் அன்று அந்தக் குகையில் நின்ற பூவழகக்கும் இருந்த வித்தியாசத்தை எண்ணிப் பார்த்த படைத்தலைவன் கல்லாய்ச் சமைந்தான். கடைசல் பிடித்த பழம் தந்தம்போல் செழுமையுடனிருந்த அவள் கைகளும், கபோலங்களும், அந்தச் செழுமையும் செழுமையின் விளை வாகத் தெரிந்த அந்தப் பொன்னவிர் நிறத்தையும் இழந்து கடந்தன. முன்னறிவிப்பின்றிப் படைத் தலைவர் குகைக்குள் நுழைந்ததால் அவள் அழகிய கன்னங்களில் அன்றும். சிவப்பு தட்டத்தான் செய்தது. ஆனால் அந்தப் பழைய குங்குமச் சிவப் பல்ல. பலவீனத்திலும் உள்ளத்தின் உணர்ச்சிகள் உந்தியதால் தஇடீரெனப் பாய்ந்த ரத்தத்தின் அற்பச் சிவப்பு. சில வினாடிகளே அவனை நோக்கிய கண்களில் தெரிந்த கவலை ஒரளவு வெளுத்துக் கடந்த அவள் வதனத்திலும் படர்ந்து கிடந்தது.

அத்தனை கவலையிலும் இளைப்பிலும், அவள் முகத்தில் தெரிந்த கற்பின் தெய்வீக ஒளி அவளை வானத்தி லிருந்து இறங்கிய தேவதைபோல் விளங்கச் செய்வதைக் கண்ட படைத் தலைவன் பலவீனம் வினாடிக்கு வினாடி அதிகமாகத் தொடங்கியது. தனக்காகவே அவள் தன் உயிரைப் பிடித்துக் கொண்டு ஜீவித்திருக்கறாளென்பதை அவளைப் பார்த்த மாத்திரத்தில் அறிந்துகொண்ட இளஞ்செழியன் அவளிடம் எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, என்பதை அறியாமல் திணறினான். அவன் திணறலை அறிந்ததுபோல் அந்தக் குகை அறைக்குள்ளே பாறையை உடைத்துக் கொண்டு ஓடிய மரக்கிளையில் உட்கார்ந்திருந்த பச்சைக்கிளி இருமுறை பரிகாசமாகக் கூவியது. அந்தக் கூவலைக் கேட்ட பிறகே அப்படியொரு பட்சி அந்தக் குகையிலிருப்பதை உணர்ந்த இளஞ்செழியன், அந்தப் பச்சைக் கிளியையும் நோக்கி, அதிலிருந்து சற்றுத் தூரத்தே நின்ற வேளிர்குலப் பைங்கிளியையும் நோக்கினான்.

எதை நோக்கியும், குகையைப் பல முறை சுற்றிப் பார்த்தும் சாந்தியில்லா மனதுடன் நின்றான் படைத் தலைவன். பூவழகியும் ஏதும் பேசாமலே நின்றாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது தான் பழமொழி. பேச வேண்டியதில்லைதான். ஆனால் பேச வேண்டாத அந்த நிலை வேறு. காதலர்கள் நீண்ட நாள் பிரிந்து மகழ்ச்சியுடன் கூடும்போது பேச்சு அர்த்தமற்றதாகிறது. செயல் அர்த்தமுள்ள தாகிறது. அவனை எதிர்பார்த்து உருகி நின்ற பூவழகியும் இதில் பேச்சுக்கும், செயலுக்கும் இடமில்லாத உணர்ச்சிகள் வறண்டு கிடந்த விபரீத நிலை.

ஆகவே, அந்த இருவர் மெளனமும் இருவருக்கும் பெரு நரகமாயிருந்தது.இருவரும் இருந்த இடத்தைவிட்டு நகராமல் நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். அந்த மெளன நிலையைச் சகிக்க மாட்டாத படைத்தலைவனே மெள்ளத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பூவழகி!” என்று மெள்ளக்குரல் கொடுத்தான்.

அமுதத்தாலேயே அபிஷேகம் செய்தால்கூடக் கிடைக்காத மகழ்ச்சியை அந்த ஓர் அழைப்பிலே பெற்றாள் பூவழகி. தான் விரும்பும் ஆடவன் வாயிலிருந்து அன்புடன் புறப்படும் தன் பெயரைவிட உயர்ந்த ஒரு சொல் உலகத்தில் இருக்கமுடியாதென்று உணர்ந்த பூவழகி, வெட்கத்தாலும் மகழ்ச்சியாலும் பதில் சொல்லத் திராணியற்றவளாகி ஒரு ‘உம்’ மாத்திரம் கொட்டினாள்,

அந்த “உம்’ இன்பமான இசை நாதம் போல அந்தக் குகையை ஊடுருவியது. பல நாட்களுக்கு முன்பு கேட்ட அந்த ஒலி காதில் விழுந்ததும் புளகாங்கிதமும், தான் சொல்ல வந்திருக்கும் சேதியின் தன்மையை நினைத்தால் துக்கமும் ஒருங்கே அடைந்த இளஞ்செழியன் பதிலுக்குப் பெருமூச் செறிந்தான். பிறகு மெள்ளச் சமாளித்துக் கொண்டு, “நீ இங்கிருப்பதாக மன்னர் சொன்னார்” என்றான் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக.

மீண்டும் பதில் சப்தமாகத்தான் வந்தது, “ஊஹும் ” என்றாள் பூவழகி.

“தமிழகத்தில் போர் மூளப் போகிறது” என்று வேறு எதையோ ஆரம்பித்தான் இளஞ்செழியன். திடீரென்று சம்பாஷணை வேறு மார்க்கத்தில் திரும்பியதால் உணர்ச்சி களைத் திரும்பப் பெற்ற பூவழகி படைத் தலைவனை நன்றாக ஏறெடுத்துப் பார்த்தாள். தன்னுடன் அவன் என்ன பேசுவான் என்று எதிர்பார்த்தாளோ அந்தப் பேச்சு ஏதுமில்லாமல், தன் உடல் நிலையைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை கேட்காமல் இளஞ்செழியன்’ போரைப் பற்றிப் பேசுவதால் ஏமாற்ற மடைந்த பூவழக, அந்த ஏமாற்றத்தைக் கண்களிலும் காட்டினாள். இருப்பினும் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, “ஆம், மூளப்போகிறது” என்றாள்.

“அது சம்பந்தமாகத்தான் மன்னரைக் காண வந்தேன் ” என்று படைத் தலைவன் மீண்டும் சொன்னான்.

இந்த வார்த்தைகள் சுரீலெனத் தைத்தன பூவழகியின் இதயத்தில், அப்படியானால் இவர் என்னைப் பார்க்க வரவில்லை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு துன்பப் பெருமூச்சு விட்டாள். பிறகு ஏதோ வேண்டா வெறுப்பாக, “அப்படியா!” என்று பதிலும் சொல்லி வைத்தாள்.

“ஆம் பூவழகி! பெரும் போர் மூளப் போகிறது.

எதிரிகள் படை பலம் அதிகம்.

நம் படை பலத்தைவிட நான்கு மடங்கு அதிகம்” என்றான் படைத் தலைவன்.

“அப்படித்தான் கேள்விப்பட்டேன்” என்று பூவழகி முணுமுணுத்தாள்.

.“திறு படையை வைத்துக்கொண்டு பெரும் படையை முறியடிப்பது சுலபமா?”

“இல்லை.”

“அதை உத்தேசித்துத்தான் ஒரு போர்த் திட்டம் தயாரித்தேன்.”

“ஓகோ!”

“அதற்கு மன்னர் அனுமதி பெற வந்தேன்.”

“உம்.”

“மன்னர் ஒப்புக் கொண்டு விட்டார்.”

“மகழ்ச்சி.” அரத வணாதுதான1 ஒர ஐ மு.

இல்லாதிருந்ததையும் ஏளனம் சிறிது துளிர்த்ததையும் கண்ட இளஞ்செழியன் அதைக் கவனிக்காதவன் போலவே பேச்சைத் தொடர்ந்து, “திட்டம் எங்கும் முறியாமல் நமது படைப் பகுதிகள் பணியைச் சரியாகச் செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்” என்றான்.

“அப்படியா!” என்றாள் பூவழகி சிரத்தையேது மில்லாமல்.

“அம். வெற்றி நிச்சயம். மன்னர் அரியணையில் அமருவதும் நிச்சயம். அதற்கு அடுத்த ஆசனத்தில் மன்னார் சகோதரியிருப்பாள்” என்றான் இளஞ்செழியன்.

“மன்னர் சகோதரியா?”

“அமாம் பூவழக, நீதான்?”

“மன்னர் சொன்னாரா?”

“இப்பொழுதுதான் சொன்னார்.”

“வேறெதுவும் சொல்லவில்லையா?”

“சொன்னார்.”

“என்ன சொன்னார்?” மிகுந்த அவலுடன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் பூவழகி.

இளஞ்செழியன் பதில் அந்த அவலைப் பட்டென்று அவித்தது. “குறுநில மன்னரும் படைத் தலைவர்களும் உன் காலிலும் வணங்குவார்கள் என்றும் சொன்னார்.”

பூவழகியின் கண்கள் அவனைச் சுட்டெரித்து விடுவதைப் போல் பார்த்தன.எரியும் அவள் நெஞ்சத்தில் எண்ணெய் விடுவதுபோல் சொன்னான் படைத்தலைவன். “கிடைத்தற்கரிய பதவி அது பூவழகி. அந்தக் காட்சியை இப்பொழுது மனக் கண்ணில் பார்க்கிறேன். ஆகா! எப்பேர்ப் பட்ட சபை! எத்தனை விருதுகள்! மகாராணிக்கு அடுத்த படியாக சோழ மண்டலத்தில் நீயே பெரியவள். மன்னர் மனம் எத்தனை விசாலமானது!” என்று.

பூவழகயாா கூளாயாருநத உடல அநதப மபசசைக கேட்டதும் திடீரென நிமிர்ந்தது. அகன்ற கண்கள் அக்கினியைக் குக்கின. பெரும் ராணியைப் போல் நாலடி நடந்து குகையின் மத்திக்கு வந்தாள் பூவழகி. பிறகு படைத் தலைவனை வெகு அலட்சியமாக நோக்கி, “மன்னர் கொடுக்கும் படாடோபத்துக்கும் மண்டலாதிபதிகள் தலை வணங்குவதற்கும் இத்தனை நாள் காத்திருக்கவில்லை படைத்தலைவரே” என்றாள் மிகுந்த சீற்றத்துடன்.

“என்ன சொல்கிறாய் பூவழகி, இந்தப் பதவி, கெளரவம்...” என்று இழுத்தான் படைத் தலைவன்.

“எனக்குத் தேவையில்லை.” சட்டென்று வந்தது பூவழகியின் பதில்.

“உனக்குத் தேவை...?”

“உங்கள் உள்ளத்துக்குத் தெரியும். மன்னருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும்” என்று கூறிய பூவழகி, திடீரென முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதுவரை அவள் பிடிவாதத்தால் கடைப்பிடித்த துணிவு முறிந்தது. பெண்ணின் பலவீனம் மேலோங்கியது.

அந்தத் துன்பக் கோலத்தைக் காணச் சகிக்காத இளஞ்செழியன் இரண்டே அடிகளில் அவளை எட்டி அணைத்துக் கொண்டான். அணைத்த அந்தநிலையும் நியாயமல்ல என்று உணரத்தான் செய்தான் அவன். அவளை மணக்கமுடியாத வன் அணைப்பதால் என்ன பயன் என்று எண்ணியதால் அவள் பூவுடலை அணைத்த அவன் கைகள் கூசவே செய்தன. இருப்பினும் தன்னையே நம்பி வாழ்ந்த அந்த அபலையின் பலவீன நிலை அவன் உறுதியையும் சில வினாடிகளுக்கு உடைத்துவிட்டது. அவன் அணைப்பிலும் அழுகை நிற்க வில்லை. நீண்ட நாள் சோக வெள்ளம் கரையை உடைத்துப் பிரவாகித்துக் கொண்டிருந்தது.

“பூவழகி! அழாதே! என்னைப் பலவீனப்படுத்தாதே!" என்று அணைத்த வண்ணமே கூறினான் படைத் தலைவன். அந்த ஸ்பரிசத்தால் மெள்ள மெள்ள அவள் துக்கத்தை அடக்கிக் கொண்டாலும், “என்னைச் சோதிக்கத்தான் இங்கு வந்தீர்களா?” என்று விக்கி விக்கிக் கேட்டாள்.

“சோதனை உனக்கல்ல பூவழகி, எனக்குத்தான் ” என்றான் படைத் தலைவன்.

“உங்களுக்கென்ன அண்பிள்ளை” என்று மீண்டும் விக்கினாள் அவள்.

“சோதனை இனத்தைப் பார்ப்பதில்லை பூவழகி?”

“தண்டனை?”

“தண்டனையா! யாருக்கு?”

“எனக்குத்தான்.”

“உன்னைத் தண்டித்தது யார்?”

“நீங்கள்தான்.”

“எப்பொழுது தண்டித்தேன்?”

“சற்று முன்பு.”

“நானா?”

“நீங்கள் பேசிய பேச்சைவிட வேறு என்ன தண்டனை வேண்டும் எனக்கு?”

“அதைவிட அதிகத் தண்டனை கிடையாதா?”

“கிடையாது!”

“இருக்கிறது பூவழகி, ஆண்டவன் ஆட்சியில் எத்தனை எத்தனையோ சோதனைகள், எத்தனை எத்தனையோ தண்டனைகள்! அந்தத் தண்டனைகள் பாவிகளைப் பீடி க்கின்றன.”

“இருக்கலாம்.

அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?”

“நமக்கும் என்று சொல்லாதே பூவழகி.

நீ ஏதும் அறியாதவள் ; ஆனால் நான் செய்திருக்கும் பாவம் மகத்தானது.”

“அப்படி, என்ன பாவம் செய்தீர்கள்?”

“எனக்குத் தெரியாது.”

“தெரியாதென்றால் பாவியென்று ஏன் சொல்லிக் கொள்கிறீர்கள்?”

“கடைக்கும் தண்டனையிலிருந்து ஊ௫டக்கிறேன்.”

“அப்படியென்ன தண்டனை கிடைத்து விட்டது உங்களுக்கு?” இளஞ்செழியன் உடனே பதில் சொல்லவில்லை.

நேரடி யாகப் பதில் சொல்லவும் துணிவில்லை.

ஆகவே, சுற்று வட்டமாகப் பேசத் தொடங்க, “பூவழகி!” என்று அழைத்தான்.

“சொல்லுங்கள்” என்றாள் அவள், அந்த ஒரு சொல்லில் தன் இதயத்தின் அன்பையெல்லாம் கொட்டி.

“தண்டனைகள் உலகில் பலவுண்டு.”

“ஆமாம்.”

“அதில் எதிர்பார்ப்பது கிடைக்காதிருப்பது பெரும் தண்டனை.”

“அமாம்.”, “நான் ஒரு பெண்ணிடம் என் உள்ளத்தைக் கொடுத்து விடுகிறேன்.

அவள் கிடைக்காவிட்டால்? அவளை நான் அடைய முடியாவிட்டால்?” பூவழகி இன்பமாக நகைத்தாள்.

“ஏன் முடியாது? அவள் தான் கிடைத்து விட்டாளே” என்றாள்.

“கைக்கொட்டியது வாய்க்கெட்டாத நிலைமை உண்டு.”

“அந்த நிலைமை உங்களுக்கு ஏற்படாது.”

“ஏற்பட்டிருக்கிறது!” என்று சற்று அழுத்திச் சொன்னான் படைத் தலைவன்.

சரேலென்று அவன் பிடியிலிருந்து அவள் விலகினாள்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று பயத்துடன் கேட்டாள் பூவழகி.

அவள் முகத்தில் துளிர்த்த அந்தப் பயம் அவனை மீண்டும் அச்சத்தில் அழ்த்தியது.

“ராணியை மணக்க வாக்குக் கொடுத்துவிட்டேன்.

உன்னை மணக்க முடி.யாது’ என்று சொல்லும் திறனை அறவே இழந்தான்.

ஆகவே, பேச்சை மாற்றி “போர் ஏற்பட்டி ருக்கிறதல்லவா?” என்றான். பூவழகியின் முகத்தில் பயம் மறைந்தது. தைரியப் புன் முறுவல் படர்ந்தது. “போரைப் பற்றிச் சொல்கிறீர்களா? போரின் முடிவில் நீங்கள் வெற்றி வாகையுடன் வந்தால் டங்கு என் கரங்களில் மணமாலை இருக்கும்.

நீங்கள் ஒரு வேளை மடிந்தால் பூவழகி மட்டும் இருப்பாளா என்ன? அடுத்த கணம் நானும் மறைந்துவிடுவேன். சந்தேகம் வேண்டாம். இந்த உயிர் இத்தனை நாட்கள் இந்த உடலில் இருந்ததற்குக் காரணம் நீங்கள் ஒருநாள் திரும்பி வருவீர்கள் என்ற நினைப்புதான்” என்றாள் பூவழகி தைரியத்துடன். அந்தத் தமிழ்ப் பெண்ணின் துணிவையும், கற்பையும் எண்ணிப் பார்த்த இளஞ்செழியன் என்ன சொல்வதென்று அறியாமல் பிரமித்தான். பிறகு யோசித்துவிட்டுச் சொன் னான்.

“பூவழகி! போரின் முடிவில் யாரிருப்போம் யாரிருக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது. போரின் கொடுமை அது. ஆனால் போரைவிடக் கொடுமையான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நம்மையும் மீறிய சக்திகள் நம் எண்ணங்களைச் சிதற அடிக்கலாம், உன்னையும் என்னையும் பிரிக்கலாம். உயிரிருந்தும் பிணங்களாக நம்மை நடமாடவும் வைக்கலாம். அப்படி ஏதாவது நிலைமை ஏற்பட்டால் அதற்கும் தயாராக இரு. எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்வுக்கு இடம் கொடாதே. உன் இஷ்டத்தை மீறிய செய்கைகளில் நான் ஈடுபட்டால் நான் முழு மனத்துடன் அவற்றில் ஈடுபட்டு விட்டதாக நினைக்காதே. என்னையும் மீறிய சக்திகள் அந்தச் சந்தர்ப்பங்களில் என்னைச் சிக்க வைத்துவிட்டதென அறிந்து கொள்” என்று கூறிய இளஞ்செழியன், அவள் கைகளை இறுக்கி ஒருமுறை பிடித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசத் துணிவில்லாததால் சரேலெனக் குகையைவிட்டு வெளியே சென்றான்.

பூவழகி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றாள். அவள் நின்ற நிலை அந்தக் குகைக்குள் யாரோ இறந்த சிற்பி யொருவன் சிலையைச் ஏிருஷ்டித்து விட்டதுபோலிருந்தது. நீண்ட நேரம் நின்றாள் அவள். முகம் குழம்பிக் கிடந்தது. படைத் தலைவன் சொன்ன விஷயங்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாயிருந்தது அவளுக்கு. காதலால் கட்டுண்ட தங்களைப் பிரிக்கக்கூடிய அந்தச் சக்தி என்னவா யிருக்கக்கூடும் என்று பலமுறை நினைத்துப் பதில் கிடைக் காமல் அவள் ஏங்கினாள். மீண்டும் அவனைச் சந்திக்கும் போது நேராகக் கேட்டுவிடுவதென்ற முடிவுக்கு வந்தாள். ஆனால், அந்தச் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைக்க வில்லை. படைத் தலைவன் அங்கு தங்கிய நான்கு நாட்களிலும் அவள் கண்களில் படவில்லை. கரிகாலன் திரட்டியிருந்த படை களைப் பார்வையிடுவதுிலும், அவற்றை நடத்த வேண்டிய முறைகளை மன்னனுடனும், இரும்பிடர்த்தலையாருடனும் மற்றப் படைத் தலைவர்களுடனும் விவாதிப்பதிலும் காலத்தைச் செலவிட்டான். பிரும்மானந்தர் வாணகரையி லிருந்து என்ன செய்ய வேண்டுமென்பதையும் விளக்கி அவரை வாணகரைக்கு அனுப்பி வைத்தான். குணவாயிற் கோட்டத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அந்த நான்கு நாட்களில் முடித்துக்கொண்ட படைத் தலைவன் மன்ன னிடம் விடை பெற்றுக் கொண்டபோது மன்னன் கேட்டான் : “ஏன் மீண்டும் சகோதரியைப் பார்க்கவில்லையா?” என்று.

“பார்க்க அவகாசமில்லை. போர் முடியட்டும்” என்ற படைத் தலைவன், “மன்னவா! இன்னும் ஒரு வாரத்தில் படைகள் புறப்படட்டும். இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் மருத நிலத்துக் குடிகள் விரட்டப்பட வேண்டும்.அதிலிருந்து ஒரு வாரத்தில் நாம் இருங்கோவேளுடன் மோத வேண்டும். நாம் குறிப்பிட்ட தினங்கள் தவறவேண்டாம்” என்று கூறி நாகையை நோக்கிப் பயணமானான். அடுத்த வாரத்தில் காரிகாலன் படைகள் வெண்ணியை நோக்கப் புறப்பட்டன. சோழ மண்டலமெங்கும் போர்ப் பறைகளின் ஒலிகளும் ஆயுத வண்டிகளின் உருளை ஒலிகளும், புரவிகளின் காலடி ஓசையும் யானைகளின் திமுதிமுவென்ற நடையும், வீரர்களின் கோஷமும் மிகப் பயங்கரமாகச் சப்இத்தன!
 




Last edited by a moderator:

Valli valli

நாட்டாமை
Joined
Sep 25, 2020
Messages
20
Reaction score
4
Location
Coimbatore
இந்த கதையை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. இன்னும் சாண்டில்யன் எழுதிய கதையை பதிவேற்றம் செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top