• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யவன ராணி - முதல் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
50. கடற்கரைக் குடிசையில்

கரிகாற்சோழனும் சங்கமப் பொற்கொல்லரான சமண அடிகளும் சம்பாஷணையில் இறங்கிய சில நிமிடங்களுக் குள்ளாகவே ஓசைப்படாமல் அந்த ஓலைக் குடிலில் தட்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, ஏதோ செய்தி சொல்ல முயன்று முடியாமல் அடிகளின் கையில் குப்புற விழுந்த அந்தப் பரதவப் பெண் கையையோ காலையோ சிறிதும் அசைக்காமல் ஓவியப் பாவையெனச் செயலற்றுக் கிடந்தாள். தரையில் பந்தம் தீய்க்கப்பட்டு அணைக்கப் பட்டதன் விளைவாக அப்பொழுதும் குடிசையின் உட்புறத்தைப் புகை சூழ்ந்திருந்ததாலும், கோடியிலிருந்த விளக்கும் மிக மங்கலாக இருந்ததாலும், அப்பெண் யாரா யிருக்க முடியும் என்பதை அறியும் வாய்ப்பில்லாவிட்டாலும் அவளை ஏந்தியிருந்த அடி.களுக்கும் அவள் விழ இருந்தபோது அடிகளு௪னே அவளை நோக்கி நகர்ந்தாலும் அடிகள் பிடித்துக் கொண்டதால் வாளாயிருந்துவிட்ட கரிகாலனுக்கும் உள்ளே வந்த பெண் மிகுந்த அழகி என்பது மட்டும் திட்டமாகப் புலனாகியது. அதிகச் சிவப்பில்லா விட்டாலும் அந்தப் பெண்ணின் மேனியில் திறந்த இடங்கள் மாநிறமாக இருந்ததையும், அவள் தலையில் துணியால் போடப்பட்டிருந்த கட்டு அவள் குழலை மறைத்திருந்தாலும், குழலின் பெருமூடியிலிருந்த கூந்தல் மிக அடர்த்தியாக இருக்க வேண்டுமென்பதையும் ஊகித்துக் கொண்ட அடிகள், ‘இவள் யார்? எப்படி வந்தாள்? ஏதோ சொல்ல முயன்றாளே, அது என்ன?” என்பதைச் சிந்தித்துப் பார்த்து விடை காணாததால் கரிகாற் சோழனைச் சற்றே திரும்பிப் பார்த்து, “இந்தப் பெண்ணைச் சற்றுப் பிடிக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“ஏன்? நீங்கள்தான் பிடித்துக் கொண்டி ருங்களேன். தலையை நிமிர்த்திப் பெண் யாரென்று பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே பெண்ணின் முகத்தை நிமிர்த்த முயன்ற கரிகாலனைத் தடுத்த அடிகள், “மன்னவா! பெண் யாரென் ் பதைப் பார்க்கு முன்பாக இதோ அழப் பதிந்திருக்கும் கத்தியை எடுத்துக் காயத்தின் அழத்தில் துணியைப் புதைத்துக் கட்டி, குபுகுபுவென்று குமிழியிடும் குருதி ஓட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று கூறிவிட்டு மெள்ள அந்தப் பெண்ணைக் கரிகாலன் கைக்கு மாற்றியவர், சற்றே தம் கைகளைக் கவனித்த வுடன் பெண்ணையோ, கத்தியையோ குருதியையோ சிறிதும் பார்க்காமலும் பிரமை பிடித்தவர் போல் மிரள மிரள விழித்துக் கொண்டும் ஒரு விநாடி. நின்றார்.

கத்தி பாய்ந்து ரத்தமிழந்து மயக்கமுற்றிருந்த அந்தப் பெண்ணுக்குச் சிசுருஷை செய்யத் துடித்த அடிகள் பெண்ணைத் தன்னிடம் கொடுத்ததும் ஏதும் செய்யாமல் சொந்தக் கைகளை உற்றுப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்று விட்டதைக் கண்ட கரிகாலன் மிதமிஞ்சிய வியப்பெய்தி, “என்ன அடிகளே! ஏன் அப்படி நின்றுவிட்டீர்?” என்று வினவினான்.

“கொஞ்சம் இருங்கள்.இந்தப் பெண்ணின் கை கால் முதுகு இவற்றைக் கொஞ்சம் தடவிப் பார்க்கிறேன்” என்று கூறிய அடிகள், விடுவிடு என்று குடிசை மூலைக்குச் சென்று அங்கிருந்த விளக்கை எடுத்து வந்து, கரிகாலன் கைகளிலும் தாம் கொடுத்தபடி குப்புறவே கிடந்த அந்தப் பரதவ எழிலரசியின் பாதி திறந்த முதுகையும், கையையும், காலையும் பலமாகத் தன் கையால் அழுத்தித் தடவினார்.

அவர் செய்கைக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத கரிகாலன், “அடிகளே! நீர் பெண்ணை இப்படித் தொடுவது சரியல்ல” என்று சற்றுக் கடுமையாகக் கூறினான்.

கரிகாலனுடைய அபிப்பிராயத்தையோ கோபத் தையோ சிறிதும் லட்சியம் செய்யாத அடிகள், “நான் இந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்காவிட்டால் வேறு யார் பார்த்துவிட முடியும்? வேறு யாருக்கு நிலவரம் புரியும்?” என்று சொல்லிக்கொண்டு குப்புறக் கிடந்த அந்தப் பெண்ணின் கன்னத்தையும் சற்றுத் தடவினார்.

அடிகளுடைய விசித்திரப் போக்கையும், தான் சொன்னதைக்கூட மதியாமல் அவர் பித்தர்போல் பெண்ணின் கை கால்களையும் கன்னத்தையும் வழித்தெடுப் பதையும் கண்டதாலும் அவர் சொன்ன விந்தை மிக்க பதில்களாலும் கோபம் உச்ச நிலைக்கு ஏறிய கரிகாலனின் அடுத்த சொற்கள் மிக உஷ்ணமாக வெளிவந்தன.

“அடிகளே! நீர் செய்யும் பெண் அராய்ச்சி இத்துடன் நிற்க வேண்டும்.

இல்லையேல் நீர் ஒரு துறவியென்பதை மறந்துவிடுவேன்...” என்று கூறிய கரிகாலன் வாசகத்தை முடிக்காமல் விட்டாலும் அதில் புதைந்து கிடந்த மிரட்டலை அறிந்த அடிகள் சிறிது வாய்விட்டுச் சிரித்ததன்றி, “துறவியென்பதை நீங்கள் மறக்க வேண்டியதில்லை மன்னவா! நானே மறந்து விட்டேன். நானே சில நாட்களாகச் செய்யும் தொழில் துறவியின் தொழிலா?” என்று விஷமம் பிரதிபலிக்கும் முறையில் கூறினார்.

கரிகாலன் தன் கூரிய கண்களை அவர்மீது நாட்டி, “விந்தைப் பேச்சுக்கு இது சமயமில்லை அடிகளே” என்றான் சினத்தின் சாயை வதனம் பூராவும் மெள்ளப் படர்ந்தேற.

“உண்மைதான் மன்னவா! விந்தை நிகழ்ச்சிகள் நடந்தேறும்போது விந்தைப் பேச்சு எதற்கு?” என்றார் அடிகள் மீண்டும் தமது கையை விளக்கில் பரிசோதித்துக் கொண்டு.

“விந்தை நிகழ்ச்சிகள!ா” என்று கரிகாலன் வினவினான் விவரம் ஏதும் புரியாமல்!”அம் மன்னவா! உங்களைச் சந்திக்க இங்கு நான் வரவில்லை.” ரீம் ரரி அழப்.

“ஆனால் சந்தித்தேன்.”

“அமாம்.”

“வேறு ஒருவரைச் சந்திக்க வந்தேன்.”

“ஓகோ!”

“அவரைச் சந்திக்க முடியவில்லையே என்று ஏங்கினேன்.”

“ஏங்கினேன் என்றால்? இப்பொழுது ஏக்கம் போய் விட்டதா?”

“போய்விட்டது.”

“ஏன் போய்விட்டது?”

“சந்திக்க வந்தவரைச் சந்தித்துவிட்டேன்.”

அடிகள் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் அவர் வதனத்தைத் துழாவிய கரிகாலனின் கண்களின் முன்பு தனது உள்ளங்கைகளைக் காட்டினார் சமண அடிகள். அதுவரை விவரம் புரியாததால் சிந்தனை தடுமாறக் குழம்பியிருந்த கரிகாலன் கண்களில் விஷயம் விளங்கிவிட்டதற்கு அடையாளமாகத் திடீரென ஒளியொன்று பளிச்சிட்டது. அவன் கண்கள் அடிகளின் கைகளையும் அராய்ந்து அடிகளின் கண்களையும் சந்தித்தன. பிறகு பெண்ணின் உடலின்மீது அவன் கூரிய விழிகள் சில விநாடிகள் பதிந்தன.

“இந்தப் பெண் உடலின் நிறம் இதுவல்ல அடிகளே!” என்று தான் புரிந்து கொண்டதை விளக்கினான் கரிகாலன்.

“அம் மன்னவா? நிறத்தை மறைக்கச் சாயம் பூசியிருக் கிறாள்” என்றார் அடிகள்.

“என்ன சாயம்?”

“சாயம் என்பதைவிடச் சாறு என்று சொல்வது பொருந்தும். இவள் முகம், கைகளின் முன்பகுதி இவற்றில் செம்பருத்திச் சாறு பூசியிருக்கிறாள். அகையால்தான் இவள் மேனி லேசாகக் கறுப்பு ஓடிய தாமிர வர்ணத்தைப் பெற்றிருக்கிறது. இவள் உடம்பு என் கைகளில் குப்புற விழுந்ததுமே ஏதோ பகை ஓட்டுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது எனக்கு. சரி, இவள் செம்பருத்திச் சாறு பூசியிருக் கிறாள் என்பதை உடனே உணர்ந்து கொண்டேன். இந்திர விழாக் காலங்களில் புகாரில் வேஷம் போட்டு விளையாடும் நமது பெண்களும் இதைத்தானே பூசிக்கொள்கிறார்கள்.

" “அம். இவள் எதற்காக இப்படி சாறு பூசிக் கொண்டாள்?”

“என்னைத் தேடி வருவதற்காக.”

“உங்களைத் தேடியா?”

“அம், இருவரும் இன்றிரவு இங்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்து கொண்டி ருந்தோம்.”

துறவியின் இந்தப் பதிலைக் கேட்டதும் கரிகாலன் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறுவலொன்று லேசாகப் படர்ந்தது. “முன்பு நீங்கள் சொன்னது உண்மைதான் அடிகளே!” என்ற கரிகாலன் சொற்களிலும் அந்த இகழ்ச்சி ஓரளவு ஒலிக்கவே செய்தது.

“எது மன்னவா?” என்று வினவினார் அடிகள்.

“துறவறத்தைத் துறந்துவிட்டதாகக் கூறினீர்களே அது” என்று சொல்லி மீண்டும் கரிகாலன் நகைத்ததால் சற்றே சங்கடப்பட்ட அடிகளும் சற்று விஷமத்துடனேயே பதில் சொல்லத் தொடங்கி, “மன்னவா! இதில் நகைப்பதற்கு இட மில்லை. எச்சரிக்கைக்கும் பயத்துக்குந்தான் இடமிருக்கிறது” என்றார்.

“பயத்துக்கு என் இதயத்தில் இடமில்லை அடிகளே! எங்கள் வம்சத்தில் யாரையுமே பயம் என்ற வியாதி பிடி த்ததில்லை...” என்று கடுமையாக மேலும் ஏதோ சொல்லத் துவங்கிய கரிகாலனை இடைமறித்த அடிகள், “தங்களுக்குப் பயமில்லாதிருக்கலாம். ஆனால், சோழர் அரியணையில் அமர வேண்டிய உங்கள் நலனைப்பற்றி அக்கறையுள்ள எனக்குப் பயம் ஏற்படத்தான் செய்கிறது. இவள் யார் என்பதைப் புரிந்து கொண்டால் பயத்துக்குக் காரணத்தை அறிந்து கொள்வீர்கள்” என்று கூறி அப் பெண்ணின் தலையை மறைத்திருந்த சலையைச் சமரமெலன அவிழததெதறிந்தார். யவனராணியின் பொன்னிறக் குழல்கள் அவிழ்ந்து அலை அலையாகக் கரிகாலன் கைகளிலும் மார்பிலும் விழுந்தன.

மங்கலான அந்தக் குடிசை வெளிச்சத்திலும் தகதக வெனப் பிரகாசித்த அந்தத் தங்கநிறக் குழல்களையும், அவை இருந்த அடர்த்தியையும் குப்புறக் கிடந்த ராணியின் கழுத்துப் பிரதேசத்திலிருந்து அவை எழுந்து அலையோடிய கவர்ச்சியையும் கவனித்த கரிகாற் சோழன், ஒரு கணம் பிரமித்துப் பின்புறத்திலேயே பெரும் வசீகர எழிலுடைய அந்த அழகு பிம்பத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண் டி ருந்தான். பரதவ ஸ்திரீகளைப் போல் உடையணிந்து, செம்பருத்திச் சாறு பூசி, உடல் வண்ணத்தின் வெண்மையை மாற்றியிருந்த அந்த நேரத்திலும் அவள் பின்னழகு சித்தத்தைக் குலைத்ததையும், குப்புறக் கிடந்ததால் வளைந்தோடிய பின்புற எழிற்கோடுகள் பெரும் பிரமையைத் தந்ததையும் கண்ட அந்த வாலிபனின் கண்கள் உணர்ச்சி வசப்பட்டு சலித்ததோடு உடலும் ஒருமுறை சிலிர்த்ததைக் கண்ட அடிகள் விஷமப் புன்யுறுவல் செய்து, “மன்னவா! இந்த ஆராய்ச்சிக்கு இப்பொழுது நேரமில்லை. எப்பொழுது இவள் முதுகில் கத்தி பாய்ந்திருக்கிறதோ, இவளை யாரோ துரத்தி வந்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். இவள் இங்கு வந்து நிமிடங்கள் பல ஓடியும் இன்னும் குடிசைக்கு யாரும் வராததிலிர:ு எநப்்பதடுிய,ோ துரத்தி வந்தவர்களை ராணி ஏமாற்றியிருக்கிறாள் என்பது புலனாகிறது...” என்று சொல்லிக் கொண்டே போனவர் சட்டென்று நின்று, அமாம்! ராணியை உங்களுக்கு...?” என்று வார்த்தையை முடிக்காமல் இழுத்தார்.

ராணியின் பேரழகில் லயித்திருந்ததாலும், அவளைத் தாங்கி நின்ற கைகளைத் தடவிய எழிற்பகுதிகள் அளித்த இன்ப வேதனையாலும் சற்றே சுயநிலை மறந்திருந்த கரிகாலனின் உணர்ச்சிகள் அடி.கள் குறிப்பிட்ட ஆபத்தினால் சற்றே நிதானத்துக்கு வரவே அவன் சொன்னான். “ராணியை நன்றாகத் தெரியும் அடிகளே! கருவூர் மடத்தில் தெரியாமல் அவள் அறையில் ஏறிக் குதித்த என்னை இருங்கோவேளிட மிருந்து காப்பாற்றியவளே ராணிதானே, நினைப்பில்லையா உங்களுக்கு?”

“ஆம், ஆம், உண்மை உண்மை” என்று தலையசைத்த அடிகள், கரிகாலனையும் மண்டியிட்டு உட்காரச் சொல்லி, தாமும் உட்கார்ந்து, மெள்ள ராணியின் முதுகிலிருந்த கத்தியைப் பிடுங்கினார். கத்தி அழமாகப் பதிந்திருந்ததால் தமது மேல் காஷாயத்தைச் சிறிது கிழித்து அந்தக் காயத்தில் கத்தியாலேயே துணியைச் செலுத்தி ரத்தத்தை மெள்ள நிறுத்தினார். பிறகு சுற்றிலுமுள்ள ரத்தத்தைத் துடைத்து இன்னொரு கிழிசலால் காயத்தை அழுந்தச் சுற்றிலும் கட்டினார். பிறகு, “ராணியை இப்படிக் கொடுத்துவிட்டு, குடிசை மூலையில் தண்ணீர் இருக்கிறதா பாருங்கள்” என்று கரிகாலனைப் பார்த்துக் கூறவே, கரிகாலனும் ராணியை அடிகளின் கைகளில் மாற்றிவிட்டு, குடிசை மூலையிலிருந்த பாத்திரமொன்றிலிருந்து ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்து ராணியின் முகத்தில் தெளித்து உதடுகளிலும் சிறிது நீரைப் புகட்டினான்.

செம்பருத்திச் சாறு ஆங்காங்கு அழிந்துவிட்டதால் முகம் சில இடங்களில் பழுப்பாகவும் தெரிந்த அந்த நேரத்திலும் கவர்ச்சியெல்லாம் ஒன்று திரண்டெழுந்தது போல் காட்சியளித்த யவன ராணி, கரிகாலன் அளித்த நீரைப் பருகியதும் மெள்ள தன் நீலமணிக் கண்களை விழித்து அடிகளையும் சோழர்குல இளவலையும் சற்றே ஏறெடுத்து நோக்கினாள். அவள் செவ்விய இதழ்கள்’ மெள்ள புன்முறு வலால் விகசித்தன. “அடிகளை இங்கு நான்தான் வரச் சொன்னேன். ஆனால் மன்னவரை நான் எதிர்பார்க்க வில்லை” என்ற சொற்களும் மதுரமாக அவள் இதழ்களி லிருந்து உதிர்ந்தன.

“நானும் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று சற்றுச் சங்கடப்பட்டுக் கொண்டு பதில் சொன்ன கரிகாலனை வக வைய யை என்னனு ணன க வை ணட ட நோக்கிய யவன ராணி, அவன் சங்கடத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டாளாதலால் மீண்டும் மோகனப் புன்முறுவல் செய்தாள். அந்தப் புன்முறுவலாலும், ரத்தம் செலவாகியதால் ஏற்கெனவே ஏற்பட்ட களைப்பு அப்பொழுதுமிருந்ததால் பெருமூச்சின் காரணமாக வேகமாக எழுந்து தாழ்ந்த உடற்கவர்ச்சியைக் கண்டதாலும், உணர்ச்சிகளைப் பறக்க விட்ட கரிகாலனுடைய ராஜகளை சொட்டும் முகம் ஒரளவு குழப்பமே அடைந்தது. “மன்னவா! தாமதிக்க நேரமில்லை. என்னைத் துரத்தி வந்தவர்கள் எந்த வினாடியிலும் இங்கு வரலாம். அவர்களுக்கு வேறு வழியில் போக்குக் காட்டி இங்கு வந்துவிட்டேன். இருப்பினும் அவர்கள் இந்தக் குடிசைக் கூட்டத்திலும் என்னைத் தேடாமல் விடமாட்டார்கள். அகையால் சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்று துரிதப்படுத்தினாள்.

துரிதத்தின் அவசியத்தை அடிகள் மட்டுமன்றி மன்ன வனும் உணர்ந்திருந்ததால், ராணியை மெள்ளத் தூக்கி இருவரும் நிறுத்திய போதும், ராணி நடக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்டார்கள். அந்தக் கஷ்டத்துடன் கஷ்டமாக ராணி கூறினாள். “அடிகளே! அந்தக் கத்தியை இங்கு போட வேண்டாம். எடுத்து என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று.

“அது யவனர் தங்கள்மீது வீசிய கத்தி. அதன் பிடியில் யவன லிபி இருக்கிறது” என்றார் அடிகள்.

“அதை நானும் கவனித்தேன். ஆனால் யவன ராணி மீது துணிந்து கத்தி வீசக்கூடிய யவனன் ஒருவன் இருக்கிறானோ! ” என்று கேட்டான் கரிகாலன்.

“யவனராணி பரதவப் பெண்ணானால் வீசலா மல்லவா? அதுவும் இந்திர விழா விடுதியிலிருந்து இருட்டில் திருட்டுத்தனமாக ஒடுபவர்மீது எந்த யவனன் கத்தி வீசாதிருப்பான் மன்னவா! அவன் வீசியது நியாயம். அதுவும் வீசியவன் டைபீரியஸாயிருக்கும்போது அது பெபரிதும் நியாயமாகிறது. புகாரின் ராணியைக் கத்தி முனையிலும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யவனர்களின் படைத் தலைவனுக்கு இல்லாவிட்டால் வேறு யாருக்கு இருக்க முடியும்?” என்று சொன்ன ராணி, “சரி சரி. அதையெல்லாம் அப்புறம் பேசிக் கொள்வோம். சீக்கிரம் இந்தக் குடிசையிலிருந்து தப்பிச் செல்வோம்” என்று கூறிக்கொண்டே இருக்கையில் யவன வீரர்களின் ‘சரக் சரக் ‘கென்ற பாதரட்சையொலி குடிசைக்குச் சற்றுத் தூரத்தில் கேட்டது.

இடையிலிருந்த தன் கத்தியை உருவிக் கொண்ட கரிகாலன், “அடிகளே! ராணியை அழைத்துக் கொண்டு குடிசையின் பின்புறம் செல்லுங்கள். இதோ வழி” என்று நீண்ட தன் வாளால் குடிசையின் பின்புறத் தட்டிகளை இரண்டே வெட்டுகளில் அகற்றிச் சிறுவழியொன்றை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு மேலும் சொன்னான் : “அடிகளே, ராணி நடந்து வருவதானால் துரிதமாக நீர் செல்ல முடியாது. அகையால் ராணியைத் தோளில் தூக்கிச் செல்லும். பின்பக்கம் திறந்தவெளித் திடலிருந்தாலும், கேளிக்கையை முன்னிட்டு விளக்குகளெல்லாம் கடலை நோக்கியிருப்பதால் திடலில் தாண்டித் தென்புறம் சென்றால் காவிரியோரமாகச் சுங்கச் சாவடியின் பக்கச் சுவர்களும் பெரும் தூண்களும் இருக்கின்றன. அந்தத் தூண்களின் மறைவில் ராணியை வைத்திரும். நான் வருகிற வீரர்களைக் கவனித்துவிட்டு வருகிறேன்.

" சமண அடிகள் சங்கடத்தால் தவித்தார்.

“என்ன அடிகளே!” என்று அவர் ஆலசியத்தின் காரண மாக ஆத்திரம் மெள்ள இதயத்தில் உதயமாகக் கேட்டான் கரிகாலன்.

“காவி உடை அணிந்து சுரமுண்டனம் செய்து கொண்டுள்ள நான் ராணியைத்் தூக்கிச் செல்வதை யாராவது பார்த்தால் வித்தியாசமாக நினைப்பார்கள். நீங்கள் தூக்கிச் செல்லுங்கள். அந்தக் கத்தியை என்னிடம் கொடுத்தால் வருகிற வீரர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். அதுவும் மன்னரை இத்தகைய அபத்தில் தன்னந்தனியாக நான் விட்டுச் செல்வதைப் பிரும்மானந்தரும் ஒப்புக் கொள்ள மாட்டார்” என்று கூறினார் அடிகள்.

“அடிகளே, தர்க்கத்துக்கு நேரம் இதல்ல. சீக்கிரம் ராணியைத் தூக்கிச் செல்லும். இது என் கட்டளை” என்று கரிகாலன் சொல்லிக் கொண்டிருக்கையிலே வாயிலில் யவன வீரர்கள் தடதடவென்று வரும் ஓசை கேட்டது.

“உம் சீக்கிரம்!” என்று அடிகளைத் துரிதப்படுத்தி அவர் தோளில் ராணியைத் தூக்கிச் சாத்திய கரிகாலன் அவரை சரசரவென்று இழுத்துச் சென்று குடி சையின் பின்புறவழியில் திணித்து வெளியே தள்ளினான். பிறகு கனவேகமாக வாயில் தட்டிக்கு அருகில் வந்து விளக்கை ஊதி விட்டு உருவிய கத்தியுடன் எதிரிகளை எதிர்பார்த்து நின்றான். நீண்டநேரம் அவன் நிற்க வேண்டிய தேவையும் இல்லாது போயிற்று. அடுத்த விநாடி, “யாரங்கே! கதவைத் திற!” என்ற அதிகாரக் குரல் குடிசைக்கு வெளியே கேட்டது. பதிலேதும் கிடைக்காத தால் வெகுண்ட யவன வீரர்களின் தலைவன், “அந்தப் பந்தத்தை இப்படிக் காட்டு” என்று கூறிக்கொண்டு குடிசை யின் தட்டிக் கதவைப் பலமாகக் காலால் உதைத்தான். கதவு படீரென்று திறந்ததும், “உள்ளே நுழையுங்கள், அந்தப் பெண்ணிருந்தால் இழுத்து வாருங்கள்” என்று கூறவே, இரண்டு மூன்று வீரர்கள் உருவிய வாளுடன் தடதடவெனக் குடிசைக்குள் நுழைந்தனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
51. இரவில் நிகழ்ந்த இந்திர ஜாலம்

இருங்கோவேளிட்ட தீயால் கருகிய இடதுகாலைச் சுற்றியிருந்த புலித்தோல் பட்டையைத் தடவிக் கிடந்த நீளமான உறையிலிருந்து தன் வாளை உருவிக் கொண்டு குடிசையின் இருளில் வாயில் தட்டியின் மறைவில் யவன வீரர்களை எதிர்பார்த்து நின்ற கரிகாலன், முதல் இரண்டு வீரர்கள் உள்ளே நுழையுமட்டும் அரவம் ஏதும் செய்யாமல் செயலற்று இருந்துவிட்டு, மூன்றாமவன் உள்ளே நுழைந்ததும் தட்டிக் கதவைச் சடாலென்று சாத்தியதன்றி, சாத்தப்பட்ட கதவின் சத்தத்தைக் கேட்டுச் சரேலெனத் திரும்பிய யவன வீரன் மார்பில் கூரிய தன் வாளை மின்னல் வேகத்தில் பாய்ச்சி இழுத்து அவனை விண்ணுலகுக்கு விரையவும் விட்டான். குடிசையில் தாங்கள் எதிர்பார்த்த பெண்ணுக்குப் பதில், எண்ணத்தின் வேகத்தை விடத் துரிதமாகவும் எண்ணிய இடத்தில் திண்ணமாகவும் வாளைப் பாய்ச்சவல்ல அபாயகரமான ஒரு வீரன் மறைந்து நின்றிருந்ததை முதல் யவனன் மாண்டவுடன் புரிந்து கொண்ட மற்ற இரு யவன வீரர்களும் உருவிய வாட்களைச் சுழற்றித் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு எதிரி எங்கிருக்கிறான் என்பதைப் பார்க்க முயன்று, இருட்டு அதிகமாயிருந்ததால் முடியாததால் வாட்களைச் சற்று நீட்டி நீட்டித் தடவிக் கரிகாலன் இருப்பிடத்தை உணரப் பிரயத்தனம் செய்து குடிசையைத் தடதடவெனச் சுற்றி வந்தார்கள். கரிகாலனையும் அந்த இருட்டுப் பெரிதும் பாதித்ததால், யவன வீரர்களின் கவசங்கள் பலமாக உராய்ந்ததால் ஏற்பட்ட ஒலியைக் கொண்டே அவர்கள் வளையவந்த இடங்களை அறிந்து கொண்ட சோழர் குல இளவல், தன் வாளை அந்த ஒலி இடங்களை நோக்கிப் பாய்ச்சி மற்றும் ஒரு யவனனைக் கழுத்தில் காயப்படுத்தினான். இருள் மண்டிக் கிடந்த அந்தக் குடிசையின் குறுகலான பிரதேசத்திலும் தங்கள் கைக்கு அகப்படாமலும், சுழற்றப்பட்ட தங்கள் வாட்களுக்குத் தட்டுப்படாமலும், கவச ஒலியைக் கொண்டு தங்களைத் தாக்க வல்லவன் சாதாரண வீரனாயிருக்க முடியா தென்பதைப் புரிந்து கொண்ட யவன வீரர் இருவரில், கழுத்தில் காயமடைந்தாலும் உயிரிழக்காது தப்பியவன், மற்றவனைப் பார்த்து, “இந்த இருட்டில் போரிட நம்மால் முடியாது. இதோ இருக்கும் பின்புற வழியாகச் சென்று வாயிலி லிருந்து பந்தமொன்று கொண்டுவா” என்று உத்தரவிட்டான்.

ராணியையும் சமண அடிகளையும் வெளியே அனுப்பத் தான் வகுத்த பின்புற வழியே எதிரி தப்புவதற்கும் உபயோகப்படுவதைக் கவனித்த கரிகாலன், நீண்ட தன் வாளால் குடிசைக்கு வெளியே செல்ல முயன்ற யவன வீரனைத் தடுக்கவே மீண்டும் குடிசைக்குள் பழையபடி சண்டை மும்முரமாகத் தொடங்கியது. வெளியேயிருந்த வெளிச்சத்திலிருந்து உள்ளே வந்ததன் விளைவாகச் சிறிதுநேரம் அடியோடு கண் தெரியாமல் தவித்த யவன வீரா் இருவருக்கும் சண்டை துவங்கிய சில வினாடிகளுக்குள் இருட்டுப் பழகிவிட்டதாலும் கரிகாலன் வெட்டி வழி உண்டாக்கிய பின்புறத்திலிருந்து வந்த மங்கலான இயற்கை வெளிச்சம் உள்ளேயும் சிறிது பாய்ந்ததாலும், அவர்கள் இருவரும் சிறிது நிதானத்துடன் குழப்பமில்லாமலும் கரிகாலனை எதிர்த்தனர். எதிரேயிருந்தவன் வயது முதிர்ச்சி யடையாத வாலிபனென்பதை உணர்ந்து கொண்டதாலும், அவன் கைகள் நீளமாயிருந்ததாலும் மிக மெல்லியவையாய் வலிவற்றவைபோல் காணப்பட்டதாலும், யவன வீரர்களின் தாக்குதலில் ஓரளவு அலட்சியம் இருக்கவே செய்தது.

கழுத்தில் காயம்பட்ட பிறகும் மிக உக்கிரமாகப் போராடத் தொடங்கிய யவன வீரனுடைய வீரத்தை உள்ளுக்குள்ளேயே மெச்சிக் கொண்ட கரிகாலன், யவனர்கள் வாட்கள் சுழல்கின்ற மாதிரியிலிருந்தே தன் வயதையும் கைகளையும் கண்டு அவர்கள் தன்னைக் குறைத்து மதிப்பீடு செய்திருக்கிறார்களென்பதைப் புரிந்து கொண்டானாகை யால் ஓரளவு புன்முறுவலும் கொண்டு, தன் வாளைக் கரகரவென்று சுழற்றிக் காயமடைந்தவனின் வாளுடன் அதை உராயவிட்டுப் பின்னுக்காக ஓர் இழுப்பு இழுக்கவே அந்த யவனனின் வாள் குடிசையின் ஒரு மூலையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்படி விழுந்த வாளை மீண்டும் யவனன் எடுக்க அணுகு முன்பாகவே அதைக். காலால் மிதித்து எதிரி அதைத் தொட முடியாத வண்ணம் செய்த கரிகாலன் மற்றொரு எதிரியின் வாளுடன் தன் வாளை மோதவிட்டான். இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட கத்தி இழந்த யவனன் குடிசையின் பின்புற வழியாக வெளியே ஒடினான். அவன் ஓஒடுவதைத் தடுக்க வழியில்லாததால் மற்றவன்மீது தாக்குதலை மும்முரமாகத் தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வாள் பிடித்த அவன் கையில் அழத் தன் வாளைச் செலுத்திவிட்ட கரிகாலன் அதற்கு மேலும் அங்கு நிற்பது அபத்து என்பதை உணர்ந்து தானும் பின்புற வழியாக வெளியே நடந்தான்.

சில விநாடிகளுக்குள்ளாகவே குடிசைக்குள் சண்டை முடிந்துவிட்ட போதிலும், கையில் காயம் பட்டு வாளை நிலத்தில் நமுவவிட்ட யவனன், “ஒடுகிறான். பிடியுங்கள், பிடியுங்கள்” என்று பெருங் கூச்சலிட்டதாலும், அதற்கு முன்னதாகப் பின்புற வழியாகச் சுற்றிச் சென்ற யவன வீரன், வெளியிலிருந்த வீரர்களில் நால்வரை வாயில் வழியாகக் குடிசைக்குள் நுழையவிட்டு மீதி நால்வருடன் பின்புறத்துக்கு வந்ததாலும், முன்புற வழியாக உள்ளே நுழைந்த வீரர்களும் குடிசையைத் துழாவிப் பார்த்து மார்பில் கத்தி பாய்ந்து மாண்ட யவன வீரனையும் வாள்பிடிக்க முடியாமல் கையில் காயமடைந்த யவன வீரனையும் தவிர வேறு யாருமில்லாத படியால் துரிதமாகப் பின்புற வழியாக வெளியே வந்ததாலும், ஏககாலத்தில் எட்டு யவன வீரர்களைச் சமாளிக்கும் அவசியம் ஏற்பட்டது கரிகாலனுக்கு. இரு வழியிலும் வீரர்கள் தன்னை அணுகுவதற்கு முன்பாகவே குடி சையிலிருந்து சிறிது தூரம் நடந்துவிட்ட இளஞ்சேட் சென்னியின் வீரமகன், யவன வீரர்கள் வெகுவேகமாகத் தன்னைச் சூழ்ந்துகொள்ள வருவதைக் கவனித்ததும் நடையை நிறுத்தி மேலிருந்த தன் போர்வையை உடலைச் சுற்றி வளைத்துக் கவசம்போல் போட்டுக்கொண்டு, தன் வாளை கை எட்டு மட்டும் நீட்டித் தூரத்திலேயே எதிரிகளை நிறுத்தினான். நீளமான வாளும் வாலிபன் கையுமாகச் சேர்ந்து சுமார் அறடித் தூரத்திலேயே தங்களை நிற்கவைத்துவிட்டதையும், வாளைப் பிடித்த வாலிபன் தங்களைப் பக்கவாட்டில் நுழையவொட்டாமல் வாளைக் குறுக்கே வீசித் தன் எதிரிலேயே வரிசையாகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டதையும் கண்ட யவனர்களின் தலைவன், எதிரி வயதில் குறைந்தவ னானாலும் வாட்போரில் எவ்விதத்திலும் குறைந்தவனல்ல வென்பதைச் சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்துகொண்டான். தவிர வாலிபன் கை மெல்லியதாயிருந்தாலும் அது உறுதி யுடன் வாளைப் பிடித்திருந்ததையும், அந்த வாளும் மற்ற வீரர் களின் வாட்களை எப்படியோ மீறிக்கொண்டு வீரர்கள் கண் முன்பாகவும் முகத்திற்கு வெகு அருகாமையிலும் அடிக்கடி காட்சியளித்ததையும் கண்டு, கை மெல்லியதாயிருந்ததே வாள் இஷ்டப்படி. வளைவதற்கு அனுகூலமாயிருந்ததால் யவனரின் திண்மைப் புலங்களும் குறுகிய பட்டை வாட்களும் எதிரியின் போர்த்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொண்டான் யவன வீரர் தலைவன். ஆகவே, “பக்கவாட்டில் செல்லாதீர்கள். எதிர்ப்புறமே நின்று கும்பலாக அவனை அணுகுங்கள்” என்று வீரர்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு, தானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு கரிகாலனை வேகமாக அணுகினான்.

யவன வீரர் தலைவனுடைய எச்சரிக்கையையும், அவன் மிகுந்த ஜாக்கிரதையுடன் தன்னை அணுக முற் பட்டதையும் கண்ட கரிகாலன், லேசாகப் புன்முறுவல் செய்து, நின்ற இடத்தைவிட்டு நகராமலே இந்திர ஜாலம் போல் வாளைக் கரகரவென்று சுழற்றினான். அவன் வாள் சுழன்ற வேகத்தில் தனது வீரர்களின் வாட்கள் இரண்டு அகாயத்தில் பறந்து தூரத்தில் போய் விழுந்துவிட்டதையும், இன்னும் இரண்டு பேர்களும் எதிரியின் வாளுக்கு இலக்காகிக் கடற்கரை மணலில் சாய்ந்து ரத்தத்தைச் சிந்தக் கொண் டி ர௬ுப்பதையும் கண்ட யவனவீரர் தலைவன் அதற்கு மேலும் சுய பலத்தில் நம்பிக்கை வைப்பது தகாது என்பதை உணர்ந்து, “டேய் யாரங்கே? தப்புகிறான். உதவிக்கு வர்ருங்கள்!” என்று பெருங்குரல் கொடுத்தான். அந்தக் குரல் கடற்கரை முழுவதும் ஊடுருவிச் சென்றதால் தூரத்தே நடந்து கொண்டிருந்த பரதவர் ஆட்டங்கள் திடீரென நின்றன. தடதடவென்று பெருவாரியாகக் கோட்டைக் காவலரும் பரதவரும் ஓடிவரும் காலடி ஒசை திமுதிமுவெனக் கடற்கரையில் கேட்டதன்றி, அதுவரை கேளிக்கைக்கு உபயோகப்பட்ட தம்பட்டங்களைத் தட்டிக் கொண்டும் பலவிதமான கூச்சல்களைக் களப்பிக் கொண்டும், பந்தங்களை வீசிக் கொண்டும் ஒடி. வந்த பரதவ மங்கையரின் அரவமும் கடற்கரைப் பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், கடற்கரைப் பிரதேசம் ஏதோ ரணகளப்படுவது போன்ற பிரமையையே சிருஷ்டித்தது. இவற்றையெல்லாம் கவனித்த கரிகாலன் அதற்கு மேல் அங்கு நிற்பதால் பல கண்டங்கள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டானாதலால், தான் நின்ற இடத்தைவிட்டுச் சற்றுத் தள்ளி ஒருபுறமாகக் குதித்ததன்றித் தன் போர் முறையையும் சரேலென மாற்றிக் கொண்டு, திடீரென யவன வீரர்கள்மீது பாய்ந்து, இருவரை நிராயுதபாணிகளாக்கி யவன வீரர் தலைவனையும் தன் உடலால் மோதிக் கீழே தள்ளி அவன் மார்பில் தன் கத்தியை ஊன்றிக்கொண்டு, “உங்கள் தலைவன் பிழைக்க வேண்டுமானால் வாட்களைக் கீழே போடுங்கள் ” என்று மற்ற வீரர்களுக்கு உத்தரவிட்டான். எதிர்பாராத இந்தப் போர்த் திருப்பத்தால் அசந்துபோன யவனர்கள் வாட்களைக் கீழே போட்டுவிடவே, தலைவன் வாளையும் பிடுங்கி அவற்றுடன் சற்றுத் தூரத்தில் எறிந்த கரிகாலன் வீரர்களை நோக்க, “இருபதடி பின்னால் செல்லுங்கள்” என்று மீண்டும் அணை இட்டான். அணையிடும் சக்தி ரத்தத்திலேயே ஊறியிருந்ததாலும் அந்தச் சக்தி கண்களிலும் சந்தேகமின்றிப் பிரதிபலித்ததாலும், யவன வீரர்கள் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்படும் பாவைகளைப்போல் பின்னுக்குச் சென்றனர்.

அடுத்த வினாடி யவன வீரர் தலைவன் மார்பிலிருந்து வாளை எடுத்துக்கொண்ட கரிகாலன் அந்த இடத்திலிருந்து இருட்டில் வெகுவேகமாக நடந்து மறைந்தான். துடலில் அன்று இருட்டு அதிகமாகவே இருந்தது. இருப்பினும் சற்றுத் தூரத்தில் ஓடி வந்துகொண்டிருந்த பரதவரின் கைகளில் தெரிந்த பந்தங்கள் வெளிச்சத்தை அளிக்குமாதலாலும், இடமும் சுங்கச் சாவடித் துறைக்கு அருகிலிருந்ததால் எதிரி மறைவதும் சாத்தியமில்லையென்ற தைரியத்தாலும் எப்படியும் எதிரியைப் பிடித்தேவிடலாம் என்று துணிவு கொண்ட யவன வீரர் தலைவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்து, மற்ற வீரர்களை நோக்க, “ஏன் மரம்போல் நிற்கிறீர்கள்? வாட்களைப் பொறுக்கிக் கொள்ளுங்கள். அதோ அந்தப் பந்தங்களை வாங்கி வாருங்கள். ஒரு சிறு பயல்! அவனைப் மிடிக்க முடியவில்லை யென்றால் கடற்படைத் தலைவர் கழுத்தைத் திருகிவிடுவார் ” என்று மிரட்டியதன்றி ஓடிவந்த பரதவர்களுக்கும் நடந்த விஷயத்தைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லி, “அவன் காலில் புலிப்பட்டை இருக்கும். பாதரட்சைகளும் புலித்தோலால் செய்யப்பட்டவை” என்று அடையாளமும் கூறி, அவனை எப்படியும் தேடிப் பிடிக்கும்படி, பணித்தான்.

யவன வீரர் தலைவன் யாரைப் பிடிக்கத் தங்களைப் பணிக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளாத பரதவ குல அடவரும் பெண்டிரும், களியாட்டங்களின்போது அருந்திய மது போதையில் உண்டான வெறியால் கையிலேந்திய பந்தங்களை ஆட்டிக்கொண்டு அந்தக் கடற்கரையில் நாலா புறமும் ஓடினர். இருட்டிக் கிடந்த திடலில் பல பந்தங்கள் வீசியும் எந்த இடத்திலும் கரிகாலனைக் காணாத யவன வீரர் தலைவன் பிரமித்தான். பரதவ மங்கையரும் ஆடவரும் பந்தங் களுடன் கடற்கரையில் ஓடிஓடி எதிரியைத் தேடிய காட்சி யைக் கண்டு ஒருபுறம் வியந்த அந்த யவனனுக்கு அந்தப் பெரும் திடலில் எங்கும் ஒளிந்துகொள்ள குடிசையோ வேறு விடுதியோ இல்லாத அந்தப் பகுதியில் - எப்படி அந்த வாலிபன் திடீரென மறைய முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததோடு, ராணியைப் பிடித்து வராதது மட்டு மன்றிக் குடிசைக்குள்ளிருந்த அளையும் இழந்துவிட்டதால் டைபீரியஸ் தன்னை என்ன செய்வானோ என்ற பீதியும் ஏற்படவே, அவன் வெகு மும்முரமாகக் கரிகாலனைத் தேடும் பணியில் இறங்கினான். பெரும் கும்பல் தேடியும் கரிகாலன் எங்கும் கிடைக்கவில்லை. சங்கமத் துறை, பரதவர் குடிசைகள், பரதவர் பேரில்லங்கள், சுங்கச் சாவடியின் படித்துறை - எல்லா இடங்களிலும் பரதவர் தேடியும் புலிப்பட்டைக் கட்டிய வாலிப வீரன் கிடைக்கவில்லை. இது யவன வீரா் களுக்கு மட்டுமல்ல, சுங்கச் சாவடிக்குச் சற்றுத் தள்ளியிருந்த பெரும் தூண்களின் கூட்டத்தில் ராணியுடன் மறைந்து கிடந்த அடிகளுக்கும் பெருவியப்பாக இருந்தது.

புகாரின் சுங்கச் சாவடியின் படிகளின் பக்கத்தில் இருந்த பெரும் தூண்களின் மறைவில் பதுங்கி, கடற்கரை மணல் திடலில் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டே நின்றிருந்த சமண அடிகள், அந்த இடத்தில் தன்னைக் காத்திருக்கும்படி. கரிகாலன் கூறியதன் காரணத்தை நன்றாக உணர்ந்தே இருந்தார். சுங்கச் சாவடியின் சுவரை அணைத்த வண்ணம் எழுப்பப்பட்ட பெரும் தூண்களின் மறைவு, சாதாரணமாகக் காவிரி மூலம் உள்நாட்டி லிருந்து வந்து வெளிநாடு செல்லக் காத்திருக்கும் பொதி மூட்டை களை அடுக்கவே உபயோகப்பட்டு வந்ததென்பதையும், நூற்றுக்கால் மண்டபம் போல் விசால அரங்கமாக, தூண் களும் கருங்கல் கூரையும் தவிர, வேறெதுவுமில்லாத பெரு மண்டபமாக இருந்ததாலும், பொதி மூட்டைகளும் ஏராள மாகக் கடந்ததாலும் அதன் மறைவிலிருப்பவர்களைக் கண்டு பிடிப்பது எளிதல்லவென்பதையும் உணர்ந்த அடிகள், நீண்ட நேரம் அந்தத் தூண்களின் ஒரு கோடியிலிருந்த மூட்டை களுக்கு அடியில் பதுங்கியிருந்தார். அப்படிப் பதுங்கியிருந்த நேரத்தில் தூரத்தே பெரும் ஓசை கேட்கவே, ராணியை மெள்ளத் தூக்கிச் சென்று சில பஞ்சு மூட்டைகளின் மறைவில் உட்கார வைத்து, “புகாரின் ராணி உட்கார இது ஏற்ற இடமில்லைதான். இருந்தாலும் வேறு வழியில்லை” என்று சமாதானம் சொல்லி ராணியை மறைக்க அவள் முன்பாக இரண்டு பஞ்சு மூட்டைகளையும் எடுத்து அடுக்கினார். பிறகு தாம் மட்டும் வெளியே வந்து ஒரு தூண் மறைவில் நின்று தூரத்தில் நடப்பதைக் கவனித்தார்.

தூண்களிருந்த இடத்துக்கும் பரதவர் குடி சைகளுக்கும் இடையே இருந்த இருட்டின் காரணமாக அடிகளின் கண்களுக்கு முதலில் எதுவும் திட்டமாகத் தெரியா விட்டாலும், பரதவர் பந்தங்களுடன் ஓடிவந்த பிறகு தூர நிகழ்ச்சிகளை அவர் ஓரளவு ஊகித்துக் கொண்டார். பந்தங்கள் வேகமாக எங்கும் அசைந்ததாலும் உருவிய வாளால் யவன வீரர் தலைவன் அங்கும் இங்கும் அடையாளம் காட்டியதாலும் கரிகாலனைத் தேட முயற்சி நடக்கிறதென்பதை அறிந்த அடிகள் குடிசையைத் தாக்கிய வீரர்களிடமிருந்து கரிகாலன் தப்பிவிட்டானென்பதை அறிந்து கொண்டதால் ஓரளவு ஆச்சரியமும் கொண்டார். ‘குடிசையின் குறுகிய உட்பகுதியில் மூன்று வீரர்களை வாள் கொண்டு சமாளிப்பதே கஷ்டம். தவிர அவர்களை மீறி வெளியே வருவது அதைவிடக் கஷ்டம். வெளியே வந்தாலும் சூழ்ந்துகொள்ளக்கூடிய மற்ற வீரர்களைச் சமாளிப்பது மாபெரும் கஷ்டம். இத்தனையையும் மன்னர் எப்படிச் சாதித்தார்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட அடிகள், கரிகாலனை ஏராளமான பேர்கள் தேடுவதைக் கண்டு அவனுக்கு ஏதாவது அபத்து நேரிட்டால் என்ன அவதென்று கவலையும் கொண்டார். அந்தக் கவலையின் விளைவாகத் தாமாவது சென்று கரிகாலனுக்கு உதவலாமா என்று நினைத்தார். அந்த நினைப்பைச் செயல்படுத்து முன்பாக, தூண்களை நோக்கிப் பந்தங்கள் நகருவதைக் கண்ட அடிகள் தன் தலையை நீட்டினால் வீண் அபத்தைத் தவிர உதவி ஏதுமில்லை யென்பதைப் புரிந்துகொண்டு, பரபரவென்று பின்னாலிருந்த ராணிக்கு அருகில் பொதிகளுக்கு இடையில் தாமும் பதுங்கிக் கொண்டு தமது மீதும் இரண்டு பொதிகளை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

பந்தங்களுடன் வந்த பெரும் கூட்டம் நீண்ட நேரம் அந்த மண்டபத்தின் பகுதிகளைச் சோதனை செய்தது. சில பரதவர் பொதி மூட்டைகளில் சிலவற்றையும் அகற்றி அராய்ந்தனர். அடிகளைப் பிடித்த நல்ல காலமோ அல்லது ராணியைப் பிடித்த நல்ல காலமோ தெரியாது. வந்திருந்த பரதவர் அதிக நேரம் தேடாமல் வெகு சீக்கிரம் பந்தங்களை எடுத்துக் கொண்டு அகன்றனர். அதுவரை பதுங்கிக் கொண்டிருந்த அடிகள் மெல்ல எழுந்து தமது மீது படிந்திருந்த பபொதிப் பஞ்சு உதிரிகளைத் துடைத்துக் கொண்டார். மூக்கிலும் பஞ்சின் பகுதிகள் சில நுழைந்து இருந்ததால் தும்மலொன்று அவருடைய பெரும் நாசியிலிருந்து எழுந்தது. அடிகள் சகுன சாத்திரத்தை நன்றாக அறிந்தவர்தான். எந்த நல்ல காரியத்திற்கும் ஒற்றைத் தும்மல் கெடுதல் என்பதை அவர் அறியாதவரல்ல. ஆனால் ஒருவன் ஒரு நல்ல காரியத்துக்குக் கிளம்பும்போது வேறு ஒருவன் தும்மினால் தான் கெடுதல் என்று தமிழகத்தில் சொல்லுவார்கள். ஆனால், தமது தும்மலே தமக்குப் பெரும் விரோது என்பதை அடிகள் அன்றுதான் உணர்ந்தார். அவர் தும்மலை எதிர்பார்த்தவை போல் புகாரின் அந்தப் பெரும் குரண்களுக்கிடையேயிருந்த பொதி மூட்டைகள் திடீரெனப் புரண்டன. சில பொதிகள் அவரை நோக்கி மெல்ல நகரவும் தொடங்கின. அடுத்த வினாடி புரண்ட பொதிகளின் மறைவிலிருந்து வாள் தாங்கிய நூறு உருவங்கள் இடீரென எழுந்தன. அவை அடிகளை மட்டுமல்ல, பொதிக்கும் அடியிலிருந்த ராணியையும் வளைத்துக் கொண்டன. “ராணி! எழுந்திரு!’’ என்று அதட்டலான குரலொன்றும் சற்றுத் தூரத்திலிருந்து எழுந்தது. அந்த உத்தரவை அமோதகிப்பதுபோல் பெரும் தூண்களும் பரந்த அந்த மண்டபத்தின் பாறாங்கற் கூரையும் ராணி எழுந்திரு! ராணி எழுந்திரு!’ என்று பயங்கரமாக எதிரொலி செய்தன. அடிகள் ஏதும் புரியாமல் இரவில் நிகழ்ந்த அந்த இந்திர ஜாலத்தைக் கண்டு, அடியோடு திகைத்ததல்லாமல் தன்னைச் சூழ்ந்தவர்களை நோக்கி அடு திருடிய கள்ளன்போல் விழித்துக் கொண்டும் நின்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
52. பழைய இடம்! புதிய நிலை!

காவிரிப் பூம்பட்டினத்தின் கலங்கரை விளக்கம் பெரும் தயை எழுப்பி எங்கும் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தாலும், பெரும் தூண்கள் பரவிக் கிடந்ததால் கோடியில் இருட்டு மண்டிக் கிடந்த பிரும்மாண்டமான அந்த மண்டபத்தின் மூலையிலிருந்த பொதி மூட்டைகளில் பல நகரத் தொடங்கியதையும், நகர்ந்த அந்த மூட்டைகளின் மறைவை விலக்கிக் கொண்டு எழுந்த நூறு வீரர்கள் தன்னை வளைத்துக் கொண்டதன்றி, ராணி, எழுந்திரு’ என்று தூரத்தே மறைவிலிருந்த ஒருவன் குரல் கொடுத்ததையும் கவனித்த அடிகள் சில விநாடிகள் பிரமிப்படைந்து விழித்தாலும் வெகு சீக்கரம் தம்மைச் சமாளித்துக் கொண்டு தன்னைச் சூழ்ந்த வீரர்கள் யாரென்று அறிய அவர்கள்மீது தமது விஷமக் கண்களை ஓட்டினார். அடிகளும் அந்த வீரர்களும் நின்றிருந்த இடத்தில் நல்ல இருட்டு இருந்தாலும், மண்டபத்தின் பக்கச் சரிவில் காவிரிக் கரையை ஒட்டிச் சங்கமத் துறைக்கு வெகு அருகே கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் விழுந்திருந்ததால் மண்டபத்திலிருந்த அத்தனை இருட்டிலும் அடிகள் ஓரளவு அந்த வீரர்களைக் கவனிக்க முடிந்தது. அவர்களை நன்றாக உற்றுப் பார்த்த அடிகள், அவர்கள் உடைக்கும் தொழிலுக்கும் அதிக சம்பந்தமில்லாததைப் பார்த்துச் சிறிது சந்தேகமும் கொண்டார். தன்னைச் சூழ்ந்து கொண்டவர்கள் வெளி நாட்டு வர்த்தகர்களின் உடைகளை அணிந்து கொண் டி ருந்ததையும் இழுத்து மூடப்பட்ட அவர்கள் கம்பளிகள் அகன்றபோது இடைகளில் வாட்களைக் கட்டும் கச்சையும் நீளமான வாளுறைகளும் இருந்ததையும் கவனித்த அடிகள், அவர்கள், வர்த்தகர்களாயிருக்க முடியாதென்றும் வர்த்தகர் வேஷத்தில் பதுங்கியிருந்த படைப் பிரிவாகத்தான் இருக்க வேண்டுமென்றும் ஊகித்துக் கொண்டாரானாலும், அந்தப் படைப்பிரிவு யாருடையதாயிருக்க முடியும்?” என்பதை மட்டும் அறிய முடியாதவராய்த் திணறினார்.

சூழ்ந்தவார்கள் யவனர்கள் அல்லவென்் பதைப் பார்த்த மாத்திரத்திலே புரிந்துகொண்ட அடிகள், அவர்கள் தமிழர் களாதலால் ஒருவேளை இருங்கோவேளின் ஆட்களாயிருப் பார்களேோ என்று சந்தேகித்தார். அப்படியிருந்தால் தம்மையும் ராணியையும் பிடிக்க அவர்கள் அந்த மண்டபத்தில் தங்கியிருக்க நியாயமில்லையென்பதையும், டைபீரியஸ் துணையிருக்கும்போது அவனைக் கொண்டே தம்மைப் பிடித்து விட இருங்கோவேளுக்கு அதிக நேரமாகாதென்பதையும் உணர்ந்த அடிகள், ‘வந்திருப்பவர்கள் இருங்கோவேளையோ டைபீரியஸையோ சேர்ந்தவர்கள் அல்ல’ என்று திட்டம் செய்து கொண்டார். அப்படியானால் இவர்கள் யார்?” என்று உள்ளூரத் தம்மைக் கேள்வி கேட்டுக் கொண்ட அதே தருணத்தில், “ராணி! எழுந்திரு!’’ என்று எழுந்த குரலைக் கேட்டதும் திகைத்துப்போய், ‘இவரா 2? இவர் எப்படி இங்கு வர முடியும்? " என்று பிரமிப்புக்கும் அளாகி எதுவும் பேசமுடியாமல் நின்ற சமயத்தில், தூரத்தேயிருந்த ஒரு தூண் மறைவிலிருந்த தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டிருந்த ஒர் உருவம் வெளியே வந்தது. அந்த உருவம் நடந்த தோரணை, ஆகிருதி இவற்றையெல்லாம் ஊன்றிக் கவனிக்கத் தொடங்கிய அடிகளை நோக்கி, அந்த உருவம் இருமுறை கையை ஆட்டியதும், வீரர்களில் இருவர் அடிகளை அணுகி அவரது இரு தோள்கள் மீதும் கையை வைத்து அழுத்தினார்கள். அவர்களில் ஒரு வீரன், “உம். சுங்கச் சாவடியை நோக்கி நடவுங்கள் ‘‘ என்று உத்தரவும் இட்டான். அடிகள் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிவதா அல்லவாவென்று யோசித்துக் கொண்டிருந்த இரண்டு விநாடிகளுக்குள்ளாக, தலைமுதல் கால்வரை முக்காடிட்ட உருவம் மீண்டும் அதே சைகை களை வீரருக்குக் காட்டிவிட்டுச் சுங்கச் சாவடியை நோக்கி நடந்தது.

வாள் தாங்கிய வீரர்களுக்கு அந்த உருவம் சைகை களைச் செய்த முறையிலிருந்தும் கையை ஆட்டிய கம்பீரத்தி லிருந்தும் அவன் அவர்களின் தலைவனாயிருக்க வேண்டு மென்பதை ஊகித்துக் கொண்ட அடிகள், அந்த மனிதன் குரல் தமக்கு மிகவும் பழக்கப்பட்டதாயிருப்பதை நினைத்து நினைத்து, பேராச்சரியமும் குழப்பமும் அடைந்திருக்கையிலே ராணியையும் மறைவிடத்திலிருந்து கிளப்பி நடத்திக் கொண்டுவந்த வீரர்களிடம் மட்டுமன்றி, தம்மிடமும் பெரும் கம்பளிகளைக் கொடுத்து, “இதை நன்றாகப் போர்த்தி மறைத்துக் கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டதைக் கேட்டு, “எங்களுக்கு எதற்கு இந்த மறைவு?” என்று விசாரித்தார்.

“காரணம் தலைவரைத்தான் கேட்கவேண்டும்” என்று முரட்டுத் தனமாகக் கிடைத்தது பதில் ஒரு வீரனிடமிருந்து.

“தலைவரைக் கூப்பிடுங்களேன் கேட்கிறேன்” என்றார் அடிகள் சற்று விஷமமாக.

ஆனால் அவருக்குப் பதில் சொன்ன வீரன் அடிகளின் குரலில் தொனித்த விஷமத்தையோ தங்களை ஆமழம்பார்க்க அடிகள் மூயல்வதையோ சிறிதும் பொருட்படுத்தாமல் “தலைவரைக் கூப்பிட அவசியமில்லை. அவர் இருக்கிற இடத்துக்குத்தான் நீங்கள் போகிறீர்கள்” என்று கண்டிப்பாகப் பதில் சொன்னான்.

“தலைவர் இருப்பிடம் எதுவோ?” என்று மீண்டும் வினயமாகக் கேட்பதுபோல் மற்றொரு கேள்வியை வீசினார் அடிகள்.

அடிகள் தோள்மீது கையை வைத்து அழுத்திய வண்ணம் இரண்டு கேள்விகளைப் பொறுத்துக் கொண்டிருந்த அந்த வீரன் அதற்குமேல் பொறுக்க இஷ்டப்படாமல், “விவாதத்துக்கு இடம் இதுவல்ல. உமது கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் அவகாசமில்லை. நடவுங்கள்! இல்லையேல் தங்களை நடக்கச் செய்யும் பொறுப்பும் எனக்கு ஏற்படும் ” என்று சற்றுக் கடுமையாகப் பதில் சொன்னதன்றி, அடிகளைப் பிடித்து ஓரடி நகர்த்தினான். அந்த முரட்டுத்தனத்தைப் பொறுக்க முடியாத அடிகள் அவன் கையைத் தோளிலிருந்து விலக்கித் தள்ளிவிட்டுப் போர்வையால் தம்மை முக்காடிட்டுக் கொண்டாரானாலும் ராணி விஷயத்தில் அக்கறை காட்ட முறபட்டு, “ராணி காயமடைந்திருக்கிறார்கள். அவர்களால் நடக்க முடியாது. அவர்களைத் குரக்கித்தான் செல்ல வேண்டும்” என்று கூறவே, ராணிமீது கம்பளியைப் போர்த்தி அவளைத் தூக்கிச் செல்லவும் இரு வீரர்களைப் பணித்தான் முதல் வீரன்.

அவன் அணைப்படி தன்னை நெருங்கிவந்த வீரர்களை எட்டி நிற்கும்படி தன் விழிகளால் மட்டுமன்றி, கையையும் உயரத் தூக்கி எச்சரித்த ராணி, தானே கம்பளியால் முக்கா டி ட்டுக் கொண்டு அடிகளுக்கு அருகில் வந்து, “அடிகளே! குடிசையில் தாங்கள் என் காயத்தில் கஷாயத்தைப் புகுத்தியதிலிருந்து குருதி நின்றுவிட்டது. இப்பொழுது அந்த அயா்வும் இல்லை. என்னால் நன்றாக நடக்கமுடியும். யாரும் தூக்கிச் செல்லவேண்டிய அவசியமில்லை’’ என்று கூறிவிட்டுச் சுங்கச் சாவடியை நோக்கி நடக்கத் தொடங் கினாள். சுங்கச் சாவடிக்கு அருகிலேயே அந்தப் பெரும் குண்கள் கொண்ட மண்டபம் இருந்த போதிலும் ராணியை யும் அடிகளையும் அழைத்துச் சென்ற வீரர்கள், முதலில் எதிரேயிருந்த இருட்டுத் திடலில் நுழைந்து, சங்கமத் துறையை நோக்கிச் சுற்றி வளைத்துச் சென்று சங்கமத் துறைக்கும் சுங்கச் சாவடிக்கும் இடையே இருந்த காவிரிக் கரையின் பகுதியை அடைந்தார்கள்.

அவர்கள் அப்படிச் சென்றதன் காரணம் அடிகளுக்கு மட்டுமன்றி ராணிக்கும் தெள்ளெனப் புரிந்தது. மண்டபத்தி லிருந்து நேரே சுங்கச் சாவடிக்குச் சென்றால் இடையே வீசிய கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தில் நுழைந்து புறப்பட வேண்டியதாயிருக்கும். அப்படி நுழைந்து புறப்படும்போது சாவடிக் காவலர் கண்களில் பட்டால் இரண்டாம் ஜாம இறுதியில் அங்கு மக்கள் நடமாட்டத்துக்குக் காரணம் என்ன வென்பதைக் காவலர் ஆராய நேரிடும். அப்படி ஆராய்ந்தால் மறுபடியும் டைபீரியஸின் சிறையில் தள்ளப்படுவதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இந்தக் காரணத்தில்தான் கலங்கரை விளக்கம் வெளிச்சம் தரும் பகுதியை விட்டு விலகி வீரர்கள் செல்கிறார்களென்பதை உணர்ந்த அடிகள், அவர்கள் சங்கமத் துறைக்கும் சுங்கச் சாவடிக்கும் இடையே காவிரிக் கரையை அடைந்த காரணத்தையும் தெரிந்து கொண்டார். காவிரிக் கரையிலும் சங்கமத் துறையிலும் சுங்கச் சாவடியின் பகுதியிலும் விழுந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் கலங்கரை விளக்கம் இருந்த இடத்தின் அருகில் மட்டும் விழவில்லையென்பதையும், அந்த இருட்டின் காரணமாகவே வீரர்கள் தங்களை அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்களென்பதையும் புரிந்து கொண்ட அடிகள், அந்தப் பகுதியில் கரையோரமாக இருந்த தளைகளில் பத்துப் பதினைந்து படகுகள் பிணைக்கப்பட்டிரப்பதைக் கண்டதும், இங்கிருந்து படகுகள் மார்க்கமாக நம்மை அழைத்துச் செல்லப் போகிறார்கள்’ என்று தமக்குத் தாமே விளக்கிக் கொண்டார். “ஆனால் இந்தப் படகுகள் சுங்கச் சாவடியின் குறுக்குத் தளைகளைத் தாண்டித்தானே புகாருக்குள் செல்ல முடியும். சுங்கச் சாவடிக் காவலர் சோதனை செய்தால் இவர்கள் என்ன செய்வார்கள்’ என்று யோசித்து அதன் விளைவை நினைத்து ஓரளவு அச்சமும் கொண்டார். “சுங்கச் சாவடிக் காவலர் கையில் அகப்பட்டால் ராணியின் குட்டும் என் குட்டும் வெளிப்படும். டைபீரியஸ் இருவரையும் சும்மா விடமாட்டான்’ என்று நினைத்துக் கலவரப்பட்ட அடிகள் வெகு சீக்கரம் அந்தக் கலவரத்திலிருந்து விடுதலையடைந்து அச்சரியத்தின் வசமானார். வீரர்கள் ஏற்பாடு அத்தனை கச்சிதமாக அமைந்திருந்தது.

காவிரிக் கரையில் அந்த இருட்டுப் பகுதியில் தளை களில் பிணைக்கப்பட்டு ஆடிக் கொண்டிருந்த படகுகளில் எட்டுப் பத்து பேராகப் பிரிந்துபிரிந்து ஏறிய வீரர்கள் படகுகளின் மட்டத்தில் படுத்துப் பதுங்கியதன்றி, படகுகளின் இரு கோடிகளிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சில பஞ்சுப் பொதி மூட்டைகளைத் தங்கள்மீது இழுத்துப் போட்டுக் கொண்டு கணநேரத்தில் அந்த மூட்டைகளுக்குள் மறைந்தும் விட்டார்கள். வணிகர்கள் வேஷத்திலிருந்த வீரர்கள் சிலா ட்டும் படகுக்கு ஒருவன் வீதம் நடுவே உட்கார்ந்து துடுப்பு ஈளைப் பிடித்துக் கொண்டார்கள். மற்றொரு படகில் சில பீரர்களுடன் அடிகளையும் ராணியையும் ஏற்றிவிட்ட அந்தக் கட்டத்தின் தலைவன், எல்லோரும் படகுகளிலிருந்த சரக்கு களில் மறையுமட்டும் கரையிலேயே நின்று கொண்டிருந்தான். பிறகு படகுகள் செல்லலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை ஆட்டி விட்டுத் தான் மட்டும் சங்கமத் துறையை நோக்கி விடுவிடுவென்று நடந்தான்.

இரண்டாம் ஜாமம் இறுதிப் பகுதியை நோக்கித் துரிதமாக நகர்ந்து கொண்டிருந்ததால் பரதவர்கள் இல்லங் களிலிருந்த பகுதியில் மட்டுமன்றி, மற்ற இடங்களிலும் அமைதி மெல்ல மெல்லச் சூழ்ந்தது. கலங்கரை விளக்கத்துக்கு எண்ணெய் போடுபவனும், கீழிருந்து எண்ணெய்க் கலயங்களில் ஊற்றி உறிகளில் ஏற்றி விடுபவர்களையும் தவிர வேறு யார் கூச்சலும் அந்தப் பிராந்தியத்தில் கேட்கவில்லை. சுங்கச் சாவடிக் காவலர் அங்கிருந்து படித்துறைகளில் அரவம் ஏதும் செய்யாமல் உலவிக் கொண்டிருந்தாலும் சுங்கச் சாவடியின் தீப்பந்தங்கள் அவர்கள் கவசங்கள்மீது ஒளி வீசி இதோ காவலிருக்கிறது, ஜாக்கிரதை’ என்று எச்சரித்தன. அந்த எச்சரிக்கையைக் கவனித்தன போல் மிக ஜாக்கிரதையாக அடிகளையும் ராணியையும் இதர வீரர்களையும் பொதிகளுக் கடியில் மறைத்துக் கொண்டிருந்த படகுகள் மெள்ளவே நகர்ந்தன. அரவம் ஏதுமற்ற அந்த இரவில் காவிரி நீரில் புகுந்து புகுந்து புறப்பட்ட துடுப்புகளின் “சளக் சளக் ‘கென்ற சத்தம் கூட மெதுவாகவே கேட்டது. கூடிய வரையில் நிதானமாகவும் சத்தமில்லாமலும் இரவில் நீந்தும் தருடர்களைப்போலக் காவிரி நீர்ப் பரப்பில் ஊர்ந்து சென்ற படகுகள் சுங்கச் சாவடியின் தளைகளுக்குள் நுழைந்ததும் ராணியும் அடிகளு மிருந்த படகை ஒட்டியவன் அந்தப் படகை மட்டும் படித் துறைக்கு அருகில் செலுத்தினான். படகு படிக்கு அருகில் வந்ததும் படகைத் தளையில் கட்டாமலே தன் காலைக் கரையில் ஊன்றிப் படகின் ஒட்டத்தைத் தடுத்து, வாணிப வீரன் காவலாளியிடம் ஒரு ஓலையை நீட்டினான்.

காவலன் அதை வாங்கி விளக்கொளியில் படித்த பின்பு, “மொத்தம் எத்தனை படகுகள்?” என்று வினவினான்.

“பதினைந்து படகுகள் பிரபு” என்று மிக வினயத்துடன் பதில் கூறினான் வாலிபன் வேஷத்திலிருந்த வீரன்.

“பொதி மூட்டைகள் எத்தனை?” மீண்டும் காவலனிட மிருந்து வந்தது கேள்வி.

“படகுக்குப் பத்து மூட்டைகள்.” அதி வினயத்துடன் பதில் சொன்னான் வீரன்.

கையிலிருந்த ஒலையுடன் சாவடிக்குள் சென்ற காவலன் சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்து, “இதோ அனுமதி, படகுகள் செல்லட்டும்” என்று உத்தரவிடவே படகுகள் மீண்டும் நகர்ந்தன. நகர்ந்த படகுகள் சுங்கச் சாவடியிலிருந்து அரை நாழிகைப் பயணத்துக்குப் பிறகு காவிரிக்கரையருகே தோப்பு மண்டிக் கிடந்த ஓரிடத்தில் ஒதுங்கியதும் அதுவரை படகுகளில் சரக்கு மூட்டைகளின் அடியில் பதுங்கிக் கடந்த வீரர்கள் எழுந்து கரையில் குதித்து, ராணியையும் அடிகளையும் கரைக்கு வரும்படி பணிக்கவே அடிகள் ராணியையும் மெள்ள எழுப்பி அழைத்துக் கண்டு கரையை அடைந்தார். படகுகளைத் தள்ள, படகொன்றுக்கு ஒரு வீரனை மட்டிலும் விட்டு வைத்த வீரர்கள் கம்பளிகளால் தங்களை மறைத்துக் கொண்டு, “சரக்குகளை மண்டி களுக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவிடவே படகுகள் மீண்டும் மேற்கு நோக்கி விரைந்தன.

அவை காவிரிப் பரப்பில் ஊர்ந்து செல்வதை ஓரிரு வினாடிகளில் கவனித்த அடிகள், கரைப்பகுதிகளிலும் கண்ணைச் செலுத்தி தாமும் ராணியும் இறக்கப்பட்ட இடம் நாளங்காடிக்கு வெகு அருகிலுள்ளது என்பதை அறிந்து கொண்டதன்றி, வீரர்கள் அங்கு இறக்கியதன் மர்மத்தையும் ஊகித்துக் கொண்டார். நாளங்காடி வர்த்தக சாலையில் எந்த வேளையில் வணிகர் சென்றாலும் அவர்களை யாரும் தடை செய்யமாட்டார்களாதலாலும் வீரர்கள் வணிகர்கள் உடைகளை அணிந்திருந்ததால் அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பு உண்டென்பதையும் ஊகித்த அடிகள், “இத்தனை ஏற்பாடாக, துணிகரமாகப் பூம்புகாரிலே டைபீரியஸ் கண்களில் மண்ணைத் தூவக் கூடியவர்கள் யாராயிருக்க முடியும்’ என்பதை எண்ணிப் பார்த்து ஏதும் விளங்காதவராய் வீரர்கள் ஊருக்குள் நடந்தும் ராணியுடன் ஏதும் பேசாமல் அவர்களைப் பின்பற்றிச் சென்றார். நாளங்காடி மார்க்க மாகப் புகாரின் இருபிரிவுகளான மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் இடையேயிருந்த சாலைகளில் புகுந்து சுமார் ஒரு நாழிகை நேரம் பயணம் செய்த வீரர்கள் பெரும் தெருவொன்றின் கோடியில் ஒரு சோலை நடுவே தனித்து நின்ற மாளிகையொன்றை அடைந்ததும், தனித்தனி யாகப் பிரிந்து சோலைக்குள் மறைந்தார்கள். இரண்டு மூன்று வீரர்கள் மட்டும் ராணியையும் அடிகளையும் அழைத்துச் சென்று அந்த மாளிகையின் முன்புறத்தை அடைந்தார்கள்.

சோலையிலே தனித்து மறைந்து நின்ற அந்த மாளிகையின் அமைப்பை அடிகளார் மட்டுமன்றி ராணியும் பார்த்ததும் இருவருமே மலைத்துப்போய் நின்றுவிட்டார் களானாலும் இருவரும் பிரமித்ததற்குக் காரணங்கள் மட்டும் வெவ்வேறானதாகவே இருந்தன. சங்கமப் பொற்கொல்லரான சமண அடிகளின் சொந்த ஊர் புகாரேயானாலும் அதை விட்டு அவர் கருவூர், வஞ்சிக்குச் சென்று பல அண்டுகள் அகிவிட்டபடியால் இடையே அந்தப் பட்டணத்தில் ஏற்பட்ட பல மாறுதல்களை உணராதிருந்ததால் இத்தகைய ஒரு சோலையும் தனித்த மாளிகையும் புகாரில் எப்போது ஏற்பட்டன. என்பதைப் புரிந்தகொள்ள முடியாமல் மலைத்தார். அது மட்டுமல்ல, அந்த மாளிகை இருந்த விதம், அது தெருவை விட்டுச் சற்றுத் தள்ளியேயிருந்த நிலை, அதன் பழம் பெரும் சுவர்கள், வாயிற் கதவுகள் இவையனைத்தையும் கவனித்த அடிகள், ‘புகாரில் சதி நடத்த இதைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது’ என்று தமக்குள் சொல்லிக்கொண்ட தன்றி, தம்மை அழைத்து வந்தவர்கள் இந்தப் புகாரின் மர்மங்களைப் பூரணமாக அறிந்த சதிகாரர்களாகத்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கும் வந்தார்.

ராணியின் இதயத்தில் வேறு பல உணர்ச்சிகள் எழுந்து அலை மோதிக்கொண்டிருந்தன. அந்த மாளிகையைக் கண்ட துமே அவள் எண்ணங்கள், தான் பூம்புகாரின் கடற்கரையில் ஒதுங்கி மூர்ச்சையுற்று உணர்விழந்து கிடந்த நிலைக்கு அவளை அழைத்துச் சென்றன. இளஞ்செழியன் தன்னை அந்த மாளிகைக்குத் தூக்கி வந்தது, தனக்கு மதுவைப் புகட்டி உணர்ச்சிகளை வரவழைத்தது, யவன வீரர்கள் அந்த மாளிகையைச் சூழ்ந்துகொண்டது, உருவிய வாளைத் தன் மார்புக்குக் குறுக்கே நீட்டிய வண்ணம் இளஞ்செழியன் தன்னை இழுத்துக் கொண்டு பின் தோப்புக்குச் சென்று புரவி ஏறிப் பறந்தது... இந்தக் காட்சிகளெல்லாம் அவள் மனக்கண் முன்னே எழுந்ததால், அவள் புறக்கண்களில் காதலும் அந்தக் காதலின் விளைவாகக் கன்னங்களில் இரத்தச் சிவப்பும் சொட்டி அவளைக் கிரேக்க நாட்டுத் தெய்வ மங்கையாகத் திகழ வைத்தன. பழைய நிகழ்ச்சிகளை நினைத்து, சில விநாடிகள் தன்னை மறந்து மாளிகைக்கு எதிரில் நின்ற யவனராணி, “இந்த மாளிகையில் இப்பொழுது இருப்பவன் யார்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

அந்தக் கேள்விக்கு விடை அடுத்த சில விநாடிகளில் கிடைக்க இருந்தாலும், அதைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்த ராணியையும் அடிகளையும் வீரர்கள் அந்த மாளிகைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

உள்ளே நுழைந்த யவன ராணி அந்த மாளிகையில் ஏற்பட்டிருந்த பெரும் மாறுதலைக் கண்டு வியந்தாள். போர்க் கவசங்களும், வாட்களும், வேல்களும் தொங்கிய அந்த மாளிகையின் பெரும் கூடத்தில் வர்த்தகர்களின் முண்டாசு களும் பொதி மூட்டைகளும் மண்டிக்கிடந்தன. வர்த்தகத் தளங்களில் கணக்குப் பிள்ளை குறிப்பெழுதுவதற்காகப் போடப்படும் சாய்வுப் பலகையும் நறுக்கு உலைகளும் ௨ கண்டு எழுத்தாணியும் அந்த மாளிகைக் கூடத்தில் காட்சி யளித்தன. இவற்றையெல்லாம் வியப்புடன் கவனித்த ராணி யைக் கண்ட அடிகள், அந்த மாளிகைக்கு அவள் மூன்னமே வந்திருக்க வேண்டுமென்பதை அறிந்து, “ஏன் ராணி, இந்த மாளிகைக்கு முன்னமே வந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்.

“வந்திருக்கிறேன்” என்று பதில் கூறிய ராணியின் சொற்களில் உணர்ச்சி நிரம்பப் பிரவாகித்ததைக் கண்ட அடிகள் மீண்டும் கேட்டார், “எப்பொழுது?” என்று.

“பல நாட்களுக்கு முன்பு” என்றாள் ராணி மெல்ல.

“இங்கு அப்பொழுது யார் இருந்தது?”

“சோழர் படையின் உபதலைவர்.” இந்தப் பதிலைக் கேட்டதும் பிரமித்த அடிகள், “அப்படியா? இளஞ்செழியன் மாளிகையா இது? அப்படி யானால் இதை இப்பொழுது வைத்துக் கொண்டி ருப்பவர்கள் யார் தெரியுமா?” என்று வினவினார்.

ராணி பதில் சொல்லு முன்பாக, களுக்கென்று சிரிப்பு ஒன்று கேட்கவே சட்டென்று அந்த இடத்தை நோக்கித் திரும்பினார் அடிகள். சற்றுத் தூரத்தே மேல்தளத்துக்கு ஒடிய மாடிப் படிகளிலொன்றில் அடிகளையும் ராணியையும் சிறை யெடுத்த வீரர்களின் தலைவன் நின்று கொண்டிருந்தான். பெரும் தூண்களின் மண்டபத்தில் போர்த்தியிருந்த கம்பளத்தை நீக்கி அவன் சுயரூபத்தில் நின்றிருப்பதைப் பார்த்ததுமே தங்களைச் சிறையெடுத்தது யாரென்பதை உணர்ந்த அடிகள் எல்லையற்ற பிரமிப்பும் வியப்பும் அடைந்து, “நினைத்தேன், நினைத்தேன், அப்பொழுதே?” என்று அச்சரியத்தால் கூவியதன்றி, “சிங்கத்தின் கூண்டுக் குள்ளேயே புகுந்து விளையாடும் இவர் துணிவுதான் என்ன? ஏன் வந்தார் இவர் இங்கே? இவர் இங்கிருப்பது மட்டும் டைபீரியஸுக்குத் தெரிந்தால்... என்று யோசித்து அதன் விளைவை எண்ணவும் திராணியில்லாமல் பெரும் திகில் எட அகவய கொண்டாராதலால், அவர் உடல் ஒருமுறை லேசாக நடுங்கவும் செய்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
53. ராணியின் ரகசியம்

மண்ணிலிருந்து புதிதாகத் தோண்டியெடுக்கப்பட்ட மூலப் பொருளான இரும்புக் கனியைப் போல, பழுப்பும் கறுமையும் கலந்த நிறத்துடன் பல இரும்பு வளையங்களைப் போல் தலை முழுதும் அடர்த்தியாகச் சுருண்டு கிடந்த கேசங்களுடனும், முகத்தில் முறுவலுடனும், மாடிப் படியில் நின்று கொண்டிருந்த இரும்பிடர்த்தலையாரைக் கண்டதும், மிதமிஞ்சிய வியப்பினால் பிரமிப்பும் தட்டி சில வினாடிகள் சிலையென நின்றுவிட்ட சங்கமப் பொற்கொல்லரான சமண அடிகள் பேச்சை எப்படித் துவங்குவதெனத் தெரியாமல் தஇணறியதால், தமது விஷமக் கண்களை மட்டும் கரிகாற் பெருவளத்தான் மாமனின் கம்பீர விழிகளுடன் ஒரு கணம் உறவாடவிட்டார். தம்மைக் கண்டதும் அடிகளுக்கு ஏற்பட்ட வியப்பு, வியப்பின் விளைவாக ஏற்பட்ட பிரமை இவை யனைத்தையும் அடிகளின் முகத்திலிருந்தே புரிந்து கொண்டு விட்ட இரும்பிடர்த் தலையாரின் கம்பீர விழிகள் வினாடி நேரம் மட்டும் அடிகளின் கண்களுடன் இணைந்து விட்டு, பிறகு, அகன்று சற்றுத் தள்ளி நின்றிருந்த ராணியின் அழகு வதனத்தில் நிலைத்தன. அப்படித் தன் முகத்திலே பதித்த இரும்பிடர்த் தலையாரின் கண்களாலோ சித்தத்தின் எண்ணங்களையே ஊடுருவி அராய்ந்து விடுவதுபோல் அவர் கண்களில் துளிர்பட்ட பார்வையின் தீட்சண்யத்தினாலோ லவலேசமும் கலக்கமடையாத யவன ராணி, இரும்பிடர்த் தலையாருடைய கண்களை அதிகாரம் பலமாகச் சொட்டிய தன் கண்களைக் கொண்டு சந்திக்கவே அந்தப் பார்வைக்கு முன் நீண்ட நேரம் நிலைக்கத் திறனற்ற கரிகாலன் மாமனின் பெரு விழிகள் சற்று இடம் மாறி மீண்டும் அடிகளைக் கவனிக்கத் தொடங்கியதன்றி, அவர் உதடுகளும் மிகுந்த மரியாதையுடன் அழைப்புச் சொற்களை உதிர்த்தன. “இந்த ஏழையின் விடுதிக்குப் புகாரின் இணையற்ற பொற் கொல்லரும் யவன நாட்டு அரச மங்கையும் வர நேர்ந்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். சூழ்நிலை சரியில்லை தான். ஆனால் என்ன செய்வது? காலத்தை ஒட்டிச் சிறு மாறுதல்கள் இந்தப் பெரு மாளிகையில் ஏற்பட்டிருக்கின்றன” என்று கூறிவிட்டுத் தமது பார்வையை ஒருமுறை மாளிகைக் கூடத்தில் மண்டிக் கடந்த பொதி மூட்டைகள் மீது உலாவ விட்டார் இரும்பிடர்த்தலையார்.

இரும்பிடர்த்தலையாரின் அழைப்பு மொழிகள் அளித்த குறுகிய கால அளவுக்குள்ளாகப் பிரமிப்பை உதறி விட்டு, தமது சுய உணர்ச்சிகளை வரவழைத்துக் கொண்ட அடிகளும் மூட்டைகளை அப்பொழுதுதான் பார்ப்பவர் போல் பாசாங்கு செய்து, “ஏன், சூழ்நிலையில் தவறேது மில்லையே” என்று கூறி, சற்று விஷமமாகச் சிரிக்கவும் செய்தார்.

இருவரும் சந்தித்த சில நிமிஷங்களுக்குள்ளாகவே அடிகள் பிரமிப்பை உதறிக்கொண்டு சுயநிலை அடைந்து விஷமப் பேச்சில் இறங்குவதைக் கண்ட இரும்பிடர்த் தலையார், எந்த நிலையிலும் தம்மைச் சமாளித்துக் கொள்ளக் கூடிய பெரும் திறன் அடிகளுக்கிருந்ததைக் கவனித்து ஆச்சரியப்பட்டாரானாலும் அதை வெளிக்குக் காட்டாமலே, “சூழ்நிலையில் தவறேதுமில்லையா! ஒரு ராணியை வரவேற்கத் தகுந்த இடம் பொதி மூட்டைகள் மண்டிக் கிடக்கும் மாளிகைக் கூடமா?” என்று வினவினார், அடிகளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக. அடிகளின் கடை இதழ்கள் மடிந்ததால் பழைய புன்முறுவல் மீண்டும் அவர் உதடுகளில் தவழ்ந்தது. “ராணியை வரவேற்கத் தகுந்த இடமில்லாதிருக்கலாம். ஆனால், வர்த்தகர் இல்லங் களில் அந்தச் சூழ்நிலையைவிட வேறு எந்தச் சூழ்நிலையை எதிர்பார்க்க முடியும்?” என்று பணிவுடன் சொல்லுவது போல் விடையிறுத்தார் அடிகள்.

தாம் வணிகவேஷம் அணிந்ததுபற்றி அடிகள் தம்மை ஏளனம் செய்துகொண்டாரென்பதைப் புரிந்தகொண்டதால் முறுவல் கொண்ட இரும்பிடர்த்தலையாரும், “பூம்புகார் இருக்கும் நிலையில் வர்த்தகம் பலதரப்பட்டுக் கடக்கிறது. எந்த வர்த்தகத்தில் யார் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை” என்று கூறி, சமண அடிகள் பொற் கொல்லர் வேலைக்குத் திரும்பியிருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.

அடிகளும் இரும்பிடர்த்தலையாருக்குச் சிறிதும் சளைக்காமலே பதில் கூறத் தொடங்க, “உண்மை, உண்மை. தாங்கள் சொல்வது முக்காலும் உண்மை. யார் எந்த வர்த்தகம் செய்யலாம் என்ற நியதி புகாரில் இப்பொழுது இல்லைதான். அதுமட்டுமல்ல. வர்த்தகர் வர்த்தகந்தான் செய்கிறார்களா என்பது சந்தேகத்திலிருக்கிறது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு - சே! சே! பாம்பு என்று சோழ நாட்டின் பெருமகனாரைச் சொல்வது தவறு-எந்த மூட்டைக்கடியில் யாரிருப்பார்களோ என்பதும் புரியாத புதிராயிருக்கிறது. சிலர் எங்கிருக்கிறார்கள்? எப்படி. முளைக்கிறார்கள்? என்பதெல்லாமே விளங்காத விஷயமாயிருக்கிறது. இந்திர ஜாலத்தையும் கண்கட்டு வித்தையையுமே புகாரில் பார்க்கிறோம்” என்றார்.

அடிகள் பதிலில் அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றிய கேள்விகள் பல மலிந்து கிடந்ததைக் கண்ட இரும்பிடர்த் தலையார், அத்தனைக்கும் உடனே பதிலிறுப்பது நடவாத காரியமென்ற முடிவுக்கு வந்ததாலும் மாளிகைக் கூடத்தி லேயே ராணியை நிறுத்தி வைத்துப் பேசுவது சரியல்ல என்ற நோக்கத்தாலும், “எந்த இந்திர ஜாலத்தையும் உடைக்க மந்திரமுண்டு. எந்தச் சிக்கலையும் அவிழ்க்க மதி உண்டு. தவிர, தங்களுக்கு அதிகமாக விளக்கவேண்டிய விஷயங்களும் இல்லையென்பது எனக்குத் தெரியும் அடிகளே! வாருங்கள் மேலே போவோம்” என்று அடிகளிடம் கூறியதன்றி, “வாருங்கள் ராணி” என்று ராணியையும் அழைத்துத் தம்மைப் பின்தொடரும்படி சைகை செய்து மாடிப்படிகளில் ஏறிச் சென்றார். முதலில் இரும்பிடர்த்தலையாரும் அவருக்குப் பின்னால் அடிகளும் செல்ல, கடைசியாக மாடிப்படிகளில் ஏறிச் சென்ற ராணிக்கு அவள் கால் வைத்த ஒவ்வொரு படியும் பழங்கதைகளை இரைந்து சொல்லவே, அவள் உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் பெரும் அலைகளாக மாறி அவளுடைய இதயத்தை அப்படியும் இப்படியும் ஊசலாடச் செய்தன. புஷ்ப இதழ்களைவிட மென்மையான அவள் பாதங்கள் ஒவ்வொரு படியிலும் பதிந்தபோது புகார் மண்ணில் தான் புரண்ட முதல்நாள் இரவில் இளஞ்செழியன் வாளை உருவிக்கொண்டு மேல்படியில் நின்ற காட்சி அவள் கண் முன்னே எழுந்தது. “படைத்தலைவரின் நீண்ட வாள் எத்தனை வேகமாக யவன வீரர்கள் மீது பாய்ந்தது! இந்தப் படி.யில்தான் ஒரு வீரன் வாள் பாய்ந்து மாண்டு விழுந்தான். ஆம், ஆம். அடுத்த வீரன் உருண்டது இந்த இரண்டு மூன்று படிகளில்தான். மின்னலைவிட வேகமாகச் சுழன்று, படைத்தலைவர் நினைத்த இடங்களிலெல்லாம் பாய்ந்த அவருடைய வாளினால் காயப்பட்டுப் புரண்ட இரு வீரர்கள் அதோ அந்தப் படியில்தான் ஒருவர் மேலொருவராகக் கிடந்தார்கள். கத்தியை உருவிப் பிடித்துக்கொண்ட சில நிமிஷங்களுக்குள்ளாக யவனர்களின் ரத்தம் எத்தனை பெருக்கெடுத்து இந்தப் படிகளை நனைத்தது... அப்பப்பா, நீண்ட அவர் கரங்களுக்குத்தான் எத்தனை வலிமை!” என்று படிக்குப்படி பழைய கதைகளை நினைவுபடுத்திக் கொண்டும், அக் கதைகளைத் தானே அமோதித்த வண்ணமும் கனவுலகி லேயே மனம் சஞ்சரிக்கக் கால்கள் மட்டும் படிகளைக் கடந்து அவள் பூவுடலைச் சுமந்து மேலே சென்றன. மாடியின் மேல் அறையை அடைந்துங்கூட ராணி கனவுலகத்தைவிட்டு வெளி உலகத்துக்கு வராமலே அங்கிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்தாள். முதல் நாளன்று அவள் கிடந்த அதே மஞ்சம்... அந்த மஞ்சத்தின் இரு புறங்களிலும் நின்றிருந்தவர்களும் சோழர் படை உபதலைவனைப் போலவும் அவனுடைய யவன வீரன் ஹிப்பலாஸைப் போலவுமே இருந்ததைக் கண்ட ராணி பழைய நினைவுகளால் பெருமூச்செறிந்தாள். நனைந்த ஆடை யுடன் மஞ்சத்தில் கடந்த தன்னை எத்தனை நேரம் இளஞ்செழியன் அறையின் வெளிச்சத்தில் பார்த்திருப்பான் என்பதை நினைத்துப் பார்த்த அவள் அழகிய முகம் வெட்கத்தால் குங்குமச் சிவப்பாக சிவக்கத் தொடங்கியது. ஒரே இரவில் சில நாழிகைகளில் அந்த அறையில் நிகழ்ந்து விட்ட சின்னஞ்சிறு சம்பவங்கள்கூட அவளுக்குத் தெள்ளெனத் தெரிந்தன. கோட்டைத் தலைவன் கண்களில் மண்ணைத் குவ, படைத்தலைவன் தன்னை இரும்புக் கவசத்தில் அடைத்தபோது, தான் அரை மயக்கத்திலிருந் தாலும், அவன் தன்னைத் தழுவித் தூக்கியதையும் அப்பொழுது இருந்த அவசர நிலையில் அவன் வலிய கரங்கள் தன்னை எங்கு தொடுகிறோம் என்பதைச் சற்றும் நினைக் காமலே தொட்டுத் தூக்கியதையும் நினைத்து அவள் பரவசப் பட்டாள். அந்த இரவின் சம்பவங்களை நினைக்க நினைக்க அவள் உடலெங்கும் இன்ப அலைகள் பாய்ந்து அவளுக்குச் சொல்லவொண்ணா வேதனையையும் விளைவித்தன. அதே இடத்தில், “சீக்கிரம் இவள்மீது போர்வையைக் கொண்டுவந்து போர்த்திவிடு’ என்று படைத்தலைவன் கூச்சலிட்டதும்கூட, மயக்கத்திலிருந்த நிலையில் ஏதோ தூரத்திலிருந்து யாரோ பேசுவதுபோல் ராணிக்குக் கேட்டிருந்ததால் அதையும் எண்ணிப் பார்த்த அவள் “அவ்வளவுக்குக்கூடத் தாங்க முடியாதவரா படைத்தலைவர்!’ என்று சிந்தித்ததால் ஒரு வெட்கப் புன்முறுவலையும் உதட்டிலே ஒட்டினாள்.

அறைக்குள் இரும்பிடர்த்தலையாருடன் நுழைந்த அடிகளின் எண்ணங்கள் நேர்மாறான திசைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. ராணியின் நினைவுகள் கடந்த காலத்தில் சுற்றினவென்றால் அடிகளின் சிந்தனைகள் நிகழ்காலத்தில் வளைய வந்தன. அன்றைய நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு அடிகள் அந்த அறையில் நுழைந்ததுமே விளக்கம் கண்டார். இளஞ்செழியன் அதியிலிருந்த அந்த மாடியறை மட்டும் வாணிப அறையாக மாற்றப்படாததால் முதல் நாளன்று அவன் அறையை விட்டுப்போன கவசங்களும், போர்க்கலங்களும் அறைமுழுதும் காட்சியளித்ததையும், அந்தப் போர்க்கலங்களுக்கிடையே அறையின் ஒரு மூலையிலிருந்த மஞ்சத்தில் கரிகாலன் சற்று சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்ததையும் கண்ட அடிகள், கரிகாலன் தம்மைச் சுங்கச் சாவடிக்கருகிலுள்ள தூண்களின் மறைவுக்குச் செல்லப் பணித்ததன் காரணத்தைப் புரிந்து கொண்டார். ஆனால், ‘நான் பரதவர் குடிசைக்கு வரப் போவதும் யவனர்கள் சூழப்பட இருந்ததும் மன்னவனுக்கு எப்படித் தெரிந்தது? இரும்பிடர்த்தலையார் நூறு வீரர்களுடன் பொதிமூட்டை களுக்கிடையில் எதற்காகப் பதுங்கியிருந்தார்? யாரை எதிர்பார்த்துப் பதுங்கியிருந்தார்?’ என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் நேர்முகமாகவே கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்து ராணியின்மீது கண்களைத் திருப்பினார்.

யாரையும் மயக்கும் கடலின் நீலத்தைவிட அழகான யவன ராணியின் நீலமணி விழிகள் அப்பொழுதும் மயக்க முற்றவைபோல் காணப்பட்டன. முழுதும் நன்றாகத் துடைக்கப்படாததால் அந்தச் சமயத்திலும் அவள் வதனம் கைகால்கள், கழுத்துப் பிரதேசம் இவற்றில் பரவிக் கிடந்த செம்பருத்திச் சாறுகூட அந்த அறையின் வெளிச்சத்தில் அவள் மேனிக்கு ஒரு தகதகப்பைக் கொடுத்தது. துடைக்கப் பட்ட இடங்களில் அல்லி மலரின் இதழ்களைப் போல் வெளுத்துக் கடந்த அவள் வழவழத்த தேகம், செம்பருத்திச் சாறுபட்ட இடங்களில் சற்றே பழுப்பு நிறம் பெற்றிருந்ததால் செண்பகமும் அல்லி இதழ்களும் சேர்ந்த புஷ்பக் கலவை போல் காட்சியளித்த ராணியின் அழகு எல்லை கடந்து இருந்தது. நினைவு கனவுலகத்தை வட்டமிட்டதால் சற்றே சாய்ந்த தலையிலிருந்து அவிழ்ந்து தொங்கிய அவளுடைய பொன்னிற மயிர்கள் அவள் அல்லி வதனத்தையும் சூழ்ந்திருந்ததால், அவள் அழகிய முகம் தங்க இழைகளால் சுருட்டப்பட்ட பெரும் வைரக் கல்லைப் போல ஒளிவிட்டது. பரதவர் உடையிலும் அவள் தெய்வக்களை பெற்று ராணி போலவே திகழ்ந்ததை அறை மூலையிலிருந்து கண்ட கரிகாலன்கூடச் சற்று உறுதி குலையத்தான் செய்தான். அப்படி உறுதி குலைந்ததால் எதற்கும் உலனமடையாத அவன் கண்களும் சற்று சலனப்பட்டதையும், அடாத அவன் கரங்களும் ஆடி யதையும் கண்ட இரும்பிடர்த்தலையார் கடிய பார்வையொன்றை அவன்மீது வீசினார். அது மட்டுமல்ல. “புவியாள வேண்டியவனின் புலன்கள் கட்டுக்கு அடங்க வேண்டும் கரிகாலா! எதற்கும் அசையாத இதயமுள்ளவன் தான் யாருக்கும் அசையாத பேரரசை நிறுவமுடியும். நிலை யற்ற மதியுள்ளவன் நிறுவும் பேரரசுகூட நிலையாமலே போய் விடுவதற்கு மனித சரித்திரத்தில் சான்றுகள் எண்ணற்றுக் கிடக்கின்றன” என்று சற்றுக் கோபத்துடனும் மற்றும் இருவர் இருக்கிறார்களே என்பதைப் பற்றி லட்சியம் செய்யாமலும் பேசினார் இரும்பிடர்த்தலையார்.

மன்னர்மீதே கடும் சொற்களைத் தொடுக்கும் இரும்பிடர்த்தலையாரின் தைரியத்தைக் கண்டு வியந்த அடிகள், “இயற்கையென்பது ஒன்று உண்டு என்பது இரும்பிடர்த்தலையார் அறியாததல்ல” என்று கரிகாலனைச் சிறிது தாங்கியும் பேசினார்.

இதைக் கேட்ட இரும்பிடர்த்தலையார் தன் கோப விழிகளை அடிகள் மீது திருப்பி, “இயற்கையின் வழியில் ஒடுவது விவேகிக்கு அழகல்ல என்பதைத் துறவறம் பூண்ட தாங்களாவது அறிந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்று கூறியதன்றி, “தவம் என்பது என்ன என்பது அடிகளுக்குத் தெரியுமோ?” என்று வினவவும் செய்தார்.

“இத்தனை விளக்கம் சொல்லும் தாங்களே அதற்கும் விளக்கம் தரலாம்” என்றார் அடிகளார்.

“ஒரு லட்சியத்தை மனத்தில் கொண்டு உறுதியுடன் அதில் சிந்தையை நிலைக்கவிடுவது தவம்.”

“ஆம்...

அதற்கு...”

“இயற்கையின் சக்திகளையும் மீறவேண்டியது அவசியம். தவசி காற்றையும் கனலையும் கடுமையையும் லட்சியம் செய்வதில்லை. புலன்கள் இஷ்டப்பட்ட வழிகளில் ஓடவும் இடம் கொடுப்பதில்லை. லட்சியத்தை எய்து வதிலேயே திடத்துடன் நிற்கிறான்.”

“இப்பொழுது அப்படித் தவம் செய்ய அவசியமிருக் கிறதா?”

“இருக்கிறது அடிகளே...

இருக்கிறது.

அதிகாலத் துறவிகள் எதற்குத் தவம் செய்தார்கள் தெரியுமா?”

“மோட்சம் என்று ஒன்று இருப்பதாகவும் அதை அடைவதற்காகவும் தவம் செய்ததாகக் கேள்வி” என்று கூறிய சமண அடிகள், சனாதன மதத்தின் மோட்சம் முதலியவற்றில் தமக்கு நம்பிக்கை யில்லாததையும் சூசகமாக எடுத்துக் காட்டினார்.

இரும்பிடர்த்தலையாருக்கு அப்பொழுது மதவித்தி யாசங்களைப் பற்றி எவ்விதக் கவலையுமில்லாததால் சொன்னார். “மோட்சத்துக்குத் தவம் செய்தவர்கள் உண்டு. உலக க்ஷேமத்துக்கு தவம் செய்தவர்களும் உண்டு” என்று.

“இப்பொழுது உலக க்ஷமத்துக்குத் தவம் செய்யப் பணிக்கிறீர்களா?” என்று அடிகள் கேட்டார்.

“அவ்வளவு பேராசை எனக்கில்லை அடிகளே! இப்பொழுது நான் விரும்புவதெல்லாம் சோழநாட்டின் க்ஷேமம் மட்டுந்தான். சோழநாட்டு மக்கள் பெருமையுடன் நல்வாழ்வு வாழத்தான் தவம் செய்யவேண்டும். அதாவது, உறுதியுடன் மனத்தை அந்த லட்சியத்தில் நிறுத்தவேண்டும். ஏன், நமது புலன்கள் அனைத்துமே சோழநாட்டு மக்களின் நலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அந்த நோக்கத்தை விட்டு இம்மியும் நகரக்கூடாது. இந்த உறுதியை, தவத்தைக் கலைக்கப் பிசாசுகள் பல புறப்பட்டி ருக்கின்றன” என்று கூறிய இரும்பிடர்த்தலையார், சற்று அப்பாலிருந்த மாடி வெளித் தாழ்வாரத்தை நோக்கிச் சென்று திரும்பி வந்து மேலும் ஏதோ கனவில் பேசுவதுபோல் பேசினார். “தவத்தைக் கெடுப்பது மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, பொறாமை, அகங்காரம் முதலியன. இவையனைத்தும் நமது லட்சியத் துக்கும் குறுக்காக நிற்கின்றன. தற்சமயம் சோழ நாட்டு வளப்பத்தைக் கண்டு எழுந்துள்ள பாண்டிய, சேரமன்னர்கள் பொறாமை, இந்த நாட்டில் தனி அரசை நிறுவிவிடலாம் என்ற யவனர்கள் அகங்காரம், இருங்கோவேளைப் போன்ற சோழர்குல தாயாதிகளின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அகிய இவையனைத்தும் நாட்டு நலனை முன்னிட்டுப் பணியாற்றுபவர்களுக்குப் பெரிய யமன்களாக வாய்த்திருக்கின்றன. இத்தனை சக்திகளை எதிர்த்துச் சோழர் அரியணையில் உட்கார விரும்புபவன் உறுதியடையவனா யிருக்க வேண்டும் அடிகளே. ஆயுள் முழுதும் அறநெறி வழுவாமல் அரசாண்டு, மனையாளைத் தவிர வேறு பெண்களைக் கண்ணாலும் பாராத இளஞ்சேட்சென்னியின் வேகமான ரதங்களைப் பாண்டி௰, சேரப் படைகள் வெற்றி கொள்ள முடியவில்லை. அரசாட்சியை அற ஆட்சியாகக் கொண்ட அந்தத் தமிழ்ப் பெருமகனை வஞ்சகர் இட்ட தியைத் தவிர வேறெதுவும் அழிக்க முடியவில்லை. அவன் அழிந்தும் அவன் மகன் அழியாமல் தீயிலிருந்து தப்பியதும் நம் திறத்தாலல்ல,. என் தங்கை மணவாளன் செய்த அறத்தால்தான். வீரமும் அறமும் உறவாடும் நிலையும் ஒரு தவந்தான் அடிகளே! இந்த நாடு மீண்டும் செழிக்க, மக்கள் மீண்டும் பிழைக்க வீரர்களின் தன்னலமற்ற தியாகம் தேவை. அந்தப் பாதையைப் புறக்கணிப்பவன் என் மருமகனாயிருந் தாலும் நான் மன்னிக்கமாட்டேன். நாடு செழிக்க அதன் மன்னன் வளர வேண்டும். வளர்ச்சி என்பது வயதின் வளர்ச்சியல்ல, சதையின் வளர்ச்சியல்ல. உறுதியின் வளர்ச்சி. மனத்திடத்தின் வளர்ச்சி...” என்று ஏதேதோ பேசிக்கொண்டு போன இரும்பிடர்த் தலையாருக்கு எந்தப் பதிலும் சொல்லாமலே உட்கார்ந்திருந்த கரிகாலனையும் ராணியையும் மாறி மாறிப் பார்த்த அடிகள், “எனக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது” என்று இரும்பிடர்த் தலையாரின் கனவுப் பிரசங்கத்துக்குக் குறுக்கே பாய்ந்தார். அப்படிப் பாய்ந்தபோது கோபம் சிறிதும் அடங்காமலே கேட்டார் பிடர்த்தலையார், “என்ன சந்தேகம்?” என்று.

“தவத்தைப்பற்றிக் குறிப்பிட்டீர்களே...’” என்று இழுத்தார் அடிகள்.

“அம். குறிப்பிட்டேன், அதற்கென்ன?” பிடர்த்தலை யாரின் பதில் உஷ்ணமாகவே வந்தது.

“கோபம் தவத்திற்கு அவசியமோ?” என்று மெள்ளக் கேட்டார் அடிகள்.

“அவசியம் என்று யார் சொன்னது?” இதைச் சொன்ன போதும் பிடர்த்தலையாரின் குரலில் குரோதம் மண்டிக் கிடந்ததைக் கண்ட அடிகள் நகைத்தார்.

“எதற்கு நகைக்கிறீர்கள்? ’” என்று இரும்பிடர்த் தலையார் சீறினார்.

“தங்கள் தவ உள்ளத்தின் சாந்தம் குரலில் தெரிய வில்லையே! ’”‘ என்று பணிவுடன் தெரிவித்த அடிகள் அத்துடன் நிற்காமல், “பிடர்த்தலையாரே... மருமகனைக் கடிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு. இருப்பினும் மன்னரொன்றும் அத்தகைய பிரமாத குற்றத்தைச் செய்துவிட வில்லை. ராணியின் இணையற்ற எழிலில் பூவழகியைத் தவிர வேறு யாரையும் கனவில்கூட நினைக்காத இளஞ்செழியனே மயங்கினார். தங்கள் புராணங்களில் காணப்படும் தவசிகளும் அதற்குப் புறம்பாயிருந்ததாகத் தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

இரும்பிடர்த்தலையாரின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. “துறவறம் பூண்ட நீர் இப்படிப் பேசுவது தகாது” என்ற அவர் பதிலில் இகழ்ச்சியும் கலந்து நின்றது.

துறவறம், தவம் இவற்றைப் பற்றிய தர்க்கம் நம்மைப் பேராபத்தில் கொண்டுவிடும்” என்றார் அடிகள்.

“ஏன்?” என்று வினவினார் பிடர்த்தலையார்.

“ராணி இந்திரவிழா விடுதியிலிருந்து வெளிவந்திருக் கிறார்கள். அவர்கள் அங்கில்லையென்பது தெரிந்தால் டைபீரியஸ் இந்தப் புகாரை சல்லடை போட்டுச் சலிப்பான் ” என்று அடிகள் சுட்டிக் காட்டினார்.

இதைக் கேட்டதால் இரும்பிடர்த்தலையார் மிரண்டு விடுவாரென்றோ கவலை கெொள்வாரென்றோ அடிகள் நினைத்திருந்தால் ஏமாந்தே போனார். பதிலுக்கு இரும்பிடர்த் தலையார் பலமாக நகைத்தார். “அடிகளே! புகாரை என்ன, சோழ நாட்டையே சல்லடை போட்டுச் சலித்தாலும் டைபீரியஸ் ராணியை அல்ல, இங்குள்ள யாரையும் கண்டு பிடிக்க முடியாது. புகார் கைவசப்பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பதும் பகற்கனவு. இன்னும் நான்கு நாட்களில் நிலைமை தலை$ழாக மாறப் போகிறது!” என்றும் கூறினார். அதற்கான காரணங்களையும் பூம்புகார் நகரத்தின் உண்மை நிலையையும் அவர் விவரிக்க விவரிக்க அடிகள் அச்சரியத்தில் மூழ்கினார். பிடர்த்தலையாரின் விவரணத்தை ராணியும் கேட்டாள். கேட்ட அவள் ஆச்சரியப்படவில்லை. இகழ்ச்சி நகை புரிந்தாள். அந்த இகழ்ச்சி நகைக்குக் காரணத்தை அறிய விரும்பிய பிடர்த்தலையாரை நோக்கி ராணி ஒரு ரகசியத்தைக் கூறினாள். அதுவரை, பெரும் மனக்கோட்டை களைக் கட்டிக் கொண்டிருந்தவரும், எதற்கும் அஞ்சாத துடமனம் படைத்தவருமான இரும்பிடர்த்தலையாரே ராணி சொன்ன ரகசியத்தைக் கேட்டதும் பெரும் திகில் கொண்டார். “இது உண்மைதானா ராணி!” என்ற அவர் கேள்வியில் மிதமிஞ்சிய கவலையும் கரைபுரண்டு ஒடியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
54. அபாய மேகங்கள்!

இரும்புச் சுருள்களைப்போல் வளைந்து கிடந்த கேசங்கள் கொண்ட தலையுடனும் இரும்பைவிடத் திட முள்ள நெஞ்சுடனும் வளர்ந்த இரும்பிடர்த்தலையாரே யவன ராணியின் இகழ்ச்சி நகைப்பினாலும் அதையடுத்து அவள் சொல்லிய விவரங்களாலும் உறுதி தளர்ந்து குழம்பி விட்டாரென்றால் இரும்பிடர்த்தலையார் அளவுக்குத் துணிவு பெறாத அடிகளின் நிலையைப்பற்றிக் கேட்கவா வேண்டும்? மெள்ள மெள்ளச் சிரித்த வண்ணம் ராணி அவிழ்த்து உதறிய ராஜ ரகசியச் சிக்கல்களைக் கேட்கக் கேட்கப் பெரும் வியப்பும் திகிலும் அடைந்த அடிகள், டைபீரியஸ் உண்மையில் யவனர்கள் நினைப்பதுபோல் தேவதூதனாகத்தானிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அடிகள் முகத்தில் தட்டிய பிரமை, திகில் இவை இரண்டையும் தன் நீலமணிக் கண்களின் ஓரத்தாலேயே கவனித்துப் புன்முறுவல் கொண்ட ராணி, “திகிலுக்கு இடமிருக்கிறது அடிகளே. ஆகவே எச்சரிக்கைக்கும் இடமிருக்கிறது” என்று கூறிவிட்டு இரும்பிடர்த்தலையாரை நோக்கி, “இரும்பிடர்த்தலையாரே! டைபீரியஸை சாமான்ய மாக நினைக்க வேண்டாம். அவனுக்கிருப்பது இரண்டு கண்களல்ல. ஆயிரம் கண்கள். இந்தப் புகாரின் பிராந்தியத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும் அவன் கண்களிலிருந்து தப்ப முடியாது. நீங்களும் மன்னவரும் உங்களைச் சேர்ந்திருப்ப தாக நீர் கூறும் ஐந்நூறு வீரர்களும் வர்த்தகர் வேடத்தில் மறைந்து புகாரில் உறைவதும் புகாரின் உயிர் நிலைகளில் உங்கள் வீரர்கள் உலாவுவதும் டைபீரியஸாுக்குத் தெரிய வில்லையென்று நிச்சயமாகக் கூறமுடியாது. ஆனால் ஒன்று நிச்சயமாகக் கூறமுடியும். புகாரின் உயிர் நிலைகளில் உங்கள் வீரர்கள் இருப்பதால் புகாரை உங்கள் கைவசமாக்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களே அது மட்டும் நடவாது” என்றாள்.

“ஏன் நடவாது?’’ என்று சற்றுத் துடிப்புடனேயே ராணியை வினவிய இரும்பிடர்த்தலையார் மேலும் விவரிக்கத் தொடங்கி, “ராணி, யவனநாட்டுக் கடற்படைத் தலைவனின் புத்தி கூீர்மையையோ வீரத்தையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. எதிரியின் திறமையையும் பலாபலத்தையும் குறைத்து மதுப்பிடுபவன் சரியான ராஜ தந்திரியாகவும் இருக்க முடியாது. ஆனால், டைபீரியஸூம் மனிதன். சகலத்தையும் அவன் அலசிவிட முடியுமென்று எண்ணுவது, அவன் பலத்தை என்ன, எந்தத் தனி மனிதனின் பலத்தையும் அளவுக்கு மீறி மதிப்பிடுவதாகும். போர்களிலும் ராஜதந்திரப் போட்டியிலும் எதிரியின் பலாபலத்தைக் குறைத்து மதிப்பீடு செய்வது எத்தனை அபாயமோ அத்தனை அபாயம் அதிகப்படியாக மதிப்பீடு செய்வதும். அளவுக்கு மீறிய எச்சரிக்கையும் எதிரியின் பலாபலத்தைப் பற்றிய அதிக மதிப்பீடும் செயலைத் தடை செய்யும். செயல் தடைப் பட்டால் வெற்றி காண்பதும் கஷ்டம். எதிரி அசந்திருக்கும் போது தாக்குவது விவேகம், சிந்தித்துப் பார் ராணி. நாங்கள் இப்படி மறைந்துறைவது டைபீரியஸுக்குத் தெரிந்தால் எங்களை உயிருடன் விட்டு வைப்பானா? பொதி மூட்டைப் படகுகள் சாதாரணமாகச் சுங்கச் சாவடியைத் தாண்டிச் செல்வதைத்தான் அனுமதிப்பானா? இந்த ஐந்நூறு வீரர்கள் இங்கு வந்து எத்தனை நாளாகின்றன தெரியுமா?” என்றும் கேட்டார்.

“எத்தனை நாளாகின்றன?” என்று விசாரித்தாள் ராணி, இரும்பிடர்த்தலையார் விளக்கிய விஷயங்களால் எந்தவித வியப்பையோ அதிர்ச்சியையோ முகத்தில் காட்டாமலே.

“சுமார் பத்து நாட்களாகின்றன. இந்தப் பத்து நாட் களில் புகாரின் வீரர்கள் பலர் இந்தப் படையில் சேர்ந்திருக் கிறார்கள். இந்த ஐந்நூறு பேர் கொண்ட படை மட்டும் தான் இருக்கிறதென்று நினைக்காதே ராணி. சுமார் அறுபது எழுபது நாழிகைக்குள்ளாக இந்தப் புகாரைச் சூழ்ந்து கொள்ளப் பெரும் படையும் உருவாகி வருகிறது. படை நடப்பின் மர்மங்களை விளக்குவது படைத் தலைவன் விவேகத்துக்கு அறிகுறியில்லைதான். இருப்பினும் துணிவுடனேயே உன்னிடம் சொல்கிறேன். இந்தப் புகாரை மூன்று புறங்களில் சூழ்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் யவனர் படைகளை நசுக்கிவிடச் சகல ஏற்பாடுகளும் சித்தமாயிருக்கின்றன” என்ற இரும்பிடர்த்தலையார் ராணியின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

அவர் சொல்வதையெல்லாம் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த ராணி இரும்பிடர்த்தலையாரின் படை திரட்டும் முறையையும் போர் ஏற்பாட்டையும் எண்ணிப் பெபரிதும் அவரிடம் மதுப்புக் கொண்டாளானாலும், அத்தனை ஏற்பாடுகளையும் விநாடி நேரத்தில் குலைத்துவிட டைபீரியஸால் முடியுமே’ என்ற நினைப்பால் பெருமூச் செறிந்தாள். பிறகு சற்றுத் தூரத்தேயிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்து இரும்பிடர்த்தலையாருக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள சம்பாஷணையை மெளனமாகவே கேட்டுக் கொண்டிருந்த கரிகாலனை ஏறெடுத்துப் பார்த்து, ஓரளவு கவலையும் கொண்டாள். இந்த இளைஞனை அரியணையில் அமர்த்துவதையே லட்சியமாகக் கொண்ட இளஞ்செழியன் மட்டும் இங்கிருந்தால் நிலைமை எத்தனை தூரம் மாறி யிருக்கும் என்று தானே கேட்டுக்கொண்ட அவள், ‘இரும்பிடர்த்தலையாருக்குப் பலமிருக்கிறது. திடசித்தமிருக் கிறது. இருப்பினும் அவர் கவியென்று சொல்கிறார்களே. ஆகவே, கவிகளுக்குள்ள பெரும் தோரணையும் புத்தியில் கலந்துதானே இருக்கும். அத்தகைய சிந்தனையில் அரசியல் விஷமங்கள் இடம் பெற நியாயமில்லையே’ என்ற முடிவுக்கும் வந்தாளாதலால் டைபீரியஸின் சக்தியைப் பற்றி அவருக்கு நோர்முகமாக உணர்த்தாமல் மறைமுகமாக உணர்த்த முற்பட்டு, சமண அடிகளை நோக்கி, “அடிகளே, நீர் எனக்கு மகுடம் செய்ய அளவெடுக்க வந்தபோது என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“நான் அளவெடுப்பதைப் பக்கத்து அறையிலிருந்து இரண்டு கண்கள் கவனிப்பதாகக் கூறினீர்கள். பிறகு என் அளவு சரியில்லையென்று கூவினீர்கள். நீங்களே அள வெடுப்பதாகக் கூறி நறுக்கு ஓலையில் என்னைக் கடற்கரைக் குடிசையில் சந்திக்கும்படி. செய்தியும் எழுதிக் கொடுத்தீர்கள் ” என்றார் அடிகள், அவள் எதற்கு அந்தப் பழைய விவரங் களைக் கேட்கிறாள் என்பதை அறியாமலே.

“எந்தக் குடிசையில் சந்திக்கச் சொன்னேன்?” என்று மீண்டும் மீண்டும் வினவினாள் ராணி.

“எந்தக் குடிசையிலிருந்து பந்தம் இருமுறை ஆடியதோ அந்தக் குடி சையில்.”

“பந்தம் இருமுறை ஆடியதா?”

“இல்லை.”

“ஏன் இல்லை?”

“அந்தக் குடிசையில் இருந்த மன்னவர் பந்தத்தை வேறு விதமாக அசைத்தார்.”

“காரணம் தெரியுமா”

காரணம் தெரியாமல் விழித்த அடிகளை நோக்கி இரும்பிடர்த்தலையார் சொன்னார். “காரணம் நான் சொல்கிறேன் அடிகளே. அந்த ஒரு குடிசை மட்டும் பல நாட்களாகக் குடியிருப்பு இன்றிக் கிடக்கிறது. அந்தக் குடிசையிலிருந்து பந்த ஒளியின் ஜாடை காட்டினால் என் வீரர்களை ஏற்றிச் செல்லும் படகுகள் வரும். அந்தப் படகுகளில் ஏறிச் செல்லவேண்டியவர்களும் புகாரில் யவனர் நடவடிக்கைகளை அவ்வப்பொழுது வேவு பார்க்க வேண்டியவர்களுமான என் வீரர்கள் மாறு உடைகளில் செல்வார்கள். இப்படிப் பலமுறை சுங்கச்சாவடி மூலம் போய் வந்து பழகிவிட்டால் சுங்கச் சாவடிக் காவலரோ மற்ற எதிரி வீரர்களே சந்தேகம் கொள்ளமாட்டார்கள். அப்படிச் சந்தேகத்தைத் துடைக்க இந்தப் படை நடமாட்டத்தை நடத்தத் தீர்மானித்தேன். படைகள் மறைந்திருக்கக் குடிசைக்குப் பின்னால் சற்றுத் தூரத்திலிருந்த பொதி யெடுக்கும் பெரும் தூண்களும் வசதியாயிருந்தன” என்றார்.

இதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட அடிகள், “ஓகோ! நீங்கள் இருப்பது தெரிந்துதான் ராணியையும் என்னையும் துரண்களின் மறைவுக்குச் செல்ல மன்னர் உத்தரவிட்டாரா?” என்று வினவினார்.

“அம் அடிகளே! என்று ஒப்புக்கொண்ட இரும்பிடர்த்தலையார் மேலும் சொன்னார். “அதனால்தான் பந்தத்தின் ஒளி ராணி கூறியதுபோல் இருமுறை அசையாமல், மன்னன் சிறையிருந்த கருவூர் நதிக்கரை மாளிகையில் சுழன்று அசைந்ததுபோல் அசைந்தது. எந்த ஒளிச் சுழலையும் அசைவையும் கொண்டு மன்னனைச் சிறை மீட்க முயன் றேனோ, அதே அடையாளங்களைக் கொண்டே புகாரையும் யவனர் சிறையிலிருந்து மீட்க முற்பட்டேன்.

" இரும்பிடர்த்தலையாரின் ஏற்பாடுகளைக் கேட்ட அடிகள் உண்மையில் அவர் திறமையை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாரானாலும், ராணி மட்டும் அதைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமலே கேட்டாள். “இரும்பிடர்த்தலையாரே! அந்தக் குடிசை வெறும் குடிசையாக இருப்பதை எத்தனை நாட்களாகக் கவனித்தீர்கள்?” என்று.

“பத்து நாட்களாக” என்றார் இரும்பிடர்த்தலையார்.

“அந்தக் குழசையை யார் அமைத்தது தெரியுமா?” என்று ராணி இன்னும் ஒரு கேள்வியை வீசினாள்.

“தெரியாது.”

“டைபீரியஸ் நிர்மாணித்தான் அந்தக் குடிசையை. அதுவும் என் உத்தரவுக்கிணங்கி நிர்மாணித்தான். இராக் காலங்களில் கடலில் நீராட. விரும்பினால் என் ஆடைகளை மாற்றிக்கொள்ள மறைவிடம் வேண்டுமென்று கூறியதால் நிர்மாணித்தான். நான் நீராடவும் பல சமயங்களில் அந்தக் குடிசையை உபயோகித்தேன். டைபீரியஸின் சந்தேகக் கண்களிலிருந்து விடுபடவே நீராடினேன். அந்தக் குடிசையில் தங்கினேன். எப்படி எப்படியோ நடித்தேன், இரும்பிடர்த் தலையாரே. அவன் சந்தேகம் சற்றுக் குறைந்தது என்று எண்ணிய சமயத்தில் இந்த அடிகளும் என் தலையை அளவெடுக்க இந்திர விழா விடுதிக்கு வந்தார். அவர் என் தலையை அளவெடுக்கும் முன்பாகவே நான் அவர் யாரென்பதை அளந்துவிட்டேன். யாரையும் நம்பாத டைபீரியஸ் பொற்கொல்லரையும் கவனிக்கத் தவற மாட்டான் என்பது எனக்குத் தெரிந்ததால் என் பக்கத்து அறைமீதும் ஒரு கண் வைத்தேன். அறையை மறைத்த திரைக்குப் பின்னால் டைபீரியஸின் இரு கால்களும் தெரிந்தன. அதனால்தான் அடிகளின் அளவு சரியில்லை யென்று குறை கூறினேன், கூவினேன், நடித்தேன். அந்த அறைக்குள் சரேலென நுழையவும் செய்தேன். நான் அங்கு செல்வதற்குள் டைபீரியஸ் அங்கிருந்து போய் ஏதோ தற்செயலாக வருவது போல் மீண்டும் பழைய அறைக்கு வந்து எங்களைச் சந்தித்தான்” என்று ராணி அந்த இரவின் ஆரம்ப நிகழ்ச்சிகளை விளக்க விளக்க வியப்பெய்திய அடிகள், “அப்படியானால் நான் யாரென்பது டைபீரியஸுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

ராணி தன் மஞ்சத்தைவிட்டு எழுந்திருந்து இரும்பிடர்த் தலையாரையும் கரிகாலனையும் உற்று நோக்கினாள். பிறகு அடிகளின்மீது கண்களை நாட்டிக் கூறினாள். “தெரியுமோ தெரியாதோ சொல்ல முடியாது அடிகளே. ஆனால் சீக்கிரம் டைபீரியஸ் தெரிந்துகொள்வான். இன்று எத்தனையோ சாமர்த்தியமாக இந்திர விழா விடுதியிலிருந்து தப்ப முயன்றேன். எனக்குப் பணிவிடை புரியும் பரதவப் பெண்ணிடம் செம்பருத்திச் சாறு கொண்டுவரச் சொல்லி மாறுவேடம் புனைந்து, அவள் கொண்டுவந்த உணவுத் தட்டை நான் சுமந்து காவலர் கண்களில் மண்ணைத் தூவி வெளியே வந்தேன். ஆனால், வெளியேயிருந்த அறையில் தட்டை வைத்துவிட்டு விடுதியிலிருந்து நழுவி மரங்களின் நிழல்களில் நான் நகர்ந்தபோது டைபீரியஸ் என் அசைவைக் கவனித்தான். நான் மரக்கூட்டத்தில் மறைந்தேன். ஆனால் ஒரு காலெடுத்து வைக்குமுன்பாகவே அவன் வீசிய கத்தி என் முதுகில் பாய்ந்தது. அப்படியும் நிற்காமல் மரங்களின் நிழல்களில் பதுங்கிக் கடற்கரை வாயிலைத் தாண்டினேன். யவனவீரர்கள் தொடர்ந்தார்கள். மணலில் ஓடினேன். களியாட்டம் அடிக்கொண்டிருந்த பரதவர் கூட்டத்தில் புகுந்து மறைந்தேன். பின்பு நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே.”

ராணியின் துணிகரச் செயலைக் கேட்ட அடிகளும் கரிகாலனும், ஏன், இரும்பிடர்த்தலையாரும்கூட எல்லையற்ற பிரமிப்பில் அழ்ந்தனர். ராணியின் நீலமணிக் கண்கள் அவர்கள் பிரமிப்பைக் கண்டு சற்று நகைத்ததல்லாமல், அந்தச் சிரிப்பு அவள் செவ்விய இதழ்களிலும் படர்ந்தது. அந்தப் புன்முறுவலை அடக்காமலே மேலும் பேசத் தொடங்கிய ராணி, “பிடர்த்தலையாரே! குடிசை என் அணையால் கட்டப்பட்டது. இந்திரா விழா விடுதியிலிருந்து மறைந்து பரதவப் பெண் அங்கு சென்றிருக்கிறாள். என்னைத் தொடர்ந்த யவன வீரர்களிடமிருந்து இதையறிந்தால் டைபீரியஸாக்கு அந்தப் பரதவ மங்கை யாரென்று தெரியாமல் போகுமா? அது கிடக்கட்டும். நான் அங்கு சமயத்தில் வரமுடியாததால் மன்னர் பந்தத்தை. அசைத்துச் சைகை செய்தாரே, அதை அடிகள்மட்டும் தான் கவனித் திருப்பாரா? யவன வீரர்கள் கவனித்திருக்க மாட்டார்களா? கண்டிப்பாகக் கவனித்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் டைபீரியஸிடம் தெரிவிக்கப்படும். எந்த மர்மத்தையும் விரைவில் அலசக்கூடிய டைபீரியஸின் ஆராய்ச்சி மனம் இதையும் அலசிவிடும்” என்று விளக்கினாள்.

“இத்தனை அபத்திருக்கும்போது என்னை எதற்காகக் கடற்கரைக் குடிசையில் சந்திக்கச் சொன்னீர்கள் ராணி?” என்று கேட்டார் அடிகள்.

“அதைவிடப் பெரிய அபாயம் உங்கள் நாட்டைச் சூழ்ந்திருப்பதால்தான்.

நீர் என் தலையை அளவெடுக்க வந்த காரணம் எனக்குத் தெரியும் அடிகளே.

இந்திர விழா விடுதிமீது அகாயத்தை அளாவி எழும் இரு தூண்களின் மர்மத்தை அறியவே முக்கியமாக வந்திருக்கிறீர். உம்மை அனுப்பியதும் பிரும்மானந்தர்” என்றாள் ராணி.

அடிகளின் விழிகள் அச்சரியத்தால் பெரிதாக மலர்ந்த தல்லாமல் அவர் உள்ளமும், “ராணிக்கு ஒருவேளை சோதிட மும் தெரியுமோ?” என்று சந்தேகித்தது. அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்தகொண்ட ராணி “இதில் சோதிடம் ஏதுமில்லை அடிகளே! ஊகிப்பதிலும் கஷ்டம் எதுவும் இல்லை. டைபீரியஸைச் சரியாக எடைபோட்டுச் சமாளிக்கக்கூடி யவர்கள் இருவர்தான் உண்டு. ஒருவர் உங்கள் படைத்தலைவர். இன்னொருவர் பிரும்மானந்தர். வாண கரைக் குன்றிலிருக்கும் தன் கண்ணெதிரே எழும் தூண்களைக் கவனிக்காமலிருப்பாரா அவர்? அல்லது அவற்றை டைபீரியஸ் ஏன் எழுப்புகிறான் என்பதை அறியத்தான் முயலாதிருப்பாரா? கண்டிப்பாய் முயலுவார் என்பது எனக்குத் தெரியும் அடிகளே. பொற்கொல்லர் வேடத்தில் நீங்கள் வந்ததுமே அதைப் புரிந்து கொண்டேன். உமது மூலம் பிரும்மானந்தருக்குச் செய்தியனுப்பும் நோக்கத்துடனேயே உம்மைக் கடற்கரைக்கு வரும்படி நறுக்கு ஓலையில் செய்தி பொறித்தேன்” என்று கூறினாள்.

ராணியின் கூரிய அறிவையும் டைபீரியஸின் நோக்கத்தை மட்டுமன்றி, பிரும்மானந்தர் நோக்கத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியென அவள் உணர்ந்த விந்தையை யும் எண்ணிப் பெரிதும் வியந்த இரும்பிடர்த்தலையார் ஏதோ கேட்க வாயெடுத்தார். அதற்கு முன்பாகவே தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து அதுவரை பூண்டிருந்த மெளன விரதத்தைக் கலைத்துவிட்ட கரிகாலன், “அந்தத் தூண்கள் எதற்காக எழுப்பப்படுகின்றன ராணி? அந்தத் தூண்களி லிருந்து எதை அறியப் பிரும்மானந்தர் விரும்புகிறார்?” என்றான்.

இளஞ்சேட்சென்னியின் மகனுடைய வீர வதனத்தை நோக்கித் தன் அழகிய விழிகளைத் திருப்பிய யவன ராணி சொன்னாள்“எகிப்திலிருந்து வரவிருக்கும் யவனர் கப்பல் களுக்கு வழிகாட்ட” என்று.

“யவனர் கப்பல்களா?” அச்சரியத்துடன் வினவினான் கரிகாலன்.

“அம் மன்னவா! இன்னும் மூன்று மாதங்களில் யவனர் போர்க் கப்பல்களை எதிர்பார்க்கிறான் டைபீரியஸ். எந்த யவனர் மரக்கலத்தில் சோழர் படையின் உபதலைவர் சிறைப்படுத்தப்பட்டுச் சென்றாரோ, அந்தக் கப்பலின் தலைவன் மூலமே யவன நாட்டுக்குச் செய்தி அனுப்பப் பட்டிருப்பதாகக் கோட்டைத் தலைவனிடம் டைபீரியஸ் கூறியதை நானே கேட்டேன். யவனர் கடற்படையில் ஒரு பகுதி புகாருக்கு வந்துவிட்டதால் நீங்கள் உங்கள் பரம்பரை அரியணையில் அமருவதும் முடி சூடுவதும் பகற்கனவாகும் ” என்றாள் ராணி.

“ஆனால் நீங்கள் முடிசூடுவது நனவாகுமே ராணி” என்று பதிலிறுத்தான் கரிகாலன். “உண்மைதான் மன்னவா. ஆனால் டைபீரியஸின் உதவியால் முடிசூடுவதை நான் விரும்பவில்லை. நான் புகாரின் ராணியாக முடிசூட உதவக் கூடியவர் என்னை முதன்முதலாகக் கடலலைகளிலிருந்து தூக்கியெடுத்த சோழர் படை உபதலைவர் ஒருவர்தான். யவன குருமார்கள் சொல்லியிருப்பதும் அதுதான். குருமார்களின் வாக்கு பொய்க்காது. விண்மீன்களைக் கொண்டு அவர்கள் செய்யும் ஆராய்ச்சி வீணாகாது. விதி வலிது, மன்னவா. விதி எங்கள் இருவரையும் பிணைத்திருக்கிறது. இந்த மாளிகைக்கு வந்த முதல் நாளே இளஞ்செழியனிடம் நான் கூறினேன். அவர் அன்று நகைத்தார். இனி நகைக்க மாட்டார். ஆகவே இளஞ்செழியன் வரும்வரை நான் காத்திருக்க வேண்டும். அதுவரை இங்கு நிலைமை க்ஷ்ணிக்கவிடாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்களும் உதவ வேண்டும்...” என்றாள் ராணி.

ராணியின் போக்கு சரியாக அடிகளுக்கு விளங்காத தால் கேட்டார், “அதற்கு இவர்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று.

ராணி இரும்பிடர்த்தலையாரைப் பார்த்து, “மன்னவர் நலனை முன்னிட்டுச் சொல்கிறேன் இரும்பிடர்த் தலையாரே, புகாரை விட்டுச் சென்று விடுங்கள். நீங்கள் திரட்டிய படை வேண்டுமானால் இங்கிருக்கட்டும். சமயத்தில் அந்தப் படை உபயோகப்படலாம். ஆனால் நீங்கள் இச்சமயம் கண்காணிக்க வேண்டியது புகாரல்ல, உறையூர். உறையூரில் இன்னும் பத்தே நாட்களில் பெரும் ஒப்பந்தம் ஒன்று தயாராக இருக்கறது. அதை உடைக்க வேண்டும், இல்லையேல் சோழ நாடு உங்களுடையதல்ல” என்று உள்ளத்திலிருந்த உறுதி சொற் களிலும் தொனிக்கச் சொன்னாள்.

“என்ன ஒப்பந்தம்?” இரும்பிடர்த்தலையாரின் கேள்வி ஹெறுப்புடன் வெளிவந்தது.

“இதுவரை இருங்கோவேளிடமிருந்து மாரப்பவேளும் நாங்கூர்வேளும் விலகி நிற்கிறார்கள். அவர்களையும் இழுக்க சேர பாண்டிய மன்னர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். என் ஊகம் சரியானால் மாரப்பவேள் மகள் பூவழகிக்கும் இருங்கோவேளுக்கும் திருமணம் நிச்சயமாகலாம். அந்தத் திருமணம் நிறைவேறினால் வேளிர்கள் அனைவருமே இருங்கோவேளின் பக்கம் இணைந்தது போலாகும். தமிழகத் தின் அத்தனை வேளிர்களையும் சேர சோழ பாண்டியர்களை யும், புகாரின் யவனர்களையும் ஏக காலத்தில் எதிர்த்து நிற்கும் சக்தி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்ட ராணி நிமிர்ந்து நின்று “இந்த ஏற்பாட்டை முதலில் தகர்த்தெறியுங்கள் இரும்பிடர்த்தலையாரே. பூவழகியை இருங்கோவேள் மணம் புரிந்தால் யவனர் பிடியிலிருந்து திரும்பும் இளஞ்செழியனின் உதவியைக் கண்டிப்பாய் இழப்பீர்கள்” என்று சுட்டிக் காட்டினாள் ராணி.

ராணியின் விவரத்தைக் கேட்ட கரிகாலன் நீண்ட யோசனையில் அழ்ந்தான்.அவன் யோசனையைக் கண்ட ராணி மெல்லச் சிரித்துக் கொண்டே புறப்படச் சுத்தமாகி இரும்பிடர்த்தலையாரைக் கடைசியாக நோக்கி, “இரும் பிடர்த்தலையாரே! நான் சென்று வருகிறேன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இளஞ்செழியன் இதயம் உங்கள் கப்பலில் இருக்கும்வரை, நானும் உங்கள் பக்கம் தான்.

சந்தேகமிருந்தால் பிரும்மானந்தரைக் கேளும் ‘‘ என்று கூறிவிட்டு, “அடிகளே! இந்திர விழா விடுதியின்மீது எழுப்பும் பெரும் தூண்கள் இரண்டும் யவனர் கப்பல்களுக்கு வழிகாட்ட மட்டும் நிர்மாணிக்கப்படவில்லை. வேறு மர்மம் அதுல பாணைநதுருககறது. வாரும காடமுகமறன எனறு சொல்லி அந்த அறையைவிட்டு வெளியே நடக்கத் துவங்கினாள். அடிகளும் அவளைப் பின் தொடர்ந்தார்.

அவர்களைத் தடுக்க முயன்ற இரும்பிடர்த் தலையாரைக் கரிகாலன் கையமர்த்திடவே அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற இரும்பிடர்த்தலையார் சோழ நாட்டின் எதிர்காலம் என்னவோவென்று பிரமை பிடித்துக் கவலை முகமெங்கும் பாய்ந்து, பெருமூச்சொன்றும் விட்டார்.

அதைவிட அதிகப் பிரமை ஏற்பட்டது சமண அடிகளுக்கு. அன்றிரவில் மிக சாமர்த்தியமாக இந்திர விழா விடுதிக்குள் அடிகளை அழைத்துச் சென்ற யவன ராணி மெள்ளத் தன் அறைக்குள் நுழைந்து மறைவு வழி ஒன்றால் மேல்தளத் குூண்கள் இருந்த இடத்தை நாடி நடந்து அந்தத் தூண்கள் ஒன்றின் அடிக் கதவைத் திறந்து, “அடிகளே! உள்ளே பாருங்கள்!” என்று கட்டளையிட்டாள். அந்தக் கட்டளை யைத் தொடர்ந்து உள்ளே கண்களைச் செலுத்திய அடிகள் ஸ்தம்பித்துப் போய் நீண்ட நேரம் நின்றார். இது தூண்தானா? அன்றி சனாதனிகள் நம்பும் நரகத்தின் உறைவிடமா!’ என்று தமக்குள்ளேயே பெரும் திகிலுடன் சொல்லிக் கொண்டார். அவரை அதிக நேரம் தாமதிக்க விடாத யவன ராணி, மீண்டும் தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்று நீண்ட ஒலையொன்றையும் எழுதி அவரிடம் கொடுத்து, “அடிகளே! இதைப் பிரும்மானந்தரிடம் கொடுங்கள். அவர் புரிந்து கொள்வார்!” என்று உத்தரவிட்டாள்.

தூண்களின் உள்ளே பார்த்ததால் உண்டான பிரமிப்பும் திகிலும் மாறாமலே இந்திர விழா விடுதியை விட்டு வெளியேறிய அடிகளின் பிரமிப்பைவிடப் பன்மடங்கு அதிகப் பிரமிப்பை அடைந்தார் மறுநாள் காலையில் அந்த ஓலையைப் படித்த பிரும்மானந்தர். அந்த ஓலையைப் படித்த பின்பு பிரும்மானந்தர் டைபீரியஸை மறந்தார், புகாரை மறந்தார், உறையூரைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே மறந்தார். சோழ நாட்டைப் பெருத்த அபாய மேகங்களும் வேளின் ஏற்பாடுகளை உடைக்க மிகப் பயங்கரமான தட்டமொன்றையும் வகுத்தார். அதை நிறைவேற்றும் கருவியாக சமண அடிகளை உபயோகிக்க எண்ணி அவரிடம் தமது யோசனையையும் கூறினார். அந்த யோசனையைக் கேட்டு வெகுண்ட சமண அடிகள், “முடியாது! முடியாது. துறவி செய்யும் வேலையா இது? சுத்த அநியாயம். இந்த அக்கிரமத்துக்கு நான் உடன்படவே மாட்டேன்” என்று கூவினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
55. பூதங்கள் நான்கு

வாணகரைக் குன்றின் உச்ச மாளிகை உப்பரிகை அறையில் உட்கார்ந்து, யவன ராணியிடமிருந்து சமண அடிகள் கொண்டு வந்த ஓலை மீது தமது யானைக் கண்களை ஒட்டி, வேதப் புத்தகங்களைப் படி.ப்பதைவிட அதிக சிரத்தை யுடனும் ஊக்கத்துடனும் படித்த பிரும்மானந்த அடிகள் நீண்ட நேரம் மேலுக்கு மெளன விரதத்தை மேற்கொண்டா ரானாலும், அவரது உள்ளத்தில் மெளன விரதம் தூள் பறந்துவிட்டதென்பதையும், அவரது உள்ளம் தர்க்க மேடை யாகிப் பெரும் கூச்சல் மனத்திலே எழுந்து புத்தியையும் குழப்பிக் கொண்டிருக்கிறதென்பதையும், எதிரே நின்று அவரைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த குமரன் சென்னி யும் சமண அடிகளும் புரிந்து கொண்டார்கள். இருப்பினும், பிரும்மானந்தரின் இதயம் குழப்பத்தில் சிக்கித் தத்தளித்த அந்த நேரத்தில் அவரே தெளிவுக்கு வருமுன்பாகத் தாங்கள் பேசுவது தகாது என்ற அபிப்பிராயத்தினால் அவ்விருவரும் வாயைத் திறக்காமலே நின்றிருந்தார்கள். ஒலையில் கண்டிருந்த செய்தியின் விளைவாக மஞ்சத்தில் நிலையாக உட்காரும் திராணியைக்கூட இழந்த பிரும்மானந்தர் சிறிது நேரம் மஞ்சத்தில் இப்படியும் அப்படியும் அசைந்ததன்றி, ஒரு கையில் சுருண்டுவிட்ட ஒலையை மற்றொரு கையால் இழுத்து இழுதது நடடி விடடும, தமது விசாலமான மாாபில தவழநது கொண்டிருந்த மகர கண்டியின் பெரும் பதக்கத்தைச் சில விநாடி களுக்கொரு முறை தடவிக் கொடுத்தும் நிமிண்டிப் பார்த்தும் ஏதேதோ விஷமங்களைச் செய்து கொண்டிருந்து விட்டுக் கடைசியாக மஞ்சத்திலிருந்து எழுந்து எதிரே இருந்த சாளரத்தை நோக்கிச் சென்று, காவிரியின் நீர்ப்பரப்புக்கு அக்கரையில் இந்திர விழா விடுதியின் மீது பிரும்மாண்டமாக எழுந்து நின்ற இரு பெரும் தூண்களையும் கூர்ந்து நோக்கிப் பெருமூச்செறிந்தார். அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து மீண்டும் நீண்ட நேரம் எதிர்க் கரையை அராய்ச்சி செய்த அவர் கண்களில் ஒரளவு அச்சமும் துளிர்க்கவே மெள்ளத் திரும்பி சமண அடிகளை நோக்கி, “அடிகளே! அந்தத் கூரண்களின் உட்புறத்தை நீரே உமது கண்களால் கண்டீரா?” என்று வினவினார் பிரும்மானந்தர்.

“அதோ வலப்புறத்தில் நிற்கிறதே அந்தத் தூணின் உட்புறத்தைப் பார்த்தேன். மற்றொரு தூணின் உட்புறமும் அதே மாதிரிதான் என்று ராணி சொன்னாள்” என்று பதில் கூறினார் சமண அடிகள்.

“அந்தத் தூண்களை எப்படி அமைத்திருக்கிறான் டைபீரியஸ் என்பதை விவரமாகச் சொல்லும். குமரன் சென்னியும் கேட்கட்டும்” என்று பிரும்மானந்தர் உத்தர விடவே, ஏதோ பெரும் சொற்பொழிவுக்கு ஆயத்தம் செய்து கொள்பவர்போல் இருமுறை கனைத்துத் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்ட சமண அடிகள் சற்று பயந்த குரலிலேயே பேசத தொடங்கு, “அந்த இரண்டையும் தூண்கள் என்று சொல்வதை விடப் பல அறைகள் கொண்ட பெரும் போர்த் தளங்கள் என்று சொல்வது பொருந்தும். மற்ற போர்த் தளங்களுக்கும் இவற்றுக்கும் ஒரு வித்தியாசம் மட்டும் உண்டு. மற்ற போர்த் தளங்கள் இருக்கிற இடத்தைவிட்டு அசைய மாட்டா, இவை அசையும்...” என்று மேலும் ஏதோ சொல்லப் போனார்.

அடிகளின் இந்த ஆரம்ப உரையைக் கேட்டதும் பிரமித்துப் போன குமரன் சென்னி, “என்ன! இந்தக் கல்தூண்கள் அசையுமா?” என்று கேட்டதன்றி, “இதென்ன இந்திர ஜாலமா?” என்று கேலியாகவும் வினவினான்.

தமது வார்த்தைகளை ஆரம்பத்திலேயே இடைமறித்த தன்றி, தாம் கண்டதைப்பற்றிக் கேலியாகவும் பேச முற்பட்ட குமரன் சென்னியைத் தமது விஷமக் கண்களால் நோக்கிய சமண அடிகள் உதடுகளில் இகழ்ச்சி நகை பூண்டு, “இந்திர ஜாலமல்ல சென்னி! பெபெயரைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் பொருத்தமாயிருக்கும்” என்று கூறினார்.

“எப்படி மாற்ற வேண்டும் அடிகளே?” என்று மறுபடி யும் கேட்ட இளஞ்செழியனின் உபதலைவனின் குரலில் இகழ்ச்சி பூணமாக மண்டிக் கிடந்தது.

“இந்தர ஜாலம் என்பதைவிட யவன ஜாலம் என்ற வார்த்தை பொருத்தமென்று நினைக்கிறேன் ”‘ என்றார் அடிகள், தமக்கும் இகழ்ச்சியாகப் பேசத் தெரியும் என்பதைக் குரலின் ஒலியிலேயே காட்டி.

அலானுபாகுவாக நின்ற குமரன் சென்னி அந்த அறையில் இருமுறை இப்படியும் அப்படியும் நடந்துவிட்டுச் சொன்னான், “ஜாலத்துக்கு வீரர்கள் அஞ்சமாட்டார்கள் அடிகளே! அது இந்திர ஜாலமாயிருந்தாலும் சரி, யவன ஜாலமாயிருந்தாலும் சரி. வீரர்கள் பயப்படமாட்டார்கள் ” என்று.

“ஆனால் வேல்களுக்கும் அம்புகளுக்கும் காற்றைவிடக் கடின வேகத்துடன் வரும் சுழற் பந்தங்களுக்கும் பயப்பட வேண்டுமல்லவா?” என்று வினவினார் சமண அடி கள்.

“பயப்படத் தேவையில்லை. அதைச் சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு” என்று சற்றுக் கர்வத்துடனேயே பதுல் சொன்னான் சென்னி, தன் கையிலிருந்த நீளமான வேலை ஒரு முறை அசைத்துக் காட்டி.

சமண அடிகள் ஒரு விநாடி குமரன் சென்னியின் நெஞ்சுரத்தை வியந்தார்.

ஒரு விநாடி அவனுடைய அஜானுபாகுவான சரீரத்தையும் பெரும் வேலையும் கண்டு பெருமிதம் கொண்டார். மூன்றாவது விநாடி அந்த இரு பெரும் தூண்களை நினைத்துப் பார்த்ததும், “இத்தகைய வீரர்களை டைபீரியஸின் தந்திரத்துக்குப் பறி கொடுப்பதா?” என்ற எண்ணத்தால் ஆயாசப் பெருமூச்சும் விட்டு, “குமரன் சென்னி! இந்த வேலை இக்கரையிலிருந்து அக்கரைக்கு உன்னால் எறிய முடியுமா?” என்று, கேட்டார்.

“மூடியும். குறி பார்த்தும் எய்ய முடியும்.

இந்திர விடுதியின் அந்தத் தூண்களுக்கருகில் யாராவது நின்றிருந்தால் கூட அவன் மார்பை இதன் நுனி ரசி பார்க்கும்” என்று பதில் கூறினான் சென்னி.

“உன்னைப்போல் வேலெறியக்கூடிய வீரர்கள் உன் படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

“யாருமில்லை.”

“உன் வீரர்கள் எத்தனை தூரத்துக்கு வேலெறிய முடியும்?”

“பாதிக் காவேரி வரையில் வேலெறிய முடியும். எதிரிகள் வாணகரையை நோக்கி நகர்ந்தால் பாதிக் காவிரியிலேயே அவர்களுக்கு நாச சமாதி கிடைக்கும்.”

இதைக் கேட்ட சமண அடிகள் லேசாகச் சிரித்ததன்றி, குமரன் சென்னியையும் நோக்கச் சொன்னார். “சென்னி! உன் வீரம் எனக்கோ பிரும்மானந்தருக்கோ தெரியாததல்ல. உன் படைப் பிரிவின் வலிமை மட்டுமல்ல, இளஞ்செழியனுடைய இருவகைப் படைகளின் வன்மையும் எங்களுக்குத் தெரியும். ஆனால் இன்று நாம் சமாளிக்க முயல்வது இதுவரை தமிழகம் காணாத பெரிய ஒரு எதிரியை. தந்திரத்திலும் போர்த் திறத்திலும் பொறி இயலைப் போர்த் தந்திரத்துக்கு அனுசரணையாக இணைப்பதிலும் ஈடற்ற ஒரு பெரும் அறிவாளியிடமிருந்து தமிழகத்தைக் காக்க முயலுகிறோம். ஒரு புத்தம்புது சக்தி தமிழகத்தை ஆட்கொள்ள வருகிறது. அதை உடைக்கவே பிரும்மானந்தர் முயலுகிறார். அதற்காகவே என்னை வேவு பார்க்கப் புகாருக்கு அனுப்பினார். அந்தத் தூண்களை டைபீரியஸ் ஏன் அமைக்கிறான் என்பதைப் பார்த்து வரச் சொன்னார். உனக்கே தெரியவில்லை சென்னி! அதோ அந்தத் தூண்களைப் பார். புகாரின் எல்லாக் கட்டடங்களையும் மீறிக் கொண்டு கலங்கரை விளக்கத் துக்கும் மேலாக எழுந்து நிற்கின்றன. இத்தனை பெரிய துூண்களைத் தமிழகத்தின் எந்த நகரத்திலாவது யாராவது அமைத்துப் பார்த்திருக்?க ி“அறதுாவயுமா் ஒரு மாளிகையின் மீது இத்தகைய பூதத் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டால் கட்டடத்தின் தளம்தான் தாங்குமா?”

இப்படி விவரித்துக்கொண்டே வந்த சமண அடிகள் சற்றுப் பேச்சை நிறுத்தி, குமரன் சென்னியைக் கவனித்தார். தாம் சொன்ன சில வார்த்தைகளாலே அவன் முகத்தில் குழப்பம் ஏறி விட்டதைப் பார்த்த அடிகள் மீண்டும் கடைசியாகக் கேள்வியைத் திருப்பி, “சொல் சென்னி! தளம் தாங்குமா?” என்று கேட்டார்.

குமரன் சென்னி சாளரத்தின் மூலம், அந்தப் பெரும் தூண்களை நோக்கி கண்களை ஓடவிட்டுப் பிறகு சொன்னான், “தளம் தாங்காது” என்று.

“ஆனால் அதோ நிற்கின்றன தூண்கள். அவற்றைத் தளமும் தாங்குகிறது. காரணம் என்ன தெரியுமா?” என்று மீண்டும் ஒரு முறை கேள்வியைத் தொடுத்தார் சமண அடிகள்.

“தெரியாது.” இம்முறை பதில் சொன்னபோது குமரன் சென்னியின் முகத்திலிருந்த குழப்பம் குரலிலும் தெரிந்தது.

“காரணம். சொல்கிறேன் கேள் சென்னி. அந்தத் தூண்கள் கல்லையும் சுண்ணக் காரையையும் வைத்துக் கட்டப்படவில்லை. மேல்புறம் மட்டும் சுண்ணக் காரையால் வெள்ளை வைக்கப்பட்டு வழவழப்பாகச் செய்யப் பட்டிருக் கிறது. உட்புறம் பூராவும் மரங்களால் அமைக்கப்பட்டிருக் கிறது. தூண்களின் அடியிலும் மேற்புறங்களிலும் கதவுகள் பல இருக்கின்றன. அந்தக் கதவுகள் லவலேசமும் தெரியாதபடி வெளியே சுண்ணச் சாந்து இழைத்துப் பூசப் பட்டிருக்கிறது. தவிர, இந்தத் தூண்களின் அடிப்பாகம் இந்திர விழா மாளிகையின் மேல்தளத்தில் நிற்கவில்லை. நேராகக் கீழ்த் தளத்துக்குச் செல்கின்றது. கீழ்த்தளத்தில் தூண்களின் மேற்புறத்தைச் சுழற்ற, பெரும் கல் சக்கரங்களும் இரும்புப் பிடிகளும் இருக்கின்றன. ஒவ்வொரு தூணின் மேல் புறத்திலுமுள்ள நான்கு அறைகளில் சுழற் பந்தங்களையும் வேல்களையும் எடுத்துக் கடும் வேகத்துடன் நாலா பக்கங் களிலும் நெடுந்தூரம் வீசவல்ல பொறிகள் இருக்கின்றன. அவற்றை இயக்க அவசியமான நூறு வீரர்களுக்கு ஒவ்வொரு துரணிலும் இடமிருக்கிறது. அந்த இரண்டும் பயங்கரமான பெரும் பொறிச் சாலைகள். யவனரின் பொறி இயலை அறிந்தவர்களைத் தவிர வேறு யார் போனாலும் அவர்களை நசுக்கி, சதையைப் பிய்த்துச் சாறாகப் பிழிந்துவிடக்கூடிய ஏற்பாடுகளும் அந்தத் தூண்களுக்குள்ளிருக்கின்றன. அந்தத் தூண்கள் இயக்கப்பட்டால் இந்திர விழா மாளிகைக்கு இரு நூறடி. தூரத்துக்குள் எந்தப் படகுகளும் செல்லமுடியாது. தூண்களிலிருந்து கிளம்பும் ஆயிரக்கணக்கான சுழற்பந்தங் களும் வேல்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு சிறு படையை அழிக்கவல்லன. தவிர, அவசியமானால் அந்தத் தூண்களைக் காவிரிக்குக் குறுக்கே ஒரளவு சாய்க்கக்கூடிய முனைகளையும் தடுப்புச் சலாகைகளையும் யவனர் அமைத் திருக்கிறார்கள். அப்படிச் சாய்க்கப்பட்டால் வாணகரை மீது தீப்பந்தங்களை வீசுவதும் எளிது. உண்மையில் அந்தத் தூண்களிரண்டும் பெரும் பூதங்கள். நாளங்காடியிலிருப்பது ஒரு காவற்பூதம். இந்திர விழா மேல்தளத்திலிருப்பவை இரண்டு நாசகார பூதங்கள். இவையே எதிரிகளைத் தூரத்தில் தடுத்து நிறுத்தப் போதும். அப்படியிருக்க இந்திரவிழா விடுதியின் பக்கப் பகுதிகளை டைபீரியஸ் ஏன் இடித்துக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் விளங்கவில்லை” என்றார் அடிகள்.

இந்திர விழா மாளிகையின்மீது எழுந்துள்ள இருபெரும் தூண் விசித்திரத்தைக் கேட்டபின்பு வியப்பிலாழ்ந்தாலும் பயத்தில் சிறிதும் அழாத குமரன் சென்னி, “ஆமாம், எதற்காக மாளிகையின் பக்கப் பகுதிகளை இடிக்கிறான்? ‘” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

அதுவரை அந்த இருவர் சம்பாஷணையில் ஈடுபடா மலும் ஒலையிலிருந்த செய்தியின் ஒரு பகுதியை மட்டும் விளக்கிக் கொண்டிருந்த சமண அடிகளின் பேச்சில் குறுக் கடாமலும் சாளரத்தருகே நின்றுகொண்டிருந்த பிரும்மா னந்தர் தமது மெளனத்தைக் கலைத்துவிட்டு, “சென்னி! எதிரிப் படைகளைத் தூரத்தே நிறுத்தி அழித்துவிட அப்பெரும் தூண்களை நிர்மாணித்திருக்கிறான் டைபீரியஸ். இந்திரவிழா விடுதிக்கும் மற்ற விடுதிகளுக்குமிருக்கும் இணைப்பை உடைத்து உள்ளே காவிரியைப் புகவிட்டு அதை ஒரு சிறு தீவுபோல் பிரித்துவிடப் பக்கப் பகுதிகளை இடிக் கிறான். இந்திர விழா விடுதியை நகரத்தின் இதர கட்டடங் களிலிருந்து பிரித்து விட்டால் அங்கு நடக்கும் எதையும் யாரும் அறிந்துகொள்ள முடியாது. வெளிநாடுகளிலும் இம்மாதிரிச் சுற்றிலும் அகழியுள்ள பெரும் கோட்டைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்தகைய ஒரு கோட்டையைப் புகாரின் கோட்டைக்குள்ளேயே அமைக் கிறான் டைபீரியஸ். இதற்கு அர்த்தம் தெரியுமா?” என்று வினவினார்.

“தெரியவில்லை அடிகளே!” என்றான் குமரன் சென்னி.

“எப்படியும் யவனர் வெற்றியில் நம்பிக்கையுடனிருக் கிறான் டைபீரியஸ். தமிழ்நாட்டில் யவன ராஜ்யம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும் என்ற உறுதி அவனுக்கிருக்கிறது. அப்படி ஸ்தாபிக்கப்பட்டால் தங்கள் நாட்டு அரச குடும்பத்தினர் தங்கள் நாட்டைப்போலவே இங்கும் வாழ அகழிக் கோட்டை யைக் கட்டுகிறான். டைபீரியஸின் கனவு பெரும் கனவு. அதை உடைப்பது சாத்தியமல்ல. ஆனால் நல்ல வேளையாக ராணி நமது பக்கத்திலிருக்கிறாள். இல்லையேல் முடிவு என்ன வென்று சொல்ல முடியாது” என்றார் பிரும்மானந்தர்.

“ராணியை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார் சமண அடிகள். “பூரணமாக நம்புகிறேன்” என்றார் பிரும்மானந்தர்.

“அவள் வெளிநாட்டுப் பெண்” என்று சுட்டிக் காட்டினார் சமண அடிகள்.

“இருப்பினும் நம் நாட்டு வாலிபனிடம் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டாள்” என்று தமது அபிப்பிராயத்தையும் சற்று அழுத்திச் சொன்னார் பிரும்மானந்தர்.

“அவளுக்கு சாம்ராஜ்ய அசை இருக்கிறதே” என்று சமண அடிகள் நம்பிக்கையற்ற குரலில் சொன்னார்.

“சாம்ராஜ்ய அசையைவிடக் காம அசை பெரிது அடிகளே! காமத்தால் நாசமான பேரரசுகளின் வரலாற்றை நீர் படித்ததில்லையா? அசை அண்மகனுக்கு ஏற்பட்டால் உதறி விடுவார்கள். பெண்களுக்கு ஏற்படும் அசை வெளிக்குத் தெரியாது. ஆனால் உள்ளூர ஊறும். அந்த அசையின் வேகமும் ஆழமும் பெரிது. அந்த ஆசையின் ஆழத்தை அளந்து பார்க்கவேண்டும்” என்றார் பிரும்மானந்தர்.

“பெண் இதய அழத்தை அளப்பது அத்தனை சுலபமா?”

“சுலபமல்ல.

சிறிது பழக்கம் வேண்டும்.”

“அடிகளுக்கு அந்தப் பழக்கம் நிரம்ப உண்டு போலிருக்கிறது.”

இதைக் கேட்ட பிரும்மானந்தர் ஏதோ அவசரத்தில் தாம் அசந்தர்ப்பமாகப் பேசிவிட்டதை உணர்ந்து சற்று சங்கடப்பட்டாரானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “அடிகளே! விளையாட்டுக்கு இது நேரமல்ல. பெண் இதயத்தை அறியப் பெண் சகவாசம் தேவையில்லை. மனோதத்துவ சாத்திரம் படித்தவர்களுக்கு அது ஒரு பிரமாதமல்ல. யவன ராணியின் காதல் இதயம் ஒன்றுதான் இப்பொழுது தமிழகத்துக்குப் பெரும் பாதுகாப்பு. அந்த இதயமில்லாவிட்டால் அத்தனை அபத்தில், முதுகில் பாய்ந்த கத்தியுடன், அதுவும் டைபீரியஸ் அவள் யாரென்பதை உணர்ந்த பின்பு, கடற்கரைக் குடிசைக்கு எதற்காக ஓடிவர வேண்டும்?” என்று கேட்டார்.

“அவள் யாரென்பதை டைபீரியஸ் உணர்ந்திருப் பானா? அவள்தான் பரதவப் பெண் வேடத்திலிருந்தாளே?”

“உமது வேடத்தை ராணி இந்திர விழா விடுதியில் கண்டுபிடித்தபோது, ராணியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வரும் டைபீரியஸுக்கு மாளிகையிலிருந்து மறைந்தோடும் பரதவப் பெண் யாரென்பது தெரியாமலா இருக்கும்.

" “அப்படியானால் அவளை ஏன் தடை செய்ய வில்லை?”

“தடை செய்யவே கத்தியை வீசினான்.”

“ராணி இறந்திருந்தால்?”

“அதைப்பற்றி டைபீரியஸ் கவலைப்பட மாட்டான்.

யவன அரசு தமிழகத்தில் ஏற்பட ராணி அதிக இடைஞ்சல் செய்தால் அவளைத் தொலைக்கவும் தயங்கமாட்டான்.

டைபீரியஸாக்கு யவன ராஜ்யத்தின் விஸ்தரிப்பும், இந்தப் பரத கண்டத்தில் - அதுவும் தமிழகத்தில் - அவர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும்தான் குறிக்கோள்.”

“அப்படியானால் டைபீரியஸ் எதுவும் செய்யத் துணிவான்....”

“சந்தேகமின்றி.”

“இரும்பிடர்த்தலையாரும் கரிகாலனும் புகாரில் இருக்கிறார்களே!”

“அவர்கள் இருப்பதும் டைபீரியஸுக்குத் தெரிந் திருக்கும்.

தற்சமயம் அவர்களைப்பற்றிக் கவலை வேண்டாம்.

அவர்களை டைபீரியஸ் எதுவும் செய்யமாட்டான்.”

“என்?”

“பிறகு சொல்கிறேன்.

முதலில் நாம் கவனிக்க வேண்டிய அவசர வேலை இருக்கிறது.

நான்காவது பூதத்தைச் சமாளிக்க ஏற்பாடு செய்வோம்” என்றார் பிரும்மானந்தர்.

“நான்காவது பூதமா!’’ வியப்புடன் வினவினான் குமரன் சென்னி.

“அம் சென்னி; தமிழகத்தில் நான்கு பூதங்கள் இருக் கின்றன. முதலாவது நாளங்காடி காவற்பூதம். அதோ இந்திர விழா விடுதி மீது நிற்கும் இருபெரும் பூதங்களைப் பற்றி நமது அடிகளே சொன்னாரல்லவா? இவற்றையெல்லாம்விட நாட்டுக்கு நாசத்தை விளைவிக்க இருக்கும் கொடிய பூதம் இருங்கோவேள். அதை ஓழிக்க வேண்டும்” என்றார் பிரும்மானந்தார்.

“அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் சமண அடிகள்.

அதற்கான திட்டத்தைப் பிரும்மானந்தர் விவரித்த போதுதான், சென்ற அத்தியாய இறுதியில் கூறியது போல், “அக்கிரமம். இதற்கு நான் உடன்பட முடியாது” என்று கூவினார் சமண அடிகள்.

சமண அடிகளின் கூச்சலைக் கேட்ட பிரும்மானந்தர் முகத்தைச் சுளித்ததன்றி, “நாட்டின் நலனை முன்னிட்டு இது நடக்க வேண்டும் அடிகளே” என்று கடுமையாகவும் கூறினார்.

“அதற்காகப் பெண் கொலை புரியச் சொல்கிறீர்களா?” என்று பிரும்மானந்தரையும் தூக்கி எறிந்து அலட்சியமாகவும் உள்ளே எழுந்த உணர்ச்சியால் முகம் சிவக்கவும் உதடுகள் துடிக்கவும் பேசினார், என்றும் பிரும்மானந்தரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லியறியாத சமண அடிகள்.
 




Last edited:

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
56. கண்ணில் மண்! போர்ப்புயல்!

எந்த நாளும் தாம் வகுத்த வழியைத் தாண்டாதவரும் தம்மை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசியறியாதவருமான சமண அடிகள், தம்மீது சீறி விழுந்து தம்மைத் தூக்கியெறிந்து மிக உஷ்ணத்துடன் உதிர்த்த சொற்களைக் கேட்டதும் மெள்ளப் புன்முறுவல் கொண்ட பிரும்மானந்தர், “அடிகளே! ஏன் இப்படித் துடிக்கிறீர்கள் 2? இதில் பதட்டத்திற்கு என்ன இருக்கிறது?’’ என்று மிகச் சாவதானமாக வினவவே, ஏற்கெனவே உள்ளே குமுறி எழுந்த கோபம் பன்மடங்கு அதிகமாக பிரும்மானந்தரை நோக்கித் தீவிழி விழித்த சமண அடிகள், “பதற்றத்திற்கு என்ன இருக்கிறதா! என்ன இருக்கிற தென்று புரியவில்லையா தங்களுக்கு?” என்று உள்ளே எழுந்த சினத்தின் உக்கிரம் குரலிலும் சந்தேகமின்றிப் பிரதிபலிக்கக் கேள்விகளை வீசினார்.

சமண அடிகளின் உள்ளம் விசிறிவிட்ட கனல் அத்தனை வேகமாகச் சொற்கள் மூலம் தம்மீது வீசிய அந்தச் சந்தர்ப்பத்திலும் சிறிதும் நிதானத்தை இழக்காத பிரும்மானந்தர், “பொதுவாகப் பதற்றத்திற்குக் காரணம் புரியவில்லையே தவிர, உமது நெஞ்சம் இத்தனை தூரம் ஏன் குமுறுகிறது என்பதற்குக் காரணம் எனக்குப் புரிகிறது. பூவழகியின் வாழ்க்கை என் திட்டத்தால் பாதிக்கப்படுமே என்று அஞ்சுகிறீர். அவ்வளவுதானே?” என்று கேட்டார்.

“பூவழகியின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று சொல்வதைவிட வாழ்க்கை பாழ்த்துவிடும் என்று சொல் லுங்கள், அது பொருத்தமாயிருக்கும்.

பூவழகியின் இதயம் முழுவதும்...” என்று மேலும் ஏதோ சொல்ல முயன்ற சமண அடிகள், உணர்ச்சிப் பெருக்கால் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லாமல் வார்த்தைகளை அரைகுறையாக விட்டார்.

“இளஞ்செழியன்பாலிருக்கிறது’”‘ என்று சமண அடிகளின் வார்த்தைகளைப் பூர்த்தி செய்த பிரும்மானந்தர், “படைத்தலைவருக்கும் பூவழகிக்கும் உள்ள இதயத் தொடர்பு நான் அறியாதது என்று நினைக்கிறீர்களா அடிகளே?” என்று வினவினார்.

“அறிந்துமா இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணி கிறீர்கள்?” என்று அத்திரம் சிறிதும் தணியாமல் மீண்டும் கேள்வி கேட்டார் சமண அடிகள்.

சிந்தனைக்கு அரை விநாடிகூட எடுத்துக் கொள்ளா மலும் பேசிய வார்த்தைகளில் தயக்கம் ஏதுமில்லாமலும் திட்டவட்டமாகப் பதில் சொன்னார் பிரும்மானந்தர். “இதில் அக்கிரமம் ஏதுமில்லை அடிகளே. சொந்த உணர்ச்சிகளைக் கவனிக்காமல் நாட்டு நலனை மட்டும் மூன்னிட்டுத் திருமணங்களை நடத்தி வைப்பது வரலாற்றுக்கு முரண்பட்ட தல்ல. அரசியல் திருமணங்களுக்கு அத்தாட்சிகள் வேண்டு மானால் பாரதத்தின் சரித்திரத்தைப் புரட்டிப் பாரும்” என்று.

“அப்படியானால் இருங்கோவேளுக்குப் பூவழகியை மணமுடித்து வைக்க வேண்டுமென்று சொல்கிறீர்கள்?”

“ஆமாம்.”

“இதற்குப் பூவழகி சம்மதிப்பாளா?”

“சம்மதிக்க மாட்டாள்.”

“பலவந்தமாகத் திருமணம் செய்து வைப்பதா?”

“இதில் பலவந்தம் ஏதுமில்லை. நாட்டு நலனை முன்னிட்டு வகுக்கப்படும் ஒரு அரசியல் திட்டம். இதைப் பூவழகிக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். அவள் இஷ்டப் படாவிட்டால் மாரப்பவேளுக்கு விளக்கிச் சொல்லி திருமணத்தை முடிக்க வேண்டும். அதற்குப் பூர்வாங்கமாக நீர் உறையூர் சென்று பூவழகியின் மனத்தை அந்த வழிகளில் திருப்ப முயல வேண்டும்.”

“தவறாகச் சொல்லிவிட்டீர்கள் அடிகளே! பூவழகியின் மனத்தைக் கலைக்க வேண்டும். அதற்காக இளஞ்செழியன் மீதும் ராணிமீதும் அபாண்டமான பழியைச் சுமத்த வேண்டும் என்று சொல்லுங்கள், அர்த்தமிருக்கும். நல்ல வார்த்தைகளால் ஒரு தீய ஏற்பாட்டுக்குத் திரையிட வேண்டும்” என்று மனக்கசப்புடன் சொன்னார் சமண அடிகள்.

பிரும்மானந்தரின் அமம் மிக்க சின்னஞ்சிறு யானைக் கண்கள் சமண அடிகளை அராய்ந்தன. பிறகு உதடுகள் மெல்ல அசைந்தன. அவற்றிலிருந்து வெளிவந்த வார்த்தை களிலும் உறுதி பரிபூரணமாக இருந்தது. “அடிகளே! பல நாட்களுக்கு முன்பு படைத்தலைவர் கருவூருக்குப் புறப்படும் முன்பு நானே சொன்னேன்,பூவழகியாய் யிருந்தாலும் நாட்டு நன்மைக்காகப் பலியிடப்பட வேண்டியவர்கள்தான் என்று. அந்த உறுதி இன்னும் என்னை விட்டு விலகவில்லை.

பூவழகிக்கும் இருங்கோவேளுக்கும் திருமணம் அவசியமென்று நான் நினைக்கிறேன். அதனால் பூவழகியின் வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஆனால் நாட்டு நன்மைக்கு அது தேவையாகிறது. பூவழகி இளமங்கை, கொய்யப்படாத புதுமலர். வாழ்க்கையின் தென்றலையும், குளிர் தரும் பனித்துளிகளையும் எதிர்பார்த்து நிற்கும் வண்ணப்பூ அந்தப் பூவை நாசம் செய்வதில் எனக்கு மட்டும் திருப்தி என்று நினைக்கிறீரா? இல்லை அடிகளே! இல்லை. இந்தச் செய்கைக்கு உம்மைத் குூரண்டுவதே என் இதயத்தைத் தூள் தூளாக உடைத்தெறிகிறது. ஆனால், ஒரே ஒரு மலரைக் கிள்ளியெறிவதால் பெபரும் நந்தவனம் பாதுகாக்கப் படுமென்றால் அந்த மலரைக் கிள்ளியெறியத்தான் வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. பூவழகி ஒருத்தியின் வாழ்க்கை இந்தத் திட்டத்தால் கெடலாம். அதனால் இந்த நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்படும். எத்தனையோ தலைமுறைகளின் நன்மைகள் பாதுகாக்கப் படும். சுதேச அரசாட்சி இங்கு காலூன்றாமல் விரட்டப்படும் ” என்று தெளிவான, ஏதும் குழப்பமில்லாத குரலில் கூறினார் பிரும்மானந்தர்.

சமண அடிகள் சற்று நேரம் மெளனமாக நின்றிருந்தார். பெரு வேலைத் தாங்கி அந்த இரு துறவிகளுக்கும் சற்று அப்பால் நின்றிருந்த குமரன் சென்னி பிரும்மானந்தரைப் பார்த்துக் கேட்டான், “பூவழகி இருங்கோவேளைக் கைப்பிடித்ததைச் சோழர் படை உபதலைவர் அறிந்தால் மனமுடைந்து போகமாட்டாரா?” என்று.

“போகலாம்” என்றார் பிரும்மானந்தர்.

“அதனால் நமக்கு நஷ்டமில்லையா?’’ மீண்டும் விசாரித்தான் சென்னி.

“இல்லை. அதனால் லாபம்தான். இருங்கோவேள் பூவழகியை மணமுடித்து விட்டான் என்பதை இளஞ்செழியன் அறிந்தால் இருங்கோவேளைத் தீர்த்துக்கட்ட அவருக்குள்ள உறுதி பன்மடங்காகும். பொறாமை ஒரு அவேசம் சென்னி! மனம் நாடிய பொருள் வேறு ஒருவன் கைக்கு மாறுவதால் பொருளை இழந்தவன் மனம் பெரும் புயலாகிறது. அந்தப் புயலை எதிர்த்து நிற்பது அத்தனை சுலபமல்ல” என்று விளக்கினார் பிரும்மானந்தர்.

“இது அநீதியல்லவா?’” என்று இடையே புகுந்து கேட்டார் சமண அடிகள்.

“தனி நபர்களைப் பொறுத்துப் பேசப்படும்போது அந்தச் சொல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. அரசியலில் இதற்கு ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள்” என்று பதில் கூறினார் பிரும்மானந்தர்.

“ஒன்றுபட்ட இதயங்களைப் பிரிப்பது பெரும் பாவம் என்று உங்கள் சாத்திரங்கள் சொல்லவில்லையா?” என்று மீண்டும் சலிப்புடன் கேட்டார் சமண அடிகள்.

“கெளடில்யன் அர்த்தசாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ராஜரீக முறைகளில் பாவம் மலிந்து கிடக்கிறது. நவநந்தர்களை அந்த முனிவர் வேரறுத்த முறைகளிலும் புண்ணியம் என்று கருதக்கூடிய அம்சம் இல்லை. பாவ புண்ணியத்தை அவர் பார்த்திருந்தால் நந்தர்கள் பேரரசு அழிந்திருக்காது, மெளரியர்கள் பேரரசும் உண்டாகியிருக்காது அடிகளே! சொந்த உணர்ச்சிகளுக்கு இதில் இடமேயில்லை. பூவழகி இருங்கோவேளை மணம் முடிப்பதால் அனுகூலங்கள் பல இருக்கின்றன. பாவ புண்ணியம், நீதி அநீதி இவற்றுக் கெல்லாம் இந்த அலுவல்களில் இடமில்லை. இங்கு புண்ணியம் நாட்டு நலன் ஒன்றுதான். இங்கு நீதியும் அது ஸ்திரப்பட்டுத் தலை தூக்கி வாழ்வதுதான். அழகிய ரதங்களை வெகுவேகமாகச் செலுத்தக்கூடியவனும் யவனர்களைத் தன் அடிமைகளாக வைத்துப் பாரிபாலித்தவனுமான சோழன் இளஞ்சேட்சென்னி அமர்ந்திருந்த அரியணையில், இன்று யவனர்களுக்குத் தமிழகத்தின் கடற்கன்னியான பூம்புகாரை சாஸனம் செய்து கொடுத்துவிட்டவனுமான இருங்கோவேள் அமர்ந்திருக்கிறான். அவனை நசுக்க வேண்டும். அவனை நசுக்கும்போது இன்னும் சிலரும் நசுக்கப்படலாம். அதற்கு நாம் என்ன செய்வது?” என்று பதில் கூறினார் பிரும்மானந்தர்.

சமண அடிகள் மீண்டும் ஏதோ யோசித்தார். பிறகு கேட்டார், “ராணி சொன்ன திட்டம் நேர்மாறாக இருந்ததே!” என்று.

“அம். ராணி இந்தத் திருமணத்தைத் தடுக்கப் பார்க்கிறாள்.”

“அது சரிதானே?” இல்லை .”

“ஏன் இல்லை? பூவழகியின் திருமணம் நடந்தால் இளஞ்செழியன் இதயம் உடையும்.

அப்படி உடைந்தால் வெளிநாட்டிலிருந்து திரும்பும் படைத்தலைவன் இந்த நாட்டில் காலை வைக்காமலே திரும்பலாம் அல்லது நாட்டுக்காகப் படைகளை நடத்த மறுக்கலாம் என்று ராணி கூறுகிறாளே!”

“ராணியின் பார்வையெல்லாம் இளஞ்செழியன் மனோபாவத்தை முன்னிட்டே அராயப்படுகிறது. நான் விஷயத்தை நாலா திசைகளிலிருந்து அலசுகிறேன். இளஞ்செழியன் வந்து பூவழகி இருங்கோவேளை மணந்ததை அறிந்தால், அந்தக் கோபத்திலேயே அவன் இருங்கோவேளை நாசம் செய்ய முரசு கொட்டுவான். அப்படி இளஞ்செழிய னுக்கு ஏதாவது நேர்ந்தாலும் பூவழகியைத் தன் செந்த சகோதரியாகப் பாவிக்கும் கரிகாலன் அவளை முன்னிட்டு இருங்கோவேளைப் பழி வாங்க முன்வருவார். இருங்கோ வேளின் ஆட்சியைப் பிளக்கப் பலமான கத்தி ஏதாவது ஒன்று வேண்டும். அந்தக் கத்தி இளஞ்செழியன் தான். அதற்கு ஏதாவது நேர்ந்துவிட்டாலும் மற்றொரு கத்தி மன்னரிருக் கிறார். அடுத்து மூன்று மாதங்களில் தமிழகத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் அடிகளே! அது வரை இங்கு போர் கூடாது. தமிழகத்தைச் சூழ்ந்து வரும் அபாய மேகங்கள் நன்றாகத் தணியட்டும். பிறகு மழையாகக் கொட்டி வெள்ளமாகப் பெருக்கெடுத்து நாட்டிலுள்ள அழுக்குகளெல்லாம் அடித்துப் போக ஏற்பாடு செய்வோம். எதற்கும் நீர் உறையூருக்குப் பயணப்படும். அங்கு மாரப்ப வேளையும் பூவழகியையும் சந்தியும். பூவழகியிடம் இளஞ்செழியன் யவனர் கப்பலில் மாண்டுவிட்டதாகச் சொல்லி அந்த உருவத்தை அவள் மனத்திலிருந்து அழித்துவிடும். பின்பு யாரை மணப்பதா யிருந்தாலும் பூவழகி தடை சொல்ல மாட்டாள்.” பிரும்மானந்தர் பேசப் பேச, சமண அடிகள் முகத்தில் வெறுப்புத் தட்டியதல்லாமல், அந்த வெறுப்புக்கு அறிகுறியாக அவர் இதழ்களும் விகாரமாக மடிந்தன. அவர் கண்களில் எப்பொழுதும் விளையாடும் விஷமம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. அது மறைந்த இடத்தைத் துன்பமும் வெறுப்பும் அக்கிரமித்துக் கொண்டன.

பிரும்மா னந்தரை அந்தச் சமயத்தில் பெரிதும் சபித்தார் சமண அடிகள். ‘துற்வுக்கு ஏன் இந்த அரசியல் தொல்லை?” என்று தமக்குள் கேட்டுக்கொண்டார். “ஒரு பெண்ணின் வாழ்க்கை யைக் கெடுக்கவா துறவறம் பூண்டோம்?” என்று தமக்குள் யோசித்ததைச் சற்று இரைந்தும் சொன்னார். அது பிரும்மானந்தர் காதிலும் விழத்தான் செய்தது. “துறவறம் பூணூவதே பெண்ணுக்குத் துரோகம்தான்” என்று சொல்லிச் சிரித்தார் பிரும்மானந்தர். சமண அடிகளின் தீ விழிகள் பிரும்மானந்தரை நோக்கித் திரும்பின. “ஏன்? நான் சொல்வது தவறா? மனைவியை நட்டாற்றில் விட்டுத்தானே அனேகமாக எல்லாரும் துறவிகளாகிறார்கள்!” என்று மேலும் நகைச்சுவையைக் காட்டினார் பிரும்மானந்தர்.

அதை அடியோடு ரசிக்க முடியாத சமண அடிகள், “அடிகளின் நகைச்சுவை, தர்க்கநீதி, அரசியல் தந்திரம் எல்லாமே நேர் வழியில்தான் அமைந்திருக்கிறது” என்று எரிந்து விழுந்தார்.

அதற்குப் பிறகு நகைச்சுவையை அடியோடு விட்ட பிரும்மானந்தர் இறுதியாகவும் திட்டமாகவும் சொன்னார் : “ராணி இந்த ஓலையில் எழுதியிருப்பது உண்மையானால் மாரப்பவேளும் நாங்கூர்வேளும் இருங்கோவேளிடமிருந்து பிரிந்து நிற்கிறார்கள். தமிழகத்தின் பதினைந்து வேளிர்களில் இருவர் பிரிந்து நின்றால் அவர்களை நசுக்குவது எளிது. அப்படி அவர்கள் நசுக்கப்பட்டு நாட்டு நிலைமையும் நிதானத்துக்கு வந்துவிட்டால், சேர பாண்டியர்களின் அதிக்கம் ஒரு புறமும் யவனர் அதுிக்கம் ஒரு புறமும், சோழ நாட்டைத் தலையெடுக்கவொட்டாமல் அடித்துவிடும். இந்த ஆபத்தி லிருந்து தமிழகத்தைக் காக்கப் பூசல்களை மேலும் அறப் போடவேண்டும். எரிமலை அடங்கிவிட்டது என்று நினைக்கும் சமயத்தில் அது வெடிக்க வேண்டும். அந்தப் பொய் அமைதியைச். சிருஷ்டிக்க பூவழகியின் திருமணத்தை நடத்தி விடுவோம். நீர் உறையூருக்குப் போய் அங்குள்ள நிலைமையை எனக்கு எழுதும்.”

பிரும்மானந்தர் இது விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட்டாரென்பதையும், இனி அவர் முடிவை மாற்றுவது பிரும்மாவினால்கூட முடியாதென்பதையும் உணர்ந்த சமண அடிகள், “நான் போய் அங்கு பூவழகியின் வாழ்க்கையைச் சிதைக்கிறேன். தாங்கள் புகாரின் மன்னரையும் இரும்பிடர்த் தலையாரையும் என்ன செய்யப் போகிறீர்கள்? ஒழித்துக் கட்டப் போகிறீர்களா?” என்று கேட்டார்.

“அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், அடிகளே! அவர்கள் இருப்பது கண்டிப்பாய் டைபீரியஸூக்குத் தெரியும். அவர்களுக்கு எந்த அபத்தையும் விளை விக்க மாட்டான். டைபீரியஸ் பெரிய ராஜ தந்திரி” என்றார் பிரும்மானந்தர். “மன்னரும் இரும்பிடர்த்தலையாரும் இருப்பது டைபீரியஸாக்குத் தெரியுமா?” என்று மிதமிஞ்சிய வியப்புடன் விசாரித்தார் சமண அடிகள்.

“நீர் என்ன டைபீரிஸை முட்டாளென்று நினைக்கறீரா? டைபீரியஸ் புகாரில் காலை வைத்த இரண்டாவது நாளே சுங்கச் சாவடியிலிருந்து அவனிடம் சிக்கிவிட்டோம். அந்தச் சுங்கச் சாவடி மூலம் பிரதி தினம் படகுகள் போய் வருவதையும், சுமார் நூறு வீரர்கள், காவிரிக் கரையின் தோப்பில் இறங்குவதையும் அவன் கவனிக்காதிருப்பானா? கண்டிப்பாய்க் கவனித்திருப்பான். அடிகளே! அவர்கள் யாரென்பதையும் அறிந்துகொண்டிருப்பான். இருங்கோ வேளின் கதி இரண்டிலொன்று நிர்ணயிக்கப்படும்வரை கரிகாலனை டைபீரியஸ் தொடமாட்டான். தவிர, எந்த நேரமும் தம் கைவசப்படுத்தக்கூடி_ய விதத்தில் சோழ மன்னன் புகாரில் இருக்கையில் அவன் கவலையற்று உறங்க முடியும். அதைப்பற்றி உமக்கேன் கவலை? கரிகாலனை மீண்டும் அரியணையில் அமர்த்தவும், சோழ மண்டலத்தை மீண்டும் தலை நிமிரச் செய்யவும் தானே இத்தனை தந்திரங்களைக் கையாளுகிறோம்! அப்படியிருக்க மன்னருக்குத் தீங்கு நேரிடுவதைப் பார்த்துக்கொண்டு நான் வாளாவிருப் பேனோ?” என்று விளக்கமும் தைரியமூட்டும் சொற்களும் கலந்த பதிலைச் சொன்னார் பிரும்மானந்தர்.

பிரும்மானந்தர் பூவழகியின் திருமண விஷயத்தில் ஒரே பிடிவாதமாக இருந்துவிட்டதால் வேறு வழியின்றி உறையூரை நோக்கி அடுத்த நாளே புறப்பட்டார் சமண அடிகள். உறையூரில் தங்குவதற்கு வேண்டிய இடம், அவர் பார்க்க வேண்டிய மனிதர்கள், செய்ய வேண்டிய காரியங்கள் முதலியவற்றை விவரமாக எடுத்து உபதேதித்துிருந்தார் பிரும்மானந்தர். “முதன் முதலில் உறையூரில் பசுபதி மடத்தில் போய்த் தங்கி அல்லிக்கு: இந்த ஓலையை அனுப்பிவையும். அவள் உம்மைச் சந்திப்பாள். அவளைத் துணைகொண்டால் உறையூர் அரண்மனையில் புகுவது மிகவும் எளிது” என்று ஒரு ஒலையையும் சமண அடிகளிடம் சமர்ப்பித்தார் பிரும்மானந்தர்.

உள்ளமெல்லாம் பெரும் போர்க்களமாக, வாழ்விலே பெரும் வெறுப்பு மண்ட, உறையூரை நோக்கிச் சென்ற சமண அடிகள், அடுத்த நாள் இரவில் ஆரம்ப ஜாமத்திலேயே பசுபதி மடத்தை அடைந்தார். பசுபதி மடத்தில் அலங்காரம் பலமா யிருந்தது. மடத்தில் மட்டுமென்ன, அன்று உறையூரின் வீதிகள் எல்லாமே பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டி ௬ந்தன. தோரணங்கள் எங்கும் ஆடின. தூரத்தேயிருந்த கோட்டையி லிருந்து துந்துபிகள் முழங்கின. மடத்தின் வாசலிலேயே நின்று கொண்டு “இன்று என்ன விசேஷம்? ஏனிந்த அலங்காரம்?” என்று யோசித்த’ சமண அடிகளின் கண்களில் மண்ணைத் துவிக்கொண்டு குதிரைப் படையொன்று வேகமாகச் சென்றது. அதை அடுத்து ரதங்கள் புமுதியை எழுப்பிக் கொண்டு விரைந்தன. அவற்றைத் தொடர்ந்து எழுந்தன வெற்றி முழக்கங்கள். தெருக்களில் நெருக்கியடித்த கூட்டங் களை வீரர்கள் வேல்களைக் கொண்டு விலக்கினார்கள். கடைசியாக வேகமாக வந்தது ஒரு பெரும் ரதம். குதிரை வீரர்கள் நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து காவல் புரிந்து வர, ரதத்தையும் அதைச் சுற்றிவந்த படையையும் நோக்கிய சமண அடிகள் இடி விழுந்தவர் போலானார். அன்று அந்தக் குதிரைப் படையும் தேர்ப்படையும் மண்ணைத் தூவியது தமது கண்களிலல்ல; நாட்டின் கண்களில் என்பதை உணர்ந்து கொண்ட அடிகள், “ஓகோ! இவரே வந்துவிட்டாரா? அப்படி யானால் நாட்டில் போர்ப்புயல் துவங்கிவிட்டது. இனி இதை நிறுத்த பிரும்மானந்தர் என்ன பிரும்மாவே வந்தாலும் முடியாது’ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார் சமண அடிகள். அவர் அப்படி யோசித்துக்கொண்டு மனம் கலங்கி நின்ற சமயத்தில் மடத்தின் மூலையிலிருந்து ஒரு மனிதன் அவரை நெருங்கி வந்து அவர் தோளைப் பிடித்து அசைத் தான். திரும்பி அவனைப் பார்த்த அடிகள், “நீங்கள் யார்? உங்களை எங்கே...” என்று ஏதோ சொல்லப் போனார். கண் மிரட்டலாலேயே அவருடைய சொற்களை உதட்டில் உறைய வைத்த அந்த மனிதன், “என்னை உமக்குத் தெரியாது. உம்மை எனக்குத் தெரியும். பல கண்கள் நம்மைக் கவனிக்கின்றன. என்னைத் தொடர்ந்து பேசாமல் வாரும்” என்று அவர் காதுக்கருகில் மெதுவாகக் கூறிவிட்டு மடத்தின் ஒரமாக நகர்ந்தான் அந்த மனிதன். அடிகளும் பதிலேதும் பேசாமல் தம்மை அழைத்த மனிதனுடைய கட்டளையை மீறத் துணிவில்லாமலும் கூடத்தின் கடைசிப் பகுதியில் நுழைந்து மெள்ள மெள்ள மடத்துத் தாழ்வாரக் கட்டைச் சுவரில் உராய்ந்த வண்ணம் நகர்ந்து நகர்ந்து அந்த மனிதனைத் தொடர்ந்து சென்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
57. குயிலின் குரல்

தூரத்தே அரண்மனையில் துந்துபிகள் முழங்க, வீதியில் தோரணங்கள் காற்றிலாடி வரவேற்புக் கூற, முன்னும் பின்னும் பக்கப் பகுதிகளிலும் குதிரை வீரர்கள் சாரிசாரியாக அணிவகுத்துக் காவல் புரிந்துவர, பெர்ம் புரவிகளால் இழுக்கப்பட்ட அழகிய ரதத்தில் வெகுகம்பீரமாக அமர்ந்து சென்றவனைக் கண்டதுமே தமிழகத்தின் தலைவிதியை நினைத்துக் கவலைக்குள்ளான சமண அடிகள், பசுபதி மடத்துக்கு எதிரில் நின்றவண்ணமே யோசனையில் ஆழ்ந்த சமயத்தில் தம்மைத் தொட்டு அழைத்தவனைக் கண்டதும் பபரும் அச்சரியத்தை அடைந்தாரானாலும் அதை வெளிக்குக் காட்டாமலும் அவன் செய்த எச்சரிக்கையைப் பின்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமலும் அவனைப் பின்தொடர்ந்து மெளனமாகவே சென்றார். வெளிக்குத் தான் அடிகள் மெளனமாகவே நடந்து சென்றாரேயொழிய் அவருடைய உள்ளத்தில் எண்ணங்கள் பல எழுந்து தாண்டவ மாடியதன்றிச் சிந்தையிலும் கணக்கற்ற கேள்விகளும் பதில்களும் மோதி மோதிப் பெரும் இரைச்சலைக் களப்பிவிடவே, பெரும் விவாதப் புயலில் சிக்கித் தவித்தார் கருவூர் சமணமடத் தலைவர். ரதத்தில் அத்தனை கம்பீரத் துடன் அமர்ந்து சென்றவன் சேர மன்னன் பெருஞ்சேர லாதன் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டாலும், ‘இருங்கேரவேளுக்குச் சேரனும் பாண்டியனும் உறுதுணையாக நிற்பது உலகமறிந்ததுதான். இருப்பினும் இதுவரை இவ்வளவு பகிரங்கமாக சோழ மன்னன் கொலைஞனான இருங்கோவேளிடம் தமிழக மன்னர்கள் கலந்ததில்லையே! அப்படியிருக்க, பெருஞ்சேர லாதன் எப்படி இவ்வண்ணம் உறையூர் போந்தான்? இருங்கோவேளுக்கும் தனக்கும் உள்ள உடன்பாடு இனி ரகசியமாயிருக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டானா? அப்படியானால் போர் இனித் துவங்குவது நிச்சயம். துவங்குவதானால் எப்பொழுது துவங்கும்?” என்று தம்மைத் தாமே கேட்டுக்கொண்ட சமண அடிகள், “ஆனால் போர் விளைவிப்பது அத்தனை சுலபமா! இதற்குச் சேர நாட்டு அமைச்சர்கள் ஒப்புக் கொள்ள வேண்டாமா? அமைச்சர்கள் ஒப்புக்கொண்டாலும் புலவர்கள் அனுமதி கிடைக்குமா? பெருஞ்சேரலாதன் புலவர்களால் மதிக்கப் பெற்றவனாயிற்றே. இதுவரை புகழ் பாடிய புலவர்கள் இனி வசை பாடுவதைச் சகிக்க மாட்டானே சேரமன்னன்? அப்படியிருக்க எந்தத் துணிவுடன் உறவாட வந்தான்?” என்றும் உள்ளூரப் பேசிக்கொண்டார். இப்படி யெல்லாம் சேர மன்னன் குணங்களைப்பற்றி எண்ணமிட்ட அடிகள் குறைகளையும் ஆராயத் துவங்கி, எத்தனை நல்லவனானா லும் சேரமன்னன் எடுப்பார் கைப்பிள்ளை. அகையால் சோழர்களை வென்று குணபுலத்தில் தன் அகுக்கத்தை நிலைநிறுத்த முயலும் பாண்டியனின் கைப்பாவையாக இயங்கக் கூடியவன். ஆமாம் நானே கவனித்தேனே. ரதத்தில் அத்தனை கம்பீரமாக அமர்ந்திருந்த சமயத்திலும் அவன் முகத்தில் எத்தனை தூரம் கவலை படர்ந்து கிடந்தது. ஏதோ வேண்டா விருப்பாக அதிக வற்புறுத்தலின் மேல் தான் சேரமன்னன் இப்படிப் பகிரங்கமாகச் சோழர் தலைநகரில் புகுந்திருக்கிறான். ஆனால் வற்புறுத்தியவன் பாண்டியன் தானா, வேறு யாராவது துன்மந்திரியா?’ என்று மீண்டும் உள்ளத்தில் கேள்விகளை நிரப்பிக் கொண்டு தம்மை அழைத்துச் சென்றவனைப் பின்பற்றி நடந்தவர் உறையூர் எல்லைக்கு வந்ததும் மீண்டும் ஒரு முறை திரும்பி சோழர்களின் அந்த மாபெரும் தலைநகர்மீது கண்களை ஓட்டினார்.

உயர் தூண்களில் எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட வெண்கல விளக்குச் சாரிகளாலும், வீதி மூலைகளில் ஸ்தம்பங் களின் உச்சியில் செருகப்பட்டிருந்த பெரும் பந்தங்களாலும் பொன்னிற ஒளிபெற்றுக் கிடந்த அந்த மாநகர் அடிகளின் கண்களைப் பறித்தது. கருத்தையும் கவர்ந்தது. அதுிவீரனும் அன்பே உருவானவனுமான இளஞ்சேட்சென்னி உறைந்த பெருமாளிகையிலும் அதைச் சுற்றி எழுந்த மதில்களிலும் கூட அன்று தீபாலங்காரம் பலமாக இருந்ததைக் கவனித்த அடிகள், “அந்த அரண்மனையில் இப்பொழுதிருப்பவன் கொலைகாரனான இருங்கோவேளல்லவா?’ என்று நினைத்து ஆயாசப் பெருமூச்செறிந்தார். அந்த ஆயாசத்தில் தானும் கலந்து கொள்பவளைப்போல் உறையூரை அணைத்து ஓடிய பொன்னியும் தனது நீரோட்டத்தில் ‘உஸ்’ என்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தாள். பொன்னியின் கரையிலிருந்த கனி மரங்களும், புஷ்பச் செடிகளும் சோழர் பெருமகனான இளஞ்சேட்சென்னியை அழித்து விட்டு, அதே ஊரில் உறையும் இருங்கோவேளுக்கு இடம் கொடுத்த இந்த மக்களுக்கு நாமேன் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் கிளைகளிலிருந்த பழுத்த கனிகளையும், புஷ்பங்களை யும் பொன்னியிடம் ஒப்படைத்துவிடவே, அன்னை பெபொன்னியும் அவற்றைத் தன் மடிக்குள் மறைத்துக் கொண்டாள்.

உறையூரின் எல்லைப்புறத்தில் காவிரிக்கரையில் நின்று இவற்றையெல்லாம் கவனித்த சமண அடிகள், தமது சிந்தனைகளை ஒரு புறம் ஒதுக்கிக் கொண்டு தம்மை அழைத்த மனிதன் பின்னாலேயே சென்றார். உறையூரின் பெரு வீதுகளைக் கடந்ததும் ‘பக்கத்தோப்புகளில் இறங்கிய அந்த மனிதன் இரண்டு மூன்று தோப்புகளைத் தாண்டிச் சில கட்டடங்கள் இருந்த இடத்துக்கு வந்து ஒரு வீட்டை அடைந்து இருமுறை கதவைத் தட்டியதும், “யாரது?” என்று உள்ளிருந்து பெண் குரலொன்று எழுந்தது.

“நான்தான் அல்லி, கதவைத் தற” என்றான் அடிகளை அழைத்து வந்த மனிதன்.

“இதோ வந்துவிட்டேன்!” என்று பதிலுக்குக் குரல் கொடுத்த அல்லி கதவின் தாழ்களை அகற்றிக் கதவைத் துறந்தாள். கதவைத் திறந்து தம்மைக் கண்டதும் அல்லி அப்படியே ஆச்சரியப்பட்டுவிடுவாளென்று நினைத்த சமண அடிகள், அல்லி சிறிதும் ஆச்சரியப்படாதது மட்டுமன்றித் தம்மை முன்னதாகவே எதிர்பார்த்தவள் போல், “வாருங்கள் அடிகளே! உங்கள் வரவால் இந்த ஏழையின் குடில் புனித மாகட்டும்” என்று சர்வ சகஜமாக வரவேற்பும் அளிக்கவே, ஒருகணம் பிரமித்த அடிகள் ஏதோ கேட்க வாயெடுத்து உதடுகளை அசைத்தார்.

அவர் பிரமிப்பையும், அவர் ஏதோ சொல்ல வாயெடுத்துத் திணறுவதையும் கவனித்த அல்லி வழக்கம் போல் கலகலவென நகைத்துவிட்டு, “ஏதும் கேட்க வேண்டாம் அடிகளே! நீங்கள் வருவது எனக்கு முன்பே தெரியும். வாருங்கள், பிறகு விளக்கச் சொல்கிறேன்” என்று கூறி அடிகளை அழைத்து வந்த மனிதனை நோக்க, “அப்பா! அடிகள் நீராட வழி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அடிகளை முன் கூடத்துக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.

அடிகள் விவரிக்க இயலாத வியப்பிலும் திகைப்பிலும் அழ்ந்திருந்தாராதலால், எதையும் யோசிக்கக்கூடச் சக்தியற்றவராய் உட்கார்ந்துகொண்டு அல்லி காரியங்களைச் செய்யும் விமரிசையை மட்டும் பார்த்து ரசிக்கலானார். அடிகளைக் கூடத்தில் உட்கார வைத்ததும் மீண்டும் வாயிற் கதவைத் தாளிட்ட அல்லி அந்தச் சிறு வீட்டின் இரண்டு சிறுகட்டுகளையும் தாண்டிச் சமையலறைக்குள் நுழைந்தாள். எவ்வித ஓசையுமில்லாமல் ஏதோ பறவையொன்று உலவுவதுபோல் வெகு அழகாகக் கூடத்துக்கும் சமைய லறைக்கும் நடந்து நடந்து கறிகாய்களையும் பழவகையறாக் களையும் எடுத்துச் சென்ற அல்லி, எவ்விதச் சிரமமுமில்லா மலும் நிதானத்துடனும் திட்டவட்டமாகவும் காரியங்களைச் செய்ததன்றிக் கூடத்துக்கு வரும்போதும் போகும்போதும் அவரை நோக்கிப் புன்முறுவல் செய்து அவரது அயாசத்தை யும் ஓரளவு தணித்து ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இதற்குள் பின்புறம் சென்ற அல்லியின் தந்த நீராட்ட ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்ததால் நீராட்டத்தை முடித்துக்கொண்டு லேசாகச் சாதத்தையும் பலமாகப் பழவகையறாக்களையும் இரண்டு சேர் பாலையும் உள்ளே செலுத்தியதால், ஆயாசத்தை அடியோடு துடைத்துக் கொண்ட அடிகள் கூடத்து மஞ்சத்தில் சாய்ந்து கால்களையும் நீட்டிக் கொண்டார். அல்லியும், அவள் தந்தையும் அவரை அதிக நேரம் காக்க வைக்காமல் தங்கள் உணவை முடித்துக் கொண்டதும் கூடத்திற்கு வந்தனர்.

அப்படி வந்தவர்களிடம் பல விஷயங்களை விசாரித்துத் தெளிவு படுத்திக்கொள்ள முயன்ற அடி களுக்குச் சிறிது அவகாசம் கொடுக்காமலேயே பேசத் தொடங்கிய அல்லி கேட்டாள், “அடிகளே! பயண அலுப்பு நீங்கிவிட்ட தல்லவா?” என்று.

“நீங்கிவிட்டது. எதற்காகக் கேட்கிறாய்?” என்று அடிகள் வினவினார்.

“இன்னும் ஒரு நாழிகைக்குள் நீங்கள் எல்லைப்புறத்தி லுள்ள ஒரு மாளிகைக்குச் செல்ல வேண்டும்” என்றாள் அல்லி. அவி வபம்யபாயாடப அரபியை யொடு அடிகள். தமக்கு ஒரு பெண், அதுவும் உலக அனுபவம் அதிக மில்லாதவள், உத்தரவிடுவதைக் கேட்க மிக விந்தையா யிருந்ததால், அவள் உள்ளத்துக்குள் ஒடும் எண்ணங்களை அராயவும் முயன்றார்.

அந்த முயற்சி பலிக்கு முன்பாக அவள் உள்ளத்தையும் உள்ளத்திலோடிய எண்ணங்களையும் அளந்துவிட்ட அல்லி தன் தந்தையையே நோக்க, “பார்த்தீர்களா அப்பா?” என்று கூறிவிட்டுச் சற்றுப் பெரிதாகவே நகைத்தாள். அல்லியின் தந்தையும் பெண்ணின் பேச்சை அமோதுப்பவர் போலத் தலையை அசைத்துப் புன்முறுவல் செய்யவே சற்று நிதானத்தை இழந்த அடிகள், “என்ன அற்புதத்தைக் கண்டு இருவரும் சிரிக்கிறீர்கள்?” என்று சீறி விழுந்தார்.

மேலும் சிரித்துக்கொண்டே சொன்னாள் அல்லி, “உங்கள் நினைப்பை ஊகித்தேன் அடிகளே, சிரிப்பு வந்தது” என்று.

“என் நினைப்பையா! உனக்கென்ன உள்ளத்தை ஊடுருவும் மந்திரம் தெரியுமோ?” மீண்டும் கோபத்துடன் எழுந்தது அடிகளின் குரல்.

“ஊகம் இருக்கும்போது, மந்திரம் எதற்கு அடிகளே. அதுவும் சமண சமயத்தினரான நீங்கள் மந்திரசாஸ்திரத்தை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்” என்றாள் அல்லி மெள்ளப் புன்முறுவல் செய்து. அவள் பேச்சின் கடைப்பகுதியைப் புறக்கணித்த அடிகள் முதற்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, “என்ன ஊகுத்தாய் அல்லி?” என்று வினவினார்.

“பிரும்மானந்தர் உத்தரவுப்படி இங்குள்ள நிலையை ஆராய வந்திருக்கிறீர்கள்... ‘” என்று அல்லி வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.

“அமாம்” என்றார் அடிகள்.

“பசுபதி மடத்தில் தங்கி எனக்கு ஓலை அனுப்புமாறு உத்தரவிட்டி ருக்கிறார் பிரும்மானந்தர்.”

“அமாம்.”

“ஓலையனுப்பினால் நான் உதவுவேன் என்று கூறியிருக் கிறார்.”

“அமாம்.”

“அகையால் நீங்கள் உத்தரவிட அதன்படி நான் நடப்பேன் என்று எதிர்பார்த்து வந்தீர்கள்.”

“உண்மைதான்.”

“ஆனால் நிலை மாறிவிட்டது.

நீங்கள் உத்தரவிடுவ தற்குப் பதில் நான் உத்தரவிடுகிறேன்.

இந்தப் பெண்ணாவது நமக்கு உத்தரவிடுவதாவது என்று நினைக்கிறீர்கள்.

இல்லை?”

“அமாம்.”

“அதை நினைத்துத்தான் நகைத்தேன்.” இதைக் கேட்டதும் மஞ்சத்தில் சாய்ந்திருந்த அடிகள் நன்றாக எழுந்து உட்கார்ந்துகொண்டு அல்லியையும், அவள் தந்தையையும் மாறி மாறி நோக்கிவிட்டு, “நான் வருவது உங்களுக்கு முன்பே தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியாது” என்றார் அல்லியின் தந்தை.

“எனக்குத் தெரியும்” என்றாள் அல்லி.

அடிகள் அச்சரியம் எல்லை கடக்கவே அவர் மஞ்சத்தி லிருந்து எழுந்து அல்லிக்கு வெகு அருகில் வந்து கேட்டார், “பெண்ணே! உனக்குச் சோதிடம் தெரியுமா?” என்று.

அல்லியின் அழகிய விழிகள் சிறிதும் பயமின்றி அடிகளை நோக்கின. அலட்சியமாக அவள் தலையை அசைத்தபோது அவள் முகத்தில் தொங்கிய ஓரிரு சுருட்டை மயிர்களும் அடிகளை அலட்சியம் செய்வனபோல் முகத்தில் வளைந்து படுத்தன. துறவறம் பூண்டாலும் அழகை ரசிக்கக் கூடிய சமண அடிகள் அந்தச் சமயத்தில் அந்த மடந்தையின் மதி முகத்தில் பிரதிபலித்த அலட்சியச் சாயையும், அந்த அலட்சியமே அவள் அழகைப் பன்மடங்கு அதிகமாக்கியதை யும் கண்டதன்றி, அவள் தைரியத்தையும் அழகையும் எண்ணிப் பார்த்துப் பிரமிப்பும் அடைந்தார். அடுத்த விநாடி அவள் சொன்ன பதில் அவர் பிரமிப்பை ஆயிரம் மடங்கு அதிகப்படுத்தியது.

“சோதிடம் தெரியாது அடிகளே! ஆனால் பிரும்மா னந்தரைத் தெரியும்” என்று மிக அலட்சியமாகவும் கூறினாள் அல்லி.

அடிகளின் இதழ்கள் இகழ்ச்சிப் புன்முறுவல் கொண்டன.

“என்னைவிடப் பிரும்மானந்தரை நன்றாக அறிவாயோ?” என்று அந்த இகழ்ச்சி குரலிலும் ஒலிக்கக் கேட்டார் அடிகள்.

“தெரியும். அதற்குச் சான்றுதான் இன்றே கண்டீரே?”

“எப்படிக் கண்டேன்?”

“நீர் பசுபதி மடத்துக்கு வரப்போவதை முன்னதாக அறிந்து உம்மை நானே வரவமழைக்கவில்லையா?”

“ஆம், “

“நீர் வருவது எனக்குத் திட்டமாகத் தெரியாது அடிகளே! ஆனால் ஊக௫த்தேன்.”

“என்ன ஊகித்தாய்?”

“தமிழகம் அமளிப்படும்போது பிரும்மானந்தர் சும்மாயிருக்கமாட்டார் என்பதை ஊகித்தேன். மாரப்ப வேளின் மகள் பூவழகிக்கும் இருங்கோவேளுக்கும் திருமண ஏற்பாடு நடப்பது கண்டிப்பாகப் பிரும்மானந்தருக்குத் தெரியவரும் என்று ஊகித்தேன். தெரிந்தால் அவர் தமக்கு நம்பிக்கையான யாரையாவது பசுபதி மடத்துக்கு அனுப்புவார் என்பதும், இந்தத் திருமணத்தைத் தடுக்க ஏற்பாடு செய்வாரென்பதையும் ஊ௫த்தேன்... என்று சொல்லிக்கொண்டே.

போன அல்லியின் வார்த்தைத் தொடரை அடிகளின் அதிர்வெடி போன்ற பேய்ச்சிரிப்பு சட்டென்று வெட்டி விடவே, அவள் அசனத்திலிருந்து துள்ளி எழுந்தாள். “ஏனிப்படிச் சிரிக்கிறீர்கள்?” என்று பெண் புலி போல் சீறி அடிகளை எரித்து விடுவதுபோல் பார்க்கவும் செய்தாள்.

அடிகளின் சிரிப்பை அவள் சீறலோ பார்வையோ நிறுத்த முடியவில்லை.

“ஊகம் பிரமாதம்!” என்றார் அவர்.

அவர் பேய்ச் சிரிப்பு அல்லியின் தந்தைக்குப் பெரும் அருவருப்பாயிருக்கவே, “அடிகளே! சிரிக்க இது சமயமல்ல.

அவகாசம் இப்பொழுது இல்லை” என்றார் சற்றுக் கடுமை யாக.

அந்தக் கடுமையின் விளைவாக தமது உவமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அடிகள் அல்லியை நோக்கி, “பெண்ணே! சாதாரணமாக ஊகிக்க வேண்டிய முறைப்படி நீ நினைப்பது போல் இந்தத் திருமணத்தைத் தடை செய்ய அவர் என்னை அனுப்பவில்லை...!” என்று மேற் கொண்டு எதுவும் சொல்லாமல் இருந்தார்.

“வேறெதற்கு அனுப்பியிருக்கிறார்?” என்று கேட்டாள் அல்லி.

அடிகள் தமது பதிலைப் பெரு வெடியாக வீசினார்.

“திருமணத்தை நடத்தி வைக்க அனுப்பியிருக்கிறார் அல்லி” என்றார் அடிகள்.

அல்லியின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. “பிரும்மானந்தருக்குப் பைத்தியம் ஏதாவது பிடித்திருக் கிறதா?” என்று கேட்டாள்.

“அப்படியொன்றும் தெரியவில்லை.”

“இல்லையேல் அவர் திட்டம் மிக வி௫ித்திரத் திட்டமாக இருக்கவேண்டும்.”

“அப்படித்தான் தெரிகிறது.”

“அப்படியானால் எங்கள் ஓலை...?”

“ஓலையா!/ என்ன ஓலை?”

இந்தப் பதிலைக் கேட்டதும் அல்லியின் முகத்தில் சந்தேகச் சாயை ஒரு விநாடி படர்ந்தது. அடுத்த விநாடியே அதைத் துடைத்து விட்ட அல்லி வினவினாள், குரலில் வருத்தம் மண்டிக் கிடக்க.

“பூவழகியின் வாழ்க்கையைக் கெடுக்க நீரும் ஒப்புக் கொண்டீரா?”

“ஒப்புக் கொள்ளவில்லை.

இஷ்ட விரோதமாகத்தான் வந்தேன்.”

“அப்படியானால் நான் சொல்கிறபடி கேட்கிறீரா?”

“பிரும்மானந்தர் உத்தரவை மீறியா?”

“அம்.

யார் உத்தரவையும் சில சமயங்களில் மீற அவசிய மாகிறது.”

“பிரும்மானந்தர் தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடு பவ.

“நானும் அப்படித்தான். என்னுடன் வாரும். இருங்கோவேள் பூவழகியின் திருமணம் ஏன் நடக்காது என்பதற்குக் காரணம் காட்டுகிறேன்” என்று கூறிய அல்லி, உள்ளே சென்று ஒரு பெரும் போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டுவந்து, “அப்பா நீங்கள் இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்” என்று தந்தையிடம் கூறிவிட்டு, அடிகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றாள்.

அடர்ந்த தோப்புகள் வழியாக வெளியே விடுவிடு என்று நடந்த அல்லி, அரை நாழிகைக்குப் பிறகு ஒரு பெரும் மாளிகைக்குப் புறம்பேயிருந்த ஒரு தோப்பின் மரங்களுக் கிடையே சில விநாடிகள் நின்றாள். பிறகு பட்சி பிடிக்கும் வேட்டுவ சாதிப் பெண்கள் கூவும் முறையில் குயிலைப் போல் இருமுறை கூவினாள். குயிலின் குரலையொத்த அந்த இசையொலி அந்தத் தோப்பில் மிக இன்பமாக ஊடுருவிச் சென்ற சில விநாடிகளில் மாளிகையின் பக்கக் கதவு ஒன்று திறந்தது. கதவு திறந்தபின்பு அல்லியைப் போலவே உயர முடைய ஒரு முக்காடிட்ட உருவம் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி அப்புறமும் இப்புறமும் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
58. மாளிகைச் சிறை

காடுகளில் கண்ணி வைத்துக் காத்து, பறவைக் குரல் கொடுத்துப் பட்சி பிடிக்கும் வேட்டுவப் பெண்ணைவிட சாமர்த்தியமாகவும், அக்கம் பக்கத்திலிருப்பவர்களக்ூ ட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையிலும், குயிலைக் கூடப் பழிக்கும் இனிமையான பறவைக் குரலை இருமுறை தோப்பிலிருந்தே அல்லி எழுப்பியதும், அந்தக் குரலின் இனிமையிலேயே கருவூர் சமண மடத் தலைவர் அழுந்திக் கடந்தாராதலால், எதிரேயிருந்த மாளிகையில் பக்கக்கதவு ஒன்று திறந்ததையோ, திறந்த கதவின் வழியாக முக்காடிட்ட உருவமொன்று தன்னையும் அல்லியையும் நோக்கி வந்ததையோ அவர் உடனே கவனிக்கவில்லை. சமண அடிகளும் அல்லியும் ஒளிந்திருந்த தோப்பிலிருந்த நானாவித மரங்களின் புஷ்பங்கள் அனைத்தின் மணத்தையும் எதிரிலிருந்து வீசிய தென்றல் கவர்ந்து வந்ததால், பலவித வாசனைகள் கலந்து ஏதோ ஒரு கதம்ப மணம் அடிகளின் நாசியில் புகுந்துகொண்டிருந்தது. மா, இலுப்பை இம்மரங் களுடன் கலந்துநின்ற தேவதாருவும் தன் மலரின் சிறப்பை அடிகளுக்கு உணர்த்த அதிகப் பிரயத்தனப்பட்டதானாலும், இலுப்பைப் பூக்களின் பெருமணம் தேவதாரு, மா, இம்மரப்புஷ்பங்களின் மணத்தை ஓரளவு அடக்கிவிட்டதைக் கண்ட அடிகள், ‘இலுப்பைக் கசப்பிலும் மணமுள்ள மலா்கள் உண்டாகத்தான் செய்கின்றன. வாழ்க்கையும் இப்படித்தான் போலிருக்கிறது. கசப்புடன் ஏதோ சில இன்பரசத் துளிகளும் கலந்திருப்பதால்தானே மனிதன் உயிரை அத்தனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான்’ என்று உள்ளுக்குள் எண்ணி எண்ணி இயற்கையின் விசித்திரத்தைப் பற்றி வியந்து நின்றார். வேறு சமயமாயிருந்தால் அடிகளின் இந்த வியப்பு நீடித்து இருக்கும். வெகு விரிவாகப் பரந்து அவர் எண்ணங்களை வேதாந்த ரீதியில் இழுத்துச் சென்றிருக்கும். ஆனால், உலக ஜீவராசிகள் அனைத்தையும் சற்று வேதாந்தத்தில் திளைக்க விட்டு மீண்டும் சட்டென்று தனது வலைக்குள் இழுத்துக் கொள்ளும் மாயை அவர் எண்ணங் களைப் பட்டென்று அறுக்கவே, அவர் சுய நிலை அடைந்து தாம் வந்த பணியைப்பற்றி நினைக்கலானார். பணியைப் பற்றிய நினைப்பு வந்ததும், இருக்குமிடத்தைப் பற்றியும், யாருடனிருக்கிறோம் என்பதைப் பற்றியும் நினைத்துப் பார்த்த அடிகள் வேதாந்த சித்தத்தை ஓர் உதறல் உதறிவிட்டு அது இருந்த இடத்தில் அரசியல் யோசனைகளுக்கு இடங் கொடுத்தார்.

நாட்டு நலனை முன்னிட்டு இருங்கோவேள் பூவழகி திருமணம் நடக்கவேண்டுமென்று பிரும்மானந்தர் விரும்பு கிறார்.இதே நாட்டு நலனை முன்னிட்டு யவன ராணியும் அல்லியும் அந்தத் திருமணம் நடக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் யார் சொல்வதை நான் கேட்பது? இளஞ்செழியன் சொந்த நாடு திரும்பும் வரையில் இங்கு போர் மூளக்கூடாது என்று பிரும்மானந்தர் பிடிவாதமாயிருக்கிறார். இளஞ்செழியன் இனித் தமிழகம் திரும்புவானென்பது என்ன நிச்சயம்! ஆனால் அவன் யவன நாட்டின் அடிமைக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால்? அல்லது வழியிலேயே கொல்லப்பட்டிருந்தால்? அப்பொழுது அவன் எப்படித் இரும்ப முடியும்? அப்படி அவன் திரும்பவில்லையென்றால் சோழ மண்டலத்தின் கதி விபரீதமாகிவிடுமே. இருங்கோவேள் பூவழகி திருமணத்தை முடித்து நாங்கூர் வேளையும் அவனுடன் இணைத்துவிட்டால் தற்சமயம் போர் தடைப்படும். இந்த இடைவேளை அமைதி இளஞ்செழியன் திரும்பாவிட்டால் நிரந்தர அமைதியாகிவிடுமே. அப்படி இருங்கோவேளின் கீழ் சோழ மண்டலத்தில் நிரந்தர அமைதி ஏற்பட்டால் அவனுக்கு உதவ இன்று வந்திருக்கும் பெருஞ்சேரலாதனும், மதுரையிலிருந்த வண்ணம் சேரனை ஆட்டி வரும் பாண்டியனும் சோழப்பேரரசை ஓரு சிற்றரசாக அடிக்கத் தயங்கமாட்டார்களே. இதையெல்லாம் பிரும்மா னந்தர் யோசித்தாரா?’ என்று தமக்குள் பல கேள்விகளை எழுப்பிக்கொண்ட அடிகள், தமது கையைப் பிடித்து அல்லி உலுக்குவதை அறிந்து, “ஏன் அல்லி?” என்று கேட்டார்.

அல்லி பதிலேதும் சொல்லாமல் எதிரே மாளிகைத் தோட்டத்தின் வழியாகத் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த உருவத்தைக் காட்டி, “அதோ வருபவர் நம்மை நோக்கித்தான் வருகிறார். இந்தத் தோப்புமுனைக்கு வந்ததும் சட்டென்று திரும்பி அக்கம் பக்கத்தில் காவலைச் சோதித்து மீண்டும் மாளிகையை நோக்கிச் செல்வார். அவர் திரும்பியதும் நாமிருவரும் அவரைத் தொடர வேண்டும் ” என்று அடிகள் நடந்துகொள்ள வேண்டிய முறையைப்பற்றி விளக்கினாள்.

அடிகள் அல்லியையும் பார்த்து எதிரே வந்து கொண்டிருந்த உருவத்தையும் ஒருமுறை கவனித்துவிட்டு, குரலை மிகவும் அடக்கிக்கொண்டு, “அல்லி! உங்களிரு வருக்கும் போர்வையிருக்கிறது. எனக்குப் போர்வை யில்லையே. மாளிகைக் காவலர் என்னைக் கண்டுவிட்டால் என்ன செய்வது?” என்று அல்லிக்கு மட்டும் அவர் குனிந்து பேசிய போது, அல்லியின் முகத்தில் தவழ்ந்திருந்த சுருட்டை மயிர்கள் இரண்டு காற்றிலாடி அடிகளின் முகத்தில் பட்டதாலும், அல்லியின் தலையில் போர்வைக்குள் மறைந்திருந்த வாசமலரும் நாசியைத் துளைத்ததாலும், என்னதான் காஷாயம் கட்டியிருந்தபோதிலும் மனித உணர்ச்சிகளை அதிகமாக வெற்றி கொள்ளாத அடிகள், தமது அருகக் கடவுளையும் மடத்துப் புத்தரையும் ஒரு முறை மனத்தில் இருத்தி உணர்ச்சிகளைச் சுயவசப்படுத்திக் கொள்ள முயன்றார். எந்தச் சமயத்திலும் எந்தத் துறவியையும் வைராக்கியசாலியான விசுவாமித்திரனையும்கூட கலங்க வைத்த விரஸ உணர்ச்சிகளை விரக்தி உணர்ச்சிகளாக மாற்றிக்கொண்ட அடிகள், ‘இதற்குத்தான் துறவிகளுக்குப் பெண் சகவாசம் கூடாது என்று தனி மடமும் கட்டுகிறார்கள் போலிருக்கிறது. எனக்குத்தான் எத்தனை சோதனைகள்! அன்று ராணியைத் தூக்கிச் செல்லப் பணித்தார் மன்னர் கரிகாலன். இன்று அல்லியுடனும் பூவழகியுடனும் நெருங்கிப் பழகி அரசியல் நாடகத்தை நடத்த வேண்டிய பொறுப்பைப் பிரும்மானந்தர் சுமத்தியிருக்கிறார். என்னைப்போல் உலக நாடகங்களில் சிக்கும் துறவிக்குத் துறவறம் தேவைதானா?” என்று தம்மைத் தாமே கடிந்து கொள்ளவும் செய்தார்.

“எனக்குப் போர்வையில்லையே. உங்களைத் தொடர்ந்து எப்படி வருவேன்?’ என்று கேட்டுவிட்டுச் சுந்தனையில் அழ்ந்துவிட்ட அடிகளைப் பார்த்த அல்லி லேசாகப் புன்முறுவல் காட்டி, “அடிகளே! தியானத்துக்கு இது சமயமல்ல” என்றாள்.

“தியானத்தைக் கெடுக்கப் பெண்கள் உதவுவதுதான் புராணங்கள் கண்ட உண்மையாயிற்றே’ என்று நினைத்த அடிகளும் புன்முறுவல் கொண்டு “உண்மைதான்” என்று விஷமமாகப் பதில் சொன்னார்.

“எது உண்மைதான் என்று சொல்கிறீர்கள்?” என்று வினவினாள் அல்லி.

“பெண் பக்கத்திலிருக்கும்போது தியானம் நடவாது என்பதை” என்றார் அடிகள்.

“இரண்டு பெண்கள் உமது இருபுறத்திலும் இருந்தால்?” என்று அல்லி விஷமமாகக் கேட்டாள்.

துறவி உருப்படுவது ஏது?” என்று அடிகள் வெறுப் புடன் பதில் சொன்னார்.

“அப்படியானால் உமது துறவறம் உருப்பட முடியாது.”

“ஏன்?”

“அதோ வருவதும் பெண்.”

“அப்படியா?

“ஆமாம். எங்கள் இருவருக்கும் இடையில் நீங்கள் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு நடந்து வரவேண்டும்.”

“நன்றாகத்தானிருக்கும் அபரிமிதமாகக் கலந்திருந்தது.

அதைக் கவனித்த அல்லி சொன்னாள். “வேறு வழியில்லை அடிகளே! எங்களிருவருக்கும் முக்காடிட்டுக் கொள்ள, போர்வையிருக்கிறது. எங்களைப் பார்த்தால் ர்ச்? அடிகளின் பதிலில் இகழ்ச்சி நாங்கள் மாளிகைப் பணிப் பெண்கள் என்று மாளிகைக் காவலர் எண்ணிக் கொள்வார்கள். உம்மைப் பார்த்தால் அப்படி நினைக்க இடமில்லை. நீங்களே சற்றுமுன்பு கூறவில்லையா, போர்வையின்றி வந்தால் காவலர் பார்த்து விடுவார்கள் என்று.”

“அமாம். சொன்னேன்” என்று ஒப்புக்கொண்ட அடிகளைப் பார்த்த அல்லி, “ஆகவே எங்கள் மறைவில், எங்கள் இருவருக்குமிடையில் நீங்கள் அரவம் ஏதும் செய்யாமல் நடந்து வரவேண்டும்” என்று கூறினாள்.

அடிகள் விநாடி காலம் சிந்தனையிலிறங்கி விட்டுக் கேட்டார், “ஆமாம்... நான் வருவது அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா?” என்று.

“தெரியும்” என்று அல்லி பதில் சொல்லியபோது அடிகள் அச்சரியத்திலாழ்ந்து போனார். “எப்படித் தெரியும் அல்லி?” என்று கேட்கவும் செய்தார்.

“சற்று முன்பு இருமுறை கூவினேனல்லவா?” என்று அல்லி வினவினாள்.

“ஆமாம்.”

“ஒரு முறை கூவினால் நான் மட்டும் வந்திருக்கிறே னென்று அர்த்தம். இருமுறை கூவினால் வேறு ஒருத்தரும் வந்திருக்கிறார் என்று தெரியும்.”

அல்லியின் ஏற்பாடுகள், மாளிகையிலவிருப்பவர் களுக்கும் அல்லிக்கும் ஏற்பட்டுள்ள அதிசய சமிக்ஞைகள் இவற்றைக் கண்டு மேலும் மேலும் அச்சரியத்தால் மூழ்கிய அடிகள் ஏதும் பேசாமல் அல்லியிடம் தம்மைப் பூரணமாக, ஒப்படைத்து விட்டார். அல்லியும் அவளை நோக்கி வந்த பெண்ணும் மிக சாமர்த்தியமாகத் தங்கள் பணியைச் செய்து முடித்ததைக் கண்ட அடிகள் சில நிமிஷங்கள் பெரிதும் சங்கடப்பட்டாரானாலும் கடைசியில், “அப்பா! பெண்கள் மனம் வைத்தால் உலகத்தையே ஏமாற்றி விடுவார்கள்’ என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

அல்லி மறைந்திருந்த தோப்பின் முகப்பை அடைந்ததும் போர்வையால் தன்னை மறைத்துக் கொண்டு வந்த பெண் திரும்பி, தோப்பின் ஒரமாக, கிழக்கும் மேற்கும் இருமுறை நடந்து சென்றாள். பிறகு மீண்டும் தோப்பு முகப்புக்குள் புகுந்து மாளிகையை நோக்கத் திரும்பி நின்றாள். அதைக் கண்டதும் அல்லி, “அடிகளே... உமது மேல் துணியைத் தலையில் மூடிக் கொள்ளும்” என்று உத்தரவிட்டதுடன், அந்தச் சின்னஞ் சிறு காஷாயத்தை தானே எடுத்து வழவழத்த அவர் தலையில் வைத்து, “உம்” என்று துரிதப்படுத்தினாள். அந்தச் சிறு துணியால் முண்டனம் செய்யப்பட்ட சிரசை மூடிய அடிகளின் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு தோப்பு முகப்பில் நின்ற பெண்ணின் பக்கத்துக்குச் சென்றாள் அல்லி. இரு பெண்களும் அடிகளுக்கு இருபுறத் திலும் நின்று கொண்டதும் குள்ளமாயிருந்த அடிகளை இன்னும் சற்றுக் குனியச் சொல்லி தங்கள் போர்வைகளின் பக்கங்களால் அவரைப் போர்த்தி மறைத்தார்கள்.

பிறகு நடக்கும்படி. அவருக்குச் சைகை செய்து அடிகள் இடையே நடந்துவர இரு பெண்களும் மிகுந்த எச்சரிக்கை யுடன் மாளிகையின் பக்கக் கதவை நோக்கி நகர்ந்தார்கள். அதிக எச்சரிக்கையுடன் அந்தக் கதவை நெருங்கியதும் உள்ளே அடிகளை அழைத்துச் சென்று கதவைத் தாளிட்ட இரு பெண்களும் போர்வையை நீக்கவே, கூட வந்த பெண்ணின் முகம் எதிரே ஒடிய படிகளின் உச்சியிலிருந்து வீசிய விளக்கு வெளிச்சத்தில் லேசாகத் தெரியவே, “யாரது, இன்ப வல்லியா?” என்று பிரமிப்புடன் கூவினார் அடிகள்.

“அம் அடிகளே!” என்று கூறிய இன்பவல்லி, “நீங்கள் என்னை இங்கு எதிர்பார்க்கவில்லையா?” என்று கேட்டாள்.

“இல்லை.

ஏன் கேட்கிறாய்?” என்றார் அடிகள்.

“அல்லி சொல்லவில்லையா?’’ என்று மீண்டும் கேட்டாள் இன்பவல்லி.

“அல்லி எதுவுமே சொல்லவில்லை” என்று கூறிய அடிகள் ஏதோ குற்றம் சாட்டுபவரைப் போல் அல்லியை நோக்கினார்.

அல்லியின் கண்களும் அடிகளின் கண்களும் ஒரு முறை சந்துத்தன. பிறகு இன்பவல்லியின் பார்வையுடன் தன் பார்வையை இணைத்த அல்லி, “இல்லை இன்பவல்லி... நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை” என்றாள்.

இன்பவல்லி அடிகளை மீண்டும் நோக்கிவிட்டுக் கேட்டாள், “இங்கு பூவழகி சிறையிருப்பது உமக்குத் தெரியாதா?” என்று. “எனக்கெப்படித் தெரியும்?” என்று குழப்பத்துடன் வினவினார் அடிகள்.

“பிரும்மானந்தர் சொல்லவில்லையா?” சற்று பயத் துடன் வெளிவந்தது இன்பவல்லியின் அடுத்த கேள்வி.

“இல்லை, அவருக்கு எப்படித் தெரியும்?” என்றார் அடிகள்.

இன்பவல்லியின் வதனத்தில் பயமும் கவலையும் மிதமிஞ்சித் தாண்டவமாடின. “நாங்கள் ஒலை எழுதியனுப்பி னோமே” என்றாள் அவள்.

இதைக் கேட்ட அடிகள் மனத்திலும் பயம் உதய மாகவே, “ஒலை எதுவும் வரவில்லையே” என்றார் அடிகள்.

“அம் இன்பவல்லி! ஓலை போய்ச் சேரவில்லை” என்றாள் அல்லி.

“உனக்கெப்படித் தெரியும் அது?”

“அடிகள் முதலில் என் வீட்டுக்கு வந்ததும் பேசிய முறையிலேயே புரிந்து கொண்டேன். அகையால் அவர் வருவதை நான் ஊகித்ததாகப் பொய்யும் சொன்னேன். இங்கு நடக்கும் விஷயங்களோடு அடிகளைப் பசுபதி மடத்தில் நாம் சந்திப்பதாக எழுதிய ஒலை வாணகரை வரையில் எட்ட வில்லை.”

“அப்படியானால் தூதுவன் என்ன அனான்?”

“விளங்கவில்லை.”

“ஒலை மாற்றார் கையில் விழுந்தால்...?”

“பூவழகியின் வாழ்வு நாசம்.”

அல்லியின் இந்தப் பதிலைக் கேட்ட அடிகளும் இன்பவல்லியும் மிதமிஞ்சிய திகிலால் இடிந்தே போனார்கள். ஒலையும் தூதுவனும் என்ன அனார்கள் என்பதால் நிலை குலைந்து போன இன்பவல்லி, “இதை முதலில் தலைவியிடம் சொல்ல வேண்டும். வாருங்கள் அடிகளே!” என்று தன்னைத் தொடரும்படி அவருக்குச் சைகை செய்து படிகளில் ஏற முயன்றவள், சட்டென்று முதல் படியிலேயே நின்று எதையோ உற்றுக் கேட்டாள். அவள் முகத்திலிருந்த கவலை அதிகக் கவலைக்கு இடங்கொடுத்தது. பீதி, அதிக பீதிக்கு இடங் கொடுத்தது. அந்தக் கவலையும், பீதியும் அடிகளையும் அல்லியையும் கவர, அவர்களும் சற்று நேரம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு மெளனமாகவே நின்றார்கள். அவர்கள் சற்று முன்பு நுழைந்த வெளிக் கதவு மீண்டும் மும்முறை லேசாகத் தட்டப்பட்டது!

மாளிகைத் தோட்டத்தில் திறக்கும் அந்தப் பக்கக் கதவு தட்டப்பட்டதும் பீதி கொண்ட மூவரில் அல்லியே சட்டென்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட தன்றி, சிறிது தைரியமும் கொண்டு, “அடிகளை அழைத்துப் போ இன்பவல்லி! கதவை நான் திறக்கிறேன்” என்று கூறி அவர்களை மேலே செல்லத் துரிதப்படுத்தினாள். அல்லியின் சொற்படியே அடிகளை அழைத்துக் கொண்டு படிகளில் ஏறி இன்பவல்லி மறைந்தாள். அவர்கள் மேற்படியிலிருந்து மறைந்ததும் தனது மடியிலிருந்த சிறு கத்தியை எடுத்து உருவிப் பிடித்துக் கொண்டு வலது கையைப் பின்புறம் மறைத்துக் கொண்ட அல்லி, இடது கையால் மெள்ள தாளை நீக்க, கதவை லேசாகத் திறந்தாள். அடுத்த விநாடி அவள் கையிலிருந்த கத்தி பலமான ஒரு கரத்தால் அகற்றப்பட்டது.

ஒரு முரட்டுக் கரம் அவள் பூவுடலைச் சுற்றி வளைத்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
59. புயலும் பூங்கொடியும்

எல்லைப்புற மாளிகையிலிருந்து நந்தவனத்துக்கு வழிவிடும் பக்கக் கதவை யாரோ மும்முறை தட்டுவதைக் கேட்டதுமே திகைப்படைந்த அல்லி, கையில் கத்தியை உருவிப் பின்புறம் பிடித்துக்கொண்டு மிகுந்த எச்சரிக்கை யுடன் தாளைக் கழற்றினாளானாலும் அந்த எச்சரிக்கை அடியோடு பயனற்றுப் போனதையும், கதவைத் திறந்த அண்மகன் புயல்போல் உள்ளே நுழைந்ததன்றி, தன் கையிலிருந்த கத்தியை அகற்றி, பலமான அவன் கரத்தினால் தன்னையும் வலிய அணைத்ததையும் அறிந்ததும் திகைப்புப் பன்மடங்கு மேலிட்டவளாய் மேலிருந்த இன்பவல்லியைக் குரல் கொடுத்து அமைக்க வாயைச் சிறிதே திறக்க முயன்றாள். எதிர்பாராத விதமாக அந்த மாளிகைக்குள் நுழைந்த அந்த அடவன், அவளுடைய எண்ணத்தை நொடிப்பொழுதில் அறிந்து கொண்டானாதலால் அவளிடமிருந்து பிடுங்கிய கத்தியை அவள் இடையிலேயே செசருகிவிட்டு அந்தக் கையாலேயே அவள் செவ்விய இதழ்களையும் பலமாகப் பொத்தி, அவளைப் பேச விடாமல் அடித்ததல்லாமல் அவள் காதுக்கருகில் தன் தலையையும் சாய்த்து, “கூவாதே அல்லி. நான்தான்!” என்று ஏதோ மந்திரம் ஓதுவது போல் ஓதினான்.

அந்தச் சொற்கள் மந்திர சொற்களாகத்தானிருக்க வேண்டும்! இல்லையேல் அல்லி ஏன் அப்படிச் சிலைபோல் நின்றுவிட்டாள்! எங்கே அவள் கண்களில் தாண்டவமாடிய எச்சரிக்கை? எங்கே அந்தக் கால்களில் எப்பொழுதும் காணப் பட்ட திடம்? அவள் சின்னஞ்சிறு உடலைக்கூடத் தாங்க முடியாத கால்களா அவை? ஏனிப்ப’ அடவளி் பூங்கொடி போல் அசைந்தாடுகிறாள்? வந்தது புயலா? ஆடியதும் பூங்கொடிதானா?

மாளிகையின் பக்கக் கதவு திறந்ததுமே மிகச் சிறியதா யிருந்த அந்த அறையின் நடுவிலேயே படிகள் கிளம்பி மேலே ஓடியதால், அந்த இடத்தில் தாராளமாக இருவர் நிற்பதே பெருங் கஷ்டமாயிருந்தது. தவிர, வந்த அண் மகன் கதவைத் திறந்ததும் அந்தக் கதவு வேறு உள் பக்கத்தில் பாதியை அடைத்துக் குறுக்கே நின்றதால் இருவரும் ஒருவரையொருவர் மிக நெருங்கியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் யாரென்பதை அறிந்ததும் உணர்ச்சி வேகத்தில் மெளன மாகவே அல்லி அவன்மீது சாய்ந்தாள். வந்த அண்மகன் தன்மீது சாய்ந்து கிடந்த அவளது சந்திர முகத்தை மெள்ள நோக்கினான். இன்பவல்லி மேலே சென்றபோது மாடிப்படி யின் உச்சியிலிருந்த விளக்கையும் எடுத்துச் சென்றுவிட்ட காரணத்தால் அந்த அறையில் இருள் சூழ்ந்திருந்ததாலும், அதன் விளைவாக, உள்ளே வந்த அண்மகனுக்கு அல்லியின் வதனம் தெளிவாய்த் தெரியவில்லையாகையாலும், அவளை இடது கையால் இறுக்கி அணைத்தவண்ணம் அவன் தனது வலது கையால் அவளது மலா் முகத்தையும், வழவழத்த கன்னத்தையும் மெல்லத் தடவிப் பார்த்தான். மார்பில் முகம் பக்கவாட்டில் பதிந்து கிடந்ததாலும், இடது கன்னம் மட்டுமே மேல் புறத்தில் தெரிந்ததாலும், அதைக் கையால் தடவிய அந்த அண்மகனின் கள்ள விரல்கள் அவள் மலர் விழிகளி லொன்றைத் தொட்டுப் பார்த்து அந்தக் கண் மூடியிருப்பதை அறிந்தன. அந்த அமைதியை நீக்கக்கூடாதென்ற காரணத் தாலோ என்னவோ அவன் விரல்கள் நேத்திரத்தைவிட்டு அகன்று நுதலிலே சுருண்டு விளையாடிய கேசங்களைச் சுருட்டிச் சுருட்டி விஷமம் செய்யத் தொடங்கின.

அந்த விஷமத்துக்கு உதவி செய்ய முற்பட்டனபோல் மாளிகைக்குச் சற்று எட்டியிருந்த தோப்பிலிருந்த தேவதாரு மரங்கள் மெள்ள அசைந்து, தங்கள் மலர்களின் சுகந்தத்தைத் திறந்த பக்கக் கதவின் வழியாக அந்த மாடிப்படியின் சிறு அறைக்கு அனுப்பி வைத்தன. இருளில் வந்த அந்த தேவதாரு மலர்களின் மணமும், அதைச் சுமந்துவந்து தலைவி உள்ளிருக்கும்போது பயத்துடன் வெளியிலிருந்தே புஷ்பத் தட்டை வைத்துவிட்டு ஒடும் பணிமகள் போல, மலர் மணத்தைத் திறந்து கதவு வழியாகத் திருட்டுத்தனமாக உள்ளே அனுப்பிப் பின்வாங்கிய மென்தென்றலின் சுகழும், வந்த அண்மகனின் சுய உணர்வைப் பெரிதும் உலுக்கி விட்டன. அவளது நெற்றிக் குழல்களோடு விளையாடிய விஷம விரல்களை அவள் கை தடுத்தது. அந்தத் தடையை மீண்டும் மீற முற்பட்ட துஷ்ட விரல்களின் குறுக்கே அவளது பூ விரல்கள் பாய்ந்து அவற்றுடன் பின்னிக்கொண்டதல்லாமல், “ஊம்” என்று சற்று அதட்டலான எச்சரிக்கைக் குரலொன்றும் அவளிடமிருந்து வெளிப்பட்டது.

அந்த எச்சரிக்கையின் விளைவாகச் சற்றுத் தன் துஷ்டத் தனத்தை நிறுத்திய அந்த அண் மகன் மறுபடியும் அவள் காதுகளை நோக்கிக் குனிந்து, “என்ன அல்லி?” என்று மிகவும் ரகசியமாகக் கேட்டான்.

அல்லி உடனே பதில் சொல்லாததால் அவன் இதழ்கள் காதைவிட்டுச் சற்று விலகி அழகிய கன்னத்துடன் உறவாடின.

“ஊம்!”

இம்முறை அந்த ஊம்!” சற்று நீண்டும் பலமாகவும் வெளிவந்தது.

“என்ன அல்லி?’’ அவன் சொற்கள் குழைந்தும் கொஞ்சலாகவும் வெளிவந்தன.

“இன்பவல்லி இப்பொழுதுதான் மேலே போனான்...” என்றாள் அல்லி.

“நல்லதாய்ப் போய்விட்டது...”

“போகும் போகும்...”

“போகாமலென்ன?”

“அவள் திரும்பி வந்தால் தெரியும்...”

“என்ன தெதரியும்?”

“சரி சரி...”

“அப்படியானால் சம்மதமா?”

“வரவர உங்கள் போக்கு அழகாயிருக்கிறது! ”” என்று பொய்க் கோபம் காட்டினாள் அவள்.

அண்மகனின் அசட்டுச் சிரிப்புக்கும் பெண்களின் பொய்க் கோபத்துக்கும் இடையே எழுவதுதான் காதல். இக்காதல் துளிர்த்தாலே இந்த விகாரங்களுக்கு இடமேற்பட்டு விடுகிறது. அகையால்தான் வடமொழியும் காமத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது காம விகாரம் என்று குறிப்பிடுகிறது போலும்! அதன் விளைவாக அந்த அண்மகன் மீண்டும் சரித்து, “என்மீது கோபமா அல்லி?” என்று வினவினான்.

“கோபமில்லாமல் எப்படியிருக்கும்?” என்றாள் அந்த அழக.

“கோபப்படும்படி நான் என்ன செய்துவிட்டேன்?”

“இன்னும் என்ன செய்ய வேண்டும்?”

“சொன்னால் கோபிப்பாய்.”

“இந்தப் பேச்சை நிறுத்துங்கள் முதலில்.”

“ஏன் அல்லி?” அல்லி அவன் பிடியில் மெள்ள ஒருமுறை அசைந்தாள். அவள் அங்கலாவண்யங்கள் உடலில் உராய்ந்தமையால் மெய்சிலிர்த்துப் பெரிதும் சங்கடப்பட்ட அந்த அண்மகனை நோக்கிச் சிறிது வருத்தத்துடனேயே சொன்னாள் அல்லி, “பிரபு! ஒரு வருட காலமாகவே இந்தத் தவற்றிலிருந்து உங்களைத் தடுத்து வருகிறேன்” என்று.

“இரண்டு வருடங்கள் என்று சொல் அல்லி” என்றான் அந்த அண்மகன்.

“இரண்டு வருடங்களா?... இரண்டு வருடங்களா அதற்குள் ஒடி விட்டன!” வியப்புடன் கேட்டாள் அல்லி.

“ஆம், அல்லி! என் தந்தையின் ரதத்திலிருந்து இளஞ்செழியன் உன்னைக் காப்பாற்றிய அன்று முதலே உன்னிடம் என் இதயத்தைப் பறிகொடுத்து விட்டேனே.”

“நல்ல லட்சணம்...! நீங்கள் அப்பொழுது சிறுபிள்ளை.”

“நீ மட்டுமென்ன, பெரிய மங்கையோ? உனக்குப் பதினாறு வயது, எனக்குப் பதினெட்டு.

படைத் தலைவன் முகத்தில் குங்குமத்தைப் பதித்து, பூவழகியைச் சீறும்படி செய்துவிட்டதால் உனக்கு வயது இருபதாகிவிடுமோ?” இளஞ்சேட்சென்னியின் மகன் விடுத்த இந்தக் கேள்வி மூன்று வருடங்களுக்கு முன்பு அவள் இதயத்தை இழுத்துச் செல்லவே, அவள் மனக்கண் முன்பாக அந்தப் பழைய காட்சிகள் மீண்டும் எழுந்து தாண்டவமாடின.

அந்தச் சிறு வயதிலேயே சீறும் புரவிமீது கரிகாலன் புயல்போல் காவிரிப்பூம்பட்டினத்தின் வீதிகளில் பாய்ந்து வரும் அந்தக் காட்சி, அந்தப் புரவியின் வேகத்தின் முன்பாக மக்கள் சிதறி வீதிப் பக்கங்களில் ஒதுங்கிய கோலம் -அனைத்தையும் எண்ணிய அல்லி, அப்பப்பா! அப்பொழுதே எத்தனை துஷ்டப் பிள்ளை இவர்!” என்று மனத்துள் யோசித்துப் பேருவகையும் எய்தினாள்.

“அதே காவிரிப்பூம்பட்டி னத்தில் இந்திர விழாவின்போது நடக்கும் எத்தனை வீர விளையாட்டு களில் இளவரசர் கலந்துகொள்வார்! வேல்களை எத்தனை தூரம் குறி பார்த்து வீசுவார்! எத்தனை அபாயமாகக் குதிரைமீது சுழன்று சுழன்று பெரிய வீரர்களோடு வாட்போர் புரிவார்! அத்தனை அபாய விளையாட்டுகளுக்கு இந்தச் சிறுபிள்ளையை அனுமதிக்க மன்னருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் அல்லி.

“இளஞ்சேட்சென்னியின் ரதத்திலிருந்து படைத் தலைவர் என்னைக் காப்பாற்றிய மறுநாள் விசாரிக்க வந்த இந்தப் பெரியவர், அன்று எத்தனை வெட்கப்பட்டு என் தந்தையின் முன்பு நின்றார்! அப்படி வெட்கப்பட்டு நின்ற சமயத்திலும் அந்தத் திருட்டுக் கண்கள் எப்படி, உள்ளறையில் பாய்ந்து என்னைக் கண்டுபிடித்தன!’ என்று எண்ணி எண்ணி உள்ளம் பூரித்துச் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய் அல்லி?” என்று வினவினான் கரிகாலன். “வயதைக்கூடச் சரியாகக் கணக்குப் போட்டி ருக்கிறீர் களே? அதை எண்ணிச் சிரித்தேன்” என்று அவள் கேலியாகப் பதில் சொன்னாள். “ஒரு பெண்ணை மணக்க விரும்பும்போது பொருத்தம் பார்க்க வேண்டாமா?”“அதைச் சோதிடர்கள் பார்க்க மாட்டார்களா?”“எல்லாவற்றிற்கும் பிறர் கையை எதிர்பார்க்கலாமா?”

“கூடாதுதான்.”

“ஒப்புக்கொள்கிறாயா?”

“எதை?”

“எல்லாவற்றிற்கும் பிறர் கையை எதிர்பார்க்கக் கூடாது என்பதை.”

“ஏம்.”

“ஆனால் அல்லி.”

“என்ன அரசே?”

“நான் ஒருவர் கரத்தை எதிர்பார்க்கிறேன் அல்லி.”

“யார் கரம் அது?”

“இந்தப் பூங்கரத்தை நான் எதிர்பார்க்கிறேன் அல்லி” என்று அவள் கையைப் பற்றினான் கரிகாலன்.

“இது பணிமகள் கரம்! நீங்கள் மண்டலாதிபதி” என்று சுட்டிக் காட்டினாள் அவள்.

“இப்பொழுதில்லை.”

“இனிமேல் ஆகலாம்.”

“மண்டலாதிபதி பணிமகளை மணக்கக்கூடாது என்பதற்குத் தடை இருக்கிறதா அல்லி?”

“தடை இல்லை மன்னவா! இருப்பினும் உங்கள் பதவியை நான் கவனிக்க வேண்டும்.”

“ஏன் கவனிக்க வேண்டும்?”

“நாட்டு நலன் அத்துடன் பின்னிக் கிடக்கிறது.”

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“நாட்டுக்கு நலன் தரும் வகையில் மணம் முடிக்க வேண்டும்.”

“என் நலன், என் உணர்ச்சிகள்?”

“நாட்டு நலன் குறுக்கிடும்போது அவற்றுக்கு இடமில்லை.”

“ஏன்?”

“மன்னர் வாழ்வு அத்தன்மையது.”

“இதையெல்லாம் யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது?”

“என் தந்தை.”

“அப்படியானால் உன் தந்தை எனக்கு வேறு பெண் பார்த்திருக்கிறாரா?”

“பார்த்திருக்கிறார்...”

“யார் அவள்?”

“நாங்கூர்வேளின் மகள்.”

இதைக் கேட்ட கரிகாலன் பெரிதாக நகைத்தான். அவன் நகைப்புக்குக் காரணத்தை அறியாத அல்லி, “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“விதியை நினைத்து நகைக்கிறேன்” என்றான் கரிகாலன்.

“விதி என்ன செய்தது?”

“நாங்கூர்வேள் மகளை எனக்கு அளிக்க முற்பட்டிருக்கிறது.”

“அதற்கு நகைப்பென்ன வேண்டியிருக்கிறது?” எரிச்ச லுடன் கேட்ட அந்தப் பூங்கொடியைப் புயலென மீண்டும் இறுகப் பிடித்தான் கரிகாலன். பூங்கொடி அந்தப் புயலில் ஒரு கணம் ஆடியது, மறுகணம் திமிறியது. அத்தனைத் திமிறலிலும் அவளை நன்றாக இறுகப் பிடித்த கரிகாலன், “உன் யோசனை சரி அல்லி! நாங்கூர்வேள் மகளை, மணக்க முடிவு செய்து விட்டேன்” என்று கூறி. அவள் இதழ்களையும் நெருங்க முற்பட்டான்.

வெறுப்பினாலும் மிதமிஞ்சிய கோபத்தாலும், “விடுங்கள் என்னை. வேறொரு பெண்ணை மணக்க எண்ணி என்னைத் தொட என்ன திமிர் உங்களுக்கு?” என்று பலமாகத் திமிறி, தன்னை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள் அல்லி. அந்தத் துஷ்டன் விடவில்லை. அவள் காதில் ஏதோ ஓதினான். அது மந்திரமாகத்தான் இருக்க வேண்டும். அதைக் கேட்டதும் மந்திரத்தால் உந்தப்பட்ட வளைப்போல் அல்லி மெள்ளத் திரும்பினாள். அவள் திமிறல் நின்றது. கோபம் அகன்றது. காதல் நிறைந்தது! இருளின் மறைவில் இதழ்கள் சிறைப்பட்டுக் கிடந்தன. தேவதாரு வெளியிலிருந்து மேலும் மேலும் தன் மலர்களின் மணத்தை அனுப்பிக்கொண்டேயிருந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top