• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாதெனில் காதலாய் நின்றாயே 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
யாதெனில் காதலாய் நின்றாயே

அத்தியாயம் 01

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.


என்று முருகன் பாடல் அந்த அதிகாலை பொழுதினில் அந்த பெரிய வீட்டில் பாடிக்கொண்டிருக்க ,அந்த வீட்டின் எஜமானியான பூங்கோதை அவரின் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.

அதாவது அந்த மாடி வீடு முழுவதையும் சாம்பிராணி புகை கொண்டு மணக்க வைத்து கொண்டே மணியை அடித்த படி ஒவ்வொரு அறையாக சென்று காட்டிக்கொண்டு வந்தார்.

அப்போதே எழுந்து வந்த அவரின் காதல் கணவர் மாணிக்கம் , சாம்பிராணியில் வரும் நறுமணத்தை நுகர்ந்தவாறே " என் பொண்டாட்டி காட்டிட்டு வர சாம்பிராணி வாசமா இல்லை கோதை யூஸ் பண்ற சாம்பூ வாசனையானே தெரியல .ஆனா பாரு கோது மா அப்படியே என்ன உன்கிட்ட இழுத்துட்டு வருது " என காலையிலே அவரது காதலை தொடுக்க தொடங்க ,அவரை கண்டு முறைத்த பூங்கோதை " உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வயசுல பசங்க இருக்காங்க ஞாபகத்துல வச்சி நடந்துக்கோங்க " என்று விட்டு சாமி அறைக்குள் புகுந்து கொண்டார்.

"அடி போடி ! கல்யாணம் பண்ற வயசுல பசங்க இருந்தா நான் காதலிக்க கூடாதுன்னு எதாவது இருக்கா என்ன .காதலுக்கு கண்ணு மட்டும் இல்ல டி வயசும் இல்லை " என்று சத்தமாக முணங்கியவாறே வெளியே இருக்கும் சோஃபாவில் அமர்ந்தார் மாணிக்கம்.

சாமி அறையில் சூடம் ஏற்றி கும்பிட்ட கோதை , கடவுளிடம் எப்போதும் கேட்கும் வரத்தை கேட்க தொடங்கினார்.

" அப்பா முருகா..!!நீங்க இந்த குடும்பத்துக்கு ஏத்த ஒரு மருமகளா கூட்டி வர என் மகன சம்மதிக்க வைக்கனும்.நான் ஆச பட்ட பொண்ண அவன் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன்.ஆனா அது நடக்கல , சரி அவன் அச பட்ட பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்குவான்னு பாத்தா அது நடக்காமலே பொய்டுச்சி.எனக்கு என்னோட யுவிக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்க ஆசப்படுறேன். அதுக்கு நீங்க தான் ஒரு வழி பண்ணி தரனும் கடவுளே " என்று மனம் ஒத்த முருகரிடம் வேண்டுதலை வைத்தவர் கண்ணீர் கீற்றுடன் வெளியே வந்தார்.

தன் மனையாளின் கண்ணீரை கண்ட மாணிக்கம் ," இங்க பாரு கோது மா உனக்கே தெரியும் அவன் அந்த பொண்ண எந்த அளவு விரும்புனான்னு. அதுல இருந்து வெளி வரது ஒன்னும் சின்ன விசயம் இல்ல. அதுவும் கல்யாணம் வரைக்கும் வந்து நின்னு போச்சி. அவன் எவ்வளவு ஆசை கனவோட இருந்திருப்பான் சொல்லு. கண்டிப்பா நம்ம பையனுக்கு அவனையே உயிரா நினைக்கிற பொண்ணு வருவா அதுவரைக்கும் நாம அமைதியா தான் இருக்கனும் சரியா. அவனுக்காக அவனை அப்படியே விரும்புற பொண்ணு தான் உனக்கு மருமகளா வருவா நீ வேணா பாத்துக்கிட்டே இரு சரியா " என்று பொறுமையாக கோதைக்கு அறிவுரை சொல்லி கண்ணீரை துடைத்து விட்டார்.

மாணிக்கம் எவ்வளவு கூறியும் ,தன் மைந்தனின் வாழ்வை நினைத்து உள்ளுக்குள் கலங்கி கொண்டு தான் இருந்தார்.

தன் மனையாளின் வருத்தத்தை போக்குவதாக நினைத்து ,யாருக்கோ அழைத்து பேசினார். அதன் பின் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

वारे वा மாமா
ரே ரே போலாமா
क्या रे setting'ah?
चल रे चल மாமா
Gang'ah long'ah
போலாம் வா மாமே


கோக்கா மாக்கா
என்ன ஏதுவும் கேக்காத
Right'ah? Wrong'ah?
இனி எதையும் பாக்காத
தோளு மேல money money'தான் பை பையா
வாழ போறோம் இனி இனிதா hi-fi'ah
Gang'ah long'ah போலாம் வாரியா




என்ற சினிமா பாடல் மாடியில் வலப்புறத்தில் இருந்த அறையில் இருந்து சத்தம் வர ,இதுவரை கலங்கி கொண்டு இருந்தவர் மூக்கு நுனியில் கோபத்தை கொண்டு வந்து ," வாசு என்னடா பண்ற உன்னோட ஒரே ரோதனையா போச்சி .ஒழுங்கு மரியாதையா அத நிப்பாட்டுறீயா இல்லையா " என்று தன் இரண்டாம் புதல்வன் அறையை நோக்கி கத்தல் விடவே

வெளியே இருந்து மெதுவாக தலையை இடப்புறம் திரும்பி பார்த்தவன் ,தன் அண்ணனின் அறைக்கதவு இன்னும் திறக்க வில்லை என்று அறிந்து கொண்டு டான்ஸ் ஆடிய படியே வெளியே வந்தான்.

"ஹே மிஸஸ். பூங்கோதை மாணிக்கம் டெய்லியும் உன்னோட ஒரே ரோதனையா போச்சி " என்று தன் தாயார் சொன்னதை போல் சொன்னவன் ," நிம்மதியா இந்த வீட்டுல ஒரு பாட்டு கூட கேக்க முடியறது இல்ல " என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள..

"டேய்.! இதை நான் தான் டா சொல்லனும் இப்படி காலைல வீட்ல ஒரு சாமி பாட்டு கேக்க முடியுதா . நான் பாட்டு போட்ட கொஞ்ச நேரத்துலையே நீயும் இப்படி சினிமா பாட்டு போட்டு கேட்டா என்னடா அர்த்தம் " என்று கேட்டு விரைப்பாக நிற்க

" ஹான் வாலிபன்னு அர்த்தம் மம்மி " என்றான்.

" ஹோ !!சார் வாலிபனாக்கும் அப்போ ஆஃபிஸ் வரணும்னு ஐடியா இருக்கா இல்லையா " என்று கேட்டவாறே மாடியிலிருந்து இருந்து இறங்கி வந்தான் நம் நாயகன் யுவகிருஷ்ணன்.

தன் அண்ணனின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய தமையனின் முகம் பார்த்து அமைதியாக நிற்க

"சொல்லுடா ஆஃபிஸ்க்கு வரணும்னு ஒரு ஐடியா உனக்கு இருக்கா இல்லையா " என்று மீண்டும் கேட்க

" அண்ணா அது வந்து " என்று எதையோ கூற வந்தவன் அமைதியாகிட , ஆனால் அவனின் மனமோ " இந்த யுவி அண்ணா இப்போ எதுக்கு கீழ வந்தான். எல்லாம் இந்த அப்பாவால வரது. நான் பாட்டுக்கு ரூம்ல இருந்தேன். எனக்கு ஃபோன் பண்ணாம இருந்திருந்தா நான் இவன் கிட்ட மாட்டிட்டு இருந்திருக்க மாட்டேன் " என்று எண்ணியவன் தன் தந்தையை கண்டு முறைக்க

அவரோ அமைதியாக நின்று கொண்டு பேப்பர் பார்ப்பதை போல் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

"என்ன டா அது வந்து போகின்னு இழுத்துட்டு இருக்கிற" என்று முறைத்த வண்ணம் கேட்க

" அடேய் யுவி.!! அவனே பாவம் டா இப்போ தான் இவ்வளோ நாள் வச்சிருந்த இரண்டு அரியர்ஸ் எழுதி க்ளியர் பண்ணி இருக்கான். ஒரு ரெண்டு நாள் கழிச்சு கண்டிப்பா ஆஃபிஸ் பக்கம் வருவான் . இப்போ நீ வா உனக்கு பால் கொண்டு வந்து தரேன் " என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றார் பூங்கோதை.

"யாராவது கேட்டாங்களா இப்போ ,அதுவும் அவன் இப்ப கேட்டானா நான் எத்தன அரியர் வச்சிருந்தேன்னு இந்த அப்பாவும் அம்மாவும் என்னைய டேமேஜ் பண்றதுல முதல் ஆளா வந்து நிக்கிறாங்க " என்று மனதிற்குள்ளே புலம்பி தள்ளி கொண்டு அங்கேயே நிற்க ,

"டேய் மகனே !இன்னுமா நீ இங்கேயே நின்னுட்டு இருக்க . சீக்கிரம் எஸ் ஆகிரு மகனே இல்லன்னா உங்க அண்ணன் அதாவது என் மூத்த பையன் தங்க கட்டி வைரக் கட்டி திரும்ப வந்திட போறான் " என்று காதில் கிசுகிசுக்க ,அவரை முறைத்த படியே "அவன் கிளம்பி போகட்டும் அப்புறம் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் " என்றபடி அறைக்கு சென்று விட்டான் வாசுதேவன்.

அதன் பின் அமைதியாக எல்லா வேலைகளும் நடைப்பெற்றது.

பூங்கோதை காலை உணவாக யுவிக்கு பிடித்த பூரியும் உறுலைக்கிலங்கு மசாலாவும் செய்து வைத்திருந்தார்.

அறைக்கு சென்று குளித்து முடித்து வெளியே வந்தவன் வெள்ளை நிற சட்டையும் அதற்கு தகுந்தாற்போல் கருப்பு நிற கோட்டையும் அணிந்து கொண்டவன் கண்ணாடியின் முன்பு வந்து நின்றான்.

தன் இனுவிற்கு பிடித்த மாதிரி டையை அணிந்து கொண்டவனின் விழியில் நீர் கோர்த்து அவளின் ஞாபகத்தை உண்டு படுத்தியது.

காதலை அள்ளி தந்தவள்

அவளின் காதலாய் மாறிய பின்

காற்றாய் மறைந்து போனாளே...!!!!


அவளின் ஞாபகங்கள் மேலோங்க ,நேராக கப்போர்டை திறந்து அதில் அவன் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு டையை எடுத்து கண்ணீர் ததும்ப தடவி பார்த்தான்.

" உனக்காக தான இனு நான் இந்த டையையே கட்ட ஆரம்பிச்சேன். ஆனா நீ இப்படி பாதியிலே விட்டுட்டு பொய்ட்டியே டா. உன்கூட வாழனும்னு நான் எவ்வளவோ கனவு வச்சிருந்தேன் தெரியுமா. என் கனவு எல்லாம் இப்படி வீணா பொய்டுச்சே டா " என்று கண்ணீர் மல்க அந்த டையை தன்னுள் அணைத்து கொண்டு அவளின் நினைவிற்குள் மூழ்கி போனான்.

___________________

" ஹே..!! கிளம்பினியா இல்லையா இனு மா . நான் இங்க வந்து எவ்வளவு நேரமாச்சின்னு தெரியுமா முதல் நாளே லேட்டா போன்னா நல்லா இருக்காது டா. கொஞ்சம் சீக்கிரமா வாயேன் " என்று மொபைலில் அவனின் இனுவிடன் கெஞ்சி கொண்டு இருந்தான்.

"இரு டா வர வேண்டாம்மா .நீ பாட்டுக்கு ஊருக்கு முன்னாடி அங்க வந்து உக்காந்ததுக்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லு. அது மட்டும் இல்லாம நீ ஆம்பல பையன் சோ வீட்ல அசால்டா வீட்ருவாங்க ஆனா எனக்கு அப்படியா எங்க வீட்ல எதாவது பொய் சொல்லிட்டு வரனும்ல " என்று மொபைல் என்றும் பாராமல் அனல் கக்க அவள் பேச

" கூல் பேபி கூல் எதுக்கு இவ்வளவு டென்ஷன் சொல்லு. நீ பொறுமையாவே வா மா தாயே நானே வெயிட் பண்ணி உன்ன பாத்துட்டு போறேன் " என்று தன் காதலியிடம் சரணடைய ,,

"அது " என்றவள் " வெயிட் பண்ணு இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவேன் " என்றவள் மொபைலை அணைத்து விட்டாள்.

அவளுக்காக காலை ஏழு மணி பொழுதில் அந்த பூங்காவில் காத்திருந்தான் யுவி. இயற்கையின் அழகு நிறைந்து இருந்தது அந்த பூங்காவில். எங்கு பார்த்தாலும் செடி கொடிகள் நிறைந்து காணப்பட்டன.

சரியாக அவள் கூறியது போல் பத்து நிமிடத்திலேயே வந்து நின்றாள் அவனின் இனு.

" ஹே யுவா..!!" என்ற படி கையசைப்புடன் வந்தாள் இனு.

" வா இனு மா " என்றான் அவனும் சந்தோஷமாக

" சாரி டா கொஞ்சம் லேட்டாகிடுச்சி " என்று தன் மன்னிப்பை கோர

" என்ன இனு நமக்குள்ள என்ன சாரிலாம் சொல்ற .உனக்காக தான் இந்த வாழ்க்கையே இருக்கு. இதுல கொஞ்ச நேரம் உனக்காக காத்திட்டு இருக்க மாட்டேன்னா என்ன " என்று காதல் வசனங்கள் விட ,அதில் கரைந்தவள் போலும் அந்த இதனமான நேரத்தில் அவளின் கன்னங்கள் இரண்டும் சிவப்பேற துவங்கியது..

" போதும் உன்னோட காதல் டையலாக்ஸ கொஞ்சம் நேரம் ஒதுக்கி வை பா எனக்கு ரொம்ப குளிருது" என அவள் கிண்டலாக சொல்ல

"அச்சோ என்னோட இனுக்கு நான் இருக்கும் போது எப்படி குளிரலாம் சொல்லு. வா நான் உன்ன அரவணைச்சிக்குறேன் " என்று பக்கத்தில் நகர்ந்து வர

" போதும் போதும் அங்கேயே உக்காரு பக்கத்துல வராத " என்று சொல்லியவள் அவனுக்காக வாங்கி வந்த பாக்ஸை வெளியில் எடுத்தாள்.

அதை திறந்தவள் " உனக்காக தான் டை வாங்கிட்டு வந்தேன் டா யுவா .இவ்வளோ நாள் நீ உங்க கம்பெனிக்கே ஒரு ஸ்டாஃபா போன இனி நீ அங்க ஒரு எம்டி சோ இப்படி டை கட்டிட்டு தான் போகனும் சரியா " என்ற படியே அவனுக்கு அதை அணிவித்து விட்டாள்.

" எதுக்கு இந்த டைலாம் சொல்லு " என்று அவன் கேட்டிட

" என் தங்கச்சி தான் டா சொன்னா எதாவது ப்ரசண்ட் வாங்கிட்டு போன்னு . அப்போ தான் என்ன வாங்குறதுன்னு ஐடியா கேட்டேன். அவ டை வாங்கி குடுன்னு சொன்னா. அதான் டை வாங்கிட்டு வந்தேன் " என்றாள்.

" ஹோ " என்று எதுவும் பதில் பேசாமல் அமைதியாகி விட்டான்.

" இந்த டை எப்போதும் உன் இதயத்தை தொட்டு தான் இருக்கும் . நம்ம பிரிஞ்சி இருந்தாலும் இது உன்கூட இருக்கிற வரைக்கும் உன்னோட நான் இருக்கிற மாதிரி " என்றாள் அவனின் இதயத்தை தொட்டு காட்டி...

காதலனாக புன்னகையோடு அவளை அணைத்து கொண்டான்.

_____________________________

இவை அனைத்தையும் நினைத்தவனுக்கு ஏனோ தெரியவில்லை. காதலில் யாரின் செயலும் நடுவில் வராது என்று...

தன்னை தானே தேற்றி கொண்டு இருக்கையில் அவனின் நண்பன் அஸ்வின் அழைத்திருக்க ,அவனது அழைப்பை ஏற்றான்.

"சொல்லு அஸ்வின் " என்று கேட்க

" என்னத்த சொல்ல டா எரும ஆஃபிஸ்க்கு வரணும்னா சீக்கிரம் கிளம்ப தெரியாதா உனக்கு . இன்னும் என்னடா ரூம்ல வேலை சீக்கிரமா வந்து தொலை இல்லைன்னா பாத்துக்க என்ன நடக்கும்னே தெரியாது " என்று எடுத்த எடுப்பிலேயே கத்த

" சரி சரி கத்தாத இரு வரேன் " என்று அழைப்பை அணைத்தான்.

அவன் கையில் வைத்திருந்த டையை உள்ளே எடுத்து வைக்கும் போகும்மும் இரண்டு பொருட்கள் கீழே விழ பார்க்க , அதிலிருந்து ஒன்றை பிடித்தவன் மற்றொன்றை தவற விட்டான்.

பிடித்த ஒன்றை வலக்கரத்தால் வருடி விட்டவனின் முகத்தில் இத்தனை நேரம் இருந்த கவலை மறைந்து புன்னகையால் மாறியிருந்தது.

அவன் கையில் பற்றி இருந்த புகைப்படத்திலும் அவனின் காதலியான இனன்யா புன்னகையுடன் நின்றிருந்தாள்.

அஸ்வினின் கால் மீண்டும் வரவும் எடுத்த இடத்திலேயே வைத்தவன் ,கீழே சென்று விட்டான்.

கீழே விழுந்த பொருளில் மற்றொன்று யுவகிருஷ்ணன் வெட்ஸ் மித்ரவிந்தி என்று பெயரிடப்பட்ட பத்திரிகை.

யார் கண்களுக்கும் தென்படாமல் , அதுவும் யுவி கண்களுக்கு தென்பட கூடாது என்பதாலோ கப்போர்டின் அடியில் சென்று மறைந்து கொண்டது.

இன்று தவற விட்டவன் ,அதன் பின் வந்த நாட்களிலும் பெரிய பொக்கிஷம் ஒன்றை தவற விட இருக்கிறான் என்று தெரியாமல் போனது அவனுக்கு...
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Yar antha inu? Mithravinthi yaru
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top