• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாதெனில் காதலாய் நின்றாயே 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
யாதெனில் காதலாய் நின்றாயே

அத்தியாயம் 03

யுவி கூறியதை கேட்ட வாசுவிற்கு புரை ஏறியது. அதனை கண்ட மாணிக்கமும் பூங்கோதையும் உள்ளுக்குள் சிரித்தாலும் ,வெளியில் அவனை பாவம் போல் பார்த்து வைத்தனர்.

அவர்களை கண்ட வாசு மனதினில் " புள்ளைய பெக்க சொன்னா இந்த குட்டி குழந்தையை கொடும படுத்துறதுக்கு தொல்லைய பெத்து வச்சிருக்கீங்க " என்று மானியமாக திட்டி பார்வையை பதித்தான்.

"இதுக்கே இப்படியா " என்பது போல் அவனை பார்த்து வைத்தனர் இருவரும்.

" என்னடா அமைதியாவே இருக்க ,நாளைக்கு ஒழுங்கு மரியாதையா வந்துடு சரியா " என்று விட்டு எழுந்து கை கழுவ சென்று விட்டான் யுவகிருஷ்ணன்.

அவன் சென்ற அடுத்த நொடியே தாயையும் தந்தையையும் பார்த்தவன் ," உங்க ரெண்டு பேரு கையையும் அவன் என்ன கட்டியா போட்டு வச்சிருக்கான். தண்ணி க்ளாஸ் கூட தர மாட்டேங்கிறீங்க " என்று மிடுக்கான தோரணையில் கேட்க

இருவரும் ஒரே போல் " உனக்கு தான கண்ணா கடவுள் ரெண்டு கை கொடுத்திருக்காரு .நீ அத யூஸ் பண்ணுவேன்னு நினைச்சோம் " என்றனர்.

" அவ் நீங்க எல்லாம்... அய்யோ கடவுளே என்ன இப்படி ஒரு குடும்பத்துல பிறக்கிற மாதிரி வச்சிட்டியே .உனக்கு அந்த கண்ணு இல்லாம போச்சே " என்று மேலே ஓடிக்கொண்டிருந்த விசிறை கண்டு புலம்ப

" நீ இன்னும் சர்ட்டிபிகேட் வாங்க கிளம்பலையா வாசு " என்றே யுவி கேட்க

" இதோ அண்ணா சாப்பிட்டுட்டு கிளம்பிடுவேன் " என்றான் அமைதியாக

" சீக்கிரம் கிளம்பு அந்த ரெண்டு இன்னும் எவ்ளவோ நேரம் தான் சாப்பிட்டுட்டு ஓப்பி அடிக்க போற " என்றே கேட்டு அவனை நோக்க

" இது என்ன கண்ணா இல்ல கன்னா (Gun) நம்மளை சுட்டுட்டும் போலையே " என்று உள்ளுக்குள் அவனின் பார்வையில் கதிகலங்கியவன் " இதோ அண்ணா சாப்பிட்டேன் " என்று இரண்டே வாயில் இரண்டு இட்லியையும் திணித்தவன் , வேகவேகமாக எழுந்து அறைக்கு சென்றுவிட்டான் இல்லை இல்லை தெரித்துவிட்டான்.

அதன்பின் யுவி அறைக்கு வந்தவன் அவனின் இதயராணியின் புகைப்டத்தை கண்டு புன்னகை பூத்தவன் ,அதனை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வெளியேறினான்.

இன்னும் ஒருவாரத்தில் அவர்களின் கோதை கண்ட்ஸ்ட்ரக்ஷன் திறப்பு விழா இருக்க ,அதற்கான வேலையில் மும்முரமாக சுழன்று கொண்டு இருந்தார்கள் யுவியும் அஷ்வினும்.

"அஷ்வின் எல்லா வேலையும் சரியா தான நடக்குது . வேலைக்கு எல்லாம் ஆள் வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா " என்று கேட்டபடி லேப்டாப்பை நோண்டிக் கொண்டு இருந்தான்.

" எல்லாம் பெர்ஃபெக்ட் யுவி .இன்னும் டூ டேஸ்ல எல்லாம் ரெடி ஆகிடும் . அப்புறம் இன்விடேஷன் சேம்பிள் கொண்டு வந்துருக்காங்க கொஞ்சம் அது பாத்துட்டு எது சொன்னின்னா அவுங்க ப்ரிண்ட் போட்டுடுவாங்க யுவி " என்று அஷ்வின் கூற

" நீயே எதாவது உனக்கு பிடிச்சத சொல்லிடு அச்சு " என்க

" எதுக்கு யுவி அப்புறம் இத எப்படி நீ செயலாம்னு சொல்றதுக்கா அதெல்லாம் வேணாம். அந்த சவபெட்டிய கொஞ்சம் மூடி வச்சின்னா . அவுங்க வந்து காட்டுறதா எதையாவது ஓகே பண்ணு. நான் போய் கூட்டிட்டு வரேன் " என்று சொல்லி யுவிக்கு பேச வாய்ப்பளிக்காமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.

யுவிக்கு நன்றாக புரிந்தது அஷ்வின் தன்னை விட்டு விலகுகிறான் என்று. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த விதி அவனை தள்ளிவிட்டது.

வெளியே சென்ற அஷ்வின் அடுத்த இரண்டு நிமிடத்திலேயே உள்ளே ஒரு பெண்ணுடன் வருகை தந்தான்.

"யுவி இவுங்க தான் நிஷாந்தினி ப்ரிண்டிங் ப்ரஸ்ல இருந்து வந்துருக்காங்க " என்றவன் நிஷாந்தினியிடம் திரும்பி " இவர் கிட்ட காட்ர்ஸ் காட்டுங்க .அவர் ஓகே பண்றத வச்சி நீங்க ரெடி பண்ணிடுங்க " என்று சொல்லி அந்த அறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

நிஷாவும் அவள் கொண்டு வந்த கார்ட்ஸை யுவியிடம் காட்ட காட்ட ,அவன் அச்சுவை முறைத்து கொண்டே ஒவ்வொன்றையும் பார்க்கலானான்.

இறுதியில் இனன்யாவிற்கு பிடித்தமான வைல்ட் மற்றும் சந்தன நிறத்திலான ஒரு கார்ட் இருக்க ,அதை எடுத்தவன் "இதையே செய்ய சொல்லிட்டு நிஷா. இது என்னோட ஃபியான்சிக்கு பிடிச்ச கலர் " என்றான்.

அவனின் கூற்றில் அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள் , " எனக்கு தான் ஃபியான்சின்னு இருக்கே " என்று மனதில் அவனை கருவியவள் " ஓகே நாங்க இந்த டிசைனை யூஸ் பண்ணியே பண்ணிடுறோம் சார் " என்றாள் அமைதியான குரலில்..

"உங்களுக்கு நாளைக்கு ஈவ்னிங் கார்ட் ரெடி ஆகிடும் நாங்களே வந்து குடுத்துடுவோம் சார் " என்றவள் கிளம்பயவளை கண்டு ,

" நிஷா என்கூட பேச மாட்டியா " என்று முகத்தை சோகமாக வைத்த படி கேட்டான் யுவி.

வீட்டில் இருந்து வாசு தன் அண்ணனை திட்டியவாறே தன் நண்பர்களுடன் அவன் படித்த கல்லூரியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தான்.

காரில் அமைதியாக முன் இருக்கையில் அமர்ந்த வாசு ,ஹெட் செட் அணிந்து கொண்டு தனக்கு பிடித்தமான பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தான்.

" வாசு ! ஆண்டி எதுவும் சாப்பிட கொடுத்து விடலையா டா .அதுவும் நாங்க உன் கூட வரோம்னு தெரிஞ்சா எங்களுக்கும் சேர்த்து கொடுத்து விட்டுருப்பாங்களே " என்று அவனின் நண்பன் ஹரி கேட்க

பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் ஹரி பேசியது கேட்காமல் போக ," டேய் வாசு " என்று அவனின் தோலை குழுக்கினான்.

அவனின் குழுக்களில் மூடி இருந்த இமையை திறந்தவன் சலிப்புடன் " என்னடா வேணும் உனக்கு இப்ப ஒழுங்கா வண்டிய ஓட்டு " என்றான் .

"ஏன்டா உனக்கு இவ்வளோ சலிப்பு . நான் என்ன அப்படி கேட்டுட்டேன். ஆண்டி எதாவது சாப்பிட கொடுத்தாங்களான்னு தானே கேட்டேன். அதுக்கு போய் இப்படி சலிச்சிக்கிற " என்று கேட்ட படியே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான் ஹரி.

" தீனி பண்டாறமே பின்னாடி தான் இருக்கு .எடுத்து தின்னுத் தொல்ல " என்று விட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டவன் பாட்டு கேட்க தொடங்கினான்.

பின்னாடி திரும்பி பார்த்த ஹரி ,பூங்கோதை கொடுத்து விட்ட நொறுக்கு தீனியை எடுக்க முற்பட ,அது முடியாமல் போகவே வாசுவை பார்க்க அவனோ இறுக கண்களை மூடி இருந்தான்.

" இப்போ இவன எழுப்பினா நமக்கு தான் பிரச்சனை பேசாம நாமலே எக்கி எடுத்துட வேண்டியது தான் .லைட்டா பசிக்க வேற செய்யுது " என்று எண்ணியவன் மெதுவாக எக்கி எடுக்க முயற்சித்தவாறே ஒருபுறம் பார்வையை சாலையில் பதித்தவாறே எடுக்க முயன்றான். எப்படியோ அந்த நொறுக்கு தீனி பையை எடுத்து விட்டு திரும்ப டமால் என்ற சத்தத்துடன் வண்டி நின்றது.

தீடிரென வண்டி சடன் ப்ரேக் போட்டு நிற்க ,சீட்டில் சாய்ந்த படி அமர்ந்து இருந்த வாசு முன்னாடி சென்று பின்னே வந்து இருக்கையிலே முட்டிக் கொள்ள ,கண்களை திறந்து பார்த்தான் வாசு‌.

"டேய் இப்போ எதுக்கு சடன் ப்ரேக் போட்ட " என்று கோபத்தில் ஹரியை பார்த்து கேட்க , அவனின் பார்வையோ சாலையில் இருந்தது.

" மச்சான் அங்க என்ன டா பாத்துட்டு இருக்க " என்று கேட்டு முடிப்பதற்குள் ஒரு பெண் அவர்களின் கார் முன்பு நிற்க ..

" அறிவிருக்கா இல்லையா உங்களுக்கு " என்றபடியே அவர்களை நோக்கி வந்தவள் வாசுவை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்தவள் ஹரியின் புறம் திரும்பி " இது என்ன உங்க அப்பன் வீடு ரோடா இப்படி நின்னுட்டு இருந்த வண்டில மோதுற " என்று திட்ட

" ஏய் இந்தா பொண்ணே எதுக்கு இப்போ என் நண்பன திட்டிகிட்டு இருக்கிற " என்று தன் நண்பன் ஒரு பொண்ணிடம் திட்டு வாங்குவதை பொறுக்காமல் கேட்டான் வாசு.

" எதுக்கு திட்டுறேன்னா கொஞ்சம் கீழ இறங்கி பாரு .உன் ஃபிரண்ட் என்ன பண்ணி வச்சிருக்கான்னு " என்று அவள் சொல்ல

" இதோ வரேன் " என்று அவளது மையிட்ட கண்களுக்கு அடி பணிந்து கீழே இறங்கி வந்தான் வாசுதேவன்.

அவள் முகமூடி போல் அவளது துப்பட்டாவை கொண்டு முகம் முழுவதும் மூடி இருந்தாள்.அவளின் மை இட்ட விழிகள் அவளின் வாய் மொழியை விட அதிகம் பேசியது அவனிடம். ஏனோ அவனுக்கு தான் அது புரியாமல் போனது.

"இங்க பாருங்க உங்க ஃப்ரெண்ட் என்னோட வண்டியை எப்படி இடிச்சிருக்காருன்னு. அதுவும் ஒரு ஓரமா நின்னுட்டு இருந்த வண்டிய .உங்கள மாதிரி பசங்க இருக்கிறதுனால தான் இந்த நாட்ல பல பேருக்கு ஆக்சிடன்ட் ஆகுறதே . இப்படியா வண்டி ஓட்றது. இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா ஏதோ சொந்த ரோடு மாதிரி ஒட்டிக்கிட்டு வரீங்க .டோன்ட் யூ ஹேவ் காமன்ஸன்ஸ் " என்று அவள் பாட்டுக்கு திட்டிக்கொண்டே செல்ல

இவை அனைத்தையும் அவன் காதினுள் நுழைய கூடவில்லை. அவளின் விழியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். ஹரி தான் பொறுமை இழந்து அவளிடம் வாக்குவாதத்தில் இறங்கினான்.

" ஏம்மா நாங்க ஏதோ தெரியாம பண்ணிட்டோம் மன்னிச்சிடு மா " என்று ஹரி கை எடுத்து கும்பிட..

" ஒஹோ நீங்க சாரின்னு சொன்னா என்னோட வண்டி பழைய நிலைமைக்கு வந்துடுமா " என்று கேள்வி கேட்டு அவனை சாகடிக்க

"அய்யோ தாயே! கொஞ்சம் உங்கள் திருவாயை அமைதி படுத்துங்கள் " என்று மரியாதையாக ஹரி சொல்ல

அவனை கண்டு முறைக்காமல் வாசுவை கண்டு முறைத்தவள் " என்ன என்ன வாய மூட சொல்றீங்களா .அத சொல்ல நீங்க யாரு .?? என்னோட அப்பா அம்மாவா இல்ல அண்ணன் தம்பியா யாரு யா நீ என்ன பாத்து வாய மூட சொல்றதுக்கு முதல‌ நீ அமைதியா இரு. ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசனும்னு கூட தெரியல பெருசா வந்துட்டான் " என்று பொறுமை இழந்து கத்த

அதுவரை அமைதியாக அவளையே இரசித்து கொண்டிருந்த வாசு தன் நண்பனை அவள் கேவல படுத்தி பேசவும் பொறுக்க முடியாமல் " ஹேய் என்ன வாய் நீல்லுது " என்று கேட்க

" அப்படி எவ்வளவு சென்டிமீட்டர் நீண்டு இருக்கிறத பாத்திங்க " என்று பொறுமையாக அவள் கேட்க

" டேய் மச்சி ! எனக்கு ஒரு லெமன் ஜூஸ் சொல்லு டா. இந்த முகமூடி கொல்ல(காதல்)காரி கிட்ட சண்ட போட்டு என்னோட எனர்ஜி எல்லாம் வேஸ்டா போச்சி " என்று ஹரியிடம் சொல்ல

"என்னது நீ சண்ட போட்டியா " என்பது போல் வாயை பிளந்து கொண்டு ஹரி வாசுவை பார்க்க

"போடா இவனே ! நீயெல்லாம் ஒரு ஆளு உனக்கு லெமன் ஜூஸ் கேக்குதோ. உனக்குலாம் பச்ச தண்ணி கூட குடுக்க கூடாது டா கிங்காங் " என்றாள் அவளும் விடாமல்..

இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்ள நடுவில் அப்பாவியாக மாட்டிய ஹரி இவர்கள் சண்டை எப்போது முடிவது என்று பூங்கோதை கொடுத்து அனுப்பிய நொறுக்கு தீனியை திங்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து "போ டா " என்று அவளும் " போடி " என்று அவனும் என இருவரும் சண்டையை முடித்துக் கொண்டு பிரிந்தனர்.

" மச்சி வண்டியை எடு டா " என்றவனின் குரலில் கடுமை இருந்தாலும் முகத்தில் அதற்கு மாறாக புன்னகை நிரம்பி இருந்தது.

பின் இருவரும் அவர்கள் படித்த கல்லூரிக்கு சென்று அவனுக்கான சர்ட்டிபிகேடை வாங்கி கொண்டு வீடு திரும்பினர்.

அடுத்த நாளே வாசு அவனது சர்ட்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு கோதை கண்ட்ஸ்ட்ரக்ஷன்சில் நடக்கும் இண்டர்வ்யூவிற்கு வருகை தந்திருந்தான்.

அவனின் பெயர் வந்த பின்பே இண்டர்வ்யூ அட்டன் செய்து அப்பாயின்மெண்ட் லெட்டரோடு வீடு திரும்பினான்.

அடுத்த நாளே நிஷாந்தினி கூறியதை போல் இண்விட்டேஷன் கார்டை கொடுத்து அனுப்பி இருந்தாள்.

அதை வாங்கிய யுவியின் கண்களில் அத்தனை காதல் நிரம்பி வழிந்தது. நேராக அதை எடுத்துக் கொண்டு அஷ்வினோடு வீட்டிற்கு வந்தவன் தாய் தந்தையிடம் காட்டினான்.

அதனை கண்டு கோதையும் மாணிக்கமும் இருவரையும் வாழ்த்தி விட்டு சென்றனர்.

" சரி அச்சு நீ யாருக்குலாம் கொடுக்கணும்னு நினைக்கிறியோ அவுங்க எல்லாருக்கும் கொடுத்திடு. இந்த வேலையை நீயே பாத்துக்க . அப்புறம் எனக்கு ஒரேயொரு கார்ட் மட்டும் போதும் " என்றான்.

" எதுக்கு அந்த ஒரு கார்ட்..?? யாருக்கு கொடுக்க போற யுவி " என்று விட்டு அவனை பார்க்க

" அத்தை மாமாக்கு தான் டா .அவுங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சி. ஏனோ இனன்யாவோட தங்கச்சி வந்துருக்கான்னு கேள்விபட்டதுல இருந்து போகல டா.இப்போ தான் அவ வீட்ல இல்லன்னு கேள்வி பட்டேன். அதான் கார்ட் கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு வரலாம்னு இருக்கேன் " என்றான் யுவி தன்னிலை விளக்கத்தை..

____

"போய் கொடுத்துட்டு வா டா . ஆனா எதுவும் அறியா அவ தங்கச்சி மேல தேவை இல்லாம கோப படாத டா " என்றான் அவனின் தோளில் கை வைத்து...

"தெரியல மச்சி ஏனோ அவளோட தங்கச்சினா எனக்கு பிடிக்க மாட்டேங்கிது. அவ எனக்காக எப்ப எது வாங்கிட்டு வந்தாலும் என் தங்கச்சி தான் ஐடியா கொடுத்தான்னு சொல்லுவா டா. என்னமோ அத கேட்கும்போது எல்லாம் மனசுக்கு ரொம்ப கஷ்டமா பொய்டுது. அதான் அவ தங்கச்சி பேரு கூட நான் தெரிஞ்சிக்க விரும்பல டா" என்றான் கவலை தேய்ந்த குரலில்...

"இங்க பாரு டா அதெல்லாம் முடிஞ்சி போன விஷயம் .அந்த பொண்ணு சின்ன பொண்ணு டா.இனன்யா கேக்க போய் தான சொல்லிருப்பா . இன்னுமா அத நினைச்சிட்டு இருக்க இது மட்டும் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்ட படுவா சொல்லு. போய் பேசு டா அந்த பொண்ணு கிட்ட தனியா ஃபீல் பண்ணுவால அதுவும் அவ அக்கா அவ கூட இல்லாம இருக்கிறப்ப அவளுக்குன்னு ஒரு ஆறுதல்லா நாம தான இருக்கனும் டா . நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அப்புறம் உன்னோட இஷ்டம்" என்று அவனுக்கு அறிவுரை கூறியவன் அவன் கையில் ஒரு பத்திரிக்கையை திணித்து விட்டு வெளியேறி விட்டான்.

அங்கேயே இருக்கையில் அமர்ந்த யுவி யோசிக்க தொடங்கினான். அவனுக்குள் அஷ்வின் சொன்னதே நினைவில் ஓட தொடங்கியது. அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் தான் எப்படி அவள் இல்லாமல் தவிக்கிறோமோ அதேபோல் தானே அவளும் தவிப்பாள் என்று தோன்ற ,இனி இனன்யாவின் தங்கைக்கு துணையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன் எழுந்து அவனது அறைக்கு சென்று விட்டான். அவனுக்கு இப்போது நிஷா கூறியது மனதை உறுத்த தொடங்கி இருந்தது.

நேராக அறைக்கு வந்த யுவி பாராமல் தாங்க முடியாமல் போக , குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தான்.

வெகு நேரம் குளியலறையில் இருந்தவன் மனது லேசாகவும் குளியலறையில் இருந்து வந்தவன் ப்ளாக் ட்ராக் மற்றும் ஆஷ் கலர் டிசர்ட் அணிந்து கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டனுக்கு நிஷாவிடம் பேசியதே ஞாபகத்தில் வந்தது.

_____________________

"ஏன் கிட்ட பேச மாட்டியா நிஷா ..??" என்று கவலை தேய்ந்த குரலில் கேட்க

" நான் யாரு உங்களுக்கு .நான் எதுக்கு பேசணும்னு நினைக்கிறீங்க சார் " என்று அழுத்தமாக கூற

" ஏன் நிஷா இப்படி பேசுற ..??நான் உனக்கு அண்ணா மா " என்றே குரலே வராமல் சொல்ல

" அந்த ரிலேஷன்சிப் எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா. நான் கூட உங்க இனு மட்டும் தான் ஞாபகத்துல இருப்பான்னு நினைச்சேன் " என்று காட்டமாக கூறி அஷ்வினை பார்க்க அவனோ அமைதியாக நின்றான்.

" ஏன் மா அப்படி எல்லாம் பேசுற " என்று மனம் உடைந்து சொல்ல

"இனன்யாவ பத்தி யோசிக்க நீங்க இருக்கீங்க. உங்கள பத்தி மட்டுமே இருப்பது நாலு மணி நேரமும் யோசிக்க அம்மாவும் அப்புறம் என்னோட ஃபியான்சி சாரி சாரி உங்க உயிர் தோழன் அஷ்வின் இருக்காங்க. ஆனா இங்க என்ன பத்தி யோசிக்க தான் யாரும் இல்லையே. நிச்சயம் முடிஞ்சே ஒரு வருஷம் ஆச்சி ஆனா இன்னும் அதுக்கு அடுத்து ஒரு ஸ்டெப்பும் எடுக்கல .சரி அத விடுங்க நிச்சயம் நடந்து கல்யாணத்த எதுவும் பேசாம இருக்கீங்களேன்னு எல்லாரும் கேக்கும் போது செத்துறலாமான்னு இருக்கு. எதுக்கு டா காதலிச்சோம்னு இருக்கு .உங்களுக்கு அப்புறம் மிஸ்டர்.அஷ்வின் என்னைய கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டாரு . நீங்களும் கடைசி வரைக்கும் உங்க எண்ணத்துல இருந்து மாற மாட்டிங்க அப்போ அவரும் மாற மாட்டாரு. என்னோட வாழ்க்கை என்ன தான் ஆக போகுதோ தெரியல இப்படி எல்லார் கிட்ட மாட்டி முழிக்கும் போது " என்று தன் ஆதங்கம் முழுவதையும் இறக்கிவிட்டவள் திரும்பி செல்ல பார்க்க மீண்டும் திரும்பி யுவியிடம் வந்தவள் , " நீங்க நினைக்கிறீங்க அண்ணா நீங்க மட்டும் தான் கஷ்ட படுறீங்க மத்த எல்லாரும் நிம்மதியா இருக்காங்கன்னு. ஆனா உங்களால எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா அவுங்களோட நிம்மதிய இழந்துட்டு இருக்காங்க .உங்களோட நிம்மதிக்கு எல்லாரையும் கொன்னுடாதீங்க அண்ணா ப்ளிஸ் " என்று முடித்த அடுத்த நொடியே அஷ்வினின் கை ரேகை அவளின் வலப்புற கண்ணத்தில் பதிந்தது.

"என்ன பேசிட்டு இருக்க நீ .அவன் என்னோட ஃப்ரெண்டு அவன பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை.இந்த வாழ்க்கையே அவன் போட்ட பிச்சை சரியா.என்னோட வாழ்க்கைல நீ இப்போ இருக்கின்னா அதுக்கு என்னோட யுவி தான் காரணம். உன்ன காதலிச்சு தொலைச்ச பாவத்துக்கு உன்ன சும்மா விடுறேன். இப்போ மொதல வெளிய போ டி " என்றான் கோபத்தில். அவனின் கோபத்தில் கண்கள் இரண்டும் சிவப்பேரியிருந்தது.

கன்னத்தை தாங்கியவாறே விரக்தி புன்னகை புரிந்தவள் " நான் கிளம்புறேன் அண்ணா. உங்க வாழ்க்கைல நீங்க சந்தோஷமா இருங்க அண்ணா யார பத்தியும் கவல படாதீங்க " என்று விட்டு விருட்டென சென்று விட்டாள்.

" சாரி டா யுவி .அவன் ஏதோ தெரியாம பேசிட்டு போறா நீ எதுக்கும் ஃபீல் பண்ணாத " என்று விட்டு அவனுக்கு தனிமை தந்து வெளியேறினான்.

______________________________

நிஷா பேசியதை நினைக்கும் போது எல்லாம் மனதினுள் ஏதோ பிசைய அவனின் இனுவிடம் பேசலாம் என்று முடிவெடுத்து அவளின் புகை படத்தை எடுத்தான்.

" இங்க பாரு இனு மா.எல்லாரும் என்ன ஒரே பக்கமா கார்னர் பண்றாங்க மா. எனக்கு நீ மட்டும் போதும்னு சொல்றேன் ஆனா யாரும் கேக்குற மாதிரியே தெரியலை .எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா நிஷா பேசியதை நினைக்கும் போதே அவ்வளவு வலிக்குது டா மனசு. எனக்கு துணையா ஒருத்தர் கூட இல்லையே இனு மா. நீ ஏன் டா என்ன விட்டு போன " என்று அந்த புகை படத்தை கட்டி பிடித்து கொண்டு கண்ணீர் விடுத்தான்.

இங்கே யுவி இப்படி இருக்க அங்கே வாசு அவனது அறையில் அவனின் முகமூடி கொலை(காதல்)காரியின் கண்ணை வரைய முற்பட்டு கொண்டு இருந்தான்.

வரைய வரைய குறைகள் நிறைய வரவும் பல காதிகங்களை கொன்னு கொண்டு இருந்தான்.

"ச்சா என்ன இது ஒரு கண்ண கூட நம்மால வரைய முடியல இதுல நான் ஒரு ஆர்க்கிட் டெக்ட் . அய்யோ ஆண்டவா எப்படியாவது இத வரைய ஹெல்ப் பண்ணு " என்று கடவுளிடம் ஒரு அப்ளிகேஷனை போட்டு விட்டு நூறாவது பேப்பரை எடுத்து வரைய தொடங்கினான்.

அடுத்த நாள் கதிரவன் அவனின் உதயத்தை தொடுக்க ,மதி அவனுக்குள்ள சிறிது சிறிதாக மறைய தொடங்கினாள்..

காலை எழுந்ததுமே வேகமாக குளித்து முடித்து வந்த யுவி ஃபார்மல்ஸ் இல்லாமல் கேஷ்வல் ட்ரெஸ் அணிந்தவன் அந்த பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

"அம்மா நான் கொஞ்சம் வெளிய பொய்ட்டு வரேன் மா " என்றவன் அவனின் கார் கீயை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

சாலையில் காரை சீறிய வேகத்தில் ஓட்டியவன் இறுதியில் மெதுவான வேகத்தில் நிறுத்தியது இனன்யாவின் வீட்டு முன்பே..

அங்கே வந்துவுடன் அவனுக்குள் ஏதேதோ மாற்றங்கள் ஏற்பட நெஞ்சமெல்லாம் படபடக்க தொடங்கியது.சில்லென்ற காற்றை அவனின் தேகத்தை தீண்டி செல்ல மெதுவாக அவளின் வீட்டின் முன்பு நின்று காலிங் பெல் அடித்து கதவை திறப்பதற்காக காத்துக் கொண்டு இருக்க தேவதை போல் ஒரு பெண் சிரித்த முகத்துடன் வந்து கதவை திறந்தாள்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஷ்வதி செந்தில் டியர்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Intha mugamoodi ponnu inu sister ah?
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top