• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாதெனில் காதலாய் நின்றாயே 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
யாதெனில் காதலாய் நின்றாயே

அத்தியாயம்...05

சஷ்வதியின் கையை இறுக பற்றியவாறே பூங்கோதை மயங்கி விழுக , அவருடன் சேர்ந்து சஷ்வதியும் விழுந்தாள் அத்தை என்ற பெருங்கூவலுடன்.

சஷ்வதியின் குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க ,யுவி வேகமாக ஓடி வந்தான்.

பூங்கோதையின் நிலை கண்டு பதறிய மாணிக்கம் ," அய்யோ கோது மா " என்று கத்திவிட்டார்.

வேகமாக எழுந்த சஷ்வி பூங்கோதையின் கண்ணம் தொட்டு எழுப்ப முயல , அவரிடம் ஒரு அசைவும் இல்லாமல் போகவே ஓடி வந்த யுவியிடம் "அத்தான் வண்டிய எடுங்க வேகமாக அத்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் " என்று துரித படுத்த..

அவனும் வேகமாக சென்று காரை எடுத்து வந்தான். கார் கதவை அம்பிகா திறந்து விட அஷ்வினும் வாசுவும் அன்னையை தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றினர்.

பின் வண்டியை சீறி பாய்ந்த வேகத்தில் ஒட்டி பக்கத்திலிருந்த மருத்துவமனையில் நிறுத்தினான்.

வாசுவும் அஷ்வினும் பூங்கோதையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் செல்ல அவர்கள் பின்னே அனைவரும் சென்றனர்.

யுவி அந்த மருத்துவமனையை கண்டு திகைத்து போய் நின்று விட்டான். அவனுக்கு அவனின் வாழ்வில் மறக்க நினைக்கும் அந்த நிகழ்வு தான் ஞாபகத்திற்கு வந்தது. தன் மகிழ்ச்சியை இழந்த இடம் ஆல்லவா இது. தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு முற்று புள்ளி வைத்த இடமாயிற்றே. இனன்யாவை இறுதியாக உயிரோட காப்பாற்றுமாறு யாசித்து நின்ற இடமாயிற்றே என்று நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் கரை புரண்டது.

பின்னாடியே சென்ற சஷ்வதி அத்தான் உள்ளே வராமல் வெளியேவே நின்று மருத்துவமனை வெறித்து பார்ப்பதை கண்டு வேக நடையிட்டாள்.

"அத்தான் " என்று அழுகுரலில் அழைக்க ..

"சஷ்வி மா இது எந்த இடம்னு தெரியுமா உனக்கு " என்றே அவன் அந்த மருத்துவமனையை பார்க்க

" இது ஹாஸ்பிடல் தானே அத்தான் " என்றாள் அவன் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொன்னது போல்..

"இது ஹாஸ்பிடல் தான். ஆனா இங்க தான் என்னோட உயிர் என்ன விட்டு பிரிஞ்சு போச்சி. இனன்யாவ சேர்த்த இடம் இது தான் டா " என்றான் கலங்கிய படி

இப்போது கலங்கிய விழிகளுடன் காண்பது சஷ்வின் முறையானது.

" அத்தான் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க .நாம எப்போதும் கூட இருக்கிறவுங்கள கண்டுக்குறதே இல்ல. இதோ அவுங்க இல்லன்ற நிலை வரும்போது அவுங்கள பத்தி யோசிக்கிறோம். இந்த நிலைமை திரும்பவும் உங்களுக்கு வேணாம் அத்தான். அக்காவோட வாழ்க்கை முடிஞ்சிடுச்சி. ஆனா இப்போ உயிரோட இருக்கிற அத்தையையும் கை விட்டுடாதீங்க . வாங்க உள்ள போகலாம் " என்று அவனின் கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளே இருவரும் ஒன்றாக வர ,நேராக வாசு அஸ்வினிடம் சென்றவன் "அம்மாக்கு என்ன ஆச்சி டா அம்மாக்கு ஒன்னும் இல்லல " என்று விழியில் நீர் கோர்த்து கேட்க ...

"அம்மா ..அம்மா .." என்று அழுத வண்ணமே வாசு வார்த்தைகளை தேடவும் யுவிக்கு பயம் அதிகரிக்க

வாசுவின் சட்டையை பிடித்தவன் " அம்மாக்கு என்ன ஆச்சி டா " என்று கவலை நிறைந்த வேகத்தில் கேட்க

" யுவி அம்மாக்கு அட்டாக் வந்துருக்கு டா. ஐசியூல இருக்காங்க " என்றான் அஷ்வின் அழுகையின் பிடியில்..

இதை கேட்ட யுவிக்கு அதிர்ச்சி தான்.

"நல்லா இருந்த அம்மாவுக்கு எப்படி அட்டாக் வரும் வர வாய்ப்பு இல்லை " என்று பிதற்ற

இதுவரை அமைதியாக இருந்த மாணிக்கம் ," யாரு சொன்னா உங்க அம்மா நல்லா இருக்கான்னு.உயிரோட இல்லாதவள நினைச்சு நினைச்சு நீ உயிரோட இருக்கிற உங்க அம்மாவ கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்க டா. அவ கிட்ட நீ கடைசியா எப்போ நல்லா பேசினன்னு இல்ல வேணாம் பேசினன்னு ஞாபகம் இருக்கா " என்று அழுகையின் பிடியில் யுவியை கண்டு வெடிக்க

இதனை கேட்ட யுவி உடைந்தே விட்டான். அவனை தூக்க ஆல் இன்றி இருந்தான் தனி மரமாக..

"உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா அவ மனசு விட்டு சிரிச்சே ரொம்ப நாள் ஆச்சி டா. உனக்காக உனக்காகன்னு தன்னையே வருத்திக் கிட்டு விரதம் பரிகாரம் பூஜை புலஸ்காரம்னு என்னென்னவோ பண்ணிகிட்டு இருக்கா . நான் இதெல்லாம் வேணாம்னு சொல்லி தடுத்ததுக்கு அவ என்ன சொன்னான்னு தெரியுமா டா. இதுலாம் செய்ய கூடாதுன்னு தடை போட்டு என் மகன் வாழ்க்கை இப்படியே அழிஞ்சு போச்சின்னா அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்னு சொல்லிட்டா . இதெல்லாம் யாருக்காக பண்ணா எல்லாம் உனக்காக உன்னோட வாழ்க்கைகாக .ஆனா நீ ரொம்ப சுயநலமா இருந்திட்டு இருக்க யுவி " என்றவர் தன் மனையாள் பிழைக்க வேண்டும் வேண்டுதல் வைத்தார்.

யுவி தன் தந்தையின் கூற்றில் மொத்தமாக உடைந்து போய் விட்டான். தாயின் இந்த நிலைக்கு நான் தான் காரணமா என்று எண்ணியவனின் கண்களில் இருந்து நீர் அருவியாக கொட்டியது..

அங்கு யாரும் அவனை சமாதான படுத்த முயற்சி செய்ய கூட இல்லை. ஆனால் சஷ்வி முன் வந்தாள் .அவனை சமாதானம் செய்வதற்கு.இதனை கண்டு யாரும் எதுவும் சொல்ல வில்லை.

இவர்களின் சத்தத்தை கேட்டு செவிலியர் ஒருவர் வெளியே வந்து " எதுக்கு இவ்வளோ சத்தம் போடுறீங்க இது ஹாஸ்பிடல்ன்னு நினைச்சீங்களா இல்லை உங்க வீடுன்னு நினைச்சீங்களா கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டிங்களா " என்று கத்தி விட்டு சென்றார்.

அவர் சென்ற பின்பு அங்கு நிசப்தம் நிலவியது. யுவியை அழைத்துக் கொண்டு வெளியே இருந்த கதிரையில் அமர வைத்த சஷ்வி அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை வாங்கி குடித்த யுவி ," ஏன் யாரும் என் மனச புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க சஷ்வி மா " என்று கண்ணீர் மல்க அவளிடம் கேட்டான்.

"அதே கேள்விய உங்க கிட்டயே திருப்பி கேக்குறேன் அத்தான். நீங்க ஏன் யாரையும் புரிஞ்சிக்க முயற்சி பண்ண மாட்டேங்குறீங்க " என்று அவன் கேட்ட கேள்வியையே திருப்பி கேட்க ,யுவி அதிர்வுடன் அவளை கண்டான்.

"ஏன் அத்தான் உங்களுக்கு இவ்வளவு அதிர்ச்சி சொல்லுங்க .இவ்வளோ வருஷமா வளர்த்த பெத்தவுங்களையே உங்களால புரிஞ்சிக்க முடியல . அவுங்க உங்களுக்காக வாழ்ந்துட்டு இருக்கிறவுங்க கிட்ட போய் நான் இப்படி தான் இருப்பேன்னு சொன்னா அவுங்க மனசு தாங்குமா சொல்லுங்க .நீங்க எவ்வளவு தான் வளர்ந்து இருந்தாலும் அத்தை மாமாக்கு நீங்க ரெண்டு பேருமே இன்னும் குழந்தைங்க தான் .தன் குழந்தை கிடைக்காத ஒரு பொருளுக்கு ஆசை பட்டு அடம் பிடிச்சா அத திருத்திறது இல்லையா சொல்லுங்க.அந்த மாதிரி இப்ப உங்களுக்கும் .அத்தைக்கு நீங்க கிடைக்காத உயிரோட இல்லாத ஒரு பொண்ணு என் வாழ்க்கைன்னு சொல்லும் போது அத திருத்தி உங்கள நல்வழி படுத்திற நிலையில் தான் இப்போ அத்தை இருக்காங்க . நீங்க தான் மாறணும் அத்தான் " என்று அவனுக்கு புரியும் விதத்தில் சஷ்வி கூறி அவனுக்கு தனிமை தந்து விட்டு சென்றாள்.

இவை அனைத்தையும் தூரத்தில் இருந்த கண்ட அஷ்வின் ,அவள் தனக்கு பக்கத்தில் வருவதை கண்டு " சஷ்வி" என்று அழைத்தான்.

"சொல்லுங்க அண்ணா " என்றவாறே அவனை நோக்கினாள்.

"உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல மா யுவிக்கு சப்போர்ட்டா இருந்ததுக்கு . ஆனா நன்றி சொல்லி தான் ஆகனும் மா " என்றவன் கை எடுத்து கும்பிட்டு " ரொம்ப நன்றி மா " என்று மனதார நன்றி கூறினான் .

பதறிய சஷ்வி அவனின் கையை இறக்கி விட்டவள், " எனக்கு உங்க நன்றி எதுவும் வேணாம் அண்ணா அதுக்கு பதிலா ஃபலூடா வாங்கி தந்து காம்பென்செட் பண்ணிருங்க " என்று புருவம் உயர்த்தி கேட்டிட..

அவன் தலையில் நங்கென கொட்டு வைத்தவன் ," கண்டிப்பா இந்த குட்டி தங்கச்சிக்கு இல்லாததா வாங்கி தந்துட்டா போகுது " என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச்சென்றான்.

செவிலியர்கள் வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாகவே இருக்க , அங்கிருந்த அனைவருக்கும் பயமே நிறைந்து இருந்தது.

இதற்கிடையில் வெளியே வந்த மருத்துவர் மாணிக்கத்திடம் , " உங்களோட மனைவி நாங்க கொடுக்கிற எந்த ஒரு ட்ரிட்மெண்ட்க்கும் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறாங்க. அவுங்க ரொம்ப க்ரிட்டிக்கள் ஸ்டேஜ்ல தான் இருக்காங்க. எங்களோட பெஸ்ட் குடுத்துட்டு தான் இருக்கோம். ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணணும் . நான் ஹார்ட் சர்ஜியன்ன வர சொல்லி இருக்கேன். அவுங்க வந்ததும் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிரலாம் . அதுக்குள்ள அவுங்க எங்களோட ட்ரீட்மெண்ட்க்கு ரெஸ்பான்ஸ் பண்ணணும் சார் " என்று நகர்ந்து விட்டார்.

இதனை கேட்ட மொத்த குடும்பமும் முற்றிலுமாக உடைந்து விட்டது.

அவரது அறைக்கு வந்த மருத்துவர் செவிலியரை அழைத்து , "கால் தி ஹார்ட் சர்ஜியன் " என்று சொல்ல அவரும் சரி என்று கூறிவிட்டு வெளியே வந்து ஹார்ட் சர்ஜியனுக்கு அழைப்பு விடுத்தார்.

இரண்டு ரிங்கிலே எடுத்த அவர் ,"ஹலோ " என்க

" ஹலோ சார் இங்க ஒரு எமர்ஜென்சி கேஸ் . நீங்க கொஞ்சம் ஹாஸ்பிடலுக்கு வர முடியுமா சார் " என்று தன்மையாக கேட்க

" ஓகே இன்னும் அரைமணி நேரத்துல நான் அங்க இருப்பேன் " என்றவர் அழைப்பை அணைத்தார்.

உடனே அழைப்பை தன் மகளுக்கு விடுத்தவர் ," அம்மு மா கொஞ்சம் என் கூட ஹாஸ்பிடலுக்கு வா மா எமர்ஜென்சி கேஸ் வந்துருக்கு" என்க

" எஸ் டேட் இதோ கிளம்பி வரேன் " என்றவள் அவளது அறையில் இருந்த இருட்டை போக்கி லைட்டை ஆன் செய்தாள்.

சிறிது நேரத்திலே மெருன் கலர் டாப்புடன் அதற்கு ஏற்றார் போல் கருப்பு நிற லெகின் அணிந்து கொண்டவள் கண்ணாடி முன்பு நின்றாள்.

அந்த அழகிய கண்களுக்கு மையிட்டவள் , மெலிதான தோடு ஒன்றை அணிந்துக் கொண்டு இடைவரை இருந்த கூந்தலை கொண்டையிட்டு க்ளிப் போட்டு அடக்கி வைத்து விட்டு அறையில் இருந்த ஸ்டெதாஸ்கோபை எடுத்து கொண்டவள் அறையை பூட்டி விட்டு வந்தாள்.

நேராக அவர்களது வீட்டிற்கு வந்தவள் ,ஹாரன் அடிக்க அவளது தந்தை அருணாசலம் அவளுடன் இணைந்து கொண்டார்.

பின்னர் , இருவரும் மருத்துவமனைக்கு பதினைந்து நிமிடத்திலேயே வருகை தந்தனர்.

உள்ளே வந்த அருணாசலம் மருத்துவரை காணச் சென்று விட ,அவளோ காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவளின் கண்ணில் பட்டது என்னவோ கைகளை தலை மேல் வைத்த படி அமர்ந்திருந்த யுவியை தான். அவனை கண்டவள் கடந்து சென்று தந்தையுடன் அய்க்கியமாகினாள்.

அந்த மருத்துவர் பூங்கோதையின் நிலையை விவரித்து கூறி ஐசீயூவிற்கு அழைத்து சென்றார். அவருடனே அவளும் அவரைக்காண சென்றாள்.

பூங்கோதையை பார்த்து விட்டு வந்த பத்து நிமிடத்தில் அவருக்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் அனைத்தும் அவள் எடுத்து விட , அடுத்து வந்த சில மணி நேரத்தில் பூங்கோதையை ஆப்ரேஷன் தேட்டருக்கு அழைத்துச் சென்றனர் .

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அருணாசலத்தின் தலைமையில் ஆப்ரேஷன் நடந்தேறியது.

ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு வந்த அருணாசலம் வெளியே வந்தவர் ," ஆப்ரேஷன் நல்ல படியா முடிஞ்சிடுச்சி . கொஞ்ச நேரத்துல நார்மல் வார்க்கு மாத்திடுவாங்க " என்று விட்டு சென்றார்.

அவருக்கு பின்னே வந்த அவள் ," கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க . அவுங்களுக்கு எதையும் ப்ரெஷர் பண்ணாதீங்க. முக்கியமா அவுங்கள கஷ்ட படுத்திற மாதிரி எதுவும் யாரும் நடந்துக்காதீங்க " என்றவள் வாசுவை ஒரு கணம் ஆழ்ந்து பார்வையை பார்த்து விட்டு சென்றாள்.

அடுத்து வந்த ஒரு மணி நேரத்தில் பூங்கோதையை நார்மல் வார்டிற்கு மாற்றி விட , ஒவ்வொருவராக பார்த்து விட்டு வெளியே வந்தனர். யுவி மட்டும் குற்ற உணர்ச்சியில் அன்னையை உள்ளே சென்று காணவில்லை.

அடுத்து வந்த ஒரு வாரமும் அப்படியே செல்ல ,அவரை கண்ணும் கருத்துமாக அனைவரும் பார்த்துக் கொண்டனர்.

சஷ்வியும் நிஷாவும் வீட்டிலிருந்து சமைத்து உணவு எடுத்து வந்தனர் அந்த வாரம் முழுவதும்.

பூங்கோதை தான் யுவியை இந்த ஒருவாரமாக தன்னை காண வராமல் இருப்பதை அறிந்து தன் கணவரிடம் கேட்க

"அவன் வெளிய தான் இருக்கான் இந்த ஒரு வாரமும். நீ தூங்கும்போது வந்து பார்த்திட்டு போவான் " என்று சொல்ல

" ஏங்க அவனுக்கு என்னை பாக்க கூட விருப்பம் இல்லையா இல்லை நான் அவன பாக்க கூடாதுன்னு நினைக்கிறான்னா " என்று கலங்கிய குரலில் கேட்க

"அப்படி எல்லாம் இல்லை மா அவனுக்கு உன்னோட நிலைய கண்டு தாங்கிக்க முடியல அதுனால தான் நீ தூங்கும் போது பார்த்திட்டு போறான் " என்றார் பொறுமையாக..

"உண்மையாங்க " என்று எதிர்பார்ப்போடு அவர் கேட்க

" ஆமாம் டா " என்று சமாதானம் செய்து உறங்க வைத்தார்.

இவை அனைத்தையும் கேட்ட அவள் ,வெளியே ஒரு ஓரமாக அமர்ந்திருந்த யுவியை காணச் சென்றாள்.

"எக்ஸ் க்யூஸ் மீ " என்று தன்மையாக அவனை கண்டு அழைக்க

தன் முன் நிழல் ஆடுவதை கண்டு தலையை நிமிர்த்தி பார்க்க ,அங்கே வெள்ளை கோட் அணிந்த ஒரு பெண்மணி நிற்பதை கண்டு " என்ன வேணும் உங்களுக்கு " என்று கேட்டான்.

"எனக்கு எதுவும் வேணாம் உங்க அம்மாவுக்கு தான் உங்களோட அன்பு இப்போ தேவை படுது " என்றாள்.

அவன் புரியாத பார்வை பார்த்து " என்ன சொல்றீங்க " என்று கேள்வியாய் நோக்க

" நான் தான் உங்க அம்மாவை பார்த்துட்டு இருக்கிற டாக்டர் .அவங்களுக்கு உங்கள பத்தி தான் கவலையே .இப்போ கூட உங்களை பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க . அவுங்க நல்லா இருக்கனும்னா உங்களோட அன்பும் ஆதரவும் அவுங்களுக்கு வேணும்.இத அஸ்ச டாக்டரா சொல்றேன் அவுங்கள கேர் பண்ணுங்க அவுங்களுக்கு பிடிச்ச விஷயத்தை பண்ணுங்க அதுவே அவுங்களை வாழ வைக்கும் " என்று விட்டு நகர பார்க்க ‌....

" எக்ஸ் க்யூஸ் மீ டாக்டர் " என்று இந்த முறை இவன் அழைக்க

"ம்ம் சொல்லுங்க " என்று திரும்பி அவனை நோக்கினாள்.

"தேங்க்ஸ் டாக்டர் அப்புறம் உங்க நேம் " என்று இறுகிய முகத்துடனே கேட்டான்.

புன்னகைத்தவள் "மித்ரவிந்தி டாக்டர் மித்ரவிந்தி "என்றவள் " உங்க அம்மாவ பாக்க போகும்போது இப்படி துரு பிடிச்ச ஒடுங்கி போன பையன் மாதிரி போகாமல் சிரிச்ச முகத்தோடு போங்க "என்று நகர்ந்து விட அவளை கண்டு ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்.

இந்த ஒருவாரத்தில் மித்ரவிந்தி நல்ல விதமாக கவனித்து கொண்டாலும் ,வாசு வரும்போது எல்லாம் அவனை நோட் செய்ய அவள் மறக்கவில்லை. இவை அனைத்தையும் வாசு கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

ஏன் இந்த பெண் தன்னை பார்க்க வேண்டும் என்று இந்த ஒருவாரம் முழுவதும் மண்டையை பிய்த்துக் கொண்டான்.

அவனுக்கு அவளது கண்கள் ஏதோ கூறுவது போல் தோன்றினாலும் அது என்னவென்று மட்டும் அவனுக்கு புரிபட வில்லை. மண்டயை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது.

இதனை அறிந்து கொள்ளும் நாளான பூங்கோதையின் டிஸ்சார்ஜ் நாளும் வந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஷ்வதி செந்தில் டியர்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Acho acho yenda yuvi ipdi irukka nee? Paru amma ku attack eh vanthudchu🤦🏻‍♀️🤦🏻‍♀️...

Antha mithra yen vasu va ipdi pakkura? Mithra yuvi ku Jodi ah illa vasu ka?
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Vandhutenn

Mithra doctor ahh apo card la irundha name ivalodadhu daana apo iva daan yuva ku jodi yaa aiyoo kolapureengale

Vasu paathadhu ivala daana illa vera ponna

Super ahh nidarsanatha puriya vaikura sashvathi

Yuvi ne daan maaranum love pannina andha ponnu ipo illa ne avaloda kadhal ah marakavendom apdiye vechutu move on aagalame ean pannamaatre

Ipo ore confusion ahh iruku yaaruku yaaru jodi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top