• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாதெனில் காதலாய் நின்றாயே 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
அத்தியாயம்...07

நிஷாவிற்கு அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. எங்கே யுவி அண்ணாவின் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்று அவளும் தான் இத்தனை நாட்களில் பயந்து இருக்கிறாள். அதற்காக தான் அன்றைய பொழுது அவள் அப்படி பேசியதே..

அப்படி பேசி விட்டோம் என்று அழுகாத நாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அஷ்வின் தான் இவர்களுக்கு இடையில் மாற்றிக் கொண்டு முளித்தான்.யார் பக்கம் நிற்பது என்று புரியாமல்..

யாருக்கு துணையாக இருப்பது என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.

அவனுக்கு நன்றாக புரிந்து இருந்தது நிஷா இவை அனைத்தும் தனக்காக செய்யவில்லை. அவளுடைய அண்ணாவுக்காக தான் பேசினாள் என்று. ஆனாலும் அவனால் அவள் யுவியிடம் பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனாலே அவளை தவிர்த்து வந்தான் . ஆனாலும் காதல் கொண்ட மனம் அல்லவா அவளை தவிக்க விட மனத்துக்கு ஒப்பவில்லை..

சஷ்வியையும் யுவியையும் தான் சேர்த்து வைக்க போகிறார்கள் என்று எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள் பேதையவள்.

பூங்கோதை சொல்லியதை கேட்டு இருவரும் திகைத்து போய் பார்க்க ,அவரோ அமைதியாக சஷ்வி மற்றும் நிஷாவை கவனித்து கொண்டு இருந்தார்.

" என்ன அண்ணி சொல்றீங்க " என்றார் அதிர்ச்சி தாங்காமல்

"ஆமா அண்ணி நான் பொண்ணு யாருன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். ஆனா இந்த யுவி தான் பிடி கொடுக்க மாடேங்கிறான். இந்த உடல் நிலையை வைத்து தான் ஏதாவது பண்ணி அவனோட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கனும் " என்றார் அமைதியான குரலில் அழுத்தம் திருத்தமாக...

அவரின் பதிலில் அம்பிகா மேலும் திகைத்து போக , மாணிக்கத்திற்கோ இதழில் புன்னகை தவழ்ந்தது...

"சரிங்க அண்ணி நேரமாச்சு நாங்க கிளம்புறோம் " என்று சொல்லி அம்பிகா எந்திரிக்க

"சரிங்க அப்படியே நாங்களும் கிளம்புறோம் " என்று விட்டு இரண்டு குடும்பங்களும் கிளம்பிச் சென்றனர்.

சஷ்வி ஒருமுறை அவள் அத்தானை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள்.

அடுத்த நாள் காலை அதிரடியாக பிறந்தது அனைவருக்கும்.

பூங்கோதையும் மாணிக்கமும் மருத்துவமனைக்கு செல்ல கிளம்பிக்கொண்டு இருக்க , அவர்கள் அறையை மெதுவாக எட்டி பார்த்தான் வாசு.

"மிஸஸ் கோதை நானும் உங்க கூட வரனே . என்னையும் கூட்டிட்டு போங்களேன் கோதை " என்று சிறு பிள்ளையாய் வாசு கேட்க

" நீ எதுக்கு டா ஹாஸ்பிடலுக்கு நேத்து கோவிலுக்கு வாடான்னா ஆயிரம் நொட்ட சொன்ன இப்ப என்னவாம் உனக்கு அதெல்லாம் நீ ஒன்னும் வர தேவை இல்லை " என்று மாணிக்கம் கூறி அவன் எண்ணத்தில் ஒரு லோட் மணலை கொண்டு வார்த்தையால் குவிக்க

" எச்க்யூச் மீ மிஸ்டர் கோதை ஹஸ்பண்ட் கொஞ்சம் அமைதியா இருங்க இந்த சந்துல ஸ்கோர் பண்ற வேலை எல்லாம் இந்த குட்டி பேபி கிட்ட வேணாம் பாத்துக்கோங்க " என்றவன் அன்னையின் தாடையை பிடித்து " ப்ளீச் மம்மி என்னையும் கூட்டிட்டு போங்களேன் . நான் எந்த தொந்தரவும் பண்ணமாட்டேன் வீட்ல தனியா இருந்தா நீங்க எனக்கு தொலை கொடுக்கிறதுக்குன்னு ஒன்னு பெத்து வச்சிருக்கீங்களே அவன் டார்ச்சர் பண்ணுவான். நானும் வரனே" என்றவாறே கோதையின் தாடையை பிடித்து கெஞ்ச

" மகனே ரொம்ப நடிக்காத சரியா ட்ரைவர் வேற இன்னைக்கு லீவாம் உன்னைய தான் கூப்பிடனும்னு இருந்தேன். நீயே வந்து மாட்டிக்கும் போது நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன் சொல்லு " என்று அன்னையும் அவனது தாடையை பிடித்து கொஞ்சிய படி சொல்ல

"நானே தண்டவாளத்துல காலை வச்சிக்கிட்டேன் போலையே " என்று முணுங்கிய படியே சென்றாலும் அது வெறும் உதட்டளவிலே இருந்தது மனதினுள் அவனுக்கு சந்தோஷமே..

அறையினுள் இருந்த யுவிக்கோ நேற்று இரவு சஷ்வி நிஷாவிடம் கூறியதை நினைத்து கோபமாக வந்தது.

நேராக இனுவின் புகைப்படத்தை எடுத்தவன் ," இங்க பாரு இனு மா உன் தங்கச்சி பண்ற வேலைய..?? ரொம்ப அசால்ட்டா சொல்றா ஃபலூடா யார் கொடுத்து கேக்குறாங்களோ அவுங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி தெரியுமா அவ எப்படி அப்படி சொல்லலாம் சொல்லு அங்கேயே அவளை அடிச்சிருப்பேன் .ஆனா அது வெளி இடம்றதுனால தான் சும்மா விட்டேன் " என்றான் கோபம் குறையாத குரலில்..

அவளின் புகைப்படமோ அமைதியாக அனைத்தையும் கேட்டு சிரித்தது.

"இரு இரு இனு மா நான் இருக்கும்போது அவ எப்படி அப்படி சொல்லலாம் நான் போன் பண்ணி அவள திட்றேன் .இல்ல இல்ல நேர்ல பார்த்து தான் திட்டனும் ஒரு அறையாவது அவள் வாங்கியே ஆகனும் இனு மா அப்போ தான் அவள் யார்கிட்டேயும் இப்படி பேசாமா இருப்பா " என்று இனுவிடம் பேசியவன் புகைப்படத்தை ஓரமாக வைத்து விட்டு மொபைலில் சஷ்வதி என்று சேவ் செய்திருந்த நம்பருக்கு டயல் செய்தான்.

இரண்டு ரிங்கிலே எடுத்த சஷ்வி ," சொல்லுங்க அத்தான் " என்றாள் உற்சாகமான குரலில்..

"என்னத்த சொல்றது " என்றவன் கோபத்தை காட்ட

"அச்சோ அத்தான் என்ன ஆச்சி " என்று வருத்தமான குரலில் கேட்டாள்.

"இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது ஈவ்னிங் ஃபுட் கார்னருக்கு வந்திடு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று சொல்லி யுவி மொபைலை கட் செய்து விட்டான்.

இங்கே பூங்கோதை மாணிக்கம் மற்றும் வாசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

"அம்மா அப்பா நீங்க அங்க உட்கார்ந்து இருங்க நான் போய் அப்பாய்ன்மெண்ட் காட்டி கேட்டுட்டு வரேன் " என்றவன் சென்று செவிலியரிடம் அப்பாய்ன்மெண்ட் காட்டி கேட்க ,

" சாரி சார் இப்போ டாக்டர் இல்லை. அவுங்க ஒரு எமர்ஜென்சிக்கு போயிருக்காங்க " என்று சொல்லி மன்னிப்பை வேண்டினார்.

" இல்ல இன்னைக்கு அப்பாய்ன்மெண்ட் இருக்கு வர சொல்லி இருந்தாங்க " என்று சொல்ல , அதற்குள் அந்த செவிலியருக்கு அழைப்பு வர "எக்ஸ் க்யூஸ் மீ " என்றவர் அந்த அழைப்பை ஏற்று " எஸ் டாக்டர் " என்றார் பணிவுடன்..

"............."

"ஹான் டாக்டர் வந்துருக்காங்க "

"............."

"சரிங்க டாக்டர் " என்று வைத்தார் அந்த செவிலியர்.

"நீங்க போய் டாக்டர் அருணாச்சலம் சாரை போய் பாருங்க . மித்ரா மேம் ரூம்க்கு ஆப்போசிட் ரூம் தான் அவரோடது " என்று அனுப்பி வைத்தார்.

அந்த செவிலியர் பக்கத்தில் இருந்த செவிலியரிடம் " இவரு அதிகமா யாரையும் பார்க்க மாட்டாரு இதோ அவுங்க பொண்ணு மித்ரா மேடம் சொன்னதாளா உடனே பாக்க சம்மதிச்சிட்டாரு .மேடம்க்கு ரிலேடிவா இருப்பாங்க போல " என்று புரணி பேசத்தொடங்க ..

" நமக்கு எதுக்கு கா இந்த வேலை அமைதியா இருப்போம் இல்லைன்னா யாரு திட்டு வாங்குறது சொல்லுங்க " என்று அந்த செவிலியர் சொல்ல , இருவரது பேச்சையும் கவனித்துக் கொண்டே பூங்கோதை மாணிக்கத்திடம் சென்றான் வாசு.

"அம்மா டாக்டர் மித்ரா ஏதோ எமர்ஜென்சிக்கு போயிருக்காங்களாம் அதுனால அவங்களோட டேட் கிட்ட பாக்க சொல்லி இருக்காங்க " என்று சொல்லி இருவரையும் அழைத்துச்சென்றான்.

கதவு வரை வந்தவனை தடுத்த பூங்கோதை ," நீ வெளியவே இரு நாங்க போய் பாத்துட்டு வரோம் " என்று விட்டு உள்ளே சென்றனர்.

" என்ன உண்மையாவே ட்ரைவர் மாதிரி தான் யூஸ் பண்றாங்க மீக்கு கோபம் வருதே சரி போய் எதாவது சாப்பிட்டு கோபத்தை குறைக்கலாம் " என்று கேண்டின் நோக்கி சென்றுவிட்டான்.

நிஷாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தான் அஷ்வின்.

" இப்போ எதுக்கு என்ன ஹாஃப் டே லீவ் போட சொன்னீங்க அஷ்வின் " என்று கடுகடுத்த குரலில் கேட்டாலும் உள்ளுக்குள் சந்தோஷமாகவே இருந்தது.

" நேத்து அப்படி ஒன்னு நடந்ததுக்கப்புறம் என் நினைப்பு பூராவும் உன் மேல தான் " என்றான் கிறக்கமான குரலில்..

" யாருகிட்ட பொய் சொல்றீங்க மிஸ்டர் அஷ்வின் .எதுக்கு என்ன கூப்பிட்டிங்கன்னு மட்டும் சொல்லுங்க " என்று நேராக விஷயத்திற்கு வர

" நீ தான் நிஷூ குட்டி இந்த ஜாடிக்கேத்த மூடியா இருக்க " என்று கொஞ்சியவன் " நேத்து சஷ்வதி என்ன சொன்னா ஏன்னா சஷ்வி சொன்ன பதிலை கண்டு யுவி அவளை அப்படி முறைச்சான் " என்றே தன் சந்தேகத்தை கேட்க

"அவளுக்கு யுவிய பிடிச்சிருக்காம் அஷ்வின். யுவியை பார்த்து ஃபலூடா தந்து கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்குற பையனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானு சொன்னா .அதுக்கு தான் அண்ணா அந்த அளவு அவளை முறைச்சி பார்த்தாரு " என்று நேற்று நடந்ததை சொன்னாள் நிஷாந்தினி.

" அப்படியா சொல்ற அப்போ அப்பா சொன்ன அந்த லக்கி கேர்ள் சஷ்வி தானா .என்னடா பையன் பேசவே மாட்டான்னு நினைச்சவன் இப்படி உருகிறானேன்னு பார்த்தேன். ஆனா இது எப்படி நடந்திருக்கும் வாய்ப்பிள்ளையே " என்று தன் நண்பனை நன்கு அறிந்ததனால் சொல்ல

" ஏன் இருக்க கூடாது சொல்லுங்க " என்றவள் " எல்லாம் நன்மைக்கே அஷ்வின் " என்று அவன் கையை இறுக பற்றிக் கொண்டாள்.

இங்கே உள்ளே வந்த பூங்கோதை மாணிக்கத்தை இன்முகத்தோடு வரவேற்றவர் பூங்கோதையின் ரிப்போர்டை வாங்கி பார்க்கலானார்.

பார்த்த பின்பு பூங்கோதையை செக் செய்தவர் ," இப்போ நீங்க நல்லா இருக்கீங்க கொஞ்சம் ஆய்லி புட் அவாய்ட் பண்ணிக்கோங்க " என்றவர் ஒரு காகதித்தை எடுத்து கொடுத்து " இதுல உங்களுக்கான டையர்ட் சார்ட் இருக்கு மித்ரா உங்களுக்காக ரெடி பண்ணி கொடுத்தது .இத பாத்து சாப்பிடுங்க " என்றார்.

பூங்கோதைக்கு மித்ரவின் அன்பை கண்டு வியந்து போனார். தன் குடும்பத்தாரை தவிர்த்து மூன்றாம் நபர் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வைத்திருக்கும் அன்பை கண்டு மனம் நெகிழ்ந்து போக மாணிக்கத்தை கண்டு புன்னகைத்தார்.

" இவ்வளோ அன்பா சார்ட் எல்லாம் ரெடி பண்ணி கொடுத்த பொண்ணு எங்க வீட்லயே உரிமையுடன் இதை செய்யனும்னு நான் நினைக்கிறேன் டாக்டர் " என்று மெல்லிய குரலில் சிறிது தயக்கத்துடனே கூறினார்.

" என்ன சொல்றீங்க " என்று அருணாசலம் அவரை கண்டு கேட்க

" எங்களுக்கு மித்ராவை பிடிச்சிருக்கு சார் .அவளை எங்க பெரிய பையன் யுவிக்கு பொண்ணு கேக்குறோம் " என்று சொல்ல அதிர்ந்து விட்டார் அருணாசலம்.

" என்னோட பொண்ணு யாரு மேலையும் அட்டாச்மெண்ட்டா இருக்க மாட்டா .ஆனா உங்க மேல ரொம்ப கேர் எடுத்து பார்த்து கிட்டா அதுவே எனக்கு ஆச்சிரியம் தான் .ஆனா அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டா மேடம் " என்றார் கவலை நிறைந்த குரலில்...

" ஏன் சம்மதிக்க மாட்டா சார் எங்க கிட்ட ஏதாவது குறை இருக்கா " என்று மாணிக்கம் சந்தேகத்துடன் கேட்க

" அச்சோ சார் குறை எல்லாம் உங்க மேலை இல்லை எங்க மேல தான் குறை இருக்கு " என்று முற்றிலும் உடைந்து போன குரலில்...

" என்ன சொல்றீங்க " என்று புரியாமல் பூங்கோதை கேட்க

அருணாசலம் அனைத்தையும் முழுவதுமாய் கூறி முடிக்க , மாணிக்கமும் பூங்கோதையும் அதிர்ந்து போயினர்.

ஆனாலும் பூங்கோதை விடாப்பிடியாக இருந்தார் மித்ரா தான் தன் மூத்த மருமகள் என்று..

" இந்த உண்மை எந்த நிலையிலும் யாருக்கும் தெரிய விடமாட்டோம் . எங்க வீட்டுக்கு மித்ரா தான் மருமகள் அதுவும் மூத்த மருமகள் " என்று நம்பிக்கையாக சொல்ல அருணாசலம் கலங்கியே விட்டார்.

" சரிங்க மேடம் நான் அவ கிட்ட பேசி பாக்குறேன் " என்று அருணாசலம் சொல்ல

" இனி என்ன அண்ணா மேடம் அது இதுன்னு அழகா தங்கச்சின்னு கூப்பிடுங்க " என்றார் பூங்கோதை.

அருணாசலம் இதனை கேட்டு ஒரு தந்தையாக பூரித்து போனார். தன் மகள் இப்படி பட்ட குடும்பத்தில் வாழ்ந்தாள் சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் வாழ்வாள் என்று எண்ணி மகிழ்ந்து போனார்.

அவருக்கு இப்போது தெரியவில்லை .இந்த குடும்பத்தினால் தான் அத்தனை துன்பத்தையும் பட போகிறாள் என்று..

அருணாசலத்திடம் யுவியின் புகைபடத்தை கொடுத்து ,இது தான் உங்க மருமகன் ஃபோட்டோ என்னோட மருமகள் இல்லை இல்லை என்னோட மகள் கிட்ட கொடுத்திடுங்க அண்ணா " என்றார்‌.

"சரி மா நான் கொடுத்தறேன் " என்று புன்னகையோடு வாங்கி கொண்டார்.

" அப்புறம் நாங்க கிளம்புறோம் " என்ற மாணிக்கம் பூங்கோதையை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

வெளியே வந்த மாணிக்கம் பூங்கோதையை கண்டு " யுவி இதுக்கு ஒத்துக்குவான்னு நினைக்கிறியா கோது " என்று தன் சந்தேகத்தை கேட்க

" கண்டிப்பா ஒத்துக் கிட்டு தான்ங்க ஆகனும். அவனுக்கு வேற வழி இல்லை சஷ்வதி அஷ்வின் நிஷா வச்சி தான் அவனோட மனசை மாத்த முயற்சி பண்ணணும் " .

"சரி மா இந்த குடும்பத்தோட ஜட்ஜ் சொன்னா அப்பில் ஏது " என்று நக்கலாக கூறினார்.

" ஆமா இந்த வாசு எங்க போய் தொலஞ்சான் " என்று பூங்கோதை அவனை தேடிய படியே கேட்க

" இப்படி உக்காரு மா நான் போன் பண்ணி பாக்குறேன் " என்றவர் வாசுவிற்கு அழைப்பு விடுத்தார்.

வாசு கேண்டினில் அமர்ந்து போண்டா சமோசா பஜ்ஜி பப்ஸ் டீ பிஸ்கெட் என உட்கார்ந்து அனைத்தையும் அந்த குட்டி வயிற்றுக்குள் திணித்துக்கொண்டு இருக்க போன் அடித்தது வாசுவிற்கு தெரியாமல் போனது..

அடுத்த முறையும் அழைப்பு வரவே " ஹலோ பாஸ் உங்க போன் அடிக்கிது " என்று சொடக்கிட்டு சொல்ல

யார் அந்த குரல் என்று தெரிந்து விட" வாங்க பேபி பாஸ் இப்படி உக்காருங்க " என்றவன் உண்பதிலேயே கவனத்தை வைத்திருந்தான்.

" பாஸ் போன் அடிக்கிது அதுக்கு கொஞ்சம் உயிர் கொடுங்க " என்று மித்ரா சொல்லி சிரிக்க

"ச்சை இதோட ஒரே இம்சையா போச்சி " என்றவன் யாரென்று பார்க்காமல் அட்டன் செய்ய

" எஸ் ஹூஸ் திஸ் " என்று கேட்டி படியே வாயில் போண்டாவை திணிக்க

" உன்ன மாதிரி தண்டத்த பெத்தவன் டா நானு " என்று நக்கலாக மாணிக்கம் சொல்ல

வாயுக்குள் திணித்த போண்டா வெளியே வந்து புரை ஏற தொடங்கியது. மித்ரா தான் சிரித்த முகத்துடன் அவனுக்கு தலையை தட்டி விட்டாள்.

"சொல்லுங்க தாடி " என்று கேட்க

" எங்க டா இருக்க நாங்களே வெளிய வந்துட்டோம் .நீ எங்கடா போய் தொலைஞ்ச சீக்கிரமா வாடா " என்று கத்த

" இதோ வரேன் பா " என்றவன் கட் செய்து விட " நான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன் பேபி பாஸ் .இந்த டிஷ்க்கு எல்லாம் அமௌண்ட் பே பண்ணிரு பாய் " என்று ஓடியே விட்டான்.

அவனை கண்டு பல நாள் கழித்து மனதார சிரித்தவள் கவுண்டர் சென்று பணத்தை செலுத்தி விட்டு வேலையை தொடர்ந்தாள்.

மாலை நேரம் யுவியும் சஷ்வியும் ஃபுட் கார்னரில் அமர்ந்திருந்தனர். அங்கு இருவருக்குள்ளும் அமைதியே நிலவியது.

" சொல்லுங்க அத்தான் வர சொல்லி இருந்தீங்க ஆனா இப்போ எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க " என்று மௌனத்தை உடைத்து கேட்க

" என்ன சஷ்வி நேத்து ஏன் அப்படி நிஷா கிட்ட பேசின சொல்லு " என்று கடுமையான குரலில் கேட்டான் யுவி.

"அதுவந்து அத்தான் " என்று வார்த்தையை மென்று முழங்கியவள் " சும்மா தான் அத்தான் சொன்னேன் " என்றாள்.

" உனக்காக நான் இருக்கேன்னு சொல்லி இருக்கேன்ல அப்புறம் நீ இப்படி பேசுனா எனக்கு கோபம் வராதா சொல்லு " என்று கடுமை விடுத்து கேட்க

" சாரி அத்தான் " என்றவளின் மனதில் " நான் வேணும்னு தான் சொன்னேன்னு எப்படி சொல்றது " என்று நினைத்து புலம்பினாள்.

" இனி இப்படி பேசாதே சஷ்வி மா எனக்கு கஷ்டமா இருக்கு " என்றான் உண்மையான வருத்தத்தில்..

" சாரி அத்தான் " என்று அவனின் வருத்தத்தை தாங்கி கொள்ள முடியாமல் மன்னிப்பு வேண்டினாள்.

அதற்குள் யுவிக்கு பூங்கோதை அழைத்து சஷ்வியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட ,யுவியும் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஷ்வதி செந்தில் டியர்
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Enna nadakudhu inga no idhuku nan othukamaaten mithra ku yuvi ahh ponnu kekkurangaa

Mithra life la ennachu enna avunga dady apdi sonnaru

Haiyooo onnum purila idhu therincha ellarum epdi react pannuvaanga

Yuvi ean ipdi sollura ivan enna arthathulaa solluraan unna pidikum nu solurana illa akkarai la solliraana

Mithra nala veetula enna kastam vara pogudhu
 




Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
Enna nadakudhu inga no idhuku nan othukamaaten mithra ku yuvi ahh ponnu kekkurangaa

Mithra life la ennachu enna avunga dady apdi sonnaru

Haiyooo onnum purila idhu therincha ellarum epdi react pannuvaanga

Yuvi ean ipdi sollura ivan enna arthathulaa solluraan unna pidikum nu solurana illa akkarai la solliraana

Mithra nala veetula enna kastam vara pogudhu
Thank you for your comment sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top