யாப்பிலக்கணம் (கவிதை மரபிலக்கணம்)

#11
தாய் மொழி தெரிஞ்சிக்க கசக்குமா என்ன😍😍உண்மையாகவே இது ஒரு நல்ல முயற்சி 👌👌👍👍 தமிழ் தெளிவாபுரிஞ்சி படிக்க ரொம்ப ஆசை 😄😄எனக்கு இந்த பதிவு ரொம்ப பயனுள்ளதா இருக்கு🤝🤝🤝தமிழ் சொல்லி குடுக்கும்,புலவர் பெருந்தகைக்கு நன்றி 🙏 நன்றி 🙏🙏நன்றி 🙏🙏🙏
உண்மையாகவே ரொம்ப thanks brother👍👍🤝
 

Selva sankari

Major
SM Exclusive Author
#12
'கவிதை - கையில் - கஷ்டப்படும்’ அதையே எவ்ளோ அழகா மோனையோட சொல்லிருக்கீங்க?!

உங்களுக்குள்ளயும் ஒரு கவிதாயினி இருக்கா சிஸ்... அவளை தரதரனு வெளில இழுத்துட்டு வாங்க... :):)

தரதர வென இழுத்து அவளைத்
தாறுமாறாக எழுதச் சொன்னேன்;
தற்குறியாய் அவள் எழுதி வைத்தச்
சொற்களைக் காண் பீரே!

கல்லூரி காலத்தில் கவியெழுத எனக்குக்
கட்டளையிட்ட ஆசிரியர்; நான்
அலையலையாய் எழுதிக் குவிக்கத்
தலைச் சாய்த்தவர் எழும்பவில்லை!!

முன்னும் பின்னும் மாலையைப் போல
மனதிற்ப் பட்ட பதங்களைக் கோர்த்து;
மின்னும் கவிதையென எண்ணும் எனக்கு
மரபுக் கவியெழுத ஆசைவர லாமோ??
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#13
அருமையான பதிவு ஆசிரியரே... இதை படிக்க ஆர்வம் சற்று குறைவே எனக்கு... ஆனாலும் மெதுவாய் பார்க்க படிக்க முயற்சிக்கிறேன்.... படைப்பாளிகளுக்கு பயனுள்ள இணைப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்...
நன்றி சகோ... :) :) (y) (y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#14
மிக்க மிக்க நன்றி ண்ணா 🍫🍫🍫🍫
எனக்கு மரபு கவிதை எழுதனும் என்ற ஆசையெல்லாம் இல்லண்ணா, ஒரு தமிழ் மாணவியாக பாவகைகளை இதுதான் என்று விளங்கும் வகையில் தெளிவு வேண்டும் அவ்வளவுதான்.
மனப்பாடம் செய்து வைத்து சலிச்சு போச்சுண்ணா, புரிந்து தெளிய வேண்டும். நான் கேட்டதும் தந்ததற்கு மிக்க நன்றி ண்ணா 🍬🍬🍬🍬
இனிமேல் என்னுடைய குருட்டுத்தனமான சந்தேகங்கள் எல்லாம் தங்கள் மீது படையெடுத்து வரும்😁😜
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்


படையாக வரும் ஐயங்கள் நம் முன்னோரின் அறித்திரட்டு என்னும் ஆற்றலின் முன் காணாமல் போய்விடும்... தயங்காது அனுப்புக... :) :) (y) (y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#15
மிக்க மிக்க நன்றி ண்ணா 🍫🍫🍫🍫
எனக்கு மரபு கவிதை எழுதனும் என்ற ஆசையெல்லாம் இல்லண்ணா, ஒரு தமிழ் மாணவியாக பாவகைகளை இதுதான் என்று விளங்கும் வகையில் தெளிவு வேண்டும் அவ்வளவுதான்.
மனப்பாடம் செய்து வைத்து சலிச்சு போச்சுண்ணா, புரிந்து தெளிய வேண்டும். நான் கேட்டதும் தந்ததற்கு மிக்க நன்றி ண்ணா 🍬🍬🍬🍬
இனிமேல் என்னுடைய குருட்டுத்தனமான சந்தேகங்கள் எல்லாம் தங்கள் மீது படையெடுத்து வரும்😁😜
தமிழ் மாணவியா? வாவ்! என்ன டிகிரி படிக்குற?
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#16
கடலில் கால் நனைக்க ஆசை தான்.. ஆழத்தை அளக்க அல்ல.. ஆனால், நீச்சல் சொல்லி தருபவர்களை பாராட்டியே ஆக வேண்டும் அல்லவா?

வாழ்த்துகள் நண்பா!
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்! 🎉🎊👏
நன்றி சகோ... குற்றாலீசுவரன் மாதிரி நீந்தவில்லை என்றாலும், கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் மாதிரி ஒரு குட்டி குளியலாச்சு போடுங்க... வாங்க... :) :) (y) (y)

கடலின் சிறப்பு அதில் கால் நனைத்துவிட்டால் மீள மனம் வரவே வராது!
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#17

Vijayanarasimhan

Author
Author
SM Team
#18
தாய் மொழி தெரிஞ்சிக்க கசக்குமா என்ன😍😍உண்மையாகவே இது ஒரு நல்ல முயற்சி 👌👌👍👍 தமிழ் தெளிவாபுரிஞ்சி படிக்க ரொம்ப ஆசை 😄😄எனக்கு இந்த பதிவு ரொம்ப பயனுள்ளதா இருக்கு🤝🤝🤝தமிழ் சொல்லி குடுக்கும்,புலவர் பெருந்தகைக்கு நன்றி 🙏 நன்றி 🙏🙏நன்றி 🙏🙏🙏
உண்மையாகவே ரொம்ப thanks brother👍👍🤝
நன்றி சகோ... நானும் உங்களைப் போல ஒரு தமிழார்வலன்தான்... புலவனெல்லாம் அல்லன்! :) :) (y) (y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#20
தரதர வென இழுத்து அவளைத்
தாறுமாறாக எழுதச் சொன்னேன்;
தற்குறியாய் அவள் எழுதி வைத்தச்
சொற்களைக் காண் பீரே!

கல்லூரி காலத்தில் கவியெழுத எனக்குக்
கட்டளையிட்ட ஆசிரியர்; நான்
அலையலையாய் எழுதிக் குவிக்கத்
தலைச் சாய்த்தவர் எழும்பவில்லை!!

முன்னும் பின்னும் மாலையைப் போல
மனதிற்ப் பட்ட பதங்களைக் கோர்த்து;
மின்னும் கவிதையென எண்ணும் எனக்கு
மரபுக் கவியெழுத ஆசைவர லாமோ??
ஒல்காப் புகழ்கொள் தொல்காப் பியரோ
வான்புகழ் பெற்ற வள்ளுவக் கிழவரோ
கபில பரண ஔவைக் கீரரோ
சேரன் தம்பியொடு கம்பசேக் கிழாரென
ஆயிர மாயிரம் அருந்தமிழ்ப் புலவர்
வாழ்ந்துசென் றனரிவ் வரமிகு நாட்டில்
யாரும் கருவிலே யாத்தரோ கவிதைகள்?

’ம்மா’வெனக் குழந்தைதன் மழலையில் பிதற்றினால்
மகிழ்வுடன் அணைத்திடும் அன்னையைப் போலநம்
தமிழெனும் தாயுந்தன் புலமைப் பாலுக்கு
அழுதிடும் குழந்தையை அணைத்திடு வாளிவண்...

முயற்சியால் முனம் இறைவன் மறுத்ததும்
முடிந்திடும் என வள்ளுவம் சொல்லுமால்
பயிற்சியும் அதன் பக்கம் சேர்ந்திடின்
படிய மறுப்பதும் பாரில் இல்லையே...

ஐயந் தொலைத்தெழு, அன்பொடு தமிழ்க்கவி
பைய படித்திடு வோமினி தடையிலை
வையத் தலைமைகொள் வான்புகழ் கவிதைகள்
செய்யும் நாளதும் சீக்கிரம் சேருமே!

:) :) (y) (y)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top