• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாயும் ஞாயும் யாராகியரோ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 11

தன் குழந்தையின் தலையில் முத்தமிட்டு விட்டு திரும்பியவன், அப்போது தான் சஜு, தன்னையே பார்த்துக் கொண்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான்.

உடனே, அவன் சுஷ்மியை கையில் தூக்கிக் கொண்டு, "என்னங்க வேணும்?" எனக் கேட்கவும் தான், அவள் தன் எண்ணத்தில் இருந்து விடுப்பட்டு "ஹான்... இல்ல... அது வந்து...” எனத் தடுமாறும் போதே, அவள் பின்னே வந்த சுந்தரி, கையில் ஒரு கிண்ணத்தோடு வந்து, "சுஷ்மி சாப்பிட்டாளா தம்பி?" எனக் கேட்க, "இன்னும் இல்ல மா" எனப் பதில் தந்தான் அக்ஷய்.

"சரி தம்பி, சாப்பாடு ஊட்டிட்டுச் சொல்லுங்க, இந்தச் சாற கொடுக்கணும்" எனச் சொல்லிவிட்டு நகரப் போக, "சுஷ்மி, இங்க வர்றியா? நான் 'ஆ' ஊட்டுறேன்" எனச் சஜு, அவன் தோளில் இருந்தவளிடம் கேட்க, அதுவோ யோசித்து மெல்ல "சரியென" தலையாட்டியது.

பின் சுஷ்மியைக் கீழே இறக்கி விட்டு விட்டு, உள்ளே சென்று விட்டான் அக்ஷய். அங்கு வந்த லக்ஷ்மியம்மா "வாங்க சஜுமா... உட்காருங்க...” என அவர்களை அமர வைத்து, சுஷ்மியின் கஞ்சி சாப்பாட்டையும், துவையலையும் சஜுவிடம் தர, அவளும் அவளைத் தூக்கிக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்று ஊட்டி விட்டாள்.

பின் சிறிது நேரம் லக்ஷ்மியம்மாவிடம் பேசி விட்டு, வந்த சுந்தரி, சுஷ்மிக்கு இலைச்சாறை வாயில் ஊற்றினார்.

இப்போதும் முன் போலவே, அவள் கையைப் பிடித்து, அவளை அமுக்கி தன் மடியில் அமர்த்தினார் சுந்தரி. ஆனால் சுஷ்மியோ வேண்டாம் என அழுது, வாயை இறுக மூட, சுந்தரி "நான் வாயத் திறக்க வைக்கிறேன், நீ ஒரு ஒரு ஸ்பூனா அவள் வாயில விடு" எனச் சஜுவிடம் சொன்னார்.

அவளும் சரியெனத் தலையாட்டினாலும், சுந்தரியிடம் இருந்த சுஷ்மியின் நிலையைப் பார்த்து, அவள் அழுவதால் இரக்கப்பட்டு, "அம்மா... பாவம் மா...” எனச் சொல்ல, "பாவம்ல பார்த்தா... குணமாக வேண்டாமா? நீ முத சாற ஊட்டு... சின்னப் பிள்ளைங்க அப்படித் தான் அழுவாங்க... நீயெல்லாம் இவள மாதிரி இருக்கும் போது, சாப்பாடே இப்படித் தான் ஊட்டுவேன். நம்ம சுஷ்மியாவது பரவாயில்ல" என அவளின் வண்டவாளத்தையும் சேர்த்து சொல்லி, அதட்டி, ஒரு வழியாய் சுஷ்மிக்கு இலைச்சாறை கொடுத்தார்.

குழந்தையும் சுந்தரி விட்டவுடன், "சசு... ஊஊ...” என அவளிடம் அழுது கொண்டே தாவி, அவளைத் தூக்க சொன்னது.

அவளும் தூக்கிக் கொண்டு, சமையலறை சென்று சுஷ்மிக்கு சிறிது தண்ணீரும்... ஒரு சின்ன ஸ்பூனில் சீனியும் தந்தாள். அப்படி இருந்தும் சிணுங்கிக் கொண்டே இருந்தவளை "இதுலாம் குடிச்சா தான் டா... வயிறு வலியெல்லாம் போய், சுஸு பாப்பா என்னோட விளையாட முடியும். என்ன?" எனக் கேட்டுப் பார்த்தாள். அதற்கும் சுஷ்மி அழுகை நிற்கவில்லை.

"அழுகக்கூடாது டா... சுஷ்மி குட் கேர்ள்ல...”

“ஆஆ... ஆ...”

"நான் உனக்குப் பெரிய டெடி காமிக்கவா?... இல்ல நாம பொம்ம படம் பார்ப்போமா டா?...”

“ஹாஆ... ம்ம்ம்... ஹ்ஹா...” என அழுகை தேம்பலாய் குறைய...

"என்ன படம் பாப்பாக்கு வேணும்? என்ன பார்க்கலாம் சொல்லு டா. . .” என வித விதமாய்ப் பேசி, சுஷ்மியின் அழுகையை நிறுத்தினாள்.

பின் சுஷ்மி கேட்டது போலவே, சஜு 'டாம் அண்ட் ஜெர்ரி'யை தன் கணினியில் போட்டு காண்பிக்க, அவளும் அழுகையை நிறுத்தி, அதில் ஒன்றி, சஜு அவள் உடலை, தலையில் இருந்து வருடிக் கொடுக்க, அப்படியே அந்தச் சுகத்தில், குழந்தையும் உறங்கி விட்டது.

உறங்கிய குழந்தையைக் கொடுத்த சஜுவிடம், அக்ஷய் "ரொம்பத் தேங்க்ஸ்ங்க... பாவம் உங்கம்மாக்கு வேற சிரமம் கொடுத்திட்டேன். இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு பண்ணப் போறேன்னே தெரியல" என நீண்ட நன்றியுரையைக் கூற, அவளோ வழக்கம் போல "பரவாயில்ல சார்... இருக்கட்டும். குழந்தைக்குத் தான செய்யுறோம். இதுக்கெல்லாம் போய் யாராவது நன்றி சொல்வாங்களா?" எனப் புன்னகைத்து விட்டு, "வரேன் சார்" என்று சென்று விட்டாள்.

அவளும் சாப்பிட்டு விட்டு, சிறிது ஓய்வாய் படுக்கப் போக, விஜய் அலைப்பேசியில் அழைத்தான்.”ஹலோ... சொல்லுங்க அத்தான்...” எனச் சாதாரணமாய் வினவ,

"சஜு... இப்படி என்ன ஏமாத்திட்டியே... நீயே என்கிட்ட சொல்லுவன்னு பார்த்தா... மாமாக்கிட்டா சொல்லி, மாமா அப்பாக்கிட்ட சொல்லி, அப்பா என்கிட்ட சொன்னார். போ... சஜு... ஐம் பீலிங் பேட்" எனச் செல்லமாய்ச் சோக கீதம் வாசித்தான்.

அவன் எதைச் சொல்கிறான் என ஒரு நொடி குழம்பினாலும், பின் புரிந்தவளாய் "ஐயோ... அத்தான்... இதெல்லாம் பெரியவங்க சொன்னா தான் நல்லா இருக்கும்...”

"சரி... மாமா அப்பாக்கிட்ட சொன்னார், நீ என்ட்ட சொல்லியிருக்கலாம்ல?" என மீண்டும் அவன் குறைப்பட,

அவளோ தலையில் கை வைத்து, "ஸ்ஸ்... காலையிலேயே உங்கக்கிட்ட பேசணும்னு நினைத்தேன் அத்தான்... ஆனா அதுக்குள்ள... இங்க சுஷ்மிக்கு உடம்பு முடியாம போய், அப்பாவும் அம்மாவும் அவங்கப்பா கூடப் போயிட்டாங்களா... அதான் மறந்துட்டேன்...” என அவள் பாதிப் பாதியாய் சொல்ல...

அவனோ "காலையில் நீ எந்திரிக்கிறதே ஒன்பது மணி... இதுல இப்படி வேற ஆகிடுச்சா... மாமாவும் அத்தையும் போனாங்களா?... ஆமா, அப்படிப் பேபிக்கு என்ன ஆச்சு?" என எதுவும் புரியாமல் கேட்டான்.

பின் சஜு விவரம் சொல்ல, "ஓ... மை காட்!... இப்ப எப்படி இருக்கா பேபி?... ஹாஸ்பிடல் போகாம, ஏன் அங்க போனீங்க?" எனப் பொரிந்தான்.

"எனக்கும் தெரியாது அத்தான். அவங்க எல்லோரும் தான் முடிவு பண்ணிப் போனாங்க...” எனத் தனக்கும் இந்த வைத்திய முறைப் புதிது தான் என்பது போல் சொன்னாள்.

"சரி... நான் ஈவனிங் வந்து பேபியப் பார்க்குறேன்... அப்படியே உன்னையும் பார்த்திட்டு போக ஒரு சான்ஸ் வந்திருக்கு" என அந்தப்பக்கம் கண்ணடித்து விஜய் கூற,

"ம்ச்சு... போங்க அத்தான்... நானே சுஷ்மிக்கு இப்படி ஆகிடுச்சேன்னு... கவலைப்பட்டுட்டு இருக்கேன்... நீங்க வேற... விளையாடாதீங்க...” என்று சலிப்பாய் கூற...

"ஏன் சஜு... கவலைப்படுற... அதெல்லாம் சரியாகிடும் பேபிக்கு... நாளைக்கே உங்க வீட்டுக்கு வந்து நிற்பா பாரேன்...” என ஆறுதல் படுத்தினான்.

"ஏன் அத்தான்... நாம அன்னிக்கு மால் கூட்டிட்டு போய், குஜராத்தி சாப்பாடு சுஷ்மிக்கு வாங்கித் தந்தோமே... அதுனால எதுவும் இப்படி ஆகிடுச்சோ...” எனத் தன் மனதை அரித்த கவலையைக் கேட்டாள்.

"இம்ஹும்... அப்படியெல்லாம் இல்ல சஜுமா... அப்போ குஜராத்ல இருக்கப் பசங்களுக்கு எல்லாம் இப்படி ஆகுமா? அவங்க எல்லோரும் இந்த புட் தான சாப்பிடுவாங்க?" என விவரமாய் எடுத்துரைத்தான்.

இருந்தும்...”இம்ம்... இல்ல... தான் அத்தான்... ஆனா இது சுஷ்மிக்கு பழக்கமில்லாத சாப்பாடு ஆச்சே... அதுனால குழந்தைக்குச் சேரலையோ?" என மீண்டும் அவளின் கவலையிலேயே அவள் நிற்க,

"ஹே... விட்டா... அவங்கப்பாட்ட போய் நான் தான் இதுக்குக் காரணம். என்ன போலீஸ்ல பிடிச்சுக் கொடுங்கன்னு சொல்வ போல" என லேசாய் சிரித்து, அவளை மாற்றும் பொருட்டுச் சிறிது கேலி செய்தான்.

ஆனால் அவளோ பதிலளிக்காமல், அமைதியாய் இருந்தாள்.”சரி... சஜு... நீ... இதையே நினைக்காம... அத்தான் ஈவ்னிங் வரப்போறேனே... எனக்கு என்ன ஸ்வீட்லாம் பிடிக்கும்னு திங்க் பண்ணி செஞ்சு வை. சோ தட், யூ வில் பீ ரிலாக்ஸ்ட்...” எனக் காதலாய் அறிவுறுத்தினான்.

மாலையும் வந்தது, சொன்னது போலவே விஜயும் வந்தான். கையில் அமெரிக்காவில் வாங்கிய ஒரு பொம்மையோடு தான் வந்திருந்தான். ஆனால் சஜு தான், அவன் சொன்னதைச் செய்யாமல் சுஷ்மியையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் வாடிய முகத்தைக் கண்டவன், சுஷ்மியின் வீட்டிற்குச் சென்று, அக்ஷய்க்கு ஆறுதல் சொல்லி விட்டு, அவன் மறுத்தும் குழந்தையிடம் பொம்மையைத் தந்து, அவளைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

"ஏன் பேபி... இப்போ உங்களுக்கு வயிறு வலி இல்லேல்ல? சரியாகிடுச்சுல பேபி...” எனக் கேட்க, சுஷ்மியோ அவன் தந்த பொம்மையைப் பார்த்துக் கொண்டே, "ஆம்" எனத் தலையாட்டினாள்.

அப்போது சுந்தரி, விஜய்க்கு டம்ளரில் டீ கொண்டு வர, அதைக் கண்ட சுஷ்மியோ, "இல்ல இல்ல...” என விஜயிடம் இருந்து நழுவி, சஜுவிடம் ஓடிப் போய் அழ தயாரானாள். அவளுக்குப் பயம், எங்கே திரும்பவும், அந்த... பச்சை... நிற... தண்ணியைச் சுந்தரி தந்து விடுவாரோ என்று மறுத்தாள்.

சுந்தரியும் சிரித்துக் கொண்டே "உனக்கு இனிமே தான் கொடுக்கணும் சுஷ்மி... இது மாமாக்கு" என விஜயிடம் டம்ளர் தரவும் தான் அமைதியானாள் சுஷ்மி.

சஜுவே "என்னமா... திரும்பவுமா?" எனக் குரலை உயர்த்திக் கேட்க...”அப்புறம் சரியாக வேணாமா?" என அவளுக்குப் பதில் சொல்லும் போதே,

"ஏன் அத்த... இங்கெல்லாம் போயிட்டு... பேசாம ஹாஸ்பிட்டல் போயிருக்கலாம்ல" எனக் கேட்க, "ஏன் விஜய், ஹாஸ்பிடல்ல டாக்டர், மாத்திர தந்தா... மூனு வேளையும்... அதுவும் இரண்டுமூனு நாளைக்குப் போட்டு தானே ஆகணும்... அது மாதிரி தான் இந்த மருந்தும். ஆனா இன்னிக்கு ஒரு நாள் தான். நாளைக்குச் சரியாகிடும்" என்று சொன்னார்.

பின் சிறிது நேரம் இருந்து விட்டு, நைட் போன் செய்வதாக, ரகசியமாய்ச் சஜுவிடம் சொல்லி சென்றான். இரவு அலைப்பேசியில், விஜய் "ஹே சஜு... நாளைக்கு நல்ல நாளாம். அதுனால, நாளைக்கு உன்ன பெண் பார்க்க நாங்க வர்றோம்... நாளைக்காவது சீக்கிரம் எந்தரிச்சு ரெடியாகி... அத்தான பார்க்க அப்படியே கொஞ்சம் வெட்கத்தோடு இரு சஜு" என்று விஷயத்தைச் சொல்லி, கேலியில் முடிக்க...

அவளோ "அத்... தான்...” எனக் கோபப்பட்டாலும், "ஆமா, எனக்கு... அம்மா அப்பா யாரும் சொல்லவே இல்ல" எனச் சீரியஸாய் கேட்டாள்.

"எனக்கே இப்ப தான் தெரியும் சஜு. சாயந்திரம் தான் அப்பா யாரோ ஒரு ஜோசியர்ட்ட கேட்டுட்டு வந்திருக்கார் போல, மாமாக்கு போன் பண்ணி சொல்லியிருப்பாங்க. நாளைக்கு ஈவ்னிங் தான வர்றோம்னு... உனக்குக் காலைல சொல்லலாம்னு இருந்திருப்பாங்க" என விவரம் சொல்ல, அவளோ "சரி அத்தான்... போனை வைக்கவா?" எனக் கேட்க,

விஜய் நொந்து போனான்...”ஏன் சஜு... இப்படி இருக்க?"

"எப்படி இருக்கேன்?" அவள் புரியாமல் கேட்க,

"ம்ம்ம்... நல்லா தான் இருக்க... ஆனா என் நிலைமை தான் கஷ்டம் போல...” எனக் காதலாய் பேசலாம் என்று இருந்தவனின் எண்ணத்தை, வெகுளியாய் கேள்வி கேட்டு மாற்றி இருந்தாள் சஜு.

"என்ன கஷ்டம்... ?" எனத் திரும்பவும் அவள் கேட்க, "ஐயோ... சஜு... ப்ளீஸ்... லீவ் மீ... போதும்... கேள்வி. நான் உன்ட்ட பேசலாம்னு நினைச்சா நீ வைக்கவான்னு கேட்குற?" என்று புரிய வைக்க முயற்சித்தான் விஜய்.

"ஓ... இல்லத்தான்... நீங்க தான சீக்கிரம் எந்திரிக்கச் சொன்னீங்க... அதான் தூங்கலாம்னு நினைச்சேன்" என்று அறிவாளியாய் பதில் சொல்ல...”சரி மா... நீ தூங்கு மா...” என்று பெருமூச்சு விட்டான்.

"சரி அத்தான். குட் நைட்" என நல்ல பிள்ளையாய் சொல்லி, அலைப்பேசியை அணைத்தாள்.

மறு நாள் காலை, பூக்கார அம்மா வந்து சத்தம் கொடுக்கவும், லக்ஷ்மியம்மா "நாம் வர சொல்லவில்லையே...” என எண்ணியப்படியே வெளிய வர, அங்குச் சுந்தரி சஜுவுக்காகப் பூ வாங்கிக் கொண்டிருந்தார்.

சுந்தரியிடம், லக்ஷ்மியம்மா "என்ன சஜுமா... காலையிலேயே பூ வாங்குறீங்க? எதுவும் விசேஷமா?" எனக் கேட்க, அவரோ "ஆமாம் மா... சஜுவ பொண்ணு பார்க்க வர்றாங்க. என் நாத்தனார் பையன் தான்மா. நேற்று கூட வந்திருந்தாப்ல... அந்தப் பையன் தான் மா" என்று கூற,

"ரொம்பச் சந்தோஷம் மா... எல்லா நல்ல படியா நடக்கும்" என்று மனமாறக் கூறினார்.

இதையெல்லாம் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அக்ஷய் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். கேட்டவனுக்கோ, ஏதோ நெஞ்சினில் வித்தியாசமாய்த் தோன்ற, சஜுவின் வீட்டைப் பார்த்தான்.

அங்கு வழக்கம் போல், வரவேற்பறையின் மெத்திருக்கையில் அமர்ந்து, டீயை ரசித்து, ருசித்துப் பருகிக் கொண்டிருந்தாள் சஜு.

அவளைப் பார்த்த அக்ஷயோ "இவள் இன்னும் திருந்தவே இல்லையா? பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று சொல்கிறார்கள்... இன்னும் குளிக்காமல் கூட இருக்கிறாள். மணி வேறு எட்டரையாகி விட்டது. அவள் அம்மாவும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் போல...” என எண்ணினான்.

ஏனெனில் அவன் தங்கையெல்லாம் இவள் வயதில், எல்லோருக்கும் டீ போட்டு... அதுவும் ஆறு மணிக்கே போட்டு, எல்லோருக்கும் விநியோகம் செய்து கொண்டிருப்பாள்.

பாவம் அக்ஷய்க்கு என்ன தெரியும்? அவள் இன்று தான், வழக்கமாய் இல்லாமல், சீக்கிரமாய்ச் சற்று நேரம் முன்னதாக, எட்டு மணிக்கு எழுந்திருக்கிறாள். அதனால் தான் அவள் அன்னை, அவளை அர்ச்சிக்காமல்இருக்கிறார் என்று எப்படி அவனுக்குத் தெரியும்?

இன்று தன் அன்னை, தந்தை வருவதால், அவர்களுக்காக இன்றும் வீட்டில் இருந்தான் அக்ஷய். சுஷ்மி நேற்று இரவு இருந்து வயிற்றாலை போகாமல் நன்றாகத் தான் இருக்கிறாள், இருந்தும் சோர்வாய், சுனக்கமாய்த் தான் இருந்தாள். அதனால் இன்றும் விடுமுறை எடுத்துக் கொண்டு, தன் அன்னை தந்தையின் வரவுக்காகக் காத்திருந்தான்.

அவர்கள் வரும் வரை சுஷ்மியை கவனித்துக் கொண்டு, அவள் விளையாட பொம்மைகளைத் தந்து விட்டு, மதிய சமையலுக்கு லக்ஷ்மியம்மாவுக்கு உதவினான். அவர்களும் மதியம் இரண்டு மணி போல வந்து விட, அக்ஷயிடம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுஷ்மி, அவர்களைக் கண்டு "வையும்... பாட்டி... தா... தா...” என ஓடினாள்.

ஓடி வந்த சுஷ்மியை, அக்ஷையின் தந்தை திருச்சிற்றம்பலம் தூக்கிக் கொண்டு, "என்ன ஆத்தா... மேலுக்கு முடியலையாமே... வயிறு வலிச்சதா கண்ணு" எனக் குழந்தையின் வயிற்றைத் தொட்டு கேட்க, சுஷ்மியோ உதட்டைப் பிதுக்கி, "ஆம்" என்று தலையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.

இதற்கிடையில் "வா... மா, வாங்க ப்பா...” என வரவேற்றான் அக்ஷய்.

"அச்சோ என் ராசாத்திக்கு ரொம்ப வலிச்சுடுச்சாமே" என அவள் முகத்தைக் கையால் அணைத்து, தன் தோளில் சாய்த்துக் கொண்டே, மெத்திருக்கையில் அமர்ந்தார்.

அவர் அருகே அமர்ந்த வைரமோ "சின்னக் குட்டி... இந்தா...” எனத் தான் கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தை உரித்து, "இதெல்லாம் சாப்பிட்டா தான் வயிறு வலி போகும் த்தா...” எனச் சொல்லியப்படியே ஊட்டினார்.

பின்னர் கொண்டு வந்த பழங்கள் பையை, எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்த லக்ஷ்மியம்மாவிடம் கொடுத்து விட்டு, "நல்லா இருக்கியாத்தா... இந்தா ஆத்தா... பத்திரமா எடுத்து வை... நீயும் சாப்பிடு...” எனக் கூறினார்.

"வா... வைரம்... இப்ப தான் வந்தீகளா... தம்பியும் வந்திருக்காரா?" என அவரிடம் கேட்டுக் கொண்டே, சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் "வாங்க தம்பி...” எனத் தண்ணீரை திருவிடம் தந்தார்.

"நல்லா... இருக்கீகளா ஆத்தா... உமக்கும் முடியலன்னு சொன்னான் அய்யன்" என நலம் விசாரித்து விட்டு, ஊர் நடப்பு, வயல்வெளி, தோப்பு, அக்ஷையின் தங்கை, தங்கை கணவன், அவர்கள் வீடு என அவர்களின் பேச்சு ஒரு பக்கம் நீண்டு கொண்டே போனாலும், அனைவரும் சாப்பிட சென்றனர்.

சுஷ்மி "வையும் பாட்டி" எனக் கத்திய சத்தத்தில் எட்டிப்பார்த்த சஜுவின் கண்களில், அக்ஷையின் அன்னை தந்தை பட்டனர். சுஷ்மியைத் தூக்கி கொண்ட அக்ஷையின் தந்தை வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையிலும், அக்ஷையின் அன்னை சேலையைக் கண்டாங்கி போலெல்லாம் கட்டாமல் சாதாரணமாய், அந்தக் காலத்தவர் போல, சின்ன முந்தி விட்டு, அதில் ஒற்றை முந்தியை இடுப்பில் செருகியப்படி தான் இருந்தார். அவர்களைப் பார்த்தால் கிராமத்தில் இருப்பவர்கள் போல் தெரியவில்லை, ஆனால் அவர்கள் பேச்சில் தெரிந்தது, அவர்கள் ஊரின் வாசம்.

மாலை சுஷ்மியை பெண் பார்க்க விஜய் குடும்பத்தினர் மட்டும் வந்தனர். சஜு பட்டு சேலை அணிந்து, அழகாய் தயாராகி இருந்தாள். சித்ராவை சுந்தரி, அறையில் இருந்த சஜுவிடம் அழைத்துச் செல்ல, அவர் சஜுவின் தலையில் பூ வைத்து, வரவேற்பறைக்கு அழைத்து வர, அனைவருக்கும் பொதுவாய் விழுந்து வணங்கினாள்.

பின் குணா தான், அவளை அவர்களுடனே உட்காரச் சொல்லிப், பேசினார். ஏனோ சஜுவுக்குப் பட்டு சேலை அணிந்திருப்பது அசௌகரியமாய்ப் பட, அதோடு அவர்கள் முன் அமர்ந்து... தன் தாய் அறிவுறுத்தியதுப் போல், அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு, குனிந்துக் கொண்டாள். விஜய்க்கு ஆச்சரியமாய் இருந்தது, தலைக் குனிந்திருந்த சஜூவை கண்டு, அப்போது சரியாய் "சசு...” என வாசலில், சுஷ்மி நின்று அழைக்க, சடாரென நிமிர்ந்தாள் சஜு.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 12

"சசு...” என்று அழைத்துக் கொண்டு வந்த சுஷ்மியின் கையில், வழக்கம் போல் ஒரு டெடியும், இன்னொரு கையில் ஒரு மாதுளம் பழத்தையும் வைத்திருந்தாள்.

சஜுவின் வீட்டில் எல்லோருக்கும், சுந்தரி டீ வழங்கி கொண்டிருந்ததால், அனைவரும் அதைப் பருகிய படி, விஜயும் டீயை ஒவ்வொரு மிடறாய் சுவைத்துக் கொண்டே, சஜுவை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க... இவ்வாறு வீடே அமைதியாய் இருக்க, திடீரெனக் கேட்ட சுஷ்மியின் குரலில் அனைவரும் வாசலைப் பார்த்தனர்.”ஹே... சுஷ்மி பேபி... இங்க வா...” என விஜய் அழைத்தான்.

ஆனால் சுஷ்மியின் குரலில் சடாரென நிமிர்ந்த சஜ்னா, வாசலைத் தாண்டி, எதிர் வீடு கண்ணில் பட, சற்று ஸ்தம்பித்து... பின் புருவம் நெரித்து, கூச்சத்தோடு குனிந்து கொண்டாள். காரணம், அங்கு எதிர் வீட்டில், அக்ஷய் வாசலுக்கு நேராய், அவன் வீட்டு வரவேற்பறையில் நின்றிருந்தான்.

எல்லோரும் சுவரோரமாய் இருந்த மெத்திருக்கையிலும், அதன் பக்கவாட்டு சுவற்றில், இரு நாற்காலிகளில், ஒன்றில் சித்ராவும், மற்றொன்றில் விஜயும் அமர்ந்திருந்தார்கள்.

அதனால் சஜுவை, முரளி அமர்ந்திருந்த மெத்திருக்கை அருகே, ஒரு நாற்காலியைப் போட்டு, தந்தையின் அருகே அமர வைத்திருந்தார்கள். ஆனால் அது, அப்படியே எதிர் வீட்டைப் பார்த்தப்படி இருந்தது. இது நேரம் வரை, அங்கு வரவேற்பறையில், காற்றாடக் கதவைத் திறந்து வைத்து, பனியன் வேஷ்டியோடு, திருச்சிற்றம்பலம் அமர்ந்து செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.

சமையலறைக்கு நேராய் இருந்த இடத்தில், அதாவது வாசலுக்குச் சற்று தள்ளி இருந்த வரவேற்பறையில், கீழே அமர்ந்திருந்த வைரம், சஜு குடும்பத்தினர் செய்த உதவியை லக்ஷ்மியம்மா மூலம் அறிந்து, தான் கொண்டு வந்திருந்த, தங்கள் தோட்டத்தில் வளர்ந்திருந்த கொய்யா மரத்தில் மற்றும் மாதுளை மரத்தில் விளைந்தக் கனிகளில் சிலவற்றை, அவர்களுக்குத் தரலாம் என நல்ல பழமாய்ப் பார்த்து, லக்ஷ்மியம்மாவிடம் பேசிக் கொண்டே, பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவர்களுடன் அமர்ந்து, தன் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த சுஷ்மியின் காதில், "சஜுமா... சஜு...” என்ற பெயர் விழவும், "சசுகு... இன்ன?" என விவரமாய்க் கேட்டாள்.

வைரமோ "சஜுவோட அம்மா தான்... உன்ன கூட்டிட்டு போய், உனக்கு மருந்தெல்லாம் குடுத்தாகலாமே... அவுகளுக்கு இந்தப் பழத்தெல்லாம் கொடுப்பமா... குட்டி...” எனப் பழத்தைக் காட்டிக் கேட்டார்.

அதுவோ புரிந்தும் புரியாமல், "சசுக்கா... ?" என ஒரு மாதுளம் பழத்தை, கஷ்டப்பட்டு, ஒற்றைக் கையில் எடுத்துக் கொண்டு, கேள்வி கேட்டது.

அவர் "ஆமா... டா... சின்னக் குட்டி...” எனச் சொன்னது தான் தாமதம், "சசு...” என அவர்கள் வீட்டிலிருந்தே, அவளை ஏலம் விட்டுக் கொண்டே... சஜு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, சாப்பாட்டு மேஜையில் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அக்ஷய், எழுந்து சென்று, அவளைத் தடுப்பதற்கு முன்... நொடிப் பொழுதில், மின்னலென ஓடி விட்டாள் சுஷ்மி.

இதனால் தான், சுஷ்மியின் பின்னேயே வந்தவன், அவள் சஜு வீட்டைத் தொட்டதும், தன் வீட்டிலேயே தேங்கி விட்டான். அப்போது தான் சஜுவும் நிமிர்ந்து, அவனைப் பார்த்தாள். முதன் முதலில், அவளைச் சேலையில்... அதுவும் பட்டுச் சேலையில்... அலங்காரமாய்... தலை நிறையப் பூ வைத்து... இதுவரை பார்க்காத கோலத்தில் பார்க்கவும், ஒரு நிமிடம் கல்லெனச் சமைந்து விட்டான் அக்ஷய்.

அதே சமயம், புதிதாய் என்று சொல்ல முடியாது... எப்போதேனும்... இதுவரை... இந்த இருபத்து மூன்று வயது வரை... நான்கைந்து முறையே... சேலை அணிந்து... அதுவும் சாஸ்திரத்திற்குக் கட்டி பழகியிருந்ததால்... கொஞ்சம் அசௌகரியமாய் உணர்ந்தாள் சஜ்னா.

இதில், சுஷ்மியால் நிமிர்ந்து, அக்ஷயை வேறு பார்க்கவும் "ஐயோ... இந்த டிரஸ்ஸோட... இவன வேற பார்த்துட்டோமே" எனப் புருவம் நெரித்து, சலித்து, கொஞ்சம் கூச்சமாய் உணர்ந்ததால், பார்வையைத் தாழ்த்தி, மீண்டும் குனிந்துக் கொண்டாள். அக்ஷயும், தன் அறைக்குச் சென்று விட்டான்.

எல்லோரையும் பார்த்தாலும், புதிதாய் வந்தவர்களை, கண்களில் மிரட்சியோடு பார்த்தாலும், தனக்குப் பொம்மை வாங்கித் தந்த மாமா அழைக்கவும், புதியவர்களைப் பார்த்துக் கொண்டே விஜய் அருகில் சென்றாள் சுஷ்மி.

அதோடு முரளியும் "சுஷ்மி... வா டா... கண்ணா" என அழைத்தார். பின் அனைவருக்கும் இனிப்பு தரப்பட, சுஷ்மியும் பொம்மை வைத்திருந்த கையில், ஒரு பால்கோவாவை வாங்கிக் கொண்டாள்.

"வாப்பா முரளி... வீட சுத்திக் காட்டு... பார்க்கலாம். சித்ரா... நீயும் வா" எனக் குணா, முரளியை அழைத்துச் செல்ல, விஜயும், சஜுவும், சுஷ்மியோடு தனித்து விடப்பட்டனர்.

சித்ரா "ஆமா... இது பெரிய அரண்மனை... போங்க போய்... சுத்திப் பாருங்க... இருக்கிறது ஒரு பிளாட்...” என மனதில் ஏளனமாய் எண்ணிக் கொண்டே, கம்பீரமாய், நடந்து சென்றார்.

இங்கு நம் விஜயும் "தேங் யூ டாட்... தேங்க்ஸ் சோ மச்...” என மனதில் தன் தந்தைக்கு நன்றி கூறி விட்டு, குனிந்திருந்த சஜுவையே உற்று நோக்கி, "சஜு... எல்லோரும் போயிட்டாங்க... நடிச்சது போதும்...” எனச் சொல்ல,

அவளோ சிணுங்கலாய் மெல்லிய குரலில், "அத்தான்...” எனச் சொல்லி விட்டு, மெல்ல நிமிர்ந்து, முதலில் எதிர் வீட்டில் அக்ஷய் இருக்கிறானா என்று பார்த்து, அவன் அங்கு இல்லாததினால், ஒரு விடுதலை உணர்வோடு பெருமூச்சு விட்டப் பின்னே, நன்றாக நிமிர்ந்தாள்.

அதற்குள் விஜய், சுஷ்மியிடம் "பேபி... இங்க சஜு சஜுன்னு ஒரு பொண்ணு இருந்துச்சு... நீங்க பார்த்தீங்களா?" எனக் குறும்பாய் கேட்டு விட்டு, முகத்தில் புன்சிரிப்போடு, சஜுவைக் காட்டி, "ஏன் பேபி... இவங்க யாருன்னு உனக்குத் தெரியுதா... ?" என மீண்டும் கேலி செய்ய, சஜுவோ "வேண்டாம் அத்தான்..." என விளையாட்டாய் கோபப்பட்டு, ஆள் காட்டி விரலை ஆட்டினாள்.

ஆனால் சுஷ்மியோ, தன்னை மடியில் வைத்திருந்த விஜயின் முகத்தைப் பார்த்து, "ம்ம்... அடா... சசு...” என அவளைக் கைக் காண்பித்துக் கூறவும்,

"ஹே...” என்று ஜெயித்து விட்டது போலக் கூவி, "அப்படிச் சொல்லுடா... என் செல்லக் குட்டி" எனச் சுஷ்மியிடம், இரு கையையும் விரித்து அழைத்து, விஜய்க்கு கண்ணையும், மூக்கையும் சுருக்கி, பூனைக் குட்டி போல முகத்தை ஆட்டி, அவனுக்கு 'வக்கணைக்' காண்பித்தாள்.

சுஷ்மியும் அவளிடம் போய், ஜம்மென்று அவள் மடியில் அமர்ந்து கொள்ள, ஆனால் நம் விஜயோ, அவள் முகத்தை ஆட்டிய போது, அவளோடு சேர்ந்தாடிய, அவள் காது கல் ஜிமிக்கியில்... அவன் மனமும் அதில் சேர்ந்து ஊஞ்சல் ஆட... கற்பனையில்... அவளோடு சேர்ந்து அவன், லாஸ் ஏஞ்சல்ஸ்ஸின் டிஸ்னிலாண்ட்டில், பறக்கும் யானை ‘ஜம்போவில்’ பறந்து கொண்டிருந்தான்.

விஜய் கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, நம் சஜுவோ, சுஷ்மி "இடா... சசு...” எனச் சொல்லி, அவள் நீட்டிய மாதுளம் பழத்தை, அவளின் கையைப் பிடித்து, அவளிடமே மடக்கி, "நீ வச்சுக்கோடா... உனக்குத் தான உடம்பு முடியல... நீ தான் டா... சாப்பிடனும்" என எடுத்துரைக்கும் போதே... அனைவரும் வந்து விட, குணா "இது யாரு... நம்ம சஜுக்கு, மணப்பெண் தோழியா?" எனக் கேட்டுச் சிரித்தார்.

முரளியோ "ஆமா... மாமா, இப்ப சுஷ்மி கண்ணாதான், சஜுக்கு ப்ரென்ட். எப்போவும் கூடவே இருப்பா... அதனால மணப்பெண் தோழி சுஷ்மி தான்...” எனச் சுஷ்மி கன்னத்தைத் தட்டியப்படி, அவரும் சொல்லி சிரித்தார்.

பின் சித்ரா தான் கிளம்புவோம் என்று செய்கை செய்ய, அப்போது தான் குணாவும், முரளியும் நிச்சயம் மற்றும் கல்யாண தேதியைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, முரளியோ, விஜயின் சௌகரியத்தை, விடுமுறையை உத்தேசித்து எந்தத் தேதி சொன்னாலும் சரி தான் எனத் தன் ஒப்புதலை தெரிவித்தார்.

பின் குணா தான், வீட்டிற்குச் சென்று ஜோசியரிடம் கலந்தாலோசித்துச் சொல்கிறேன் என்று கூறி, விஜய் வீட்டினர் விடைப்பெற்றனர்.

மறுநாள் காலை, அக்ஷய் அலுவலகம் கிளம்பி விட, வழக்கம் போல், காலை உணவு உண்டு விட்டு, சுஷ்மி சஜு வீட்டிற்கு விளையாட வந்து விட்டாள். பின்னர்ச் சிறிது நேரத்தில், வைரம், சஜு வீட்டிற்குச் சென்று "என்ன சின்னக் குட்டி... இங்க வந்து விளையாடுறீகளாக்கும்...” எனக் கேட்டுக் கொண்டே, வீட்டு வாயிலில் நின்றார்.

அங்கு வரவேற்பறையில் சுஷ்மியோடு விளையாடிக் கொண்டு அமர்ந்திருந்த சஜு "வாங்க... வாங்கம்மா" என வரவேற்றாள்.

"இருக்கட்டும் தாயி... அம்மா இல்லையா?" எனக் கேட்டார்.”அம்மா குளிச்சிட்டிருக்காங்க... வந்திருவாங்க, நீங்க... நீங்க உட்காருங்க" எனச் சஜு மெத்திருக்கையைக் காட்டினாள்.

சுஷ்மியும் "வையும் பாட்டி... ப்பா பா(வா)... உகாரு...” என அவர் கைப் பிடித்து இழுத்து, சஜுவைப் போலவே உபசரித்தாள்.

அவரோ புன்னகைத்து, "அடிக் கழுத... அவுக வீட்லேயே இருந்துபுட்டு... என்ன வா ன்னு உபசாரம் பண்றீகளாக்கும்?" எனக் கூறி, செல்லமாய்ப் பேத்தியின் முதுகில் ஒன்று போட்டு, அணைத்துக் கொண்டார்.

பின் தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைத் தந்து "இந்தாத்தா... வச்சு சாப்பிடுங்க... நம்ம தோட்டத்துல விளஞ்ச பழந்தான்...” என நீட்டினார்.

சஜுவோ "ஐயோ... வேணாம்... இருக்கட்டும் மா... நீங்க பாப்பாக்கு வச்சுக்கோங்க" என மறுக்க... அவரோ, மறுத்த அவள் கரம் பற்றி, "அப்படிலாம் சொல்லக் கூடாது தாயி... அய்யனும்... லக்ஷ்மியம்மாவும்... சொன்னாக... நீங்க தான், இந்தச் சின்னக்குட்டிக்கும், அக்காவுக்கும்... உடம்பு முடியாம போனப்ப... உதவியா இருந்தீகன்னு... இத சின்னக் கைமாறா நினச்சு வச்சுக்கோ தாயி. வீட்ல குட்டிக்கு, நெறைய இருக்கு...” என வாஞ்சையாய் சொல்லி, அவள் கையில் பழக்கூடையை வைத்து விட்டார்.

சஜுவோ மறுக்க முடியாமல் தவிக்க, அப்போது குளித்து முடித்திருந்த சுந்தரி வர, "வாங்கமா...” என வைரத்தை வரவேற்க, சஜுவோ "அம்மா...” எனக் கையில் பழக்கூடையோடு சுந்தரியைப் பார்த்தாள்.

சுந்தரியோ "எதுக்குங்க... இதெல்லாம்...” எனச் சொல்ல, வைரமோ "இருக்கட்டும்த்தா... நல்லா இருக்கீகளா?" எனப் பொதுவாய் நலம் விசாரித்தார்.

சுந்தரியும், சஜுவிடம் பழத்தை உள்ளே சென்று வைத்து விடச் சொல்ல, அவளும் செல்ல, அவள் பின்னேயே வால் பிடித்துக் கொண்டு சுஸுவும், வைரமிடம் இருந்து இறங்கி ஓடியது.

அங்குச் சென்று "சசு... சசு...” எனக் கண்ணை விரித்து, கொஞ்சி அவளுக்கு ஐஸ் வைத்தாள் சுஷ்மி... “இன்ன... இன்ன வேணும் உனக்கு" என அவள் பாஷையில் பேசி, குரலை உயர்த்திக் கேட்டாள். அப்படியும் பயப்படாமல் "இனக்குஉ உ... ஹார்க்ஸ்... ஆ...” என வாயைத் திறந்து, வலக்கையின் ஆள்காட்டி விரலை உள்ளே விட்டு 'ஆ' காட்டினாள்.

அந்தச் செய்கையில் தன்னைத் தொலைத்த சஜு... அவளை அள்ளிக் கொஞ்சினாலும், "இப்ப தான் டா வயிறு சரியாயிருக்கு... இதெல்லாம் சாப்பிடக் கூடாது" என்று அறிவுறுத்தினாள்.

ஏற்கனவே தான் வெளியே அழைத்துச் சென்ற பின், குழந்தைக்கு இப்படியாகி விட்டதே என்ற எண்ணத்தில் இருந்ததால், அவள் சிறிது பயந்தாள். ஆனால் நம் சுஸுவோ, இரு கைகளையும் நீட்டி, கை விரல்களை பூப் போல விரித்து, "ப்ள்ளீஸ்...” என வாயையும் குவித்துக் கேட்கவும், கரைந்து தான் விட்டாள்.

அவளைக் கையில் ஏந்தியப்படியே, ஹார்லிக்ஸை திறந்து ஒரு ஸ்பூன் எடுத்து, அவள் வாயில் போட்டாள். சுஷ்மியோ சுவைத்த வாயுடனே, சஜுவுக்கு முத்தம் வைத்தாள்.

அதற்குள் வெளியே... நலம் விசாரித்த வைரத்திடம், "நல்லா இருக்கோம்... நீங்க நல்லா இருக்கீங்களா? எப்போ வந்தீங்க? பாப்பாக்கு முடியலன்னு பார்க்க வந்தீங்களா மா... ?" என்று கேட்டார்.

வைரமும் "இம்... இருக்கோம் மா... ஆமா, சின்னக் குட்டிக்கு மேலுக்கு முடிலன்னு போன் போட்டு சொன்னாப்ல... சரி புள்ளையும் கண்ணுலேயே நிக்குறாளேன்னுட்டு... ஒரு எட்டு பார்த்துப்புட்டு போகலாம்னு வந்தோம். அவுக... நேத்து வந்து என்ன விட்டுப்போட்டு, இன்னிக்கு காலம்பர ரயிலுக்குக் கிளம்பி, ஊருக்கு போயிட்டாக" என விவரம் சொன்னார்.

"ஏன்... இன்னும் ரெண்டு நாளு பேத்திக் கூட இருந்திட்டு போகலாம்ல?" எனச் சுந்தரி கேட்க,

"இல்லத்தா... அங்க சோலி கிடக்குது... பொண்ணுக்கு வேற மாசம் ஏழு நடக்குது. வளையல் வேற அடுக்கனும்த்தா... அந்தச் சோலி வேற இருக்கு. இரண்டு நா சென்டு நல்ல நாளா இருக்குன்னு சொன்னாக... அதுக்குள்ள இந்தக் குட்டிக்கு மேலுக்கு முடியாம போச்சுது...” என வெள்ளந்தியாய், அக்ஷையின் தந்தை இருக்க முடியாத காரணத்தை விலாவாரியாய்க் கூறினார்.

"ஓ... இப்ப தான் கட்டி கொடுத்தீங்களா? பொண்ணு எங்க திருச்சில இருக்காங்களோ? லக்ஷ்மியம்மா சொன்ன ஞாபகம்...” எனப் பெண்கள் மேலும் குடும்பக் கதையைப் பேச தொடங்கினர்.

"இல்லத்தா... அதுக்குக் கண்ணாலம் முடிஞ்சு... ஆச்சு வருசம் நாலு... இப்ப தான்... ஆத்தா... மகமாயி கண்ணு திறந்திருக்கா...” என வருத்தம் இழையோட சொன்னவரை, "கவலைப்படாதீங்க... நல்ல படியா... பிள்ள பிறக்கும்" என ஆறுதல் கூறினார் சுந்தரி.

"இம்ம்... கவல தான் த்தா... இப்ப தான் பொண்ணு கவல நீங்கிருக்கு... அதே போல, இந்த அய்யனுக்கும்... மகமாயி கண்ண திறந்து வழி காமிச்சா... நல்லா இருக்கும்...” என அவர் அங்கலாய்க்க... அவரின் சோகம் புரிந்து, "ஏங்க... உங்க மருமக...” எனச் சுந்தரி இழுக்க... சரியாய் சஜுவும் முன்னறைக்கு வர...

"அத ஏத்தா... கேக்குறீக... என்ன கர்மமோ(வினைப்பயன்)? பாவமோ? ஆணொன்னு... பொண்ணொன்னு பெற்று... ஆளாக்கி... அதுகளுக்குக் கண்ணு நிறைவா கண்ணாலத்த பண்ணி வச்சோம்... இம்... பொண்ணுக்கு தா... முத கண்ணாலம் முடிஞ்சுச்சு... வருசம் இரண்டு சென்டும்... ஒரு பேரனோ பேத்தியோ பார்க்க முடில... சரி தாமிசமாவே வரட்டும்னு மனச தேத்தி... அய்யனுக்கு... அதா... என் மவனுக்குக் கண்ணாலம் பண்ணுவோம்னு பண்ணி வச்சோம்... ஆனா... வந்த மகராசி... வாங்கி வந்த வரம் போல... இருக்கக் கொடுத்து வைக்கல... வந்த...” என அவர் முடிக்கும் முன்னே, லக்ஷ்மியம்மா "வைரம்... ஏ... புள்ள... சீக்கிரம் வா... அய்யன் கூப்பிடுறான்" என அழைத்தார்.

அவரும் தன் சோகக் கதையை நிறுத்தி, "சரி ஆத்தா... இதோ வரேன்...” எனக் கூறி சென்று விட்டார்.

அக்ஷய் தான், வீட்டு அலைப்பேசியில் அழைத்திருந்தான். வேறு ஒன்றும் இல்லை... தந்தையை ரயிலில் ஏற்றி விட்டதாகவும், மாலை, தான் வருவதற்கு முன், ஜவுளிக் கடைக்குச் செல்ல, ஐந்து மணிக்கே தயாராய் இருக்கும் படியும், கூறி வைத்தான்.

ஆம், அவன் தங்கை கற்பக வள்ளியின் வளைகாப்பு விழாவிற்கு, புதுப் பட்டுப் புடவையும், வளையலும் வாங்க தான் செல்கிறார்கள். முதலில் இதையெல்லாம் திருச்சியில் வாங்கலாம், தங்கள் ஊருக்குப் பக்கம் என்று முடிவு செய்திருந்தார் வைரம். ஆனால், விழாவிற்கு இன்னும் இரண்டே நாள் இருக்கும் நிலையில், அங்குச் சென்று எடுப்பது இயலாத காரியம் என்பதால், இங்கயே எடுத்துக் கொள்ளலாம் என்று அக்ஷய் வழி கூறியிருந்தான்.

ஏனெனில், இன்று வியாழன், இரண்டு நாள் கழித்து வரும் ஞாயிறன்று தான் வளைகாப்பு. அதனால் அக்ஷையின் தந்தை, தான் எதற்கு வீணாய் அலைந்து கொண்டு, அவன் எப்படியும் வளைகாப்பிற்கு வரவேண்டும் என்பதால், தாயையும் அவன் கூடவே அழைத்துக் கொண்டு வர சொல்லி விட்டார். அக்ஷயும் ஒப்புக் கொண்டு, ரயிலில் செல்ல முன் பதிவு செய்து விட்டான்.

அன்று மதியம், அலுவலகத்தில் இருந்த முரளியின் அலைப்பேசிக்கு குணா அழைத்தார். விஷயம் என்னவெனில், விஜய் வரும் தீபாவளி ஒட்டி, விடுமுறையைச் சிறிது நீட்டிப்புச் செய்து, ஒரேடியாய் திருமணத்தை முடித்து விட்டுச் செல்கிறேன் என்று சொன்னதாகவும். அப்படிப் பார்த்தால், திருமணத்திற்கு ஒன்றோ... ஒன்றரை மாதமே தான் அவகாசம் இருப்பதாகவும்... அந்த ஒரு மாதத்திற்குள்... பத்திரிக்கை அடித்து... கல்யாண வேலையெல்லாம் செய்து விட முடியுமா என ஐயத்துடன் தான், முரளியிடம் அபிப்பிராயம் அறிய தான், குணா கேட்டார்.

ஆனால் நம் முரளியோ, "சரி மாமா... கொஞ்சம் அர்ஜ் பண்ணி செஞ்சிடலாம்... நாம என்ன வெளியாளுங்களா... உங்க சொந்தக்காரவங்க தனியா எங்க சொந்தக்காரவங்களுக்குத் தனியா வைக்கப் போறோம்... ஒன்னுக்குள்ள ஒன்னு தான... நம்பச் சொந்தபந்தங்க பாதிப் பேருக்கு நீங்க வைங்க... மீதி பேருக்கு நான் பத்திரிக்கை வச்சு, ரெண்டு வீட்டு சார்பா அழைச்சிடலாம்" என அப்போதே ஆர்வத்துடன், திட்டம் போட துவங்கினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 13

அன்று மாலை, அக்ஷய் சொன்னது போல், வைரம் கிளம்பி, சுஷ்மிக்கும் ஒரு ப்ஃராக் உடுத்தி விட்டார். சுஷ்மி உடை உடுத்தும் போதே "வையும் பாட்டி... இன்ன... டாடாபாஆ... ?" என நாம் வெளியே போகிறோமா எனக் கேட்க,

"ஆமா... டா கண்ணு, அதான் உனக்குக் கவுன்லா போட்டு, உம்ம அய்யன் தயாரா இருக்கச் சொன்னான்" என வைரம் விடையளித்தவுடனே, சுஷ்மிக்குச் சந்தோசம் பொங்க, அதை உடனடியாய் பகிர்ந்து கொள்ள "சே... ரி... சசுட்ட்ட...” எனச் சொல்லி விட்டு, எதிர் வீட்டுக்கு செல்ல, அங்குச் சஜு மாடியில் டியூஷன் எடுக்கச் சென்றிருந்தாள்.

"சசு... சசு...” எனக் கத்திக்கொண்டு இவள் செல்ல, அறைக்குள் தலை வாரிக் கொண்டிருந்த சுந்தரி, இவள் சத்தத்தைக் கேட்டு "என்ன டா சுஷ்மி?" என வினவினார்.

"சசுமா... சசு...” எனக் கேட்டாள். அவரோ "அவ மாடில இருக்கா... ஆமா நீ என்ன புதுக் கவுன்லா போட்டிருக்க... என்னடா டாட்டா போறீங்களா?" எனக் கேட்டுக் கொண்டே தலைமுடியை முன்னே போட்டு பின்னினார்.

"டாட்டா" என்று சொன்னதில் புரிந்து கொண்ட குழந்தை, "ம்ம்ம்...” என்று சொல்லி, அவர் தலை முடியையே பார்த்து, அமர்ந்திருந்த அவர் அருகே சென்று, அவர் முடியைத் தொட்டுப் பார்த்தது.

அவரோ "என்ன சுஷ்மி, உனக்கும் ஜட போடணுமா? ஆனா... உனக்கு இன்னும் முடி வளரலையே டா... வளர்ந்தப்புறம் இரட்டைக் குடும்பி போட்டு, இப்படிப் பூ வைப்போம் ம்...” என அவள் தலையின் இருப்பக்கமும் தொட்டுக் காண்பித்துக் கூறினார்.

அவளும் புரிந்தது போலத் தலையை நன்றாக ஆட்டினாள். அதே சமயம் அவளுக்குப் பவுடர் பூச, வைரம் அழைக்க, "சரி பிறகு வா சுஷ்மி... சஜு கீழ வந்திருவா...” எனச் சுந்தரி சொல்லி அனுப்பி வைத்தார். அவளும் தன் வீட்டிற்கு ஓடினாள்.

வீட்டிற்கு வந்த முரளி, ஒரு மாத கால அவகாசத்தில் நடக்கப் போகும் கல்யாண விஷயத்தைச் சொல்ல, சஜு "என்னபா... அவ்ளோ சீக்கிரமாவ? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வைக்கலாமே பா...” எனக் கேட்டுப் பார்த்தாள்.

ஏனோ அவளுக்கு, அதற்குள்ளாகவா என்பது போல் சுனக்கமாய் எப்படியோ உணர்ந்தாள். ஆனால் முரளியும், சுந்தரியும் அவளைச் சமாதானம் செய்து, அவளைத் தேற்றினர்.

இருந்தும், சஜுவுக்கு, இவ்வளவு சீக்கிரமாய் நமக்குத் திருமணமா என வெட்கம் வரமால், மனதில் ஏதோ அடைக்க, இவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து பிரிய வேண்டுமா? என்ற கவலையே நிறைந்திருந்தது.

அவளின் கவலையான மனப்போக்கை கலைத்தது ஒரு குரல் “வர... வர... உனக்கு ரொம்பப் பிடிவாதம் ஜாஸ்தி ஆகிடுச்சு சுஷு... என்னிக்கு என்கிட்ட அடி வாங்க போறன்னு தெரியல...” என்ற அக்ஷையின் கண்டிக்கும் குரல் தான் அது.

அந்தக் குரலுக்குப் பதில் சொல்லும் விதமாய் "இல்ல... இல்ல... சுஸ்பா... ஆ... ஆஆ...” எனச் சுஷ்மியின் அழுகுரல் கேட்க,

கூடவே வைரமும் "சின்னக் குட்டி... அழாதீக கண்ணு... நாம நாளைக்குப் போவோம்... அச்சச்சோ... அய்யன் அடிக்கப் போறான் வந்திடு...” என்று சமாதானம் செய்தும், வெளியே ஓடி, வீட்டு வாசலின் வெளியே நின்று அழுதாளே தவிர உள்ளே வரவில்லை சுஷ்மி.

அக்ஷய் அவளைத் தூக்க வர, அதைக் கண்டு கொண்ட சுஷ்மியோ, சடாரென வீட்டு வாசலுக்கு நேராய், மல்லாக்க படுத்து விட்டாள்.

இவளின் அழுகை சத்தத்தில் எட்டிப்பார்த்த சஜுவுக்கும், சுந்தரிக்கும், அவளின் செய்கையில் சிரிப்பு வந்தாலும், "சேட்டைய பார்த்தியா இவளுக்கு" எனச் சுந்தரி சொல்லிக் கொண்டே, "என்ன சுஷ்மி... சேட்டைப் பண்றியா நீ... அப்போ நீ பேட் கேர்ளா?" என அவளிடம் அவர் கேட்க, சுஷ்மியோ படுத்தவாறே அண்ணாந்து சுந்தரியைப் பார்த்து, "போ" என்பது போலத் தலையைச் சிலுப்பினாள்.

தூக்க வந்த அக்ஷயோ, அவர்களைக் கண்டு, அமைதியாய் நின்றான். பின் வைரம் வந்து, குனிந்து அவளைத் தூக்கப் போக, கை கால்களை ஆட்டி, அவள் மீண்டும் முரண்டு செய்ய...

சஜு "நீங்க விடுங்க மா... அவ படுத்திருக்கட்டும்... நீங்க கதவப் பூட்டுங்க... பு பு வந்து தூக்கிட்டுப் போகட்டும்" என மிரட்டினாள்.

அதற்கு அமைதியானளே தவிர, எழவில்லை. மேலும் சுந்தரி, "இனிமே நீ சுஷ்மி கூடப் பேசாத, அவ கூட விளையாடாத...” எனச் சஜுவிடம் சொல்லவும், சுஷ்மி சிறிது யோசித்து, படுத்தவாறே சஜுவைப் பார்த்தாள்.

அவளும் "ஆமா... நான் பேசமாட்டேன் உன்ட்ட...” எனக் குழந்தைப் போன்றே தலையாட்டி சொல்ல, வைரமும் "ஆமா, யாரும் பேசாதீக...” என்று கூற, சுஷ்மி உதட்டைப் பிதுக்கி கொண்டு நிஜமாக அழுக தயாரானாள்.

அக்ஷயோ "சுஷு... நீ இப்ப எந்திரிச்சு... வீட்டுக்கு வரலேன்னா... சுஸ்பா உன்கிட்ட பேசவே மாட்டேன்" என்று அவன் மிரட்டி விட்டு, உள்ளே செல்ல, உடனே சுஷ்மி எழுந்து, அவன் பின்னேயே "சுஸ்பா... ஆஆ...” என அழுதுக்கொண்டே ஓடினாள்.

சுந்தரியோ, வைரத்திடம், குழந்தை ஏன் அழுகிறாள் என விசாரிக்க, அவரோ "இன்னிக்குச் சாயந்திரம், அவ ஐத்தைக்குப் பட்டுப் புடவை எடுக்கப் போலாமின்னு, கிளம்பி இருக்கச் சொன்னான். நாங்களும் கிளம்பி இருக்க, அய்யனுக்குக் கிளம்பும் போது ஜோலி வந்திருச்சுன்னு... தாமிசமா இப்ப தான் ஆப்பிஸ் விட்டு வாந்தாப்ல... இன்ன கடைக்குப் போனா நேரமாகும், நாளைக்குப் போலாம்னு சொன்னதுக்கு, இப்பவே போகணும்னு... அடம் பண்ணி... அதுக்குத் தான் அழுகிறவ...” என விவரம் சொன்னார்.

சஜு இவர்களை வேடிக்கைப் பார்த்தாலும், ஆனால் காதும், மூளையும் உள்ளே சென்ற அக்ஷய் மற்றும் சுஷ்மியிடம் இருந்தது.

உள்ளே சென்ற அக்ஷயோ, தன்னை நோக்கி வந்த குழந்தையிடம் "போ... நீ என்கிட்ட பேசாத... வர வர நீ ரொம்பச் சேட்டைப் பண்ற. சுஸ்பா சொன்னாக் கேட்கவே மாட்டேங்கிற...” என்று முகத்தைத் திருப்பினான்.

குழந்தையோ “இல்ல இல்ல... சுஸ்பா...” என அவன் மடி மீது முகம் புதைத்து, அவன் கால்களின் உடையை இறுக பற்றிக் கொண்டாள். பின் அக்ஷய் அவளைத் தூக்கி, கண்ணீரை துடைத்து, கன்னத்தில் முத்தமிட்டான். குழந்தையும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது.

மறுநாள் காலை அலுவலகம் கிளம்பிய அக்ஷயிடம் "இன்னிக்காவது நேரமா வந்திடுய்யா... இன்னிக்கு விட்டா நாளைக்குச் சனியாகிடும்... சனிக்கிழம புதுசு எடுக்கக் கூடாதும்பாக... வெரசா வந்திடுய்யா" எனச் சொல்லி அனுப்பி வைத்தார் வைரம்.

"சரி மா...” எனச் சுஷ்மிக்கு முத்தமிட்டு விட்டுக் கிளம்பினான். மாலையும் வந்தது, நேற்று போலவே, வைரம், லக்ஷ்மியம்மா, சுஷ்மி என மூவரும் கிளம்பி இருக்க, சஜுவைத் தேடி வந்த வைரம், வீட்டு அலைப்பேசியை அவளிடம் நீட்டி, அக்ஷய்க்கு போன் போட சொன்னார்.

அவளும் அவனை அழைத்து, அவரிடம் தர, நேற்று போலத் தாமதமாக்க வேண்டாம், சீக்கிரம் வந்து விடுவானா? எனக் கேட்டு வைத்தார் வைரம். பின் சுந்தரியிடம் இங்கு எந்தக் கடையில் பட்டுப் புடவைகள் நன்றாக இருக்கும் எனக் கேட்டு வைத்துக் கொண்டார்.

இவர்கள் இருவரும் பேசம் போதே, "சசு... நீ பர்ரியா... ?" எனச் சஜுவிடம் சுஷ்மி வினவ, "இல்ல டா... நீங்க போயிட்டு வாங்க" எனக் கூறி, அவளைத் திசை திருப்ப "உங்க அத்தைக்கா டிரஸ் எடுக்கப் போறீங்க? நீ அத்த ஊருக்கு போயிருக்கியா? அவங்க பேர் என்ன?" என அவள் அத்தையைப் பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருந்ததால், குழந்தையும் தான் அவளிடம் கேட்டதை மறந்து, அத்தையைப் பற்றிக் கூறினாள்.

அப்போது சரியாக, அக்ஷய் வர, அவன் கிளம்பி வந்த பின், அனைவரும் கடைக்குக் கிளம்ப, சுஷ்மி "சசு... சசு... ப்பா... பூலாம்" என அவள் வீட்டுக்கு ஓடி, சஜுவின் கைப் பற்றி, அமர்ந்திருந்தவளை இழுத்தாள்.

அவளோ "இல்லடா... வேணாம்... நீங்க போயிட்டு வாங்க" எனச் சொல்ல, சுஷ்மியோ அவளருகே முட்டிப் போட்டு அமர்ந்து "ம்ம்ஹூம்... ப்பாஆஅ... சசு... பாஆ...” எனச் சிணுங்க, வைரமும், அவள் அழுவதைப் பார்த்து, "நீயும் வா த்தா... போகலாம், சும்மா... வீட்ல தான இருக்க... சித்த நேரத்துல போயிட்டு வந்துடலாம்...” என அழைக்க...

அவளோ டியூஷனுக்குப் பிள்ளைகள் வந்து விடுவார்கள் எனக் கூற, "இன்னிக்கு ஒரு நா தானே... அவிகள... உம்ம அய்யா... பார்க்க மாட்டாரா? நீ மட்டும் வர, எப்படியோ இருந்தா, அம்மாவையும் கூட்டிட்டு வா கண்ணு... எங்க உங்கம்மாவ காணோம்... கூப்பிடு, நான் வேணா சொல்லுதேன்.” எனச் சொல்லி இருவரையும் அழைத்தார்.

சுந்தரியும் வந்து, விஷயத்தைக் கேள்விப்பட்டு, "இல்ல நீங்க போங்கம்மா... நாங்க வேற எதுக்கு?" என மறுக்க, "இல்லத்தா... கார் இருக்கு, கார்ல தான் போ போறோம்...” என அவர்களையும் வற்புறுத்தி அழைத்தார்.

புடவை என்றதும் பெண்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்... சஜுவின் திருமணத்திற்குப் பட்டுச் சேலை எடுக்க வேண்டும், அதற்கு ஒரு முன்னோட்டமாய், இப்போதே "விண்டோ ஷாப்பிங்" போல, இவர்களுடன் சென்று பார்த்து விட்டு வரலாம் என எண்ணி, முரளியிடம் சொல்லி விட்டு சுந்தரி, சஜுவை அழைத்துக் கொண்டு சென்றார்.

அக்ஷய் தன் நண்பனின் காரை வாங்கி வந்திருந்ததால், அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர, வைரம் அவன் அருகே முன் பக்கம் அமர, பின் பக்கம், அவனுக்கு நேர் பின்னே சஜ்னா, அவள் மடியில் சுஷ்மி, நடுவில் லக்ஷ்மியம்மா, அவர் அருகே சுந்தரி என மூவரும் அமர்ந்துக் கொண்டனர்.

கடைக்குச் செல்லும் வழி எங்கும், வழக்கம் போல் சுஷ்மி வேடிக்கைப் பார்த்து ஆர்பரிக்க, சஜுவிடம் அதைப் பகிர்ந்து கொண்டு, சமயத்தில் தன் தந்தையிடமும், பகிர்ந்து கொண்டே வந்தாள். அதனால் அக்ஷயும் 'ரியர் வ்யூ' கண்ணாடி வழியே, சுஷ்மியைப் பார்த்துப் பதில் சொல்ல நேர்ந்தது. அப்போது, அவளுடன் இருந்த சஜுவையும் பார்க்க நேர்ந்ததோ?

ஆனால் நம் சஜுவோ, சுஷ்மி அவனிடம் கேள்விக் கேட்டு, அவன் கண்ணாடி வழியே பார்த்து, பதில் சொல்லும் பொழுதெல்லாம், அவனைக் கண்ணாடி வழியே, தயக்கமின்றிப் பார்க்க தான் செய்தாள்.

ஒருவழியாய் கடைக்குச் சென்று, பட்டுச் சேலை பகுதிக்கு சென்று, சேலைகளைப் பார்வையிட்டனர். அக்ஷய் "நீங்க பார்த்திட்டு இருங்க மா... நான் சுஷ்மிய பார்த்துக்கிறேன்" என அங்கிருந்து தள்ளி போடப்பட்ட இருக்கையில், சுஷ்மியோடு போய் அமர்ந்தான்.

அவளா அவனுடன் அமர்வாள்? அவனிடமிருந்து நழுவி, சஜுவிடமும்... அக்ஷயிடமும் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், கால் வலியால் லக்ஷ்மியம்மாவும், அவனுடன் வந்து அமர்ந்து கொண்டார்.

அவர் கூட "நான் வீட்டிலேயே இருந்திருப்பேன்னே தம்பி...” எனக் கூற, "நீங்களும் எத்தன நாள் தான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருப்பீங்க லக்ஷ்மிமா? இன்னிக்கு ஒரு நாள் தான... இப்படிக் காற்றாட... நாலு பேர வேடிக்கைப் பார்த்தா... உங்களுக்கும் ரிலாக்ஸ்டா இருக்கும்ல...” எனப் புன்னகையுடன் சொன்னான். அவனின் நல்ல மனதை, எண்ணி மீண்டும் ஒரு முறை மெச்சிக் கொண்டார்.

அங்கு நம் சஜுவோ, வைரத்தின் மகள் கற்பக வள்ளியின் நிறத்தைக் கேட்டறிந்து, அதற்கேற்றார் போல, ஒரு தேன் கலந்த மஞ்சள் வர்ண பட்டுப் புடவையைத் தேர்வு செய்தாள்.

பின் தனக்குப் பிடித்த வர்ண சேலையை எல்லாம் ஒவ்வொன்றாய் தன் மீது வைத்து பார்த்து, தன் அன்னையிடமும், வைரத்திடமும் அபிப்பிராயம் கேட்டாள். சுஷ்மி அங்கிருந்தால், அவளிடமும் கேட்பாள். வேண்டுமென்றே விலை உயர்ந்த புடவையை எடுத்து தன் மீது வைத்து, சுந்தரியை பார்த்து கண்ணடித்து "என்ன மா... வாங்கிறவா?" என வேண்டுமென்றே வம்பிழுத்து சிரித்தாள்.

பின் மீண்டும் ஒரு சேலையை எடுக்க, அங்கிருந்த பெண் ஊழியர் "கொடுங்க மா... இப்படி வச்சுப் பார்த்தா தெரியாது... உங்களுக்குக் கட்டி விடுறேன்... அப்போ தான் நல்லா இருக்கா இல்லையான்னு தெரியும்" என்று சொல்ல,

சஜுவோ கண்களைப் பெரிதாக்கி, நாக்கை லேசாக வெளியே நீட்டி...”ஐயோ... வேணாம்...” எனச் சிரித்துக் கொண்டே சொல்ல, "பரவாயில்ல... உங்களுக்குச் சாரி பிடிக்கலேன்னா... பரவாயில்ல... கட்டி தான் பாருங்களேன்" எனக் கூற, வைரமும் "அவுக தா... சொல்றாகள... சும்மா கட்டு கண்ணு" எனச் சொல்ல, அவளோ தோளை உயர்த்தி, தலையாட்டினாள்.

அவர்களும் சஜுவின் சுடிதார் மீதே, ஒரு பெல்ட் போட்டு, பட்டுப் புடவையைக் கட்டிக் காண்பிக்க, சுந்தரி தன் மகளின் அழகை ரசிக்க, வைரமும், "நல்லா இருக்கு கண்ணு... உனக்கு... வேணுமின்னா... எடுத்துக்க த்தா... நா அய்யன்ட்ட சொல்லிக்கிறேன்" என்று சொன்னார்.

ஆனால் சஜுவோ சிரித்துக் கொண்டே, சுஷ்மியைத் தேட, அவளோ அமர்ந்திருந்த தன் தந்தையின் கால்களுக்கு இடையே நின்று, சஜுவுக்கு ஏதோ செய்கிறார்கள் என்று அமைதியாய் பார்த்து கொண்டிருந்தாள்.

சஜு அவளிடம் "சுஷ்மி... நல்லா இருக்கா... டா?" என வினவியவள், அப்போது தான் அக்ஷையின் கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தாள். அதனால் திரும்ப எத்தனிக்கும் போது, "சசு...” என அழைத்து, அவளை நோக்கி ஓடி வந்து, அவளைக் குனிய சொல்லி, கன்னத்தில் முத்தமிட்டாள் குழந்தை.

முத்தமிட்ட குழந்தையைத் தூக்கியவள், மெய் மறந்து தன்னைப் பார்த்த அக்ஷயை மீண்டும் பார்த்தாள். ஏனோ வெட்கம் பிடுங்க... திரும்பியவள், குழந்தையை இறக்கி விட்டு, சேலையைக் கலைந்தாள்.

ஆம், அக்ஷய் மெய்மறந்த நிலையில், அவனின் ஒப்புதல் இல்லாமலே அவன் மனக்கண்கள், சஜ்னாவையும், அவளின் அழகு செய்கைகளையும் படம் பிடித்துக் கொண்டிருந்ததை... பாவம் அவனே அறியவில்லை, ஆனால் சஜு உணர்ந்தாளோ?

இதையெல்லாம் செய்ய வேண்டியவன் விஜய், தான் அல்ல என்பது, ஏனோ அப்போது அக்ஷய்க்கு உறைக்கவில்லை. எல்லோரும், சஜுவையே அழகு பார்த்துக் கொண்டிருந்ததனால், அக்ஷயை யாரும் கவனிக்கவில்லை.

சேலையைக் கலைந்த சஜுவிடம், "இந்தச் சேலைய வாங்கிக்கிறிய சஜு? தீபாவளிக்கு வச்சு கட்டிக்கிறியா?" என அபிப்பிராயம் கேட்டார் சுந்தரி.

நவாப்பழ வர்ணமும், கத்திரிப்பூ வர்ணமும் கலந்து, மின்னிய அந்தப் புடவை... தனக்குக் கொஞ்சம் தூக்கி அடிப்பது போல் தோன்றியது... கட்டும் போதே... அதனால் மறுக்க வேண்டும், என அப்போதே எண்ணமிட்ட தன் மூளையை, மனது முந்திக் கொண்டு "சரி... மா" எனச் சொல்ல வைத்தது.

அங்கேயே, வைரத்திற்கும், லக்ஷ்மியம்மாவுக்கும் சாதாரணப் பட்டுப் புடவையாய், வரும் தீபாவளிக்கு ஆளுக்கு ஒன்றாய் வாங்கிக் கொண்டனர். பின் பட்டுப் புடவைக்குப் பில் போட சென்றனர், வைரம் மொத்தமாய்ச் சேர்த்து, அக்ஷயை பில் போட சொல்ல, ஆனால் சுந்தரி அக்ஷயிடம் சேலைக்கான பணத்தைத் தந்து விட்டார்.

பின்னர் சுஷ்மிக்கு ஒரு பட்டுப் பாவாடையும் வாங்கிக் கொண்டு, வளையல் கடைக்கு சென்றனர். அங்கும், பான்சி வளையலைப் போட்டு பார்க்கும் தன் வால்தனத்தைச் சஜு தொடர, சுந்தரி தான் அவள் தொடையில், சுள்ளென்று ஒன்று போட்டு அடக்கி வைத்தார். இருந்தும், வைரம் அவளுக்கு ஒரு புது வளையல் அடுக்கு வாங்கித் தந்தார். பின் அனைவரும் சாப்பிட்டு விட்டே வீட்டிற்கு வந்தனர்.

மறுநாள் சனிக்கிழமை, ஊருக்கு செல்ல ஆயத்தமானார் வைரம். துணிமணிகளை எடுத்து வைத்தார். அன்று இரவு பத்து மணிக்கு ரயிலில் முன் பதிவு செய்திருந்தனர்.

அக்ஷய் மாலை வீட்டிற்கு வரும் போது, வைரம், "ஹும்... இந்தச் சஜு பிள்ள மாதிரி ஒரு பொண்ண கட்டுனா நல்லா இருக்கும்... எங்க? அய்யன் தான் சொல்றத கேட்டா தான... ஆம்பிள்ள புள்ளைன்னா கூடப் பரவாயில்ல... பொம்பள புள்ளைய கையில வச்சிருக்கான்... அந்தப் புள்ளைக்காக வேண்டியாது... கண்ணாலம் கட்ட கூடாதா?" என்று தன் மன வேதனையைச் சொல்ல,

"நடக்கும் ஆத்தா கவலப்படாத... வள்ளிக்கு கண்ண திறந்த ஆத்தா... தம்பிக்கும் கண்ண திறப்பா... நீ வருத்தப்படாத" என ஆறுதல் சொன்னார் லக்ஷ்மியம்மா.

"ஏன்த்தா... நீயே சொல்லு, இந்தப் புள்ளையும் நாள் முழுக்க அங்க தா இருக்கா... அந்தப் புள்ளையும் சின்னக் குட்டி மேல பாசாமா தான் இருக்கு... பேசாம இந்தப் புள்ளையவே பேசுவோமா நம்ம அய்யனுக்கு?" எனத் தன் மகனின் வாழ்வு மலராதா என்ற நப்பாசையில், ஒரு தாயின் ஆதங்கத்தோடு கேட்டு விட...

லக்ஷ்மியம்மா "என்ன புள்ள... இப்படிச் சொல்லுற... அந்தப் பொண்ணுக்கு இன்னும் ஒரு மாசத்துல கண்ணாலம் நடக்கப் போகுது... உன்ட்ட சொன்னாகளா... விசனப்படாத, வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்" எனச் சொல்லும் போது தான் அக்ஷய் கதவைத் திறந்தான்.

எதிர் வீட்டைப் பார்த்தவன், "நல்ல வேளை, இவள் வீட்டில் வரவேற்பறையில் யாரும் இல்லை... சஜுவும் இந்நேரம் மாடியில் இருப்பாள் போல... இனிமேல், சுஷ்மியை அவள் வீட்டிற்கு அனுப்பவே கூடாது" என எண்ணிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

அக்ஷயைப் பார்த்த பெண்கள் இருவரும், தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். பின் இரவு உணவை முடித்து விட்டு, அக்ஷய் சுஷ்மியை தூங்க வைத்துக் கொண்டிருக்க... வைரமோ சஜு வீட்டிற்குச் சென்று, சுந்தரியிடம் நாளை மாலை வரை, லக்ஷ்மியம்மாவை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி வைத்தார். பின்னர் லக்ஷ்மியம்மாவிடம் சுஷ்மியை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு, அக்ஷயும், வைரமும் இரவு ரயிலுக்குக் கிளம்பி சென்றனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 14

மறுநாள் காலை அழகாய் விடிந்தது. நம் சஜுவும் அதிசயமாய், ஒன்பது மணிக்குள் எழுந்து, அம்மாவுடன் சமையலறையில் நின்று தன் காலை நேர டீயைப் பருகி கொண்டே, வம்பளந்துக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென, "சுஸ்பா... ஆஆ... ஆ...” எனச் சுஷ்மியின் அழுகுரல் கேட்க, சஜுவோ "என்னமா... சுஷ்மி அழுகுறா? அப்போ அவங்க ஊருக்கு போகலையா?" எனத் தன் தாயை கேள்வி கேட்டாள்.

"எனக்கென்ன தெரியும். அவங்க... இன்னிக்கு வளைகாப்பு, ஊருக்குப் போறதா தான சொல்லிட்டுப் போனாங்க?" என அவரும் கேள்வியாய் சொல்ல, "சரி... இருமா நான் போய் எட்டிப்பார்த்திட்டு வரேன்" என அவரின் பதிலைக் கூடக் கேட்காமல் சென்று விட்டாள்.

சஜு எதிர்வீட்டை எட்டிப்பார்க்க, அது வழக்கம் போல எல்லா அறையும் பூட்டப்பட்டு, வரவேற்பறையில் சுஷ்மியின் அழுகுரலும், லக்ஷ்மியம்மாவின் சமாதான குரல் மட்டும் கேட்கவும், "சுஷ்மி...” என அழைத்துக் கொண்டே, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

தூங்கி எழுந்த முகத்தோடு, தலைமுடி முன்னேயும் பின்னேயும் கலைந்து, புல் போன்று ஆங்காங்கே நிமிர்ந்து நிற்க, தரையில் அமர்ந்து காலை பரப்பி, உதைத்துக் கொண்டு அழுதுக்கொண்டிருந்த சுஷ்மியிடம் "என்ன டா... சுஸு... ஏன் அழுகுற?" என அவள் கேட்க, குழந்தையோ அவளைக் கண்டுக்கொள்ளாமல் அழுது கொண்டே இருந்தாள்.

லக்ஷ்மியம்மாவிடம் அவள் விசாரிக்க, இவர்கள் இருவரையும் விட்டு விட்டு, அக்ஷய் மட்டும் தன் அன்னையுடன் சென்றிருக்கிறான் என்றும், எப்போதும் இப்படித் தான் விட்டு செல்வான் என்றும் தெரிவித்தார்.

ஆம், அக்ஷய் என்றுமே, தன் குழந்தையை, தன் ஊருக்கு அழைத்துச் செல்ல மாட்டான்.

ஏனென்றால், அங்கு வரும் சொந்தபந்தம் மற்றும் ஊர்க்காரர்களின் பார்வையை... ஒன்று இரக்கப் பார்வையை... அல்லது துக்கப்பார்வையை... இல்லையென்றால் "ஏன் தம்பி... இன்னும் கண்ணாலம் கட்டாம இருக்குதீக... ?" என்றும் "எத்தன நாளைக்குத் தா... இப்படி இருப்பீக...” என்றும் "உங்க ஆயி அய்யனுக்காகவாது... இல்ல குழந்தைக்காகவாது...” என்று இழுத்து, ஏதாவது அவனிடம் வீண் கேள்வி?

ஆம், அவனைப் பொறுத்தவரை, அவன் மீது இரக்கப்பட்டு, அக்கறைப்பட்டுக் கேட்கும் கேள்விகள் எல்லாம் வீண் கேள்விகள் தான்.

அவன் மனைவி, அவனை விட்டுப் பிரிந்த இந்த இரண்டு ஆண்டாக, எல்லோரும் அவனிடம் வருத்தப்பட்டு, வற்புறுத்த தான் செய்கிறார்கள்... மறுமணம் செய்யச் சொல்லி, ஆனால் அவனுக்குத் தான் மனம் இல்லை.

இன்னும் சிலர் அவனை இப்படிக் கேள்வி கேட்டு, துக்கம் விசாரிக்கத் தான் செய்கிறார்கள். அதிலும் சுஷ்மியை கண்டால்... இன்னும் மிகுதியாய்... இரக்கப்பார்வையும்... கேள்வியும் கேட்பார்கள் என்று தான், அவன் குழந்தையை அழைத்துச் செல்வதை நிறுத்தியிருந்தான்.

அவன் தங்கை கற்பக வள்ளி, இன்று கூடவா குழந்தையை விட்டு வரவேண்டும் என்று குறைப்பட்டதற்கு...”மன்னிச்சிடு வள்ளி, இனி என்ன... நம்ம வீட்ல தான இருப்ப... அடுத்தவாட்டி கூட்டிட்டு வரேன்” என்று சமாதானம் செய்தான்.

இவன் அவ்வளவாக அழைத்து வரமாட்டான் என்று தெரிந்தே, முன்பு வள்ளி, அடிக்கடி இங்குச் சென்னை வருவாள், சுஷ்மியை பார்த்து விட்டு, அவளுடன் ஒரு வாரம், பத்து நாள் இருந்து விட்டு, அண்ணனுக்குப் பிடித்த சமையலை செய்து போட்டு, கவனித்து விட்டு தான் செல்வாள். இப்போது கர்ப்பமாய் இருப்பதால் தான், அவள் முன் போல் வருவது இல்லை.

அழும் சுஷ்மியை தூக்கிய சஜு "என்ன சுஸு... இன்னிக்கு லேட்டா எந்திரிச்சிட்டு அழுதிட்டு இருக்க? உங்க சுஸ்பா... ஆபீஸ்ல போயிட்டார். சீ சீ பேட் கேர்ள்... லேட்டா எந்திரிச்சிட்டு... அழுக வேறயா?" எனச் சாதாரணமாய்க் கேட்டு, கடைசியில் "பேட் கேர்ள்" எனச் சொல்லி முகத்தைச் சுளிக்கவுமே, குழந்தை அழுகையை நிறுத்தி, அவளைக் கண்ணீரோடு ஏறிட்டது.

அவளின் ஆபீஸ் என்ற வார்த்தையும், பேட் கேர்ள் என்ற சொல்லும் சரியாக, சுஷ்மியிடம் வேலை செய்தது என்பதை உணர்ந்த சஜு, "என்ன பாட்டிமா... சுஸ்பா வேலைக்கு... ஆபீஸ்க்கு... போயிட்டார்ல" என லக்ஷ்மியம்மாவிடம் கண்களாலே "அப்படியே சொல்லுமாறு" ஜாடை செய்து, கேட்க... அவரும் புரிந்து கொண்டு, "ஆமா... சுஷ்மி அப்பா அப்பவே ஆபீஸ்க்குல போயிட்டார் " என அவரும் சொல்லவும், அதுவரை சுஸ்பா என அழுத சுஷ்மியின் மூளை சிறிது வேலை செய்தது.

"ஏன் சுஸு எங்க வீட்ல டிபன் சாப்பிடுறியா? டிபன் பண்ணிட்டீங்களா பாட்டிமா?" என இருவரிடமும் கேட்க,

லக்ஷ்மியம்மா "இட்லி ஊற்ற தான் போனேன்... அதுக்குள்ள பாப்பா எந்திரிச்சு அழுதிட்டா... இதோ ஊற்றனும் மா...” எனச் சொல்ல, "அப்படின்னா நீங்க ஊற்றாடீங்க, எங்க வீட்ல பொங்கல் தான்... எங்கம்மா செஞ்சுட்டாங்க... இருங்க உங்களுக்குக் கொண்டு வரேன் பாட்டிமா. சுஷ்மிக்கு தோச ஊற்றி தரேன்" எனக் கூறி, கையோடு அவளையும் தூக்கி கொண்டு சென்றாள். அதுபோல் மதியமும் லக்ஷ்மியம்மாவை சமையல் செய்ய வேண்டாம் எனக் கூறி, சஜ்னா வீட்டில் இருந்தே சாப்பாடும் கொடுக்கப்பட்டது.

அன்று நாள் முழுவதும் சாப்பிட, குளிக்க, தூங்க, எனச் சுஷ்மி சஜுவுடனே செலவழித்தாள். ஆம், லக்ஷ்மியம்மா சுஷ்மியை குளிப்பாட்ட, சஜு வேடிக்கைப் பார்த்தாள். பின் அவளுக்கு ஆடை உடுத்தி, தலை வாரி விட்டு, பொட்டிட்டாள்.

அவள் ஒவ்வொன்றாய்ச் செய்யச் செய்ய, சுஷ்மி அவளைப் பார்த்து, கண்ணைச் சுருக்கி சிரித்தாள். கள்ளக் கபடமில்லாமல் சிரித்த, அந்தச் சிட்டுக்கு, அன்னை இல்லாது செய்த இறைவனை நிந்தித்த சஜுவுக்கு, ஏனோ அன்று மனம் கனத்தது.

அன்று இரவு எட்டு மணிவாக்கில், அக்ஷய் வந்து விட, சஜு வீட்டில் இருந்த சுஷ்மி, அங்கிருந்த கதவு வழியே அவனைக் கண்டு, விர்ரென்று ஓடி, பூட்டிய கதவில் ஏறி, "சுஸ்பா...” எனக் கத்தினாள். அக்ஷயும் அவளைக் கண்டு புன்னகைத்து, "சுஷு கண்ணா... இங்க இருக்கீங்களா?" எனக் கேட்க, அதே சமயம் சஜு, எழுந்து வந்து, கதவை திறந்து விட்டாள்.

கதவை திறந்தது தான் தாமதம், விருட்டென்று ஓடி, தன் தந்தையின் கால்களைக் கட்டிக்கொண்டாள். அவனும் அவளைத் தூக்கி, இரு கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே உள்ளே சென்று விட்டான்.

சஜு தான் ஏமாந்து போனாள். தன்னிடம் ஏதாவது பேசுவான்... இல்லை இல்லை... நன்றி நவில்வான் என எதிர்ப்பார்த்து நின்றிருந்தாள்.

“அப்படியென்றால், அவனின் நன்றிக்காகத் தான் சுஷ்மியை பார்த்து கொள்கிறாயா?" என மனசாட்சி கேட்க, "இல்லை... இல்லை... ஆனாலும் அவன் ஏதாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.” என மனசாட்சி சொன்னதை மறுத்தாலும், அவளின் மனம் அவனின் வார்த்தைகளை எதிர்பார்த்து ஏமாறுவதை உணர தான் செய்தாள்.

இரண்டு வாரங்கள் நகர்ந்து சென்றது. இந்த இரு வாரங்களில்... சஜு வீட்டில்... அல்லது சஜ்னாவிற்கு நேர்ந்த முக்கியமான நிகழ்வுகள். சஜு வீடு கல்யாண பரப்பரப்பில் இயங்கி கொண்டிருந்தது... கல்யாணப் பத்திரிக்கை அடிப்பது, மண்டபம் பிடிப்பது எனக் கல்யாணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் நடந்தன.

சஜ்னாவோ தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லாதவள் போல், சுஷ்மியுடனே விளையாண்டு கொண்டு, அம்மாவின் செல்லமாக இருக்க... ஆம், இப்பொழுதெல்லாம் சுந்தரி, அவளைத் திட்டுவதில்லை, "பாவம், இன்னும் ஒரு மாதத்திற்குத் தானே... நம்முடன் இருப்பாள். அதுவரை அவள் இஷ்டத்திற்கு இருக்கட்டும்" என்று விட்டுவிட்டார். அதனால், சஜுவின் வால்தனம்... என்றில்லை குழந்தை தனம் அப்படியே இருந்தது.

இதற்கிடையே, விஜயும் அவ்வப்போது... ஆம், அவ்வப்போது தான், சஜுவிடம் பேச முடிந்தது. கல்யாண வேலைகள் அவனையும் விட்டு வைக்கவில்லை.

அப்படி என்ன அவசரம் என்று அவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கேட்டதற்கு, "தனக்கு இனி விடுமுறை கிடைப்பது கஷ்டம். அதனால் தான் ஒரேடியாய் திருமணத்தை முடித்துச் செல்கிறேன்" என்று கூறினாலும், அவனின் மனசாட்சிக்கு மட்டுமே உண்மையான காரணம் தெரியும்.

ஆம், முதலில் இந்த விடுமுறையில் நிச்சயம் செய்து கொள்ளலாம், பின் திருமணத்திற்கென விடுமுறை எடுத்து வந்து, இலகுவாகத் திருமணம் செய்து கொள்ளலாம், எனத் தான் எண்ணினான் விஜய். ஆனால் சஜு வீட்டிற்குச் சென்று வந்த மறுநாளே, அதிகாலை விஜய் உறங்கி கொண்டிருப்பதாக எண்ணி, தன் மகளிடம் அலைப்பேசியில் தன் திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தார் சித்ரா.

"இப்போதைக்கு அவன் ஆசைக்கு போயிட்டு வந்தாச்சு ப்ரியா... இனி அவன் அமெரிக்கா போயிட்டு வந்து தான் கல்யாணம்னு பேசிருக்கோம். பார்க்கலாம்... அதுக்குள்ள எனக்கு எதுவும் கிடைக்காமலையா போய்டும், இந்தக் கல்யாணத்த நிறுத்த...” என இவ்வாறு பேசிக் கொண்டே செல்ல...

துயில் கலைந்து கண்விழித்த விஜய், டீ பருக, வெளியே வந்தவன் காதில், ஒன்று விடாமல் எல்லாம் விழுந்து விட்டது. ஆனால், தன் தாயின் மீது, உடனே தன் கோபத்தைக் காட்டாமல், வந்த சுவடே தெரியாமல், தன் அறைக்குச் சென்று அமர்ந்து, யோசிக்கத் தொடங்கினான்.

அதன் விளைவாகத் தான், இந்த விடுமுறையிலேயே திருமணத்தை முடித்து விட்டே, செல்வதாகக் கூறினான் விஜய். ஏனென்றால் இனி அவர்கள் நிறுவனத்தில், உடனே மீண்டும் விடுமுறை அளிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் தற்போது எடுத்துக் கொண்ட விடுமுறையை நீட்டிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதாகக் கூறினான் விஜய். அதனால் தான் தந்தையுடன் கலந்தாலோசித்து, திருமண ஏற்பாடுகளை நடத்த துவங்கியிருந்தான். சித்ரா, எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடன், எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திருமண வேலைகள் இருந்தாலும், தினம் இரவு, சஜுவுக்கு அலைப்பேசியில் அழைக்கத் தான் செய்தான் விஜய். ஆனால், அது சஜுவின் காதுகளில் விழுந்தால் தானே... இவன் வேலையெல்லாம் முடித்து விட்டு, பத்து, பத்தரைக்கு மேல் அழைப்பான். ஆம், நம் சஜு தான் முன் தூங்கி, பின் எழுபவள் ஆயிற்றே. அதனால் ஆழ்ந்து உறங்குபவளின் காதில் அவனின் அழைப்பு விழுவதில்லை. சில நாட்கள் சீக்கிரம், ஒன்பது மணி அளவில் விஜய் பேசினால், பேசுவாள்.

அப்படிப் பேசினாலும், அவன் இலைமறை காயாகச் சொல்லும் காதல் பாஷைகளைப் புரியாதவள் போலவே, இயல்பாய் பேசுவாள். ஆனாலும் "அத்தான்...” என்று சிணுங்குவாள். ஆனால் எப்படிப் பேசினாலும், அவள் பேச்சுச் சுஷ்மியிடம் வந்து தான் முடியும். எப்பொழுதும் சுஷ்மியைப் பற்றியே பேசுகிறாளே, என்று சில சமயம் விஜய்க்கு சலிப்பாக வரும், சில சமயம் அவள் போக்கிலேயே, இவனும் சுஷ்மியைப் பற்றி ஆர்வமாய்க் கேட்கவும் செய்வான்.

அப்படித் தான் அவனும் ஒரு நாள், "அதான... என்னடா இன்னும் உன் பேச்சுல பேபி வரலையேன்னு பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் வந்து பார்க்கணும்னு நினச்சேன். எங்க?... டைமே இல்ல சஜு...” என்றான்.

சஜுவும் "ஒரு நாள் இந்தப் பக்கமா வந்தா... வந்திட்டுப் போங்க அத்தான். சுஷ்மியும் உங்கள கேட்பா...” என்றாள்.

அவனோ நம்பாமல் "நிஜமாவா?" என ஐயத்தோடு கேட்க, "ஹையோ... அத்தான் நீங்க வேற, அவளுக்கு இரண்டரை வயசு தான் ஆகுது... ஆனா அவ பயங்கர ஷார்ப் அத்தான். சாமானியமா அவள ஏமாற்ற முடியாது. உங்களையே பொம்ம அங்கிள்னு தான் சொல்றா" எனச் சுஷ்மியின் ஞாபக கூர்மையை விளக்கினாள் சஜு.

"ஹும்... என்ன பார்த்தா... பொம்ம மாதிரி இருக்கா உங்களுக்கு?" என விஜய் பொய் கோபம் கொள்ள... சஜு சிரித்துக் கொண்டே "இல்ல... அத்தான்" என இவ்வாறே பேசி முடித்தனர்.

ஒரு நாள் மாலை விஜய் சஜ்னாவை காண வந்திருந்தான். அவள் மாடியில் இருப்பதாகவும், அழைக்கிறேன் என்று சொன்ன அத்தையை, வேண்டாம் எனத் தடுத்து விட்டு, இவனே மேலே மாடிக்குச் சென்றான்.

விஜய் மாடியை நெருங்க நெருங்க, "தெரிதா...” என்ற சஜுவின் குரல் ஒலித்தது. அதற்கு "இல்ல இல்ல...” என்ற சுஷ்மியின் குரலும் பதிலாய் வர, மீண்டும் "இப்ப... தெரிதா... நல்லா பாரு" என்ற சஜுவின் குரலும் கேட்க, இந்த முறை, "ம்ஹும்...” எனச் சுஷ்மி மெல்ல சொல்ல,

பொறுமை இழந்த சஜு "ஏய் பூசணி குட்டி... உன்ன இப்படித் தூக்குறதே பெருசு... இதுக்கு மேல உன்னலாம்... என்னால தூக்க முடியாது. நீ உங்கப்பாவ கூப்பிட்டு வந்து பார்த்துக்கோ...” எனச் சுஷ்மி ஒரு பெரிய மனுசியாய்... சக தோழியைப் போல், அவளிடம் பொரிந்தாள் சஜு.

அப்போது இளந்தென்றல் வீச, அதற்கேற்ப சஜுவின் சுடிதார் துப்பட்டாவும், அவள் கூந்தல் கற்றைகளில் சிலவும் நடனமாட, அவள் தோள் மேலே, கை தூக்கப்பட்டிருக்க, அதில் சுஷ்மி பிடிக்கப்பட்டிருந்தாள்.

விஜயோ இவர்களின் சம்பாஷனையும், அவர்களின் தோற்றமும் புரியாமல், நெற்றி சுளிப்போடே "என்ன சஜு... என்ன பண்றீங்க?" எனக் கேட்க, "ஹாய் அத்தான்...” எனச் சஜுவும், "அன்கி... ல்...” எனச் சுஸுவும் ஒரு சேர கூவினர்.

"அதுவா... அது ஒன்னும் இல்ல அத்தான், இங்க மேல... இந்தா... இந்த ஸ்லாப்ள புறா முட்ட போட்டிருக்கு... அத தான் இந்தச் சுஸுக்கு காமிச்சிட்டு இருந்தேன். ஆனா அவளுக்குப் பார்க்க தெரியல அத்தான்" எனக் கூற, சுஷ்மியோ அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்தாள்.

அவர்கள் வீட்டு மொட்டை மாடியின் கதவிற்காக, போடப்பட்டிருந்த நிலைப்படியின் மேல் திண்டின் மீது ஒரு ஜோடி புறாக்கள், கடந்த சில நாட்களாக வந்து தங்கி கொண்டன. மேலும் அவை இப்போது முட்டையிட்டு, அடைக் காத்துக் கொண்டிருக்கின்றன. இவள் வந்து டியூஷன் எடுக்கும் போது மட்டும், புறா பறந்து விடும். அதனால் தான் சஜு, சுஷ்மிக்கு அவற்றைக் காண்பித்தால், சந்தோஷப்படுவாள் என அழைத்து வந்து, தூக்கி காண்பித்துக் கொண்டிருந்தாள்.

ஆம், இப்பொழுதெல்லாம் அக்ஷய், சுஷ்மியை மாலையில் மட்டும் மாடிக்கு அனுப்புவதே இல்லை. அவள் கெஞ்சினாலும், அவளைச் சமாளித்து, சஜு கீழே வந்த பின், சுஷ்மி கேட்டால் மட்டுமே அனுப்புவான். அதுவே பெரிது தான்... ஆம், அவன் எண்ணியது போல், சுஷ்மியை சஜு வீட்டிற்கு அனுப்பக் கூடாது என்று தான் நினைத்தான். ஆனால் அவளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்றதும்... சரி ஒரு மாதம் தானே... சுஷ்மி போனால் போகட்டும் எனச் சஜு மேல் இரக்கப்பட்டு, அவர்களைப் பிரிக்காமல் விட்டு விட்டான் அக்ஷய்.

அதனால் தான் சஜு "புறா பார்க்காலம்... வர்றியா சுஸு?" எனக் கேட்டு, அக்ஷையின் ஒப்புதலோடு அழைத்து வந்திருந்தாள்.

"ஓ... அப்படியா... இங்க வாங்க பேபி... நான் காமிக்கிறேன்" என அவன் புறா முட்டையைப் பார்த்து விட்டு, சஜு தோளில் இருந்த சுஷ்மியை வாங்கினான் விஜய்.

பின் விஜய் தூக்கி பிடிக்க, சஜுவும் அவளை "அந்தா... மேல... இங்கிட்டு... இந்தப் பக்கம்... பாரு சுஸு...” என அவளை இயக்கி, ஒருவழியாய் முட்டையைக் காண்பிக்க, சுஷ்மியும் முட்டையைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில், "அய்...” எனக் கைத் தட்டி ஆர்பரித்தாள்.

மகிழ்ந்த குழந்தையைக் கீழிறக்கி பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டான் விஜய். அவனைப் பார்த்து மேலும் கண்ணைச் சுருக்கி சிரித்து விட்டு, இறங்கி கொண்டு, மாடியில் ஒரு ஓட்டம் ஓடினாள் சுஷ்மி.

அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, "என்ன அத்தான்... இப்ப தான் எங்க ஞாபகம்லாம் வந்துச்சா?" என அங்கிருந்த சுற்றுச் சுவரில், சாய்ந்து கொண்டே கேட்டாள்.

"ஹே... அதெல்லாம் இருக்கு சஜு... டைமே கிடைக்கல, இன்ன... நெக்ஸ்ட் வீக் நம்ம மேரேஜ் டிரஸ் எடுக்கனும்னு ப்ளான். உனக்கு அந்த டேட் ஓகே வா சஜு?" என அவனும், அவளிடம் இருந்து சிறிது தள்ளி நின்று, சாய்ந்து வினவ, அதே சமயம், மாடி முழுவதும் ஓடி முடித்த சுஷ்மி, சந்தோஷத்தோடு "சசு...” என அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

கால்களைக் கட்டிக்கொண்ட சுஷ்மியை தூக்கி, தட்டாமாலையாக ஒரு சுற்று சுற்றி, அவள் கன்னத்தில் முத்தமிட்ட சஜுவை, விஜயும் புன்னகையோடு, லேசாகத் தலை சாய்த்து அழகு பார்த்தான்.

"ஏன் சஜு... நாளைக்கு, உனக்குக் குழந்த பிறந்தாலும் ப்ராப்லம் இல்ல. நல்லா... இப்பவே ட்ரைனிங் எடுத்திட்டு இருக்கப் போல?" எனக் கண்ணடித்துச் சொல்ல, "போங்க அத்தான்...” என அழகாய் வெட்கப்பட்டு, சுஷ்மியின் முகத்துக்குப் பின்னே தன் முகத்தைச் சாய்த்து மறைத்தாள்.

"அதானே... சுஸு நம்முடனே தான் இருக்கிறாள். அவளுக்கு எல்லாமே... நாம் தான் செய்கிறோம், இரவு தூங்க மட்டும் தான் அவள் வீட்டிற்குச் செல்கிறாள். கல்யாணத்திற்குப் பின், ஒரு இரண்டு மூன்று நாட்கள், அழைத்துச் சென்று நம்முடனே தங்க வைத்துக் கொள்ளலாம்" என ஓடி வந்ததால் வியர்த்த சுஷ்மியின் நெற்றியை, தன் துப்பட்டாவால் துடைத்து விட்டுக் கொண்டே எண்ணமிட்டாள்.

விஜயின் கேலியில் தனக்குப் பிறக்க போகும் குழந்தையைப் பற்றி நினையாமல், இவ்வாறு சுஷ்மியைப் பற்றியே எண்ணியவளின் காதில், விஜய் பேசியது கூட விழாமல், தன் சிந்தனையிலேயே இருந்தாள்.

விஜய் தான், தன் பேச்சிற்கு அவளிடம் பதில் இல்லாமல் போகவும், அவள் பெயர் சொல்லி அழைத்தும், அவளிடம் அசைவில்லை என்றதும், "சஜு...” என அவள் முழங்கையைப் பிடித்து உலுக்கினான்.

"இம்ம்... என்ன அத்தான்?" எனக் கேள்வி கேட்டவளை, "சரியா... போச்சு... அப்படி என்னமா சிந்தனை? என்ன சொல்லிட்டு, இப்ப நீ கனவு காண ஆரம்பிச்சிட்டியா? ஆமா, கனவுல இந்த அத்தான் வந்தேன்னா?" எனக் கண் சிமிட்டி கேட்டான்.

அவளோ புன்னகைத்து "இல்லையே... அத்தான்...” எனச் சொல்லி, அவன் முகத்தில் பொய் சோகம் காட்டி, முகத்தைத் தொங்கப் போடவும், "கனவு கண்டா தான... உங்க கேள்விக்குப் பதில் சொல்ல முடியும் அத்தான்" என அப்பாவியாய் சொல்லி, கலகலத்து சிரித்தாள்.

ஆனால் விஜயோ "இம்ம்... நல்லா பேச மட்டும் செய்... மற்றது எதுவும் செய்யாத...” என உண்மையிலேயே சலித்தான். ஏனோ விஜய் மனதில், ஏதோ நெருடலாய் தோன்றியது. சஜுவை எண்ணியதாலா?... அல்லது அந்தச் சூழ்நிலையாலா?... எதுவென்று அவனால் யூகிக்க முடியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 15

இப்பொழுதெல்லாம், சஜுவைக் கண்டால், பயப்படாமல், அமர்ந்த நிலையிலேயே அல்லது, நின்ற இடத்திலேயே அசையாமல், அவளையே வைத்த கண் வாங்காமல், தலை சாய்த்து பார்க்கும் அந்த ஜோடி புறாக்கள்.

ஆம், சஜு தினமும் அவற்றிற்குக் கம்பும், பொட்டுக்கடலையும் வைப்பாள். பாவம், நாள் முழுவதும், எங்கும் பறக்காமல், நகராமல், சாப்பிடாமல், எவ்வளவு அக்கறையாய், பொறுமையாய் அடைக்காக்கிறது. அதுவும் ஒரு நாள் ஆண் புறாவும், அடுத்த நாள் பெண் புறாவும், மாறி மாறி முறை வைத்து அடைக்காக்கிறது என்று வியந்து தான் கம்பு வைப்பாள். அதுவும் சமத்தாய் சாப்பிட்டு விட்டு, மீண்டும் தன் அடைக்காக்கும் பணியைத் தொடரும். அதனால் அந்தப் பழக்கத்தில், சஜுவை பார்த்தால், பயந்து பறக்காமல் அப்படியே இருக்கும்.

இன்றும், அப்படித் தான், சஜு காலையிலேயே மாடிக்கு வந்தவள், அங்கிருந்த ஒரு கால் ஆடும் நிலையில் இருந்த, ஒரு ஓட்டையான குட்டி ஸ்டூலைப் போட்டு, ஒற்றைக் காலை மட்டும் வைத்து ஏறி பார்த்தாள். ஐயோ! எவ்வளவு குட்டியாய்... அழகு என்று சொல்ல முடியாது தான்... ஆனாலும் கண் திறவாமல், அமைதியாய் துயில் கொண்ட குட்டி புறாக்களைப் பார்க்க, பார்க்க சஜுவுக்குத் தெவிட்டவில்லை.

ஆம், புறா முட்டையிலிருந்து, குஞ்சுகள் வெளி வந்து ஒரு வாரம் ஆயிற்று. முதல் நாள் வெளிவந்த போது, மஞ்சள் உடலுடன், குட்டி குட்டி நரம்புகள் கருப்பாய் தெரிய, இளநீல நிறத்தில் மூடிய கண்ணுமாய், இரண்டு குஞ்சுகளும், ஒரு கோழி முட்டை அளவை விடச் சிறியதாய் இருந்தன. ஆனால் இந்த ஒரு வாரத்தில், அபரீதமான வளர்ச்சி கண்டு, கொஞ்சம் கோழி குஞ்சுகளைப் போன்று பெரிதாய் வளர்ந்திருந்தன. ஆனாலும் தோலுரித்த கோழி போல், இறக்கை முடி அங்கொன்றும், இங்கொன்றுமாய் முளைத்த நிலையிலும், கண் திறவாமலே இருந்தன.

சஜுவும் அவற்றின் பாதுகாப்பிற்காக, தன் தந்தையை நச்சரித்து, ஒன்றரையடிக்கு மூன்றடி கம்பி வேலியை வாங்கி வர சொல்லி, அவை அந்தத் திண்டின் மீது இருந்து விழுந்து விடாமல் இருக்க, திண்டின் முன் புறமும், ஒரு பக்கமாய் அடைத்து 'ட'ன்னா போன்று வளைத்தும், அவற்றைக் களிமண்ணால் பூசி, நிலை நிறுத்தி இருந்தாள். இவள் இங்கு இவற்றை ரசித்து, ஒரு கை அளவு கம்பு வைத்து விட்டு, இறங்கும் நேரம்...

"சசு... சசு...” என்ற குரல் அவளை எட்டியது. ஆம், சுஷ்மி தான்... காலை உணவை முடித்து விட்டு, தன் தந்தை வேலைக்குச் செல்லவும், சஜுவை தேடி அவள் வீட்டிற்குள், "சசு... சசு...” எனக் கையில் ஒரு பொம்மையோடு கூவிக்கொண்டே நுழைந்தது அந்தச் சின்னக் குயில். யாருமற்ற வரவேற்பறையில் நுழைந்தவள், நேரே சமையலறை சென்று, அங்கிருந்த சுந்தரியிடம் "சசுமா... சசு...” என்று சஜுவைக் காணாது, அவள் எங்கே என்று தன் மழலையில் கேட்டது அந்த இளந்தளிர்.

அவரோ "அட சுஷ்மி குட்டியா...” எனப் புன்னகைத்து, "அவ மாடிக்குப் புறா பார்க்க போயிருக்கா டா... இங்க உட்கார்ந்திரு, வந்திருவா" எனப் பதில் தந்து, அவளுடனே முன்னறைக்கு வந்தார்.

ஆனால் அவளா உட்காருவாள்? உடனே பொம்மையோடு வெளியே சென்று, மாடிப்படிகளில் ஏறப் போனாள். அவளின் நடவடிக்கையைக் கண்ட சுந்தரி, அவள் பின்னேயே சென்று "சுஷ்மி... மெதுவா, பொம்மையக் கொடுத்திட்டு போ டா... விழுந்திருவ...” என அவள் கையில் இருந்த பொம்மையை வாங்க, சுஷ்மியை நிறுத்தினார்.

சுஷ்மியும் உடனே ஒப்புக்கொண்டு, அவள் பொம்மையை நீட்டினாள். அதற்குள் இவர்கள் சம்பாஷணையைக் கேட்டு, லக்ஷ்மியம்மா "சுஷ்மி... மாடிக்கு போகாத... அப்பா திட்டுவாரு" என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்தார்.

ஆனால் அவளோ வழக்கம் போல, "சுஸ்பாட்டி ப்ள்ளீஸ்...” எனக் கெஞ்சினாள். பின் அவரின் பதிலைக் கூடக் கேட்காமல் ஏற தொடங்கினாள். சுந்தரியோ அதைக் கண்டு சிரித்துக் கொண்டே "பார்த்து... மெதுவா ஒரு ஒரு படியா ஏறி... போ டா...” எனக் கூற, அதற்கு மட்டும், "ச்சேர்... ரீ...” எனக் கூறிக்கொண்டே, கைப்பிடி சுவரில், தன் பிஞ்சு கரத்தை வைத்துக் கொண்டே, ஜாக்கிரதையாய் ஒரு ஒரு படியாய் ஏறினாள்.

மாடியை எட்டும் போதே "சசு...” எனச் சந்தோசமாய், அவள் பெயரை கூவியப்படியே சென்றாள். சுஷ்மியின் குரலைக் கேட்டு விட்டு, "ஏய்... செல்லக்கட்டி... பட்டுக்குட்டி... சாப்பிட்டியா?" எனக் கேட்டாள். பதிலுக்கு "ம்ம்ம்...” எனச் சிரித்தாள் சுஷ்மி.

அவளையும், அவள் அருகே இருந்த ஸ்டூலையும் பார்த்து "இன்னா?...” என விவரமாய்க் கேட்டாள்.

"குட்டி புறா... பார்க்குறியா?" என அவளை, முன் போலவே தோளுக்கு மேல், தூக்கி காண்பித்தாள்.”தெரிதா... கம்பிக்கு உள்ள பாரு... குட்டியா கருப்பா... இருக்கா" எனக் கேட்டாள். குட்டி புறாக்கள் அருகிலேயே, ஒரு பெரிய தாய் புறாவும் இருந்தது.

கண் மூடி அசையாமல் படுத்திருந்த குட்டி புறாக்களை, சுஷ்மிக்கு பார்க்க தெரியவில்லை. எனினும் "ம்...” எனப் பெரிய புறாவை கண்ட திருப்தியில் பதில் சொன்னாள்.

அவளைக் கீழ் இறக்கி, தன் கையில் ஏந்தியவள், பச்சை நிற பெட்டிக்கோட்டில், தலை வாரி, நெற்றியிலும், கன்னத்திலும் கருப்பு மையால், வட்டப் பொட்டு வைத்து இருந்த சுஷ்மியை பார்த்து, "நீயும் அது மாதிரி குட்டியா... அழகா குலாப்ஜாமூன் மாதிரி இருக்க... பூசணிக் குட்டி" எனக் குழந்தையின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஆனால் குழந்தையோ "விளாடாமா...” எனக் கேட்டாள். “ம்ம்... சரி... கீழ போவோம்" என அவளை இறக்கி விட்டு, ஸ்டூலை ஓரமாய் எடுத்து வைத்து விட்டு, சுஷ்மியின் கைப் பிடித்து மெல்ல, படிகளில் இறங்க வைத்தாள் சஜு.

தீபாவளி தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்க, ஐப்பசி மழை தொடங்கியிருந்தது. அன்றும் அப்படித் தான் மாலை லேசான தூறலாய்ப் பெய்து கொண்டிருந்த மழை, வலுக்கத் தொடங்கும் அறிகுறியாய், இடி பயங்கரமாய் முழங்கியது. அதை உணர்ந்த சஜு, மாடியில் குட்டி புறாக்கள் நனையுமே என, ஒரு கனத்த, சென்ற வருட காலண்டர் அட்டையைப் பிளாஸ்டிக் உறையில் இட்டு, மாடிக்கு எடுத்து சென்றாள். போன முறை பெய்த மழைக்கு, லேசான அட்டையை வைக்க, அது நீரில் ஊறி, நமத்துப் போய்க் கீழே விழுந்து விட்டது.

அதனால் தான் இந்த முறை இப்படி யோசனை செய்து, எடுத்து சென்று, வழக்கம் போல அந்தப் பழைய ஸ்டூலை போட்டு ஏறினாள். இரு கால்களையும் அதன் மீது வைத்து நிற்கவும், ஓட்டையான அந்த ஸ்டூல், லேசாக ஆட்டம் காணவும், அட்டையைக் கீழே தவற விட்டு, நல்ல வேளை மொட்டை மாடி கதவினைப் பிடித்துக் கொண்டாள்.

ஆனால் அட்டை விழுந்த சத்தத்தில்... அங்குக் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த அக்ஷய் திரும்ப, அவள் விழ தான் போகிறாள் என எண்ணி, கையில் இருந்த துணிகளோடு அவளிடம் விரைய, அதற்குள் விழாமல் கதவை பற்றிக் கீழிறங்கி சமாளித்தவளிடம், "பார்த்து...” எனக் கூறினான்.

மேலே நிமிர்ந்து அட்டையை வைக்க முயன்றதால், ஆங்காங்கே மழை நீர் துளிகள் முகத்தில் இருந்த சஜுவும், அவனைக் காண, புல்வெளியில் இருக்கும் பனித்துளி போல், அவள் முகத்தின் மாசு மருவற்ற தூய்மையை, அந்த நீர் துளியும், அழகாய் பிம்பமாக்கி பிரதிபலிக்க, ஒரு கணம் அவள் முகத்தோடு லயித்துத் தான் போனான் அக்ஷய். பின் சுதாரித்து, "தள்ளுங்க... நான் வைக்கிறேன்...” என்று சொல்ல, சஜுவும் நகர்ந்தாள்.

பின் குனிந்து அந்த அட்டையை எடுத்து, அக்ஷையின் கையில் தந்தாள். அவனும் நின்று கொண்டே, அந்தக் கம்பி வேலியின் மீது வைக்க முயற்சித்தான். ஆனால் முடியவில்லை. அதற்குள் வானமும் பெரிய நீர் துளிகளைச் சிந்த ஆரம்பிக்க, அதை உணர்ந்த சஜு "இந்த ஸ்டூல்லேயே... ஒத்த கால்ல வச்சு, ஏறி டக்குன்னு வச்சிருங்க...” என யோசனை சொன்னாள்.

அவள் சொல்வதும் "சரிதான்" என எண்ணி, கதவில் ஒரு கை வைத்து, விருட்டென்று ஸ்டூலில் ஒரு கால் வைத்து, அவளிடம் தந்த அட்டையை, திரும்ப வாங்க குனிய... சஜுவும், அவன் ஏறவும்... எங்கே அவன் விழுந்து விடுவானோ என எண்ணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவன் அருகே... மிக அருகே தன்னையறியாமல் போய் நின்றாள்...

அதனால் அவன் குனிந்து அட்டையை வாங்கும் போது, அவன் தலைமுடியில் இருந்து சொட்டிய நீர்... புறாக்களைப் பார்த்தப்படி நிமிர்ந்திருந்த சஜுவின் நெற்றி வகிட்டில் சரியாய் விழ... ஏனோ உடல் முழுவதும் சிலிர்க்க... சஜு தலை குனிய... அந்தத் துளி நீர்... அப்படியே வகிட்டில் இருந்து, நெற்றி வழியே, அவள் கூர் நாசியின் மீது பயணித்து... மூக்கின் நுனியில் நின்று, அவள் துப்பட்டாவில் விழுந்தது.

"வச்சிட்டேன்... வாங்க வேகமா... மழை பெருசா பெய்ய ஆரம்பிச்சிருச்சு...” எனச் சொன்னவனின் குரலில் தான் சஜுவின் சிலிர்ப்பு அடங்கி, நடப்புக்கு வந்தாள். அக்ஷயோ சொல்லி விட்டு, தன் கடமை முடிந்தது என, அங்கிருந்த உள் வராண்டாவில், காய்ந்த துணிகளைப் போட்டு வைத்திருந்த தங்கள் வீட்டு வாலியைத் தூக்கி கொண்டு, வேகமாய் இறங்கி சென்று விட்டான்.

அவனின் குரலில் நடப்பிற்கு வந்து, உள் வராந்தாவில் வந்து நின்றாலும், போகும் அவனையே, பார்த்துக் கொண்டு நின்றாள். பின், சாரல் காற்று, தன் மீது தெரிக்கவும் தான் சுதாரித்து, மாடிக்கதவை பூட்டி விட்டு, கீழே இறங்கினாள்.

இரவு உணவுக்குப் பின்னும், விடாமல் பெய்த மழையால் குளிரெடுக்க, சுகமாய்த் தூங்கலாமென, சஜு தன் அறைக்குள் சென்றாள். அப்போது சரியாய் விஜய் அலைப்பேசியில் அழைத்தான்.”ஹலோ... அத்தான் சொல்லுங்க...” எனக் கேட்டாள்.

"என்ன பண்ற சஜு...” எனக் கேட்டான்.”தூங்க வந்துட்டேன்... அத்தான்...” என உண்மையாய் பதில் சொல்ல, அந்தப் பக்கமோ விஜய் "என்ன... தூங்க வந்துட்டியா? அதுக்குள்ளேயா... மணி ஒன்பது தானே ஆகுது" என அதிர்வோடு கேட்டான்.

"ம்ம்... சாப்பிட்டுட்டேன் அத்தான். மழ வேற பெய்யுதா... சரி... கத புக் படிச்சுட்டே தூங்கலாம்னு வந்துட்டேன்" என்று காரணம் சொன்னவள், மேலும் "ஆமா... நீங்க எங்கயும் வெளிய போகலையா? பிஸியால இருப்பீங்க?" எனக் கேட்டாள்.

"என்ன ஒரு நல்லெண்ணம்... இந்த மழைல, வெளிய போய்... என்ன நனையச் சொல்றியா?" என அப்பாவியான குரலில் கேட்டான்.

"ஸ்ஸ்... ஆமாம்ல...” எனத் தன் மடத்தனத்தை எண்ணி தலையில், அடித்துக் கொண்டே "நல்ல மழைல... இங்க அப்படியே... ஜில்லுன்னு... குளிருது அத்தான்...” என வெகுளியாய் நினைத்ததைப் பகிர்ந்தாள்.

"இம்... ஆமாம் சஜு, இங்கயும்... குளிருது... இந்தக் குளிருக்கு என்ன பண்ணலாம்" எனக் கிறக்கமாய், காதலாய் கேட்டான் விஜய்.

"என்ன பண்ணலாம்னா... ஏசி, ஃபேன்ன ஆஃப் பண்ணிட்டு... ஒரு சன்னல மட்டும் திறந்து வைங்க, அப்படியே ஊதக்காற்றோட... மழை சாரலும் தெரிக்குமா... நல்லா... செமயா தூக்கம் வரும் அத்தான். மழ பெஞ்சா, நான் இப்படித் தான் பண்ணுவேன்" எனச் சிலாகித்து, அந்தக் குளிர் காற்றை அனுபவிப்பவள் போல், பதில் கூறினாள்.

விஜயோ "ஏன் சஜு... உனக்குத் தூக்கத்த தவிர எதுவுமே தெரியாதா? நீ சுஷ்மி பேபி கூடச் சேர்ந்து, சேர்ந்து அவள மாதிரி இன்னும் பேபியாவே இருக்க" என அவளிடம் கூறினாலும், "கஷ்ட காலம் டா விஜய்" எனத் தனக்குத் தானே எண்ணிக் கொண்டான்.

"அத்தா... ன்...” எனச் சிணுங்கியவளை, "சரி, சுஷ்மி பேபிக்கு, போன வாரம் நாம டிரஸ் எடுக்கும் போது, அவளுக்கு ஒரு செட் எடுத்தோமே, அத தைக்கக் கொடுத்திட்டியா?" என ஞாபகமாய்க் கேட்டான்.

அவளோ "இல்ல அத்தான். கொடுத்ததுக்கு, இப்ப தீபாவளிக்கு தைக்கிறதுக்கே நிறைய இருக்கு, தீபாவளி முடிஞ்சு கொண்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க அத்தான்" என விளக்கம் சொல்ல, "தீபாவளி கழிச்சு ஒன் வீக்ல கல்யாணமே, அதுக்குள்ள கொடுத்திருவாங்கள என்ன?" என ஐயத்தோடு வினவினான்.

"இம்ம்... இம்... கொடுத்திருவாங்க அத்தான்...” என ராகம் இழுக்க, அதில் உள்ள சோர்வைக் கண்டுக் கொண்ட விஜய், "ஹேய்... சஜு... என்னாச்சு டா...” என அக்கறையாய், அன்போடு கேட்டான்.

சஜுவும் அதில் கரைந்து, "அத்தான்... இவ்ளோ சீக்கிரம்... கல்யாணம்னு நினைச்சா... எனக்கு எப்படியோ இருக்கு அத்தான்" எனத் தன் மனதில் உள்ள நெருடலை, ஒரு வழியாய் சொல்லி விட்டாள்.

விஜயோ, "கல்யாணத்தை எண்ணி பயப்படுகிறாள் போல... தாய் தந்தையைப் பிரிய வேண்டுமே எனத் தவிக்கிறாள் போல... அதிலும் ஒற்றையாய் பெற்றோரின் மொத்த பாசத்தில் வளர்ந்தவள் அல்லவா?... அதோடு அவர்களைப் பிரிந்து வெகு தொலைவாய் செல்ல நேருமே என்பதில் உண்டான சோர்வு போல... அதைச் சொல்ல தெரியாமல் தான் இப்படிப் பேசுகிறாளோ?" என எண்ணி, இது தான் உன் சோர்வுக்குக் காரணமா எனக் கேட்டு, மேலும் அவளைச் சோகத்தில் ஆழ்த்தாமல், "கொஞ்ச நாளுல, எல்லாம் சரியாகிடும் டா... சரி சஜு... எதையும் நினைக்காம தூங்கு... என்ன?" என ஆறுதல் கூறினான்.

"ம்ம்... சரி அத்தான்" என ஒப்புக்குச் சொன்னவளிடம் "தூங்கு... கனவு மூலமா... அத்தான் நேர்லயே வந்து ஆறுதல் படுத்துறேன்" எனச் சொல்லி சிரிக்க, "அத்தான்...” என வெட்கமாய்ச் சிணுங்க, "சரி டா... தூங்கு" எனப் போனை அணைத்தான் விஜய்.

இப்படி வெட்கமும், நெஞ்சில் நெருடலும், கலந்தப்படி உறங்கிப் போனாள் சஜு. மழை மேலும் வலுக்கத் தொடங்க, குட்டி புறாக்கள் "கீ... கீ...” எனக் கத்த தொடங்கியது, அதனைத் தொடர்ந்து "சசு... சசு...” என்ற சுஷ்மியின் குரலும் தீனமாய் ஒலித்தது. உள்ளம் பதற, விருட்டென்று எழுந்து, மாடிக்கு சென்றாள் சஜ்னா.

அங்கே இருட்டும்... வெளிச்சமும் கலந்த ஒரு மங்கலான வெளிச்சத்தில், யாரும் தென்படாமல் போக, சஜு "யாரும் இல்லையே...” எனத் திரும்பி போக எத்தனிக்க, "சசு... சசுஉ... உ உ...” என்ற சுஷ்மியின் அழுகுரல் மீண்டும் கேட்க, திரும்பினாள். அங்கே அவளிடமிருந்து தூரமாய்... கண்களில் இருந்து கன்னத்தில், வழிந்த கண்ணீரோடு சுஷ்மி நிற்க, ஊண் உருக, உடனே மண்டியிட்டு, "சுஸு...” என அவளை அழைத்து, கை நீட்டினாள் சஜ்னா.

அவளிடம் ஓடி வந்து, கைகளில் தஞ்சமடைந்த சுஷ்மியை, இறுக அணைத்து, உச்சி முகர்ந்தாள் சஜ்னா. உடனே சுஷ்மியும் சிரித்து, அவள் கன்னத்தில் முத்தமிட வர, சஜ்னாவும், தன் கன்னத்தைக் காட்டி, கண்களை மூட... ஒரே சமயத்தில் அவளின் இரு கன்னங்களிலும் முத்தம் கிடைக்க, படீரெனக் கண்ணைத் திறந்தாள்.

ஒரு பக்கம் சுஷ்மியும், மறு பக்கம்... அக்ஷய் தான்... முட்டியிட்டு, ஆளுக்கு ஒரு பக்கமாய் அவளின் தோளை அணைத்து, முத்தமிட்டிருந்தனர். ஆனால்... சஜ்னாவும்... முகத்தில் புன்னகையோடு, மீண்டும் தன் இரு கரங்களால் அவர்களை, சந்தோஷமாய்த் தோளோடு அணைத்து கொண்டாள்.

சட்டென்று கண்களைத் திறந்தாள் சஜ்னா... “அப்போ... நடந்தது கனவா?... எல்லாமே நிஜத்தில் நடப்பது போலவே இருந்ததே...” என எண்ணியவள், கனவின் தாக்கத்தில் விழி திறந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். சாளரம் வழியே வெளியே பார்க்க, மழை காரணமாக, கருக்கல் நேரம் இன்னும் அதீத இருட்டாய்த் தெரிந்தது. அதனால் சஜு, தன் அலைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள், அது நான்கு மணி பதினைந்து நிமிடம் எனச் சொன்னது.

"ஐயோ... இவன் எப்படி நம் கனவில் வந்தான். அதுவும் கல்யாணம் நடக்கச் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஒரு கனவா? இது தவறில்லையா?" என எண்ணி குழம்பினாள்.

மேலும் "ஒரு நாள் கூட, நாம் இவனை... இந்தக் கண்ணோட்டத்தில் நினைத்ததில்லையே... ஒரு வேளை குழந்தையின் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசை அடிமனதில் பதிந்து இப்படி வெளிப்படுகிறதோ?" என்று சுய அலசலில் இறங்கினாள்.

எது எப்படியோ?... அக்ஷையால்... அவளின் நடுஜாம தூக்கம் கெட்டு... சஜ்னாவை பொறுத்தவரை அந்த இளங்காலை பொழுது நடுஜாமம் தான், அவனைப் பற்றியே எண்ணி... நெடு நேரமாய்... புலம்பியும், குழம்பியும் கொண்டிருந்தாள் என்று சொன்னால், அது மிகையல்ல.

திடீரென, அறைக்குள் வெளிச்சம் பரவ, நேரத்தைப் பார்க்க, மணி ஏழாயிற்று.”ஐயோ இவ்வளவு நேரம், தூங்காமல் அவனைப் பற்றியா நினைத்துக் கொண்டிருந்தேன்" எனத் தன் தலையில் அடித்துக் கொண்டு, "இது சரிப்பட்டு வராது...” என எழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து வெளியே செல்ல, அவளைக் கண்ட சுந்தரியோ "சஜு...” என வாயை பிளக்க, அதில் செய்தித் தாளை கீழிறக்கிய முரளியோ "பார்த்தியா என் பொண்ண... கல்யாண நாள் நெருங்க நெருங்க... எப்படிப் பொறுப்பாயிட்டான்னு" எனப் பெருமையாய் சொன்னார்.

அப்போது, எதிர் வீட்டில், பால் வாங்க வெளியே வந்த அக்ஷயைக் கண்டவள், "எல்லாம் இவனால வந்தது... பா" என மனதிலேயே தன் தந்தைக்குப் பதில் சொல்லி விட்டு, அப்படியே சமையலறைக்குச் சென்றாள்.”என்னங்க... இப்படி ஆளே மாறிட்டா?... பதில் கூடப் பேசாம மெய்மறந்து போறா...” எனச் சுந்தரி அதிசயிக்க, "ம்ச்சு... விடு சுந்தரி, போ... போய்க் குழந்தைக்கு டீ போட்டு கொடு" எனச் சொன்னவரை, முறைத்துக் கொண்டே சென்றார் சுந்தரி.

சஜு, இன்னும் தனக்கு எப்படி இப்படி ஒரு கனவு வந்தது? என யோசனையாகவே இருந்தாள். இதற்கிடையே, ஒரு நாள், மாடியில் துணி காயப்போட்டு திரும்பிய அக்ஷயோடு, புறாக்களுக்கு உணவு வைக்க, வந்த சஜு மோதப் போக... நொடியில் இருவரும் சுதாரித்து... விலகி... சஜு தனக்கு இடப்பக்கமும், அக்ஷய் தனக்கு வலப்பக்கமும்... ஆகமொத்தம் இருவரும் ஒரே பக்கம் நகர்ந்து, நெற்றியோடு நெற்றியாய் மோதிக் கொண்டனர்.

அக்ஷய் ஒரு சாரியோடு கீழே சென்று விட, சஜு தான் அவஸ்த்தையோடு தேங்கி விட்டாள். பின் எப்படிக் கீழே இறங்கி வந்தாள், எனக் கேட்டால், அது அவளுக்கே தெரியாது என்று தான் சொல்வாள்.

பின் ஒரு நாள் மாலை, சுஷ்மியோடு தன் அறையில் விளையாடிக் கொண்டிருந்த சஜு, அவளிடம் "ஏன் சுஸு... இங்கயே... என் கூடவே இருக்கியா?" என அவள் தலை வருடி ஆசையாய் கேட்டாள்.

அவளும் "இம்" எனத் தலையாட்டினாள்.”அப்போ நைட் இங்கயே சாப்பிட்டு, என் கூட இங்கயே ஜோ ஜோ தூங்குறியா?" என மெத்தையைக் காட்டிக் கேட்டாள்.

அதற்குக் குழந்தையோ "ம்ஹும்...” என மறுத்து தலையாட்டி, "னா சுஸ்பா... ஜோ ஜோ... ன்... னி பாரியா... சுஸ்பாட்ட ஜோ ஜோ...” என்ற சுஷ்மியின் எதிர்பாராத பதிலில், அதிர்ந்து தான் போனாள் சஜு.

அதிர்ந்தவளை "சசு... பாரியா...” என மீண்டும் சுஷ்மி, அவளிடம் கேட்டு சஜுவைக் கலக்கினாள். அவளோ "இல்லடா... நீ சுஸ்பாட்ட தூங்குறேல்ல... அது மாதிரி நான், சசுபா கிட்ட தான் தூங்குவேன்" என விளக்கி கூறவும் தான், அந்தப் பேச்சை விட்டாள். அதற்குள் சஜுவிற்கு வியர்த்து விட்டது.

தீபாவளி திருநாளும், அதிரும் வெடி சத்தத்தோடு புலர்ந்தது. சஜு அன்று கடையில் எடுத்த சேலையை, பெயருக்கு கட்டி அவிழ்த்து விட்டு, ஒரு புதிய சல்வாரை உடுத்திக் கொண்டு, கீழே சென்று, அந்த அப்பார்ட்மென்ட்டின் சிறார்களோடு, ஆர்ப்பாட்டமாய் வெடிகளை வெடித்து, விளையாடி தீபாவளியை நன்றாகக் கொண்டாடினாள்.

ஆனால் நம் சுஷ்மியோ, எழுந்ததில் இருந்து வெடி சத்தத்தில் பயந்து, அழுது அழுது, தன் தந்தையின் மடியிலேயே, அவனின் நெஞ்சோடு புதைந்து கொண்டாள். அன்று நாள் முழுவதும் சுஷ்மிக்கு சாப்பாடு, விளையாட்டு, தூக்கம், எல்லாம் அக்ஷையின் மடியிலேயே தான் நடந்தது. சஜுவின் வீட்டிற்குக் கூட அவள் செல்லவில்லை.

மாலை ஓரளவு, வெடி சத்தம் குறையவும் தான், புது ஆடையான பட்டுப்பாவாடையை உடுத்தி, தரையிலேயே அமர்ந்தாள் சுஷ்மி. தன் வீட்டிற்கு, காலையில் இருந்து வராத குழந்தையைத் தேடி சஜ்னா, அக்ஷையின் வீட்டிற்குச் சென்றாள். வெறுமனே சாற்றி இருந்த கதவை மெதுவாய் திறந்து, தனக்கு முதுகு காட்டி, யாருமில்லாத வரவேற்பறையில் அமர்ந்து விளையாடியக் குழந்தையை அப்படியே தூக்க, "ஆஆ... சுஸ்பா... ஆ...” எனக் கத்திய சுஷ்மியின் அழுகுரலில், சஜு மட்டுமல்ல, லக்ஷ்மியம்மா, அக்ஷய் என அனைவரும் அதிர்ந்து வெளியே வந்தனர்.

அதற்குள், சஜு "டேய் சுஸுக்குட்டி... பூசணிக் குட்டி... நான் தான் டா" என அவளைத் திருப்பியப்படியே சொல்லவும் தான், அழுகையை நிறுத்தினாள் சுஷ்மி. அழுகையை நிறுத்திய தளிரைக் கொஞ்சி, அக்ஷயை அவஸ்த்தையாய் பார்த்து, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக லக்ஷ்மியம்மாவிடம் கூறி, தூக்கி வந்தாள்.

பின் மேல் மாடியில் வர்ணங்களைத் தூவி, ஒளிர வைக்கும் ராக்கெட்டைப் பார்க்கலாம் எனச் சுஷ்மிக்கு ஆசைக் காட்டி, பட்டுப் பாவாடை அணிந்திருந்த குழந்தைக்கு, தலையில் பூ வைத்து அழகு பார்த்த சுந்தரியையும், முரளியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள் சஜ்னா. அப்போது விஜயும் வர, அனைவரும் மாடி ஏறினர். மீண்டும் கீழே வந்தவள், தன் வீட்டிலிருந்த சின்னச் சின்னப் பெட்டி மத்தாப்புக்களையும், கம்பி மத்தாப்புக்களையும், எடுத்துக் கொண்டு சென்றாள்.

அங்குச் சென்று, ஒரு திரி விளக்கை எரியவிட்டு, விஜய் கைகளில், வானத்தில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த சுஷ்மியை கீழே இறக்கி, "தீபாவளி அதுவுமா, வெடி வெடிக்காம, மத்தாப்பு கொளுத்தாம இருக்கக் கூடாது சுஸு...” எனச் சொல்லி, ஒரு கையில் சுஷ்மியையும், மறு கையில் கம்பி மத்தாப்பையும் பிடித்துக் கொண்டு, தீபத்தின் அருகே சென்றாள் சஜ்னா.

குழந்தையோ அவளின் நோக்கம் புரிந்தது போல, "இல்ல... இல்ல... சசு... சுஸ்பா...” என அபயக்குரல் கொடுத்தாலும், சஜு அவளை வலுக்கட்டாயமாய் இழுத்து செல்ல... சிணுங்க ஆரம்பித்த சுஷ்மி, அவள் கம்பி மத்தாப்பை தீபத்தில் காட்ட திரும்பிய சமயம், அவள் கையைக் கடித்து விட்டாள்.

சஜுவோ "ஸ்ஸ்ஸ்...” என, கையை விட, "சுஸ்பா...” என அழுகுரலோடு, மாடிப்படியை நோக்கி வேகமாய் ஓடிப் போக, விஜய் முதலில் யாரைப் பார்ப்பது என்று குழம்ப, நிமிடத்தில் சஜு குழந்தையிடம் ஓடினாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 16

சுஷ்மி கடித்ததால், அந்த வேதனையில் கையை உதறிய சஜுவைப் பார்ப்பதா, அல்லது அழுதுக் கொண்டே ஓடும் குழந்தையை நிறுத்துவதா என ஒரு நிமிடம் குழம்பிய விஜய், சுஷ்மியைத் தடுக்க ஓடிய சஜுவைப் பார்த்தவன், தானும் அங்கே... அவள் பின்னே நடந்து சென்றான்.

ஆனால் விஜய் வருவதற்குள், வெற்றிகரமாய் மாடியின் உள் வராண்டாவில் காலடி எடுத்து வைத்த சுஷ்மியைப் பிடித்து, தடுத்து நிறுத்த குனிந்தவளின் தலை, எதன் மீதோ மோதிக் கொண்டது.

அந்த உள் வராண்டாவின் மின்னொளியில், தான் எதன் மீது இடித்துக் கொண்டோம், என நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்தாள். குழந்தையைப் பிடித்திருந்த கைகள் தானாகத் தளர, சுஷ்மி, "சுஸ்பா...” என நின்றிருந்தவனின் கால்களைக் கட்டிக்கொண்டாள். ஆம், சஜு, அங்கு ஏற்கனவே நின்றிருந்த அக்ஷய் மீது தான் மோதிக் கொண்டாள்.

சஜு மீண்டும் கீழே வந்து பட்டாசுகளை எடுத்து போகவுமே, "மத்தாப்பை எடுத்துச் செல்கிறாளே... இவள் ஏதாவது கலவரம் செய்து, சுஷ்மியை அழ வைக்கப் போகிறாள்.” என எண்ணி தான், சஜு சென்று, கண் மறைந்த பின், ஒரு நிமிடம் தாமதித்து மாடி ஏறினான் அக்ஷய்.

ஆனால் அவன், மாடியின் தொடக்கத்தில் இருந்த உள் வராண்டாவில் இருந்து, வெளியே காலடி எடுத்து வைக்கும் போது தான்... சஜு தீபம் அருகே சென்று, குனிந்திருந்தாள்.

நெற்றியின் இரு மருங்கிலும், பின்னலில் சேராத உதிரி கூந்தல் அசைந்தாட... நடுவில் வட்டபொட்டு கூர் நாசியை எடுப்பாக்க... மை பூசிய கண்ணின் தீச்சன்யம், தீபத்தின் ஒளியை அண்ட விடாமல், கண் இமைகள் விரிந்து குடையெனக் காக்க... வாய் ஓயாது எதையோ சொல்லியப்படி தன் பணி செய்ய... அப்படியே அசையாது நின்று விட்டான் அக்ஷய்.

அவன் சஜுவை தீபத்தின் ஒளியில் பார்த்தது என்னவோ ஒரு சில நொடிகள் தான், ஆனால் அந்தக் காட்சி அப்படியே நிலைத்து நிற்பது போல், அவனும் அப்படியே தன்னை மறந்து நின்று விட்டான். அதன் பின் சுஷ்மி அவளைக் கடித்தது, குழந்தை ஓடி வந்தது என எல்லாம் மூளையில் பதிந்தாலும், மனதில் அந்தக் காட்சியே ஒட்டிக் கொண்டது.

தன்னைக் கட்டிக் கொண்ட குழந்தையைத் தூக்கியவன், அதுவரை "தன்னால் தான் அழுகிறாள்" என்று நினைத்த சஜுவின், பயந்த பார்வைக்கு ஒரு வெற்று பார்வைப் பார்த்து வைத்தவன், இப்பொழுது தன் கண்களைக் குழந்தையிடம் திருப்பினான். சஜுவோ "அது... வந்து...” என அவள் வருவதற்குள், விஜய் வந்து சேர்ந்திருந்தான்.

அழுத குழந்தையிடம், "ஒன்னும் இல்லடா... ஒன்னும் இல்ல... அழக்கூடாது... சுஷ்மி" என அக்ஷய் ஆறுதல் படுத்தவும், மூவரின் கவனமும் குழந்தையிடம் சென்றது.

விஜய் "அச்சோ... பேபி... இங்க பாரு... கலர்ஸ் பாரு... அழாத டா...” என அக்ஷயின் தோளில் கவிழ்ந்தவளை நிமிர்த்த பாடுபட்டான். பின் அக்ஷயிடம் "அங்க வாங்க... வந்து ராக்கெட்ஸ்ஸ காமிங்க அக்ஷய்... அழுகைய நிறுத்துவா...” எனச் சொல்ல, அக்ஷயோ "இருக்கட்டும்... முத அவங்க... கைய பாருங்க, காயம் எதுவும் ஆழமா பட்டிருச்சான்னு...” எனச் சஜுவை பார்த்துச் சொன்னான்.

ஆனால் சஜுவோ ஆச்சரியப்பட்டு, "இவன் எப்படிப் பார்த்தான்... ஐயோ எல்லாம் தன்னால் வந்தது" என்ற குற்ற உணர்வில், தன் இடக்கையைப் பார்த்து விட்டு, "அதெல்லாம் ஒன்னும் ஆகல... சுஷ்மிய கொடுங்களேன்" எனத் தெளிவாய் கேட்டாள். ஆனால் மனதுள் "என்ன கடிச்சு வச்சிட்டு, என்னமோ நான் அவள கடிச்ச மாதிரி அழுகுறத பாரு... இதுல ஒப்பாரி வேற" என எண்ணினாள்.

ஆம், சுஷ்மி "சுஸ்பா... ஆ... ஆ... சசு... உ... உ... இல்ல இல்ல...” எனத் தன் போக்கில், தனக்குத் தெரிந்த விவரத்தை, தன் மொழியில், அழுதாலும், விவரமாய்த் தன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பின் மூவரும், மாடிக்கு செல்ல, அக்ஷய் கூட, "இங்க பாரு டா... சுஷ்மி, அங்கிள் கூப்பிடுறாங்க" எனச் சுஷ்மியை திருப்ப முயற்சித்தும், அவள் தந்தையின் தோள்களில் இருந்து அகல மறுக்க, அதற்குள் அழுகைச் சத்தத்தைக் கேட்டு, அந்தப் பக்கம் வேடிக்கைப் பார்த்து, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த சஜுவின் பெற்றோரும் வந்து விட்டனர்.

"நல்ல நாள் அதுவுமா... இப்படியா பிள்ளைய அழ வைப்ப சஜு...” எனக் கடிந்து கொண்டார் சுந்தரி.

விஜய், ஒரு கம்பி மத்தாப்பை கொளுத்தி, அக்ஷய்க்கு பின்னே சென்று காட்டவும் தான், ஓரளவு அழுகையை நிறுத்தி, தேம்பிக் கொண்டே நிமிர்ந்தாள். மேலும், சஜு இன்னொன்றை கொளுத்த, இப்படியே அவர்கள், தரைச் சக்கரம், பூவாளி என எல்லாவற்றையும் வெடிக்க, சுஷ்மியும், முதல் முறையாய் தீபாவளியை பயமில்லாமல், சந்தோஷமாய்... கைத் தட்டி... ஆர்ப்பரித்து... ஆனால், தந்தையின் கையிலேயே இருந்து கொண்டு தான், கொண்டாடி மகிழ்ந்தாள்.

மாடியை விட்டு இறங்கும் சமயம், அக்ஷய் "தேங்க்ஸ் விஜய்... இன்னிக்கு தான், நாங்க தீபாவளியே கொண்டாடிருக்கோம்... சந்தோஷமா... அதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ்" எனப் பார்வையால் சஜுவை தழுவி, மேலும் "எதுக்கொன்னும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க" என விஜயிடம் ஆரம்பித்து, சஜுவிடம் முடித்தான்.

அவன் சொல்படியே, விஜய் அவளை அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முன்னெச்சரிக்கையாய் ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டு, அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு தான் சென்றான்.

மறுநாள், வழக்கம் போல, சுஷ்மி "சசு...” எனச் சஜு வீட்டிற்குச் செல்ல, அங்கு வரவேற்பறையில், மெத்திருக்கையில் சுந்தரியுடன், சஜுவும் அமர்ந்திருந்தாள். கையில் ஒரு பொம்மையுடன், சஜு அருகே, சுந்தரியை கடந்து செல்ல, "ஓய்... நேற்று என் பிள்ளைய கடிச்சு வச்சதும் இல்லாம, அழுக வேற செய்யுற... இப்ப என்ன விளையாட வந்திருக்க... ?" எனச் சிறிது பொய் கோபத்தோடு கேட்டார் சுந்தரி.

சுஷ்மி, தன்னைத் தான் ஏதோ திட்டுகிறார் எனப் புரிந்து, முகத்தைப் பாவம் போல வைத்து, சஜுவின் முகத்தை ஏறிட்டாள். அதுவரை, சுஷ்மி என்ன செய்கிறாள் எனப் பார்த்த சஜு, தன் அன்னை திட்டவும், தன் மடி மீது ஒரு கை வைத்து, ஒற்றைக் காலில் நின்று, மறு காலை பின்னே கொண்டு சென்று கட்டை விரலால் ஊன்றி, "சசு... னோ...” எனப் பாவமாய்த் தலையை இட வலமாய் ஆட்டி, கேட்க, அதில் மயங்கியவள், அவளை அள்ளி மடியில் வைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

உடனே சுஷ்மி, அருகில் தன்னை முறைத்துக் கொண்டு இருந்த சுந்தரியைப் பார்த்து, கண்ணைச் சுருக்கி சிரித்தாள். உடனே சுந்தரியும் சிரித்து, "இப்படிச் சிரிச்சு சிரிச்சே... எல்லாரையும் மயக்கிடு... வாலு" என அவள் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டார்.

ஐந்து நாட்கள் இப்படியே செல்ல, கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்க, சஜு வீட்டில், நெருங்கிய உறவினர்களின் கூட்டம் வர ஆரம்பிக்க, சுஷ்மி அவர்களைப் பார்த்து மிரண்டு, தன் வீட்டிற்கு ஓடி விடுவாள். இருந்தும் சஜு வீட்டை வேடிக்கைப் பார்ப்பாள், சஜு அவர்கள் வீட்டு வரவேற்பறையில் இருந்தால், சுஷ்மி உடனே அங்கு ஓடி விடுவாள்.

மேலும் சஜுவின் நெருங்கிய உறவினர்களின் குழந்தை அவள் மடியில் அமர்ந்தாலோ, இவள் அவர்களைக் கொஞ்சினாலோ... சுஷ்மிக்கு பொறுக்காது. தானும் சென்று, அவள் மடியில் ஏற்கனவே அமர்ந்திருந்த குழந்தையை இடித்துக் கொண்டு அமர்வாள். மேலும், அமர்ந்து சுஷ்மியின் கன்னத்தில் முத்தமிடுவாள். ஆனால், அந்தக் குழந்தைகளுடன் விளையாடவெல்லாம் மாட்டாள்.

சஜுவுக்கு, சுஷ்மியின் உரிமை போராட்டம் புரியாமல் இல்லை, ஏனோ ஒரு பொம்மைப் போல, அவள் அன்னை சொல்ல, சொல்ல, எல்லாவற்றையும் செய்தாள். மாமியார் வீட்டிற்குக் கொண்டு செல்வதற்காக, ஆடைகளை அடுக்கி வைப்பது, பின் பெண்களுக்குத் தேவையான ஜடைமாட்டி, சோப்பு, சீப்பு என இத்தியாதி இத்தியாதிகளை எடுத்து வைத்தாள்.

சஜு கூட "சோப்பு, சீப்பு கூடவா... இம்ச்சு... இதெல்லாம் ஏன்மா...” எனக் கேட்க, அனுபவம் வாய்ந்த அவரோ "அங்க கல்யாணமான மறு நாளே, விஜய் உனக்காகக் கடைக்குப் போய் வாங்கிட்டு வருவாரா? முன்னக் கூடியே நீ தா கொண்டு போகணும். அப்புறமா வேணா... அவங்க உனக்கும் வாங்கித் தருவாங்க" என விவரமாய் எடுத்துரைத்து விட்டு, "இவ என்ன... பெரிய மனுஷி... உனக்குக் கூட மாட எடுத்து வைக்கிறாளாக்கும்...” எனப் பைகளின் அருகே மண்டியிட்டு, அதற்குள் தலை விட்டு எதையோ கையால் தேடிக் கொண்டிருந்த சுஷ்மியைப் பார்த்து தான் கேட்டார்.

ஆனால் சஜுவோ எதுவும் பதில் பேசாமல், தன் பணியைச் செய்தாள். சுந்தரியும், சுஷ்மியின் பின் பக்கம், ஒரு செல்ல அடி வைத்து விட்டு, புன்னகையுடன் சென்று விட்டார்.

உடனே சஜுவைப் பார்த்த சுஷ்மி, "ஏ... சசு... டாடாவா...” எனக் கேட்டாள். ஏனோ சஜுவுக்குக் கண்கள் கரித்தன, இருந்தும் கண்களைச் சிமிட்டிக் கொண்டு, "ஆம்" என்பது போல் தலையசைத்தாள்.

"இங்க போற... ? நானு... பூலமா" எனக் கேட்ட குழந்தையை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு, அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தம் வைத்தாள்.”நாளை இந்நேரம் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும். நாளையோடு சரி... இனி இங்கு வரமாட்டோம்... சுஷ்மியையும் இனி காண முடியாது" எனப் பிரிவை எண்ணி வந்த கண்ணீர், நில்லாமல் அவள் கன்னத்தைக் கடந்து, சுஷ்மி மீது விழுந்தது.

சுஷ்மி நிமிர்ந்து, "ஏ... சசு... ஊம்... உம்...” என அவள் கண்ணீரை ஏன் எனக் கேட்டு, தன் பிஞ்சு கரத்தால், துடைத்து விட்டாள். குழந்தையின் செய்கையில், அவளை அணைத்துக் கொண்டு, மேலும் அழுதாள்.

"சஜு...” என அவளை அழைத்துக் கொண்டு வந்த முரளி, அந்தக் காட்சியைப் பார்த்து, அவளருகே சென்றமர்ந்து, "சஜு... என்னடா ஆச்சு" என அன்பொழுக கேட்டார்.

"ப்பா... எப்படிப்பா... நான் உங்கள விட்டு பிரிஞ்சு இருப்பேன். எனக்கு எப்படியோ இருக்கு பா... எனக்கு இவ்ளோ சீக்கிரம்... கல்யாணம் வே...” என அவள் முடிக்கவில்லை, அவள் தந்தை தன் கையால் அவள் வாயடைத்து, "ஷ்... இப்படில்லா பேசக் கூடாது டா... எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும். விஜய் நல்லவன் மா, உன்ன நல்லா பார்த்துப்பான். நீ பயப்படாத... மா. எல்லாம் நல்லதாவே நடக்கும். முந்தி மாதிரியா?... இப்பலாம்... போன் இருக்கு, வீடியோ கால் இருக்கு... எங்க ஞாபகம் வந்து, பேசணும், பார்க்கணும்னா... சட்டுன்னு நிமிஷத்துல பார்த்திடலாம்.” எனப் பெரிதாக ஆறுதல் கூறி, அவளைச் சமதானப் படுத்தினார்.

பின் மனைவியிடம் சென்று, சஜுவைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அவள் இஷ்ட்டம் போல் விட்டு விடு என்று அறிவுறுத்தினார். ஏனெனில் சுந்தரி, அறிவுரை கூறுகிறேன் என்று கணவன் வீடு, மாமியார் வீடு எனப் பேச பேச, பிரிவை நினைத்து தன் மகள் கலங்குகிறாள் என்று எண்ணி தான் அவ்வாறு சொன்னார்.

கல்யாணத்திற்கு முதல் நாளான, மறு நாளும் அழகாய் விடிந்தது. சஜு குளித்து முடித்து, அம்மாவின் அறிவுரைப் படி, ஒரு சாதாரணச் சேலையைக் கட்டியிருந்தாள். இன்று சஜு வீட்டில் உறவினர்களின் வரவு சற்று அதிகரிக்க, உறவு பெண்கள் எல்லாம், சஜுவை வட்டமிட்டு அமர்ந்து, அவள் அறையில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சுஷ்மி, தன் சுஸ்பாட்டியோடு உள்ளே வந்தாள். ஆம், லக்ஷ்மியம்மாவும், கல்யாண பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்வோம், என்று வந்து, அவளிடம் இரண்டு நல்ல வார்த்தைப் பேசி, வாய் வார்த்தையாகவே ஆசீர்வதித்து, சுந்தரியிடம் பேச சென்று விட்டார்.

சுஷ்மி, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், சேலை அணிந்திருந்த சஜுவை வித்தியாசமாய்ப் பார்த்துக் கொண்டே, அவள் மடியில் சென்று அதிகாரமாய் அமர்ந்து, அவளிடம் "விளாடாம... சசு?" எனக் கேட்க, அமர்ந்திருந்த பெண்கள் கூட்டம் சிரித்து விட்டனர்.

பாவம், குழந்தைக்கு என்ன தெரியும்? அவளுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது, அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று. ஆனால், இந்த ஐந்து நாட்களும், சுஷ்மியிடம் நல்ல மாற்றம் தெரிந்தது. எப்போதேனும், தோன்றினால் மட்டுமே அபூர்வமாய்ச் சஜு மடியில் அமர்பவள், இப்பொழுதோ... எப்போதும் அவள் மடியில் தான் அமர்கிறாள். குழந்தைக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

மேலும், சுஷ்மியின் கேள்வியில் சிரித்த பெண்கள், குழந்தையிடம் "இனிமே, சஜ்னா உன் கூடலாம், விளையாட மாட்டா... அவங்க அத்தான் கூடத் தான் விளையாடுவா... என்ன சஜ்னா" என ஒருவரும், "ஏய் உனக்கே கல்யாணமாகி, அடுத்த வருஷம் குழந்த வந்திரும்... நீ இன்னும் இவ கூட விளையாடுறியா?" என அவள் தோழி இடித்துரைக்க, "என்ன சஜு... அப்படியா... அடுத்த வருஷமே குழந்தையா?" என இன்னொருத்தி கேலிப் பேச... ஆனால் இந்தப் பேச்சுகளினால் மகிழ வேண்டிய சஜுவோ, வெட்கம் என்ற கவசத்தால், தலைக் குனிந்து தன்னை மறைத்துக் கொண்டாளோ? அல்லது தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டாளோ? தெரியவில்லை.

இப்படியாக, எல்லோரும் சஜு விளையாட வர மாட்டாள் என்று சொன்னது, குழந்தைக்கும் புரிந்ததோ? சுஷ்மி உடனே சஜுவை பார்க்க, அவளும் எதுவும் சொல்லாமல் இருக்கவும், "சசு... னோ...” எனக் கேட்க, அதற்கும் அவள் அமைதி காக்க, சுற்றி இருந்த பெண்களில் ஒருத்தி, "நீ... வீட்டுக்கு போயிட்டு, அப்புறம்... வா பாப்பா... இம்...” எனச் சமாதானம் செய்து சுஷ்மியை அனுப்ப முயன்றாள்.

சுஷ்மியோ எழுந்து, உதட்டைப் பிதுக்கி, தேம்ப ஆரம்பித்து, தன்னைப் போகச் சொன்னவளிடம், "போ" எனத் தலையைச் சிலுப்பிக் கொண்டு, "சுஸ்பா... ஆ... ஆஅ...” என அழுதுக் கொண்டே தன் வீட்டிற்கு, ரோசத்தோடுச் சென்று விட்டாள். சஜு தன்னைக் கட்டுப்படுத்தி, அமைதி காத்தாள்.

ஆனால் வீட்டிற்கு வந்த சுஷ்மியோ, மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு, எதிர் வீட்டையே வேடிக்கைப் பார்த்தாள். சிறிது நேரம் அமர்ந்து பார்ப்பாள், சில நேரம் பூட்டிய கம்பி கதவில் நின்று பார்ப்பாள். லக்ஷ்மியம்மா தான், அவளைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைத்தார். பின் தூங்கி எழுந்தும், இதே கதை நடக்க... சஜுவின் வீட்டிலும், எல்லோரும் நிச்சயதார்த்த விழாவிற்கு ஒவ்வொருவராய் கிளம்பி கொண்டிருந்தனர்.

அப்போது, அக்ஷயும் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வர, எதற்கோ வெளியே வந்த முரளி, அவனைக் கண்டு, "வந்துட்டீங்களா அக்ஷய்... பத்து நிமிஷத்துல இப்பவே கிளம்பி, எங்க கூடவே வந்திடுறீங்களா தம்பி" எனக் கேட்டார்.

ஆனால் அக்ஷயோ, "இருக்கட்டும் சார், நீங்க போங்க முத... நான் கிளம்பி பின்னாடி வரேன்" என்று பதில் சொல்ல, அவரும் "சரி, அக்ஷய்... நீங்க பாட்டுக்கு வீட்லயே இருந்திறாதீங்க... நிச்சயத்திற்கு வந்திருங்க... அங்கயே சாப்பிட்டுக்கலாம்" எனக் கூறி, தன் பணியைச் செய்யச் சென்றார்.

தன் வீட்டிற்குள் நுழைந்த அக்ஷயோ, "சுஷு கண்ணா...” என அழைத்தான், ஆனால் அவன் அழைத்தும், அவனைப் பாராமல், அவன் உள்ளே வந்ததால் திறந்த வாசலில் நின்று, எதிர் வீட்டையே, ஏக்கத்தோடுப் பார்த்தது அந்தச் சின்னச் சிட்டு.

அக்ஷய் "இன்று என்ன கலவரம் ஆகப்போகிறதோ?" என நிதர்சனத்தை எண்ணி, குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு, பேச்சு கொடுத்து, திசை திருப்பி, அவளுக்குப் பயந்தே அவள் அறியாமல் கதவை தாளிட்டான். ஆனால், அவன் குளிக்கச் சென்ற இடைவெளியில், குழந்தை மீண்டும் கதவு அருகே சென்று, வேடிக்கைப் பார்க்க தொடங்கியது.

சில நிமிடத்தில் குழந்தையின் கண்கள் விரிய, "சசு...” என மெதுவாய் அழைத்தது. ஆம், சஜு பட்டுப்புடவை உடுத்தி, நகைகள் அணிந்து, நிச்சய விழாவிற்கு, தோழிகளுடன் அழைத்துச் செல்லப்படுகிறாள்.

முதல் நாள் பார்த்தது போலவே, சுஷ்மி கதவின் மேல் ஏறி நிற்க, அதைக் கண்ட சஜுவின் மனம் கனக்க, அவளின் பின்னே, வந்த கால்களை நிமிர்ந்து பார்த்தாள். அப்போது தான் அக்ஷயும் குளித்து, இரவு உடை உடுத்தி வெளியே வந்தவன், சஜுவைக் கண்டான்.

வழக்கம் போல் அவன் அவளை வெறிக்க, ஆனால் இந்த முறை, அவனின் பார்வையில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள் அவள்.

ஆம், அவன் பார்வை "எல்லாம் உன்னால் தான்" என்று, அன்று ஆயிரம் ரூபாய் கேட்டு, சுஷ்மி அழுதப் போது சொன்னதே... அதே போன்றே, இன்றும் அவளைக் குற்றம் சுமத்தியது. ஆனால், "சசு...” என்று மீண்டும் அழைத்த குழந்தையின் குரலில், இருவரும் கலைந்தனர். கீழே செல்லப் போனவள், ஒரு நிமிடம் நின்று, பின் குழந்தையின் அழைப்பில், அவளிடம் சென்றாள்.

அக்ஷயும், கதவைத் திறந்து விட, குழந்தையிடம் குனிந்தவள், அவளின் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டவள், "சமத்தா... இருக்கணும், என்னடா குட்டி... நான் உன்ட்ட போன்ல பேசுறேன். நல்லப் பிள்ளையா ஸ்கூல் போய், நல்லா படிக்கணும்...” என்று தான் சுஷ்மியிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒன்று மனதை அழுத்த, எதுவும் பேசாமல், குழந்தையை இறுக அணைத்தாள்.

அதற்குள் கீழே, படிகளில் முன்னே இறங்கியிருந்த சுந்தரி, இவர்களைக் காணாது, "என்னமா பண்றீங்க?" எனக் குரல் தர, அதை அங்கிருந்த மற்ற பெண்கள், "சஜ்னா நேரமாச்சு...” என எதிரொலிக்க, குழந்தையிடம் முத்தத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுடன் கிளம்பினாள்.

குழந்தையின் பின்னேயே நின்ற அக்ஷய், சஜு அவளை விடவும், உடனே தூக்கி கொண்டான். அன்று போல், இவள் பின்னேயே ஓடி விட்டால், என்ன செய்வது என்ற பயம் தான் காரணம். மாடிப்படிகளில் இறங்கிய சஜு, கண்ணில் இருந்து மறையும் வரை, தன் கரத்தை ஆட்டி டாட்டா காண்பித்தது அந்தத் தளிர்.

அன்று கடைக்குச் செல்ல, சில மணி நேரங்களுக்குக் கூடப் பிரிந்து இருக்க முடியாமல், அழுதக் குழந்தையும் இன்று அமைதியாய் இருக்க... சஜ்னாவும் அன்று அழைத்துக் கொண்டு சென்றவள், இன்று சுஷ்மியை விட்டு செல்கிறாள்.

சஜ்னா மறைந்ததும், உள்ளே வந்த அக்ஷய், சுஷ்மியை இறக்கி விட்டு, கதவை சாற்றி விட்டுத் திரும்ப, குழந்தையைக் காணவில்லை. அக்ஷயோ "சுஷ்மி... எங்க இருக்க?" என வினவ, அவளோ "இம்...” என முனங்கலாய் பதில் தந்தாள். லக்ஷ்மியம்மாவின் அறையிலிருந்து தான் பதில் வந்தது.

ஆம், அவர் அறையில் உள்ள பால்கனியில் தான், அப்பார்ட்மென்ட்டின் கீழ் தளம் தெரியும். அதை அறிந்து வைத்திருந்தக் குழந்தை, அங்குச் சென்றாள். ஆனால் சுற்று சுவர், அவள் உயரத்திற்குப் பெரிதாக இருக்க... அங்கிருந்த... தன் சுஸ்பாட்டி உபயோகிக்கும்... சிறிய பிளாஸ்டிக் ஸ்டூலை... நகர்த்தி... அதில் ஏறிக் கொண்டிருக்க... அக்ஷய் வந்து சேர்ந்திருந்தான்.

"பார்த்து சுஷ்மி...” என அறிவுறுத்தி விட்டு, அவனும் அவள் அருகே நிற்க, கீழே பார்த்தக் குழந்தை, அங்குச் சஜ்னா நடப்பது தெரிய, அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே நடந்து சென்ற சஜுவுக்கோ, ஏதோ உள்ளுணர்வு உந்த... மேலே நிமிர்ந்து பார்த்தாள்.

தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மி கண்ணில் பட... தான் மணப்பெண் என்பதெல்லாம் மறந்து போக... அவள் அருகே தான் அக்ஷய் நின்று தன்னைப் பார்க்கிறான் என்பதும், அவள் கண்ணின் காட்சியில் வராமல் போக... சுஷ்மியின் சுணங்கிய சோக முகம் மட்டும்... அவளை ஆக்கிரமிக்க... அவளை நோக்கி, கையாட்டினாள். வாசல் கதவு வரை, திரும்பி பார்த்துக் கொண்டே, கையாட்டி சென்றாள்.

அக்ஷயும் அமைதியாய், சிலையாய் நின்றிருந்தான்.

ஆனால் சஜு சென்றதும், விழி மலர்த்தியவன், குழந்தையைப் பார்த்தான். சுஷ்மியோ, சஜு காரில் ஏறி சென்ற பின்னும், அந்த வரண்டாவின் சுற்றுச் சுவரில், முகத்தைச் சாய்த்து, கை ஆட்டிக் கொண்டே இருந்தாள்.

அதைக் காணப் பொறுக்காத அக்ஷயோ, சுஷ்மி அருகே முட்டியிட்டு, அவள் தலையை வருடி, "சுஷ்மி... வா டா... அவ போயிட்டா... உன்ன விட்டிட்டு போயிட்டா... இனி வரமாட்டா... வா...” எனத் தனக்கும் சேர்த்து தான், சொல்லிக் கொண்டு அழைத்தானோ? அவன் குரலும் லேசாய் கமரியதோ?

ஆனால் அந்தத் தளிரோ அசையாமல் இருக்க, குழந்தையை அணைத்துக் கொண்ட அக்ஷய், சஜு முத்தம் வைத்த குழந்தையின் கன்னத்தில், அவனும் மாறி மாறி முத்தமிட்டு, இறுக அணைத்து, சுஷ்மியை ஆறுதல் படுத்தினானா? அல்லது அவன் ஆறுதல் கொண்டானோ?... நிச்சய விழாவிற்குச் செல்லாமல், வீட்டிலேயே லக்ஷ்மியம்மா செய்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு, இருவரும் உறங்கச் சென்றனர்.

அக்ஷய், தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு படுத்த குழந்தையை, ஒரு கையால் அணைத்துக் கொண்டு, மற்றொரு கையை நெற்றியில் வைத்து, எதையோ சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தான். சில மணி துளிகள் சென்றிருக்க, யாரோ நெற்றியில் வைத்திருந்த தன் கையின் உள்ளங்கையைச் சுரண்ட... திரும்பினான். சுஷ்மி தான், அவனை அழைத்துப் பார்த்து, அவன் காதில் அது ஏறாமல் இருக்க, அடுத்த முயற்சியாய் அவன் கையில் இருந்து நழுவி, அவன் கையைச் சுரண்டினாள்.

"குழந்தை தன் அணைப்பில் இருந்து, வெளிவந்தது கூடத் தெரியாமல் சிந்தித்திருக்கிறேன்... சே... என்ன எண்ணம் இது" எனத் தன்னை நொந்தவன், தன் அருகே மண்டியிட்டிருந்த குழந்தையிடம் "என்ன டா குட்டிமா?" என வினவினான்.

"சுஸ்பா... சசு... இங்க னோ... ப்பா?" எனச் சஜு இங்கே வரமாட்டாளா என்ற அர்த்தத்தில் கேட்க, அவளைத் தூக்கி படுத்திருந்த தன் வயிற்றின் மீது அமர வைத்து, "ஆமா டா... இங்க வரமாட்டா... அவளுக்குக் கல்யாணமாகிடும்... அன்னிக்கு வந்தார்ல... உனக்குப் பொம்ம தந்தார்ல... அந்த அங்கிள் தான் கட்டிக்கப் போறார். அதுனால அந்த அங்கிள் வீட்டுக்கு போய்டுவா" என விரிவாய், குழந்தைக்குப் புரியுமாறு செய்கை செய்து சொன்னான்.

"அப்பின்னா... பொம்ம அன்கிள் ட்ட... பூலாமா...” என எப்படியாவது சஜுவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினாள்.”இம்ஹும்... அப்படில்லாம் போ முடியாது" என மகளின் வேதனையைக் காண முடியாமல், அவளைத் தன் நெஞ்சோடு அணைத்து சொல்ல, "அப்பின்னா... சுஸ்பா... சசுவ... கூட்டிப்பா...” எனச் சிணுங்கினாள்.

"அப்படில்லாம் பண்ண முடியாது டா... அங்கிள் பாவம் இல்லையா?" எனக் கேட்டான். ஆனால் அவளோ விடாமல், "இம்ஹும்... சுஸ்பாப்பா... டா... பாபம்...” எனச் சொன்னாள்.

"உனக்கு நான் இருக்கேன்ல, அப்போ உனக்குச் சுஸ்பா வேணாமா...?" எனக் கேட்டான். அவளோ நிமிர்ந்து, "சுஸ்பா... ம்ம்... சசு... ம்ம்...” என அவனும் வேண்டும், சஜுவும் வேண்டும் என வலியுறுத்தினாள். அவனும் ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தான். ஆனால், அவன் சொன்ன எல்லாவற்றையும், கூட்டிப் பார்த்து, தன் மூளைக்கு எட்டியதை தன் தந்தையிடம் கேட்டே விட்டாள்.”அப்பின்னா... சுஸ்பா கட்டினா... சசு... இயுக்மா?"

ஆம், எப்படிச் சொன்னாலும், விஜய் அங்கிள் சஜுவை கட்டுவதால் தான், அவள் அவருடன் போகிறாள் என அவன் சொன்னதைப் புரிந்து தான், இவ்வாறு கேட்டாள். குழந்தையின் கேள்வியில் அதிர்ந்தவனை, வீட்டின் அழைப்பு மணி கலைத்தது.

மணியைப் பார்த்தவன், அது நடுஜாமத்தை எட்டிக் கொண்டிருக்க...”யார் இந்த நேரத்தில்... ஒரு வேளை, கல்யாணத்திற்கு முடிந்தால் வருகிறேன் என்று சொன்ன அன்னை தந்தையோ" என எண்ணமிட்டவாறே சென்று, மரக்கதவை திறந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 17

என்னுள் மலராதவள் தான் எனினும்

என்னுள்ளத்திலே மலர்ந்தாள்...

என் உதிரத்திலே உதிக்காதவள் தான் எனினும்

என் உதிரத்தின் அணுக்களானாள் ...

என்னுள்ளே கருவாகாதவள் தான் எனினும்

என் வாழ்க்கையை உருவாக்கினாள் ...

என் இருட்டறையில் இருக்காதவள் தான் எனினும்

என் விடியலைக் காட்டினாள்…

சஜ்னா தன்னை விட்டுப் போகிறாள் எனத் தெரிந்தும், அழுது, கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து அவளைத் தடுத்து நிறுத்தவில்லை சுஷ்மி. ஏனென்றால் தடுத்தாலும், அவள் நிற்கமாட்டாள் எனத் தெரிந்து தான், சுஷ்மி அமைதியாய் வேடிக்கைப் பார்த்தாளோ?

ஆனாலும், தன் சுஸ்பா தனக்காக எதுவும், செய்வார் என்ற நம்பிக்கையில் தான், குழந்தை தன் தந்தையிடம் சஜ்னாவைக் கேட்டு, அவளை எப்படியாவது அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. அதே சமயம், அழைப்பு மணியும் அழைக்க, யாரென்ற ஐயத்தோடு மரக்கதவைத் திறந்தான் அக்ஷய்...

குழந்தைக் கேட்ட கேள்வியிலேயே அதிர்ந்து, அதில் இருந்து வெளி வருவதற்குள், கதவைத் திறந்தவன், மேலும் அதிர... அவன் பின்னேயே, அந்த இரவு நேரத்திலும், வால் பிடித்துக் கொண்டு வந்த சுஷ்மி, கண்கள் விரிய, “சசு... உஉ...” எனத் தன் மொத்த சந்தோஷத்தையும் அந்த அழைப்பில் வைத்து, குதுகலமாய்க் கூவி, தன் தந்தை இரும்புக் கதவைத் திறப்பதற்குள், அதில் ஏறி, இடக்கையால் கம்பியை இறுக பிடித்துக் கொண்டு, வலக்கையை, கம்பிக் கதவின் இடைவெளியில் நீட்டினாள். ஆம், சஜு தான்... சஜ்னாவே தான் வந்திருந்தாள்.

அந்த இளந்தளிரின் சந்தோசத்தைக் கண்ட சஜ்னா அப்படியே மடிந்து, முட்டியிட்டு, நீட்டிய அந்தப் பிஞ்சுக் கையை, தன் கரத்தால் இறுகப் பற்றி, முத்தமிட்டு தன் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கண்ணீர் வடித்தாள். சஜு தன்னைப் பிடித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையிலா? அல்லது அவளைக் கண்ட குதுகாலத்திலா? தெரியவில்லை, குழந்தை இடக்கையையும் நீட்டி, சஜுவின் கன்னத்தைப் பற்றி, “சசு... உ... உ... சசு...” என அகமகிழ்ந்தாள் குழந்தை.

சுஷ்மியின் அழைப்பில் சிலையாய் இருந்த அக்ஷய் கலைந்தான். முதலில், அவனுக்கு அதிர்ச்சி தான், ஆனால் தன் குழந்தை, அவளைக் கண்ட சந்தோஷத்தில், அதன் செய்கையைக் கண்டவன், தானும் லயித்து, அவர்கள் இருவரின் பாசப்பிணைப்பைக், கண்கள் கலங்க கண்டான். பின் சுஷ்மியின் அழைப்புக் குரலில் கலைந்த அக்ஷய்க்கு, முதலில் சஜ்னா தான் கண்ணில் பட்டாள்.

கதவைத் திறப்பதற்கு முன், வெளிவாசலில் போடப்பட்ட மின்விளக்கின் ஒளியினால், அவள் அணிந்திருந்த பட்டுச்சேலையும், கழுத்தில் காதில் மின்னிய நகையும், நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்த... “நட்ட நாடு ராத்திரியில்... தனியாய்... இத்தனை நகையோடுக்... கல்யாண பெண்ணானவள்... இப்படியா வருவாள்” என்று அவளை எண்ணி பயந்தவன், “ஏன் தான் இப்படிக் கிறுக்குத்தனம் செய்கிறாளோ?” என எரிச்சல் அடைந்து, அதே கடுப்போடு “சுஷ்மி... கீழ இறங்கு” என்று குழந்தையை அதட்டினான்.

ஆனால், அவள் காதில் மட்டுமல்ல, சஜுவின் காதுகளிலும் ஏறினால் அல்லவா? இருவரும் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தனர். அதனால் அக்ஷயே, சுஷ்மியின் கைகளை விலக்கி, அவளைத் தூக்கி பிடித்து, கீழே இறக்கி, கம்பிக் கதவை திறந்தான்.

உடனே, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, விருட்டென்று சுஷ்மி, சஜுவிடம் ஓடி, மண்டியிட்டவளின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள். சஜுவும் அவளை அணைத்துக் கொண்டு முத்த மாரி பொழிய... குழந்தையோ “சசு... டாடா னோ... இம்ம்...” எனத் தன்னை விட்டுப் போகாதே என மழலையில் சொன்னாள்.

சஜ்னாவும், பதிலுக்கு, “சரியென” தலையாட்ட, அதற்கு மேல், பொறுக்காதவன் போல், “என்னங்க... பண்ணிட்டு இருக்கீங்க?... நீங்க செய்யுறதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றீங்களா?” என அங்கு... திருமணம் நடக்கும் இடத்தில், இவளைக் காணாமல் என்ன கலவரம் ஆயிற்றோ? என்ற பதைப்போடு தான் கேட்டான்.

ஆனால் சஜ்னாவோ “தெரியும்” என்பது போல், மீண்டும் தலையாட்டிக் கொண்டே, குழந்தையை அணைத்து, தூக்கிக் கொண்டு எழுந்தாள். பதற்றப்பட வேண்டியவளோ, பதறாமல், நிதானமாய், தெளிவாய் இருக்க, அக்ஷயோ மீண்டும் பதறி, “ஏங்க... நாளைக்கு உங்களுக்குக் கல்யாணம்... இப்ப... இந்த... நேரத்துல... இதெல்லாம் தப்பு சஜு” எனப் பதற்றத்தோடு ஆரம்பித்து, தட்டு தடுமாறி, ஒரு வழியாய் அவளின் தப்பை உணர்த்தினான்.

ஆம், தப்பு தான், தெரியாமல் செய்தால் தான் தவறு, ஆனால் இவள் எல்லாம் தெரிந்து, தெளிவாய் தானே செய்திருக்கிறாள்.

ஆனால் சஜுவோ தெளிவாய், “உங்க பொண்ணையும், உங்களையும், என் மனசுல சுமந்திட்டு, நாளைக்கு நான், அத்தான கல்யாணம் பண்ணா தான் தப்பு... இது தப்பில்ல...” என்று சுஷ்மியைக் கையில் ஏந்தியப்படிச் சொன்னாள்.

இருவரும் நெருங்கி பேசியதுமில்லை, ஏன் வித்தியாசமாய்ப் பார்த்ததுமில்லை, ஆனால் காதல் மட்டும் மலர்ந்து விட்டதோ? அவனுக்கு எப்படியோ?... ஆனால், சஜுவுக்கோ, அவன் மேல்... குழந்தையை அவன் அன்பாய் பார்த்துக் கொள்வதில் இருந்து... ஏன் குழந்தையைக் கையில் ஏந்தினால் கூட, அவனிடம் ஒரு ஈர்ப்பு உருவாகியது.

மேலும் பெண்களைக் கண்டால், அதிகம் பேசாமல், வழியாமல் ஒதுங்கும் நாகரீகம், என இப்படிச் சொல்லிக் கொண்டே போக, அவளுக்கு ஆயிரம் இருந்தது, அதனால் தானாய், அவன் மீது மதிப்பும், காதலும் கூடியது. ஆனால், எல்லாவற்றையும் இப்போது தான், ஒரு மூன்று மணிநேரத்திற்கு முன், விஜயோடு ஜோடி சேர்ந்து நிற்கும் போது தான், உணர்ந்தாள்.

தன்னால், கண்டிப்பாய் விஜய் அத்தானோடு வாழ முடியாது, ஏனெனில் அவள் மனம், அக்ஷய் மற்றும் சுஷ்மியோடு, வாழ தொடங்கி நிறைய நாட்கள் ஆயிற்று. அதன் வெளிப்பாடு தான், அவளுக்கு வந்த அந்தக் கனவு... ஆம், இந்த ஒரு வாரத்தில், மேலும் இரண்டு மூன்று முறை, அச்சுப் பிசகாமல் அப்படியே வந்து போயிற்று, அந்தக் கனவு. ஏற்கனவே, அவளின் ஆழ்மனம், உணர்ந்திருந்தது தான்... ஆனால் வெளிப்பட்டது என்னவோ இன்று தான்.

மேலும், “சுஷ்மியை விட்டு... அவள் இல்லாத ஒரு நாளை கூட, என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லையே, இதில் அவள் இல்லாத ஒரு வாழ்க்கையா? முடியவே முடியாது” என்று தாய்மை உணர்வும் சேர்ந்து பொங்கவும் தான், தைரியம் கொண்டு கிளம்பி, வந்து விட்டாள்.

குழந்தையைப் பெற்றால் தான் தாய்மை உணர்வு வரும் என்பதில்லை, எந்தக் குழந்தையும், அன்புக்கு ஏங்கும் போது, எந்த ஒரு பெண்ணின் இதயத்திலும் தாய்மை உணர்வு மேலோங்க தான் செய்யும். ஆனால் இங்கு அது வேறு மாதிரி நிகழ்ந்து விட்டது. ஆம், தாயை எண்ணி சுஷ்மி ஏங்கியதும் இல்லை, ஏன் தாய் என்று ஒருத்தி இருப்பாள் என்பது கூட அவளுக்குத் தெரியாது, அப்படி வளர்த்திருந்தான் அக்ஷய்.

ஆனால் சஜுவோ, தாயை உணர்ந்தவள், தன் வாழ்க்கையில் தாய் என்பவளின் பங்களிப்பை... அதன் முக்கியத்துவத்தை அறிந்தவள், அதனாலே தாயில்லாத சுஷ்மிக்கு, ஒரு தாயாய் அவளை அறியாமலே மாறத் தொடங்கி விட்டாள். அன்பு காட்டி, அரவணைத்துக் கொண்டால், எந்தக் குழந்தை தான் மயங்காது?

சுஷ்மி மட்டும், விதிவிலக்கா என்ன?

அவளும் மயங்கினாள், சஜுவின் அன்புக்கு அடிப்பணிந்தாள், அவளின் அரவணைப்புக்குள், இதமாய்ப் புகுந்து கொண்டாள், அவளின் செல்ல கொஞ்சல்களில், தான் கொண்டாடப்படுவதை எண்ணி மகிழ்ந்தாள். இப்படியாகச் சுஷ்மிக்கு, சஜு இன்றியமையாதவளாகிப் போனாள்.

“புரிஞ்சு தான் பேசுறீங்களா... இது உங்க வாழ்க்கைப் பிரச்சனை... விளையாடாதீங்க... ப்ளீஸ் போய்டுங்க” என்றான் அக்ஷய்.

இத்தனை நேரம், அவள் வரமாட்டாள் என்று நம்பி, அவளை எண்ணி, அவளின் பிரிவை எண்ணி, காற்றில் ஆடும் காகிதம் போல் அல்லாடிய மனது, அவளைக் கண்டதும், ஆர்பரித்துக் கொட்டும் அருவி நீர் போல், “ஹோ”வென்று மனது திடீர் மகிழ்ச்சியில் ஸ்தம்பித்தாலும், அவளின் நிலை... அவன் மூளையில், எச்சரிக்கை மணி அடித்தது.

ஆம், அக்ஷய் என்றுமே அல்ல... இந்த இடைப்பட்ட காலத்தில் தான்... மனதை விட மூளைக்குக் கட்டுப்பட்டே பழக, தன்னை மாற்றிக் கொண்டவன், அந்தப் பழக்கத்தில் அவன், அவளை இங்கிருந்து அனுப்ப முயன்றான்.

ஆனால், அவளோ “போக மாட்டேன்” என்பது போல் தலையை இடவலமாய் ஆட்டி, கையிலிருந்த சுஷ்மியின் முதுகில் கை வைத்து, இறுக பற்றிக் கொண்டு, மறுத்தாள்.”தயவு செய்து போய்டுங்க... சுஷு இங்க வா...” என மீண்டும் அவளிடம் வலியுறுத்தி, குழந்தையை அழைத்தான். ஆனால், அவளைப் போலவே குழந்தையும், அவனிடம் வர மறுத்து, சஜுவை மேலும் இறுக கட்டிக் கொண்டது.

“இப்ப... வரியா... இல்லையா சுஷு?” எனத் தன் மகளை ஆழமாய் அழைத்தான். அவளோ “சுஸ்பா... னோ...” எனச் சிணுங்க தொடங்கினாள். மேலும், சஜுவோ “ஏன் அக்ஷய்... நான் சொல்றத நீங்க புரிஞ்சுக்கவே இல்லையா?... நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்குச் சுஷ்மி வேணும்... ப்ளீஸ்... எங்களப் பிரிச்சிராதீங்க” எனக் கண்ணில் நீரோடு மன்றாடினாள்.

ஆனால் அக்ஷயோ... இதுவரை அமைதியாய் இருந்தவன்... மென்மையாய் நடந்து கொண்டவன், ... சஜு அருகே சென்று, தன் குழந்தையைப் பறித்தான்.

ஆனால் குழந்தையோ, அவனிடம் வர மறுத்து, அழுது, மேலும் சஜுவை இறுக பற்றிக் கொண்டது... மேலும் அக்ஷயின் கைகள் வலுவுடன் சுஷ்மியை இழுக்க, குழந்தையின் போராட்டத்தை, அழுகையைக் காண சகிக்காமல், அவள் பிடியைத் தளர்த்தினாள். ஒரு வேளை, அவள் காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தால், அவன் இளகியிருப்பானோ?

கைகளைத் தளர்த்திய சஜுவிடம் இருந்து, குழந்தையைத் தூக்குவது சுலபமாக... ஆனால் குழந்தையோ சஜுவின் கழுத்தை, முடியை இறுக பற்றிக் கொள்ள... சஜு அசையாது கண்ணீர் மல்க நின்றாள். அக்ஷய் ஒரு கையில் குழந்தையோடும், மறுகையால் குழந்தையின் கையை அவளிடம் இருந்து விடுவிக்க... மீண்டும் சுஷ்மி மற்றொரு கையால், சஜுவின் கழுத்து சங்கலியை இறுக பற்றிக் கொண்டாள்.

மாத்திரைப் போட்டு, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த லக்ஷ்மியம்மா, அவர்களின் பேச்சு வார்த்தையின் போது விழிக்காதவர், குழந்தையின் அழுகை சத்தத்தோடு, நடந்த களோபரத்தில் விழித்து, வெளியே வந்தவரின் கண்களில்... அக்ஷய் அழும் குழந்தையை வலுக்கட்டாயமாய், தூக்கி இழுக்க, அதனால் சஜு கழுத்தில் இருந்த ஆரம் அறுந்து கீழே விழ... அக்ஷய் என்றுமே செய்யாத காரியத்தை, அப்போது செய்ய முயல...

ஓங்கிய அவனின் கையை... குழந்தயை அடிக்கப் போகிறான் என்று உணர்ந்த சஜு, தடுக்கப் போக... சுஷ்மியோ சஜுவையே பார்த்து அழ... லக்ஷ்மியம்மா “தம்பி... என்னப்பா இது?” என அதிர்ந்த குரலில் கேட்க, சுஷ்மியைத் தவிர, மற்ற இருவரின் கவனமும் லக்ஷ்மியம்மா மீது திரும்பியது.

மீண்டும், லக்ஷ்மியம்மா “சஜு... என்னமா... இந்த நேரத்துல... இங்க என்ன பண்ணுற?” என்று பதற்றத்தோடு சொல்லிக் கொண்டே, அவர்கள் அருகில் சென்றார்.

சஜ்னாவோ, அவரைக் கண்டதும், மேலும் பொங்கிய கண்ணீரோடு, அவரை அணைத்துக் கொண்டாள். லக்ஷ்மியம்மாவுக்கும் ஏதோ புரிந்தது போல் இருக்க... அதனால், அவர் தன் தோள் மீது சாய்ந்து, அழுபவளின் முதுகை தடவி, ஆசுவாசப்படுத்தினார்.

அவரின் ஆறுதலை உணர்ந்த சஜு “பாட்டிமா... எனக்கு... எனக்கு... சுஷ்மி வேணும்... அவர... அவர... நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்... சுஷ்மிக்கு நல்ல அம்மாவ... நான்... நான் பார்த்துப்பேன் பாட்டிமா. என்ன... என்ன... நம்புங்க பாட்டிமா... ப்ளீஸ்... நீங்களாவது... அவர்ட்ட... சொல்லுங்க” எனக் கண்ணில் கண்ணீரோடு திக்கி, திணறிச் சொன்னாள்.

அவருக்கு, அவளின் நிலை புரிந்தாலும், இப்படி ஒரே இரவில், அவசரவசரமாய் வந்து, அக்ஷயை மணந்து கொள்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொல்பவளைப் பார்க்க, இரக்கம் சுரந்ததே தவிர, அவர் அவள் பக்கம் பேசவில்லை.

ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், அதை இப்படி ஒரே நாளில்... அல்ல அல்ல... ஒரே இரவில்... சில நிமிடங்களில் தீர்மானிப்பது தவறு என்று அவரின் அனுபவம் உணர்த்த, அமைதி காத்தார்.

அதைப் பயன்படுத்திக் கொண்ட அக்ஷய் “லக்ஷ்மிமா... அவள முத... வெளியப் போ சொல்லுங்க...” என அழுத்தமாய்ச் சொன்னான்.

அவரோ “தம்பி... நான் சொ...” என அவர் முடிக்கக் கூட இல்லை, “நீங்க எதுவும் சொல்ல வேணாம் லக்ஷ்மிமா... அவளா... வெளியப் போறாளா? இல்ல நான் வெளியப் போக வைக்கவான்னு கேளுங்க...” என மீண்டும் ஆணித்தரமாய்ச் சொல்ல, இந்த முறை சஜு நிமிர்ந்து, “உங்களுக்கு அந்தச் சிரமம் வேணாம்... நானே போறேன்... ஆனா ஒன்னு... இந்த வீட்ட விட்டு தான் போவேனே தவிர, கல்யாண மண்டபத்துக்கு இல்ல...” எனச் சொல்லி விட்டு, அவளே கண்களைத் துடைத்துக் கொண்டு, விறு விறுவென்று வெளியேறி, அவன் வீட்டருகே செல்லும் மாடிப்படியில் அமர்ந்துக் கொண்டாள்.

அவள் சென்றதும், கையில் குழந்தையோடு கதவைச் சாற்ற வந்தவனிடம், படியில் அமர்ந்த நிலையிலேயே, “ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க... உங்க கையால தாலி கட்டுற வரைக்கும், நான் இங்க தான் இருப்பேன். இந்த இடத்த விட்டுப் போகவே மாட்டேன்...” என வெளியே தெறித்து விடுவது போல், கண்களை விரித்து, அழுத்த திருத்தமாய்ச் சொன்னாள்.

வெளியே திடமாய்த் தெரிவது போல் இருந்தாலும், மனதின் உள்ளே அக்ஷய் அயர்ந்து விட்டான்.

“எவ்வளவு தெளிவாய், திண்ணக்கமாய்ச் சொல்கிறாள். நேற்று வரை... குழந்தையோடு குழந்தையாக விளையாடியவளா இவள்?” என அவனே அதிசயிக்கும் அளவு, சஜுவின் முகத்தில் அப்பட்டமாய் உறுதி தெரிந்தது.

மேலும், தந்தையின் தோளில் இருந்து, சஜுவைக் கண்ட சுஷ்மி, “சசு... உ... உ...” என இந்த முறை, இரு கையாலும் கம்பிக் கதவை பற்றிக் கொண்டாள். அதில் கலைந்த அக்ஷய், குழந்தையின் கையை விடுவிக்கப் போராடி, களைத்து “அப்போ... உனக்கு... இந்தச் சுஸ்பா... வேணாமா?” எனக் கேட்க, குழந்தையோ “வேணாம்” என்பது போல் தலையாட்டி, கம்பி கதவோடு ஒன்றிக் கொண்டது.

உடனே அக்ஷய், சுஷ்மியை கீழே இறக்கி விட்டு விட்டு, தன் அறைக்குச் சென்று விட்டான்.

லக்ஷ்மியம்மாவோ, தன் வயதின் முதிர்ச்சியாலும், ஆயிரம் தான் அக்ஷய், தன்னைத் தாய் போல் நடத்தினாலும், அந்த வீட்டில் தன் நிலை உணர்ந்து, நடந்த அனைத்துக்கும் பார்வையாளராய் மட்டுமே இருந்தார்.

ஆனால், சுஷ்மி கம்பிக் கதவில் ஏறி நிற்பதை உணர்ந்து, இந்த இரவு நேரத்தில், தூக்கச் சடவில், குழந்தை விழுந்து வைக்கப் போகிறாள் என்று எண்ணி, அவளை அழைத்துப் பார்த்தார்.

அவளோ, நான் அசைவேனா என்பது போல், சஜுவைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவர் உடனே முக்காலி போன்று, ஒரு சின்னப் பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து வந்து, கதவு அருகே போட்டு, “சுஷ்மி இதுல உக்கார்ந்து... பாரு டா... இல்லாட்டி கீழ விழுந்திருவ” எனச் சொல்ல, அதுவரை அழுகையை நிறுத்தி, படிகளில் சிலையாய் அமர்ந்திருந்த சஜுவைப் பார்த்தப்படி இருந்தவள், லக்ஷ்மியம்மாவின் விடாத அழைப்பில், மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

அவரோ அவள் தலையைத் தன் வயிற்றோடு அணைத்து, “உன் சஜு... எங்கேயும் போக மாட்டா டா... நீ வா... இங்க உட்கார்ந்து பாரு” என மீண்டும் ஸ்டூலைத் தட்டி காண்பிக்க, அவளும் அதில் அமர்ந்து சஜுவைப் பார்த்தாள்.

இவ்வளவுக்கும், சஜு அசையவில்லை, அசரமால் அப்படியே சலனமற்று அமர்ந்திருந்தாள். லக்ஷ்மியம்மாவும், குழந்தையின் அருகிலேயே அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டார்.

ஒரு பெரிய சூறாவளியே வந்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு. ஒரு பக்கம் சுஷ்மியின் பிடிவாதம், அவள் அருகே பாதுகாப்பாய் லக்ஷ்மியம்மா, இன்னொரு பக்கம், அறைக்குள் கோபமாய்(?) அடைந்து கிடக்கும் அக்ஷய். மேலும், இவர்களோடு வரவேற்பறையில் அனாதையாய் கிடந்த சஜுவின் அறுந்து போன தங்க ஆரம்.

ஒரு மணிநேரம் கடந்து இருந்தது, சுஷ்மியோ, இத்தனை அலைக்கழிப்பில் அயர்ந்து, கண்கள் சொருக, தன்னை மறந்து தானாய் கதவில் தலை சாய்த்து, உறங்கி விட்டிருந்தாள். வெளியே சஜுவோ, கொசுக் கடியிலும், லேசாக வீசிய வாடைக் காற்றாலும், தன் முந்தானையைத் தோளோடு போர்த்தி, கால்களைக் குறுக்கி, முட்டியில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள். லக்ஷ்மியம்மாவும், தன்னையறியாமல் தூக்கச் சடவில், தலைச் சாயவும் விழித்து விட்டார்.

விழித்தவர், இருவரின் நிலையையும் பார்த்து, மெல்ல நடந்து அக்ஷையின் அறைக்குச் சென்றார். அங்கோ, அவன் நெற்றியில் கைவைத்து, கண்களை மூடி படுத்திருப்பது போல, விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தான். லக்ஷ்மியம்மா மெல்ல, “தம்பி... தம்பி...” என அழைக்க, அதில் விழிக்கவும், அவனிடம் “பாவம் பா... அந்தப் புள்ள... கொசுக் கடியிலும், குளிரிலும் வெளியவே உட்கார்ந்திருக்கு. ராவாயிடுச்சு... இந்நேரம் பொம்பள பிள்ளைய வெளிய உட்கார வைக்கக் கூடாது பா... எதா இருந்தாலும், காலைல பேசிக்கலாம். அந்தப் புள்ளைய உள்ள கூப்பிடுப்பா...” எனச் சஜு மேல் இரக்கம் கொண்டு, பிள்ளையைப் பெற்ற ஒரு தாயாய் அவனுக்கு எடுத்துக் கூறினார்.

அவனுக்கு என்ன தோன்றியதோ? அமைதியாய் எழுந்து, வெளியே வந்தவன், உறங்கிய சுஷ்மியை தூக்கிக் கொண்டு, லக்ஷ்மியம்மாவிடம் சாவியை எடுத்துக் கொடுத்தான்.

அவர் கதவைத் திறந்து, சஜுவை அழைத்தார்.”சஜு... உள்ள வா மா... எதா இருந்தாலும், காலைல பேசிக்கலாம். இப்படித் தனியா, வெளிய ராத்திரில உட்கார்ந்திருக்கக் கூடாது. உள்ள வா தாயி...” என அழைத்தார்.

அவளும், மறுப்பேச்சின்றி உள்ளே நுழைந்தாலும், கண்கள் சுஷ்மியை தேட, அக்ஷயோ அவளைத் தூக்கிக் கொண்டு, தன்னறைக்குச் சென்று கொண்டு இருந்தான். பின் லக்ஷ்மியம்மா, அவளுக்கு ஒரு போர்வையும், தலையணையும் கொடுத்து, அவள் மறுத்ததையும் பொருட்படுத்தாமல், “சித்த நேரம் படுமா... இல்ல காலைல அசதியா இருக்கும்... தூக்கம் வரலைன்னாலும், கண்ண மூடி படுத்துக்கோ தாயி” என்று அன்பாய் எடுத்துரைத்தார்.

அப்போது சுஷ்மியின் “சசு...” என்ற அழுகுரல் கேட்க, இருவரும், அக்ஷையின் அறையைப் பார்த்தனர். உடனே லக்ஷ்மியம்மா தான் அங்குச் சென்றார், சஜு எதுவும் செய்யாமல் அங்குக் கீழே அமர்ந்த நிலையிலேயே, போகும் பாட்டிமாவையே பார்த்தாள். அங்கு என்ன நடந்ததோ? வரும் போது லக்ஷ்மியம்மாவின் கையில் அழும் சுஷ்மி இருந்தாள். அதைக் கண்டவுடன், அவ்வளவு நேரம் சிலையாய் அமர்ந்திருந்தவள், தன் ஆரத்தை எடுத்து, ஓரமாய் வைத்து விட்டு, போர்வையை விரித்துத் தலையணையைப் போட்டு, சுஷ்மியை வாங்கிச் சமாதானம் செய்து படுக்க வைத்தாள்.

படுத்த குழந்தையோ, சஜுவையும் படுக்கச் சொல்லி, அவள் கழுத்தில் கைப் போட்டு, “சசு... உ... குட்டு...” என மீண்டும் சிணுங்கினாள். இதுவரை தன்னைப் பார்க்காதவள், அப்போது தான் தன்னை ஆராய்ந்தாள், கழுத்தில் தங்க நகைகளுடன் பட்டுச் சேலையில் தான் இருப்பது புரிய... எழுந்தாள். மீண்டும் குழந்தை அழுக, அவளைத் தூக்கி தன் மடியில் கிடத்தி தட்டிக் கொடுத்துக் கொண்டே, தன் நகைகளைக் கழற்றி, தன்னிடுப்பில் சொருகியிருந்த கைக்குட்டையால் மூட்டையாய் கட்டி, தலையணை அருகே வைத்தாள்.

பின் உறங்கிய குழந்தையை, படுக்கையில் கிடத்தி, தானும் அவளுடன் முழங்கையை ஊன்றி பாதிப் படுத்த நிலையில், நெற்றியில் இருந்து கால் வரை, அவளை வருடி, அவள் நெற்றியில் முத்தம் பதித்தாள். அப்போது குழந்தையும், அசைந்து, தூக்கத்தில், அவள் முகத்தைக் கட்டிக் கொள்ள, அந்தப் பிஞ்சு உள்ளங்கையிலும் முத்தமிட்டாள். அதே போல, மற்ற கையையும் பிடித்து, விரிக்க, அதைப் பார்த்த சஜுவுக்குக் கண்ணீரே வந்து விட்டது.

ஆம், இவர்கள் இருவர் இடையே நடந்த போராட்டத்தில், சுஷ்மி, அவளின் ஆரத்தை பிடித்து இழுத்ததினால், குழந்தையின் கையில் ஆரத்தின் அழுத்தம் பட்டுச், சிவந்து கன்றி இருந்தது.

நல்ல வேளை, கீறல் எதுவும் இல்லை, என்று ஆறுதல் பட்டுக் கொண்டே, அந்த விடிவிளக்கின் ஒளியில், அதை ஆராய்ந்து பார்த்தாள். மஞ்சளாய் ஏதோ மருந்து பூசப்பட்டு இருந்தது.

“ஓ... அவர் மருந்து தடவியதால் தான், விழித்து மீண்டும் அழுதிருக்கிறாள் போல” என எண்ணியவள், தனக்காக... இந்தச் சின்னக்... குருத்து... இளங்கன்று... போராடும் போராட்டத்தைக் கண்டு மேலும், குழந்தையின் பக்கம் அவளின் மனம் சாயத் தொடங்கி, நெகிழ... அப்படியே அந்தப் பிஞ்சின் உள்ளங்கையின் மேல் முத்தம் இட்டாள்.

சுஷ்மியை அணைத்துக் கொண்டே, உள்ளே நெகிழ்ந்தாலும், அதோடு சேர்ந்து “என்ன நடந்தாலும் சரி... அக்ஷயை மணந்தே தீருவேன்” என்ற உறுதி அவள் மனதுள் எழுந்தது.

காலை என்றும் போல் அழகாய், சூரியனின் வெட்கச் சிவப்போடு புலர்ந்தது. இரவு நடந்த கலவரத்தால், ஐந்தரைக்கே எழுபவன், சிறிது தாமதமாய் ஆறுக்கு எழ, எப்போதும் தாமதமாய் எழுபவள், தூக்கமே வரமால் புரண்டு புரண்டு, ஒரு வழியாய் விடிந்ததைப் பார்த்து எழுந்தாள்.

எழுந்தவள், “இனி என்ன?” என்ற சிந்தனையோடு, நேரே குளியலறைச் செல்ல, அக்ஷயும் எழுந்தவன், சிந்தனையோடே வழமை போல் குளியலறைக்குச் செல்ல... இருவரும் தங்கள் சிந்தனையில் இருந்ததால், அவர்களுக்குக் குறுக்காய் வந்தவர்களை, இருவருமே பாராமல் மோதப் போக... நொடியில் சுதாரித்து, விலகினான் அக்ஷய்.

விலகியவன், அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் அறைக்குச் சென்று கதவடைத்தான். சஜுவோ “இவன் என்ன... வயதுக்கு வந்த பெண்ணைப் போல், பொசுக் பொசுக்கென்று அறைக்குள் சென்று, கதவைச் சாற்றிக் கொள்கிறான்” என எண்ணியவாறே குளியலறைக்குள் நுழைந்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 18

மனதுக்கும் உணர்வுக்கும்

தடை உத்தரவு போட்ட என்னை

தளர்த்த எண்ணாதே...

பெருங்கடலாய் என்னுள்ளே

பரந்து ஆழ்ந்து இருக்கையில்

நீ திருவேணி *******

நிகழ்த்த வந்தாயோ?

பூட்டப்பட்ட என் வாழ்க்கைப்

பாதைக்கு - மீண்டும் ஒரு திறப்புவிழா

காண விழையாதே

பெண்ணே!

குளியலறை சென்று திரும்பிய போது, வரவேற்பறையில், படுக்கையில் சுஷ்மியை காணாது, அங்கு வந்து கண்களைச் சுழல விட்டாள் சஜ்னா. அக்ஷய் தான், வரவேற்பறையில் உறங்கிய குழந்தையைத் தூக்கி சென்று, தன் அறையில் படுக்க வைத்திருந்தான். அதை, லேசாய்த் திறந்திருந்த அவன் அறைக்கதவின் வழியே கண்டவள், படுக்கையை மடக்கி, மெத்திருக்கையில் வைத்து விட்டு, தன் நகை மூட்டையோடு, சாப்பாட்டு மேஜைக்குச் சென்று அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் பால்காரன் வர, லக்ஷ்மியம்மா அவர் அறையில் இருந்து வருவதாகத் தெரியவில்லை, அக்ஷயும் குளியலறையில் இருக்க, “சரி, நாம் போய் வாங்கலாம்” எனத் தீர்மானித்து, சமையலறைக்குள் சென்று ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சமையலறையின் வாயிலுக்குத் தான் வந்திருப்பாள். உடனே அவளைத் தடுப்பது போல், அக்ஷய் அவள் முன்னே நின்றான்.

நின்றவன், அவளை முறைத்து விட்டு, அவள் கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்காத குறையாய் வாங்கி, “இங்கயே இரு” என அழுத்தமாய்ச் சொல்லி விட்டு, பால் வாங்க சென்றான்.

பால்காரர் இரு வீட்டிற்கும் பால் ஊற்றுபவர், கல்யாண பெண்ணான சஜு இங்கிருப்பதைப் பார்த்தால், என்ன ஆகும்? தவறாக எண்ண மாட்டார்? அதனால், அக்ஷய் அவளை அங்கிருக்கும் படி அறிவுறுத்தி விட்டு, தானே போய்ப் பால் வாங்கி வந்தான். வந்தவனின் கையில், நேற்று படியில் மறந்து விட்டிருந்த அவள் அலைப்பேசி இருந்தது.

பின் லக்ஷ்மியம்மா எழுந்து, சமையலறைக்குச் செல்ல, அவன் குளிக்கச் செல்ல, சுஷ்மி, இரவு விழித்திருந்ததால் இன்னும் உறங்கி கொண்டிருக்க, சஜுவோ தனித்து விடப்பட்ட உணர்வோடு, சாப்பாட்டு மேஜையின் நாற்காலியில் அமர்ந்திருக்க, என விடிந்து ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

அக்ஷய் குளித்து வரவும், சுஷ்மி எழவும் சரியாய் இருக்க, எழுந்தவள், அறைக்குள் தலைத் துவட்டிக் கொண்டிருந்த தந்தையிடம், “சுஸ்பா...” எனத் தூக்கத்தோடு அழைத்தாள். அவனும் “என்ன டா சுஷு கண்ணா?... எந்திரிச்சுடீங்களா?” என்று கேட்டு தூக்க, அவளோ கண்ணைக் கசக்கி கொண்டு “சசு... உ... சுஸ்பா” எனச் சஜுவிடம் அழைத்துச் செல்ல சொன்னாள்.

அதைக் கேட்ட அக்ஷய், முகம் சுருங்க, அவளை அறைக்கு வெளியே இறக்கி விட்டான். குழந்தையோ, இன்னும் முழுதாய் உறக்கம் விடாத நிலையில், கண்ணைக் கசக்கி கொண்டு, “சசு... உ... இம்ஹும்... ஹும்...” எனச் சிணுங்க தொடங்க, சஜு அதைக் கேட்டு திரும்பியவள், அவளருகே சென்று, அறைக்குள் இருந்தவனைக் கண்டு, “தூக்கிட்டு வந்து தந்தா குறைந்துடுவானாக்கும் மஹாராஜா?” என எண்ணி, வாயை ஒரு பக்கமாய் இழுத்து, சுளித்து விட்டு, “சுஸு... எந்திரிச்சிட்டியா டா செல்லம்” எனத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சினாள்.

தெளிந்த சுஷ்மி, சஜுவிடம், முகம் கழுவி, பல் விளக்கிய பின்னும், அவள் இடுப்பிலேயே இருக்க, இதையெல்லாம் டீயைப் பருகிக் கொண்டே வேடிக்கைப் பார்த்தவன், பின் சுஷ்மிக்கு ஹார்லிக்ஸ் கலந்து, ஆற்றி, சிப்பரில் ஊற்றி, அதை அடைத்துக் கொண்டே, “சுஷ்மி... இங்க வா... உனக்குப் பால்” என அழைத்தான்.

ஏனெனில் எப்போதும், காலை எழுந்ததும், சிறிது நேரம், காலை ஹார்லிக்ஸ் குடிக்கும் வரை, தன் தந்தையின் மடியிலே தான் அமர்ந்து இருப்பாள், அதனால் சுஷ்மியை அழைத்தான்.

ஆனால், குழந்தை இறங்கி, அவனிடம் சென்று, சிப்பரை வாங்கிக் கொண்டு, “போ” என்பது போல ரொம்பவும் தலையைச் சிலுப்பாமல், லேசாய் தலைச் சாய்த்து, சஜுவிடம் சென்று, அவள் மடியில் சாய்ந்து அமர்ந்து, சமத்தாய் குடித்தாள்.

சிறிது நேரத்தில், லக்ஷ்மியம்மாவுக்கு, காலை நேர சமையலுக்கு உதவியவனிடம், சுஷ்மி சென்று “சுஸ்பா... இம் இம்...” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு, மூக்கை சுருக்கி, முக்குவது போன்ற பாவத்தில் சொல்லவும், புரிந்தவன் போன்று, குளியலறைக்கு அழைத்துச் சென்றான்.

குழந்தையின் பெட்டிக்கோட்டைத் தூக்கி, அக்ஷய் அதைச் சுருட்ட, குழந்தையும் அதைப் பிடித்துக் கொள்ள, அவளின் காலைக் கடனை முடித்து, சுத்தம் செய்து, குழந்தையைத் தூக்கி வந்தான் அக்ஷய்.

“பல் விளக்குவது, சாப்பிடுவது, தூங்குவது, என எல்லாம் அவளிடம், ஆனால் இதற்கு மட்டும் நானா?” என எண்ணவில்லை அக்ஷய். ஏனெனில், அவன், தன் குழந்தைக்கு ஒரு முழுமையான தந்தையாய், தாயாய், தன்னை மாற்றிக் கொண்டவன் ஆயிற்றே. அதனால், அவன் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை.

இப்படிப்பட்ட தந்தையைப் புரிந்து கொண்டதோ அந்தத் தளிர்? தன் தந்தையின் தோளில் இருந்தவள், அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, தன் பிஞ்சு கரத்தால், அவன் தாடையைத் திருப்பி, இன்னொரு கன்னத்திலும் எட்டி, முத்தம் வைத்தது.

அக்ஷயும், அவளைக் கொஞ்சி இறக்கி விட்டான். பின் சஜு குளிக்கச் செல்ல, லக்ஷ்மியம்மா தன்னிடம் இருந்த ஒரு சேலையையும், அவளுக்குத் தேவையானதைத் தர, குழந்தையிடம் தன் நகை மூட்டையைக் கொடுத்து, “இத அப்பாட்ட கொடுத்து, பத்திரமா வைக்கச் சொல்லிட்டு, வா சுஷ்மி” எனக் கொடுத்து விட்டாள்.

குழந்தையும் சமத்தாய், தன் தந்தையின் அறைக்குச் சென்று, “சுஸ்பா... சசு... டாம்... வப்பி... யாம்” என அழகாய், சரியாய், தன் மொழியில் சொல்ல, அக்ஷய்க்கு கடுப்பாய் வந்தது. இருந்தாலும், குழந்தை முன் காட்டாமல், வாங்கிக் கப்போர்டில், சுஷ்மியின் ஆடைக்கடியில் வைத்தான்.

ஏனெனில் நேற்று, இவர்கள் இருவரின் வாக்கு வாதத்தில், குழந்தை தான் மிரண்டு விட்டது. பாவம் அவளுக்கு எங்கே அவர்களின் சண்டையைப் பற்றிப் புரியும்?

சஜு குளியலறையில் குளித்துக் கொண்டிருக்க, சுஷ்மியோ அதற்கு வெளியே குளியலறை கதவருகே நின்று கொண்டிருந்தாள். நின்றதோடு அல்லாமல், இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, “சசு... இயு... க்கியா... ?” என்று கேள்விக் கேட்டும், “சசு... ப்பாஆஅ...” என்று அனத்தியும் கொண்டிருந்தாள்.

இப்படி மாறி மாறி, அவள் பேசுவதும், அதற்கு உள்ளிருந்து சஜு பதில் சொல்லிக் கொண்டும் இருந்தாள். இதற்காகவே சஜு, வேகவேகமாய்க் குளித்து வெளியே வந்தாள். எங்கே மீண்டும் சஜு தன்னை விட்டு சென்று விடுவாளோ என்று சுஷ்மிக்குப் பயம்.

சஜு உள்ளே குளிக்க, சுஷ்மி வெளியே, அவளுக்குக் காவல் காப்பது போல் நிற்பதைப் பார்த்த அக்ஷய், யோசனையில் ஆழ்ந்தான். பின் காலை உணவை முடித்து, சஜு காணாமல் போனது, இந்நேரம் அனைவருக்கும் தெரிந்து, அவளைத் தேடி, சஜு வீட்டினர் இங்கு வரக் கூடும் என எண்ணி, அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டு, ஒரு பெரிய பூகம்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கினான். அப்படியே தன் அறையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஆம், தன் வாழ்க்கையில் கடவுள் செய்த அத்துமீறல்களை... தன்னுடன் வாழ வந்தவளிடம், உயிராய் உருக நினைத்த நேரத்தில்... அவளைப் பறிக்கொடுத்த அகோரத்தை எண்ணி சஞ்சலமடைந்தான்.

இனி சுஷ்மி மட்டும் போதும், என நினைத்து... மனதுக்கும், உணர்வுக்கும் தடைப் போட்டுப் பழகி இருக்கையில், இவள் என்ன புது வரவாய்... தன் வாழ்வில் புது உறவாய் ஒன்ற நினைக்கிறாள்?... அதுவும் பூட்டப்பட்ட தன் வாழ்கைப் பாதையில்... இவள் என்ன மீண்டும் திறப்புவிழா நடத்த வந்திருக்கிறாளா? என எண்ணியப்படி தன் அறையில் இருந்து, வெளியே முன்னறையில் இருந்த சஜுவை பார்த்தான்.

அவளோ, தன் மடியில் அமர்ந்து, பொம்மையோடு விளையாடும் சுஷ்மியை வருடியப்படி தன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.”இந்நேரம் அத்தான் எல்லோரிடமும் சொல்லியிருப்பாரா? அம்மாவும், அப்பாவும் அவரைத் திட்டுவார்களோ? பாவம், என்னால் அவருக்குச் சங்கடம்” எனத் தன் விஜய் அத்தானைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள்.

நேற்று மாலை நிச்சயவிழா நடந்து கொண்டிருக்க, சஜ்னா, சாவி கொடுத்த பொம்மை போன்று, எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள். பெரியவர்களை நமஸ்கரித்து, நிச்சய புடவை வாங்கி, அதை உடுத்தி வந்து எல்லாம் செய்தாள் தான். ஆனால் மனதுக்குள், சுஷ்மியின் நினைப்பும், அக்ஷையின் நினைப்பும் மாறி மாறி வந்தன, ஏதோ தவறு செய்வது போல் மனது அல்லாடியது. இப்படியே சஞ்சலமடைந்த மனது, விஜயுடன் ஜோடியாய் நின்று, புகைப்படம் எடுக்கவும், படபடவென இதயம் அடித்துக் கொண்டது பயத்தில்...

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல், ஒன்றிரண்டு புகைப்படம் எடுத்த நிலையில், அவனுடன் நில்லாமல், “அத்தான் போதும்... எனக்கு எப்படியோ தல சுற்றுற மாதிரி இருக்கு” என அவனிடம் சொல்ல, விஜயும், புகைப்படக்காரரிடம் போதும், நாளை எடுத்துக் கொள்ளலாம், எனச் சொல்லிவிட்டு, சஜுவிடம் “வா... சஜு... சாப்பிட போலாம்” எனக் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

ஆனால், மேடை விட்டு இறங்கவுமே, தன் கையை உருவிக் கொண்டாள், அதில் சந்தேகமாய்ச் சஜுவை பார்த்தவனின் கண்களில், அவளின் கண்ணீர் பட்டு விட்டது.

மேலும், சாப்பிடும் போது, உறவு பெண்களுக்கு மத்தியில், குனிந்த தலை நிமிராமல், சாப்பிட்டாள். பின் கை கழுவ, இருவரும் ஒன்றாய் சென்ற சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டாள் சஜு.

“அத்தான்... நான்... உங்ககிட்ட தனியா பேசணுமே... ப்ளீஸ்...” என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவள் போல், பதற்றமாய்க் கேட்பவளைப் பார்த்த விஜய், அவளின் நிலை புரிந்தாலும், என்ன சொல்கிறாள் என்று நெற்றி சுளிப்போடே “என்ன பேசணும் சஜு... ஏன் இவ்ளோ டென்ஷன்னா... இருக்க...” எனக் கேள்வி கேட்டான்.

அவளோ “அத்தான்... ப்ளீஸ்... என்ன காப்பாற்றுங்க... எனக்குப் பயமா இருக்கு அத்தான்... என்னால முடியாது” எனப் பதற்றத்தில் உளற ஆரம்பித்தவளை,

“சரி... சரி... நீ டென்ஷன் ஆகாத... நான் உனக்குப் போன் பண்றேன். நீ வெளிய வா, சரியா?” எனச் சொல்லிவிட்டு, யோசனையாய் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றான். பின் அவளும் தோழிகளுடன், தனக்கென்று கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்றவள், மீண்டும் அக்ஷயைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள்.

“விஜய் அத்தானோடு, இதுவரை நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தேன், அவருடன் பல இடங்களுக்குச் சகஜமாய்த் தான் சென்றேன். ஆனால் திருமணம் என்று என்னை நெருங்கி, என்னுடன் அவர் நிற்பதை என்னால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை என்பதை விட, என் உள்மனது இது தப்பு என்று அடித்துக் கொள்கிறதே” என மனதுள் அவள் புலம்பிக் கொண்டிருக்க,

அவள் மனசாட்சியோ “இதே அக்ஷயோடு நிற்க உனக்குப் பிடிக்கும் தானே” என அந்த நிலையிலும், அவளைக் கேலி செய்ய, அவள் மனதும் அக்ஷயோடு மணப்பெண் கோலத்தில் அவள் நிற்பதாய், தானாய் கற்பனைச் செய்து பார்த்து, அவளுக்குள் ஓர் இதத்தைப் பரப்பியது.

“ஆம், எனக்கு... எனக்கு... அக்ஷய் தான் வேண்டும், அவனின் மென்மை-மேன்மை, அன்பு-பண்பு, அழகு-கம்பீரம், அக்கறை-பொறுப்பு என எல்லாவற்றிலும், என்னை நான் அவனிடம் தொலைத்திருப்பதை இப்போது உணர்கிறேன். ஐயோ... கடவுளே! இதைக் கொஞ்சம் முன்பே, என்னை உணர வைத்திருக்கக் கூடாதா? இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேனே...” என அக்ஷயின் மீது தன் காதலை எண்ணி களித்து, தான் காதலை உணர்ந்த தருணத்தையும் எண்ணி நொந்துக் கொண்டிருந்தாள்.

இப்படி முரண்பட்ட சிந்தனையோடு இருந்த அவளின் மனசாட்சியோ “இப்பவும் ஒன்றும் கெடவில்லை சஜு... நீ உன் அக்ஷயிடம் சென்று சேர்வதற்கு, இன்னும் நேரம் இருக்கிறது. போ... போய் அத்தானிடம் எல்லாவற்றையும் சொல்லி, அவரிடமே கேள்” என்று அறிவுரை சொன்னது.

அவள் மேலும், சிந்திக்கவும், “சரி... நீ அக்ஷயை நினைக்க வேண்டாம், குழந்தையை எண்ணி பார், அது உன்னை யாரென்று தெரியாமலே, எவ்வளவு பாசத்தை, உன் மேல் வைத்திருக்கிறது. நீ என்ன அவளுக்கு உறவா? அவளிடம் சில மணி நேரங்கள் பழகியிருப்பாயா? அதற்கே அவள் உன்னிடம், தனக்குத் தெரிந்த மட்டும், எப்படியெல்லாம் தன் பாசத்தைப் பொழிகிறாள்.

எங்குச் சென்றாலும், உன்னையும் அழைப்பது, எது வாங்கினாலும் உன்னிடம் முதல் ஆளாய் காட்டுவது, நீ பேசவில்லை என்றால், “சசு... சசு...” என உயிரை விட்டு, உன் பின்னாடியே வருவது...” என மனசாட்சி சுஷ்மியைப் பற்றி, அவளின் பாசத்தை எடுத்து கூற, அவளும், ஒரு குழந்தைக்கு... அதுவும் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையை விடத் தாய் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து பார்த்தாள்.

இப்படியே பலவிதமாகக் குழம்பியவளின், மனக்கண்ணில் கடைசியாய்... சுஷ்மி, தன்னை ஏக்கத்தோடு பார்த்த முகம் நிலைத்தது. இத்தனை நாளும், தான் விட்டு சென்றால், அழுது ஆர்ப்பாட்டம் செய்பவள். இன்று தன்னைக் கண்டு அழாமல், பெரிய மனுசியாய், ஏமாற்றம், பிரிவு, ஏக்கம் என எல்லாவற்றையும் கலவையாய் முகத்தில் தேக்கி, பாவமாய்த் தன்னைப் பார்த்தது, சஜுவை நிரம்பவும் தாக்கியது.

தன்னையறியாமலே, அவள் கண்ணில் கண்ணீர் பெருக, அப்போது, படுத்திருந்தவளின் சிந்தனையைக் கலைப்பது போன்று விஜயின் அழைப்பு வர, அதைக் காதில் வைக்க, அவன் வெளியே வர சொல்லி, அந்தத் தளத்தின் முன்பக்க வராண்டாவுக்கு வர சொன்னான். அவளும் அலைப்பேசியை “சைலன்சரில்” போட்டிருந்ததால், யாரும் அங்கு எழவில்லை, ஆயினும் பூனை நடைப் போட்டு வெளியே வந்தாள்.

அங்கு நின்றவன், அவளிடம் “இங்க ரெஸ்டாரன்ட்ட இன்னும் க்ளோஸ் பண்ணிருக்க மாட்டாங்க. இந்நேரம் கூட்டமும் இருக்காது, அங்க போய் உட்கார்ந்து பேசலாம் சஜு” என அங்குள்ள உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். உணவகத்தில் ஒரு மூலையில் உள்ள மேஜையைத் தேர்வு செய்து, விஜய் ஒரு வெஜ் சூப்பும், சஜுவுக்கு ஒரு பாலும் ஆர்டர் கொடுத்து விட்டு, பேசத் தொடங்கினர்.

சஜு, மேஜையில் கை ஊன்றி, தலையைத் தாங்கியிருந்தாள். விஜய் அமைதியாய் “என்னாச்சு சஜு?” எனக் கேட்டான். அவளோ கண்ணில் நீர் பொங்க “அத்தான்... நான்... நான்... அக்ஷய காதலிக்கிறேன்னு நினைக்கிறேன்” என அவனைக் காதலிப்பதாய்க் கூறாமல், காதலிக்கிறேன் என்று நினைக்கின்றேன் எனத் தன் மனநிலையை மறையாது விஜயிடம் கூறினாள்.

ஏனென்றால், அவளுக்குக் கூடப் பிறந்தவர்கள், யாரும் இல்லை. அதனால் அவளால் தன் மனதை, தன் மனதில் நினைப்பதைக் கூடப் பகிர்ந்து கொள்ள யாருமில்லாமல் வளர்ந்தவள், விஜயிடம், தன் மனதில் தோன்றுவதைக் கூறுவாள். சிறு வயதிலிருந்தே அப்படித் தான், அவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பம் குறைவாய் இருந்தாலும், ஒன்றாய் இருக்கும் நேரத்தில் பிரியாவிடமும், விஜயிடமும் தன் மனதில் தோன்றுவதைக் கூறுவாள்.

பிரியா சில சமயம், அதை வைத்து அவளைக் கேலி செய்வாள், ஆனால் விஜயோ அப்படிச் செய்யாது, நியாயமாய்ப் பேசுவான். அதனாலே விஜயிடம் தையிரியமாய்த் தன் மனதைப் பகிர்வாள்.

இப்படித் தான், அவன் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் முன், நேரில் வரமுடியாத காரணத்தால், அலைப்பேசியில் அழைத்துப் பேசியவனிடம், “என்ன அத்தான்... இப்படித் திடீர்னு வெளிநாட்டுக்கு போறீங்க? ஏற்கனவே பிரியா போயிட்டா, இப்ப நீங்களா? எப்படி அத்த உங்கள பார்க்காம இருப்பாங்க? பாவம் இல்லையா?” என நேரிடையாகக் கேட்டாள்.

"சும்மா கொஞ்ச வருஷம் தான் சஜு. அப்புறம் சம்பாதிச்சிட்டு இந்தியா வந்திருவேன். ஏன் உனக்கு வெளிநாடு போகணும்னு... இந்த மாதிரி ஆசையெல்லாம் இல்லையா?" எனக் கேட்க,

"ஐயோ... நமக்கெல்லாம் வேணாம் பா... நான் சும்மாவே பக்கத்து ஊருல கிடச்ச வேலைக்கே அம்மா, அப்பாவ பிரியணுமேன்னு போகல, இதுல யூ எஸ் போயிடுவேனாக்கும். அப்புறம் அத்தான்... உங்கள பார்க்க வந்திருவோம்னு தான... நீங்க தூரமா... யூ எஸ் போறீங்க?" என அவன் அன்னையை மனதில் வைத்துக் கொண்டு, வெளிப்படையாகவே கேட்டு விட்டாள். விஜயும் அவளின் வார்த்தைகளைப் புரிந்து சமாளித்தான். அதனால் தான் இன்று தன் மனதையும் மறைக்காது சொன்னாள்.

"என்ன சஜு... இப்ப சொல்ற அத... அதுவும் காதலிக்கிறேன்னு நினைக்கிறியா?" என நெற்றி சுளிப்போடு கேட்டான்.”ஆமா அத்தான், நானே அத இப்ப தான் உணர்ந்தேன். ப்ளீஸ்... அத்தான், நீங்க தான் ஹெல்ப் பண்ணனும். என்னால கண்டிப்பா உங்களோட வாழ முடியாது. உங்க லைப்ஃப கெடுக்க நான் விரும்பல அத்தான்...” என அவனிடம் மன்றாடினாள்.

மேலும் "கல்யாணம் கொஞ்ச நாள் கழிச்சு நடந்திருந்தா கூட, உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பேன், ஆனா என்னை எதையும் யோசிக்கவே விடாம, எல்லாமே நெருங்கிடுச்சு அத்தான். இப்ப நேரம் நெருங்க நெருங்க என்னால... உங்கள... உங்க கூட... நினச்சு கூடப் பார்க்க முடியல அத்தான். ப்ளீஸ் அத்தான்... சுஷ்மிய கொஞ்சம் நினச்சு பாருங்க அத்தான்... அவளுக்கு ஒரு தாயா... நான் வேணும் அவளுக்கு... நீங்க தான் அத்தான், இந்தக் கல்யாணத்த நிறுத்தனும். ப்ளீஸ் அத்தான்...” எனக் கெஞ்சினாள்.

அவள் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாய் கேட்டவன், சிறிது நேரம் சிந்தித்தான், பின் ஒரு பெருமூச்சு விட்டு, "இம்... சரி சஜு, உனக்காக இதையும் செய்றேன். சஜு... ஆனா குழந்தைக்காகத் தான் உன்ன விட்டுத் தரேன். அக்ஷய்க்காக இல்ல" என உண்மையை அவனும் சொன்னான்.

ஒரு சில நிமிடங்களில், அவள் ஒரு முறை சொன்னதும், இவன் என்ன இப்படி ஏற்றுக் கொண்டான் என நாம் நினைக்கலாம். ஆனால் விஜய் எப்போதும் ஒரு நியாயவாதி, அதிலும் சஜுவை காதலித்தான் எனச் சொல்ல முடியாது தான், ஆனால் அவள் மீது ஆசை இல்லை என்றும் சொல்ல முடியாது தான்.

ஏனெனில், அவன் சஜுவை கல்யாணம் செய்ய முக்கியக் காரணங்களில் முதன்மையானது, அவள் தன் மாமா பெண். ஊரெல்லாம் எங்கெங்கோ, தன் அம்மா பணக்காரப் பெண்ணாய் தேடுகிறார், அதற்குப் பதில் சஜுவை பண்ணிக் கொள்ளலாம் என எண்ணினான்.

ஏனெனில், அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல தோழமை உண்டு, அதோடு அவளின் குழந்தைத்தனம், அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆனால் பெரியவர்கள் சொன்னால், அதைக் கேட்டுக் கொள்வாள். அவள் பெற்றோரிடம் எப்படியோ? மற்ற பெரியவர்களிடம் பாந்தமாக நடந்து கொள்வாள். இது எல்லாம் அவனுக்குப் பிடித்ததால், அவன் இந்த முடிவுக்கு வந்திருந்தான்.

அதனால் அவள் சொல்வதையும்... அதுவும் கல்யாணத்திற்கு முதல் நாள், ஒரு பெண் பொய் சொல்லமாட்டாள் என நம்பினான். அதனால் வலியோடு அல்ல... வெறுமையாக அவள் காதலை ஒத்துக் கொண்டு, அந்தச் சிறு பிஞ்சிற்காக விட்டுக் கொடுத்தான்.

அவன் ஒத்துக் கொண்டதால், அதில் ஏற்பட்ட மகிழ்ச்சியால், பின்னே அவன் சொன்ன வார்த்தைகளைக் காதில் ஏற்காமலே, "தேங்க்ஸ் தேங்க்ஸ் அத்தான்...” என நன்றி தெரிவித்தவள், பாலை பருகியப்படி, "போலாமா அத்தான்...” என நிம்மதியாய் எழுந்தாள்.

"எங்கே?" எனக் கேட்டான், "ரூமுக்கு தான்...” என வெகுளியாய் சொல்ல, "சரி போ... போய்ப் படுத்து எந்திரிச்சிட்டு, நாளைக்கு மணமேடைல என் கையால தாலி வாங்கிக்கோ... என்ன?" எனச் சொன்னான்.

"என்ன அத்தான்... சொல்றீங்க? நான் இவ்ளோ... சொல்லியும்...” எனத் திகைத்து மீண்டும் அமர்ந்தவளை, செய்கையால் அவளை நிறுத்துமாறு சொன்னான்.

"பின்னே... இப்ப நீ ரூமுக்கு போனா, அதான் நடக்கும்" என அசால்ட்டாய்க் கூறினான்.”ஏன் அத்தான்... நீங்க தான் நிறுத்த போறீங்கள...” எனக் கேட்க,

"சஜு... இது ஒன்னும் சினிமா இல்ல... நான் வாய் வார்த்தையா வேணாம்னு சொன்னா, நிக்கறதுக்கு? நானோ நீயோ வேணாம்னு சொன்னாலும், நம்ம பாரென்ட்ஸ் நம்மகிட்ட அழுது, பேசி, கரைச்சு சம்மதிக்க வச்சிடுவாங்க. நாமளும் அவங்களுக்காகச் சரின்னு சொல்லிட்டு, காலம் முழுதும் மனச்சுமையோடு, வாழ்க்கைய வாழனும்" என விளக்க,

"அதுனால?...” என அவனையே கேள்வியாய் பார்த்தாள், "நீ இந்த ஹோட்டல் விட்டு போயிடு, ஐ மீன் நீ அக்ஷய் வீட்டுக்கு போயிடு... நாளைக்கு விஷயம் தெரிஞ்சாலும், நான் எப்படியாவது, சமாளிச்சு அத்த மாமாவ கன்வின்ஸ் பண்றேன்" எனப் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டான்.

மேலும் "இந்த அர்த்த ராத்திரில, தனியா போ வேணாம். நானே கொண்டு போய் விடுறேன். வா...” என எழுந்தான்.

அப்போதும் தயக்கமாய் "நாம், அத்தான் மீது, எல்லாவற்றையும் திணிக்கிறோமே... அவர் தலையில் பொறுப்பைக் கட்டுகிறோமே... நாம் சொன்னால், நம் அம்மா அப்பா கேட்க மாட்டார்களா? என்ன ஆனாலும், இங்கு இருந்தே சமாளிப்போமா?" எனக் குற்ற உணர்வோடு யோசித்தவளைப் பார்த்து,

"சரி அப்போ அந்த அக்ஷய்க்கு அதிர்ஷ்டம் இல்ல போல... எனக்குத் தான் அதிர்ஷ்டம் போல" என அவள் தன்னையும், அவள் பெற்றோரையும் எண்ணி தயங்குகிறாள் எனத் தெரிந்தே, அவள் காதலனின் பெயரைச் சொல்லி கேட்டாலாவது அவள் நகர்வாள் எனக் கேட்டு வைக்க, அவளோ "இல்ல அத்தான்... நாளைக்கு அவர் வருவார்ல... அப்போ... அவர்ட்ட சொல்லி...” என இழுத்தவளை...

"உங்க அம்மா அப்பாவ, அவர்ட்ட போய்க் கெஞ்ச சொல்றியா? என் பொண்ண கட்டிக்கோங்கன்னு சொல்லி... இம்... ? ஆனா நீ சொல்றதப் பார்த்தா, அவருக்கும் உன் மேல விருப்பம் இருக்கா தெரியல? இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம், அக்ஷய்க்குத் தாக்கம் இருக்குமோன்னு... ஏன்னா இன்னிக்கு பங்க்ஷனுக்கு அவர் வரல, சோ நாளைக்கும் வர்றது டவுட் தான். சப்போஸ் அவர் நாளைக்கு வரலேன்னா?" எனக் கேட்டு வைக்க, அவளோ பயந்து, அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், "சரி அத்தான்... போலாம்" என இருவரும் கிளம்பினார்கள்.

இவர்கள் இருவரையும், உணவகத்திற்கு வந்தது முதல், இதோ இப்போது, அவர்கள் காரில் ஏறி ஜோடியாய்ச் செல்லும் வரை, இரு ஜோடி கண்கள் பார்த்தும், அவர்கள் பேசியது அனைத்தையும் இரு ஜோடி காதுகள் கேட்கவும் செய்தன. அவர்களின் இந்த முடிவில் சந்தோஷமும் கொண்டது ஒரு மனது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 19

நீ என்னைச் சேர நினைக்கிறாய்

ஆனால்

என் குலம், கோத்திரம், குடும்பம்

என ஏலம் விடுகின்றனர்...

உன்னைச் சேர்ந்தவர்கள்...

உன்னிடம் நான் கேட்டேனா ?

காதல் பிச்சைப் போடென...

இதுவரை மரத்துப் போன என்னிதயம்

இன்று உன்னால் மரித்துப் போனதடி...

அக்ஷய் வீட்டில் இவ்வளவு கலவரத்திற்கும், இரு ஜீவன்கள் மட்டும் தங்கள் கடமையைச் செய்தன. அந்த ஜீவன்களில் ஒன்றோ, எந்தக் கவலையும் இல்லாமல், இருந்த கவலையும் அகன்ற சந்தோஷத்தில், மனம் முழுதும் மகிழ்ச்சி கடலில், எப்பொழுதும் போல் தன் வேலையான விளையாட்டை... பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தது... ஆம், அது நம் சுஷ்மி தான்.

இன்னொரு ஜீவனோ, அந்த வீட்டிற்குச் சமையல் வேலை செய்வதே தன் கடமையென, மனதில் கவலை, குழப்பம் இருந்தாலும், அதைச் சிறிது நேரம் தள்ளி வைத்து, மதிய சாப்பாடு செய்யும் வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டது. சரி தான், அந்த ஜீவன் லக்ஷ்மியம்மா தான்.

அப்போது அவர் ஒரு பாத்திரத்தை தரையில் தவற விட, அந்தச் சத்தத்தில் சஜுவும், அக்ஷயும் கலைந்தனர். அக்ஷய் எழுந்து செல்வதற்குள், சஜு சமையலறை சென்று லக்ஷ்மியம்மாவுக்கு, உதவி செய்ய ஆயத்தமானாள்.

அவள் பின்னேயே வந்த சுஷ்மியிடம், சஜு "சுஸு செல்லம், நீ வெளிய உட்கார்ந்து விளையாடு டா... நான் உனக்குச் சாப்பாடு செய்யப் பாட்டிக்கு ஹெல்ப் பண்றேன். அப்புறம் உனக்கு ஆஆ... ஊட்டுறேன்... இம்...” எனக் குழந்தையிடம் சொல்ல, அவளோ புரிந்தது போல் தலையாட்டி, "சே... ரி...” எனச் சமையலறை விட்டு வெளியே சென்றாள்.

முன்னறைக்குச் சென்றதும், தன் பொம்மை மற்றும் விளையாட்டு பொருளை எல்லாம் எடுத்தும், இழுத்தும் கொண்டும் வந்து, சாப்பாட்டு மேஜை அருகே போட்டு, சமையலறையைப் பார்ப்பது போல் உட்கார்ந்து கொண்டு விளையாட ஆரம்பித்தாள். ஆனாலும் அந்தத் தளிரின் கவனமும், இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை அவளின் பார்வையும், சமையலறை உள்ளே இருந்த சஜுவை நாடி சென்றது.

அந்த வீட்டின் மருமகளாய் ஆகாமலே, அந்த உரிமையை எடுத்துக் கொண்டு, தன் பொறுப்புகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள் சஜு. அவள் கழுத்தில், அவன் தாலி கட்டினால் தான், அது அவள் வீடு என்பதல்ல... என்று அவன், அவள் உள்ளத்தில் வந்தானோ, அன்றே அவனுடையது அவளுடையது ஆயிற்று, அவளுடையது எல்லாம் அவனுடையது ஆயிற்று. இதை உணர்ந்து தான், பொறுப்பாய் செயல் படுகிறாளோ? இல்லை இதையெல்லாம் நினைத்து பாராமலே, அவள் மனது, அவனுடைய வீட்டில் உரிமை எடுத்துக் கொள்ளச் சொல்லி சஜுவிடம் சொன்னதோ?

ஆயிற்று... சமையலும் செய்தாயிற்று, ஆனால் அக்ஷய் மட்டும், கூண்டில் அடைப்பட்ட புலியாய், கைகளை மடக்கி, "அவர்கள் வீட்டில் இருந்து, ஏன் யாரும் வரவில்லை? இப்படியே அவளைத் தலைமுழுகி விட்டார்களா" என யோசித்து யோசித்து, குழம்பி கோபமாய்... ஆம், அவளை, அவள் செய்வதை எல்லாம் தடுக்க முடியாத ஆற்றாமையினால் வந்த கோபமோ?... அவனுக்கு எதனால் கோபம் வந்ததோ? தெரியவில்லை... ஆனால் பார்க்கும் போது, கோபமாய், அவன் அறைக்குள் நடைப் பயின்று கொண்டிருந்தான்.

பின் கோபத்தைக் கடந்து, வெளியே வந்தவன், அங்குச் சாப்பாட்டு மேஜையில் சுஷ்மிக்கு "ஆஆ...” ஊட்டிக் கொண்டிருந்த சஜுவிடம், "ஏய்... இன்னுமா... அங்க உன்ன தேடாம இருக்காங்க... அங்க என்ன ஆச்சுன்னு யார்கிட்டையாவது கேளு" என விஜயின் பெயரையோ, அவளின் தந்தையையோ என யாரையும் குறிப்பிடாமல் சத்தமிட்டான்.

அதில் சிறிது பயந்த சுஷ்மி, தந்தையை மலங்க மலங்கப் பார்த்தவள், மீண்டும் திரும்பி சஜுவைப் பார்த்து, சாப்பாட்டு மேஜையில் இருந்து சஜு மீது இறங்கி, அவள் மடி மீது நின்று, அவள் கழுத்தை கட்டிக் கொண்டாள். எங்கே மீண்டும் சஜுவை, தன் தந்தை வெளியே அனுப்பிவிடுவானோ என்ற பயம், அவள் கண்ணில் தெரிந்தது.

சஜுவோ, அதை முற்றிலும் மறந்தவளாய், சமையலிலும், சுஷ்மிக்கு கதை சொல்லி ஊட்டுவதிலும், தன்னை ஈடுப்படுத்திக் கொண்டவள், அவன் கேட்கவும் தான், "ஆமாம்... அத்தான் கூடப் போன் எதுவும் செய்யவில்லையே?" என யோசிக்க ஆரம்பித்தாள். ஆனாலும், நம் சஜு தான் சமையல் செய்து இறக்கினாள், என எண்ண வேண்டாம், லக்ஷ்மியம்மா மேற்பார்வையில், காய் வெட்டுவதும், மசாலா அரைத்துக் கொடுப்பதும் என மேலோட்டமாகத் தான் செய்தாள்.

பின் அக்ஷய் கேட்கவும் தான், தன் அலைப்பேசி தேடி எடுத்து பார்த்தால், அது ஜீவனற்று அணைந்து இருந்தது.

அதனால் தான், யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லையோ என எண்ணி, சரி, அதற்கு மின்னூட்டம் செய்யலாம் என அவனிடம், "சார்ஜ் இல்ல... சார்ஜ் பண்ணனும்" என அலைப்பேசியைக் காண்பித்துச் சொல்ல, அவனோ, அதை வாங்கிப் பார்த்தவன், அந்த அலைப்பேசி மாதிரியின் மின்னூட்டம் செய்யும் மின்னேற்றி, தன்னிடம் இல்லாததை உணர்ந்து, அவளிடம், "இதுக்குச் சார்ஜர் என்ட்ட இல்ல... விஜய் நம்பர் உனக்குத் தெரிஞ்சா... இதுல அடிச்சு கேளு" என வீட்டு அலைப்பேசியை அவளிடம் நீட்டினான்.

அவளும், இடுப்பில் சுஷ்மியோடு நின்று கொண்டே, விஜய்க்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பதில் வர, மீண்டும் முயற்சிக்க, அதே பதிலைத் தர, சஜுவோ தன் தந்தைக்கு அழைத்தாள். ஆனால் அழைப்பு முழுவதுமாய்ச் சென்றும், யாரும் எடுக்கவில்லை. மீண்டும், மீண்டும் அவள் முயற்சி செய்ய, ஆனால் யாரும் அதை எடுத்தப்பாடில்லை.

சஜுவோ சிறிது பயந்து, பதற்றத்தோடு அவனிடம் "அத்தான் போன் ஆப் ஆகியிருக்கு, அப்பாக்கு போட்டா, அவர் எடுக்கவே இல்ல" என அவள் முடிக்கும் போதே கண்ணீர் வர, "சரி, சரி கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணிப் பாரு" என அவள் கண்ணீரைக் கண்டு அமைதியாய் கூறினானே தவிர, அவளை அழுகாதே எனக் கூறவில்லை.

அவன் இருக்கும் மனநிலையில், ஏன் அவளை ஆறுதல் படுத்தவில்லை என்று நாம் கேட்டால் கூட, "எல்லாம் அவளாய் இழுத்து வைத்தது, அனுபவிக்கட்டும்" என்று இரக்கமற்று தான் பதில் வருமே ஒழிய, தனக்காக, தன் குழந்தைக்காகத் தான் இவ்வளவும் செய்திருக்கிறாள் என்ற மதிப்பு வராது.

மேலும் ஒரு அரைமணிநேரம் செல்ல, இருவரையும் சாப்பிட அழைத்தார் லக்ஷ்மியம்மா, ஆனால் இருவருமே தங்களுக்கு வேண்டாம் எனவும், அவரைச் சாப்பிடுமாறு கூறி விட்டனர். மேலும் ஒரு, ஒருமணிநேரம் செல்ல, பொழுது மதியப் பொழுதைத் தாண்டி, மூன்று மணியை எட்ட தொடங்கிய நேரம், மீண்டும் சஜு விஜய்க்கு முயற்சிக்க, இப்போது அழைப்புச் சென்றது.

ஆனால், அதை எடுத்தவன், என்ன சொன்னானோ, இந்தப் பக்கம் சஜு "என்ன அத்தான் சொல்றீங்க...” எனக் கேட்கும் போதே கண்ணீர் உற்பத்தியாக, மேலும் விஜய் என்ன சொன்னானோ, அதற்கு அவள் "இதோ... உடனே வரேன் அத்தான்" எனக் கண்ணீரோடு வைத்தாள்.

மதிய தூக்கக் கலக்கத்தில் சுஷ்மி இருந்தாலும், அவள் மடியிலேயே படுத்துக் கண் சொருக, லேசாய் உறங்கியவள், சஜுவின் பதற்றத்திலும், அவளின் கண்ணீர் இவள் மீது தெறித்ததில் முழுவதுமாய் முழித்து, "சசு... உ...” என அழைத்தாள்.

அழுகையோடே தன்னை அழைத்த குழந்தையை இறுக அணைத்துக் கொள்ள, அவளின் அருகே இருந்து அவளைப் பார்த்த லக்ஷ்மியம்மா, "என்ன சஜு... என்னமா ஆச்சு?" என விசாரிக்க,

"பாட்டிமா... அம்மா... அங்க... அவங்கள ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம்... நான் போகணும்... அத்தான் வர சொன்னார். நான் கிளம்பறேன்" எனத் திக்கி, திணறி ஒரு வழியாய் கண்ணீரோடு சொல்லி, கிளம்ப முயல, "சரி மா... அழுகாத தாயி, அம்மாக்கு ஒன்னும் ஆகிருக்காது" என ஆறுதல் கூறினார் லக்ஷ்மியம்மா.

ஆனால் இவற்றையெல்லாம் அறைக்கு உள்ளிருந்து கேட்டவன், "எப்படியோ? இவள் வீட்டை விட்டு போனால், சரி" என்ற மாதிரி அமைதி காக்க, அதற்குள் லக்ஷ்மியம்மா, "இரு மா... நீயா எப்படித் தனியா போவ? ஆமா... உன்ட்ட காசு இருக்கா ஆசுப்பத்திரி போறதுக்கு?"

அப்போது தான், தன்னிடம் பணமில்லை என்பதை உணர்ந்த சஜு "ம்ஹும்...” எனத் தலையசைக்க, "இருமா நான் தரேன்...” என அவர் எழுவதற்குள், அக்ஷய் வந்து "லக்ஷ்மிமா... இந்தாங்க... இந்தப் பணத்த... கொடுத்து விட்டு, அப்படியே அவளப் போகச் சொல்லிடுங்க" என அவரிடம் சில நூறு ரூபாய் தாள்களை நீட்டினான்.

சஜு, அவனைப் பார்த்து ஒரு அடிப்பட்ட பார்வையோடு நிறுத்திக் கொண்டாள். ஏனெனில் இப்போது அவனைப் பற்றியோ? அல்லது அவனின் பேச்சை ஆராயவோ, அவள் மூளையும், மனதும் தயாராயில்லை, இரண்டிலும், சுந்தரிக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது, என்ற தாய் பாசம் தான் நிரம்பி வழிந்தது.

அதனால், அவள் ரூபாயை வாங்கிச் செல்ல, ஆனால் போக தான் முடியவில்லை அவளால், காரணம் சுஷ்மி அவள் கால்களைக் கட்டிக் கொண்டு "சசு... னோ...” எனச் சிணுங்கினாள். மேலும் தன்னைத் தூக்க வந்த தந்தையிடம் இருந்து தப்பிக்க, அவள், புடவைக் கட்டிய சஜுவின் முன்னங்கால்களுக்கு இடையே, புகுந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

சஜுவும், எதுவும் பேசாமல், அவளைத் தூக்கி கொண்டு, கீழே சென்று விட, "எவ்ளோ திண்ணக்கம் இவளுக்கு...” எனச் சஜுவை மனதுள் திட்டியவன், "காணததற்கு, நேற்று வந்தவளிடம் ஒட்டிக்கொண்டு, சுஷ்மியும் என்னை விட்டு போகிறாளே" என எண்ணியவன், முதன் முறையாய், குழந்தை தன்னிடம் இருந்து பிரிந்து போவது போல் உணர்ந்து, மனம் தளர்ந்தான்.

"அப்போ... நான் உனக்கு முக்கியமில்லையா சுஷு? அப்போ நீ சொன்னது போல, நான் உனக்கு வேண்டாமா சுஷு?" எனக் குழந்தையோடு நேரில் பேசுவது போல், தன் மனதோடு பேசியவனை, லக்ஷ்மியம்மா "தம்பி... சொல்றேன் தப்பா நினைக்காத பா... பாவம் பா அந்தப் பொண்ணு... தனியா மனசுல துக்கத்தோடு போகுது, நம்ம சுஷ்மிய வேற தூக்கிட்டு போகுது... நீயும் கூடப் போயிட்டு வா பா... அது ஏதோ புரியாம... பண்ண தப்புக்கு, இப்போ இந்த நிலைமைல தண்டிக்கிறது நியாயமில்ல" என எடுத்து சொல்ல,

அவனோ ஏதோ மறுப்பாய் சொல்ல வர, "தயவு செய்து போயிட்டு வா பா... நம்ம வீட்டு பொண்ணுப் பிள்ளன்னா போக மாட்டோமா? பின்னாடியாவது போய் கூட... பத்திரமா போயிடுச்சான்னாவது பார்த்துட்டு வா பா... போ பா...” என மேலும் வற்புறத்த, அவனும் கீழே சென்றான்.

நல்ல வேளை, அவர்கள் தெருவைக் கடந்து, இவன் முக்கியச் சாலையை அடையும் போது தான், சஜு ஒரு ஓடும் ஆட்டோவை நிறுத்தி, விவரம் சொல்லிக் கொண்டிருக்க, வேக நடைப் போட்டு, அவளை எட்டி, அதே ஆட்டோவில் அவனும் ஏறிக் கொண்டான்.

ஓட்டுனர் கூட "யார் சார் நீங்க ?" எனக் கேட்க, அதற்குப் பதில் சொல்வது போல், சஜுவின் மடியில் இருந்த சுஷ்மி, தன் சுஸ்பாவும் தங்களுடன் வருகிறார் என்ற மகிழ்ச்சியில் "சுஸ்பா...” எனக் கூவினாள். அதோடு சஜுவும் எதுவும் சொல்லாமல் இருக்கவும், "சரி கணவன் மனைவி போல...” என நினைத்துக் கொண்டு, சஜு சொன்ன மருத்துவமனையில் நிறுத்தினார் அந்த ஓட்டுனர்.

முதலில் இறங்கிய அக்ஷய் அவருக்குப் பணம் செலுத்த, சஜுவோ உறங்கிய சுஷ்மியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்குள் விரைந்தாள். வரவேற்பாளரிடம் விசாரித்த பின், அந்த அறை இருக்கும் தளத்திற்குச் செல்ல, அங்கு வெளியே வராண்டாவில், விஜய் நின்றிருக்க, சித்ரா இருக்கையில் அமர்ந்திருக்க, சற்று தள்ளி முரளிக்கு ஆறுதல் சொல்லியப்படி குணாவும் அமர்ந்திருந்தார்.

சஜு "அத்தான்... அம்மாக்கு" என விஜயிடம் விரைய... “வாமா மருமகளே, என்ன உங்கம்மா இருக்காளா? இல்ல போயிட்டாளான்னு பார்க்க வந்தியா?" என விஜய் பதில் சொல்வதற்குள், சித்ரா தான் வரவேற்றார்.

"அம்மா...” என விஜயும், "அத்த...” எனச் சஜுவும் ஒரு சேரக் கத்த, "சும்மா... நிறுத்துடா... முத உன்ன சொல்லணும்... எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம். புள்ளைக்காக அழுதாளாம், இவனும் விட்டானாம். ஏன்டி மா... உன்ன பெற்றவள பத்தி நீ கவலைப்படல, ஆனா... பெறாத இந்தப் பிள்ளைக்காகக் கவலைப்பட்டுப் போனியாக்கும்... போனவ முன்னாடியே போக வேண்டியது தான...” என விஜயாலும் தடுக்க முடியாமல், அவன் அன்னை சஜுவை நியாயம் கேட்க துவங்கினார்.

சஜுவோ எதுவும் சொல்லாமல் கண்ணீர் வடித்தாள்.

"இத்தன ஊருசனம், உறவுகளையும், கூப்பிட்டு... அவங்களுக்கு முன்னாடி எங்கள அசிங்கப்படுத்திட்டியே டி... அங்க பாரு உங்கப்பன்ன... உன்னால... உன்னால தான் என் தம்பி இப்படி நிலக்குலைஞ்சு உட்கார்ந்திருக்கான். எங்க டி அந்த நல்லவன்? பிள்ளைய அனுப்பி உன்ன கரெக்ட் பண்ணவன்?" என அக்ஷயை சித்ரா தேட,

சஜுவோ "அத்த... குழந்தைய ஒன்னும் சொல்லாதீங்க அத்த...” எனக் கெஞ்ச, ஆனால் அவரோ, அவள் பின்னே வந்த அக்ஷயிடம் "ஏன்டா... நீ லா... நல்லா இருப்பியா? கல்யாணத்தன்னைக்கா இப்படியெல்லாம் பண்ணுவீங்க? உனக்குக் கல்யாணம் பண்ணனும்னா... முன்னாடியே ஒரு பொண்ணப் பார்த்து பண்ணிக்க வேண்டியது தான, இப்படியா குழந்தைய... விட்டு வேஷம் போட்டு, எங்க புள்ளைய மயக்குவ...” என அவனிடம் எகிற, இன்னும் எழுத முடியாத வார்த்தைகளையும், கேள்வியையும் அவனிடம் கேட்டு, அவன் குலத்தில் தொடங்கிக் குடும்பம் வரை, இழுத்து அசிங்கப்படுத்தினார்.

சஜுவோ அதிர்ந்து "அத்த...” எனக் கத்த, விஜயோ "போதும் மா... நிறுத்து...” என அதட்ட, முரளியோ அக்ஷயை கண்டவுடன் வந்த ஆத்திரத்தில், எதையும் ஆராயாமல் "எங்க அக்கா கேட்குறதுல என்ன டா தப்பு. எல்லாம் இவனால தான்" என விஜயிடம் சொல்ல, இந்தக் கலவரத்தில் இரு ஜீவன்கள் அழுதே விட்டன.

ஒன்று நம் சுஷ்மி, பேச்சுச் சத்தத்தினால் எழுந்து, பயந்து அழுதாள். இன்னொரு ஜீவனோ, தன்னையும், தன் மகளையும் வார்த்தையால் வதைப்பவர்களை எதிர்க்க முடியாமல், மனதுக்குள் அழுதது. ஆம், நம் அக்ஷய் தான் அது...

"உன் தாயில்லாத பொண்ணுக்கு பாவம்னு இரக்கம் காட்டி, நல்லது பண்ணதுக்கு, நீ நல்லாவே கைமாறு பண்ணிட்டப் பா... போ... போய் இனியாவது எந்தக் குடும்பத்தையும் கெடுக்காம... நல்லா இரு" எனத் தூற்றினார் முரளி.

"இப்படிப் பேசுபவர்களிடம் என் பக்க நியாயத்தை, இப்போது சொன்னால் மட்டும் கேட்கவா போகிறார்கள்?" என தான் இனி என்ன சொன்னாலும், அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்து, அங்கிருந்து வெறுப்பாய், வேகமாய் விலகினான் அக்ஷய்.

விலகி சென்றவன் பின்னேயே ஓடினான் விஜய் “அக்ஷய்... நில்லுங்க... கொஞ்சம் நில்லுங்க. ப்ளீஸ் அவங்க சொன்னதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க... அவங்க ஏதோ கோபத்துல... சொல்லிட்டாங்க.” எனச் சொல்ல,

அவனோ திரும்பி, "இதுக்கு... இதுக்குத் தான், இப்படியெல்லாம் பேசுவாங்கன்னு தான்... எதுவும் வேண்டாம்னு... நான் உண்டு, என் குழந்தை உண்டுன்னு ஒதுங்கியே இருந்தேன். ஆனா இன்னிக்கு எல்லாமே போச்சு...” என ஆத்திரமாய் ஆரம்பித்து விரக்தியாய் முடித்தான்.

ஆனால் விஜயோ, "ப்ளீஸ் அக்ஷய்... எனக்காகப் பொறுத்துக்கோங்க... அவங்க சார்பா, நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா சஜு உங்கள ரொம்ப லவ் பண்ணுறா... அவள...” எனச் சொல்லும் போதே, மறுத்தவன்,

"இல்ல... விஜய், எனக்கு யாரும் வேணாம். எனக்குக் காதலும் வேணாம், கல்யாணமும் வேணாம். போதும்... என் வாழ்க்கைல நடந்த ஒரு கல்யாணமே போதும்... ஆனா எனக்குத் தான், என் ஜனனியோட வாழ கொடுத்து வைக்கல, ப்ளீஸ்... என்ன விட்டிருங்க" என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே சஜு வந்து சேர்ந்தாள்.

அங்கு நடந்த கூச்சலில், மருத்துவர் மற்றும் செவிலியர் வந்து, தடுத்துச் சத்தம் போட, முரளியோ அவளைப் போகச் சொல்லுமாறு, செவிலியரிடம் சொல்ல, சஜுவும் வேறு வழி இன்றி, தன் தாயைப் பார்க்காமல், அங்கிருந்து அகன்று, இவர்களிடம் வந்தாள்.

விஜயோ ஏதோ சொல்ல வர, அதைத் தடுப்பது போல், "ப்ளீஸ்... விஜய் எதுவும் சொல்லாதீங்க, இத்தன நாளும், என் மனசு மரத்துப் போய்த் தான் இருந்துச்சு, ஆனா... இன்னிக்கு... அதுவும் செத்துப் போச்சு... என்ன சொன்னாக் கூடப் பரவாயில்ல... ஆனா... இந்த ஒன்னும் அறியா குழந்தையைப் போய்...” எனச் சஜுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, சிணுங்கிக் கொண்டே படுத்திருந்த குழந்தையை, ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தான். விஜயால் எதுவும் பேச முடியவில்லை.

துக்கத்தை விழுங்கபவன் போல், அக்ஷையின் தொண்டைக் குழி ஏறி, இறங்க...”விஜய் எனக்காக ஒன்னு பண்ணுங்க... ப்ளீஸ்... சஜுவ நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க...” எனச் சொல்ல, "ஆனா...” எனத் தடுக்க வந்த விஜயிடம் "ப்ளீஸ்... விஜய், ஏன் அவ என் கூட, எங்க வீட்ல பாதி ராத்திரி இருந்ததாலா தயங்குறீங்களா?" என அவன் தடுத்ததைத் தவறாய் புரிந்து, அவனைப் பேச விடாமல் கூறியவன்,

மேலும் "ஆனா என் மூச்சு காற்று கூடச் சஜு மேல படல, என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் விஜய், என் சுண்டுவிரல் கூட அவள் மேல படல, அதுனால நீங்களே, சஜுவ கல்யாணம் பண்ணிடீங்கன்னா இந்தப் பிரச்சனையெல்லாம் தீரும்" எனச் சஜு அருகே சென்று, சுஷ்மி தலையில் கை வைத்து, சத்தியம் செய்து கூறியவன், இந்தப் பிரச்சனையில் தன் பங்களிப்பு முடிந்தது என்பது போல், யாரையும் திரும்பி பாராமல், மருத்துவமனையை விட்டே சென்று விட்டான்.

ஆனால் இங்குச் சஜுவோ, அவனின் பேச்சில் முதலில் உருகி, சுஷ்மியை வைத்து அவன் தன்னை அடைந்ததாய், எல்லோரும் தவறாய் பேசியதில், குழந்தைக்காகக் கலங்கிய அவனின் வருத்தம் புரிந்து, அவள் மனதையும் குற்ற உணர்ச்சி அரித்தது.

ஆனால், அவன் சொன்ன கடைசி வாக்கியங்களில், முழுவதுமாய் உடைந்து, தன் வாழ்க்கையே கேள்விக் குறியானதை எண்ணி, அது மருத்துவமனை, பொது இடம் என்றும் பாராமல், அப்படியே மடங்கி அமர்ந்து விட்டாள். இப்படித் தன்னை விட்டு கொடுத்து செல்வான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்ல.

தன் காதலை, அவன் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற வருத்தத்திலும், துக்கத்திலும், தன் நிலைக் குறித்துச் சுயபச்சாதாபத்திலும், அவளுக்கு மடைத் திறந்த வெள்ளமாய்க் கண்ணீர் வர, அப்படியே சிலையாய் அமர்ந்து விட்டாள்.

விஜய் தான், "சஜு... சஜு...” என அவள் தோள்களை உலுக்கி, அவள் கையைத் தட்ட, எதற்கும் பலனில்லாமல் போக, அவள் கன்னத்தைத் தட்டி, அருகிலிருந்த குடிதண்ணீர் குடத்தில் இருந்த தண்ணீரை, எடுத்து வந்து தெளித்தான். அப்போதும் "அத்தான்...” என அவனைப் பார்த்து, அவளால் அழ தான் முடிந்தது.

அவனோ "இப்ப என்ன ஆச்சுன்னு அழுகுற சஜு? நீயா தான போன, அக்ஷய் வேணும், சுஷ்மி வேணும்னு... அப்போ நீ தான் போராடி உன் லைஃப அமைச்சுக்கனும். உன் காதல, உன் நோக்கத்த, அக்ஷய்க்கு புரிய வை" என எடுத்துரைத்து, அவள் கண்ணீரை நிறுத்தி, அவள் பருக தண்ணீரை நீட்டினான்.

மேலும், அவளின் கண்ணீரை "சசுஉ... சசுஉ...” என அவள் மடியில் இருந்து, தன் குட்டி கரங்களால் துடைத்து விட்ட சுஷ்மியை காட்டி, "இங்க பாரு, இந்தப் பேபியப் பாரு சஜு...” என விஜய் கூற, சஜுவும் சுஷ்மியைப் பார்த்து, தன் கன்னத்தில் இருந்த அவளின் பிஞ்சு கரங்களைப் பற்றி முத்தமிட்டாள்.

"இவளுக்காகவாது உன் காதல, அக்ஷய்க்கு, நீ புரிய வச்சு தான் ஆகணும். குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்வாங்க, இந்தத் தேவதை உன் பக்கம் இருக்கிற வரைக்கும், கண்டிப்பா நீ அக்ஷய் மனச ஜெயிப்ப சஜு... எனக்கு நம்பிக்கை இருக்கு" என அவளைத் தெளிய வைத்து, எழுப்பி, அக்ஷய் வீட்டில், விட்டு வந்தான் விஜய்.

இவர்கள் இங்கு வந்த நேரம், வைரம், சஜுவின் திருமணம் எப்படி நடந்தது என்பதைப் பற்றி அறிய, அக்ஷய்க்கு போன் செய்தார். ஆனால், அவன் எடுக்கவில்லை என்றதும், வீட்டு எண்ணிற்கு அழைத்தார். லக்ஷ்மியம்மாவும் எடுத்து பேச... இங்கு நடந்தவற்றை எல்லாம் அவர் தெரிவிக்க, மேலும் அவர்களை உடனே வர சொல்ல, அவர்களும் உடனடியாய் கிளம்பி வருவதாய்ச் சொன்னார்கள்.

சஜு, சுஷ்மியோடு, அக்ஷய் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னும், அக்ஷய் வீட்டிற்கு வரவில்லை. இரவும் ஆயிற்று, லக்ஷ்மியம்மா தான், மதியமும் சாப்பிடவில்லை, இப்போதேனும் சாப்பிட சொல்லி, வற்புறுத்தி சஜுவை சாப்பிட வைத்தார். நேரம் பத்தை நெருங்கியது, ஆனால் அக்ஷய் வந்த பாடாய் தெரியவில்லை.

சுஷ்மியும், அவளுக்கு உறங்கும் நேரமானாலும், "சசுஉ... சுஸ்பா...” என்றும், "சுஸ்பாட்டி... சுஸ்பா... ம்ஹும்... ம்... சுஸ்பா... ஆ...” எனச் சிணுங்க தொடங்க, பின் சஜு தான் ஏதேதோ கதை சொல்லி, அவளைத் திசைத் திருப்பி, உறங்க வைத்தாள்.

லக்ஷ்மியம்மாவும், "தம்பி... ஒரு நாளும் இப்படிப் பண்ணதே இல்லையே... சரி மா, நீ தூங்கு, வந்திரும் தம்பி...” எனக் கூறி விட்டு, அவரும் அவள் அருகில் படுத்து உறங்கி விட, குழந்தையைச் சமாதானம் செய்து உறங்க வைத்த சஜுவுக்கோ, ஒரு துளி உறக்கம் வரவில்லை.

இப்படியே, உறங்கா இரவாய் சஜுவுக்குக் கழிந்து, பொழுதும் புலர்ந்து, சூரியனும் தன் கதிர்களோடு வானில் வந்து, இவர்களின் வீட்டிற்குள்ளும் நுழைந்து விட்டான். ஆனால், அக்ஷய் மட்டும் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 20

அந்த வண்டியில் இருந்து இறங்கியவன் மீது, குளிர் காற்றும், மேகக் கூட்டங்களும் மோத, அந்த ரசனையான காலைப் பொழுதிலும் கூட, அவன் முகம் மலர்ச்சியற்று, ஏதோ ஒரு சோகத்தை, வலியை மனதுள் சுமப்பவனாய் நடந்தான் அக்ஷய்.

யாரும் எப்படிப்பட்ட சூழ்நிலையில், எந்த மனநிலையில் இங்கு வந்தாலும், இந்த இயற்கை வஞ்சியின் வளத்தைக் கண்டு ரசிக்காமல் போவரும் உளரோ? என்ற மமதையில் இருந்த மலைகளின் ராணியான உதகைத் தேவியே நம் அக்ஷயைக் கண்டு தோற்று தான் போனாள். அவளே அசரும் போது, அவளின் பரிவாரங்களான குளிர்காற்றும், மேக பொதிகளும், அக்ஷயைக் கண்டு அயர்ந்து தான் விட்டன.

ஆம், அக்ஷய் மனதுள், "நாம் இப்படி... யாருக்கும் தெரியாமல்... இங்கு... ஊட்டிக்கு வந்து விட்டோமே... அங்குச் சுஷ்மி இந்நேரம் எழுந்து இருப்பாளோ?... என்னைத் தேடி அழுவாளோ?... இல்லை தேடாமலே சஜுவோடு இருந்து கொள்வாளா?" எனத் தன் குழந்தையைப் பற்றி எண்ணமிட்டவாறே, அந்தத் தேயிலைத் தோட்டத்தின், நடைப் பாதையில் நடந்து சென்று, அந்தப் பங்களாவை கடந்து, அங்கு வரிசையாய்க் கட்டப்பட்டிருந்த, வரிசை வீடுகளில், ஒரு வீட்டிற்கு முன், சென்று கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்தவரோ, முப்பத்தைந்தைக் கடந்தவராய் "நீங்க அக்ஷய் தான?... உள்ள வாங்க... நல்ல வேள தம்பி, நான் வேலைக்குப் போறதுக்குள்ள சீக்கிரம் வந்துட்டீங்க... சுந்தர் எல்லாம் சொன்னாப்ல... உட்காருங்க...” என உபசரித்து விட்டு, உட்பக்கம் திரும்பி, தன் மனையாளிடம் அவனுக்கு தேநீர் கொண்டு வர சொன்னார்.

பின் தேநீர் பருகியவனிடம், "நீங்க போய், குளிச்சிட்டு வாங்க தம்பி, நான் ஆபீஸுக்கு கூட்டிட்டுப் போறேன், அப்படியே இன்னைக்கே நீங்க தங்கறதுக்கு, ஏற்பாடும் பண்ணிடலாம்" எனச் சொல்லி, அவனுக்கு ஒரு அறையைச் சுட்டிக் காட்டினார்.

அக்ஷயும் அங்கு நடந்து கொண்டே, "இந்நேரம் சுஷ்மி பால் குடித்திருப்பாள். இப்போது சாப்பிடுவாள். ஒரு வேளை, என்னை காணாது முரண்டு செய்கிறாளோ? என்னவோ?" எனத் தன் குழந்தையின் சிந்தனையிலேயே இருந்தவனை, அவனின் மனசாட்சி, "இவ்வளவு அக்கறையாய் இருப்பவன், ஏன் அவளை விட்டு வந்தாய்" என்று இடித்துரைக்க, "ம்ஹும்... நான் அங்கு இருந்திருந்தால், கண்டிப்பாகச் சஜு என் வீட்டை விட்டு போக மாட்டாள், இப்போது நான் இங்கு வந்ததால், கண்டிப்பாக வேறு வழியின்றி விஜய் சஜுவை மணந்து கொள்வான். அதனால் நான் இங்கு... இப்படி இருப்பது தான் நல்லது" எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

அங்கு நம் சுஷ்மியோ, அக்ஷய் எண்ணமிட்டப்படியே, அவனைக் காணாது அழுதுக் கொண்டிருந்தாள். ஆம், காலை எழுந்ததும், "சசுஉ...” என அவளைத் தேடியவள், பின் சஜுவின் கைகளால் முகம் கழுவி, பல் விளக்கி, ஹார்லிக்ஸ் குடித்தாள்.”என்ன இன்னும் நம் சுஸ்பாவைக் காணவில்லை" என எண்ணினாள் போல, அதனால், கையில் சிப்பரை வைத்து, அதை வாயில் வைத்து, குடித்தப்படியே, சஜுவின் மடியில் இருந்து எழுந்தவள், நேரே அக்ஷய் அறைக்குச் சென்று பார்த்தாள். அங்கு அவன் இல்லை என்றதும், குளியலறையைத் தட்டினாள், பின் இப்படியே வீடு முழுவதும் தேடினாள்.

எங்குத் தேடியும் தன் தந்தையைக் காணவில்லை என்றதும், வரவேற்பறைக்கு வந்தவள், கையில் இருந்த சிப்பரை கீழே போட்டு அனாதையாக்கி விட்டு, தரையில் அமர்ந்து கால்களைப் பரப்பி, "சுஸ்பா... ஆஆ... ஆ... சுஸ்பாஆ...” என ராகம் இழுக்க, அவளைத் தூக்க வந்த சஜுவை, "போ" என்பது போல், தலையைச் சிலுப்பி, தன் அழுகையைத் தொடர்ந்தாள்.

மீண்டும் தூக்க வந்த சஜுவைப் பார்த்து, இம்முறை "ப்போ...” எனக் கத்தி அழுதாள். தன்னைத் தூக்கியவளிடம் இருந்து, சறுக்கி கொள்ள முயன்றும், முடியாமல் போகவும், தன்னை இரு கையால் கட்டி அணைப்பது போல், இறுக பிடித்துத் தூக்கியவளின் முடியை பிடித்து இழுத்தாள் சுஷ்மி. குழந்தை தன் இரு கையாலும் இழுக்க, நல்ல வேளை, லக்ஷ்மியம்மா வந்து தடுத்து, குழந்தையின் கையை, விடுவித்தார்.

பின் "சுஸ்பாட்டி...” என அழுதுக்கொண்டே அவரிடம் தாவியவள், அவர் தோளில் புதைய, "இங்க பாரு சுஷ்மி... இப்படியா சஜுவ பண்ணுவ... உன்னால அவ அழுகுறா பாரு... அங்க பாரு" என "எல்லாம் தன்னால் தான்" என எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த சஜுவைக் காட்ட, குழந்தையோ சிணுங்கிக் கொண்டே, அவளைப் பார்த்தது.

இவள் இழுத்ததினால், முடியெல்லாம் முன்னே, கன்னம் வரை நீண்டிருக்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அந்த நிலையில் சஜுவைப் பார்த்ததும், குழந்தைக்கு என்ன தோன்றியதோ? தன் சுஸ்பாவை சிறிது நேரம் மறந்து, "இம்... ஹும்... ஹும்...” எனத் தன் சுஸ்பாட்டி தோளிலேயே சிணுங்கி, சாய்ந்து கொண்டது. அதன் பின், அவர் இடுப்பை விட்டு அவள் இறங்கவே இல்லை.

இதற்கே இவ்வாறென்றால், காலை நேர சாப்பாடு சாப்பிடும் போது, கேட்கவா வேண்டும்? தன் சுஸ்பாவை எண்ணி அழுது, அழுது, ஊரை ஒன்று தான் கூட்டவில்லை. பின்னே, அவள் சுஸ்பா ஆபீஸ் போய் விட்டதாக, லக்ஷ்மியம்மாவும், மனதில் வலியோடு சஜுவும் பொய் சொல்ல, குழந்தையும் கொஞ்சம் நம்பினாள். இப்படியே மதிய சாப்பாட்டையும் குழந்தைக்குக் கொடுக்கும் போது, வைரமும், திருச்சிற்றம்பலமும் வந்து சேர்ந்தனர்.

சஜுவோ, காலையில் இருந்து, சாப்பிடக் கூடப் பிடிக்காமல், "தன் முடிவு தவறோ?" என்றும், "தன்னால் தான் இவ்வளவு கஷ்டம் எல்லோருக்கும்...” எனத் தன்னைத் தானே நொந்தும், "சை... என்ன மனிதன் இவன்? தப்பு செய்த என்னைத் தண்டிக்காமல், இப்படித் தலைமறைவாகி, ஒன்னும் அறியா பச்சை மண்ணை இப்படி அழவைத்து துன்புறுத்துகிறானே...” என அக்ஷயை நிந்தித்தும், சூனியம் பிடித்தவள் போல், குழம்பிய மனதோடு, சுஷ்மிக்காக நடமாடிக் கொண்டிருந்த வேளையில், அக்ஷையின் பெற்றோர் வர, அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவர்களைப் பாராது, தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டே "வாங்க...” என வரவேற்று விட்டு, தலைக் குனிந்து கொண்டே லக்ஷ்மியம்மாவின் அறையில் சென்று அமர்ந்து விட்டாள். அவர்களும், இறுக்கத்துடனே உள்ளே வர, சுஷ்மி தான் "வையும்... பாட்டி... டாட்டா...” என ஆவலாய் அவர்களிடம் ஓடினாள்.

பின் வந்தவர்களுக்கு உணவிட்டு விட்டு, குழந்தையை உறங்க வைத்து விட்டு, லக்ஷ்மியம்மா நடந்ததைக் கூற, அப்படியே சஜுவின் நிலையையும் அவர்களிடம் கூறினார்.

வைரமோ, கையில் சாப்பாடு தட்டோடு, சஜுவைக் காண லக்ஷ்மியம்மா அறைக்குச் சென்றார். அவர் உள்ளே செல்லும் போது, சஜு உறங்கிய சுஷ்மியின் அருகில், அவளை வருடியப்படி அமர்ந்து இருந்தாள்.

"ஏன் தாயி... சாப்பிடாம இருக்க?" எனக் கேட்டுக் கொண்டே அவரும், அவள் அருகில் அமரப் போக... அதுவரை கால் நீட்டி அமர்ந்திருந்தவள், கால்களை மடக்கி, சுஷ்மியின் மீது இருந்து தன் கையை எடுத்து, தலைக் குனிந்துக் கொண்டாள்.

"இந்தா த்தா... சாப்பிடு" எனத் தட்டை, அவள் அருகே அவர் வைக்க, அவளோ "வேணா... வேணாம்...” எனத் தயங்கி சொல்ல, "சாப்பாடு என்ன பண்ணுச்சு தாயி... அத வேணாம்கிற, அக்கா சொன்னாக, நீ காலையிலயும் சாப்பிடலன்னு... சாப்பாடும் நமக்குச் சாமி மாதிரி தான் த்தா... அத வேணாம்னு சொல்லக் கூடாது. அதுவும் நமக்குச் சக்தி குடுக்கும் சாமி, தாயி... கொஞ்சமாவது சாப்பிடு தாயி...” எனத் தன் கையைப் பூ போலக் குவித்துக் காண்பித்துச் சொன்னார், மண்ணை மதிக்கும் அந்தத் தாயுள்ளம்.

அவளும், அவருக்காகச் சாப்பிட்டு முடிக்க, "ஏந்தாயி... நிஜமாவே எங்க அய்யன... கண்ணாலம் கட்டிக்க உனக்கு விருப்பமா தாயி... ?" எனக் கேட்டார், அவளோ தலைக் குனிந்து கொண்டே "ஆம்" என்பது போல் தலையாட்ட...

"அத முன்னேயே சொல்லக் கூடாதா தாயி... இப்படி... இவ்ளோ பெரிய மனக்கஷ்டம்... உம்ம ஆயி, அய்யனுக்கு வந்திருக்காதுல...” அவள் தன் தவறை உணர்ந்து தான் தலைக் குனிந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த வைரம், "சரி, விடு... என்னவோ ஆத்தா மகமாயி நம்மோட விளையாடுறா... அவ ஆடுற ஆட்டம் நமக்கு எங்க புரிய போகுது" என்றவர்.

மேலும் "இப்படித் தான் கண்ணாலம் பத்தியோ... சின்னப் புள்ளைக்கு ஆத்தா வேணும்... அதுக்கோசரமாவது கண்ணாலம் கட்டக் கூடாதுன்னு சொன்னாலே... இப்படித் தான் ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு திரிச்சான்... இன்னிக்கு நிசமாவே பண்ணிப் புட்டான்.” என அக்ஷயையும் அவர் திட்ட...

அவர் பேச்சுக்கு அமைதியாய் இருந்தாலும், இப்போது கொஞ்சம் தெளிந்தாள்.”ஓ... அப்படி என்றால், நம்மால்... நம்மைப் பிடிக்காமல் அவன் ஓடவில்லை. ரெண்டாம் கல்யாணம் தான் பிடிக்கவில்லையா? அவனுக்காக வேண்டாம்... எப்படியாவது சுஷ்மிக்கு அம்மா தேவை என்பதை அவனுக்குப் புரிய வைத்து சம்மதிக்க வைத்து விடலாம்.” என எண்ணும் போதே, "எங்கே? அவன் கிடைத்தால் தானே!" எனச் சொன்ன மனசாட்சியிடம் "அவன் கிடைத்து விடுவான். இத்தனை பேரின் கஷ்டத்தைப் போக்க... முக்கியமாய்ச் சுஷ்மியின் கஷ்டத்தைப் போக்கவாது, கடவுள் வழி விடுவார்" என நம்பிக்கைக் கொண்டு சிறிது நிம்மதி அடைந்தாள். ஆனால் அதுவும் சிறிது நேரம் தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

"அங்க அவர் தங்கச்சி வேற வள அடுக்கி, வீட்ல இருக்கா, புள்ள இன்னிக்கு பிறக்குமோ... நாளைக்குப் பிறக்குமோன்னு பயந்திட்டு இருக்கத்தன்னியும், கிரகம் பிடிச்சவேன் இப்படிப் பண்ணிப்புட்டான்.” எனத் தன் கவலையை அவர் சொன்னார்.

முதலில், சஜு அவர்கள் வீட்டிற்கு வந்ததை லக்ஷ்மியம்மா சொல்லவும், அங்கு என்ன பிரச்சனை எனப் பார்த்து வர, திரு மட்டும் கிளம்புவதாக இருந்தது. ஆனால் இரவு, மீண்டும் அவர்கள் அக்ஷயின் அலைப்பேசிக்கு அழைக்க, அது வீட்டிலேயே இருக்க, அதில் மீண்டும் லக்ஷ்மியம்மா பேசி அக்ஷயை காணவில்லை என்று சொல்ல, மாதம் முற்றிய பெண்ணை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு, அரக்கப்பரக்க ஓடி வந்தனர்.

இதைக் கேட்ட சஜு பதறி, "ஐயோ... இப்ப அக்காவ யாரு பார்த்துப்பாங்க?" எனக் கேட்டவளிடம், "அங்க பக்கத்துல, உறவுக்காரங்க கிட்டப் பார்த்துக்க்க சொல்லிப் புட்டு வந்திருக்கோம். மாப்பிளையும் வந்து பார்த்துக்கிடுடேன்னு சொல்லிருக்காக, இந்நேரம் வந்திருப்பாக" எனச் சொல்லவும் தான் கொஞ்சம் நிம்மதியாயிற்று.

மேலும், "ஏன்... தாயி...” என அவர் ஏதோ கேட்க வர, அதற்குள், "சுஸ்பா... இம்...” எனச் சிணுங்க ஆரம்பித்த சுஷ்மி, இருவரின் கவனத்தையும் கவர்ந்து கொண்டாள். அருகில் இருந்த சஜு தட்டிக் கொடுக்கக் கை வைத்தவள், அதிர்ந்தாள். ஏனெனில் குழந்தையின் உடம்பு நெருப்பாய்க் கொதித்தது.”ஐயோ... அம்மா சுஸுக்கு காய்ச்சல் அடிக்குது போல...” எனப் பதறிக் கொண்டே அவளைத் தூக்கினாள்.

"என்ன தாயி சொல்லுற... இப்ப கூட நல்லா தானே விளாண்டா...” என அவரும் நெற்றியில் தொட்டுப் பார்க்க, அவர் கை சுட்டது. இரண்டு நாள் அலைக்கழிப்பிலும், பயத்திலும், குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருந்தது. பின் திருவும், சஜுவும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தனர்.

சுஷ்மியும் ஊசியின் வலியிலும், மருந்திலும், மீண்டும் உறங்க ஆரம்பித்தாள். இதற்குள் மாலையாயிற்று. வேலையை முடித்து வந்த அக்ஷய், இருட்டுவதற்குள் நேராய், ஒரு தொலைப்பேசிக் கடைக்குள் சென்று, தன் நண்பன் சுந்தருக்கு போன் செய்தான். அவனிடம், எப்படியாவது தன் வீட்டிற்குப் பேசி, தன் குழந்தை எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்து, தனக்கு மீண்டும் அவன் மச்சினர் போன் மூலம் தகவல் சொல்லுமாறு வேண்டினான்.

அதே போல் சுந்தரும், அக்ஷையின் வீட்டு அலைப்பேசிக்கு அழைத்து, அக்ஷையின் தந்தையிடம் பேசினான். அவருக்கு, அக்ஷையின் தோழன் என்ற முறையில் அறிமுகமாகி, அவன் ஏற்கனவே பழக்கமாகியிருந்தான். அதனால் சரளமாய், "என்னபா... ஊருக்கு வந்திருக்கீங்களா? நல்லா இருக்கீங்களா? அம்மா, தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா?" என நலம் விசாரித்து விட்டு, "அக்ஷய்க்கு என்னப்பா ஆச்சு? ஆபீஸ்க்கு வரல... சுஷ்மி என்ன பண்றா? நல்லா இருக்காளா பாப்பா? பக்கத்துல இருக்காளா?" என ஆழம் பார்த்தான்.

அதற்குத் திரு "அத ஏய்யா... கேட்குற, அவளுக்குத் தான் மேலுக்கு முடியாம... காச்சலடிக்குது... இப்ப தா டாக்டருட்ட போய் ஊசி போட்டு வந்தோம்" எனப் பெருமூச்சு விட்டு சொல்லி, மேலும் "எல்லாம் அவங்க அய்யன், அவள விட்டிட்டு போனதால வந்தது. எங்க போனானே தெரியல, ஆபீஸுக்கும் வரலையா?" எனத் தகவல் சொல்ல,

சுந்தரும் ஒன்றும் தெரியாதவன் போல் காட்டிக்கொள்ள, அரும்பாடுப் பட்டு, "ஆமா பா... அவன் வரலன்னு... தான் போன் செஞ்சேன்...”

திரு "நீ அவன் கூட்டாளிங்க யார்கிட்டையாவது விசாரிச்சியா... நானும் எனக்குத் தெரிஞ்ச பயலுக கிட்ட விசாரிச்சிட்டு தான் இருக்கேன். உனக்கு எதுவும் தகவல் கிடச்சா சொல்லுயா... சின்னப் புள்ள அவன காணாம துடிச்சுப் போச்சு" எனச் சொல்லி அவர் வைக்கவும், அவன் உடனே அக்ஷய்க்கு போன் செய்து நிலைமையைச் சொல்லி, அவனின் வெட்டி வீம்பைக் குறை சொல்லி, அவனுக்கு உறைக்குமாறு நன்றாக நாலு கேள்வி கேட்டான்.

மேலும் தன் மனதுக்குள்ளே சுஷ்மியை எண்ணி வருத்தபட்டாலும், தன் வீண் பிடிவாதத்தை அக்ஷய் விடவில்லை. அதானே, அவன் தான் மனதை விட, மூளைக்குக் கட்டுப்பட்டே பழகியவனாயிற்றே, அதனால் மனதை கல்லாக்கிக் கொண்டான்.

இந்தப் பக்கம், சுந்தர் வீட்டு அலைப்பேசியில் பேசி முடிக்கவுமே, விஜய் போன் செய்தான். தான் அங்கு வருவதாகவும், ஏதேனும், அவளுக்குத் தேவையா எனக் கேட்க சஜுவுக்கு அழைத்திருந்தான். மேலும் சஜு, அக்ஷய் காணாமல் போனதையும், சுஷ்மியின் காய்ச்சலையும், அவனிடம் தெரிவித்து விட்டு, தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

விஜயும், அங்கு வர காரணம், முரளிக்கும், சுந்தரிக்கும் மாற்றுடை எடுத்து செல்ல தான் வந்திருந்தான். அதற்கு உதவ, வைரமின் ஒப்புதலோடு சஜுவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வந்தவனிடம் முதலில் "அத்தான் அம்மாக்கு எப்படி இருக்கு? பராவாயில்லையா?" எனக் கேட்க, "ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல சஜு... திடீர்னு பிபி ரைஸ் ஆகி, மயக்கம் போட்டுட்டாங்க. ஒரு நாள் பெட்ல இருக்கட்டும்னு சொன்னாங்க. அவ்ளோ தான். இருந்தாலும், எதுக்கொன்னும் ஸ்கேன் பண்ணிடலாம்னு, டெஸ்ட்க்காகவும், ரிசல்ட்க்காகவும் தான் இருக்காங்க. டாக்டர் இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு தான் சொன்னார். நான் தான் இங்க நிலைமை சரியில்லன்னு, நாளைக்குப் பண்றோம்னு சொல்லி வச்சிருக்கேன்" எனக் கவலைப்படத் தேவையில்லை என்பது போல் நீண்ட விளக்கம் அளித்தான்.

பின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள், சஜு அவள் அன்னைக்கு உடை எடுத்து கொடுத்து, அவனுக்கு உதவ, "உன்னோட டிரஸ்ஸையும் எடுத்துக்கோ சஜு" என அக்ஷையின் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, மறைமுகமாய் அறிவுறுத்தினான்.”ஆனா... அத்தான்...” எனத் தொடங்க வந்தவளை, "நீ எதுவும் சொல்லாத சஜு, நீ அங்க இருக்கிறது தான் நல்லது. நாம நாளைல இருந்து அக்ஷய தேட ஆரம்பிப்போம்.” எனச் சொன்னான்.

"உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு தரேன்னா அத்தான்?" என வினவியவளைப் பார்த்து, புன்னகைத்து, அவள் தலையை வருடி, "ஒரு பிரின்ட்கு ஹெல்ப் பண்றத போய் தொந்தரவுன்னு நினைப்பேன்னா சஜு...” எனப் பாசமாய்ச் சொன்னவனிடம், "ஆனாலும்... உங்களுக்கு... இப்ப தான்...” என ஆரம்பித்தவளை, "ஷ்... இதுக்கு மேல நீ இப்படிப் பேசுன... நீயாச்சு, உன் அக்ஷய் ஆச்சுன்னு விட்டிட்டு போய்டுவேன்" என மிரட்டினான்.

"சரி, சரி அத்தான்... ஆனா அவர, எப்படி... எங்கன்னு தேடுறது அத்தான்?" எனக் கேட்டாள்.”நானும் முன்ன பின்ன சிபிஐயா வேலப் பார்த்தது இல்ல... தான். ஆனாலும் நாம அவரோட ஆபீஸ்ல போய் முத விசாரிக்கலாம். எப்படியும் அங்க இன்டிமேஷன் தராம போயிருக்க மாட்டார்.” எனச் செல்லவும், சஜுவிற்கு "ஆபீஸ்" என்ற வார்த்தையில், அங்கிருந்து சுந்தர் போன் செய்தது ஞாபகம் வர, விஜயிடம் கூறினாள்.

"அப்படியா?" என்று மட்டும் கேட்டு விட்டு, அதற்கு மேல் பேசாமல், மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு, யோசனையோடு கிளம்பி விட்டான். ஆனால், வீட்டிற்குச் சென்ற பின், மறுபடியும் சஜுவிற்கு அழைத்து, ஒரு விஷயத்தைக் கூறினான். அவளும் அதைச் செயல்படுத்தி, அவனுக்குத் தகவல் சொன்னாள்.

மறுநாள் விடிந்தது, சுஷ்மி திரும்பவும், லேசான காய்ச்சலோடு தன் தந்தையைத் தேடினாள். சஜு, அவளின் நிலையைக் கண்டு ரொம்பவும் நொந்தாள். ஆனால் வைரம், "உனக்குக் காச்சல்ல கண்ணு... அதுனால சின்னக் குட்டி லேட்டாவுல எந்திரிச்சுட்டா, அப்பா ஆப்பீஸ் போயிட்டாரு. இராப்பொழுது வந்திடுவாரு சாமி... நீ மாத்திர சாப்பிட்டா வெரசா வரேன்னு சொன்னாரு" எனச் சுஷ்மியை திசைத் திருப்பிக் கொண்டே இருந்தார்.

மதியமும் நகர்ந்து, மாலையும் தவழ்ந்து, இரவாயிற்று. அக்ஷய்க்குத் தற்சமயம், ஒரு சின்ன அறையைத் தந்திருந்தனர், அதுவும் சுந்தரின் மச்சினரின் வீட்டு மாடியில் தான் இருந்தது. ஐப்பசி குளிர் வாடை வாட்ட, ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டவன், வாங்கி வந்த உணவு பொட்டலத்தைப் பிரித்து, சாப்பிட ஆயத்தமானான்.

அப்போது கதவை யாரோ தட்ட, அக்ஷயோ, கீழ் வீட்டில் இருக்கும் சுந்தரின் அக்கா தான், சாப்பிட ஏதாவது கொண்டு வந்திருப்பார் என்ற எண்ணத்தோடு கதவைத் திறந்தான். ஆனால் கதவுக்கு முன் நின்றவரை பார்த்து ஸ்தம்பித்தான். அது வேறு யாரும் அல்ல, நம் சஜு தான்.

விஜய் ஏதோ யோசித்துக் கொண்டே தன் வீட்டிற்குச் சென்றவன், மீண்டும் சஜுவிற்கு அழைத்து, சுந்தர் என்பவன், அக்ஷய் அலைப்பேசியில் அழைத்திருக்கிறானா என்று பார்க்கச் சொன்னான். மேலும் அப்படி அழைத்திருந்தால், வீட்டு அலைப்பேசியில் அவன் அழைத்த நேரத்தையும், அதில் அழைத்த நேரத்தையும் பார்த்து சொல்ல சொன்னான்.

ஆனால் நம் அறிவாளி சுந்தருக்கு தான், அக்ஷய் இங்கில்லை என்பது தெரியுமே, அதனால் அவன் யோசிக்காமல், நேரடியாக வீட்டு அலைப்பேசிக்கே அழைத்து விட்டான். இது தான் அவன் செய்த தவறு.

சஜுவும், அக்ஷையின் அலைப்பேசியைச் சரி பார்த்து விட்டு, விஜயிடம், அவன் இதற்கு அழைக்கவில்லை என்று சொன்னதும், அவனுக்குப் பொறித் தட்டியது.

நண்பன் அலுவலகத்துக்கு வரவில்லை என்றால், முதலில் அவன் அலைபேசிக்கு தானே தொடர்பு கொள்ள வேண்டும், ஆனால் இவன் ஏன் நேராய் வீட்டு எண்ணிற்கே அழைத்தான் என அவன் மீது சந்தேகம் கொண்டான் விஜய். பின் காலை, இருவரும் அக்ஷையின் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்ததற்கு, அவன் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருப்பதாகவும், அதன் எழுத்து பூர்வ படிவம் சுந்தர் மூலம் தான் வந்தது என்று தெரியவுமே, சுந்தரை முற்றுகையிட்டனர்.

சஜு தன் கண்ணீராலும், விஜய் தன் பேச்சாலும், மேலும் சுஷ்மியின் நிலையைச் சொல்லி, நயமாகப் பேசி, சுந்தரிடம் இருந்து உண்மையைப் பெற்றனர். பின் உடனடியாய் ஊட்டிக்குக் கிளம்பினார்கள்.

சஜுவோ, "இங்கிருந்து சென்றதும் இல்லாமல், அங்கேயே தங்கும் நோக்கோடு வேலையையும் பார்க்க தொடங்கி விட்டான் என்றால், அவன் எவ்வளவு உறுதியாய் தன்னை நிராகரித்திருக்கிறான்" என்றெண்ணி துன்பமடைந்தவள், மேலும் "தன்னால் குழந்தையும், தந்தையைப் பிரிந்து வாட வேண்டாம், தான் விலகிவிடுகிறேன் என்று சொல்லி, அவனை இங்குச் சுஷ்மியோடு சேர்ப்பித்து விட வேண்டும்" என்று தன் போக்கில் எண்ணமிட்டுக் கொண்டே, அந்தப் பயணம் முழுவதும் அமைதியாய் பயணித்தாள்.

ஆனால், அவனைக் காணப்போகிறோம் என்ற நிலை வந்த போது, அவன் மீது கட்டுங்கடங்காத கோபம் வந்தது. ஆம், சிறிது நாட்கள் பழகிய அவள் மீதே, சுஷ்மி உயிராய் பழகுகிறாள். ஆனால் இந்த இரண்டு நாட்களாய் சுஷ்மியும் அவளுடன் இருப்பதுமில்லை, அவள் அழைத்தாலும் செல்வதுமில்லை.

ஏனோ, இவளால், இவள் வீட்டு மனிதர்கள் தான், தன் சுஸ்பாவை திட்டி, அவரை விரட்டிவிட்டார்களோ எனக் குழந்தைக்கும் தெரிந்ததோ... அப்படி இருக்கையில், தன் உயிராய் வளர்த்த தந்தையைக் காணாமல் எப்படித் துடித்திருக்கும் அந்த இளந்தளிர். தன் எண்ணங்களைச் சொல்லி, அழக் கூடத் தெரியாத குருத்து, அவளைப் போய் இப்படித் தவிக்க விட்டானே என எண்ணியவள், அவன் கதவை திறந்ததும், ஒரு அறை வைக்கத் தான் எண்ணினாள்.

ஆனால், இரண்டு நாள் லேசான தாடியோடு, கழுத்து வரை போர்த்திருந்த சால்வையோடுக், கண்ணில் சோகத்தோடுப், பொலிவிழந்தவனைப் பார்த்தவளால், அதைச் செயல் படுத்த முடியாமல், உள்ளே வந்து அப்படியே மண்டியிட்டு அமர்ந்து, முகத்தைக் கையால் மூடி அழுதாள்.

அவன் அதிர்ந்தாலும், அவளருகே சென்று "சஜு... நீ எப்படி இங்க... ? நீயா... தான் வந்தியா?" என அவள் பின்னே யாரையும் காணாது கேட்டான்.

அவளோ அதே நிலையில் இருக்க, "ஹே... இங்க பாரு... நான் தான்... விஜயவே கல்யாணம் பண்ணிக்கோன்னு... அதுக்காகத் தான... என் குழந்தைய கூட விட்டிட்டு...” எனக் கோபமாய் ஆரம்பித்துத் திக்கி, திணறி அவன் முடிக்கவில்லை. ஆனால் அவன் குழந்தை என்ற வார்த்தையில், அவள் கோபம் உயிர்த்தெழ, இந்த இரண்டு நாட்களாய் சுஷ்மி பட்டப் பாட்டை எண்ணிப் பொங்கியவள்...

"நீங்க சொன்னா... அப்படியே செஞ்சிடனுமா... இம்? விஜய் அத்தானுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இப்ப என்ன சொல்லப் போறீங்க? வேற ஒருத்தனக் காமிச்சு கட்டிக்கோன்னு சொல்வீங்களா? வெட்கமாயில்ல உங்களுக்கு... உங்கள விரும்புற ஒருத்தியப் போய், அடுத்தவனக் கட்டிக்கச் சொல்றீங்க...” என ஆத்திரமாய் வெடித்தாள்.

நான் உனக்கானவள் என்பதை

நீ இன்னும் உணரவில்லையா?

வெண்ணிலவாய்... நீ

தேய்ந்து உன்னை மறைத்து கொண்டாலும்

தேயாது உன்னைத் தேடி வருவேன்

விண்மீனாய்... நான்.

என்றும் நான் உனக்கானவள் தான்

என்பதை இன்றேனும் உணர்ந்துக் கொள்...

யாராகியரோ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top