• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாயும் ஞாயும் யாராகியரோ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 21

அக்ஷயோ அவள் ஆத்திரத்தையும், கேள்வியையெல்லாம் ஒதுக்கி விட்டு "என்ன விஜய்க்குக் கல்யாணம் ஆகிடுச்சா? அன்னைக்கு ஹாஸ்பிட்டலப் பார்க்கும் போது கூட, விஜய் ஒன்னும் சொல்லலையே" என அதிர்ச்சியடையக் கேட்டவனை, முறைத்தவள், "எங்க... நீங்க அவரப் பேச விட்டா தானே... பேச விடாம எல்லாம் சொல்லிட்டு, நீங்க பாட்ல போய்டீங்க. அவர் போட்டிருந்த பட்டு வேஷ்டி சட்டையக் கூடவா... நீங்க பார்க்கல?" என அறிவுப்பூர்வமாய்க் கேட்டாள்.

ஆம், அன்று மருத்துவமனையில் இருந்து அக்ஷய் சென்றதும், பட்டு வேஷ்டி சட்டையில் இருந்த விஜய், சஜுவை தன் காரில் அழைத்துச் செல்லும் போது தான், சஜு அக்ஷய் பேச்சில் இருந்து வெளிவந்தாள். பின் தான், தன் அன்னை நினைவு வர, விஜயிடம் "அத்தான்... அம்மாக்கு... எப்படி இப்படியாச்சு? என்ன தான் நடந்துச்சு?" என அப்போது தான் விசாரிக்க ஆரம்பித்தாள்.

விஜய் ஒரு நிழலான இடத்தில், ஓரமாய் வண்டியை நிறுத்தி, சஜுவை விட்டு வந்த தருணத்தில் இருந்து, என்ன நடந்தது என்பதைச் சொல்ல ஆரம்பித்தான். விஜய் சஜுவை அக்ஷையின் வீட்டில் விட்டு வந்த பின்னும், அவர்களின் அப்பார்ட்மென்ட்டின் அருகேயே, எதற்கொன்றும் சிறிது நேரம் இருந்து விட்டுச் செல்வோம் என அங்கேயே ஒரு மணிநேரம் தன் வண்டியோடு காத்திருந்தான்.

வண்டியினுள்ளே இருக்கையைச் சாய்வாக்கி, கண்ணை மூடிப் படுத்து, "அடுத்து என்ன செய்யப் போகிறோமோ?" என யோசித்தான்.

விஜய் அடிப்படையிலேயே, அவன் தந்தை குணாவின் குண நலன்களோடு, பாசமும், பண்பும் கலந்து வளர்ந்தான். மேலும் வெளிநாட்டில் இருந்து பழகியதில், அங்கிருக்கும் கலாச்சாரமும், கலைகளும் அவனுள்ளே செல்லா விட்டாலும், அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, அவரவருக்குத் தான் முதல் உரிமை இருக்கிறது, என்ற தனி மனித சுதந்திரமும், அவன் பார்த்த வரையில், சக மனிதனை மனிதனாய் மதிக்கும் பண்பும் அவனுக்குப் பிடித்திருந்தது.

ஆம், அங்கு வீட்டு வேலை செய்பவர்களையோ, வண்டி ஓட்டுனர்களையோ வேலைக்காரர்கள் தானே என்று இளப்பமாய் நினையாமல், அவர்களையும் தங்களுக்குச் சமமாய்ப் பார்க்க வேண்டும். இவன் குடியிருப்பில் இருந்த "கார்பென்ட்டர்" மற்றும் "கிளீனர்கள்" எல்லாம், இவன் வரும் போதும், போகும் போதும் "ஹாய்...” எனச் சொல்வார்கள், அதே போல் இவனும் "ஹாய்...” என ஆரம்பித்துச் சிறிது நேரம் பேசி விட்டு செல்வான். ஏனெனில் இங்கு அனைவரும் சமம், அவனுக்கு அந்த வேலை பிடித்திருக்கிறது, அதைச் செய்கிறானே ஒழிய, வாழ்க்கை தரம் தாழ்வினால் அவன் அவ்வேலையைச் செய்யவில்லை.

நம் நாட்டில், குப்பை அள்ளுபவன், "தீபாவளிக்கோ", "பொங்கலுக்கோ" அப்பார்ட்மென்ட்டுக்குள் ஏறி வந்து 'தீபாவளி காசோ... பலகாரமோ... ' கேட்டால் கூட, அவர்களை அந்தப் பேச்சுப் பேசுவார்கள். இவர்கள் என்னவோ தேவலோகத்தில் இருந்து பூலோகத்துக்குக் குதித்த தெய்வப்பிறவிகள் போலும், அவர்கள் மானுடத்திலும் தாழ்ந்தவர்கள் போலும் எண்ணுவார்கள். இதனால் நம் விஜய், சிறிது காந்தியத்திலும் ஈடுபாடு கொண்டவன் எனலாம்.

அதனால் தான் சஜு, தான் அக்ஷயை விரும்புவதாகக் கூறவுமே, அவளுக்கு உதவினான். ஏனெனில் உலகத்தில் அனைவருக்கும், அவரவர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை இருந்தும், நம் நாட்டில் பெண்களுக்கு அந்த உரிமை குறைவு தான். இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.

பின், சஜு இறங்கி வரவில்லை என்று தெரிந்த நிம்மதியில், ஒரு வழியாய் கல்யாணம் நடக்கவிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் மீண்டும் வண்டியை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு, தன் அறையை நோக்கி எட்டு வைத்தான்.

திருமணம் அதிகாலையில் என்பதால், இவர்கள் அனைவரும் உள்ளூராக இருந்த போதும், வீட்டில் இருந்து ஹோட்டலுக்கு வர நேரமாகி விடும் என்பதால், அனைவரும் அந்த ஹோட்டலிலேயே அறைகள் எடுத்துத் தங்கினார்கள்.

இவர்கள் அறைகள் எல்லாம் மேலே, முதல் தளத்தில் இருந்தது. அங்கு நடந்தவன், சிறிது நேரம், அங்கு வராண்டாவில் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்தப்படி நின்றிருந்தான். அவன் மனம் சஜுவையே சுற்றி வந்தது. நல்ல பெண், பாந்தமானவள், தனக்கு மனைவியாய் அமைய கொடுத்து வைக்கவில்லை என எண்ணினான்.

விஜய்க்கு அவள் மீது பெரிதாய் காதல் இல்லை தான், ஆனாலும்... கல்யாணம்... நாளை என்ற தருவாயில், அதற்கே உரிய கல்யாண கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்திருந்தான் தான்.”ஹும்... யாரு யாருக்கு என்ன விதியோ? அது படி தான் நடக்கும் போல! சஜு அக்ஷயை விரும்பி... அவளையும் அவனிடம் ஒப்படைத்தாகி விட்டது. இனி எப்படி மற்றவர்களைச் சமாளிப்பது? என யோசிக்க வேண்டும்" எனச் சிந்தித்தான்.

மேலும் “இப்படி இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பார்க்கும் போது, இது தவறு தான், இருந்தாலும் சஜுவுக்கு இப்போது தோன்றி விட்டது. என்ன செய்வது? இப்படியெல்லாம் தனக்கு நடக்க வேண்டும் என்று இருக்கிறது போல" என விஜய் ஒரு பெருமூச்சு விட்டு, தன் அறைக்கு நடையைக் கட்டினான். விஜய் தன் அறைக்கதவைத் திறக்க போகும் போது, "மாமா...” என அழைப்பு கேட்க, திரும்பி பார்த்தான்.

யாரும் இல்லை என்றதும், பிரமை போல என எண்ணி உள்ளே செல்லப் போக...”ம்மா... மாமா...” என மீண்டும் கேட்க, இம்முறை மறுப்பக்கமும் திரும்பி, என இரு புறமும் பார்த்தான். அப்போது தான், அவன் அறையில் இருந்து, இரண்டாவது அறையின் நிலைப்படியின், பக்கவாட்டு சுவற்றை ஒரு பெண்ணின் வளைக்கரம் பற்றியிருந்தது.

உடனே யோசனையாய், யாரெனப் பார்க்க, அருகே செல்லும் போது, அந்த வளைக்கரத்தை, மற்றொரு வளைக்கரம் பிடித்து இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்க, இவன் நெருங்கும் சமயம், அவன் மீது மோதாத குறையாய் ஒரு பெண் வெளிப்பட்டாள். அதற்குள் இன்னொரு வளைக்கரத்துக்குச் சொந்தமானவள், கதவு பின்னே மறைந்து கொண்டாள்.

யாரென, அந்த வராண்டாவின் விளக்கொளியில், உற்று பார்த்தவன், "ஹே... தீபி... நீயா? நீ தான் என்ன கூப்பிட்டியா?" என அவன் வினவ, அவளோ மூச்சை வெளிப்படையாய் வெளிவிட்டப்படி, "ஆ... ஆமா மாமா...” எனச் சொன்னவள், சாடரென அவன் கையைப் பிடித்து, "உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா" எனச் சிறிது தூரம் தள்ளி, அவர்கள் அறைக்கு நேராய் இருந்த வராண்டாவின் சுற்று சுவருக்கு அழைத்துச் சென்றாள்.

விஜயை, இப்படித் தள்ளிக்கொண்டு போன பெண் தீபிகா, விஜயின் அத்தை பெண். ஆம், விஜயின் அப்பா குணாவின் தங்கை பெண். கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கிறாள்.

விஜயோ கையை விடுவித்துக் கொண்டே, "என்ன தீபி... ஏன் இப்படி இழுத்திட்டு வர?" எனக் கேட்க, "மாமா... கொஞ்ச நேரம் முன்ன, சஜு அக்காவும், நீங்களும் பேசுனத நாங்க கேட்டுட்டோம்" என நேரிடையாய் விஷயத்திற்கு வந்தாள்.

விஜய் சற்று துணுக்குற்றாலும், "சரி... அதுக்கு இப்ப என்ன தீபி? உன்ன கட்டிக்கச் சொல்ல போறியா அதுனால?" என அவன் அசராமல் கிண்டலாய் கேட்டதிலேயே, "சஜுவின் மீது நம் மாமாவுக்கு அவ்வளவாய், பெரிதாய் காதல் இல்லையோ?" என எண்ணினாலும், மேலும் "ஹும்... எனக்கெல்லாம் ஃபாரின் மாப்பிள்ள வேணாம்பா...” எனச் சொன்னவள், தொடர்ந்து "மாமா... நீங்க சஜு அக்காவ லவ் பண்ணினீங்களா?" என விசாரித்தாள்.

ஆனால் தன் சொந்த விஷயத்தை இவள் என்ன கேட்பது என்று எரிச்சலில், பொறுமை இழந்த விஜயோ "அதெல்லாம் உனக்கு எதுக்கு? பேசாம... போய்த் தூங்கு... இந்த நேரம் வரை ஏன் முழிச்சிட்டு இருக்க?" எனப் பேச்சை மாற்றினான்.

"மாமா... ப்ளீஸ்... சொல்லுங்க... நீங்க சொல்ற பதில்ல தான், ஒரு முக்கியமான விசயத்த உங்ககிட்ட சொல்லலாமா, வேணாமான்னு நான் முடிவு பண்ணனும்" எனக் கெஞ்சி, நெற்றி சுருங்களோடு அவசவசரமாய்ப் பேசியவளின் கண்களில் இருந்த உண்மை, அவனை அசைத்தது எனலாம்.

"ஆமான்னு சொல்றதா... இல்ல இல்லன்னு... சொல்றதான்னு... எனக்கே தெரியல... ஆனா, இப்ப இந்த நிமிஷம், சஜுவ என் தோழியா தான் நினச்சிட்டு இருக்கேன்" என அவனும் தன் உண்மையான நிலையைச் சொல்லவும், தீபி, "மாமா... உங்களையே ஒருத்தி உயிரா... சுவாச மூச்சா... காதலிச்சு... இப்ப உங்களுக்குக் கல்யாணம்னு சொல்லவும், நடைப்பிணமா ஆகிட்டா... அவளப் பற்றி உங்கக்கிட்ட சொல்ல தான், இவ்ளோ நேரம் காத்திட்டு இருந்தேன்.” என உண்மையைப் போட்டு உடைத்தாள்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த விஜய், ‘என்ன சொல்கிறாள் இவள்? முதலில் தான் வெளிநாட்டு மாப்பிளையைக் கட்ட மாட்டேன் என்கிறாள், ஆனால் இப்போது...’ எனக் குழம்பியவன், திடீரென மூளையில் ஏதோ உதயமானது போல் "யார்... யாரு... தீபிஈ... நீ... நீ சொல்றத பார்த்தா... ஓ மை காட்... சக்தியா?" என அதிர்ந்தான். தீபியோ "பூம் பூம்" மாடு போல், மகிழ்ச்சியோடு வேகவேகமாய்த் தலையசைத்தாள்.

"தன்னைப் பார்க்கும் போதெல்லாம், பூனைக்குட்டி போல் பதுங்கும் சக்தியா தன்னைக் காதலிப்பது? அடக்கடவுளே! நம்பவே முடியவில்லையே...” என அவன் அதிசயித்தான்.

ஆம், சித்ராவுக்கு எப்படி முரளி ஒரு தம்பியோ, அதே போல் குணாவுக்கு லதா என்ற தங்கை ஒருவர் உண்டு. ஏற்கனவே, உடன்பிறந்த தம்பியிடமே பாராபட்சம் பார்க்கும் சித்ரா தான், லதா குடும்பத்தை, அதுவும் விவசாயத்தைத் தொழிலாகச் செய்து, கிராமத்தில் இருப்பவரிடம் சொந்தமும், உரிமையும் பாராட்டப்போகிறார்.

சேலத்தில் திருமணம் முடிந்த புதிதில், புதுப் பெண்ணாய், லதாவோடு நன்றாகத் தான் பேசி, தோழியைப் போல் இருந்தார். பின் லதாவை, நிலபுலனோடு பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு விவசாயக் குடும்பத்தில் கட்டி கொடுக்கவும், குணாவும் வேலை மாற்றலாகி சென்னை வந்து விடவும், நவ நாகரீக நகர வாழ்க்கையில் தன்னைத் தொலைத்த சித்ரா, வருடம் செல்ல செல்ல, நாளடைவில் லதாவை மறந்து போனார்.

குணாவின் பெற்றோர் தெம்பாய் இருந்தவரை, இரு குடும்பமும் வந்து சென்று இருந்தனர், பின் பெரியவர்களும் தளர்ந்து போக, இவர்களின் வரவும் தளர்ந்து போனது. குணாவோடு சென்னை பட்டணத்தில் தங்களால் இருக்க முடியாத காரணத்தால், லதாவோடே அவர்கள் ஊரிலேயே இருந்து கொண்டனர் அவர்கள் பெற்றோர்.

மேலும் லதாவின் இரு பெண் குழந்தைகளான சக்தி மாரியம்மாள் மற்றும் தீபிகாவும், தன் மாமன் பிள்ளைகளைச் சிறு வயதில், அவர்கள் பள்ளி செல்லும் வரை, விடுமுறைக்கு விடுமுறை பார்த்ததோடு சரி, அதன் பின், இரு பெண்களின் பூப்பெய்திய வைபவத்தில் பார்த்தார்கள். பின் மூன்று ஆண்டுகள் செல்ல, சக்தி கல்லூரி படிக்கும் போது, அவர்களின் தாத்தா இறந்த போது, மீண்டும் சந்தித்தார்கள்.

பின் நெருங்கிய சொந்தப்பந்த விஷேசங்களில் பார்த்தால் தான் உண்டு. ஆனால் குணா சமயம் கிடைக்கும் போது, ஊருக்கு சென்று தன் அன்னையைப் பார்த்து விட்டும், அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொண்டும் உறவைத் தொடர்ந்தார். இந்தச் சிற்சில சந்தர்ப்பத்திலேயே சக்திக்கு காதல் பூக்க தொடங்கியது... அப்போது அவள் பள்ளியின் இறுதி வகுப்பில் இருந்தாள், விஜய் கல்லூரி முடிக்கும் தருவாயில் இருந்தான். அவனுக்காகவே கவிதைகள் எழுதி கற்பனை உலகில் அவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள்.

இப்படிப்பட்ட குறுகிய காலக்கட்ட சந்திப்பில் அவ்வளவாய்ப் பாராமல், பேசாமல் கூடக் காதல் மலருமா என்ன? என அதிசயித்த விஜய், நம்பாமல், "எப்போ... எப்போ இருந்து காதலிக்கிறா? எப்படி...” என வார்த்தைகளுக்குத் திணறினான். ஏமாந்து விடுவோம் என்ற பயமா? இல்லை எப்படிச் சாத்தியம் என்ற சந்தேகமா? தெரியவில்லை, விஜய் நம்பமாட்டாமல் தன் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

"இம்... அதெல்லாம் நான் சொல்லமாட்டேன் பா... உங்க காதல் நாயகி கிட்டயே கேட்டுக்கோங்க" என மானாய் ஓடி சென்று, தன்னை விட நான்கு வயது பெரியவளான, தன் அக்காவின் கரங்களைப் பற்றி, அவள் மறுக்க மறுக்க, இவள் இழுத்து வந்து விஜய் முன் நிறுத்தினாள். நிறுத்தியதோடு நில்லாமல், "மாமா... ப்ளீஸ் மாமா... எங்க அக்காவ கட்டிக்கோங்க மாமா... நாளைக்கு உங்க கல்யாணமும் நிற்காது, நம்ம குடும்பக் கௌரவமும் போகாது...” எனப் பெரிய மனுசியாய் சொல்லிவிட்டு, பூனை நடை போட்டுத் தங்கள் அறைக்குள் சத்தமில்லாமல் புகுந்து கொண்டாள்.

தன் எதிரே, அடர் நீலமும், வெள்ளையும் கலந்த சுடிதாரில், லேசாய் கலைந்த தலையுடனும், அழுது சிவப்பேறிய விழிகளோடும், அவனைக் கண்டதில் மேலும் கலங்கும் கண்ணோடு தலைக்குனிந்து, துடிக்கும் இதழோடு, துப்பட்டாவை இருப்பக்கமும், இரு கைகளால் இறுக பிடித்திருப்பதிலேயே, அவள் நடிக்கவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது. மேலும் உணர்ச்சிவயப்பட்டவளாய், "மாமா... என்ன தப்பா... நினக்காதீங்க...” என்று அவள் சொன்னதிலேயே, விஜய் கரைந்து விட்டான்.

அப்போது சரியாய், அவன் அலைபேசி அழைக்க, யாரென்று எடுத்து பார்க்க, அவன் அறையில் இருந்த நண்பன் தான் அழைத்திருந்தான்.”டேய்... என்னடா தங்கச்சிக் கூடப் பேசப் போறேன்னுட்டு... எவ்ளோ நேரம் டா... நானும் வெயிட் பண்ணி, வெயிட் பண்ணி தூங்கியே போயிட்டேன். பார்த்து டா... நாளைக்குத் தான் டா பர்ஸ்ட் நைட்... இன்னிக்கு இல்ல டா" எனச் சமயம் தெரியாமல், அவனுக்கும் பேச சந்தர்ப்பம் அளிக்காமல், நீளமாய்ப் பேசியவனிடம்,

"ஹே... ஏன் டா... நீ வேற... , நான் இங்க தான்... வரண்டாவில தான் இருக்கேன், வந்துடுறேன் டா" என வைத்தான். விஜயின் நண்பனோ, எதற்கும் சரிப்பார்த்துக் கொள்ளலாம் என, கதவைத் திறந்து, அவன் இருப்பதைப் பார்த்து விட்டு, "அப்படி என்ன தான் பேசுவாயிங்களோ...” எனக் காத்திருந்தக் கடுப்பில், நொந்து உள்ளே போனான்.

விஜயோ "சொல்லு சக்தி... எப்படி... எப்போ இருந்து என்ன காதலிச்ச?" எனக் கதைக் கேட்க ஆரம்பிக்க, சக்திக்கோ "தன் காதலை இவன் நம்புவானா?" என்ற அவநம்பிக்கை எல்லாம் இல்லை, ஆனாலும் ஒரு பெண் விஜயை விட்டுப் போகவும், தான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுயநலவாதி எனத் தவறாய் எண்ணி விடுவானோ என்ற மனநிலையில், "அது... வந்து...” என அவள் வருவதற்குள், ஒளிந்திருந்து, இவர்களைப் பார்த்துக் கொண்டு, திருட்டுத்தனம் செய்து கொண்டிருந்த தீபி வந்து விட்டாள்.

வந்தவள், "மாமா... இவ சொல்றதுக்குள்ள விடிஞ்சிடும்...” எனத் தன் அக்கா, அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, இவன் வந்து சென்றதில் இருந்து, அவள் அவளாய் இல்லாமல், காதல் வயப்பட்டதைக் கூறி, இன்று இவனுக்கு நிச்சயம் வரை வந்து, இவனைச் சஜுவோடு ஜோடியாகப் பார்த்து, மனமுடைந்து அழக் கூட முடியாமல் தவித்தவளை, தனிமைப் படுத்தவே, தீபி அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு, அவளை இழுத்துக் கொண்டு உணவகத்திற்கு வந்ததாகவும், இவர்கள் பேசியதைக் கேட்டு, அவர்கள் அறைக்கு வந்து, இவனுக்காகக் காத்திருந்து, சக்தி தடுக்கத் தடுக்க, இவள் உண்மையைக் கூறியதாக முழுவதையும் கடகடவெனக் கூறி முடித்தாள்.

ஆனால், அவள் அக்கா சக்தியோ, சக்தியற்று, தன் புராணத்தைத் தங்கை சொல்ல சொல்ல, உணர்ச்சிவயப்பட்டுக் கண்ணீர் உகுந்தாள். மேலும் "மாமா... நீங்க தான், ஏதாவது செஞ்சு... சமாளிச்சு எங்கக்காவ கல்யாணம் பண்ணிக்கணும்" எனத் தீபி தெளிவாய் கூறி முடிக்க, விஜயோ "இம்... எல்லாத்தையும் சமாளிக்கத் தான் நான் இருக்கேனே...” எனத் தனக்குள் முனங்கி சிறிது கோபம் கொண்டான். அவனுக்கு அப்போது தெரியவில்லை, உரிமை உள்ளவர்களிடம் தான் கோபம் கொள்ள முடியும் என்று.

பின், எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, இருவரையும் அறைக்குள் போகச் சொல்லி, செல்லும் போது சக்தியை மட்டும், அவள் கரம் பற்றித் தடுத்து, "நாளைக்கு எங்கக் குடும்பக் கௌரவத்தக் காப்பாற்ற, எனக்குக்கடவுள் தான், உன்ன அனுப்பி வச்சதா தான் நினைக்கிறேன், அதுனால உன் காதல நான் மனப்பூர்வமா நம்புறேன்" எனக் கூற, அவளோ அவனை நன்றியோடுப் பார்த்தாள்.

அதன் பின், விஜய் தன் நண்பனோடு ஆலோசித்து, தன் தந்தையிடம் முதலில் விஷயத்தைக் கூறி, பின் அவர் மூலமே பக்குவமாய் லதா மற்றும் அவர் கணவரிடம் கூறி சம்மதம் வாங்கினாலும், சித்ராவை எண்ணி அவர்கள் கவலைக் கொள்ள, ஆனால் தந்தையும் மகனும் அவர் இடையூறு செய்யாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்கள்.

பின் மீண்டும் தந்தையும் மகனும், முரளி மற்றும் சுந்தரியிடம் மிகப் பக்குவமாய் விஷயத்தைச் சொல்ல, விஜயோ ஒரு படி மேலே போய், தன் அத்தையிடமும், மாமனிடமும் காலில் விழுந்தே மன்னிப்பு வேண்டப் போக, அவர்களும், வேறு வழியின்றி, நடந்ததை மாற்ற முடியாது என்ற நிதர்சனத்திலும், தங்கள் மகள் போல் தான் சக்தியும், அவளின் காதல் வெற்றி பெறட்டும் என்ற நல்ல எண்ணத்திலும், ஏற்றுக் கொண்டனர்.

எல்லாக் காரியங்களும், மள மளவென நடக்க, சித்ராவுக்கு மட்டும் உண்மை தெரியாமல், மணமேடை வரை கல்யாணத்தைக் கொண்டு சென்று விட்டனர். ஏனெனில் சித்ரா இதைப் பெரிய பிரச்சனைப் பண்ணுவார் என்று எதிர்பார்த்தப்படியால், அவரிடம் உண்மையை மறைத்து விட்டனர்.

மேலும் அவர், இந்தக் கல்யாணத்தில் ஈடுப்பாடு இல்லாமல் இருந்ததினால், தன் அறையை விட்டு மணமகள் அறையைக் கூட எட்டிப்பர்க்காததால், அவர்களுக்கும் சாதகமாயிற்று. விஜய் தன் தங்கை பிரியாவிடம் பாசமாய் விசயத்தைக் கூறி, எப்படியாவது, தாலி கட்டும் வரையிலாவது, சித்ராவின் கண்ணில் மணப்பெண் படாதவாறு, பார்த்துக் கொள்ளச் சொன்னான்.

எல்லாம் நல்ல படியாய் நடக்க, விஜயும் சக்தி கழுத்தில் தாலி கட்ட, தம்பதி சமேதரராய் ஆசீர்வாதம் வாங்கும் போது, சக்தியைப் பார்த்து அதிர்ந்து வெகுண்ட சித்ராவை, தன் கை அழுத்தத்தினால் அடக்கினார் குணா. பின் வந்த சுற்றத்தார்களிடம், குனாவே மைக் பிடித்துத் தன் பையனும், மருமகள் சக்தியும் காதலித்த விஷயம் கடைசி நேரத்தில் தெரிந்து, சஜு விட்டு கொடுத்து விட்டதாகக் கூறி, சமாளித்தார்.

சித்ராவுக்கு, தன் மகன், சஜுவை கட்டுவதிலேயே விருப்பமில்லை, இதில், அவர்களை விடத் தனக்கும், தன் குடும்பத்துக்கும் பொருத்தமே இல்லாத லதாவின் குடும்பத்தில் பெண் எடுத்தது, அதை விட அவமானமாய்க் கருதினார்.

பின் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுக் கொதித்து எழுந்தார். ஏற்கனவே, தன் பெண்ணுக்கு நடக்க வேண்டிய திருமணம் இப்படியாயிற்றே என்ற மன அழுத்தத்தில் இருந்த சுந்தரி, சித்ராவின் சொற்தாக்குதலால் இரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்தார். அதற்கும் சித்ரா, சஜுவையே காரணம் காட்டி, முரளியை மூளைச் சலவைச் செய்தார்.

ஆனால் இவர்கள் திருமணத்தில் முழுமையாகச் சந்தோஷமடைந்த ஜீவன் நம் தீபிகா தான், அன்று உணவகத்திலும் சந்தோஷப்பட்டவள் இவள் தான், இன்றும் தன் அக்காவின் காதல், மயிரிழையில் தப்பி, கைக்கூடிய மகிழ்ச்சியில், "ஏடு குண்டலவாடா... வெங்கட்ரமணா... கோவிந்தா... என் அப்ளிகேஷன்ன சாங்க்ஷன் பண்ணதுக்கு, எங்க விஜய் மாமா வந்து, உன் சன்னிதானத்துல மொட்டப் போட்டுக்குவார் பா...” என வீடு வந்த விஜயின் காதில் விழுகுமாறு கூறியவளின் காதைப் பிடித்துப் புன்னகையோடு திருகினான்.

ஒரு வழியாய் எல்லாக் கலவரமும் அடங்க, அன்று இரவு தனிமையில், சஜுவைப் பற்றி, அவளின் நிலையைப் பற்றிக் கூறிய தன் கணவனிடம், சக்தி "மாமா... ஒரு விதத்துலப் பார்த்தா... சஜு அக்கான்னால தான், அவங்க காதலால தான்... எனக்கு நீங்க கிடைச்சீங்க. அதுனால அவங்க காதல் நிறைவேற நாம உதவி செய்யணும் மாமா... ப்ளீஸ்...” எனக் கூற, மனைவி ப்ளீஸ் போட்ட பின்னும், செய்யாமல் இருப்பானோ நம் விஜய்?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 22

அதிர்ந்த அக்ஷயிடம், விஜயின் திருமண விவரத்தைக் கூறி முடித்த சஜ்னா, "இப்ப என்ன செய்யப் போறீங்க? சொல்லுங்க?... இன்னும் வேற யார கைக் காமிச்சு, கல்யாணம் செய்யச் சொல்லப் போறீங்க?" என்று எழுந்து அவன் போர்த்தியிருந்த சால்வையை, அவன் கழுத்து பகுதிக்கு கீழே, இரு கரங்களாலும் பற்றிக் கேட்டாள்.

ஏற்கனவே சஜு தன்னைத் தேடி, ஊட்டி வரை வந்ததையே அவனால் இன்னும் நம்ப முடியவில்லை, நம்பினாலும், "ஒரு பெண்ணுக்கு இவ்வளவு காதலா? இவ்வளவு வைராக்கியமா?" எனப் பிரமித்த வேலையில், விஜயின் திருமணம் பற்றி அவள் கூறவும், "ஒரு வேளை, விஜய் மீது சக்தி வைத்திருக்கும் உண்மையான காதல் தான், அன்றிரவு சஜுவை வெளியேற்றியதோ? அது தான் அவளை இப்படிச் செய்ய வைத்து விட்டதோ... ?" எனக் கண்ணுக்கு புலப்படாத மனதின் எண்ண அலைகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

இதுவரை எதில் எதிலோ, காதல் கதையைப் படித்திருக்கிறான், எங்கெங்கோ நடந்த காதல் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான், ஆனால், இன்று தான், நேரிடையாக அதுவும், இரு பெண்களின் உணர்வுப்பூர்வமான, உண்மையான, தூய்மையான காதலைக் காண்கிறான்.

அதிலும், ஒருத்தி, தன்னை நேசிக்கிறாள்... நேசித்ததற்குச் சான்றாய், தன்னைத் தேடி, அலைந்து இத்தனை தூரம் வந்திருக்கிறாள். என எண்ணிய மாத்திரத்திலேயே... மீண்டும் ஞாபகம் வந்தவனாய்... அக்கறையாய் "ஏன் சஜு... இவ்வளவு தூரம் நீ தனியா தான் வந்தாயா?" எனக் கேட்டான்.

உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவள், மறுப்பாய் "இல்லை" என இடவலமாய்த் தலையசைத்தவள், அவன் மீதிருந்த கையை எடுத்து விட்டு, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "நானா வரல... எனக்குத் துணையா... அத்தானும், சக்தியும் வந்திருக்காங்க.

புதுசா கல்யாணமான அவங்களுக்கு என் கூட வரணும்னு என்ன தலையெழுத்தா? எல்லாம் ஒரு அன்பு தான்... என் மேலையும், உங்களையே நினச்சு அழுதிட்டு இருக்கக் குழந்த மேலையும் இருக்கும் அக்கறை தான் காரணம்.” என்று கூறியவள், மேலும் சுஷ்மி அவன் இல்லாது தவித்ததைக் கூற, அவனோ தன் கை முஷ்டியை இறுக்கி, முகத்தைச் சுருக்கி, தன் மன வேதனையை அடக்கினான்.

மேலும் "நான் ஒன்னும், என்ன கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்சுறதுக்காக... உங்கள தேடி வரல, சுஷ்மிக்காக... அவளோட தவிப்ப போக்குறதுக்காகத் தான், உங்கள அவ கிட்ட ஒப்படைச்சிட்டுப் போகத் தான் வந்தேன்" என்று சற்று தெளிவாய் கூறியவள், "நாளைக்குக் காலைல கிளம்பனும், ரெடியா இருங்க, திரும்பவும் எங்கயாவது ஓடி ஒளியலாம்ன்னு நினைக்காதீங்க... அதுக்கு அவசியமில்ல... ஏன்னா நானே உங்கள விட்டு விலகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...” என்று சொல்லிவிட்டு வெளியேறி, கீழே சென்று விட்டாள்.

சஜு, சக்தி, விஜய் என மூவரும், வருவதை முன்பே சுந்தர் தன் அக்காவிடம் சொல்லி, அவர்களை அங்கேயே தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்தான். அதனால் பெண்கள் இருவரும், ஒரு அறையிலும், விஜய் அங்கு முன்னறையிலும் படுத்து கொண்டனர்.

விஜய் சென்னையில் இருந்து, தனியே சஜுவுடன் சென்றால், தன் அன்னைக்கு நாளை விஷயம் தெரிந்தால், தாளித்து விடுவார் என்று எண்ணியவன், தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊட்டி செல்வதாக, சித்ராவிடம் கூறினான்.

உடனே சித்ரா, "ஏன் டா, இங்க என்ன பகுமானத்துல இருக்கோம். உனக்கு ஊட்டி கேட்குதா? உங்கப்பா அங்க ஆஸ்பத்ரில காலையிலயும், சாயிந்திரமும் போய்க் காவல் காத்திட்டு இருக்கார். நல்லா இருக்கு டா நியாயம்...” எனப் பேச்சு அவனிடம் இருந்தாலும், அவரின் பார்வை சக்தியிடம் இருந்தது.

சக்திக்கு ஏற்கனவே, உள்ளுர உதறல் தான், இருந்தாலும் விஜய் தான் தைரியம் சொல்லி, நிலைமையை விளக்கி சம்மதிக்க வைத்தான். அதன் பின்னரே, இதோ... இப்போது தான் தாயிடம் அனுமதி வேண்டினான்.

விஜய் உடனே "அம்மா... அதான் அத்தைக்கு ஒன்னும் இல்ல, திடீர்ன்னு பிபி ரைஸ் ஆகிடுச்சு. இப்ப பூரணமா குணம் ஆகிடுச்சுன்னு டாக்டர் தான் சொல்லிட்டாருல மா... இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கலாம். அதான் அப்பா நான் பார்த்துக்குறேன், நீங்க போயிட்டு வாங்கன்னு சொன்னாரு மா" எனத் தன் தந்தையைக் கைக் காட்டி விட்டு, அவசரமாய்க் கிளம்பியே விட்டான்.

சித்ரா "இருக்கட்டும், போயிட்டு இங்க தான வரணும், அப்போ பார்த்துக்குறேன்" என மனதுள் எண்ணிக் கொண்டார்.

மறு நாள் காலை, அழகாய் விடிய, சஜு எழுந்து கிளம்புவதற்குள், முதல் ஆளாய், மாடியில் இருந்து சிறிய பையும், கையுமாய்த் தயாராகிக் கீழே வந்து நின்றான். விஜய் கூட, தன் மனைவியுடன் கிளம்பி இருக்கவில்லை.

பின் தயாராகி வந்த விஜயிடம், "அத்தான்... நீங்க இங்கிருந்து சுற்றி பார்த்திட்டு, வாங்க. நாங்க முன்னாடிப் போறோம்" என்று மட்டும் சொன்னாள்.

ஆனால் விஜயோ "ஏன் சஜு... நாம எல்லோருமே போலாம்... நான் இங்கிருந்து என்ன பண்ணப் போறேன்?" என்று கேள்வியாய் கேட்க, சக்தியும் "ஆமா... அக்கா... நாங்களும் வர்றோம்" என்று கணவனோடு ஒத்து பேசினாள். இருவருக்கும், எங்கே மீண்டும் அக்ஷய் எங்காவது போய் விடுவானோ என்ற பயம் தான் காரணம்.

ஆனால் சஜு தான் "அத்தான்... சக்தி... போதும், நீங்கள் இருவரும் எனக்காகப் பாடு பட்டது. இனியும் நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் மீது அன்பிருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று அன்பு மிரட்டலோடு அவர்களை அங்கேயே விட்டு விட்டு, அக்ஷயோடுக் கிளம்ப தயாரானாள். அக்ஷயோ நடப்பதையெல்லாம், பார்வையாளனாக மட்டுமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன் பின் இருவரும், காலை உணவு உண்டு விட்டு, சுந்தரின் அக்கா, மச்சானிடம் நன்றி தெரிவித்து விட்டு, பேருந்து நிலையம் சென்றனர். அங்கிருந்து கோவை சென்று, அதன் பின் அங்கிருந்து நேராய் சென்னை செல்லும் பேருந்தில் ஏறினார்கள். இருவரும் அருகருகே இருவர் அமரும் இருக்கையில், நெருக்கமாய் அமர்ந்தும், நெருக்கம் இல்லாத மனநிலையோடு பயணித்தனர்.

இரண்டு நாளும், இவனைக் காணாது இருந்த மன அழுத்தத்தினாலும், சுஷ்மியின் காய்ச்சலினாலும் உறங்காமல்... இல்லை... உறக்கம் வரமால் இருந்தவள், இப்போது சற்று நிம்மதியாய், லேசான மனதோடு கண்ணயரத் தொடங்கினாள்.

இது அவளுக்கே தெரியவில்லை, தான் ஏன் இப்படி நிம்மதியாகத் தூங்குகிறோம்? என... ஏனெனில், அவனைச் சுஷ்மியிடம் ஒப்படைக்க மட்டுமே போகிறாள்... அவனை விட்டு செல்ல முடிவெடுத்தும் விட்டாள்... ஆனால்... அவன் அருகில் இருக்கும் நிம்மதியோ? அவளுக்கு உறக்கத்தைத் தந்தது, தெரியவில்லை.

உறங்கும் அவளையே இமைக் கொட்டாது, ஓரக்கண்ணால் பார்த்தவன், "ஏன் இறைவா, இவளுக்கு என்னையும், சுஷ்மியையும் காண்பித்தாய்? இவள் என்னுடன் வாழ வேண்டியவளா? வேண்டாம்... இவள் கொண்ட காதலில் பாதிக் கூட, நான் அவள் மேல் வைக்கவில்லை. நான் இவளுக்குப் பொருத்தமானவன் அல்ல. ஆனால் இவளோ எனக்காகவும், என் குழந்தைக்காகவும் ஏன் இபப்டி கரைகிறாள்? என் ஜனனி என்னை விட்டு மறைந்தது கூட இவளுக்காகத் தானா? இவள் என்ன போன ஜென்மத்தில் விட்டக் குறை தொட்டக் குறையோ?" எனப் பலவிதமாய் எண்ணி, சஜுவை மணக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், அவளின் அன்பு வெள்ளத்தில், தத்தளித்துப் போராடிக் கொண்டிருந்தவன், அப்படியே அவனை அறியாமல், அவனும் உறங்கி விட்டான்.

பின் பேருந்து ஒரு உணவகத்திற்கு முன் ஓரமாய், மதிய சாப்பாட்டிற்காக இருபது நிமிடம் நிறுத்தப்பட, அனைவரும் இறங்கினர். அக்ஷயோ விழித்த சஜுவிடம், "வா... போய்ச் சாப்பிடலாம்" என அழைத்தான், அவளோ "எனக்குப் பசிக்கல... நீங்க வேணா போய்ச் சாப்பிட்டு வாங்க" எனக் கூறிவிட்டு, ஜென்னல் பக்கம் திரும்பி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

பின் அக்ஷய் இறங்கி, உணவகத்திற்குச் சென்று சாப்பிடாமலே, ஒரு சாம்பார் சாதமும், தக்காளி சாதமும், ஒரு தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்தான். அவன் பேருந்தில் ஏறும் போது, அவர்கள் இருக்கையில், சஜு இல்லை. சுற்றும், முற்றும் பார்த்தான், பின் அவள் ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வருவது தெரிய அமைதியானான். வந்தவளிடம், இரு பொட்டலத்தையும் திணித்து, சாப்பிடச் சொன்னான். அவளோ தனக்குச் சாம்பார் சாதம் போதும் எனத் தக்காளி சாதத்தை அவனுக்குத் தள்ளி விட்டாள்.

பின், மீண்டும் பேருந்து மாலையில், ஒரு கால் மணிநேரம் நிறுத்தப்பட, சஜு "எனக்கு டீ வேணும்" எனக் கேட்க, அக்ஷயும் இறங்கி சென்று வாங்கினான். ஆனால் இம்முறையும், அவன் டீயோடு பேருந்து ஏறும் போது, அவள் இருக்கையில் இல்லை.

அக்ஷயோ "சரி, எங்காவது ரெஸ்ட் ரூம் சென்றிருப்பாள். வந்து விடுவாள்.” என எண்ணி காத்திருக்க, பேருந்தில் பயணிகள் அனைவரும் வந்து விட, நடத்துனரும் வந்து சேர்ந்த பின்னரும், இவள் மட்டும் வரவே இல்லை.

மேலும், ஓட்டுனரும் வந்து பேருந்தை இயக்கவும் தொடங்க, அக்ஷயோ பதறி "சார்... ஒரு நிமிஷம், என் கூட வந்தவங்க இன்னும் வரல...” எனப் பேருந்தை நிறுத்த, நடத்துனரோ "என்ன சார்... வண்டி கால்மணிநேரம் தான் நிற்கும்னு சொல்லிட்டு தான சார் போனேன்... யார் சார் உங்க கூட வந்தா?" எனக் கேட்டார்.

அவனோ "அவங்க என் ப்ரென்ட் தான்... ஒரு நிமிஷம்... நில்லுங்க சார்... நான் போய்ப் பார்த்திட்டு வரேன்...” என அவன் இறங்கி ஓட, பயணிகள் அதற்குள் சலசலக்க... நடத்துனரும் ஓட்டுனரும் எரிச்சல் பட, அவளை மேலோட்டமாய்த் தேடி, அவள் கிடைக்காமல் போக, ஒரு நிமிடத்தில் திரும்பி வந்த அக்ஷயிடம், "என்ன சார்... ஆச்சு?" என எரிச்சலாய் கேட்டார் நடத்துனர்.

வந்தவனோ, தன் பையை எடுத்துக் கொண்டு, "அவங்கள காணோம்... நீங்க போங்க சார்...” எனக் கீழே இறங்க, அவர்கள் பக்கத்தில் இருந்த பயணிகள், "அச்சச்சோ... பொம்பள பிள்ளையே... எங்க போச்சோ?" எனச் சிலர் அங்கலாய்க்க, சிலர் அவனை இரக்கப்பார்வை பார்த்து, "நல்லா தேடிப் பாருங்க தம்பி... கிடச்சிடுவாங்க" என ஆறுதல் குரல்களோடு, பேருந்தும் அவனை விட்டு விலகியது.

இப்போது மீண்டும், அக்ஷய் தீவரமாய் அங்கிருந்த பலகாரக் கடையில், உணவகத்தில் என எல்லா இடத்திலும் தேட, ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாய் இருக்க, மாலை மயங்கும் நேரம் ஆரம்பித்து, இருட்ட வேறு தொடங்க, அப்படியே அந்த இடத்திலேயே, ஒரு மேஜை முன் அமர்ந்து விட்டான்.

"ஐயோ... இவள் எங்குப் போனாளோ?... இருட்ட வேறு ஆரம்பித்து விட்டதே... எங்கும் மயங்கி விழுந்து விட்டாளா? அல்லது யாரும் கடத்திக் கொண்டு போய் விட்டார்களா?... சீச்சீ... அப்படியெல்லாம் நடக்காது... இப்போது அவள் அப்பா அம்மாவிற்கு என்ன சொல்வேன்?" என அதிர்ந்து, அவளைக் காணாது பரிதவித்துக் கொண்டிருந்தவனுள்... “எல்லாம் என்னால் தான்... என்னைத் தேடி வந்து... இப்போது அவளே காணாமல்... ச்ச... நான் ஓடி வந்தது தான் பிரச்சனையாகி விட்டது... என்னைக் காதலித்ததைத் தவிர அவள் எந்தத் தப்பும் செய்யவில்லை. ஐயோ... என்னைத் தேடி வந்த பொக்கிஷத்தை... நானே தொலைத்து விட்டேனே... ஆம்... என்னால் தான்...” என இரு கைகளாலும், முன் தலையைத் தாங்கிக் கொண்டு, குனிந்தவன் கண்ணில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர், கழிவிரக்கத்தால் சிந்தியதா? இல்லை தான் சஜுவை தொலைத்து விட்டோமே எனக் குற்ற உணர்வில் சிந்திற்றோ?

மேலும் அவளை எண்ணி, அப்படியே கண் மூடி, கலங்கியவன் முகத்தில் சூடான ஆவி வந்து தாக்க, கண்ணைத் திறந்து பார்த்தால், எதிரே சஜு அமர்ந்து இருந்தாள். ஆம், சஜு தான், அக்ஷய் செய்த காரியத்திற்கு, அவனை உணரவைக்க வேண்டும் என்று தான், வேண்டுமென்றே டீ வேண்டும் எனக் கேட்டு, அவன் இறங்கிய பின், தன் கைப்பையோடு இறங்கி, அங்கு நிற்கும் ஓவ்வொரு பேருந்து பின்னே தன்னை மறைத்து, அவனைக் கண்காணித்தாள்.

அவன் தன்னைத் தேடவும், அவளுக்கு மகிழ்ச்சி பொங்கியது தான், ஆனால் அது நீர் குமிழ் போல் சிறிது நேரத்திலேயே உடைந்தும் விட்டது.”இவன் என்ன உன் மீது உள்ள காதலால் தேடுகிறான்... அவனுடன் வந்தாயே... உன்னைக் காணவில்லை என்றால், விஜய்க்கும், உன் அப்பா அம்மாவிற்கும், என்ன பதில் சொல்வது என்று... அதற்காகத் தான் தேடுவான்.” என மனசாட்சி கூறவும், "அதானே இவனாவாது என்னைக் காதலோடு உருகி தேடுவதாவது" என வருத்தத்தோடு எண்ணி, அவனை நன்றாக அலைய விட்டாள்.

அவன் கலங்கிய கண்ணோடு நிமிரவும், "என்ன? இப்ப பதறுதா மனசு?... கூட வந்தவள தொலச்சுட்டோமே... அவ அப்பா அம்மாவுக்கு, எல்லோருக்கும் என்ன பதில் சொல்றதுன்னு பதறுதா... உங்களுக்கே இப்படிப் பதறுதுன்னா... அப்பாவ காணாம துடிச்ச... உங்க பொண்ணுக்கு... அதுவும் சின்னக் குழந்தைக்கு எப்படி இருந்திருக்கும்?...” எனக் கேட்டாள். ஏனெனில் அவளுமே அவனைக் காணாது துடித்தவள் தானே!

அவனுக்கு என்ன இதெல்லாம் தெரியாமலா?... இல்லை புரியாமலா இருக்கும், ஆனால் அவன் தன் பெண்ணிற்கும் மேலே சஜுவின் மீது அக்கறை இருந்ததால் தான், அவள் வாழ்க்கை தன்னால் கெட வேண்டாம் எனத் தான் சென்றான். எப்படியும் தன் பெண் தன்னைத் தேடுவாள் தான்... ஆனால், தன் தாய் தந்தை, அவளைப் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிந்து தான் சென்றான்.

அதனால் அக்ஷயோ "எல்லாம்... உன்னால... உன்னால் தான்டி... இவ்வளவும் பண்ணேன்" எனக் கத்தி, டீயை கையால் தள்ளிவிட்டு, கோபத்தோடு எழுந்தான்.

எழுந்தவன், அவள் அருகே வந்து, அவள் முழங்கையைப் பற்றி எழுப்பி, "உன்ன... எவன்... டி... என்ன காதலிக்கச் சொன்னான்?... என் பிள்ள மேல பாசம் வைக்கச் சொன்னான்? உன் வாழ்க்கை என்னால கெடக் கூடாதுன்னு... நீ நல்லவடி... உனக்கு நான் பொருத்தமானவன் இல்ல... நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்... அதோட... எனக்கு...” என அதற்கு மேல் சொல்ல முடியாமல், கோபமாய் ஆரம்பித்து, இரக்க குரலில் முடித்து, அவள் அருகே இருந்த நாற்காலியிலேயே மீண்டும் அமர்ந்தவன், மேஜை மீது வைத்த தன் கை முஷ்டியை மடக்கி, தொண்டைக் குழி ஏறி இறங்க... தன்னைத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தினான்.

தான் அவன் தவறை சுட்டிக் காட்டினால், உணர்வான் என்று சஜு எதிர்ப்பார்த்திருக்க, ஆனால் அவன் தன்னையே குற்றவாளியாக்கி, கூண்டில் ஏற்றவும் ஸ்தம்பித்தாள்.

அதற்குள், அவன் கோபத்தோடு கத்திய கத்தலில், அனைவரும் இவர்களை வேடிக்கைப் பார்க்க, ஒரு சிலர், அருகே வந்து "என்னமா... என்ன பிரச்சனை?" என உதவ முன் வர... அதற்குள் சுதாரித்த அக்ஷய் "ஒன்னும் இல்ல சார்...” என மொழிய, ஆனால் அவனை நம்பாமல், சஜுவிடமே அவர்கள் கேள்வி கேட்க,

அக்ஷய் அவள் கைப் பற்றி உலுக்கி, "கேட்குறாங்கள... பதில் சொல்...” எனச் சொல்ல, "ஒன்னும் இல்லங்க... நாங்க ரெண்டு பேரும் தான் வந்தோம்... பஸ்ஸ என்னால மிஸ் பண்ணிட்டாரு... அதான் சத்தம் போட்டாரு...” எனப் பாதி உண்மையைச் சொல்ல,

"ஓ... அப்படியா... அதுக்கா தம்பி இப்படித் திட்டுவீங்க... எங்க போகணும்?" எனக் கேட்டு, அவர்களின் பதிலில், பின் அந்த உணவகத்தின் உரிமையாளரே, அவருக்குத் தெரிந்த ஓட்டுனரிடம் சொல்லி, அவர்களைச் சென்னையில் இறக்கிவிடுமாறு அந்தப் பேருந்தில் ஏற்றி விட்டனர்.

இருவரும் சென்னையை அடைந்து வீட்டிற்குச் செல்ல, மணி எட்டாயிற்று. சஜுவின் வீடு திறந்திருந்தாலும், இருவரும் அக்ஷையின் வீட்டிற்குச் செல்ல, அங்கு வரவேற்பறையில், பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த சுஷ்மி, இவர்களைக் கண்டதும் கண்ணை விரித்து எழுந்து, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பென ஓடி வர... அக்ஷய் சுஷ்மியை கண்ட மகிழ்ச்சியில் குனிந்து அவளைத் தூக்கி, அவள் கன்னமெங்கும் முத்தமிட, ஆனால் சுஷ்மியோ அவனிடம் இருந்து நழுவி, "ஆஆ... ஆ... சசுஉ... உ...” எனக் கண்ணீரில்லாமல் அழுது, அவன் பின்னே இருந்த சஜுவின் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

அக்ஷையின் பேச்சால், குழப்பத்தோடு வந்த சஜுவிற்கு, சுஷ்மியின் பாசம், ஆச்சரியத்தைத் தர... தன் தந்தையைக் கண்டுப்பிடித்துக் கொண்டு வந்தது சஜு என்ற உண்மை சுஷ்மிக்கு புரிய, அவள் சஜுவை இறுக்கிப் பிடித்து, அவள் தூக்கவும், அவள் கழுத்தோடு அணைத்து...”சசு உ... ஊ...” என அவளுக்கு முகம் முழுவதும் முத்தம் வைத்தாள் குழந்தை.

மீண்டுமொரு முறை, அவர்கள் பாசப்பிணைப்பைக் கண்ட அக்ஷய், தனக்குள் மெல்லிசாய்... கீற்றாய் புன்னகைத்து விட்டு, தன்னறைக்குச் செல்ல, அவன் பின்னே வைரமும், திருவும் சென்றனர்.”சஜு... இங்க வா...” என அவள் பின்னே இருந்து அழைத்தார் முரளி.

அவள் கலங்கிய கண்ணோடு, கையில் ஏந்திய சுஷ்மியோடு திரும்பவும், "எங்க மேல இன்னும் உனக்கு மரியாதையும், நம்பிக்கையும் இருந்தா... வீட்டுக்கு வா...” எனச் சொல்லிவிட்டு, சென்று விட்டார்.

சஜுவும், சுஷ்மியோடே அவர்கள் வீட்டிற்குள் செல்ல, சுந்தரி, அவளுக்கு உணவு அளித்து, சுஷ்மிக்கு தோசையை, ஊட்ட சொல்லி, கொடுத்து விட்டு, எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டார்.

முரளி தான், "நாளைக்குக் காலைல குளிச்சு... ரெடியா இரு... இந்தா... இந்தச் சேலைய உடுத்திக்கோ. நாளைக்கு வடபழனி கோவில்ல, உனக்கும், அக்ஷய்க்கும் கல்யாணம். இத முன்ன நின்னு செய்ய வேண்டியது எங்க கடமை... அதுனால இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இங்க இரு" என்று சொல்லி விட்டு அவரும், தன் அறைக்குள் சென்று விட்டார்.

சஜுவிற்கு ஒன்றுமே புரியவில்லை, எதுவும் கேட்கலாம் என்றால், தன் பெற்றோர்கள் இருவரும் இறுக்கமாய் இருக்கிறார்கள் என்று கலக்கத்தோடு தன் அறைக்குள் சுஷ்மியோடு சென்றாள்.

ஆனால் குழந்தையோ "சசு... னோ...” எனச் சொல்ல, அவளைப் பார்த்த சஜுவிடம், மேலும் "அங்ஹ... ஜோ... ஜோ...” எனத் தன் வீட்டிற்குச் செல்ல சொன்னாள்.”இன்னிக்கு இங்க ஜோ ஜோ தூங்குடா... நாளைக்கு அங்க போகலாம்...” எனச் சொல்லியும், குழந்தை மறுத்தாள்.

பின் வேறு வழியின்றி, சத்தமில்லாமல், வெளியே சென்று, அக்ஷய் வீட்டின் வரவேற்பறையில், லக்ஷ்மியம்மாவிடம் விவரம் சொல்லி, படுக்கையை விரித்து, குழந்தையை உறங்க வைத்தாள். அக்ஷையின் அறைக்குள் பேச்சுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தது.

சஜு, இது தான் சமயம் என்று, லக்ஷ்மியம்மாவிடம் திருமணத்தைப் பற்றிக் கேட்க, அவரோ "நேற்று உங்கம்மா அப்பா... வந்ததும், இவங்க ரெண்டு பேரும் போய்... பார்த்தாங்கம்மா, என்ன பேசுனாங்கலோ?... தெரியல... வரும் போது, தம்பிக்கும் உனக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணி, கோவில்ல ஏற்பாடு செய்யனும்னு சொல்லிட்டு இருந்தாங்கமா...” எனத் தனக்குத் தெரிந்ததைக் கூறினார்.

ஆம், இவர்கள் ஊட்டி சென்ற பின், மருத்துவமனையில் இருந்து வந்த சுந்தரியைக் காண வைரம் செல்ல, முரளி "வாங்க...” என்று வரவேற்கவும் இல்லை, "ஏன் வந்தீர்கள்?" என எகிறவும் இல்லை.

அதனால் அவரே, "நான் சுந்தரிய பார்க்கலாமா?" எனக் கேட்க, முரளியோ சம்மதமாய்த் தலையை மட்டும் ஆட்டினார். அவர் அறைக்குள் சென்றதும், திருவும் வைரம் பின்னேயே வந்து முரளியிடம் பேசினார்.

இருவரும் தங்களை மன்னிக்குமாறு வேண்ட, "எங்கள மன்னிச்சிடு தாயி...” என வைரம், சுந்தரியிடம் கேட்க,

திருவும், முரளியிடம் மன்னிப்பை வேண்ட, "என் பொண்ணு பண்ண தப்புக்கு, நீங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க?" என முரளி விரக்தியாய் சொல்ல...

"அப்படிச் சொல்லாத தாயி... உன் பொண்ணு தங்கமானவ... ஆனா நான் ஒன்னு... உன்கிட்ட, மடியேந்தி கேட்க வந்திருக்கேன் தருவியா?" எனத் தன் முந்தானையைப் பிடித்து, கையிலேந்தி, புதிர் போட்டார் வைரம்.

சுந்தரி புரியாமல் முழிக்க, "என் பையனுக்கு, உன் பொண்ணக் கட்டி தருவியா தாயி... நான் அந்தப் பச்ச மண்ணுக்காகவும், எனக்காகவும்... என் மகன் வாழ்க்கை செழிக்கனும்ன்னு ஒரு தாயா... உன்ட்ட மடியேந்தி கேட்குறேன் தாயி... உன் பொண்ண தருவியா?" எனக் கண்ணீர் மல்க கேட்டவருக்கு, மௌனத்தையே பதிலாய் சுந்தரி தர,

மேலும் வைரம், தன் மகனின் வாழ்க்கையில் கடவுள் நடத்திய திருவிளையாடலைக் கூற துவங்கினார். அதே சமயம், வெளியே முரளியிடம் திருவும் அதையே கூற, கேட்ட கணவன் மனைவி இருவருக்கும், அக்ஷய் மீது மதிப்பு ஏறியது. அதன் பின்னரே, அக்ஷய்-சஜுவின் திருமண வேலைகள், வெகு வேகமாய் நடந்தது.

குழந்தையை உறங்க வைத்து விட்டு, தன் வீட்டிற்குச் சென்ற சஜுவுக்கு, ஒன்றும் புரியவில்லை, நடப்பது எல்லாம் கனவு போல் இருந்தாலும், தனக்கு அக்ஷயுடன் திருமணம் என்பதில் சிறிது மகிழ்ச்சியே! முழுவதுமாய் இல்லை, ஏனெனில் அக்ஷய் இதற்கு ஒத்துக் கொள்வானோ? என்னவோ? மேலும், அவன் சம்மதித்தாலும், அது மற்றவர்களுக்காக இருக்குமே தவிர, தனக்காக அல்ல என நம்பினாள்.

இந்தப் பக்கம், அக்ஷயும் தாய் தந்தையின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாலும், "சஜு ஒத்துக்கொள்வாளா? அப்படியே சம்மதித்தாலும், அது அவளின் தாய் தந்தையின் வற்புறுத்தலால் சம்மதித்திருப்பாளோ?" என எண்ணிக் குழம்பினான். ஏனெனில் அவள் தன்னை விட்டு விலகி விடுவதாக நேற்றே கூறினாளே என மறக்க வேண்டிய விஷயத்தைச் சரியாய் ஞாபகம் வைத்திருந்தான்.

இப்படியே மறுநாள் காலை, அவரவர் சிந்தனையோடு இருந்த அக்ஷய்க்கும், சஜுவுக்கும், சுஷ்மி, சக்தி, விஜய், சுந்தர், குணா மற்றும் இரு குடும்பத்தாரோடும், மற்றும் சில நெருங்கிய உறவினரோடும் திருமணம் நடந்தேறியது. நல்ல நேரத்தில், அக்ஷய், சுஷ்மி நடுவில் நிற்க, அவள் அருகே அமர்ந்திருந்த சஜுவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

சக்தியும் விஜயும், முதல் நாள் மாலையே, விமானம் மூலம் சென்னைக்குப் பறந்து வந்தனர். மேலும் அவர்கள் இருவரும் வந்தவர்களையும், அவ்வப்போது சுந்தரியையும், கவனித்துக் கொண்டனர்.

தீபி மீண்டும் தன் பராக்கிரமத்தை, அக்ஷயிடம் அளக்க தொடங்கினாள்.”அக்ஷய் மாமா... ஒரு வகைல உங்க கல்யாணம் நடந்ததுக்கும், நான் தான் காரணம்... நான் மட்டும் சொல்லலேன்னா...” எனப் பழைய கதையை ஆரம்பித்து, கடைசியில் "ஏடுகுண்டலவாடா... விஜய் மாமாவோட சேர்த்து, இந்த மாமாவையும், சுஷ்மியையும் சேர்த்து உனக்கு முடி காணிக்கை செய்ய வச்சிடுவோம். எப்படியோ நீ அவங்கள எங்க அக்காஸ்கிட்ட இருந்து காப்பாத்துனா சரி...” எனச் சொல்லி விட்டு, சக்தி அவளை அடிக்க வருவதற்குள் ஓடி விட்டாள்.

இப்படியே, ஒரு வழியாய் எல்லாம் நல்ல விதமாய் நிகழ்ந்து, மாலை பெண் வீட்டில் பாலும் பழமும் கொடுக்கப் பட, சஜு மடியில் அமர்ந்திருந்த சுஷ்மி, தனக்கும் வேண்டும் எனச் சொல்ல, ஆக மொத்தம் மூவருக்கும், எல்லோரும் பால் பழம் ஊட்டி விட்டனர்.

சஜு கூட, "நல்ல வேள, சுஷ்மி கிரேட் டி செல்லம்... என்ன காப்பாத்திட்ட...” என அவன் மீதம் வைத்ததை உண்ண வேண்டிய நிர்பந்தம் சுஷ்மியால் தனக்கு ஏற்படவில்லை என எண்ணி, அவளை மேலும் அணைத்துக் கொண்டாள்.

இன்று முழுவதும், சுஷ்மி அக்ஷயிடம் செல்லவே இல்லை, அவன் அழைத்தால் கூட, தலையைச் சிலுப்பிக் கொண்டாள். ஏனெனில், தன் தந்தை தன்னை விட்டு விட்டு, அவன் மட்டும் ஊருக்குச் சென்ற கோபம், மேலும் அவனைச் சஜு தான் அழைத்து வர சென்றிருக்கிறாள் என வைரம் அவளிடம் சொல்லி வைத்திருந்தார். அதனால் வந்த விளைவு தான் இது.

பின் ஒரு சாதாரணச் சேலைக்கு மாறிய சஜு, எந்த விதமான அலங்காரமும் இல்லாத முதலிரவு அறைக்குள், கையில் சுஷ்மியோடு உள்ளே சென்றாள். எந்த அலங்காரமும் செய்ய வேண்டாம் என அக்ஷயும் சொல்ல, சுஷ்மியை தானே பார்த்துக் கொள்கிறேன் என அவளை வாங்க வந்த வைரத்திடம், சஜுவும் கூறினாள்.

உள்ளே வந்து, குழந்தையை இறக்கி விட்டு, கதவை தாளிட்டாள் சஜு. சுஷ்மியோ, படுக்கையை விரித்து, நெற்றியில் கை வைத்துப் படுத்திருந்த தன் தந்தையிடம் சென்று, அவன் வயிற்றின் மீது அமர்ந்து, "சுஸ்பா... ஆ...” என நெற்றியிலிருந்த அவன் கையை, தன் கரத்தால் விலக்கினாள்.

"நீ தான் என்ட்ட பேசவே இல்லேல... இப்ப ஏன் பேசுற?" என அவளிடம் சண்டைக்குத் தயாராக, ஆனால் குழந்தையோ... தன் தந்தை தன்னைத் திட்டுகிறான் எனத் தெரிந்தா? தெரியாமலா? எனத் தெரியவில்லை, கண்களைச் சுருக்கி, வாயை விரித்துச் சிரித்தது.

"போ... நான் இதுக்கெல்லாம் மயங்கி... பேச மாட்டேன்...” எனச் சொல்ல, குழந்தையோ அடுத்தக் கட்ட நடவடிக்கையாய், அவன் நெஞ்சின் மீது படுத்து, அவனைக் கட்டிக் கொண்டு "சுஸ்பா... சுஸ்பாப்பா... பாபம்... னோ...” எனப் படுத்தவாறே தலையாட்டி கேட்டது. அதில் மயங்கி, குழந்தையின் கன்னங்களை இரு கையால் பிடித்து நிமிர்த்தி, முகம் முழுவதும், அந்தத் தளிர் சிரிக்க, சிரிக்க முத்தம் வைத்தான்.

ஆக மொத்தம், இருவரும், அவர்களையே வைத்த கண் வாங்காமல், அதிசயமாய்ப் பார்த்த சஜுவை மறந்தே விட்டனர்.

எனக்காக...

பெற்ற பிள்ளையை விட்டு

பறந்து சென்றாய் நீ...

ஆனால் உனக்காக...

பெறாத என் பிள்ளையை

புறக்கணிக்க எண்ணினேன் நான்...

ஆனால் நமக்காக...

விதி நம் எண்ணத்தை

விலக்கி வென்று விட்டது...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 23

மறுநாள் விடியலில், யாரோ தன் தோள்களைச் சுரண்டுவது தெரிந்தும், எழ மனமில்லாமல், மீண்டும், நன்றாய் போர்வையைப் போர்த்தி, சுகமாய் அந்த அதிகாலைத் துயிலில் ஆழ்ந்தாள் சஜ்னா.

ஆம், ஐப்பசி மாதத்தில் பெய்யும் அதிகாலைச் சாரல் மழையில் போர்த்திக் கொண்டு துயில்வதே ஒரு சொர்க்கமான அனுபவம் தான். அதைத் தான் ரசித்துச் செய்து கொண்டிருந்தாள் சஜ்னா, ஆனால் அதைக் கலைப்பது போன்று "சசுஉ...” என அவள் காதில் கேட்கப்பட்ட சத்தத்தினால் விழித்தாள்.

கண் விழித்தவளின் எதிரே, சுஷ்மி... அவளருகே மண்டியிட்டிருந்தாள். அவள் தான் சஜு கழுத்து வளைவில் ஆரம்பிக்கும் தோளில், தன் பிஞ்சு கை வைத்து சுரண்டி அவளை எழுப்பினாள். ஆனால் அது சஜுவுக்குச் சுகமான வருடலாய் இருக்கவும், துயிலைத் தொடர்ந்தாள். அவள் எழாமல் இருப்பதைக் கண்ட சுஷ்மி, இப்போது தன் குட்டி மூளையை உபயோகித்து, அவள் காதில் குனிந்து அவள் பெயரை சொன்னாள்.

தன்னருகே மண்டியிட்டு சிரிக்கும் குழந்தையைப் பார்க்கவும், நினைவுலகிற்கு வந்தவள், "சுஸு... குட்டி...” எனச் சுஷ்மியை பார்த்துச் சிரித்துக் கொண்டே அணைத்தாள். சுஷ்மியும் அவள் கைகளுக்குள் புகுந்து கொண்டு, அவள் நெஞ்சத்தில் சாய, மீண்டும் இருவருக்கும் போர்த்திக் கொண்டு சுருண்டுக் கொண்டாள்.

நேற்றிரவு மகளையும், தந்தையையும் வேடிக்கைப் பார்த்தவளை, முதலில் அக்ஷய் தான் கவனித்தான். பின் தன் பெண்ணின் காதில், "உன் சசுவ... கூப்பிடு... படுக்கச் சொல்லு சுஷு" எனச் சொன்னான்.

அப்போது தான் சுஷ்மி, தந்தையின் மீதிருந்து திரும்பி, "சசு... ப்பா... இன்க்... பா" எனத் தந்தையின் அருகே கைக் காட்டினாள்.

பின் சஜுவும் நாணத்தோடு எல்லாம் தயங்கவில்லை, அவள் சொன்னதும், அக்ஷய் அருகே சுவரோரமாய்க் கீழே, அவளுக்கு என விரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து, அவர்களையே பார்க்கும்படி, அவர்கள் பக்கம் திரும்பி படுத்தாள். தந்தையும் மகளும் பேசுவதையே பார்த்து கொண்டிருந்தாள்.

திடீரெனச் சுஷ்மி, "சுஸ்பா... ஜோ ஜோ கு... கட... சொலுடியா...” எனக் கேட்டாள். அவனோ, சஜுவுக்கும் தனக்கும் இடையே சுஷ்மிக்கென விரிக்கப்பட்ட விரிப்பில், அவளைப் படுக்க வைத்தப்படியே, சஜுவை ஒரு பார்வை பார்த்தப்படியே "என்ன கதை டா வேணும்?" எனச் செல்லம் கொஞ்ச, அவளோ "ஹா... ஆப்பிஸ்... கட...” எனக் கண்கள் விரிய கேட்டாள்.

சஜுவோ "அடப்பாவி... சின்னக் குழந்தைக்கு டிவி ல வர நாடகத்த எல்லாம் சொல்லுறானா?" என அதிர்ந்து போய் அக்ஷயைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ "நா... வேற கத சொல்லுறேன் டா" என அப்படியே தந்தையும் மகளும் பேச்சை வளர்க்க, அதைப் பார்த்தப்படியே அவளும் உறங்கி விட்டாள்.

"சுஷ்மி... இன்னுமா எந்திரிக்கல?" எனக் கேட்ட குரலில், அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள் சஜ்னா. அக்ஷய் தான் குளித்து, முடித்து இவர்களைக் கண்டவன், சஜுவை எழுப்ப தான் மறைமுகமாய்ச் சுஷ்மியை எழுப்பினான்.

அவள் எழுந்ததும், சுஷ்மியும் சஜுவின் போர்வைக்குள் இருந்து பூனைக் குட்டி போல் வெளி வந்தவள், "சுஸ்பா... னா... டா... பஸ்ஸு... ட்... சசு டா... லாஸ்... ஸுட்" என மாட்டி விட்டாள்.

"சரி சரி... போய்ப் பிரஷ் பண்ணிட்டு வா டா சுஷு... நாம ஹார்லிக்ஸ் குடிக்கலாம்" என லேசாய் குனிந்து... மெல்ல மகளிடம் சொன்னான்.

அவளும் தலையாட்டி, "சசு... பா...” என அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, அக்ஷய் "ஒரு நிமிஷம்" எனச் சஜுவை தடுத்தான்.

"இனிமே லக்ஷ்மிமாக்கு ஹெல்ப் பண்ணிப் பழகு... அவங்களும் வயசானவங்க... அதனால புரிஞ்சு நல்ல விதமா நடந்துக்கோ...

("ஓ... அவங்கள வேலக்காரவங்களா நினைக்கக் கூடாதாம்...” என மனதுக்குள் நினைத்தாள் சஜு)

அதே மாதிரி, எங்க அம்மா அப்பா... என்ன கஷ்ட்டப்பட்டு வளர்த்திருக்காங்க... அதுனால அவங்ககிட்டயும் மரியாதையா நடந்துக்கோ

("ஆமா... பின்ன இப்படிப்பட்ட நல்லவன பெற்றிருக்காங்கள")

அப்புறம்... உங்கம்மாவும் இப்ப தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்காங்க... அதுனால அவங்ககிட்டயும் பதமா நடந்துக்கோ" என அறிவுரை வழங்க,

அவளோ "கரெக்ட்டு கரெக்ட்டு... மிரட்டு மிரட்டு...” என்ற பாணியில் கேட்டு கொண்டிருந்தவள், தன் தாயிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவனே சொல்லவும், "அப்போ... இத்தன நாளும்... என்னை என்ன அரலூசுன்னு நினச்சுட்டானா... ?" என மனதுள் புகைந்தவளை, அவள் முகத்தைக் கண்டே "இதெல்லாம் உனக்குத் தெரியாதுன்னு நான் சொல்லல, இருந்தாலும் என் கடமை... சொல்லுறேன்...” எனச் சொல்லவும், அவனை எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்தாள் சஜு.

அதையும் கண்டு கொண்டவன் போல், "என்ன?" எனக் கேள்வியாய் நோக்கினான், "இல்ல... எல்லார்கிட்டையும் எப்படி நடக்கணும்னு சொன்னீங்க... உங்க கிட்ட... எப்படின்னு... அத சொல்லலையே...” எனக் கடைசி வார்த்தையை அவள் இழுத்ததிலேயே…

அக்ஷய் தன்னை நக்கல் செய்கிறாள் எனப் புரிந்து... அவளை முறைக்கவும், வெளியே சென்ற சுஷ்மி, இவளைக் காணாது, "சசு...” என அழைக்கவும் சரியாய் இருக்க, சஜு ஓடி விட்டாள்.

பின் இருவரும் குளித்து, சாப்பிட்ட பின், வைரமும், திருவும், முடிவு செய்து, அவர்கள் மூவரையும் அருகே இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்று, முரளி - சுந்தரி உட்பட அனைவரும் அவர்களுடன் சென்று வந்தனர். பின் வைரமும், திருவும் அங்கு வள்ளி தனியாய் இருப்பாள், எனத் தங்கள் ஊருக்கு அன்றே சென்று விட்டனர்.

தினமும் காலையில் அக்ஷையின் அதட்டல் கேட்ட பின்னே எழுவதும், லக்ஷ்மியம்மாவுக்குச் சமையலில் உதவுவதும், அவன் அலுவலகம் சென்று விட்டால், சுஷ்மியோடு விளையாடுவதும், பின் மதிய சாப்பாட்டிற்குப் பின், சுஷ்மி உறங்கியதும், தன் வாழ்க்கையை, அன்னை, தந்தையை, அக்ஷயைப் பற்றிச் சிந்திப்பதும், மாலை அவன் வந்த பின், அவனுக்கு டீ, பலகாரம், இரவு சாப்பாடு என்று பரிமாறுவதும் எனச் சஜுவின் வாழ்க்கை, அக்ஷையின் வீட்டில் ஆரம்பமாயிற்று.

இதற்கிடையே, இவர்கள் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில், விஜய் யுஎஸ்க்கு செல்ல, சக்தி மனமே இல்லாமல், அவனுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து எடுத்து வைத்து, பைகளை நிரப்பி, அவனுக்குப் பயண மூட்டையைக் கட்டினாள்.

விஜய் ஊருக்கு செல்வதால், சக்தி குடும்பத்தினர், அங்கு வந்திருந்தனர். மூட்டை கட்டும் சக்தியைக் கண்ட தீபி, "ஹா... ஹா...” எனச் சிரித்து, "என்ன சக்தி... எனக்கு நீ பண்ணக் கொடுமைக்கு, கடவுள் உன்னையும் பண்ண வச்சுட்டார் பார்த்தியா?" எனச் சந்தோஷப்பட்டு, அவளைக் குழப்பமாய்ப் பார்த்த சக்திக்கு கொசுவத்திச் சுருளை சுழற்றவுது போல, ஆள் காட்டி விரலை சுழற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

அன்று சக்தியும், விஜயும் ஊட்டிக்கு சென்ற நாளின் காலைப் பொழுது, சக்தி தன் அன்னைக்குப் போன் செய்து, "அம்மா... நான் அவரோட ஊட்டிக்கு போறேன், அதுனால நீங்க...” என அவள் முடிக்கக் கூட இல்லை, "ஏய்... என்ன மறுவீடு கூட வராம, ஊட்டிக்கு போறேன்னு திடீர்ன்னு சொல்ற? நானும் உங்க அப்பாவும், உங்கள மறுவீடு கூப்பிட தான் கிளம்பிட்டு இருக்கோம்... இப்ப வந்து இப்படிச் சொல்ற? சரி உனக்கு உடுத்த டிரஸ்... வேணாமா? கல்யாணத்துக்குக் கொண்டு போன மூணு டிரஸ்ஸையே மாற்றி மாற்றி உடுத்திட்டு இருப்பியா புதுப்பொண்ணு?" என இடைவிடாது பொரிய ஆரம்பித்தார்.

அதற்குள் சக்தி "அம்மா... அம்மா... ஒரு நிமிஷம் மா... நீ போனை தீபிகிட்டக் கொடேன்" எனச் சொல்ல, அவரும் "என்னமோ பண்ணு... எனக்கென்ன...” என நொடித்துக் கொண்டே தீபியிடம் தர, "சொல்லுக்கா... என்ன ஆச்சு?" எனக் கேட்க, சக்தியும் ஓரளவு உண்மை நிலைமையைச் சொல்லி, தாய் தந்தையைச் சமாளிக்கும் படி கேட்டுக் கொண்டவள், கடைசியாய் "தீபி... என் செல்லம்ல, என் டிரஸ் எல்லாம் பாக் பண்ணி எடுத்து வை டா... அக்காவுக்கு... மறக்காம அந்தக் கிரீன் சுடி, அப்புறம்... அந்த ப்ளூ சாரி...” என அடுக்க ஆரம்பித்தாள்.

தீபி உடனே "உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சதுக்கு, எனக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்" எனப் பெரிய மனுஷியாய் அவளும் நொடித்தாள்.

சக்தி "என்ன... தீபி... அக்கா உனக்காக...” என ஆரம்பிக்கும் போதே...”ஸ்டாப்... போதும்... மீதிய நான் சொல்றேன், எனக்காக நீ சின்ன வயசுலையே, அதுவும் நாலு வயசுலயே, எனக்கு "தீபிகா"ன்னு மாடர்ன்னா பேரு வச்ச... அதான... உன்ன கொல்லப் போறேன். இதே எத்தனவாட்டி சொல்லுவ? உன் ப்ரென்ட் பேர் தீபிகான்னு, அவ பேர எனக்கு வச்சிட்டு, தங்கச்சி பாசம்ன்னு பிலிம் காட்டுறியா?" எனத் தன் அக்கா இன்று வராத ஏமாற்றத்தினால், தன் பங்குக்கு அவளும் கோபம் கொண்டாள்.

அதைப் புரிந்து கொண்ட சக்தி, "தீபி மா... என் தங்கம்ல... உனக்கு நா ஊட்டில இருந்து சாக்லேட், காரட், ஃப்ருட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன் டா...” எனச் செல்லம் கொஞ்சவும் தான், "சரிஈஈஈ... பண்றேன்... பண்ணி தொலையுறேன்" எனக் கடுப்பாய் முடித்தாள்.

கொசுவத்திச் சுருளை முடித்தவள், "அன்னிக்கு என்ன எவ்ளோ டார்சர் பண்ண? அத எடுத்து வச்சியா? இத எடுத்து வச்சியான்னு? என்ன ரெண்டு மூட்ட கட்ட வச்ச... பார்த்தியா இப்ப எவ்ளோ பெரிய மூட்டைய கட்ட வச்சிருக்காரு கடவுள்.” என விஜய் மட்டும் செல்வதால் சோகமாய் இருந்த சக்தியிடம் வம்பளந்தாள் தீபி.

"போடி... நானே அவர் என்ன விட்டிட்டு ஊருக்கு போறார்ன்னு வருத்தத்துல இருக்கேன்" எனச் சுணங்கியவளிடம், "என்னக்கா நீ... புரியாம பேசுற... இப்ப தான உனக்கு விசா அப்ளை பண்ணிருக்கோம், சீக்கிரமே நீ மாமா ஊருக்கு போவ... அதுவரைக்கும் லவ்வர்சா இருங்க" எனக் கண் சிமிட்டி, தன் அக்காவிடம் சொன்னாள். ஏனெனில் சக்தி வேலைக்குச் செல்லும் போதே, தனக்கும் பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்தாள்.

விமான நிலையத்தில், சஜு அக்ஷய், சுஷ்மியுடன் என அனைவரும், விஜயை விமானத்தில் ஏற்றி விட வந்தனர். சுஷ்மியை தன் கைகளில் வாங்கிய விஜய் "பேபி உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க... சித்தப்பா வாங்கிட்டு வரேன்" என்று பிங்க் நிற பிராக் அணிந்து, அதே நிறத்தில் பூ வைத்த தலை மாட்டியை, அணிந்திருந்தவளிடம் கேட்க, அவன் முழங்கையைப் பற்றியிருந்த சக்தியும், "சொல்லு சுஷ்மி, எனக்கு டெடி வேணும், பார்பி வேணும், அப்புறம்... ரோபோ...” எனச் சொன்னவளை,

"ஏய்... நான் பேபி ட்ட தான் கேட்டேன், உன்ட்ட கேக்கல" எனச் சிரிப்போடு விஜய் கூற, "மாமா...” என அவள் செல்லம் கொஞ்ச, "சரி சரி உனக்கு இதெல்லாம் வாங்கிட்டு வரேன், சுஷ்மி நீ சொல்லுடா... உனக்கு என்ன வேணும்...” என மீண்டும் குழந்தையிடம் கேட்க, அவளோ "இனக்கு... பெரி... பொம்ம இனும்...” எனத் தன் கையை முடிந்த மட்டும் விரித்தாள்.

அவனோ சிரித்துக் கொண்டு "ஓகே... டன் பேபி" என அவள் இரு கன்னங்களிலும் முத்தம் வைத்து, அவளிடமும் வாங்கிக் கொண்டு, சுஷ்மியை சக்தியிடம் தந்து விட்டு, "பை டா... போயிட்டு வரேன்" எனச் சக்தியின் தலையை, ஆறுதலாய் வருடி, தலையசைத்து, அனைவரிடமும், விடைப்பெற்றுச் சென்றான்.

பின்னர் மறுநாள், வைரத்திடம் இருந்து, அக்ஷையின் தங்கை கற்பக வள்ளிக்கு, சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தகவல் வர, லக்ஷ்மியம்மா அங்கு, அவர்களுக்கு ஒத்தாசைக்கும், மேலும் தன் பேத்தி போன்று பாசம் வைத்த வள்ளிக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆசையில் அங்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல, அக்ஷயும், லக்ஷ்மியம்மாவும் மறுநாள் ரயிலுக்குக் கிளம்பினார்கள்.

சஜு தானும் வருவதாய்ச் சொல்ல, ஆனால் சுஷ்மியை வைத்துக் கொண்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னர் ஒரு வாரம் விடுமுறை எடுத்துச் செல்லலாம் என விளக்கம் தந்து விட்டு, அக்ஷய் பூதலூர் சென்று, தன் மருமகனைப் பார்த்து விட்டு, லக்ஷ்மியம்மாவை விட்டு வந்தான்.

லக்ஷ்மியம்மா இல்லாமல், இங்குத் தடுமாறி தான் போனாள் சஜு. முதல் நாள் இரவே, "நாளைக்குச் சீக்கிரம் எந்தரிக்கணும், நீ தான் சாப்பாடு எல்லாம் செய்யணும், நான் நாளைக்குச் சீக்கிரமே வேற ஆபீஸ் போகணும்" என்று படுக்கும் போது, சொல்லி தான் வைத்தான்.

ஆனால் சுஷ்மியோடு பேசிக்கொண்டே படுத்தவள், காலையில் வழக்கம் போல் தாமதமாய் எழ, விழித்துப் பார்த்தாள். சுஷ்மி இன்னும் உறங்கி கொண்டிருந்தாள், அவளுக்குப் போர்த்தி விட்டு எழுந்தவள், சுஷ்மி அருகே அக்ஷயை காணாது நேரத்தைப் பார்க்க, அது ஆறு முப்பது எனக் காட்டியது.

அவ்வளவு தான், அரக்க பறக்க எழுந்து சென்று, பல் விளக்கிக்கொண்டே, டீ போட்டு முடித்தாள். மேலும் "நல்ல வேளை, இன்னும் குளித்துக் கொண்டு தான் இருக்கிறார்" என எண்ணி, பருப்பைக் குக்கரில் வைத்து விட்டு, வேகவேகமாய் டீயை வடிக்கட்டி, அவனுக்கு எடுத்து சென்றாள்.

எப்போதும் அவர்கள் அறையில் ஒரு குட்டி மேஜை போன்று, ஒரு சிறிய மேஜை இருக்கும், அதிலே வைத்தவள், பின்னே தான், அந்தக் குட்டி மேஜை தள்ளி இருப்பதைப் பார்க்கவும், "அப்போ நாம எதுல வச்சோம்?" என தான் டம்ளர் வைத்த அந்த இடத்தைக் குனிந்து பார்த்தாள்.

இன்று அலுவலகத்தில் மீட்டிங் இருப்பதால், மிடுக்காய் உடுத்தி செல்ல, மேஜையை நகர்த்தி, போர்வையை விரித்து, சட்டையை அயர்ன் செய்து வைத்திருந்தான் அக்ஷய். அந்தச் சட்டையில் தான், சத்தமில்லாமல், தன் வாயைப் பிளந்தப்படி டம்ளர் சாய்ந்திருந்தது.

அதைப் பார்த்தவள், அதிர்ந்து, சட்டையைச் சுற்றி வந்து, குத்துகாலிட்டு அமர்ந்து, "அய்யய்யோ...” என மனதுள் எண்ணி, இரு கன்னங்களிலும் கையை வைத்து பார்க்கும் போதே, குளித்து முடித்த அக்ஷய் வந்து சேர்ந்தான்.

குனிந்தவளின் பார்வை வட்டத்துக்குள், அக்ஷையின் பாதங்கள் தெரிய, "அய்யய்யோஓஒ...” என மீண்டும் மனதுள் அலறி, கன்னத்தில் இருந்த அவளின் கைகள், சட்டென்று தானாக நகர்ந்து கண்களை மூடியது.

சுஷ்மியைப் பார்த்துக் கொண்டே வந்த அக்ஷய், "எங்கே இவளைக் காணோம்" என்று பார்வையைச் சுழற்ற, அப்போது தான் வேகமாய் முகத்தை மூடிய சஜு கண்ணில் பட, "ஏன் இப்படி முகத்தை மூடுகிறாள்" எனக் கீழே குனிந்து, நன்றாக அவளைப் பார்த்தவன், "சஜுஉ...” என உக்கிரமானான்.

அவளும் வலக்கையை நகர்த்தி, ஒரு கண்ணைத் திறந்து அண்ணாந்து அவனைப் பார்த்தாள். அக்ஷய் குனிந்து சட்டையை எடுக்கப் போக, இவளும் புருவத்தை நெரித்து, சுணங்கிய முகத்தோடு எழுந்து நின்றாள். அவனோ பல்லைக் கடித்து, "என்ன இது?" என வினவினான்.

அவளோ "டீ" என நிதானமாய் உச்சரித்தாள்.

அதில் மேலும் கடுப்பானவன், "அது தெரியுது... எப்படி வந்துச்சு? இம்... நான் வேற சீக்கிரம் ஆபிஸ் போகணும்ன்னு சொன்னேன்னா இல்லையா?" என உறுமிக் கொண்டே, அவள் அருகே ஒரு எட்டு வைத்து, சட்டையைப் பிடித்திருந்த கைகளை முன்னே வேறு நீட்ட, சஜுவோ பயந்து பின்னே நகர்ந்தாள்.

நகர்ந்தவள், படுக்கை விரிப்பின் அடியில் இருந்த பாயின் முனை தடுக்கி, பின்னே சாயப் போக, "ஹே... பார்த்து" என நைட்டி அணிந்திருந்த அவள் இடுப்பை வளைத்து, தன் மீது சாய்த்தான்.

குளித்து முடித்து, கையில்லாத பனியனும், ஷாட்சும் அணிந்திருந்தவனின் தோளில், அவள் முகம் போய் இடிக்க, அப்படியே அவளின் நாசியில், அவன் பயன்படுத்திய சோப்பின் நறுமணம் ஏற, மேலும் அக்ஷய் வேறு அவளின் கழுத்து வளைவில் முகம் வைக்க...

எதிர்பாராத அந்த ஏகாந்த நிலையில், தன்னைத் தொலைக்க ஆரம்பித்தவளை, அவளின் கழுத்து வளைவில், முகம் வைத்திருந்த அக்ஷய், "நல்ல வேளை... குழந்த மேல போய் விழுக தெரிஞ்ச... பார்த்து நகரமாட்டியா?" எனக் கேட்டு வைத்தான்.

அவ்வளவு தான்! அந்தப் பரவச நிலை சட்டென்று சஜுவுக்குக் கலைய, "அப்போ என்ன அணைச்சபடி குழந்தைய தான் பார்த்தானா? நான் கூட... சே...” எனத் தன்னையே வெட்கத்தோடு நொந்துக் கொண்டாள். ஆம், சஜு கழுத்து வளைவில் இருந்தப்படி, உறங்கிய குழந்தையைத் தான் கண்டான் அக்ஷய்.

"சா... சாரிங்க...” எனச் சொல்லி விட்டு, தன் சமையல் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். அதற்குள் எழுந்த சுஷ்மிக்கு பல் துலக்கி விட்டு, பால் கலந்து கொடுத்து, குளிப்பாட்டியும் விட்டான் அக்ஷய். சஜுவும் அவனுக்கு, பருப்புச் சாதம், தயிர் சாதம், உருளைகிழங்கு வறுவல் செய்து முடித்து, அதை டிபன் பாக்ஸில் அடைத்து கொடுத்தாள்.

அக்ஷயோ "என்ன டிபன்?" எனக் கேட்க, "பருப்பு, தயிர், உருளைக்கிழங்கு வறுவல்" எனச் சொல்ல, "நான் சாப்பாட கேட்கல, இப்ப சாப்பிட என்ன பண்ண?" என விளக்கமாய்க் கேட்டான்.

"ஒன்னும் பண்ணலையே... ஏன் நீங்க சாதம் சாப்பிட மாட்டீங்களா?" என அவள் அப்பாவியாய் கேட்டாள். அவனோ எதுவும் பேசாமல், "இன்னிக்கு சாப்பிடுறேன், நாளைக்கு டிபன் பண்ணிடு" என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

நம் சஜு, சாதம் பொங்கியதே அதிசயம், இதில் இவன் டிபனும் செய்ய வேண்டும் என்று சொல்ல, சஜுவுக்கு அழுகை ஒன்று வராத குறை தான். மாலை வீடு வந்தவனிடம், சுஷ்மியை ஒப்படைத்துவிட்டு, இரவு டிபன் செய்தாள். இவனும் சாப்பிட அமர, மாக்கி செய்து பரிமாறினாள்.

அதில் அதிர்ந்தவன், "ஆமா, உனக்குச் சமைக்கத் தெரியுமா?" எனக் கேட்க, "ஓ...” எனக் கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பதில் அளித்தாள். ஏனெனில் அக்ஷய் சாப்பிட்ட மதிய சாப்பாட்டில், எல்லாவற்றிலும் அரை உப்பு தான் இருந்தது.

"என்னென்ன செய்வ?" என அடுத்து கேட்க, அவளோ "பூரி, சப்பாத்தி, தோச, இட்லி... இப்படி எல்லாம் செய்வேன். குழம்பு தான் கொஞ்சம் தடுமாறுவேன். ஆனா சீக்கிரம் கத்துக்குறேங்க" என வரிசையாய் ஆரம்பித்து, சற்று ஸ்ருதி இறங்க சொல்லி முடித்தாள்.

அவனும் "சரி... நாளைக்குக் காலைல சாம்பார் சாதம், பீன்ஸ் பொரியல் பண்ணிடு, அப்படியே டிபனுக்குத் தோச சுட்டிரு, சாம்பார் ஊற்றியே சாப்பிட்டுக்கிறேன்" என அவள் வேலையைக் குறைப்பவன் போல் நயமாய்ச் சொல்ல, அவளும் தலையாட்டினாள்.

"சரி, மாக்கிய சுஷு சாப்பிட மாட்டா, நான் போய் அவளுக்கு இட்லி வாங்கிட்டு வரேன்" என்று வெளியே சென்று வாங்கி வந்தான்.

மறுநாள் காலையில் எழுந்தவள், சமையல் செய்ய ஆரம்பிக்க, சுஷ்மியும் அவளுடனே எழுந்து, அவளைத் தூக்க சொல்லி, அவள் கால்களைக் கட்டிக் கொண்டு சிணுங்க, அவளையும் தூக்கி இடுப்பில் வைத்தப்படியே, சமைக்கவும் செய்தாள். பின் தயாராகி வந்த அக்ஷய், சஜு கஷ்டப்படுவதைப் பார்த்து, "சுஷ்மி... இங்க வா... அவ சமைக்கட்டும்" என அழைத்தான்.

குழந்தையோ சிறிது தூக்கம் மீதம் இருக்க, "போ... ப்பா...” எனச் சிணுங்க, "நைட் சீக்கிரம் தூங்குன்னா... கேட்குறியா நீ? வர வர சொன்னப்படியே கேட்கமாட்டேங்குற... இன்னிக்குலாம் சீக்கிரம் தூங்கல, அடி விழுகும்" என அவன் ஆள் காட்டி விரலை ஆட்டி, சஜு பின்னே நின்று சொல்ல…

அவனைப் பார்த்த சுஷ்மியோ, அக்ஷய் ஆள் காட்டி விரலைக் காட்டவுமே, "கழட்டு கழட்டு... மிட்டு... மிட்டு...” எனக் கூறினாள்.

சஜு தான் சொல்லிக் கொடுத்த "கரெக்ட்டு கரெக்ட்டு... மிரட்டு மிரட்டு...” என்ற சினிமா வசனத்தைச் சுஷ்மி சொல்லவும், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, பீன்சை பொரித்தாள்.

அதைப் புரிந்த அக்ஷயும், "என்ன உன் ட்ரைனிங்கா?" எனச் சஜுவிடம் கேட்க, "நான் என்ன பண்ணேன்... எப்ப பார்த்தாலும், என்னைய என்னைய சொல்றீங்க?" என யுத்தம் செய்யத் தயாராக, அவனோ அவளை முறைத்துக் கொண்டே, "இங்க வா... சுஷ்மி" என அழுத்தமாய் அழைத்து, அவளிடம் இருந்து குழந்தையை வாங்கினான்.

பின் அவளுக்குப் பால் கலந்து கொடுத்து, விளையாட வைத்தவன், சமையலறைக்கு வந்து, அவள் சமைத்து முடித்த சாம்பார், சாதம், சாப்பிட தட்டு, குடிக்கத் தண்ணீர் என எல்லாவற்றையும் சாப்பிடுவதற்குத் தயாராய், முன்னறையில் கொண்டு போய் வைத்தப்படியே, "தோச எங்க?" என அவளிடம் கேட்டான்.

சஜு முழிக்காமல், "மாவு இருந்தா தான தோச சுட முடியும்" எனத் தெளிவாய் கேட்டாள்.

"அப்போ நேற்று நீ மாவாட்டலையா?" என அக்ஷய் வினவ, "என்ன... நானா?" என அவளும் புருவத்தை நெரித்து, பதில் கேள்வி கேட்க, அவனுக்கு வந்த எரிச்சலை கட்டுப்படுத்தி, "பிறகு, யார் ஆட்டுவா? நீ தான சொன்ன இட்லி, தோச சுட தெரியும்னு?" என அவன் கேட்க,

"ஆமா... தெரியும், எனக்கு மாவு இருந்தா... தோச சுட தெரியும், இட்லி ஊத்தி வைக்கத் தெரியும், ஆனா... மாவாட்ட தெரியாது...” என அப்பாவியாய் சொல்ல, அவளின் பதிலால், அக்ஷய் தலையில் அடித்துக் கொண்டான்.

ஆனால் சஜு "இருங்க... வரேன்" எனச் சொல்லிவிட்டு, உடனே சுஷ்மியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவள், சுஷ்மியிடம் "சசுமாட்ட, தோச மாவு... வாங்கிட்டு வா" என ஒரு பாத்திரத்தை அவளிடம் தந்து, முதன் முறையாய், அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் சஜு.

ஆம், திருமணம் முடிந்து, இந்த ஒரு வாரத்தில், சஜுவும் அவர்களிடம் பேசவில்லை, சஜுவின் பெற்றோர்களும் இவளிடம் பேசவில்லை. சுஷ்மி மட்டும் அவ்வப்போது சென்று வருவாள்.

சுஷ்மியும் அங்குச் சென்று, "சசுமா... சசுமா...” என அழைத்தாள். அலுவலகம் கிளம்பி கொண்டிருந்த முரளி, சத்தம் கேட்டு, "டேய்... சுஷ்மி... வா வா...” என அழைத்தார். அவளோ அவர் முன்னே பாத்திரத்தை நீட்டி, "சசு... மாவ்...” எனக் கேட்டாள். அவரோ புரியாமல், பாத்திரத்தை வாங்கியப்படியே, "என்னடா... என்ன மாவு?" எனக் கேட்க, குழந்தையோ, அவரை அண்ணாந்துப் பார்த்து, மலங்க மலங்க விழித்தாள்.

பின், தன் வீட்டைப் பார்த்து ஓடியவள், மீண்டும் சஜு "தோச மாவு டா...” எனக் கூறி விட, மீண்டும் முரளியிடம் வர, அதற்குள் அவர் "சுஷ்மி என்னமோ கேட்குறா... கொடுத்து விடு" எனப் பாத்திரத்தை சுந்தரியிடம் கொடுத்திருந்தார். அதனால் குழந்தை உள்ளே சென்று, சுந்தரியிடம் "சசுமா... ஒச... ஒச... மாவ்" எனக் கேட்டாள்.

உன்னிடம் பேச நான் தயங்கவில்லை

உன்னிடம் மயங்க நான் நினைக்கவில்லை

ஆனால்...

இயல்பாய்ப் பேசுகிறேன்...

மயங்காமல் மயங்குகிறேன்...

ஏனோ மனம் இதை உணரவுமில்லை...

எனது மூளையும் இதைச் சிந்திக்கவுமில்லை...

யாராகியரோ...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 24​

சுந்தரி மாவாட்டியது, முன் தினம் அங்கு ஓடிய மின் அரவையின் சத்தமே, சஜுவிற்குச் சொல்லியது. அதனால் தான் தையிரியமாய்ச் சுஷ்மியை அனுப்பி வைத்தாள்.

"சசுமா... ஒச... ஒச மாவ்" எனக் கேட்க, சுஷ்மியை பார்த்து, அவளிடம் பேசிக் கொண்டே, சுந்தரி தன் மகளின் சமையல் பராக்கிரமத்தை அறிந்ததால், ஒன்றும் சொல்லாமல், அந்தப் பாத்திரத்தில் மாவை நிரப்பி, முரளியிடம் கொடுத்து விட்டார். முரளியும் சஜுவிடம் தர, சஜுவும் "தேங்க்ஸ் பா...” என வாங்கிக் கொண்டாள்.

இதற்கிடையில், பாத்திரம் தன் கைகளில் கிடைக்காமல், சுந்தரியிடமிருந்து முரளிக்கும், அவரிடமிருந்து சஜுவுக்குச் செல்லவும், சுஷ்மி அண்ணாந்து பார்த்து, "சுஸ்பா... ம்ம்... ம்ஹும்... இனக்கு...” என இரு கைகளையும், மேலே தூக்கி முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி, சிணுங்கிக் கொண்டே, முரளியின் கொஞ்சலையும் பெற்றுக் கொண்டு, பாத்திரம் வைத்திருந்த சஜுவை தேடி ஓடினாள்.

பின் அக்ஷய்க்கு, தோசை வார்த்து கொடுத்தாள். அவனும் சாப்பிட்டுக் கொண்டே, ஓரக்கண்ணால், தன் மனைவி சஜுவை பார்த்தான். ஆம், ஆம், மனைவி தான்... தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே லாவகமாய், தோசை சுட்டு, எடுத்து வந்து பரிமாறியவளை வியந்து பார்த்தான்.

"எப்படித் தான் பெண்கள்... இப்படிக் குழந்தையையும் சமாளித்து, இடுப்பில் வைத்துக் கொண்டே வேலையும் பார்க்கிறார்களோ?" என எண்ணினான்,

மேலும் "நேற்று வரை, விளையாட்டு பெண்ணாய் இருந்தவள் இவள், எனச் சஜுவை சொன்னால் யாராவது நம்புவார்களா? இப்போது இந்தக் கோலத்தில் சுஷ்மியையும், அவளையும் பார்த்தால், கல்யாணமாகி ஒரு குழந்தைக்குத் தாயானவள் என்று தான் சொல்வார்கள்" எனத் தன் மனைவி, குழந்தையைக் கவனிக்கும் லாவகத்தை வியந்தான்.

அதற்கேற்றார் போல், சுஷ்மி "சசு... இனக்கு... மீயா... ஓச...” என அவள் கேட்கவும், "ஹை... பூனைக் குட்டிக்கு மண்டைப் போட்டாச்சு, இது காது... அப்புறம்... இது வாலு" எனச் சஜு பூனை தோசை வார்த்துக் கொண்டிருப்பதும், அதற்குச் சுஷ்மி மகிழ்வதும் அவன் காதில் விழுந்தது.

இவற்றை எண்ணி மனம் மகிழும் போது, மூளை "என்ன உன் மனைவியா?" எனத் திகைத்தது, அதில் அக்ஷயும் திகைத்தாலும், அது ஒரு அரைநிமிடம் தான் நீடித்தது. பின் சாப்பிட்டு முடித்து, தன் அலுவலகத்துக்குக் கிளம்பும் போது, "சுஷ்மி...” என அழைத்தான்.

சஜு இடுப்பில் இருந்த சுஷ்மியோடு வர, "இங்க வா...” எனக் குழந்தையைத் தூக்கி, இரு கன்னங்களிலும் முத்தம் வைத்து, "அப்பா... ஆபீஸ் போயிட்டு வரேன்... உனக்கு என்னடா வேணும்?" என மகிழ்ச்சியோடு சஜுவைப் பார்த்தப்படியே, சுஷ்மியிடம் கேட்டான்.

அவளோ "இனக்கு... இனக்கு... கோப்பா... இனும்...” எனத் தனக்குப் பால்கோவா வேண்டும் எனச் சொல்ல, அதைப் புரிந்து கொண்ட அக்ஷய் "உன் சசுக்கு என்ன வேணும் கேளு?" எனத் தன் மகளின் காதில் சொல்ல,

அவளோ தந்தையின் கையில் இருந்தபடியே "சசு... இன்ன... ?" என அவளுக்கு என்ன வேண்டும் என வினவ, அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்தவள், அவனின் கேள்வியிலேயே கரைந்தவள், மேலும் சுஷ்மி வேறு கேட்கவும்,

"உனக்கு என்ன பிடிக்குமோ, அதே எனக்கும் பிடிக்கும் சுஷ்மி" என நாணமும், மகிழ்ச்சியும் போட்டி போட கூறினாள். தன் கணவனின் அன்பில் கரைந்து, அவனுக்குப் பிடித்தது எல்லாம் தனக்கும் பிடிக்கும் என மறைமுகமாய்ச் சொல்லி, தன் காதல் வாழ்க்கையில், அக்ஷயை நோக்கி முதல் அடி எடுத்து வைத்தாள்.

சுஷ்மி மதியம் தூங்கி எழுந்தவள், "சுஸ்பாட்டி...” என லக்ஷ்மியம்மாவை தேட, சஜு அவருக்குத் தன் அலைபேசியில் இருந்து பேசி, குழந்தையையும் பேச வைத்தாள். மேலும் வைரம், மற்றும் வீட்டிற்கு வந்துவிட்ட வள்ளியும் பேசினாள். இவளும் வள்ளியிடம் குழந்தையைப் பற்றி நலம் விசாரித்தாள்.

அவள், "அண்ணி... அண்ணி...” என உருகி, அன்பாய் பேசினாள், மேலும் "அண்ணி... நீங்க எப்போ வர்றீங்க... உங்கள பார்க்கணும்னு போல இருக்கு, அன்னிக்கு அண்ணன் வந்து, உங்க போட்டோவ காமிச்சான். நீங்க அழகா சுஷ்மி மாதிரியே இருக்கீங்க அண்ணி...” எனப் பாச மழை பொழிந்தாள். பின் சுஷ்மியிடமும் பேசி விட்டு வைத்தாள் வள்ளி.

சஜுவுக்கு ஒரே ஆச்சரியம்... பின்னே அக்ஷையின் அலைபேசியில் தன் புகைப்படம் இருப்பதைக் காது குளிர கேட்ட பின்னும்... அது நிஜம் என்ற நிலையில்...”அப்படியென்றால், அவனுக்கும் தன் மீது காதல் உள்ளதா?" என மனம் சொன்னதும், மனசாட்சி, "அப்படியே அது உண்மையென்றாலும்... தன் தங்கை கேட்பாள் என்று தெரிந்து கூட, அவன் கொண்டு சென்றிருக்கலாமே...” என இடித்துரைத்தது.

ஆனால் நம் சஜுவோ, "உனக்கு...” என மனசாட்சியை நிந்தித்து, "எது எப்படியோ, என் புகைப்படம், அவரின் அலைபேசியில் உள்ளது... அது காதல் தான்... காதல் தான்... காதல் தான்...” எனத் தனக்குத் தானே வாய்விட்டே சொல்லிக் கொண்டாள்.

பின் மாலை வீடு வந்தவன், கையில் இனிப்பு பெட்டியும், மல்லிகைப் பூவும் இருக்க, அதை அவளிடம் நீட்டியவனைப் பார்த்து, ஆச்சரியத்தில் கண்கள் விரிய, இதழோரம் புன்னகை வர, புருவத்தை உயர்த்தி, என்ன இது என்பது போல் வினவினாள்.

அவனோ "சுஷ்மிக்கு மில்க் ஸ்வீட் பிடிக்கும், அதுனால ஸ்வீட் பாக்ஸ், அப்புறம்... இன்னிக்கு வெள்ளிக்கிழமை, அதான் பூ வாங்கிட்டு வந்தேன்...” என விளக்கமாய்ச் சொல்ல, நம் சஜுவோ அசராமல், "ஓகே... ஓகே...” என ஒரு மார்க்கமாய்ச் சொல்ல,

அவனோ "ஏய்... சாமிக்கு போட தான் வாங்கிட்டு வந்தேன்...” எனப் பதறி பதில் அளிக்க, அவளோ படபடப்பில்லாமல், புருவத்தைச் சுருக்கி, "ஹா... நானும் அதுக்குத் தான், சரி அப்படிங்கிறத... ஓகே ன்னு சொன்னேன்" என அவளும் தெளிவாய் விளக்கம் அளிக்க, அக்ஷயோ திணறினாலும், "ஹேய்... என்ன? என்னைக் கிண்டல் பண்றியா?" என அழுத்தமாய்க் கேட்டான்.

அதற்கும் அசராமல், "ஆமா... நீங்க பொண்டாட்டிக்கு மல்லிகைப்பூவும், அல்வாவும் வாங்கிட்டு வந்துட்டீங்க... நான் உங்கள கிண்டல் பண்றேன்...” என வாயைச் சுளித்துக் கொண்டு, கடுகடுப்புடன் சென்று விட்டாள்.

அக்ஷயோ "எப்பா... என்ன வாய் பேசுறா?... கொஞ்சம் கூட வெட்கமே படாம... என்னலாம் சொல்றா?" என அளவுக்கு அதிகமாய், அவனே அதை ஒரு பெரிய விஷயமாய் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் சஜுவோ ‘அவனுக்குத் தன் மீது வெறுப்பில்லை தான் என்று எப்படிச் சொல்கிறாய்?’ என மனசாட்சி குறுக்கே வர... இம்... வெறுப்போடு இருப்பவர் தான், என்னோடு சகஜமாய்ப் பேசுகிறாராக்கும்... ‘ஆனால் இதெல்லாம் காதலாகி விடுமா?’ என மீண்டும் மனசாட்சி கேட்க... ‘காதல் இல்லை தான், ஆனால் என் மேல் ஒரு பிடிப்பு இருக்கிறதே... அது சுஷ்மியினாலோ? அல்லது அவருக்கே தோன்றியதோ? அது எனக்குத் தேவையில்லை... ஆனால் நான் காதல் செய்யத் தான் போகிறேன்...’ என எண்ணியதும், அவளுக்கே ஒரு மலர்ச்சியாய், புதிதாய் திடம் வந்தது போல் இருந்தாள்.

அவன் கொடுத்த பூக்களை சாமி படங்களுக்கு போட்டு, விளக்கேற்றி சாமி எல்லாம் கும்பிட்ட பின், இரவு உணவு தயாரிக்கப் போனாள். சுஷ்மி தன் தந்தை மடியில் அமர்ந்து தன் பொம்மையோடு விளையாட, அக்ஷய் 'இந்தியா டுடே' வார இதழில் மூழ்கி இருக்க, "அத்தான்...” எனக் கேட்கவும், பதறி பத்திரிக்கையை நழுவ விட்டான். ஆனால் சுஷ்மியோ "இன்னா... சசு?" எனக் கேட்டாள்.

சஜுவோ வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "வாங்க அத்தான்... சாப்பிடலாம்... சுஸு நீயும் வா...” என அழைக்க, அவனோ "ஏய்... என்னாச்சு உனக்கு? இன்னிக்கு ஓவரா பண்ற?" என நெற்றிச் சுழிப்போடு, கோபமாய்க் கேட்க முயன்றான்.

"நான் என்ன பண்ணேன்னு... இவ்ளோ கோபம் அத்தான்...” என வினவ, அவனோ "இந்த அத்தான்... பொத்தான்னுலாம்... என்ன கூப்பிடாத...” எனப் பொரிய,

"ஏன்... சக்தியெல்லாம்... அவங்க வீட்டுக்காரர... மாமான்னு தான சொல்றா... அப்போ நான் மாமான்னு சொல்லவா?" என வேண்டுமென்றே அப்பாவியாய் கேட்டாள்.

"என்ன விளையாடுறியா?...” என அவன் எகிற தொடங்கவுமே, "நீங்க என்ன சுஷ்மியா? நான் உங்களோட விளையாட?" என அவள் வினவ, சுஷ்மியும் இவர்கள் சண்டைப் போடுகிறார்களோ? என ஐயம் கொண்டு, "சுஸ்பா... னோ...” என அக்ஷயை கலைத்தாள்.

அவனோ குழந்தையைத் தூக்கிக் கொண்டே, "நீ இதுவரைக்கும் எப்படிக் கூப்பிட்டியோ... அப்படியே கூப்பிடு... அதோட இப்படிலாம் ஓவரா பேசாத...” எனக் கண்டித்தான்.

அவ்வளவு தான்... சஜு "நான் ஓவரா பேசுறேன்னா... நான் ஓவரா பேசுறேன்னா... அதெப்படி நீங்க என்ன பார்த்து இப்படிச் சொல்லலாம்?" எனக் கேட்டுக் கொண்டே, அவனை நோக்கி, இரு எட்டு வைத்தாள்.

"அம்மா... தாயே... ஆள விடு, டிபன் செஞ்சியா இல்லையா?" என அவன் இறங்கி வர, "இம்... செய்யல, அப்பாவும் மகளும் வெளிய போய்ச் சாப்பிடுங்க" எனக் கோபம் கொண்டு, திரும்பி கொண்டாள்.

ஆனால் சுஷ்மி விவரமாய், "சசு... ஆஆ...” என அவளிடம் தாவினாள். சஜுவும், அவளைத் தூக்கி கொண்டு, அவனைக் கண்டுக்கொள்ளாமல், தனக்கும், சுஷ்மிக்கும் தோசை ஊற்றி, அவளுக்கும் ஊட்டி விட்டு, தானும் சாப்பிட்டுக் கொண்டாள்.

அக்ஷய் ‘அடிப்பாவி... குழந்தைய பார்த்துக்கிட்டு, சமைச்சும் போடுறாளேன்னு, அவள மெச்சி... ஸ்வீட்டும், பூவும் வாங்கிட்டு வந்ததுக்கு... வேணும் எனக்கு...’ என நொந்து, அவள் சமையலறை விட்டுச் சென்ற பின், உள்ளே நுழைந்து தனக்கு ஏதாவது கிடைக்குமா எனப் பார்த்தான்.

ஆனால் சஜு, அவனுக்கும் தோசை வார்த்து, ஹாட் பாக்கில் எடுத்து தான் வைத்திருந்தாள். அதைக் கண்டவன், அவனையும் அறியாமல், ஒரு புன்னகையோடு "வாலு...” என முனுமுனுத்தான்.

மறு நாள் சனிக்கிழமை விடுமுறையில், அக்ஷய் ஓய்வாய் வரவேற்பறையில் அமர்ந்து இருக்க, சஜுவும் சுஷ்மியும் அவன் அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது முரளி வந்து, "உள்ள வரலாமா?" எனக் கேட்க, "ஐயோ... என்ன சார் இப்படிக் கேட்குறீங்க? வாங்க சார்...” என்று வரவேற்றான்.

"என்ன மன்னிச்சிடுங்க தம்பி... நான் உங்கள பேசுனது தப்பு தான்...” என உள்ளே வந்து அமர்ந்தவர் ஆரம்பிக்க, "ஐயோ... என்ன சார் இது... அதான் அன்னிக்கே... கல்யாணத்தன்னைக்கே... நெறைய வாட்டி கேட்டீங்கள சார்" என அக்ஷய் பதில் சொல்ல,

"ஆனாலும் நீங்க என்ன மன்னிக்கல போல? என்ன இன்னும் வேற்று ஆள் மாதிரி சாருன்னு தான சொல்றீங்க...” எனக் கேட்க, "அப்படில்லாம்... இல்ல... சா... மாமா" என முதன் முறையாய் முறை வைத்து அழைத்தான்.

"சந்தோஷம் பா... சரி... நான் வந்த விஷயத்துக்கு வரேன்" என்று அவர் ஆரம்பிக்க, அதற்குள் அறைக்குள் இருந்த சஜு எட்டிப்பார்க்க, அவள் பின்னே வந்த நீல வர்ண கவுன் அணிந்திருந்த சுஷ்மி, முன்னே அக்ஷயிடம் ஓட, அக்ஷய் "என்ன சஜு... பார்த்திட்டு நிக்குற? போ போய்... மாமாக்கு டீ போட்டு எடுத்திட்டு வா...” எனச் சொன்னான். அவளும் சமையலறைக்குள் சென்றாள்.

அவர் வந்த விஷயம் இது தான், திரு அலைபேசியில் தங்கள் மகள் வழி பேரன் பிறந்திருப்பதாகக் கூற, அதனால் வள்ளியையும், அவள் மகனையும் காண, அக்ஷையின் ஊரான பூதலூருக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் அக்ஷயிடம் அவன் வீட்டின் முகவரியைப் பெற்று செல்ல வந்திருந்தார், அக்ஷயும் முகவரியை தந்து, செல்லும் மார்க்கத்தையும் கூறி, ஊரில் இறங்கியதும், தந்தைக்கு அலைபேசியில் சொன்னால், அவரே வந்து அழைத்துச் செல்வார் என்றும் சொல்லி அனுப்பினான்.

அன்று இரவு, சுஷ்மி "சுஸ்பா... பாப்பா காமி...” என அவன் அலைபேசியில், வள்ளியின் மகனை புகைப்படமாய் எடுத்து வைத்திருந்ததை, அவளுக்குக் காட்ட சொன்னாள்.

அவனும் காட்ட, அதோடு சஜு "ஏங்க... நான் எப்போ போய்ப் பார்க்கிறது? எங்க அம்மா அப்பா கூடப் பார்க்க போயிட்டாங்க... வள்ளி என்ன தப்பா நினைக்க மாட்டாங்களா?" என அவள் வினவ, குழந்தைக்குப் புகைப்படம் காட்டியப்படியே, "போகலாம் சஜு... ஆபீஸ்ல ஒரு வாரம் லீவ் எடுத்திட்டு தான் போகணும். அதோட எங்க குலசாமி கோவில்ல சுஷ்மிக்கு மொட்ட போடணுமாம், அம்மா சொன்னாங்க. அதுனால ஒரு மாசம் கழிச்சு வர சொன்னாங்க" என்று விளக்கமளித்தான்.

ஆனால் சஜுவோ "ஒரு மாசமா... இப்பவே இரண்டு வாரம் ஆகப்போகுது... இத்தன நாள் போய்ப் பார்க்காம இருக்கிறதே தப்புங்க... நாம நாளைக்கே போகலாம்" என அவள் சொல்ல, சுஷ்மியும் "இம்... பூலாம்...” எனச் சொல்ல, இருவரும் குழந்தையைக் கண்டு சிரித்தாலும், அக்ஷய் "சரி சரி... நான் ஆபீஸ்ல லீவ் கேட்டுட்டு, ஒரு இரண்டு நாள் இருக்க மாதிரி கூட்டிட்டுப் போறேன்" என முற்று புள்ளி வைத்தான்.

மறுநாள் ஞாயிறு, வழக்கம் போல் சஜு தன் வாயை, அக்ஷயிடம் காட்டி விட, அவனோ "இவ்வளவு பேசுறேல்ல... இன்னிக்கு சுஷ்மிய நீ தான் குளிப்பாட்டனும்" எனத் தீர்ப்பு கூறி விட்டான்.

இதைக் கேட்ட சஜுவோ "அய்யயோ...” என அலறினாள். ஏனென்றால் இன்று, சுஷ்மியை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். சுஷ்மியை தூக்கியவள், "சுஸு நான் எண்ண தேய்ச்சு விடவா?" என அவள் தலையில் கை வைத்து கேட்கவுமே, குழந்தைக்கு விஷயம் புரிந்து விட, தலையை மறுத்து ஆட்டி, "னோ...” என அவளிடம் இருந்து வழுக்கினாள்.

இதையெல்லாம், கேலியான பார்வையோடும், வாயில் சிரிப்போடும், சஜுவை பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர, உதவிக்கு வரவில்லை. ஆனாலும், நம் சஜு சளைத்தவள் இல்லையே... எண்ணெய்யைக் காய்ச்சி, அக்ஷயிடம் இருந்த சுஷ்மியை அழைக்க, அவளோ மறுக்க, "நான் டாட்டா போறேன், நீ வர்றியா இல்லையா?" எனக் கேட்டு, தன் பாதுகைகளை அணியப் போக, அதில் ஏமாந்த சுஷ்மி, அவளிடம் போய் வழிய மாட்டிக்கொண்டாள்.

பின் குண்டுக்கட்டாய் அவளைத் தூக்கி கொண்டு, சமையலறை சென்றவள் தான், அதன் பின் சுஷ்மியின் சிரிப்புச் சத்தம் தான் கேட்டது. வெளியே இருந்த அக்ஷய்க்கு ஒரே அதிசயம், "என்ன தான் நடக்கிறது?" என்று சமையலறை உள்ளே சென்று பார்க்க, அங்குச் சஜுவிற்கு, சுஷ்மி எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்க, பின் பதிலுக்குச் சஜு, சுஷ்மிக்கு எண்ணெய் தேய்த்து விட, என இருவரும் எண்ணெயில் குளித்திருந்தார்கள்.

காதில் தோடு கூட இல்லாமல், கழுத்தில் அவன் அணிவித்த மஞ்சள் தாலியோடு, நெற்றி வகிட்டில் குங்குமத்தோடு, எண்ணெயில் மின்னிய அவளின் முகத்தைப் பார்க்க, பார்க்க, அவனுக்குத் தெவிட்டவில்லை.

சுஷ்மி "இப்ப... உன்கு... கால் காமீ...” எனச் சஜுவிடம் செல்ல, நைட்டி அணிந்திருந்த அவளும், தன் முழங்கால் வரை காண்பிக்க, சுஷ்மியின் பிஞ்சு கரத்தோடு, தன் கையாலும் கால்களுக்கு எண்ணெய் தடவியவள், அப்போது தான் ஏதோ உள்ளுணர்வு தூண்ட, திரும்பியவள், சட்டென்று தன் நைட்டியை இழுத்து விட்டாள்.

அதுவரை, அவள் கைகள், அவள் கால்களில் ஏறி வழுக்குவதை மெய்மறந்து கண்டவன், அவளின் இந்தத் திடீர் செய்கையில் கலைந்தான்.

"சா... சாரி...” எனச் சொல்லி விட்டு, நகரப்போகையில், ஜட்டி மட்டும் அணிந்து எண்ணெய்யில் குளித்திருந்த சுஷ்மி, "சுஸ்பா... பா... உன்கு... இண்ண...” எனத் தன் இடக்கையின் உள்ளங்கையில் இருந்த எண்ணெய்யை, வலக்கை விரல்களால் தடவி கொண்டே, அக்ஷயையும் அழைத்தாள்.

சஜுவோ "உனக்கு அறிவே இருக்காது சஜு...” என்று நாணத்தோடு, தன்னைத் தானே திட்டிக் கொண்டு, தலைக் குனிந்து கொண்டாள். அக்ஷயோ, "நான் அப்புறம் தேய்கிறேன்டா... சுஷ்மி" என வெளியே சென்று விட்டான்.

பின் சுஷ்மியை அவனிடம் விட்டுவிட்டு, குளியலறையில் சுடு தண்ணீர் விளாவினாள் சஜு. பின் மாற்றுடையை எடுத்து போட்டு, கையோடு ஒரு பொருளையும் கொண்டு சென்றாள்.”சுஷ்மி... வா... குளிக்கலாம்" என அவள் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

குளியலறை சென்று, ஐந்து நிமிடம் ஆன பின்னும், சுஷ்மியின் பேச்சு குரல் தான் கேட்டதே ஒழிய அழுகைக் குரல் கேட்கவில்லை. அக்ஷய் மீண்டும் ஆச்சரியத்தோடு, மீண்டும் எழுந்து சென்று குளியலறையில் எட்டிப் பார்த்தான்.

அங்கு அவன் கண்ட காட்சி, டப்பைப் பிடித்துக் கொண்டு, முக்காலியில் கண்ணை இறுக மூடி அமர்ந்திருந்தாள் சுஷ்மி. அவள் தலையில், தொப்பியில் கண்களை மறைக்கும் முன் பகுதி இருக்குமே, அது போன்ற வடிவத்தில் ஒன்று, அவள் நெற்றியில் வீற்றிருந்தது. அதனால் கண்களில் சிகைக்காய் நீர் படாமல், அழுகாமல் குளித்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட அக்ஷய் "பராவாயில்ல... இவளுக்கும் மூளை இருக்கே" என வியக்க, சுஷ்மி "சுஸ்பா... ச்சூ... கால்ஸ்... குளிகாங்ல...” எனச் சஜு சொல்லிக்கொடுத்ததை, பாதி முழுங்கி, முழுங்கி சொன்னாள்.

அக்ஷயோ "ஹா... ஹா... ஹா... ஓ... கேர்ள்ஸ் குளிக்கிறீங்களா... ? வாலு" எனச் சிரித்து விட்டு சென்று விட, குளித்து முடித்த சுஷ்மியை அவனிடம் தந்து விட்டு, சஜு குளித்து முடித்து வர, அவனோ "இது எப்படிச் செஞ்ச சஜு?" எனப் பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த தொப்பியின் முன் பக்கத்தைக் காட்டி கேட்க, "அதுவா... உங்க கப்போர்ட்ல இருந்த தொப்பிய வெட்டி தான் செஞ்சேன்" என்று சுவாதீனமாய்ச் சொல்லிவிட்டு, அவர்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவனோ அவள் சொன்னதைத் தாமதமாய்ப் புரிந்தவன், "ஹேய்...” என நிமிர, அவள் அங்கு இல்லாது அறைக்குள், தன் கூந்தலை ஒரு பக்கமாய்த் தோளில் போட்டு துவட்டிக் கொண்டிருக்கவும், அவள் முழங்கையைப் பிடித்துத் திருப்பினான்.

"அதெப்படி என் பெர்மிஷன் இல்...” என ஆரம்பித்துப் பாதி வார்த்தைகளை அந்தரத்தில் தொங்கவிட்டு விட்டு, கருமேகம் பாதி மறைத்த பௌர்ணமி நிலவாய், கருங்கூந்தல் மறைத்த தன்னவளை பார்த்து, மெய் மறந்து அவனும் வானில் பறந்து கொண்டிருந்தான்.

ஆனால் தன் முடியை முகத்தில் இருந்து விலக்கியச் சஜு "என்ன பெர்மிஷன்?... ஏன் உங்க பொண்ணுக்காக ஒரு கேப் கூடத் தரமாட்டீங்களா?" எனச் சண்டைக்குத் தயாராக, ஆனால் அவளின் வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல், அவள் அழகில், அவன் சிலையாய் நின்றான்.

பின் சஜு தான் "நாம இவ்வளவு கத்துறோம்... கட்டப்பொம்மன் சில மாதிரி அப்படியே நிக்கிறாரு?" என எண்ணி, அவன் இரு முழங்கைகளைப் பற்றி "என்னங்க... என்னங்க... என்ன ஆச்சு?" என அவனை உலுக்கினாள்.

அதன் பின் "ஒன்னும் இல்ல...” எனச் சொல்லி தெளிந்தவன், வேகமாய் அறையை விட்டு வெளியேறினான். பின் பெண்கள் இருவரும் சாம்பிராணி புகைப்போட்டு, ஜம்மென்று இருக்க, அக்ஷய் "குழந்தைக்கு வேற ட்ரெஸ் போட்டு ரெடி பண்ணு, என் ப்ரென்ட் சுந்தர் வீட்டுக்குப் போலாம், அவன் இன்னிக்கு வர சொன்னான்.” எனச் சுந்தர் வீட்டிற்குக் கிளம்பி சென்றனர்.

சுந்தரும், அவன் மனைவி கவிதாவும் அவர்களை வரவேற்று, மதிய விருந்து கொடுத்து நன்றாக உபசரித்தார்கள். அவர்களின் நான்கு வயது புதல்வன் சித்து என்ற சித்தார்த்தனுடன் சுஷ்மி விளையாடி கொண்டிருக்க, ஆண்கள் இருவரும் முன்னறையில் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் இருவரும், அறைக்குள் சற்று ஓய்வாய் படுத்து இருந்தனர்.

சஜு தன் திருமணத்தின் போது, ஏற்கனவே கவிதா அறிமுகமாகி இருந்ததால், இலகுவாய் பழக ஆரம்பித்தாள். கவியும் சஜுவை விட ஒன்றிரண்டு வயது பெரியவளானாலும், பழக நல்லவளாய் இருந்தாள். சக்தி, வைரம், வள்ளி என எல்லோரையும் பற்றிப் பேசி முடித்தபடி, அக்ஷயிடம் வந்தாள் கவி.

"அக்ஷய் அண்ணா லைப் நல்லபடியா இருக்கணும்னு கடவுள்ட்ட வேண்டாத நாளே இல்ல சஜு, இப்ப தான்... நீ அவர கல்யாணம் பண்ணப்புறம் தான்... எங்களுக்குச் சந்தோஷமா இருக்கு. அண்ணா... கொஞ்சம் அப்படி இப்படிக் கோபப்பட்டாலும் பொறுத்து போ சஜு...” என அக்ஷய் மீது அக்கறை வைத்து கூறினாள்.

சஜு சரியெனத் தலையசைத்தாலும், இதுநாள் வரை, சுஷ்மி, அக்ஷய் என மட்டும் சிந்தித்து வந்தவள், முதன் முறையாய் அவர்களையும் தாண்டி அக்ஷையின் மனைவி என்பவளை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள்.

சஜுவிற்கு அக்ஷய் மனைவி இறந்து விட்டாள் என அவனின் இறந்த காலம், இடைப்பட்ட காலத்தில், அதுவும் அன்று சேலை எடுக்க வைரம் வந்த போது தான் அறிந்தாள். ஆனால் அதற்கு முன் வரை, அவள் மனம் இப்படி ஒருத்தியை... அக்ஷையின் மனைவியைப் பற்றி... சிந்தித்ததே இல்லை. அவளுக்கு வேண்டியது எல்லாம் சுஷ்மியின் பாசம் மற்றும் அக்ஷையின் காதல்.

ஆனால், இப்போது... ஒரு எண்ணம் தோன்றியது அவளுக்கு... ஒரு வேளை அவனின் முதல் மனைவி பற்றித் தெரிந்தால், அவனின் குணம் பற்றி, ஏதேனும் தெரிய வருமோ? என இந்தக் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தாள்.

"ஏன் கவி... அவங்க... அவங்க பேர் ஜனனி தான... அவங்க இங்க தான் இருந்தாங்களா?" என வினவ, கவியும் ஏதோ ஒரு உந்துதலில், "இம்... ஆமா சஜு, ஜனனி தான், ரொம்ப அமைதியான பொண்ணு... ஆனா அண்ணன் கூட வாழ தான் கொடுத்து வைக்கல... ஏன் அண்ணன் உன்ட்ட சொல்லலையா... ?" எனச் சரளமாய்ச் சொல்ல ஆரம்பித்து, சரியாய் ஞாபகம் வந்து நிறுத்த, "ம்ஹும்... சொன்னது இல்ல, ஆமா அவங்க எப்படி இறந்தாங்க?" எனக் கேட்டதில் மேலும் எச்சரிக்கையானாள் கவி.

"ஓ... அண்ணன் சொல்லலையா... ஜனனி ஒரு விபத்துல இறந்துட்டாங்க. சுஷ்மிக்காவது அவர் கல்யாணம் பண்ணுவார்னு எதிர்பார்த்தோம்... வைரம் அம்மா வரும் போது எல்லாம், இப்படி அண்ணா எதுக்கும் அசஞ்சு கொடுக்காம இருக்காறேன்னு... புலம்புவாங்க. இம்ம்... கடவுள் இப்ப தான் மனசு இறங்கிருக்கார். சரி சஜு... அவர் எங்கேயோ வெளிய போகணும்னு சொன்னார், நான் போய்ப் பசங்களுக்கும், நமக்கும் டீ, காபி ஏதாவது போடுறேன்" என அத்தோடு அந்தப் பேச்சை முடித்துக் கொண்டாள்.

பின் இரு குடும்பமும், கடற்கரைக்குச் செல்ல, சுஷ்மியும், சித்துவும், சஜுவுடன் கடல் அலையில் மகிழ்ச்சியோடு, விளையாடினர். கூடவே கவிதாவும், சுந்தரும் அலையில் நின்று அவர்களைப் பார்த்து கொண்டனர்.

அக்ஷய் அவர்களை விட்டு தனியே தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தான். சிறிது நேரத்தில் இருட்ட தொடங்க, "ஹே... சஜு... போதும் வா...” என அழைத்துக் கொண்டே, அக்ஷய் தன் நண்பனுடன் முன்னே சென்று விட்டான்.

மணலில் கால் புதைய நடந்த சுஷ்மி, மகிழ்ச்சியில் மீண்டும் சித்துடன் ஓடி பிடித்து விளையாட, அவளை சஜு அதட்டி அழைத்து வருவதற்குள் அக்ஷயும், சுந்தரும் அங்குக் கிடந்த ஒரு அகலமான நீள கல்லில் சென்று அமர்ந்திருந்தனர். பின் சஜுவும், சுஷ்மியும் வருவதற்குள், கவியுடன் சென்ற சித்துவும், இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டனர்.

சஜுவின் மடியில் தான் சுஷ்மி அமருவாள், எனச் சிறிதாய் இடம் விட்டு, நகர்ந்தான் அக்ஷய். ஆனால், சுஷ்மி, சித்துப் போலத் தானும் கல்லில் அமர, சஜுவும் அவளுக்காகத் தள்ளி அமர்ந்தாள். சுஷ்மியை நன்றாக உட்கார வைத்து விட்டு, திரும்பி அக்ஷயை பார்த்தால், அவன் அங்கு இல்லை.

அருகில் கீழே மணலில் இருந்தான், "என்னங்க... தள்ளி உட்கார சொன்னதுக்கு, இப்படிக் கீழ போய் உட்கார்ந்துட்டீங்க... இவ்வளவு இடம் பத்தலையா(போதவில்லையா)?" எனக் கேட்டு வைக்க, சுந்தரும் "ஏன்டா இடம் பத்தலையா?" எனக் கேட்க, கொலைவெறியானான் அக்ஷய்.

பின்னே, அவன் நகர்ந்து... அமரும் சமயம்… சஜு நகர்ந்து, அவனைத் தள்ளி விட்டாள். அதில் நிலை தடுமாறி, நல்ல வேளை குப்புற விழாமல், கையை ஊன்றி, மணலில் உட்கார்ந்து விட்டான் அக்ஷய்.

நீ, குழந்தை, நான் என

எண்ணியே பழகி விட்டேன்...

அதனால் நீ...

உனக்கென்று ஒரு குடும்பம்...

உனக்கென ஒருத்தி...

நினைத்து கூடப் பார்த்தது இல்லை நான்...

அதனால்... இப்போது என்ன செய்ய?

குழம்புகிறேன்... நான்...

விடை அளிப்பான் மேலிருப்பவன் என

நம்புகிறேன்... நான்...

யாராகியரோ...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 25

மணலில் அமர்ந்திருந்த அக்ஷய் கடுப்புடன் "ஹும்... இப்படி மணல்ல உட்காரணும்னு... வேண்டுதல் டா...” எனச் சொல்ல, கவி அவன் விழுந்ததைப் பார்த்ததால், தன் கணவனிடம் "ஷ்... சும்மா இருங்க... உங்க தங்கச்சி தான்... அண்ணன... தள்ளி விட்டுட்டா...” எனச் சொன்னாள்.

உடனே சஜுவுக்குச் சிரிப்பு வந்தாலும், "அச்சச்சோ... என்னங்க நீங்க... சொல்ல வேண்டியது தான... சாரிங்க... சுஷ்மிய பார்த்துட்டே இருந்ததுல... உங்கள பார்க்கல...” என எழுந்து, அவன் எழுவதற்குக் கை நீட்டினாள்.

அவனோ "தள்ளியும் விட்டுட்டு... அத சொல்றதுக்குள்ள... என்ன பேச விடாம பேசிட்டு... கேட்குறா பாரு... சொல்ல வேண்டிய தான... அள்ள வேண்டிய தான... ன்னு" என எண்ணிக் கொண்டே, "நானே உட்காருறேன்... நீ உட்காரு...” எனச் சொல்லி விட்டு, எழுந்து, மணலை தட்டி விட்டு, அவள் அருகில் அமர்ந்தான்.

ஆனாலும் மனதுக்குள் "இவ... தான்... வேணும்னே தள்ளி விட்டிருப்பாளோ?" எனச் சந்தேகம் கொண்டான். பின் அங்கிருந்து ஹோட்டலுக்குச் சென்று, இரவு உணவு உண்டு விட்டு அவரவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

மறுநாள் அழகாய் விடிய, வழக்கம் போல் சஜு டிபனும், சாப்பாடும் செய்து தர, அக்ஷயும் கிளம்பி சென்று விட்டான். சிறிது நேரத்தில் சஜு சுஷ்மியிடம், "சுஸு... போய்ச் சசுமாட்ட ரசம் வாங்கிட்டு வரியா?" எனச் சொல்ல, அவளோ தன் பொம்மைகளுடன் விளையாடியப்படியே "ம்ம்ம்... இன்ன...” எனப் புரியாமல் கேட்க, "ரசம்... சொல்லு" என அவளை இரு முறை சொல்ல வைத்து, அனுப்பி விட்டாள்.

நம் கவுன் அணிந்த சுஷ்மியும் "சசுமா... சசுமா...” எனச் சஜு கொடுத்து விட்ட கிண்ணத்தை வைத்து, இரும்பு கதவை தட்டினாள். சுந்தரி வந்து எட்டிப் பார்த்து, கதவை திறந்து விட்டு, "என்ன மா சுஷ்மி... ?" என வினவினார்.

அவளோ ஒரு நிமிடம் மலங்க மலங்க முழித்து விட்டு, "ம்ம்... சசு... அசம்...” எனக் கிண்ணத்தை நீட்டினாள்.

சுந்தரியோ புரிந்து கொண்டு, "ஏன்... உங்க சசு... செய்ய வேண்டியது தான? தான்னா... கல்யாணம் மட்டும் பண்ண தெரிஞ்சுச்சு... ஹும்...” என அவர் பாட்டுக்கு சுஷ்மியை கேள்வி கேட்டுக் கொண்டே, சமையலறை செல்ல,

"யாருக்கு வந்த திட்டோ... நமக்கு என்ன?" என்பது போல், சுஷ்மியும் அவர் பின்னேயே துள்ளி துள்ளி ஓடினாள்.

"ஒரு வேலை பார்க்க தெரில... இதுல வெட்கம் இல்லாம... உன்ன வேற அனுப்பி விட்டுடுறா... அத கொடு... இத கொடுன்னு...” எனச் சலித்தாலும், ரசத்தைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டே, கரண்டியைப் பிடித்து ஆட்டிக் கொண்டே, "அதான்... அன்னிக்கே எல்லாம் கொடுத்து விட்டாச்சுல... இன்னும் என்ன? இங்க கொடுத்து வச்ச மகாராணி மாதிரி, ஒவ்வொன்னா கேட்டுட்டு இருக்கா? என்ன பார்த்தா, உங்க சசுக்கு என்ன வேலைக்காரி மாதிரி இருக்கா?" எனக் கேட்டார்.

சுஷ்மியோ, அவர் கேட்பதை எல்லாம் காதில் வாங்காமல், தன் வாயில் போட ஏதாவது இருக்கிறதா? எனக் கண்களை இங்கும், அங்கும் சுழல விட்டாள்.

கடைசியில் ஒன்றும் சிக்கவில்லை என்றதும், "சசுமா... ஹாக்ஸ்... ஆ...” எனத் தன் ஆள் காட்டி விரலை, தன் திறந்த வாய்க்குள் விட்டுக் காண்பிக்க, அந்த அழகில் மயங்கியவர், அவளைத் தூக்கி கொஞ்சினார்.

"ஹார்லிக்ஸ் சாப்பிடக் கூடாது பா... இந்தா பால்கோவா சாப்பிடு" எனச் சொன்னவர், டப்பாவில் இருந்து அவளுக்கு ஒரு ஸ்பூனில் ஊட்டியவர், "தோச சாப்பிடுறியா சுஷ்மி... சசுமா ஊற்றி தரேன்...” எனக் கேட்க, குழந்தைக்கு என்ன தோன்றியதோ, சரியெனத் தலையாட்டினாள்.

அவரும் ஒரு தோசை ஊற்றி, அதைச் சிறு துண்டுகளாக்கி பிய்த்து போட்டு, சட்னியும், கொஞ்சம் சீனியும் போட்டு, தட்டை அவளிடம் தர, அவளோ தட்டை வாங்கிக் கொண்டு, தன் வீட்டில் இருக்கும் சஜுவிடம் சென்றாள். சுந்தரியோ "இவ என்ன இப்படி ஓடுறா... ? சரி சஜுட்ட சாப்பிடப் போறா... போல" என எண்ணிக் கொண்டு, ரச கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அக்ஷய் வீட்டிற்குச் சென்றார்.

அங்கோ, முன்னறையில் தலையணை போட்டு, படுத்திருந்த சஜுவுக்கு, மண்டியிட்டு அவளருகே அமர்ந்திருந்த சுஷ்மி அந்தத் தோசையை ஊட்டி கொண்டிருக்க, சஜுவோ எழுந்து, கலங்கிய கண்களோடு அதை "ஆ...” வாங்கிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட சுந்தரியோ, அவர்களின் பாசப் பிணைப்பில், மனதினுள்ளே ஒரு நிமிடம் மகிழ்ந்தாலும், தன் மகளின் மீது உள்ள கோபம் குறையவில்லை. பின்னர் அருகே செல்ல செல்ல தான், அவள் தலையணையோடு அமர்ந்திருந்த கோலம் எதையோ உணர்த்த, சட்டென்று இன்று என்ன தேதி என யோசித்தார்.

பின் அவருக்கு, தன் பெண், வீட்டிற்கு விலக்காகி இருக்கிறாள் என்ற விஷயம் புரிய, "ம்ம்ஹூம்...” எனச் செருமி, "என்ன பண்ணுது?... காலைல எதுவும் சாப்பிடலையா?" எனத் தன் மகளின் மீது கோபம் இருந்தாலும், அவளுக்கு உடம்பு முடியாத இந்தச் சூழலில், தாயுள்ளம் தலைத் தூக்க தான் செய்தது.

சஜுவோ காலை அக்ஷய்க்கு சப்பாத்தியும், வெங்காயம், தக்காளி அதோடு சேர்த்து சிறிது பருப்பு போட்டு, சப்ஜி போலச் செய்தவள், பின் சாதம் மட்டும் வடித்து, அக்ஷய்க்கு தயிர் சாதம் மட்டும் கிளறி, மதியத்திற்குக் கட்டிக் கொடுத்து விட்டாள். அதற்குத் தொட்டுக் கொள்ள, இந்தச் சப்ஜியையே, வைத்தும் விட்டாள்.

அக்ஷயும், அவள் தாமதமாய் எழுந்து, அமைதியாய், சுருக்கமாய்ச் சமையல் செய்யவுமே, ஏதோ புரிந்தார் போல், எதுவும் கேட்காமல், சாப்பிட்டு விட்டு சென்று விட்டான்.

பின் சுஷ்மிக்கு ஒரு சப்பாத்தி ஊட்டி விட்டு விட்டு, எதுவும் சாப்பிட பிடிக்காமல், ஓய்வாய் படுத்து விட்டாள். அவள் பின்னேயே வால் பிடித்துக் கொண்டு அலையும் சுஷ்மி, அதைக் கண்டு கொண்டவள் போல், "சசு... ஆஆ... னோ...” எனக் கேட்க, "நான் பிறகு சாப்பிடுறேன் டா சுஸு...” எனப் பதில் தந்து, படுத்து கொண்டாள்.

பின் சுஷ்மிக்கு, மதியம் சாப்பாட்டிற்கு ஏதவாது வேண்டுமே என்று தான், சுந்தரியிடம் ரசம் கேட்டு, அனுப்பி வைத்தாள். ஏனெனில், சுஷ்மி இன்னும் தயிர் சாதம் சாப்பிட பழகவில்லை. ஏன் நம் சஜுவே, தயிர் சாதம் சாப்பிட மாட்டாள்.

ஆனால், சுந்தரி வீட்டிற்குச் சென்ற குழந்தை, அவளுக்கெனச் சுட்டு கொடுத்த தோசையை, தான் உண்ணாமல் இருப்பதால், தனக்குக் கொண்டு வந்து ஊட்டி விடவும், அந்தப் பிஞ்சின் பாசத்தில் நெகிழ்ந்தவள், தன் தாயின் வரவும், மேலும் அவரின் காட்டமான பேச்சிலும் உள்ள கரிசனத்தை உணர்ந்தவள், மென்மேலும் கலங்கினாள்.

அதைக் கண்ட தாயுள்ளத்திற்கு, அவளின் மீதுள்ள கோபம் கூட, அவளின் கண்ணீரிலேயே கரைந்து விட்டது போலும்! அருகே சென்று "என்ன சஜு... என்ன மா பண்ணுது சொல்லு?" என வாஞ்சையோடு, அவள் தலைத் தடவி கேட்டார்.

ஆயிரம் தான் இருந்தாலும், அவர் பெற்ற மகவு அல்லவா? அதிலும் ஒரே மகள்... அதனால் தான் இவளின் இந்தச் செயல்களால், பயந்து, புளிக்கரைத்தது அவர் வயிற்றில்... பின்னே! பெற்ற ஒரே மகளின் வாழ்க்கையல்லவா, இதில் அடங்கியுள்ளது. ஆனால் அந்தக் கலக்கமெல்லாம், வைரம் மற்றும் திருவின் பேச்சில் கொஞ்சம் குறைந்தது. மேலும் அங்கு அவர்களின் ஊருக்கு, வள்ளியின் குழந்தையைக் காண சென்ற போது, அவர்கள் உபசரித்த பாங்கும், கவனிப்பும், அவர்களின் அன்பான கூட்டில் சஜுவை ஏற்றுக் கொண்டது புரிய, மிச்ச மீதி கலக்கமும் குறைந்தது.

சஜு, தன் குழந்தை, மற்றும் தன்னைப் பெற்ற அன்னையின் அன்பில் நெகிழ்ந்து, தன் அன்னையின் மடியில் படுத்து, அவர் இடையைக் கட்டிக் கொண்டு, "ம்மா... சாரி மா... என்ன மன்னிச்சிடுமா... எனக்கு அப்போ என்ன பண்றதுன்னே தெரியலமா... அதான்... ப்ளீஸ் மா...” எனக் கண்ணீர் உகுந்தாள்.

சுந்தரியும், அவள் தலையைத் தடவிக் கொண்டே, அன்று நடந்ததை மனதில் பாரத்தோடு நினைக்கத் தான் செய்தார். இருந்தும், தன் மகளுக்காக, "சரி... விடு... எது நடக்கணுமோ... அதானே நடக்கும். எங்கம்மா முந்தி ஒன்னு சொல்லுவாங்க... ஒருத்தனோட பொண்டாட்டிய, அடுத்தவன் வந்து கட்ட முடியாதுன்னு... அது உன் விசயத்துல நல்லா பொருந்திருக்கு. நாங்க, உனக்கு விஜய மாப்பிளன்னு நினைக்க, ஆனா கடவுள் அக்ஷய் மாப்பிள்ளைக்குத் தான் உன்ன கட்டிவைக்கனும்னு முடிவு செஞ்சிருக்கார்" எனத் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டார் போலும் “சரி... எந்திரி... சாப்பிட்டியா முத...” எனக் கேட்க,

சஜுவோ "இல்லமா... எப்படியோ இருந்துச்சு... அதான் மதியம் ஒரேதா சாதம் சாப்பிட்டுக்கலாம்னு விட்டேன்" எனப் பதில் சொல்ல, அவரோ "இந்த மாதிரி சமயத்துல்ல, இப்படி வயத்த... காயப்போடாதேன்னு எத்தன வாட்டி சொல்லிருக்கேன்" எனத் திட்ட தொடங்க... அது கூடச் சஜுவிற்கு, சுகமாய் இருந்தது.

அதுவரை சஜு அழுவதை, அமைதியாய் பார்த்த குழந்தை, பின் அவள் சாதரணமாய்ப் பேசவும், "சசு... இடா... ஆ...” என ஊட்டிவிட வந்தவள், சஜுவிற்கு வசதியாய் ஊட்ட, சுந்தரியம்மாவின் மடியிலே உரிமையாய் அமர்ந்து கொண்டாள்.

சுஷ்மியின் செய்கையில், சுந்தரி ஒரு நிமிடம் சிலிர்த்து, அப்படியே தன் மடியில் இருந்த குழந்தையை அள்ளி முத்தமிட்டார்.”நான் இல்லைன்னாலும்... என் பேத்தி, உன்ன நல்லா கவனிச்சுக்கவா போல, எனக்கு இனி உன்ன பத்தின கவலையே இல்ல சஜு...” என மகளிடம் சொன்னவர், "சரி, இரு இன்னும் ரெண்டு தோச வார்த்துக் கொண்டு வரேன். என்ன சமையல் பண்ண?" எனக் கேட்டுக் கொண்டே, அங்கிருந்த சமையலறைக்குச் சென்றார்,

அங்குப் பாத்திரங்கள் எல்லாம், மூடியிட்டு அழகாய், அடுக்கி வைக்கப்பட்டு, சுத்தமாய் இருந்ததைப் பார்த்து, மனதுள் தன் மகளை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

பின் சுந்தரி தோசைச் சுட்டுத் தர, சுஷ்மி, தான் தான் அதைக் கொண்டு போய்ச் சஜுவிற்குக் கொடுப்பேன் என அடம் பண்ணி, "சட்னி எல்லாம் சிந்தப் போகுது... பாரு... நான் கொண்டு போறேன் சுஷ்மி" எனச் சுந்தரி சொன்னதையும் கேட்காமல், பிடிவாதமாய்க் கொண்டு சென்றாள் குழந்தை.

அதன் பின் "ரசமும், கொஞ்சம் காயும் வச்சிருக்கேன்... மதியத்துக்குச் சாப்பிட்டுக்கோ. ஒரு ரெண்டு நாள் குழந்த கிட்டயே இருக்காம... தள்ளி இரு... புரியுதா? நான் சுஷ்மிய கூட்டிட்டு போறேன்... நீ வீட்ட பூட்டிட்டு, படுத்து ரெஸ்ட் எடு.” என்று அறிவுரை வழங்கி விட்டு, சுஷ்மியிடம் சஜுவிற்கு உடம்பு முடியவில்லை, அவள் தூங்கட்டும் என அவளுக்குப் புரியும்படி சொல்லி, அழைத்துச் சென்றார்.

மாலை வீடு வந்த அக்ஷய், வீடு உள்ளே பூட்டி இருக்கவும், தன்னிடம் இருந்த திறவுகோளால் திறக்க...”சுஸ்பா...” என அவன் பின்னங்கால்களைக் கட்டிக் கொண்டாள் சுஷ்மி.

அவனோ திரும்பி, "என்ன சுஷு குட்டி... தாத்தா வீட்டுல இருந்து வர்றீங்க... இன்னிக்கு இங்க தான் இருந்து விளையாண்டீங்களா?" என வினவிக் கொண்டே, அவளைத் தூக்கினான்.

அவளோ, கண்ணைச் சுருக்கி, வாயை விரித்துத் தன் அக்மார்க் புன்னகையைச் சிந்தி, "சசு... ஜோ ஜோ...” எனச் சஜு படுத்திருப்பதைத் தன் தந்தையிடம் கூறினாள்.

ஆனால் இவர்கள் வரும் முன்னேயே, எழுந்து அமர்ந்திருந்தவளைக் கண்ட சுஷ்மி, அக்ஷையின் கையில் இருந்து வழுக்கிக் கொண்டு, சஜுவை நோக்கி ஓடி சென்று, அவள் மீது மோதி, கழுத்தைக் கட்டிகொண்டாள். குழந்தையின் செய்கையில், தன் உடல் வலித்தாலும், முகச் சுளிப்போடு பொறுத்துக் கொண்டு, அவளைக் கொஞ்சி விட்டு, விலக்கி, "அப்பாட்ட இரு டா சுஸு... நான் உனக்குப் பால் கலந்து கொண்டு வரேன்" என மெல்ல எழுந்து சென்றாள்.

காலையில் அவளின் அமைதியிலும், தயிர் சாதத்தினாலும் சிறிது சந்தேகம் கொண்டவன், இப்போது அவள் படுக்கையில் இருந்து எழுந்து செல்லவும், அவளுக்கு உடம்பு சரியில்லை என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். ஏனெனில், இவன் வரும் போது, சஜு படுக்கையில் இருக்க மாட்டாள், மேலும் குழந்தை, இவர்கள் வீட்டில் தான் இருப்பாளே ஒழிய, இன்று போல் முரளியின் வீட்டிலிருக்க மாட்டாள். அவர்கள் வீட்டிற்குப் போவாள் தான், ஆனால் சில நிமிடங்களிலேயே வந்து விடுவாள்.

சஜு, அவனுக்கு டீயை கொடுக்கும் போது, "என்ன சஜு... உடம்பு முடியலையா?" எனக் கேட்டான். அவளோ அவனிடம் எப்படிச் சொல்வது எனத் தயங்கி, தலையாட்டி விட்டு, அவன் அடுத்தக் கேள்வி கேட்கும் முன் நகர்ந்து விட்டாள்.

இரவு, சுந்தரி, இவர்கள் மூவருக்கும், புட்டுச் செய்து, சுட சுட எடுத்துக் கொண்டு வந்து தந்தார். மேலும் "மாப்பிள்ள... நாளைக்கு என்ன வேணும்னு சொன்னீங்கன்னா... சமைச்சு கொடுக்க வசதியா இருக்கும்" எனக் கேட்டார்.

"இருக்கட்டும் அத்தை... நானே சமையல் பண்ணிடுவேன். நான் பார்த்துக்குறேன்... உங்களுக்கேன் சிரமம். இதுவே பெருசு...” என அவர் கொண்டு வந்த உணவை சொல்ல, அவரோ "இதுல என்ன சிரமம் தம்பி... சும்மா சொல்லுங்க...” என வற்புறுத்த...

"இல்ல அத்த, நீங்க மாமாவுக்கு, வேற டிபன் கட்டி கொடுக்கனும், உங்களுக்கு எதுக்குச் சிரமம். நீங்க சுஷ்மியும், சஜுவையும் மட்டும் பார்த்துக்கோங்க... அது போதும்" என அவன் முடிக்க, சுந்தரி, ஏதோ சொல்ல வர, "அம்மா... அவர் தான் சொல்றார்ல... விடுமா... நாங்க பார்த்துக்கிறோம்" எனச் சஜு தடுத்தாள்.

சுந்தரியும், "சரி கணவன் மனைவி பாடு, நமக்கென்ன...” என விட்டு விட்டு, விடைப்பெற்று சென்றார்.

இரவு சஜு முன்னறையிலேயே, தனியாக, ஓரமாகப் படுத்துக் கொள்ள, ஆனால் சுஷ்மி அவளுடன் தான் படுக்க வேண்டும் என்று அடம் பண்ணி, அவள் கைப் பற்றி இழுத்தாள்.

அக்ஷயும் "உள்ளேயே வந்து படு சஜு...” என அழைக்க, அவளோ "இல்லங்க... அம்மா தான், இந்த மாதிரி சமயத்துல... குழந்தைப் பக்கத்துலப் படுக்கக் கூடாதுன்னு சொன்னாங்க...” எனத் தலைக் குனிந்து, தயங்கி தயங்கி ஒரு வழியாய் விஷயத்தைச் சொன்னாள். ஏற்கனவே ஒரு பெண்ணுடன் வாழ்ந்தவன் ஆயிற்றே, அதனால் அவள் சொல்ல வந்தது அவனுக்குப் புரிய, சில நிமிடங்கள் கை முஷ்டி இறுக, பழைய நினைவுகளில் ஆழ்ந்தான்.

பின் சுஷ்மியின் சிணுங்களிலும், சஜுவின் சமாதான பேச்சிலும், நிகழ் காலத்திற்கு வந்தவன், "உள்ள வந்து படு சஜு... குழந்த தூங்கினதுக்கப்புறம் பார்த்துக்கலாம்... இப்ப வா... அவ அழுக போறா...” என எச்சரித்தான்.

அவன் சொல்வதும் சரியென, அறையில் தன் இடத்தில் படுத்துக் கொள்ள, அவள் அருகே படுத்த சுஷ்மியோ, "சசு... சசு... கட... சொலுதியா...” எனக் கேட்க, அவளோ சோர்வாய் இருக்க, அதை உணர்ந்த அக்ஷய் "சுஷு... குட்டி, சுஸ்பா கத சொல்லுறேன் டா...” எனச் சொல்ல, அவளோ "அப்பினா... ஆப்பிஸ் கட... டா...” எனக் கண்டிஷன் போட்டாள்.

அக்ஷயும் "சரிங்க... மேடம் சொல்றேன்...” எனத் தன் அலுவலகத்தில், அன்று நடந்த சுவாரசியமான நிகழ்ச்சியையும், தான் செய்த வேலையையும், குழந்தையிடம் அவளுக்குப் புரியுமாறு சொன்னான். அவளும் அந்த சிறு வயதிலேயே, தந்தை தனக்காக தான் வேலைப் பார்க்க செல்கிறான் என புரிந்து கொண்டு, அதனால் தான் அவன் அலுவலகம் சென்றால், அவள் அழுகாமல் அவனுக்கு டாட்டா காண்பிப்பாள்.

குழந்தையும் அதைக் கேட்டுக் கொண்டு, அவன் தட்டிக் கொடுத்ததில் உறங்கி விட, சஜு "என்னங்க... பாப்பா... தூங்கிட்டா, அங்கிட்டு... உங்களுக்கு அந்தப் பக்கமா... தள்ளி படுக்க வைக்குறீங்களா?" என இனி தான் எழுந்து, முன்னறையில் படுக்கை விரித்து, படுக்கச் செல்ல முடியாத சோர்வினால், அவன் என்ன சொல்வானோ எனத் தயங்கி தயங்கி, பயந்து போய்க் கூறினாள்.

அதற்கு அக்ஷயோ, "சரி...” எனத் தலையாட்டி, எழுந்து, குழந்தையைத் தூக்கி, அவனுக்கு அடுத்து, அந்தப் பக்கம் படுக்க வைத்து போர்த்தி விட்டு, தானும் படுத்து விட்டான். ஆனால் சஜுவோ, தனக்கு முதுகு காட்டி தள்ளி படுத்திருந்தவனைப் பார்த்தவள், தன் சோர்வையும் மீறி, அவனைச் சிந்திக்கலானாள்.”எவ்வளவு அழகாய் குழந்தையைத் தூங்க வைக்கிறான்?" என வியந்தவள், "அப்படியே என்னையும் இதே போல் தூங்க வைத்திருந்தால், நன்றாக இருக்குமே...” எனக் கண்ணை மூடி, அவன் தட்டிக் கொடுப்பது போல் கற்பனை செய்து, அனுபவித்து, ஏக்கம் கொண்டாள்.

இப்படியே ஒவ்வொன்றாய் பின்னோக்கி நகர்த்தி, எண்ணி பார்த்துக் கொண்டே, தன்னை மறந்து உறங்கி விட்டாள். திடீரென "சுஸ்பாஆ... ஆ... ஆ...” என்ற அழுகுரலில் முழித்தவள், தன்னருகே பார்க்க, அக்ஷயோ, குழந்தையைக் கையில் ஏந்தி, தோள் மேல் போட்டு தட்டி கொடுத்தான்.

அப்படி இருந்தும், சுஷ்மி "சுஸ்பா... சுஸ்பா... பா...” எனக் கண்ணை மூடிக் கொண்டு அழுதாள். அக்ஷயோ "சுஷு... நான் தான் டா... அப்பா தான் டா... தூக்கி வச்சிருக்கேன்... அழக்கூடாது மா... என் கண்ணுல... என் குட்டி செல்லம்... ஏன் அழுறீங்க...” எனச் சமாதானம் செய்யச் செய்ய, "ஆஆ... ஆ... ஹம்... ம்...” என அழுகையை நிறுத்தி, சிணுங்கிக் கொண்டே உறங்க ஆர்மபித்தாள்.

விடிவிளக்கின் ஒளியில், எல்லாவற்றையும் பார்த்து, எழுந்த சஜு, அவனிடம் பேசப் போக, ஆனால் அவளைக் கண்ட அக்ஷயோ, தன் வாயில் விரல் வைத்து, அவளைப் பேசாது இருக்கும் படி செய்கை செய்தான்.

பின் நன்றாக உறங்கிய குழந்தையைப், படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அவனும் படுத்துக் கொண்டே, சஜுவையும் படுக்குமாறு செய்கை செய்தான். விடிவிளக்கின் ஒளியிலேயே, தன்னைப் பார்த்தப்படி படுத்திருந்தவனிடம், "என்னங்க ஆச்சு?" என மெல்லிய குரலில் விசாரித்தாள்.

அவனும், அவள் கேள்வியை எதிர்பார்த்தவன் போல, "குழந்த... ஏதாவது கெட்டக் கனவு கண்டிருப்பா போல, இல்ல பயந்திருப்பா... அதான் இப்படி அழுறா... கொஞ்ச நாளா இப்படி அழாம இருந்தா... இப்ப இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கா...” என அவனும் மெல்லிய குரலில் கூறினான்.

மேலும், அவள் கலக்கமாய் விழித்திருப்பதைப் பார்த்து, "நீ தூங்கு... நான் பார்த்துக்கிறேன்" எனக் கண்ணை மூடிக் கூறி, அவளையே பார்த்தான்.

அவளும், அவன் சொல்படி கண்ணை மூடினாலும், குழந்தையைப் பற்றிய கலக்கமும், அவன் மட்டும் விழித்திருக்கிறானே என்ற கஷ்டமும், அவளைக் கண்ணுறங்க விடவில்லை. மேலும், மனம் கேளாமல், ஒரு சில நிமிடங்களிலேயே, அவள் விழித்துப் பார்க்க, அவன் அவளையே பார்த்த வண்ணம் இருந்தான். இருந்தும் தயங்காமல் அக்ஷய், "என்ன சஜு?" எனக் கேட்டான்.

அவள் "ஒன்றுமில்லை" என்பது போல் தலையை மறுத்து, ஆட்டினாள்.

"தூக்கம் வரலையா?" என மெல்லிய குரலில், அக்ஷய் கேட்க, அவளோ "ஆம்...” என்பது போல் மேலும் கீழும் லேசாய் தலையசைத்தாள்.

"ஏன்... ரொம்ப முடியலையா? என்ன செய்யுது?... வலிக்குதா?" என அவன் இரக்கத்தோடு அவளைப் பார்த்து கேட்டான்.

அதில் மயங்கியவள், "இல்லை...” என்பது போல் தலையாட்டி, அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

"பின்ன... என்ன?" என அவன் வேகமாய்க் கேட்க, "உங்கள பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு" எனத் தன் மனதை மறைக்காது கூறினாள்.

அதற்கு அவனோ சிரித்துக் கொண்டே, "ஆரம்பிச்சுட்டியா... ? நான் சுஷ்மிய கொஞ்சினாலே ஏதோ உலக அதிசயத்த பார்க்குற மாதிரி பார்க்குற?" என முன்பிருந்தே, குழந்தையைத் தான் கொஞ்சினாலோ அல்லது அவளிடம் பேசினாலோ, தன்னை வித்தியாசமாய்ச் சஜு பார்ப்பதை உணர்ந்து கூறினான்.

அவளோ தன்னைக் கண்டு கொண்டானே எனக் கீழ் உதட்டை மடக்கி, பற்களால் கடித்தப்படி, "ஆமாங்க... ஆனா ஏன் அப்படித் தோனுதுன்னே தெரியலங்க...” எனத் தோளைத் தூக்கி சொன்னவள், "உங்க கைய கொடுங்களேன்...” எனச் சம்பந்தம் இல்லாமல் கேட்டாள்.

அவனோ "ஏன்" என்று கேளாமல், ஆனால் நெற்றி சுருக்கத்தோடு, தன் ஒரு கையை, அவள் பக்கம் நீட்டினான்.

சஜுவோ அந்தக் கையைத் தன் கரங்களால் பற்றிக் கொண்டே, தன் கன்னத்தருகே கொண்டு சென்று, அதில் முகம் புதைத்து, கண்ணை மூடி துயில் கொள்ள ஆரம்பித்தாள். அக்ஷையும் அவளின் இந்தக் குழந்தைத் தனமான செய்கையில், மனம் கரைந்து, தடுக்காமல் விட்டு விட்டான். அவனும் அவளைப் பார்த்த வண்ணம் துயில் கொண்டான்.

அதிகாலை விழித்தவன், சஜு தன் கையை இன்னும் விடாமல், சிறு குழந்தைப் போல் பிடித்துக் கொண்டே துயில்வதைக் கண்டவன், புன்னகையோடு, தன் கையை விடுவித்துக் கொண்டு, சுஷ்மியைப் பார்த்தான்.

அவளிடம் இருந்து கலைந்து கிடந்த போர்வையை, மீண்டும் குழந்தைக்கு நன்றாகப் போர்த்திவிட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்தவன், சஜுவையும் பார்த்தான். அவளின் போர்வையும், அவள் இடுப்பு வரை தான் இருந்தது, பின் அவளுக்கும் போர்வையைக் கழுத்து வரை போர்த்தியவன், என்ன நினைத்தானோ? அல்லது துயிலும் சஜுவின் முகத்தில் என்ன கண்டானோ? அவள் கன்னத்திலும் ஒரு முத்தம் வைத்து விட்டு நகர்ந்தான்.

பின் சஜு எழும் போது, அக்ஷய் டீ போட்டு முடித்து, பருப்பையும் குக்கரில் வைத்து, அது விசில் அடித்துக் கொண்டிருந்தது. அக்ஷய், எழுந்து வந்தவளுக்கு டீ ஊற்றி தந்து கொண்டே, "பருப்ப இன்னும் இரண்டு விசில்ல இறக்கிட்டு, உல வைக்கிறியா சஜு... நான் குளிச்சிட்டு வந்துடுறேன்" எனச் சொல்ல,

அவளோ அவசரமாய் "இல்லங்க நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன்... இன்னிக்கு குளிக்காம, சமையல்கட்டுக்கு போ கூடாது... ப்ளீஸ்... நீங்க கொஞ்சம் பொறுத்துக்கோங்க, நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்" எனக் கண்ணைச் சுருக்கி, கெஞ்சினாள். அவனும் "சரி, போயிட்டு வேகமா வா...” என விட்டான்.

அதன் பின் குளித்து முடித்த இருவரும், உற்சாகமாய், ஒருவருக்கு ஒருவர் உதவியப்படி சமைத்து முடித்தனர். இதற்கிடையில் எழுந்த சுஷ்மியையும் கவனித்துக் கொண்டனர்.

அவன் உணவு உட்கொள்ளும் சமயம், சஜுவோ "உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா... தேங்க்ஸ் ங்க...” எனத் தனக்காகச் செயத்திருக்கிறானே என நன்றி நவின்றாள்.

அவனோ "ஏன்... தினம் சமைக்கச் சொல்லலாம்னு ப்ளான் போடுறியா?" எனக் கேள்வி கேட்டாலும், அவன் முகத்தில் புன்னகையே நிரம்பி இருக்க, "இம்... சொன்ன உடனே சமைச்சு போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க...” என வாயை சுளித்து நொடித்துக் கொண்டாலும், அவளுக்கும் புன்னகை அரும்பியது.

தனக்காக நேற்று, அவள் உடம்பு முடியாமல் தயிர் சாதம் செய்திருந்தாலும், அதில் கடனே என்று வெறும் தயிர் மட்டும் ஊற்றிக் கொடுக்காமல், அதில் இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் போட்டு மணமாய்த் தாளித்து, அன்பாய் கட்டிக் கொடுத்ததால், அவனும் இன்று அன்பாய் நடந்து, அவளைக் கவனித்துக் கொண்டான்.

ஆக மொத்தம், இருவரின் மனதிலும், அடுத்தவரின் மீது அன்பு உருவானது. நம் சஜுவுக்கோ, ஒரு படி மேலே சென்று, இன்று தோழமையோடு அன்பாய் பழகுபவன், நாளை நம் மீது காதல் மழை பொழிவான் என்று நம்பிக்கைக் கொண்டாள்.

இதற்கிடையில், அக்ஷய்க்கு விடுமுறை கிடைக்காமல், அந்த வார கடைசியில், பூதலூர் சென்று, வள்ளியையும், அவள் மகவையும், புதுத் துணி மற்றும் இனிப்புகளுடன் கொண்டு சென்று, பார்த்து விட்டு வந்தனர்.

வள்ளியின் குழந்தைக்கு முப்பது நாள் முடிய, இன்னும் ஒரு வாரமே இருக்க, சஜுவிடம், "அண்ணி... நீங்க இங்கேயே இருங்களேன். இன்னும் முப்பது செல்ல, ஒரு நாலு நாள் தான இருக்கு... அண்ணனுக்குத் தான லீவ் கிடைக்கல... நீங்களும், சின்னக் குட்டியும் இருங்களேன். அண்ணன் வேணா போயிட்டு வரட்டும்...” என ஆசையாய் வள்ளி கேட்டாள்.

வைரமும், அதையே சஜுவிடம் வலியுறுத்தி, அக்ஷயிடமும் சொல்ல, அவனோ தன் மனையாளின் முகத்தையே பார்த்தான். அவளே பதில் சொல்லட்டும், தன் மனதை உரைக்கிறாளா என்று பார்க்கலாம் என எதிர்பார்த்தான்.

அதை உணர்ந்தார் போல் சஜு, "இல்ல வள்ளி, உங்க அண்ணன் என்ன விட்டிட்டு கூட இருந்திருவார். சுஷ்மிய விட்டிட்டு இருக்க மாட்டாருன்னு உங்களுக்கே தெரியும்ல... அதுனால அவங்க இரண்டு பேரையும் பார்த்துக்க, நானும் போகணும். புன்னியதானத்துக்கு வரும் போது, ஒரு வாரம் லீவ்ல வருவோம்ல, அப்போ இரண்டு நாள் சேர்ந்தே இருந்திட்டு போறோம்" எனக் குடும்பமாய், தங்கள் மூவரையும் குறிப்பிட்டுச் சொன்னதில் அக்ஷய் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் உள்ளமும், குளிர்ந்து விட்டது. அனைவரும், மகிழ்ச்சியோடு அவர்களை வழியனுப்பினர்.

இரவு ரயிலில், சென்னைக்குத் திரும்பும் போது, "தேங்க்ஸ் சஜு... எங்க... இருக்கிறோம்னு சொல்லிடுவியோன்னு... பயந்துட்டேன்" என அவள் கரம் பற்றி, அழுத்தி சொன்னான்.

அதற்குப் புன்னகைத்த சஜுவோ, "எனக்கு உங்கள பற்றித் தெரியாதாங்க... அதான் அப்படிச் சொன்னேன்" என அவன் கண்ணைப் பார்த்து சொல்ல, அவள் மடியில் இருந்து, அவர்களை வேடிக்கைப் பார்த்த சுஷ்மியும், சஜுவை பற்றியிருந்த அக்ஷையின் கை மீது தன் கரத்தையும் வைத்தாள். அதைக் கண்ட கணவன், மனைவி இருவரும் சிரித்து விட, அந்தச் சிரிப்பில், சுஷ்மியும் கலந்து கொண்டாள்.

உன்னோடு நான் இருந்தால்

மாதங்கள் பன்னிரெண்டும்

பன்னீர் தூவும்...

நாட்கள் முன்னூற்றி சொச்சமும்

மும்மாரி பொழியும்...

அதுவே

உன்னோடு நான் வாழ்ந்தால்?...

யாராகியரோ...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 26

"என்னங்க... என்ன... ங்க... நான் சொல்லிட்டே இருக்கேன்ல... எனக்குத் தெரியாதுன்னு...” எனச் சஜு செல்லமான அழுகுரலில் சொல்ல, அக்ஷயோ அதைப் பொருட்படுத்தாமல், "நானும் ஏன்னு... விளக்கம் சொல்லிட்டேன். நாம இப்ப நைட் ட்ரைன்ல கிளம்புறோம். நாளைக்குக் காலைல புண்ணியதானம், சோ எங்க உறவுக்காறவங்க எல்லாம் வந்திருப்பாங்க, அதுனால தான் உன்ன புடவ கட்டிட்டு... வர சொல்றேன்னு சொல்லிட்டேன். அவ்ளோ தான்.” என அழுத்தமாய்ச் சொல்லி, முற்று புள்ளி வைத்து நகர்ந்தான்.

"நாளைக்குக் காலைல, அங்க போய்ப் புடவ கட்டுறேன்னு சொன்னா... கேட்குறாரான்னு பாரு... பெரிய நாட்டாம இவரு... ஒரு தடவ... தீர்ப்பு சொல்லிட்டா... மாத்த மாட்டாரு" எனச் சஜு தனக்குத் தானே புலம்புகிறாள் என்று மட்டும் எண்ண வேண்டாம்.

அவளின் எதிரே சுஷ்மி இருக்க, அவளிடம் தான், அக்ஷய் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள். மேலும் "உங்கப்பாக்கு ரொம்பத் தான் பிடிவாதம்... சொல்லி வை... இந்த ஒரு தடவ மட்டும் தான்... அப்புறம்லா என் இஷ்டம் தான். என்ன... புரியுதா?...” என அவளின் தந்தையை மிரட்ட முடியாமல், இடுப்பில் இரு கையை வைத்துக் கொண்டு, அவனின் மகளை மிரட்டினாள்.

ஆனால் நம் சுஷ்மியோ, குளியலறையில் இருந்து வந்த தன் தந்தையிடம், "சுஸ்பா... சசு... இடா... ஒன்னு... டா... வாம்...” என 'இந்த ஒரு தடவை மட்டும் தான்' என்று சஜு சொன்னதை, மறக்காமல் தன் தந்தையிடம் சொல்ல, அக்ஷயோ புரியாமல், "என்ன மா?" என வினவினான்.

அதற்குள், சுஷ்மியை தன்னிடம் இழுத்துக் கொண்ட சஜு, "ஹாஆ... அது ஒன்னும் இல்ல... அவ ஏதோ உளறுறா...” எனத் தானாக ஆஜரான சஜுவை பார்த்தவன், "என்ன... நீ இன்னும் சேல கட்டலையா?" எனக் கேட்டான்.

"இம்ம்... உங்களுக்காகத் தான் வெய்ட்டிங்...” என வாயை ஒரு பக்கமாய் இழுத்து சொன்னாள் “ஏன், நான் ஏதாவது ஹெல்ப்... பண்ணனுமா?" எனச் சாதாரணமாய்த் தான் கேட்டான்.

ஆனால் சஜுவோ "இம்... தேவைப்படும் போது கேட்டுக்குறேன்... இப்போ, உங்க பொண்ண... பார்த்துக்கோங்க, நான் போய் அம்மாகிட்ட சேலை கட்டிட்டு வந்திடுறேன்" எனத் தன் அம்மா வீட்டிற்குச் சென்றாள்.

அங்கு நம் சுந்தரியும், முரளியும், இவர்களுடனே, ஊருக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தனர். ஆம், திரு இவர்களைப் புண்ணியதான விழாவிற்கு அழைத்திருந்தார். மேலும், அதையொட்டி சுஷ்மிக்கு, அவர்களின் குலதெய்வ கோவிலில் மொட்டைப் போடுவதால், அதற்காகவும் செல்கிறார்கள்.

சுஷ்மியை தயார்படுத்திக் கொண்டே, "உன்ன கூடச் சமாளிச்சிடுவேன் போல... உன்னோட சசுவ சமாளிக்கிறதுக்குள்ள... எப்பா... உங்க தாத்தா நல்லா வளர்த்திருக்கார் பொண்ண...” எனச் சஜுவை பற்றி, தன் மகளிடம் தாளித்தான்.

அது வேறு ஒன்றும் இல்லை, இத்தனை நாளும், சுடிதாரும், இரவானால் நைட்டியும் தான் அணிவாள் சஜு. ஆனால், இப்போது ஊருக்கு, அதுவும் அக்ஷையின் ஊர்... கொஞ்சம் கிராமம் சார்ந்ததாய் இருப்பதாலும், மேலும் குடும்ப விழா என்பதாலும், அக்ஷய் அவளைக் கண்டிப்பாய் சேலைக் கட்டி தான் சொல்ல வேண்டும் என்று சொல்ல, அதற்கு அவள் நாளை விழாவின் போது கட்டுகிறேன் என்று சொல்ல, அதனால் தான் இவ்வளவு பெரிய தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.

பின் அனைவரும், இரவு ரயிலில் ஒன்றாய் செல்ல, சுஷ்மிக்கு தான் குஷி தாங்க முடியவில்லை, ஜென்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என ஒரே அடம். அக்ஷய் கூட "அச்சோ... காற்று அடிக்கும் மா... அப்புறம் பாப்பாக்கு உடம்பு முடியாம போய்டும் மா...” என எடுத்து சொல்லியும், அவள் தலையை மறுத்து ஆட்டினாள். அனால் சஜ்னாவோ, அவளுக்கு ஸ்வெட்டரும், மப்ளரும் அணிவித்து அமர வைத்தாள்.

அவளை முறைத்து பார்த்த அக்ஷயிடம் "கொஞ்ச நேரத்துல தூங்கிடுவா... விடுங்க...” என அவனுக்கு எடுத்து சொன்னாள்.

ரயில் ஏறியதுமே, சுந்தரியும், முரளியும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தங்கள் பெர்த்தில் படுத்து கொண்டனர். சஜுவின் பெர்த்துக்கு மேல் பெர்த்தில் தான் அக்ஷய் படுக்க வேண்டும், ஆனால் சுஷ்மி உறங்குவதற்காக இருவரும் சஜுவின் கீழ் பெர்த்தில் அடுதடுத்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின் குழந்தையும் உறங்கிவிட, அவளைத் தன்னிடமே, பாதுகாப்பாய் படுக்க வைத்து கொண்டாள் சஜு.

விடியலில், ஊரில் இறங்கி, உறங்கிய குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு அக்ஷயும், மற்றவர்களும், பெட்டி சகிதமாய் இறங்கி, ஆட்டோ பிடித்து வீட்டிற்குச் சென்றனர். வைரம், வந்தவர்களைச் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் படி, கூறினார். சஜு மற்றும் அக்ஷய்க்கு, மாடியில் இருக்கும் அவன் அறையையே ஒதுக்கியிருந்தனர்.

சுஷ்மியின் வலதுபுறம் அக்ஷயும், அவளின் இடதுபுறம் சஜுவும், துயில் கொண்டிருந்தனர். தூக்கத்திலேயே விழித்தவன், கண் திறவாமலே, தன் அருகே இருந்த குழந்தையைத் தன் இடக்கையை நீட்டி, தடவி பார்த்தான் அக்ஷய். ஆடையற்ற வெற்று உடல், அவன் கைகளில் பட, குழந்தையின் ஆடையை இழுத்து விட எண்ணி, அப்படியே தன் கையை மேலே நகர்த்தினான்... அப்போது தான் வித்தியாசத்தை உணர்ந்தவன், சட்டெனக் கையை இழுத்துக் கொண்டு, கண் விழித்தான் அக்ஷய்.

அதே சமயம் கண்களை மறைத்தப்படி, தன் கைகளைத் தலையணை மேல் வைத்து, தலையணையையும் பற்றியப்படி, படுத்திருந்த தன் வெற்று இடையில் கைப் பட்டாலும், குழந்தை தான் போல, எனத் தூக்கத்தில் இருந்து முழுதாய் விடுப்படாத சஜு நினைக்க, ஆனால் அந்தக் கை, இடையில் இருந்து மேலே நகரவும், ஏதோ உள்ளுணர்வு உந்த, தன் கையை விலக்கி விழித்தாள் சஜு.

அப்போது தன் கையை எடுத்துக் கொண்டே, "சா... சாரி சஜு... நான் குழந்தன்னு... நினச்சு...” என அதற்கு மேல் வார்த்தைகள் வராமல், தன் பார்வையைத் தாழ்த்தி கொண்டான் அக்ஷய்.

அப்போது தான், தன்னை ஆராய்ந்த சஜு, தனக்கு வலப்பக்கமாய்ப் படுத்ததால், முந்தானை முழுவதும், கீழே ஒதுங்கி கிடக்க, வெற்று இடை பளீரெனத் தெரிய, அதற்கு மேல் சேலையில் ஒழிய வேண்டிய பகுதிகள், சேலையைத் தொலைத்திருக்க, அவசரவசரமாய்த் தன்னைச் சரி செய்து கொண்டாள்.

"தூக்கத்தில்... சேலை விலகியது கூடத் தெரியாமல்... தூங்கியிருக்கேனே...” எனத் தன்னை நொந்து கொள்ளாமல், அக்ஷயை முறைத்த வண்ணம், "இதுக்குத் தான் சேலை கட்டமாட்டேன்னு சொன்னேன்... நமக்கும் சேலைக்கும் ஆகாதுன்னு... சொன்னா... இந்த மனுஷன் கேட்டா தான... ஓசியிலேயே படம் காமிச்சிட்டேனோ...” என அவனையும், தன்னையும் சேர்த்தே மனதுக்குள் திட்டிக் கொண்டவளை கலைத்தது அவன் குரல்.

"ஹே... குழந்தை எங்க?" என அவளிடம் கேட்டப்படியே, சுற்றும் முற்றும் பார்த்தான்.”அதான... எங்க? குழந்தையக் காணோம்... சுஷ்மி... சுஸு...” என அழைத்தப்படியே, கணவன் மனைவி இருவரும் எழுந்தனர். அங்கு அவர்கள் அறையிலிருந்த, மரப் பீரோவின் கதவு திறந்திருக்க, அந்தக் கதவின் உட்பக்கமாய் அமர்ந்திருந்த சுஷ்மி, தன் தலையை மட்டும் நீட்டி, முகத்தில் சிரிப்போடு எட்டிப் பார்த்தாள்.

ஆம், இவர்கள் பயணக்களைப்பில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்க, நன்றாக ரயில் பயணத்திலேயே உறங்கிய சுஷ்மி, இங்கு வந்ததும் சிறிது நேரத்திலேயே எழுந்து, கட்டிலில் இருந்து மெல்ல இறங்கி, விளையாட ஏதாவது கிடைக்குமா என ஒவ்வொன்றாய் திறக்க முயன்று, இயலாமல் போக, கடைசியில் இந்த மரப் பீரோவைத் திறந்து நோண்டிக் கொண்டிருந்தாள்.

மேலும் அவர்கள் தன்னை அழைக்கவும், தன் கையில் இருந்ததைத் தூக்கிக் கொண்டு, "சுஸ்பா... பாப்பா... சுஸ்பாப்பா...” எனச் சொல்லிக்கொண்டே, அவர்களிடம் நடந்து சென்றாள். அவர்களும், தங்கள் கவனத்தை, குழந்தையிடம் திருப்பி, என்னவென்று பார்க்க, அவள் தன் இரு கைகளால் புகைப்பட ஆல்பத்தின் ஒரு பக்கத்தை மட்டும் தூக்கி பிடித்து, வந்து கொண்டிருந்தாள்.

அதை வாங்கி, அவளையும் தூக்கி, "சீக்கிரமே எந்திரிச்சுடீங்களா சுஷு குட்டி" என முத்தமிட்டு, தங்கள் இருவருக்கும் இடையில் அமர வைத்தான் அக்ஷய்.

அதற்குள் சஜு, அந்த ஆல்பத்தைப் புரட்டத் தொடங்கியிருக்க, "என்னங்க... இது சுஷ்மி தான?" என அவள் ஆவலாய், அவனிடம் நெருங்கி கேட்க, அவனும் அவளின் முதுகுப் பின்னே, இருந்த இடத்தில் தன் இடக்கையை ஊன்றி, நெருங்கி வந்து, "இம்ம்... ஆமா எட்டு மாசமா இருந்தப்ப எடுத்தது.”

"ஐயோ... எவ்வளவு அழகா... ஸ்வெட்டர் எல்லாம் போட்டு... அழகா சிரிக்குறா.” எனக் குதுகாலித்தாள்.”ம்ம்... னா... சுஸ்பாப்பா...” எனச் சுஷ்மியும், ஆல்பத்தை அவள் மடியில் தக்க வைத்து கொண்டாள்.

அதன் பின் அடுத்தப் புகைப்படப் பக்கத்தைச் சுஷ்மியே திருப்ப, அதைக் காணும் ஆவலில் சஜு குனிய, அக்ஷயும் எட்டிப் பார்த்து "இது... சுஷ்மிக்கு ஒன்னோ... ஒன்ற வயசுல எடுத்ததுன்னு... நினைக்கிறேன்" எனச் சொல்ல, அடுத்தடுத்த புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது, இருவரும், அறியாமலே ஒருவரை மற்றவர் உரசிக் கொண்டு, புகைப்படத்தைப் பார்த்து முடித்தனர்.

எல்லாவற்றையும் பார்த்து முடித்த சஜு "என்னங்க... சுஷ்மி பிறந்தப்ப, போட்டோ எடுக்கலையா?" எனக் கேட்க, ஒரு நிமிடம் இறுக்கமாய் இருந்தானோ? என ஐயம் கொள்ளும் அளவு, அமைதி காத்தவன், சட்டென்று, "அப்பலாம்... போட்டோ எடுக்க மாட்டோம்... நாங்க. சரி, சரி நீ போய்ச் சீக்கிரம் குளிச்சிட்டு, சுஷ்மிய கவனி, நானும் குளிக்கணும், பஃக்ஷனுக்கு நேரமாச்சு... எந்திரி எந்திரி...” எனப் படுக்கையை மடக்கி வைக்கும் பணியைத் தொடர்ந்தான்.

அவளும் எழுந்து சென்று, குளித்து முடித்து, கீழே சென்று அக்ஷய்க்கு டீயும், சுஷ்மிக்கு பாலும் கலந்து கொண்டு வந்தாள். பின் சுஷ்மியை குளிப்பாட்டி தயார் செய்தவளின் மூளையில், "அப்போ வள்ளியோட பையன்னல... செல்லுல போட்டோ எடுத்திருந்தாரே... பிறகேன் சுஷ்மிய எடுக்கல? ஒரு வேளை... அப்போ தான் ஜனனி இறந்துட்டாங்களோ...” எனக் குழம்பியவள், "ஹே... சஜு... இன்னுமா ரெடியாகல? சீக்கிரம்... கீழ போய் அம்மாக்கு கூட மாட ஒத்தாச பண்ணு...” எனக் குளித்து முடித்து வந்தவன், துரிதப்படுத்தியதில் கலைந்தாள் சஜு.

பின் அவன் சொன்னதைச் செய்தவளை, வைரம், "என்னத்தா... இப்படிச் சாதாரணச் சேலையக் கட்டிட்டு வந்து நிக்கிறவ? போ... போய்ப் பட்டுச் சேலையா உடுத்திட்டு வா கண்ணு... நம்ம சொந்த பந்தம்லாம் வர போக இருப்பாக... முத முத உன்ன பார்ப்பாக... அழகா... அம்சமா... அம்மன் போலப் பட்டுச் சேல உடுத்திட்டு வா தாயி...” எனத் திரும்பவும் மேலே அனுப்பிவிட்டார்.

நம் சஜுவிற்குச் சாதரணச் சேலைக் கட்டுவதே பெரும் பாடு, கஷ்டப்பட்டு... பொறுமையாய்... பத்து நிமிடம் ஒதுக்கி கட்டுவாள். இதில் பட்டுச் சேலைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? மேலும் ஊரிலிருந்து வரும் போதே, சுந்தரி "இப்ப கட்டி விடுறது தான்... நல்லா பார்த்துக்கோ... அங்க வந்தும்... தினம் சேல கட்டிவிடச் சொல்லி... என்ன கூப்பிட்டு... என் மானத்த வாங்க கூடாது, சொல்லிட்டேன்.” எனத் தயவு தாட்சணியமில்லாமல் எச்சரிக்கவும், சஜுவும் 'பூம் பூம்' மாடு போலத் தலையை ஆட்டி வைத்தாள்.

அதனால் இப்போது சுந்தரியை அழைத்தால், வேப்பிலை ஒன்று இல்லாத குறையாய், தன்னிடம் சாமி ஆடுவார் எனப் பயந்து, தன் கையே தனக்கு உதவி எனக் களத்தில் இறங்கினாள் சஜு.

அறையில் தயாராகிக் கொண்டிருந்த அக்ஷயிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, "சரி... நான் வெளிய இருக்கேன்... சீக்கிரம் கட்டிட்டு வா... நான் ஷர்ட்ட வேற அயன் பண்ணனும்" என அவனும், கையில்லாத பனியன் அணிந்து, வேஷ்டியோடு வெளியே வரண்டாவில் நின்று, வேடிக்கைப் பார்க்க தொடங்கினான்.

ஆயிற்று... ஐந்து நிமிடம்... பத்து நிமிடம்... பதினைந்து நிமிடம் என நேரமும் ஆயிற்று... ஆனால் சஜுவின் அறைக்கதவு தான் திறக்கவில்லை. அக்ஷயும் பொறுமையிழந்து, கதவைத் தட்டப் போன சமயம்... “என்னங்க... இங்க கொஞ்சம் வாங்களேன்...” எனச் சஜுவே கதவை திறந்து, சேலையைப் பிடித்தப்படி அழைத்தாள்.

அவனும் "என்ன சஜு... ஒரு சேலைய கட்ட இவ்வளவு நேரமா?" எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவன், அதன் பின் தான் கதவருகே நின்ற சஜுவை திரும்பி பார்த்தான். பச்சை பட்டுச் சேலையை முந்தானை வைத்து, இடுப்பு சேலையைக் கையில் வைத்துக் கொண்டு, பாதிக் கட்டியும் கட்டாமல் நின்றவளைப் பார்த்து "ஹே... இன்னுமா நீ கட்டல?" எனக் கேட்க, அவளோ "எனக்கு மடிப்பே வரமாட்டேங்குது... நீங்க ஹெல் பண்ணுறீங்களா?" என அப்பாவியாய், விட்டால் அழுது விடுபவள் போல் கேட்டாள்.

அவனோ அவளின் நிலையைப் புரிந்து கொண்டு, "சரி... இங்க வா...” என அவளை மடிப்பு வைக்கச் சொல்லி, இவன் வேஷ்டியை முழங்கால் வரை மடித்து கட்டி, கீழே முட்டிக் காலிட்டு அமர்ந்து மடிப்பை நீவி விட்டு உதவி செய்தான். எல்லாம் அன்று ஜவுளிக் கடையில், சஜுவுக்குச் சேலைக் கட்டிவிட்டதை, அக்ஷய் பார்த்ததின் பலன், இன்று அவனுக்கு உபயமாயிற்று.

இதற்கிடையில், மேலே மாடிக்கு சென்ற சஜுவைக் காணாது, அவளை அழைத்து வருமாறு, சுஷ்மியை அனுப்பி வைத்தார் வைரம். சுஷ்மியும் மெல்ல மேலே ஏறி வந்து, அவர்கள் இருந்த கோலத்தைப் பார்த்தவள், வராண்டாவிற்குச் சென்றாள்.

மேலே மாடி ஏற தெரிந்த சுஷ்மிக்கு, கீழே இறங்க தெரியாது, பயம் கொள்வாள். ஏனெனில் இங்குப் படிகள் சிறிதாய், செங்குத்தாய்ச் செல்லும். யாரேனும் துணை வந்தால் மட்டுமே, அவர்கள் கைப் பிடித்து, கீழே இறங்குவாள்.

அதனால் வராண்டாவிலேயே நின்றவள், "வையும்... பாட்டி...” என அழைக்க, "என்னாத்தா...” என அவரும் கீழிருந்து குரல் தர, "சசு... கு... சுஸ்பா... சேல்... ல... போடுடா... ர்...” எனச் சஜுவிற்கு அக்ஷய் சேலைக் கட்டிவிடுவதாக, தன் மழலை மொழியில் கூறிவிட்டாள்.

அதைக் கேட்ட வைரமோ வெட்கத்தோடு சிரித்தாலும், சுஷ்மி சொன்ன தகவலில் மனம் குளிர்ந்து தான் போனார். அறைக்குள் இருந்த சஜுவோ, அப்போது தான் அவன்... தன் கணவன் இருந்த அழகான கோலத்தைக் கவனித்தவள், சிறிது நாணத்தோடு திரும்ப, அதோடு காதில் விழுந்த சுஷ்மியின் பேச்சால், மேலும் அவஸ்தையோடு கலவரமானவளால் வெட்கப்பட தான் முடிந்தது.

அதோடு, அக்ஷய்க்கு முதுகு காட்டிக் கொண்டு, மடிப்பை இடுப்பில் சொருகி, முந்தானைக்கு மேலும் ஒரு ஊக்கு குத்தியப்படியே, "ஐயோ... இந்தப் பூசணி குட்டி... என் மானத்தையே வாங்கிட்டா... போச்சு... இனி எப்படிக் கீழ போவேன்...” எனப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

சஜுவின் மானத்தை ஏலம் போட்டு விட்டு, திரும்பி வந்த குழந்தையிடம் "ஒய்... பூசணி குட்டி... உன்ன யார்... இப்படியெல்லாம் வாய் பேச சொன்னா?" என அவளிடம் சண்டைக்குப் போனவளை, "ம்ச்சு... விடு சஜு, குழந்தை தான... தெரியாம சொல்லியிருப்பா...” என அக்ஷய் தன் மகளுக்குப் பரிந்து கொண்டு வந்தான்.

"இம்... உங்களுக்கு என்ன... நீங்க எங்காவது... வெளிய போய்டுவீங்க... என்ன தான் எல்லோரும் கேலி பேசுவாங்க" என முகத்தைச் சுருக்கி சொன்னவளிடம், அருகே வந்து...

"எல்லார் வீட்டிலையும்... நடக்கிறது தான் சஜு... யாராவது கேட்டா, உங்க வீட்ல நடந்தது தான்... இங்கயும் நடந்துச்சு... புதுசா ஒன்னும் நடக்கலன்னு சொல்லு... ஏன் அத்தை பட்டுச் சேலைக் கட்டினா... மாமா மடிப்பு எடுத்து விட மாட்டாரா?" என இலகுவாய் சொல்லி, அவள் நெற்றியில் முட்டி, "ஈஸி... ஓகே...” என அவளைச் சமாதானம் செய்து, தன் குழந்தையைத் தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான்.

பின், புண்ணியதான விழா நன்றாக நடந்து முடிய, அதன் பின், அப்படியே வள்ளியின் மைந்தனுக்கு, "அபினவ்" எனப் பெயர் சூட்டும் விழாவும், இனிதே நடந்து முடிந்தது. சஜு சொன்னது போலவே பெண்கள் சிலர், அவளைக் கேலி பேச தான் செய்தனர்,

சஜுவும் அக்ஷய் சொன்ன பதிலை அள்ளி வீசி, அவர்கள் வாயை அடைத்தாள். இங்கு நம் சுஷ்மியோ, "அப்பி... குத்திஇ...”, "பாப்பா...” என அபினவை கொஞ்சிக் கொண்டு, அவனோடும், வள்ளியோடுமே நிறைய நேரம் செலவிட்டாள்.

மறுநாள் காலை அழகாய் விடிய, சஜுவை அழைத்துக் கொண்டு, நம் தோட்டத்திற்குப் போய் வா என வைரம், அக்ஷயை அனுப்பி வைத்தார். இவர்கள் வெளியே செல்லப் போவதைப் பார்த்தவுடன், அபியை மறந்து விட்டு, "நான்னு... சுஸ்பா... நானு...” என அவளும் கிளம்பினாள்.

வயல் வரப்பில், அக்ஷய் சுஷ்மியைக் கையில் ஏந்தியப்படியே, தன் பின்னே வந்த சஜுவிற்கு, விவசாயத்தைப் பற்றியும், அங்குள்ள செடி மற்றும் விளையும் பயிர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே நடந்தான்.

"பராவாயில்லையே... இவர் ஐ. டி யில் வேலைப் பார்த்தாலும், இந்தப் பசுமை பூமியைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாரே...” எனச் சஜு கூட, மனதுள் வியந்து தான் போனாள்.

பின் தென்னந்தோப்பு வர, அங்கு அக்ஷய் அமர்ந்து விட, சுஷ்மி அவனிடம் இருந்து நழுவி, பரந்து விரிந்து கிடந்த நிலத்தில், ஆங்காங்கு தென்னை மரம் இருக்க, அதில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

சஜ்னா "ஏய்... சுஸு... இங்க வா... செப்பல் போட்டிட்டுப் போ...”எனத் தன் கைப்பையில் இருந்த அவளின் குட்டி செருப்புகளை எடுக்க, அக்ஷயோ "செருப்பு போட்டு இங்க நடக்கக் கூடாது சஜு" எனக் கூறினான்.

அவளோ "எனக்குத் தெரியும்ங்க... நமக்குப் படியளக்குற பூமிக்கு மரியாதை தரணும்னு... இங்க செருப்பு போடாம நடக்கணும்னு... ஆனா குழந்த தானங்க... அவ காலுல ஏதாவது குத்திடுச்சுன்னா... அதுவும் இல்லாம, இது புதுச் செப்பல்... இப்ப தான் போடவே போறா...” என விளக்கமளித்து விட்டு, சுஷ்மியை இழுத்து வந்து செருப்பை மாட்டி விட்டாள்.

அதிலும் குஷியான குழந்தை, மீண்டும் சஜுவை தன்னைப் பிடிக்கும் படி, கூறி ஓடினாள் “சசு... புடி...” என ஓட, சஜுவுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள, "இருடி... இந்தா வரேன்...” என அவளும் செல்ல...

அக்ஷயோ "பார்த்து சஜு... குழந்த விழுந்திராம...” என எச்சரித்து விட்டு, வெகு நாட்களுக்குப் பின் மனசு நிறைய, மனைவியும், மகளும் விளையாடும் அழகை ரசித்தான்.

ஆம், மனைவி தான்... எவ்வளவு பாந்தமாய், தன் வாழ்க்கை வட்டத்துக்குள் பொருந்தி விட்டாள் என அக்ஷையின் மூளை, இப்பொழுதெல்லாம் சஜுவை வியக்க ஆரம்பித்து விட்டது. நேற்று காலை, அவளுக்கு இயல்பாய் சேலைக் கட்ட உதவிய போது... ஏன் அன்று அதிகாலை கூட... அவன் அவளைத் தெரியாமல் தொட்டு விட, முதலில் குற்ற உணர்வு வந்தாலும், சிறிது நேரத்திலேயே அது எங்கோ ஓடியும் போய் விட்டது. அதனால், இப்பொழுது, இயல்பாய் தன் மனைவி சஜுவை ரசிக்கவும் கற்றுக் கொண்டான்.

ஒரு கட்டத்தில், சஜு தன்னை நெருங்கவும், "சுஸ்பா... கா... பா... ட்டு...” என அவனிடம் ஓடிவந்தாள். தன்னிடம் வந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அவனும் மெதுவாய் ஓடி, அவர்கள் விளையாட்டில் பங்கெடுத்துக் கொள்ள, இந்த ஓடி பிடித்து விளையாட்டு, மேலும் மகிழ்ச்சியைச் சுஷ்மிக்கு அள்ளி வழங்கியது.

"ஹா... ஆ... ஹீ... ஹேய்...” எனச் சுஷ்மி சத்தமிட்டு சிரித்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அதற்கு மேல் முடியாமல், சஜு அந்தத் தோப்பின் மண்ணிலேயே, சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு, "என்னால முடியல... இது கள்ளாட்ட... போ... பூசணிக் குட்டி...” எனச் சுஷ்மியை செல்லமாய்த் திட்ட தொடங்கினாள்.

"சுஸ்... பா...” எனத் தன் தந்தையிடம் ராகம் பாடி, அவனையும் துணைக்குச் சேர்த்தாள். அவனும் மகளின் சொல்லை தட்டாமல், "உன் சஜு தான் பூசணிக்கா... அதோ... அங்க பாரு... மஞ்ச கலர்ல குண்டா ஒன்னு தெரியுதா... அதான் பூசணிக்கா. அதே மாதிரி தான இவளும் இருக்கா. அதுனால சஜு தான் குண்டு பூசணிக்கா... அதனால நீ அழாத டா...” என விளக்கமாய், அருகே இருந்த பந்தலில் விளைந்திருந்த பூசணிக் காயைக் காட்டி சொன்னான்.

மண்ணில் அமர்ந்திருந்தவள், "என்ன... ங்க...” என இப்போது மனைவியானவள் ராகம் பாடி, "உங்கள...” என அருகே கிடந்த, கற்கள் போன்ற வடிவில் இருந்த மண் துகள்களை எடுத்து, அக்ஷய் மீது வீசினாள். அவனும் குழந்தையை நெஞ்சோடு சேர்த்தணைத்து, அவளை மறைத்து, சஜுவுக்கு முதுகு காட்டியப்படி, தன் தோளோடு தலை சாய்த்துக் கொண்டு, வாங்கியவன், ஒரு கட்டத்தில், "ஹே... போதும் டி... குழந்த கண்ணுல தூசி விழுந்திரும்...” என எடுத்து சொல்லி, அவளை நிறுத்த வைத்தான்.

பின் மூவரும் அமர்ந்து, அவர்களுக்காகச் சீவி வைத்திருந்த இளநீரை குடித்து, பருப்பைச் சாப்பிட, தனக்கு ஊட்டி விட்ட சுஸ்பாவின் மடியில் நின்று, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் சுஷ்மி. பின் சஜுவை பார்த்து, "ப்பூசிக்... கா...” எனச் சொல்லி சிரித்தாள்.

சஜுவோ "இம்... நீ தான் பூசணிக் குட்டி" என நின்றிருந்தவளின் பின் பக்கத்தில் அடித்தாள்.

உடனே, அவள் அடித்த இடத்தில் தன் பிஞ்சு கையை வைத்துக் கொண்டு, "சுஸ்... பாஆ...” என மீண்டும் ராகம் பாட, "நாம சஜுவ அடிப்போமா...” எனச் சஜுவின் மடியிலிருந்த அவள் கையில், அவன் வலக்கையால் அடிக்க, மீண்டும் சஜு அடிக்க வர, அவள் கைகளைப் பற்றித் தடுத்தப்படி, "ம்ச்சு சஜு... அவ தான் குழந்த... விளையாடுறான்னா... அவளுக்குச் சரியா, நீயும் விளையாடுற... விடு சஜு" எனச் சொன்னவன்...

மேலும் "என் பொண்ணு பூசணி குட்டின்னா... அவ அம்மா... நீ குண்டு பூசணிக்கா தான, அப்ப நாங்க சொல்றது ரைட் தான... என்னடா சுஷு... ஹா... ஹா... ஹாஆஆ...” என அவனும் புன்னகையோடு கேட்டு விட்டு சிரிக்க, சுஷ்மியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள்.

ஆனால் கோபப்பட வேண்டிய சஜுவோ, அப்படியே சிலையென அமர்ந்திருந்தாள். இத்தனை நாட்கள் வரை, சுஷ்மியை பார்த்து கொள்பவளாய்... ஒரு கவர்னஸ் போலத் தான், தன்னை நினைக்கிறான் என்றிருந்தாள். ஆனால் அன்று தனக்காக, என்ன வேண்டும் என்று அவன் கேட்ட கேள்வியில், தன்னைக் குழந்தைக்குத் தாயாகத் தான் பார்க்கிறான் என்று உணர்ந்தாள். ஆனால், அதையே இன்று அவன் வாயால் கேட்கவும், சிலிர்த்து தான் போனாள்.

"ஹே... சஜு... என்னாச்சு?" என அக்ஷய் பதற, அவளோ "ஒன்றுமில்லை" என்பது போல் மறுத்து தலையாட்டியவள், தன்னருகே அமர்ந்திருந்தவன் கையைப் பிடித்துக் கொண்டு, உணர்ச்சிப்பெருக்கோடு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் கண்ணீர் அவன் தோளை நனைக்க, "ஹே... சஜு... அழுகுறியா என்ன? இதுக்கெல்லாமா... ம்ச்சு... கேலி செய்ததுக்கெல்லாம அழுவாங்க?" என அவனும், தன்னையறியாமல், யாருமற்ற தோப்பில் அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, சுஷ்மியும் சஜு மடிக்கு மாறி, அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு "சசு... னோ...” என தலையாட்டியப்படிக் கூறி, அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சஜுவிற்கோ... இந்த நிமிடம்... இந்த நொடி ஒன்றே போதும்... தன் வாழ்க்கையை வாழ்ந்து விட்ட மகிழ்வும், மன நிறைவும் ஏற்பட, அதே குறையாத சந்தோசத்தோடு, தன் கணவன் மற்றும் குழந்தையோடு வீடு திரும்பினாள். பாவம், இன்னும் சற்று நேரத்தில் தன் சந்தோஷம் பறிபோகப் போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

வீடு வந்தவர்கள், மதிய உணவு உண்டு விட்டு, ஓய்வெடுக்க, மாலையும் வந்தது. அக்ஷய் எங்கோ வெளியே சென்றான். வைரமோ, தன் மருமகளை அழைத்து, "இந்தா... சஜு... உனக்குப் பூ... இந்தா... இத சின்னக் குட்டிக்கு தல நெறைய வச்சு விடு, நாளைக்கு முடி இறக்க போறாகள... அதுனால ஆத்தாக்கு நல்லா அலங்காரம் பண்ணி வச்சு விடு தாயி" என அவளுக்கும், சுஷ்மிக்கும் பூ கொடுத்து விட்டார்.

சஜுவும், தன் அத்தையின் விருப்பப்படி, சுஷ்மிக்கு ஒரு பட்டுப் பாவாடை உடுத்தி விட்டு, இரட்டை குடும்பி போட்டு, தலை நிறையப் பூ வைத்து, ஒட்டு கம்மல், வளையல் அணிவித்து, பவுடர் பூசி, பொட்டிட்டு, குட்டி தேவதையாய் சுஷ்மியை மாற்றினாள்.

சுஷ்மியை கண்ட அனைவரும் கொஞ்சி கொண்டாட, குழந்தையும் மகிழ, எல்லாவற்றையும் தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்தாள். பின்னர், தன்னவனின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள், ஆனால் சுஷ்மியோ பொறுமையற்று, தன் தலை அலங்காரத்தை, தன் கையால் கலைக்க ஆரம்பித்தாள்.

அதைக் கண்ட சஜ்னாவோ, "சுஸு... எடுக்காத டா... அப்பா வர வரைக்கும் வச்சிரு. அப்பா கூட நாம ஒரு போட்டோ எடுக்கலாம்" எனக் கண்ணைச் சுருக்கி, கெஞ்சி கூற…

குழந்தையோ "இம்ஹும்... க்கும்...” எனச் சிணுங்க, "இங்க பாரு... அபி உன்ன கூப்பிடுறான், அபி பாப்பாவ உன் மடில வைக்கவா? இங்க வா...” என அவளைத் திசைத் திருப்பி, சுஷ்மியை தன் மடியில் அமர்த்தி, அபியையும் வாங்கி, தன் நெஞ்சோடு சேர்த்து ஏந்தியவள், குழந்தையின் கால்கள் சுஷ்மியிடம் இருக்குமாறு ஏந்தவும், அவளும் "அப்பி... குத்தி...” எனத் தலையலங்காரத்தைக் கலைக்க மறந்தாள்.

பின் சிறிது நேரத்தில் வீடு வந்த அக்ஷயிடம், "சுஸ்பா...” என ஆவலாய் ஓடிய குழந்தை, அவனிடம் சென்ற மாத்திரத்திலேயே...”ஆஆஅ... ஆ... சசுஉ...” என அழுக ஆரம்பித்தாள்.

என்னவோ, ஏதோ என்று முன்னறைக்கு விரைந்த சஜு, அங்கே குழந்தையின் தலை அலங்காரத்தைக் கலைத்து, "யார் இந்த மாதிரி பண்ணது? ஒரு தடவை சொன்னா, உங்களுக்குலாம் புரியாதா?" எனக் கோபத்தோடு இரைந்தவனைக் கண்டு சற்றே தயங்க, அவள் பின்னே வந்த குடும்பத்தின் பெண்களும், செய்வதறியாது வேடிக்கைப் பார்த்தனர். அதன் பின், யாரையும் பார்க்காமல், அக்ஷய் அழும் குழந்தையைத் தூக்கியப்படி, தன் அறைக்குச் சென்று விட்டான்.

முரளியும், திருவும் வெளியே சென்றிருக்க, பெரிய பெண்கள் மூவரும், கையைப் பிசைந்தப்படி, ஆளுக்கு ஒரு சிந்தனையோடு, சஜுவையே பார்த்தனர்.

சஜுவுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை, "வந்தார்… ஆவலாய் அவரிடம் ஓடிய குழந்தையின் அலங்காரத்தைக் கலைத்து, கத்திவிட்டு சென்று விட்டார். ஆனால் ஏன்?" எனக் குழம்பியவளை "தாயி...” என வைரத்தின் குரல் கலைத்தது.

தன்னை நோக்கி திரும்பியவளிடம், "போ... தாயி... போய் அய்யன சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா தாயி...” என மேலே அனுப்ப முயன்றார் வைரம்.

"என்ன நடந்தது என்று தெரிந்தாலோ? அல்லது புரிந்தால் தானே சமாதானம் செய்ய?" என மேலும் குழம்பியவளை, "என்ன தாயி... யோசன பண்ணுற... நீ தான் உன் புருஷன சமாதானம் செய்யணும்" எனச் சஜுவை அனுப்ப, அவளும் பலியாடு போல அமைதியாய் மாடி ஏறினாள்.

இது நாள் வரை, அக்ஷய் கோபப்பட்டு அவள் பார்த்ததே இல்லை எனலாம். கடிந்து கொள்வானே தவிர, இன்று நடந்தது போல் கண்கள் சிவக்க, அவன் கொந்தளித்து, கத்தி அவள் பார்த்தது இல்லை.

மேலும் "அது எதற்கு என்று தெரியாமலே... எப்படி? சரி... சென்று தான் பார்ப்போம்" என்று மேலே சென்றாள் சஜு.

அங்கு அழுத குழந்தையை, கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து, தன் நெஞ்சத்தில் சாய்த்து, சமாதானம் பண்ணியப்படி, அவள் தலையை முன்னும் பின்னும், தடவியப்படி இருந்தான் அக்ஷய். இவள் வந்ததைக் கூட அறியாமல், மேலும் சுஷ்மியின் தலையில் முத்தமிட்டு, தன் முகத்தை அவள் தலையில் சாய்த்துக் கொண்டான்.

"என்னங்க...” எனத் தயங்கியப்படி அழைத்தவளைப் பார்த்து, "என்ன?" என உறுமினான்.

அதில் சஜு பயந்தாலும், "ஏங்க... இப்படி...” எனத் தைரியமாய் மேலே பேச வந்தவளை, தன் கையால் நிறுத்தும் படி, செய்கை செய்தவன், உறங்கிய குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்து, வேகமாய் இறங்கினான்.

"என்ன... நீ என்ன சொல்ல வந்திருக்க?" என்று அவன் சலிக்க, அவள் அமைதியாய் இருக்க, "உனக்கென்ன தெரியும்னு... பேச வந்திருக்க? இம்...?" எனக் கோபத்தில், அவளை மிரட்டி நெருங்கினான்.

ஆனால் சஜுவோ பயப்படாமல், அவனை நிமிர்ந்து பார்த்து, "அது தான்... எனக்குத் தெரியாதுன்னு தான்... கேட்க வந்திருக்கேன். என்ன பிரச்சனை அக்ஷய். என்ட்ட சொல்லக் கூடாதா?" என மிகவும் அமைதியாய், அவன் கண்ணை ஆழ்ந்து பார்த்து கேட்டாள்.

அவளின் வார்த்தைகளை விட, அவளின் கெஞ்சும் கண்கள் அவனை அசைத்ததோ என்னவோ? காற்றில் ஊசலாடும் கொடி, தான் பற்றிக் கொள்ள கிடைத்த மரமாய் எண்ணி, அக்ஷய் சட்டெனச் சஜுவை தோளோடு இறுக அணைத்தவன், அவள் மீது கவிழ்ந்து "சஜு...” எனத் தாங்க முடியாத வலியைச் சுமப்பவன் போல் அழைத்தவன், அவள் தோள் வளைவில் முகம் புதைத்து, "எனக்குப் பயமா இருக்கு சஜு...” எனக் கரகரப்பான குரலில், கண்கலங்க சொன்னான்.

சஜுவோ, முதலில் எதிர்பாரா அணைப்பில் அதிர்ந்தாலும், பின் அவன் பின்னந்தலையோடு முதுகையும் சேர்த்துத் தடவி ஆறுதல் படுத்தியவள், அவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமலே, "நான் இருக்கேன்ங்க... உங்களுக்குத் துணையா எப்போவும் நான் இருப்பேன். இப்ப சொல்லுங்க...” என அவனை தன்னிடம் இருந்து பிரித்து, அவனை ஆதூரமாய் பார்த்தாள்.

பின் அவனைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் மடியில் படுக்க வைத்து, அவன் தலைக்கோதி ஆறுதல் படுத்தப் படுத்த, அவனுள் ஏதோ ஒன்று உருகி, தன் மனதை அவளிடம் திறக்க ஆரம்பித்தான். சஜுவும், எதையும் ஏற்கும் பக்குவத்தோடு, முதன் முறையாய் அவனின் கடந்த காலத்தைக் கேட்க ஆரம்பித்தாள்.

"எனக்கும் ஜனனிக்கும் பெரியவங்க பார்த்து தான், நல்ல படியா கல்யாணம் பண்ணி வச்சாங்க... ஜனனி இயல்பாவே அமைதியான பொண்ணு...”

அதிலும் திருமணம் முடியவும், மிகவும் வெட்கப்பட்டு ரொம்பவே அமைதியாகி விட்டாள் ஜனனி. என்ன தான் ஏவுகணையைப் பெண்கள் விண்ணில் ஏவினாலும், காதல் இந்த மண்ணில் இருக்கும் வரை வெட்கப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் போலும்.

அதிலும் தன் கணவன் அக்ஷயை கண்டால், தலையை நிமிர்த்தவே மாட்டாள் ஜனனி. சரி, எல்லோர் முன்பும் இப்படி இருக்கிறாள், என எண்ணி, தனியறையில் அவளைப் பார்த்தான் அக்ஷய்.

அங்கும் தலை நிமிராமல், வெட்க சிரிப்போடு குனிந்த தலையாகவே இருந்தாள். மஞ்சள் சேலைக் கட்டி, அவன் கட்டிய மஞ்சள் தாலியோடு, மஞ்சள் மேனியானவள், பாந்தமாய், லட்சணமாய், அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதியே, அவளின் முகத்திற்கு ஒரு தேஜசை தந்தது எனலாம்.

இவனாக எதுவும் கேட்டால், அதற்குத் தயக்கம், கூச்சம் என எல்லாம் கலந்து பதில் வரும். அக்ஷய்க்கும் இது முதல் அனுபவம் தான், இப்படி ஒரு பெண்ணுடன் தனித்துப் பேசுவது, அதனால் அவனும் பேச தயங்கினானே ஒழிய பார்க்க தயங்கவில்லை. மொத்தத்தில், அக்ஷய்க்கு இனிமையான உணர்வையே பரப்பினாள் ஜனனி.

இப்படியே இருபது நாட்களும், தயக்கத்தோடும், கூச்சத்தோடும், விலகி இருந்தே இரவுகள் கழிந்தாலும், விருந்தும், மருந்தும் நடந்து, கொண்டு தான் இருந்தன. கிணற்று நீரை, ஆற்று வெள்ளமா அடித்துச் செல்லப் போகிறது, என ஜனனியின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அக்ஷயும் பொறுமை காத்தான்.

பின்னர், புதிதாய் திருமணமான ஜனனிக்கு, சென்னை பழகும் வரை, சிறிது நாட்கள் வைரமும், திருவும், அவர்களுடனே வந்து தங்கியிருந்தனர். ஊரில் இருந்த போதும் சரி, இங்கு வந்த பின்னும் சரி, தினமும் அக்ஷய், ஜனனிக்கு மறக்காமல் பூ வாங்கிக் கொண்டு செல்வான். அவர்களின் கூடலை கூச்சம் தடுத்தாலும், பழகிய நாட்கள், தங்கள் இணையின் மீது பரவசத்தையும், ஈர்ப்பையும் கொடுக்கத் தான் செய்தது.

இப்படியே தொடர்ந்திருந்தால், அவர்களுக்குள் இயற்கையாகவே இல்லறம் நடந்திருக்கும் தான். ஆனால், அன்று "என்னங்க...” என்று ஜனனி அலைபேசியில் அழைக்க, "இம்ம்... சொல்லு ஜனனி" என மென்மையாய் கேட்டான்.

"அது... வந்து... அத்த இன்னிக்கு... பூ வாங்க வேணாம்னு சொன்னாங்க" என வெட்கத்தோடு சொல்லி, அவன் பதிலைக் கூடக் கேட்காமல் வைத்து விட்டாள் ஜனனி.

என் குழந்தையின்

விளையாட்டு தோழியாய் வந்து...

என் வாழ்க்கையின்

விளக்காய் மாறிப் போனாய்...

ஆனால் நீ

என்னை நெருங்கும் சமயம்

எல்லாம்

விளக்கை நாடும் விட்டில் பூச்சியே

எனக்கு ஞாபகம் வருகிறது...

நான்

என்ன செய்வேன் அன்பே?...

யாராகியரோ...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 27

இப்போது தான் ஜனனி தன் கணவனிடம் தனியறையில் மட்டுமல்ல, மற்றவர் முன்பும் இயல்பாய் பேச ஆரம்பித்திருந்தாள். அன்று ஜனனிக்கு மாதந்தோறும் வரும் பெண்களின் பிரச்சனை ஆரம்பித்ததால், தன் அத்தை தன் கணவனிடம் சொல்ல சொன்னதை, அவனுக்கு அலைப்பேசி மூலம் தெரிவித்தாள்.

இங்கு நம் அக்ஷய்க்கு எப்போதடா ஐந்து மணியாகும், ஜனனியை பார்ப்போம் என்றிருந்தது. அவள் சேலைக் கட்டியிருப்பதே ஒரு அழகு... அவள் நடக்கும் போது, இடுப்பு வரை நீண்டிருந்த கூந்தல் அசைவதே அழகோவியம் அசைவது போன்று இருக்கும், மற்ற பெண்கள் கேலிப் பேசினால், அவள் நாணப்பட்டுப் புன்னகைப்பதே, அவனுக்குள் ஒரு இதத்தைப் பரப்பும். மொத்தத்தில் ஒரு புது மாப்பிள்ளையாய், தன் மனைவியின் அருகாமையை ரசிக்கும் கணவனான் அக்ஷய்.

ஐந்து மணியானதும், அலுவலகத்தை விட்டு, வீட்டிற்குச் சிட்டாய் பறந்தவன், ஜனனி வாங்க வேண்டாம் என்று சொல்லியும் மறக்காமல் தன் மனைவிக்குப் பூ வாங்கிக் கொண்டு தான் சென்றான்.

பின் அவனுக்காக டீ கொண்டு வர சென்ற தாய்க்காக, கூடப் பொறுக்காமல், கை, கால் அலம்பி விட்டு, தன் அறைக்குச் சென்றான். அங்குத் தன்னைக் குறுக்கிப் படுத்திருந்தவளைப் பார்த்து, பதறி "ஜானுமா... என்னாச்சு?" எனக் கேட்டுக்கொண்டே, அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

ஜனனியோ, அவன் குரலில், அடித்துப் பிடித்து எழுந்தவள், சோர்வாய் "ஒன்னும் இல்லங்க" என்றாள்.

அதற்குள் வைரம், அவனை டீ குடிக்க அழைக்க, வெளியே சென்றவன், அவளுக்கும் சேர்த்து ஒரு டம்ளர் பாலோடு உள்ளே நுழைந்தான்.”இந்தா... டையர்ட்டா... இருக்கக் குடி ஜானுமா" என்று அன்பாய் கொடுத்தான்.

அவன் அன்பில் நெகிழ்ந்தவள், எதுவும் பேசாமல், வாங்கிப் பருகினாள். பின் அவளுக்கு என்னாயிற்று என்று துளைத்தெடுத்து, பதிலை வாங்கியவன், "எங்க வலிக்குது ஜானுமா? கால் வலிக்குதா? இல்ல வயிறு வலிக்குதா?" என அன்பாய் கேட்டு, அவளின் காலைப் பிடித்து விட்டான்.

உடனே அவள் பதறி "என்னங்க... நீங்க?... நீங்க போய் என் கால்ல பிடிச்சுகிட்டு" என அவன் கைகளைத் தடுத்தாள்.

ஆனால் அவனோ "ஷ்... படு, ஏன் நான் பிடிச்சு விடக்கூடாதா? அப்போ எனக்கு உடம்பு முடியலன்னா... ஓரமா படுத்துக்கடா ன்னு விட்டிருவ... கவனிக்க மாட்ட? ம்ம்...” எனக் கேட்டதில், ஜனனி கலங்கியே விட்டாள்.

"என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் அப்படியெல்லாம் இருப்பேன்னா?" எனச் சொன்னவளைப் பார்த்து, புன்னகைத்து, "அப்போ... நான் மட்டும் எப்படிச் சும்மா இருப்பேன்? இம்... பேசாம படு" எனப் புருவத்தை உயர்த்திக் கேட்டு, கால் அமுக்கி விட்டான்.

இரவு உணவுக்குப் பின், தலையைப் பிடித்து விட்டு, உறங்க வைத்தவனின் இடையை, அவளறியாமல் தூக்கத்திலேயே கட்டிக் கொண்டு படுத்தாள். ஆனால், மனைவியின் முதல் தொடுகையில், அக்ஷய் தான் சிலிர்த்துப் போனான்.

பின் அவள் அருகே கால் நீட்டி படுத்தவன், அவளின் அணைத்த கைகளை, தன் கழுத்தில் வைத்துக் கொண்டு, அவளின் இடையை அணைத்து, உறங்குபவளிடம், "ஹே... ஜானுமா... இந்த மாமவ உனக்குப் பிடிச்சிருக்கா?... ம்...” எனப் பேசியப்படி, அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.

மேலும் "இன்னிக்கு நீயா வந்து கட்டிப் பிடிச்சிருக்க?... ஹூம்... உன் கூச்சம் போறதுக்கு, இத்தன நாள் ஆகிருக்கு?" எனக் கூறியவன், தான் வாங்கி வந்த மல்லிகைப் பூவை சூடி, அழகாய் நீண்டிருந்த கண்களில் மையிட்டு, கூர் நாசியில் ஜொலிக்கும் சிவப்பு கல் மூக்குத்தியோடு, நீண்டிருந்த பட்டான பட்டன் ரோஜா வர்ண இதழ்கள் என அந்தச் சோர்விலும், தேவதையாய் ஜொலித்த, தன் மனைவியை, மனம் முழுக்க நிரப்பி, "சீக்கிரமே... உன்னை ஆட்கொள்ளும் நாள், அருகே தான் உள்ளது என்று தெரிகிறது கண்மணி...” என எண்ணியப்படி அவனும் உறங்கி விட்டான்.

காலையில் கண்விழித்த ஜனனி, வித்தியாசமாய் உணர, நன்றாக முழித்துப் பார்த்தாள். அவன் கழுத்தில் கைவைத்து, அவனது நெஞ்சத்தில், தான் துயில் கொண்டிருப்பதும், அவன் கைகள் தன்னை இடையோடு அணைத்திருப்பதும் புரிய, வெட்கத்தோடு விலகினாள்.

அதில் விழித்த அக்ஷய், அவளைப் பார்த்து கண்ணடித்து, "இவ்ளோ ஆசைய வச்சுகிட்டுத் தான், விலகி விலகி போனியா ஜானுமா?" எனக் கேட்க,

அவளோ புன்னகைத்து, "ச்சீ... நீங்க தான் ஏதோ பண்ணிட்டீங்க... ம்ஹூம்... நீங்க தான் என்ன அணைச்சப்படி இருந்தீங்க?" என ஆள்காட்டி விரலை நீட்டி விவரமாய்ச் சொன்னாள்.

கண்களை அகல விரித்து, "அப்படியா" என்பது போல் குனிந்து பார்த்து, அவளின் நீட்டிய விரலைப் பிடித்து அருகே இழுத்து, அவள் நெற்றியில் முட்டி, "நீ அணைச்சா என்ன... நான் அணைச்சா என்ன... ஜானு... உனக்கு இந்த நெருக்கம் பிடிச்சிருக்கே... அதுவே போதும்" என அவள் காதருகில் குனிந்து சொன்னான்.

அதில் வெட்கப்பட்டு, அவன் நெஞ்சத்திலேயே, தன் முகத்தை மறைத்து கொண்டவளை பார்த்து, அணைத்த அக்ஷய், மேலும் "எப்படா இந்த மூணு நாள் முடியும்னு இருக்கு" என ஹஸ்கியான குரலில் மீண்டும் குனிந்து, அவள் காதருகில் கூறினான்.

அவன் சொல்ல வந்ததைப் புரிந்தவளின் முகம் செங்கொழுந்தாகி, விட்டால் அவன் நெஞ்சத்திலேயே புதைந்து கொள்பவள் போல், ஒளிந்து கொண்டாள்.

ஜனனி அவன் நெஞ்சத்தில் புதைந்தும், அவன் அவளை அணைத்தப்படியும், எவ்வளவு நேரம் இருந்தார்களோ? ஜென்னலருகே கேட்ட ஜோடி பறவைகளின் கீச் கீச் ஒலியில், இருவரும் கலைந்து, புன்சிரிப்போடு விலகினர்.

அடுத்து வந்த மூன்று நாட்களும், அக்ஷய் அவளைப் பரிவாய் கவனித்து, இரவானால் தன் கைவளைவிலேயே உறங்க வைத்து, அன்போடும், காதலோடும் பார்த்துக் கொண்டான். மேலும் இந்த மூன்று நாட்களும் அவர்களுக்குள் இருந்த இடைவெளியைக் குறைத்து, இயல்பாய் நெருங்க வைத்திருந்தது.

அக்ஷய் ஆசைப்பட்ட அந்த நாளும் அழகாய் விடிய, தலைக்குளித்திருந்த ஜனனி "என்ன இவர் இன்னுமா எழவில்லை? டீ குடிக்க இந்நேரம் வந்திருப்பாரே?" என ஐயம் கொண்டு, அடுப்பில் இருந்த சாம்பாரை, அத்தையிடம் ஒப்படைத்து விட்டு, கையில் டீயோடு தங்களறைக்குச் சென்றாள்.

தாள் போடாத கதவை திறந்து, உள்ளே சென்று, அங்குள்ள மேஜையில் டீயை வைத்து விட்டு, படுக்கையைப் பார்த்தாள். அங்கு அக்ஷயை காணாது, "வரும் போது பார்த்தப்ப... பாத்ரூம் திறந்து தானே இருந்துச்சு... இங்கயும் இல்ல... எங்க போனாரு? சொல்லாம... போ மாட்டாரே?" என எண்ணியவளை, பின்னே இருந்து இரு கரங்கள் அணைக்க, பயந்து போய்த் திரும்பினாள்.

ஆம், அக்ஷய் தான், கதவருகே ஒளிந்து, அவளின் வருகைக்காகக் காத்திருந்தவன், அவள் உள்ளே வந்து, திரும்பிப் பார்க்காமல் இருக்கவும், அவனுக்கு வசதியாய் போயிற்று. கதவை சத்தமில்லாமல் சாற்றியவன், அவளைப் பின்னே இருந்து அணைத்தான்.

அவளோ "ச்சோ... என்னங்க இது? நான் பயந்தே போயிட்டேன்" எனத் திரும்பியவளை, இறுக அணைத்து, பதில் ஏதும் சொல்லாமல், புன்னகையோடு, அவள் தோள் வளைவில், முகம் புதைத்து, அவளின் நறுமணத்தைத் தன் நாசி மூலம், சத்தமாய் உள்ளிழுத்து, "மயக்குறியே டி... ஜானுமா...” என்று கிறங்கிய குரலில் சொன்னவன், "எப்படி டி... நீ மட்டும் இவ்ளோ வாசமா இருக்க" என முத்தமிட்டுக் கொண்டே கேட்டான்.

அவளோ வெட்கத்தோடு, நெளிந்து கொண்டே, "அது... அது வந்து... நான் குளிச்சுட்டேன்" எனத் தயக்கமாய் ஆரம்பித்து, சத்தமாய் முடிக்கவும், அவன் பொய் கடுப்போடு பார்க்கவும், கல கலவென, மலர்ந்த முல்லை பூவாய் சிரித்தாள்.

அதை அப்படியே தன் மனதுக்குள் நிரப்பியப்படி, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். வெகு நேரமாய்த் தன்னையே மெய் மறந்து பார்த்தவனைக் கண்டு, "என்னங்க...” என அவன் தோளில் கை வைத்தாள், அப்பொழுதும் நிலை மாறாமல், "இம்... சொல்லு...” என்று மட்டும் சொன்னான்.

"என்னங்க இப்படியே பார்த்திட்டு இருந்தா எப்படி? குளிச்சு ரெடி ஆகலையா?" எனக் கேட்க, "எதுக்கு?" எனப் புருவத்தை உயர்த்தி வினவ, "எதுக்கா? ஆபீஸ் போ வேணாமா?" என அடுத்து அவள் கேட்க, "போ... வே... ணா... ம்...” என அவன் குழந்தை போல் ஒரு ஒரு எழுத்தாய் உச்சரிக்க, "என்னது போ வேணாமா? ஏங்க?...” எனப் புரியாமல் கேட்டாள்.

"ஏன்னா இன்னிக்கு எனக்குப் பர்ஸ்ட் நைட்... ஹும்... பர்ஸ்ட் நைட் அன்னிக்கு தான் என் பொண்டாட்டி என்ன ஏமாத்திட்டா... அதுனால இன்னிக்கு வட்டியும் முதலுமா வசூல் பண்ணலாம்னு இருக்கேன். நான் கேட்பது நியாயம் தானே மிஸஸ் அக்ஷய்.” என அவளிடமே அவன் வழக்கை முன் வைக்க, அவளோ வழக்கின் சாரம்சத்தால் விளைந்த வெட்கத்தில், அவன் நெஞ்சிலேயே புதைய, அதில் தன்னைத் தொலைத்தவன், "விட்டா... நான் இப்பவே கொண்டாட ரெடியா இருக்கேன்" என மீண்டும் அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

ஆனால் சுதாரித்த ஜனனி, "இம்... இருப்பீங்க... இருப்பீங்க...” என ஒரு மார்க்கமாய்த் தலையாட்டினாள்.

"இம்... ரெடி தான்... ஆனா அம்மா அப்பா இருக்காங்க... அதுனால நீ தப்பிச்ச... ஆனாலும் அசரமா ப்ளான் பண்ணுவான் இந்த அக்ஷய்" எனச் சொன்னவனின் பேச்சில் தன் மாமனார் மாமியார் நினைவு வர, "ச்சோ... விடுங்க... நான் இங்க வந்து எவ்ளோ நேரம் ஆச்சு? அத்த அங்க தனியா சமைக்கிறாங்க...” என அவனிடம் இருந்து நெளிய தொடங்க...

"இம்... இப்ப விடுறேன்... ஆனா இன்னிக்கு நைட்...” என்று சொன்னவனை மேலே தொடர விடாமல், "ஹுஹூம்... ஹும்... நான் போகணும்" எனச் சிணுங்கினாள்.

"சரி... போ, நானும் குளிச்சிட்டு ரெடி ஆகுறேன். அம்மாட்ட சொல்லிடு, நமக்குச் சமைக்க வேணாம்னு... நாம டிபன் சாப்பிட்டு வெளிய போறோம்... ஓகே" என அவள் கன்னத்தைத் தட்டி சொன்னவனைப் பார்த்து, சந்தோசமாய்த் தலையாட்டி "எங்க போறோம்?" என ஆவலாய் கேட்டாள்.

அதற்கு அக்ஷய் "அது சஸ்பென்ஸ்...” என்க, "அத்த... கேட்பாங்களே... எங்க போறீங்கன்னு?" என நூல் விட்டாள், "நான் வந்து சொல்லிக்கிறேன்" என்று முடித்து விட்டான்.

பின் குளித்து முடித்து, தயாராகி வந்த அக்ஷய், தன் அன்னை தந்தையிடம் சொல்லிக்கொண்டு, ஜனனியை அழைத்துக் கொண்டு, தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பினான். வண்டி நேரே மகாபலிப்புரம் சென்றது. அங்குப் பல நூறு வருடம் முன்பு, தென்னகத்தை ஆண்ட பல்லவ மன்னன் கட்டிய கோவில்களையும், சிற்பங்களையும் கண்டு களித்தனர்.

நம் ஜனனியோ எல்லாவற்றையும், முதன் முறையாய் நேரில் காண்பதால்... மகிழ்ந்தாள்... பிரமித்தாள்... சிலிர்த்தாள்.”நான் இதெல்லாம் படத்துல தாங்க பார்த்திருக்கேன். அதுவும் அந்தக் காலத்து "பார்த்திபன் கனவு" படத்த பார்த்து தான், இந்த மாமல்லபுரம் பற்றி விவரம் தெரிஞ்சுகிட்டேன்" என்று வியந்து வெகுளியாய் சொன்னவளிடம், அக்ஷய் தல வரலாறை சொல்ல ஆரம்பித்தான்.

பின்னர் உணவகத்தில் மதிய உணவு, கலங்கரை விளக்கம், கடற்கரை எனக் காதலர்களாய் பொழுதை ஓட்டி விட்டு, மாலை மயங்கும் நேரம், இருவரும் வீட்டிற்குத் திரும்பினார்கள். வண்டி ஓட்டும் போதே, "ஜானுமா...” என அழைத்தான்.

அவளோ அவன் இடுப்பை அணைவாய் பற்றியப்படி, இன்று நடந்ததை அசைப்போட்டப்படி வந்தவள், அவன் அழைக்கவும், அவன் தோள் அருகே நெருங்கி, இம் கொட்டினாள்.”இன்னும் மூனே மூனு மணி நேரம் தான் பாக்கி" எனச் சொன்னான்.

"எதுக்கு?" எனப் புரியாமல் அவள் கேட்க, "அடிப்பாவி... காலைல இருந்து என்ன சொல்லிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா சகவாசமா கேள்வி கேட்டுட்டு இருக்கியா?" எனக் கடிந்து கொள்ள, அவன் சொல்ல வருவது அவளுக்குத் தெரியாமல் இல்லை... ஆனாலும் வேண்டுமென்றே, ஒன்றும் புரியாதவள் போல் கேட்டு, அவனைக் கடுப்பேற்றி நகைத்தாள்.

இப்படியே கேள்வியும் பதிலுமாய் உல்லாசமாய்ப் பேசிக் கொண்டு, புன் சிரிப்போடு வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து காலனும் நகைத்தான் போலும். ஊருக்குள் வந்த பின், இருவழி சாலையில், ஒரு திருப்பத்தில் திரும்பப் பார்த்தவன் குறுக்கே, ஒரு வாயில்லா ஜீவன் வர, அதை நசுக்காமல் இருக்க, அவன் வண்டியைத் திருப்பவும், நான்கு சக்கர வாகனம் மோதவும் சரியாய் இருக்க... சில நொடிகளில் விபத்து நடந்து முடிந்தது. சில அடிகள் தள்ளி வண்டியோடு சறுக்கி போய் விழுந்த அக்ஷய், நடந்த நிகழ்வை எண்ணி பார்க்கும் முன்னே மயக்கத்திற்குச் சென்றான்.

சிரமப்பட்டு மெல்ல, கண்ணைத் திறக்கும் போதே, வலியில் "ம்மா...” என்று முனங்கலோடும் முகச் சுனக்கத்தோடும் தான் விழித்தான். அவன் எதிரே அவன் இடது கால், வெள்ளை நிற பருத்தி துணியால் சுற்றப்பட்டுத் தொங்க விடப்பட்டிருக்க, ஆங்காங்கே சிராய்ப்புகளும் வலியைத் தர, அதை விட, "ஜனனி... ஜனனிக்கு என்ன ஆயிற்று?" என்ற கேள்வியே மிகுந்த வலியைத் தந்தது.

அவன் அசைவதைக் கண்ட செவிலியரோ, மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்து, அவனைப் பரிசோதிக்க ஆரம்பிக்க, "டாக்... டாக்டர்...” எனக் கஷ்ட்டப்பட்டு, உச்சரித்தவனைக் கண்டு புன்னகைத்த மருத்துவர், "சொல்லுங்க" என்றார்.

"டாக்டர்... என்... வைஃப்... என் வைஃப் எங்க?" எனக் கேட்டான். அவனது கேள்வியை எதிர்ப்பார்த்த மருத்துவர், "அவங்களுக்கும்... இதே போல அடிப்பட்டிருக்கு மிஸ்டர் அக்ஷய். பக்கத்துல... ரூம்ல தான் இருக்காங்க... ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு...” எனக் கூசாமல் பொய்யுரைத்தவர், அவனை மேற்கொண்டு பேச விடாமல், "நீங்க... ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க... ப்ளீஸ் பி குயெட், டேக் ரெஸ்ட்" என்று சொல்லிவிட்டு, ஒரு ஊசியைச் செலுத்தி விட்டு சென்றார்.

வெளியே வந்த மருத்துவர், அக்ஷையின் பெற்றோரிடம், அவன் கண்விழித்ததையும், இப்போது அவன் உடல்நிலைக்குத் தேவை, முழுமையான அமைதியும், ஓய்வும் என்று அறிவுறுத்தி விட்டு, அதனால் அவர்களின் மருமகள் ஜனனி பற்றி, சமயம் பார்த்து பக்குவமாய் நாளை சொல்லுமாறு கூறிவிட்டு, தன் கடமையைச் செவ்வனே முடித்து விட்டு நகர்ந்தார்.

ஆனால் ஏற்கனவே மீளா துயரில் இருந்த அந்தப் பெற்றோர்கள், அக்ஷையின் விழிப்பு ஆறுதல் அளித்தாலும், தங்கள் வாரிசின் வாழ்க்கை தொடங்கும் முன்னே கருகிய வேதனையில் மனமுடைந்து தான் போனார்கள்.

வள்ளியும், அவள் கணவனும், அவர்கள் இருவரில் யாருக்கு? எப்படி? என்ன வார்த்தைகளால் ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. அதை விடக் கொடுமை, கண் விழித்த தன் அண்ணன், அவன் மனைவியைப் பற்றிக் கேட்டால், என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? என எண்ணி வள்ளியும் கரைய ஆரம்பித்தாள்.

ஆம், ஜனனி விபத்து நடந்த போது, வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு, ஒரு கல்லில் போய் மோதியவள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் நீத்திருந்தாள். அக்ஷய் தலைக் கவசம் அணிந்திருந்ததால், உயிர் தப்பி, வண்டியோடு விழுந்ததால், காலில் மட்டும் எலும்பு விரிசல் ஏற்பட்டு, மாவுக்கட்டுப் போடப்பட்டிருந்தான். ஆங்காங்கே சின்னச் சின்னச் சிராய்ப்புகளும், தையலும் பெற்றிருந்தான்.

ஒரு நாள் கடந்த நிலையில், அவனை ஐசியுவில் இருந்து அறைக்கு மாற்றிருக்க, தன்னைக் காண வந்த பெற்றோரிடமும், தங்கையிடமும், ஜனனி பற்றிக் கேட்க, அவர்களோ பதில் சொல்லாமல் மௌனம் காத்ததிலேயே, அக்ஷையின் உள்ளம் பதறியது.

மேலும் வைரம், "அத... என்னண்டு... சொல்லுவேன் என் ராசா...” என ஆரம்பித்துத் தன் புலம்பலின் மூலமே, இந்த நாள், இந்த நிமிடம், இந்த நொடி, அவனின் ஜனனி உலகில் இல்லை என்பதைச் சொன்னார்.

அதைக் கேட்ட, அக்ஷையின் இதயம், சுக்கு நூறாய் வெடித்து, வலிக்கொள்ள, சட்டென்று மயங்கினான். தன் உயிராய் இருக்க வேண்டியவள், தன்னை விட்டு பிரிந்ததை, அவனால் தாங்க முடியவில்லை. கூடல் இல்லாத உறவு தான், எனினும் அந்த உறவில் கூடுதல் அன்பிருந்தது, அவளோடு சில நாட்கள் தான் வாழ்ந்தான். எனினும் தன் வாழ்வே அவள் தான் என்றிருந்த வேளையில், கடவுள் செய்த சூழ்ச்சியால், வாழ்வில் பிடிப்பற்று, தனக்கென்று எதுவும் செய்யாமல் சுவாசித்து மட்டும் கொண்டு இருந்தான்.

அந்தச் சமயம், வீட்டில் அக்ஷையின் தங்கை வள்ளியும், அலுவலகத்தில் அவன் நண்பன் சுந்தரும் தான், அவன் அருகே இருந்து, அவன் கேட்கிறானோ இல்லையோ, அதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல், வாய் ஓயாமல் எதையாவது பேசியப்படி, அவனைத் தேற்றி, சிறிது சிறிதாய் இயல்புக்குக் கொண்டு வந்தனர்.

ஆயிற்று, ஜனனி அவன் வாழ்வை விட்டு சென்று மாதம் மூன்றாயிற்று. இதற்கிடையில், அவனுக்கு விபத்து நடந்த சாலை வழியே தான், அவனின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது, அதனால் அவனின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவனை வேறு கிளைக்கு மாற்றி விடும் படி, சுந்தர் அவனுக்காகப் பரிந்துரைத்தான். அவன் நன்றாய் செயலாற்றக் கூடியவன் என்பதால், அதுவும் உடனடியாய் ஒரு வாரத்தில் செயலாக்கம் பெற்று, இப்போது அக்ஷய் வேறு கிளையில் பணிபுரிந்து வந்தான்.

வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு, என்றிருந்தான் அக்ஷய். எதிலும் நாட்டமில்லை, தன் அலுவல் வேலையை மட்டும் சரியாய்ச் செய்து முடிப்பான். ஏனெனில் ஊரில் அவன் வீட்டின் மீது கடன் இருந்தது. அதை அடைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் தான், அலுவலகத்திற்குக் கூடச் சென்றான் என்று சொன்னால் மிகையாகாது.

இப்படியே சென்று கொண்டிருந்தவன் வாழ்வில், ஒரு திருப்பம் ஏற்பட்டது... அஃது அவனுக்கு, வாழ்வின் மீது விருப்பம் கொள்ளச் செய்த்தது. அன்று, அவன் அலுவலகத்தில் இருந்து, பழைய கிளைக்கு ஒரு மீட்டிங்கிற்க்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான்.

நிறைய நாட்களுக்குப் பின், அந்தப் பக்கமாய்ச் சென்ற அக்ஷய்க்கு மனதுள் ஏதேதோ நிகழ்ந்தது. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவன், விபத்து நடந்த சாலை நெருங்க நெருங்க, ஒரு நொடி கண்ணை மூடி திறந்து, மெதுவாய்ச் சென்றான்.

அவன் மனதுள் "உன் முகத்தைக் கடைசியாய் பார்க்க கூட, கொடுத்து வைக்காத அபாக்கியசாலி நான்... ஜானு... அபாக்கியசாலி நான்... ஏன் என்னை விட்டு சென்றாய்? அப்படியென்றால் நீ என்னை உயிராய் நினைக்கவில்லையா? அப்படி நினைத்திருந்தால், என்னையும் உன்னுடன் அழைத்துச் சென்றிருப்பாயே... உன் கடைசி நொடி இங்குத் தானே கழிந்தன... இங்கு நீ இருப்பாயா ஜானு? அப்படியென்றால் என்னை உன்னுடன் கூட்டி செல் ஜானு... ப்ளீஸ்... நான் பேசுவது உனக்குக் கேட்கிறதா ஜானு?" என்று அரற்றியவன் காதில் "டம்" என்ற ஓசை விழுக, அனிச்சையாய் அவன் உடல் நடுங்கி, கைகள் தானாய் வண்டியை நிறுத்த... சுற்றி முற்றி பார்த்தான்.

சாலையின் நடுவே, ஒரு இரு சக்கர வாகனத்தை லாரி இடித்திருக்க, சலசலவென மக்கள் கூட்டம் கூடியது. அக்ஷையின் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்க, தன் வண்டியை ஓரங்கட்டி விட்டு, அங்கே விரைந்தான். அருகே சென்று பார்த்தவன், அவனுக்கு ஏற்பட்டதைப் போன்றே ஒரு இளம் ஜோடி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடிப்பட்டு இருக்க, மனித தன்மை உள்ள சிலர், ஆம்புலன்சிற்கும், காவல் துறைக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அங்கு அந்தப் பெண் துடிப்பதைக் கண்டவன் உள்ளத்தில், அவனின் ஜனனி துடிப்பதைப் போன்றே தோன்ற, அவளின் அருகே விரைந்தான். அந்தப் பெண்ணின் அருகே சென்று மண்டியிட்டு பார்த்தவன் காதில், தீனமான அழுகுரல் கேட்க, ஒரு பக்கமாய்க் கிடந்த அந்தப் பெண்ணை எட்டிப்பார்க்க, அங்கே அவள் கையணைப்பில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும், நொடியில் அவன் உள்ளத்தில், அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் படி, ஏதோ ஒரு உள்ளுணர்வு கட்டளையிட, விரைந்து செயல்பட்டான். அருகே இருந்தவரிடம் ஆம்புலன்ஸ் வரும் வரை, காக்க வைக்க வேண்டாம், ஒரு ஆட்டோவை நிறுத்தி, அழைத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் அறிவுறுத்தி விட்டு, அழுதக் குழந்தையைத் தன் கையில் ஏந்திக் கொண்டு, அவர்களிடம் தன் முகவரியை தாங்கியிருந்த அட்டையைத் தந்து விட்டு விரைந்தான்.

அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு விரைந்தவன், தன் குழந்தை தான், வண்டியிலிருந்து விழுந்து விட்டது என்று மருத்துவரிடம் பொய் சொல்லி, சிகிச்சை மேற்கொள்ளும் படி செய்தான். ஆனால் அந்தப் பொய்யே தன் வாழ்வில் உண்மையாகி விடும், என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை.

ஜனனி

ஜகம் நீ... அகம் நீ

என்று நானிருக்க...

ஜகத்தில் இல்லாது போய் விட்டாய்

என்று நினைத்திருக்க...

வரம் தரும் பூரணியாய் உன்னிடம்

யாசகம் வேண்டி நிற்க...

வாழ்ந்து பாரெனச் சொல்லி விட்டாய்

என் கைகளில் மீண்டும் வந்து.

யாராகியரோ...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 28

குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், கீழே விழுந்ததில், நெற்றியில் லேசாய் கீறி இருப்பதாகவும், அதற்கு மருந்திட்டு, தையல் போட்டிருப்பதாகவும், மாலை வரை வைத்து, பார்த்துக் கொண்டு, அதன் பின் வீட்டிற்குச் செல்லலாம் என்றார். மேலும், குழந்தை அருகே போய் இருக்கும் படி கூறினார் மருத்துவர். அக்ஷயும் குழந்தை இருந்த அறைக்குச் செல்ல, அங்குக் குழந்தை மயக்க மருந்தினால், துயில் கொண்டிருந்தது.

அழகாய் சிறிய பூப்போன்று படுத்திருந்த குழந்தையைப் பார்த்தான். விபத்து நடந்ததில் நல்ல வேளை, குழந்தை தாயின் மீதும், கனத்த போர்வைப் போன்ற, போர்த்தும் துணிக்குள் இருந்ததால், சின்னக் காயத்தோடு தப்பித்தாள். ஆம், பெண் குழந்தை தான், குழந்தையைப் பார்க்கும் போது, எத்தனை மாதம் என்று அவனால் கணிக்க முடியவில்லை, ஆறு மாதத்திற்கு மேல் இருக்கும் என யூகித்தான்.

அவன் குழந்தையைப் பார்த்த வண்ணம், மெய் மறந்த நிலையில் இருக்க, அது மெல்ல, தன் சிப்பி இதழ் திறந்து, நெற்றியை சுருக்கிக் கொண்டு, அழ ஆரம்பித்ததில், பூ உலகத்திற்கு வந்தான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,

குழந்தைக்கு ட்ரிப்ஸ் போட்டிருப்பதால், கையை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர் அவனுக்கு அறிவுறுத்திய படியால், கையை மட்டும் பிடித்துக் கொண்டு, அமர்ந்திருந்தான்.

பின் குழந்தையின் அழுகை சத்தத்தில் வந்த செவிலியர், "என்ன சார்... குழந்தை அழுதிட்டு இருக்கு, உங்க வைஃப் எங்க? இன்னும் வரலையா?" எனக் கேட்டார்.

அவனோ "வைஃப்" என்ற வார்த்தையில் கலங்கி போய், தானாய் அவனது இதழ்கள், "அவங்க... இல்ல சிஸ்டர்" எனச் சோகமாய்ச் சொன்ன விதத்தில், புரிந்து கொண்டவர், "சாரி சார், அப்போ... போய்க் குழந்தைக்கு, பீடிங் பாட்டில்ல பால் வாங்கிட்டு வாங்க சார்... குழந்த பசில தான் அழுகுது" என்று சொல்லவும்,

அவன் "சிஸ்டர்...” எனத் தயக்கமாய் இழுக்கவும், "குழந்தைய நான் பார்த்துக்கிறேன், நீங்க போயிட்டு வாங்க சார்" என்று உதவ முன் வந்தார்.

செவிலியர் சொன்னதையெல்லாம் வாங்கியவன், குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலியர்க்கு நன்றி தெரிவித்து விட்டு, குழந்தை அருகே அமர்ந்து, அதன் வாயில், பீடிங் பாட்டிலை வைத்தான். அதுவும் ஆவலாய் தன் இரு கையால் பற்றியப்படி குடித்தது, செவிலியர், கையில் இருந்த ட்ரிப்ஸ் ஊசியை எடுத்து விட்டிருந்தார்.

ஆயினும் சிறிது நேரம் கையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னதால், அவள் அருகே சாய்ந்து, அவள் கைகளை விலக்கி, தன் கையால் பாட்டிலைப் பிடித்துக் கொள்ள, தன் கையை எடுத்து விட்டதும், அவனை நெற்றி சுருக்கத்தோடு பார்த்த குழந்தை, பின் அவன் தனக்கு உதவி தான் செய்கிறான் என்று புரிந்ததலோ என்னவோ, பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே, இதழ்களை விரித்துச் சிரித்து விட்டு, தன் பணியைத் தொடர்ந்தாள்.

பாவம் அவளுக்கு என்ன தெரியும்? தன் தந்தையும், தாயும் உயிருக்கு போராடியப்படி, மருத்துவமனையில் இருப்பது? இது தான் குழந்தையின் வரம் போலும்... கவலைகளைக் கிரகிக்கத் தெரியாத காலம் இது.

சிறிது நேரத்தில் அக்ஷையின் எண்ணிற்கு, ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வர... தான், தான் அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்து விட்டோமே, இது யாராக இருக்கும் என ஐயத்தோடு காதில் வைக்க, "ஹலோ... மிஸ்டர் அக்ஷய்" எனக் கம்பீரமான குரல் கேட்டது.

அதற்கு அவனோ "எஸ்... நீங்க?" என நெற்றி சுருங்கலோடு கேட்க, "நான் ஏ. சி. பி. (ACP) சித்தார்த் பேசுறேன். இப்ப ஒரு, ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி, xxx ரோட்ல நடந்த ஆக்சிடென்ட்ல, அடிப்பட்டவங்களோட குழந்தைக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பதற்காக, நீங்க கொண்டுட்டுப் போனதா தகவல் சொன்னாங்க. இப்ப நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என ஒரே மூச்சில் விசாரித்தான்.

"சார்... நான் xxx ஹாஸ்பிட்டல்ல தான் சார் இருக்கேன். குழந்தைய ஈவ்னிங் தான் டிஸ்சார்ஜ் பண்ணனும் சொல்லிருக்காங்க சார்...” எனத் தான் இனி என்ன செய்ய வேண்டும் என்று அவரே சொல்லட்டும், என அவன் தொடர்வதற்காக, தன் பேச்சு வார்த்தையை முற்று பெற வைக்காமல் காத்திருந்தான்.

"ஓ... அப்படியா...” என ஒரு நொடி யோசித்தவன், உடனே "சரி... நீங்க கொஞ்ச நேரம் குழந்தையோட இருக்கீங்களா?... நான் குழந்தைய பார்த்துக்க, ஆள் அனுப்புற வரைக்கும், உங்களால இருக்க முடியுமா? அதுக்கப்புறம் அவர் கேட்குற டீடைல்ஸ் சொல்லிட்டு, நீங்க உங்க ரொட்டின்ன (routine) பார்க்க போலாம்" என விடையளித்தான்.

ஆனால் அக்ஷயோ, அவசரவசரமாய் "சார்... நான் என் குழந்தைன்னு சொல்லி தான் சார், அட்மிட் பண்ணிருக்கேன்" எனச் சின்னக் குரலில் ரகசியமாய்ச் சொன்னவன்,

மேலும் "சார் நானே பார்த்துக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. குழந்தையோட பாரன்ட்ஸ் எந்த ஹாஸ்பிட்டல்ல சார் இருக்காங்க? அங்கேயே நான் வந்திடுறேன்" எனக் கூறியவனின் மனித நேயத்தை, மனதுக்குள் மெச்சிக்கொண்ட சித்தார்த் "யா... அவங்களுக்கு yyy ஹாஸ்பிட்டல்ல தான் ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. பேபியோட அம்மாக்குக் கொஞ்சம் கிரிட்டிகல் தான். ஓகே... அக்ஷய், தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் அண்ட் உங்கள மாதிரி சிலபேர் இருக்கிறதாலா தான் எங்களுக்கும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கு. கீப் இட் அப்" என்று மனமுவந்து பாராட்டினான்.

"தேங்க்ஸ் சார்...” என வைத்த அக்ஷயை, செவிலியர் அழைத்துச் சில மருந்துகளை வாங்கி வர சொன்னார்.

ஆம், சென்னையின் ஏ. சி. பியாக இருக்கும் இளைஞனான சித்தார்த், ஒரு கேஸ் விஷயமாக விபத்து நடந்த சாலையின் வழியே செல்ல, மக்கள் கூட்டத்தைக் கண்டவன், தன் வண்டியை நிறுத்தி என்னவென்று பார்த்து, பின் துரிதமாகச் செயல்பட்டான்.

அடிப்பட்டவர்களைத் தன் வண்டியிலேயே கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்பித்து விட்டு, அந்த வட்டார காவல் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, இங்கு மருத்துவமனைக்குக் காவல் துறையினரை அனுப்பும் படி உத்தரவிட்டான். அவர்களின் வருகைக்காகக் காத்திருந்த வேலையில் தான் அக்ஷய்க்கு அழைத்துப் பேசினான்.

பின் மாலையானதும், குழந்தையை மருத்துவர் மறுபடியும் பரிசோதித்து விட்டு, ஒரு பிரச்சனையும் இல்லை, அழைத்துச் செல்லலாம் என்று கூற, அவளுக்குத் தர வேண்டிய சிரப்பும், மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, குழந்தைக்குத் தேவையான பாலை பிளாஸ்க்கில் வாங்கி, பால் பாட்டில், மற்றும் இரண்டு மாற்றுடை, ஒரு போர்த்தும் துண்டு எனத் தற்சமய தேவைக்கு, நடைப்பாதைக் கடைகளில் வாங்கியவன், எல்லாவற்றையும் ஒரு கூடையில் அடக்கி, குழந்தையின் பெற்றோர் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.

அங்குச் சென்று விவரம் தெரிவித்ததும், அங்கிருந்த இரு காவல் துறை ஏட்டுகள், தங்களுக்குள் பேசி, குழந்தையை இங்கயே, அந்த மருத்துவமனையின் ஒரு அறையிலேயே வைத்து பார்த்துக் கொள்வோம் என முடிவு செய்தனர்.

ஏனெனில் அந்த இளம் ஜோடிகள், பார்க்க மட்டும் வடக்கத்தியர்களைப் போல் அல்ல, நிஜமாகவே அவர்கள் அங்கிருந்து, காதல் மணம் புரிந்து, ஊரை விட்டு, மாநிலத்தை விட்டு, இடம் பெயர்ந்து, இங்குத் தஞ்சமாய் வந்தவர்கள் எனத் தெரிய வந்தது. மேலும் அவர்களுக்கு ஐசியுவில் சிகிச்சை நடந்து கொண்டு தான் இருந்தது.

எனினும் அவர்களின் ஊரையும், சொந்தங்களையும், அவர்களின் நண்பர்களின் மூலம், தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தான் இருக்கின்றன. அதனால் தான், அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். ஆனால் மருத்துவர்கள் சின்னக் குழந்தை இங்கு இருந்தால், நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று எச்சரித்து, மறுத்து விட, அந்தச் சமயம் "சார்...” என மருத்துவர் மற்றும் காவல் துறையினரைக் கலைத்தான் அக்ஷய்.

குழந்தையோடு சில மணிநேரங்கள் தான், அக்ஷய் செலவிட்டாலும், அக்குழந்தையைப் பிரிய, ஏனோ அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அதனால் வாய்த்த வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணி, "சார்... நான் வேணா குழந்தைய கூட்டிட்டுப் போய்ப் பத்திரமா பார்த்துக்கவா சார்?" என்றான்.

அதற்கு, அவர்கள் யோசிக்கவும், "நீங்க எப்போ கூப்பிட்டாலும், குழந்தைய கொண்டு வரேன் சார்.” என வேலை, வீடு என எதையும் சிந்திக்காமல், ஒரு அன்பான உணர்வோடு உறுதியளித்தான். பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும், குழந்தையைக் கண்டால் தாய்மை உணர்வு பொங்கும் என அக்ஷய் அங்கே நிரூபித்தான்.

அந்த ஏட்டுகளும், அக்ஷய் இந்தப் பிரச்னையைச் சுலபமாக்கினாலும், நாளை இதனால் எதுவும் பிரச்சனை ஆகிவிடும் என யோசித்து, "இல்ல சார்... நீங்க எப்படி? அந்தக் குழந்தையோட பாரேன்ட்ஸ்க்கு உறவோ அல்லது நண்பரா இல்லாம... அவங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லாத பட்சத்துல... எப்படிச் சார் இத நாங்க அலோவ் பண்ண முடியும்?" என அவனிடமே கேள்வி கேட்டனர்.

ஆனால் அக்ஷயோ விடாமல், ஏதேதோ, சொல்லி அவர்களைச் சமாதானம் செய்ய, அவர்களும் யோசித்து, தங்கள் மேலதிகாரியிடம் தெரிவிக்க, அவரும் யோசனை செய்ய, "சார்... அவர பார்த்தா நல்லவரா தான் தெரியுது, கார்பரேட் கம்பெனில வேலையும் பார்க்கிறார் சார்" என ஏட்டே சிபாரிசு செய்ய, அவரும் அரைமனதாய் சரி என்றார்.

அக்ஷயும் சந்தோஷமாய், குழந்தையைத் தூக்கி கொண்டு, வீட்டிற்குச் சென்றான். அங்கு வீட்டில், அக்ஷையின் மனக்காயம் ஆறும் வரை, திரு அவனின் துணைக்காக, தன் மனைவியை விட்டுச் சென்றிருந்தார்.

கையில் குழந்தையோடு வந்தவனைக் கண்ட வைரம், புரியாமல் முழித்து, "என்ன அய்யா... ஏது குழந்த? உன்ற கூட்டாளியோட குழந்தையா?" எனக் கேட்டுக் கொண்டே, குழந்தையை நோட்டமிட்டார்.

"இல்ல... மா...” எனத் தொடங்கி, நடந்த கதையை அக்ஷய் சொன்னான்.

"அடி... ஆத்தா... கடவுள் இப்படியா... இந்தச் சின்னக் குருத்து வாழ்க்கைல விளையாடுவாரு... இப்ப அவுக எப்படி இருக்காக?" எனக் குழந்தைக்காக வருத்தப்பட்டு, அவளின் பெற்றோரை விசாரிக்க, "கொஞ்சம் மோசமான நிலைமை தான்மா... ஆனா இந்தக் குழந்தைக்காகவாது, அவங்க நல்லப்படியா பொழச்சு வரணும் மா...” என மனதில் வலியோடு சொல்ல, அவன் தோளில் உறங்கிய குழந்தையும் விழிக்கச் சரியாக இருந்தது.

முதலில் கண்ணைச் சிமிட்டி, சிமிட்டி விழித்தது. பின் வைரம் வந்து தூக்க வர, புருவத்தைச் சுருக்கி பார்த்து, போக மறுத்தது. அது வேறு ஒன்றும் இல்லை, அவள் அன்னை, தந்தையிடம் மட்டுமே வளர்ந்து, இது போல் பெரியவர்கள் தூக்கி, பார்க்காததால், அவரிடம் போகப் பயந்தது.

பின் அக்ஷயே தன் மடியில் போட்டு, கையில் சொடக்கு போட்டு, விளையாட்டுக் காண்பித்தான். சிறிது நேரம், சிரித்த குழந்தை, மருந்தின் வேலையால் சோர்வும், பசியும் சேர சிணுங்க ஆரம்பித்தது. அக்ஷய் தன் அன்னையின் உதவியால், சுண்ட காய்ச்சிய பாலில், இனிப்பு சரியாய் கலந்து, பால் பாட்டிலில் அடைத்து கொடுக்க, அதுவும் சமத்தாய் குடித்து விட்டு, அப்படியே உறங்கியும் விட்டது.

குழந்தையைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொள்கிறேன் என்று வைரம் சொல்லியும் கேட்காமல், தான் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லி, தன்னுடனே வைத்துக் கொண்டான்.

நடு ஜாமத்தை கடிகார முட்கள் தொடப் போகும் சமயம், குழந்தை அழ, இம்முறை பாலைக் கலந்து கொடுத்தும், குடிக்காமல், அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தது. வைரமும் எழுந்து, அவன் அறைக்கு வந்து விட, கையில் அழும் குழந்தையோடு, ஒன்றும் செய்யத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த மகனைக் கண்ட அந்தத் தாய்க்கு, கண்ணைக் கரிக்கத் தான் செய்தது.

இப்படி மனைவி, குழந்தை என நிறைவாய் வாழ வேண்டியவன், ஆனால் கண்ணில் ஜீவனே இல்லாமல், இந்த வயதிலேயே வாழ்க்கையில் பற்றற்று இருக்கிறானே, என அந்த உள்ளம் கொந்தளிக்கத் தான் செய்தது.

குழந்தையின் அழுகுரலிலும், "ம்மா...” என்ற அக்ஷையின் அழைப்பிலும் நடப்பிற்கு வந்தவர், வரமறுத்த குழந்தையை, அவனிடமிருந்து கட்டாயமாய் வாங்கி, நெஞ்சோடு அணைத்து, தட்டிக் கொடுத்து, "ஆரு ஆரு... எம் ராசாத்திய அடிச்சாக?... ஏன் தாயி அழுகுறீரு?... எங்க ஆத்தாக்கு என்ன வேணும்?" எனப் பலவிதமாய்ச் சமாதானம் செய்து பார்த்தும், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

ஆனால் அனுபவம் வாய்ந்த வைரம், "குழந்த அவுக அம்மாவ தேடுது போலய்யா...” எனப் பாவமாய்ச் சொல்ல, குழந்தையைத் தன் கையில் வாங்கிய அக்ஷய், மேல் மாடிக்கு சென்று, அங்கு அந்த இருட்டிலும்... பகல் போல் ஒளிரும் பெரிய விளம்பரப் பலகையையும், ஒளிவிளக்குகளோடு மின்னும் பெயர் பலகையையும் காண்பித்து, போக்குக் காட்டி, தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.

மறுநாளும், குழந்தை அக்ஷயிடமே ஒட்டிக் கொள்வதும், இரவானால் தன் தாயைத் தேடி அழுவதுமாய்ச் செல்ல, அதற்கு அடுத்த நாள், விடிகாலையிலேயே, அக்ஷய்க்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, உறங்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

அங்கு மருத்துவமனையில், இவனின் வருகைக்காக, எல்லோரும் காத்திருந்தது போல், பரபரப்பாக இருப்பது போல், அக்ஷய்க்கு தோன்றியது.

அவன் வந்ததும், ஏசிபி சித்தார்த் எதிர்கொண்டு, "மிஸ்டர் அக்ஷய்?" எனக் கேள்வியாய் கேட்டு, அவன் ஆமெனத் தலையசைக்க ஆரம்பிக்கவுமே, "கம் ஆன், குய்க், வேகமா வாங்க" என ஐசியுக்கு சித்தார்த் விரைய, இவனும் புரியாமல் பின் தொடர்ந்தான்.

அங்குக் குழந்தையின் தந்தையானவனுக்கு, செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. அப்படித் தான், அக்ஷய் உள்ளே சென்றதும், எண்ணினான். ஆனால், அவனோ தன் இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டு, கடைசியாய் ஒரு முறை தன் குழந்தையைக் காண எண்ணி, உயிரை நிறுத்தி வைத்திருந்தான்.

நேற்று மாலை திடீரெனச் சித்தர்த்துக்கு, அந்த விபத்து நடந்த ஜோடியைக் காண வேண்டும் போல் மனம் உறுத்த தொடங்கவும், அதை உடனடியாய்ச் செயல்படுத்தினான். அங்குச் சென்ற பின் தான், அவனுக்கு ஏன் சென்றோம் என்று நொந்து கொள்ளும் படியாயிற்று.

அவன் சென்றதும், அவர்களைப் பற்றி விசாரிக்க, அந்தக் குழந்தையின் தாய் சுயநினைவு அடையாமலே, சிகிச்சை பலனின்றி அன்று மதியம் இறந்து விட்டதாகவும், அவள் கணவனுக்குச் சிக்கிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்றார்கள்.

ஆனால், அந்தக் காதல் கணவனுக்கு, தன் மனைவி உயிர் துறந்து விட்டாள் என மனதாலேயே உணர்ந்திருப்பான் போலும், அவனின் நிலைமையும் மோசமடையத் தொடங்கியது. சுயநினைவு அடையும் நேரமெல்லாம் "கரிஷ்மா... சுஷ்மி...” என மாறி மாறி, அவன் சொல்லிக் கொண்டே இருந்தான்.

இரவு முழுதும் அங்கேயே கழித்த சித்தார்த், அதற்கு மேல் நேரம் கடத்தாமல், அதனால் தான் அந்த விடிகாலையிலேயே அக்ஷயை வரும்படி அழைத்திருந்தான்.

உள்ளே நுழைந்த அக்ஷய்க்கே, அந்தத் தந்தையின் நிலைமை... செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்டு, உடல் முழுதும், ஆங்காங்கே கட்டும், வயர்களும் ஒட்டி என அவன் இருந்த கோலம், சற்று மிரட்சியைத் தந்தது. அவனுக்கே அப்படியென்றால், அவன் கைகளில் மருத்துவமனை வந்ததும் விழித்து விட்ட, எட்டு மாத சிசுவுக்கு எப்படி இருக்குமோ?

சித்தார்த், அக்ஷயை அந்தக் குழந்தையின் தந்தை அருகே அழைத்துச் சென்று, "வீர்... கேன் யூ ஹியர் மீ, சுஷ்மி வந்திருக்கா வீர். கண்ண திறந்து பாருங்க... சுஷ்மி... சுஷ்மி வந்திருக்கா...” என அவன் காதருகே சொல்ல,

அந்த வீர் என்பவன், கஷ்ட்டப்பட்டு விழியைத் திறந்து, "ஸு... சுஷ்... சுஷ்மி...” எனச் சிரமத்தோடு அழைத்தான். ஆனால் குழந்தையோ, அவனை ஏதோ வேற்று கிரக வாசி போல் வித்தியாசமாய்ப் பார்த்து, மிரண்டு, அழுது கொண்டே, அக்ஷையின் சட்டையை இரு கைகளால் இறுக்கி கொண்டது. பாவம் அவன் இருந்த கோலம், அவன் பெற்ற பிள்ளையே பயந்து, அவனிடம் திரும்ப மறுத்தது.

இதைக் கண்ட இரு ஆண்களின் உள்ளமும், இரத்த கண்ணீரே வடித்தது எனலாம். ஏனெனில் ஒருவன், மனைவியை இழந்து வாடுபவன், மற்ற ஒருவனோ காக்கி சட்டை அணிந்திருந்தும் ஒரு குழந்தைக்கு தந்தையானவன்.

எனவே, இருவரும் ஒரு உறவின் மதிப்பும், அதன் உன்னதத்தையும் அறிந்தவர்கள் எனலாம். வீரின் நிலையோ தன் குழந்தையைத் தனியே விட்டு செல்கிறோமே என்ற தவிப்பு, அவனின் கண்களில் அப்பட்டமாய்த் தெரிய, அதை உணர்ந்தவன் போன்று, அக்ஷய் படுக்கையில் கிடந்த அவன் வலக்கையை அழுத்தி பிடித்து விட்டு, சற்று குனிந்து, அழும் குழந்தையின் தலையிலும் வீரின் கையை வைத்தான்.

வார்த்தைகளால் உணர முடியாத அர்த்தங்களை, அக்ஷையின் செய்கையினால் அவன் மூளை உணர, தன் குழந்தையைத் தொட்ட ஸ்பரிசத்திலும், "உன் குழந்தையை, பத்திரமாக நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று வார்த்தைகளால் அல்லாமல், கை அழுத்தத்தினால் அக்ஷய் தந்த அந்தச் சத்திய பிரமாணத்திலும், நிம்மதியோடு கண்ணை மூடி, தன் ஆருயிர் காதலியான கரிஷ்மாவை தேடி செல்லலானான் வீர்.

நட்புகள், அவ்விருவரையும் அனாதையாக்காமல், உரிய சடங்குகளைச் செய்து, அவர்களின் ஆத்மா சாந்தியடைய நல்ல விதமாய் எல்லாக் காரியங்களையும் செய்து முடித்தனர். எல்லாவற்றிலும் அக்ஷய், மௌனமாய்க் குழந்தையோடு பங்கெடுத்துக் கொண்டான். பின் வீடு திரும்பும்போது, அவனை எதிர்கொண்டான் சித்தார்த்.

"என்ன சார்? நீங்களும் இங்கயே தான் இருந்தீங்களா?" என ஆச்சரியத்தோடு கேட்டான் அக்ஷய்.

"இம்... குழந்தைய சாஸ்திரமெல்லாம் செய்ய வச்சாங்க போல?" என அவனிடம் கேள்வி கேட்க, "ம்... ஆமா சார்" எனப் பதில் மட்டும் அளித்தான்.

"சரி அக்ஷய், குழந்தைய அங்க இருக்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட ஒப்படைச்சிடுறீங்களா? இல்ல என்னிடமே கொடுத்திடுறீங்களா?" என வினவும், அக்ஷய் ஒரு நிமிடம் அதிர்ந்தான்.

ஆனாலும், சித்தார்த் கேட்பது நியாயம் தானே! விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தையை, ஒன்று சொந்தங்களிடம் ஒப்படைப்பர், அப்படி இல்லாத பட்சத்தில், அரசு காப்பகங்களில் விட்டு விடுவர். அதனால் தான் சித்தார்த் அவ்வாறு கேட்டான், அதைக் கேட்டு அதிர்ந்த அக்ஷய் "சார்...” என இழுத்தான்.

"சொல்லுங்க... அக்ஷய்" எனக் கேட்டவனிடம், முடிவு செய்தவனாய் அக்ஷய் "சார்... நானே... இந்தக் குழந்தைய வளர்க்கிறேனே சார்...” எனத் தயக்கத்தோடு, தன் தோளில் இருந்த குழந்தையை அணைவாய் அணைத்தப்படி சொன்னான்.

ஆனால், சித்தர்த்துடன் இருந்த, மற்ற காவல் துறையினரோ "அதெப்படி சார் முடியும்...” என ஏதோ சொல்ல வர, சித்தார்த் கை உயர்த்தி, அவனை நிறுத்துமாறு செய்கைச் செய்தான்.

அக்ஷையின் கண்களில் உண்மையான பாசத்தைக் கண்டவன், மேலும் வீரின் நண்பர்களிடம், அவர்களின் மனைவியர்களிடம் எனக் குழந்தைக்குப் பழக்கப்பட்டவர்களிடம் என்று யாரிடமும் செல்லாத குழந்தை, அக்ஷயிடம் தன் தந்தையைக் கண்டதோ என்னவோ, அவன் நெஞ்சத்தை விட்டு அகல மறுத்தது.

இதனைக் கண்டுக்கொண்ட சித்தார்த், "ஓகே அக்ஷய், இதுல உங்க பெர்மெனன்ட் அட்ரஸ்ஸ எழுதி கொடுங்க" என்று அவனிடம் ஒரு காகிதத்தை நீட்டி விட்டு, "சார் இதுனால எதுவும் பிரச்சனையான...” என அந்த மற்றொருவர் மீண்டும் கேட்க, "இது சம்பந்தமா என்ன பிரச்சனை வந்தாலும், நான் பார்த்துக் கொள்கிறேன்" எனச் சொல்ல, அதற்கு மேல் ஏசிபியிடம் வாதாட அவர் என்ன முட்டாளா?

"வாங்க அக்ஷய்... நானே உங்கள ட்ராப் பண்றேன்" என்று சித்தார்த் சொல்ல, "இருக்கட்டும் சார்...” என அவன் மென்று முழுங்க, "நோ பார்மாலிட்டீஸ், உங்க மனிதாபிமானத்துக்கு, நான் செலுத்துற நன்றியா இத ஏத்துக்கிட்டா... வாங்க " எனச் சொல்லி, அவனைச் சுலபமாய்த் தன் வண்டியில் ஏற்றினான்.

பின் அவன் வீட்டின் அருகே இறக்கி விடும் போது, "உங்க மனைவி, இதுக்கு ஒத்துப்பாங்களா?" என வினவ, அக்ஷயோ ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தி, "என் மனைவி இருந்திருந்தா... கண்டிப்பா இதுக்குச் சம்மதிச்சிருப்பா" எனச் சொல்ல,

அதைப் புரிந்தவன் போன்று "ஸ் ஓ... அயாம் சாரி. அப்புறம் எப்படிக் குழந்தைய...” என அவன் முடிக்கவில்லை, "மனசில அன்பிருந்தா போதும் சார்... ஆனாலும் கவலைப்படாதீங்க... எங்க அம்மா இருக்காங்க சார்" என விடைப்பெற்றுக் கொள்ள, "சரி அக்ஷய்... ஒரு டூ டேஸ் கழிச்சு உங்கள கூப்பிடுறேன்... ஆபிஸ்க்கு வந்துட்டு போங்க, சில பார்மாலிட்டீஸ் முடிக்கணும்" என்று கூறி விட்டுக் கிளம்பினான்.

பின்னர்ச் சித்தார்த் அவன் எழுதி கொடுத்த பூதலூர் முகவரியிலும், அவன் அலுவலகத்திலும், அக்ஷயைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டான். வைரமும், குழந்தையின் வரவினால் தன் மகனுக்கு ஒரு நல்லது நடக்கும் என எண்ணினார். ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன?

இப்பொழுதேல்லாம், அலுவலகம் விட்டு வந்தால், அக்ஷயை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்வது சுஷ்மிதா தான். ஏனோ, அக்ஷய்க்கு, சுஷ்மியின் தாய், தந்தை வைத்த பெயரை மாற்ற மனம் வரவில்லை. மேலும் குழந்தைக்குத் தற்போது எட்டு மாதம் நடக்கிறது என்றும், அவளின் பிறந்த நாள், அவளுக்குப் போட வேண்டிய தடுப்பு ஊசிகளை, வீரின் நெருங்கிய நண்பன் மூலம் எல்லாம் அறிந்து கொண்டான். இப்போது, அவனும் அக்ஷய்க்கு நெருங்கிய தோழனாகி விட்டான்.

அக்ஷய் மடியிலேயே தான் சுஷ்மி இருப்பாள், அவன் முகம் பார்த்தாலே, அவளுக்குக் கொள்ளை சிரிப்பு வரும், குழந்தை, பற்கள் இல்லாத தன் முல்லைப் பூ சிரிப்பில் அக்ஷயைக் கவர்ந்து வைத்திருந்தாள்.

அதனால் அக்ஷய், எப்போது வீட்டிற்கு வந்தாலும் "சுஷுக்குட்டி...” என்றப்படி தான் வருவான். சுஷ்மியும் இப்போது வைரத்துடன் பழகி விட்டாள், தற்போது எட்டு மாதம் முடிவதால், தவழ்ந்து கொண்டிருந்தவள், ஆங்காங்கே மேஜை, நாற்காலி என எதையேனும் பற்றி எழுந்து நிற்க பழகினாள். மேலும் ஒரு நாள், அக்ஷயை "ப்பா...” எனச் சுஷ்மி அழைத்து விட, அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.

இதற்கிடையே வள்ளியும் விஷயத்தைக் கேள்விப் பட்டு, வந்து சென்றாள். ஒரு வாரத்தில் செல்ல வேண்டியவள், சுஷ்மியை பார்த்ததும், மேலும் மூன்று நாட்கள் இருந்து விட்டு சென்றாள்.

சுஷ்மியும் தன் தாயைப் போல் இளம்பெண்ணாய் வள்ளி இருக்கவும், அவளிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள். இதனைக் கண்ட வைரம் கூட, மூன்று வருடமாய்க் குழந்தைப்பேறு இல்லாத வள்ளியிடமே பேசாமல் குழந்தையைத் தந்து, அவள் குழந்தையாய் வள்ளி வளர்க்கட்டுமே என்று யோசனைக் கூறினார்.

இதற்கு அக்ஷய் மறுத்துப் பேசாமல் இருக்க, ஆனால் வள்ளி தான் "வேண்டாம் மா... சுஷ்மி அண்ணனோட குழந்தையாவே இருக்கட்டும், இந்தக் குழந்தை மூலமாவது, அண்ணன் வாழ்க்கைல நல்லது நடக்கும் மா... சுஷ்மி வந்தப்புறம் தான் அண்ணிய மறந்திருக்கு அண்ணே. அதே மாதிரி அண்ணன் வாழ்க்க மலரும் மா...” எனத் தன் அன்னைக்கு நம்பிக்கை அளித்தாள்.

ஆம், முன்பெல்லாம் வீடு வந்தால், அக்ஷய் தன் அறைக்குச் சென்றால், தானும் ஜனனியும் திருமணத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு, அவளோடு ஏதேனும் பேசிக் கொண்டிருப்பான்.

ஆனால் தற்போதெல்லாம் அவன் நெஞ்சத்தில் சுஷ்மி தான் படுத்து கொண்டிருப்பாள், ஆனால் வாய் மட்டும் அக்ஷய்க்கு ஓயவில்லை. அவளிடமும், தன் மனதை பாதிக்கும் விஷயம், அல்லது தான் ரசித்த விஷயம், அலுவலகத்தில் நடந்தது என ஏதாவது பேசிக் கொண்டிருப்பான்.

அது தான் பெரிய குழந்தையாய் வளர்ந்த பின்னும், அவன் பேசினால் மட்டுமே உறங்குபவள், அதற்கு "ஆப்பிஸ் கதை" என்று பெயரும் வைத்திருந்தாள் சுஷ்மி.

ஒரு வருடம் முடிந்த பின், ராமேஸ்வரம் சென்று சுஷ்மியின் தாய் தந்தைக்கு, அவர்களுக்குத் தெரிந்த மட்டும், சுஷ்மியோடு சென்று தர்ப்பணம் செய்தனர். பின்னர்த் திருப்பதி சென்று சுஷ்மிக்கு முதல் முடி காணிக்கை செலுத்தினர்.

ஆனால் அன்று அடிப்பட்ட தழும்பு குழந்தையின் நெற்றியில் தெரிவதால், அவன் எப்போதும் பேபி பாப் கட்டிங் மட்டும் தான் செய்வான், அதுவும் தன் கையாலேயே தான் வெட்டுவான். ஏனெனில் அவனுக்கு அந்தக் காயம், சுஷ்மி தன் குழந்தையில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறதே என்ற நினைவே, அவனைக் கொல்லாமல் கொன்றது.

அதனால் தான் இன்று இரட்டைக் குடும்பி போட்ட சுஷ்மியைப் பார்த்ததும், பேயாட்டம் ஆடினான் எனலாம். அது வேறு ஒன்றும் இல்லை, எங்கே சுஷ்மியும் தனக்குச் சொந்தமில்லாமல் போய்விடுவாளோ என்ற அவன் பயத்தின் வெளிப்பாடு தான்.

இதற்கிடையே வயல் வேலைகள் வலுக்கவும், வைரம் தன் ஊருக்கு சென்று விட, வள்ளியாலும் உதவ முடியவில்லை. அப்படியாவது அவன் யாரையேனும் திருமணம் செய்து கொள்வான் எனத் தாயும் மகளும் திட்டம் போட, ஆனால் அவனோ பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்கள் ஊருக்கு சென்று விட்டான். மேலும் அங்கிருந்தப்படியே, இணையத்தின் மூலம் தன் பணிகளை மேற்கொண்டான். ஐடி அலுவலகத்தில் வேலைப் பார்த்தால், இது ஒரு வசதி.

பின் ஊரிலிருந்து வரும் போது, தான் ஒரு காலத்தில் வாடிக்கையாளராய் இருந்த, பூ விற்கும் லக்ஷ்மியம்மாவுக்கு, ஆதரவு கரம் நீட்டி, தன் குழந்தையான சுஷ்மியைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து, வீட்டோடு அவரைத் தங்க வைத்துக் கொண்டான்.

பெற்ற பிள்ளைகள் இருந்தும், அவர்களால் அனாதையாய்க் கைவிடப்பட்ட நிலையில், அக்ஷய் மரம் தரும் நிழலாய் அவருக்குத் தோன்ற, அவனுடன் தன் உடமைகளுடன் உடனே வந்து விட்டார் லக்ஷ்மியம்மா.

சுஷ்மி வந்த பின் அவர்கள் வீட்டில், நல்ல காரியங்கள் எல்லாம் நடந்தேறின. அவளுக்கு இரண்டு வயதாகும் போது தான், வள்ளி கர்ப்பம் அடைந்தாள். எனவே சுஷ்மி அந்தக் குடும்பத்தினரால் மேலும் அன்பாய் கொண்டாடப்பட்டாள்.

அக்ஷய் சொல்லி முடிக்கும் வரை, அமைதி காத்த சஜு, சுஷ்மியின் கதையைக் கேட்கவும், அவளறியாமல் கண்ணீர் உற்பத்தியாகி, அவள் மடியில் படுத்திருந்த அக்ஷையின் மீது பட்டுத் தெறித்தது. அதில் அவன் தன்னிலை அடைந்து, எழுந்து அமர, சஜுவோ நகர்ந்து உறங்கிய குழந்தையின் அருகே படுத்து, அவளை இறுக அணைத்து கொண்டாள்.

ஏற்கனவே, அக்ஷையின் மகளாய்... தாயில்லை என்ற காரணத்தினாலே, குழந்தையின் மீது அன்பு செலுத்தியவள். இப்போது தாயும், தந்தையுமின்றி, ஒரு...”ஐயோ... இல்லை" என நிறுத்தி அதற்கு மேல் சிந்திக்காமல், உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல் குழந்தையின் முகம் முழுவதும், மாறி, மாறி முத்தமாரி பொழிந்தாள். இந்தச் சின்னக் குருத்தைக் கவனித்தவள், அந்தப் பெரிய குழந்தையை அவளறியாமல் கவனிக்கத் தவற விட்டாள்.

என் நர்த்தனமாடும் பூங்குயிலே

பூக்குவியலே...

உந்தன் அல்லிப்பூ சிரிப்பில்

அள்ளி அணைக்கத் துடிக்கிறதே

எந்தன் கரங்கள்...

உந்தன் முல்லைப்பூ மழலையில்

எந்தன் பிரச்சனை யாவும்

மறந்தும் துறந்தும் விடுகிறதே...

என் மடி சேர்ந்த மரகதமே

உன்னை நாளும் தாலாட்டுவேன்

என் சேயாய்...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 29

சஜுவின் முத்தமழையில் நனைந்ததாலோ, என்னவோ குழந்தை, மெல்ல கண் விழித்தாள். சஜுவை, தன் முகத்தின் அருகே கண்டதும், திடீர் விழிப்பினால் உண்டான சுணக்கத்தில், "ஹுஹும்... சசு... உ... ம்...” எனச் சிணுங்கி கொண்டே தன்னைத் தூக்குமாறு, சஜுவிடம் கை நீட்டினாள் சுஷ்மி.

அவளை அள்ளி அணைத்தவள், "என்னடா சுஸு... சாப்பிடாம தூங்கீட்டீங்களா? பாப்பாக்கு என்ன வேணும்?" எனக் குழந்தையை, இடுப்பில் வைத்துக் கொண்டு சமாதானம் செய்தப்படியே கீழே சென்று விட்டாள்.

ஏனோ அக்ஷய்க்கு சிறிது ஏமாற்றமாய் இருந்தது, சரி... குழந்தையையாவது சமாதானம் செய்தாலே எனத் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாலும், அவனால் அந்த ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை.

கீழே சென்றவள், அரைமணிநேரம் கழித்து, இடுப்பில் சுஷ்மியோடும், கையில் ஒரு கூடையோடும் மேலே வந்தாள். அக்ஷயோ இருகைகளையும், தலைக்கடியில் கொடுத்து, கட்டிலில் படுத்தப்படி இருந்தான்.

கட்டிலில், அவனருகே சுஷ்மியை இறக்கிவிட்டவள், கூடையை மேஜையில் வைத்து, அதிலிருந்து ஒரு தட்டை எடுத்து, மற்றொரு பாத்திரத்தில் இருந்த சப்பாத்தியும், குருமாவையும் அதில் ஊற்ற, அவளைக் கண்ட அக்ஷய், எழுந்து அமர்ந்து, தட்டை வாங்க கை நீட்டினான்.

ஆனால் சஜுவோ "இம்ஹும்... போய்க் கை கழுவிட்டு வாங்க" என்று தட்டை அவன் பக்கம் தராமல் சொன்னாள். அவனும், குளியலறை சென்று கைகழுவி விட்டு வர, குருமாவிலிருந்த பட்டாணிகளை எடுத்து, சுஷ்மிக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

வந்தவன் கட்டிலில் இருந்த தட்டை தன் பக்கம் இழுத்தப்படி அமர, சஜுவோ அந்தத் தட்டை தன் பக்கம் இழுத்தாள். அவன் கேள்விக்குறியோடு, அவளைப் பார்த்தான்.

அக்ஷய், தன் கடந்த காலத்தைச் சொல்லி முடித்ததும், சுஷ்மியின் துயரே அவளுக்குப் பன்மடங்காக முதலில் தெரிய, அதனால் அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

ஆனால், கீழே சென்ற பின், வைரம் "இன்னிக்கே இப்படி ஆடுறான் அய்யன்... நாளைக்குச் சின்னக் குட்டிக்கு மொட்டப் போடும் போது... என்ன பண்ணப் போறானோ?" எனத் தன் பங்கு கவலையைச் சொல்ல, சுந்தரி "நீங்க பயப்படாதீங்க அண்ணி, மாப்பிள்ள அப்படியெல்லாம் பண்ண மாட்டார்" என அவரைச் சமாதானம் செய்தார்.

பின் மகளிடம், அவள் மாமியாரை சமாதானம் செய்யும் படி கண் ஜாடைக் காட்டினார். ஏனெனில், உரியவர்கள் ஆறுதல் படுத்தினால் மட்டுமே, மனித மனம் சமரசமாகி தேறும். அதனால், சஜுவும் தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தாள்.

அப்போது தான் அவளுக்கு ஒன்று புரிந்தது, தன் கணவனும் சுஷ்மியை விடக் குழந்தையாய், அதிகப் பாசம் வைத்து, அதிகமாய் எதிர்ப்பார்த்து ஏமாந்த குழந்தையாய், அவளுக்குத் தோன்றினான்.

சுஷ்மி கூட, சொன்னால் புரிந்து கொள்வாள் போல, ஆனால் அவன் புரிய மறுக்கும் முரட்டு குழந்தையாய் இருப்பானோ? என்று ஏதேதோ எண்ணினாள். எப்படியென்றாலும், தன் கணவன் தூய அன்பிற்கு, மயங்கும் குழந்தை தான், எனவே எளிதாய் சமாளிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

ஜனனியோடு அவன் வாழ்ந்த வாழ்க்கை, ஒரு சதவிகித பொறாமையினால் கூட அவளைப் பாதிக்கவில்லை. ஒரு வேளை, அவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்ற காரணமா? என அவள் யோசிக்கையிலேயே, அவசரவசரமாய் "இம்ஹும்... அவர்கள் இணைந்து வாழ்க்கை நடத்தியிருந்தாலும், என்னைப் பாதித்திருக்காது. காரணம்... நான் அக்ஷய் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறேன்... காதல் என்பதை விட, அவனின் ஒவ்வொரு செய்கையிலும், அவனை ஆராதிக்கிறேன்...” என்றது அவள் ஆழ் மனம்.

"அதெப்படி அப்படிச் சொல்கிறாய்? உன்னிடம் அதற்கான சான்றாக... எந்த வித வெளிப்பாடும் இல்லையே?" என மனசாட்சி கேள்வி கேட்க,

"முதலில் சுஷ்மியின் தந்தையாய் தானே அக்ஷயைக் கண்டேன். அதன் பின் அவன் குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பு... லக்ஷ்மியம்மா மீது அவன் காட்டிய கருணை... ஒரு தாய் இல்லாமலே குழந்தையை, அவன் ஒழுக்கமாய் வளர்த்த பண்பு... என அவனின் பல்வேறு குணங்கள் என்னை ஈர்த்து, அவன் மேல் அன்பு கொள்ளச் செய்தாலும்... சுஷ்மியினால், அவள் மேல் வைத்த பாசத்தினால் தான், அக்ஷய் வீட்டில் அன்று போராடினேன்... உண்மை தான்.

ஆனால், அதற்கு முன்னே, நிச்சயத்தன்று என்னால் இவரைத் தவிர, யாருடனும் திருமணம் என்ன? அருகில் ஜோடியாய் கூட நிற்க முடியாது என்று உணர்ந்த காதலினால் தானே, நான் அப்படித் துணிவாய், அத்தானிடம் விசயத்தைச் சொன்னேன்.” என்று மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் போதே, "ஏன்த்தா... அய்யன சாப்பிட கூட்டிட்டு வரியா?" என வைரத்தின் குரல் கலைத்தது.

"இம்... என்ன அத்த... என்ன கேட்டீங்க?" எனப் புரியாமல் அவள் இழுக்கவுமே, லக்ஷ்மியம்மா "நீ தம்பிக்கு, சஜுட்டையே கொடுத்து விடு த்தா... அவ கொண்டு போய் மாடியிலேயே சாப்பிடக் கொடுக்கட்டும்" என அவர் சொல்லிவிட்டதில் தான், இவள் கொண்டு வந்திருந்தாள்.

அவன் தன்னைக் கேள்வியாய் நோக்கவும், பக்கத்தில் இருந்த சுஷ்மியிடம், "சுஸு... இன்னிக்கு உங்க சுஸ்பாக்கு ஆ ஆ ஊட்டலாமா?" எனச் சொல்ல, அவளோ வேகமாய்த் தலையாட்டி, கண்ணைச் சுருக்கி, வாயை விரித்து, தன் அக்மார்க் புன்னகையை வீச, சஜு சப்பாத்தியை பியித்து, ஒரு விள்ளலை குருமாவில் தோய்த்து, அவனுக்கு ஊட்ட, அவன் வாய் அருகே கொண்டு சென்றாள்.

வார்த்தையால் சொல்ல முடியாத ஆறுதல், அவளின் செய்கை அவனை, அவனின் மனப்பாரத்தை இளக்கியதோ? அவனும் மறுக்காமல் தன் இதழ்களைப் பிரித்து, "ஆ...” எனக் காட்டினான்.

அவன் சாப்பிடுவதைக் கண்டதும், "சசு... னானு... னா... சுஸ்பாகு ஆ...” எனச் சுஷ்மி, தானும் தன் சுஸ்பாக்கு ஊட்டுவேன் எனச் சொன்னாள். பின் சஜு சப்பாத்தியைப் பியித்துத் தர, அதை ஒவ்வொன்றாய் எடுத்து, சஜு ஊட்டியதைப் பார்த்து, தானும் அதைக் குருமாவில் முக்கி ஊட்டினாள். இவ்வாறே, அவன் மகளும், மனைவியும் மாறி மாறி ஊட்ட, அளவில்லாத நிம்மதியோடு, நிறைவாய் உண்டு முடித்தான் அக்ஷய்.

அந்தத் திருப்தியோடே, தன் மகளை அள்ளி உச்சி முகர்ந்து முத்தம் வைக்க, "சுஸ்பா... சசுகு...” எனச் சஜுவுக்கும் முத்தம் வைக்கச் சொன்னாள்.

அவளின் கூற்று நியாயம் தானே! சுஸ்பாக்கு "ஆ" ஊட்டி விட்ட தனக்கு முத்தம் தந்தால், சஜுவுக்கும் தர வேண்டுமே... அவளும் தானே ஊட்டி விட்டாள் என எண்ணினாள் சுஷ்மி.

அதற்கு அதிர்ந்தாலும் "ஹா ஹா ஹா... ஓ... தாரளமா தரலாமே...” எனச் சொன்ன அக்ஷய், சஜுவைப் பார்த்தான்.

ஏற்கனவே சுஷ்மியின் பேச்சால், அதிர்ந்து வெட்கப்பட்டுக் கொண்டிருந்த சஜு, அக்ஷையின் பதிலால் மேலும் அதிர்ந்தாலும், "இம்... ஆச... தோச...” என வெட்கத்தோடு எழுந்து, தட்டைக் கழுவ சென்று விட்டாள்.

சுஷ்மி இரவில் படுக்கையை ஈரமாக்குவாள் என்பதால், மரக் கட்டிலில் இருந்த மெத்தையை அகற்றி விட்டு, ஈச்சம் பாயை விரித்து, அதன் மீது போர்வை விரித்து, என்றும் போல் சுஷ்மி நடுவே இருக்க, படுத்தவர்களுக்குத் தூக்கம் தான் வரவில்லை.

அக்ஷயோ சஜுவிடம் தன் மனப்பாரத்தை இறக்கி விட்டாலும், அவள் எப்படி இதனை எடுத்து கொள்வாளோ? என்ற பயம் சொல்லி முடித்தப்போது இருந்தது. இத்தனை நாளும் சுஷ்மி தன் குழந்தை எனப் பாசம் பொழிந்தாள், இனி எப்படி இருப்பாளோ? என்ற கலக்கம் சிறிது தோன்ற தான் செய்தது. ஆனால் அவளின் செய்கைகள், அவனுக்கான நேர்மறை பதிலையே தர, நிம்மதியாய் உணர்ந்தான்.

சுஷ்மியோ சற்று முன் தூங்கி எழுந்ததால், தற்போது தூங்காமல், விழிப்போடு தன் மழலையில், இருவரிடமும் வழவழத்துக் கொண்டிருந்தாள்.

சஜுவோ, ஜனனி அவனிடம் ஏற்படுத்திய பாதிப்பை எண்ணி வியந்து கொண்டிருந்தாள். ஆம், காமம் கலக்காத ஒரு காதலை, திருமணத்திற்குப் பின்னும் சாத்தியமே என ஒரு பெண், ஆணுக்கு உணர்த்தியிருக்கிறாள் எனில், ஜனனி எவ்வளவு தூய்மையானவள்!

அதை விட அக்ஷய், அவளுக்கென்று ஒரு இடம் தந்து, அவளின் தயக்கம் உடையும் வரை காத்திருந்தானே... எவ்வளவு உன்னதமானவன் இவன்!... அப்படிப்பட்ட இவன் என் கணவன் எனப் பெருமிதத்தோடு அவனைக் கண்டாள்.

அவனோ சுஷ்மியோடு பேசிக் கொண்டிருந்தான், பின் நேரமானதும் "சரி டைம் ஆச்சு, தூங்கு சுஷுக்குட்டி...” எனச் சொல்ல, அவளா தூங்குவாள்? விவரமாய்ச் சஜு பக்கம் திரும்பி, மீண்டும் வழவழத்தாள்.

பின்னர்ச் சிறிது நேரம் சென்றதும், "சுஷு... போதும் படு...” எனச் சற்று குரலை உயர்த்தி, அழுத்தமாய்ச் சொல்ல, அவளோ "கழட்டு... கழட்டு... மிட்டு மிட்டு...” எனச் சொல்ல, காணாததற்கு இருவரும் சிரித்து வேறு விட்டனர்.

அக்ஷயோ பொய் கோபத்தோடு, "உன்ன...” எனத் தன் கீழ் உதட்டை மடித்து கடித்து, கை ஓங்க, சுஷ்மியோ "சசு...” என அவளின் நெஞ்சில் புதைந்து, இடுப்பைக் கட்டிக் கொண்டாள்.

அவளும் சுஷ்மியை ஆதரவாய் அணைத்தப்படி, "ம்ச்சு... என்னங்க...” என அக்ஷயை அதட்ட, "என்ன சஜு, நீயும் அவளுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்க, நேரத்த பார்த்தியா? பன்னெண்டாகப் போகுது... நாளைக்கு வீட்ல இருந்தா பரவாயில்ல, கோவிலுக்கு வேற போகணும்" என எடுத்துச் சொன்னான்.

"நல்லது தாங்க... இப்ப முழிச்சிருந்தா... நாளைக்கு மொட்டப் போட்டதும் அழுதிட்டே தூங்கிடுவா... இல்ல நாள் முழுக்க உங்க பொண்ணு அழுதிட்டே இருப்பா...” என்று அதிலும் ஒரு நன்மை இருக்கிறது என்று சொல்லவும், அக்ஷய் அமைதியானான்.

பின் சுஷ்மியிடம், "சுஸு... நான் சொன்னா கேட்பியா இல்லையா?" எனக் கேட்க, அவளோ நெற்றியோடு, கண்ணையும் சுருக்கி, யோசிப்பது போல் பாவனைப் பண்ணி, "செரீ...” எனப் போனால் போகிறது என ஒப்புதல் தர,

"அப்போ நீ குட் கேர்ள்ளா... படுத்து ஜோ ஜோ தூங்கனும், இல்லாட்டி நம்மகிட்ட சுஸ்பா பேசமாட்டாராம்... நோ... வாம்" என அவளுக்குப் புரியுமாறு எடுத்து சொல்ல, அவளோ "சுஸ்பா...” என்று அதிர்ச்சியாய், "உண்மையா?" என்பது போல், அவன் பக்கம் திரும்பி வேகமாய் அழைத்தாள்.

அவனோ, "ஆம்" எனத் தலையசைக்க, "அப்பின்னா... சுஸ்பாப்பா... ஜோ ஜோ" என நேராய் படுத்து, சமத்தாய் கண்ணை மூடிக் கொள்ள, அந்தத் தளிரின் செய்கையில் கவரப்பட்ட பெரியவர்கள், அவளுக்கு முத்தம் வைக்க எண்ணி குனிய, இருவரும் மோதி விட, "சா... சாரி...” என இருவரும் புன்னகையோடு விலகினர்.

அதில் கண்விழித்த சுஷ்மி, இப்படிச் சத்தமிட்டால், எப்படித் தூங்குவது? அதிலும் தன்னைப் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு, இவர்கள் மட்டும் பேசுகிறார்கள் என்ற அர்த்தத்தில் "இப்பின்னா... சுஸ்பாப்பா னோ...” என்று நான் தூங்கமாட்டேன் என்பது போல் சொல்ல,

சஜுவோ "அடி... ராஸ்கல்" என அதட்ட, இப்பொழுதோ சுஷ்மி "சுஸ்பா...” என அவன் நெஞ்சத்தில் தஞ்சமடைந்து, அவன் மீது ஏறி படுத்து, அவன் தட்டிக் கொடுக்கத் துயில் கொண்டாள்.

மறுநாள் காலை பத்து முப்பது, இடம் பூதலூரை தாண்டி, இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள, அக்ஷையின் குல தெய்வக் கோவில்.

சஜுவிற்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லாததால், வள்ளியின் கணவன் நந்தனை, தாய்மாமன் முறைக்கு அமர்த்தி, அவன் மடியில் சுஷ்மியை அமர வைத்தனர். பின் மெதுவாய் மொட்டையடிப்பவர், தன் பணியைத் தொடங்க, சுஷ்மி "ய்யோ... ஏ... மிடி...” என அழ ஆரம்பிக்கச் சரியாக இருந்தது.

நந்தன் அருகில் இருந்த முரளி, தன் பேத்தியின் முன் நெற்றியையும், பின் பக்க கழுத்தையும் பற்றி, அவள் ஆடாமல் இருக்க உதவ, சுஷ்மிக்கு கஷ்ட்டப்பட்டு மொட்டையடிக்கத் துவங்கினார்கள்.

குழந்தையின் முடிகள் உதிர உதிர, அதைப் பார்த்தப்படி நின்ற அக்ஷயோ, முள்ளின் மேல் நிற்பது போல் அவஸ்தையோடு நின்றிருந்தான். அதைக் கவனித்த சஜுவோ, தன் அருகே இருந்த அத்தையிடம் "அத்த... நாங்க சாமி கும்பிட்டு வந்திடுறோம்" என அக்ஷயை அவருக்குக் கண் ஜாடைக் காட்டி விட்டு நகர்ந்தாள்.

பின்னர் அவனருகே சென்று, "என்னங்க...” என அவன் முழங்கையைப் பற்றிக் கலைத்தவள், "ம்ம்... என்ன சஜு?" எனத் திரும்ப, "வாங்க... நாம போய்ச் சாமி கும்பிட்டு வருவோம், அத்த... சொல்லி விட்டாங்க" என அவன் கையைத் தன் கையோடு பிணைத்து அழைத்துச் சென்றாள்.

அங்கு அவர்களின் கோவிலில், தாயார் சந்நிதியும், அதற்கு அடுத்து தாயாரின் அண்ணனாய், உலகத்திற்கே தந்தையாய் விளங்கும் அப்பன் சந்நிதியும் இருக்க, அங்கு வந்தவள், தன் கணவனிடம் "நாம இங்க வந்து, நம்ம குலசாமிக்கு, சுஷ்மியோட முடிய காணிக்கையாச் செலுத்தியாச்சுங்க. அதுனால அவ நம்ம குழந்தை தான். நீங்க அனவாசியமா மனசப் போட்டுக் குழப்பிக்காதீங்க... சுஷ்மிய நம்ம குழந்தையாவே வளர்த்து, ஆளாக்கி, நல்லவன் ஒருவனுக்குக் கல்யாணம் பண்ணி, அவளும் நல்லபடியா வாழ, நாம வணங்குற, நம்ம குலத்தைக் காக்கும் தெய்வம் அருள் புரியும்ங்க. அந்த நம்பிக்கையோடே சாமிய கும்பிடுங்க" என்று மேலும் அவன் கைகளை அழுத்தி சொல்ல, "கண்டிப்பாக" எனபது போல் அவனும் பதிலுக்கு அவள் கையை அழுத்தி, பின்னர்க் கடவுளை வேண்டினர் இருவரும்.

அதற்குள் சுஷ்மிக்கு மொட்டையடித்து முடித்திருக்க, இவளை அழைத்தனர். அவள் செல்லவும், வைரம், "ஆத்தா... சோறாக்குறவுக ட்ட... பிள்ளைக குடிக்கச் சுடு தண்ணி வைக்கச் சொன்னேன். அதுல கொஞ்சம் அர வாலி வாங்கி வந்து, வெரசா நீர் விளாவி, பிள்ளைக்குத் தலைக்கு ஊற்றி விடு...” என விவரம் சொல்ல, "நீ இரு, நான் போய் வாங்கிட்டு வரேன்" என்று அக்ஷய் சென்றான்.

முரளி குழந்தையின் முன் நெற்றியை, தன் கையால் தடுப்பு போல் பிடித்திருந்ததால், நல்ல வேளை முடியெல்லாம் குழந்தையின் கண், மூக்கு, வாய்க்குள் செல்லாமல் இருந்தன. இதற்குத் தான் பெரியவர்களின் துணை வேண்டும் என்று சொல்வார்கள் போலும்.

பின்னர், சுஷ்மியின் கண்ணீரையும், ஒழுகும் மூக்கையும், தன் வேஷ்டியால் துடைத்து விட்டு, "அவ்ளோ தான் டா... அவ்ளோ தான்... ஹை முடிஞ்சிருச்சு... சுஷ்மி குட் கேர்ள்ல" எனக் குழந்தையைச் சமாதானம் செய்தப்படி, சஜுவிடம் தந்தார்.

குழந்தையும் கரைந்தப்படி "சசு... உ...” என அவள் தோள் வளைவில் முகம் புதைத்தாள். இடுப்பில் இருந்த குழந்தையின் ஆடைகளைக் கலைந்தப்படி, அவள் உடம்பில் இருந்த முடிகளை அகற்றியப்படி, மூடிய கிணற்றடிக்கு சஜு செல்ல, அக்ஷயும் சுடு நீர் எடுத்து வந்து, விளாவி தயாராய் இருந்தான்.

பின்னர், சஜு தன் தந்தையைப் பின்பற்றி, குழந்தைக்கு மூச்சு முட்டாமல் இருக்க, அவள் முன் நெற்றியில் கையால் தடுப்பு போல் பிடித்துக் கொள்ள, அக்ஷய் தலை வழியே நீர் ஊற்றினான்.

சுஷ்மியோ பயந்து போய், சஜுவிடமே ஒட்டிக் கொள்ள, அவளை அணைத்தப்படியே, சமாதானம் செய்து, முதுகுக்கும், கைகால்களுக்கும் சோப்பு போட்டு, நீர் ஊற்றி, மஞ்சள் தேய்த்து குளிப்பாட்டுவதற்குள், சஜு முழுதாய் நனைந்தே விட்டாள்.

அதன் பின், அங்கு வந்த முரளி, சந்தனத்தை அக்ஷயிடம் கொடுத்து, தண்ணீர் கலந்து குழந்தையின் தலை முழுவதும் பூசி விடச் சொன்னார். குழந்தையின் முன் நெற்றி தையல் மறையும் படி சஜுவும் சேர்ந்து பூசி விட்டாள். இதையெல்லாம், அக்ஷையால் அழைக்கப்பட்டிருந்த சுந்தர், வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தான்.

பின் குழந்தைக்குப் புத்தாடை அணிவித்து, மாலை போட்டு, காது குத்தும் சடங்கிற்காக, மீண்டும் அழைத்துச் செல்லப் பட, வைரம் சஜுவை "என்ன தாயி... இப்படித் தெப்பலா நனஞ்சிட்டு வந்திருக்க... போ போய் வேற உடுப்பு போட்டுட்டு வா த்தா... வச்சிருக்கியா? இல்ல நா தரவா?" எனக் கேட்க, அவளோ இதை எதிர்பார்த்தே, வேறு சேலையைச் சமயோசிதமாய் எடுத்து வந்திருந்தாள்.

அதனால் தன்னிடம் இருப்பதாகப் பதில் சொன்னாள், அவளை மனதில் மெச்சிக் கொண்டே வைரம் "அதோ... தெரிது பாரு, அது சாமான் வச்சிருக்க ரூம் தான். அங்கன தான் வள்ளி குழந்தையோட இருக்கா... போ... அங்க போய் வெரசா மாத்திட்டு வா த்தா...” என அனுப்பி வைத்தார்.

பின் உடை மாற்றி வந்தவளிடம், பச்சரிசி, வெல்லம், பொடியாய் நறுக்கி போட்ட தேங்காய் பற்கள் என எல்லாவற்றையும் கலந்த கலவையைத் தந்து, எலோருக்கும் தருமாறு, சுந்தரி பணித்தார்.

பின் சஜுவை பொங்கல் வைக்கச் சொல்லி, அதையும் எல்லோருக்கும் விநியோகம் செய்ய வைத்தார். அக்ஷயும் சஜுவுக்கு உதவினான். பொங்கல் விநியோகத்தைப் பார்த்த அக்கம் பக்கம் இருந்த சிறுவர்களும் வந்து விட, இருவரும் அவர்களுக்கும் வாழையிலையில் தந்தனர்.

திரு அங்கு வந்து, "பசங்களா இருங்க டா... மதியம் சாப்பிட்டு போவீங்க...” என அவர்களை இருக்கச் சொன்னார். ஏனெனில் ஐம்பது பேருக்கு சாப்பாடு தயாரிக்கச் சொல்லியிருந்தனர்.

ஆனால், திரு, முரளி, வள்ளி, அக்ஷய், சுந்தர் குடும்பம் என இருபது பேரே இருக்க, அந்த ஊரில் இருந்த உறவினர்களை அழைத்து இருந்த பட்சத்தில், அவர்களில் ஒரு சிலரே வந்திருக்க, கூட்டி கழித்துப் பார்த்தால், இருபத்தைந்து, முப்பது பேரே இருந்தனர். அதனால் சாப்பாடை வீணாக்காமல், அந்தக் குக்கிராமத்துச் சிறார்களை இருந்து சாப்பிட்டு போகச் சொன்னார்.

கம்பும், கேப்பக்கூழும், கஞ்சியுமாய்ச் சாப்பிட்டு வந்த அந்தச் சிறார்களுக்கு, நாலு வகைக் காய்கறிகளோடு நெல் சோறு என்பது தேவார்மிதமாய் இருக்க, சரியெனக் காத்திருக்கத் தொடங்கினார்கள். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது, நாடு முன்னேறுகிறது என நாம் பெருமைப்பட்டாலும், நெல் சோறோ... மின்சாரமோ காணாத குக்கிராமங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

குழந்தைக்கு மொட்டையடித்ததால், அவளின் பெற்றோரான சஜுவும், அக்ஷயும் தான் வந்தவர்களுக்கு வயிறார பரிமாற வேண்டும், அது தான் சாஸ்திரம் என்று சொல்லி விட, அவர்களுடன் முரளியும், சில சமையல் ஆட்களும் சேர்ந்து பரிமாறினர்.

சாப்பிட்டுச் சென்ற சிறுவர்களில் ஓரிருவர், மீண்டும் தட்டைத் தூக்கி வந்து, "அண்ணே... கொஞ்சம் சோறு கொடு அண்ணே... வீட்ல பாப்பா இருக்கு" எனக் கேட்டான் ஒருவன்.

இன்னொரு சிறுமியோ "அக்கா... எனக்கும் தா... க்கா... எனக்கும் தம்பி பாப்பா இருக்கு" எனக் கேட்கவும், இருவரும் நெகிழ்ந்தே விட்டனர்.

ஆனால் பூசாரியோ "இந்தா... ஓடுங்க... பாவம்னு சோறு போட்டா... திரும்பத் தட்டத் தூக்கிட்டு வருவீகளா?" என விரட்டப் போக, அக்ஷய் அவரைத் தடுத்து, பிள்ளைகளிடம் திரும்பி, "சமையக்காரவங்க எல்லாம் சாப்பிடட்டும் பா... அவங்க சாப்பிட்டதும் தரேன். கொஞ்ச நேரம் இருங்க" எனச் சொல்லவும், அவர்களும் மகிழ்ச்சியோடு தலையாட்டினர்.

சமையல் செய்தவர்களுக்கும் போக, ஏழு சாப்பாடு மீதம் விழுந்து விட, அந்த மூன்று குழந்தைகளுக்கும் தந்து விட, மேலும் அவர்களைப் போலவே, இன்னும் நான்கைந்து குழந்தைகள் தட்டோடு வர, "இல்லை" எனச் சொல்ல மனம் வராமல், அவர்களுக்கும் சம பங்காய் எல்லாவற்றையும் கொடுத்து தீர்த்தனர். பின்னர் அவர்கள் இருவரும் உண்ணாதது உறைக்க, வைரம் "என்னய்யா... இப்படிப் பண்ணிப்புட்டீக...” என வருத்தம் கொள்ள,

"விடுங்க அத்த... விவசாயம் பார்க்காத நாம தினம் நெல் சோறு சாபிடுறோம். ஆனா, விவசாயமே மூச்சா இருக்கிறவங்க, நெல் சோறு சாப்பிட கூட வழியில்லாம இருக்காங்க" எனச் சஜு சொன்னாலும், மனம் கேட்காமல், "இருந்தாலும்...” என அவர் இழுக்க,

"அத்த... சுஷ்மிக்கும், வள்ளிக்கும் சாப்பாடு நிறையவே கொடுத்து விட்டிருக்கோம், அதுல அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கிறோம். சாமிக்கு படைச்ச பிராசாத பொங்கல் வேற இருக்கே... இதுவே போதும்" எனத் தினமும் வயிற்றைச் சுருக்கி சாப்பிடுபவர்களுக்காக, ஒரு நாள் வயிற்றைச் சுருக்கி சாப்பிட்டால் தப்பில்லை என்பது போன்று இருந்தவளின் வாதம் அக்ஷய்க்கும் புரிந்தது.

ஆம், சஜ்னா சொல்வது போல், வள்ளி அபியைப் பார்த்து கொள்வதற்காக அந்த அறையில் இருந்தாள். அப்போது சுஷ்மி காது குத்தியதால் அழுகவும், அவளை உறங்க வைக்க, எண்ணி சஜ்னாவும் அங்குச் சென்றாள். ஆனால், சுஷ்மியோ விடுவேனா என்பது போல், "ய்யோ... சுஸ்பா... பலிக்குடு... ஆஆ... காடு... ஏ... மிடி...” எனப் புலம்பியப்படியே இருந்தாள்.

சஜ்னா கூட, "சுஸு இங்க பாரு... அபி கூட அழாம சமத்தா இருக்கான்... உன்ன பேட் கேர்ள்னு சொல்ல போறான்.” என்று வள்ளியின் மடியில் முழித்துக் கொண்டிருப்பவனைச் சுட்டிக் காட்டி, திசைத் திருப்பியும், சஜுவின் நெஞ்சத்தில் சாய்ந்தப்படி விடாமல் அழுது புலம்பினாள்.

பின் யோசனை வந்தவளாய், அபியின் தொட்டிலில் சுஷ்மியை, இரு கால்களையும் இரு பக்கமும் தொங்கவிட்ட படி, உட்கார வைத்து, தூளி ஆடுவது போல் ஆட்டவும் தான், தன் முடியையும், காதுகளையும், அழுகையையும் மறந்தாள். பின் அப்படியே உறங்கி விட்டவளை, தூக்கி கீழே போர்வையில் படுக்க வைத்து விட்டு சென்றாள்.

அதனால் வள்ளிக்கு டிபன் கேரியரில் வைத்து இருந்த சாப்பாட்டில் பேருக்கு, அக்ஷயும், சஜுவும் உண்டனர். ஏனெனில், அந்தச் சிறார்களுக்கு உணவிட்ட நிறைவே அவர்களின் வயிற்றை நிரப்பி இருந்தது.

எல்லாம் நல்லப்படியாய் முடிந்து, எல்லோரும் வேனில் ஊர் திரும்ப, நம் சுஷ்மி மட்டும் "டாட்டா... ஏ... மிடி... காணோம்...” என இப்படியாக எல்லோரிடமும், தன் தலையில் ஆங்காங்கு மாற்றி மாற்றி, கை வைத்துக் கூறிக் கொண்டே வந்தாள்.

பின்னர் இரவு அறையில் உறங்கும் போது, "னா... டூரி டா... ஜோ ஜோ...” எனத் தொட்டிலில் தான் தூங்குவேன் எனச் சுஷ்மி அடம் பண்ண, அக்ஷயும், இத்தனை நாளாய் தொட்டிலிலே தூங்காத தன் மகளுக்காக, அவர்கள் அறையில் இருந்த கம்பியில், ஒரு சேலையால் தொட்டில் கட்டினான்.

அதில் சிறிது நேரம் தூளி ஆடி விட்டு, அதிலேயே சுஷ்மி உறங்கி விட, சஜுவும், அக்ஷயும் எந்த வித தயக்கமும் இன்றி, நடுவே சுஷ்மியும் இன்றி அடுத்தடுத்து படுத்து கொண்டனர். மறுநாள், அக்ஷயும், சுந்தரும் தங்கள் குடும்பத்துடன், நந்தன் ஏற்பாடு செய்திருந்த வண்டியில், திருச்சியைச் சுற்றி பார்க்க சென்றனர். தங்கள் ஊரைச் சுற்றி காட்ட, நந்தனும் அவர்களுடன் சென்றான்.

"நானு... இங்க... டா...” என வெள்ளையும், நீலமும் கலந்த நீண்ட பிராக் மீது ஸ்வெட்டரும், தலையில் குல்லாவும், காலிலும் நீலமும், வெள்ளையும் கலந்த ஷு, சாக்ஸ் அணிந்திருந்த அழகு சுஷ்மி சொல்ல,

"நான் தான் இங்க... நீ அங்க போ...” எனக் குட்டி சித்தார்த் சொல்ல, கவியோ "டேய்... அவ சின்னப் பொண்ணு தான, கொஞ்சம் இடம் விடு டா... பாப்பா உட்காரட்டும்" எனத் தன் மகனுக்குப் புத்தி சொன்னாள்.

அவனோ "போ... மா" என மறுத்தான். அதில் சுஷ்மி இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொள்ள, இது தான் சமயம் என்று ஜென்னலோர இருக்கையில் நன்றாக அமர்ந்து கொண்டான் சித்து.

முதலில், சுஷ்மி சித்தார்த்தோடு தான் உட்காருவேன் என அடம் பண்ணி அமர்ந்தாள். இப்போது அவன் இடம் தரவில்லை என்றதும் எழ, கவிக்கு அடுத்து நடுவே அமர்ந்திருந்த சஜு "இங்க வா... சசு... என் மடில உட்காருவ" என அழைத்தாள்.

அதற்கு மறுத்த குழந்தையை, சஜுக்கு அடுத்து அமர்ந்திருந்த அக்ஷய் "இங்க வா டா... சுஷு, நாம ஜென்னல் பக்கம் உட்காரலாம்...” என அழைத்து, அவளைத் தன் பக்கம் அமரவைத்தான்.

"ஏன்டா... என்ன யாராவது கேட்டீங்களா டா? நீ எங்க உட்காரன்னு?" என மனதுக்குள் கடுப்பாய் கூறியவன், வேறு யாரும் அல்ல நம் சுந்தர் தான். நடு இருக்கையில் அமர போனவனைத் தடுத்த அவன் மனைவி கவி "ஏங்க அண்ணனும் சஜுவும், ஒன்னா உட்கார்ந்திட்டு வரட்டும், நீங்க வேற எங்கயாவது உட்காருங்க" எனச் சொன்னதும் இல்லாமல், சாப்பாடு மற்றும் பலகார கூடைக்குக் காவலாய், பின் இருக்கையில் தனியே அமரவைத்து விட்டனர்.

"ஏய் சுஸு, ஒழுங்கா இங்கிட்டு வா... இல்ல மொட்ட மண்ட கதவுல இடிச்சிடும்...” எனத் தன்னை இருப்பக்கமும் நெருக்கிய கடுப்போடும், அதை விடப் பெருங்கொடுமையாய் அக்ஷய் அருகே, அவன் தோள்களும், முழங்கையும் தன்னை உரசி உரசி, உயிரை வாங்குவதைத் தாளாமலும் தான் சொன்னாள்.

ஆனால் சுஷ்மியா கேட்பாள்? நல்ல நாளிலே கேட்க மாட்டாள், அதுவும் இன்று, நேற்று போல், அபி பாப்பா தன்னோடு வராமல், தன்னை மட்டும் தூக்கி வந்த கடுப்பில் இருந்தவள், "போ" என்பது போல் தலையை இடப்பக்கமாய்ச் சாய்த்தவள், சஜு சொன்னது போலவே, கதவில் போய் முட்டி விட்டாள்.

முதலில் சுஷ்மிக்கு ஒன்றும் தெரியவில்லை, பின் மண்டை வலிக்கவும், "ஹாஆ... ஆஆ... ஆ...” எனக் குல்லா போட்டிருந்த தன் மண்டையில் கை வைத்தப்படி அழவும், அக்ஷய் "அச்சோ... இடுச்சிட்டியா டா சுஷுகுட்டி... வலிக்குதா" என அவள் குல்லாவை கழற்றி, மண்டையைத் தேய்த்து விட,

"இதுக்குத் தான் சொன்னேன்... கேட்குறியா" எனச் சஜு சொல்ல, "இம்ச்சு... சும்மாவே இருக்க மாட்டியா சஜு...” என 'எல்லாம் உன்னால் தான்' என்பது போல் சஜுவை திட்டினான் அக்ஷய்.

சஜு பதிலாய், தன் வாயைச் சுளித்துக் கொள்ள, கவிதா "ரொம்ப அடிப்பட்டிருச்சாண்ணா... எண்ணெய் இருந்தா, அதால தேச்சு விடுங்க" என்று உதவினாள்.

அக்ஷயோ "அவ்வளவா இல்ல சிஸ்டர்...” என்று சொல்லி, சுஷ்மியிடம் "நீ இப்படிச் சுஸ்பா மேல சாஞ்சு உட்கார்ந்துக்கோ டா...” என அவளை இருக்கையில் உட்காரவைத்து, தன் மீது சாய்த்து, மேலும் அவள் இடிக்காமல் இருக்க, பாதுகாப்பாய் கார் கதவில் தன் கைகளை வைத்துக் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 30

ஸ்ரீரங்கத்தில் காலை உணவை முடித்து விட்டு, அங்கு இருந்து கல்லணைக்குச் சென்று சிறிது நேரம் சுற்றி பார்த்தனர். பின்னர், முக்கொம்பு சென்றனர், அதுவும் அணை போன்று, சிறார்கள் மகிழ்ந்து விளையாட, ஆங்காங்கே பூங்காக்களும் இருந்தன. அங்குச் சென்றதும், சுந்தர் தன் மகன் சுஷ்மியுடன் விளையாடவும், அக்ஷயிடம் அவர்களை ஒப்படைத்து விட்டு, வேறு ஒரு பக்கம், தன் மனைவியுடன் சென்றான்.

அக்ஷய் "டேய்... எங்கடா போற?" என வினவ, அவனோ "உங்கள தனியா விடச் சொன்னாங்களா... அதான் டா நாங்க உங்கள தனியா விட்டுட்டு போறோம்" என அவன் மேற்கொண்டு ஏதேனும் அடுத்தக் கேள்வி கேட்கும் முன், ஓட்டமும் நடையுமாய்ச் சென்றே விட்டான். கவியும் வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.

முக்கொம்பின் பூங்காவில், குழந்தைகள் விளையாடவென ஆங்காங்கே, சறுக்கு, ஊஞ்சல், சீ - ஸா, இராட்டினம் என அமைத்திருந்தனர். அதனால் சுஷ்மி, சித்துவுடன் சேர்ந்து சஜுவும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். கடைசியில் பைகளைப் பார்த்து கொண்டும், அவர்களை வேடிக்கைப் பார்த்து கொண்டும் அக்ஷய் அமர்ந்திருந்தான்.

பின் சித்து ஊஞ்சல் ஆட, அதே போல் தானும் ஆட வேண்டும் எனச் சொல்ல, அவளை ஊஞ்சலில் அமரவைத்தாள் சஜு. ஆனால் அவளோ தனியே ஆட பயந்து, சஜுவையும் தன்னுடன் அமர்ந்து ஆட வரும்படி அழைத்து அடம் பண்ண, வேறு வழியில்லாமல், அவளும் சுஷ்மியுடன் அமர்ந்து கொண்டு "என்னங்க... இங்க வந்து, ஆட்டி விடுங்களேன்" என அக்ஷயை அழைத்தாள்.

அவனோ "இந்தச் சாப்பாட்டுக் கூடையெல்லாம் யார் பார்த்துப்பா?" எனப் பதில் கேள்வி கேட்டான்.

"ஏன் நந்தன் அண்ணா... எங்க?" என அங்கிருந்தப்படியே இவள் கேட்க, "அவர் ஒரு வாக் போயிட்டு வரேன்னு போயிட்டார்" என அவன் பதில் தர, "சீ... போங்க" எனச் சலித்தப்படி, மெதுவாய் தானே ஆடிக் கொண்டாள்.

பின் இருவரையும் பிஸ்கட், பழம் சாப்பிடலாம் என அழைத்து வந்தாள். இவர்கள் பிஸ்கட் எடுத்து, உண்டது தான் தாமதம், காக்கைக் கூட்டமும், ஒன்றிரண்டு குரங்கும் வந்து விட, அக்ஷய் "பாரு... உன் சொந்தக்காரவங்க எல்லாம்... வந்துட்டாங்க பாரு... ச்சூ...” எனச் சஜுவைக் கிண்டல் செய்தப்படியே, குரங்குகளை விரட்டி விட்டான்.

ஆனால் அவளோ "அது உங்க சொந்தக்காரவங்க தான்... அங்க பாருங்க உங்க பொண்ண...” எனச் சொல்ல, அவனோ அவள் சொன்ன திசையில் பார்க்க,

சுஷ்மி "இடா... பேணுமா... இடா பா...” என அவளுக்குத் தந்த பிஸ்கட்டை, அங்கிருந்த காக்கைக் கூட்டத்திடம் பேசியப்படி, அவைகளுக்குப் பிய்த்து போட்டுக் கொண்டிருந்தாள். மேலும் நடந்து சென்று, ஒரு குரங்கிடம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட அக்ஷயோ "ஏய்... சுஷ்மி... இங்க வா... அது கடிக்கப் போகுது" எனச் சொல்லியப்படி ஓடிப் போய் அவளைத் தடுத்து நிறுத்தினான்.

அவளோ "பாபம்... ப்பா...” என அழகாய் வாயை சுளித்துச் சொல்ல, "இரு நான் தரேன்" என அதற்கும் ஒரு பிஸ்கட்டைப் போட்டான்.

பின் அக்ஷய், சஜு அமர்ந்திருந்த கல் இருக்கை அருகே, இரு குழந்தைகளும் சாப்பிட்டப்படி, ஏதேதோ தங்களுக்குள் பேசியப்படி நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றதும், சித்து "போ... நா எங்கமாட்ட போறேன்" எனச் சுஷ்மியை லேசாய் தள்ளி விட, அவளும் ரோசத்தோடு "ப்போ... நானு ம்மாட்டா...” என அவள் சஜுவை நோக்கி சென்றாள்.

சித்துவோ சுஷ்மியை தள்ளி விட்டு, அவன் அந்தப் பக்கம் தன் அன்னையைத் தேடி நடந்து செல்ல, அதைக் கண்ட அக்ஷய் "டேய் சித்து... நில்லுடா... எங்க போற?" எனக் கேட்டுக் கொண்டே, அவன் பின்னேயே சென்று விட்டான்.

இந்தப்பக்கமோ, சஜுவிடம் வந்த சுஷ்மி, அமர்ந்திருந்த அவள் கால்களுக்கு இடையில் நுழைந்து, அவளின் ஒரு மடியில் தலை சாய்த்து "ம்மா... தூக்கு...” எனக் கண்களைக் கசக்கிக் கொண்டு, சஜுவை தூக்க சொன்னாள்.

அவளின் சொற்களில் ஒரு நொடி சிலிர்த்தவள், சட்டென்று சுஷ்மியை தூக்கி, அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு, "என்ன சொன்ன... திரும்பச் சொல்லு சுஸு...” என மீண்டும் அவளின் "அம்மா...” என்ற அழைப்பைக் காது குளிரக் கேட்க எண்ணி கேட்டாள்.

அன்று சஜு, சுஷ்மியின் கதையைக் கேட்ட பின், நெகிழ்ந்து போய்த் தன்னை அம்மா என்று அழைக்கச் சொன்னாள். வைரம் கூட, சுஷ்மியிடம் "என்னாத்தா... சின்னக் குட்டி, இன்னும் சசு, சசு சொல்ற, அழகா அம்மா ன்ட்டு... சொல்லு கண்ணு" எனக் கூறினார்.

சஜுவும் "எங்க... அம்மா... சொல்லு, அம்... மா...” எனச் சொல்லி காண்பிக்க, சுஷ்மியும் "ம்மா...” என அழகாய் சொன்னாள்.

அதோடு மேலும் "அப்பின்னா?...” என அவள் வழக்கமான கேள்வியைக் கேட்க, "அப்படின்னா... இம்... உங்க சுஸ்பா இருக்கார்ல" எனக் கேட்க,

குழந்தையோ "இம்" கொட்ட, "அவருக்கு... வைரம் பாட்டி யாரு? அவங்க அம்மா தான...” என விளக்க, அவளோ "ம்ம்...” என்றாள்.

சஜு "அதே போலத் தான், நான் உனக்கு, சரியா?" என்று விவரித்தாள்.

அதற்கும் உம் கொட்டியவளிடம், "எங்க... என்ன எப்படிக் கூப்பிடனும் சொல்லு?" எனச் சொல்லி கொடுத்த பின், சஜு கேள்வி கேட்டாள்.

அவளோ "சசு...” எனச் சொல்லி, கண்ணைச் சுருக்கி, சிரித்து விட்டு, ஓடி விட்டாள். அதற்கு மேல் பிடித்து வைத்தாள், "ஆஆ...” என வராத அழுகையை வரவழைத்து, அழுது ஊரைக் கூட்டுவாள். ஆனால் அவளை அம்மா எனச் சொல்ல மாட்டாள்.

அந்தப் பக்கம் சித்துப் பின்னே சுந்தரையும், கவியையும் தேடிச் சென்ற அக்ஷயோ, அங்குக் கல்லூரி செல்லும் காதலர்கள் நிரம்பிய அந்தப் பூங்காவில், அவர்களைத் தேடினான்.

கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும், நண்டு சுண்டேல்லாம் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்ததக் கண்டு, நொந்தவனின் கண்ணில் ஒரு காட்சி பதிந்தது. அதைப் பார்த்ததும் சிரிப்பு பீறிட்டு வர, அங்குச் சித்துவை தூக்கி கொண்டு சென்றான்.

வேறு ஒன்றும் இல்லை, அங்கு ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்த வாண்டுகளுடன், சுந்தரும் ஒரு கல் இருக்கையில் கவி மடியில் படுத்துக் கொண்டு, கையில் முறுக்குப் பாக்கெட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், அந்தப் பக்கமாய் வந்த குரங்கு ஒன்று, அவன் தலைப்பக்கமாய் வந்து முறுக்குப் பாக்கெட்டை அபேஸ் செய்து கொண்டு ஓட, அதில் திடுக்கிட்டு இருவரும் எழுந்தே விட்டனர்.

இதைக் கண்டு தான், அக்ஷய் சிரித்து விட, சுந்தரிடம் சென்று, "என்னடா மச்சான்... போன ஜென்மத்துல, நீ கடன் வாங்குனத வசூல் பண்ணிட்டு போகுதா?" எனக் கேட்டு, மேலும் கடுப்பேற்றினான் அக்ஷய்.

"டேய்... நானே பயந்து போயிட்டேன்... நீ வேற ஏன்டா?" என அதிர்வோடு சுந்தர் சொல்ல, அக்ஷய் சிரி சிரி எனச் சிரித்தான்.

"டேய் போதும்... என்ன கலாய்ச்சது, அங்க பாரு சிஸ்டர் உன்ன தேடியே வந்துட்டாங்க, உங்கள தனியா இருங்கன்னு தான விட்டிட்டு வந்தோம்" எனப் பொரிந்தான் சுந்தர்.

"ஏன்டா... இப்படி இரண்டு குழந்தைங்களோட விட்டிட்டு போறதுக்குப் பேர் தான் தனியா விடுறதா?" என அக்ஷயும் பதிலுக்குப் பொரிய, "சரி டா சரி... விடு, தனியா கவனிச்சுடலாம்" என அவன் காதில் சமாதான உடன்படிக்கை போட்டான் சுந்தர்.

அவர்கள் அருகில் வந்த சஜுவோ, "என்னங்க... கவி... அண்ணா... சுஷ்மி... சுஷ்மி... இப்ப...” என அவள் வேகமாய் நடந்து வந்ததால், மூச்சு வாங்கினாள். அதற்குள் அக்ஷய் அவள் தோளில் படுத்துக் கொண்டிருந்த சுஷ்மியை தூக்கி, "என்ன... என்ன சஜு, சுஷ்மிக்கு என்னாச்சு?" எனப் பதறினான்.

அவளோ மூச்சு வாங்கி, மறுப்பாய் தலையாட்டி, கவிதா கொடுத்த தண்ணீரைப் பருகி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு "சுஷ்மி... என்ன அம்மான்னு சொன்னாங்க" என உணர்ச்சி பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் சொன்னாள்.

அவளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மூவரும், "அப்படியா டா குட்டி, நீங்க அம்மா ன்னு சொன்னீங்களா?" எனக் கவிதா சுஷ்மியை வாங்கி முத்தமிட, குழந்தையோ எதற்கென்றே புரியாமல், ஆமென மேலிருந்து கீழாய் ஒரு முறை தலையாட்ட, சுந்தரும் கையில் சித்தோடு, சுஷ்மியிடம் கவனத்தைத் திருப்பினான்.

அக்ஷயோ சஜுவின் கைகளை அழுத்தி, தன் கைகளோடு கோர்த்துக் கொள்ள, அவளோ அவன் தோளில் சாய்ந்து, கண்ணில் நீர் பெருக பெருமிதமாய்ப் பார்த்தாள்.

பின் நந்தன் வர, அங்கேயே கொண்டு வந்த மதிய சாப்பாட்டை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மலைக் கோட்டைக்குச் சென்றனர். மலைக்கோட்டையின் வழியில் உள்ள சிவன் கோவில் சென்று, தரிசனம் பண்ணி விட்டு, மேலே ஏற தொடங்கினர்.

பெண்கள் இருவரும் மூச்சு வாங்க, ஒரு கட்டத்தில் அமர்ந்து அமர்ந்து ஏறி வர தொடங்கினர். பின் மேலே கோவிலை சென்றடையும் படிக்கட்டுகள் சிறிது செங்குத்தாய், ஆனால் கைப்பிடி கம்பி வைத்து பாதுகாப்பாய் தான் இருந்தது. இவ்வளவு நேரமும், மூடிய சுவரில் அகலப் படிகள் இருக்க, இப்போதோ அங்கிருந்து பார்த்தால், மொத்த ஊரே தெரியும் படி, அந்தப் படிகள் வெட்ட வெளியில் இருந்தன.

ஆனால் அதைப் பார்த்த சஜுவிற்கு, பயம் பிடித்துக் கொள்ள, "ஐயோ... இம்ஹும்... நான் வரல, நீங்க வேணா போயிட்டு வாங்க...” என வர மறுத்தாள்.

கவிதா கூட, "சஜு... இங்க படி கம்மி தான், திரும்பி பார்க்காம ஏறிடு... பயம் தெரியாது" எனச் சமாதானம் செய்தும் பலனில்லை. பின் அக்ஷய் தான் விடாப்பிடியாய், அவள் கரம் பற்றி இழுத்துச் சென்றான்.

அவளை ஒரு கையில் பற்றியப்படியும், குழந்தையை ஒரு கையில் ஏந்தியப்படியும் ஏறியவனைக் கண்டு, "ஐயோ... எனக்குப் பயமா இருக்குங்க... காற்று வேற அடிக்குது... குழந்தைய வேற வச்சிருக்கீங்க" என அக்ஷயிடம் தர்க்கம் செய்து, ஏற மறுத்து, பயந்தாள்.

இவர்களைப் பார்த்த நந்தன், இடையில் புகுந்து "அய்யோ ராசா... குழந்தையக் கொடு, நான் தூக்கிட்டு வரேன். நீ தங்கச்சிய மெல்ல, பத்திரமா கூட்டிட்டு வந்தாலும் சரி, தூக்கிட்டு வந்தாலும் சரி" எனச் சஜுவின் லொள்ளை தாங்க முடியாமல், அக்ஷய் அருகே வந்து சுஷ்மியை தூக்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.

சஜுவோ நந்தனின் பேச்சில், கூச்சப்பட்டு நிற்க, அக்ஷயோ "உன்னால மானம் போகுது சஜு, ஏன் இப்படிச் சின்னப் பிள்ள மாதிரி பிடிவாதம் பண்ற?" என்று திட்டியப்படி, அவளை முறைத்து பார்க்க தான் திரும்பினான்.

ஆனால், காற்றில் அவள் சேலையின் முந்தானை அவனை மூட, அதை ஒரு கையால் விலக்கியவன் கண்ணில், பறக்கும் முந்தானையைக் கூடப் பிடிக்கத் தோன்றாமல், விழிகளில் பயத்தை நிரப்பியப்படி, வெறித்துப் பார்த்த அவள் கண்ணின் மணிகளில், அவன் பிம்பம் தெரிய, காற்றின் தாளத்திற்கு ஏற்ப அசைந்தாடும் காதோர முடியும், அதற்கு லயம் சேர்ப்பது போல் அவள் காதுகளின் ஜிமிக்கியும் ஆட, அதை ரசித்தப்படி நின்றவனின் ரசனையை, மேலும் கூட்டுவது போல், அவள் சூடிய பூவும், வீசிய காற்றில் முன்னே வந்து விழ, மயங்கி தான் போனான் அக்ஷய்.

மேலும், இவர்கள் மெய் மறந்து படியில் நின்றிருக்க, கோவிலுக்குச் சென்றவர்கள் அவர்களைக் கடந்து செல்ல, அதில் ஒரு புண்ணியவானோ, அக்ஷயை தெரியாமல் இடித்து விட, அதில் அவளருகே மேலும் அவன் நெருங்கி நிற்க, அவனின் நெருக்கத்தை உணர்ந்த பாவையவள் முகத்திலே அவஸ்த்தையைக் கூட்ட, அக்ஷய் மென் மேலும் சொக்கி தான் போனான்.

முன்னால் சென்ற நந்தன், இவர்கள் வராமல், தேங்கி நிற்பதைக் கண்டு, "அக்ஷய்...” என்றும், சுற்றுப்புறம் உணர்ந்த சஜு, "என்னங்க...” என்று அவன் தோளில் கைவைத்து அழைத்திருக்காவிட்டால், என்ன நடந்திருக்குமோ? யான் அறியேன் பராபரமே!

பின் அவளின் ஒரு கையைக் கம்பியைப் பிடிக்கச் சொல்லியும், மற்றொரு கையை அக்ஷய் பிடித்தப்படி, மெல்ல மேலே கூட்டி சென்றான். அங்கு வீற்றிருந்த பிள்ளையாரை, மனமார தரிசித்து விட்டு, ஆங்காங்கே இருந்த ஜென்னலின் மூலம், குட்டி குட்டி அட்டைப் பெட்டிகளாய் தெரிந்த வீடுகளின் தொகுப்பையும், ஸ்ரீரங்க கோபுரத்தையும் பார்த்து பிரமித்து விட்டு, கீழே இறங்க தொடங்கினர்.

மேலே, ஏறும் போதே அந்தப் பாடு பட்டவள், கீழே, இறங்கும் போது, அதுவும் ஊரின் பாதிப் பரப்பே கடலெனத் தெரியும் அளவு, பரந்து விரிந்து காட்சியளித்த அந்த உச்சி படியில் நின்றவள், அமைதியாகவா இருப்பாள்? "என்னங்க...” என அவள் அக்ஷையின் கைப்பிடித்து, தன் பயத்தைக் கொட்ட ஆரம்பிக்கும் முன்னேயே, "ஒழுங்கா... மரியாதையா கண்ண மூடிட்டு, என் கைய பிடிச்சுட்டே இறங்கிடு... இல்லேன்னா இப்படியே உருட்டி விட்டிருவேன்" என மிரட்டினான்.

பின்னே! சித்துப் போன்ற சிறு குழந்தைகளே கம்பியைப் பிடித்துக் கொண்டு, மலைப்பு இல்லாமல் அழகாய் ஏறி, இறங்க, இவளோ விட்டால் அழுது, அக்ஷையின் மானத்தை வாங்கி விடுவாள் போலும்.

அவனின் மிரட்டலுக்கு, அவளோ அழுகுரலில் "என்ன... ங்க...” எனச் சிணுங்க, "பிறகென்னடி... அங்க பாரு, குட்டி வாண்டுகள் எல்லாம் எப்படித் தைரியமா ஏறி இறங்குறாங்க, உனக்கென்ன... வந்துச்சு... சாமி கும்பிட்டு தான வந்த? சாமி அப்படி ஒன்னும் உன்ன தள்ளி விட்டுற மாட்டார். தள்ளி விட்டாலும், காப்பாற்ற நான் இருக்கேன்... பயப்படமா இறங்கு சஜு" என நீளமாய்ப் பொரிந்தவனை, ஒரு நிமிடம் ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

பின்னே அக்ஷய் தானா இது? அதுவும் இவ்வளவு நீளமாய்த் தன்னிடம் பேசுகிறானே, அதோடு நான் இருக்கிறேன் உனக்கு என்பது போல் இருந்த, அவன் பேச்சில் சஜு அச்சரியப்படுவதில் தவறில்லை.

"என்ன பார்த்துட்டு இருக்க, கண்ண மூடு... இறங்கு...” என அதட்டியவனுக்கு, கட்டுப்பட்டுக் கண்ணை மூடியப்படியே அக்ஷயின் கைப்பிடித்து இறங்க, அவளை அதிசயமாய்ப் பார்த்த வெளிநாட்டினர் கூட, கண் மூடி பயந்தவளின் முகத்தை வியப்பாய் பார்த்து, புகைப்படம் எடுத்து சென்றனர்.

கீழே வந்ததும், சிறிது நேரம் அமர்ந்து, அங்கிருந்த கடையில் பழம், தேநீர் வாங்கி அருந்த, சித்துச் சுஷ்மியிடம் "உங்கம்மா... பயந்தாக்கொல்லி...” எனச் சொல்லி விட, அவளோ அவனிடம் "ப்போ...” என ரோசப்பட்டாலும், சஜுவிடம் வந்து "பய்யா... கள்ளி...” எனச் சொல்லி சொல்லி வம்பிழுத்து, சிரித்தாள்.

இப்படியே அந்தத் திருச்சி சுற்றுலா இனிதே நிறைவடையும் போது, சஜு அக்ஷையின் தோளிலும், அவள் மடியில் சுஷ்மியும், கவிதா மடியில் சித்துவும் என வரிசையாய் துயில் கொண்டு வந்தனர்.

பின் மறு நாளே, சுந்தர் குடும்பமும், முரளி, சுந்தரியும் சென்னைக்குத் திரும்பினர். அக்ஷயும், சஜுவும் மூன்று நாட்கள் இருந்து விட்டு ஊர் திரும்பினர்.

அன்று கிளம்பும் போது, சுஷ்மி அபியை தூக்கிக் கொண்டு தான் வர வேண்டும் என ஒரே அடம் பிடித்தாள்.”ம்ம்... ஹும்... அப்பி... பாப்பா... பேணும் பேணும்... ம்...” எனச் சுஷ்மியின் அடம், அழுகையாய் மாறி, "ப்பா... பாப்பா... தூக்கு... பூலாம்...” எனப் புலம்ப ஆரம்பித்தாள்.

சஜு "அபியோட அம்மா... அத்த பாவம்ல... எப்படி அபிய விட்டு இருப்பாங்க சுஸு?" எனச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளுக்கு அபியைப் பார்த்தால், கைக் காலை, அசைத்து சிரிக்கும் பொம்மை போல் இருக்கவும், அதனால் தனக்கு அபி வேண்டும் எனப் புரியாமல் கேட்டாள்.

"சரி, அப்போ நீ இங்க அபியோட இரு, நானும் சுஸ்பாவும் ஊருக்கு போறோம்" என்று சஜு சொன்ன பின் தான், அதிர்ந்தவள் போல் சுஷ்மியின் அழுகை நின்றது. அது தானே, அவளால் எப்படிச் சுஸ்பாவை விட்டு இருக்க முடியும்? அதனால் அமைதியானாள் சுஷ்மி.

எனினும், கண்ணீரோடு குழந்தையைக் கண்டதும் வைரம், "அழுகாதடா சின்னக் குட்டி, சீக்கிரமே உங்க அம்மா ஒரு பாப்பா பெற்று தருவா... நீ அந்தப் பாப்பாவ வச்சுக்கோ. இம்...” என அவள் கண்களைத் துடைத்து, கன்னம் வழித்து முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். இதைக் கேட்ட சஜுவின் கன்னங்கள் தானாய் சிவக்க, அதைக் கண்ட வைரம், அவளுக்கும் கன்னம் வழித்துத் திருஷ்டி கழித்தார்.

ரயிலில் வரும் வழியெங்கும், வாய் ஓயாமல், சுஷ்மியின் கேள்விக்கு எல்லாம் பொறுமையாய் பதில் அளித்தப்படி, குழந்தையோடு மென்மையாய் சிரித்தப்படி வந்தவளை, அவ்வப்போது ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டே வந்தான் அக்ஷய்.

ஒரு நாள் மாலை, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவனிடம், "சுஸ்பா... ஆ...” எனக் கத்தியப்படி ஓடினாள் சுஷ்மி. குழந்தையின் சத்தத்தில், சமையலறையில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தவள், எட்டிப் பார்த்து விட்டு, பாத்திரத்தை மூடி வைத்து விட்டு, கையைத் துடைத்தப்படி வரவேற்பறைக்கு வந்தாள்.

மெத்திருக்கையில் அமர்ந்திருந்த சுஷ்மியை மடியில் வைத்திருந்த அக்ஷய், "சஜு... எனக்கு டீ கொண்டு வாயேன்... ப்ளீஸ்...” எனச் சொன்னவனின் சோர்வை உணர்ந்து, உடனே அவனுக்கு டீ கொண்டு வந்து தந்தவள், தங்கள் அறைக்குள் சென்றாள்.

தேநீர் குடித்துக் கொண்டிருந்தவனிடம், சுஷ்மி தன் ஸ்லேட்டை எடுத்து வந்து, மெத்திருக்கையில் ஏறி, அவன் அருகே அமர்ந்து "ப்பா... சுஸ்பாப்பா... ஏ... பூட்டா...” எனக் காட்ட, மறுநிமிடம், "என்னங்க... இங்க பாருங்க, இந்த ஃப்ராக் நல்லா இருக்கா? இந்தப் பூ வேலைப்பாடுலாம்... நானே யோசிச்சுத் தைச்சேன்... அழகா வந்திருக்கா?" என ஒரு புதுத் துணியில், தான் தைய்த்த ஃப்ராகைக் காட்டினாள்.

அவளுக்குப் போட்டியாய், சுஷ்மியும் தன் ஸ்லேட்டை காட்டி, "சுஸ்பா... அல்கா... இயுக்கா?" எனக் கேட்டாள், ஆனால் அக்ஷய் பதில் சொல்லும் முன், "ஆமா, அழுக்கா தான் இருக்கு, உன்ன மதிரியே...” எனச் சொல்லி சஜு சிரித்தாள்.

"ஆஆ... னி... ப்போ...” எனச் சுஷ்மி அவளை விரட்ட, சஜுவோ "நான் ஏன் போகணும், என் புருஷன் நான் இருப்பேன், நீ போ...” என அக்ஷயை பேச விடாமல், இருவரும் மாற்றி மாற்றிச் சண்டையிட்டனர்.

ஒரு கட்டத்தில், சுஷ்மியோ "ஏ... சுஸ்பா(என் சுஸ்பா)... னி... ப்போ...” என அக்ஷய் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

இதற்கு மேல் என்ன சொல்வது எனத் தெரியாமலோ, அல்லது என்ன செய்வது எனப் புரியாமலோ, அவள் "சரி சரி... உங்கப்பாவ நீயே வச்சுக்கோ...” என அவள் எழுந்தாள்.

ஆனால், மறுநொடி, அக்ஷையின் அருகே அவன் மீது இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். என்ன நடந்தது என்று யோசித்து பார்த்தால், அவள் எழப் போகும் சமயம், அக்ஷய் அவள் கையைப் பிடித்து இழுத்திருந்தான். அதோடு அல்லாமல், "ஏன்... நீ வச்சுக்க மாட்டியா?" என அவள் பக்கம் திரும்பி, கண்களைக் கூர்மையாக்கி, புருவத்தை ஏற்றி கேட்டான்.

அவளோ நெளிந்தப்படி, "என்னங்க... இது? குழந்தைய வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசுறீங்க...” என அவஸ்த்தையோடு சொல்ல,

அக்ஷ்யோ தன் நெஞ்சத்தில் சாய்ந்திருந்த சுஷ்மியிடம் குனிந்து, "சுஷு கண்ணா...” என அழைக்க, அவளோ "இம்...” எனப் பதில் கொடுக்க, "உங்க சுஸ்பாவ, அம்மா வச்சுக்க மாட்டாளாம், சஜுக்கு வேணாமா... நீ சொல்லுடா, அப்பா பாவம் தான... ?" என அவன் குழந்தையிடமே நியாயம் கேட்க, அவன் பாதி வினவும் போதே, "என்னங்க...” எனப் பல்லைக் கடித்தாள்.

சுஷ்மியோ "ம்ம்... சுஸ்பா... பாபம்... சசு... னி னி... பச்சு... கோ...” என அவளும் புரியாமல், தன் தந்தையை வைத்துக் கொள்ளுமாறு கூறி, அவளிடம் தாவினாள்.

அவளோ இது தான் சமயம் என்று, தன் கையைக் கணவனிடம் இருந்து உருவி, "இம்... உங்கப்பாக்கு வேலையே இல்ல... நீ வாடா, நாம டீ குடிக்கலாம்" எனத் தன் முன் பக்கமாய்க் கழுத்தைக் கட்டிய குழந்தையை, அப்படியே கையில் தூக்கியப்படி சென்றாள்.

இவர்கள் ஊரை விட்டு வந்து, ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று. இந்த ஒரு வாரத்தில், அக்ஷய் முன்பிருந்த வீட்டை காலி செய்து, இரண்டு தெரு தள்ளி, ஒரு அப்பார்ட்மென்ட் வீட்டிற்குக் குடிப் பெயர்ந்தனர். ஏனெனில் பழைய வீட்டில், யாரேனும் ஏதாவது புறம் பேசுவார்கள், அதோடு சஜுவும் தன் தாய் அருகே இருப்பதாலும், இப்போது பேசத் தொடங்கியதாலும், கறிகாய் தொடங்கி, டிபன் வரை கடன் கேட்கும் பழக்கத்தை வைத்து கொண்டிருந்தாள்.

அதனாலும், அவள் இப்படிப் பொறுப்பில்லாமல், சோம்பேறியாய் போகிறாள் என்பதோடு அல்லாமல், சுந்தரியை ரொம்பவும் தொல்லை செய்கிறாள் என்ற காரணத்தாலும் தான், அவன் புது வீடு மாற முக்கியக் காரணமே. இந்தப் புது வீட்டிற்கு, இவர்கள் வந்து ஒரு வாரம் ஆயிற்று, சாமான்களை ஒதுக்கி வைக்கவே ஒரு மூன்று, நான்கு நாட்கள் ஆயிற்று. அக்ஷய் அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்காமலே, ஞாயிறன்று பால் காய்ச்சி, அலுவலகம் சென்று வந்தப்படியே, மெல்ல மெல்ல சாமான்களை அடுக்கி வைத்தனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top