• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாயும் ஞாயும் யாராகியரோ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பகுதி - 30 ஆம் தொடர்ச்சி

சுஷ்மி மதியம் உறங்கி விடுவதால், சஜு பொழுது போகாமல், சும்மாவே இருப்பதாய் உணர்ந்தவள், அக்கம் பக்கம் விசாரித்து, பக்கத்துத் தெருவில் தையல் கற்பிக்கும் வகுப்புகளில் சேர்ந்து, கடந்த மூன்று நாட்களாய் சென்று வந்து கொண்டிருந்தாள்.

அக்ஷய் அலுவலகம் செல்வதால், காலையிலேயே சாப்பாடு செய்து முடித்து விட்டு, சுஷ்மியுடன் விளையாடவோ அல்லது அவளை எழுத பழக்கிக் கொண்டோ இருப்பாள். மதியம் தங்கள் சாப்பாடை டிபன் கேரியரில் அடைத்து, சுஷ்மியின் விளையாட்டு பொம்மைகளையும் ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு, அவளையும் கூட்டிக் கொண்டு, தன் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவாள்.

அங்குச் சென்று, சுஷ்மிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு, அவளை உறங்க வைத்து விட்டு, தையல் வகுப்பிற்குச் செல்வாள். சுந்தரி கூட, "ஏன் சஜு... இவ்ளோ அலைச்சல்? ஒழுங்கா நீ என்கிட்டேயே தையல் கற்றுக்கிடலாம்ல. இதுக்காக மெனக்கெட்டுக் கிளாஸ் போறாளாம்... உனக்குத் திமிர் தான். வீட்டிலேயே வாத்தியார வச்சுக்கிட்டு, வெளியே கற்றுக்கிறாளாம்...” என்று கண்டித்தார்.

ஆனால் அவளோ "அம்மா... உன்ட்ட கற்றுக்கனும்னா... ஒரு வருஷமானாலும் கற்றுக்க மாட்டேன். கிளாஸ் போன தான் ஒழுங்கா கற்றுப்பேன்... சும்மா ஒரு மாசம் தான், ப்ளௌஸ், சுடிதார் பழகிட்டேன்னா நின்னுட்டு, நானே விதம் விதமா தைச்சு பழகிடுவேன்.” என ஏற்கனவே தன் தாயிடம் தையல் பழகிய அனுபவத்தில் சொன்னாள்.

சுந்தரியும் "என்னவோ செய்" என்பது போல் விட்டுவிட்டார். அதனால் தான், தினம் தையல் வகுப்பில், சிறு குழந்தைகளுக்குத் தைய்த்த ஃப்ராக், பாவடை என விதவிதமாய், தான் தைய்த்ததை அவனிடம் காண்பிப்பாள். இவளைப் பார்த்த சுஷ்மியும், தான் கிறுக்கியதை... இல்லை இல்லை... தான் எழுதியதை காண்பிப்பாள்.

இதனால் இருவரும் சண்டையிட, என வீடே கலகலக்கும், அக்ஷய் இதில் தலையிடவே மாட்டான். ஏனெனில் இவர்கள் சண்டையிட்டு, ஐந்து நிமிடம் கழித்துப் பார்த்தால், "என் செல்லக்கட்டி... என் பூசணி குட்டி... என் சக்கரக் கட்டி" எனச் சுஷ்மியை சஜுவோ, அல்லது "ஏ... ஜெல்லம்... வையும்... ஏ... பூசி... க்கா...” எனச் சஜுவை சுஷ்மியோ கொஞ்சிக் கொண்டு இருப்பார்கள்.

இரவில் சுஷ்மி, ஊரில் இருந்து வந்தும், மறக்காமல், தொட்டிலில் தான் இன்னும் தூங்குகிறாள். அவளைச் சிறிது நேரம் தூளி விளையாட விட்டு விட்டு, பின் தூங்க வைப்பாள் சஜு. அக்ஷயோ தொட்டில் விழுந்தால், குழந்தைக்கு அடிப்படாமல் இருக்க, தொட்டிலுக்கு அடியில், இரண்டு மூன்று போர்வையைக் குட்டி மெத்தையாக்கி போட்டிருந்தான்.

அக்ஷய்க்கு அலுவலக வேலை, வீட்டிற்கு வந்த பின்னும், கழுத்தை நெறிக்க, தன் மடிக் கணினியோடு அமர்ந்து விடுவான். சஜுவும் அவனுக்காகக் காத்திருப்போம் என எண்ணியப்படியே படுத்திருந்தாலும், அவளை அறியாமல் உறக்கம் கண்களைச் சுழற்ற, உறங்கி விடுவாள்.

ஓரிரு நாட்கள் இப்படியே செல்ல, அன்று மாலை "என்ன சஜு... எல்லாம் எடுத்து வச்சுட்டியா? பாப்பாக்கு ஸ்வெட்டர், மஃப்ளர் எல்லாம் எடுத்துட்டியா?" எனச் சஜுவிடம் விவரம் கேட்க, "இம் எடுத்து வச்சுட்டேங்க, அப்புறம் உங்க சோப்பு, சீப்பு, ஷேவிங் செட் எல்லாமே எடுத்து வச்சுட்டேன். சரியா?" என அவளும் சமத்தாய் பதில் சொல்ல, "இம்... குட்" என அவள் கன்னம் தட்டி விட்டு, தான் தயாராக அறைக்குச் சென்றான் அக்ஷய்.

அது வேறு ஒன்றுமில்லை, அலுவலகத்தில் அவன் நண்பர்கள் எல்லோரும், அக்ஷய்க்குத் திருமணப் பரிசாகத் தந்த தேன் நிலவு பயணத்திற்கு, அக்ஷய், சஜு மற்றும் சுஷ்மி எனக் குடும்பச் சகிதமாய், கொடைக்கானல் செல்கிறார்கள்.

அவர்களை ரயில் நிலையம் வரை வழியனுப்ப வந்த முரளியிடமும், சுந்தரியிடமும் வழியெங்கும் சுஷ்மி, "டாட்டா னா... குச்சு குச்சு... சசுமா... னா குச்சு குச்சு... குல்லு குல்லு... டாடாபே...” என அளந்து கொண்டே வந்தாள்.

எல்லாம் சஜுவின் பாடம் தான், அன்று காலை, நாம் கொடைக்கானல் போகிறோம் என்று அக்ஷய் சொன்னதும், சுஷ்மியை தூக்கி கொஞ்சியப்படி, மனதில் பல கற்பனைகள் ஓட, அவளிடம் "நாம கொடைக்கானல் போறோம் சுஸு, அங்க குளு குளுன்னு ஜில்லுன்னு இருக்கும்" எனத் தோளை உயர்த்திச் சிலிர்த்து, ஏதோ கொடைக்கானலில்லே இருப்பது போல் உணர்ந்து சொன்னாள். இப்படியே மாலை வரை அடிக்கடி சொன்னதால், சுஷ்மியும், அவள் சொன்னதைப் பிடித்துக் கொண்டாள்.

ஒரு வழியாய், அதிகாலை கொடைக்கானல் வந்து சேர்ந்தவர்கள், அவர்களுக்கென்று முன்னேற்பாடாய் ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்குச் சென்று, வரவேற்பில் இருந்தவரிடம் விவரம் சொல்ல, "மிஸ்டர் அக்ஷய் பிரபு ப்ஃரம் சென்னை" என்று அவர் கேட்க, உறங்கிய குழந்தையைக் கையில் ஏந்தியப்படி "எஸ்" எனப் பதில் தந்தான்.

அவரோ அந்தப் பதிவேட்டைப் பார்த்து விட்டு, முகத்தில் வியப்போடு "ஹனி மூன்... காட்டேஜ்?" என வினவவும், அவரின் ஆச்சரியத்தைப் புரிந்தவன் போன்று, "என்ன பாஸ் பண்றது? இப்ப தான் ப்ரீயா டைமே கிடைச்சுச்சு" என லேசாய் புன்னகையோடு சொல்ல, அவன் பின்னால் இருந்த சஜு, தன் முழங்கையால் அவனை இடித்தாள்.

அவரோ சிரித்து விட்டு, "வெல்கம் அண்ட் என்ஜாய் சார்" என அவர்களின் முறைப்படி வரவேற்று விட்டு, அவன் அறைக்கு வழிக்காட்ட, ஒரு ரூம் பாயை அனுப்பி வைத்தார். அறைக்கு வந்தவர்கள், அரை மணிநேரம் ஓய்வெடுத்த பின், குளித்து, முடித்து, காலை உணவு உண்டு முடிக்கவும், அக்ஷையின் அலைபேசிக்கு அவர்களைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் ஓட்டுனர் அழைக்கவும் சரியாய் இருந்தது.

பின் ஐந்து நிமிடம், அவரைக் காத்திருக்கும் படி கூறி விட்டு, அறைக்குச் சென்று, சுஷ்மிக்கு சுடு தண்ணீர், சிப்பர், ஸ்வெட்டர், மஃப்ளர், ஒரு மாற்றுடை எனத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு பயணமாகினர். முதலில் கொடைக்கானல் ஏரி சென்று, படகு சவாரி போய் விட்டு, பின் அங்கு இருக்கும் பிரயன்ட் பூங்காவிற்குச் சென்றனர்.

அங்கு அழகழகாய் பல வர்ணங்களில், நிறையப் பூக்களைப் பார்க்கவும் சுஷ்மிக்கு கொள்ளை மகிழ்ச்சி வந்து விட்டது.”ஹையீஈஈ... சசு... நெய்ய... பூ...” எனத் தன் மழலையில் மிழற்றிக் கொண்டு, அவர்கள் முன்னே, வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நடந்து சென்றாள்.

அடர் நீல வர்ண கவுனும், அதற்கு ஏற்றார் போல், அதே வர்ணத்தில் பூ வேலைப்பாடு செய்த தொப்பியும், ஷூ, ஷாக்ஸும் அணிந்திருந்த சுஷ்மியே, சஜுவிற்கு, ஒரு நீல வர்ணப் பூ போல்... கால் முளைத்த பூவாய் தெரிய, துள்ளி துள்ளி நடந்து சென்று கொண்டிருந்தவளையே ரசித்துப் பார்த்தாள். அக்ஷய், அந்த இதமான குளிரில், தன் மனையாளின் கையைப் பிடித்தப்படி செல்வதற்காக, அவள் கையைப் பற்றி அவள் சிந்தனையைக் கலைத்தான்.

ஒரு நிமிடம், அவனை வியப்பாய் பார்த்தவளை, அவன் கண்டுக்கொள்ளாதவன் போல் திரும்பி, "ஏய்... சுஷு... நில்லு, இங்க வா... அப்பா கைப்பிடி" எனக் குழந்தையிடம், அவளையும் இழுத்தப்படி விரைந்தான்.

பின் அவன் கையைப் பிடித்தப்படி, சுஷ்மி துள்ளிக் கொண்டும், ஆடிக் கொண்டும் நடந்து கொண்டிருந்தாள். சுஷ்மி தன் மழலைப் பேச்சாலும், செய்கையாலும், அங்கிருந்தவர்களின் புன்னகையையும், கவனத்தையும் அவள் பக்கம் ஈர்த்தாள்.

பூக்களின் அழகில் வியந்து, அதன் அருகே சென்றவளை, "ஏய்... சுஷ்மி அங்கெல்லாம் போ கூடாது டா... திட்டப் போறாங்க" எனச் சஜு, குழந்தையைத் தடுத்து தூக்கிக் கொண்டாள்.

அவள் கையில் இருந்தவள், வாய் ஓயாமல் "அத இன்னா... கலர்... , இட... ப்பேர்... இன்னா...” எனத் தன் கேள்வியால் சஜுவை துளைத்து எடுத்துக் கொண்டே வந்தாள் சுஷ்மி. பின் அங்கிருந்து, மதிய உணவை முடித்து விட்டு, ஓட்டுனர் நன்றாக இருக்கும் என்று சொன்ன கோகேர்ஸ்(coaker's) வாக் சென்றனர்.

அங்குச் சென்றதும் சஜு "வாவ்...” என வாய் பிளந்தாள். ஆம், மேகமெல்லாம் சிறு குழந்தையாய், அவர்கள் மீதே தவழ்ந்து சென்றது. கோகேர்ஸ் வாக்கில், ஒரு நீள பாதையும், அங்கிருந்த படி பார்த்தால், மேகமூட்டத்தையும், பச்சைப் போர்வைப் போர்த்திய மலைகளையும், மரங்களையும் ரசிக்கும் படி அமைந்திருந்தது.

அப்படியே, அமர்ந்து ரசிக்கவும், ஆங்காங்கே கல் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதுவும் அந்தப் பள்ளத்தாக்குகளைப் பார்ப்பது போன்று, கம்பி தடுப்பிற்குப் பின்னே இருந்தன. இயற்கை பிரியர்களுக்கு, இந்த இடமே சொர்க்கலோகம் போல் காட்சியளிக்கும், அவ்வளவு இயற்கை அழகு அங்குக் கொட்டிக் கிடந்தது.

அக்ஷயும், சஜுவும் குழந்தையை அவர்களின் நடுவே கைப்பிடித்தப்படி நடக்க விட்டு, இயற்கையை அமைதியாய் ரசித்தப்படி நடந்தனர். பின் ஒரு கல் இருக்கையிலும், குழந்தையை நடுவே அமர்த்தி, இருவரும் அமர்ந்தனர். ஏனோ அப்பொழுது சுஷ்மியும், ஸ்வெட்டர், மஃப்ளர் சகிதமாய் அமைதியாய், சஜு மீது சாய்ந்து இருக்க, சஜுவின் தோளில் ஒரு கை விழுந்தது.

அவள் திடுக்கிடவில்லை, காரணம், அக்ஷய் தான் அவள் தோளை வளைத்து அணைத்திருந்தான். சஜுவும், வாகாய் அவன் தோளில் தலைச் சாய்த்தாள். “சஜு...” என அவள் பக்கம் திரும்பாமலே, இயற்கையை ரசித்தப்படியே, அக்ஷய் மென்மையாய் அழைத்தான். அவளும் அவனைப் போன்றே, அவன் பக்கம் திரும்பாமலே, "இம்...” என அழகாய் சொன்னாள்.

அக்ஷய், இம்முறை தன் தோளில் சாய்ந்திருந்தவளின் காதில் குனிந்து, "ஐ லவ் யூ" எனச் சொன்னான். அவளும் பூரிப்பாய் நிமிர்ந்து, கண்ணை மூடி, "ம்ம்... நானும்" என்று காதலாய் சொன்னாள்.

உடனே, அவர்களிடையில் இருந்த சுஷ்மி, அண்ணாந்து பார்த்து, "னான்னு...” எனக் கூறி, இருவரின் மடியில் கைவைத்து எழுந்தவள், அக்ஷயிடம் இருந்து நகர்ந்த சஜுவின் கழுத்தைக் கட்டியப்படி, "ம்மா... ன்னான்னு... னான்னு... ஐ... யூஉ...” எனச் சிணுங்கினாள்.

அவளின் சிணுங்களில் பொங்கி வந்த சிரிப்போடு, "சரி டா... குட்டி, நீயும் தான்" எனக் கண்ணை மூடி சொல்லி, அவளை அணைத்து முத்தமிட்டாள் சஜு. இந்த இடைவெளியில், சுஷ்மியின் காலி இடத்தை நிரப்பியப்படி, அக்ஷய் சஜுவிடம் நெருங்கி அமர்ந்து, அவளிடமிருந்த தன் மகளைச் சேர்த்தணைத்து, அவனும் சிரிப்போடு முத்தமிட்டான்.

மதியம் மூன்றுக்கே, இருட்ட ஆரம்பித்து, பனியும் கொட்டவும், குழந்தைக்குச் சேராது என்பதால், மீதி இடங்களை நாளை பார்க்கலாம், என அறைக்குத் திரும்பி விட்டனர். அறைக்கு வந்தவர்கள், சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். பின் மாலையானதும், சுஷ்மி பொம்மைப் படம் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சியில் மூழ்கி விட, சஜுவும் அவளுடன் சேர்ந்து, பொம்மைப் படத்தில் ஐக்கியமாகி விட்டாள்.

பொழுது போகாமல், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அக்ஷய் கூட, "ஏய்... சஜு...” என அழைத்துப் பார்த்தான்.

"ம்ச்சு... என்னங்க...” எனச் சலித்தாள்.

"இங்க... என்ன பாரு டி...” என மேலும் அவன் நச்சரிக்க, இம்முறை சஜு வாய் திறக்கும் முன், "ச்சு... சுஸ்பா... ஷ்ஷு...” எனச் சுஷ்மி அவன் பக்கம் திரும்பி, அவனை அமைதியாய் இருக்கும் படி, வாயில் விரல் வைத்து காட்டி விட்டு, மீண்டும் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பி விட்டாள்.

அதற்கு மேல், எதுவும் சொல்ல முடியாமல், வாயை மூடிக் கொண்டு, கண்ணாடி ஜென்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்க தொடங்கினான் அக்ஷய்.

பின் இரவு உணவு உண்ணும் பொழுது தான், தாயும், மகளும் தொலைக்காட்சியை விட்டு வெளியே வந்தனர். பின் சுஷ்மி, தூளி ஆட வேண்டும் என அடம் பண்ண, இவளின் பிடிவாதத்தை அறிந்தே, சஜு கயிறும், தொட்டில் கட்டும் சேலையும் முன்னெச்சரிக்கையாய் எடுத்து வந்திருந்தாள். அதைக் கொண்டு அக்ஷய் தொட்டில் கட்ட, சுஷ்மியும் மகிழ்ச்சியாய் ஆடியப்படியே, உறங்கி விட்டாள்.

அக்ஷய் இரவு குளியல் போட, கப்போர்டில் வைத்திருந்த தன் உடையை எடுத்து, இரண்டு எட்டு வைத்தவன், துடைக்கும் துண்டை எடுக்க மறந்தது நினைவு வர, திரும்பியவன், சஜு மீது மோதி நின்றான்.

அக்ஷய் சென்றதும், உறங்கிய குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த சஜு, உடை மாற்ற எண்ணி, அவளும் கட்டிலில் இருந்தப்படியே, கப்போர்ட் இருந்த பக்கம் இறங்கி நின்றாள்.

அதனால், அவளை எதிர்ப்பார்க்காத அக்ஷய், திரும்பியவன் அவள் மீது இடித்து விட, பிடிப்புக்காகச் சஜு அவன் தோள் தொட, அக்ஷயும் அவள் இடைத் தொட, அப்படியே இருவரும் நிலைத்து நின்று விட்டனர்.

அந்த நிலையில், தீபாவளியன்று விளக்கின் ஒளியில் ஜொலித்த சஜுவின் முகம் அக்ஷயின் ஞாபகத்திற்கு வர, மேலும் அவள் முகம் நோக்கி, மெல்ல மெல்ல அவன் குனிய, அவளும் எதிர்ப்புத் தெரிவிக்காமல், ஆச்சரியத்தோடு விழி மலர்த்தி அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவன் இதழுக்கும், இவள் இதழுக்கும் ஒரு மயிரிழை இடைவெளி இருக்க, அப்போது சரியாய் அழைப்பு மணி இசைத்து, அவர்களைக் கலைத்தது. சட்டென்று அக்ஷய் விலகி, குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

பின் மீண்டும் ஒலித்த அழைப்பு மணியால், சஜு நடப்பிற்கு வந்து, கதவை அடைந்து திறந்தாள். குழந்தைக்காக அவர்கள், ரூம் சர்வீசில், பிளாஸ்க்கில் பால் கேட்டிருக்க, அதைப் பணியாளர் கொணர்ந்து தந்து விட்டு சென்றார்.

சஜுவோ, தன் கணவனின் கைகளில் மெய் மறந்து நின்றதால் விளைந்த வெட்கத்தால், ஜென்னல் அருகே நின்று, இருட்டை ரசித்தப்படி, தன் சுடிதார் துப்பட்டாவின் முனையைத் திருக்கி கொண்டு நின்றிருந்தாள்.

சிறிது நேரத்தில், அறை இருட்டாகி விட, இருட்டை ரசித்தவளின் சிந்தனைக் கலைந்து, "என்ன இது இருட்டாகிடுச்சு, கரண்ட் போயிடுச்சா... என்ன ?" என எண்ணும் போதே, மின் விசிறி லேசான சுற்றில், சுற்றிக் கொண்டிருக்க, அதை உணர்ந்தவள், "அப்போ...” என மனதுள் இழுக்கும் போதே, அவளின் பின் குத்தாத துப்பட்டாவை இழுத்திருந்தான், அவள் அருகே வந்திருந்த அக்ஷய்.

அந்த இழுப்பில், தடுமாறி அவன் முன் திரும்பியவள், அவன் மேலும் பிடித்து இழுத்ததில், அவன் நெஞ்சத்தின் மீது மோதி நின்றாள். தன் நெஞ்சின் மீது தலை கவிழ்ந்து, சரண் புகுந்தவளை, அணைத்தப்படி "சஜு" எனக் குனிந்து அழைத்தான்.

அவளோ அதே நிலையில், "இம்...” என்றாள். “என்ன... வெட்கமா?" என வினவியப்படி, அவள் முகத்தை நிமிர்த்த, அவள் மீண்டும் அவன் நெஞ்சுக்குள் புகுந்து கொள்ள, "ஹே... என்ன... என்னமோ இன்னிக்கு தான் முத முத நமக்கு ஃபஸ்ட் நைட் நடக்கப் போற மாதிரி இவ்ளோ வெட்கப்படுற? இம்ம்...” என அவனே கேள்வியும் கேட்டு, "அதான் அன்னிக்கே நீ என் மனைவியாகிட்டியே...” எனப் பதிலும் சொல்லி, அவன் கை வளைவுக்குள் இருந்தவளின் நெற்றியில், அழுத்தமாய்த் தன் இதழ் பதித்தான் அக்ஷய்.

ஆம், அன்று சுஷ்மிக்கு காது குத்திய விழாவின் போது, தொடர்ச்சியான வேலையால், களைத்து போய் வீடு வந்த சஜு, "னா... டூரி... டா... ஜோ ஜோ...” என்று சுஷ்மியின் அடம் பிடித்தலைச் சமாதானப்படுத்த இயலாமல், அக்ஷயிடம் தொட்டில் கட்டச் சொல்லி, அவளை உறங்க வைத்து, இவளும் தயக்கம் இன்றி அக்ஷய்க்கு அடுத்து படுத்து உறங்கியும் விட்டாள்.

நடு ஜாமத்தில், திடீரென விழிப்பு தட்ட, முழித்துப் பார்த்தாள் சஜு. அவள் எதிரே அமைதியாய்ப் படுத்திருந்த அக்ஷய் தெரிய, அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.

இன்று முழுவதும், சஜுவிற்கு உதவியப்படி, அவள் சொல்வதைக் கேட்டு, சிறு குழந்தையாய், நல்ல பிள்ளையாய் அக்ஷய் இருந்தான். அவள் "என்னங்க... பாப்பாவ பிடிங்க, டிரஸ் போடணும்" என்றால், அவளுக்கு வாகாய், குழந்தையைத் தூக்கி பிடித்தான்.

"என்னங்க... பாப்பாக்குக் குடிக்கச் சுடு தண்ணி"... கொண்டு வந்தான்.

"பாப்பாவ கீழப் போட்டு, பாப்பாவோடு சேர்ந்து, நீங்களும் விழுந்து, சாஷ்டாங்கமா சாமிக்கு நமஸ்காரம் பண்ணுவீங்களாம்"... நமஸ்காரம் செய்தான்.

பின் அவள் வைத்த, பொங்கலுக்கு வெல்லம் தட்டிக் கொடுப்பதில் இருந்து, அவள் அதைப் பரிமாறும் வரை, இவனும் கூடவே வந்து உதவியது, என எல்லாம் அவன் செய்தது, அவர்கள் உறவின் முன்னேற்றமாய்த் தெரிந்தது. ஏனெனில் சுஷ்மி நம் குழந்தை தான், அதனால் தான் நாம் இவ்வாறெல்லாம் செய்கிறோம் என அவனுக்கு, அவள் சொல்லாலும், செயலாலும் உணர்த்தியப்படியே இருந்ததால் விளைந்த நட்புணர்வு, அவனை அவள் சொல்படி கேட்க வைத்தது.

அதனால் அந்தச் சமர்த்து குழந்தையின் தலைக்கோதி, கன்னத்தை ஆதுரமாய்த் தடவியப்படி, நெருங்கிப் படுத்து, அவன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டாள் சஜு. அடுத்த நொடி, அவளை இடையோடு இறுக்கி அணைத்தான் அக்ஷய்.

ஆம், இவள் எழுவதற்கு முன், அக்ஷய் விழித்திருந்து, இவளைப் போன்றே அவனும், சஜுவைப் பற்றி எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை விடச் சிறு பெண், எவ்வளவு எளிதாய், செம்மையுற தன் குடும்பத்தில் கலந்து விட்டாள்.

ஆனால், தான் தான், அவளோடு பொருந்தாமல், இருக்கிறோமோ? என அவளைப் பெருமையாய் எண்ணியப்படி, கண்ணை மூடி உறங்க முயன்று கொண்டிருந்தான். அப்போது தான், சஜு அவன் தலைக் கோதவும், காதலில் கசிந்துருகியவன், அவளை நெருங்கினான்.

அவனின் திடீர் அணைப்பில், அதிர்ந்து "என்னங்க...” என மெல்லிய குரலில் அழைத்தவளை, "ப்ளீஸ்... சஜு" என அவள் கழுத்து வளைவில், முகம் புதைத்து, கன்னத்தில் இதழ் பதித்து முன்னேறினான்.

சஜுவும், கணவனின் இந்தத் திடீர் காதலிலோ? மோகத்திலோ? எதிர்க்காமல், கலந்து கொள்ளத் தான் செய்தாள். எதிர்பாரா சங்கமத்தில், திளைத்து, களைத்து முடித்த தருணத்தில், "சஜு... நான்...” என அக்ஷய் ஆரம்பிக்கும் போதே, அவர்களின் புதல்வி சிறுநீர் மழை பொழிந்து விட்டு, "ப்பா... ஆஆ... ஏ மிடி...” எனக் கண்ணை மூடியப்படியே அழ ஆரம்பித்தாள்.

ஆடைகளைத் திருத்திக் கொண்டு, எழ போன சஜுவிடம், "நீ படு சஜு, நான் பார்த்துக்குறேன்" என அக்ஷய் எழுந்து, குழந்தையிடம் சென்றான். பின் குழந்தையை, சமாதானம் செய்து, உறங்க வைத்து விட்டு, சஜுவிடம் வர, அவளோ களைப்பு மிகுதியால் நன்றாக உறங்கியிருந்தாள். அக்ஷய் ஒரு புன்னகையோடு, அவள் தலைக் கோதி, முன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, மென்மையாய் அவளை அணைத்தப்படி, அவனும் உறங்கி விட்டான்.

பின் வந்த நாட்களில், வீடு வந்த பின்னும், அலுவலகப் பணிகள் அவனை இரவு வரை, தனக்குள் இழுத்துக் கொள்ள, இப்போது தான் அவர்களுக்குத் தனித்து இருக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அதனால் அன்று கேட்க நினைத்ததை, இன்று கேட்டான் அக்ஷய்.

"என்ன சஜு... அன்னிக்கு நடந்தத மனசுக்குள்ள ஓட்டிப் பார்த்திட்டு இருக்கியா?" எனக் கண்ணடிக்க, "சீ... நீங்க ரொம்ப அமைதின்னு நினைச்சேன்... ஆனா... இப்படி வெட்கமே இல்லாம பேசுறீங்க...” என முகத்தைச் சுருக்கி சொன்னவளை, விடிவிளக்கின் ஒளியில் பார்த்து, "ஹா... ஹா...” என அவள் நெற்றியோடு, தன் நெற்றியை வைத்து ஆட்டிச் சிரித்தான்.

"சே... நான் தப்பு கணக்குப் போட்டுட்டேன்" எனப் பொய்யாய் நொந்தவளை, "சஜு... நீ என்ன... அன்னிக்கு நடந்தது... உன்ட்ட பெர்மிஷன் வாங்காம... என்ன... தப்பா... நினைக்கலையே...” எனத் திடீரெனத் திக்கி, திக்கி குற்ற உணர்வோடு சொன்னவனின் வாயை, வேகமாய்த் தன் விரல்களால் அடைத்தாள்.

"ஐயோ... அப்படியெல்லாம் இல்லங்க... உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நாம கணவன் மனைவியா ஆனப்புறம் தான்... அன்னிக்கு மறு நாள் தான்... சுஷ்மி என்ன அம்மான்னே சொன்னாங்க" எனப் பூரிப்போடும், நாணத்தோடும் தலைக் குனிந்து, அவன் நெஞ்சத்தில் சாய்ந்து சொன்னாள்.

"ம்ம்... ஆமா ல...” என அவனும் ஒரு நிமிடம் அவளை அணைத்தப்படியே நின்றவன், "சரி சஜு... நாம அம்மா சொன்னதச் சீக்கிரம் செயல்படுத்தனும்...” எனத் திடீரெனத் தீர்க்கமாய்ச் சொன்னவனைப் பார்த்து குழம்பி, "அத்தையா? அத்த... என்ன சொன்னாங்க?" என்றாள்.

"ம்... நம்ம சுஷ்மிக்கு... நீ சீக்கிரமே பாப்பா பெற்று தரணும்னு சொன்னாங்கள... அதான்" என அக்ஷய் அடக்கப்பட்ட சிரிப்போடு சொல்ல, "சீ... உங்கள...” என அவள் அவனை அடிக்கத் தொடங்க... அடித்த அவள் கையை ஒரு கையால் பிடித்தப்படி, அதில் தன் இதழொற்றி, அவளைத் தன்னோடு சேர்த்து மஞ்சத்தில் விழுந்தான். சஜுவும், முழு மனதாய் தன்னை, அவனிடம் ஒப்புவித்தாள்.

விடிகாலை என சஜு நினைத்துக் கொண்டிருக்க, ஆனால் கடிகாரம் எட்டு எனக் காட்டியதால் "என்னங்க...” எனத் தன்னைச் சிறைப்படுத்தி, தன் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவனை அழைத்தாள்.”ம்ஹும்... நான் சொன்ன மாதிரி எழுப்பு... அப்போ தான் எந்திரிப்பேன்" எனச் சுஷ்மி போல் அடம் பண்ணியவனை, வேறு வழியில்லாமல் "என் செல்லக்கட்டில... என் தங்கக்கட்டில... என் வைரக்கட்டில... எந்திரி டா செல்லம்" எனச் சொன்னாள்.

ஆம், அக்ஷய் தான், அவனே தான்! சில சமயம், சுஷ்மி சஜுவோடு இரவு பேசிக் கொண்டு, தாமதமாய்ப் படுத்து, காலையில் எழாமல், அவளைத் தூக்க சொல்லி, அவள் இடுப்பில் இருந்தப்படி, அவள் கழுத்து வளைவில், தன் முகத்தைச் சாய்த்து, மீண்டும் தன் துயிலைத் தொடர்வாள்.

ஆனால் சஜு தான், அவளை விழிப்படைய செய்வதற்காக, "என் தங்கக் கட்டில... என் ஷப்பிக் குட்டில... என் பூசணிக் குட்டில... எந்திரி டா செல்லம்...” என ராகம் போட்டுக் கொஞ்சினாலும், "போ... ஆஆ...” எனச் சிணுங்குபவளை மீண்டும் அதே போன்று கொஞ்சி, கெஞ்சி எழுப்புவாள்.

அதை எப்போதும் ரசிக்கும் அக்ஷய், இன்று தன்னையும் அது போலத் தான் எழுப்ப வேண்டும் என்று அவளிடம் கோரிக்கை வைத்து, அவளைச் செயல்படுத்த வைத்துக் கொண்டிருந்தான்.

"ஹே... என்ன... டா ல சொல்ற... போ... இது கள்ளாட்ட... மரியாதையா... எந்திரீங்க செல்லம்னு சொல்லணும்" எனச் சொல்லிவிட்டு, மீண்டும் அவள் தோள் வளைவில் முகம் புதைத்தவன் பக்கம், மெல்ல தன் முகத்தைத் திருப்பினாள் சஜு.

சில நொடியில், "ஸ்... ஆ...” என அக்ஷய், அவளை விடுத்து, தன் கன்னத்தில் கை வைக்க, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி, "எஸ்... கே... ப்...” எனச் சிரித்துக் கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் அவள். தன்னைக் கடித்து விட்டு ஓடியவளைக் கண்டு, புன்னகைத்த படியே அவனும் எழுந்தான்.

பின் சுஷ்மியையும் கிளப்பிக் கொண்டு, முதலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்குச் சென்றனர். சாமியை திருப்தியாய் தரிசனம் செய்து விட்டு, பிரகாரத்தில் வரும் போது, அக்ஷய் "நீங்க உட்காருங்க... நான் போய்ப் பிரசாதம் ஏதாவது வாங்கிட்டு வர்றேன்" என்று, அங்கிருந்த பிரசாதம் விற்பனைச் செய்யும் கடைக்குச் சென்றான்.

பிரசாதம் வாங்கிக் கொண்டு, இவர்களிடம் வரும் போது, சஜு "ஸ்... ஆ...” எனக் கன்னத்தில் கை வைக்க, அவள் மடியில் நின்றிருந்த சுஷ்மியோ, "ஆஆ... இன்கு... குடு...” எனச் சிணுங்கியப்படி, தன் கையை உதறிக் கொண்டு இருந்தாள்.

அக்ஷய் "என்னாச்சு... ஏன் டா சுஷுக்குட்டி அழுகுற?" எனக் குழந்தையைத் தூக்கி தன் மடியில் அமர்த்தி விசாரித்தான். அக்ஷய் பிரசாதம் வாங்க சென்றதும், கையில் அர்ச்சனைக் கூடையோடு, அமர்ந்த சஜுவின் மடியில் வந்து நின்று, அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் சுஷ்மி.

சஜு, அர்ச்சனைச் செய்த தேங்காயை உடைத்து உண்ணவும், "இன்கு...” எனச் சுஷ்மி கேட்டாள். சஜுவும், அவளுக்கு ஊட்டுவது போல் கொண்டு சென்று தன் வாயில் போட்டுக் கொண்டாள், அடுத்தும் அப்படியே அவளை ஏமாற்றி வம்பிழுக்க, அதனால் பொறுமை இழந்த சுஷ்மி, சஜுவின் கன்னத்தைக் கடித்து விட்டாள்.

"உங்க பொண்ணு விவரம்... என்ன கடிச்சிட்டு, அவ அழுகுறத... பாருங்க" எனக் கண்ணைப் பெரிதாக்கி, சஜு பொய்யாய் கோபிக்க, "ம்... என்ன பண்ண? என் பொண்ணு... அவ அம்மா மாதிரியே இருக்கா?" எனச் சொல்லி, தன் கன்னத்தைத் தடவியப்படி, காலையில் அவன் கன்னத்தை, அவள் கடித்ததை அவளுக்கு ஞாபகப்படுத்த, "சீ... போங்க...” என அழகாய் சஜு சிணுங்கி, தன் முழங்கையால் அவனை இடித்தாள்.

அதைக் கண்ட உடனே, தனக்குத் தேங்காய்க் கொடுக்காமல் இருந்ததும் அல்லாமல், தன் தந்தையை வேறு அடிக்கவும், சுஷ்மி, "னி... ப்போ...” எனச் சஜுவை தன் குட்டி கரத்தால் தள்ளி விட, "பார்த்தியா என் பொண்ண... இனிமே அய்யாவ டச் பண்ற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது" என்று தன் காலரின் நுனியைத் தூக்கி விட்டான்.

சஜுவோ "இருக்கட்டும் இருக்கட்டும்...” என வெளியே சொன்னாலும், மனதுள் குறித்துக் கொண்டாள். பின் அங்கிருந்து சில்வர் பால்ஸ், டால்பின் நோஸ் சென்றனர். சில்வர் பால்ஸில் வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வந்தனர். மேலும் டால்பின் நோஸ் என்ற டால்பினின் மூக்கு போன்ற வடிவத்தில் இருந்த பாறைக்குச் சென்றவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் முன்னேறாமல், சஜு பயந்ததால், திரும்பி விட்டனர்.

பின் மதியம் செட்டியார் பூங்காவிற்குச் சென்றனர். அங்குப் புல் போன்ற செடியிலேயே, யானை, மான், மயில் என விலங்குகளைச் செய்து வைத்திருந்தனர். அதைக் கண்ட சுஷ்மி, மகிழ்ந்து போனாள். பின் அங்கு ஒரு மணி நேரத்தை கழித்து விட்டு, மாலையானதும் அறைக்குத் திரும்பினர்.

வரும் வழியெங்கும், சுஷ்மி சால்வைப் போர்த்தியிருந்த சஜுவின் மடியில் சாய்ந்தமர்ந்தப்படியும், அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டும் வந்தாள். சஜுவும், குளிருக்கு இதமாய், தன் மீது சாய்ந்தக் குழந்தையை, கோழிக்குஞ்சை அடைக்காப்பது போல், தான் போர்த்தியிருந்த சால்வையோடு சுஷ்மியையும் நெஞ்சோடு சேர்த்தணைத்து கொண்டாள்.

அறைக்கு வந்ததும், உறங்கிய குழந்தையை அவளிடம் இருந்து வாங்கி, மெத்தையில் படுக்க வைத்தான். மீண்டும், சஜுவிடம் வந்தவன், குளிருக்கு இதமாய் அவள் போர்த்தியிருந்த சால்வைக்குள் புகுந்து, அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அதில் மயங்கியவள், "என்னங்க...” என அணைத்தவனைச் சஜு அழைக்க, "இம்... சொல்லு சஜு" என அவள் தோளில் தன் முகத்தைத் தாங்கி கேட்டான்.

"எனக்குத் தூக்கமா வருதுங்க... ப்ளீஸ்... கொஞ்ச நேரம் தூங்கலாம்" என அப்பாவியாய் சொன்னவளை, "அடிப்பாவி...” எனக் கூவினாலும், "ஓகே மை டியர்" என அவளைக் கையில் ஏந்தி சென்று, படுக்கையில் படுக்க வைத்து போர்த்தி விட்டான்.

போர்த்தி விட்டு நிமிர்ந்தவனின் கழுத்தை, இரு கையால் வளைத்து, தன் அருகே இழுத்து, அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு உறங்க தொடங்கினாள்.

யாரோ தன் அருகே அசையும் உணர்வில், கண்விழித்தான் அக்ஷய். திரும்பி பார்த்தால்... சுஷ்மி தான், தூங்கி எழுந்தவள், கீழே இறங்குவதற்காகத் தன் அருகே படுத்திருந்த சஜு மீது ஏறி கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட அக்ஷய் எழுந்து, அவளைத் தூக்கியப்படி, "என்ன டா குட்டிமா எந்திரிச்சுடீங்களா? சஜு தூங்கட்டும், நாம டிஸ்டர்ப் பண்ண வேணாம். ம்...” எனத் தலையாட்டிக் கூறியப்படி, குழந்தையை முத்தமிட்டு, தன் மடியில் அமர்த்தினான். அவளுக்குப் புரிந்ததோ, இல்லையோ "சுஸ்பா...” எனச் சிரித்தாள்.

பின் தான், குழந்தையின் உடையில் ஈரத்தை உணர்ந்தவன், "அச்சோ... சுஷு... மூச்சா போயிட்டியா?" என வினவ, அவளோ தன் குட்டி கரத்தால் கண்களைத் தேய்த்து கொண்டிருந்தாள். குழந்தைக்கு உடை மாற்றி, படுக்கையில் போர்வையையும் மாற்றி, குழந்தையோடு மெத்திருக்கைக்குச் சென்றான்.

கண்களைச் சுருக்கியப்படி, விளக்கொளியில் கண்ணைக் கசக்கி கொண்டு எழுந்த சஜு, தன் அருகே யாரும் இல்லாமல், ஆனால் சிரிப்புச் சத்தம் வந்த திசையைப் பார்த்தாள். அங்கு மெத்திருக்கையில், சுஷ்மி தன் தந்தையோடு விளையாடி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.”சுஸு...” என அழைத்தப்படி எழுந்தவளை, "சசு... இங் பா...” என அக்ஷையின் மடியிலிருந்தவாறே அழைத்தாள்.

அவர்களிடம் வந்தவள், "என்னங்க... ரொம்ப நேரமாகிடுச்சா... லைட் எல்லாம் போட்டிருக்கீங்க...” எனக் கேட்டாள். ஏனெனில் கொடைக்கானல் பனியில், பகல் நேரத்திலும், வீட்டுக்குள் விளக்கொளி எரிவதால் தான், அவ்வாறு கேட்டாள்.

அவள் கணவனோ "ரொம்ப நேரம்லாம் ஆகல சஜு. நைட் டிபன் சாப்பிட்டு முடிக்கிற நேரம் தான் ஆகிருக்கு" என்று சாதரணமாய்ச் சொன்னவனிடம், "ஓ...” எனச் சொன்னவள், "என்ன... நைட் டிபனா... இவ்ளோ நேரமா தூங்கிட்டேன்... ஏங்க... என்ன எழுப்பிருக்கலாம்ல?" என அதிர்ந்து சொன்னவாறே, குளியலறைக்குச் சென்றாள்.

அக்ஷயிடம் வந்தவள், "ஏங்க... டிபன் சொல்லிட்டீங்களா?" என வினவியப்படி அமர்ந்தவளிடம், "இம்... சொல்லிவிட்டு, கொண்டு வந்தும் தந்துட்டாங்க... சுஷ்மியும் சாப்பிட்டு முடிச்சுட்டா...” எனப் பதில் தந்தான்.

"ஏங்க... என்ன எழுப்பிருக்கலாம்ல?" என மீண்டும் சொன்னவளை, "பரவாயில்ல சஜு... வா... நாம சாப்பிடலாம்" என இருவரும் உண்டு விட்டு, அக்ஷய் குழந்தையோடு மெத்தைக்குச் சென்றான்.

சஜு கவர்களை எல்லாம் குப்பையில் போட்டு, ஒதுங்க வைத்து விட்டு, அவனருகே சென்று அமர்ந்தாள். குழந்தையை மடியில் வைத்து, அவளிடம் விளையாடிக் கொண்டே, "என்ன சஜு... என்ட்ட என்னவோ கேட்க நினைக்குற... என்ன கேளு?" என்றான் அவளை உணர்ந்தவன் போன்று.

"இல்ல... உங்க பேரு அக்ஷய் பிரபுவா?" என ஆச்சரியத்தோடு சொல்லி, அன்று மருத்துவமனையில் விளையாட்டாய் அவள் எண்ணியதையும், இப்போது அதுவே அவன் உண்மை பெயராக இருப்பதையும் கூறினாள்.

அதற்கு, அவன் சிரித்து விட்டு, "ஹே... நல்ல வேளை... இப்பவாது என் பேர கேக்கணும்னு தோணுச்சே, ஆனாலும் நீ கேட்க வந்தது இது இல்லன்னு எனக்குத் தோணுது" என்று சொன்னவனைப் பார்த்து, அது உண்மை தான் என்பது போல் அவள் தயங்கவும்…

அவளைத் தன் தோளில் சாய்த்து, "என்னடா என்னன்னு... சொல்லு, நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன். சும்மா சொல்லு" என அவள் தயக்கத்தைப் போக்கினான், மேலும் "ம்ம்... சொலு சசு...” எனச் சுஷ்மியும் புரிந்தோ புரியாமலோ, தன் தந்தையோடு சேர்ந்து ஊக்கினாள்.

"இல்ல... நீங்க ஜனனிய ரொம்ப... ஐ மீன் லவ் பண்ணீங்களா?" என ஒரு வழியாய் கேட்டே விட்டாள். ஆயிரம் தான், சஜுவோடு அக்ஷய் இப்போது ராசியாய் இருந்தாலும், அவள் மனதில் "அவர் ஜனனியை அதிகம் விரும்பியதால் தான், தன்னோடு பேசாமல்... இல்லை இல்லை பேசினாலும், நெருங்காமல் இருந்தானோ? ஏனோ இப்பொழுது வேறு வழியில்லாமல், இது தான் வாழ்க்கை என்ற காரணத்தாலோ? அல்லது இந்த வயதில் தோன்றும் மோகத்தாலோ தன்னுடன் இணைந்தானோ?" என்ற ஐயப்பாடு அவளுள் சில சமயம் தோன்ற தான் செய்தது. அதனால் தான், அவள் இவ்வாறு ஆரம்பித்தாள்.

அவளின் கேள்வியிலேயே அவளின் பயத்தையோ, ஐயத்தையோ உணர்ந்த அக்ஷய், "இம்... ஆமா சஜு, நான் அவள லவ் பண்ண தான் செஞ்சேன்" என்று அவள் கண்ணைப் பார்த்துக் கூறினான்.

ஆனால் அந்தக் கண்களில் தெரிந்த தவிப்பு, துடிப்பு எல்லாம் கண்ணீராய் மாறுவதற்குள் "ஆனா... அந்தக் காதல் இப்ப அவ மேல மரியாதையா மாறி இருக்கு. ஏதோ போன ஜென்மத்து தொட்டக் குறையோ, விட்டக் குறையோ, என் வாழ்க்கைல கொஞ்ச நாள் இருந்துட்டு போயிட்டா... ஆனா நீ தான் என் வாழ்க்கைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன் சஜு. என்ன விட்டுப் போன ஜனனி, ஜனனியாவே இருக்கட்டும், அவளையும் உன்னையும் சேர்த்துப் பார்த்துக் குழப்பிக்காத சஜு" என ஆழ்ந்து கூறியவனை…

"ஆனா... நீங்க" என ஏதோ சொல்ல வந்தவளை, "தெரியும் சஜு, என்ன கேட்க வரன்னு... நீ என்ன தேடி வந்தப்ப வேணாம் வேணாம்னு ஏன் ஒதுங்குனேன்னு தான கேட்குற?" அவள் ஆமெனத் தலையாட்டவும், "அதுக்கு ஒரு காரணம் இருக்கு...” என்று தன் மீது படுத்த குழந்தையை, தட்டிக் கொடுத்தப்படி தொடர்ந்தான்.

"நீ பக்கத்து வீட்டுல இருந்தாலும், சுஷ்மியோடவே விளையாடுறதாலையும், எனக்கு உன்ன பார்த்தா, அவள மாதிரி ஒரு குழந்தையா தான் தெரிஞ்ச, ஆனா அன்னிக்கு ஜவுளிக் கடைல உன்ன சேலைல பார்க்கவும் தான், பெரிய பொண்ணா... ஏதோ ஒரு சலனத்த எனக்குள்ள உண்டு பண்ண. அதுக்கப்புறம், அப்போ அப்போ நீ உன் செய்கையாலும், பார்வையாலும், என் பாழடைஞ்ச மனச தூசி தட்ட தான் செஞ்ச... ஆனாலும் நீ அன்னிக்கு, உன் நிச்சயத்துக்கு, வீட்ட விட்டு போன பாரு... அப்போ தான்... நீ எனக்குள்ள எவ்ளோ பெரிய தாக்கத்த உண்டு பண்ணிருக்கன்னு புரிஞ்சது.” என இன்றும் அந்த தாக்கத்தை உணர்ந்தவன் போன்று சொன்னவன், தன் அருகே இருந்த அவள் கரத்தை அழுத்தி பிடித்து கொண்டான்.
 
Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

d98570aa4bb8188c739ed5dcb56b4a2a.jpg
இந்த மாதிரி ஒரே பக்கத்தில் இருந்தால் புத்தகத்தில் வாசிப்பது போல் கொஞ்சம் ஒத்துப்போகிறது...

நிறைய்ய்ய சந்தோஷங்கள்...
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அச்சோ சஷூ விஜய்க்கு ஓகே சொல்லிட்டாளேன்னு தோணுது.
தாயுமானவனின் பாசம் அசத்துது.
சுஸ்பாப்பா சஜூ வின் பாசப்பிணைப்பு மனதை கொள்ளையடிக்குது
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ரொம்ப உணர்லு பூர்வமாக இருக்கிறது கதையின் போக்கு.
நிச்சயதார்த்தத்துக்கு அவ கிளம்பும்போது ்சுஷ்மியின் நிலை கண்கலங்க வைக்கிறது.
விஜய் சூப்பர் கேரக்டர்.
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அக்ஷய் வாழ்க்கையில் ஜனனியின் மறைவு பாவம். சுஷ்மியின் வரவு அற்புதம். இன்னும் சஜூவும் வந்தது பேரானந்தம் தான்.
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அழகான புரிதல் இருவரிடமும்
அதற்கப்புறம் என்ன ஆனது .
Eagerly waiting :love: :love: :love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top