• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரட்சகியின் ராட்சசன் - 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vedhamadhi

நாட்டாமை
Author
Joined
Jan 16, 2021
Messages
48
Reaction score
73
Location
sri lanka
ரட்சகியின் ராட்சசன்
ஆகாயம் தொடும் மலை சிகரங்களும் வெண்பஞ்சு மேகத்தினுள் தொலைந்து விட்டனவா ? என எண்ணும் அளவிற்கு பனிமூட்டங்கள் நிறைந்திருந்தது. பார்க்கும் திசை எல்லாம் வரிசை வரிசையாய் கரும்பச்சை இலைகளை மறைத்து தலைதூக்கி இருந்த இளம்பச்சை நிற தேயிலை தளிர்களும் அதில் கொஞ்சி விளையாடும் பனித்துளிகளும் நிறைந்த தோட்டங்கள்.

சலசலவென மலைகளில் இருந்து பால் வண்ண நுரைகளுடன் பொங்கி வரும் நீர் ஊற்றுகளும்; அவை வேகம் தணிந்து இளைப்பாறிய நீல வண்ண ஏரியும் .அங்காங்கே உயர்ந்து வளர்ந்த ஊசிமுனை மரக்காடுகளும்; தூரத்தில் கேட்கும்
தடக்.....தடக்....தடக்...ஊ....ஊ....தடக்....தடக்....
புகையிரதத்தின் தாளமும்; மேனியை தீண்டி சிலிர்க்க செய்யும் குளிர் காற்றும்; அவ்வூரை பூமியின் சொர்கமாக அமைந்திருந்தது.

பனியால் நிறைந்திருந்தாலும் விடிந்து விட்டது என்று பறவைகள் தம் குரல் கொண்டு வீணை மீட்க ; மான்கள் துள்ளிஒடி விளையாட; நாணம் கொண்ட புதுமணப்பெண்ணாய் மேனி சிவந்து மேகத்துள் மறைந்து பச்சைவண்ண ஆடையணிந்த பூமிநாதனை மறைந்துப்பார்த்து
மெல்லசிரித்தாள் பனிப்பகையாள்.

வண்ணப்பூக்கள் மலர்ந்து நறுமணத்தை பரப்ப,மரக்கறிகளும் ,மலர்செடிகளும், மரங்களும் நிறைந்த தோட்டத்தின் நடுவே அமையப்பெற்றிருந்தது அவ்வீடு.

" உள்ள சூடு தாங்க முடியல வெளிய எடுங்கயா" என கோபமாக விசிலடித்தது இட்லி பானை. அம்மியில் வேர்கடலை சட்னி அரைத்துக்கொண்டிருந்தவள் கையை கழுவி விட்டு அடுப்பை அணைத்தாள். இட்லியை சூடு போகாதவாறு பாத்திரத்தில் அடைந்தவள் தலையை நிமிர்த்தி நேரத்தை பார்த்தால்.
ஆறுமணிக்கு பத்து நிமிடம்.

இருள் சூழ்ந்த அறையில் லைட்டை போட்டுவிட்டு கட்டிலில் அருகே சென்று "ஏங்க! எழும்புங்க! நேரமாச்சிங்க" என கொஞ்சும் குரலில் அவள் வேண்ட, "Good morning கவி" என உற்சாகமாய் எழுந்தமர்ந்தான் அமிர்தகிருஷ்ணன் . மலர்ந்த சிரிப்புடன் " குட் மோர்னிங்க. பாத்ரூம்ல வெண்ணீர் வச்சிட்டன். உடுப்பு அயன் பண்ணியாச்சி அம்முவும் நீங்களும் ரெடியாகுங்க. நா உங்களுக்கு டீ போடுறேன். " என கூறிய மனைவியை காதலாக பார்த்து தலையாட்டினான். அவர்களின் காதலின் பரிசாய் வண்ணக்கனவுகளுடன் உறங்கிக் கொண்டிருந்தால் சரித்ரா. தன் தேவதை பெண் உறங்கும் அழகை ரசித்தவன் " அம்மு எழும்புடா ! அம்முகுட்டி எழும்புங்க!" என கெஞ்ச பாதி உறக்கம் கலைந்து சினுங்கினாள் அவனின் செல்ல மகள். அவளை பிரம்ம பிரியத்தனம் செய்து எழுப்பாட்டி கெஞ்சி கொஞ்சி பள்ளி செல்ல ரெடியாக்கி , தானும் தயாராகி மனைவி கொடுத்த டீயை குடித்துவிட்டு மகளுக்கும் பாலை ஊட்டினான்.

சரித்ராவை dining room யிற்கு தூக்கிக்கொண்டு வந்தான். மகளை மேசை மீது அமர வைத்து விட்டு ஒரு கதிரையில் அவனும் அமர்ந்தான். சமயலறையில் இருந்து வந்த ராகவி "good morning செல்லம்." எனநெற்றியில் முத்தமிட தன் பாற்பற்களில் தெரிய சிரித்தால் ஆறு வயது சரித்ரா ." குத்மோனிங் மா" என்றால் மழலை. கணவனுக்கு சுடச்சுட இட்லியும் வேர்கடலை சட்னியும் பரிமாற அதை மகளுக்கு ஊட்டிக்கொண்டே அவனும் உண்டான். அதுவரை மகளுக்கும் , கணவனுக்கும் ஆன உணவை வெவ்வேறு் பாஸ்கட்டில் வைத்தவள் அவரவர் பையில் வைத்தாள்.

அமிர்தன் கையை கழுவி விட்டு சரித்ராவை தூக்கி கொண்டு வரவேற்பறைக்கு வர ராகவி இருவருக்கும் தீருநீரு பூசிவிட்டாள் . மகளை தன் கைக்கு மாற்றியவள் " குட் பேபியா இருக்கனும், குழப்பம் பண்ண கூடாது, யார்க்கூடயும் சண்டைக்கு போக கூடாது செல்லக்குட்டி. "என தினமும் பாடும் பஞ்சாங்கத்தை முதல் முறைப்போல் கூறினாள். "சதிமா" என இருப்பக்கமும் தலையாட்டினால். அவள் வார்த்தையையும், செயலையும் பார்த்த அமிர்தன் வாய்விட்டு சிரித்தான்.

அதைப்பார்த்து தலையை நிமிர்த்தாமல் கருவிழிகளை மட்டும் உயர்த்தி முறைத்தால் ராகவி .அதில் சொக்கிப்போனவன் " அம்மு அம்மா அப்பாவ முறைக்கிறா " என நக்கல் சிரிப்புடன் மகளிடம் முறையிட;
அதை உண்மை என நம்பிய சிட்டு. "மா அப்பாப முதைக்காத" என போர் கொடி உயர்த்தினாள். "ஹ்ம்ம் !! ஒழுங்கா பேசவே வரல அதில மேடத்துக்கு கோவம் வேற" என வாயினுள் முணங்கியவள் கணவனை பாக்க அவனோ அவளை கெத்து பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் சிரிப்பு வர சிரித்தவள் சரித்ராவின் கன்னத்தில் முத்தமிட்டு "என் பட்டு " என்றாள். சரித்ராவின் சிறிய மிக்கிமவுஸ் பாக்கை எடுத்தவன் தன் ஸ்டெத்தஸ்கோப்பையும், வெண்ணிற கோட்டயும் தன் தோல்பையில் வைத்தவன் கவியிடம் " பாத்தரமா இரு கவி. அம்முவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்திரு." என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் மகளின் பட்டு கன்னத்திலும் முத்தமிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

அவன் பின்னே குழந்தையடன் சென்ற கவி அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யவும் சரித்ராவை அவன் முன்னாள் சரியாக அமர வைத்தாள். கவியின் கன்னத்தில் எச்சிப்பட முத்தமிட்டு " பாய் மா " என கைகாட்டினால் சரித்ரா.

" கவனம்டா அம்மு! "

"பார்த்து பத்திரமா போர்ட்டு வாங்க" என்றாள் அமிர்தனை பார்த்து.

அவனும் "பாய் கவி" என்றவன் மிதமான வேகத்தில் பைக்கை ஓட்டிச்சென்றான் . அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள் பின் வீட்டிலுள் சென்றால்.

☆☆_______________________________☆☆

சரித்ரா டிவியில் டொனால்ட் காட்டூனில் முழ்கி இருக்க; சமையலறையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். " ஏங்க சீக்கிரமா வெங்காயத்த கொடுங்க" என சமையலில் ஈடுப்பட்டிருந்த கவி கேட்க " உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா ? தாலி கட்டினபுருஷன இப்படி கண்ணீர் விட விடிரியே ? இது நியாயமா? என மூக்கை உறிஞ்சி கண்ணீரை துடைத்தப்படி நறுக்கியவெங்காயம், தக்காளி, மிளகாயை அவளிடம் நீட்ட அதை வாங்கியவள் நக்கலாக புன்னகைத்தப்படி " சேம் டயலோக் !! எட்டுவருஷமா !! அதாவது கல்யாணம் ஆனதில இருந்து இதத்தா சொல்றிங்க . No change!! ஒரு வெங்காயத்த வெட்ட தெரியல ! நீங்க எல்லாம் எப்பிடி பெருங்காயத்த (பெரிய காயம்) சரிப்பண்ணி ஆப்ரேஷன் செய்வீங்க ? பாவம் !! உங்க பேஷண்ட்ஸ். " என்று கவலைப்பட்டவளின் குரலில் கிண்டல் டன் கணக்கில் கொட்டிக் கிடந்தது.

"அடப்பாவி !! யாரப்பார்த்து என்ன வார்த்த சொல்லிட்டடி " என கோபம் வீரிட்டு எழுந்தவன் போல் கேட்டான்.

அவனை இன்னும் நக்கலாக பார்த்தவள் " உங்கள பார்த்துதான் " என்றாள் அதரங்களில் அடக்கிய சிரிப்புடன்.

அவமானத்தை தூசிப்போல் தட்டியவன் "மேடம் ! ஐயா யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட் " என சட்டை கோலரை தூக்கி பெருமைக் காட்ட ,

" ஐயோ பாவம் !! அந்த gold plated (தங்க முலாம் பூசப்பட்ட ) யா இன்னும் தங்கம்னு நம்பிட்டு இருக்கிங்க ? நீங்க ஒரு பச்சகொழந்தங்க ." என அவன் நெஞ்சை தடவிக்கொடுத்தவாறு பொய்யாக அவள் வருத்தப்பட; காண்டாகியவன்

"உனக்கு கொழுப்பு கூடிபோச்சிடி !! இரு என் பொண்ணு கிட்ட சொல்றேன்." என்று பொங்க

"போங்க போங்க" என நகைத்தாள் அவனை கண்டுகொள்ளாமல் சமையலில் ஈடுப்பட்டாள்.

'ஒரு தென்றல் புயலாகி வருதே' பேக்கிராவுண்ட் சாங் ஓட மகளிடம் புகார் வாசிக்க சென்றவன் மகளை மடியில் அமர்த்திக்கொண்டு ; அவப்போது அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு காட்டூனில் முழ்கினான்.

ஒருவருக்கொருவர் ஊட்டி இரவுணவை முடித்தனர். தந்தையின் நெஞ்சு சூட்டிலும் , தாயின் இதமான வருடலுடன் கூடிய இளவரசரின் கதையிலும் ஆழ்ந்து உறங்கினால் சரித்ரா.
அவள் உறக்கம் கெடாமல் கட்டிலில் சாய்த்தவர்கள் அவளின் இருபுறமும் தலையணைகளால் அரணமைத்து, கம்பளியால் போர்த்தி விட்டு பூனை நடையுடன் வாசலை அடைந்தனர் இருவரும்.

ராட்சசன் வருவான்........
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Satithra oda appa doctor ah super azhagana kudumbam, nice update dear update chinnatha iruku konjam perusa kudukalame pa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top