• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரட்சகியின் ராட்சசன் - 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vedhamadhi

நாட்டாமை
Author
Joined
Jan 16, 2021
Messages
48
Reaction score
73
Location
sri lanka
ரட்சகியின் ராட்சசன்
காதலிக்க நேரம் இல்லை என யாருக்காகவும் நிற்காமல் ஓடியது காலம். நெடுநெடுவேன உயர்த்து வளர்ந்தவளின் கரிய நிற அருவி போன்ற கூந்தல் பின்னிபிணைந்து இடை வரை நீண்டிருந்தது. . அடர் நீல வண்ண சுடிதாரில் இருந்தவளின் தோளில் தொங்கியது கருப்பு நிற பை . செவ்விதழ் புன்னகைக்க; கல்வியின் கலை முகத்தில் பிரகாசிக்க; வேல்விழிகளில் குறும்பும் , ரசனை, சந்தோசம் என்பன சரிக்கு சமமாய் போட்டிப்போட்டு கொண்டிருந்தன. தேவதைகள் அவளின் பின் வயலின் வாசிக்க மெல்லிய காற்றில் கண்ணை தாண்டி கன்னம் தீண்டிய கூந்தலால் ரசனை தடைப்பட்டு போனது. அதில் கடுப்பாகியவள் விரல்களால் முடிகற்றையை சிறைசெய்து ஹெயார்பின்னுள் அடக்கினாள்.

நிமிர்ந்து நின்ற royal university என பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுவரை மீண்டும் பார்க்க ஆரம்பித்தால் இருபது வயதான சரித்ரா.
சரித்ராவின் வெறும் ஆசையல்ல !! பேராசை இப் பல்கலைக்கழகத்தில் பயில்வது. " டார்லிங் பாத்திங்களா! நா சொன்ன மாதிரி உங்கள தேடி வந்திட்டன். இந்த சரித்ரா இங்க ஒரு சரித்திரத்தையே செய்வா" என சபதத்தை முடிக்கும் முன்னே விழப்போனவள் தன்னை நிலைநிறுத்தி கொண்டு " நா எப்படி விழப்போனன் ? யார் மேலயோ மோதிட்டோம். ச்ச! இல்ல யாரோ நம்மல இடிச்சிட்டாங்க. " என மனதிலுள் பேசிக்கொண்டவள் "யார்டா அது?" என வாய்விட்டு கூறியவாரே திரும்பி பார்த்தால்.

அவள் பார்வை வட்டத்தில் விழுந்தான் லாவண்டர் நிறத்தில் பட்டு போல் பளபளக்கும் சட்டையணிந்த ஆடவன் வேகமாக நடந்து செல்வது . "டேய்! என்னையே இடிச்சிட்டல்ல! உன்ன தள்ளிவிட்டு மண்ணகவ்வ வைக்கல நா சரித்ரா இல்ல " என மைன்ட் வாய்ஸ்சில் சபதமேற்றவள் அவனை பின்தொடர்ந்தால்.

அவனை பின்தொடர்ந்து சென்றவள் நின்ற இடம் அவளது வகுப்பறை. "அப்ப பையன் நம்ம கிளாஸ்ஸா? " என தனக்கு தானே கேள்வி கேட்டவளின் பார்வை முதல் பேன்ச்சில் சென்று அமர்ந்த அந்த ஆடவனை ஆராய்ந்தது. ' கைகளால் நொடிக்கொரு தரம் அவன் ஸ்பெக்ஸை சரி செய்தவன் முகத்தில் டன் கணக்கில் அப்பாவித்தனம். தாடி என்ன? அரும்பு மீசை கூட இல்லாத வளவளப்பான முகம் ;கண்களில் அலைப்புறுதளே அவன் பயத்தை காட்டியது. ஆக மொத்தம் வளர்ந்த பச்சகொழந்த.' என அவள் மனம் சான்றிதழ் வழங்கியது.

" நம்ம இவனதள்ளிவிட வேண்டிய அவசியமே இல்ல! இவனே விழுந்து மண்ண கவ்விருவான். " என மனதிலுள் நகைத்தவள்
" பையன் அப்பட்டமாக அப்பாவியா இருக்கானே ! சீனியர்ஸ் கிட்ட என்ன பாடுபடப் போறானோ? " என அவனுக்காக வருத்தப்பட்டாள். முதலுமில்லாமல் , கடைசியும் இல்லாமல் நடுவில் இருந்த பேன்சில் அமர்ந்து பேராசிரியர் வரும் வரை அருகில் இருந்த பெண்ணிடம் நட்பு பயிர் வளர்க்க ஆரம்பித்தால்.
☆☆ ___________________________☆☆

மூன்று நாட்கள் ஓடிவிட்டன. அவள் படிக்கும் பீடத்தில் ( faculty ) பாதிபேருடன் நட்புக்கரம் நீட்டிவிட்டாள். இதில் சீனியர், சூப்பர்சீனியர், பேராசிரியர் தொடக்கம் ஊழியர்கள் வரை உள்ளடக்கம். அவள் வகுப்பில் உள்ள அனைவரும் அவளின் நண்பர்கள்தான் .விதிவிலக்கு அவன் மட்டும். பெயர் ஆதித் அனிருத்தனாம் அனைவரின் சுய அறிமுகத்தின் போது கூறினான். இன்றுவரை யாருடனும் ஒரு வார்த்தை பேசவில்லை. சீனியர்கள் அவனை பிழிந்தெடுத்து விட்டனர். பல்கலைக்கழகம் மட்டுமின்றி விடுதியிலும் பகிடிவதை நிகழ்வது உண்டு . நேற்று சீனியர் மாணவர்கள் செய்த ராக்கிங்கில் அவன் அழுதுவிட்டான் என்பது அவள் நண்பர்கள் மூலம் அறிந்த செய்தி.

இங்கு பகிடிவதை அனைவருக்கும்தான். முதல் மூன்று மாதங்களுக்கு நிகழும். அதற்கு சரித்ராவும் விதிவிலக்கல்ல. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பதை போல் சரித்ராவும் தப்பிக்கொள்வாள். தைரியமாக எதிர்கொள்வது , சீனியர்களுடனான நட்பு கூட அவளை காத்தது.

அவனை பார்த்தால் அவளுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? பல முறை பேச்சு கொடுத்துவிட்டால் அத்தனை முறையும் அவன் இவளை கணக்கே கொள்ளாமல் முகத்தை திரும்பிக்கொள்ள இவளுக்குதான் மூக்குடைவு. அப்போது எல்லாம் சினம் பால் போல் பொங்கி வரும். பின் அவன் குணம் கொஞ்சம் புரிந்ததால் தண்ணீர் தெளித்தது போல் அமைதியாகிவிடும்.

'அப்பாவி, கூச்சசுபாவம் , பயந்தவன் , தயக்ககுணமுடையவன் , இதுவரை யாரிடமும் அதிகம் பழகாதவன் , முக்கியமாக சிங்கள மொழியில் பூஜ்யம். சில வேலை தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்.......' இத்தனையும் அவன் நடவடிக்கைகளை பார்த்து அவள் பரிந்து கொண்ட குணங்கள்.

☆☆ ________________________☆☆

அவளின் பீட ( faculty ) மாணவர்கள் அனைவரும் ஸ்டேடியத்தில் கூடியிருந்தனர். சாதாரணமாக பேச்சு வார்த்தைக்காகதான்.
சீனியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழக விதிமுறைகள் , பல்கலைக்கழகம் பற்றிய அறிமுகம் , ஏனைய கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் தொடர்பான விளக்கங்கள் தரப்பட்டது. இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவளின் காதில் விழுந்து அவ் உரையாடல்.

" இப்ப கடைசியா ஏதாவது ஒரு புரோக்ரம் செய்ய சொல்லுவாங்க . நீ என்ன செய்றனா ஒரு பாட்டு பாடிற" என மெல்லிய, அழுத்தமான குரலில் ஆதித்க்கு கட்டளையிட்டான் ஒரு சீனியர் மாணவன்.

அப்பாவி முகத்தில் கலக்கத்துடன் ஏறிட்டவன் "எனக்கு பாட்டு தெரியாது சீனியர்" என்றான் பயந்த குரலில். "அப்பிடியா?" என தாடையை தடவி யோசிச்தவன் "சரி" என்ற நொடி ஆதித்தின் முகத்தில் ஏரிந்த பல்ப் மறுநொடி அவன் உதிர்த்த வார்த்தைகளில் பியூஸ் போனது. "நா உனக்கு சொல்லித்தாரேன் அத பாடு."

மறுக்கவா முடியும்! ஆதித் "சரி" என்று பூம்பூம் மாடு போல் தலையாட்டினான். அவர்களிடையே அடுத்து நிகழ்ந்த உரையாடல் மைக் சத்தத்தில் சரித்ராவிற்கு கேட்கவில்லை. ஆனால் முகத்தை பார்க்க ஆதித் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி கண்கள் லேசாக கலங்க சீனியரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த விடாகண்டன் முடியவே முடியாதென மறுத்துவிட்டான்.

கடைசி நிகழ்ச்சியாக ஜீனியர் யாரைவது அவர்கள் திறமையை வெளிப்படுத்த மேடைக்கு வரலாம் என்ற அறிவிப்பு வந்தநொடி எழுந்து சென்றால் சரித்ரா. ஆதித்திற்கு முன்பாக; ஆதித்திற்காக.

"சிறப்பான ஒரு பர்போமன்ஸ் பண்ண போறாங்க சரித்ரா. ஆர்கியோலோஜி டிபார்ட்மெண்ட்".என கைதட்டினான். அந்த சீனியர் மாணவன். அதை தொடர்ந்து மற்ற மாணவர்களும் கரகோஷம் எழுப்பினர்.

"என்ன செய்ய போறிங்க சரித்ரா?"
" பாட்டு பாட போறேன் சீனியர் "
" all the best "என்ற வாழ்த்துடன் மேடையில் இருந்து நகர்ந்தான் அந்த சீனியர் மாணவன். அதை புன்னகையுடன் ஏற்றவள் அவளை பார்த்துக்கொண்டு இருந்த மாணவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு கண்ணை முடியவள் பாட ஆரம்பித்தால்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால்
பகல் ஒன்று வந்திடுமே


நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ
நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ
மோதி விடு ஒவ்வொரு

பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே வாழ்க்கை கவிதை

வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த
வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடுமலையோ அது பனியோ நீ மோதி விடுஒவ்வொரு


பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால்
பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது
வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில் மனமே ஓ மனமே
நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு


கண்மூடி அவள் உருகிப்பாட அனைவரும் உறைந்து விட்டனர். அவள் பாடி கண்ணை திறந்த நொடி கரகோஷம் காதை கிழித்தது.

"இம்போசிபள்!! எவ்வளவு அழகா பாடிறிங்க சரித்ரா சூப்பர்! அதிலயும் உங்க குரல் நா அப்பிடியே மெல்ட்டாகிட்டேன்." என பிரம்மிப்புடன் கூறியவன் மனதில் ஒரு திட்டமும் உருவாகியது. அவள் புன்னகையுடன் நன்றி கூற மீண்டும் கரகோஷம் எழுப்பியது.

அவள் மேடையேறியது தொடக்கம் பாடியது முதற்கொண்டு தற்போதைய புன்னகை வரை இமைமூடாமல் பார்த்துக் கொண்டிருந்தது அன் நீல நயனங்கள்.


ராட்சசன் வருவான் .........
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top