• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரட்சகியின் ராட்சசன் - 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vedhamadhi

நாட்டாமை
Author
Joined
Jan 16, 2021
Messages
48
Reaction score
73
Location
sri lanka
ரட்சகியின் ராட்சசன்
கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியாய் இருந்த அன்நூலகத்தில் அவனின் அழுத்தமான நடையால் உருவாகிய காலடிகளின் சத்தத்தில் நூலகத்தில் இருந்த பலரின் பார்வை அவன் மேல் பதிய; அப்போதுதான் தன் தவறை உணர்ந்தவன் அதை காட்டிக்கொள்ளாமல் மீண்டும் பழையப்படி கெத்தாக நடந்தான். அவன் காலடி சத்தத்திலும் அவனை நிமிர்ந்து பாராமல் புத்தகத்தினுள் தலையை புதைத்திருந்தவளின் அருகில் அமர்ந்தவன் அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை பறித்தான்.

அதில் கோபம் கொண்டவள் ஹஸ்கி வாய்ஸ்ஸில் " பட்டு" என பற்களை கடிக்க ; ஒற்றை புருவம் உயர்த்தி " என்ன பேபி? " என கிண்டல் குரலில் கேட்டவனை முறைத்தால் சரித்ரா.

" ஏன்டா என் புக்க புடுங்கின ? " என ஆழ்ந்த துயில் கொண்டிருத்தவளின் முகத்தில் குளிர் நீரை ஊற்றியதுப்போல் எரிந்து விழுந்தால்.

" ஏன் பேபி! உனக்கே நியாயமா இருக்கா? எல்லாரும் அவங்க ஜீனியர்ஸ்ஸ ராகிங் பண்ணிக்கிட்டு சுத்திரானுங்க! நீ என்னானா! 'ஓசி சோறு கிடைக்கும் ' அப்பிடினு போட் மாட்டின மாறி லைப்ரரியிலே தஞ்சமாகிட்ட. வெளில வா பேபி! நம்ம ஜீனியர்ஸ் எல்லாம் குழந்தபசங்க. சின்ன சின்ன டாஸ்க்கே கண்ண கசக்கிறாங்க. நா எல்லாம் ...." என ஆரம்பித்தவனின் வார்த்தைகள் சரித்ராவின் கொலைவெறி முறைப்பில் குரல்வளைக்குள்ளே சிக்கிக்கொண்டன.

" ஏன்டா புழுகுமூட்ட !! இப்படி மனசாட்சியே இல்லாம பொய் சொல்ரியே? அதுவும் என்கிட்டயே? நா என்ன amnesia பேஷண்டா ? எரும! நீ எல்..." ம்ஹீம் ! முடிக்கவில்லை !கைக்கொண்டு அவள் வாயை மூடி அவள் வார்த்தைகளுக்கு அரணமைத்தான் ஆதித். அப்படியே சுற்றிமுற்றிப் பார்த்து தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் பெருமூச்சி ஒன்றை இழுத்துவிட்டப்படி அவளைப்பார்க்க ; அவள் அவனை உக்கிரமான முறைத்துக் கொண்டிருந்தாள்.

தலையை சாய்த்து, கண்ணை சுருக்கி , முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு " why ? baby why? why this கொலவெறி ? ஏற்கனவே நம்ம டிபார்ட்மெண்ட்ல சில விஷ கிருமிகள் நம்மல லவ்வர்ஸ்னு கெளப்பி விட்ட புரளில ஒரு பொண்ணு கூட எனக்கு பிரப்போஸ் பண்ண மாட்டிக்கிது. ஜீனியர்ஸ் கிட்ட mass hero கணக்கா ஈமேஜ் க்ரீயேட் பண்ணி வச்சிருக்கேன். சோ ப்ளீஸ் வேணா !" என ஹஸ்கிவாய்ஸ்ஸில் கூறி ; அவன் கையை எடுக்க; அவன் கூறிய தோரணையில் அடக்கமட்டாமல் வாய்விட்டுச் சிரித்தால் சரித்ரா.

சிரிப்பினூடே அவன் தோள்களில் அடித்தவாறு " பட்டு ! பட்டு! நீ இருக்கியே !! " என ஆரம்பித்தவள் முடிக்காமலே சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் .

" ம்ம்! சொல்லி பேபி! " என ஊக்குவிக்க

அதைக்கூற வாயெடுத்தவளின் முகத்தில் உணர்ச்சிகள் மாறியது. ஆர்வமிகுதியால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் முகமாற்றத்தை கண்டு யோசிக்க அவன் மண்டையில் பல்ப் எரிந்தது. அவளை பார்க்க அவன் எண்ணம் சரி என்பது போல் கண் சிமிட்டினால் சரித்ரா . இருவரும் ஒரே நேரத்தில் திருப்ப அவர்களை முறைத்துக்கொண்டிருந்த லைப்ரரியன் கண்களில் கனல் பறந்தது.

' மாயண்ணே வந்திருக்காக! மாப்பிள்ள மொக்கச்சாமி வந்திருக்காக!! மற்றும் நம் உறவினர்களாம் வந்திருக்காக !!! என்ற டயலோக் இல்லாமலே மின்னல் போல் மாயமாகி இருந்தனர் ஆதித்தும் , சரித்ராவும்.

☆☆_____________________________☆☆

"சொல்லு பேபி!"

" நீ மீச வச்ச கேடிக்கொழந்த தங்கம் " என அவன் தாடை பிடித்து கொஞ்ச அதில் குழந்தையாய் குதுகளித்தவன் " போ பேபி ! எனக்கு வெக்கவெக்கமா ! வருது " என பொய்யாய் நாணம் கொள்ள ; அவன் செய்கையில் அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க; அவளுடன் சிரிப்பில் இணைத்துக் கொண்டான் ஆதித்.

சிரித்தப்படியே அந்த பெரிய மரத்திற்கு கீழ் இருந்த பென்ச்சில் அமர்ந்தனர்.

" என்ன புரோப்லம் பேபி? எதப்பத்தி தேடுர ? " என கேட்டவன் அவளை நோக்கியவாறு சமங்காலிட்டு அமர்ந்தான்.

" லெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்னுதானான டவூட் "

" 'லெமூரியா'! இது தமிழ் பெயரா பேபி ?"

" இல்லப்பட்டு ! அந்த பெயரோட வேர்ச்சொல் லெமூர் ங்ர ஒரு வகை குரங்குகில இருந்து வந்தது."

" ஏய்! லெமூர் குரங்கு ! அதிதா உலத்தில நிறைய இடத்தில இருக்கே பேபி"

" ம்ம் பட்டு ! அது எல்லாம் சுத்தமான வகை இல்லபா; அதோட தூய வகை மடகஸ்கார்ல மட்டும் தான் இருக்கு. உலகத்தில மடகஸ்கார தவிர வேற எங்கயும் இதோட சுத்தமான வகையில ஒன்னு கூட இல்ல.

பல்லாயிரம் வருஷத்திக்கு முன்னுக்கு வாழ்ந்த இந்த குரங்குட்டு ஒரு வகையான ' லெமூர் புல்வஸ்' ட ( Eulemur fulvas) படிமம் மடக்கஸ்கார தவிர வேற எங்கயும் இருக்க வாய்ப்பில்லாத போது ; 1800 ல இந்தியால நீலகிரி மலைகள்ல நடந்த ரீசர்ச்ல இதே லெமூர் புல்வஸ்'ட படிமம் கிடச்சிருக்கு. இதப்பத்தி பிலிப் ஷ்லாட்டர்ங்கிர விலங்கியலாளர் 1864 ல ' மடகஸ்கார் பாலூட்டிகள்'ங்கிர கட்டுரைல சொல்லிருக்காறு.


மடகாஸ்கருக்கு 100 மைல் தொலைவில் உள்ள ஆப்ரிக்காவிற்குப் பரவாத லெமூர் குரங்கு, மடகாஸ்கருக்கு 5,000 மைல் தொலைவில் உள்ள நீலகிரியில் வாழ்ந்தது எப்படி? ங்கிர கேள்விய தனக்குத் தானே முன்வைத்த ஷ்லாட்டர் ‘லெமூர் குரங்குக மடகாஸ்கரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர, இடையில இரண்டு இடத்தையும் இணைக்கிற அளவுக்கு ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்திருக்கனும். அப்பறம் அது கடலில் மூழ்கி இருக்கனுங்கிற ’ பதிலையும் தந்திருக்காரு. இப்பிடி நீலகிரிக்கும் மடகாஸ்கருக்கும் இடையில லெமூர்கள் வாழ்ந்ததா அவர் சொன்ன பகுதிக்கு அவர் வச்ச பெயரே லெமூரியா .

அந்த டைம் எர்னஸ்ட் ஹேக்கெல்ங்கிர ஜெர்மானிய ஆய்வாளர் இப்பிடி ஒரு நிலப்பகுதி இருக்க சாத்தியமுள்ளதா ஏற்கனவே சொல்லிருக்க ; இந்த நிலப்பரப்ப பத்தின கருத்து ஸ்ரோங்காச்சி .

1904 ல 'கனகசபை'ங்கிர தமிழறிஞர் ஒருத்தர் கடல்கொண்ட குமரியைப் பத்தி எழுதிருக்காரு. 1906 ல சித்தாந்த தீபிகை மெகஸின்ட ஆசிரியர் நல்லசிவம் பிள்ளை அவரோட கட்டுரைல ‘கனகசபை கூறிய கடல்கொண்ட குமரியே ஷ்லாட்டர் காட்டும் லெமூரியா’னு எழுதிருக்காரு. அதுவரைக்கும் குமரிக் கண்டம் பத்தி எந்த ரீசர்ச்சும் வெளியாகாத நிலைல தமிழ் கூறும் நல்லுலகமும் அவர் சொன்னத அப்படியே அக்செப்ட் பண்ணிருக்கு. இந்த மாதிரி ரீசன்ட்டால ’குமரிக் கண்டமே லெமூரியா’ங்கிர கருத்து பரவியிருக்கு." என அவள் அறிந்துக் கொண்டதையேல்லாம் மூச்சிவிடாமல் ஒப்புவிக்க இடையிட்டான்ஆதித்.


" wow ! என்ன ஒரு மூள ?
ஜஸ்ட் ஒரு குரங்குட்டு படிமத்த வச்சி ஒரு பெரிய கண்டத்தையே உருவாக்கிருக்காங்க.
ஆனா பாரு பேபி! ஷ்லாட்டர் ஒரு விலங்கியலாளர். அத வச்சி அவர் உருவாக்கியதுதா லெமூரியா. ஆனா குமரிக்கண்டம் தமிழ் ஆய்வில இருந்தி பிறந்து.
காப்பியங்கள், இலக்கியங்கள சொல்லப்பட்டது.
அதயும் இதயும் எப்பிடி மூடிச்சிப் போட்டிருக்காங்க.

" இதில முக்கிய போய்ன்ட் அந்த குரங்கு படிமம்." என நிறுத்தி யோசித்தவன் முகம் பிரகாசமாக மீண்டும் தொடர்ந்தான்.

"பனரோசோயிக் காலத்தில மொத்த பூமியும் ஒன்னாதா இருந்திச்சி. அப்பறம் ஜுராசிக் காலத்தில இரண்டாகப் பிளந்தது. அதில ஒரு பார்ட் லாரேசியா, மத்த பார்ட் கோண்டுவானா. அதிக்கு பிறகு கிறிஸ்தேசியன் காலத்தில இந்த ரெண்டும் பெரிய நிலப்பரப்பும் உடஞ்சி 14 புவித்தட்டுகளாக மாறிச்சி .

அப்பிடித்தான் ஒரு காலத்தில ஆப்ரிக்காவும், இந்தியாவும் சேந்து இருன்ச்சி. நடுவில மடகஸ்கார் இருந்திச்சி. அப்பறம் ஆப்ரிக்கா தனியா பிரிஞ்சி போய் ஒரு கண்டமா மாறினிச்சி. அதி நடந்து பல மில்லியன் வருஷத்திக்கப்பறம் மடகஸ்கார் இந்தியால இருந்து உடஞ்சி ஆப்ரிக்கா போன திசைலயே அதுவும் போய்ரிச்சி. maybe நீரோட்டத்தால இருக்கலாம் or புவித்தட்டசைவு.

இந்தியா எதிர்திசைல போய் ஆசியா மேல மோதி, அத்தோட சேந்திரிச்சி. இதனால உருவானதுதா இமயமல. சோ!! இதனாலத்தா மடகாஸ்கார்லயும் ,நீலகிரியிலும் அந்த லெமூர் குரங்கிட படிமம் கிடச்சிருக்களாம். that's all." என கைகளை விரித்தான் ஆதித்.

வெற்றிக்களிப்புடன் அவன் முகம் பார்த்தவள் "பட்டு!! உனக்கு ஜப்பான்காரே மூளடா!! " என அவன் தலைமுடியை கலைத்தால் சரித்ரா.

"ஒய்!! வேணா! முடிய விடு !! என் ஹேயார்ஸ்டைல் கலஞ்சிரும். " என அவளிடம் இருந்து அவன் ஹேயார்ஸ்டைலை காப்பாத்த போராடினான். அதை கேட்டு அவன் தலைமுடியை நன்றாக கலைத்து விட்டு நக்கலாய் முறுவளித்தாள் சரித்ரா.

அவன் முறைக்க இரண்டடி தள்ளி நின்று அவனைப் பார்த்தவள் "பட்டு இப்ப உன் ஹேயார்ஸ்டைல் அப்பிடியே சந்திரமுகி வடிவேல்ட மாதிரியே இருக்கு. " என்று குலுங்கிகுலுங்கி சிரிக்க ஆரம்பித்தவளை கொடூரமாக முறைத்தான் ஆதித் .


" அப்பிடியே ஒழுங்கா ஓடிரு! வந்தேன் உன்ன கடிச்சி வச்சிருவன் " அவன் மிரட்ட

" என்னடா ! zombie கணக்கா மிரட்டிர. " என்றப்படி அவன் அருகில் வர உதட்டை பிதுங்கி முகத்தை திருப்பினான் ஆதித்.

" டேய் பட்டு! என்ன கோபமா? " என்றப்படி அவன் தலைமுடியை சரி செய்ய அவன் 'ஆம்' என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.

"நீ சொன்ன விசயத்த நா யோசிக்கவே இல்ல பட்டு. " அவள் ஆரம்பிக்க

" அதுக்கேல்லாம் மண்டகசாயம் இருக்கனும் மக்கு பேபி" என இடையிட்டு அவளைப்போலவே நக்கலாய் சிரிக்க,

" நா அதப்பத்தி படிச்சிக்கிட்டு இருக்கும் போது இடையில ஒரு வாலில்லா குரங்கு book க்க பிடிங்கிரிச்சி. அப்பறம் நீ சொன்னது 1915 ல ஆல்ஃப்ரெட் வெகெர்னர்ட வெளியிட்ட கொள்கை. அவரோரு german scientist.

’உலகம் ஃபுல்லா உள்ள நிலப்பரப்பு எல்லாம் ஒருகாலத்தில் ஒன்னா இணைந்து இருந்தது’ங்கிறது தான் அவரோட கொள்கைட அடிநாதம். அந்த அமைப்பிற்கு அவர் வச்ச பெயர்தா ’பாஞ்ஜியா. '

ஆப்பிரிக்கா பிரிஞ்சி கிட்டத்தட்ட 30-40 மில்லியன் வருஷத்துக்கு முன்னுக்கு தான் மடகாஸ்கர் இந்தியால இருந்து உடஞ்சது."
என கூறியப்படியே அவன் ஹேயார்ஸ்டைலை சரிசெய்தப்படி " அப்பிடியே. ஷ்லாட்டர் சொன்னப்படி தமிழ்நாட்டுக்கும் , மடகஸ்கார்க்கும் இடைல ஒரு நிலப்பரப்பு இருந்து லெமூர் புல்வஸ் மடகஸ்காரல இருந்து இந்தியாக்கு இடம்பெயர்ந்திருந்தா நிச்சயம் கூர்ப்பு நடந்திருக்கும். அதனால ஒரே மாதிரியான படிமம் கிடச்சிருக்காது. ஏனா கூர்ப்புக்கு அடிப்படை காரணமே அங்கிகள் இடம்பெயர்ந்ததுதான். "

"இதில இருந்து என்ன தெரியுதுனா! " என நிறுத்தி அவன் முகம் பார்க்க "லெமூரியாங்கிரது கற்பனை. குமரிக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்ல " என இருவரும் ஒன்றாக கூறி புன்னகைத்துக் கொண்டனர்.


பென்ச்சில் அமர்ந்தவள் " நாளைக்கு நம்ம uni ட 50th anniversary பங்ஷன் இருக்கில்ல. இதப்பத்தி யோச்சி அத மறந்திட்டேன் பா" என்றாள் சரித்ரா.

" நீ ஓகனேஷன் டீம் ல இருக்கல்ல.உனக்கு அங்க எதும் வேல இல்லையா?"

" ம்ம். இருந்திச்சி! ஜீனியர்ஸ் கூட செம்மயா வேல செஞ்சன். அப்பதா மொக்கபோட ஆள் இல்லனு உன்ன தேடி வந்தேன்." என நக்கலடித்தப்படி அவன் எழ இப்போது முறைப்பது அவள் முறை.

அதை ஒரு பொட்டாக எடுக்காமல் தூசிப்போல் தட்டியவன் நடக்க ஆரம்பித்தான். அதில் உதட்டை சுளித்தவள் வேகமாக நடந்து அவனை நன்றாக இடித்துவிட்டு நிற்காமல் நடந்துக்கொண்டே அவனை திரும்பிப் பார்த்து சிரிக்க ;அதில் பாதையை கவனிக்காததால் மரவேர் தடுக்கிவிட்டது.

தரையில் விழப்போனவளை தாங்கிப்பிடித்தது இரு கரங்கள். " ஏன் பேபி பார்த்து வரமாட்ட ? கண்ணு என்ன தல பின்னுக்கா இருக்கு? லூசு" என கண்கள் சிவக்க, முகம் இறுக கோபத்தில் தெறித்தன ஆதித்தின் வார்த்தைகள்.

அதில் அவள் முகம் வேதனையாய் சுருங்க பல்லைக்கடித்தவன் " நடிக்காத ! கடுப்பாகிது!." என்று சொல்லியப்படி மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கால்களில் காயம் உள்ளதா என ஆராய்ந்தான். செருப்பு வேரில் மாட்டி கொஞ்சம் பிய்ந்திருந்தது ஆனால் காலில் காயமோ, வீக்கமோ இல்லை. அதில் நிம்மதி அடைந்தவன் அவளை அன்னார்ந்து பார்த்து வலிக்கிதா? என்று வினவ அவள் தலை குனிந்து மறுப்பாக தலையசைத்தாள்.

எழுத்து நின்றவன் " என் கையப்புடிச்சிட்டு ஒழுங்கா நட " என குழந்தையை மிரட்டுவது போல் மிரட்டினான். அவளும் மறுப்பின்றி அவன் கைப்பிடித்து நடந்தாள்.

"கோவமா பேபி? " என கேட்டான் ஆதுரமாய்.

" இல்ல பட்டு! நீ என் அம்மா மாதிரி " என அவள் முறுவளிக்க

"ஏன் மாதிரி? " என கண்களால் சிரித்தப்படி அவன் கேட்க அதன் அர்த்தம் புரிந்தவள் அவனுடன் நடைப்போட்டால்; நாளைய நாளைப்பற்றி பேசியப்படி...."

ராட்சசன் வருவான்........

நா இந்த episode ல Google ல தேடின தகவல்கள italic எழுத்துல தந்திருக்கேன் . என்னோட கருத்த bold பண்ணி எழுத்திருக்கேன்.

லெமூரியா ,குமரிக்கண்டம் இது இரண்டிலயும் இருக்க வேறுபாடுல நல்லா குழம்பிட்டேன். குமரிகண்டம்னு Google search பண்ணாலும் லெமூரியா குமரிகண்டம்னு வரும்.

நா Google ல தேடி புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் லெமூரியா பிலிப் ஷ்லாட்டர் ட கருதுகோள்.
ஆனா அது பிறகு தப்புனு கூறப்பட்டது. இந்த மாதிரி நிறைய விஞ்ஞானிகள்ட கருத்துக்கள் முதல்ல ஏற்க்கப்பட்டு பின் தப்புனு நிருபிக்க பட்டிருக்கு.

அறிவியல் மற்றும் புவி வரலாற்றின் ஒரு பகுதியான ’புவியியல் துறை’ ஆனால் அது ஷ்லாட்டரின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை..
கடலின் உள்ளாக 5,000 மைல்கள் நீளம் உள்ள ஒரு நிலப்பரப்பு மூழ்க புவியியல் ரீதியாக வாய்ப்பில்லை என்பதோடு, ஒரு குரங்கை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மாபெரும் மாற்றத்தை அளவிட முடியாது என்பதே புவியியலாளர்கள் லெமூரியா என்ற கருத்தை மறுத்ததற்குக் காரணம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top