• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரட்சகியின் ராட்சசன் - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vedhamadhi

நாட்டாமை
Author
Joined
Jan 16, 2021
Messages
48
Reaction score
73
Location
sri lanka
ரட்சகியின் ராட்சசன்
காலில் சக்கரம்கட்டியதுப்போல் வேலை செய்துக் கொண்டிருந்தால் சரித்ரா. கிட்டத்தட்ட ஒருவாரம் செய்யாத பங்களிப்பை இந்த பன்னிரண்டு் மணித்தியாளத்தில் செய்து முடிக்க முயற்சி செய்திக் கொண்டிருந்தால்.
இந்த கலவரத்தில்; அவள் புடவை வேறு "இப்போது புதையல் எடுக்கப்போகிறாய் !' என அவள் நடக்கும் போதெல்லாம் தடுக்கிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

" ஹப்பா !!! " எல்லாம் நல்லபடியாக ஆரம்பித்து விட்டது. இப்போது கல்லூரி முதல்வரின் உரை நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது.

ஸ்டேஜ்க்கு பின்புற வாயிலில் இருந்த யாருமற்ற, இரண்டு வாயில்களை கொண்ட அறையில் இரு கையையும் தலைக்கு முட்டுகொடுத்தப்படி அமர்ந்திருந்த சரித்ராவின் முன் ;இரு கைகளையும் பின்னுக்கு கட்டியப்படி கன்னக்குழி குழந்தை சிரிப்புடன் வத்து நின்றான் ஆதித் .

அவனை கண்டதும் இருக்கையை விட்டு எழுந்தவள் நெட்டிமுறித்து திருஷ்டி கழித்தால். "அழகா இருக்க பட்டு என் கண்ணே பட்டிருச்சி!!" என அவன் கன்னம் கிள்ளி கொஞ்சினால்.

" போ!! பேபி! " என சிரித்தவன் "நீயும் தான் பேபி அழகா இருக்க.அதிலயும் இந்த dark pupil saree உனக்கு செம்மயா இருக்கு."

"பட்டு உன் கைல என்ன இருக்கு? " என அப்போதுதான் அவன் கையை பார்த்தவள் கேட்டால். " முதல்ல உன் கண்ண மூடு பேபி" என சிரித்தப்படி கட்டளையிட்டான் ஆதித் .
" பிளீஸ் " என தலையை சாய்த்து கேட்டவளின் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் ; உதட்டை பிதுக்கியப்படி மறுப்பாய் தலையசைத்தான் ஆதித். அதற்கு உதட்டை சுளித்தப்படி கண்களை மூடினால் சரித்ரா.

" பேபி! இப்ப கண்ணதிற" என்ற பட்டுவின் குரலில் இமைபிரித்தவளின் விழிகள் விரிந்து, அவள் முகம் மகிழ்ச்சியில் ஒப்பனை இல்லாமலே ஜொலிக்க ஆரம்பித்தது. அவள் முன் கருப்பு நிற பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தது கருநீல நிற strap sandals.

சென்ற வாரம் ஆதித்தை இழுத்துக்கொண்டு சென்ற ஷாப்பிங்கின் போது அவளை கவர்ந்த செருப்புதான் இது . ஆனால் அவள் துரதிர்ஷ்டம் அவள் காலுக்கு பொருந்தும் அளவில் மட்டும் கிடைக்கவில்லை. அந்த கடையில் மட்டுமல்ல, அந்த நகரத்தில் இருந்த அத்தனை கடையிலும் அலசிவிட்டால். ம்ஹூம்! ....கிடைக்கவே இல்லை!! கடைசியில் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு விடுதியை அடைந்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது.

' பட்டுக்கு எப்பிடி கிடைச்சது? ' என்ற கேள்வியுடன் அவனை பார்க்க ; அதை புரிந்துக்கொண்டவன் " இப்ப அதப்பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்னபண்ண போற பேபி? நீ இப்ப happy தானே? " என பதில் கேள்வி விளிக்க

தலையை மேலும் கீழும் ஆட்டியவள் " ஆமா பட்டு ! ரொம்ப!! ரொம்ப !!! happy " என கை இரண்டையும் விரித்துக் காட்டி சிரித்தாள் சரித்ரா. "பேபி நீ பேரழகி !" என அவளுக்கு நெட்டி முறித்தப்படி சிரித்தான் ஆதித்.

அப்போது ஸ்டேஜ் வாயில் வழியாக அங்கு வந்த லக்ஷ்மன் கூறிய செய்தியில் சரித்ராவின் முகத்தில் இருந்த சந்தோசம் துளிக்கூட மிஞ்சாமல் மறைந்து , அதற்கு பதிலாக கலவரமும், குழப்பமும் குடிக்கொண்டது.

" சீனியர் ! என்ன சொல்றீங்க? நா பேர் கொடுக்கவே இல்லையே! அப்பறம் பாட்டு கூட ரெடி பண்ணல! practice வும் பண்ணல ! ரீயசலும் பாக்கல! அப்ப எப்பிடி program ம நீங்க ok பண்ணலாம் ?" என சிங்களத்தில் வினவ

"ஆமா சரித்ரா! நீ உன் பேர கொடுக்கல! ஆனா 'மலர்கள் கேட்டேன்....' song க ரெக்கோட் பண்ணி அனுப்பிருந்த. அது நல்லா இருந்திச்சி. music team கூட ரெடி. விஷ்ணு எல்லாத்தையும் சரி பார்த்திட்டான். அடுத்த program உன்னோடது. என்னால ஒன்னும் செய்ய முடியாது. அப்பறம்....." என இழுத்தவனை கலக்கத்துடன் பார்த்த சரித்ராவிடம் " உன் பெயர் கொடுத்தது ஆதித்தான்" என ஆதித் செய்கையால் கெஞ்சுவதையும் பொருட்படுத்தாமல் இருவர் தலையிலும் அலுங்காமல் குலுங்காமல் ஒரு நியூக்ளியர் பாம்மை போட்டுவிட்டு சென்றான் சீனியர் லக்ஷ்மன்.

மறுநொடி கொலைவெறியுடன் திருப்பியவளின் பார்வையில் விழுந்தான் பத்தடி தள்ளிநின்ற பட்டு.

" எரும! ஏன்டா என் பேர கொடுத்த? " என கத்தியவளை பார்த்து நம்பியார் போல வில்லங்கமாக சிரித்தவன் " ரிவேன்ச் பேபி! ரிவேன்ச்! அன்னைக்கு என்னப்பார்த்து வயிறு குலுங்க சிரிச்சல்ல! அதுக்குத்தான்." என வில்லத்தனமாக கூற

அதில் ஏக கடுப்பாகியவள் " உன்னன........." என்றப்படி அவனை அடிக்க ஆயுதம் தேடியவளின் கண்ணில் விழுந்தது அந்த பெட்டியின் இருந்த புது செருப்பு. நொடியும் யோசிக்காமல் ஓட்டம் பிடித்த ஆதித்தை நோக்கி வீசினால் ஒரு செருப்பை.

இன்று சரித்ராவிற்கு சந்திராஷ்டமம் போல! ஏற்கனவே எதற்கும் தயாராக இருந்த ஆதித் கொசுப்போல் மறுவாயில் வழியாக வெளியேற ; அதே நேரம் அதேவழியில் உள்ளே வந்தவனின் மேல் வீசிய செருப்பு படப்போக! விழி விழுந்துவிடும் அளவு விரிய ,ஒரு கையை தலையில் வைத்தப்படி, மறுக்கையை முன்நீட்டியப்படி " Nooooooo......" என அலறினால் சரித்ரா.

கணப்பொழுதில் சுதாகரித்தவன் உடலை திருப்ப சில மில்லிமீட்டர் இடைவெளியில் அவனை உரசாமல் பறந்து சென்று தரையில் விழுந்தது அந்த strap sandals.

செருப்பு அவன் மீது படவில்லை என்ற நிம்மதியுடன் நெஞ்சில் கைவைத்தப்படி "ஈஸ்வரா....." என்றபடி கண்களை மூடித் திறந்தவளை பார்வையாலே சாம்பலாக்கிக் கொண்டிருந்தது அக்னி பிம்பங்களாய் ஜொலித்த அந்த ஆழி வண்ண நயனங்கள்.

' என்ன இவன் supper man கணக்கா கண்ணில நெருப்பு வச்சிருக்கான் ?' என மனம் தலை சொரிய ' ஆண்டவா !! அவன் உன்ன முறைக்கிறான்!!! சீ ! இல்ல...... ஏரிக்கிறான் . இப்ப இவன் கிட்ட மாட்டினா கண்ணாலயே ஏரிச்சி சாம்பல கங்கைல கரைச்சிருவான் . ஆண்டவா !! என்ன காப்பாத்து !!!' என புத்தி அவலக்குரல் எழுப்ப அந்த கணம் அவள் வேண்டுதல் இறைவனை அடைந்தது போல் மைக்கில் சரித்ராவின் பெயர் ஒலிப் பரப்பப்பட்டது.

இப்போது அவனும் அவளை நெருங்க ;அங்கே தொடங்கியவளின் ஓட்டம் ஸ்டேஜில் வந்துதான் நின்றது.

லக்ஷ்மனிடம் மைக்கை வாங்கியவள் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டு இசை குழுவிடம் பெருவிரலை உயர்த்திக்காட்ட திரை மெதுவாக விலக்கப்பட்டது. அவள் கண்முன் ஆயிரம் கணக்கான மாணவர்கள், பழைய மாணவர்கள், பேராசிரியர்கள் , முக்கிய அங்கத்தவர்க்ள் , விருந்தினர்க்ள் , பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மேலும் பத்திரிகை நிருபர்கள் என அந்த பிரம்மாண்ட அரங்கமே நிறைந்திருந்தது.

விரல் சொடக்கும் நாழிகைக்கும் குறைவான நேரத்தில் அரங்கை ஆராய்ந்தவளின் விழிகள்
அந்த அக்னி ஹோமம் வளர்த்த நீல விழிகளை பார்த்த படியே இமை மூடின.

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்

எதை நான் கேட்பின்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்ந்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

பாடிமுடித்தவள் கண்களை திறக்க கரகோஷம் பல நிமிடங்களுக்கு நீண்டது.உடனே சரித்ராவின் தலை அனல் விழியனை நோக்கி திருப்ப அவனோ கண்களை மூடி பாடலில் லயத்திருந்தான். இன்னும் திறந்தபாடில்லை.

' அவன் கண்ண திறக்க முன்னுக்கு ஓடிரு சரித்ரா ' என அவள் மனம் உரைக்க மறுநொடி மேடையை விட்டு இறங்கியவள் 'ரெடி ஜூட்' என்றபடி ஒட ஆரம்பித்தவள் அவளின் விடுதி அறையை அடைந்த பின்தான் நிம்மதியாக மூச்சி விட்டால்.

குளித்து உடை மாற்றியவள் கூந்தலை உலர்த்தி விட்டு கட்டிலில் சரிய; நேற்றைய தூக்கமின்மையும், வேலை களைப்பும் சேர்ந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றால் சரித்ரா . இடை இடையே அந்த நீல நிற நயனங்கள் வேறு கனவில் வந்து தூக்கத்திற்கு தொல்லை செய்தது.

☆☆_________________________________☆☆

கென்டினில் மாணவர்கள் குறைவாக இருந்த ஒரு மூலையில் நிகழ்ந்துக் கொண்டிருந்தது அந்த வட்ட மாநாடுசபை. இடதுபக்க கன்னத்தை ஆள்காட்டி விரலால் தட்டியப்படி யோசித்துக் கொண்டிருந்தாள் சரித்ரா. அவளின் நெருங்கிய நண்பர்களை கொண்ட பஞ்சபூத நட்புசபை அவளைப் பார்த்தப்படி யோசனையில் இருந்தது. அதில் விதிவிலக்காக ஆதித் மட்டும் அவளை பார்த்து கர்வமாக முறுவளித்துக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்து சினம் பொங்கி எழ அவனைப் பார்த்தப்படியே பல்லைக்கடித்தவள் " ok guys!! இப்ப நா சொல்லப்போற விஷயம் நம்மல தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது. சத்தியம்." என மெல்லகூறி அவள் கையை முன்னே நீட்ட நால்வரும் அவள் கையில் சத்தியம் வைக்க மீண்டும் " யாராவது சத்தியத்த மீறினா எல்லாரும் இந்த செமஸ்டர்ல அரியர் வச்சிருவோம். அப்பறம் நம்ம கூட்டத்தில கமிட் ஆனவங்களுக்கு பிரேக்அப் ஆகிரும். நல்ல சாப்பாடு கிடைக்காது. " என பீடிகையுடன் ஆரம்பித்தவள் ஹஸ்கிவாய்ஸ்சில் நேற்று நடந்த அனைத்தையும் ஒப்புவித்தால் .அதிலும் முக்கியமாக செருப்பு அவன் மேல் படவில்லை என்பதை அழுத்தமாக underline பண்ணி கூறினால்.

அவள் கூறி முடித்தும் நால்வரது கண்களும் அதிர்ச்சியில் விரிய எல்லோருக்கும் ஒரு படி மேல் சென்று " தேவ்.... " என அலறிய ஆராதனாவின் வாயை மூடிய சரித்ரா கண்ணை உருட்டி சுற்றி இருப்பவர்களை காட்ட அப்போதுதான் அவளும் பார்த்தால். அங்கிருந்த பலரின் பார்வை அவர்கள் மீதுதான் பதிந்திருந்தது. காரணம் ' தேவ் 'என்ற பெயர் .

" சீ...னியர் தேவ் நேத்து சூப்பரா படினார்." என ஆராதனா சமாளிக்க மிச்ச நால்வரும் அதற்கு ஓத்தூதுவது போல் தலையாட்டினர்.

அவர்களை பார்த்த அனைவரும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்ட ஒரு பெண் மட்டும் ஒரு படி என்ன? பத்துபடி மேல் ஏறி
" தேவ் எது செய்தாலும் அது சூப்பரா தான் இருக்கும். ஏன்னா!! அவர் hero" என கண்கள் மின்ன கூறியவள் ; அவனைப்பற்றிய கனவுகளில் மிதக்க ஆரம்பிக்க 'உருப்பட்டிரும் ' என்பது போல் தலையாட்டினர் ஐவரும்.

" என்ன Ak இப்பிடி பண்ணிட்ட? உனக்கு கோபம் வராதே ?" என விளித்த நந்தனிடம் " நா டென்ஷனா இருந்தேன் நந்து " என தலையை தொங்கபோட்டுக் கொண்டு சரித்ரா கூற அதை காண சகிக்காத ஆதித் " இதில என்ன தப்பு? அவ என்ன அடிக்கத்தா வீசினா!! குறுக்க வந்தது அவன் தப்பு" என்றவனை மூவரும் முறைக்க சரித்ரா மட்டும் இன்னும் நிமிர்ந்த பாடில்லை .

அவர்களின் முறைப்பை எல்லாம் தோள்குலுக்கி அலட்சியப் படுத்தியவன் " அது just accident " என ஆதித் அடிக்காத குறையாய் கூற; மற்ற மூவரும் அதை தலையசைத்து ஏற்க , இத்தனை நேரம் குற்ற உணர்வில் தவித்த சரித்ராவின் முகமும் சற்று தெளிவடைந்து. காரணம் அவளிழைத்த வீரியமான குற்றமே.

அவள் முகத்தை பார்த்து கொஞ்சம் திருப்தி அடைந்த ஆதித் மீண்டும் தொடர்ந்தான்.
" இங்கபாரு பேபி !! நீ உடனே அவன் கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டா! கொஞ்சம் நாள் போகட்டும். நீ இப்ப கேட்ட அவன் திட்ட வாய்ப்பிருக்கு ! அது சிலருக்கு தெரிஞ்சா பிரச்சன. "

"ஆமா Ak! ஆதி சொல்லிறது correct .நீ கொஞ்ச நாளைக்கு அவன் கண்ணில படாத . main garden , library க்கு போகாத. தேவையான புத்தகங்கள எங்க கிட்ட சொல்லு , நாங்க கொண்டு வந்து தாரோம்." என்றாள் வருங்கால வக்கீலான வெண்மதி.

" அப்பறம் இதப்பத்தி யாரும் மூச்சிகூட விடக்கூடாது. ஏன்னா! இங்க ஈர பேனாக்கி ! பேன பெருமாள் ஆக்கவே சில பேய்ங்க அலையிது. so !! be careful. " என கூறினால் மகா உலறுவாயான ஆராதனா.

அக் கூற்றில் நால்வரும் அவளை சந்தேகமாக பார்க்க " ஏம்பா ! எல்லோரும் இப்படி பார்க்கிறிங்க? நம்ம பிரின்ஸி மேல சத்தியமா நா உலற மாட்டேன் " என்ற போதும் அவர்களின் பார்வையில் சிறிதும் மாற்றமில்லை.

" சரிப்பா! என் மேல சத்தியமா நா உலற மாட்டேன். வேற யாராவது உலறுனா நா பொறுப்பு கிடையாது. அப்பறம் முதல்ல என்ன சந்தேகபடிறத விட்டிட்டு இடத்த காலி பண்ணுங்க. இது main canteen." என்றிட அப்போதுதான் அதை யோசித்தவர்கள் அவரவர் வகுப்பறையை நோக்கி ஓட்டம் எடுத்தனர்.

அப் பாடவேலை பேராசிரியர் வாராததால் வகுப்பு மாணவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளை மற்றொரு பேராசிரியர் நூலகத்திற்கு வருமாறு கிடைத்த அறிவிப்பில் அப் பேராசிரியரிடம் சமர்பிக்க வேண்டிய தகவல்கள் அடங்கிய கோப்பை உடன் எடுத்துக்கொண்டவள் ஆதித்தை தேட அவனை காணவில்லை. எங்கயாவது தீயும் வரை கடலை வருத்துக்கொண்டிருப்பான்.

தனியாக நூலகத்திற்கு சென்றவள் பேராசிரியரிடம் இதுவரை தேடி தகவலை கொடுத்து விட்டு இன்னும் அது தொடர்பாக தேட வேண்டிய தகவல்களை பற்றி அறிந்து கொண்டு விடைபெற்றால்.

அந்த தகவல்களை பற்றி யோசித்தப்படியே மறந்து வழமைப்போல் main garden வழியாக அவளின் டிபார்ட்மெண்டை நோக்கி நடந்தால்.

அப்போது அவள் கையில் இருந்த புத்தகத்தில் இருந்து தரையில் விழுந்த bookmark க்கை குனிந்து எடுத்த போது அவள் மனதில் ஒரு இனிமையான உணர்வு படர அதில் லயத்தவள் அப்போதுதான் சுற்றம் உணர்ந்தால்.

இப்போது அந்த உணர்வை ரசிக்க முடியாத படி மனம் முழுவதும் பதட்டம் நிறைய சடாரென நிமிர்ந்தவளின் உள்ளுணர்வு அவளின் பின் யாரோ இருப்பதை கூற திரும்பியவள் கண் முதலில் கண்டது அந்த நீண்ட கழுத்தை.

சற்று நிமிர்ந்தவள் அத்தனை நேரம் இருந்த பதட்டம் மறைந்து மொட்டு விரிந்து மலர் மணம் பரப்புவது போல் அந்த இனிமையான உணர்வு அவள் மனம் நிறைத்தது. அதை ரசித்த படியே அவனை ஆராய தொடங்கினால் சரித்ரா.

'என்ன விட உயரமா இருக்கான் எப்பிடியும் 6 '1 இல்ல 6'2 இருப்பான். சுண்டினா சிகப்பாகிற கலர். ஜெல் வச்சி சீவிருக்கான். அதையும் தாண்டி அந்த நெத்திய உரசிர முடி செம்மயா இருக்கு. நெப்போலியன்ட வாள் முனைய விட கூர்மையான அடர் நீல கண் .அது என்கிட்ட என்னமோ சொல்லிர மாதிரி இருக்கு ! ஆனா என்னானுதா புரிதல! கூர் முக்கு. இறுக்கமான உதடு ஆனா அத கூர்மையா பார்த்தா மட்டும் தெரியிர ஒரு புன்னகை. smoking பண்ற பழக்கமில்ல போல. நல்ல பையன். அளவான மீச. அழகா ட்ரீம் செய்த தாடி. முகத்தில தெரியிற அளவு கடந்த வசீகரம் பசங்களையும் பொறாம பட வைக்கும் . '

' சரித்ரா இப்ப நீ செய்ரதுக்கு பெயர்தான் சைட் அடிக்கிறதா ? ' என புத்தி கேள்வி கேட்க

' சீ ....no...no...no...யாரப்பார்த்து என்ன கேள்வி கேட்டிட்ட? நா முக ஜோசியம் பார்க்கிறேன். '

' அப்பிடியா ? அப்ப நீங்க பாத்த ஜோசியத்த கொஞ்சம் சொல்லிங்க? ' மறுபடியும் புத்தி.

' அழுத்தக்காரன், கோபக்காரன் ....' என ஆரம்பிக்க அதை அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு நிறுத்தினான் அவன்.

அதில் நிதானத்திற்கு வந்தவள் "sorryசீனியர். நேத்து நா வேணும்னு அப்பிடி பண்ணல. என் ஃபிரெண்ட அடிக்கத்தா வீசினன். ஆனா தெரியாம உங்க மேல படபோய்ரிச்சி. பீளிஸ் சீனியர் இத பிரச்சனை ஆக்க வேண்டாம். தப்பு என்னோடு்டது தான் சீனியர். தயவு செஞ்சி என்ன மன்னிச்சிருங்க" என மூச்சி விடாமல் அவனிடம் ஒப்புவித்து அவன் முகம் பார்க்க

அவளை ஆழி வண்ண விழியால் ஆழ்ந்து பார்த்தவன் " என்னோட காதல் என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை ரதி"

முதலில் அவன் கூறுவது புரியாமல் திருதிருவென முழித்தவள் அர்த்தம் புரிந்த பின் அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் அவனை ஏறிட்டால்.

கண்ணாடி போல் மனதின் எண்ணங்களை முகத்தில் காட்டுபவளை நோக்கி அதரங்கள் விரித்து முத்துப்பற்கள் தெரியும் படியான அவனின் அரிதிலும் அரிதான வசீகர புன்னகையை சிந்தியவன் அவனின் அக்மார்க் வேக நடையுடன் அவ்விடம் விட்டு நீங்கினான்.

தூரத்தில் நடந்து செல்பவனின் முதுகை வெறித்தவாறு ஸ்தம்பித்து நின்றால் சரித்ரா.

ராட்சசன் வருவான்........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top