• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல... அனைத்தையும் படிக்க... அனைத்தும் தெரிந்து கொள்ளுங்க... பிறருக்கும் அனுப்பி வைக்க...
இப்படி ஒரு
சேவையை
Red Cross
சொசைட்டி
செய்வது
உங்களுக்கு
தெரியுமா ? எனக்கும் தெரியாது ...இதை படிக்கும் வரை!
படியுங்கள்....... பகிருங்கள்!

அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

அவர் சென்னை அரசு பொதுமருத்துவ
மனையில் அதிகாலை சுமார் 2.30 அளவில் காலமானார். அவரது உடலை அன்றே சொந்த ஊரில் தகனம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

அதிகாலை 3.00 மணிக்கு நண்பர் மருத்துவமனையை அடைகிறார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தகனம் செய்யும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். மறுபுறம் எப்படி எடுத்து அன்றே தகனம் செய்வது என்ற நெருக்கடி.

மருத்துவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்க வாகனம். மற்றொன்று தனியார் வாகனம் . நீங்கள் அரசாங்க வாகனத்தை உபயோகித்தால், உங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. நீங்கள் தனியார் வாகனம் உபயோகித்தால்
சுமார் ரூ.8000 முதல்
ரூ.15000 வரை கேட்பார்கள் என்று கூறினார்கள்.
நண்பரோ,
தனியார்தான் சிறந்தது என்றெண்ணி, அவர்களை தொடர்புக்கொண்டார். அவர்கள் சுமார் 8000 ரூபாய் செலவு ஆகும் என்றனர். மீண்டும் மருத்துவர்களைப் பார்த்து பேசிய நண்பர், அவர்களின் அறிவுரைப்படி,
அரசாங்க ஊர்தியின் விலையில்லா கட்டண தொலைபேசியை 155377ஐ அழைத்து விசாரித்திருக்கிறார். "நீங்கள் எங்கே உடலை எடுத்துச் செல்லவேண்டும்?" என்று அவர்கள் கேட்டுள்ளார்கள். நண்பர் விவரம் சொல்லவே, "நிச்சயம் நாங்கள் சிறந்த முறையில் உங்களின் பயணத்தை அமைத்து தருகிறோம் நீங்கள் ஆக வேண்டியதை முடிக்க சுமார் 3 மணி நேரமாகும், முதலில் அதை கவனியுங்கள் மற்றவை என்ன என்பதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!" என்றனர்.

அவர்கள் சொன்னபடி, நண்பரும் சுமார் 7.30 மணிக்கு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு, நண்பர் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் நண்பரிடம், "சார் எங்களால் 100 கி.மீ வரைதான் இலவசமாக செல்ல இயலும். நாங்கள் உங்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, காலையில் குருவாயூர் விரைவு இரயிலில் உங்களுக்கு போதிய வசதிகள் செய்துள்ளோம். உடலோடு ஒருவர் இலவசமாக செல்லலாம்" என்று கூறி ரயிலில் இஞ்சின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் உடலை ஏற்றி விட்டார்கள்.
கவனிக்கவும் - இதுவரை அப்படி ஒரு வசதி ரயிலில் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைத்து ரயிலிலும் இந்த வசதி உள்ளது.

திருச்சியை நெருங்கும் வேளையில், நண்பருக்கு ஒரு அழைப்பு அலைபேசியில். அவர்கள் அரசாங்க ஊர்தியின் பணியாட்கள். "நீங்கள் திருச்சி சந்திப்புக்கு வந்ததும், தொடர்புகொள்ளுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!" என்றனர். நண்பர் அவர்கள் சொன்னபடி, தொடர்வண்டி திருச்சி வந்ததும்,
அந்த எண்ணை அழைத்துள்ளார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் நடைமேடையிலேயே அவர்களின்
வருகைக்காக காத்திருந்தனர். வந்தவர்கள் இரண்டே நிமிடங்களில் உடலைத் தூக்கிகொண்டு ஊர்தியில் வைத்து, சொன்ன நேரத்திற்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி, ஊருக்கு உரிய நேரத்தில் எடுத்துச் சேர்த்துள்ளனர். நண்பரும் அவர் குடும்பத்தாரும், திட்டமிட்டபடி இறுதிச் சடங்குகளை குறித்த நேரத்திற்கெல்லாம் முடித்துள்ளார்கள்.

"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்".

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

பொது மருத்துவ
மனையிலிருந்து இறுதி வரை அவர்கள் ஒரு ரூபாய் கூட வாங்காதது மட்டுமல்லாமல். அவர்கள் எழும்பூரில் நண்பர் எடுத்த பயணச்சீட்டின் 100 ரூபாய் காசையும் திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

எனவே, இந்த சேவையைப் பற்றி நண்பர் சொன்னபடி இங்கு பதிந்துள்ளேன். அனைவரும் பகிரவும். இந்த செய்தி யாருக்காவது நன்மை அளிக்கட்டும்.

விலையில்லா அமரர் ஊர்தி எண் : 155377.

THANKS TO :
INDIAN RED CROSS SOCIETY - TN & GOVT. OF TN
படித்ததும் பகிர்கின்றேன்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top