Allivisalatchi
முதலமைச்சர்
தேவையான பொருட்கள்:-
ரவை - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
பச்சரிசி மாவு - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
சீனி - தேவையான அளவு
செய்முறை :-
முதலில் ரவையை பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறிய ரவையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். பின்னர் அதனுடன் மைதா, பச்சரிசி மாவு முதலியவற்றை சேர்த்து, அதனுடன் ஏலக்காய் சேர்த்து சிறிது அரைக்கவும். பின்னர் அதனுடன் சீனி சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.