• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ராகவன் குடும்பம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
பரந்தாமன் - ஆண்டாள் தம்பதியினருக்கு மூத்த மகள் சாந்தி, இளையவன் ராகவன். சாந்திக்கும் ராகவனுக்கும் பதினைந்து வருட இடைவெளி. சாந்திக்கு பிறகு மீண்டும் கர்ப்பமான ஆண்டாள் , முதலில் கருத்தடை செய்து கொள்ள இருந்தாள். ஆனால் பரந்தாமன் தான் கருத்தடைக்கு தடை போட்டார் . ராகவன் பிறந்த நேரம் பரந்தாமனுக்கு ரெயில்வே யில் செக்சன் மேனேஜராக வேலை கிடைத்தது. மகள் சாந்தியின் மீதும் பரந்தாமன் உயிரையே வைத்திருந்தார். சாந்திக்கு திருமண வயது ஆனதும் ஒரு நல்ல இடத்தில் வரன் பேசி முடித்தார்.

திருமண நாள் நெருங்கும் வரை சாந்தி அமைதியாகவே இருந்தாள். திருமண நாளும் வந்தது. ஆனால் மணமேடையில் அவள் ஏறவில்லை. யாரும் எதிர்பாராமல் காணாமல் போய்விட்டாள். கடிதம் எழுதி வைத்துவிட்டு ! அவள் காதலன் பெயர் திலீப் என்பது பின்னர் தெரியவந்தது.

பத்திரிகை அடித்து, சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்த பின் பெற்ற மகள் எவனுடனோ ஓடி விட்டாள் என்றால் எத்தனை தலைக் குனிவாய் இருக்கும். பரந்தாமனுக்கு இது நேரடியாய் இருந்து. மணமகன் வீட்டார் முன்பும் , சொந்தங்கள் முன்பும் தலை குனிந்து நின்றார்.

மனம் நொந்து அவள் உள்ளூர வேதனையாய் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாந்தியும், திலீப்பும் மணக்கோலத்தில் பரந்தாமன் முன் வந்து நின்றனர்.

திலீப் அதே தெருவில் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றும் இளைஞன். போயும் போயும் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றும் ஒருவனை தன் மகள் திருமணம் செய்து கொண்டாளே என்று எண்ணும் போது பரந்தாமன் மனம் உடைத்தே போனார். தன்னிடமும் ஆண்டாளிடமும் ஆசி வாங்க வந்தவர்களை வீட்டிற்குள் சேர்க்கவில்லை. தான் இறந்தால் கூட தன் சடலத்தை பார்க்க வேண்டாம் என்று கடுமையாக திட்டித் தீர்த்து இருவரையும் வெளியே அனுப்பினார்.

தன் மகளுக்கு பரிந்து பேச முற்பட்ட ஆண்டாளையும் கண்டித்தார்.

அன்றிலிருந்து பரந்தாமன் நடைப்பிணம் போலாகி விட்டார். பெண்ணின் மீது வெறுப்பு கொண்டவர் தன் சொந்தக்கள் முழுவதையும் மகன் ராகவன் பெயருக்கே எழுதினார்.

அதன் பிறகும் பத்தாண்டு காலம் அவர் உயிர் வாழ்ந்தார். ஆனால் மகள் உண்டாக்கிய அவமானமும், அவர் தன்மான உணர்வை பாதித்ததால் மனம் குன்றிப் போனவர் பழைய மனிதராக தலை நிமிரவே இல்லை.

ராகவன் படிப்பு முடிந்தது ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். அவன் தன் முதல் மாத சம்பளத்தை வாங்கி தாய்-தந்தையிடம் கொடுத்து ஆசி பெற்ற போது பரந்தாமன் சற்று தெளிவடைந்திருந்தார்.

அப்போது தான் மனம் விட்டு மகனிடம் பேசத் தொடங்கினார். "ராகவா! என் மேல் பயத்தால் தான் உன் அக்காவும் மாப்பிள்ளையும் இந்த வீட்டு பக்கம் வராம இருக்கிறாங்க. எனக்கும் கோபம் இன்னும் ஆறலை தான்.ஆனால் எப்போதாவது அவள் வந்தால் நீ வனம்ம பாராட்டாதே .

ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு கணவனின் இம்சைகளுக்கிடையே சொற்ப வருமானத்தில் சிரம வாழ்க்கையை நடத்துவதாக கேள்விப்பட்டடேன் ".

"கவலைப்படாதீங்கப்பா. சொத்து என் பேர்ல இருந்தாலும் அவளுக்கு உரியவை கொடுக்க நான் தயங்க மாட்டேன்"என்றான் ராகவன்.

அதன்பிறகு பரந்தாமனின் எட்டு நாளில் படுக்கையில ஜுரம் என்ற விழுந்தார். தன் இறுதி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு மூன்று நாட்கள் மகனையும் மனைவியையும் அருகில் உட்கார வைத்து சிரமத்துடன் பேசினார்.

ராகுலுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சாதாரண சொல்லிக்கொண்டவர் அன்று வழக்கம்போல் தூங்கச் சென்றால் எழுந்திரிக்கவில்லை தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்து விட்டது. "புண்ணியாத்மா நல்ல சாவு!" என்றார்கள்.

சாவிலும் கூட வா ?- ராகவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.


?துளசி ராகவன் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top