ரௌத்திரம் பழகு

#1
"எதிரிகளை பந்தாட
என் ஐயன் கற்றுத்தந்த வழி தான்
ரௌத்திரம் பழகு"


"கண்ணமாவின் காதலன்
கயவர்களின் கழுத்தை அறுக்க
கற்றுக்கொடுத்த வழிதான்
ரௌத்திரம் பழகு"


"அநியாயம் ஆட்சி புரியும் இடத்தை
அச்சமின்றி தட்டி கேட்டிட தான் நீயும்
ரௌத்திரம் பழகு"


"இரவில் இருட்டில்
நீ தனியே செல்லும் போது வரும்
இடரினை போக்கிடவே
ரௌத்திரம் பழகு"


"பெண்ணிற்க்கு ரௌத்திரம் ஆகாது என்பார் சிலர்
அவர்களின் புலம்பல்களை எல்லாம் புறம்தள்ளி விடு"


"ஒன்பது மாத பிஞ்சினை கூட
கொடூர செயலுக்கு பழியாய் கொடுத்துவிட்டு நிற்கிறோம்
இந்த கொடுமை தீர்ந்திட வேண்டுமெனில்
ரௌத்திரம் பழகு"


"சொந்த நாட்டிலே
தண்ணீரையை எல்லாம் தாரைவார்த்து விட்டு
தவிக்கும் நம் மக்களுக்காக
ரௌத்திரம் பழகு"


"சாதி சாக்கடையை
சுத்தம் செய்ய
ரௌத்திரம் பழகு"


"நம்மால் மேலிடமாய் ஆனவர்கள்
மக்கள் மேண்மைக்கு போராடாமல்
அவர்கள் பெற்ற பிள்ளைகளை பாதுக்கிறார்கள் எனில்
பாறாங்கல்லை அவர்களின் மேல் போட்டிட தான்
ரௌத்திரம் பழகு"


"மனிதனுக்கும் மிருகத்திற்க்கும்
வித்தியாசமற்று போய்விட்டது இங்கு
மனிதநேயம் மரித்துவிட்டது
வான் மழையும் இங்கு பொய்த்துவிட்டது
மனிதன் மனிதனாய் மாறிட
மனித நேயம் அது துளிர் விட்டிட
மாநிலத்தில் நடக்கும்
மன்னிக்க முடியாத குற்றங்களை
எல்லாம் குழிதோண்டி புதைத்திட
ரௌத்திரம் பழகு"


"விவசாயி அவன் வெயிலில் காய்ந்து தந்த
உணவினை ஏசியின் குளுமையில் உட்கார்ந்து உண்டோமே
அதே விவசாயி பயிரினை பார்த்து
பரலோகம் சென்றானே
நம் மனிதநேயம் அன்று பரந்து சென்றதோ நம்மை விட்டு
தண்ணி கேட்டு அவன் அங்கு தவிக்க இங்கோ நாம்
தகிட தகிட பாட்டிற்க்கு ஆட
இத்தகு இரக்கமற்ற செயல் இனி நடந்திடாமல் இருக்க
ரௌத்திரம் பழகு"


"ரௌத்திரம் பழகு
பரவும் காட்டுத்தீ அது
உன்னை பதம் பார்த்திட வெகு நேரம் ஆகாது
காட்டுத்தீ அதை கட்டுப்படுத்திட
நம் நாடு அதை நல்வழி படுத்திட
ரௌத்திரம் பழகு"


"ரௌத்திரம் பழகிட
ஆண் பெண் என்ற பேதம் இல்லை
போராடும் துணிவு இருந்தால் போதும்"


"சிந்திப்போம்
சந்ததி காப்போம்"
 

Advertisements

Latest updates

Top