லவ் லெட்டர் எழுத தெரியுமா?

#1
ஹாய் ஹாய் மக்களே

என்னடா ரொம்ப நாள் காணாம போயிட்டு திடீருன்னு இப்படி ஒரு கேள்வியோட ஆஜர் ஆகி இருக்கேனேன்னு கேப்பீங்க. கேட்கணும். ரெண்டு நாளா மண்டை கொஞ்சம் சூடாகிருச்சு. எனக்கு மட்டுமில்ல. நிறைய பேருக்கு அப்படித்தான்னு எனக்கும் தெரியுது. அதை எப்படி கூல் பண்றது? அதுக்கு தான் இந்த லவ் லெட்டர் எழுதும் போட்டி. என்னடா இது போட்டின்னு காறித் துப்ப தோணுமே!
நாமெல்லாம் 'எப்படிடா உன்னை கரெக்ட் பண்றதுன்னு' நாவல் டைட்டில் கொடுத்து அதையும் வெற்றிகரமா முடிச்ச ஆளுங்க. இதுக்கெல்லாம் நாம அசரவே மாட்டோம் மக்கா.

லவ் லெட்டர் யாருக்கு?
நம்ம சைட்ல உங்களுக்கு பிடிச்ச நாவலுக்கு, நாவல்ல வர்ற ஹீரோவுக்கு இல்லைன்னா ஹீரோயினுக்கு எப்படி வேணும்னாலும் யாருக்கு வேணும்னாலும் எழுதலாம்.

உங்களோட பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி எழுதுங்க மக்களே. தேர்ந்தெடுக்கபடும் சிறந்த லவ் லெட்டருக்கு நம்ம @shanthinidoss பரிசு ஸ்பான்சர் பண்றதா சொல்லி இருக்காங்க. ஷானு மேடைக்கு வரவும்.

இதில் எல்லாருமே கலந்து கொள்ளலாம். .நாளை இரவு 9 மணி வரை இந்த லவ் லெட்டர் போட்டி நடக்கும். லெட்டர் எழுதுங்க... பரிசுகளை வெல்லுங்க!
 

Selva sankari

Major
SM Exclusive Author
#3
நானும் எழுத வந்திருக்கிறேன் காதல் கடிதம்...
கட்டையைத் தூக்கி வராதீர்கள் யாரும்.

அன்புள்ள மன்னவனே… ! ஆசைக் காதலனே… !

மூளையை எவ்வளவு கசக்கினாலும் சினிமா பாட்டுதான் வருது… நான் என்ன செய்ய 🤔🤔🤔


அன்பே… பிரௌனி… :):) உனக்கு நான் எழுதும் தமிழ் புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் என் உணர்வுகள் நிச்சயம் புரியும்.
அன்பே…
ஆருயிரே…
அருமருந்தே…
அடிக் கரும்பே…
மானே…
தேனே…
மணியே…
நிலவே… என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்குத் தெரியவும் இல்லை, தோன்றவும் இல்லை. :p:p


மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா… என்று ஏங்கிப் பாட்டெழுத உனக்கு கருகரு மீசையும் இல்லை. (எல்லாம் பிரவுன் தான்) :p:p


என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? என யோசித்து யோசித்தே நேரம் கழிகிறது… என் ஃபோனில் சார்ஜும் குறைகிறது. :(:(


எதுவும் தெரியாது யோசித்த போதும், உன் அன்பைப் பெற வேண்டும் என்ற வெறியோடு நான் எழுதும் மடலை நீ ரசிப்பாயா? அல்லது வெறுப்பாயா… ? எதுவும் புரியாமல் பத்தாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட்டின் போது பரிதவிக்கும் நெஞ்சம் போல பரிதவிக்கிறேன்.:confused::confused:


சரி… போதும்… கதை பேசாமல் காதலைப் பேசலாம் வா… :)


:unsure::unsure:எங்கே…? எப்போது… ? எப்படி… ? நீ என்னுள் நுழைந்தாய் என, சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல எனக்குள் கேட்டு, ஆற அமர அசை போடும் மாடு போல கடந்த நாட்களின் நினைவுகளை அசைபோட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். :):)


நான் படிக்கும்
நாவலில் வரும்
நாயகியை மட்டும்
நயமாய் ரசித்திருந்தேன்…
நானும் இருக்கிறேனடி என்று
திரும்பிப் பார்க்க வைத்து
திகைக்க வைத்தாய் என்னை…!
திரும்பும் திசையெல்லாம்
திருஉறுவாய் நின் பிரகா(ஷ்)சம் கண்டு
திணறித் தவித்து நின்றேன்.


எது ஈர்த்தது என்னை…?
எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்…
உன் விழிகளில் வழிந்த ஏக்கம் மிகு காதலா...
உன் இதழில் மலரும் புரியா பாஷையா…
அந்த கிறுக்கியை(சிமி) கரெக்ட் செய்ய நீ படும் துயரங்களா…
ஆகமொத்தம் எனக்குள் விழுந்து விட்டாய் புரியாமலே…


உயிர் விடும் வரை உன்னோடுதான்…
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்…
நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…!😊😊

இறுதியாக மிகுந்த வெட்கத்துடன் ஒன்று. 🙈🙈

முத்தத்தில் வித்தகனாம் நீ…
மொத்தமாகப் பேசுகின்றனர் சைட்டில்…
சித்தத்தில் உனை ஏற்றி…
பித்தத்தில் மூழ்கும் எனை மீட்க…
நித்தமும் நினைவில் இனிக்கும்படி…
சத்தமாய் ஒரு முத்தம் பதி… 🙈🙈

வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும். நம் காதல் வரலாறை எழுதட்டும்.
காத்திருக்கிறேன் நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன். 😘😘
காதல் என்றும் வாழட்டும். அதில் நாமும் வாழ்வோம். 😍😍

இப்படிக்கு அன்புக் காதலி…
செல்வா
 
Last edited by a moderator:

Manikodi

Brigadier
SM Team
#10
😍😍😍 வந்தாச்சு வந்தாச்சு...

பல ஹீரோஸ் மண்டையில சுத்துதே...
கொண்டை வளராம காப்பாத்துங்கடா...😊
நீ கண்டிப்பா சந்தோஷ் க்கு தான் எழுவ இல்லனா தினம் பஸ்ஸில் உன்னை பார்த்து ஜொல்லுவிடும் ஆளுக்கு எழுவ செல்குட்டி கரைட்டா
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top