• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்---10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!

சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி,இதோ இன்றைய பதிவுகள் இதற்கும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்

வசப்பட்டதே என் வானம்----10
......

செம்பாவை ஒருவன் ரசனையோடு பார்ப்பதை, பார்த்ததும் மதிக்கு கோபம் வந்தது, ஒரு ஆணோட பார்வை இன்னொரு ஆணுக்கு புரியாமல் போகுமா?, யாரடா இவன் என அவன் பார்த்துக்கொண்டிருக்க அதற்குள் செம்பா இவர்களை நோக்கி வந்தாள்.

மதி சார் !,வாங்க ஒரே ஒரு பத்து நிமிஷம் உட்காருங்க, ஃபங்ஷன் இப்ப தொடங்கிடும் என்றவள், அருகிலிருந்த புதியவனை அழைத்து, இவர் பேரு ஜெய்சங்கர்,இந்த ஸ்கூல் டீச்சர் எங்க பசங்களுக்கு ரொம்ப சப்போட்டா இருக்காரு என அறிமுகப்படுத்தியவள்,அவனிடம் திரும்பி ,இவர் மதிமுகிலன்,,இவர் ரவி, இங்க தேயிலைத் தோட்டம் வாங்கி இருக்காங்க, என்னோட ஃபிரண்ட்ஸ் என்றாள்.

பள்ளி மைதானத்தில் சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு, வரிசையாக சில சேர்கள் போடப்பட்டு இருந்தன, முதல்வரிசையில் இவர்களை அமரவைத்து சென்றாள்.

நான்கு அழகான பெண் மலர்களுக்கு, நடுவே தாவணி அணிந்த நந்தவனமாய் செம்பா நிற்க, பரதநாட்டியம் ஆரம்பமானது.

விழிகளின் மேல் விரல் வைத்து, தலையை இடம் வலம் ஆட்டி, பல அபிநயங்கள் அவள் புரிய, அவள் முகத்தோடு நவரசங்கள் நர்த்தனம் ஆட, சொக்கித்தான் போனான் மதி.

“குழலூதும் நேரமிது ,கண்ணா நீ வாராயோ!! என்ற வரிகளின் போது, அவள் கண்களில் காதல் பொங்க மதியை பார்த்து, கைகள் வா! வா! என அபிநயம் பிடிக்க மதி மேடைக்கு செல்ல எழுந்தே விட்டான்.

ஏண்டா எழுந்திரிக்கற? இப்பதான் பங்சன் ஸ்டார்ட் ஆகுது, உட்காரு! என அவனை இழுத்து அமர வைத்தான் ரவி.

பிறகுதான் சுற்றுப்புறம் உணர்ந்தான் மதி, அவன் மேடையை பார்க்க யாரோ பேசி கொண்டிருந்தார்கள், அடச்சீ! அத்தனையும் கனவா?, என ஏக்க பெரு மூச்சு விட்டவன் கனவா இருந்தாலும் எத்தனை சுகமா இருந்துச்சு!,நான் நினைச்ச மாதிரியே, செம்பா வந்து இப்ப ஆடினால் எப்படி இருக்கும்? என மதி எண்ணிக்கொண்டிருக்கும்போது
உண்மையிலேயே செம்பா மேடையில், சில பெண் குழந்தைகளுக்கு நடுவே நின்றாள் கையில் கம்போடு..

சிலம்பக் கலையை குழந்தைகளுடன் செய்து காட்டிக்கொண்டிருந்தாள் செம்பா! காற்றோடு சேர்ந்து அவள் கம்பு சுழன்ற வேகமே, அவள் வீரத்தை விவரிக்க போதுமானதாக இருந்தது, குழந்தைகளும் அவளைப் போலவே அழகாக செய்தனர்.
கம்பு சுழற்றும் வேகத்தை பார்த்து மதி வியந்தாலும், ஓ இதுதான் அவள் சொன்ன பேர்பார்மன்சா? நான் என்னவோ எதிர்பார்த்தேனே! என மனதின் ஒரு மூலையில் சிறு ஏமாற்றம் பரவ தான் செய்தது!

“மதி, நீ லவ் பண்றது ஆக்சன் ஹீரோயின், அவங்க அடுத்தவங்க கை,கால்களை தான் உடைப்பாங்களே தவிர, அவங்க கை,கால்களை ஆட்டி டான்ஸ் எல்லாம் ஆடமாட்டாங்க, அதனால நீ அந்த மாதிரி ஆசைப்படாதே ! என சொன்னான் ரவி..

“உனக்கு எப்படிடா என் மனசுல உள்ளது தெரிஞ்சது! என கேட்பதுபோல் மதி பார்க்க ….

“அதுவா, அதான் உன் மூஞ்சியில லிட்டர் கணக்கா அசடு வழியுதே, அதை வச்சு தான் சொன்னேன், ஆனா ஒன்னு மச்சி! உன் குடும்ப வாழ்க்கை நித்தமும் அடிதடியா,ரகலையா, கும்மாளமா இருக்கும்,அது வேணா என் கண்ணுக்கு நல்லா தெரியுது என்று சொல்லி சிரித்து, அவனிடம் அடியையும் வாங்கிக் கொண்டான்.

விழா முடிந்ததும் , செம்பாவும்,பூவும், இவர்களைத் தேடி வந்தனர்.

செம்பா உன் சிலம்பாட்டம் சூப்பர்! அந்த சின்ன பொண்ணுங்க கூட அழகா செஞ்சாங்க, நல்லா கற்றுக்கொடுத்து இருக்க, கண்டிப்பா நம்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் தெரிஞ்சிருக்கணும்! அவங்கள பாதுகாக்க அடுத்தவங்கள தேடாமல், அவங்களே துணிச்சலோடு இருக்கணும்னா, இந்தமாதிரி தற்காப்பு கலைகளை தெரிஞ்சு இருக்கணும், ரியலி யூ டன் ஏ குட் ஜாப்!!ஆமா இன்னும் உனக்கு என்னென்ன எல்லாம் தெரியும்?

ம்ம்ம் …எனக்கு என்ன தெரியும் என யோசிப்பது போல் பாவனை செய்து , இப்போதைக்கு என் எதிர்ல மதின்னு ஒருத்தர் நிற்கிறார், அது தான் தெரியுது என்றாள் சிரித்து கொண்டே..

மதியின் கண்கள் பளிச்சிட்டது,அட உன் கண்ணுக்கு மதி தெரியறானா?, அப்ப அவன் எப்படி இருக்கானு சொல்லு!, அழகா இருக்கானா? அம்சமா இருக்கானா? ஹென்சமா இருக்கானா?

ம் ம்ம்…கால் கிலோ கணக்குல அழகா இருக்காரு! அரைக்கிலோ கணக்குல அம்சமா இருக்காரு! முக்கால் கிலோ கணக்குல ஹெண்ட்சம்மா இருக்காரு! டன் கணக்குல என ஏதோ சொல்ல வந்தவள்,சொல்லாமல் நிறுத்தி விட்டு, அவனைப் பார்த்தாள்..

ஏய் சொல்லு! சொல்லு! டன் கணக்கில எங்கிட்ட என்ன இருக்கு?
அவள் அவன் விழிகளை பார்த்து, டன் கணக்குல நல்ல மனசு உள்ளவரா இருக்காருனு சொல்ல வந்தேன் என சொல்லி சிரித்து ஓடினாள்…

அவள் செல்வதையே ரசனையோடு பார்த்தவன், அருகிலிருந்த ரவியை காணோம் என தேட, அவன் பூவோடு பேசிக்கொண்டிருந்தான்..

உங்க பேருக்கு ஏத்த மாதிரியே, நீங்க என்ன பூவுனு கண்டுபிடிக்கமுடியாத மாதிரி அழகா இருக்கீங்க, நீங்க ஏன் சிலம்பு சுத்துல… உங்களுக்கு தெரியாதா?

அவள் சிரித்துக்கொண்டே கொஞ்சம் தெரியும்ங்க.. செம்பா பசங்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது நானும் கத்துக்கிட்டேன்..ஆமா! ஐயா டவுன்ல என்ன சோலி பாக்குறீங்க?

“ மீ ,நானா? எங்க கம்பெனியில ஆல்இன்ஆல் நான்தான்! என்ன கேட்டு தான் எல்லாரும் வருவாங்க! நான் சொல்றதை தான் செய்வாங்க! நான்கிழிச்ச கோட்டை தாண்டமாட்டாங்க தெரியுமா?

என்னது! உங்கள தாண்டி போக மாட்டாங்களா? அப்ப ஐயா வாட்ச்மேனா இருக்கீங்களா?

ரவி அவள் கேள்வியில், முழித்துக் கொண்டு நிற்க, அங்கே வந்த மதி அவனிடம் “மச்சி! உன் மூக்கு உடைஞ்சு அங்க கெடக்குது பாரு! எடுத்துட்டு வா நாம போகலாம்! என நமட்டு சிரிப்புடன் சொன்னான்.

செம்பா தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வர கிளம்ப ஆயத்தமானார்கள், அப்போது ஜெய் அங்கே வந்தான்

“செம்பி! நீங்க எப்படி போறீங்க நான் வேணா என் வண்டியில் கொண்டு வந்து விடவா? எனக்கேட்க

இல்ல சார்! நான் என் டிவிஎஸ் ல தன் வந்தேன், நாங்க அதிலேயே போயிடுவோம்!

செம்பா பத்தி நீங்க கவலைப்படாதீங்க ஜெய்சங்கர், அவங்க பாத்துப்பாங்க! அப்படி இல்லேன்னாலும், நான் கொண்டு போய் விட்டு விடுவேன், இங்க கெஸ்ட் எல்லாம் இருக்காங்க, நீங்க அவங்களை பாருங்க! என்று சொன்னான் மதி.

சரிங்க ! என்றவன் , ஆமா,நீங்க எப்ப சார் ஊருக்கு போறீங்க? என கேட்டான்.

ஏண்டா நான் இருப்பதால உனக்கு என்னடா? என கேட்க துடித்த நாவை அடக்கி, போகணும் சார், போகும்போது கண்டிப்பா சொல்லிட்டு போறேன்!, ஸ்கூலுக்கு ஏதாவது தேவைன்னா சொல்லுங்க, மீண்டும் வரும்போது வாங்கிட்டு வரேன் என்றான்.

தேவைப்பட்டால் சொல்றேன் சார்,என சொல்லி கொண்டு இருக்கும் போதே, அவனை யாரோ கூப்பிட அவரை நோக்கி சென்று விட்டான்.
பின் செம்பா , என்ன சொல்லியும் கேட்காமல், மதி அவள் வண்டியை ஜீப்பில் போட்டு, அவர்கள் இருவரையும் அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டு விட்டுதான் வந்தார்கள்.
………
இரண்டு நாட்களாக தேயிலை பறிக்கும் வேலை நடந்தது, அவற்றைக் கொண்டு செல்லவென ரவி கிளம்பிவிட மதி, தான் இன்னும் இரண்டு நாள் கழித்து வருவதாக கூறினான்.

அவன் காதல் தெரிந்தவன் ஆகையால் ரவி ஏதும் சொல்லாமல் கிளம்பினான்.
காலை செம்பா குழந்தைகளை பள்ளிக்கு கிளம்பி கிளப்பிவிடும் ஓடைப் பக்கம் போனான், அங்கே இருந்த போதெல்லாம், காலை அவளைப் பார்க்க, அந்தப்பக்கம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.அதற்கு ஜாக்கிங் என்று பெயரும் வைத்துக் கொண்டான்.

அவளோ குழந்தைகளை கவனிக்க,இவனோ, அவளை கவனிக்க, இப்படியே ஓடை நீரோடு ஓடியது நேரமும்..

குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பி விட, பிறகுதான் மதி நின்ற இடம் வந்தால் செம்பா..

மதி சார்! ஜாகிங் இன்னும் முடியலையா?

அவ்ளோதான் செம்பா! இனி அப்படியே கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடுவேன், நீ வீட்டுக்கு கிளம்பிட்டியா?

நான் இப்ப வீட்டுக்கு போகல சார்! ஒரு முக்கியமான இடத்திற்கு போக வேண்டியிருக்கு, உங்க கெஸ்ட் ஹவுஸ் தாண்டித்தான் போகப்போறேன்!, சரி சார்! நான் வரேன் என அவள் கிளம்ப…

மதி, தன் ஒரு கிலோ 350 கிராம் மூளையைக் கசக்கி, அவளோடு சேர்ந்து செல்ல வழி யோசிக்க, ஒன்றும் புலப்படவில்லை, இருந்தாலும் அவளை நோக்கி முன்னேற கல்லில் இடித்து கொண்டான்.

“ஆ” எனக் காலை பிடித்தபடி, அவன் கத்த, செம்பா திரும்ப வந்து என்ன ஆச்சு சார் என அவன் காலைப் பார்த்தாள்,

பார்த்து வரமாட்டீங்களா? பாருங்க விரலில் அடிபட்டு ரத்தம் கசியுது, என சொன்னவள்,அந்த கால் விரலை அழுத்திப் பிடித்தாள், ரத்தம் கசிவது நின்றதும், ஒரு இலையைப் பிழிந்து கால் மேல் தெளித்தாள்.

மதியைப் பார்த்து,” ரொம்ப வலிக்குதா? நடக்க முடியுமா? எப்படி கெஸ்ட் ஹவுஸ் போவீங்க? என்றாள்
.
மதிக்கு வலியெல்லாம் எதுவுமில்லை, நடக்கவும் எளிதாக முடியும் ,ஆனால் அவனுக்கு அவள் கூட செல்ல வேண்டுமே! அதனால் பொய் சொன்னான்.

கொஞ்சம் வலிக்குது, கெஸ்ட் ஹவுஸ் வரை நடந்து போறது கஷ்டம்தான்,என்ன கூட்டிட்டு போகமாட்டியா?

அவள், அவனை விழி விரித்துப் பார்த்தாள்அவள் விரித்தது விழியையா? அல்லது அவனை மொத்தமாக கவிழ்க்கும் மாய வலையையா? மதிக்கு புரியவில்லை! ஆனால், அந்த விழிக்குள் நுழைந்து, அவள் உயிருக்குள் உறைந்து விட வேண்டும் என்ற ஆசை, அந்த நொடி தோன்றியது!

“ஏன் இப்படி பாக்குற செம்பா? வண்டியில கூட்டிட்டு போக முடியுமானு தானே கேட்டேன் யாராச்சும் ஏதாச்சும் சொல்லுவாங்களேனு யோசிக்கிறயா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்! நீங்க வாங்க போகலாம் என சொல்லி வண்டியை எடுத்தாள்,அவளின் பின்னால் ஏறிக்கொண்டான் மதி! அடுத்த முறை இங்கு வரும்போது தன் ராயல் என்ஃபீல்டை மறக்காமல் எடுத்து வந்து, அவளை பின்னால் உட்கார வைத்து, லாங் டிரைவ் கூட்டிச்செல்ல வேண்டும் என எண்ணி கொண்டு உட்கார்ந்தவன்
பிடித்து கொள்ள பிடிமானம் தேட, அவள் தோள்களைப் பற்றிக் கொள்ளும் பேராவல் தோன்றியது! ஆனால் கன்னம் பழுத்துவிடுமே!! என்ற நிதர்சனம் புரிய பெருமூச்சுவிட்டான்.

அவன் செம்பாவை,அவள் கனவை, இலட்சியத்தை, ஆசைகளை, என எல்லாத்தையும் காதலித்தான், ஆனால் தன் காதல் உணர்வுகளை பார்வையில் கூட அவள் முன்னே காட்டாமல் மறைத்துக் கொண்டான், செம்பா நட்பைத் தாண்டி அவனிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, தன் காதல் தெரிந்தால் ,அந்த நட்பு போய்விடுமோ என்ற பயம் தான் அவனுக்கு…

வண்டியின் வேகத்தில் அவள் துப்பட்டா, அவன் முகத்தில் வந்து வந்து மோத, மயிலிறகின் வருடல்களாய் தெரிந்தன, அந்த துப்பட்டா மோதல்கள்…..

வழியில் ஒரு சிறிய அம்மன் கோயில் இருந்தது , அதன் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர் சிலர்.

மதி அந்தக் கோயிலை சுட்டிக்காட்டி, அங்க என்ன பண்றாங்க செம்பா? என்றான்.

நாளை திருவிழா சார்! அதுக்கு தான் சுத்தப்படுத்திட்டு இருக்காங்க ,பக்கத்துல தானே இருக்கீங்க ,7 மணிக்கு நாளைக்கு வந்து பாருங்க எப்படி இருக்குன்னு, இங்க கல்யாணமெல்லாம் அந்த கோயிலில் தான் நடக்கும்.

நான் அந்த கோவிலுக்கு இங்க ஃபர்ஸ்ட் வந்தப்பவே போனேன்,அங்க சின்ன மரத்துல நெறைய கருகமணி பாசியெல்லாம் மாட்டி இருந்தாங்க!

ஐயோ சார்,அது பாசியெல்லாம் இல்ல,அது தான் தாலி,அதை பொண்ணுக்கு போட்டு விட்டு,அம்மன் பக்கத்துல இருக்கற குங்குமத்தை நெத்தில வெச்சு விட்டா இங்க கல்யாணம் முடிஞ்சுது!

ஹேய் சூப்பர், செலவே இல்லை,எங்க ஊர்ல கல்யாணத்துக்கு லட்ச லட்சமாய் செலவு பண்றாங்க,சிலர் கோடில கூட பண்றாங்க,நாளைக்கு நீ கோவிலுக்கு வருவாயா? என கேட்க…

நானும் பூவும் வருவோம் சார் என்றாள்.

அவள் மதியோடு வண்டியில் போவதை கோவிலில் இருந்து குரோதத்தோடு பார்த்தன இரு விழிகள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய் மதி உன்னோட ஜொள்ளு ஃபேக்டரியை கொஞ்சம் நிப்பாட்டு
உன்னுடைய ஜொள்ளில் அந்த ஊரே தள்ளாடுதாம்
யாரும்மா அது கோவிலில் இருந்து முறைக்குறாங்க
கோவிலுக்கு சாமி கும்பிட வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்கப்பா
லவ்வர்ஸ்ஸையெல்லாம் இப்படி முறைக்கப்படாதுப்பா
 




Last edited:

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
அடேய் மதி உன்னோட ஜொள்ளு ஃபேக்டரியை கொஞ்சம் நிப்பாட்டு
உன்னுடைய ஜொள்ளில் அந்த ஊரே தள்ளாடுதாம்
யாரும்மா அது கோவிலில் இருந்து முறைக்குறாங்க
கோவிலுக்கு சாமி கும்பிட வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்கப்பா
லவ்வர்ஸ்ஸையெல்லாம் இப்படி முறைக்கப்படாதுப்பா
அதானே லவ் பன்றவங்களை கண்டாலே எல்லாரும் காண்டு ஆகுராங்க,நீங்க தட்டி கேளுங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top