• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்---11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
சென்ற பதிவிற்கு லைக் ,கமெண்ட் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! இந்தபதிவுக்கும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்!!


வசப்பட்டதே என் வானம்---11

கெஸ்ட் ஹவுஸ் வந்ததும், வண்டியை நிறுத்தி “ இறங்குங்க சார் !என்றாள்.

சிறகின்றி வானில் பறந்து கொண்டிருந்த மதி, இறங்குவதா? இங்கிருந்து எப்படி இறங்க? என யோசிக்க

செம்பா திரும்பி பார்த்து மீண்டும் சத்தமாக, சார்,கெஸ்ட் ஹவுஸ் வந்துருச்சு இறங்குங்க! என்றாள்.

அதன்பின்தான் சொரணை பெற்றவனாக ,ஒரு அசட்டு புன்னகையுடன் இறங்கினான் மதி.

“வா செம்பா டீ சாப்பிட்டு போலாம்”

இல்ல சார்! லேட் ஆகிடுச்சு ,என்னை எதிர்பார்த்திட்டு இருப்பாங்க நான் கிளம்பறேன்.

“ஹேய்! டீ சாப்பிட்டு போகலாம், ஒரு அஞ்சு நிமிஷம் தான் வா! என அவளை உள்ளே அழைத்து சென்றான்

ஆமா இப்ப நீ எங்க போற? நானும் வரட்டா ?, இங்க ரொம்ப போரடிக்கும், ரவியும் கிளம்பிட்டான் என்றவன்,அவளுக்கு ஒரு கோப்பை தேநீரை கொடுத்து,தானும் எடுத்துக் கொண்டான்.

நீங்களும் வரலாம்தான் சார்! ஆனா நா போற இடம், பாதை சரியில்லாமல் இருக்கும்,கொஞ்ச தூரம் நடக்கணும், ஏணில இறங்கணும், உங்களுக்கு வேற இப்பதான் கால்ல அடிபட்டு இருக்கு, எதுக்கு சார் வீணா கஷ்டப்படணும், நீங்க இங்கேயே இருங்க !நான் போயிட்டு வரேன் என்றாள்

நாங்களும் காலேஜ் படிக்கிறப்ப நிறைய ட்ரெக்கிங் போய் இருக்கோம், அதனால நடக்கிறதோ, மலை ஏறுவதோ எனக்கு கஷ்டம் இல்லை, கால்லேயும் இப்ப வலியில்லை, அதனால நான் உன் கூட வரேன் உனக்கு ஆட்சேபனை இல்லன்னா?

எனக்கு வேற என்ன ஆட்சேபணை, நீங்க தாராளமா வாங்க!

தட்ஸ் குட்! நாம ஜீப்ல போலாமா? இல்ல உன் வண்டியில போலாமா?

அது ஒத்தையடிப்பாதை சார், ஜீப்ல போக முடியாது, என் வண்டியில் தான் போகணும்

மதி தன் மனதிற்குள் ஹூர்ரே என கத்திக்கொண்டு அவளோடு புறப்பட்டான்

அவளை பின்னால் உட்கார வைத்து அவன் வண்டி ஓட்டினான்,ஒத்தையடி பாதையில் உன்னோடு பயணிப்பதே இத்தனை அழகாய் இருக்குமெனில்,வாழ்வெல்லாம் உன்னோடு பயணித்தால் ,அந்த வாழ்க்கை தான் எத்தனை அற்புதமாய் இருக்கும் என ஏக்கத்தோடு எண்ணிக் கொண்டது மனது.

இதுக்கு மேல நடந்து தான்
போகணும் என்று வண்டியை நிறுத்த சொன்னாள்.

மதி,அவள் சுட்டிக்காட்டிய அந்தப் பாதையைப் பார்த்தான்,அது மலை சரி விற்கு இடையே சென்றது, கொஞ்சம் கால் தடுக்கினாலும் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உண்டு.
அவன் பாதையை பார்த்தான், பின் பாவையை பார்த்தான்.

என்ன சார் பயமா இருக்கா? கொஞ்சம் கவனமா வாங்க! மழை ஈரமாய் இருந்தால் வழுக்கும், இப்ப பயமில்லை வாங்க என்றவள், முன்னே சென்று மதியை பார்த்து கையை நீட்ட, நீட்டிய கரங்களுக்குள், தன் கரத்தை வைத்தான் , உடலெங்கும் மின்சாரம் பாய, தாயின் கை பிடித்துச் செல்லும் மழலை போல் குஷியோடு சென்றான்,, அவள் கரத்தோடு கரம் சேர்த்து கடக்கின்ற அந்த கணங்கள் தன் வாழ்வின் பொற்காலம் என எண்ணிக் கொண்டான்.

இனி இந்தப் படியில் இறங்கி போகணும்! பார்த்து வாங்க! என அவன் கரத்தை விட்டவள் முதலில் இறங்கினாள்.

அவள் விட்டுச் சென்ற தன் கரத்தையே ஏக்கத்தோடு பார்த்தவன், பின்தான் அவள் இறங்கிய பாதையை பார்த்தான்

பார்த்தவன் கொஞ்சம் பயந்தான், கொஞ்சம் அதிர்ந்தான்,பின் கன்னத்தில் கை வைத்து நின்றான்.

இரு பாறைகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் தொடங்கிய இரும்பு ஏணி ஒன்று கீழிருந்த பள்ளத்தாக்கு வரை செங்குத்தாக நின்றது.

செம்பா அதில் லாவகமாக, வேகமாக இறங்கி கொண்டு இருந்தாள்.

பதறிய மனதை திடப்படுத்தி இறங்கினான் , படிகளுக்கு இடையே தெரிந்த பள்ளத்தாக்கு கொஞ்சம் பயமுறுத்தியது.

காதலித்துப்பார் சொர்க்கமோ, நரகமோ ,இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம், என்று சொன்னீர்களே வைரமுத்து சார், எனக்கென்னவோ இந்த படியில் இறங்கி போறதுக்குள்ள இரண்டில் ஒன்று கன்பார்ம் ஆகிடும் போல என மனதோடு பிதற்றிய படியே இறங்கினான்.

இறங்கிய செம்பா, நடக்கத் தொடங்க பின்தொடர்ந்தான் மதி.

“அம்மா தாயே! நாம எங்க தான் போறோம்? தயவு செஞ்சு சொல்லு, இந்த மாதிரி இடத்துல மனுஷங்க இருப்பாங்கனு தோணல! பேய், பிசாசு எதையாச்சும் பார்க்க போறியா இல்ல சித்தர் முனிவர்னு யாரையும் பாக்க போறியா?

ஒரு மௌனப் புன்னகையை அவனுக்கு பதிலாய் தந்தவள், மீண்டும் நடக்கத் தொடங்கினாள், கொஞ்ச நேரம் நடந்த பின்னர் அவள் ஒரு இடத்தில் நின்று,

இங்க மனுஷங்க இருப்பாங்களா என்று கேட்டிங்களே! அப்போ இவங்க யாரு சார்! என அவள் சுட்டிக்காட்டிய இடத்தை பார்த்தான் மதி.

ஆங்காங்கே மண் வீடுகளும், ஓலை வீடுகளும் இருந்தன, பாறைகளுக்கு இடையே குகை போல இருக்க, அதிலும் சிலர் இருந்தனர்.

இந்த இடத்தில் சுமார் 35 குடும்பங்கள் இருக்கு சார்! அதுல நாலு குடும்பங்க பாறை குகையில் தான் இருக்காங்க! நாம வந்த வழியே தான் இவங்க, இங்கிருந்து வேற எந்த ஊருக்கும் போக முடியும்! இங்க 26 குழந்தைகள் இருக்காங்க, யாரும் பள்ளிக்கூடம் போறதில்ல! போகவும் வழியில்லை! அதான் வாரம் ரெண்டு நாள் நான் இங்கேயே வந்து பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறேன், இந்த பசங்கள எட்டாவது, பத்தாவது பரிட்சை மட்டும் பிரைவெட்ல எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன், இந்த வருசம் ஆறு பேரு எழுதி இருக்காங்க!, நாம வந்த வழியா கூட்டிட்டு போய் ,டவுன்ல அஞ்சு நாள் தங்க வைத்து தன் எழுத வைத்தேன், என்னால முடிஞ்சது அவ்வளவுதான், இவங்களுக்கு மேற்கொண்டு பெரிய அளவில் செய்வதற்கு எங்கிட்ட வசதி வாய்ப்பு இல்லையே சார்!

உண்மையிலேயே உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு செம்பா !நீ செய்யற இந்த விஷயம் ரொம்ப சாதாரணமானது இல்லை, கோடி கோடியா பணம் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி செய்ய மனசு வராது, யூ ஆர் ரியலி வெரி கிரேட், என்னால முடிஞ்சத நானும் கண்டிப்பா இவங்களுக்காக செய்றேன்,ஏன்
செம்பா இவங்க இப்படிபட்ட இடத்தில் இருக்கணும், ஊருக்குள்ளேயே இருக்கலாமே?

இவங்க இப்படியே வாழ்ந்து பழகிட்டாங்க , இப்ப இங்க இருக்கற இடம் கூட வெளிய இவங்களுக்கு கிடைக்காது, இந்த காடுதான் ,அவங்க வீடு! ஆனா ஒன்னு சார்! இங்க நம்ம நாட்டுல காடுகள் ஓரளவாவது நல்ல நிலையில் இருக்குன்னா ,அதுக்கு காரணம் இந்த வன மக்கள் தான்,இயற்கையோடு இணைந்து வாழ்கிற, இந்த மக்கள் இல்லைனா ,இந்நேரம் சமூகவிரோதிகள் வனங்களில் இருக்கிற எல்லா வளங்களையும் கொள்ளை அடிச்சு இருப்பாங்க!

இங்க வனங்கள் பாதுகாக்கபட வேண்டுமென்றால்,அங்க இருக்கிற வன மக்கள் பாதுகாக்கபடவேணும் சார்!

அது என்னவோ நிஜம் தான்! இந்த மாதிரி மக்களுக்கு அடிப்படை வசதி கூட செஞ்சு தர மறுக்கற நம் அரசாங்கம், கார்ப்பரேட்காரங்க வாங்கின ஆயிரக்கணக்கா கோடி கடன்களை தள்ளுபடி பண்றாங்க! மதி சுற்றிலும் பார்த்தான், அந்த மக்களின் வறுமையும் ,வாழ்க்கை முறையும் மனதை வருந்தச் செய்வதாய் இருந்தது.

அவள் வந்ததை பார்த்ததும் குழந்தைகள் ஒவ்வொருவராய் அவர்களை நோக்கி வரத் தொடங்கினர்

செம்பா மதியை பார்த்து,” சார் நான் பசங்களுக்கு பாடம் எடுக்கறேன், நீங்க போய் அப்படியே இங்க சுத்தி பார்த்துட்டு வாங்க என்றாள்.

இல்லை மா! நானும் உன்கூட இவங்களுக்கு சொல்லித்தரேன் என அவர்களோடு அமர்ந்து, குழந்தைகளுக்கு தானும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்! அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி, அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாய் ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தான்.
வகுப்பு முடிந்ததும் இருவரும் கிளம்பினர், அதற்குள் அந்த பகுதி மக்கள் இருவருக்கும் கிழங்கும் ,தேனும் கொடுத்து உபசரித்தனர், சிறிது நேரம் அவர்களிடம் பேசிக்கொண்டு கிளம்பினார்கள் .

மதி சார், ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

இல்லை செம்பா நாங்க எல்லாம் நகரத்தில் எவ்வளவோ லக்ஸிரியா இருக்கிறோம்,இங்கே இவங்கள பாரு ,இருக்க நல்ல இடம் இல்லை! உடுத்த நல்ல துணிமணி இல்லை! படிக்கவும் வழியில்லை! இப்பவும் நம்ம நாட்டுல மக்கள் கற்கால வாழ்க்கை வாழ்வதை பாக்குறப்போ மனசு கஷ்டமா இருக்கு!

அது என்னவோ உண்மைதான்! எனக்கும் இவங்கள மாத்தணும்,வாழ்க்கை தரத்தை உயர்த்தனும்னு ரொம்ப ஆசை சார் !ஆனா என்ன பண்றதுணு தான் தெரியல! டிகிரி எக்ஸாம் அடுத்தவாரம் வருது, எழுதினால் டிகிரி முடிஞ்சிடும்! நான் ஏதாவது கோச்சிங் கிளாஸ்ல சேர்ந்தா ஒன்னு ரெண்டு வருஷத்துல எப்படியாவது படிச்சு கலெக்டர் ஆகிடுவேன் ,ஆனால் டிகிரி படிக்கிறதே வெளியே தெரியாமல் படிக்கிறப்போ, கோச்சிங் கிளாஸ் எல்லாம் சேர விட மாட்டாங்க! அதற்கு செலவு பண்ணவும் முடியாது! இங்கிருந்தே தான் படிக்கணும், எத்தனை வருஷம் படிக்க போறேன்னு தெரியல,என்ன புத்தகம் படிக்கணும்?,எப்படி படிக்கணும்? எந்த ஐடியாவும் இல்லை, ஆனால் எப்படியாவது சாதிச்சு காட்டணும் !ஆசை ஆசையாய் சொன்னாள் கோதையவள்.

செம்பா! உன் திறமைக்கு நீ எப்படியும் கலெக்டர் ஆகிடுவ,ஆனால், நீ பாஸ் பண்ணினாலும் வேலைபார்க்க விடுவாங்களா என்ன?

அதுவும் சந்தேகம்தான் சார்! ரொம்பவே போராடனும், சின்ன வயசுல இருந்தே ஒவ்வொன்றுக்கும் போராடிட்டு தானே இருக்கேன் என்று ஒரு பெருமூச்சோடு சொன்னாள்.

நீ கவலைப்படாதே! உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா எல்லாம் நல்லதாவே நடக்கும்,நாம வாங்கி இருக்கற எஸ்டேட்டுக்கு பக்கத்து எஸ்டேட் விலைக்கு தரதா சொன்னாங்க! பார்ப்போம், அதையும் வாங்கி, ஒரு சின்ன யூனிட் ஃபேக்டரியும் இங்கே போட்டா, இங்க இருக்கிற நெறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்,நானும் என்னால முடிஞ்ச ஹெல்ப் செய்யப் பார்க்கிறேன்! என்றவன் திருப்பி அவளை பார்த்து,” உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், என்கிட்ட தயங்காம கேளு! நான் உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்! என்று அவள் கண்களை பார்த்து சொல்ல,அவளும் அவனை பார்த்து நின்றாள்..அந்த மோனநிலையை ஒரு காட்டு குயிலின் சத்தம் கலைத்து செல்ல,பட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு,மீண்டும் நடந்தான், நீரின் பேரிரைச்சல் கேட்க திடீரென நின்றவன்.
இங்க பக்கத்துல அருவி இருக்கா?
ஆமாம் சார்! கொஞ்ச தூரத்துல வெள்ளி அருவி இருக்கு! அங்க தண்ணி கொட்டும் சத்தம் தான் இது!

நாம அங்க போய் பார்க்கலாமா? உனக்கு வேற ஏதாவது வேலை இருக்கா?

வேலை இப்ப எதுவும் இல்ல! சாயந்தரம் தான் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சணும்! வாங்க அருவிக்கு போயிட்டே போலாம்! ஆனா மறுபடி நீங்க தண்ணில முழுகிட்டா என்ன பண்ண?

நீ தான் இருக்கியே காப்பாற்ற ! எனக்கு நீச்சல் நல்லா தெரியும்,அன்னைக்கு மேல இருந்து விழும் போதே மயங்கிட்டேன், அதான் நீச்சல் அடிக்க முடியல,அதையே சொல்லி சொல்லி ஒட்டின,உன்ன தள்ளி விட்ருவேன் பார்த்துக்க! என்று மிரட்டியபடியே அருவியை நோக்கி சென்றவளை துரத்தியபடியே சென்றான்.

மழை தரும் கார் மேகங்கள் கூடி இருக்கும், வானை கிழித்து தோன்றும் மின்னலைப் போல, அந்தக் கருத்தடர்ந்த காட்டில், மின்னல்கற்றையாய் காட்சி தந்தது அந்த அருவி!

வெள்ளிக்கொலுசிலிருந்து சிதறும் முத்துக்களைப் போல , அதிலிருந்து தெறித்து ,சிதறின நீர்த்துளிகள்!

நீரில் இறங்கி ,அருவியில் நனைத்தான் மதி,தலை மீது கொட்டிய நீரின் வேகம், மனதோடு உற்சாக ஊற்றை பெருக்கெடுக்க செய்ய சந்தோச சாரலில் நனைத்த படியே அவன்செம்பாவை பார்த்தான்

அவள் அந்தபுறம் அருவியில் குளித்து கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் பட்டு தெறிக்கும் நீர்துளிகள், ரோஜாவின் மேல் நிற்கும் பனித்துளிகள் போல் தெரிந்தன!

“தங்கத் தாமரை மகளே !தத்தித் தாவுது மனமே !என பாடல் கேட்க, மதி சுற்றிலும் பார்த்தான், எங்கிருந்து பாடல் வருதென ,அவன் திரும்பியதும் பாடல் நின்றது.

அவன் மீண்டும் செம்பாவை பார்க்க பாடலும் தொடர்ந்தது, அய்யோ அப்ப இந்த பாட்டு என் மனசுக்குள்ள தான் பாடுதா? ,லவ் பண்ணா இளையராஜா தானே மனசுக்குள்ள பிஜிஎம் போடுவாரு,இதென்ன ஏ. ஆர் ரகுமான் வந்து தாறுமாறான சாங் போடறாரு!

அடே!மனசாட்சி உனக்கு மனசாட்சியே இல்லையா? யாரை பார்த்து, என்ன பாட்டு போடற,இந்த பாட்டு உள்ளுக்குள்ள ஓடுதுன்னு அவளுக்கு தெரிந்தா இந்த அருவியில அமுக்கியே என்னை
கொன்னுடுவா!, தயவு செஞ்சு, கொஞ்சம் அடக்கி வாசி! என தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரம் அருவியில் குளித்த பின்னர் புறப்பட்டனர் ,மதிக்கு அவளோடு இருப்பதே பெரும் சுகமாய் இருந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top