• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்---13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
தாமதத்திற்குமன்னிக்கவும்,சென்ற பதிவிற்கு லைக் , கமெண்ட் செய்தஅனைவருக்கும் நன்றி! இதோ, இன்றைய பதிவு! இதற்கும் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்...


?வசப்பட்டதே என் வானம்--13?

தீக்கங்கு கக்கும் ஒரு தீர்க்கமான பார்வையை மதியிடம் செலுத்தியவள், பின், ஒரு பெருமூச்சோடு கூட்டத்தை நோக்கி,

" எனக்கு அவரை பிடிச்சிருக்கு! இந்த கல்யாணத்துல சம்மதம் தான் என்றாள்."ஏனென்றால் ,மதி இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றத்தான் அப்படி செய்தான் என்பதும்! இப்போது பிடிக்கவில்லை என்றால், அது அவனுக்குத் தான் பிரச்சனையாக முடியும் என்பதும், அவளுக்குப் புரிந்தது!

எங்கே அவள் மறுப்பாக ஏதும் சொல்லி விடுவாளோ! என தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்த அவனின் இதயத்துடிப்பு ,அவள் பதிலால் சீரானது!

ஒரு கீற்று புன்னகையுடன் கூட்டத்தை பார்த்தவன், அப்புறம் என்னங்க சந்தோஷம்தானே! அவங்களே சொல்லிட்டாங்க சம்மதம்னு, இனி நாங்க பார்த்துக்கிறோம்,கண்டிப்பா சாயங்காலம் பரிகாரத்தையும் செஞ்சுடுவோம்! உங்க ஊருக்கு எதுவும் ஆகாது !, அதனாலே,இப்ப நீங்க சந்தோசமா வீட்டுக்கு போகலாம் என்றான்.

சலசலத்துக் கொண்டே, கலைந்து சென்றது ஊர்க்கூட்டம்! பூசாரி மட்டும் விளக்கெண்ணை குடித்தது போல் விழித்துக்கொண்டு நின்றான்!, அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று ,இனி அவளை பழிவாங்க வாய்ப்பே இல்லை என்று உணர்ந்தவன் கூட்டத்தில் கலந்து காணாமல் போனான்.

ஜம்புவிடம் வந்த மதி," ஐயா! தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க! நான் செம்பாவை காப்பாற்றத்தான் அப்படி நடந்துகிட்டேன்!, வேற எந்த உள்நோக்கமும் இல்லை என்றான்.

எனக்கு புரியுது தம்பி! நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க?, நாங்கதான் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கோம்!அந்த நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தேன்!ஊர்த் தலைவரா இருந்துகிட்டு, ஊர்ப்பேச்சு கேக்கலைன்னா வம்பு வழக்கு வரும் !ஆனா அதுக்காக புள்ள மருவாதிய விட்டுகொடுக்க முடியுமா? கைய பெசஞ்சுகிட்டே நின்னேன், ஆனா நீங்க பட்டுன்னு முடிவு பண்ணி, கண்ணாலம் கட்டிக்கிட்டு, என் வயித்துல பால வாத்துட்டீங்க தம்பி! என்றார் கண்கலங்கியபடி…
கையெடுத்து கும்பிட்ட அவரின் கைகளை இடைமறித்து,தன் கைகளால் தட்டி கொடுத்தான் மதி, எப்போதும் உங்களோடு நான் இருப்பேன் என்ற நம்பிக்கையை அந்த செயல் அவருக்கு சொன்னது..

அடுத்து அவன் செம்பாவை நோக்கிப் போனான்..

அவனைப் பார்த்ததும் அவள் திரும்பி நின்று கொண்டாள்.

செம்பா! இந்தப் பக்கம் திரும்பு, என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் ,அவள் திரும்பாததால் அவன் அவள் முன்னால் சென்று நின்றான்.

ஏய் என்னை பாரு! என்ன கோபமா? நான் ஒன்னும் இதை திட்டம் போட்டு செய்யலமா, அந்த நேரத்துல உன்னை காப்பாத்ததான் செஞ்சேன் ,என்னை வேற என்ன பண்ண சொல்ற? அவங்க ஆளாளுக்கு உன்ன தப்பா பேசறத கேட்டுட்டு சும்மா நிக்க முடியல ..என கோபத்தோடு பேசியவனை இடைமறித்து..

நான் கேட்டேனா, உங்களக் காப்பாத்த சொல்லி?, அதுக்கு பட்டுன்னு தாலி கட்டிட்டா பிரச்சினை தீர்ந்து விடுமா?, ஏன் என்னால இவங்கள சமாளிக்க முடியாதா? அவங்க சொன்ன நான் செஞ்சிடுவேனா?

அடக்கப்பட்ட கோபத்துடன், விழிகளால் போர்தொடுக்க தொடங்கியவளின், கேள்விக்கணைகளை சமாளிக்க முடியாமல் திணறினான் மதி!

இங்க பாரு!உன்னால சமாளிக்க முடியாதுனு நான் சொல்லலை,எதுக்கு ரிஸ்க், அவங்க சாமி பெயரை சொல்லி உன்ன கார்னர் பண்ணுவாங்க ,நீ செய்யலைன்னா அப்புறம் இங்க என்ன அசம்பாவிதம் நடந்தாலும்,உன்னையே காரணமா சொல்லுவாங்க! அது மட்டும் இல்லை, நீ அன்னைக்கு என்ன சொன்ன? கோச்சிங் கிளாஸ் போனா கலெக்டருக்கு படிக்க வசதியா இருக்கும்னு சொன்னல்ல.. ! உன்ன இங்கிருந்து, சும்மா நான் கோச்சிங் கிளாஸ் சேர்த்து விடறேன்னு கூட்டிட்டு போக முடியுமா ?ஆனா இப்ப பாரு உன்ன நா எங்க வேணா கூட்டிகிட்டு போகலாம் ,யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க! நான் ஒன்னும் அவசரப்பட்டு இதை செய்யலப்பா! உன்னை இக்கட்டில் இருந்து காப்பாத்த, இங்கிருந்து கூட்டிட்டு போய் படிக்க வைக்க, ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க, என எல்லாத்துக்கும் தீர்வுதான், இந்த திடீர் கல்யாணம்! என்னை நம்பு, என்னை பொறுத்த வரை, இந்த கருகமணி, ஓ சாரி! உங்க ஊர் தாலி ,இந்த ஊரை விட்டு உன்ன கூட்டிட்டு போற ஈ பாஸ் மாதிரிதான் !,இதுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காத! என்னை நம்புனா என்கூட வா, உன் ஆசை, லட்சியத்தை அடைய நான் எப்பவும் உறுதுணையாக இருப்பேன்!
அப்படி இல்லன்னா... ஒன்னும் பிரச்சனை இல்ல! இந்தக் தாலியை கழட்டி போட்டுட்டு, நீ உன் வேலைய பாரு !என்று சொன்னவன் அவளை விட்டு சற்று எட்ட சென்று, கோயில் திட்டில் அமர்ந்துகொண்டான்.

செம்பாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது, அவளுக்கே தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை! அவளும் கோபத்தில் திட்டின் மறு முனையில் அமர்ந்து, நகம் கடிக்க தொடங்கினாள்..

எதிரும், புதிருமாய் அமர்ந்திருந்த அந்த புதுமண ஜோடியை நோக்கி வந்தார் ஜம்பு.

ஏன் ஆத்தா, இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்து இருக்க, இப்ப என்ன நடந்து போச்சு? கண்னாலம்
தானே நடந்து இருக்கு! அங்க பாரு மாப்ள ராசா கணக்கா இருக்காரு, நம்ம சாதி சனத்துல இப்படி ஒரு புள்ளைய நாம பார்க்க முடியுமா? உன்னை பத்தி யாராச்சும் தப்பா பேசினா, எம்முட்டு கோபப்படுறாரு ! உன்ன நல்லா பார்த்து பாரு! வா ராசாத்தி! வீட்டுக்கு போய் ஆக வேண்டியதை பார்ப்போம் என அவளிடம் பேசி,பின் இருவரையும் சமாதானப்படுத்தி, வீட்டுக்கு கூட்டி வந்து ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த மதி, பூவை கூட்டிக்கொண்டு ஜீப்பில் கிளம்பினான்..

செம்பா இதை பார்த்தாலும், ஏன் எதற்கு என்று ஏதும் கேட்கவில்லை! அறை போல் தடுக்கப்பட்டு இருந்த ஒரு இடத்தில் பாயை விரித்துப் போட்டு படுத்துக்கொண்டாள்.

தூக்கம் கலைந்து, எழுந்து வந்து பார்த்தபோதும் மதி வந்திருக்கவில்லை ,சற்று நேரம் கழித்து இருவரும் சிரித்த முகத்தோடு உள்ளே வந்தனர்..

நான் சொன்னத எல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க பூவு! எப்ப ,என்ன பிரச்சினை என்றாலும்,என்னை போன்ல கூப்பிடுங்க, நான் கிளம்பி வந்து விடுவேன்..

சரிங்கய்யா! எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க! செம்பி இடத்திலிருந்து நான் எல்லாத்தையும் நல்லபடியா பார்த்துபேன்க! நீங்க கவலைப்படாம ஊருக்கு போயிட்டு வாங்க என்றாள் பூ…

சிரித்துக் கொண்டே அவளுக்கு தலையாட்டிய மதி, செம்பா முறைப்பதை பார்த்ததும் நிறுத்தி கொண்டு, வெளியே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.


உள்ளே சென்று செம்பாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் வைத்தாள் பூ!

செம்பி நீ ரொம்ப கொடுத்து வச்சவடி !தங்கமான மனுஷன், உனக்கு புருஷனா வாச்சு இருக்காரு! கண்ணாலம் பண்ணினமா, பொண்ண கூட கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தினோமா, அப்படின்னு தானே எல்லா பசங்களும் நினைப்பாங்க! ஆனா இவரு இங்க பொண்ணு செஞ்சிட்டு இருந்த, நல்ல காரியம் எதுவும் தடை பட கூடாதுன்னு எல்லாத்துக்கும் மாத்துவழி பண்றாரு ! எப்பேர்பட்ட மனசு உன் புருஷனுக்கு..

சும்மா! சும்மா! புருஷன் ,பொண்டாட்டின்னு சொல்றத நிறுத்து ,மொதல்ல எங்க போனீங்க? என்ன நடந்துச்சுன்னு சொல்லு..

நாங்க, நம்ம பள்ளிக்கூட வாத்தியார் ஜெய்சங்கர் சாரை பார்க்க போயிருந்தோம்,நீ இரும்பு ஏணியில் ஏறி போய், பாடம் சொல்லிக் கொடுக்கப் போவியில்ல மூங்கில் பள்ளத்துக்கு.. அந்த ஊருக்கு ஜெய்சங்கர் சார, நம்ம ஐயா வாரத்துல ரெண்டு நாள் பாடம் சொல்லிக்கொடுக்க போகச் சொன்னார், முதல்ல வாத்தியாரு முடியாதுன்னு மறுத்தது , நம்ம அய்யா தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனத சொல்லி ,செம்பிய கூட கூட்டிட்டு போறதால அவளால சொல்லிக் கொடுக்க முடியாது, நீங்க சொல்லி கொடுங்கன்னு சொல்லி, அதுக்கு மாசாமாசம் பணம் அனுப்புவதாகவும் சொன்னாரு.. அப்புறம்தான் அவரு ஒத்துக்கிட்டாரு…

என்கிட்டயும், நம்ம செல்விகிட்டயும் தினமும் காலையில பசங்கள பள்ளிக்கூடம் கிளப்பி விடற வேலைய பாக்க சொன்னாரு, நம்ம ராமசாமி கிட்ட உங்க அப்பாவுக்கு துணையாய் இருந்து உன் தோட்டத்தை பராமரிக்க சொன்னாரு, ..அதனால இனிமே இங்க நீ இல்லைனாலும், எல்லா வேலையும் அதுபாட்டுக்கு எப்பவும் போல நடக்கும். அதுக்கு சாரு, எல்லா ஏற்பாட்டையும் பார்த்துட்டாரு, அதான் சொன்னேன் தங்கமான புருசன்னு,என பேசிக் கொண்டிருந்தவளைஇடைமறித்து…

ஆகமொத்தம் ..இனி நீ இங்க தேவையில்லை கிளம்புன்னு சொல்றீங்க, அப்படித்தானே.. என்றாள் செம்பா..

ஐயோ சாமி! நான் என்ன சொன்னா நீ எப்படி புரிஞ்சுக்கிற, எதுக்கு இம்புட்டு கோபம்! ஆள விடு சாமி!,எப்படித்தான் இம்முட்டு கோவக்காரிய வச்சுக்கிட்டு அந்த மனுஷன் குடும்பம் நடத்த போறாரோ என்று சொன்னவள் மண்டையில் நங்கென்று கொட்டு விழுந்தது..

அவளிடம் இருந்து தப்பித்தால் போதுமென ஓடினாள் பூ!

மதியிடம் வந்த ஜம்பு, தம்பி கல்யாண சடங்குகள் எல்லாம் சிலது இருக்குதுங்க.. நீங்க சம்மதிச்சா செஞ்சுடலாம் என தயங்கி கொண்டே கேட்டார்..

"ஐயா! எனக்கு எந்த சங்கடமும் இல்லை, உங்க மனசுக்கு பிடிச்சதை செய்யுங்க! என்றான் மதி..

அப்பா! அதை செய், இதை செய்னு ஏதாவது சொன்னீங்க... நடக்கிறதே வேற.. தயவுசெஞ்சு விடுங்கப்பா! நீங்களும் உங்க சடங்கும் என கத்தினாள் செம்பா !
மாமா! அவளை அவ போக்கிலே விட்டு விடுங்க! எந்த சடங்கும் வேண்டாம்,சாயங்காலம் பரிகாரத்தை செஞ்சுட்டு, கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடுவோம், நீங்க அனுமதிச்ச நாளைக்கு நாங்க ஊருக்கு கிளம்பிடறோம் மாமா! என்றான்.

அந்த நவநாகரீக இளைஞனின் மரியாதை கலந்த மாமா என்று அழைப்பிலேயே உருகி நின்றார் ஜம்பு! பின் அவன் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு தான் இருந்தார்.

கோவிலுக்கு சென்றபோது, செம்பா எதையும் கண்டுகொள்ளாமல் ஓரமாய் அமர்ந்து விட ,பரிகாரத்தையும் மதியே செய்துவிட்டு கெஸ்ட் ஹவுஸ் வந்தனர்.

கெஸ்ட் ஹவுஸில் வேலை செய்யும் பெண் ஆரத்தி எடுத்தாள்!

உள்ள வாங்க மாமா! நம்ம வீடு தான் என உள்ளே அழைத்துச் சென்றான் மதி, சூடாக சமைத்து வைத்திருந்த உணவை மூவரும் உண்டனர்..

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த ஜம்பு! மதியை அழைத்து, தம்பி வரிங்களா, கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வரலாம் என்றார்.

மதி அவர் என்னவோ தன்னிடம் தனியே பேச நினைக்கிறார் என்பதைப் புரிந்து உடன் சென்றான்.

கொஞ்சதூரம்சென்றதும்,"மாப்ள!,
செம்பா தாயில்லாமல் வளர்ந்த புள்ள !சூதுவாது தெரியாது, தப்புன்னு தெரிஞ்சா கைய நீட்டிடுவா! ஆனா தன் மேல யாராச்சும் கொஞ்சம் அன்பு காட்டினா, அதை நூறு மடங்கு திருப்பி கொடுப்பா, உங்கள நம்பித்தான் கூட அனுப்பறேன், நல்லபடியா பார்த்துக்குங்க மாப்ள.. என்றார் தந்தைக்கே உரிய பயம் கலந்த பாசத்துடன்...

மாமா! உங்க பொண்ணு இனி என் மனைவி, அவளை நான் என் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன் அவ என் கண்ணை குத்தினா கூட கவலைப்பட மாட்டேன்! நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க! உங்க உடம்ப பார்த்துக்கோங்க, அங்க தனியா இருக்காதீங்க! நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு வந்துடுங்க, வேலைக்கு ஆள் இருக்காங்க! உங்கள நல்லா பார்த்துப்பாங்க, நீங்க நம்ம எஸ்டேட்டை பார்த்துக்குங்க !,நாங்களும் இங்க அடிக்கடி வர முயற்சி பண்றோம் என்றான்.

வீட்டுக்குத் திரும்பி வந்ததும், ஜம்பு ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டார்..மதி செம்பாவை தேட ,அவளை எங்கும் காணவில்லை! ஒரு நொடி திடுக்கிட்டவன், பின் ரூமின் உள்ளே சென்று மீண்டும் நன்றாக பார்த்தான்..

அங்கே கட்டிலின்மேல் ,தொட்டிலில் தூங்கும் மழலையென மங்கையவள் உறங்கிக்கொண்டிருந்தாள்..

நிராதரவாய் தெரிந்த, அந்த மதிமுகத்தை, தன் விரல்களால் வருடிவிட்டவன், தலைகோதி கொடுத்தான்..

அவள் கைகளை எடுத்து, தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன்,அதை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Nice update the sis ..but nenga konjam continues ah Ud kodunga sis ..appa than lag agama. Iruukum.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top