• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்--15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
சென்ற பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி ! இதோ இன்றைய பதிவு, இதற்கும் தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!!

வசப்பட்டதே என் வானம் --15

அந்த நவநாகரீக அப்பார்ட்மெண்டின் இரண்டாம் தளத்தில் இருந்த பிளாட்டை திறந்தான் மதி


விடியலில் சென்னையை அடைந்த அவர்கள், கால் டாக்ஸி மூலமாக அந்த அபார்ட்மெண்டுக்கு வந்திருந்தனர்



"இது யாருடைய வீடு" என கேட்டாள்செம்பா


நமக்குச் சொந்தமான பிளாட் தான் வாடகைக்கு விட்டிருந்தோம், என் பிரண்டு தான், இப்ப அவன் பாரின் போயிருக்கான், வர்ற வரைக்கும் இது ப்ரீயா தான் இருக்கும், நாம ரெண்டு நாள் இங்க தங்கி தேவையானதெல்லாம் பர்சேஸ் பண்ணிட்டு , நல்ல இன்ஸ்டியூட்டா பார்த்து,உன்னை சேர்த்து விட்டுட்டு நான் ஊருக்கு போய்விடுவேன் என்றான்..


இரண்டு நாட்கள் தங்க வேண்டும் என்பதில் தயங்கிய பெண்மனம், பின் அவன் விட்டுச் சென்று விடுவான் என்றதும் பரிதவித்தது,

முகத்தில் எதையும் காட்டாமல் உள்ளே நுழைந்தாள்.


ஒரு அறையை திறந்தவன்," நீ இதை பயன்படுத்திக்க, நான் பக்கத்து ரூமை யூஸ் பண்ணிக்கிறேன் என்றான்.



அழகான வான நிறத்தில் அமைக்கப்பட்ட பெட், அதற்கு கூடுதல் அழகு சேர்க்க, அதே வண்ணத்தில் செய்யப்பட்ட இன்டீரியர் வேலைகள் என,அந்த ரூமே ரம்மியமாய் இருந்தது.


பிரமித்து பார்த்து இருந்தவளிடம் ,நீ நல்லா குளிச்சிட்டு ஓய்வெடு! நான் வெளியே போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன் என்றவன்,

பாத்ரூமை காட்டி, ஹீட்டர் போட்டு குளி,தண்ணி ஜில்லுனு இருக்கும் என்றான்.


"எனக்குத் தெரியாது"


என்ன தெரியாது?


"ஹீட்டர் போட தெரியாது"


மெல்ல புன்னகைத்தவன், இங்கே வா என்று அவளை அழைத்து ஹீட்டர் போட சொல்லி கொடுத்து சென்றான்.


அவள் குளித்து விட்டு சிறிது ஓய்வெடுத்த பின், கதவு தட்டப்பட,திறந்தாள்


"சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன் ,வா சாப்பிடலாம் என மதி அழைத்தான்.


வாங்கி வந்த பார்சலை பிரித்தான், அதில் ஒரு பெரிய சைஸ் பீட்சா இருந்தது! பாதியை பிரித்து தன் தட்டில் போட்டுக் கொண்டு, மீதியை செம்பா தட்டில் வைக்க போனான்..


அவன் பீட்சாவில் இருந்து வழிந்த பட்டரை பார்த்ததும் ,செம்பாவிற்கு என்னவோ போல் இருக்க, எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை,வேண்டாம் மதி சார் என்றாள்.


அவளை முறைத்துப் பார்த்தவன் ,முதல்ல இந்த சார்னு கூப்பிடுவதை நிறுத்தறியா?


நான் வேற எப்படி கூப்பிடுறது?


நீ எப்படி வேணா கூப்பிடலாம் என்றான் ஒரு மாதிரியான குரலில்...


என்ன என அதிர்ந்து பார்த்தாள் அவள்.


அது ஒன்னும் இல்ல, நான் உன் பிரண்டு தானே, அதனால நீ எப்படி வேணா கூப்பிடலாம்னு சொன்னேன்,மதினு கூப்பிடு, இல்ல முகில்னு கூப்பிடு ,இல்ல வாடா போடான்னு கூட கூப்பிடு நோ ப்ராப்ளம் என்றான் சிரித்துக் கொண்டு..


நான் இனி பேர் சொல்லியே கூப்பிடுறேன் என்றாள்.


தட்ஸ் குட்! பீட்சா வாங்கும் போதே நினைச்சேன் உனக்கு பிடிக்குமா,இல்லையான்னு அதான் தோசையும் வாங்கிட்டு
வந்திருக்கேன், நீ அத சாப்பிடு என அந்தப் பொட்டலத்தை அவள் பக்கம் நகர்த்தி வைத்தான்.


இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர், பின் மதி செம்பாவிடம் "கொஞ்சம் ரெடியாகு, உனக்கு நிறைய திங்ஸ் வாங்கணும், பர்சேஸ் போயிட்டு வரலாம்" என்றான்.


இல்ல எனக்கு எதுவும் வேண்டாம் இருப்பதை வைத்து சமாளித்துக் கொள்வேன்..


நீ எதையும் சமாளிப்பேன்னு எனக்குத் தெரியும், ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ இது சென்னை சிட்டி, இங்க பழக்க வழக்கம் எல்லாம் வேற மாதிரி இருக்கும் ,நல்ல டிரஸ் போட்டு நீட்டா இருந்தாத்தான் இங்க மரியாதை கிடைக்கும்.


"அப்ப மனுஷங்களுக்கு மரியாதை கிடையாதா? , அவங்க போடற டிரஸ்சுக்கு தானா?


ஆள்பாதி! ஆடைபாதி! நம்ம தோற்றம்,நல்லா இருந்தா தான், எதிர்ல இருக்கிறவங்களுக்கு நம்ம மேல வர அபிப்பிராயம் நல்லா இருக்கும் .,உன்கிட்ட இருக்கிறது எல்லாம், இந்த சிட்டிக்கு ஒத்துவராது, தயவு செஞ்சு கிளம்பு என்றான்.


இல்ல! உங்களுக்கு என்னால எதுக்கு வெட்டி செலவு !இதையெல்லாம் நான் எப்படி திருப்பிக்கொடுக்க? என்றாள்.


"எப்படி திருப்பிக்கொடுக்க! என சொல்லி யோசிப்பது போல் பாவனை செய்தவன் பின்,அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து, மெதுவாக அவளை நோக்கி அடி எடுத்து வந்து, அவள் முகம் நோக்கி குனிய,


அனிச்சைச் செயலாக, சட்டென பின்னால் நகர்ந்தாள் செம்பா!


மெல்லப் புன்னகைத்தவன் ,அவள் காதோரமாய் "நீ கலெக்டரான சம்பளம் வாங்குவ தானே, அதை அப்படியே என்கிட்ட கொடுத்திடு! ஓகே வா ! என்றான்


கொஞ்சம் பதட்டம் அடைந்த செம்பா அவன் பதிலால் சமன்பட்டால், "கண்டிப்பா தந்திடறேன், அதுக்கு ஏன் பக்கத்துல வர்றீங்க…. அங்கே இருந்தே சொல்ல வேண்டியது தானே? என்றாள்.


நான் பக்கத்துல வந்து சொன்னா என்ன? என்னை பார்த்த பயமா இருக்கா? என்றான் ஒற்றை புருவம் உயர்த்தியபடி..


அவனை நேர் பார்வை பார்த்தவள்," ஒரு பத்து நிமிஷம் காத்திருங்க! கிளம்பி வந்து விடுகிறேன் என்று பேச்சை மாற்றி அறைக்குள் புகுந்தாள்.

தப்பித்து ஓடும் மங்கையின் பின்னே ,தவிப்போடு ஓடியது மதியின் மனமும்..

அறைக்குள் வந்தவள் அவசர அவசரமாக ஒரு சுடிதாருக்குள் தன்னை பொருத்திக் கொண்டு, தலை சீவி வெளி வந்தாள்.

அவனும் ஒயிட் சர்ட், ஜீன்ஸ் என அணிந்து வர,இருவரும் கிளம்பினர்.

பார்க்க ஜோடி பக்காவா இருக்குன்னு ,சுத்தி இருக்கிற யாரும் சொல்லல, ஏன் என்றால், அவங்க யாரு, என்னன்னு நின்னு கேட்கக் கூட இந்த நகரத்து மனிதர்கள்கிட்ட நேரமில்லை, எல்லோரும், எதற்கு, எதன் பின்னால் என தெரியாமல் அவரவர் போக்கில் ஓடிக்கொண்டு இருந்தனர்.

கீழே வந்ததும் அவன் பார்க்கிங்கில் இருந்த ஒரு பல்சர் வண்டியை எடுக்க..

அவனை கேள்வியாய் செம்பா பார்க்க..

ஏது வண்டி என்று தானே கேக்குற , அதே ப்ரெண்ட்டோடது தான், பிளாட்ல தான் சாவி இருந்தது,அவன்கிட்ட கேட்டு எடுத்துகிட்டேன்,இங்க இருக்கற டிராஃபிக்கு இதுதான் சரி, கேப் புக் பண்ணினால் லேட் ஆகும் என்றான்.


ஆனா பாருங்க மக்களே! இந்த பயபுள்ள பொய் சொல்றான், அவன் பார்த்த ஒரு தெலுங்கு படத்துல ஹீரோ நண்பன் ஹீரோவிடம் சொல்லுவான், கேர்ள் பிரண்ட் கூட கார்ல போகாத ,பைக்ல போ !அப்பதான் பாடியும், பாடியும் டச் ஆகும், ஃபயர் ஆகும்னு,அதைக்கேட்டு ஹீரோ பைக்ல ஹீரோயின கூட்டிட்டு போவான், அந்த மாதிரி கெமிஸ்ட்ரி யோ, பயாலஜியோ, கொஞ்சமாவது ஒர்க் அவுட் ஆகட்டும் என்ற ஆசையில்தான் பைக்ல போறான் இவன்.


முதலில் அவன், அவளை ஒரு பிரபலமான துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான்,

பெண்கள் பிரிவுக்கு சென்றவன்,

"செம்பா உனக்கு புடிச்ச மாதிரி ஒரு இருபது செட் டிரஸ் எடுத்துக்க தேவைப்படும்" !என்று சொல்லி ,அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


மலையாய் குவிந்திருந்த ஆடைகளை பார்த்து, சிலையாய்ச் சமைந்தவள்,பின் சுதாரித்து, விலை குறைவாய் எடுத்துப் போடச் சொன்னாள், அந்த விற்பனை பெண்ணை..

குறைந்த விலை என அவர்கள் எடுத்துப் போட்டது எல்லாம், அவள் பார்வைக்கு அதிக விலையாய் தெரிய, அவள் தயங்கித் தயங்கி எடுத்தாள்,அதை கவனித்த மதி" இரு, நானும் கொஞ்சம் எடுக்கிறேன் என வந்தவன் நின்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ,பின் படபடவென அழகான டாப்ஸ், குர்தாஎன பல ஆடைகளை எடுத்து போட்டான்,ஒவ்வொரு ஆடையையும், கையில் எடுத்தவன், மனக்கண்ணில் அவளுக்கு போட்டுப் பார்த்து பொருத்தமாயிருக்கும் என தோன்றியதை தான் எடுத்தான்,அவன் எடுத்ததெல்லாம் அவளுக்கு பொருத்தமாகவும் இருந்தது ,பிடித்தமாகவும் இருந்தது..

கடையில் வேலை செய்யும் பெண்கள் விழி விரிய அவனைப் பார்த்து நின்றனர்.

செம்பா அருகே வந்த ஒரு நடுத்தர வயது விற்பனைப் பெண் , ஏம்ம்மா!அவரு உன் புருஷனா? என கேட்க.

அவளையறியாமல் தலையாட்டியவள், பின் திடுக்கிட்டு, இல்லை எனக்கு ...எனக்கு சொந்தக்காரர் என்றாள் தயங்கி கொண்டே..

ஓ! லவ்வரா ,அதைச் சொல்லத்தான் தயங்குறீங்களா ,ஆனாலும், நீ கொடுத்து வச்சவ தான் மா!, உன் ஆளு கண்ணுக்கு லட்சணமா, அழகா, மட்டும் இல்லை, ஒவ்வொரு ட்ரஸையும் தேடித்தேடி உனக்கு பொருத்தமா எடுக்கறத பார்த்தாலே தெரியுது ,பையன் உன்ன கண்ணுக்குள்ள வெச்சு பார்துக்குவாருனு ,என சிரித்துக்கொண்டே சொல்லி சென்றாள்.

செம்பா மதியை பார்த்தாள்,அந்தப் பார்வையில் கொஞ்சம் சொந்தம் இருந்தது !கொஞ்சம் ஏக்கம் நிறைந்தது!

ஆடைகளை எடுத்து முடித்தவுடன் மதி,கொஞ்சம் தயங்கி கொண்டே செம்பாவிடம், "நீ வேற ஏதாவது எடுக்க வேண்டும் என்றால் எடுத்துட்டு வா, நான் பில் பே பண்ற இடத்துல நிற்கிறேன்'' என்றான்.

இனி இதற்கு மேல் என்ன எடுக்க என யோசித்து நின்றவளை ,அந்த விற்பனை பெண்,"மேடம் இன்னர்வேர் செக்க்ஷன் அங்க இருக்கு ,அங்க போய் எடுங்க "என சொன்னவுடன் தான், அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தது, தன்னை நொந்து கொண்டே அங்கே சென்றாள்.

பணம் கட்டும் இடத்துக்கு வந்த மதியை, அங்கே கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்த, ஒரு சந்தன வண்ண சேலை கவர்ந்தது,அது சந்தன வண்ணத்தில் ஆங்காங்கே பிரவுன் நிற கற்கள் ,பூக்கள் வடிவில் ஒட்டப்பட்டு அழகாய் இருந்தது

செம்பா இன்னும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ,அவன் அந்த சேலையை எடுத்தான், அந்தப் பிரிவில் இருந்த விற்பனை பெண் மூலமாக அதற்குப் பொருத்தமான ரெடிமேட் பிளவுசை எடுத்து தரச் சொல்லி அதையும் வாங்கிக் கொண்டான்,

அவள் வந்தவுடன்,எல்லாவற்றுக்கும் பில்லை கட்டியவன் ,பின் அவளை செல்போன் கடைக்கு அழைத்துச் சென்று லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கி கொடுத்தான்.

அருகில் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர் அப்போது மதி, செம்பாவிடம் நான் விசாரிச்சதுல ஒரு மூன்று இன்ஸ்டியூட் இங்க ஐ ஏஎஸ் கோச்சிங்குக்கு ரொம்ப நல்லா இருக்கு ,அதுல பெட்டரா இருக்கிற ஒண்ணுக்கு நாம இப்ப போய் பார்க்க போறோம் ,உனக்கு அது பிடித்ததுனா ,அட்மிஷன் போட்டுட்டு வந்திடலாம் என்றான்.

மதி சொன்ன அந்த இன்ஸ்டிட்யூட் நகரின் மையத்தில், நல்ல கட்டமைப்போடு, நவீனமாக ஹாஸ்டல் வசதியோடும் இருந்தது.

அங்கேயே சேர முடிவு செய்தவர்கள்,அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு நாளை வருவதாக சொல்லி திரும்பினர்..

செம்பாவிற்கு நடப்பதெல்லாம் கனவா என தோன்றியது, மனம் சந்தோசத்தில் துள்ளியது.மதிக்கோ நாளைஅவளைப் பிரிந்து செல்ல வேண்டும் என்பது கவலையாயிருந்தது..

அவளை மெரினா பீச்சுக்கு கூட்டிச் சென்றான் மதி.

எத்தனை முறை கரையை முத்தமிட்டாலும் தாகம் அடங்காது, திரும்பத்திரும்ப கரையை அடைந்து, நுரையாய் உடைந்து, சிதறி செல்லும் அலையின் அழகை ரசித்தபடி மணலில் அமர்ந்தனர்

நான் இப்பதான் பீச்சுக்கு முதன்முதலா வர்றேன், ரொம்ப சந்தோசமா இருக்கு ,நான் கொஞ்சம் கடலுக்குள்சென்று கால் நனைச்சுட்டு வரவா என மதியை பார்த்து அவள் கேட்க..

ஹேய்! இதுக்கெல்லாமா கேப்பாங்க ! போயிட்டு வா என்றான்.

துள்ளிக்குதித்து கடலுக்குள் ஓடினாள் ,அவள் கடலை ரசிக்க, கடற்கன்னி என தெரிந்த அவளை அவன் ரசித்துக்கொண்டிருந்தான்.


அப்போது ஒரு பெரிய அலை வருவதை கவனித்த மதி, செம்பாவிடம் பின்னால் வா! என கத்த,

அலைகளின் பேரிரைச்சலில் அது அவளுக்கு கேட்கவில்லை, அவளை நோக்கி ஓடினான், அவள் கையை பிடித்து பின்னால் இழுக்க ,அதற்குள் அவர்களை நோக்கி வந்த அந்த பெரிய அலை , இருவரையும் கீழே தள்ளியது,அதற்குப் பின்னால் வந்த இன்னொரு அலை, அவர்களை முழுதும் நனைத்து சென்றது..


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர், நனைந்தது நனைந்தாகிவிட்டதென நினைத்து மேலும் கொஞ்ச நேரம் அலைகளில் விளையாடினர்,

பின் ஆடைகள் கொஞ்சம் காயட்டும் என இருவரும் கொஞ்சதூரம் நடந்தனர் , மணலில் கால் புதைய, மனதோடுஉற்சாகம் பொங்க, ,அவளோடு நடந்து செல்வது, மதிக்கு மிகப் பிடித்து இருந்தது, அவளுக்கும் அது பிடித்துதான் இருந்தது.

மின்சாரம் தாங்கிச் செல்லும் இரு கம்பிகள் உரசி கொள்வதைப் போல, நடந்து செல்கையில் அவர்கள் கைகள் உரசிக் கொண்டன.. அரைகுறையாய் காய்ந்த ஆடைகளோடு புறப்பட்டனர்..

அந்த இருசக்கரவாகனம் போனது என்னவோ சாலையில்தான், ஆனால் மதிக்கு அது வானவெளியில் வானவில்லின் நடுவில் போவது போல் தோன்றியது! மனதுக்கு பிடித்தவள்,உயிரினில் வசிப்பவள் உடன் வருவதாலே….


வசப்படுமே!!!













 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top