• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்--16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
?வாசப்பட்டதே என் வானம் --16?
......


நாட்கள் சிறகில்லாமல் பறக்க கிட்டத்தட்ட ஓராண்டு முடிந்து இருந்தது..

செம்பா , முதனிலைத் தேர்வு ,இறுதித் தேர்வு ,நேர்முகத் தேர்வு என ஐஏஎஸ் இன் அனைத்து படிகளையும் கடந்து, வெற்றிப் படியை அடைந்து ,தற்போது முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமியில் டிரெய்னிங் செல்ல போகிறாள், அதனால் விடுதியை காலி செய்து அவளை கூட்டி வரத்தான் மதி போய்க்கொண்டிருந்தான்.

அவன் மனம் கடந்த நாட்களில், திரும்ப பயணித்தது, மனக்கண்ணில் முதன் முதலாய் அவளை விடுதியில் சேர்த்த நாள் ஞாபகம் வந்தது.

இருவரும் பீச்சுக்கு சென்று வந்த மறுநாள் காலையில் அவளை மாமல்லபுரம் கூட்டி சென்றான்,

அவள் வேண்டாம் என்ற போது," இனி நீ படிக்க போனால், முழுமனதாக படிக்க வேண்டும் ,எந்த பொழுதுபோக்கும் இருக்காது! இப்ப சந்தோசமா ஊர் சுத்திட்டு, மாலை உன்னை விடுதியில் விட்டுவிட்டு, நான் இரவு ரயிலுக்கு கிளம்பி விடுகிறேன் என பல சமாதானங்கள் சொல்லி அழைத்துச் சென்றான்.

கற்களில் இத்தனை அற்புதங்கள் சாத்தியமா? எனக் கேட்டால் சத்தியமாய் சாத்தியமே! என பதில் அளிப்பதாக இருந்தது மாமல்லபுரத்து சிற்பங்கள்..

மதி ஏற்கனவே அங்கே வந்திருந்தாலும், அவளோடு அளவளாவிக் கொண்டு ரசிப்பது, மிக இனிமையாக இருந்தது!பேசும் பெண் சிற்பத்தோடு கற்சிற்பங்களின் நுட்பத்தை காண்பது அற்புதம் தானே!

அங்கிருந்த பெரிய கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி பார்க்கையில் ,நகரின் மொத்தமும் பார்வை வட்டத்தில் வந்தது!ஆர்ப்பரிக்கும் நீலக்கடலின் கடற்கரையில் ,ஆங்காங்கே தெரிந்த சிற்பங்கள் கல் சிப்பி தாங்கிய பொன்முத்துகளாகத்தான் தெரிந்தன!

கடற்கரையை கண்டதும், செம்பா அலையோடு விளையாட, அதைத் தன் அலைபேசியில் அழகு ஓவியமாய் பதிவு செய்தான்,அவளோடு ஒற்றைக் கல் யானையின் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டான்.

பின், பிளாட்டிற்கு வந்தவர்கள் விடுதிக்கு கிளம்ப ஆயத்தமாக, அவளிடம் புடவையை தந்தான் மதி..

என்ன இது?

எங்க ஊர்ல இதை புடவை ன்னு சொல்வாங்க?

அது எனக்கும் தெரியும் ,ஆனா எதுக்கு எடுத்தீங்க? அதான் நிறைய டிரஸ் எடுத்து இருக்கோமே !இது எதுக்கு?

அது வந்து ..வந்து என தயங்கியவன் ,இது என்னோட கிஃப்ட், அங்க இன்ஸ்டியூட்டில் ஏதாவது விழா வந்தால் சேலை கட்டினால் நல்லா இருக்கும்னு நினைச்சு வாங்கி வந்தேன் ,இதில் என்ன தப்பு?

கொஞ்சம் தயங்கியவள்,தப்பு இல்ல, ஆனா எனக்கு சேலை கட்டத் தெரியாதே! என்றாள்.

"நான் வேணா கட்டி விடவா? என கேட்க துடித்த நாவை," நான் வேணா உன் நாக்கை வெட்டி விடவா ?என அவள் பதில் சொல்லுவாள் என்ற பயத்தில் அடக்கினான்..

ஒரு பெருமூச்சோடு, சேலை கட்டுவது எல்லாம் பெரிய விஷயமா? யூடியூப்ல சேலை கட்டுவது எப்படி என்று சர்ச் பண்ணு, அது ஆயிரம் விதமா காட்டும் என்றவன், போனையும், புடவையும் அவளிடம் தந்து அறைக்கு அனுப்பினான்..

அவனும் கிளம்பி வந்த போது, அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.


"அழகென்ற வார்த்தை
தன்னை
அழகு படுத்திக்கொண்டால்
அது அவள் தானோ?


அவளைப் புடவையில் பார்த்த நொடியில் ,புது கவிஞன் ஒருவன், மதியின் மனதில், கவி வாசித்துப் போனான்.

"எப்படி இருக்கு ?முதன்முதலாக கட்டி இருக்கேன்!

அசந்து நின்ற மதி, புருவங்களை மேல் உயர்த்தி," சான்சே இல்ல! புடவை உனக்கு ரொம்ப பொருத்தமா ,அழகா இருக்கு,இப்பவே நீ கலெக்டர் மாதிரி தான் இருக்க, நாம வேணா நம்ம ஊரு கலெக்டர் ஆபீசுக்கு இப்பவே போயிடலாமா ?என்றான்.

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவாங்க! சும்மா பொய் சொல்லாதீங்க! என சொல்லி சிரித்தாள்..பின் விடுதிக்கு காரில் பயணித்தார்கள், பயணத்தில் பாவையோ, பாதையை பார்த்துக்கொண்டிருக்க, அவனோ அவளையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவளறியாமல்…

விடுதியில் சேர்த்தவன் ,விடைபெற்றுக் கிளம்பும் முன், அவள் கையில் கொஞ்சம் பணமும், கிரெடிட் கார்டும் கொடுத்தான்,
உனக்கு எப்ப, என்ன வேணும்னாலும் வாங்கிக்க! அடிக்கடி போன் பண்ணு !நல்லா சாப்பிடு !நல்லா படி! ஆரோக்கியத்தில் கவனமாக இரு !என பல அறிவுரைகளை ,அக்கறையோடு சொல்லி விட்டுச்சென்றான்,குழந்தையை பள்ளியில் விட்டு செல்லும் தாயைப்போல..


அந்தக் டாக்ஸி தெரு முனையை அடைந்த போது, ஏதோ தோன்ற நிறுத்த சொன்னவன், உடனே இறங்கி விடுதியை பார்த்தான், பின் மாடியில் அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையை பார்த்தான்,ஜன்னல் கம்பியில் கை பதித்தவாறு ,கம்பிகளின் இடைவெளியில், மதியின் மனங்கவர் மங்கையின் மதிமுகம் தெரிந்தது..

அதைப்பார்த்ததும், அவன் மனதில் சூழ்ந்திருந்த சோகமேகம் விலக உற்சாகம் பீறிட்டது, அவன் அவளைப் பார்த்து கையசைக்க ,பதிலுக்கு அவளும் கை அசைத்தாள்..
பறக்கும் முத்தம் கொடுக்க துடித்த உதட்டை அடக்கி ..மீண்டும் கையசைத்து, கிளம்பினான் ஒருவித மனநிறைவோடு!


கடந்த ஓராண்டும், அவளை தினமும் அலைபேசியில் அழைத்து, நலம் விசாரித்துக் கொள்வான்! இருமுறை அவள் தந்தையோடு சென்று பார்த்தும் வந்தான்.ஆனால் எந்த ஒரு கணமும், அவன் அவளை விரும்புவதை வார்த்தையாலோ, பார்வையாலோ,அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை,அவனால் அவள் படிப்பிலிருந்து கவனம் சிதறக் கூடாது என்பதில் அவன் கவனமாய் இருந்தான்.

அவனும் செம்பாவின் ஊரிலுள்ள எஸ்டேட்டுக்கு பக்கத்தில் தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்து, அங்குள்ள பிற இடங்களிலிருந்து தேயிலை கொள்முதல் செய்தும்,தொழிலை விரிவுபடுத்தி இருந்தான், அந்த கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைப்பதற்காக,அவனிடம் வேலை பார்ப்பவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான்..
செம்பாவின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவனுக்கு அத்தனை சந்தோஷம்…



அந்தக் கார் ,விடுதி வாசலில் நின்றது !நீண்ட நாள் கழித்து அவளைப் பார்ப்பதால் அவனுக்குள் இனிதாய் ஒரு படபடப்பு..

கையில் லக்கேஜுடன் வெளியே வந்தவள், அவனை பார்த்து புன்னகைக்க ,அந்த ஒற்றை புன்னகை, பத்துப்பாட்டில் பூஸ்ட் குடித்தது போன்ற எனர்ஜியை அவனுக்கு தந்தது..

முகம் நிறைந்த புன்னகையுடன், ஆங்கிலேயர் பாணியில் இடைவரை குனிந்து வணக்கம் வைத்து ,அவளை வரவேற்று கார்க் கதவை திறந்துவிட..

இப்ப எதுக்கு என்னை கிண்டல் பண்றீங்க ?

ஐயோ! கிண்டலா !கலெக்டர் அம்மாவை கிண்டல் பண்ணினால் சும்மா விடுவாங்களா? ஜெயிலில் தள்ளி விட்டுட மாட்டீங்க! என்றான் பயந்தவன் போன்ற பாவனையில்..


இன்னும் நான் கலெக்டர் ஆகல ,இப்ப தான் டிரெய்னிங் போக போறேன்! என்றாள் காரில் ஏறி அமர்ந்தபடி...

உங்களுக்கு டிரெய்னிங் எல்லாம் ஒரு விஷயமா? அங்குள்ள விரிவுரையாளர்களுக்கே விரிவா பாடம் எடுத்திட மாட்டீங்க! பாவம் உங்ககிட்ட மாட்டி ,எத்தனை பேர் அவங்க தலைய பிட்சுக்க போறாங்களோ? என்றான் சிரித்தபடி..

உங்களை... என இழுத்தவள், அவன் தோளில் அடித்தாள்..

பொறுமை! பொறுமை! இந்த ஜிம் பாடி அடியை, நம்ம வீக் பாடி தாங்காதம்மா!எதுன்னாலும் பேச்சு பேச்சா இருக்கனும்! வன்முறை கூடாது என்றான்.

அவன் அதை சொல்லிய விதத்தில் அவள் சிரிக்கத் தொடங்கினாள், சிரித்துக் கொண்டே இருந்தாள், சிதறி விழுந்த சலங்கையின் முத்துக்களாய், அந்த சிரிப்பு சத்தம் காற்றலையில் கலந்து எதிரொலித்தது..

அப்புறம் எப்படி செம்பா இருந்தது இந்த விடுதி வாழ்க்கை? என்றான்.

ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமாதான் இருந்தது! படிப்பும் சரி! இங்க இருக்கிறவங்க பழக்கவழக்கமும் சரி! ரொம்ப தடுமாறினேன்! அதுக்கப்புறம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு, ரொம்ப சீரியஸா படிச்சேன், யார் என்னை, எப்படி கிண்டல் பண்ணினாலும் கண்டுக்க மாட்டேன், அவங்க மேல வந்த கோபத்தையும் படிப்புல காட்டினேன், எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்தது.. என்றாள்,ஒரு ஆசுவாச பெருமூச்சோடு..

பிளாட்டுக்கு வந்தபோது, செம்பாவுக்கு சந்தோசமாக இருந்தது! கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்தவள், சமையலறையிலிருந்து வாசம் வீசவே அங்கே சென்றாள்.

அங்கே மதி, கையில்லாத பனியன், தலையில் முண்டாசு, கையில் கரண்டியோடு, வேர்க்க,விறுவிறுக்க,சமைத்து கொண்டிருந்தான், அவன் கோலம் பார்த்து அவள் சிரிக்க..

அதைப் பார்த்தவன்" இப்ப எதுக்கு சிரிக்கிற? பாவம் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு, நாக்கு மரத்து போயிருக்குமே, நல்லா சமைச்சு போடலாம்னு நான் கஷ்டப்பட்டு சமைக்கிறேன்! நீ சிரிக்கிற,உன்னை என்ன செய்கிறேன் பார் என அடிக்க ஏதேனும் கிடைக்குமா என தேட, கையில் கிடைத்த கேரட்டை அவளை நோக்கி வீசினான்..

அதை லாவகமாக பிடித்தவள் கடித்துப் பார்த்து" நல்லா டேஸ்டா இருக்கு என்றாள்.
அவளை முறைக்க முயன்றவன், முடியாது பின் புன்னகைத்தான்.


என்ன சமையல், காய்கறி எல்லாம் எப்ப வாங்கினீங்க?

நான் ஊரிலிருந்து வந்ததும் ,நாலு நாள் கடைச் சாப்பாடு வேண்டாம் என நினைத்து,தேவையானதை வாங்கிட்டு வந்துட்டேன்! இனி நீ ட்ரெய்னிங் போனாலும் விடுதி சாப்பாடு தானே! அதான் நாலு நாலாவது வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்னு வாங்கிட்டு வந்தேன்! ஆனா, என்ன என் சமையல் சுமாராத்தான் இருக்கும், காலேஜ் படிக்கும்போது ரூம்ல பசங்க எல்லாம் சேர்ந்து சமைப்போம்! இப்ப யூடியூபில் பார்த்து பண்றேன் என்றான்.

நான் உதவி செய்யட்டுமா?

செய்யலாமே! பூரி சுட்டாச்சு! பூரி மசால் செய்யணும், வெங்காயம் வெட்டி கொடு! என்றான்

பின்,அவள் வெட்டிய வெங்காயத்தை போட்டு வதக்கி, தேவையானதை போட்டுவிட்டு, அவளிடம் கொஞ்சம் வெந்ததும் நிறுத்தி விடு!நான் போய் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி, அவன் அறைக்குச் சென்றான்.

ஆஆ! என செண்பா அலரும் சத்தம் கேட்க, குளித்து கொண்டு இருந்தவன்,அவசரமாக துண்டை இடுப்பில் கட்டிய படி ,அவளை நோக்கி வந்தான்.

பூரி சுட்ட கடாயை , அவன் ஓரமாய் வைத்திருக்க ,அதில் தெரியாமல் செம்பா கை வைத்து விட்டாள்.
அவள் விரல்களில் எண்ணெய் பட்டதால் காயமாகி எரிய தொடங்கியது.


கொஞ்சம் கவனமா இருக்க மாட்ட..இப்ப பாரு எப்படி காயமாகி இருக்கு என பதட்டத்தோடு திட்டியவன், அவசரமாக சென்று கொஞ்சம் பஞ்சையும் ,மருந்தையும் எடுத்து வந்து போட்டு விட்டான்..

ரொம்ப வலிக்குதா?

அவன் பதட்டமும்,அக்கறையும் மனதிற்கு இதமாய் இருக்க,இப்ப பரவாயில்லை, வலிகொஞ்சமாத்தான் இருக்கு, என்று கையை அவனிடமிருந்து விலக்கியவள் ,நீங்க போய் குளிச்சிட்டு வாங்க என்றாள் தயக்கத்தோடு..

அப்போதுதான் மதி தன்னை பார்த்தான், அங்கங்கே சோப்பு நுரையுடன், இடுப்பில் துண்டுடன் இருப்பதை உணர்ந்தவன் கொஞ்சம் அசடு வழிய, "சாரி,நீ கத்தவும் ஓடி வந்துட்டேன்! தப்பா நினைச்சுக்காதே! என்று பாத்ரூமுக்குள் சென்றான்.

சாப்பிடும்போது அவள் கையிலிருந்த காயத்தால், அவள் பூரியை சாப்பிடமுடியாமல் தவிக்க..

அதைப் பார்த்தவன், "நான் வேணா ஊட்டி விடவா? என கேட்டான்

இல்ல வேண்டாம், நானே எப்படியாவது சாப்பிட்டுக்கறேன்

ஏன் உங்க அம்மா இப்ப ஊட்டிவிட்டா, நீ சாப்பிட மாட்டியா? என்னையும் உங்க அம்மாவா நினைச்சுக்க,என்றவன் தன் தட்டில் இருந்த உணவை எடுத்து,அவள் மறுக்க ,மறுக்க ஊட்டிவிட்டான்..

அம்மாவா நினைச்சிக்க மாட்டாயா? என்ற அவன் வார்த்தையில் கணித்தவள்,பின் அமைதியாக அவன் ஊட்டி விட்டதை சாப்பிட்டாள்

ஆண்மைக்குள் ஒளிந்திருக்கும் தாய்மை அவளை அரவணைத்தது,அவன் அன்பில், அக்கறையில் அவளும் நெஞ்சம் நெகிழ்ந்து நின்றாள்.

அவன் ஊட்டிவிட, வயிறு நிறைய சாப்பிட்டவள் ,நிறைந்த மனதோடு படுக்க சென்றாள்,அவள் மனதில் என்னவென்று தெரியாத ஒரு மெல்லிய உணர்வு முளை விட்டு, கிளை பரப்ப தொடங்கியது.

நள்ளிரவு நேரம் இருக்கும், திடீரென கதவு தட்டப்பட,திடுக்கிட்டு விழித்தவள், வேகமாக வந்து கதவை திறந்தாள்,ஆனால்
யாருமே வெளியே இல்லை! வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள், அப்போது திடீரென அவள் கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்டது..



வசப்படுமே??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top