• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்---17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
தாமதத்திற்கு மன்னிக்கவும்,சென்ற பதிவிற்கு லைக் கமண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி இதோ இன்றைய பதிவு இதற்கும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்..?
.........
?வசப்பட்டதே என் வானம் --17?


கண்கள் துணியால் கட்டப்பட்டதை உணர்ந்த செம்பா, சட்டென்று அதை அவிழ்க்க முயல…

"செம்பா நான்தான், ஒரு சின்ன சர்ப்ரைஸ் , கட்டை பிரிக்காதே,பின்னால் வா! என முன்னே சென்றான்..

கண்ணை கட்டிட்டு, பின்னால் வான்னு, நீங்க போனா, நான் எந்த பக்கம் வர?.நீங்க எங்க போறீங்கன்னு தெரியல

"ஓ சாரி!" என அவள் பக்கம் வந்தவன் , தன் தோள் மீது அவள் கைகளை எடுத்து வைத்து, கெட்டியாக பிடிச்சுட்டு, என் பின்னாடியே வா !என
அவளை மொட்டை மாடிக்கு கூட்டி சென்றான்..
அங்கே ஒருபக்கம் பல பூந்தொட்டிகளில் பல வண்ண ரோஜா செடிகள் வைக்கப்பட்டு இருந்தன, முல்லைக்கொடி ஒன்று நன்கு வளர்ந்திருக்க, அது மேலும் படர முல்லைப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது, அந்தப் பந்தல் எங்கும் படர்ந்திருந்த முல்லைப்பூக்கள் மொட்டவிழ்ந்திருக்க , கட்டவிழ்ந்த காற்றில், அதன் நறுமணம் கலந்து சுகந்தமாய் வீச, அந்த இடமே ரம்மியமாய் இருந்தது..

அந்த முல்லை பந்தலுக்கு அவளை கூட்டி சென்றவன், அவள் கண் கட்டினை அவிழ்த்து விட்டான்.

கண்களைக் கசக்கிக்கொண்டே திறந்தவள் எதிரே, சிகப்பு ரோஜா நிறத்தை ஒத்த ரெட் வெல்வெட் கேக் , நடுவே பொன்னிற செம்பருத்தி வரையப்பட்டு காட்சியளித்தது.


"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செம்பா! என மெல்லிய குரல் அவள் காதோரம் கேட்க திரும்பிப் பார்த்தாள்,
அவளுக்கு பின்னே மதி மிக அருகே நின்றிருந்தான்..

ஓரடி பின் நகர்ந்தவள், அவனைப் பார்த்து "என் பிறந்த நாள் உங்களுக்கு எப்படி தெரியும்? என கேட்க..

உன்னை கோச்சிங் கிளாஸ் சேர்த்து விடும்போது, உன் சர்டிபிகேட் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.
போன வருஷம் நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கு என சொல்ல வந்தவன் , அவள் கூர்ந்து பார்ப்பதை உணர்ந்து தயங்கி,இல்ல.. உங்க ஊர் கோயில் திருவிழா அன்னைக்குத்தான் உன் பிறந்த நாள், ஆனா அது அப்ப எனக்குத் தெரியாதே!,அன்னைக்கு கூட உன்னை சந்தோசமா இருக்கவிடாம என்னென்னமோ நடந்திருச்சு.. என பெருமூச்சு விட்டவன், ஆனா இனிமே வரப்போற உன் ஒவ்வொரு பிறந்தநாளும் உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கணும், கண்டிப்பா இருக்கும் , என கத்தியை அவள் கையில் கொடுத்தவன்,கேக்கை
வெட்ட சொன்னான்.

தான் பிறந்த நாளிலிருந்து, எந்த ஒரு பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடி அறிந்திடதா செம்பா, தயங்கிக்கொண்டே , மெழுகை ஊதி அணைத்து, கேக்கை வெட்ட

அவள் காது கேட்க," ஹாப்பி பர்த்டே! என சொன்னவன், அவள் காது கேட்காத வண்ணம், "ஹேப்பி ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவர்சரி " என்றான்..

வெட்டிய கேக் துண்டினை அவன் கைகளில் கொடுக்கப் போக ,அவனோ அவள் கைகளைப் பிடித்து, அதை தன் வாய்க்குள் கொண்டு சென்றான்.
அவளை ஊட்டிவிட வைத்து சாப்பிட்டவன், பின் அவளுக்கு கேக்கை ஊட்டிவிட்டான்..

அவள் கேள்வியாய் பார்க்க..கேக்கை ஊட்டி விட்டால் தான் டெஸ்டும் அதிகம், அன்பும் அதிகம் என்றவன், தனது பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு கிப்டை எடுத்து அவள் கையில் கொடுத்தான்..

என்ன இது?

இது என்னோட பர்த்டே கிப்ட்,பிரிச்சு பாரேன்!

மெல்ல அதை அவள் பிரிக்க, தங்க சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஓவல் வடிவ அழகான கைக்கடிகாரமும், அதேபோன்ற தங்கச் சங்கிலியின், இடையிடையே நீலவண்ண பிறை நிலா போன்ற கற்கள் பதிக்கப்பட்ட பிரஸ்லேட்டும் இருந்தது!


"ரொம்ப ரொம்ப அழகா இருக்கு "


"உன்னை விடவா?"


என்ன சொன்னீங்க? எனக்கு புரியல…


ஒன்னும் இல்ல! இன்னைக்கு கிளைமேட் நல்லா இருக்கு, பவுர்ணமி வேற, அங்க பாரு! முழுநிலா மஞ்சள் பூசிய பொண்ணு முகம் மாதிரி, கிட்டத்தட்ட உன் முகம் மாதிரி அழகா இருக்கு!


அவனை திரும்பிப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவள், "நான் மஞ்சளே பூசியதில்லை!" என்றாள்..

நீ மஞ்சள் பூசாவிட்டாலும் நிலவு தான், ஒரு கவிதை சொல்லட்டா?

வேண்டாம்னா விடவா போறீங்க? பாதி தூக்கத்துல எழுந்ததில் உங்களுக்கு என்னமோ ஆயிருச்சு!

எனக்கு இப்ப இல்ல.. உன்ன பாத்ததுல இருந்தே என்னமோ ஆயிருச்சு என மனதில் நினைத்தவன்,

தன் மனதை திறந்து அந்த கணம் தன் காதலை சொல்ல விழைந்தான், நட்சத்திரங்கள் அற்ற கருத்த வானம், அதில் மேக மங்கை ஏற்றி வைத்த அகல் விளக்காய் ஜொலிக்கும் நிலவு,காதலித்தவளை கரம்பிடித்து மனதில் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஓராண்டு நிறைவான தினம், தன்னவள் ஆவதற்காகவே பிறந்த பெண்ணவளின் பிறந்ததினம், மிக அருகே மனம் கவர்ந்தவளின் கனிந்த முகம், ரோஜாவில் தேங்கி நிற்கும் ஒற்றை பனித்துளியாய் அவள் கன்னத்தில் தெரிந்த மச்சம்..என எல்லாம் சேர்ந்து என்னவோ செய்ய..

இரண்டடி முன்னே சென்றவளின் கையைப் பிடித்தான், அவள் திரும்பிப் பார்க்க..

அவன் மண்டியிட்டு அமர்ந்து,அவளையே பார்த்த வண்ணம், அவன் இரு கைகளை விரித்து,நெஞ்சாங் கூட்டில் இருந்த மொத்த தைரியத்தையும் ஒன்று சேர்த்து தன் நேசத்தை சொல்ல வாய் திறந்தான்.. வரவில்லை.. அவனுக்கு வார்த்தை ஏதும் வரவில்லை வெறும் காற்றுதான் வந்தது!

சொல்லியே ஆகவேண்டும் ,இனி இந்த நேசத்தை நெஞ்சில் புதைத்து கொண்டிருந்தால், இந்த நேச விதை நிமிஷத்தில் விருட்சமாக வளர்ந்து, தன்னையே விழுங்கி விடும் என்று உணர்ந்தவன்,தொண்டையை செருமிக்கொண்டு, இதயத்துடிப்பு எகிற, "ஐ! என ஆரம்பிக்க, அவன் வார்த்தை அவள் காதை அடையும் முன், அவள் காதுகளை மூடிக் கொண்டாள் பெருத்த இடி சத்தம் கேட்டு, அடுத்த வார்த்தையை அவன் சொல்லும் முன் அவன் மேல் மழை கொட்டத் தொடங்கியது!


ஒருநொடி ஏதும் புரியாது விழித்தவன்,பின் சுற்றுப்புறம் உணர்ந்து, சுயநினைவு வந்து, முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்..

சற்றுமுன் பரவசத்தோடு பார்த்த வானத்தை, இப்போது கொலை வெறியோடு பார்த்தான்! அவன் பார்வையெல்லாம் பொருட்டாக மதிக்குமா வானம் ,அது தன்பாட்டுக்கு கொட்டித் தீர்த்தது..

அவன் செம்பாவை பார்க்க ,திடீரென பெய்த மழையினை எதிர்பார்க்காத அவள்,பின் அதனை ரசித்து நனைய தொடங்கினாள்.சந்தோசமாய் சாரலில் நனைந்தவள்," நீங்க கவிதை சொல்வது அந்த மழைக்கு கூட பிடிக்கல பாருங்க"!என்றாள் சிரித்துக்கொண்டே..


அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, தான் காதல் சொல்ல நினைத்தால்,அவள் கவிதை சொல்வதாக எண்ணிக்கொண்டாளே! என தன்னை நொந்து கொண்டான்,இன்றைய நாள் இப்பொழுது தானே தொடங்கியிருக்கிறது, இரவு வரை நேரம் இருக்கிறது, மீண்டும் எப்படியும் சொல்லி விடலாம் என்று தனக்குத் தானே சமாதானப்படுத்திக் கொண்டவன் ,அவளை பார்க்க,

அவள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், மழையில் நனைந்து கொண்டிருந்தாள் ஒரு சாதகப்பறவை போல..


"செம்பா! நனைந்தது போதும் ,உள்ள போகலாம், காய்ச்சல் வந்துடும் வா! வா! என அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.

துண்டால் தலையை துவட்டியபடி, தன் அறையில் இருந்து ஹாலுக்கு வந்தவன், ஜன்னல் வழியாக மழையை ரசித்துக் கொண்டிருந்தவளை பார்த்தான்.

வேகமாக அவளை நோக்கிச் சென்றவன், அவளை திருப்ப, அவள் தலையிலிருந்து சொட்டுச் சொட்டாய் நீர் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது!, தன் கையில் இருந்த துண்டால், அதை துடைத்தவன், இப்படி மழையில் நனைந்து விட்டு ,தலையைக் கூட துவட்டாம அப்படியே நிக்கிறியே, காய்ச்சல் வந்துவிடாதா? என சொல்லி அவள் தலையை துவட்டி விட்டான்,

நிமிர்ந்து பார்த்த அவளுக்கு தெரிந்தது என்னவோ அவன் தோள்பட்டை தான், அந்த நெஞ்சோடு சாய்ந்துகொள்ள பெண்ணுக்கும் ,அந்த கணம் பேராவல் எழுந்தது,தன் எண்ணப்போக்கை கண்டு ஒரு கணம் விதிர்த்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி தன் அறையை நோக்கிச் சென்றாள்,போகும் அவளையே பார்த்தவன்,பின் சிரித்துக் கொண்டே தன் அறைக்குப் போனான்..


ஒரு எட்டு மணியளவில் கதவு தட்டப்பட செம்பா திறந்தாள்,மதி தான் நின்றுகொண்டிருந்தான்
"இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்"!என வாழ்த்தியவன், அவள் கையில் ஒரு பையை கொடுத்தான்," சீக்கிரம் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா! ஒரு முக்கியமான இடத்துக்கு போவோம் என்றான்

அவள் என்ன? எது? எனக் கேட்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்,

அவள் பையை திறந்து பார்க்க, அதற்குள் அழகான ஆகாய வண்ண சேலை இருந்தது,
அதை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவள்,
தாயின் பாசமும், தந்தையின் பொறுப்பும் ,தோழனின் அக்கறையும் என யாவுமாய் கலந்து, தன் மேல் அவன் காட்டுவது என்னமாதிரியான அன்பு, இந்த அன்பை அடைய தான் என்ன தவம் செய்தோம் என நினைத்தாள்.

அவளை ஒரு அனாதை ஆசிரமத்திற்கு கூட்டிச் சென்றான், அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க ஏற்பாடு செய்திருந்தான் ,மேலும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களையும், நோட்டுப் புத்தகங்களையும் வாங்கி வந்து ,அவள் கையால் கொடுக்கச் செய்தான்,

அன்றைய பொழுதை அவர்கள் அங்கேயே கழித்தனர், அந்தக் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடும் மதியை பார்க்கையில் அவளுக்கு அவனும், மீசை வைத்த ஒரு குழந்தையாகவே தெரிந்தான்.
திரும்பி வரும்போது கடற்கரைக்கு சென்றனர்

"ரொம்ப தேங்க்ஸ்! இந்த மாதிரி ஒரு பிறந்தநாளை நான் கொண்டாடியது இல்லை! ரொம்ப மனசுக்கு நிறைவா,சந்தோஷமா இருக்கு! இது எல்லாமே உங்களால தான் என்றாள் மிக மென்மையாக..

என்ன கலெக்டர் அம்மா! ரொம்ப செண்டிமெண்டா பேசுறீங்க! இதெல்லாம் நம்ம கேரக்டருக்கு செட் ஆகுமா,நான் தான் சொன்னேன்ல இனிமே உன் ஒவ்வொரு பிறந்தநாளும் இப்படித்தான் சந்தோசமா இருக்கும்னு என சொல்லி சிரித்தான்.பின் சிறிது நேரம் அங்கே கழித்துவிட்டு, ஹோட்டலுக்கு சென்று அவளுக்கு பிடித்தமானவை வாங்கி கொடுத்தான்..

அவர்கள் வீடு வந்து சேர ஒன்பது மணியே ஆனது.

"ரொம்ப களைப்பா இருக்கு, நான் போய் தூங்குறேன்! குட் நைட் என்று சொல்லி அவள் அறைக்குச் செல்ல

அறைக்கதவை திறக்கும் வேளையில், செம்பா! என அழைத்தான்

என்ன என்பது போல் அவள் கேள்வியாய் பார்க்க

உன் காதலைச் சொல்லு! சொல்லு! என மனம் மத்தளம் கொட்ட, சொல்லி விடலாம் என வாயை திறந்தவன், அவள் நிம்மதி நிறைந்த முகத்தை பார்த்து சொல்ல தயங்கி நின்றான், எங்கே சொன்னால் இந்த நிம்மதி மறைந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்படியே நின்றான்.

என்ன என அவள் திரும்ப அவள் கேட்க
அவனோ அதுவந்து.. அதுவந்து என தயங்கியவன்,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! குட் நைட்! என சொல்லி தன் அறைக்குச் சென்று விட்டான்

அவளோ சிரித்துக் கொண்டே, தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

ஏன் தன்னால் அவளிடம் காதலைச் சொல்ல முடியவில்லை, எது தன்னை தடுக்கிறது , எதற்கு இத்தனை தயக்கம், இப்படி இருந்தால் எப்பொழுதுதான் சொல்லுவது எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, திட்டிக்கொண்டு உறங்கி போனான் அவன்


இருவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர், நான்கு நாட்களும், நான்கு நிமிடங்களாக கரைந்து விட, செம்பா முசோரி செல்ல கிளம்பி விட்டாள், தானும் முசொரி வந்து விட்டுச் செல்வதாக மதி கூற அதை மறுத்து விட்டாள்,அவளோடு படித்த இன்னொரு பெண்ணும் துணையாக வருவதால் மதியும் அவளை கட்டாயப்படுத்தவில்லை,

ரயில் கிளம்பு தொடங்க ஜன்னல் ஓரம் வந்த மதி ,அவளைப் பார்வையால் பருகிக்கொண்டு கையசைத்து விடைபெற்றான்

ரயில் அவனை விட்டு நகரத் தொடங்க , ஓடிச்சென்று ஏறி, அவளை மடி சாய்த்து உன்னோடு நானும் வருவேன் என அடம்பிடிக்க துடித்த மனதை அடக்கினான்

அவன் உருவம் மறையும்வரை ஜன்னல் வழியே அவனைப் பார்த்து கையசைத்து கொண்டிருந்தாள் செம்பா, அவள் உடல்தான் கையசைத்து கொண்டிருந்தது! அவள் மனம் ஓடும் ரயிலில் இருந்து துள்ளிக் குதித்து,நின்று கொண்டிருந்த அவனை தாவி அணைத்து, உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறி நின்றது!


காதலில் காத்திருப்பது சுகம் தான் ஆனால் காதலை காக்க வைப்பது சுகமா?
வசப்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top