• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்...19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
தாமதிக்ககூடாதுஎன
நினைக்கிறேன், அப்படி நினைத்ததையே மறக்கச் செய்யும் அளவுக்கு, மூழ்கடித்து விடுகின்றன வேலைகள்! மன்னிக்கவும்,சென்ற பதிவிற்கு லைக், கமெணட் செய்த அனைவருக்கும் நன்றி இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கின்றேன்!


?வசப்பட்டதே என் வானம்...19?

அதிகாலையில் ஏர்போர்ட் வந்த மதி, ஒரு காரை புக் செய்து வீட்டிற்கு வந்தான்,வீட்டிற்குள் நுழைந்தவன், ஹாலில் அமர்ந்திருந்த தன் தாயை பார்த்ததும், "அம்மா! என தயக்கத்தோடு அழைக்க..


நீண்ட நாள் கழித்து மகனைப் பார்த்ததும் முதலில் பரவசப்பட்ட வள்ளியம்மை,, அவன் மேல் இருந்த கோபத்தில், முகத்தை கொஞ்சம் கடுமையாக்கி கொண்டு, பரவாயில்லையே !நான் உன் அம்மான்னு உனக்கு ஞாபகம் இருக்கா? எங்க நீ அதை மறந்து விட்டாயோ என்று நான் நினைச்சேன் .


"ஏம்மா! இப்படி எல்லாம் பேசுறீங்க?


வேற எப்படி பேச சொல்ற? பெத்தவங்களுக்கு கூட தெரியாம கல்யாணத்தை செஞ்சுட்டு, இரண்டு வருஷத்துக்கு மேல அதை மறைத்து இருக்கிற உன்கிட்ட எப்படி பேச ?.அந்த ஊர்ல போய் இறங்கறேன், எல்லோரும் சுத்தி வந்து மருமக எப்படி இருக்காங்கனு கேட்கறாங்க? நான் எந்த மருமகளை பார்த்தேன் ,அவ எப்படி இருக்கான்னு சொல்ல?.. நீயே சொல்லு?


அம்மா, அந்த பொண்ணை இக்கட்டுல இருந்து காப்பாற்ற தான் தாலி கட்டினேன் அவ்வளவுதான், அதை கூட உங்ககிட்ட மறைக்க நினைக்கல..சொல்லனும்னு தான் நினைச்சேன், ஆனா அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாங்க, அந்தஸ்து பேதத்தை காரணம் காட்டி, அவளை எல்லாரும் அவமானப்படுத்தி விடுவீர்களோ என அவள் நினைத்து விட்டாள், படிக்கறேன்னு சொன்னா படிக்க உதவி செஞ்சேன்,,இதோ !இப்ப இந்த மாவட்ட கலெக்டராக இருக்காங்க,நான் ஒரு பொண்ணை திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தலைமா! ஒரு திறமையான பொண்ணு படிக்க உதவி செஞ்சு அவளை பெரிய ஆளாக்கி அழகு பார்த்துட்டு,இப்பவும் தனியாகத்தான் நிற்கிறேன் என்றான், அவன் முகம் அதீத வேதனையை காட்ட, அந்த முகம் பார்த்ததும் தாயுள்ளம் கோபம் தணிந்து" என்னாச்சு மதிப்பா? நீ ஏன் இப்படி கவலைப்படுறே நான் இருக்கும்போது, போ! போய் முதல்ல ரீஃபிரஷ் ஆகிட்டு வா, அப்புறம் பேசிக்கலாம் என அவனை ,அவன் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.


தோட்டத்தில் புல்வெளி நடுவே, இருந்த கல்பெஞ்சில் அமர்ந்திருந்தனர் அம்மாவும் மகனும்! தன் அம்மாவிடம் முதன்முதலாய் செம்பாவை சந்தித்தது முதல், நடந்த அத்தனையும் சொல்லிவிட்டான் ,அவளை பற்றிப் பேசும்போது மகனின் முகத்தில் தெரிந்த ஆனந்தத்தையும், பூரிப்பையும் குறித்துக்கொண்டது தாயின் மனது, அவன் சூழ்நிலையை புரிந்து கொண்டதால், தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோபம் குறைந்தது.. சரியோ தவறோ நடந்ததை சரிப்படுத்த வேண்டும் என்று தோன்றியது வள்ளியம்மைக்கு..


ஏன் மதி! நீ உன் காதலை சொல்லவே இல்லை, நீ சொல்லாம அவ உணர்ந்து கொள்ளணும்,புரிந்து நடக்கணும் என நினைக்கிறது என்ன நியாயம்?


அம்மா நான் சொல்லனும்னு தான் நினைச்சேன்! ஆனா , இந்தாங்க நீங்க எனக்காக செலவு செய்த காசு என கொடுப்பவகிட்ட என்ன பேச? என்னால அதை ஏத்துக்க முடியலமா,அவ சம்பாதிச்சு எனக்கு காசு தருவாள் என்றா எல்லாமும் செஞ்சேன்,மனசுல என் மேல அவளுக்கு கொஞ்சமாவது காதல் இருந்திருந்தா இப்படி காசு தர தோன்றுமா? ரொம்ப மனசு வலிச்சது,என்னால எதையும் மாற்ற முடியல, அதனால் எனக்கு ஒரு மாற்றம் இருந்தால் நல்லா இருக்கும்னு தான் லண்டன் போனேன் ,இப்ப நான்என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க? என்றான்.

தன் மகனைக் கூர்ந்து பார்த்தவர், "இப்பவும் அந்த பொண்ணு மேல உனக்கு அதே காதல் அப்படியே இருக்கா? என கேட்க.

அப்பவும், இப்பவும் இல்லமா, எப்பவுமே என்னோட காதல் அப்படியேதான் இருக்கும்! அவ என்னை விரும்பல என்றாலும் ,வெறுத்தாலும் விலகினாலும் சரி ,என் காதல் உண்மையானது, அவள் விரும்புவதை செய்யுமே தவிர, எப்பவுமே குறையாதுமா என்றான் தீர்க்கமான குரலில்…

அவனின் தீவிர குரலே தாய்க்கு உணர்த்தியது, அவனது அதி தீவிர காதலை.. மகனின் மனதை இப்படி மாற்றிய மங்கையை காணும் ஆவல் பொங்கியது வள்ளிக்கு, மகனிடம் திருப்பியவர்,

"என்னைப் பொறுத்தவரை உன்கிட்ட அவள் காசை கொடுத்ததை தப்புன்னு சொல்ல மாட்டேன்,தன்மானத்தை பெருசா நினைக்கிற எந்த பொண்ணும் அதைத்தான் பண்ணுவா..நீதான் அவசரப்பட்டு விட்டாய்,ஒரு வருஷம் ஓடி ஒளிந்து, உங்களுக்குள்ள இருந்த இடைவெளியை அதிகப்படுத்தி விட்டாய், ஒரு பிரச்சனை நடந்தால்,அதை விட்டுவிட்டு விலகி ஓடுவது தீர்வாகாது! நின்னு சமாளிச்சு சரி பண்ணனும், சரி நீ என்கிட்ட சொல்லிட்டல்ல ,இனி நான் பார்த்துக்கிறேன்,இனி நீ தனியா நிக்க தேவை இல்லப்பா! உனக்கு எப்பவுமே துணையா, வாழ்க்கை முழுதும் வர, உன் மனசுக்கேத்த மனைவியை, இந்த அம்மா கூட்டிட்டு வரேன் என்றாள்.


"என் மேல உங்களுக்கு கோபம் இல்லையே!?


நான் உன் அம்மாடா! உன் மனசை புரிஞ்சிக்க முடியுது, இப்ப உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார் சிரித்துக் கொண்டே..

தாயிடம் எல்லாம் பகிர்ந்து கொண்ட பிறகு மனதின் பாரம் இறங்க,சந்தோஷத்தோடு தலையசைத்தான் ,அதன் பின் எதையோ நினைத்தவன்,தயக்கத்தோடு தாயைப் பார்த்து..அம்மா! என இழுக்க..


என் மகன் உன்னை காதலிக்கிறான், உன் மேல பைத்தியமா இருக்கான்! நீ இல்லாம அவனுக்கு வாழவே தெரியாது! அப்படின்னு எல்லாம் சொல்லாம, அந்த பொண்ணை உன் கூட சேர்த்து வைக்கணும் அதானே? என்றார் மென்னகையுடன்..

தான் மனதில் நினைத்ததை அச்சுப்பிசகாமல் தாய் சொல்ல திடுக்கிட்டவன், எப்படிமா? எனக் கேட்க.


உன்னை பிறந்ததிலிருந்து பார்க்கிறேன் உன்னை புரியாதா? உன் காதல்! உன் உரிமை! அதை நீ எப்ப, எப்படியோ சொல்லிக்க,நான் என் ஸ்டைலில் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்!ஏன் மதி, அந்த பொண்ணையே, மறுபடி கல்யாணம் பண்ண சொன்னா, நீ மாட்டேன்னு சொல்லுவியா?

"ஐயோ அம்மா! நான் ஆயிரம் தடவை கூட கல்யாணம் பண்ணுவேன், ஆனா அந்த ஒரு பொண்ணை மட்டும்.. எனசொல்லி சிரித்தவன் தாயிடம் தலையசைத்து விட்டு வீட்டிற்குள் சென்றான்.

துள்ளல் நடையில் செல்லும் தன் மகனையே பார்த்தார் வள்ளியம்மை, பெற்ற குழந்தையின் சந்தோசத்திற்காக ஒரு தாய் எதையும் விட்டுக்கொடுப்பாள், கௌரவமாவது, காசாவது, தன் மகனின் மகிழ்ச்சியே பெரும் சொத்து! அதை அவனுக்கு எப்பாடுபட்டாவது மீட்டுத்தர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் யோசனையோடு அங்கேயே அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து, அவர் முதுகின்மேல் கை விழ திரும்பிப் பார்த்தார், நடைபயிற்சி முடிந்து வந்த மதியின் தந்தை தயாளன் நின்று கொண்டிருந்தார்

"என்னம்மா! நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை என கேட்க..

மதி லண்டனில் இருந்து வந்து இருக்காங்க!

அப்படியா! என ஆச்சரியத்தோடு பார்த்தவர், அவன் என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லை, இப்படி சர்ப்ரைஸா வந்திருக்கான், நான் போய் அவனை பார்க்கிறேன் என உள்ளே செல்ல முயன்றவரை தடுத்து ,அவள் அருகே அமரச் சொல்லி மதியிடம் பேசியதை அவரிடமும் பகிர்ந்தார்

அத்தனையும் கூர்ந்து கேட்டவர், இதுல நீ என்ன முடிவு எடுத்து இருக்க? என்றார்

நமக்கு இருக்கிறது ஒரு பிள்ளைதான்! அவன் சந்தோஷம் தானே முக்கியம், அவனுக்கு புடிச்ச பொண்ணையே ஊர் அறிய கல்யாணம் செய்து வைக்கலாம் என நினைக்கறேன், நீங்க என்ன சொல்றீங்க?

எப்பவும் கௌரவம், அந்தஸ்தை பெரிசா நினைக்கிற நீயே உன் மகனுக்காக இவ்வளவு இறங்கி வரும்போது, எனக்கு மட்டும் என்ன, எப்பவும் அவன் நல்லா இருந்தா போதும் என்றார்..

…...

அந்தக் கலெக்டர் பங்களா வாசலில் ,யார் என கேட்ட கூர்க்காவிடம் கலெக்டரிடம் மதி அம்மா வந்திருப்பதாக சொல்லச் சொல்லி வெளியே நின்றார் வள்ளியம்மை..

இரு நிமிட இடைவெளிக்குப் பின் பங்களாவிலிருந்து செம்பா வேக நடையோடு அவரை நோக்கி வந்தாள்.

வந்துகொண்டிருந்த அவளையே
அளவிட்டார் வள்ளியம்மை, அவளின் கம்பீர நடையும், முகத்தில் தெரிந்த தேஜஸும் ,பார்வையில் தீர்க்கமும், மதி இவளிடம் மயங்கியது தப்பே இல்லை என அவருக்கு தோன்ற வைத்தது

"அம்மா வாங்கம்மா! நல்லா இருக்கீங்களா?, உள்ளே வாங்க மா! என அவரை வரவேற்று அழைத்துச் சென்றாள்

ஊருக்கு அவர்கள் சென்றதும்,அவர்கள் விசயம் தெரிந்து கொண்டதும் அவளுக்கு பூ மூலம் ஏற்கனவே தெரியும்,அவர் இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறார் என்ற கேள்வி உள்ளே இருந்தாலும், முகத்தில் எதையும் காட்டாது சகஜமாகவே பேச முற்பட்டாள் ,தேனீர் எடுத்து வந்தவள்,

டீ சாப்பிடுங்க அம்மா !நீங்க தனியாதான் வந்தீங்களா? மதி சார் வரலையா? என்றாள்.

பரவாயில்லையே! கட்டின புருஷனை ரொம்ப மரியாதையா "சார்" என சொல்றீங்களே?

ஒரு கணம் திடுக்கிட்டவள் கொஞ்சம் தடுமாற்றத்தோடு, அம்மா நான் ஒரு இக்கட்டில் இருந்தபோது என்னை காப்பாத்த அவர் செஞ்ச உதவி தான் அந்தக் கல்யாணம், அதை நானும், அவரும் ஒரு திருமணமாக நினைக்கவில்லை, நான் எப்பவும் மதி சாரை என் மரியாதைக்குரிய நபரா, நண்பரா தான் பார்க்கிறேன், நீங்க தயவு செஞ்சு எங்களை தப்பா நினைக்காதீங்க,உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செஞ்சு வைங்க அம்மா! என்றாள் பொறுமையாக..


சரியா சொன்ன மா! நானும் என் வீட்டுக்கு நல்ல மருமகளை கொண்டு வரத்தான் பார்க்கிறேன், அது சரி நீ தான் நடந்ததை கல்யாணமாக நினைக்கல என்கிறாய், ஆனா என் மகன் கட்டுன கருகமணி மட்டும் உன் கழுத்துல அப்படியே இருக்கு, அதை ஏன்மா நீ கழட்டவே இல்லை,இப்ப நீ நல்லா சம்பாதிக்கிற, உன் சம்பாத்தியத்துல விதவிதமாக நகைசெஞ்சு போட்டிருக்கலாமே! இதை ஏன் போட்டு இருக்க? என புருவம் உயர்த்தி அவளை கேட்டார்

அவரின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை! ஏனென்றால் அதற்கு பதில் அவளுக்கே தெரியவில்லை..

விழித்து கொண்டு நின்றவள்,சுதாரித்து பேச முற்பட,அவளை கைகாட்டி நிறுத்திய வள்ளியம்மை,அவளிடம்"நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா? என கேட்க, அவள் அமைதியாக நின்றாள்.



நடந்த விசயத்தை சீர்படுத்ததான் நான் நினைக்கறேன்,எந்த முறைப்படி நடந்தாலும் ,நடந்தது திருமணம் தான், நீங்க இருவரும் கணவன் மனைவியாக வாழ இயற்கை போட்ட முடிச்சு, அதை நாம யார் மாத்த நினைப்பதும் தப்பு! இப்ப நான் என் மகனுக்கும், உனக்கும் மறுபடி திருமணம் செய்து வைத்து கண் குளிர பார்க்க ஆசைப்படுறேன், நான் சொன்னா என் மகன் கேட்பான், நான் இங்க வரும் போது என் மகனை உனக்கு பிடிக்குமா? என தெரிந்து கொள்ள தான் வந்தேன், அதுக்கு பதில் இதுலயே தெரிந்து விட்டது என அவள் கழுத்தில் இருந்த கருகமணியை சுட்டி காட்டினார் அவர்..

இல்லம்மா! உங்க மருமகளா வர எனக்கு எந்த தகுதியும் இல்லை, என்ன தான் நான் கலெக்டராக இருந்தாலும் என் வேர், எங்க மலை மேல தான் இருக்கு, அதை மாற்ற முடியாது,

உன்னை யாரும் எதையும் மாற்ற சொல்லவில்லை, நீ நீயாகவே இரு, கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறி இருக்கற உன் தன்னம்பிக்கையும் புடிச்சிருக்கு,நான் இப்படித்தான் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன் என்று சொல்லும் தன்மானமும் புடிச்சிருக்கு,உன்ன நான் என் மனசார மருமகளா ஏற்று கொள்கிறேன்,நீயும் என் மகனும் சேர்ந்து வாழ்ந்தால் தான் உங்கள் இருவர் வாழ்க்கையும் மகிழ்வோடு இருக்கும் என நான் நம்பறேன், அதனால உப்புச்சப்பில்லாத காரணங்களை சொல்லி, உன்னை நீயே குழப்பிக்காம, திருமணத்திற்கு சம்மதம் மட்டும் சொல் !என கண்டிப்போடு சொல்லி, அவள் பதிலுக்காக தீர்க்கமான ஒரு பார்வை பார்த்தார்..

அந்தப் பார்வையில் என்ன புரிந்து கொண்டாளோ செம்பா தெரியவில்லை அவள் தலை தானாக தலையாட்டியது..


வசப்படுமே,??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top