• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்...21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் அன்பு தோழமைகளே!
சென்ற பதிவுக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி! எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் sakthi r,honey, akilamathan ஆகியோருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்,:love::love:



?வசப்பட்டதே என் வானம்...21?

மதி,மனதில் இருப்பதை சொன்னபிறகு எந்த பதிலும் வராததால் திரும்பிப் பார்த்தான்,அங்கே வயிற்றைப் பிடித்துக்கொண்டு,வந்த சிரிப்பை அடக்கி, மௌனமாய் சிரித்துக்கொண்டிருந்தான் ரவீந்திரன்.

அவனை பார்த்த மதியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது, நீ ஏன் இங்கே வந்தாய்? இப்ப எதுக்காக இப்படி சிரிக்கிறாய்?

நான் எதுக்கு வந்தேன்னா ,நண்பனுக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்,நல்லதா நாலு அட்வைஸ் பண்ணிட்டு போகலாம்னு வந்தா, நீ இப்பதான் பிரிகேஜி பையன் மாதிரி பின்னால திரும்பி நின்னு யார் இருக்காங்கனு கூட பார்க்காம, ஐ லவ் யூ சொல்லிட்டு திரியறே,நீ எப்ப சிஸ்டர் கிட்ட நேரா ஐ லவ் யூ சொல்லி ,குடும்பம் நடந்தி புள்ளை குட்டி பெத்துக்க போற?அதுக்குள்ள உன்னை பக்கத்துவீட்டு பசங்க தாத்தான்னு கூப்பிடுவாங்க என நினைக்கிறேன் என்றான் சிரித்துக்கொண்டே..

"டேய் !என்னடா ரொம்ப ஓவரா ஓட்டுற, எனக்காவது கல்யாணம்னு ஒண்ணு, ஒரு முறைக்கு, இரண்டு முறை நடந்து இருக்கு ,ஆனா உனக்கு அந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்குமான்னு கூட தெரியல, நீயும் பார்த்த பொண்ணுக பின்னால எல்லாம் சுத்துற, ஆனால் எல்லாருமே உன்னை பார்த்தா," அண்ணன்! எங்க அண்ணன் அன்பை அள்ளி தெளிப்பதிலே மன்னன்"! என பாட்டு தானே பாடறாங்க! நீ முதல்ல கல்யாணம் பண்ணி காட்டு, அப்புறம் என்ன வந்து ஒட்டு, இப்ப கிளம்பு!

சத்திய சோதனை டா !டேய் மதி இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ, உடனே ஒரு பொண்ணை லவ் பண்ணி ,கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி ,உனக்கு முன்னால ஒரு குழந்தையைப் பெற்று, அந்த குழந்தைக்கு பேர் வைக்க உன்னை கூப்பிடல.. என் பெயர் ரவீந்தர் இல்லடா..

அவன் பேச பேச தன் காதில் கை வைத்து அடைத்தவன், எதுக்கடா இப்படிக் கத்தறே? அதன் பஞ்ச் டயலாக் பேசிட்டல்ல..போ போய் ஆகவேண்டியதை பாரு..

ஆமாடா நான் பார்க்கத்தான் போறேன், ஆனா பொண்ணு கையை பிடிச்சு கொஞ்சி பேச வேண்டிய நேரத்தில், பால்கனி கைப்பிடி சுவரை புடிச்சு பேசிட்டு இருக்க நீ ...எதுக்கும் சரிப்பட்டு வர மாட்ட..

கோபத்தோடு ரவியை பார்த்தவன்,அதை நான் பார்த்துகிறேன் நீ கிளம்பு என்றான்.

நீ என்னடா சொல்றது நான் போகமாட்டேன், சிஸ்டர் வரட்டும் அவங்ககிட்ட நான் நியாயத்தை கேட்டு விட்டு போகிறேன் என அங்கேயே நின்றவனை, தரதரவென இழுத்து வந்து வெளியே விட்டு கதவை சாத்தினான்.
ரவி சாத்திய கதவைத் தட்டி," என்னடா பேசிட்டு இருக்கும் போதே,தள்ளி விட்டு கதவை லாக் பண்ற?! கதவை திற, உள்ளே வந்து என்ன செய்யப் போறேன் பாரு!

என்னை கோபப்படுத்தாம மரியாதையா போயிடு ,நானே டென்ஷன்ல இருக்கேன் என்றான் மதி

ஆனால் மீண்டும் சிறிது இடைவெளிக்குப் பின் கதவு தட்டப்பட,
"எவ்வளவு தரம் சொன்னாலும் நீ கேட்க மாட்டாயா? உன்னை என்ன செய்யறேன் பார்! என அவனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு கதவைத் திறந்தான்,
ஆனால் அங்கே அந்திமந்தாரை மலர் வண்ண சேலை அணிந்து, அழகாய் நின்று கொண்டிருந்தாள் அவன் செம்பருத்தி..

அவளைப் பார்த்ததும் ,அத்தனை கோபமும் வடிந்தவனாக, ஓங்கிய கையை முதுக்குக்கு பின் மறைத்து," சாரி! ரவியோட பேசிட்டு இருந்தேன், அவன் தான் திரும்ப வந்துவிட்டானோ என நினைத்தேன் என சொல்லி அவளுக்கு வழியை விட்டவன்,அவள் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட ,திரும்பி அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் வந்து கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.
மதியும் வந்து கட்டிலின் மறு ஓரத்தில் அமர்ந்து கொண்டான், அவள் பேசட்டும் என இவனும், இவன் பேசட்டும் என அவளும், காக்க அங்க நேரம் தான் கடந்து சென்றது..

செம்பாவிடம் திரும்பியவன் "இன்னைக்கு வரவேற்பில் நீ ரொம்ப அழகா இருந்தாய்!,அந்த சேலை உனக்கு நல்லா இருந்தது" என்றான்.
ஓ!! என அவள் உதட்டை சுழிக்க, அந்த உதட்டு வளைவில் படிந்து மீண்டது மதியின் பார்வை.

நீ எத்தனை நாள் லீவு போட்டு இருக்க செம்பா? எப்ப திரும்ப வேலைக்கு போகணும்?

இரண்டு நாள்தான் லீவ் போட்டு இருக்கேன்! வேலை நிறைய இருக்கு.

நீ கலெக்டர் ஆன பின்னே நிறைய சாதித்து விட்டாய்! எல்லோரும் உன்னை பெருமையா பேசறப்ப எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு! நீ இன்னும் என்னென்ன செய்ய ஆசைப்படுகிறாயோ, அதையெல்லாம் செய்!எப்பவும் நான் உனக்கு பக்கபலமாக ,உறுதுணையாக இருப்பேன் என்றவன், கட்டிலின் மேல் இருந்த அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு," நான் எப்பவும் உனக்கு ஒரு நல்ல தோழனாக, நல்ல கணவனாக இருப்பேன்" என்றான்.

தன் ஒரு கரம் அவன் கரத்தினுள்இருக்க மறு கரத்தை அதன்மேல் வைத்தவள்,
"எனக்குத் தெரியும் உங்களைப் பற்றி என்றவள்,ஆனால் நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேனா என தெரியவில்லை,ஆனா கண்டிப்பா ட்ரை பண்றேன் என்றாள்

தன் கையை மெதுவாக விடுவித்தவள், "நீங்க ஏன் திடீர்னு இலண்டன் போனீங்க? என நெடு நாட்களாய் தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டாள்.

உன் மேல் இருந்த கோபத்தில் தான் என இப்போது அவனால் சொல்ல முடியவில்லை,ஏனெனில்அவள் தரப்பு நியாயத்தை தாமதமாக தானே புரிந்து கொண்டான்.

அது... அது வந்து ஒரு நல்ல பிசினஸ் டீல் வந்துச்சு அதனால போனேன் ,இப்ப லண்டனிலும் பார்ட்னர்ஷிப்பில் நமக்கு ஃபேக்டரி ரன் ஆகிட்டு இருக்கு!
செம்பா! இதுவரை எப்படியோ ஆனால் இனிமேல் நம் வாழ்க்கை அழகா இருக்கணும் ,சந்தோசமான நிம்மதியான ஒரு நல்ல வாழ்க்கையை நாம வாழ வேண்டும்!

"நிச்சயமா! என தலையை ஆட்டியவள் , பின் ஒரு குறும்பு சிரிப்புடன் அவனைப் பார்த்து "இப்ப என்ன பண்ணப் போறீங்க? என கேட்க...

அவள் கேள்விக்கு அவனுக்கு புரை ஏறியது! எதுக்கு இவள் எப்படி கேட்கிறாள் என புரியாமல் அவளையே பார்த்தான்.

இல்லை, ரிசப்சன்ல ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தது களைப்பா இருக்கு ..நான் தூங்கட்டுமா?

அடிப்பாவி! இதுக்குத்தான் அப்படி கேட்டியா? என விழித்த மதி தலையை ஆட்டினான்..

அந்தக் கட்டிலின் ஓரத்தில் அவள் படுத்துக்கொள்ள, மதி பால்கனிக்கு மீண்டும் உலா சென்றான்.

படுத்த பிறகும் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் செம்பா! இருக்கும் சூழ்நிலையை மாற்றி, அதை ரம்மியமாக அவளால் நொடிகளில் முடியும்! ஆனால் அதை அவள் விரும்பவில்லை, எது நடப்பதாக இருந்தாலும் முதல் அடி அவன் தான் எடுத்து வைக்க வேண்டும் என விரும்பினாள்,மதிக்கு தன் மேல் இருப்பது பரிதாபத்தில் விளைந்த பாசமா? இல்லை உயிர் நேசமா? என ஐயந்திரிபற அவள் அறிய வேண்டி இருந்தது ,அந்த கேள்விக்கு பதில் காலத்தின் கையில் இருப்பதை உணர்ந்தவள், அதற்கு எத்தனை காலம் என்றாலும் காத்திருக்க முடிவு செய்து கண்ணயர்ந்தாள்.
திரும்பி வந்த மதி பார்த்தது நன்கு உறங்கி கொண்டிருந்த அவன் மனைவியைதான்,அவள் மூச்சு விடும் மெல்லிய சத்தம் சங்கீதமாய் கேட்க கைவிரலால் ஒரு கணம் கன்னம் வருடி விட்டவன், பிறை நெற்றியில் கரு நிழலென விழுந்திருந்த கார்குழலை விலக்கி , முதல் முத்த கவிதையை நெற்றியில் வரைந்தான், இதழ் ஈரம் பட்டதால் எழில் முகம், துயில் கலைவது போல் தோன்ற,அவள் தோளை தட்டி கொடுத்து உறக்கம் கலையாமல் காத்தான், நெடு நேரம் அவளை பார்த்து கொண்டே இருந்தவன்,பின் உறங்க இமை மூட,இமைக்குள் வந்து நின்ற அவள் உருவம் அவன் விழி பாவையில் முத்தமிட்டுச் சென்றது..

விடியற்காலையில் தன் மேல் ஏதோ பாரமாய் உணர்ந்த செம்பா,கண்விழித்து பார்க்க, மதியின் கை அவள் மேல் படர்ந்து இருந்தது, சரேலென அவனைத் திரும்பிப் பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான், புன்னகையோடு மெதுவாக கையை எடுத்து விட்டவள்,கலைந்திருந்த அவன் தலையை கோதி விட்டாள் ,அவன் மூக்கின் மேல் தன் மூக்கை வைத்து உரசியவள்,அவன் நெற்றியை தன் நெற்றியில் மெதுவாக முட்டிவிட்டு,பின் வேகமாக எழுந்து கொண்டாள்..


குளித்துமுடித்து,தோட்டத்திற்கு வந்த மதி,அங்கே பார்த்தது ரோஜாக்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்த அவன் செம்பருத்தியைத்தான், ஏதோ ஒரு பாட்டை முணுமுணத்த படி,செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.சத்தம் செய்யாமல் அவள் முதுகுக்குப் பின்னால் சென்று நின்ற மதி அவள் கதோரம்"கலெக்டர் மேடம் ! உங்க இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நான் மூழ்க வந்தேன் கொஞ்சம் சத்தமா பாடுங்க ப்ளீஸ்... என்றாள் புன்னகைத்தபடி..
மிக நெருக்கத்தில் அவன் குரல் கேட்டதும் ஒரு நொடி பதட்டமானவள்,பின் அவனை பார்த்து,என் பாட்டை கிண்டல் பண்றீங்களா? உங்களை என்றவள், தன் கையில் இருந்த பூவாளி நீரை கொட்ட பார்க்க,ஐயோ! இந்த கொடைக்கானல் குளிருக்கு பச்சதண்ணிய மேல ஊத்திடாதே! குளிர் தாங்காது என பயந்தவன் போல நடித்தவன்,சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு உள்ளே சென்றான்..

வள்ளியம்மை உள்ளே வந்த தன் மகனிடம்,"மதி நாளைக்கு என் மருமக வேலைக்கு போகணுமாம், அதனால் இன்னைக்கு அவளை வெளிய கூட்டிட்டு போய் விட்டு வா! என சொல்ல ..

சந்தோசமாய் கிளம்பியவன்,தனது ராயல் என்ஃபீல்டு வண்டியை ,அழகான காட்டன் சுடியில் வந்து நின்ற அவன் காதல் கிளியின் அருகில் நிறுத்த,
ஒரு மென்னகையோடு அதில் அமர்ந்தவள், "இங்க தான் டிராபிக் அதிகம் இல்லையே, ஏன் டூ விலர்? என புருவம் உயர்த்தி கேட்க..

அது டூ விலர்ல போன நல்லா இருக்கும்னு தோணுச்சு,உனக்கு பிடிக்கலைனா கார் எடுக்கட்டுமா?

இல்லை,இதுவே எனக்கு ஓகே தான் என்றவள், தன் ஒரு கையை எடுத்து அவன் தோளின் மேல் வைத்து கொண்டாள்.
தன் தோள் மேல் இருந்த அவள் கையை ஓரக்கண்ணால் பார்த்தவன்,தனக்குள் புன்னகைத்தவாறே வண்டியை ஓட்ட, அது காற்றை கிழித்து ஓடியது மதியின் மனதை போலவே...

வசப்படும்!!!
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மதி எப்போது தான் தன் காதலை சொல்லுவான்.
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
மதி எப்போது தான் தன் காதலை சொல்லுவான்.
சொல்லாத காதல் சிப்பியில் விழுந்த மழைத்துளி போல, முத்தாக மாறும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top