• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்...28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வசப்பட்டதே என் வானம்...28

தன் முன்னால் வைக்கப்பட்ட பணக்கட்டுகளை பார்த்துக்கொண்டு இருந்தார் நீதிபதி..

இது அட்வான்ஸ் 2 கோடி தான், இன்னும் 10 கோடி கூட தர அவங்க ரெடியா இருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க? என தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி ஊதிக்கொண்டே நீதிபதியிடம் கேட்டார் வக்கீல் தேவேந்திரன்..

இல்லை! எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த வழக்கில் நீங்கள் எதிர்பார்ப்பது போல், என்னால் தீர்ப்பு சொல்ல முடியாது! தமிழ்நாடே இந்த தீர்ப்பை எதிர்பார்த்துட்டு இருக்கு, ஆதாரமெல்லாமே குற்றவாளிகளுக்கு எதிராக தான் இருக்கு! அவங்களை தூக்கில் போட வேண்டும் என்று மாதர் சங்கமெல்லாம் கொடி புடிச்சிட்டு இருக்காங்க! இதுல கட்சிக்காரங்க நிறைய அரசியலும் பண்ணிட்டு இருக்காங்க..

அது எனக்கும் தெரியும் சார்,நானும் இப்போ அவங்களை வெளியே விட சொல்லவில்லை, அது முடியாத காரியம் என எனக்கும் தெரியும்! ஆனா அவங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்துடாதீங்க! ஆயுள் தண்டனை கொடுத்து ஜெயில்ல போடுங்க! அதை மட்டும் நீங்க செஞ்சா போதும், ..கொஞ்ச நாள் போனதும், மக்கள் இதை மறந்துட்ட பிறகு அவங்களை நான் வெளியே கொண்டு வந்துருவேன், நம்ம மக்கள் ஒரு பிரச்சினையை மறப்பதற்கு அதற்கு தீர்வு தேவையில்லை, அடுத்து இன்னொரு பிரச்சனை வந்தாலே போதும், அதை பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க! இங்க பிரச்சனைக்கா பஞ்சம், அதனால நீங்க தண்டனை கொடுத்து ஜெயில்ல போடுங்க.. மீதியை நான் பார்த்து கொள்கிறேன் என்றான் தெனாவட்டாக..

இல்ல.. அதெல்லாம் என்னால முடியாது, இந்த பணத்தை நீங்க எடுத்துட்டு போங்க.. என தயங்கிக் கொண்டே வக்கீலிடம் சொல்ல..

"சார்! அவசரப்பட்டு எந்த முடிவும் இப்ப எடுக்காதிங்க, இரண்டு நாள் இருக்கு தீர்ப்புக்கு.. நீங்க நாளைக்கு யோசித்து சொல்லுங்க.. அதுவரைக்கும் பணம் இங்கேயே இருக்கட்டும்..நான் வரேன் என கிளம்பியவர்," அதிர்ஷ்டம் எப்பவாவது தான் கதவை தட்டும் , அதை சரியா பயன்படுத்துறவங்க தான் புத்திசாலி என பூடகமாக சொல்லிச் சென்றார்..

காற்றில் ஆடிய பணத்தை ஊசலாடும் மனதோடு,நெற்றி சுருக்கி அவர் பார்த்துக் கொண்டிருந்த நேரம், பின்னாலிருந்துஅப்பா ! என அழைத்தபடி அவரின் மகள் கல்பனா வந்தாள்..

அப்பா! நீங்களும் வக்கீலும் பேசிட்டு இருந்ததை கேட்டேன், தயவு செஞ்சு அந்த குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லிடாதீங்க! ஏன் என்றால்
நானுமே என தடுமாறியவள் ,பின் அவரை பார்த்து, உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல பா! ஆனால் சொல்லாம இருக்கவும் முடியல! அவனுங்க என்னையே ஒரு முறை கடத்த பார்த்தாங்க! என்று சொன்ன போது அந்த ,தந்தையின் உடல் விறைத்தது! மகள் அடுத்து என்ன சொல்லப் போகிறாளோ என பதைபதைப்போடு அவளைப் பார்க்க..

பயப்படாதீங்கப்பா! எனக்கு ஒன்னும் ஆகலை, அவங்க என்னை கார்ல ஏத்த ட்ரை பண்ணிய போதே, இழுத்தவன் கையை கடிச்சிட்டு தப்பிச்சுட்டேன்! அந்த சமயம் ரோட்டில ஆளுங்க வரவும் என்னை விட்டுட்டு போய்ட்டாங்க.. நான் மட்டும் கொஞ்சம் உஷாராக இல்லாமல் இருந்திருந்தால், அங்கே தோண்டி எடுக்கப்பட்ட பிணங்களில் உங்க பொண்ணோட பொணமும் இருந்திருக்கும் பா.. என சொல்லி நிறுத்தியவள்,பின் அவரின் முகத்தை பார்த்து,"ஏற்கனவே கண்ணை கட்டி இருக்குற நீதி தேவதை வாயையும் இந்த பணத்தை வச்சு அடைத்துவிடாதீங்க! ,அந்தப் பொண்ணுகளை இழந்து தவிக்கிற பெத்தவங்களுக்கு நீங்க என்னப்பா நியாயம் செய்ய போறீங்க? , அவங்களை தூக்குல போட்டாத்தான் நம்ம நாட்டுல தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும் என்கிற பயம் கொஞ்சமாவது வரும்..பொண்ணுங்க நாங்க படிப்பதற்காக, வேலைக்காக வெளியே போய் தானே ஆகணும், இந்த மாதிரி ஆளுங்க எப்ப, எங்கிருந்து வருவாங்கன்னு எந்நேரமும் பயந்துகிட்டே இருக்க முடியாதுப்பா! பெண்கள் தங்களை பாதுகாத்துக்க தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சட்டமும் அவர்களைப் பாதுகாக்க முன் வரணும்! உங்க தீர்ப்பு சாதாரணமானது அல்ல, ஒரு சரித்திரத்தை திருத்தி எழுதற தீர்ப்பு,பார்த்து சொல்லுங்க! என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சோடு எழுந்து வெளியே வந்தாள்..

எங்கோ இவையெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என தான் நினைத்தால், தன் வீட்டிலேயே இது நடந்திருக்கிறது, தன் மகளுக்கு மட்டும் ஏதேனும் ஆகியிருந்தால் அந்த எண்ணமே உடலெங்கும் நடுக்கத்தைக் கொடுத்தது அந்த ஜட்சுக்கு,எத்தனை பெற்றவர்கள் இப்படித் தவித்து இருப்பார்கள், தன்மகள் மேலே கை வைக்க துணிந்தவர்களை சும்மா விடுவதா ?என்ன தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பதை அந்த கணம் தீர்மானித்துக் கொண்டார்.. ஒரு முடிவுக்கு வந்த பின் தான் மூச்சே சீராக வந்தது அவருக்கு..

அறைக்குள் வந்த கல்பனா அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள், அந்தப்பக்கம் எடுத்தவுடன், "மேடம்! நீங்க சொன்ன மாதிரியே அப்பா கிட்ட பேசிட்டேன்! என்றாள்..

"வெரி குட் மா! ஒரு நல்ல காரியத்திற்கு தான் நீ பொய் சொன்னாய்! அது தப்பில்லை! உனக்கு இதுல வருத்தமா இருக்கா? என கேட்க.

வருத்தமெல்லாம் இல்லை மேடம்! வக்கீல் காசைப் பற்றி பேசியபோது அப்பா கொஞ்சம் யோசிச்ச மாதிரி இருந்தது! அதான் வருத்தமா இருக்கு, நீங்க ஏன் என்னை அவங்க கடத்த முயற்சி செஞ்சதா பொய் சொல்ல சொன்னீங்க? என கேட்க..

பாதிக்கப்பட்ட பொண்ணுங்க யாரோன்னு நினைச்சு அவர் தீர்ப்பு சொல்வதைவிட, அவங்க பெத்தவங்க மனநிலையில் நின்று தீர்ப்பு சொன்ன அந்த தீர்ப்பு சரியா இருக்கும்னு நினைச்சு தான் அப்படி சொல்லச் சொன்னேன் மா! அந்த வக்கீல் ரொம்ப மோசமான ஆளு, அப்பாவோட மனசை மாத்த முயற்சிப்பது தெரிந்து தான் உன்னை அப்படி சொல்ல வச்சேன், நான் சொன்னதை கேட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ் மா !என்று சொல்லி,மேலும் கொஞ்ச நேரம் அவளிடம் பேசி விட்டு போனை வைத்து விட்டு நிமிர்ந்தாள் செம்பா..

வக்கீல் தேவேந்திரன், நீதிபதி வீட்டுக்கு செல்வதை அறிந்தவள், உடனே அவர் மகளுக்கு அழைத்து நடக்கப்போவதை சொல்லி நீதிபதியிடம் தானே அவர்களிடம் பாதிக்கப்பட்டதாக பேசச் சொன்னாள்,நீதி எக்காரணம் கொண்டும் விலை போகக் கூடாது என்பதற்காகவே அவள் அப்படி செய்தாள்..
…….

அந்தப் பண்ணை வீட்டின் தோட்டத்தில் கைகளில் மதுவோடு அமர்ந்திருந்தனர் வக்கீல் தேவேந்திரனும் ,தில்லைநாதன் மற்றும் கார்த்தி, ரமேஷின் தந்தைகள் இருவரும்..

"அந்த ஜட்சு பணத்தை வாங்கிட்டானா?என ஆவலோடு கேட்டார் தில்லைநாதன்..

வாங்கல! ஆனால் கண்ணு முழுசும் பணத்து மேலேயே இருந்துச்சு! அதான் அங்கேயே வைத்துவிட்டு வந்தேன், கண்டிப்பா நமக்கு சாதகமாக தான் தீர்ப்பு சொல்லுவாரு பாருங்க! என்றான் தேவேந்திரன்..

என்ன பெரிய தீர்ப்பு! அப்ப மட்டும் நம்ம பசங்கள வெளியே விடவா போறாங்க, ஆயுள் தண்டனை ஒன்னும் சாதாரணமில்லை! நம்ம பசங்க ஜெயில்ல கஷ்டப்பட ,நாம கோடிகோடியாய் சம்பாதித்து என்ன பிரயோஜனம்? என்றான் கார்த்தியின் தந்தை..

உங்க பசங்க பண்ணின தப்பும் சாதாரண தப்பில்லை, தண்டனை இல்லாமல் வெளியே வர, அவங்கள காலத்துக்கும் ஜெயில்ல விடுவேனா? நான் எல்லாம் எதுக்கு இருக்கேன் பெரிய லாயர்னு,ஒரு வருஷம் பொறுத்துக்கங்க! அதுக்கு அப்புறம் அவங்கள பத்திரமா வெளியே கூட்டிட்டு வருவது என் பொறுப்பு..

உன்னால முடியுமா? எப்படி? என்ன செய்வ? ஆவலாய் கேட்டார் தில்லைநாதன்

என்ன செய்வேனோ? என்ன வேணா செய்வேன்! இதோ! இவரோட பையனுக்கு மனநிலை சரியில்லை, ஏற்கனவே அதற்காக ட்ரீட்மெண்ட்ல இருக்கான் அப்படின்னு சர்டிபிகேட் வாங்கி,அதை வச்சு வெளியே கொண்டு வருவேன், ஏன்னா மனநிலை பாதிக்கப்பட்டவனை தண்டிக்க முடியாது, இது ஜஸ்ட் எக்ஸாம்பிள் தான், இது மாதிரி எத்தனையோ ஐடியா என்கிட்ட இருக்கு, சட்டத்தில் இருக்கிற எல்லா சந்து பொந்தும் எனக்கு நல்லாவே தெரியும்,ஆனா இப்ப எதுவும் பண்ண முடியாது, எல்லோருடைய பார்வையும் இந்த கேஸ் மேல தான் இருக்கு இப்போதைக்கு அவங்க ஜெயிலுக்கு போகட்டும்! அவங்கள வெளியே கொண்டுவர வேண்டியது என் பொறுப்பு.. என்று சொல்லி கோப்பையில் இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாய் குடித்தான், மூளை முழுக்க விஷம் ஏறி இருந்த தேவேந்திரன்...

அதுமட்டுமில்லை அந்த கலெக்டர் செம்பருத்தியையும் சும்மா விடக்கூடாது,என்ன பேச்சு பேசறா! திட்டம் போட்டு பசங்களை மாட்ட வச்சது அவதான், அவளை துடிக்க துடிக்க கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும் என்றான் கார்த்தியின் தந்தை..

அவசரப்படாதீங்க! இப்ப அவ மேல சின்ன கீறல் விழுந்தா கூட அதுக்கு நாம தான் காரணம் என்று எல்லோருக்குமே தெரிந்துவிடும் என்றான் தேவேந்திரன்..

அவ தீர்ப்பு சொல்ற அன்னைக்கும் கோர்ட்ல ஏதாவது குழப்பம் பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்? என அவர் கேட்க..

செய்வா! கண்டிப்பா செய்வா! ஆனா அதுக்கு அவ கோர்ட்டுக்கு வரணுமே, அவ வர மாட்டா, வர விடமாட்டேன்.. இந்த பிரச்சனையால என் பதவி பறி போய், கட்சியில் இருந்தே தூக்கிட்டாங்க!அதற்கெல்லாம் காரணமானவளை சும்மா விடுவேனா?
வக்கீல், அவ மேல இப்ப கை வைக்க வேண்டாம் என்று சொன்னதால, அவ உயிரா நினைக்கிறவங்க உயிரை எடுக்க முடிவு பண்ணி, வக்கீலும் நானும் பக்காவா ப்ளான் போட்டு, எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு.. என சிரித்துக்கொண்டே சொன்னார் தில்லைநாதன்

தில்லை சார்! நீங்க என்ன சொல்றீங்க ? ஒன்னும் புரியலையே? யாரை கொல்லப் போறீங்க?அவ எப்படி கண்டிப்பா கோர்ட்டுக்கு வர மாட்டான்னு சொல்றீங்க?என ரமேஷின் தந்தை கேட்க..

புருஷன் செத்துப்போன பொண்டாட்டி பொணத்துக்கு பக்கத்துல உட்கார்ந்து அழுவளா? இல்லை கோர்ட்டுக்கு வருவாளா? என புருவம் உயர்த்தி சிரித்துக்கொண்டே வக்கீல் கேட்க..

வாட்?நீங்க என்ன சொல்றீங்க.. அப்ப அவ புருஷனை கொல்ல ஏற்பாடு பண்ணிட்டீங்களா? வியப்போடு ரமேஷின் அப்பா கேட்க..

என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பா செய்ய ரெண்டு பேரும் ஏற்கனவே திட்டம் போட்டாச்சு! அவ வரமாட்டா! நீங்க குடிங்க ,சியர்ஸ்... என்றான் தில்லைநாதன் .. அங்கிருந்தவர்களின் கண்களில் போதையோடு கொலைவெறியும் போட்டி போட்டது
………..


கண்கள் திறந்த போதும், இருட்டாக இருந்ததை வைத்தே தன் கண்கள் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தார் வக்கீல் தேவேந்திரன், கொஞ்சம் அசைந்து பார்த்தபோதுதான் தன் நாற்காலியோடு கட்டப்பட்டு இருப்பதும் புரிந்தது!

என்ன வக்கீல் சார்? எப்படி இருக்கீங்க? என நக்கலாக கேட்டான் மதி..

அவருக்கு என்ன? பொய் சொல்ல சொல்ல காசு கொட்டுது! ராஜ வாழ்க்கை தான்! இவனெல்லாம் சட்டம் படிச்சது நியாயத்தை காப்பாற்றுவதற்கு இல்லை அநியாயத்தை தப்பே இல்லாமல் செய்யத்தான்.. இவன் கிட்ட என்ன பேச்சு இப்ப சொல்லு போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்போம் என எகிறினான் ரவி.

"டேய் யாருடா நீங்க ? நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடாதீங்க.. நான் ரொம்ப பொல்லாதவன் தெரியுமா?

நீ பொல்லாதவன் என எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே!நாங்க யாருன்னா கேட்ட ?எந்த குற்றவாளிகளை காப்பாற்ற நீ போராடிட்டு இருக்கியோ அவங்களால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களோட அண்ணன்கள்டா நாங்க.. எங்க தங்கச்சிங்க வாழ்க்கையை நாசமாக்கியவர்களை காப்பாத்த நீ ட்ரை பண்ணுவே, அதை பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்கணுமா? என கோபமாய் கேட்டான் மதி.. அவனுக்கு அந்த வக்கீல் செம்பாவை கோர்ட்டில் நிறுத்தி கேள்வி கேட்டபோதே அத்தனை கோபம் வந்தது, அவன் நீதிபதியிடம் டீல் பேசினான் என்பதையும் செம்பா மூலம் அறிந்த போது, அவன்மேல் கரைகடந்த ஆத்திரத்தில் இருந்தான் , அப்போது எதிர்பாராதவிதமாய் மதியும், ரவியும் காரில் செல்லும்போது, எதிரில் அந்த வக்கீல் கார் ரிப்பேராகி அவன் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், இருவரும் சிறிதும் தாமதிக்காமல், எதையும் யோசிக்காமல் அவனை கடத்தி வந்து விட்டார்கள்! அது தவறாகவே அவர்களுக்கு தெரியவில்லை!

இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு நான் சொல்றேன் டா, இந்த வாய வெச்சு தானே வாதாடி பொய்யை ஜெயிக்க வைக்கிறான்,எலும்பில்லாத நாக்கு என்ன வேணாலும் பேசும், அதனால அதை வெட்டி எடுத்து விடலாம், எவ்வளவு கிரிமினலா யோசிச்சாலும் அதைப் பேச முடியாமல் தினம்தினம் இவன் தவிக்கணும் என்று பல்லைக் கடித்தபடி சொன்னான் மதி!

நல்ல ஐடியாடா! அவன் நாக்கை மட்டும் இல்ல, வலது கை பெருவிரல், ஆள்காட்டி விரல் ரெண்டையும் சேர்த்து வெட்டணும்,பேசவும் முடியாமல் 'எழுதவும் முடியாமல் தவிக்கட்டும், இந்த மண்டைக்குள்ள தப்பு தப்பா யோசிக்கறது இனி அங்கேயே இருக்கணும் வெளியேவ வரக்கூடாது என்று கோபத்தோடு சொன்னான் ரவியும்..

"ஐயோ! என்னை எதுவும் பண்ணிடாதீங்க! நீங்க என்ன கேட்டாலும் தரேன், எவ்வளவு பணம் வேணும் கேளுங்க.. தரேன்!! என்னை விட்டுடுங்க ப்ளீஸ்!" என கெஞ்சினான் வார்த்தைக்குள் விஷம் வைத்து, ஏழை நிரபராதியை கூட குற்றவாளியாய் சித்தரிக்கும் அந்த அஞ்சாநெஞ்சன்..

"டேய்! இப்ப கூட பாரு பணம் தரேன்னு தான் சொல்றான்.. இந்த பண பேய் எல்லாம் திருந்தவே திருந்தாதடா... கூண்டுக்குள் நிற்கிற குற்றவாளிக்குதான், சட்டம் தண்டனை தரும்! சட்டத்தையே தண்டிக்கிற இவன மாதிரி வக்கீல்களுக்கு நாம தான் தண்டனை தரணும்! அது தப்பே இல்லை என்ற ரவி,ஃபேக்டரியில் பண்டில்களை பிரிக்க எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் கத்தியை எடுத்தான், அவனுக்கு கைகள் நடுங்கியது ,மதிக்குமே முகமெல்லாம் வேர்த்து இருந்தது, இருவருக்குமே இது பழக்கமில்லாத செயல், உடன்பாடில்லாத செயல் என்பதால் மனம் மிகவும் முரண்டியது, ஆனால் கிடைத்த வாய்ப்பை நழுவ விட விரும்பவில்லை அவர்கள், ஓரிரு நிமிடங்கள் தயங்கி நின்றவர்கள், பின்ஒரு முடிவுக்கு வந்தவர்களாக.. அவன் நாக்கை இழுத்து வைத்து வெட்டியே விட்டார்கள், ரத்தத் துளிகள் தங்கள் மேல் தெளித்து போது இருவரின் உடலும் நடுங்கியது! இருந்தாலும் அவன் விரல்களையும் வெட்டிவிட்டே ஓய்ந்தார்கள், தாங்கள் செய்த செயலை நம்ப முடியாமல் அவர்களே சில கணங்கள் திகைத்து நின்றார்கள், ஒருவாறு தங்களை சமநிலைப் படுத்தி கொண்டு, துடித்துக் கொண்டிருந்த அவனை தூக்கி காரில் போட்டு, அவன் கார் நின்றிருந்த இடத்திற்கு சென்று அவன் காரிலேயே போட்டு விட்டு மின்னலாய் எதிர் திசையில் சென்றனர்..

ரொம்ப கஷ்டமா இருக்குடா, நாம போய் இப்படியெல்லாம் செய்வோம்னு எதிர்பார்க்கவே இல்லை,மனசுக்குள்ள ஏதோ பெருசா தப்பு பண்ண மாதிரி இருக்குதுடா! என காரில் புலம்பிக்கொண்டே வந்தான் மதி

"டேய் !மச்சி விடுடா! அவனுக்கு நாம கொடுத்தது சரியான தண்டனைதான், இவனைப் பார்த்து அநியாயத்துக்கு துணை போகும் வக்கீல்களுக்கு கொஞ்சமாவது புத்தி வந்தால் நல்லதுதான் என சொன்னவன், தன் நண்பனின் மூடை மாற்ற வேறு பேச்சுக்கு தாவினான்..

பாவம் மதி! அவன் நாக்கை வெட்டியதற்கே வேதனைப்படுகிறான்! ஆனால் அவனோ, மதியின் உயிரை எடுக்க திட்டத்தை ஏற்கனவே வகுத்து விட்டான் என்பதை அவன் அறியவில்லை! இன்று செய்ததை மதி முன்னமே செய்திருந்தால்,ஒருவேளை அவனை உயிரை எடுக்க போட்டிருக்கும் சதியை முறியடித்து இருப்பானோ என்னவோ?....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தமிழ்ச்செல்வி டியர்
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Madhi n Ravi did was correct as a common man point of view in judicial it’s wrong , but we can’t do anything them, but madhi life in tragedy y author ji u put him n trouble ?
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
Madhi n Ravi did was correct as a common man point of view in judicial it’s wrong , but we can’t do anything them, but madhi life in tragedy y author ji u put him n trouble ?
Twist and turn is life, so the trouble ji
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அய்யய்யோ
அப்போ மதி இறந்து விடுவானா?
வேண்டாம்ப்பா
மதி பாவம்ப்பா
கதையிலாவது நல்லவர்களுக்கு கெடுதல் ஒண்ணும் ஆகிவிடக் கூடாது, தமிழ் டியர்
அப்புறம் தேவேந்திரனின் இடது கையிலும் விரல்களை வெட்டியிருக்கணும்
அந்த ஓநாய் இடது கையாலே எழுத பழகிட்டால்........?
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
அய்யய்யோ
அப்போ மதி இறந்து விடுவானா?
வேண்டாம்ப்பா
மதி பாவம்ப்பா
கதையிலாவது நல்லவர்களுக்கு கெடுதல் ஒண்ணும் ஆகிவிடக் கூடாது, தமிழ் டியர்
அப்புறம் தேவேந்திரனின் இடது கையிலும் விரல்களை வெட்டியிருக்கணும்
அந்த ஓநாய் இடது கையாலே எழுத பழகிட்டால்........?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவும் ,தர்மம் வெல்லும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top