• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்__1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே,

கவிதை எழுதி கொண்டு இருந்த நான் ,நடுவில் ஒரு எழுத்தை விட்டு கதையும் எழுதி பார்க்கலாமே என்ற எண்ணத்தில் வண்ணம் கொண்டதே இந்த கதை, தெள்ளிய நீரோடை போல் மெல்லிய கதை, கேட்கும் முன் எல்லாம் கிடைக்கப்பட்ட நாயகன், வாழ்வின் எதையும் போராடி போராடியே அடையும் நாயகி, இவர்களின் வாழ்க்கை பாதையோடு இணைந்த பயணமே இந்த கதை, வாசகர்கள் அனைவர்களுக்கும் அனுமதி இலவசம் இந்த பயணத் திற்கு, படித்து பார்த்து பயணித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி ! நன்றி!

...


வசப்பட்டதே என் வானம்__1
...................................


இரை உண்டு சுருண்டு கிடக்கும் மலை பாம்பினைப் போல் வளைந்து நெளிந்த அந்த மலைப்பாதையில், வேகமாக சீறி சென்று கொண்டிருந்தது அந்த ஜீப்,

ஸ்ரியங்கில தாளமிட்டு கொண்டிருந்த விரல்களால், ,காற்று கலைத்து விட்ட தன் கேசத்தை கோதிக்கொண்டே, வண்டியின் வேகத்தில் பயந்த, தன் நண்பனைப் பார்த்து “சியர் அப்” மேன், என்றான் மதி முகிலன் . .

என்னடா சியர் அப், நீ இப்படியே வேகமா ஓட்டிட்டு போனால் ,நானே ,அப் பு ல போயிடுவேன் போல, என்றான் கைகளால் வானத்தைக் காட்டியபடி ,அவனது நண்பன் ரவீந்திரன்.

“கூல் மச்சி”, அப்படி எல்லாம் உன்ன சீக்கிரம் விட்ர மாட்டேன், நீ என்கூடவே இருந்து பார்க்க வேண்டியது நிறைய இருக்கு .....,என்றான் மதி சிரித்தபடி,,.

“எதைடா பார்க்க சொல்ற,", உன்ன பார்த்தாலே, பொண்ணுங்க எல்லாம் சுத்தி வந்து மொய்ப்பதையா?,

,. “போடா டேய், நானும் காலேஜ்ல இருந்து பார்க்கிறேன்,, உன்ன பார்த்தாலே பொண்ணுங்க எல்லாம் தேடி வந்து பேசறாங்க, இதே நா போய் அவங்ககிட்ட பேசினா,, ஏதோ ஏலியனை பார்த்த மாதிரி முறைக்கராங்க,

அப்படி உன்கிட்ட என்ன தாண்டா இருக்கு?,, என்று மதியை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே எடை போட்டான் ரவி,.

ஏதோ ஆறடி ஹைட் இருப்ப,, மாநிறத்துக்கு மேல ஒரு டோன் கலரா இருக்க, என்று சொல்லி ,மதியின் தாடையை கொஞ்சம் நிமிர்த்தி,, ம்,, தீர்க்கமான கண்ணு,, திருத்தமான மீசை, முகம் கொஞ்சம் லட்சணமா இருக்கு, அதுக்கு மேல பெருசா எனக்கு எதுவும் தெரியல,, பொண்ணுங்க கிட்ட அதிகம் பேச பிடிக்காத ,உன்ன எதுக்கு தான் பொண்ணுக சுத்தி சுத்தி வராங்கனு தெரியல, நாங்களும் கலரா தாண்டா இருக்கோம் ,,எங்களை யாருமே பார்க்க மாட்டேங்கறாங்க, என சீரியசான முகத்தோடு ரவி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் முதுகில் பட்டென்று அடி விழுந்தது,,,.

நான் சுமாரா இருக்கேன்னு, இந்த சுமார் மூஞ்சி குமார் சொல்றாரு, என்ன கொடுமை சார் இது?,, என்றான் மதி சிரித்தபடி,…….

எப்பா சாமி, நீ அரவிந்த்சாமி கணக்கா அழகா இருக்கே,,ஆள விடு, பத்து நாள் தங்கர மாதிரி பேக் பண்ணிட்டு வானு, நீ சொன்னத கேட்டு கிளம்பி வந்து,, ஜீப்ல ஏறி இவ்வளவு நேரமா எங்க போறோம்? எதுக்கு போறேனு தெரியாம, எந்த கேள்வியும் கேட்காமல் வரேன் இல்லையா,,, என் புத்தியை செருப்பாலேயே அடிக்கணும் என்றான் ரவி….
சாரி மச்சி ,நான் சூ தான் போட்டு இருக்கேன் ,,இது ஓகே வா ன்னு பாரு , என்று தன் காலை தூக்கி காட்டினான் மதி…….

ஒரு நொடி புரியாமல் விழித்த ரவி,, மறு நொடி அவனை அடிக்க கை ஓங்க,,, அதற்குள் வண்டியை நிறுத்தி இறங்கி இருந்தான் அவன்,

சாலையின் ஓரம் நின்ற மதி,,, மகரந்த வாசம் சுமந்து வந்த மரகத காற்று முகத்தில் மோத,,, அதன் சுகந்தத்தை சுவாசித்தபடி கண்மூடி நின்றான்

அவனைத் தொடர்ந்த இறங்கி வந்த ரவியும் அங்கே தெரிந்த இயற்கையின் அழகில் மெய்மறந்து நின்றான்.

அப்போது மதி ,அங்கே இருந்த பேத்துப்பாறை என்ற பெயர்ப்பலகை ஒட்டி கீழ் நோக்கி சென்ற ஒரு கிளை பாதையை சுட்டிக்காட்டி ரவியிடம் சொன்னான்,.
“இதோ,, இந்தப் பாதையில் ,நாலு கிலோமீட்டர் தூரம் போன போத்துப்பாறைஅப்படிங்கற ஊர் வரும், அங்கிருந்து இன்னொரு கிளைப் பாதையில் போனால்,,, அஞ்சு வீடு என்கிற மலை கிராமம் வரும் ,,அங்க தான் போக போறோம் என்றான்.

உன் வீடு, என் வீடு,, எனக்கு தெரியும் ,அது என்னடா அஞ்சு வீடு ,அதுவும் மலை கிராமம் ன்னு சொல்ற,, அங்க போய் நாம என்ன பண்ண போறோம்,..??

அஞ்சு வீடு ,இயற்கை தந்த மிகப்பெரிய கொடை டா, அங்க பல தேயிலைத் தோட்டங்கள் இருக்கு ,இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து ரொம்ப உயரமா இருக்கறதால, இங்க விளைகிற தேயிலை நல்ல மணமாகவும் ,தரமாகவும் இருக்குது ,,,அதுக்கு பாரின்ல நல்ல வரவேற்பு இருக்கு, அங்க அப்பா பிரண்டோட தேயிலைத் தோட்டம் இருக்குது, அதை விற்க போவதாக அப்பா கிட்ட சொல்லி இருக்காரு!!!

அப்பா அதை வாங்கலாம்னு ஆசைப் படுறாரு ,இப்ப நாம போய் அங்க கொஞ்ச நாள் தங்கி இருந்து ,அந்த இடத்தோட பிளஸ் அண்ட் மைனஸ் என்ன ?,அதை வாங்கினால் லாபகரமாக இருக்குமா? இல்லையான்னு?, செக் பண்ண போறோம் …

அதை வாங்கினால் லாபகரமாக இருக்கும்னு தோணினா, விலை பேசி முடிச்சிட்டு வரலாம்…

சூப்பர்டா!!, ஜாலியா ஊர் சுத்துன மாதிரி ஆச்சு, வேலை பார்த்த மாதிரியும் ஆச்சு, போன வாரம் ஃபுல்லா அந்த யூனியன் லீடர் பண்ண தொல்லையில் ரொம்ப டென்ஷனா இருந்தது, இங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போய் , ஃப்ரெஷ் ஷா வேலை பார்க்கலாம் …

மதியம் ரவியும் ஒன்றாக கல்லூரியில் எம்பிஏ படித்தவர்கள்,மதி நல்ல வசதியான பாரம்பரிய பெருமை மிக்க குடும்பத்தில் பிறந்தவன், மதிக்கு கொடைக்கானலில் சொந்தமாக டீ தூள் தயாரிக்கும் பேக்டரி இருக்கிறது ,படிப்பு முடிந்தவுடன் தன் தந்தையோடு சேர்ந்து அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான், தன் உயிர் நண்பனான ரவிக்கும், மேனேஜர் பொறுப்பு கொடுத்து தன்னோடு வைத்துக் கொண்டான்..

வேலைன்னு வந்துட்டா ரெண்டுபேரும் வெள்ளைக்காரங்க தான், அதுவே ஆபீஸ் விட்டு வெளியில வந்துட்டா ,அப்படியே அக்மார்க் முத்திரை வாங்கின நம்ம பசங்க தான்.. சந்தோசமாக ஊர் சுற்றுவதும் ,ஜாலியாக பேசிக் கொள்வதும் தான் அவர்கள் வாடிக்கை…..

மற்றபடி பணக்கார பசங்களுக்கான எந்த ஒரு தவறான பழக்க வழக்கங்களுக்கும் ,தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல், தான் இப்படித்தான், தன் பாதை இதுதான் ,என வைத்துக் கொண்டு தெளிவாக, நேர்மையாக, நடை போட்டுக் கொண்டிருந்தான் மதி…

பேச்சிப்பாறயை அடுத்து, இன்னொரு கரடு முரடான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது மதியின் வாகனம், இயற்கையோடு இயைந்த அந்தப் பயணம் மதிக்கு மிகப் பிடித்து இருந்தது …

உலகின் பாதை நம் வீட்டுப் படியில் இருந்தே துவங்குகிறது, என்று எங்கோ படித்தது அன்று திடீரென ஞாபகத்திற்கு வந்தது….

அந்தப் பாதையில் ஆங்காங்கே தெரிந்த கல் வீடுகளை மதி ரவியிடம் சுட்டிக்காட்டி,

“அதை பாத்தியா அதுதான் நூறு வருஷத்துக்கு முன்னால ஆதிவாசிகள் வாழ்ந்த இடம், கல்லை மட்டும் வைத்து, தனக்கான வீடுகளை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள் என சொல்லிக் கொண்டிருக்கும்போது …..

ஜீப்பின் கதவில், யாரோ மோத, சட்டென்று சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்,

ஒற்றையடிப் பாதையில் இருந்து ஓடி வந்த ஒருவன், கதவில் மோதி நின்று கொண்டிருந்தான்…

கதவைத்திறந்து மதி நின்ற ,ஒரு நொடியில் “ நோய்ங்க்” என யாரோ கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டது…

ரவி வண்டியின் மறு பக்க கதவை திறந்து வந்து பார்த்தபோது,,,
மதி கன்னத்தில் கை வைத்து கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தான்…

அருகில் வண்டியில் மோதிய நெடிய உருவம் நின்றிருந்தது, அவர்களுக்கு எதிரில், கண்களில் அனல் கக்க ,கை முஷ்டியை மடக்கியபடி, மிக மிக எளிய ஒரு சிந்தடிக் சுடிதாரில் ,அழகோவியம் போன்ற ஒரு பெண், ஆங்காரதோடு நின்று கொண்டிருந்தாள்…..

வசப்படும்....
 




Attachments

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
புது முயற்சிக்கு வாழ்த்துகள் dear.... மோதலில் தொடங்குது நாயகன் நாயகி சந்திப்பு.... ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top