• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்டதே என் வானம்__6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!

சென்ற பதிவிற்கு லைக் கமெண்ட் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்!, இதோ இன்றைய பதிவு, இதற்கும் உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்!


வசப்பட்டதே என் வானம்__6

தனது டிவிஎஸ் பீப்டியில் சாய்ந்தபடி ,மதியை பார்த்தாள் அவள்.


“அதற்குள் வண்டியை ரிப்பேர் செய்து வந்து விட்டாளா?,இவ முன்னால இப்படி ஆகிவிட்டதே! என நினைத்தவன்,விடியும்வரை வண்டியிலேயே இருப்பது என்ற முடிவுடன், ஜீப்புக்கு சென்று கதவை முடிக்கொண்டான்.

மெல்ல, மெல்ல ,மாலையின் மஞ்சள் நிறத்தை,இரவின் கருப்பு வண்ணம் விழுங்கி கொள்ள, இருளின் கருமையில், காரிகை அவள் தனிமையில் நின்று கொண்டிருந்தாள்!

சிறிது நேரம் கழித்து ,அவள் ஜீப்பின் கதவை தட்டினாள்!

என்ன ?,என்பது போல் மதி புருவம் உயர்த்த,

சார் இன்னும் கொஞ்ச நேரமானல்,
இங்கு வனவிலங்கு நடமாட்டம் வந்துரும், அதுவும் காட்டுயானைகள், இந்த ரோட்டுல அடிக்கடி வரும், இப்படி திறந்த ஜீப்பில் உட்கார்ந்து இருப்பது நல்லதில்லை!!


சில நேரம், யானை தும்பிக்கையால், வண்டியை புரட்டிப் போட்டுவிடும்,,, அதனால, அங்கே இருந்த ஒரு குன்றினைய் கைகாட்டி ,நாம, அங்க போய் விடுவது நல்லது!,,

அந்த மாதிரி உச்சிப் பகுதிக்கு ,யானைகள் வராது! அதுவும் நெருப்பு கொஞ்சம் பக்கத்துல மூட்டிவிட்டால், எந்த சிறிய, பெரிய மிருகங்களும் வராது ,. நான் அங்க போறேன் ,நீங்க வரிங்களா?? என்றாள்.

உங்க நல்ல எண்ணத்திற்கு நன்றி !,ஆனா ,எனக்கு உங்க கூட அங்கே இருப்பதை விட, இங்கிருப்பது தான் பெட்டர்!, எனக்கு எந்த பயமும் இல்லை !, நீங்க வேணும்னா அங்க போய்க்கங்க!! என்றான்.

அவள் தோள்களைக் குலுக்கியபடி, சொல்வதைச் சொல்லி விட்டேன் ,இனி நீ என்னமோ பண்ணிக்கோ !என நினைத்து ,அந்த குன்றின் மேலே ஏறத் தொடங்கினாள்!

சில மணித்துளிகள் கடந்திருக்கும்,ஜீப்பை யாரோ உலுக்க, என்னவென்று பார்த்தான் மதி, அங்கே கறுத்த களிரோன்று, பெருத்த குரலால் பிளிரி கொண்டு நின்றது!


மதி இறங்கி தப்பிக்கப் பார்க்க ,அவன் கழுத்தை தும்பிக்கையால் சுற்றி ,தூக்கி தூர வீசியது..!

பட்டென்று கண்களை திறந்தான் மதி, சில நொடிகள் கழித்தே சுற்றுப்புறம் உணர்ந்தான்.

அடச்சீ !!கனவா?, எவ்வளவு மோசமான கனவு, இந்தம்மா,போகும்போது சும்மா போகாம , ஏதேதோ சொல்லிட்டு போய் ,நம்மள பயமுறுத்திடுச்சு ,இனி எப்படி வண்டில இருக்கிறது, பேசாம மேலேறி அங்கே போயிட வேண்டியதுதான், இங்க உட்கார்ந்து இருந்தா, கனவு நினைவாகும் வாய்ப்பிருக்கு என எண்ணியவன், வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ,கதவை லாக் பண்ணிவிட்டு , குன்றேற தொடங்கினான்.

குன்றின் மேல் இருந்த ஒரு பெரிய மரத்தில் சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்தாள் அவள்.

மதி, செல்போனின் டார்ச்சை கையில் பிடித்துக்கொண்டு, அவளை நோக்கி வந்தான்.

அவனைப் பார்த்ததும், இப்ப மட்டும் இங்கே ஏன் வந்த? எனக் கேட்பது போல் அவள் புருவம் உயர்த்த,

அது ,அது வந்து, என்ன இருந்தாலும் ஒரு பொண்ண, தனியா விட்டுட்டு கீழே இருக்க மனசு இல்ல, அதான் மேலே வந்தேன் என்றான்.

அவன் முகத்தில், முத்துமுத்தாய் பூத்திருந்த வியர்வையும், பேச்சில் தடுமாற்றமும் ,அவன் பயந்து இருக்கிறான் என உணர்த்த அவள் மேற்கொண்டு ஏதும் கேட்காமல், அருகில் அமரும்படி சைகை செய்தாள்!

அந்தப் பெரிய மரத்தின் ஓரத்தில் அமர்ந்துகொண்டான் மதி, குளிர் அவன் ஜெர்கினை தாண்டி, உடலை உறைய செய்வதாய் இருந்தது !,கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்!

ரொம்ப குளிருது, விடியும்
வரை எப்படித்தான் இங்க இருப்பதோ, என தனக்குத்தானே அவன் புலம்ப...


எனக்கு இந்த குளிர் பழக்கம்தான் சார்!, உங்ககிட்ட தீப்பெட்டி இருக்கா,? நெருப்பு மூட்டலாம்,குளிராது, எந்த விலங்கும் பக்கத்துல வராது!!

அவளை முறைத்துப் பார்த்த மதி, ஏன் என்ன பாத்தா சிகரெட் ,பீடி குடிக்கிற மாதிரியா தெரியுது?,, தீப்பெட்டி எப்பவும் வைத்திருக்க?





ஐயோ சார்!, தீப்பெட்டி இருந்தா ஈசியா நெருப்பும் மூட்டலாம்னு தான் கேட்டேன், நீங்க ஏன், நான் என்ன பேசினாலும் தப்பா எடுத்துக்கறிங்க?


நீங்க என் தப்பா எடுக்கிற மாதிரி பேசுறீங்க?

உங்களுக்கு என்னதான் பிரச்சனை, எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க
அன்னைக்கு உங்கள தெரியாம தான் அடிச்சேன்!, சாரியும் கேட்டுட்டேன், அப்புறம் என்ன சார் கோபம் உங்களுக்கு?


சரி, நீங்க அன்னைக்கு என்ன தெரியாம அடிச்சிங்க, அது ஓகே !,ஆனா அந்த ஆளை அடிக்க தானே துரத்தி வந்தீங்க,அதுக்கு அப்புறம் உங்கள பார்த்த போது ,மூணு பேரை புரட்டிப் போட்டு அடிக்கிறீங்க !,இது என்னங்க ரவுடித்தனம் ,எந்த பெண்ணாவது இப்படி எதுக்கெடுத்தாலும் கை நீட்டுமா?

அடிச்சேன், அடிச்சேன்னு சொல்றீங்களே, ஏன் அடிச்சேன் ,அவங்க என்ன செஞ்சாங்கணு கேட்டீங்களா?

உங்க வண்டில மோதினவன், காட்டுக்குள்ள ஆடு மேய்க்கப் போன ,எங்க ஊர் பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினான், அந்த பொண்ணு அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்து என்கிட்ட நடந்ததை சொன்னாள்!.
நான் போய் ,அவன்கிட்ட ஏன் இப்படி பண்றேன்னு கேட்டதற்கு, அவ போன போயிட்டு போற, நீ வரியா ?என்று கேட்கிறான் ,அதான் அடிச்சேன், தப்பித்து ஓட பார்த்தான், துரத்தி வந்தேன், வண்டியில் மோதி, உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போது தப்பிச்சு போயிட்டான், புடிக்க முடியல!


அப்புறம் ஒரு நாள், ரெண்டு பேரை கூட்டிட்டு நான் வேலை செய்த இடத்திற்கு வந்து,

நான் ஒத்தையா வந்ததுக்கு அடிச்சியே ,இப்ப நாங்க மூணு பேரு, இப்போ ,இதே இடத்துல உன்ன நாசப்படுத்த போறோம் !உன்னால என்ன பண்ண முடியும்னு கேட்டு என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினாங்க!

நீங்களே சொல்லுங்க, அந்த நேரத்தில் யாருமே இல்லாத அந்த இடத்துல, நான் என்ன பண்ணி இருக்கணும்னு நினைக்கிறீங்க?,
யாருமே இல்லை ,”கண்ணா! நீ தான் என்னை காப்பாத்தணும், கையை தூக்கி கடவுளை கும்பிட்டு நிக்கனுமா?”,


இல்ல அவங்க என்ன நாசப்படுத்தி விட்டு போன பின்னே, நல்லா அழுதுட்டு, கண்ணைத் தொடச்சுட்டு, எதுவுமே நடக்காத மாதிரி, எதுவுமே யாருக்கும் சொல்லாம ,வீட்ல யாரையாச்சும் கல்யாணம் பண்ணி வச்சா பண்ணிட்டு போய் குடும்பம் நடத்தனுமா?

இல்ல ,எனக்கு நியாயம் வாங்கித்தர சட்டம் இருக்குன்னு கோர்ட்டுக்கு போய், அவங்க கேக்குற எப்பேர்பட்ட கேவலமான கேள்விக்கும், கேவிக்கிட்டே,அவமானப்பட்டு பதில் சொல்லி, எப்படியோ, முட்டி மோதி அவங்களை ஜெயில்ல தள்ளினா, ஒரே வாரத்தில் வெளிய வந்து, என்னையே பெட்ரோல் ஊற்றிக் கொளுந்துவாங்க , அப்ப கத்தி ,கதறி சாம்பலாக போகட்டுமா? என்ன செய்யணும் நீங்களே சொல்லுங்க?
என்ன காப்பாற்ற, கோயில் கருவறையில் வெச்சு குழந்தையை,சீரழித்து கொன்றதை, கண்டுக்காத உங்க கடவுளும் வேண்டாம்,! சல்லடை மாதிரி, எல்லா பக்கமும் ஒட்டையா இருக்கிற உங்க சட்டமும் வேண்டாம் !,என்ன காப்பாத்திக்க எனக்குத் தெரியும், இங்க தண்டனை கடுமையா இல்லாததால்தான் ,தப்புகள் தாராளமா, ஏராளமா நடக்குது!

ஆங்கிலேயர் அடக்குமுறைக்கு, அகிம்சையால் போராடின காந்தி கூட ,”பெண்கள் தனக்கு ஆபத்துனா, விரல் நகங்களை கூட ஆயுதமாக பயன்படுத்தலாம்னு,சொல்லி இருக்காரு!”,
நான் என்ன காப்பாத்திக்க அவங்கள அடிச்சேன், , இப்ப சொல்லுங்க நான் செய்தது தப்பா?


வேக மூட்சுகளோடு கேள்வி கேட்டு, கோப முகத்தோடு நின்றிருந்த அவளை பார்த்தான்!

தப்பில்லை!, அவள் செய்த எதுவும் தப்பில்லை!, தன்னை அடித்தால் என்ற காரணத்துக்காக அவளை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்த, தன்மேல் தான் தப்பு !, தப்பு என்றால், அதை ஓத்துக்கொள்ளாமல்,அதுவே சரியென வாதிக்கும், தலைக்கனம் பிடித்தவன் இல்லையவன் ,தவறை சுட்டிக்காட்டினால் உணர்ந்து ஏற்று மன்னிப்பு கேட்கும் மனப்பான்மை கொண்டவன்.

அதனால் , அவள் முகத்தைப் பார்த்து ,”நீங்க செய்தது எதுவுமே தப்பில்லை! நான் உங்க இடத்தில் இருந்தாலும், இதைத்தான் பண்ணியிருப்பேன்!, உங்கள தப்பா புரிஞ்சுகிட்ட என் மேலதான் தப்பு ! சாரிங்க! என்றான், இறங்கிய குரலோடு,


“பரவால்ல சார்”! இனிமேலாவது என்ன பார்த்தா சிரிங்க !,சிரிக்க முடியலையா?, அமைதியா இருங்க !தயவு செஞ்சு முறைக்காதீங்க!
மொறச்சா உங்க முகத்தை பார்க்க சகிக்கல அதான் ,என்று இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்க அவள் சொல்ல,


என்னங்க! என் முகம் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு !இனிமே பாருங்க ,உங்களைப் பார்க்கும்போதெல்லாம் சிரிச்சுகிட்டே இருப்பேன்! போதும்டா சாமின்னு நீங்க சொல்ற வரை விட மாட்டேன்!

“ஐயோ! ஏங்க இப்படி ஒரு கொடுமையான தண்டனை எனக்கு?

அதுவா, எனிமியா இருந்த நீங்க ,இப்ப ஃபிரண்டா ப்ரோமோட் ஆனதுக்குத்தான்,

அவள் சிரித்துக்கொண்டே, உங்க பேர் என்ன சார் ?,இங்க என்ன பண்றீங்க ?என கேட்க

என் பேர் மதி முகிலன், கொடைக்கானலில் டீ பேக்டரி நடத்திட்டு இருக்கோம், இங்க தேயிலை எஸ்டேட் விலைக்கு வந்தது !வாங்க வந்தேன், ஆமா உங்க பேர் என்ன?

என் பெயர் , என் பெயர் என அவள் யோசிப்பது போல் பாவனை காட்டி, உங்கள மாதிரி உடனே சொல்ல மாட்டேன்! நீங்களே கண்டுபிடிங்க, என் பேரு ஒரு பூவோட பேரு! ஈஸியா கண்டுபிடிக்கலாம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

அவள் முகத்தை ஒரு நொடி கூர்ந்து பார்த்த மதி,தனக்குப் பிடித்த பூவின் பெயரைச் சொன்னான்.



அவள், அவனை ஆச்சரிய பார்வை பார்த்தபடியே, "சூப்பர் சார்! அது தான் என் பேரு என்றாள்..


வசப்படும்!!!
.







 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top