• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வசப்பட்ட தே என் வானம்__5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!

சென்ற பதிவுக்கு , லைக்,கம்மண்ட் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி! இதோ! இன்றைய பதிவு, அடுத்த பதிவு,காதலர் தின சிறப்பு பதிவு! " காதலின்றி அமையாது உலகு!"

வசப்பட்டதே என் வானம்___5

வளைந்து ஓடும் நதியின் நீரோட்டத்தை கிழித்துச் செல்லும் மீனைப் போல, அந்த மலைப் பாதையில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த ஜீப்.

மதி, தந்தையோடு கலந்து பேசி, எஸ்டேட் வாங்குவதை உறுதி செய்து கொண்ட பின் ,மறு நாள் நல்ல நாளாக இருக்க அன்றே ரெஜிஸ்ட்ரேஷன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு பண்ணி, இன்று கொடைக்கானல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அங்கே சென்று ஏற்பாட்டை பார்க்க, ரிஜிஸ்ட்ரேஷன் அன்று சதாசிவம் ,தன் நண்பருடன் அங்கே வருவதாக சொல்லியிருந்தார்..
ரவி வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, அருகில் மதி கண் மூடி சாய்ந்திருந்தான்.


மூன்று நாட்கள் கடந்து இருந்தது, அன்றைய நிகழ்வுகள் மதியின் மனதில் படமாக ஓடிக்கொண்டிருந்தன,

அருவியில் விழுந்து போது, தன்னைக் காப்பாற்றியது யார்?, என்ற கேள்வி அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

மயக்கம் தெளிந்து, ரவியிடம் கேட்ட போது அங்கே யாரும் இல்லை எனவும்,கரையில் மயங்கியிருந்த அவனை தூக்கி வந்து, கிராமத்தில் இருந்து நாட்டு மருத்துவரிடம் காட்டிவிட்டு,கெஸ்ட் ஹவுசுக்கு கூட்டி வந்ததாக கூறினான்.

யாரோ,காப்பாற்றியிருக்கிறார்கள், அதற்குத் தன் கையில் கட்டியிருந்த கருப்புத் துணியே சாட்சி, அவன் அந்தத் துணியை பத்திரப்படுத்தி வைத்து இருந்தான்.

தன் முகத்தை கூட காட்ட விரும்பாத, அந்த உன்னத உள்ளத்தை மனதுக்குள் போற்றினார், அந்த உள்ளம் மட்டும் தன்னை காப்பாற்ற விட்டால் ,அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அவன் வாழ்க்கையே அன்றோடு முடிந்திருக்கும்,, மோன நிலையில் இருந்த மதியை கலைத்தது ரவியின் குரல்

எப்படியோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்டுச்சு மதி, எனக்கு அந்த அருவிக்கரையில் உன்ன மயக்கமா பார்த்தப்ப ,உசுரே போயிருச்சு , எல்லாம் என்னால வந்ததுனு மனுசு கிடந்து தவிச்சது, உன்னை யார் காப்பற்றியதுணு தெரியல ,ஆனா அவங்க எங்கே இருந்தாலும் ,நூறு வருஷம் நல்லா இருக்கணும்எனஉணர்வுபூர்வமாக சொன்னான்.

மதி புன்னகைத்தபடி,கண்டிப்பா அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பாங்க என்றான்.
…………..


அந்தப் பெரிய ஆடம்பர பங்களாவின் உள்ளே நுழைந்தது ஜீப், வாசலில் இருந்த செக்யூரிட்டி பவ்வியமாய் வந்து கேட்டை திறந்து விட்டு வணக்கம் சொன்னான்.

வண்டிச் சத்தம் கேட்டவுடன் ,வாசலுக்கு வந்தார் வள்ளியம்மை,மதியின் தாய் ,ஐம்பது வயதிலும் ,கம்பீரம் குறையாத களையான முகம் ,தீட்சண்யமான கண்கள். கனிவும் ,கருணையும் நிறைந்த, இனிதான இல்லத்தரசி.


மதி வண்டியை விட்டு இறங்கி வந்து தாயை கட்டிக்கொண்டான்,” எப்படி இருக்கீங்க மா?”,சாரிமா ,அங்க டவர் எல்லாம் இல்ல ,அதனால தான் போன்ல உங்ககிட்ட பேச முடியல.

பரவாயில்லை மதி, நான் நல்லா இருக்கேன் ,நீ அங்க வேளாவேளைக்கு சாப்டியா இல்லையானு தான் எனக்கு கவலை.

“மா ,அதெல்லாம் அங்கிள் நல்லா பார்த்துட்டாரு!, உங்களை கண்டிப்பாக அங்க கூட்டிட்டு போறேன் ,சூப்பர் பிளேஸ் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே

படியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார், அவனது தந்தை தயாளன், பெயருக்கு ஏற்ப தயாள குணம் உடையவர் தான் ,ஆனால் பிசினஸ் என்று வந்துவிட்டால் கறாராக தான் இருப்பார். குடும்ப வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வும், மனைவியை மதிக்கும் பண்பும், கலந்த நல்ல கணவர் ,மதிக்கு சிறந்த தந்தை, சிறந்த குரு.

“ஹாய் மதி, ஹவ் ஆர் யூ?, ஹவ் இஸ் ஜர்நி?

ஸ்பைன் பா!,ஹவ் ஆர் யூ?,

“மீ, எப்பவும் போல தான் இருக்கேன், எங்கா, எனர்ஜெடிக்கா உனக்கு அண்ணன்னு சொல்ற மாதிரி!,

அப்போ, அண்ணி யாருப்பா??, என கேட்டு, தாயிடம் முதுகில் நான்கு வாங்கிக்கொண்டான்.

மதியம் ரவியும் கொஞ்சம் பிரஷ் ஆகி வர ,காலை உணவை உண்ண டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்தனர்.

அப்பா!, எஸ்டேட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குபா, ஆனா என்ன, நீங்க நேர்ல வந்து பார்த்து ஓகே சொல்லி இருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்..

நான் எதுக்குப்பா பாக்கணும் ?,நீ பார்த்த போதாதா, உன் கணக்கு பிசினஸ்ல எப்ப தப்பாகி இருக்கு ?என சிரிக்க..

அப்படி சொல்லுங்கப்பா ,மதி பிசினஸ்ல எப்பவுமே புலிதான் என்று ரவியும் சிரித்தான்.

அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டே உணவை முடித்தனர்.

“மச்சி, நான் வீட்டுக் பொய் அட்டனன்ஸ் போட்டுட்டு, ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறேன், அங்க எல்லாம் கொடுத்து, பத்திரம் ரெடி பண்ண சொல்லிடுறேன், நாளைக்கு நாம போய் சைன் மட்டும் போட்டா போதும் என்றான்.

ரவி கிளம்பிய பின், கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு ,தந்தையுடன் அலுவலகம் சென்றான் மதி, மதியம் 3 மணியளவில் ரவியிடம் இருந்து போன் வந்தது.


“என்னடா ,எல்லாம் ரெடி பண்ணிட்டியா?, நாளைக்கு 11 மணிக்கு அங்கெள் வந்துடுவாரு…
அதில்ல மதி, ஒரு சின்ன பிரச்சனை, மதர் டாக்குமண்டல, ஒரு முக்கியமான டாகுமென்ட் மிஸ் ஆகுது ,அது கண்டிப்பா வேணும்னு, டாக்குமென்ட் ரைட்டர் சொல்றாரு,நான் சதாசிவம் சார்கிட்ட இன்பர்ம் பண்ணலாம்னு, லேண்ட்லைனுக்கு ட்ரை பண்ணினேன், ஆனா லைன் கிடைக்கல, இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்!


“ஏண்டா, நீ தானே டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சே!,செக் பண்ண மாட்டியா? இப்ப பாரு?

சாரிடா, நான் செக் பண்ணினேன், எப்படியோ மிஸ் ஆயிடுச்சு,நான் வேணா இப்ப கிளம்பிப் போய் டாகுமெண்ட்ஸ் எடுத்துட்டு காலங்களையும் கூட்டிட்டு வந்துடுட்டா? என கேட்க..

டேய்!, இன்னிக்கு பாரின்கு எக்ஸ்போர்ட் ஆகுற ஸ்டாக் அனுப்பனும், எக்ஸ்போர்ட் டீலிங்ஸ் ,எல்லாம் நீ தானே பார்கர, நீ இங்க பேட்டரில கண்டிப்பா இருக்கணும்!, நீ இங்க வந்து வேலைய பாரு ,நான் வேணா போய் அவங்களை கூட்டிட்டு, டாக்குமெண்ட்ஸ் எடுத்துட்டு வரேன்.

அதுவும் சரிதான் !, நான் இப்பவே கிளம்பி ஆபீஸ் வந்துடுறேன்,நீ போய்ட்டு வா மதி.

மதி தந்தையிடம் சென்று ,நடந்ததைக் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து காரை விட்டுவிட்டு ,ஜீப்பை எடுத்துக்கொண்டு தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
…………
இளையராஜா இன்னிசை வழி
வழிந்தோட, அதை ரசித்தபடியே ,வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் மதி, அந்த அந்தி மாலை நேரத்தில், மலைப்பாதையின் அழகு ,மேலும் மெருகோடு தெரிந்தது.


இன்னும் ஒரு முக்கால் மணி நேர பயணத்தில், அவன் வீட்டை அடைந்து விடுவான்.

இளையராஜா பாட்டுக்கு, எசப்பாட்டு பாடிய படி மதி போய்க்கொண்டிருக்க, பாதையில் ,முன்னே யாரோ ஒரு பெண் தனது டிவிஎஸ் பீப்டியை ரிப்பேர் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.


அட பார்ரா..... இந்த ரோட்டுல ,ஒரு பொண்ணு டிவிஎஸ் ஓட்டுது,, பாவம்! ஏதோ ரிப்பேர் போல ,சரி பண்ண முடியாமல் கஷ்டபடராங்க, போய் ஹெல்ப் பண்ணுவோம் !என அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அந்தப் பெண்ணை நெருங்கியதும், வண்டியை நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான்.

வண்டிச் சத்தம் கேட்டு அவள் திரும்பியபோது தான், அவள் முகத்தை கவனித்தான்.

அவள், அவள் மதியால்” லேடி ரவுடி” எனப் பெயரிடப்பட்ட அந்தப் பெண்.

இவளோ?,! இவளுக்கு போயா உதவுவது என எண்ணினான், இருந்தாலும் அந்த மாலை நேரத்தில், அந்தப் பெண்ணை ஆளரவமற்ற, அந்தப் பாதையில் விட்டு செல்ல மனம் வரவில்லை..
என்ன செய்ய, என்று யோசித்தான்,சரி அருகில் சென்று பார்ப்போம் ,அவள் நம்மைப் பார்த்து உதவி கேட்டால் செய்வோம், இல்லையென்றால் திரும்பி விடுவோம் என்ற முடிவோடு அவளை நோக்கி சென்றான்.


அருகில் அரவம் உணர்ந்து , பார்த்தவள், மதியை அடையாளம் கண்டு, இவனா? இவனுக்கு தான் நம்மை கண்டாலே பிடிக்காதே ,இவங்கிட்ட போய் ஹெல்ப் கேட்பதா?,என மீண்டும் முகத்தை திருப்பி வண்டியை ரிப்பேர் செய்வதை தொடர்ந்தாள்.

என்ன திமிர் இவளுக்கு ,கஷ்டப்படும் அப்பத்தான் புத்தி வரும் ,என நினைத்து அவன் வண்டிக்கு திருப்பினான்.

வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது, மனசு கேட்காமல், அவன் திரும்பிப் பார்க்க, அவள் அப்போதும் திரும்புவதாக இல்லை..!

என்ன மகாராணிக்கு உதவி வேணும்னா கேட்க மாட்டாங்களா?, கேட்காம யார் என்ன செய்வாங்க?
விடிய, விடிய இங்கேயே கிடக்கட்டும்,என மனதில் ஒரு பக்கம் நெனைக்க,ஒரு பெண்ணை அப்படியே விட்டு வந்தது மனதிற்கு கஷ்டமாக இருந்தது, அவளுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்? என இன்னொரு பக்கம் தோன்றியது.


யாருக்கு? அவளுக்கா?, புலியை முறத்தால் அடிச்சு விரட்டுன பொண்ணு, இந்த அம்மாக்கு கசின் சிஸ்டரா இருக்கும்,இவள யார் என்ன பண்ண முடியும், இவ யாரையும் எதுவும் பண்ணமாவிட்டா சரி என தோன்ற வண்டியை ஓட்டி போனான்.

இரு வளைவுகள் தாண்டிய பிறகு, வண்டியை நிறுத்தினான், ஏனென்றால் ஒரு பெரிய மரம் முறிந்து பாதையில் விழுந்து இருந்தது,அந்த மரத்தை நகர்த்தினால்தான், மேற்கொண்டு செல்ல முடியும், வேறு வழியே இல்லை!

என்ன செய்வதென தெரியாமல் நின்றான்,இந்த மாதிரி சாலைகளில் போக்குவரத்தை மிக அரிது ,இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும்,விடிந்து யாரேனும் நாலைந்து பேர் வந்து , மரத்தை அப்புறப்படுத்திய பின்னே,மேற்கொண்டு செல்ல முடியும், திரும்பிச் செல்லலாம் என்றாலும் வீடு சேர நள்ளிரவு ஆகிவிடும், அதுவும் நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் இருக்க அங்கிளை கூட்டிசெல்லவேண்டும் என்ன செய்ய, என எதும் புரியாமல் தவித்து நின்றான் .

கொஞ்ச நேரம் கழித்த பின், பெண்ணின் சிரிப்பொலி பின்னே கேட்க, இந்த நேரம், இங்க யாரு?, மோகினி பிசாச இருக்குமோ? என எண்ணி திருப்பி பார்த்தான்.

பார்த்தவன் மோகினி பிசா சே தான் என்று முணுமுணுத்து கொண்டான்.!

எதிரில் கைகளை கட்டியபடி அந்த பெண் நின்று கொண்டு இருந்தாள்.!!


வசப்படும்!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தமிழ்ச்செல்வி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top