• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வன்னெஞ்சக் கள்வனே..!- 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்-13

இயலரசி இன்று எப்படியாவது அக்காவை பார்க்க வேண்டுமென அவளது வீட்டிற்கு வந்திருந்தாள். ஏற்கனவே ஊருக்கு வந்த இயலரசியை பார்க்க எழிலரசி கிளம்பிக் கொண்டிருந்தபோது நெடுமாறன் அவளை போக விடாமல் சில்மிஷங்கள் செய்ய அவனோடு ஒன்றியதில் வெளியே செல்லவேண்டும் என்பதையே மறந்து விட்டாள். அவனிடமிருந்து விடுபட்டு தாமதமாகத்தான் அவளைப் பற்றிய யோசனை வந்தது. தலையிலடித்துக் கொண்டு அவளுக்கு போன் செய்ய முக்கியமான வேலை இருந்ததால் கிளம்பி விட்டதாக சொன்னாள்..


உங்களால்தான் அவளிடம் பேச முடியாமல் போய்விட்டது என கோபமாக எழிலரசி சொல்ல கண்களை சுருக்கி சாரிடா என்று கெஞ்சும் நெடுமாறனிடம் அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்கவும் முடியவில்லை. வெளியே சென்றால் ஏதாவது பிரச்சனை வரும் என நெடுமாறன் முதலில் சொன்னபோது அவள் கண்டுகொள்ளவே இல்லை ஆனால் நேரிலேயே பார்த்து விட்ட பிறகு அவளுக்கு வெளியே செல்லவும் பயமாக இருந்தது. நெடுமாறன் அவளை அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தான் ஆனால் வேலைகள் அதிகம் இருப்பதால் அவனாலும் வரமுடியவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு இன்று தன்னை தேடி வந்து நிற்கும் தங்கையை பார்த்ததும் எழிலரசி ஆசையுடன் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்..


"அரிசிப் புட்டு எப்படி டி இருக்க..? கிட்டத்தட்ட நம்ம ரெண்டு பேரும் பார்த்து ஆறு மாசம் இருக்குமா..?" என அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டே எழிலரசி கேட்டாள்..


"என்ன எலிக்குட்டி என்ன ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சேன் ஞாபகம் வச்சிருக்க போலருக்கே", என இயலரசி சற்று கிண்டலாகவே கேட்டாள்..


"என்ன அரிசிப் புட்டு கோபமா இருக்கியா..? அன்னைக்கு உங்க அத்தானால தான் என்னால கிளம்ப முடியல இல்லைன்னா கண்டிப்பா வந்துருப்பேன்டி", என எழிலரசி வருத்தமாக சொன்னாள்..


அத்தான் என்று சொன்னதும் இயலரசியின் முகம் மாறிய விதத்தில் எதற்காக இப்படி பார்க்கிறாள் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன். ஒருவேளை நான் அவள் அழைத்தும் சரியான நேரத்திற்கு செல்லாததால் கோபமாக இருக்கிறாளோ..


"என்ன இயல் ஏன் இப்படி பாக்குற..?"


"அக்கா நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன் அது ரொம்ப ரொம்ப முக்கியம். உன் கிட்ட நான் பேசியே ஆகணும் அத்தான் எங்கக்கா..?" என கேட்டாள்..


"அவர் வெளில போயிருக்காரு வர்ற நேரம் தான். நீ என்ன பேசணும் அத முதல்ல சொல்லு. உன் முகமே சரியில்லையே ஏதாவது பிரச்சனையா..? என எழிலரசி பதற்றமாக கேட்டாள்..


"ஆமாக்கா அது.." என ஆரம்பிக்கும் போதே ராஜூவும் நெடுமாறனும் பேசியபடியே வீட்டின் உள்ளே நுழைந்தனர்..


ராஜு இயலை ஆச்சரியமாக பார்க்க அவளோ அவனை சங்கடமாக பார்த்தாள். நெடுமாறன் இயலரசியை ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் ஆனால் அவளோ தயங்கி தயங்கி பேசிக்கொண்டிருந்தாள். நெடுமாறன் ராஜுவையும் இயலையும் மாறி மாறி பார்த்தவன் ராஜுவை கூர்மையாக பார்க்க அவன் கண்களில் தெரிந்த இயல் மீதான காதலை கண்டு யோசனையாக புருவம் சுழித்தான். இதற்கு மேலும் தான் வந்த விஷயத்தை பேச முடியாது என்று புரிந்து கொண்ட இயலரசி கிளம்புவதாக சொல்லி எழ எழிலரசி, "என்னடி இப்பதானே வந்த அதுக்குள்ள கிளம்புற..?" என கேட்டாள்..


"இல்லடி நேரமாச்சு அப்பாவுக்கு தெரியாம தான் வந்தேன் சீக்கிரம் போகணும்", என சொன்னாள்..


அப்போது தான் அவள் எதோ பேச வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வர, "ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியேடி ஒன்னுமே சொல்லாம கிளம்பிட்ட..?" என எழிலரசி கேட்டாள்..


அவர்களுக்கு முன்னால் சட்டென்று இப்படி கேட்பாள் என எதிர்பார்க்காத இயலரசி திணறியவாறு மற்ற இருவரையும் பார்த்து, "அது ஒன்னும் இல்லைடி.. சும்மா தான்.. சரி நான் கிளம்புறேன்", என அங்கிருந்து கிளம்பினால் போதும் என்பது போல அவசரமாகக் கிளம்பினாள்..


வேந்தனை எழிலரசியின் வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்ல சொல்லியிருந்தாள் ஆனால் இங்கே நிற்பதே இயலுக்கு படபடப்பாக இருக்க வேந்தனுக்கு போனில் அழைப்பு விடுத்தவாறே வேகமாக அந்த வீட்டைத் தாண்டி வெளியில் சென்றாள். போகும் அவளையே பார்த்திருந்த இரு கண்களுக்கு அவளின் அந்த திடீர் மாற்றம் விசித்திரமாக இருந்தது..


இயலரிசி வந்து சென்ற பிறகு அன்னை தந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழிலரசிக்கு அதிகரித்திருந்தது. அவர்கள் ஞாபகமாகவே இருந்தவள் இரண்டு நாட்களாக நெடுமாறனிடம் சரியாக பேசாமல் போக காரணம் கேட்ட போது அப்பா அம்மா ஞாபகம் வந்து விட்டதாகச் சொன்னாள். அவன் முகத்தில் இருந்த கடுமையில் அவளுக்கு மனது திக்கென்று இருந்தது. இப்போது என்ன சொல்லி விட்டேன் என எரித்து விடுவதைப் போல இப்படி பார்க்கிறான்..


"என்.. என்னங்க.. ஏன்.. அப்படி பார்க்குறீங்க..?" என கேட்டவள் அவனை குழப்பமாகப் பார்த்தாள்..


"எப்ப பார்த்தாலும் உனக்கு அவங்க நியாபகம் தானா ஆரம்பத்துல தான் அப்படி இருந்த. அப்ப கூட என் அன்ப முழுசா புரிஞ்சுக்கலன்னு ஒத்துக்கலாம் ஆனா இப்பவும் அவங்கள பத்தியே யோசிச்சா எப்படி..?" என கோபமாக கேட்டான்..


இப்போது கொஞ்சம் தைரியம் பெற்றவளாய், "எனக்கு எப்பவுமே அவங்க தான் பர்ஸ்ட் அதுக்கப்புறம் தான் நீங்க. அவங்க என் மேல கோபமா இருக்காங்க தான் அதுக்காக அவங்கள அப்படியே நான் மறந்துட முடியுமா..?" எனக் கேட்டாள்..


"அவங்க தான் முக்கியமா அப்புறம் நான் உனக்கு யாரு..?"


"நீங்க என்னோட கணவன் அதைலு யாராலும் மாத்த முடியாது அதே போலத்தானே என்னோட அப்பா அம்மாவையும். நீங்க எனக்கு எப்படியோ அப்படித்தான் அவங்களும் எனக்கு ஒருவேளை யார் முக்கியம்னு நீங்க கேட்டா நான் கண்டிப்பா அவங்கள தான் சொல்லுவேன்", என அவன் கேள்வியில் வந்த கோபத்தில் அப்படி சொன்னாள். மற்றபடி அவனை அவர்களுக்கு கீழாக நினைக்கவில்லை..


ஆனால் அவள் பதிலில் அவனிடம் அப்படி ஒரு முக மாற்றத்தையோ முகத்தில் அப்படி ஒரு கோபத்தையோ அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரம், வன்மம், வெறி எல்லாம் அவளை உள்ளுக்குள் நடுங்க செய்திருந்தது. அந்த நேரத்தில் அவளின் ஆசை நாய்க்குட்டி வந்து அவள் காலை ஆசையோடு வருட தனக்கு இருந்த ஒரே தைரியமான பிடிப்பாக அதை தூக்கி தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். இப்போது அவனின் மொத்த சினமும் அந்த நாய்க்குட்டியின் மேல் திரும்பியிருக்க முகம் ஜொலிக்க அதையே உக்கிரத்தோடு பார்த்திருந்தான்..


அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்தவன், "என்னை தவிர உனக்கு வேறு யாரையும் பிடிக்க கூடாது உனக்கு எப்பவும் நான் மட்டும் தான் முக்கியமா இருக்கணும். என்கிட்ட இருந்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது. அது இந்த நாய்க்குட்டியாலையும் தான்", என சொன்னவன் வேகமாக அதை பிடிங்கி அதன் உயிர் போகும் வரை குத்த தொடங்கினான்..


அவன் வன்மம் தெறித்த சீற்றமான முகத்திலும் பேச்சிலும் திகைப்போடு நின்றிருந்தவள் சட்டென்று அவள் கையிலிருந்த நாய்க்குட்டியை பிடுங்குவான் என்றோ அதை எப்படி கதற கதற குத்திக் கொள்வான் என்றோ எதிர்பார்க்கவேயில்லை. உறைந்து போய் நின்றிருந்தவள் அதன் ரத்தம் அவள் முகத்தில் பட்டு தெறிக்கவும் தான் நிகழ்வுக்கு வந்தாள். அந்த நாய் குட்டியை தன் பிள்ளையைப் போலவே பாதுகாத்து வளர்த்து வந்தவள் அது தன் கண்முன்னாலேயே துடிதுடித்து இறக்கவும் வீல் என்ற அலறலோடு பயத்தில் அப்படியே மயங்கி விழுந்தாள்..


அவள் கண் விழித்துப் பார்த்தபோது மருத்துவர் அவளை பரிசோதித்து முடித்திருந்தார். அவர் தன் கூட நின்ற நர்சிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அவள் கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. எவ்வளவு நேரமாக இப்படி படுத்திருக்கிறாள் என தெரியவில்லை ஆனால் நன்றாக வெளிச்சம் பரவியிருக்க அது பகல் நேரம் என்பது மட்டும் தெரிந்தது. தானாகவே நேற்று நாய்க்குட்டியோடு அவள் நின்ற இடமும் அதன் பிறகு அது துடிதுடித்து இறந்ததும் நினைவில் வர அந்த இடத்தை பார்க்க அது சுத்தமாகத் துடைக்க பட்டிருந்தது. யாருக்கும் இது பெரிதாகத் தெரியாமல் இருக்கிறது என்றால் எத்தனை முறை இது போல நிகழ்ந்திருக்குமோ..


ஏதேதோ தன் மனம் போன போக்கில் எண்ணிக் கொண்டிருந்தவள் முதல் முறையாக நெடுமாறனிடம் தெரிந்த மாற்றத்தில் உள்ளுக்குள் நொறுங்கிப் போய் இருந்தாள். இவனைப் பற்றி தனக்குத் சரியாக தெரியாத ஏதோ ஒன்று இருக்கிறது என உள்ளுக்குள் உறுத்த தொடங்கிவிட்டது..


அவள் எழுந்து அமர நர்ஸ் பதற்றத்தோடு அவள் அருகில் வந்தாள். "ஏன் மேடம் எழுந்துரிக்குறீங்க கொஞ்சம் நிதானமாய் இருங்க", என சொன்னாள்..


"படுத்தே இருக்கிறது ஒரு மாதிரி இருந்துச்சு அதனால தான் எழுந்திருச்சேன். ஏன் சிஸ்டர் என்ன ஆச்சு..?"


"முன்ன நீங்க மட்டும் தான் மேடம் அதனால எப்படி வேணும்னாலும் இருக்கலாம். இப்போ உங்களுக்குள்ள இன்னொரு ஆளும் வந்தாச்சே", என கேலியாக சொல்லி சிரித்தாள்..


"என்ன சொல்றீங்க சிஸ்டர்..?" என அவள் புரியாமல் குழப்பமாகப் பார்த்தாள்..


"நீங்கள் பிரக்னன்டாக இருக்கீங்க மேடம் வாழ்த்துக்கள்", என அவள் புன்னகையோடு சொன்னாள்..


அந்த நர்ஸ் சொன்னதற்கு சந்தோஷப்பட முடியாமல் ஏதோ ஒரு பாரம் வந்து நெஞ்சை அடைத்துக் கொண்டது. அவளுக்கு நேராக காட்டிக்கொள்ள முடியாமல் புன்னகையோடு நன்றி சொன்னவள் பிறகு கண்ணை மூடி படுத்துக் கொண்டாள். குழந்தைகள் என்றால் எழிலரசிக்கு பிரியம் அதிகம் அதனால் எவ்வளவோ ஆசையாக அதற்காக எதிர்பார்த்திருந்தாள் ஆனால் அது தெரியவந்த இந்த நொடி அவளுக்கு எப்படி உணர்வது என்றே தெரியவில்லை. என்னவோ அதற்காக சந்தோஷப்பட முடியாமல் உள்ளுக்குள் ஏதோ ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது..


அது என்னவென்று அவளுக்குப் புரியாமலும் இல்லை ஒரு நாய் குட்டியை அன்போடு பார்த்துக்கொண்டதற்கே அதற்கு இந்த கதி என்றால் குழந்தை என்று வந்த பிறகு அதனோடு தான் அதிக நேரம் செலவிட நேரிடும் அப்போது என்ன செய்வான். சேச்சே அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள் அவன் மேல் அவளுக்கு ஏற்கனவே இருந்த சந்தேகத்தை போல தன் மேலிருந்த அளவுக்கதிகமான காதல்தான் அந்த நாய்க்குட்டியிடம் இவ்வளவு கோபத்தை காட்ட காரணம் என புரிந்து கொண்டாள். ஆனால் இது நல்லதுக்கு இல்லையே இது மாதிரியான அதிக கோபமும் அதிக அன்பும் ஆபத்தில் தானே முடியும். அவனிடம் பேசி புரிய வைக்க முன்னைப்போல அவனை நேருக்கு நேர் பார்க்க முடியும் என்று கூட தோன்றவில்லை. அவன் மேல் அவ்வளவு பயம் உள்ளுக்குள் உருவாகியிருந்தது..


**********


"என்ன சார் ரெண்டு நாளா இப்படி அலைஞ்சுக் கிட்டு இருக்கேன் ஆனா இப்படியே பதில் சொன்னீங்கன்னா என்ன அர்த்தம்..?" என கோபமாக மணிகண்டன் அங்கிருந்த போலீஸை பார்த்து கத்திக் கொண்டிருந்தார்..


"சார் என்ன பண்ண சொல்றீங்க நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்து ரெண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள கண்டுபிடிக்க சொன்னா என்ன அர்த்தம்..? நாங்களும் எங்களால ஆன எல்லா முயற்சியும் செய்துகிட்டுதான் இருக்கோம் ஆனா ஒரு தகவலும் இல்ல நாங்க என்னதான் செய்றது..?" என அந்த போலீஸும் அவருக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைத்துக் கொண்டிருந்தார்..


அது எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாத மணிகண்டன், "என்ன சார் இவ்வளவு அலட்சியமா சொல்றீங்க. காணாமல் போனது என் பொண்ணு சார் எப்படி அப்படியே என்னால பொறுமையா இருக்க முடியும்..?" என கண்கள் கலங்க கேட்க அவரது நிலை புரிந்து அந்த போலீஸ்காரருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..


அந்த நேரம் அங்கு ரவுண்ட்ஸ் வந்த முகிலன் காதிலும் அது விழ ஏதோ ஒரு நெருடல் காரணமாக, "என்ன இன்ஸ்பெக்டர் என்ன ஆச்சு இவர் ஏன் கத்திக்கிட்டு இருக்கார்..?" என கேட்டபடி உள்ளே வந்தான்..


அவனைப் பார்த்ததும் பெரிய அதிகாரி என புரிந்து கொண்ட மணிகண்டன் வேகமாக அவனிடம் விரைந்து, "சார் என் பொண்ண ரெண்டு நாளா காணோம் சார். நானும் எங்க பாத்தாலும் தேடி பார்த்துட்டேன் எங்கேயும் காணோம். விடாம வந்து இவர்கிட்டயும் எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன் இன்னும் எதுவும் தெரியலன்னு தான் சொல்றாரு நீங்களாவது எப்படியாவது கண்டுபிடிச்சி குடுங்க சார்", என கெஞ்சினார்..


அவரது கெஞ்சலில் மனமிரங்கியவனாக, "என்ன இன்ஸ்பெக்டர் என்ன விஷயம் அந்த பொண்ணு சம்பந்தப்பட்ட பைலை கொண்டு வாங்க", எனக் கேட்க அவரும் பவ்யமாய் எடுத்துக் கொண்டு வந்து நீட்டினார்..


"சார் மிஸ்ஸிங் கேஸ் சார் நாங்களும் எல்லா இடத்திலயும் தேடிட்டோம் சார் எங்கேயும் கிடைக்கல", என சொன்னார்..


"பொண்ணுக்கு ஏதாவது லவ்வு கிவ்வு இருக்கான்னு விசாரிச்சீங்களா..?" என இன்ஸ்பெக்டரிடம் கேட்க மணிகண்டன் பதறியவராக, "சார் என் பொண்ணு அப்படிபட்ட பொண்ணு இல்ல சார். அப்படியே இருந்தாலும் தைரியமா என்கிட்ட சொல்ற அளவுக்கு தான் நான் என் பொண்ணுங்கள வளர்த்துருக்கேன்", என கண்களில் ஒரு உறுதியுடன் சொன்னார்..


அவர் கண்களில் இருந்த உறுதி கண்டு யோசித்த முகிலன் அந்த பைலை எடுத்து அதிலிருந்த இயலரசியின் போட்டோவைப் பார்க்க ஒரு நிமிடம் திகைத்தான். அப்படியானால் இவர் எழிலரசியின் தந்தையா அதுதான் அந்த நெருடலின் காரணமா..


"கடைசியா உங்க பொண்ணு எங்க போறதா சொல்லிட்டு போனாங்க சார்..?"


"மேற்படிப்புக்காக காலேஜ் சேரப்போறதா இருக்கா சார். அதனால லைப்ரரியில் ஒரு சில புத்தகங்களை எடுத்துட்டு வர்றதா சொல்லிட்டு போனா சார். நான் எல்லா இடத்திலும் போய் பாத்துட்டேன் சார் ஆனா அவ அங்க இல்ல.."


"அவ பிரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சு பார்த்தீங்களா..? அவ போன் கான்டாக்ட்ஸ் எல்லாம் எனக்கு கொடுங்க நான் விசாரிக்கிறேன்", என கேட்டான்..


மேலும் சில விவரங்களை அவரிடம் விசாரித்தவன் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை அனுப்பி வைத்தான். அதன் பிறகு அவள் தோழிகளை விசாரித்த போது கடைசியாக அக்காவைப் பார்க்கப் போவதாக சொன்னது வேந்தனுக்கு தெரியவந்தது. மணிகண்டனிடம் அதை சொல்ல தவறியவர்கள் கூட முகிலன் விசாரித்ததும் உண்மையைச் சொல்லிவிட்டார்கள்..


எழிலரசியை பார்க்க சென்றிருக்கலாமே என்ற எண்ணம் முகிலனுக்கும் தோன்றியது. இருந்தாலும் அவளை நேரடியாக சந்திக்க திராணி இல்லாமல் மணிகண்டனை அழைத்து விஷயத்தை சொல்லி எழிலரசி வீட்டுக்கு போக சொன்னான். நாங்கள் சென்று விசாரித்தால் உங்கள் பெரிய மகள் தேவை இல்லாமல் பயப்படக் கூடும். அதனால் முதலில் நீங்கள் சென்று சாதாரணமாக விசாரித்து வாருங்கள் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தோன்றினால் பிறகு நாங்கள் சென்று விசாரிக்கிறோம் என சொன்னான். அவரும் சரி என தலையாட்டி விட்டு விடைபெற்று கிளம்பினார்..


வேந்தன் ட்ரெயினிங் முடித்து வருவதற்குள் இவ்வளவு சீக்கிரம் எழிலரசி திருமணம் நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. வெளியே சொல்லாவிட்டாலும் எழிலரசியை அவன் உயிராக நேசித்தான் அதனால் அவனுக்கு இது பெரிய அடியாக அமைந்தது. அதைவிட அவள் நேசித்து மணந்து இருக்கிறாள் என்ற தகவல் தான் அவனை முற்றிலும் நிலை குலைத்திருந்தது. யாரிடமும் இதைப்பற்றி மனம் விட்டு பேச வில்லை அதனால் முழு நேரமும் வேலையிலேயே தன் கவனத்தை திருப்பி கொண்டான். இப்போதும் கூட அவளை ஒரு நொடி கூட தன் மனதை விட்டு விலக்க முடியவில்லை. அதனால் தான் தனக்கு பதிலாக மணிகண்டனை அனுப்பி வைத்திருக்கிறான். தேவை என்றால் நிச்சயம் தான் போக வேண்டும் அதற்காக தன்னை தயார்ப் படுத்திக் கொள்ளத் துவங்கினான்..


************


ரயில்வே நிலையம் அருகே யாரோ அடிக்கடி கிடப்பதாக தகவல் வர அவனை மீட்டு மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். அவனைப் பார்க்கத்தான் முகிலன் அப்போது விரைந்து கொண்டிருந்தான். அங்கே சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வேந்தனை பார்த்தபோது அவன் அதிர்ந்து போனான். என்ன ஆயிற்று எதனால் இவனுக்கு இந்த நிலை அவனே கண்விழித்து சொன்னால் ஒழிய எதையும் தெரிந்து கொள்ள முடியாது. இருந்தாலும் அவன் வீட்டினருக்கு தகவல் கொடுத்தவன் அவன் நண்பர்களையும் விசாரிக்க தொடங்கியிருந்தான்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
நாய் குட்டி ய கொன்னுட்டாரு....🥺😡
ஏன் மாறன் இப்படி....☹
அவர் பண்றத லாம் பார்த்தா மனரீதியா பாதிக்கப்பட்டுருக்காரோ னு தோனுது....🤧
பாவம் எழில்....
இயல் அ காணம் ஆ....
வேந்தன் அ அடிச்சு போட்ருக்காங்கலா....?
இது மாறன் ராஜூ க்காக பண்ணிருப்பாரோ....
🙄
முகிலன் கண்டுபிடிப்பாரா....?
அவரும் பாவம் ல....😔
நைஸ் எபிசோட் டியர்....❤
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
நாய் குட்டி ய கொன்னுட்டாரு....🥺😡
ஏன் மாறன் இப்படி....☹
அவர் பண்றத லாம் பார்த்தா மனரீதியா பாதிக்கப்பட்டுருக்காரோ னு தோனுது....🤧
பாவம் எழில்....
இயல் அ காணம் ஆ....
வேந்தன் அ அடிச்சு போட்ருக்காங்கலா....?
இது மாறன் ராஜூ க்காக பண்ணிருப்பாரோ....
🙄
முகிலன் கண்டுபிடிப்பாரா....?
அவரும் பாவம் ல....😔
நைஸ் எபிசோட் டியர்....❤
உங்க கெஸ்ஸிங் parpom dr.. நன்றி sis..
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் நினைச்சேன் இந்த மாதிரி பண்ணுவேன்னு😳😳😳😳

அந்த நாய் உன்ன என்ன டா பண்ணுச்சீ பாவி பயலே😤😤😤😤

என்ன விசயமா வந்து இருப்பா, இயல், அவளுக்கு ஏதோ தெரிஞ்சி இருக்கு அவன் பாஸ்ட் லைஃப் பத்தி, அது தான் அவ கிட்ட சொல்ல வந்து இருக்கா ஆன அதுக்குள்ள அவளையே காணோம்🤧🤧🤧🤧

டேய் மாறா, உனக்கு ஏதோ பெரிய மன நோய் இருக்கு டா, அதுக்கு முதல்ல ஒரு டாக்டர் ஆ பாருடா...

அம்மா எழில், அவனா இப்படியே விட்ட அவளோ தான், நீ தான் அவனை பார்க்கணும்.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top