வரமென வந்தவளே‌ 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

Author
Author
Joined
Jan 20, 2020
Messages
220
Reaction score
293
Points
63
Location
Coimbatore

வரமென வந்தவளே...

அத்தியாயம் 02

அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்தவள் ,நேராக சென்றது என்னவோ அங்கு அனுமதித்து இருந்த சிறுமியை பார்ப்பதற்கே...

வேக வேகமாக ஓடி வந்ததால் அங்கே தண்ணீர் சிந்தி இருப்பது தெரியாமல் போய் விட ,வேகமாக வந்தவள் அதில் கால் வைத்து கீழே விழுந்து விட்டாள்.

விழுந்ததினால் அவளால் எழும்ப முடியாமல் இடுப்பு பிடித்துக் கொள்ள ,அந்த நேரம் பார்த்து ஏதோ ஒரு பிஞ்சு கை அவளை பார்த்து நீட்டியது.

நீட்டிய கையை பார்த்தவாறே அப்பிஞ்சுவின் முகத்தினை பார்த்தாள் அவள்.

அவளின் முகமோ சாந்தமாக இருந்தது. அதில் இதழ் விரியாமல் ஒரு அழகான மென்னகை ஒட்டி இருந்தது. ஆனால் தலையிலோ பெரிதாக கட்டு ஒன்று கட்டிருந்தது. அதனை பார்க்கும்போது பாவமாக இருந்தது அவளுக்கு..

"கை கொடுங்க... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் "என அக்குட்டி சொல்ல

அவளையே இமைக்க மறந்து பார்த்தளுக்கு கண்ணீர் துளி ஒன்று வெளி வந்தது.

அப்பெண்ணின் அழுகையை கண்டு பதறினாள் சிறியவள்.

"அச்சோ !ரொம்ப வலிக்குதா " என விழி விரித்து கேட்க ,அவளையே ஆசையாக பார்த்தாள் அவள்.

"என் கைய பிடிச்சு எந்திரிங்க.." என்று என தலையை அழகாய் ஆட்டிட, அவளும் எதுவும் பேசாது புன்னகையுடனே சிறியவள் கைபிடித்து எழுந்தாள் பெரியவள்.

"வாங்க !வந்து இப்படி உட்காருங்க " என இருக்கையில் அமர வைத்த குட்டி பக்கத்தில் இருந்த ப்யூரிஃபையரில் தண்ணீர் பிடித்து குடிக்க கொண்டு வந்தாள்.

"இதை குடிங்க.. அவசரமா எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது .இப்படி வேகமா நீங்க வந்ததுனால தான் அங்க தண்ணி இருந்ததை கவனிக்க மறந்து பொய்ட்டிங்க பாருங்க.இனி இப்படி வேகமா வராதீங்க.." என புன்னகையோடே சிறியவள் பெரியவளுக்கு அறிவுரை வழங்கினாள்.

சிறியவளையே பிரமிப்பாய் பார்த்தாள் பெரியவள். அவளுக்கு குட்டி ஏனோ கடவுளாகவே அந்த நொடி தோற்றமளித்தாள்.

தண்ணீரை குடித்தவள் ,"ரொம்ப தேங்க்ஸ் டா குட்டி.." என கூறி ஆசையாக அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தாள். ஏனோ அந்த நேரத்தில் முத்தம் வைக்க சொல்லி அவள் ஆல் மனம் தூண்டியது.

பின் ,அவளுக்கு அழைப்பு வர ,அதை பார்த்தவளுக்கு புரிந்து போனது அது யாருடையது என்று..

உடனே மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து உள்ளே வைத்தவள் ,எழுந்து நின்றாள்.

"சரி டா குட்டி ..உன்ன பார்த்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். இப்போ நான் போயே ஆகனும் " என சிறியவளிடமிருந்து விடைப்பெற்றாள் அவள்.

போகும் அவளையே பார்த்த குட்டி ,அப்படியே கொஞ்ச நேரம் நடக்க தொடங்கினாள்.

நேராக தன்னுடைய இருக்கைக்கு சென்றவள் , தன்னை சுத்தம் படுத்தி விட்டு நர்ஸை அழைத்தாள்.

அந்த நர்ஸ் உள்ளே வந்ததும் ," இப்போ அந்த பாப்பாக்கு எப்படி இருக்கு..??" என குழந்தை நல மருத்துவராய் கேட்க

"தலையில கொஞ்சம் அடி பட்டு இருக்கு மேடம். டாக்டர் ப்ரகாஷ் தான் அந்த பாப்பாவை ட்ரீட் பண்ணினாரு. உங்களுக்காக தான் வெயிட்டிங் மேம் " என்று கூறி அவளின் ஃபைலை கொடுத்தாள் .

"சரி வாங்க அங்க போய் பாத்துட்டு வந்து இங்க அட்டன் பண்ணிக்கிறேன் " என்றவள் தனது ஸ்டெதாஸ்கோபை எடுத்து கொண்டு முன்னே நடந்தாள்.

அந்த குழந்தையின் ரூமிற்கு சென்று பார்த்தால் ,அவள் அன்னை மட்டும் அமர்ந்திருக்க "பேஷண்ட் எங்கே..??" என கோபமாய் செவிலியரை பார்த்தாள் அவள்.

"இங்க தான் மேடம் இருந்தா அந்த பொண்ணு " என்று கூறி அவளது தாயை பார்த்து "உங்க பொண்ணு எங்க மா " என்க

"அவளால உட்கார முடியலைன்னு இங்க தான் டாக்டர் வராண்டாவில் நடக்குறேன்னு சொன்னா "என்ற பார்கவி வெளியே வந்து பார்க்க அங்கு யாருமே இல்லை.

"இப்படி தான் கேர்லெஸா இருப்பீங்களா நீங்க..??குழந்தைக்கு மண்டையில அடிப்பட்டு இருக்கு. இப்படி சாதரணமா விட்டுட்டு கதை சொல்றீங்க " என பார்கவியை திட்டியவள் "போய் குழந்தையை கூட்டி வாங்க " என்று சொன்ன நொடி

"நானே வந்துட்டேன் டாக்டர் அம்மாவ ஒன்னும் சொல்லாதீங்க..." என அழகிய குரல் அவள் பின்னாலிருந்து வந்தது.

உடனே திரும்பியவள் அச்சிறுமியை பார்த்து ,"ஹோ ! நீங்க தான் அந்த பேபியா..." என்று அவள் கண்ணம் கிள்ளினாள்.

"சரி வாங்க நாம அங்க போய் பேசுவோம்..." என அன்பாக கூறி அவளை கட்டிலில் அமர வைத்தாள்.

"இப்போ உங்களுக்கு தலை வலிக்குதா டா.." என மருத்துவரையும் தாண்டின ஒரு அக்கறையாய் அவள் கேட்க

ஏனோ அந்த சிறு பெண்ணுக்கு கண்கள் எல்லாம் கரிக்க தொடங்கியதுமே புன்னகையால் மறைத்து கொண்டாள்.

அவளுக்கு தான் தன்னின் நிலைமை அறிந்தவளாகிற்றே. வலியை கூட சொல்ல யாருமில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் அவதிப்படுகிறாளே.

பாசத்தை விட அவளது பெற்றோர்கள் அவளுக்கு கொடுத்தது தனிமை அல்லவா. சிறு வயதிலே ஏனோ தனிமையை அனுபவித்தவளுக்கு இந்த அன்புக்கு கூட அப்பெண்ணுக்கு பெரிதாக தெரிந்தது.

அவளின் கண்ணீர் துளியை கண்ட பெரியவள் பதறி போனாள்.

"என்னாச்சி டா குட்டி..???" என்க

"தூசி பட்டுச்சி ம்...ம..ஆ... ண்...டி " என்றவளின் பார்வை அவள் அன்னையின் மீது ஏக்கமாக பதிந்தது.

அவளோ அவள் கணவனான கமலனுக்கு அழைத்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"சரி டா ..இப்போ பெயின் எப்படி இருக்கு .தலையில எங்கயாவது வலிக்காதா " என ஒவ்வொரு இடமாய் தொட்டு பார்த்து கேட்டாள்.

"இல்ல .இப்போ எனக்கு வலிக்கல "என்று சிறியவள் புன்னகைக்க முயன்றாள்.

ஏனோ அந்த புன்னகை உயிர்ப்பாக இருப்பதாக தோன்றவில்லை.

"சரி டா குட்டி..."என்றவள் சில விடயத்தை அவளுக்கு உரித்தான ஃபைலில் நோட் செய்தாள்.

"இவ்வளோ நேரம் பேசினதுல உங்க நேம் கேட்க மறந்துட்டேன் பாரேன். இந்த குட்டி ப்ரின்சஸ் நேம் என்னனென்ன தெரிஞ்சிக்கலாமா "என அவளுக்கு நிகராய் குனிந்து அவள் ஆசையாய் கேட்க

புன்னகையோட தன் பெயரினை கூறினாள் சிறியவள்..

"நிரல்யா..." என்று

"வாவ் ப்ரின்ஸஸ் நேம் அழகா இருக்கே..சரி நீங்க எங்கேயும் போக கூடாது இங்கேயே இருந்து ரெஸ்ட் எடுக்கனும் ஓகேவா" என தம்ஸ்அப் காட்ட

"ஓகே..." என்றாள் விரிந்த புன்னகையாக..

அவளும் தன் வேலை முடிந்தது என்று திரும்பி நடந்தவளை "உங்க நேம் சொல்லலையே...???" என அழகாய் தலைசாய்த்து கேட்டி...

திரும்பி புன்னகைத்தவள் ,"நித்ய வாசவி " என்று நடந்தாள்.

********

"டாட் நான் சிங்கப்பூர் ரீச் ஆகிட்டேன் " என ஏவி போனில் சொல்ல

"என்ன டா அதிசியமா இருக்கு.. எனக்கு எல்லாம் கால் பண்ணி சொல்லுற.. எப்போதும் என்னோட மருமகளுக்கு தானே போன் பண்ணுவ..???"என கேட்க

"அவளுக்கு தான் டேட் ஃப்ர்ஸ்ட் பண்ணேன். பட் ஷி டிடினிட் பிக் மை கால் டேடி .சோ தான் உங்களுக்கு கூப்பிட்டு இன்ஃபாரம் பண்றேன். அவகிட்ட கொஞ்சம் இன்ஃபார்ம் பண்ணிடுங்க" என்றான் சிறு வருத்தமாய்..

"எனது என்னோட மருமக போனை எடுக்கலையா..??ஆச்சிரியமா இருக்கே டா " என ஆச்சிரித்தோடே கலாய்க்க

"டாட் அவளுக்கு ஏதாவது ஒர்க் வந்திருக்கும் அதான் பிக் பண்ணி இருக்க மாட்டா " என அவரை சமாளித்தான் மகன் ஏவி என்கிற ஆதித்ய வரதன்.

"ஹோ.." என்று இழுத்தார் தந்தை கார்த்திகேயன்.

"சரிங்க பா... இஸ் தட் எவ்ரிதிங்க் ஆல்ரைட் டாடி..??? " என மனைவியாளின் செயலில் வித்தியாசம் கண்டவனாய் தந்தையிடம் கேட்க

"ஆமா டா.. இங்க எல்லாம் ஓகே தான் மை சன். என்ன உங்க அம்மா தான் ரொம்பவே சந்தோஷமா இருக்கா. சரி அதெல்லாம் விட்டுட்டு அங்க நடக்கிற கான்ஃபெரன்ஸை நல்ல படியா முடிச்சிட்டு வா.." என்று அவனுக்கு செய்ய வேண்டியதை சொல்லி வைத்தார்.

அன்னையின் மகிழ்ச்சியும் மனையாளின் நடவடிக்கையும் அவனுக்கு ஏதோ தவறாகவே பட்டது. மனைவியை பற்றி முழுதாக அறிந்தவனுக்கு ஏன் இந்த கான்ஃபெரன்ஸிற்கு வந்தோம் என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.

************
தனது அறைக்கு வந்த நித்ய வாசவி , பேஷன்ட்ஸ் ஒவ்வொருவரையும் அட்டன்ட் செய்து முடிக்கவே மாலையானது.

அத்தனை நேரமும் இருந்த வேலை பளுவில் வீட்டை பற்றின நினைப்பை மறந்தளுக்கு ,ஏனோ கணவனின் ஞாபகமும் அத்தையின் ஞாபகமும் ஒரு‌ சேர நினைவில் வர வாழ்வே சூனியமாக தெரிந்தது.

வாழ்க்கையை இந்த சிறுவயதிலே வெறுக்க தொடங்கி இருந்தாள் அவள். காதல் திருமணம் செய்தவளுக்கு புகுந்த வீட்டில் சிறப்புற நடத்தவில்லை அவளை. ஏனோ அவர்களுக்கு இவளை பார்த்தாலே வேற்றுலக மனிஷி போலே தோன்றினாலோ என்னவோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் விதமாக பாசமாக காதலாக அன்பாக இருந்தது என்னவோ அவளது கணவன் ஆதித்ய வரதன் தான். அவன் அவளுக்கு வெறும் காதலனோ கணவனோ மட்டுமல்ல அவளுக்கு ஒரு நல்ல தாயுமானவன் கூட...

இந்த மூன்று வருட திருமண வாழ்வில் இருவருக்கும் ஒரு சுணக்கம் கூட வந்ததில்லை. ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து காதலோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்வே பூதங்கரமாக தெரியவும் மதியமும் சாப்பிடாததால் மயக்கம் வருவது போல் தோன்ற அப்படியே டேபிளில் தலை வைத்து படுத்துவிட்டாள்.

அவள் படுத்த சிறிது நொடியில் ,செவிலியர் அவளுக்கு லேன்லைன் மூலம் தொடர்பு கொண்டாள்.

எழுந்தவள் அந்த லைனை அட்டன் செய்து காதில் வைத்தாள்.

"மேடம் ஷீவ் டாக்டர் உங்க கிட்ட பேசணும்னு சொல்லி கால் கனெக்ட் பண்ண சொன்னாங்க "என்க

"சரி கனெக்ட் பண்ணுங்க " என்றாள் வருத்தத்தை உள்ளடக்கிய படி...

அடுத்த நொடியே அந்த செவிலியர் காலை கனெக்ட் செய்து விட ,"சொல்லுங்க மாமா.. எதாவது இம்பார்டண்டா..???" என்றாள்

"ஆமா மா.. உன்னோட பொற்செல்லவனை பத்தி தான் " என்க

"புரியல மாமா.." என்று புரியாமல் விழித்தாள் வாசவி.

"அதான் மா உன்னோட புருஷன். அவன் சிங்கப்பூர் ரீச் ஆகிட்டானாமா.. உனக்கு போன் பண்ணப்ப நீ எடுக்கலையாமே . அதான் எனக்கு சொல்லி சொல்ல சொன்னான் " என்றார் அவளின் நிலையறியாமல்...

"சரிங்க மாமா.. நான் இங்க கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் அதான் மாமா பேச முடியாம போச்சி.." என பொய் கூறி சமாளித்தாள்.

"சரி மா..நீ பாத்து வீட்டுக்கு பொய்டு.எனக்கு காலேஜ்ல கொஞ்சம் வேலை இருக்கு அதை பாத்துட்டு வரேன் " என்று வைத்து விட்டார்.

இப்போது அவளின் எண்ணவோட்டங்கள் யாவும் கணவனின் மீதே இருந்தது. அவனிடம் பேச வேண்டுமென காதல் கொண்ட மனம் அடித்துக் கொள்ள அது செய்ய முடியா நிலையில் அவளை கட்டி போட்டனர்.

அதனாலே அவனின் நினைவலைகளில் அவனை மீட்டெடுக்க தொடங்கினாள்.

************

"அப்பா.. என்ன எதுக்கு பா இவ்வளவு தூரத்துல கொண்டு வந்து காலேஜ் சேர்க்க பாக்குறீங்க..???" என தந்தையிடம் இதோடு ஆயிரமாவது முறையாக சண்டை பிடித்தாள்.

"நீ தான் நம்ம ஊருலயே நல்ல மார்க் வாங்கியிருக்க.. உன்ன ஒரு நல்ல படிப்பு படிக்க வைக்கனும்னு ஒரு வாத்தியாரா எனக்கு ஆசையிருக்காத என்ன .ஒழுங்கா சிரிச்ச முகமா வரனும் புரிஞ்சிதா "என தந்தை சந்திரசேகர் அவளுக்கு புரியும் படி சொல்ல

ஆனாலும் தந்தையிடம் மகள் முறுக்கி கொண்டு தான் அந்த கல்லூரிக்கு வந்தாள்.

சந்திரசேகர் -மாதவி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் .மூத்த மகள் சரண்யா அவளுக்கு மோகன் என்பவருடன் திருமணமாகி இப்போது மூன்று மாதத்தில் அழகான ஆண் குழந்தையும் உண்டு . அவனுக்கு தினேஷ் என்று பெயர் வைத்திருந்தனர். இளையவள் தான் நித்ய வாசவி . பயந்த சுபாவம் கொண்டவள் ,தந்தையை சார்ந்தே இத்தனை கால வாழ்க்கையை கடந்து வந்தவளுக்கு பனிரெண்டாம் வகுப்பில் ஸ்டேட் ஃபோர்த் வந்ததால் மெரிட்டேலே ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு வந்தது.

அதன் பொருட்டே தந்தையும் மகளும் இன்று அவர்கள் ஊரை விட்டு சென்னை செல்கின்றனர்.

தந்தையை பிரிந்திருக்க நேரிடும் என வாய்ப்பு வந்த நாளில் இருந்தே தந்தையிடம் மகள் ஒரே சண்டை . ஆனால் அவர் மகளின் எந்த ஒரு சண்டைக்கும் அவரது முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. தந்தை கூடவே தாய் மற்றும் சகோதரியின் போராட்டத்தில் அவளை கிளப்பி இருந்தனர்.

அடுத்த நாள் காலை சென்னையில் வந்து இறங்கியதுமே சந்திரசேகருக்கு தெரிந்த வீட்டிற்கு சென்று கிளம்பி கல்லூரிக்கு சென்றனர்.

கல்லூரியின் தொடக்கத்திலே பெரிய பலகையாக "RV MEDICAL COLLEGE AND HOSPITAL" என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பக்கத்தில் சிறிய விநாயகர் கோவில் ஒன்று இருந்தது .

நேராக கோவிலுக்கு சென்ற வாசவி ,"அப்பனே விநாயக எப்படியாவது இங்க சீட் கிடைக்காம பாத்துக்கோ பா. எனக்கு அப்பா கூட இருக்கனும்.இங்க வந்து தனியாலாம் என்னால இருக்க முடியாது கடவுளே. நீங்க தான் ஏதாவது செய்து இக்காரியத்தை நிறுத்தனும் " என வேண்டி மூன்று முறை தோப்புகாரனம் போட்டவள் தந்தையோடு நடையிட்டாள்.

உள்ளே செல்ல செல்ல நித்ய வாசவி அந்த இடத்தின் அழகினை கண்டு பிரமித்து தான் போனாள்.

சுற்றி இருபுறம் அழகிய வண்ண பூ செடிகள் இருக்க அதற்கு நடுவில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. காணாததை கண்டது போல் அதனை பார்த்து வந்தாள் வாசவி.

"அம்மு சீக்கிரமா வா.. நேரமாச்சி பாரு " என அவளை இழுத்துச் சென்றார் தந்தை.

அவளும் தந்தையுடன் இருபுறமும் பார்த்தபடியே நடந்து சென்றாள்.

அரை கிலோமீட்டர் தூரம் நடந்திருந்தவளுக்கு கால் வலிக்க தொடங்க ,"அய்யோ அப்பா இது என்னது பொய்க்கிட்டே இருக்கே. என்னால முடியல பா நான் வரல " என்று சிறு பிள்ளைப்போல் அடம்பிடித்தாள்.

"இதோ அங்க தெரியுது பார் பில்டிங். நாம வந்துட்டோம் டா பாப்பா. இப்போ நீ வந்தின்னா உனக்கு பிடிச்ச படத்துக்கு கூட்டிட்டு போவேன் சரியா "என அவளை சரிக்கட்ட ,அவளும் எழுந்து நடக்க தொடங்கினாள்.

இருவரும் உள்ளே சென்று ப்ரின்ஸ்பாலை பார்க்க காத்திருந்தனர்.

சேர்மேன் கார்த்திகேயன் மருத்துவமனைக்கு சென்றிருந்ததால் ,ப்ரின்ஸ்பாலை பார்க்க காத்திருந்தனர்.

பிரின்ஸிப்பால் வந்தவுடன் , இருவரும் உள்ளே செல்ல ,அவரோ நித்ய வாசவியை பாராட்டி பேசி , இறுதியில் அவளுக்கான மெரீட் சீட்டை வழங்கினர்.

அவள் வேண்டின வேண்டுதல் எல்லாம் பலிக்காமல் போய்விட விநாயகரின் மீது கோபத்தில் இருந்தாள்.

பின் இருவரும் வெளிவந்து காலை உணவினை முடித்து அங்கிருந்த மாலை காட்டி அழைத்து செல்ல சொல்லி வாசவி அடம்பிடிக்க தந்தையும் அவளை அங்கு அழைத்து சென்றார்.

அவள் ஆசைப்படி வாசவி கேட்டவை அனைத்தையும் வாங்கினார் சந்திரசேகர்.

வாசவியோ அந்த மாலின் அழகை பார்த்து இரசித்து வந்தவளுக்கு கீழே கொட்டியிருந்த சோப்பு தண்ணீர் அவள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட அதில் காலையை வைத்து வழுக்கி விழுந்தாள் .

"அய்யோ..! அம்மா.."என கத்தியவளின் குரல் அங்கிருந்த யாருக்கும் கேட்க வில்லை.

பின்னாலிருந்து ஒரே ஒரு குரல் அவளுக்கு கேட்டது.

"இப்படி தான் சோப்பு தண்ணி கொட்டி இருக்குறது கூட தெரியாத அளவு நடப்பாங்களா " என ஆண் குரல் கேட்கவும் வாசவிக்கு திடுக்கிட்டது.

பயந்து போன வாசவிக்கு எந்திரிக்க கூட முடியவில்லை. கால் சூளுக்கிக் கொண்டது வேற வலி எடுத்தது.

அவளின் அவஸ்த்தையை புரிந்து கொண்டவன் அவளுக்கு முன்னே வந்து கை நீட்டினான்.

அவளோ அதில் மேலும் பயந்து அந்த ஏசியில் நடுங்க தொடங்கி சுற்றிலும் பார்வையை தவிப்போடு பதித்தாள்.

அதனை கண்டவன்"ஹே சில் பேபி சில் டோன்ட் பேணிக் ஓகே . நான் உனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்திருக்கேன் சரியா நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை "என்றவன் "என் கைய பிடிச்சு எழுந்துக்கோ " என நீட்டிய கையை அவன் கண்களால் காட்டினான்.

அவளுக்கு பயமாக தான் இருந்தது ஒரு ஆடவனின் கையை பிடிக்க ,ஆனாலும் வேறு வழியின்றி அவனின் கையை பிடித்து எழ முயன்றாள்.

அப்போதும் முடியாமல் போக , அவனின் உதவியோடு எழுந்தாள் வாசவி. ஆனால் அவளுக்கு கால் வலி எடுக்க அவனின் தோளை பிடிமானத்திற்காக பிடித்தாள் வாசவி.

அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்தவன் ஒரு இருக்கையில் அமர வைக்க ,அமர்ந்தவளுக்கோ காலை ஊன முடியவில்லை.

"சரி உன்னோட காலை காட்டு " என அதட்டலாகவே சொல்ல

பயந்த சுபாவம் கொண்டவளோ மேலும் நடுங்கினாள்.

"நான் ஒன்னும் செய்ய போறது இல்லை. ஜஸ்ட் கால்ல சுளுக்கெடுக்க போறேன் அவ்வளோ தான் .அன்ட் நான் ஒரு மெடிசின் ஸ்டென்ட் ஓகேவா .சோ என்ன பாத்து பயப்பட வேணாம் . ஒரு டாக்டரா நான் பேஷன்ட்க்கு ஹெல்ப் பண்றேன் அவ்வளோ தான்" என்றவன் அவளின் காலை எடுத்து தன் மடியில் வைத்து சுளுக்கெடுத்து விட்டான்.

"இப்ப ஓகோ என்னோட வேலை முடிஞ்சது நான் போறேன்" என்றவன் எழுந்து நடக்க தொடங்கினான்.

"ஒரு நிமிஷம்..."என பல தயக்கங்களுக்கு பின் அவனை அழைக்க

அவனோ திரும்பி பார்த்து என்னவென்று புருவம் உயர்த்திட

"தேங்க்ஸ்"என்றாள் மெல்லிய இதழ் விரிப்போடு....

அதன்பின் மெதுவாக எழுந்து நடந்தவள் தந்தையுடன் இணைந்து கொண்டாள்.

வீழும்முன் அந்த கண்ணீர் துளி

கரையும் அந்த மாயம் என்ன

இதழைச் சேரும் முன்னே

காயம் ஆறும் இந்த புன்னகைகளே...
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,110
Reaction score
18,603
Points
113
Location
India
Nice da ma
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top