• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வருவேன் நான் உனது நிழலாக-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithranjani

மண்டலாதிபதி
Joined
Aug 22, 2019
Messages
140
Reaction score
300
Location
Kandiyur
ஹாய் பிரெண்ட்ஸ்

முதல் அத்தியாயத்தோட வந்திட்டேன்....ஒரே அளுகாச்சியா இருக்கேன்னு ஃபீல் பண்ணாதீங்க...அடுத்த எபிலேந்து லவ்வோ லவ்தான்.ஸோ இது ஒரு எபி பொறுத்துக்குங்க...சித்தார்த்துக்கு அப்புறம் சஹானா என்ன ஆனான்னு தெரிஞ்சுக்க நீங்க இந்த எபி படிச்சுத் தான் ஆகனும்....உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ்காக மீ ஈகர்லி வைட்டிங்...


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு

போனை ஆஃப் செய்து திரும்பிய ஆனந்தின் முகத்தை பார்த்தே விஷயத்தை அறிந்த அவன் மனைவி நீலா,

"என்னாச்சு?"என்றாள்.


"சீரியஸ்ஸா இருக்கான்னு ஆஸ்பிட்டல்லேந்து"

"உடனே கிளம்புங்க! எத்தனை நாள் ஆனாலும் இருந்து அவ குணமான உடனே இங்கேயே கூட்டிட்டு வந்துடுங்க"என்றாள்.

இதுதான் நீலாவிடம் அவனுக்கு பிடித்த விஷயம்.சொல்லாமலே அவன் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு விடுவாள்.

அவள் பிழைப்பதில் அவனுக்கு சிறிதளவே நம்பிக்கை இருந்தாலும் அதை அவளிடத்தில் சொல்லாமல் "சரி"என்றபடி வேகவேகமாக புறப்பட்டவன்,

"சுமனா, நிரஞ்சன்,குணா எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிடுறியா?"

"சொல்றேன்.. நீங்க கவலப்படாம போய்ட்டு வாங்க"என்றாள் நீலா.

அந்த நவீன மருத்துவமனையின் முன் காரை நிறுத்திய ஆனந்த் ரிஸெப்ஷனில் கேட்ட போது அவர்கள் ஐசியூவிற்கு வழி கூறினர்.அங்கே கண்ணாடி வழியாக பார்த்த போது ஆனந்தின் இதயத்தில் ரத்தம் வழிந்தது.

பலதரப்பட்ட வொயர்கள் அவளோடு பிணைக்கப்பட்டிருந்தது.செயற்கை வாயுவினால் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனந்தை அங்கே நிற்பதைப் பார்த்த டாக்டர் அவனை தமது அறைக்கு அழைத்துச் சென்றார்.

"சாரி டு ஸே திஸ் டாக்டர் ஆனந்த்! டாக்டர் சஹானா அவங்களோட கடைசி கட்டத்துல இருக்காங்க... இன்னிக்கி ராத்திரிய தாண்டறதே கஷ்டம்..."என்றார் அவர்.

"டாக்டர்!... ஏதாவது செஞ்சு அவள காப்பாத்த முடியாதா?"

"அவங்கள காப்பதறத்துக்கு ஒரு வழியும் அவங்க விட்டு வைக்கல...டாக்டரான உங்களுக்கு நா சொல்ல வேண்டியதில்ல...மனித உடல் இரும்பில்ல.... ஆரோக்கியமா இருக்க உணவும் ஓய்வும் அவசியமானது.அவங்கள பத்தி விசாரிச்சதுல கடந்த நாலு வருஷமா அவங்க சரியா சாப்பிடவும் இல்ல... தூங்கவும் இல்ல...உடம்பு எத்தன நாள் தாங்கும்? அதுமட்டுமல்லாம உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்... இந்த பக்கங்கள்ல திடீருன்னு ஒருவித விஷக் காய்ச்சல் பரவிடிச்சு... அதுக்காக வந்த மெடிக்கல் டீம்ல இவங்களும் ஒருத்தர்.கேம்ப்ல இருந்த டாக்டர்ஸ் எல்லாருக்கும் காய்ச்சல் அவங்களுக்கு வராம பாதுகாப்பா இருக்க இன்ஸ்டெர்க்ஷன்ஸ் குடுத்திருந்தாங்க...ஆனா இவங்க அதெல்லாம் பின்பற்றலன்னு தெரியுது...இப்ப அதோட எஃபெக்டனால உறுப்புகள் ஆல்மோஸ்ட் செயல் இழந்துடுச்சு... இதுக்கும் மேல நாம என்னதான் மருந்து கொடுத்தாலும் பேஷண்ட் பிழைக்க அவங்களும் ட்ரை பண்ணனும்...ஆனா இவங்க மருந்துகளுக்கு எந்த ரெஸ்பாண்டும் பண்றதில்ல... மொத்தத்துல அவங்களுக்கு வாழற ஆசையே இல்லேன்னு தான் சொல்லனும்.."என்று முடித்தார் மருத்துவர்.

"நா அவளப் பாக்கலாமா?"

"ஷ்யூர்!ஆனா அவங்களுக்கு நினைவு வந்து வந்து போகுது..போய் பாருங்க.."என்று அனுப்பி வைத்தார் அவர்.

ஐசியூவில் நுழைந்த ஆனந்த் அங்கிருந்த சேரை இழுத்து அவள் படுக்கை அருகில் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.ஒரு மணி நேரத்திற்கு பின் சஹானாவிற்கு லேசாக நினைவுத் திரும்பியது.

அருகில் அமர்ந்திருந்த சித்தார்த்தின் உயிர் நண்பனும் அவர்களின் லெக்சரருமான ஆனந்தைக் கண்டவள்,

"ஆனந்த் சார்!வந்திட்டிங்களா!உங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்"

"என்னம்மா சஹானா! இப்படி பண்ணிட்டியே!வாழற வயசுல இப்படி சாவ நோக்கி உன்ன நீயே தள்ளிட்டியே! அவன்தான் நம்மள விட்டு போய்டான்னா நீயும் போக பாக்கிறியா?"என்றான் வருத்தத்தோடு.

கஷ்டப்பட்டு மூச்சை உள்ளிழுத்த சஹானா, "சார் இது இன்னிக்கி முடிவானது இல்ல!நாலு வருஷத்துக்கு முன்னாடியே முடிவானது.மாத்த முடியாதது... இந்த உலகத்துல நா வாழ்றத்துக்கு இனிமே எந்த காரணமும் இல்லை.இத்தன நாள் வாழ்ந்தது அவர் சொன்ன வாரத்தைக்காக.அதுபடி நான் கோல்ட் மெடலிஸ்ட் ஆனேன்...இந்த மூணு வருஷமா என்னால முடிஞ்ச அளவு ஏழை எளியவர்களுக்கு இலவசமா சிகிச்சை செஞ்சேன்... போதும்...கடவுளே இந்த நரகத்திலிருந்து விடுவிக்க சந்தர்ப்பம் கொடுக்கறபோ நா ஏன் வேண்டாம்னு சொல்லனும்?இனிமே நிம்மதியா அவர் இருக்குற இடத்துக்கு போய்டுவேன்.."

"அப்படி சொல்லாதே சஹானா!"என்ற ஆனந்தின் கண்கள் கண்ணீரை பொழிந்தன. ------------------------------------


அன்று கலாட்டா நடந்த தினத்தை நினைத்தால் இன்றும் வேதனை இதயத்தை பிழிந்தது ஆனந்திற்கு.

மாணவர்கள் பலக் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.பத்து நாட்களாக காலேஜ் மூடியே இருந்தது.கேட்டின் வெளியே ரோட்டில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் பலவிதமான கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.பேச்சு வார்த்தைக்காக உள்ளே அழைத்து மேனேஜ்மென்ட் பேசியது தோல்வியில் முடிந்தது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சில காலிகள் திடிரென கற்களை வீசி கலாட்டாவை பெரிதுபடுத்தி விட்டனர்.

ஸ்டாப் ரூமில் ஆனந்த் சஹானா சுமனா நிரஞ்சன் குணா இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வேகவேகமாக ஓடி வந்தான் சுரேஷ்.

"சார் சார் அர்ஜெண்ட்! சீக்கிரம் வாங்க!"

"என்னடா ஆச்சு?என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு..."என்றான் நிரஞ்சன்.

"அந்த வில்லன் ஜெகன் இந்த கலாட்டாவ சாக்கா வச்சு நம்ம சித்து சார கொல்றதுக்கு திட்டம் போட்டுக்கானாம்...அவனோட கூட்டாளிங்க இரண்டு பேரும் பேசறத நா கேட்டேன்.அங்க கலாட்டா வேற ஜாஸ்தி ஆயிடுச்சு... சீக்கிரம் வாங்க...சார காப்பாத்தனும்...."என்றான் ஒரே மூச்சில்.

சித்தார்த்துக்கு ஆபத்து கேட்ட உடனேயே சிட்டாகப் பறந்து விட்டாள் சஹானா.வேகமாக சென்றாலும் மற்றவர்களால் சித்தார்த்தையோ அவனை தேடி சென்ற சஹானாவையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

எல்லா இடமும் தேடி தோற்றவர்கள் கடைசியாக ஆடிடோரியத்தின் பின் புறம் அவர்கள் கண்டது ரத்த வெள்ளத்தில் மிதந்த சித்தார்த்தை தன் கால் மேல் படுக்க வைத்துக் கொண்டு அவன் தலையை மென்மையாக வருடிக் கொண்டிருந்த சஹானாவை.இந்த உலகத்தின் உணர்வே இல்லாமல் வெறித்தப் பார்வையோடு இருந்தாள் அவள்.

அருகில் நெருங்கிய ஆனந்த் சித்தார்த்தின் நாடியை பிடித்துப் பார்த்தவன் அருகில் நின்றவரைப் பார்த்து இடவலமாக தலை அசைத்தான்.அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டு, "சஹானா!... சஹானா!...சித்துவ விடும்மா....அவன இங்கேந்து கொண்டு போனும்..."என்றவாறு சித்தார்த்தை அவளிடமிருந்து நகர்த்த போனபோது,

"இல்ல....இல்ல....நா விடமாட்டேன் அவர....சித்து....சித்து....எந்திரிங்க சித்து...என்னெ பாருங்க...எந்திரிங்க...."என்ற அவளின் கதறல் அங்கிருந்தோரின் நெஞ்சை உலுக்கியது.

யாரையும் நெருங்க விடாமல் அவனை இறுக்கியபடி அழுதாள்.சிறிது முயன்று பார்த்துவிட்டு ஆனந்த் நிரஞ்சனுக்கு செய்கை செய்தான்.

வேகமாக அங்கிருந்து அகன்ற அவன் சிறிது திரும்பி வந்து ஆனந்திடம் அதைக் கொடுத்தான்.அது கடுமையான ட்ராங்குலைசர் இன்ஜெக்ஷன்.அதை நிதானமாக அவளுக்கு ஏற்றினான்.சில நொடிகளில் தன்னிலை மறந்த சஹானாவை சுமனாவும் குணாவும் இருபுறமும் தாங்கி சென்றனர்.

ஐந்து மணி நேரத்திற்கு பின் கண் விழித்த சஹானா பிறகு பேசவேயில்லை.தனக்குள்ளே ஒடுங்கிய அவளை யாராலும் நெருங்க முடியவில்லை.

---------------------------------

பழைய நினைவில் கண்கலங்கிய ஆனந்த், "சஹானா! இன்னும் காலம் மிஞ்சிடல..நீ முயற்சி பண்ணா உன்னால சரியாக முடியும்மா!"

அவளோ வெறுமையாக சிரித்தபடி,
"யாருக்காக நா சரியாகனும் சார்?! யாருக்காக நா வாழனுமோ யாரோட வாழனுமோ அவரே இல்லேன்னு ஆனது மேல எதுக்காக நா பிழைக்கனும்?இட்ஸ் டூ லேட் சார்!டூ லேட்!"


அவள் டூ லேட் என்றது இப்போதைய நிலைமையை மட்டுமில்லை என்று ஆனந்திற்கு புரிந்தது.

தன் காதலை கடைசி வரை சொல்லாத வலியே நாளுக்கு நாள் அவளை ஒடுக்கி இப்போது இந்த நிலைக்கு தள்ளிவிட்டது.

பேச்சை மாற்ற எண்ணி,

"சுமனா, நிரஞ்சன்,குணா எல்லாருக்கும் சொல்லியிருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க"

"அது வரைக்கும் நா இருப்பேன்னு சொல்ல முடியாது... எனக்காக நீங்களே நா சொல்றத அவங்களுக்கு சொல்லிடுங்க சார்"

"சொல்லும்மா!"

"சுமனா குணாவ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க!இப்ப அவங்க வீட்ல ஒத்துக்கலேன்னாலும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்...காலம் கடந்த பின்னல எதுவும் செய்ய முடியாது...என்னெ போல...."

"சரிம்மா சொல்றேன்"

"அப்புறம் நிரஞ்சனுக்கு சொல்லுங்க பழசையெல்லாம் மறந்திட்டு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ சொல்லுங்க"

"சரிம்மா"என்ற போது அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.போகும் போதும் நண்பர்களின் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு வழி சொல்லும் அவள் வாழ்வு பூக்காமலே கருகிய பூவை போலானதை எண்ணி அவன் நெஞ்சம் கனத்தது.

சிறிது நேரத்தில் கோமாவிற்கு சென்றுவிட்டாள் சஹானா.அவளின் நண்பர்கள் வந்த போது அவள் சொன்னவைகளை அவர்களிடம் சொன்னான் ஆனந்த்.அதை கேட்டு கண்ணீர் வடித்தனர் மூவரும்.


அன்று மாலை சஹானாவின் உயிர் பறவை தன் இணையைத் தேடி வானுலக்கிற்கு பறந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "வருவேன்
நான் உனது நிழலாக"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சித்ரஞ்சனி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top