வர்மா ---- எனது பார்வையில்

#1
வணக்கம் தோழமைகளே

இனிய காலை வணக்கம்...........

அனைவரும் வர்மா என்னும் திரைப்படம் இதுவரை எடுக்கப்பட்டது கைவிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் புகழ்பெற்ற திறமைவாய்ந்த ஒருவரால் எடுக்கப்பட்டு வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்தால் நிராகரிக்க பட்டுள்ளது.

இப்பொழுது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவாதத்தில் என்னுடைய கோணத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிய பதிவு இது.

முதலில் இந்த வர்மா என்னும் திரைப்படம் அர்ஜுன் ரெட்டி என்னும் புகழ்பெற்ற பிளாக் பஸ்டர் தெலுங்கு திரைபடத்தின் தமிழாக்கமாகும்.
இந்த படத்தை தமிழ்நாட்டில் பார்த்த பலருக்கு தோன்றியது அட நம்ம சேது மாதிரி இருக்கே என்பதுதான்...நிறைய சினிமா விமர்சகர்கள் அப்படித்தான் இந்த படத்தை விமர்சித்தார்கள். அதே போன்ற அழுத்தமான கதை, பாத்திர படைப்பு, திரைக்கதை, என படத்தின் ஒவ்வொவொரு காட்சியும் பேசும்....காட்சிகளில் வரும் பொருட்களும் பேசும். சேதுவாக விக்ரம் நிஜமாக சொல்வது என்றால் பாலா செதுக்கிய சீய்யானாக வாழ்ந்து இருப்பார். இப்பொழுது கூட அந்த படத்தை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் கடந்துவிட முடியாது.

தெலுங்கு படமாக தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பிய படம். மிகவும் கவனமாக கையாள வேண்டிய கதை.....கத்தி மேல் நடக்கும் வித்தை ...கொஞ்சம் இடறினாலும் விரசமாகவிட கூடிய நிலை....படம் மக்களின் வெறுப்பை பெற்றுவிடும். அதில் பிரதானமாக பேசப்பட்டவர்கள் இயக்குனரும் அவரின் எண்ணத்தையும் கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்ந்து அப்படியே இயக்குனரை பிரதிபலித்த நாயகன் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்காக விஜய் எடுத்துக்கொண்ட உழைப்பு அசாத்தியமானது. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமில்லாமல் ஒரு வெறி இருந்தால் மட்டுமே இது போன்ற உழைப்பு சாத்தியம். உடல் மெலிந்து, தாடி வளர்த்து ஒரு கோபக்கார, புத்திசாலித்தனமான மேல் தட்டு இளைஞன்.

இப்போ எதுக்கு இதையெல்லாம் சொல்ற இது எல்லாம் எங்களுக்கு தெரியும். ஆனால் நான் கூறபோவது அதை பற்றி அல்ல. ஒரு முழு படம் 14 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது அதற்க்கான காரணமாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது “எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை” இதுவே சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. இயக்குனர் விவாத பொருளாக மாறி இருக்கிறார்.

சேது, அர்ஜுன் ரெட்டி இந்த இரு படத்தில் நடித்த இயக்கிய இருவருக்கும் இருந்த மிக பெரிய ஒற்றுமை வாழ்கையில் ஜெயித்து விட வேண்டும் என்ற தேடலும் வெறியும் அதையும் தாண்டி அவர்களுக்கு சினிமாவின் மீது இருந்த காதல் அண்ட் passion. சினிமா உள்ளவரை இந்த படங்கள் பேசப்படும் அதற்கு மிக முக்கிய காரணமாக நான் கருதுவது இந்த இருவரின் நிஜமான தேடலும் passionum். அதனாலேயே அவர்களால் காட்சிகளில் மூழ்கி கரைந்து பார்க்கும் நம்மையும் கட்டி போட முடிந்தது. நம்மால் ஒரு இடத்தில் கூட நடிகராக பார்க்க விடாமல் கதாபாத்திரமாகவே மாறியவர்கள்.

அப்படியென்றால் இதே போன்ற தேடல் உள்ள ஒரு இயக்குனரும் நடிகரும் சேர்ந்தால் தானே அந்த magic நிகழும். என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நடிப்பின் மீது நிஜ காதல் கொண்ட எந்த பின்புலமும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இயக்குனர் நாயகன் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் இது போன்ற இல்லையில்லை இதை விட சிறந்த படைப்பை நம்மால் கொடுக்க முடியும் என்பதே.

kindly share your views friends
 
#2
உண்மைதான். எப்பொழுதும் மூலக்கதையை சிதைக்காமல் வேறு மொழியில் அதேபடம் எடுப்பது நம் மொழி, கலாச்சாரத்திற்கேற்ப மாறுதல் செய்து எடுத்தால் மூலக்கதையை சில நேரங்களில் மாற்றிவிடும். மொழி மாற்றம் படங்கள் எடுப்பதும் கத்தி மேல் பயணம் செய்வது போல்தான் . நிஜத்தைவிட நிழல் சில நேரங்களில் மட்டுமே அதிக வெற்றி பெறும் . இந்த படத்தை எடுத்தவர் ஒரு சிறந்த இயக்குனர். படத்தை பார்த்தவர்கள் பார்வையைவிட ரசிகர்கள் பார்வை சரியாக இருக்கலாம். படத்தை வெளியிடாமல் இத்தகைய விமர்சனம் எழுவது ஒரு இயக்குனரை அவமதிக்கும் செயல்தான். எத்தனை படங்கள் விநியோகஸ்தர்கள் தயவின்றி வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. விக்ரமிற்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பெற்றுத் தந்த சேதுவின் வரலாறு இப்படத்தை கைவிட்டவருக்கே நன்றாக தெரியும். எவ்வளவு பணம் விரயம் அதைவிட எவ்வளவு மனித உழைப்பு விரயம் என்ன சொல்வது யாரை குறை சொல்வது.
 
#3
வணக்கம் தோழமைகளே

இனிய காலை வணக்கம்...........

அனைவரும் வர்மா என்னும் திரைப்படம் இதுவரை எடுக்கப்பட்டது கைவிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் புகழ்பெற்ற திறமைவாய்ந்த ஒருவரால் எடுக்கப்பட்டு வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்தால் நிராகரிக்க பட்டுள்ளது.

இப்பொழுது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவாதத்தில் என்னுடைய கோணத்தை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிய பதிவு இது.

முதலில் இந்த வர்மா என்னும் திரைப்படம் அர்ஜுன் ரெட்டி என்னும் புகழ்பெற்ற பிளாக் பஸ்டர் தெலுங்கு திரைபடத்தின் தமிழாக்கமாகும்.
இந்த படத்தை தமிழ்நாட்டில் பார்த்த பலருக்கு தோன்றியது அட நம்ம சேது மாதிரி இருக்கே என்பதுதான்...நிறைய சினிமா விமர்சகர்கள் அப்படித்தான் இந்த படத்தை விமர்சித்தார்கள். அதே போன்ற அழுத்தமான கதை, பாத்திர படைப்பு, திரைக்கதை, என படத்தின் ஒவ்வொவொரு காட்சியும் பேசும்....காட்சிகளில் வரும் பொருட்களும் பேசும். சேதுவாக விக்ரம் நிஜமாக சொல்வது என்றால் பாலா செதுக்கிய சீய்யானாக வாழ்ந்து இருப்பார். இப்பொழுது கூட அந்த படத்தை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் கடந்துவிட முடியாது.

தெலுங்கு படமாக தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பிய படம். மிகவும் கவனமாக கையாள வேண்டிய கதை.....கத்தி மேல் நடக்கும் வித்தை ...கொஞ்சம் இடறினாலும் விரசமாகவிட கூடிய நிலை....படம் மக்களின் வெறுப்பை பெற்றுவிடும். அதில் பிரதானமாக பேசப்பட்டவர்கள் இயக்குனரும் அவரின் எண்ணத்தையும் கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்ந்து அப்படியே இயக்குனரை பிரதிபலித்த நாயகன் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்காக விஜய் எடுத்துக்கொண்ட உழைப்பு அசாத்தியமானது. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமில்லாமல் ஒரு வெறி இருந்தால் மட்டுமே இது போன்ற உழைப்பு சாத்தியம். உடல் மெலிந்து, தாடி வளர்த்து ஒரு கோபக்கார, புத்திசாலித்தனமான மேல் தட்டு இளைஞன்.

இப்போ எதுக்கு இதையெல்லாம் சொல்ற இது எல்லாம் எங்களுக்கு தெரியும். ஆனால் நான் கூறபோவது அதை பற்றி அல்ல. ஒரு முழு படம் 14 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது அதற்க்கான காரணமாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது “எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை” இதுவே சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. இயக்குனர் விவாத பொருளாக மாறி இருக்கிறார்.

சேது, அர்ஜுன் ரெட்டி இந்த இரு படத்தில் நடித்த இயக்கிய இருவருக்கும் இருந்த மிக பெரிய ஒற்றுமை வாழ்கையில் ஜெயித்து விட வேண்டும் என்ற தேடலும் வெறியும் அதையும் தாண்டி அவர்களுக்கு சினிமாவின் மீது இருந்த காதல் அண்ட் passion. சினிமா உள்ளவரை இந்த படங்கள் பேசப்படும் அதற்கு மிக முக்கிய காரணமாக நான் கருதுவது இந்த இருவரின் நிஜமான தேடலும் passionum். அதனாலேயே அவர்களால் காட்சிகளில் மூழ்கி கரைந்து பார்க்கும் நம்மையும் கட்டி போட முடிந்தது. நம்மால் ஒரு இடத்தில் கூட நடிகராக பார்க்க விடாமல் கதாபாத்திரமாகவே மாறியவர்கள்.

அப்படியென்றால் இதே போன்ற தேடல் உள்ள ஒரு இயக்குனரும் நடிகரும் சேர்ந்தால் தானே அந்த magic நிகழும். என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நடிப்பின் மீது நிஜ காதல் கொண்ட எந்த பின்புலமும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இயக்குனர் நாயகன் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் இது போன்ற இல்லையில்லை இதை விட சிறந்த படைப்பை நம்மால் கொடுக்க முடியும் என்பதே.

kindly share your views friends
Well said dear 👌👏🏻👏🏻👍😊
 
Top