• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.
அதிலும் குறிப்பாக..
ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.
அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.
ஆகவே...
சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத்துரத்தின.ஆனால்...
அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கிஅந்தப்பூனைகளையும் காயப்படுத்தியது.
முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒருதடியை எடுத்து
கொண்டுபோய்துரத்தினான்.
எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.
அவன் குனிந்து அதனைத் தாக்கமுயற்சித்தான்.ஆனால்
வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.
அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம்ஒருசாமுராயா..
என அவமானம் அடைந்தான்.
அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...
"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’
எனஆலோசனைசொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.
உடனேபூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.
பூனை இருப்பதை அறிந்த எலி..தயங்கித் தயங்கி வெளியே வந்தது.
கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் திருடித்தின்பதுமாக
இருந்தது..மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.ஆனால்....
இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.மறுநாள்....
வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.
அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.
சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது
எனவியப்படைந்தான்.
இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,..."எப்படி இந்த முரட்டுஎலியைக்கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’எனக் கேட்டன.
"ஒரு சூட்சுமமும் இல்லை.
"நான் பொறுமையாக காத்திருந்தேன்.'
நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,
அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.
நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.
ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப்போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.
"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...
‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.
என் நகங்கள் கூட கூர்மையானவை.
ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’
’உன் பலத்தை போலவே எலியும்தன்னைகாத்து
கொள்ளப் பழகியிருக்கிறது...

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.
ஆகவே உன்னை துரத்தி அடித்துஎலிகாயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,
அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு
காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..
உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...
தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’
என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.
மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...
அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.
காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.
மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

காத்திருக்கப் பழகுவோம் !
திருக்குறள்;485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

விளக்கம்
எண்ணிய காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் திறன் உள்ளவர்கள்,
மனக்கலக்கமின்றி, தமக்கு வலிமை மிகுதியாய் இருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வரும்வரை அமைதியாகவும் பொறுமையாகவும் காத்திருப்பர்..

Padithathil pidithathu
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Sema darlu... yenna darlu.. adikadi ungala parkka mudila... yepdi erukinga.. dons... yepdi erukanga..
Santhosam darling:love::love:
Nalla erukom dons oda :(;):D varen dhan site kku munthi mathiri time kedaikkurathu ella darling, moonum school porangala avanga home work ke time crt ah erukku, na vara time la yaraiyum pakka mudiyarathu ella darlu.

Neenga yepadi erukeenga darling
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
Santhosam darling:love::love:
Nalla erukom dons oda :(;):D varen dhan site kku munthi mathiri time kedaikkurathu ella darling, moonum school porangala avanga home work ke time crt ah erukku, na vara time la yaraiyum pakka mudiyarathu ella darlu.

Neenga yepadi erukeenga darling
Nalla eruken darlu... enga onna vaichuttey mudila.. homework mudikarathu kulla pothum pothum nu airum.. salute darlu ungaluku 3 dons samlikanum thans... settai semaya pannuvanga.. so cute.. darlu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top