வானத்தையும் வசப்படுத்து

THAZHAI KANI

Well-known member
#1
"வானத்தையும் வசப்படுத்து
உன் வாழ்நாள் முழுதும்
தீராத உழைப்பினினால்""பிறர் வாழ்வை கெடுத்து வரும் வெற்றி வேண்டாம்
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படும் எண்ணம் வேண்டாம்"


"என்னால் முடியும் என எண்ணிப்பார்
நீ இந்த உலகத்தில் எவரும் எட்ட முடியாத இடத்தில்
எட்டாவது அதிசயமாய் இருப்பாய்"


"பிறர் அழுகையினில் ஆனந்தம் கொள்பவன் அரக்கன்
பிறரிடன் அன்பு காட்டுபன் தான் கண்ணுக்கு தெரியும் ஆண்டவன்"


"வானமும் வளைந்து நிற்கும்
உன் வஞ்சமற்ற அன்பின் முன்னால் "


"கடுமையான உழைப்பு
கள்ளமற்ற சிரிப்பு
வஞ்சமற்ற நெஞ்சம்
நிம்மதியான நித்திரை
சோகம் மறக்க சொந்தபந்தம்
வானமும் உன் வசம் தான்
உன் வாசலில் என்றும் பூ மணம் தான்"
 
Last edited:
#8
banuma ungaluku epdi ellar perum theriyuthu
இவங்க மல்லிகா மணிவண்ணன்
டியரின் சைட்டில் "சித்திரையில்
பிறந்த சித்திரமே"-ன்னு அழகான
ஒரு ஸ்டோரி எழுதுறாங்க, அல்லிவிசாலாட்சி டியர்
 
Last edited:
Top