• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானவில் வாழ்க்கை 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
வானவில் வாழ்க்கை 15(1)

யாழினி, சார் உங்களுக்கு என்ன மாதிரி டிசைன் வேண்டும்?, என்றாள். அவனோ, “உங்களுக்கு , என்னெல்லாம் தோணுதோ, அதையே டிசைன் பண்ணிக் கொடுங்க”, என்றான். யாழினியோ, சரியான லூசு போல இந்த ஆளு, என்று நினைத்தாள். “ ஒரு டிசைன் யோசிக்கத் தெரியாதவன் எல்லாம், எப்படித்தான் இன்ட்டர்நேசனல் அளவில் பிசினஸ் நடத்துகிறானோ!”, என்று நினைத்தாள்.

யாழினி, தன் லேப் டாப்பில், “ஸ்கைப்ளூ கலரில் பேனா மை கலரில் பார்டர் கொடுத்தாள்; அதில் குட்டி கிருஷ்ணரின் லீலைகளை ; புடவையில் ஆரஞ்சு வண்ணத்தில்; டிசைன் பண்ணியிருந்தாள்; இடையில் கிளிப் பச்சை கலரில் இலைகளை வரைந்திருந்தாள்”.அதை, “ஆதித்யாவிடம் , காட்டுவதற்காக நிமிரும் போது தான் கவனித்தாள்.” அவன், தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள், “ஹலோ, என்ன பண்றீங்க? என்று கேட்டாள்.”

ம்ம் உன்னை சைட் அடிச்சிட்டிருக்கேன், என்று உளறிவிட்டான். 'வாட்?' என்றாள். ஐயையோ! “ டேய் ஆதி, எவ்வளவு கஷ்டப்பட்டு, அந்த மலைக் குரங்கை சம்மதிக்க வைச்சே, இப்போ, இந்த முட்டைக் கண்ணிக்கிட்டே, உளறி வைச்சிட்டியேடா! அவள், வேப்பிலை அடிக்கிறதுக்குள்ளே, நீ ஏதாவது சொல்லி சமாளிடா, இல்லைனா , முதலில் இருந்து ஆரம்பிக்கனும், இது தேவையா, என்று புலம்பினான்”.

அது, ஒன்னும் இல்லை மேடம், டிசைன் நல்லா இருக்கு என்பதைத் தான், அப்படி சொன்னேன் மேடம். அவள் அதை, ' நம்பாமல் பார்க்க,' ஏங்க, உண்மையிலேயே டிசைனைத் தாங்க சொன்னேன். ' என் சிவா டார்லிங் மேலே சத்தியமாங்க', என்றான். அது யாரு 'சிவா டார்லிங்', எங்க பாட்டி பேருங்க. எனக்கு என் சிவா டார்லிங்னா அவ்வளவு பிடிக்கும்ங்க. அதுனாலே, தான் நான் அவங்க மேலே சத்தியம் பண்ணிணேன், என்றான்.

அவள், அவன் சொன்னதை நம்பாமலேயே, அவனிடம் டிசைனைக் காட்டினாள். இதில், ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள். செய்து கொடுத்துடுறேன், என்றாள். அதற்குள், அமுதா கடைக்குள் வரவும், அவளைக் கூப்பிட்டாள். அவளிடம் தன் டிசைனைக் காட்டி, இதில் ஏதாவது குறை இருக்கா என்று பார்த்துச் சொல்லு என்றாள்.

இந்த டிசைன், நம்ம கடைக்கு இல்லையே. இவர் தானே, டிசைன் கேட்டார். இவரிடம் கேட்காமல், என்னிடம் ஏன்டி கேட்கிறே என்றாள். சாருக்கு, “ நான், எப்படி டிசைன் பண்ணிக் கொடுத்தாலும் ஓகேவாம்”, அதனால் தான்டி உன்கிட்டே கேட்கிறேன், என்றாள். அவள், பார்த்துவிட்டு, சூப்பரா இருக்கு, என்றாள்.

ஆதித்யா, “நான், அப்போவே சொன்னேங்க. உங்க சிஸ்டர் செய்யுறது எல்லாம் நல்லா இருக்கும், என்று சொன்னேன். அவர்கள் தான் நம்ப மாட்டேனுட்டாங்க, என்றான். அமுதா, அது எப்படி சார், என் தங்கச்சி செய்றது எல்லாம் நல்லாயிருக்கும் , என்று நம்புவீங்க?”

அவளை, நேற்றுத் தானே பார்த்தீர்கள். இருபத்து நான்கு மணி நேரத்திலே, என் தங்கச்சி மேலே எப்படி இப்படி ஒரு நம்பிக்கை வந்தது! என்று ஆச்சரியமாகக் கேட்டாள். ஆதித்யா மனதில் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது. “ ஒருத்தியைக் காதலிக்க இத்தனை முட்டுக் கட்டைகளா! முதலில் இவள் அப்பனை சமாளிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என்றாகிவிட்டது.

அடுத்து ' இந்த முட்டைக் கண்ணிக்கிட்டே மாட்டி, அதிலிருந்து தப்பிச்சேன், அதுக்குள்ளே இவள் அக்கா வந்து கேள்வி கேட்கிறாள்', இவளை எப்படி சமாளிப்பது? என்று யோசித்தான். ஐயோ! இன்னும் என்னென்ன காத்துக்கிட்டிருக்கோ தெரியலையே. ஆத்தா வீரமாகாளி, இந்தப் பச்சைப் புள்ளையை நீதாம்மா காப்பாத்தனும், என்று புலம்பினான்.

சார், சார் என்று அமுதாவும், யாழினியும் கூப்பிடவும், சட்டென்று நிமிர்ந்து, சொல்லுங்க மேடம் என்றான். என்ன சார் நீங்க அப்பப்போ பீரிஸ் ஆகிடுறீங்க! என்றாள் யாழினி. ஈஈஈஈ அது ஒன்னும் இல்லை. என்னமோ தெரியலை, எனக்கு இன்னிக்கு என் தாத்தா, பாட்டி நியாபகமா இருக்கு. அது தான் காரணம். அது சரி என்றார்கள், இரு பெண்களும்.

சார், இப்படிலாம் இழுத்தடிச்சிட்டு இருந்தால், எனக்குப் பிடிக்காது. வந்தீங்களா, வந்த வேலையை முடிச்சிட்டுப் போயிட்டே இருங்க. சும்மா வெட்டிக் கதை பேச எனக்கு நேரமில்லை. உங்களுக்குத் தேவையான டிசைனை, நீங்க தான் சொல்லனும். அதை விட்டுவிட்டு என்னை டிசைன் பண்ணச் சொல்லாதீங்க.

இப்போவே பார்த்தீங்க தானே, நான் வரைந்த டிசைனைப் பார்த்து, நீங்களே கன்ப்யூஸ் ஆகுறீங்க. அதனாலே, ஒழுங்கா டிசைனைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கூறினாள். ஓகே மேடம், என்றான். அப்புறம், “ யாழினி டிசைன் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அவளையே பார்த்து ஜொள்ளு விட, இதைப் பார்த்த கடைப் பசங்கள், அமுதாவிடம் சொல்ல, அவளும் வரும் கஷ்டமர்களைக் , கவனித்துக் கொண்டு, மனதில் ஏதோ கணக்குப் போட்டுப் பார்த்து, சிரித்துக் கொண்டாள்”.

அவளுக்குப் புரிந்து விட்டது. “ஆதித்யா , யாழினியைக் காதலிக்கிறான், என்று புரிந்து கொண்டாள், அவளுக்காவது நல்ல வாழ்க்கைத் துணை, அமைய வேண்டும் , என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்”. ஆனால், ' ‘இவனை எப்படி நம்புவது?, இவன் யார்? இவன் குடும்பம் எப்படிப்பட்டது?, என்று, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள்'.

இங்கே, ஆதித்யாவோ, யாழினியை, அனு அனுவாக ரசித்துக் கொண்டிருந்தான். அப்பா, என்ன அழகுடி!, பார்த்த ஒரு நாளிலேயே, என்னை இப்படி பைத்தியமாக்கிட்டியேடி!. உன் அழகு தான் அப்படினா, நீ கடையைப் பராமரிக்கும் விதம், வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் முறை, சே,சான்ஸே இல்லைடி! அப்படியே, லேப்டாப்புக்குள்ளேயே, தலையைப் புதைச்சுக்காமல், என்னையும் கொஞ்சம் பாருடி.

இந்தக் காலத்திலே யாருடி இடுப்புக்குக் கீழே வரைக்கும் முடி வளர்க்கிறார்கள்? ஆனால், நீ எப்படி இந்த முடியைப் பராமரிக்கிறே! வில் போன்ற புருவமும், நீ கோபமாகப் பார்க்கும் போது , அந்த முட்டைக் கண்ணை உருட்டும் போது செம அழகுடி பொண்டாட்டி. அது எப்படிடி எல்லாப் பெண்களும், கண்ட கண்ட கலரிலே உதட்டிலே சாயம் பூசித் தான் சிவந்திருக்கும்.

உனக்கு மட்டும் எப்படிடி இப்படி இயற்கையாவே உன் உதடு சிவந்து போயிருக்கு.அந்தக் கன்னம் இரண்டும் நல்ல செக்கச் சிவந்த ஆப்பிள் மாதிரி இருக்கு என்று மனதுக்குள் புலம்பி, அவளை ரசித்துக் கொண்டிருந்தான். ம்ம் இது வேலைக்காகது ஆதி. இப்படியே அமைதியா இவளைப் பார்த்துட்டு இருந்தால் “எப்போ, நம்ம காதலைச் சொல்லி, அவளை ஏத்துக்க சொல்ல முடியும்”.

பேசப் பேசத் தானே, ' அவள் மனதுக்குள் நான் போக முடியும்,' என்று நினைத்தான். அவளிடம், பேசத் தொடங்கினான். என்னங்க! எவ்வளவு டிசைன் வரைஞ்சிருக்கீங்க என்று கேட்டான். யாழினியோ, தலையை நிமிராமலே, இப்போதைக்கு ஐந்து வரைஞ்சுருக்கேன். நீங்க ஒரு தடவை பார்த்துட்டீங்கனா, என் வேலை முடியும், என்றாள்.

அவன் பக்கம் தன் லேப்டாப்பை நகர்த்தி, அவனைப் பார்க்கச் சொன்னாள். அவன், அவள் வரைந்ததை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வந்தான். ஏங்க எப்படிங்க! “நான் , என் மனதில் நினைத்ததையே, அப்படியே வரைஞ்சுருக்கீங்க!, சூப்பர்ங்க. இதிலிருந்து என்ன தெரியுதுங்க?, என்று கேட்டான்”. இவள் திருப்பி, அவனையே, என்ன தெரியுது என்று கேட்டாள்.

அட, என்னங்க நீங்க, இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கீங்க, என்றான். நம்ம இரண்டு பேருக்கு இடையே, ஏதோ முன் ஜென்மப் பந்தம் இருக்குதுனு நினைக்கிறேங்க என்றான். அவளோ அப்படியா! ' எனக்கு அப்படிலாம் தெரியலைங்க' என்றாள். அவனுக்கு முகம் சுருங்கிப் போச்சு. அடேய், ஆதி, பொறுமை பொறுமைடா. உனக்கு அவள் வேண்டும் என்றால், இப்படி முதல் நாளிலேயா சொல்வே, அறிவு கெட்டவனே! என்று அவன் மனம், அவனை இடித்துரைத்தது.

உடனே, சரிங்க எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். “உங்களுக்கும் சீக்கிரத்தில், எனக்குத் தோன்றியது போல், உங்களுக்கும் தோன்றும் “, என்று கூறினான். எனக்கு அப்படிலாம் தோணாது. உங்க ஈமெயில் ஐடி சொல்லுங்க. நான் , உங்களுக்கு வரைந்த டிசைனை, அனுப்பி வைக்கிறேன், என்றாள். ஏங்க, உங்கள் லேப்டாப்பையே கொடுங்கங்க. நான் நாளைக்கு வரும் போது கொண்டு வந்து தருகிறேன் என்றான்.

என்னது! என்றாள். என்ன விளையாடுறீங்களா? என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க? ஏதோ பிசினஸ்க்காகக் கேட்டீங்கனு செய்து கொடுத்தால், ரொம்ப பண்றீங்க. “வந்து உட்கார்ந்ததில் இருந்து, என்னமோ , 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்தது மாதிரி”, என்னையே பார்த்துட்டு இருந்தீங்க! நானும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தால், “வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கிறீங்க”, என்று எண்ணெயில் போட்ட கடுகாய்ப் பொறிந்து தள்ளினாள்.

அப்போ , “ நான் உங்களைப் பார்த்துட்டு இருந்ததைக் கவனிச்சிறுக்கீங்க”, அப்படித் தானே! என்றான். ம்ம் “ நீங்க பொண்ணையே பார்க்காத மாதிரிப் பார்த்துட்டு இருந்தால், யாராவது கவனிக்காமல் இருப்பார்களா?” என்றாள். இங்கே பாருங்க, “ உங்களோட எங்க அப்பா அக்ரீமென்ட் போட்டதாலும், செக் வாங்கியதாலும் தான் செய்து கொடுத்துட்டு இருக்கேன்.” இல்லையென்றால், உங்களை இடத்தைக் காலி பண்ணச் சொல்லியிருப்பேன். உங்க ஈமெயில் ஐடியைக் கொடுங்க. நான், “உங்க டிசைனை அனுப்பி வைக்கிறேன் “, என்று கடுமையாகக் கூறினாள்.
 




Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
Adhi romba vali yuthu thodachu ko. Yazhini romba tough
இப்போ அப்படித் தான் இருப்பாள் சகோதரி. அப்புறம் ஆதியின் அன்பில் அப்படியே கரைந்து விடுவாள்.
 




Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
என்னாச்சு. எப்போதும் பாமதி அக்கா, சித்ரா அக்கா தான் முன்னாலே வருவாங்க. இன்னிக் ஆளைக் காணோம்.
 




Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
இது வரை வானவில் வாழ்க்கைக் கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தந்த தந்து கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பானுமதியின் நன்றியும் வணக்கங்களும். என்னாச்சு பானுமதி அக்கா, சித்ரா அக்கா, ராஜிரூபா அக்கா, ருகி பானு இன்னும் நிறையப் பேர் காணோம்.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Aadhi rumba over ah vazhiyara da konjam adaki vaasi da, ippadi partha unnai adikama vittale nu santosha padu da, nee niraiya ve menakedanum da, Ava konjam strict ah irupa da parthu nadanduko nice update Banu dear thanks.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
பானுமதி கருணா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top